Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 04/14/23 in Posts
-
திரும்பும் வரலாறு!
2 pointsநொச்சி, நன்றி வாசித்துக் கருத்துப் பகிர்ந்தமைக்கு. 1. இறையாண்மை, தெளிவான பௌதீக எல்லை என்பன கொண்ட நாடுகள் யுத்தம் முடிந்த பின்னர் முன்னோக்கி நகர்வது இலகுவானது. இதில் தோல்வி கண்ட நாடு முன்னோக்கி நகர அந்த நாட்டின் ஒருமித்த தேசிய அடையாளம் (national identity) பலமாக இருந்தால் முன்னோக்கி நகர்வது இன்னும் இலகு. உதாரணம் ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி. 2. ஆனால், இப்படி ஒருமித்த அடையாளம் இல்லா விட்டால் இறையாண்மை கொண்ட நாடுகள் கூட சிதைந்து போகும்: உதாரணம், ஈராக் (சுனி, ஷியா, குர்து, கிறிஸ்தவர்), லிபியா (லிபிய தேசிய அடையாளம் என்ற ஒன்று இல்லை), ஆப்கானிஸ்தான் (தாஜிக், பஷ்ரூன், இன்ன பிற அடையாளங்கள், ஆப்கான் தேசிய அடையாளம் மிகவும் நொய்மையானது!). 3. இப்ப, எங்கள் பிரச்சினை சட்டரீதியாக (de jure) தமிழர் தரப்பு இறையாண்மை கொண்ட நாடாக இருக்கவில்லை, எனவே எல்லோருக்கும் அது உள் நாட்டு யுத்தம். உள் நாட்டு யுத்தத்தில் வெல்லும் தரப்பின் மனநிலை தான் தோற்ற தரப்பின் முன்னோக்கிய நகர்வைத் தீர்மானிக்கும். சிங்கள மனநிலை என்னவென்று நான் விளக்க வேண்டியதில்லை, எனவே முட்டுப் பட்டு நிற்கிறோம். ஆனால், நாம் சர்வதேசத்தை எதிர்பார்ப்பதற்கு முன்னர் நாம் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்து விட்டா சர்வதேசத்தின் முகத்தைப் பார்க்கிறோம்? இல்லையென்று தான் நினைக்கிறேன். உதாரணமாக: ஈழத்தமிழருக்கு இப்போது தேவையான 5 விடயங்களை, ஒரு முக்கியத்துவ (priority)அடிப்படையிலான பட்டியலாக ஈழத்தில் இருக்கும் தமிழ்க்கட்சிகள் எல்லாம் ஒருமித்து தயாரித்திருக்கின்றனவா? அந்தப் பட்டியலோடு, சிங்களவரிடம் பேசப் போயிருக்கின்றனரா? எங்கள் தரப்பிலிருக்கும் இந்தப் பெரிய ஓட்டையை சாமான்யன் நானே அடையாளம் கண்டு கொண்டிருக்கும் போது, சிங்களவருக்கும், சர்வதேசத்திற்கும் இது தெரியாமலிருக்குமா?2 points
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
2 pointsமலரும்.........! (10). அன்று ஆச்சி அப்படிக் கேட்டதும் சில நாட்களாக அதை பற்றி நன்றாக யோசித்துப் பார்த்த நிர்மலா தனது வாழ்க்கைக்கும் ஒரு பிடிமானம் வேண்டும் என்று முடிவு செய்கிறாள். இவர்களின் குடும்பம் ஒரு நல்ல குடும்பமாகவும் இருக்கின்றது. ஏன் தானும் மறுமணம் செய்யக்கூடாது. அவர்கள் என்ன காரணத்துக்காக மறுமணம் செய்தார்களோ அதே காரணம் எனக்கும் இருக்குதுதானே. மாதங்கள் வந்து போகுதோ இல்லையோ மாதவிடாய் தவறாமல் வந்து விடுகிறதுதானே. தானாக வரும் இந்த சந்தர்ப்பத்தை ஏன் நான் எனக்கான பரிசோதனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. என்று பலவாறு யோசிக்கிறாள். அன்று ஆச்சி உரலில் வெத்திலை இடித்துக் கொண்டிருக்கும்பொழுது நிர்மலா சிவாங்கியுடன் அங்கு வருகிறாள். அப்போது ஆச்சியும் இயல்பாக என்ன பிள்ளை நான் சொன்ன காரியத்தை யோசிச்சனியோ என்று கேட்கிறாள். --- ஓம் அம்மா ....நான் நிறைய யோசிச்சனான். நீங்கள் இப்படிக் கேட்பது உங்களின் மகனுக்குத் தெரியுமோ, அவருக்கு இதில விருப்பம் இருக்குதோ என்று வினவுகிறாள். --- ஓம் பிள்ளை......முதலில் நானும் இவரும்தான் இது பற்றி கதைத்தனாங்கள். அன்றைக்கு இந்தப் பிள்ளை சிவாங்கி அந்தக் கிணத்துக் காட்டில் ஏறி நின்று விளையாடியபோது நானும் இவரும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிக்க நீ தளப்பம் இல்லாமல் மெதுவாக ஊர்ந்து போய் பிள்ளையை படக்கென்று பிடித்தனியெல்லோ, அப்போதுதான் எங்கட மனசுக்குள் இந்த எண்ணம் தோன்றியது. பின் இந்த சம்பவத்தை கதிரவனிடம் சொன்னபோது அவன் உனக்கு நன்றி சொல்லிவிட்டு போனவன். பிறகு சிலநாள் கழித்து நாங்கள் அவனுடன் இந்த எங்களின்விருப்பத்தை சொன்னபோது முதலில் தயங்கினாலும் பிறகு சரியென்று சொல்லிப் போட்டார். ஆனால் உனக்கு விருப்பம் இல்லையென்றால் வற்புறுத்தக் கூடாது எண்டவர். அதன் பின்னால்தான் நான் உன்னோடு கதைத்தது. அடுத்து வந்த சில நாட்களில் கதிரவனுக்கும் நிர்மலாவுக்கு மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. என்னதான் அவர்கள் நட்புடன் பழகி இருந்தாலும் அடுத்து வந்த இரவுகளில் தயக்கத்தாலும் பிள்ளைகள் அவர்களிடையே படுத்துறங்குவதாலும் அதிகமான நெருக்கம் இன்றி கை கால்களின் சின்ன சின்ன உரசல்களுடனும் விரல்களின் சில்மிசங்களுடனும் காதல் பார்வைகளுடனும் உறவுகள் இன்றியே கடந்தன. இவர்களின் போக்கை தனது அனுபவத்தால் உணர்ந்த ஆச்சியும் மெய்கண்டான் காலண்டரில் ஒரு நல்ல நாள் பார்த்து அன்று பிள்ளைகளை தன்னுடன் பிடித்து வைத்துக் கொண்டு நிர்மலாவுக்கு சில அறிவுரைகள் சொல்லி அறைக்குள் அனுப்பி வைக்கிறாள். அறைக்குள் கட்டிலின் மீது புதிய விரிப்புகளும் பூபோட்ட தலையணைகளும் அழகாக விரித்து இருக்கின்றன. ஊதுபத்தியின் மணம் ஒரு கிறக்கத்தைத் தருகின்றது. உள்ளே கதிரவனும் நாலுமுழ வேட்டி அணிந்து மெல்லிய வெள்ளை சேர்ட்டுடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருக்கிறான். சேர்ட்டினூடாக கிப்ஸ் பெனியனும் அதன் மேல் அட்ஷரக்கூடுடன் கூடிய தடித்த டைமன் சங்கிலி டாலடிக்கிறது. அவனிடம் இருந்து நறுமணமிக்க செண்டின் வாசனை வருகின்றது. அவனுக்கு ஒரு நிமிஷம் ஒரு யுகமாக இருக்கிறது. நிர்மலாவும் ஆச்சி தன் கையாலேயே பின்னி அவள் தலையில் சூடிவிட்ட ஒற்றை மல்லிகை சரமும், கையில் மாற்றிக் கட்டுவதற்கான நைட்டியோடும் பூபோட்ட கொட்டன் புடவையும் அணிந்துகொண்டு கதவைத் திறந்து உள்ளே வந்து அதைத் தாழிடுகிறாள். அப்போது வலிமையான இரு கரங்கள் அவளை இடையுடன் சேர்த்து தன்னுடன் அனைத்துக் கொள்கின்றன. --- ஸ்......என்ன அவசரம், கொஞ்சம் பொறுங்கள் நைட்டியை மாற்றிக் கொண்டு வருகிறேன். அவள் குரல் கெஞ்சலாய் ஒலிக்கிறது. --- இந்த சேலையை அகற்றினால்தானே அதை நீ மாற்ற முடியும், அதற்கு நான் உனக்கு உதவி செய்கிறேன். அப்படியே பூமாலைபோல் அவளை அள்ளியெடுத்து தத்தையை மெத்தையில் வளர்த்திவிட்டு வித்தைகள் புரிய சரிந்து கொள்கிறான். அவள் வெட்கத்தில் கைகளால் முகத்தை மூடிக் கொண்டு மெத்தையில் உருண்டு குப்புறப் படுத்துக் கொள்கிறாள். அந்த அறையின் சிறு வெளிச்சத்தில் ஒரு தேவதைபோல் அவனருகே கிடக்கிறாள். அவனும்கூட வெகு காலத்தின்பின் தனக்கே தனக்கான ஒரு பெண்ணணங்கை தன்னருகே பாசத்தோடும் காதலோடும் பார்க்கிறான். அவளது கருங்குழல் அந்தப் பரந்த முதுகில் மயில்தோகை போன்று சற்றே விரிந்து பரவிக் கிடக்கிறது. அதன் நடுவே ஒற்றை மல்லிகை சரம் மின்னல் கீற்றாக மின்னுகிறது. அவன் கைகள் அவள் முதுகை ஆதரவுடன் வருடிக் கொண்டு வர "கரைதேடி நுரையோடு வரும் பேரலையொன்று கற்பாறையில் மோதி மேலெழுந்து குடையாய் விரித்தபடி ஒரு கணம் அசைவற்று அப்படியே நிண்றதுபோல்" இடைக்கும் முழங்காலுக்கும் இடையில் பொங்கித் தளும்பும் பேரழகு மனசை அலைக்கழிக்க, அவனது பார்வை போகும் இடமெல்லாம் தன் அகக்கண்களால் உணர்ந்தவள்போல் அவள் சிறிது நெளிந்து கொள்கிறாள். அவனும் தனது பார்வையை வேறு பக்கம் திருப்பி அவளது வழுக்கும் தோள்களை வலுவான கரங்களால் பற்றி தனது பக்கம் திருப்புகிறான். அவளது மேனியில் இருந்தும் ஒரு சுகந்தமான வாசனை அவன் நாசியை வருடுகிறது. தன் முகத்தருகே மிக அருகில் நெருங்கும் அவன் முகத்தை அவளும் காதலுடன் பார்த்து ஏதோ சொல்ல வாயெடுக்கையில் அந்த வார்த்தைகளை அவன் தன் வாயினுள் வாங்கிக் கொள்கிறான். அவர்களுக்குள் பல ஆண்டுகளாக பதுங்கியிருந்த காமம் கிளர்ந்தெழுகிறது. ஆதவனின் கதிர்கள் மலர்களை மலர்விப்பதுபோல் கதிரவனின் ஸ்பரிசத்தில் பெண்மை மலர்கின்றது. அந்நேரத்திலும் அவளது மனம் "முருகா எனக்கு ஏற்பட்ட அபவாதம் நீங்க நீ அருள் புரிய வேண்டும். குழந்தையுடன் உன் சன்னதிக்கு வந்து மாவிளக்கு ஏற்றுவதற்கு நீ கிருபை செய்திடு" என்று பிரார்த்திக்கிறாள். இதயம் பிரார்த்தனை செய்ய இதழ்களில் அவன் பருகப் பருக தேன் சுரக்கிறது. ஆகிருதியான அவன் மார்பின் உரோமங்களை உரசி உரசி முந்தானை மொட்டுக்கள் மலர்கின்றன. விலகிய ஆடையின் இடையினில் துலங்கிய நாபியில் அவனது விரல்கள் மேய்கின்றன. அந்த மோதிர விரல்களை மேலும் நகரவிடாமல் வளைக்கரமொன்று தளர்வாகத் தடுக்கின்றது. ஆனந்தகான அமுதமழையாக அவனை அவள் வர்ஷிக்கிறாள். அதில் மூல்கித் திளைத்தவனில் இருந்து வியர்வையுடன் முத்துக்களும் சிதறுகின்றன. சிந்திய முத்துக்களை சேகரிக்க சிப்பியொன்று தயாராகின்றது. சத்தான கருவில் வித்தாக எதுவும் தீண்டியதில்லை இதுவரை. கல்லாகி நின்ற மருங்குகள் அனல்மேல் மொழுகாகி நெகிழ்கின்றன. வியர்வை மதுவில் மூழ்கிய கனியை கொஞ்சி கொத்தி சுவைக்கும் கிளியாக ....... அந்தப்புரத்தில் ஆனந்தலீலை அதிகாலைவரை நீடிக்கின்றது. நேரத்துடன் கதிரவன் எழுந்து கொள்கிறான். இன்னும் அவள் களைப்பில் சாந்தமான முகத்துடன் உறங்குகிறாள். இதழ்களில் சிறு புன்னகையும் சேர்ந்திருக்க அதை சிறிது ரசித்து விட்டு அவள் நெற்றியில் நெளிந்த முடியை கொஞ்சம் ஒதுக்கி சிறு முத்தமிட்டு எழுந்து கொள்கிறான். அவள் கட்டியிருந்த சேலை எட்டிக் கிடந்ததால் அந்த ஆறடி அழகுச்சிலையை தனது நாலுமுழத்தால் போர்த்திவிட்டு சறத்தை அணிந்து கொண்டு வெளியே வருகிறான். அதற்காகவே காத்திருந்த ஆச்சியும் இரண்டு கோப்பைகளில் முட்டைக் கோப்பி எடுத்து வந்து ஒன்றை அவனிடம் குடுத்து விட்டு மற்றதை எடுத்துக் கொண்டு அறைக்குள் வருகிறாள். --- பிள்ளை எழும்பி இதைக் குடித்து விட்டு படனை. ஆறப்போகுது சுட சுட குடி நல்லா இருக்கும் என்று சொல்லிவிட்டு வேட்டியால் போர்த்துக் கொண்டிருக்கும் அவளைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புடன் வெளியேறுகிறாள். கதிரவன் எழுந்தவுடன் நிர்மலாவுக்கும் விழிப்பு வந்துவிட்டது. ஆனால் தான் இருந்த நிலையில் துணி எடுக்க அவகாசமில்லாததால் உறங்குவதுபோல் பாவனை செய்கிறாள். அவன் அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு தனது வேட்டியால் போர்த்திவிட்ட அந்தக் கரிசனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. பின்பு அவள் எழும்புவதற்குள் ஆச்சியும் உள்ளே வந்து விட்டா அதனால் மீண்டும் தூக்கம்போல் நடிப்பு. அவர்களது அன்பையும் பாசத்தையும் பார்க்கும்போது ஒரு சரியான பாதுகாப்பான இடத்துக்கு தான் வந்திருப்பதாக உணர்கிறாள்......! மலரும்.........! 🌼2 points
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அந்தி மாலை நேரம் அலைகளின் தாலாட்டில் ஆடும் ஓடம் .......! 😂1 point
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
ஒரேமூச்சில் படித்துமுடித்தேன். சிறப்பு. ஒவ்வொரு கட்டத்தையும் அதனுள் வாழ்ந்து செல்வதுபோல் எழுதியமையைப் பார்க்கும்போது கற்பனை என்று சொல்லமுடியாத அளவுக்கு நகர்கிறது. நிர்மலா கதிரவனது கூடலை வடித்தமை அந்தக்காலகட்டத்தைக் கடந்த 50 – 60ஐக் கடந்தோருக்கு கற்பனைக் குதிரைகளைப் பின்னோக்கிப் ஓடவிட்டு இரசிக்கும் வகையாகும். ஒரு பெரும் நாவலுக்கு நிகரான கனதியைத் தொட்டுநிற்கிறது. உங்கள் ஆக்கங்கள் தொடரட்டும். நேரம்கிடைக்கும்போது நிச்சயம் வாசிப்பேன்.கதைகள் மனிதர்களை மட்டுமல்ல காலத்தையும் மீட்கின்றன. வாழ்த்தும் பாராட்டும் உரித்தாகுக. நன்றி1 point
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
1 pointஎனக்குப் புரியும்படி கூறுங்கள்। என்ன பயிற்சி ??? நான் இம் முறை பெரிதாகப் படங்கள் எடுக்கவே இல்லை. நீங்கள் பார்த்த ஆம்புட்டும் தான் 🤣1 point
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
சுவி இன்று தான் முழுமையாக வாசிக்க முடிந்தது. நிர்மலாவின்மேல் ஒரு பாசம் வர வைத்துவிட்டீர்கள்.அதே மாதிரி எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி கதையை நகர்த்தி அவளுக்கு வாழ்வும் கொடுத்துள்ளீர்கள். ஆனாலும் இராசம்மாவுடன் ஒட்டி உறவாடுவது ஏனோ நெருடலாக இருந்தது.1 point
-
புலம்பெயர்ந்த ஈழத் தமிழரின் எதிர்காலம் - பகுதி 2
இணையவன், உங்களைப் போல்தான் நானும் வேலையில் இருந்து ஓய்வவெடுத்த பின் தாயகத்தில் போய் இருக்கலாம் என எண்ணங்கள், கனவுகளுடன் இருந்தேன். ஓய்வு கிடைத்தும் உடன் போக முடியவில்லை. கடந்த வருட இறுதியில்தான் அங்கு போக சாத்தியமாயிற்று. எனது ஊரில் இருந்தவர்களில் 98 வீதமானவர்கள் இப்போது இல்லை. எனது பால்ய நண்பனை தேடிப் போனேன். அவனது நட்பு. வட்டாரத்தில் எனக்குத் தெரியாத பலர் இருந்தார்கள். எனது நட்பைக் கூட அவனிடம் நான் புதிதாக்க வேண்டி இருந்தது. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் பணம் காய்க்கும் மரம் என்பது அங்குள்ளவர்களின் பார்வையாக இருந்தது. மரமாக நின்று கொள் அதில் உள்ள பயன்களை அவரவர்கள் வந்து தாங்களாகவே எடுத்துக் கொள்வார்கள். பயன் தருகிறது என்பதற்காக ஒருசிலர் வந்து தண்ணீர் ஊற்றிப் போன சம்பவங்களும் இருந்திருக்கிறது. சுத்தம்,சுகாதாரம் இங்குள்ளது போல் அங்கில்லை. தீபாவளியில் பெய்த கடும் மழையில் நன்றாக நனைந்ததில் இருமல் வந்து மருத்துவரைப் போய்ப் பார்த்தேன். குளிசைகளை எழுதித் தந்து ரூபா 1400 வாங்கிக் கொண்டார். அவர் எழுதிய துண்டைக் கொண்டு போய் மருந்துக் கடையில் குளிசை வாங்கிய போதுதான் கவனித்தேன். எனக்கு முன்னால் நின்றவருக்கு என்ன கொடுக்கப் பட்டதோ அதே குளிசைகள் எனக்கும் தரப்பட்டது. அவரும் தீபாவளியில் நனைந்தாரோ என்று நினைத்துக் கொண்டேன். அறபதுகளில் மந்திகை போதனா வைத்தியசாலையில் பச்சை, சிகப்பு,ஒரேஜ் நிறங்களில் நாளுக்கு ஒரு மருந்துக் கலவை வைத்திருப்பார்கள்.காய்ச்சல், இருமல்,தடிமன் என்று வைத்தியசாலைக்கு போகிறவர்களுக்கு அந்தக் கலவை கிடைக்கும். இந்த நினைவு எனக்கு அப்போது வந்து போனது. இன்னும் பல அசொளகரியங்கள். விடயங்களைச் சொன்னால் நீண்டுவிடும். மொத்தத்தில் எனது பயணம் எனக்கு திருப்தி தரவில்லை. ஆக விடுமுறைக்குச் சென்று வரலாமே தவிர தங்கிவிட நினைப்பது என்பது எனக்கு சரிப்பட்டுவரவில்லை.1 point
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
1 point
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- மலருக்கு தென்றல் பகையானால்.........!
மலர்...........(11). சுமார் மூன்று வருடங்களின் பின் ஒருநாள் ஆச்சி நிர்மலாவிடம் பிள்ளை முன்பு நாங்கள் வருசம் தவறாமல் மடுக்கோயிலுக்கு போய் வருகிறனாங்கள். முகிலனின் அம்மா தவறியதில் இருந்து சில வருடங்களாக அங்கு போகவில்லை. இந்தமுறை மாதாவின் திருவிழா வந்திருக்கு. நாளைக்கு நாங்கள் அங்கு போகிறோம். நீ அதற்கு வேண்டிய ஆயத்தங்களை செய் பிள்ளை. இப்ப நீ அதிகம் பாரங்கள் துக்காதையனை வயித்துப் பிள்ளைக்காரி கவனம். தேவையென்றால் அப்புவைக் கூப்பிடு. சரி அம்மா என்று சொல்லிவிட்டு அவள் அதற்கான ஆயத்தங்களை செய்கிறாள்.அவளை வேலை செய்ய விடாமல் சரவணன் குழப்படி செய்கிறான். அவனுக்கு இப்ப இரண்டு வயதாகின்றது. அப்போது அப்பு வந்து அவனைத் தூக்கிக் கொண்டு போகிறார். பின்னால் சிவாங்கியும் போக முகிலன் அவளுடன் நின்று உதவிகள் செய்கிறான். அவன் இப்போது அவளது தோள் மட்டத்துக்கு வளர்ந்திருந்தான். அவளது நினைவுகள் பின்னோக்கி பார்க்கின்றன. இப்ப எண்ட மாதிரி இருக்கு, தான் சங்கரின் வீட்டை விட்டு வந்ததும், பின் கதிரவனை கலியாணம் செய்ததும், அந்த வருஷமே சரவணன் உண்டாகி அடுத்த வருசம் அவன் பிறந்ததும், முருகன் கோயிலில் தாங்கள் எல்லோருமாய் சென்று மாவிளக்கு போட்டு நேர்த்திக் கடனை நிறைவு செய்து விட்டு வந்ததும் அதன்பின் இப்ப மீண்டும் அவனருளால் தான் ஆறுமாத கர்ப்பமாகி இருப்பதையும் நெகிழ்ச்சியுடன் நினைக்கிறாள். அதே நேரத்தில் சங்கருக்கும் பிள்ளைகள் பிறந்திருக்கலாம் எப்படியோ அவர்களும் நல்லா இருக்க வேண்டும் என்றும் நினைத்துக் கொள்கிறாள். "மடுமாதா திருக்கோயில்" பெரும்பாலானோருக்கு நன்றாகத் தெரிந்த ஒரு கத்தோலிக்க தேவாலயம். (our lady of madu). வவுனியாவில் இருந்து மன்னார் போகும் வீதியில் பாதி வழியில் இருபத்தைந்து கி.மீ இருக்கலாம் ஒரு கிளை வீதி இந்தத் திருக்கோயிலுக்கு செல்கிறது. இந்தத் தேவாலயத்தின் பெருநாட்கள் ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் நடைபெறும். அந்த நாட்களில் உலகெங்கிலும் இருந்து ஏராளமானவர்கள் கோயிலுக்கு வருவார்கள். அதற்காக விசேடமாய் பேரூந்துகள் புகையிரதங்கள் எல்லாம் சேவையில் ஈடுபடுத்தப் படும். அதை சுற்றி இருக்கும் ஊர்களில் இருந்தெல்லாம் கார்கள், வான்கள், லொறிகளில் எல்லாம் மக்கள் இன மத வேறுபாடின்றி வருகை புரிவார்கள். அக்கோயிலைச்சுற்றி பாலம்பிட்டி, சின்ன பண்டிவிரிச்சான், பெரிய பண்டிவிரிச்சான் என்று சில கிராமங்கள் இருக்கின்றன. இங்கு விசேடமாக கருங்காலி மரக் காடுகள் விளாத்தி மரக் காடுகள் பல இருக்கின்றன. மான்,மரை, யானை போன்ற விலங்குகளுடன் சருகுப் புலிகளும் பெரிய பெரிய வெங்கிநாந்திப் பாம்புகளும், குளங்களில் கபரக்கொய்யா என்ற முதலை போன்ற இனங்களும் இருக்கின்றன. மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப் பட்ட கூடுபோன்ற அமைப்புள்ள இரதத்தில் கன்னி மரியாள் கையில் பாலகன் யேசுவுடன் கோயிலை சுற்றி வீதி வலம் வருவது வழக்கம். அதை பல லட்ஷம் மக்கள் கையில் மெழுகு வார்த்தியுடன் நின்று சுலோகங்கள் பாடித் தரிசிப்பார்கள். மேலும் அங்குள்ள விசேசம் யாதெனில் தேவையான அளவு காட்டு மிருகங்களின் இறைச்சி வகைகள் கிடைக்கும். அரச மரக் கூட்டுத்தாபனம் அங்கு கடை விரித்து மக்கள் சமைப்பதற்கும் சிறு குடில் அமைப்பதற்கும் தேவையான தடிகள், கிடுகுகள், விறகுகள் எல்லாம் விற்பனை செய்வார்கள். மக்களும் வீதியோரங்களில் குடிலுகள் அமைத்து தமக்கு விருப்பமானவற்றை வாங்கி சமைத்து உண்பார்கள். மலரும்.......! 🌻1 point- மலருக்கு தென்றல் பகையானால்.........!
மலர் .....(9). இராசம்மாவின் வீட்டில் ஜோதி வந்ததில் இருந்து அவளுக்கு தாயம்மாவை அவ்வளவாக பிடிக்கவில்லை. தாயம்மா பத்து வயதில் அந்த வீட்டுக்கு வேலைக்கு வந்து இராசம்மாவின் அன்பால் பத்தாவது வகுப்புவரை படித்திருந்தாள். நாளாக நாளாக அவள் அந்த வீட்டின் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்யப் பழகியிருந்தாள். அங்கு இராசம்மாவும் சங்கரும் மட்டும் இருப்பதால் அவர்களுக்கு என்னென்ன தேவைகள் எந்தெந்த நேரத்தில் வேண்டும் என்பதை நன்றாக அறிந்திருந்தாள். ஆனால் ஜோதிக்கு அவள் தான் ஒரு வேலைக்காரி என்பதையும் மறந்து அந்த வீட்டில் அதிக உரிமை எடுப்பது போலப் படுகிறது. உணவு மேசையில் சங்கருக்கு சாப்பாடு பரிமாறுவது அவனது உடுப்புகளை கழுவிற மிஷினில் போட்டு பின் இஸ்திரி போட்டு மடித்து வைப்பதெல்லாம் பிடிக்கவில்லை. ஆனால் அவள் அவர்கள் எல்லோருடைய ஆடைகளையும் அப்படித்தான் செய்கிறாள். அதனால் அப்பப்ப சிறு சிறு பிரச்சினைகள் வர இராசம்மாவுக்கு தாயம்மா தனியாக போய் அழுவது எதையும் பார்க்கப் பொறுக்கவில்லை. அந்நேரம் தாயம்மாவின் தகப்பன் அங்கு வந்து தாயம்மாவுக்கு ஒரு வரன் வந்திருப்பதாகவும் அவளை தன்னோடு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்க இராசம்மாவும் அவர்களுக்கு தேவையான பணம், புடவைகள், நகைகள் எல்லாம் சீராகக் குடுத்து அனுப்பி வைக்கிறாள். ஜோதி சங்கரின் வீட்டுக்கு இரண்டாந்தாரமாக மணமுடித்து வந்து இந்தா அந்தா என்று நான்கைந்து வருடங்கள் ஓடி விட்டன. ஜோதியும் கல்யாணமாகி வந்த புதிதில் ஜோடியாக தியேட்டர்,பூங்கா,கடற்கரை என்று எல்லா இடமும் சந்தோசமாக சுற்றித் திரிவார்கள்.அப்படி அவன் கையைப் பிடித்து நடக்கும்போது அதில் ஆறாவதாக ஒரு சின்னி விரல் இருப்பதைப் பார்த்து ஏன் சங்கர் இதை ஒரு சத்திரசிகிச்சை செய்து அகற்றலாமே என்று சொல்ல அவனும் ஏன் அது தன்பாட்டுக்கு இருக்கு. என் அப்பா அவரின் அப்பா எல்லோருக்கும் இடது கையில் ஆறுவிரல் இருக்கு தெரியுமா. அதன் பின் அவளும் அதைப்பற்றி கதைப்பதில்லை. அவளுக்கு ஓரிரு தடவை வயிற்றில் பிள்ளை உண்டாகியும் மூன்று நான்கு மாதங்களில் கரு அழிந்து விடுகின்றது. இராசம்மாவுக்கு எல்லா நம்பிக்கையும் போய் விட்டது. இப்போதெல்லாம் அவள் யாரிடமும் அதிகம் கதைப்பதில்லை. தங்களுடைய இவ்வளவு திரண்ட சொத்துக்கு ஒரு வாரிசு இல்லையே என்பதை நினைக்க அவளறியாமலே கண்கள் கலங்கி கண்ணீர் வருகிறது. அவளும் தன்பாட்டில் புதிதாக வந்த வேலைக்காரி அம்மாவுடன் சேர்ந்து சமையல் செய்து வைத்து விட்டு மாலை நேரங்களில் அயலவர்களுடன் ஏதாவது கதைக்க போய் விடுவாள். அல்லது அருகில் உள்ள கோயிலுக்கு சென்று இருந்து விட்டு வருவாள். சங்கருக்கும் பிள்ளை ஆசையே போய் விட்டது. தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறான். ஜோதியிடமும் இந்த நான்கைந்து வருடங்களில் நல்ல நிதானமும் பக்குவமும் வந்து விட்டது. அவளுக்குள் எப்போதும் ஒரு குற்றவுணர்வு இருக்கு. குழந்தை ஒன்று வேண்டும் என்பதற்காகவே இரண்டாவது திருமணம் செய்துகொண்ட இந்தக் குடும்பத்துக்கு தன்னால் ஒரு குழந்தை பெற்றுத்தர முடியவில்லையே என்று. கருத்தரிக்கும் பிள்ளைகள் கருவிலேயே அழிந்து போவதற்கு முன்பு கொழும்பில் தனது தவறான நடத்தையே காரணம் என்று நன்கு அறிவாள். அத்துடன் சங்கரின் முதல் மனைவி பற்றி ஒரு தகவலும் இல்லை. இப்ப எங்கிருக்கிறாளோ என்ன ஆனாளோ தெரியவில்லை. எல்லாம் தனது தவறான நடத்தையால் என்று உள்மனம் குத்திக் காட்டுது. சங்கருக்கும் எப்போதும் கலகலப்பாய் இருந்த தன்வீடு இப்போது வெறும் அமைதியாக இருப்பதும் கவலையளிக்கிறது. அத்துடன் அநியாயமாய் நிர்மலாவை மனம் நோகச்செய்து விட்டோம் என்ற கவலை வேறு. அவன் இப்போது தாயாரோடும் ஜோதியோடும் கலந்தாலோசித்து ஒரு பிள்ளையை தத்தெடுத்தால் என்ன என்றுகூட யோசிக்கிறான். அப்படியாவது இந்த வீட்டின் இழந்த சந்தோசம் மீண்டும் திரும்பாதா என்றும் நினைக்கிறான். முதலில் இந்தத் துன்பத்தை போக்குவதற்கு என்ன வழி, எல்லோருமாய் எங்காவது சுற்றுலா சென்று வந்தால் நல்லா இருக்கும் என்று தோன்றுகின்றது. இந்நேரத்தில் அவன் நண்பன் ஜோசேப் பத்திரிகையில் வந்த படத்துடன் கூடிய மடுமாதா திருக்கோயிலின் திருவிழா அடுத்த வாரம் ஆரம்பமாகும் ஒரு செய்தியைக் காட்டி தாங்களும் தங்கள் குடும்பத்துடன் போகப் போவதாகச் சொல்லுகிறார். அதைக் கேட்ட சங்கருக்கும் தாங்களும் அங்கு சென்று இரண்டு மூன்று நாட்கள் தங்கி மாதாவின் கூடு சுற்றும் திருவிழாவையும் பார்த்துவிட்டு அங்கேயே சமைத்து சாப்பிட்டு வரலாம் என்று தோன்றுகின்றது. மலரும்.........! 🌷1 point- மலருக்கு தென்றல் பகையானால்.........!
மலர்.......(8). பிறிதொருநாள் ஆச்சி மகன் கதிரவனிடம் தம்பி நீ இந்தப் பிள்ளை நிர்மலாவைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று கேட்கின்றாள். அவனும் ஏன் அவவைப் பற்றி நினைக்கிறதுக்கு என்ன இருக்கு. அவ தானும் தன் பாட்டில் வேலை செய்கிறா. வாடைக்காசும் ஒழுங்காய் தருகிறா. எங்கட மகன் முகிலனும் வகுப்பில் கெட்டிக்காரனாய் இருக்கிறான் என்று அவன்ர வகுப்பு ஆசிரியை சொன்னவர். வேறு எண்ணத்தை சொல்ல. --- இல்லை தம்பி, எங்களுக்கும் வயசாயிட்டுது. உனக்கு விருப்பமெண்டால் அந்தப் பிள்ளையை கேட்டுப் பார்க்கலாம் என்று நினைக்கிறன். கொப்பருக்கும் நல்ல விருப்பம். --- ஓ.....நீங்கள் இரண்டு பேரும் ஏற்கனவே கதைத்து வைத்து விட்டுத்தான் இப்ப என்னிடம் கேட்கிறீங்கள் போல. அவ ஏதோ தன் பாட்டுக்கு இருக்கிறா, அவவை அத இத கதைத்து குழப்பிப் போடாதேங்கோ. மேலும் அவர்கள் யார் என்றே எங்களுக்கு தெரியாது. அவ தனியா வீட்டை விட்டு வர என்ன என்ன பிரச்சினையென்றும் தெரியாது. அதால கதைக்கிறதை நல்லா யோசித்து கதையுங்கோ. --- அதடா மோனை அப்பப்ப கதையல் வரேக்க நான் கொஞ்சம் கொஞ்சம் ஜாடை மாடையா விசாரிக்கிறானான்.அதுகளை கோர்த்து வைத்துப் பார்த்தால், அவ யாழ்ப்பாணத்தில் கலியாணம் கட்டிய இடம் பெரிய இடமாம். கலியாணம் செய்து பல வருடங்களாக அவையளுக்கு பிள்ளை இல்லையாம். அதனால புருசன்காரன் இரண்டாவது கலியாணம் செய்து கொண்டு வீட்டுக்கு வர இந்த பிள்ளையும் அங்கிருக்கப் பிடிக்காமல் ஏதோ ஒரு தைரியத்தில வெளிக்கிட்டு வந்திட்டுது. தாய் தேப்பன் எல்லாம் தெல்லிப்பளையில் இருக்கினமாம். ஆனால் ஒருத்தரோடும் இதுவரை எதுவித தொடர்பும் இல்லையாம் என்று சொன்னவ. --- ஓ.....நீங்கள் எல்லாம் விசாரிச்சுதான் வைத்திருக்கிறியள். --- அதுதான் சொன்னேனே, அப்பப்ப பேச்சு வரேக்க கதைக்கிறது, பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாய் சேர்த்து புரிந்து கொள்ளுறதுதானே. அது கிடக்கட்டும் இப்ப நீ என்ன சொல்லுறாய் அத முதல்ல சொல்லு. --- சரி, என்னவோ செய்யுங்கோ ஆனால் அவவுக்கு அதிகம் மனக்கஷ்டம் உண்டாக்க வேண்டாம். அது முக்கியம். --- சரியடா தம்பி, நான் நேரம் பார்த்து நைசாய் கதைக்கிறேன். அநேகமான மாலை நேரங்களில் அவர்கள் அருகில் இருக்கும் குளத்தின் கரையையொட்டி நடந்து போய் வருவதை வழக்கமாய் கொண்டிருந்தார்கள். முன்பு ஆச்சி அப்புவுக்கு அந்தப் பழக்கமில்லை. ஆனால் நிர்மலா வந்து கொஞ்ச நாளில், அவள் முதலில் தான் தனியா நடந்து போட்டு வருவாள். பின் அவர்களுடன் நன்றாகப் பழகியபின் அவர்களையும் கூட்டிக் கொண்டு வெளியே நடந்து போய்வரப் பழக்கி விட்டாள். ஆரம்பத்தில் சும்மா சாக்கு போக்கு சொன்ன ஆச்சி நாளடைவில் அப்புவும் பிள்ளைகளும் ஆவலுடன் சேர்ந்து நடக்க பின் தானும் சேர்ந்து கொண்டாள். அதில் அவர்களுக்கு ஒரு சௌகரியம் இருந்தது. பிள்ளைகளின் இரவு உணவையும் கொண்டு சென்று அங்கேயே சாப்பிட வைத்து விடுவார்கள். அவர்களுக்கு முன் சிவாங்கியும் முகிலனும் நொறுக்குத் தீனிகளுடன் தயாராய் இருப்பார்கள். அப்படி குளக்கரையிலும் வயல்களுக்கு நடுவேயும் நடக்கும்போது சுத்தமான காற்றையும் சுவாசிப்பதால் ஆச்சி அப்புவுக்கும் உடம்பு இலேசாகவும் சில சில வருத்தங்கள் இல்லாமல் போவதையும் கண்கூடாக அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். இரவில் நல்ல பசியுடன் வந்து வடிவா சாப்பிட முடிகிறது. அடிச்சுப் போட்டால் போல் நல்ல உறக்கமும் வருகிறது. பலப்பல விடயங்களையும் கதைத்துக் கொண்டு வருவதால் மனசிலும் எந்தப் பாரமும் இல்லாமல் இலேசாக இருக்கின்றது. பிள்ளைகள் முன்னால் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டு திரிய இவர்கள் பின்னால் நடந்து போவார்கள். அன்றும் அப்படித்தான் அப்புவும் பிள்ளைகளும் முன்னால் போய்க்கொண்டிருக்க ஆச்சியும் நிர்மலாவுக்கு மிக அருகில் வந்து மெதுவாக பேச்சைத் துவங்குகிறாள். --- எடி பிள்ளை நிர்மலா நான் உன்னட்டை ஒரு விஷயம் கேக்கட்டே என்று பீடிகையுடன் ஆரம்பிக்கிறாள். --- என்ன அம்மா இது எதுவென்றாலும் கேளுங்கோ. --- பிறகு நீ குறை நினைக்கக் கூடாது சரியோ. --- சொல்லுங்கோ அம்மா இந்தமாதிரி தயக்கம் எல்லாம் வேண்டாம். நான் ஒன்றும் குறை நினைக்க மாட்டன். --- பிள்ளை நீ ஏன் இன்னொரு கல்யாணம் செய்யக் கூடாது. --- அது வந்து அம்மா நான் அங்கிருந்து வந்தபின் எப்படியாவது உழைத்து நல்ல நிலைமைக்கு வரவேண்டும். கடைசி காலத்தில அம்மா அப்பாவுக்கும் மற்றும் எனது மூத்த அக்காவுக்கும் உதவி செய்து அவர்களை நல்லா வைத்திருக்க வேண்டும். அதிலேயே என் சிந்தனை முழுதும் இருந்ததால் நான் மறுமணம் பற்றி நினைக்கவே இல்லை. --- சரி..... நீ இப்ப நல்லா சம்பாதிக்கிறாய்தானே. நீ கெட்டிகாரி அதெல்லாம் செய்து போடுவாய். அதவிடு, இப்ப நான் விசயத்துக்கு வாறன். இந்த சில வருடங்களில் உன்னை எங்களுக்கு மிகவும் பிடித்துப் போட்டுது. என்ர மகன் கதிரவனை கலியாணம் செய்ய உனக்கு சம்மதமே. அல்லது உனது பெற்றோருடன் கதைக்க வேண்டும் என்றாலும் தயங்காமல் சொல்லு நாங்கள் சென்று உன்னைப் பெண் கேட்கிறம். --- சிறிது தயங்கிய நிர்மலாவும் அது வந்து அம்மா நீங்கள் திடுதிப்பென்று என்னிடம் கேட்கிறீங்கள் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. --- பொறு பிள்ளை, நீ ஒன்றும் அவசரப்பட வேண்டாம்.நன்றாக யோசித்து ஒரு பதிலை சொல்லு. நீயும் இப்படியே இன்னும் எவ்வளவு காலம்தான் இருக்க முடியும். --- உங்களுக்கு தெரியும்தானே அம்மா எனக்கு பிள்ளை பிறக்காததால்தான் அவர் மறுமணம் செய்தவர். அதனால்தான் நானும் அங்கிருந்து கிளம்பி வந்தனான்.நாளைக்கு அதுவே உங்களுக்கும் ஒரு பிரச்சனையாய் இருக்கக் கூடாதல்லவா. --- அதையேண்டி அம்மா நீ நினைக்கிறாய். அது ஆண்டவன் போடுற பிச்சை. யார்யாருக்கு எதையெதை எப்ப குடுக்கணும் என்று அவனுக்குத்தான் தெரியும். எனக்கு ஆறு பிள்ளைகள். ஐந்து பிள்ளைகளும் ஒவ்வொன்றும் கருவிலே அழிந்தும், குறைப்பிரசவத்திலும் என்று போய் கடைசியில மிஞ்சினது இவன் கதிரவன் மட்டும்தான். இப்ப உனக்குத்தான் இரண்டு பிள்ளைகள் இருக்குதே. நீ இங்க வந்ததில் இருந்து அந்த தாயில்லாப் பிள்ளைகளை குளிக்கவாக்கிறதில் இருந்து அவையளுக்கு ஏற்ற சாப்பாடுகள் உடுப்புகள் எல்லாம் நீதானே பார்த்துப் பார்த்து செய்கிறாய். கண்ணன் தேவகியிடம் பிறந்தாலும் தாய் என்று யசோதாவிடம்தானே வளர்ந்தவன். அதுபோல் அதுகளும் உன்னிடம்தானே அம்மா அம்மா என்று ஒட்டிக் கொண்டு கிடக்குதுகள். பெற்றவளுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கேல்லையே. "கல்லைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டால்தான் கடவுள் வழிபாடா, இந்த பிள்ளைகளை தாய்க்கு தாயாய் இருந்து கண்ணுங் கருத்துமாய் வளர்க்கிறதும் கூட அந்த பரம்பொருளுக்கான வழிபாடுதான்" அன்று கிணத்துக் காட்டில் இருந்து நீ சிவாங்கியை காப்பாத்தினது இப்பவும் என் கண்ணுக்குள்ள நிக்குது. அண்டைக்கு மட்டும் ஒரு தப்பு நடந்திருந்தால் நான் என்ர பிள்ளைக்கு என்ன பதில் சொல்லுவன். அன்றிலிருந்துதான் எனக்கும் அப்புவுக்கும் உன்மீது இப்படி ஒரு எண்ணம் வந்தது. யார் கண்டது உனக்கும் ஆண்டவன் ஒரு மடிப்பிச்சை இட நினைத்தால் அதை யார் தடுப்பார். இப்படி இவர்கள் கதைத்துக் கொண்டிருக்க அப்புவும் பிள்ளைகளும் விளையாடி விட்டு வருகினம். பின் எல்லோருமாக வீட்டிற்கு வருகிறார்கள். மலரும்...........! 🌾1 point- மலருக்கு தென்றல் பகையானால்.........!
மலர்..........(3). நிர்மலாவும் தான் இனி என்ன செய்யவேண்டும் என்று மனதுக்குள் நினைத்து கொள்கிறாள். தொடர்ந்து இங்கே இருப்பதா அம்மா வீட்ட சென்று அவர்களுக்கு சுமையாக இருப்பதா. ஏற்கனவே பெரியத்தான் குடி வெறி என்று ஒழுங்காக இல்லாததால பெரியக்கா குடும்பமும் பிள்ளைகளுடன் அம்மாவோடுதான் இருக்கிறார்கள். இதில் நானும் அங்கு சென்று இருப்பது சரியாய் இராது. என்று பலவாறு நினைக்கிறாள். தான் முன்பு விளையாட்டாக "யூ டியூபில்" சமையல் மற்றும் தோட்டக் கலை என்று தொடங்கிய நிகழ்ச்சிகள் மூலம் ஏதோ கொஞ்ச காசு வருகுதுதான் ஆனால் அது மட்டும் போதாது வேறு ஏதாவதும் செய்ய வேண்டும். அவளால் சரியாக ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. அன்று இராசம்மாவும் சங்கரும் வீட்டில் பரபரப்பாக வேலைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். சங்கர் கடைக்கும் போகவில்லை. அவன் தனது பெட்டியில் வேட்டி, சட்டை மற்றும் புது ஆடைகள் எல்லாம் எடுத்து வைத்து பூட்டுகிறான்.வளமையாய் அவன் எங்காவது வெளியூர் போவதென்றால் நிர்மலாதான் எல்லா ஆயத்த வேலைகளும் செய்து வைப்பாள். அவனுக்கு ஒரு வேலையும் இருக்காது. ஐயா ஹாயாக பெட்டியை உருட்டிக் கொண்டு கிளம்பிப் போவார்.இப்போது எதற்கும் அவளை கூப்பிடவில்லை.அவர்களுக்கு உள்ளுக்குள் குற்ற உணர்வு இருப்பதையும் அவள் கவனிக்கிறாள். வெளியே அவர்களது கார் வந்து நிக்கும் சத்தம் கேட்கிறது. அதை சாரதி மிகவும் அழகாக கழுவி பொலிஸ் போட்டு துடைத்துக் கொண்டு வந்திருந்தார். வெளியே தயாராய் இருந்த இவர்களது சாமான்கள் எல்லாவற்றையும் அவரே எடுத்துக் கொண்டு போய் கார் டிக்கியில் வைக்கிறார். நிர்மலா எல்லோருக்கும் தேநீர் கொண்டுவந்து குடுக்கும் போது இராசம்மாவும் நிர்மலாவிடம் பிள்ளை நாங்கள் ஒரு அலுவலாய் ஒரு இடத்துக்கு போயிட்டு இரண்டுநாள் கழித்துத்தான் வருவம். அதுவரை தாயம்மாவும் நீயும் வீட்டைப் பார்த்துக்கொண்டு கவனமாய் இருங்கோ. நான் போய் வந்து எல்லாம் சொல்லுறன். வீட்டையும் கொஞ்சம் கழுவித் துடைத்து வளைவுகளையும் கூட்டிப் பெருக்கி சுத்தமாய் வைத்திருங்கோ என்று சொல்லி கொஞ்சநேரம் அவளது கையை வாஞ்சையாய் பிடித்திருந்தது விட்டு கலங்கிய கண்களுடன் காருக்குப் போக சங்கரும் அவளைத் தீர்க்கமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு தலை குனிந்து கொண்டு போய் காருக்குள் ஏறுகிறான். காரும் புறப்பட்டு செல்கிறது. நிர்மலாவுக்கும் வேலைக்காரம்மாவுக்கும் வீட்டில் நிறைய வேலைகள் இருந்தன. அவர்கள் கூடுதலாக இரண்டு ஆட்களையும் கூலிக்கு கூப்பிட்டு வீடு மட்டுமன்றி தோட்டம், முற்றம் என்று எல்லாவற்றையும் நன்றாக செப்பனிட்டு மரம் செடி கொடிகள் எல்லாவற்றையும் அழகாக கத்தரித்து செழிப்பாக வைத்திருந்தார்கள். நான்காம் நாள் அதிகாலை நிர்மலா முதல்நாளே ஒழுங்கு செய்து வைத்திருந்த தனது சூட்கேஸ், கணனி கைபேசி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாள். மறக்காமல் போன் சிம்மை கழட்டி பையில் வைத்துவிட்டு மிக்க வேதனையுடன் தாலிக்கொடியை கழட்டி தனது கூறைச் சேலையின் மேல் வைத்து அவற்றை சங்கரின் மேசைமேல் வைத்து விட்டு வெளியே வருகிறாள். பின் குசினி அருகே இருக்கும் அறையை சென்று பார்க்க அங்கு தாயம்மா பகல்முழுதும் வேலை செய்த களைப்பில் நன்றாக அயர்ந்து உறங்குகிறாள். அப்படியே வீதிக்கு வந்தவள் சிறிது தூரம் நடக்கும்போது அவ்வழியால் வந்த ஒரு ஆட்டோவைப் பிடித்து புகையிரத நிலையத்துக்கு வருகிறாள். எதற்கும் இருக்கட்டும் என்று கொழும்புவரை பயணச்சீட்டு எடுத்துக் கொண்டு அடுத்து வந்த புகையிரதத்தில் ஏறி அமர்ந்து கொள்கிறாள். அந்த வண்டியும் சாவகச்சேரி, கொடிகாமம் என்று ஒவ்வொரு நிலையமாய் நின்று நின்று போகிறது. நிர்மலாவுக்கு எங்கு போவது, எங்கு இறங்குவது என்ற எண்ணம் இல்லை. அவர்கள் வரமுதல் இங்கிருந்து போக வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி இருக்கின்றது. வவுனியாவில் வண்டி நிக்கும்போதுதான் தன் நினைவுக்கு வந்தவள் இனி அங்கால எல்லாம் சிங்கள ஊர்கள்தான் வரும், அதனால் இங்கேயே இறங்கி அடுத்த அலுவலைப் பார்க்கலாம் என்று நினைத்து வண்டி புறப்பட முன் பெட்டியுடன் இறங்கி விடுகிறாள். காலைப் பொழுது பலபலவென்று விடிந்து விட்டிருந்தது. நேராக வவுனியா மையத்துக்கு நடந்து வருகிறாள். இது எனக்குப் பழக்கமில்லாத ஊர் அதனால் எதற்கும் பயந்தவளாக தன்னைக் காட்டிக் கொள்ளக் கூடாது என்று தனக்குள் சொல்லிக்கொண்டே வருகிறாள். அதனால் மிகவும் பழகியமாதிரி அங்கிருந்த ஒரு கைபேசி விற்கும் கடைக்கு சென்று புதிதாக ஒரு சிம் வாங்கிப் போனுக்குள் பொருத்திவிட்டு ஒரு புதிய இலக்கத்தையும் பெற்றுக் கொண்டு வெளியே வரும்போது எங்கிருந்தோ ஒரு கோவில் மணி ஒலிக்கின்றது. அந்த ஓசையைப் பிடித்துக் கொண்டு அங்கு சென்றால் அது ஒரு முருகன் கோவில். அங்கு நன்கு வணங்கி முருகனுக்கு ஒரு அர்ச்சனையும் செய்துவிட்டு தனது கைபேசி மூலம் அருகில் இருக்கும் பல விடுதிகளில் ஒன்றைத் தெரிவுசெய்து அங்கு சென்று தனியறை ஒன்றை எடுத்து அங்கே தனது பெட்டியை வைத்துவிட்டு சிறிது ஒய்வு எடுக்கிறாள். பின்பு நிர்மலா அறையைப் பூட்டிவிட்டு கைப்பையுடன் வெளியே வருகிறாள். அவளது நோக்கமெல்லாம் நகரத்தைத் தாண்டி கொஞ்சம் உள்ளூருக்குள் சென்று ஒரு பாடசாலையை அண்மித்த இடமாக வதிவிடம் பிடிக்க வேண்டும் என்பதுதான். தற்போது நிர்மலாவிடம் போதிய அளவு பணமும் தனக்குப் பெற்றோர் போட்டுவிட்ட நகைகளும் கொஞ்சம் இருக்கின்றன. கைபேசியிலேயே அங்குள்ள பாடசாலைகளைத் தெரிவு செய்து பின் ஒரு வீதியைப் பிடித்து நடந்து செல்கிறாள்.......! மலரும்..........!🍁1 point- திரும்பும் வரலாறு!
1 pointநிச்சயமாக, வாரம் இரு முறை போடுவதாகத் தான் திட்டம், இந்த வாரம் வேலை கூடி நேரம் சுருங்கி விட்டதால் நாளை போடுவேன்! நன்றி1 point- திரும்பும் வரலாறு!
1 point"புத்தியுள்ளவனுக்கே உலகம் சொந்தம்" என்று யூதர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த எளிய விளக்கத்தை ஒதுக்கி விட்டு "யூதர்கள் உலகை ஆட்டிப் படைக்கிறார்கள்" என்ற சதிக் கோட்பாடு கலந்த ஒரு கருத்தை சிலர் பரப்பி வருவது உண்மை. "தகுதியே இல்லாமல் யூதர்கள் ஜேர்மனியில் மேலாண்மை செய்கிறார்கள், எனவே அழிக்க வேண்டும்!" என்று முழுமையான சதிக் கோட்பாட்டை வைத்துத் தான் நாசிகள் யூதப் படுகொலையை நியாயப் படுத்தினர்.1 point- திரும்பும் வரலாறு!
1 pointதிரும்பும் வரலாறு - பாகம் 3 – நாசிகள். fபிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) ஒரு வித்தியாசமான பேர்வழி. பயிர்கள் வளர நைதரசன் அவசியம். ஆனால், காற்றில் நிறைந்திருக்கும் நைதரசன் வாயுவை எல்லாப் பயிர்களாலும் பயன்படுத்திக் கொள்ள இயலாது. ஹேபர், நைதரசனை அமோனியா உரமாக மாற்றும் வழியைக் கண்டு பிடித்தது உலக விவசாய உற்பத்திக்குப் பாரிய பங்களிப்புச் செய்தது. இந்தக் கண்டு பிடிப்பிற்காக அவருக்கு இரசாயனவியலில் நோபல் பரிசும் கிடைத்தது. ஹேபரின் அடுத்த கண்டு பிடிப்பு கொஞ்சம் விவகாரமானது. குளோரின் வாயுவை, வாயுவாகவே குடுவையில் வைத்திருக்கும் முறையை ஹேபர் கண்டு பிடித்த போது, முதலாம் உலகப் போர் முடிவிற்கு வந்து கொண்டிருந்தது. ஹேபர், பிரெஞ்சுப் போர் முனைக்கு தனது குளோரின் வாயுச் சிலிண்டர்களை ஜேர்மன் படையினரோடு சேர்ந்து எடுத்துச் சென்று பதுங்கு குழியில், காற்று பிரெஞ்சுப் படைகள் இருந்த பக்கம் வீசும் வரைக் காத்திருந்தார். காற்று வளமாக வந்த வேளையில் குளோரின் வாயுவைத் திறந்து விட்டார். காற்றோடு சேர்ந்து பிரெஞ்சுப் படைகளின் பக்கம் நகர்ந்த குளோரின் வாயு தான் முதலாவது இரசாயன ஆயுதம். தரையோடு சேர்ந்து பரவிய குளோரின் வாயு எதிரிகளின் பதுங்கு குழிகளுக்குள்ளும் இறங்கி அவர்களை மூச்சுத் திணற வைத்தது. குளோரின் வாயுவினால் உடனடியாக இறக்காதோர் கண் பார்வை, நுரையீரல் என்பன நிரந்தரமாகப் பாதிக்கப் பட்டு சில நாட்களில் இறப்பர். அந்த மரணம் வரை உடல் அனுபவிக்கும் உபாதை கொடூரமானது. இவ்வாறு ஒரு தடவையில் ஜேர்மனி பயன்படுத்திய குளோரின் வாயுவினால் மட்டும் ஆயிரத்திற்கு சற்று அதிகமான பிரெஞ்சு, கனேடியப் படைகள் இறந்தனர். ஹேபருக்கு ஜேர்மனியில் மதிப்பு உயர்ந்தது, ஆனால் அவர் தனது விஞ்ஞான அறிவை இவ்வாறு பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஹேபரின் மனைவி தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இதில் சுவாரசியமான தகவல் என்னவெனில், ஹேபர் ஒரு ஜேர்மனிய யூதர்! ஆனால், ஜேர்மன் தேசபக்தி காரணமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, 1933 இல் ஹிற்லர் ஆட்சிக்கு வந்த வேளையிலும் மேலும் சில இரசாயனவியல் வாயுக்களைக் கண்டறிந்து ஜேர்மனியின் விஞ்ஞான வளர்ச்சிக்கு உதவிக் கொண்டிருந்தார். இவ்வாறு இவர் அடுத்துக் கண்டு பிடித்த வாயு, ஐதரசன் சயனைட் வாயு. சிக்லோன் (Zyklon) என்று அழைக்கப் பட்ட இந்த நச்சு வாயுவை இலகுவாக சில திண்மப் பொருட்களிலிருந்து தயாரிக்கும் வழியை ஹேபர் கண்டு பிடித்தார். இந்த நச்சு வாயுவை பூச்சி கொல்லியாகப் பாவிக்கும் நோக்கமே ஹேபரினுடையதாக இருந்தது. ஹேபரின் இந்தக் கண்டு பிடிப்புத் தான் அடுத்த 5 ஆண்டுகளில், சிக்லோன் - பி என்ற பெயரில் மில்லியன் கணக்கான யூதர்களை வாயு அறைகளில் அடைத்து வைத்துக் கரப்பான் பூச்சிகள் போல சில நிமிடங்களில் கொலை செய்யப் பயன் படுத்தப் பட்டது. ஆனால், இது நடப்பதற்கு முன்னரே ஹேபரின் யூத அடையாளம் காரணமாக அவரையும் ஜேர்மன் நாசிகள் ஒதுக்கி வைத்து விட்டமையும் நடந்தது. திட்டமிட்ட யூத ஒதுக்கல் முதலில், எடுத்தவுடனேயே நாசிகள் யூதர்களையும் ஏனையோரையும் கொலை செய்ய ஆரம்பிக்கவில்லை. உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன, சர்வதேச வர்த்தகம், இராஜ தந்திர உறவுகள், 1936 பேர்லின் ஒலிம்பிக் என்பன இன்னும் ஜேர்மனியை படுகொலைகள் செய்ய விடாமல் தடுத்திருந்தது. ஆனால், சில திட்டமிட்ட நாசி நடவடிக்கைகள் யூதர்களைக் குறி வைத்தன (இது முழுமையான பட்டியல் அல்ல!): 1. யூதர்களின் வியாபாரங்களைப் புறக்கணிக்கும் படி கோரும் பிரச்சாரம் மூலம் யூதர்களின் பொருளாதாரம் முடக்கப் பட்டது. இது மட்டுமன்றி, புதிதாக ஆரம்பிக்கப் படும் வியாபரங்களில் யூதர்கள் முழு உரிமையாளர்களாக இருக்க முடியாத கட்டுப் பாடுகளும் உருவாக்கப் பட்டன. 2. வர்த்தக சங்கங்களில் யூதர்கள் அங்கத்துவராக இருக்க முடியாத சட்டங்கள் உருவாக்கப் பட்டன. நாசி ஆதரவாளர்களால் நிர்வகிக்கப் பட்ட தொழிற்சங்க அமைப்புகளே முன்னின்று இந்த ஒதுக்கல்களைச் செயல் படுத்தினர். 3. சட்டத்தரணிகளாக, மருத்துவர்களாக, மருந்தாளர்களாக யூதர்கள் பணி செய்யும் அனுமதியை ஜேர்மன் நகரங்களும் மானிலங்களும் மறுத்தன. 4. ஒரு கட்டத்தில், ஜேர்மன் யூதர்களின் பிரஜாவுரிமையைப் பறித்து விடும் சட்டமொன்று வரைபாக சில மாதங்கள் விவாதிக்கப் பட்டது. இறுதியில், சர்வதேச எதிர்ப்பு வரலாமென்பதால் அதை நிறைவேற்றாமல் விட்டார்கள். ஆனால், 1938 அளவில் ஜேர்மன் யூதர்களின் கடவுச் சீட்டுகளைத் தற்காலிகமாகப் பறிமுதல் செய்து, அதில் "ஜெ" என்ற எழுத்தைக் குறித்துத் திருப்பிக் கொடுத்தார்கள். இந்த "ஜெ" என்ற எழுத்துக் குறித்த கடவுச் சீட்டுகளை ஜேர்மன் அதிகாரிகள் புதுப்பிக்க மறுத்ததால், நடைமுறையில் ஜேர்மன் யூதர்கள் தங்கள் குடியுரிமையை இழந்தனர். 5. ஜேர்மன் பாடசாலைகளில் யூதக் குழந்தைகள் சேர முடியாமல் தடை வந்தது. ஒரு கட்டத்தில் எல்லா யூதர்களையும் ஒன்று கூட்டி, பஸ்களில் ஏற்றி நகரின் ஒரு மூலையில் யூதர்களுக்கு மட்டுமே உரியதான ஒரு குடியேற்றத்தில் ஒதுக்கி வாழ வைத்தனர். நினைத்த நேரத்தில், ஜேர்மன் பொலிஸ், காக்கிச் சட்டைக் கும்பல் என்பன இங்கே நுழைந்து யாரையும் கைது செய்ய, தாக்க இந்தக் குடியேற்றங்கள் வாய்ப்பாக இருந்தன. யூதர்கள் அல்லாதோருக்கும் சட்டரீதியான ஒதுக்கல் முன்னரே குறிப்பிட்டது போல, றோமா எனும் ஜிப்சி மக்களும் கூட யூதர்களுக்கு இணையாகப் பாதிக்கப் பட்டனர். இன்னொரு விதமான கொடுமையான ஒதுக்கலையும் நாசிகள் சட்ட ரீதியாக்கினர்: 1933 இல், நாசிகள் உடற்குறைபாடுகள் தொடர்பான ஒரு சட்டத்தை இயற்றினர்: Law for the Prevention of Progeny with Hereditary Diseases. இந்தச் சட்டத்தின் நோக்கம், அப்பழுக்கற்ற ஆரிய இனமாக ஜேர்மனியர்களை மாற்றும் போலி விஞ்ஞான நோக்கமாக இருந்தது (Eugenics - இதை மனிதர்களில் செய்யவே முடியாதென்பது வேறு கதை). அடுத்த 8 வருடங்களில், ஹிற்லரின் கட்டளைப் படி, “ஒபரேஷன் T4” எனும் பெயரில் இரகசியமாக முன்னெடுக்கப் பட்ட திட்டத்தின் கீழ், மூன்று லட்சம் வரையான உடல், மன ஊனங்கள் உடையவர்கள் வாயுக் கூடங்களிலும், விஷ ஊசிகளாலும் கருணைக் கொலை செய்யப் பட்டனர். உண்மையில், யூதர்களைக் கொல்லப் பயன்படுத்தப் பட்ட சிக்லோன் பி விஷவாயு, இந்த உடல் ஊனமுற்றோரில் தான் பரீட்சித்துப் பார்க்கப் பட்டது. பின்னர், 1938 இல் இருந்து இதே முறை மூலம் யூதர்களும் கொல்லப் பட்டனர். இறுதித் தீர்வு - “Final Solution” 1938 நவம்பர் 9 ஆம் திகதி "உடைந்த கண்ணாடி இரவுகள்" (Kristallnacht) என அழைக்கப் படுகிறது. அந்த இரவில் தான், கும்பலாக நாசி ஆயுததாரிகளும், காக்கிச் சட்டைகளும் ஜேர்மன் யூதர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு சில நூறு யூதர்களைக் கொன்றனர். ஆயிரக் கணக்கான யூதர்கள் கைது செய்யப் பட்டு, புச்சன்வால்ட் வதை முகாமிற்கு அனுப்பப் பட்டனர் - இவர்களுள் பெரும்பாலானோர் நச்சு வாயு அறைகளில் பின்னர் கொல்லப் பட்டனர். இதே ஆண்டில், நாசிகள் ஆஸ்திரியாவையும், பின்னர் செக்கோஸ்லோவாக்கியாவையும் எதிர்ப்பின்றிக் கைப்பற்றி, அங்கே வாழ்ந்த யூதர்களையும் வெவ்வேறு வதை முகாம்களில் அடைத்தனர். ஜேர்மனிக்கு வெளியே, போலந்தில் இருந்த ஆஸ்விற்ஸ் வதை முகாம் தான் அதிக கிழக்கு ஐரோப்பிய யூதர்களைப் பலி கொண்ட கொலைக்களம். ஆனால், வதை முகாம்களில் மட்டுமன்றி சில இடங்களில் திறந்த வெளிகளிலேயே யூதர்கள் பெருந்தொகையாகக் கொல்லப் பட்டனர். இத்தகைய திறந்த வெளிக் கொலைக்களங்களில் முக்கியமானதாக உக்ரைன் தலைநகர் கியேவிற்கு அண்மையில் இருக்கும் பாபி யார் (Babi Yar) பள்ளத் தாக்கு விளங்குகிறது. இந்தப் பகுதியை இயற்கைப் புதைகுழியாகப் பயன்படுத்தி, சுமார் 34,000 யூதர்களை நாசிகள் சில நாட்களில் இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டே கொன்றொழித்தனர். இந்த பாபி யார் படுகொலையில் அந்தக் காலப் பகுதியில் சோவியத் எதிர்ப்பாளர்களாக இருந்த உக்ரைனிய ஆயுதக் குழுக்களும் பங்கு கொண்டிருந்தன. 1938 முதல் 1945 வரையான காலப்பகுதியில் மூன்றுக்கு மேற்பட்ட வதை முகாம்கள், ஏனைய திறந்த வெளிக் கொலைகளங்களில் கொல்லப் பட்ட யூதர்களின் எண்ணிக்கை மட்டும் 6 மில்லியன்கள். இதை விட மேலதிகமாக நாசிகளால் கொல்லப் பட்ட ஏனையோர் 4 மில்லியன் வரை இருப்பர். இப்படி, செறிவான, வினைத்திறனான மனிதக் கொலையே முழுமூச்சாக இயங்கிய ஒரு அரச நிர்வாகத்தை அது வரை உலகம் கண்டிருக்கவில்லை. “மிகுந்த வீரரான” 😎ஹிற்லர், இத்தனை படுகொலைப் பழிக்குப் பின்னரும் பொறுப்பை முன்வந்து ஏற்றுக் கொள்ள முடியாமல், தன் காதலியோடு தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அவரது குற்றத்தில் பங்கு கொண்ட பலர் பிடிக்கப் பட்டு மரண தண்டனைக்குள்ளாகினர். இஸ்ரேல் சில நாசிகளை, தென்னமெரிக்கா வரைப் பின் தொடர்ந்து துரத்திச் சென்று பிடித்து வந்து இஸ்ரேலில் வைத்துத் தூக்கில் போட்டது சுவாரசியமான கதை. ஆனால், ஹிற்லர் இருக்கும் போதே அவருக்குத் தண்ணி காட்டிக் கலங்கடித்த ஒரு கதாநாயகனும் இருந்தார்: அவர் அக்கால பிரிட்டன் பிரதமர் வின்ஸ்ரன் சேர்ச்சில்! சேர்ச்சிலின், அவர் தலைமையில் நாசிகளுக்கு சவால் விட்ட பிரிட்டனின் கதை நாசிகளின் நரவேட்டையை விட உரத்துச் சொல்லப் பட வேண்டிய வெற்றிக் கதை! - வெற்றிக் கதை தொடரும்- -ஜஸ்ரின்1 point- திரும்பும் வரலாறு!
1 pointநிச்சயமாக. இரண்டாம் உலகப் போரின் கதையை, பிரிட்டன், சேர்ச்சில், ப்ளெட்ச்லி பார்க், RAF இவையெல்லாம் குறிப்பிடாமல் எழுதவே முடியாது! - அலன் ரூரிங்கும் வருவார்!1 point- திரும்பும் வரலாறு!
1 pointஉலக நாடுகள் என்ன செய்தன? ஹிற்லரின் நாசிக் கட்சியின் ஆட்சியில் ஜேர்மனி வந்த காலப் பகுதி ஒரு அசாதாரணமான உலகக் சூழல் நிலவிய காலம். முதல் உலகப் போரினால் ஒரு லட்சம் இளைஞர்களையும், அதே காலப்பகுதியில் ஐந்து லட்சம் வரையான மக்களையும் இன்புழுவன்சாப் பெருந்தொற்றினால் இழந்த அமெரிக்கா, 1929 இல் உருவான பொருளாதார மந்த நிலையினால் கடுமையாகப் பாதிக்கப் பட்டது (இந்த மந்த நிலை- Great depression, ஏதோ ஒரு வகையில் 1939 வரை நீடித்தது). எனவே அமெரிக்கா ஒரு உலக சக்தியாக யாருக்கும் தோன்றவில்லை அப்போது. ஆனால், தங்கள் காலனிகள், சக்தி மிக்க கடற்படைகள் என்பவை காரணமாக பிரிட்டனும், பிரான்சும் இராணுவ ரீதியில் பலமாக இருந்த காலம் அது. நாடுகளின் சங்கம் (League of Nations) என்ற ஐ.நாவின் முன்னோடியான அமைப்பு அமெரிக்காவினால் முன்னின்று உருவாக்கப் பட்டாலும், அமெரிக்கா அந்த அமைப்பில் நிரந்தர உறுப்பினராகவில்லை. மாறாக, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் ஆகிய நிரந்தர உறுப்பினர்களோடு, சில டசின் நாடுகளை உறுப்பினர்களாக வைத்துக் கொண்டு "கூட்டுப் பாதுகாப்பு (collective security)" என்ற அடிப்படையில் நாடுகளின் சங்கம் இயங்கியது. ஆனால், செயல் திறன், அமலாக்கல் சக்தி என்பன குறைந்த ஒர் அமைப்பாக இருந்ததால் உண்மையிலேயே உலகின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பிரச்சினைகளை நாடுகளின் சங்கத்தால் தீர்க்க இயலவில்லை. உதாரணமாக, நிரந்தர உறுப்பினரான ஜப்பான், சீனாவின் மஞ்சூரியாப் பகுதியை ஆக்கிரமித்த போது, நாடுகளின் சங்கத்தினால் கண்டனம் மட்டுமே தெரிவிக்க முடிந்தது - இந்தக் கண்டனமே ஜப்பான் தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளக் காரணமாக இருந்தது. ஜேர்மனி கூட ஒரு குறுகிய காலப்பகுதியில் நாடுகளின் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப் பட்டது. ஹிற்லர் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் காரியங்களில் ஒன்றாக அந்த அமைப்பில் இருந்து ஜேர்மனியை விலக்கிக் கொண்டார். இதன் மூலம், உலகப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக வரப் போகும் இரு நாடுகள் நாடுகளின் சங்கத்தைப் புறக்கணிக்கும் வசதி வாய்ப்பு அமைந்தது. இப்படி உலக நாடுகள் - குறிப்பாகப் பலம் பொருந்திய நாடுகள்- தங்கள் உள்விவகாரங்களுக்கு முன்னுரிமை கொடுத்த காலப்பகுதி (isolationism என்பார்கள்)ஹிற்லருக்கும், கிழக்கில் ஜப்பானியர்களுக்கும் மிக வாய்ப்பான காலமாக இருந்தது. மொத்தத்தில், ஜேர்மனியின் புதிய நாசி அரசை உலக நாடுகள் வித்தியாசமாகப் பார்க்கவில்லை என்று தான் பின்னர் வெளி வந்த இராஜதந்திரப் பரிமாற்றங்கள் சுட்டிக் காட்டுகின்றன. மாறாக, அரவணைத்துச் செல்லும் (appeasing) முயற்சி கூட 1932 முதல் ஆரம்பித்து விட்டது. உதாரணமாக, அமெரிக்கா, வெர்சை உடன்படிக்கையின் படி ஜேர்மன் மீது விதித்த பொருளாதாரத் தண்டனைகளை ஈடு செய்ய, குறுகிய காலக் கடன்களை வழங்கியிருந்தது. 1932 இல், ஜேர்மனியின் பொருளாதரப் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு அந்தக் கடன்களை வசூலிப்பதை தற்காலிகமாக ஒத்தி வைத்தது (debt moratorium - வட்டி மட்டும் கட்ட வேண்டிய நிலை). இதன் பின்னர், 1934 இல் ஹிற்லர் ஒரு சட்டத்தை இயற்றி, சகல வெளிநாட்டுக் கடன்களையும் ஒரு தலைப் பட்சமாக நிறுத்தி வைத்தார். இதனால், ஜேர்மன் பணம் நாட்டை விட்டு வெளியே செல்வது வெகுவாகக் குறைக்கப் பட்டது. பொருளாதாரத்தில் ஒரு கண் வைத்திருந்த நாசிகள் கடன்களின் சுமையில்லாமல் மூச்சு விடக் கிடைத்த இடைவெளியில் நாசிகள் ஜேர்மன் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் தீவிரமாக ஈடுபட்டனர். ஜேர்மன் மக்களின் தொழில் நுட்பத் திறமை, உயர்ந்த கல்வி மட்டம், அதிகாரத்திற்குப் படிந்து எதையும்செய்யும் நடத்தைப் போக்கு (இதை முறைப்பாடு செய்யாமல் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் stoicism என்றும் சொல்வார்கள் - இது ஜேர்மன் தேசிய அடையாளங்களுள் ஒன்று என்று கூடச் சிலர் சொல்வர்!) என்பன நாசிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன. வேலையற்ற ஜேர்மனியருக்கு வேலை வழங்க, கட்டுமானத் திட்டங்கள் உருவாக்கப் பட்டன - உலகின் முதல் நெடுஞ்சாலை வலையமைப்பு ஆட்டோ பான் (Autobahn) என்ற பெயரில் ஜேர்மனியில் உருவானது. இரும்புப் பொருட்கள் உற்பத்தி, எண்ணை சுத்திகரிப்பு, செயற்கை இறப்பர், இரசாயனங்கள் என ஏராளமான பொருட்களின் உற்பத்தி அளவு ஒரிரு ஆண்டுகளிலேயே பல மடங்குகளால் அதிகரித்தது நாசிகளின் ஆட்சியில். அதே வேளையில், வேலையில்லாதோருக்கு சீருடைகளை அணிவித்து, புதிது புதிதாக ஆயுதப் படைப்பிரிவுகளை உருவாக்கும் வேலையும் நடந்தது. காக்கிச் சட்டைகள் (brown shirts) என்று அழைக்கப் பட்ட ஹிற்லர் இளைஞரணியும் ஒரு தனிப் படையாக வளர்க்கப் பட்டது. நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் அதிகரித்தது. நாசிகளை நம்பிக்கையுடன் ஆதரித்த மக்கள் "இது பொற்காலம்" என மகிழ்ந்து அவர்களது கூட்டங்களில் மந்திர சக்தியால் ஆட்கொள்ளப் பட்ட பொம்மைகள் போலக் கலந்து குதூகலித்தனர், ஆர்ப்பரித்தனர். ஆனால், இந்த 1930 களின் நாசி ஜேர்மன் பொருளாதாரம் ஒரு போர்க்காலப் பொருளாதாரம் என்பது முன்னுரிமை வழங்கப் பட்ட துறைகளைப் பார்க்கும் போதே தெளிவாக யாருக்கும் தெரிந்து விடும். அதாவது, வெர்சை உடன் படிக்கையின் படி ஆயுதப் படைகளை நவீன மயப்படுத்தும் உரிமையை இழந்த ஜேர்மனி, மறைமுகமாக தன் இராணுவப் பற்களைத் தீட்டிக் கொண்டிருந்தது. இதனை எத்தனை உலக நாடுகள் புரிந்து கொண்டிருந்தன என்பதில் வரலாற்றியலாளர்கள் முரண்படுகின்றனர் - ஆனால், ஹிற்லர் தன்னைச் சுற்றி வைத்திருந்த ருடோல்f ஹெஸ், ஜோசப் கோயபல்ஸ், ஹேர்மன் கோறிங் ஆகிய பெரிய தலைகள் ஜேர்மனியின் ஆயுத மயமாக்கலின் நீண்டகால நோக்கத்தை அறிந்திருந்தனர். உதாரணமாக, வெர்சை உடன் படிக்கையின் படி, ஜேர்மன் விமானப்படையொன்றைக் கட்டியெழுப்ப தடை இருந்தது. ஆனால், ஜேர்மனியில் பல சிவிலியன் விமான நிறுவனங்கள் முதல் உலகப் போர் காலத்திலேயே இருந்திருக்கின்றன. ஹெர்மன் கோறிங், இந்த சிவிலியன் விமான நிறுவனங்களின் திறமை வாய்ந்த விமானிகளை இரகசியமாக ஒன்று சேர்த்து, பயிற்சியளித்து ஜேர்மன் விமானப் படையை கண்காணிப்புக் குறைந்த ஜேர்மன் நாட்டுப் புறங்களில் கட்டியமைத்து வந்தார். இவ்வாறு உருவாக்கப் பட்ட ஜேர்மன் விமானப்படை (Luftwaffe), இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனுக்கு மிகுந்த சவாலாக விளங்கியது குறிப்பிடத் தக்கது. இருளிரவின் ஆரம்பம் இவ்வளவு தொழில்நுட்ப, பொருளாதார, கல்வி மேலாண்மை கொண்ட ஜேர்மன் சமுதாயம், "ஆரியர்கள்" அல்லாத யூதர்கள், றோமா மக்கள் ஆகியோரையும், ஓரினச் சேர்க்கையாளர்களையும், லூதரன் கிறிஸ்தவர்கள் அல்லாத ஏனைய கிறிஸ்தவர்களையும் எப்படி ஒதுக்கி வைத்தது? ஒதுக்கி வைத்தது மட்டுமல்லாமல், அவர்களை எப்படி வகை தொகையின்றிக் கொன்றொழித்தது? இத்தகைய இருண்ட மாற்றங்கள் 1933 இலிருந்து ஆரம்பிக்கின்றன - ஹிற்லரின் பேச்சுக்கள் செயல் வடிவம் பெற்றன. சாதாரண ஜேர்மன் மக்களும், ஜேர்மனியில் வசித்த வெளிநாட்டவர்களும் கூட "நாசிகள் ஒன்றும் மோசமில்லை"😎 என்று சான்றிதழ் கொடுக்கும் அளவுக்கு எப்படி பொருளதாரம், கலாச்சார மேன்மை ஆகிய பொன்முலாம் கொண்டு நாசிகள் தங்கள் மிருகத் தனத்தை மறைத்தனர்? இது தான் நண்பர்களே வரலாறு திரும்பும் ஒரு சிறந்த உதாரணக் கதையாக இருக்கிறது. -இன்னும் வரும் ஜஸ்ரின்1 point- திரும்பும் வரலாறு!
1 pointஇணைந்திருக்கிற எல்லோருக்கும் நன்றி - தனித்தனியாக வந்த கேள்விகளுக்கு பின்னர் பதில் எழுதுகிறேன். ஆனால், கோசானின் கருத்துக்கு இப்பவே எழுத வேண்டும்: உடைந்த றெக்கோர்ட் போல 5 வருடங்களாக போலிச் செய்திகள், சதிக் கதைகள், திரித்த வரலாறுகளின் பின் செல்லுதல் ஆகியவற்றால் வரக் கூடிய தீமைகளைச் சொல்லி வந்தும் அதனால் எவ்வளவு பயன் விளைந்தது எனத் தெரியவில்லை. சலிப்பு வந்தாலும், என் பிள்ளை வாழப் போகும் உலகை இப்படியே விட்டுப் போக முடியாது என்பதால் ஒரு சிறு முயற்சி, கடைசி முயற்சி என்று கூடச் சொல்லலாம். இதை நான் ஆரம்பிக்க 2 முன்மாதிரிகள் அல்லது ஊக்கிகள்: 1. மரியோ லிவியோ, ஒரு அமெரிக்க பௌதீகவியலாளர், விஞ்ஞான மறுப்பிற்கெதிராகச் செய்லபடும் ஒரு எழுத்தாளர். அவர் கருத்தின் படி இளம் வயதினர் (impressionable age? யாழை வாசிப்போரில் இவர்கள் எத்தனை வீதமென அறியேன்!) விஞ்ஞானத்தையும், வரலாற்றையும் அறியச் செய்தால் 10 வருடங்களில் உலகம் இப்போதிருப்பதை விட முன்னேற்றகரமாக இருக்கும் என்கிறார். 2. யாழ் கள ரஞ்சித்தும் நன்னியரும்: சளைக்காமல் எங்கள் இனம் பற்றிய பதிவுகளைத் தொடராகப் பதிவதில் அவர்கள் காட்டும் உழைப்பும் ஆர்வமும் மெச்சத்தக்கவை. இவர்களின் உழைப்பு எனக்கு வராதெனினும், தொலைவிலாவது பின் தொடர முனைகிறேன்.1 point - குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.