நல்லதொரு வரலாற்று மொழி பெயர்ப்பு கட்டுரை இரத்தின சுருக்கமாக, வரலாற்றைப்பற்றி தெரியாத சிலருக்கு நன்றாக உதவும் விளங்கிகொள்ள, பாராட்டுக்கள்.
இந்த கட்டுரையின் தலைப்பிற்கும் முடிவிற்கும் தொடர்பை காணவில்லையே - எப்படி வரலாறு திரும்புகின்றது "அமெரிக்கா அணுவாயுதத்தை பயன்படுத்தி ஐப்பானை அடிபணிய வைத்தபின்பு இரு நாடுகளும் சுமூகமாக முன்னர்நகர்ந்துவிட்டனர்", அதே மாதிரி வரலாறு திரும்புமா, எந்தநாட்டிற்கு இப்படி நடக்கும்
எப்படி சொல்கின்றீர்கள், ஐப்பானின் தோல்விக்குபின் எந்த நாடு தோல்விகண்டிச்சு அணுவாயுதத்தால் தோல்விகண்ட நாடு தற்போது அமெரிக்காதான் வடகொரியா, ஈரான், ரசியா சீனா ஒன்றும் செய்யமுடியவில்லை, என்ன இறங்கிவந்து வடகொரியாவிற்கு கைகொடுத்த துதான் மிச்சம் அமெரிக்க ஐனாதிபதியால், இப்ப உள்ள ஐனாதிபதியால் தன் நாட்டு பிரச்சனைகளேயே சமாளிக்க முடியவில்லை
இனி அமெரிக்காவால் எந்த பூச்சாண்டியும் காண்ட முடியாது வரலாறு திரும்ப, கோழைத்தனமான தாக்குதல்களை வேணுமென்றால் வீரமாக நடத்தலாம்
இந்தா ரசியாவை பிடிக்கபோகின்றேன் என போன நெப்போலியன் ஹிட்லருக்கு நடந்த வரலாறு வேணுமென்றால் திரும்பலாம்
நீங்கள் ஆரம்பித்த திரி என்பதால் எப்படி எங்கே வரலாறு திரும்புமென்று சொல்ல முடியுமா, தயவு செய்து மற்ற திரிகளில் நீங்கள் பாவிக்கும் நளினமற்ற வார்த்தைகளை தவிர்த்துவிட்டு பதிலிட்டால் நன்று, அல்லது நாமும் அதே வார்த்தைகளை உங்களை நோக்கி பாவிக்க முடியும், நீங்கள் பாவிக்கும் போது வராதவர்கள் நாங்கள் பாவித்தபின் வரித்துகண்டி வந்துவிடுவார்கள் உங்கள் நளின வார்த்தைகளை விளங்காமல்.
அத்துடன் உங்கள் முழு பதிவையும் வாசித்துவிட்டுதான் கேள்வி கேட்கின்றேன், மீண்டும் நுனி, அடி, ... என பதியவேண்டாம்
அமெரிக்கா வியாட்னாமில் படித்த வரலாற்றை மறந்து, ஈராக்கில் கற்றார்கள், பின் ஆப்பகானிஸ்தானில் - அங்கு ஆயதங்கள் தளபாடங்கள், வாகனங்கள், வானூர்திகளை அழிக்க போன தாலிபான்களிடமே கொடுத்து திரும்பிஓடியதுதான் வரலாறு. அமெரிக்காதான் வரலாற்றை திரும்ப திரும்ப படிக்க வேண்டும், மற்ற உலக நாடுகள் அல்ல
திரும்பும் வரலாறு எந்த நாட்டிற்கு எப்படி, எதனால் , யாரால், எதற்கு என விபரமாக தரமுடியுமா???