Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    33600
    Posts
  2. சுவைப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    8805
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46798
    Posts
  4. ராசவன்னியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    7401
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/20/23 in all areas

  1. அன்றொரு நாள்..! பெண் பார்க்க எல்லாரும் குடும்பத்தோட பொண்ணு வீட்டுக்கு போயிருந்தோம்.. ஒரு தட்டு நிறைய மிக்ஸர், முறுக்கு, நெய் பிஸ்கெட்டு, முட்டை பிஸ்கட்..! இன்னொரு தட்டுல சூடா சிக்கென் கட்லெட், பருப்புவடை, பஜ்ஜி..!! 'குடிக்க காப்பியா..? டீயா..?' ன்னு அவங்க கேட்க.. எல்லாரும் 'டீ, காப்பி..' ன்னு ஆர்டர் பண்ண... நான் மட்டும் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு "ஐ லைக் ப்ளாக் டீ " ன்னு சொல்ல... 'டீ' யும் வந்துச்சு...! எல்லோருக்கும் என்னையும் பிடித்துபோக, பெண்ணை எங்க வீட்டிலும் பிடித்து போக... கூச்சத்தை கலைத்து...பஜ்ஜியை ஒரு கடி கடித்து.. 'ப்ளாக் டீ'யை வாயருகே கொண்டு சென்று குடிக்க முற்பட்டேன்..! என் தங்கச்சி பையனுக்கு என்ன தோனிச்சோ.. திடீர்ன்னு "மாமா... சோடா ஊத்தலையா..?" ன்னு கேட்க.. *..Rest is history.....!* 😛 - ட்விட்டரில் ரசித்தது.
  2. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(8). அன்று இரவு சுமதிக்கு தூக்கமே வரவில்லை.அங்கும் இங்கும் புரண்டு புரண்டு படுக்கிறாள். அடிக்கடி எழுந்து போய் தண்ணீர் குடித்து விட்டு வருகிறாள். அவளைப் பார்க்க சுரேந்தருக்கு பாவமாய் இருக்கிறது. முன்பென்றால் இந்த நேரம் நல்ல உறக்கத்தில் இருப்பாள். --- என்னப்பா இந்தக் கடை திறந்ததில் இருந்து நீங்கள் நிம்மதியாய் உறங்கி நான் பார்க்கேல்ல. ஏன் கடையில் ஏதாவது பிரச்சனையோ. --- அதில்லையப்பா, ஆட்கள் சரியாக வேலை செய்கிறார்களில்லை. இப்ப ஏன்தான் கடை திறந்தேன் என்று இருக்கு. --- எல்லாம் அந்த சீட்டுக்காசு வந்ததால் வந்த வினை. இனிமேல் ஒரு சீட்டும் போடவேண்டாம். கொஞ்சம் பொறுத்து, நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம், இதெல்லாம் சரி செய்திடலாம், இப்ப நிம்மதியாக தூங்கும். --- கணவனின் அந்த ஆறுதல் வார்த்தை அவளுக்கு இதமாக இருக்கிறது. சுரேந்தர் லேசில் ஒண்றிலையும் தலையிடுவதில்லை. ஆனால் தலையிட்டால் மனுசன் அதில் ஒரு தீர்வு காணாமல் விடாது. மெதுவாக கொஞ்சம் எழுந்து அவன் மார்பில் தலை வைத்துப் படுக்க அவனும் தனது நீண்ட கரங்களால் அவளைத் தன்னுடன் சேர்த்து அனைத்துக் கொள்கிறான். அன்று திங்கட்கிழமை. லா சப்பலில் கடைகள் எல்லாம் பூட்டியிருக்கு. சுரேந்தர் சொல்லியபடி சுமதியும் வேலைக்கு விடுமுறை போட்டிருந்தாள். இருவருமாக காலை 09:00 மணிக்கு கடைக்கு வருகிறார்கள். சற்று நேரத்தில் கடைகளுக்கு c c t v கமரா பொருத்துபவர்கள் வர இருவரும் அவர்களை கடைக்குள் அழைத்து செல்கிறார்கள்.உடனே வேலையைத் தொடங்கியவர்கள்,கடைக்கு உள்ளே வெளியே எல்லாம் கமரா பொருத்தி மேலும் சில இடங்களில் சின்னஞ்சிறிய ரகசியக் காமராக்களையும் அங்கு வேலை செய்பவர்களும் அறியாதவாறு பொருத்திவிட்டு, இவர்களது ஒவ்பீஸ் அறையில் சில சிறிய டீ .வீ களையும் பொருத்தி இருந்தார்கள். பின்பு இவர்களது போனுக்கும் போலீசுக்கும் தொடர்பு ஏற்படுத்தி விட்டு போகிறார்கள். செவ்வாய்கிழமை வழமைபோல் வேலைக்கு வந்தவர்கள் கடைக்கு வெளியேயும் உள்ளேயும் கமராக்கள் பொருத்தி இருப்பதைப் பார்த்து விட்டு அது சாதாரணமானது தானே என்று பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தத்தமது வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறார்கள். (1) CDD : contrat à durée déterminée = வேலை ஒப்பந்தம் முடிவடையும் காலம். முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையில் செய்யப்படும் ஒப்பந்தம். அது ஒரு மாதமோ,மூன்று மாதமோ, ஒரு வருடமோ, இரண்டு வருடமாகவும் இருக்கலாம். அந்தந்த திகதி முடிய அவர்கள் வேலையால் நிப்பாட்டுப் படுவார்கள். சில சமயம் புதுப்பிக்கப் படுவதும் உண்டு. (2) CDI : contrat à durée indéterminée.= நிரந்தரமான வேலை ஒப்பந்தம். தற்போது இவர்களின் கடையில் வேலை செய்ப்பவர்களின் காலம் மூன்று மாதங்கள். இந்த காலகட்டத்தில் முதலாளியும் அவர்களை வேளையில் இருந்து நிப்பாட்டலாம். அல்லது தொழிலாளியும் வேலை பிடிக்காதவிடத்து தாங்களே விட்டு விலகலாம். இவர்களுக்கு அந்த ஒப்பந்தகாலம் முடிய இன்னும் இரண்டு மூன்று நாட்களே இருந்தன. சுமதியும் இது சம்பந்தமாக தனது கணக்காய்வாளருடன் ( comptabilité) கலந்தாலோசித்துதான் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.என்று பலதையும் நினைத்துக் கொண்டு தனது வேலையிடத்துக்கு காரில் போகிறாள். மனதில் இதே சிந்தனை. நான் எங்கே பிழை விடுகிறேன். ஏன் என்னால் இதை சரிவர நிர்வகிக்க முடியவில்லை. ஒரு சிறு கடையை வைத்திருக்கும் நானே இவ்வளவு சிரமப்படுகிறேன் என்றால் ஒவ்வொரு இடத்திலையும் ஒவ்வொரு கடையாக பல கடை வைத்திருப்பவர்களுக்கு எவ்வளவு பிரச்சினை இருக்கும். எல்லா இடத்திலும் இருபது , முப்பது பேர் என்று சம்பளத்துக்குத்தானே ஆட்களை வைத்து நடத்துகின்றார்கள். ஒருவேளை என்னால் கடையை நடத்த முடியாமல் போய் விடுமோ. தினமும் நானும் கபிரியேலும் ஐந்து மணியில் இருந்து எட்டு மணிவரை செய்யும் வேளையில் பாதியளவு கூட பகலில் இவர்கள் செய்யவில்லையே. இதோ இந்தக் கருக்கலில் காலை 04:30 க்கு நான் வேலைக்கு போய்கொண்டிருக்கிறேன். இவர்களுக்கு எட்டரைக்குத்தானே வேலை தொடங்குது, அதுக்கும் ஒழுங்காய் நேரத்துக்கு வருவதில்லையே.......நிறைய யோசிக்கிறாள். வேலையிடம் வந்ததும் வண்டியை நிறுத்தி விட்டு கந்தோருக்குள் போகிறாள். அவள் வருவதற்கு முன்பே பெரும்பாலான தொழிலாளிகள் வந்திருந்தனர்.எல்லோரும் அவளுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு தத்தமது வேலையிடங்களுக்கு செல்கின்றனர். அவளது உதவியாளர் அன்று வேலைக்கு வந்தவர்கள், வராதவர்கள் மற்றும் சுகயீன விடுப்பில் இருப்பவர்கள் என்று அனைவரின் அறிக்கையையும் கொண்டு வந்து அவளிடம் தருகிறார். இப்போது சுமதி தனது கடைப் பிரச்சினைகள் எல்லாவற்றையும் மறந்து விட்டாள்.அந்த கம்பெனியன் மேலதிகாரியாக மாறிவிட்டிருந்தாள் .அப்போது அரை மணி நேரம் தாமதமாக இருவர் வேலைக்கு வருகின்றனர். --- அவர்கள் மன்னிக்கவும் மேடம், கொஞ்சம் தாமதமாகி விட்டது என்கிறார்கள். --- சுமதி தனது உதவியாளரைப் பார்த்து ஏன் இன்று மெட்ரொ,பஸ் எதுவும் ஓடவில்லையா. அப்படி ஒன்றும் இல்லை மேடம் எல்லாம் வழமைபோல் ஓடுகின்றன என்று அவர் கூறுகிறார். உடனே சுமதி அவர்களின் பக்கம் திரும்பி,நீங்கள் போயிட்டு நாளைக்கு வாங்கோ.உங்களின் இடங்களுக்கு ஆட்களை அனுப்பியாகி விட்டது. --- கொஞ்சம் தயவு செய்யுங்கள் மேடம் இனிமேல் இப்படி நடக்காது என்கிறார்கள். --- உங்களுக்குத் தெரியும்தானே காலை 08:45 க்கு முன்பாக ஒவ்வொரு கந்தோர்களிலும் எமது கிளீனிங் வேலையை முடித்து விட்டு நாங்கள் வெளியேறிவிட வேண்டும் என்பது. நீங்கள் இப்படி தாமதமாய் வந்தால் எப்படி. ஒன்றும் செய்யேலாது நீங்கள் போகலாம். அவர்களும் கொஞ்ச நேரம் சோகமாய் நின்று விட்டு திரும்பிப் போகிறார்கள். இன்னொரு இளம் ஆபிரிக்கன் பெண் அங்கு ஒரு அழகிய சிறுமியுடன் நிக்கிறாள். சுமதியும் அவர்களை பார்த்து நீங்கள் ஏன் இன்னும் இங்கு நிக்கின்றீர்கள் என்று கேட்க உடனே உதவியாளர் அவளிடம் அந்தப் பெண்ணை வேலை பழக pole emploi அனுப்பி இருக்கு.இவவின் ஒப்பந்தம் நேற்றுடன் முடிந்து விட்டது. அந்த சான்றிதழ் எடுக்கிறதுக்கு வந்திருக்கிறா. அது தயாராக அறையில் இருக்கு, நான் போய் எடுத்து வருகிறேன் என்று சொல்லி விட்டு போகிறார்.......! இன்னும் தைப்பார்கள் ................! 🎽
  3. ஒரு வைர வியாபாரியின் மகன் தன்தந்தையிடம் வந்து கேட்டானாம், அப்பா நான் வாழ்க்கையின் பெறுமதியை எப்படி அளப்பது? எப்படி அதற்கேற்ப என் வருங்காலத்தை அமைத்துக்கொள்வது என்று கேட்டானாம். அதற்கு அப்பா, நாளைக்கு வா நான் சொல்லித்தருகிறேன் என்றாராம். அடுத்தநாள் மகன் வந்தபோது அவன் கையில் ஒருவித கல்லைக்கொடுத்து இதை நீ உன்கையில், மற்றவரின் கண்ணில் படும்படி வைத்துக்கொண்டு குப்பை கொட்டும் இடத்தில் காலையிலிருந்து மாலைவரை நில். என்று சொல்லி அனுப்பி வைத்தாராம். மாலையில் வீடு வந்தமகன், அந்தக்கல்லை யாரும் பெரிதாக எண்ணவில்லை, ஏதோ வந்து பார்த்துவிட்டுப்போய் விட்டார்கள் என்றானாம். அடுத்தநாள் இதை பல்பொருள் அங்காடியில் வைத்துக்கொண்டு நில் என்றாராம், மாலையில் வந்த மகன் அதை சிலர் வந்து பார்த்தார்கள் சில்லறை விலை கேட்டார்கள் என்றானாம். மறுநாள் படித்தவர்கள் கூடும் இடமான நூல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தாராம், வந்த மகன் சொன்னாராம், யாரும் பெரிதாக அதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை, வந்து பார்த்தார்கள் அது என்ன விலை என்று கேட்டார்கள் போய் விட்டார்கள் என்றானாம். இன்னொருநாள் மிகுந்த ஆடம்பரமான செல்வர்கள் கூடுமிடத்தில் வைத்துக்கொண்டு நிற்கும்படி கூறினாராம். மகனுக்கு ஒரே ஆச்சரியம், என்னதான் சொல்லித்தருகிறார், கடைசியாக இதையும் பார்த்து விடுவோமே என்று எண்ணிக்கொண்டு போய் நின்றாராம். அவன் அங்கே நின்ற போது ஒரு பணக்காரர் அலங்கார உடையுடன் பெரிய காரில் வந்து இறங்கினாராம், இவனது கையில் கிடந்த கல்லைக்கண்டதும் அவனருகில் சென்று என்ன இங்கே நிற்கிறீர்கள் உள்ளே வாருங்கள் என்று அழைத்துச்சென்று விலையுயர்ந்த ஆசனத்தில் அமரவைத்து உபசரித்து அவனது கல்லின் பெருமையையும் விலை மதிப்பையும் கூறினாராம். அவர் யாருமல்ல, வைர வியாபாரி. அதே போலவே நாம் மற்றவர்மேல் காட்டும் மரியாதை, அன்பு, இரக்கம் போன்றவையும். அதை மதிக்கத் தெரிந்தவர்களுக்கே அதன் பெருமை புரியும். நீங்கள் அவரின் குடும்ப பின்னணி, எதிர்காலம், வயதை எண்ணி மன்னித்திருந்தாலும் அவர் அதை உங்களில் பிழை இருந்தபடியாலேயே அதை செய்தீர்கள் என தவறாக நினைத்திருக்கலாம். இருந்தாலும்; உங்களை கண்டத்தில் மகிழ்ச்சி என்று ஒரு வார்த்தை சொல்ல தகுதியற்றவரோ என எண்ணத்தோன்றுகிறது. உங்களில்தான் பிழை என கருதுவாராகில் அவர் மீண்டும் தவறு செய்ய வாய்ப்புண்டு, அப்போ யாரும் உங்களைப்போல் பெருந்தன்மையாக நடந்துகொள்ளப்போவதில்லை, ஏற்கெனவே சிலர் இந்த விடயத்தில் அவரைப்பற்றி புரிந்திருப்பார்கள், அவரது செயலுக்கான குறிப்பும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும், அப்போ அவர் உங்கள் பெருந்தன்மையை புரிந்துகொள்வதுடன் அதற்க்கும் சேர்த்து விலை கொடுக்க வேண்டி வரலாம். போலீசார் நடவடிக்கை எடுப்பதற்கு உங்களிடம் அனுமதி கேட்ட போது, அவருக்கு தெரியப்படுத்தியிருந்தால் கண்டிப்பாக எப்படி நடக்கவேண்டுமோ அப்படி மரியாதை செலுத்தியிருப்பார். ஆனால் அவருக்கு நெருக்கடி கொடுத்து அவரை மன்னிப்பு கேட்க செய்யாமல் காட்டிய பெருந்தன்மையை அவர் பிழையாக விளங்கிக்கொண்டிருக்கலாம். எது என்னவாக இருந்தாலும் பெரியவா பெரியவாள் தான்!
  4. மீண்டும் பழையபடி வேலைக்குப் செல்லத் தொடங்கியது மகிழ்ச்சியான விடயம் சிறி அண்ணா!! satan கூறிய ஒரு விடயம் // இந்த சம்பவத்துக்கு முன் அவர் குணஇயல்பு எப்படிப்பட்டது என்பதை தாங்கள் அறியத்தரவில்லை.// இது சரிதானே.. அவரைப் பற்றித் தெரியாமல் கூறுவது சரியில்லை.. ஆனாலும் இந்த திரியில் மனித மனம் பற்றி நிறைய அறிய முடிந்தது.. @vasee ம் @satan உங்கள் இருவரதும் கருத்துக்களும் 👌
  5. நான் ஒரு முறை மனநல மருத்துமனையிலிருந்து ஒருவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் போது விழையாட்டாக சொன்னார் உள்ளே இருக்க வேன்டியவர்கள எல்லாம் வெளியே இருக்கிறார்கள் என்டு.நன்றி விசுகர் பதிவுக்கு.
  6. நன்றி வசி. நீங்கள் நடந்த சம்பவத்தையும், மனித மனத்தையும்... வித்தியாசமான முறையில் ஆழமாக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். //மனித மனம் வித்தியாசமானது, மனதில் ஏற்படும் வலிகளை உணராதிருக்க முயற்சி செய்யும் 1.உளப்பூர்வமாக தான் தவறே செய்திருந்தாலும் தவறு தனது பக்கமல்ல என நினைத்து அதனால் ஏற்படும் வலியினை கடக்க முற்படும். 2.சம்பவத்தினை அப்படியே மறந்து விட்டு விடும்.// நீங்கள், கூறியற்றவைத்தான் விபத்தை ஏற்படுத்தியவரும் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கின்றார் என நினைக்கின்றேன். 🙂 சென்ற... திங்களிலிருந்து வெள்ளி வரை தினமும் மூன்று மணித்தியாலம் வரை வேலை செய்துள்ளேன். அவன் என்னைத் தேடி வந்து கதைக்க முயற்சிக்கவில்லை என்பது மிகுந்த ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்துகின்றது. 🙁 கடந்த 15 மாதத்தில்... வேலையிடத்தில் உள்ள வேலையாட்களும், மனேஜரும் பல தடவைகள் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துக் கொண்டிருந்த போதும்... இவன் ஒரே ஒரு தடவை மட்டும்.. அதுகும் ஒரு நிமிடம் மட்டுமே கதைத்தான். அதிலிருந்தே அவனின் போக்கு எனக்கு பிடிக்கவில்லை. 😎 இவ்வளவிற்கும் விபத்து நடந்து நான் வைத்திய சாலையில் இருந்த போதும், Reha´வில் இருந்த போதும்... அந்த விபத்தை கையாண்ட பொலிஸ்காரர் இருவர் நேரே நான் சிகிச்சை பெறும் இடத்திற்கே வந்து... அவன் மீது, வழக்கு தொடுக்கப் போகின்றேனா என்று கேட்டு.. தாங்களே, அரசு சார்பில் வழக்கை கொண்டு நடத்துவதாகவும்... ஆம் என்றால், ஒரு மாதத்துக்குள் பதில் தர வேண்டும் என்றும் சொன்னார்கள். நான்.... வீட்டிலும் மனைவி, பிள்ளைகளிடம், இது பற்றி கதைத்த போது... அவன் தவறுதலாக செய்தற்கு... எதற்கு வழக்கு போட்டு தண்டிக்க வேண்டும் என்றும், அத்துடன் அவன் சிறு பிள்ளைகளின் தந்தை என்றும்... ஏன் அவனை சிரமப் படுத்துவான் என்றும் சொன்னார்கள். நானும், அவர்கள் சொல்வேதே சரி என்று... காவல்துறையினரிடம் வழக்குப் போடவில்லை என்று சொல்லி விட்டேன். அவர்களும் எழுதி வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள். இப்போ... இவனின் செயலைப் பார்க்க, வழக்கு போட்டு "சிப்பிலி" ஆட்டி விட்டிருக்கலாமோ என யோசிக்கின்றேன். 🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.