Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Justin

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    7054
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87992
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    32004
    Posts
  4. vasee

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    3328
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/26/23 in Posts

  1. + + + + + + + இது கோழி முட்டை இல்லை வெள்ளை நிற மாங்காய் (வெய்ட் மங்கோ)
  2. ஆச்சிமார் ஒரே கனவு காண்பது இயல்பு தானே, அது தான் வாசகர்களும் விட்டுட்டு நகர்ந்து விட்டமாக்கும்..
  3. 1999 ஆம் ஆண்டு 10 அ 11 மாதத்தில் சிறப்பு எல்லைப்படை ஆண் போராளிகள் தமது சீருடை அணிந்து அணிநடையில் ஈடுபடுகின்றனர்
  4. வேறு ஒரு திரியில் இதனை பற்றி குறிப்பிடும்போது இது மன்னாரில் என தவறாக குறிப்பிட்டுள்ளேன், இந்த கட்டுரையில் புத்தளத்தில் என்பதனை பார்க்கும் போது தவறினை உணருகிறேன்.
  5. சுமோ தொடர்ந்து எழுதுங்கள்.. யாழில் நீண்டகால்ங்களுக்கு பிறகு ஒரே மூச்சிலும் அடுத்த பாகங்களுக்கு காத்திருந்து படிக்கும் பகுதி ஆகிவிட்டது உங்கள் தொடர்.. வெளிநாட்டுக்காரர் விலாசாம் காட்டும் இடங்களாகவும் பூசாரிகள் வயிறு வளர்க்கும் மற்றும் காசு பார்க்கும் இடமாக கோவில்கள் மாறி இருப்பதாலும் கோயிலில் சாதி குறைந்தவர்களை வேலை செய்யவோ கோயிலில் முக்கியமான இடங்களில் எதையாவது தொடவோ அனுமதிப்பது இல்லை என்பதாலும் பிற்போக்குதனங்களையும் தன் சக மனிதர்களில் ஏற்றத்தாழ்வுகளையும் கற்பிக்கும் இப்படியான பெரிய கோவில்களுக்கு நான் என் குழந்தைகளை கூட்டிப்போவதில்லை நானும் போவதில்லை.. என் பிள்ளைகளும் இப்படியான பழக்கங்களை பழகக்குடாது என்பதில் கவனமாக உள்ளேன்.. ஊரில் ஒதுக்குப்புரமாக உள்ள இந்த பிராமண பூசாரிகளின் கால்தடம்படாத அண்ணமார் வைரவர் போன்ற கோவில்களுக்கு கூட்டி சென்று இவைதான் தமிழர்களின் சாமிகள் இதுதான் உண்மையான பழந்தமிழர்களின் வழிபாட்டு முறை ஆகமப்பூசைகள் சமஸ்கிருதத்தில் சொல்லி ஊரை ஏமாற்றி காசு புடுங்கும் கோவில் வழிபாட்டு முறை வேற்று மதத்தவர்களினது என்று சொல்லி வைத்திருக்கிறேன்...
  6. பன்னிரண்டு முதன் முதல் கீரிமலைக் கடற்கரைக்கு குளிப்பதற்கு என்று போனால் கடற்கரை முழுதும் பழுப்பு நிறமாக ஊத்தையாக இருக்க” உந்தக் கடலுக்கை சரியான கல்லு, நீங்கள் கேணீக்கை தான் குளிக்கவேண்டும் “ என்றார்எம்மைக் கவனித்துக்கொண்டு நின்ற ஒருவர். மகளும் நானும் சென்று கேணியைப் பார்த்தால் ஒரு நான்கு இளம் பெண்கள் விளையாடிக்கொண்டு இருக்கினம். அதற்குள் சென்று வடிவாக நீந்த முடியாது என்று தெரிந்துவிட காங்கேசன் துறைக்கே போகலாம் என்று முடிவெடுக்கிறோம். முன்னர் கீரிமலையில் ஒரு மடம் இருந்தது. நாம் சிறுவர்களாய் இருந்த நாட்தொட்டு வெளிநாடு வரும்வரை ஆண்டில் ஒரு தடவை கீரிமலைக்குப் போவோம். அந்த மடத்தில் நன்னீர் கிணறும் உண்டு. அங்கு சென்று குளித்து, மடத்தில் அசுவாசமாக இருந்து உண்டு குடித்து மகிழ்ந்து வருவோம். இப்ப அந்த மடம் இடிபாடுகளுடன் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. எம்மூரைச் சேர்ந்த ஆறு திருமுருகன் என்பவர் பெரிய மண்டபம் ஒன்றும், வயோதிபர்களுக்காக மடம் ஒன்றும் வெளிநாட்டவர் போனால் கூடத் தங்குவதற்கு வசதியாக மண்டபத்துடன் கூடிய அறைகளும் கட்டியுள்ளார். மறு பக்கம் ஒரு சிறு கோவில். அதில் ஒரு இளம் ஐயர் நின்றுகொண்டு வாங்கோ, அரிச்சனை செய்துவிட்டுப் போங்கோ என்கிறார். நாம் போகவில்லை. நகுலேச்சுரம் என்று சொல்லப்படும் இலங்கையின் ஐந்து ஈச்சரங்களில் ஒன்றான அது புதுப்பிக்கப்பட்டு அழகாகக் காட்சி தருகிறது. நாம் உள்ளே செல்ல யாரும் கோவிலின் உள்ளே இல்லை. மூலஸ்தானம் பூட்டப்பட்டு இருக்க நாம், சுற்றிக் கும்பிட்டுவிட்டு வெளியே வருகிறோம். அங்கிருந்து பஸ்சில் போவதற்காக பஸ்ராண்டுக்குப் போனால் அரை மணி செல்லும் பஸ் வெளிக்கிட என்கிறார் காத்திருந்த ஒருவர். கண்ணில் அம்மாச்சி உணவகம் பட அங்கு சென்றுவிட்டுச் செல்வோம் என்கிறேன். அந்தப் பகுதிகளிலோ அல்லது காங்கேசன் துறையிலோ அதுபோல உணவகம் இல்லாததால் மனிசன் ஓம் என்று சம்மதிக்கிறார். நாம் உள்ளே செல்ல கொஞ்ச சிங்களச் சனம் இருந்து உணவு உண்கிறது. நாம் வடைக்கும் தேனீருக்கும் ஓடர் கொடுத்துவிட்டு சென்று அமர்கிறோம். கிளிநொச்சி மற்றும் கோண்டாவிலில் இருக்கும் அம்மாச்சியில் நாம் தான் வாங்கிக்கொண்டு சென்று அமர வேண்டும். இது நன்றாக சுத்தமாக இருக்கு. சுத்தம் செய்வதற்கு என்று ஒரு பெண் முண் பகுதியில் நிற்கிறார். நாம் ஓடர் செய்தபோது வடை சுட்டுத் தருகிறோம். போய் இருங்கள் என்று சொன்னதனால் வந்து இருந்தோம். சிறிது நேரத்தில் ஒரு சுற்றுலாப் பயணிகளுடன் பஸ் வந்து நிற்க தப தப என எல்லோரும் உள்ளே வருகின்றனர். உள்ளே போதிய இடம் இல்லாததால் சிலர் திரும்பவும் பஸ்சுக்குள் போகின்றனர். பத்து நிமிடமாகியும் எமக்கு வடையோ தேநீரோ வரவில்லை. பிறகு வந்தவர்கள் சுற்றி நின்று ஓடர் செய்வதும் வாங்கிச் சென்று சென்று உண்பதுமாக இருக்க போய் கேளுங்கப்பா என்கிறேன். வரும் தானே பொறு என்று கூறிவிட்டு பார்த்துக்கொண்டிருக்க கடுப்பாகி நான் எழுந்து சென்று, தங்கச்சி வடையும் தேனீரும் கேட்டனாங்கள் இன்னும் வரேல்லை என்கிறேன். அந்தப் பெண் என்னை கவனிக்காததுபோல் நின்று அவர்களுக்கே கொடுத்துக்கொண்டு நிற்க, நான் திரும்பி வந்து எழும்புங்கோ போவம் என்கிறேன். கொஞ்சம் பொறுமையாய் இரன் என்று மனிசன் சொல்லி வெளியே நின்ற பெண்ணைப் பார்க்கிறார். அந்தப் பெண் நாம் வந்ததையும் இத்தனைநேரம் இருந்ததையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தார். உடனே பொறுங்கோ நான் எடுத்துக்கொண்டு வாறன் என்று கூறி ஐந்து நிமிடத்தில் எமக்கு வடையும் தேனீரும் கொண்டுவந்து தர நான் நன்றி என்கிறேன். வடை கோபத்தில் கூட மிகச் சுவையாக இருக்கிறது. தேனீரும் தான். வேறு ஏதும் வேணுமா என்றும் கேட்க, மோதகமும் கடலை வடையும் உளுந்து வடையும் போண்டாவும் ஆறு ஆறு பார்சல் தர முடியுமா என்று கேட்க இருங்கோ கட்டிக்கொண்டு வாறன் என்று செல்லிவிட்டுச் செல்கிறார். ஒரு பத்து நிமிடங்களில் பார்சலையும் கையால் எழுதிய பில்லையும் கொண்டு வர நான் எழுந்து பில்லுக்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு இந்தாங்கோ நீங்கள் வச்சுக்கொள்ளுங்கோ என்று ஆயிரம் ரூபாய்த் தாளைக் கொடுக்க வேண்டாம் என்று மறுக்கிறார். நான் அவர் மறுக்க மறுக்க அவர் பொக்கற்றில் வைத்துவிட்டு நீங்கள் செய்தது பெரிய உதவி என்றுவிட்டு வர, கெதியா ஓடிவா பஸ் வெளிக்கிடுதுபோல என்றபடி ஓடிச் சென்று மனிசன் மறிக்க நானும் மகளும் அவர் பின் ஏறுகிறோம். பஸ்சில் நான்குபேரே இருக்க நாம் முன்பக்கம் சென்று அமர்கிறோம். எங்கும் வெறிச்சோடி வீடுவாசல்கள் பெரிதாக இல்லாமல் இருக்கு. காங்கேசன்துறை கடற்கரை முன்னர் 2017,19 களில் சென்றபோது நன்றாகச் சுத்தமாக இருந்தது. இப்ப சிறிது பொலிதீன், பெட்டிகள் என்று ஆங்காங்கே குப்பைகள் சேரத் தொடங்கிவிட்டன. வாரநாட்களில் சென்றால் ஆட்கள் நடமாட்டமே இன்றி இரண்டு மணிநேரம் தனியாகவே நாம் மட்டும் நீந்திவிட்டு வந்தோம். ஒரு சனிக்கிழமை சென்றால் எம்மவர்கள் குடும்பம் குடும்பமாக, நண்பர்கள் கூட்டம், ஆண்களும் பெண்களும் ஒருபுறம் திருவிழாவுக்கு வந்ததுபோல் அத்தனை சனம். சிலர் பட்டம்கூட விட்டுக்கொண்டு நின்றனர். அன்று ஆட்களைப் பார்ப்பதும் அவர்களின் கூத்துக்களைப் பார்ப்பதிலுமே நேரம் போய்விட்டது. ஆட்கள் சாய்ந்து இருப்பதற்கு வசதியாக பெரிதாக எதுவும் இல்லை. கடைகளும் நிறைய இல்லை. இருக்கும் இரு கடைகளும் சிங்களவர்களே வைத்திருக்கின்றனர் என்றார் ஒருவர். வெயில் மட்டும் சொல்லி முடியாது. மற்றப்படி நீந்துவதற்கு ஏற்ற கடற்கரை. அங்கு பயணிகள் விடுதிகூட இருக்கு.ராஜபக்க்ஷவின் என்று கேள்வி. கசூரினா கடற்கரையில் கிழமை நாட்களில் பெரிதாக ஆட்கள் இல்லை. உள்ளே போனால் மட்டுமே நன்றாக நீந்தலாம். ஒரு ஐம்பது நூறு மீற்றர் வரை முழங்காலளவு தண்ணீர்தான். ஒருநாள் வான் பிடித்துக்கொண்டு இருபது பேர் போய் வந்தோம். வானுக்கு 10000 ரூபாய். உணவுகள் வீட்டிலிருந்தே செய்துகொண்டு போனோம். எனக்குக் கடையில் வாங்கும் உணவுகள் பிடிப்பதே இல்லை. அதனால் ஆட்டிறைச்சிக் கறி, சம்பல் சொதியுடன் இடியப்பமும் அவித்து பாணும் வாங்கிச் சென்றோம். முதல் நாள் நானும் மச்சாளும் பிள்ளைகளும் சேர்ந்து ரோள்ஸ் செய்ததில் கடினமாக இருக்கவில்லை. ஃபிரிஜ் இல் வைத்துவிட்டு கலை எழுந்து பொரித்து, ஆக யூஸ், மிக்சர், தண்ணீர் மட்டுமே வெளியில் வாங்கியது. திரும்ப வரும்போது எல்லாமே காலி. உறவுகளுடன் கூடி மகிழ்ந்து உண்டது என்பது எமக்கு மனதுக்கு அத்தனை மகிழ்வைத் தந்தது. இடையில் பண்ணாகத்தில் நிறுத்தி கடையில் ஐஸ்கிரீம், யூஸ் என வாங்கிக் குடித்து ஊர் வந்து சேர்ந்தோம்.
  7. பிரபாகரனை விடுவிக்க சர்வகட்சி கூட்டத்தினை கூட்டிய நெடுமாறனும், சிறையில் பிரபாகரனுடன் திருகோணமலை குறித்துப் பேசிய ரோவும் பழ நெடுமாறன் பிரபாகரனின் துணிகரமான செயற்பாடுகள் மற்றும் போராட்ட இலட்சியம் மீதான அவரது அர்ப்பணிப்பு ஆகியவை பற்றி அறிந்திருந்த நெடுமாறன் அந்த செயல்த்திறன் மிக்க போராளியை எப்படியாவது சந்தித்துவிடவேண்டும் என்று விரும்பியிருந்தார். பிரபாகரனைச் சந்திக்க ஆவண செய்யுமாறு அவர் பேபி சுப்பிரமணியத்தை முன்னர் பல தடவைகள் கேட்டிருந்தார். ஆனால், பேபியோ "பிரபாகரன் யாழ்ப்பாணத்திற்குச் சென்றுவிட்டார்" என்று அடிக்கடி கூறிவந்தார். ஆனால், இன்றோ நிலைமை வேறு. ஆகவே, பிரபாகரனைச் சந்திக்க நெடுமாறனை பாசையூர் உயர்பாதுகாப்புச் சிறைக்கு அழைத்துச் சென்றார் பேபி. அங்கு பிரபாகரனைக் கண்டதும் நெடுமாறன் வியந்துபோனார். இதற்கு முன்னரும் பிரபாகரனை தனது பாராளுமன்ற உறுப்பினர் விடுதியில் அவர் பார்த்திருக்கிறார், ஆனால், அவர்தான் பிரபாகரன் என்று நெடுமாறனுக்குத் தெரியாது. முகத்தில் வியப்பினை வெளிப்படுத்திய நெடுமாறனைப் பார்த்து, "மன்னிக்க வேண்டும், நான் யாரென்பதை நான் ஒருபோது உங்களிடம் முன்னர் சொன்னதில்லை" என்று பிரபாகரன் நெடுமாறனை நோக்கிக் கூறினார். 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்தபோது நெடுமாறன் பிரபாகரனை ஒரு முறை சந்தித்திருந்தார். ஆகவே, அன்று சிறைச்சாலையில் பிரபாகரனை சற்று நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு பேசத் தொடங்கிய நெடுமாறன், "நான் கடந்த வருடம் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, என்னைப்பார்க்க வந்திருந்த சில இளைஞர்களோடு நீங்களும் வந்தீர்களா?" என்று கேட்டார். பிரபாகரன், "ஆம்" என்று பதிலளித்தார். "ஏன் எனக்கு உங்களின் பெயரைச் சொல்லவில்லை" என்று நெடுமாறன் கேட்டார். அதற்குப் பதிலளித்த பிரபாகரன், தன்னை இராணுவத்தினரும், பொலீஸாரும் அப்போது தேடி வந்ததாகவும், நெடுமாறனைச் சந்திக்கச் சென்றிருந்த இளைஞர்கள் குழுவில் பொலீஸ் உளவாளிகளும் இருந்ததாகவும், ஆகவே தான் தன்னை அங்கு அடையாளப்படுத்தியிருந்தால், அவ்விடத்திலேயே தான் கைதுசெய்யப்பட்டிருக்கும் அபாயம் இருந்ததனால் தன்னை யாரென்று அடையாளம் காட்ட விரும்பவில்லை என்றும் கூறினார். நெடுமாறன் கோபப்படவில்லை. தனது பாதுகாப்புக் குறித்து பிரபாகரன் எவ்வளவு அவதானமாக இருந்தார் என்பதை அவர் புரிந்துகொண்டார். பிரபாகரன் பற்றிய அவரது மதிப்பு இன்னும் அதிகரித்துச் சென்றது. பிரபாகரன் கைதுசெய்யப்பட்டது தொடர்பான தனது வருத்தத்தை அவரிடம் தெரிவித்த நெடுமாறன், அவரைக் கவலைப்பட வேண்டாம், நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினார். அவரை பிணையில் விடுவிப்பதற்கான தன்னாலான அனைத்து முயற்சிகளையும் தான் எடுக்கப்போவதாக அவர் உறுதியளித்தார். மேலும், வெளிநாடொன்றில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் ஈடுபடுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்றும் அவர் பிரபாகரனுக்கு அறிவுரை கூறினார். "ஏன் உங்களுக்குள் சண்டைபிடிக்கிறீர்கள்?" என்று நெடுமாறன் கேட்டார். "உங்களால் ஏன் ஒன்றாகச் செயற்பட முடியவில்லை? உங்களின் சண்டைகளால் உங்களின் போராட்டத்திற்கான உதவியினை ஒருங்கிணைக்க நாம் இங்கு சிரமப்படுகிறோம்" என்று கூறிய நெடுமாறன், உமாவுடனான கருத்துவேறுபாட்டைச் சரிசெய்து விட்டு அவருடன் சேர்ந்து இயங்கவேண்டும் என்று பிரபாகரனைக் கேட்டார். தான் உறுதியளித்ததன்படி நடந்துகொண்டார் நெடுமாறன். ஆனி 1 ஆம் திகதி காமராஜர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டமொன்றைக் கூட்டினார். பிரபாகரனை விடுவிக்கத் தேவையான அனைத்தையும் தான் செய்துவிட்டபடியினால், தான் அக்கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று கருநாநிதி நெடுமாறனிடம் அறிவித்தார். எம்.ஜி.அர் தன் சார்பாக பிரதிநிதியொருவரை கூட்டத்திற்கு அனுப்பி வைத்தார். தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்க் கட்சிகளும் அனைத்தும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டன. பேபி சுப்பிரமணியம் பார்வையாளராகக் அக்கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதலாவது தீர்மானம் போராளித் தலைவர்களை நாடுகடத்தும் விடயத்திற்கு தமிழ்நாடு அரசாங்கம் ஒத்துக்கொள்ளக் கூடாது எனும் கோரிக்கை. இரண்டாவது, இலங்கையால் விடுக்கப்பட்ட போராளித் தலைவர்களை நாடுகடத்தும் கோரிக்கையினை மத்திய அரசாங்கம் நிராகரிக்க வேண்டும் என்பது. மூன்றாவது, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தினை தமிழ்நாட்டில் முன்னெடுப்பது. இந்திரா காந்தி அப்போது இது தொடர்பாக திட்டமொன்றினை ஏற்கனவே வகுத்திருந்தார். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா எந்த வகையில் தலையிடலாம் என்கிற பரிந்துரைகள் அடங்கிய ஆவணம் ஒன்றினைத் தயாரிக்குமாறு தான் 1980 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடனேயே தனது ஆலோசகர்களை அவர் கேட்டிருந்தார். 1977 ஆம் ஆண்டு இந்திரா தோற்கடிக்கப்பட்டு, மூன்று வருடங்களின் பின்னர் 1980 தை மாதம் ஆட்சிக்கு மீண்டும் வந்தவுடன் அவர் செய்த விடயங்களில் இந்த பரிந்துரை அறிக்கையும் ஒன்று. அவருக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளில் மிகவும் முக்கியமானது ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி, அவரது அரசாங்கத்தை நிலைகுலைய வைப்பதற்கு தமிழ்ப் போராளிக்குழுக்களை ஒரு கருவியாகப் பாவிக்க வேண்டும் என்பது. தோழிகள் - சிறிமாவும் இந்திராவும் பனிப்போர் நிலவிவந்த அக்காலத்தில் இந்திரா காந்தி சோவியத் அணி நாடுகளின் பக்கம் நோக்கியே செயற்பட்டு வந்தார். ஜெயாரின் அமெரிக்கச் சார்பு நிலைப்பாடும், இஸ்ரேல் - பாக்கிஸ்த்தான் - சீனா ஆகிய நாடுகள் நோக்கிய ஜெயாரின் பயணமும் இந்திராவை எரிச்சலடைய வைத்திருந்தது. 1983 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் சிறிமா பண்டாரநாயக்க வெற்றிபெற்றால், இலங்கை அமெரிக்காவின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு வெளியே வரும் என்று இந்திரா எதிர்பார்த்திருந்தார். ஆனால், தேர்தல்களில் சிறிமா பங்கெடுக்க முடியாதபடி அவரது சிவில் உரிமைகளை ஜெயவர்த்தனா பறித்துப் போட்டபோது இந்திராவின் எதிர்ப்பார்ப்பும் முற்றாகக் கலைந்துபோனது. ஆகவே, இந்திராவின் முன்னால் இருந்த ஒரே தெரிவு, வளர்ந்துவரும் தமிழ் ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்து ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தை நிலைகுலையச் செய்வதுதான். ஈரோஸ் அமைப்பின் அருளர் எனப்படும் அருளப்பு ரிச்சர்ட் அருட்பிரகாசம் அக்காலத்தில் சென்னையில் தங்கியிருந்த ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்த்தர் அருளர், இந்தியாவுக்கான சோவியத் ஒன்றியத்தின் தூதுவருடன் தான் நடத்திய இரகசியச் சந்திப்புக் குறித்து என்னிடம் கூறியிருந்தார். சோவியத் தூதுவரிடம் பேசிய அருளர், போராளித் தலைவர்களை நாடுகடத்த வேண்டாம் என்று இந்திராவிடம் கூறுங்கள் என்று தான் கூறியதாகக் கூறினார். அதற்கு சோவியத் தூதர் பின்வருமாறு பதிலளித்தார், "கவலைப்பட வேண்டாம். இந்தியாவுடன் இணைந்திருங்கள். இந்திரா காந்தி உங்களை பார்த்துக்கொள்ளுவார்" என்பதுதான். அவர் கூறியது போலவே இந்திரா காந்தி பிரபாகரனையும் உமா மகேஸ்வரனையும் பார்த்துக்கொண்டார். ஆனி மாதம் நடுப்பகுதியில், இந்தியாவின் புலநாய்வுத்துறையான ரோவை சேர்ந்த இரு அதிகாரிகள் பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் தடுத்து வைக்கப்பட்டிருந்த உயர் பாதுகாப்புச் சிறைக்கு அவர்களைச் சந்திக்க வந்திருந்தனர். தம்மை இந்திய அரசாங்கத்தின் அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திய அவர்கள், பிரபாகரன் குறித்தும், அவரது இயக்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் கேட்டு அறிந்துகொண்டனர். இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கிவந்த அவலங்கள் குறித்து கரிசணையுடன் பேசிய அந்த அதிகாரிகள், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உதவும் நிலையில் இந்தியா இருப்பதாகக் கூறினர். பின்னர், பிரபாகரன் இந்தியாவுக்கு உதவக் கூடிய நிலைப்பாட்டில் இருக்கிறாரா என்று அவரைப் பார்த்துக் கேட்டனர். அவர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளுக்குள் திருகோணமலைத் துறைமுகமும் அடிக்கடி இடம்பெறலாயிற்று. அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே இந்தியாவின் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை பிரபாகரன் ஓரளவிற்கு ஊகித்துக் கொண்டார். அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளான ஆவணி 6 ஆம் திகதிக்கு சிலநாட்கள் முன்னரும் அவரை சந்திப்பதற்கு இரண்டாவது தடவையாகவும் ரோ அதிகாரிகள் வந்திருந்தனர். ஆனால், இந்தியாவிலும், இலங்கையிலும் இடம்பெற்றுவரும் அரசியல் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து வந்த பிரபாகரன், இந்த அரசியல் மாற்றங்களும், நகர்வுகளும் தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் எவ்வகையான முட்டுக்கட்டைகளை போடப்போகின்றன என்பதையும், அவற்றினைத் தாண்டி போராட்டம் எப்படி வழிநடத்தப்படவேண்டும் என்பதையும் புரிந்து வைத்திருந்தார்.
  8. பிரபா என்று கிசுகிசுத்த கண்ணன் - பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு பாண்டி பஜார் பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் தோசை மிகவும் பிடித்திருந்தது. அதிலும் மசாலாத் தோசை என்றால் சொல்லத் தேவையில்லை. பாண்டி பஜார் ரயில்வே நிலையத்திற்கு அருகில் இருந்த உணவகத்தில் அருமையான மசாலாத் தோசைகளைத் தயாரிப்பார்கள், அந்த உணவகத்திற்கு பிரபாவும் உமாவும் அடிக்கடி செல்வதுண்டு. வைகாசி 19 ஆம் திகதி அந்த உணவகத்திற்கு உமா மகேஸ்வரனும், கண்ணனும் வந்திருந்தார்கள். உணவருந்திய பின் பாவலர் பெருஞ்சித்திரனார் வீட்டிற்குச் செல்வதுதான் திட்டம். மாசி 25 ஆம் திகதி தமிழ்நாட்டிற்கு வந்ததிலிருந்து உமாவும் அவரின் சகாக்களும் அங்கேயே தங்கியிருந்தனர். அதே நாள் மாலை, ஆங்கிலப் படம் ஒன்றினைப் பார்த்துவிட்டு பிரபாகரனும் ராகவனும் அந்த உணவகத்திற்கு உணவருந்த வந்தார்கள். உமாவும் கண்ணனும் கிளம்புவதற்கு ஆயத்தமானார்கள். உமா தாம் வந்திருந்த மோட்டார் சைக்கிளின் இயந்திரத்தை முடுக்கிவிடுவதில் கவனத்தைச் செலுத்தியிருக்க, கண்ணன் அவரின் பின்னால் ஏற ஆயத்தமானார். அப்போது பிரபாகரனை கண்ணன் கண்டுகொண்டார். "பிரபா" என்று உமாவின் காதுகளில் இரகசியமாகக் கூறினார் கண்ணன். உடனடியாக தனது காற்சட்டைப் பயிலிருந்து கைத்துப்பாக்கியை எடுக்க உமா முயன்றார். உமாவைக் கண்ட பிரபாகரனும் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியை வெளியே எடுத்தார். சமயோசிதமாகவும், சுறுசுறுப்பாகவும் செயற்பட்ட பிரபாகரன், முதலில் உமாவை நோக்கிச் சுட்டார். ஆனால், குனிந்து தப்பித்துக்கொண்ட உமா, அங்கிருந்து தப்பிச்ச் சென்றுவிட்டார். பிரபாகரனின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்துவந்த 6 தோட்டாக்களில் நான்கு தோட்டாக்கள் கண்ணனின் கால்களைத் துளைத்துக் கொண்டு சென்றன. சூட்டுக் காயங்களிலிருந்து இரத்தம் பீறிட கண்ணன் நிலத்தில் விழுந்தார். சுற்றியிருந்த மக்கள் அதிர்ச்சியில் ஸ்த்தம்பித்து நிற்க சில இளைஞர்கள் பிரபாகரனையும் ராகவனையும் துரத்தத் தொடங்கினர். அவர்கள் இருவரும் ரயில் நிலையம் இருந்த திசை நோக்கி ஓடத் தொடங்கினர். ஆனால், தாம் ஓடிக்கொண்டிருப்பது பாண்டி பஜார் பொலீஸ் நிலையத்தை நோக்கியே என்று தெரிந்தவுடன், தம்மைத் துரத்திவந்து கொண்டிருந்த மக்களை நோக்கி அவர்கள் திரும்பி ஓடினர். துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டவுடன் நடப்பதை உணர்ந்துகொண்ட பொலீஸ் பரிசோதகர் நந்தகுமாரும், அவரது பொலீஸாரும் அப்போது வீதிக்கு வந்திருந்தனர். மக்களால் பிடிக்கப்பட்ட பிரபாகரனும், ராகவனும் பொலீஸாரிடம் கையளிக்கப்பட்டனர். விரைவாகச் செயற்பட்ட பொலீஸார் பிரபாகரனையும் ராகவனையும் கடுமையாகத் தாக்கிக்கொண்டே பொலீஸ் நிலையம் நோக்கி இழுத்துச் சென்றனர். காயப்பட்ட கண்ணனை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர். பாண்டி பஜார் பொலீஸாரைப் பொறுத்தவரை கைத்துப்பாக்கியொன்றினை ஒருவர் பாவிப்பதென்பது மிகவும் அசாதாரண நிகழ்வாகத் தெரிந்தது. அப்பகுதியில் நடக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கிடையேயான சண்டைகளில் பெரும்பாலும் கத்திகளும்,இரும்புக் கம்பிகளும், சைக்கிள் சங்கிலிகளுமே உபயோகிக்கப்பட்டு வந்தன. எவருமே துப்பாக்கிகளைப் பாவித்தது கிடையாது. நந்தகுமார் மிகவும் உறுதியாக நின்றார். சுமார் ஒரு வாரத்திற்குப் பின்னர், ரயிலுக்காகக் காத்திருந்த உமா மகேஸ்வரனை பொலீஸார் கைதுசெய்தனர். ரயில்வே நிலையத்தில் நின்றிருந்த உமாவின் அருகில் சென்ற பொலீஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் அவரது அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கேட்டார். அடையாள அட்டையினை காண்பிக்க மறுத்த உமா, பொலீஸ் கொன்ஸ்டபிளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினார். வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உமாவை கொன்ஸ்டபிள் கைதுசெய்ய எத்தனிக்கவே, உமா அதனை எதிர்த்ததுடன் பொலீஸ்காரரைத் தாக்குவதற்கு தனது கைத்துப்பாக்கியை உருவினார். அது தற்செயலாக வெடித்தது. ஆனால், உமாவை தாக்கிய கொன்ஸ்டபிள், அவரை கீழே வீழ்த்திக் கைதுசெய்தார். பிரபாகரன், ராகவன், உமா ஆகிய மூவரையும் தனித்தனி சிறைகளில் பாஸையூர் பொலீஸ் நிலையத்தில் சாதாரண கிரிமினல் குற்றவாளிகளைப் போல பொலீஸார் அடைத்து வைத்தனர். பிரபாகரன் தனது இயக்கப் பெயரான கரிகாலன் என்பதை பொலீஸாரிடம் தனது இயற் பெயராகத் தெரிவிக்க, உமா அமைப்பினுள் பாவிக்கும் தனது பெயரான முகுந்தனை தனது இயற்பெயர் என்று பொலீஸாரிடம் கூறினார். சாதாரணக் கிரிமினல்க் குற்றவாளிகளைப்போல் அவர்களை நடத்திய பொலீஸார், அவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் இந்திய வெடிபொருள் சட்டத்தின் கீழான குற்றங்கள் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனர். அவர்களின் உண்மையான பெயர்கள் வெளித்தெரிந்தபோது, தமிழ்நாடு பொலீஸார் அதிர்ச்சியில் உறைந்துபோக, இலங்கை அரசுக்கு அதுவரை தேடப்பட்டு வந்த முக்கிய தமிழ் ஆயுத அமைப்புக்களின் தலைவர்கள் பிடிபட்டார்கள் என்கிற மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர்கள் இருவரினதும் உண்மையான விபரங்களை அறிந்துகொண்டதும், அவர்களை கண்ணியமாகவும், கெளரவத்துடனும் பொலீஸார் நடத்தத் தொடங்கினர். கொழும்பிலோ அரசும், பாதுகாப்புத்துறையும் மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் திளைத்திருந்தனர். பிரபாகரனும், உமாமகேஸ்வரனும் தமிழ்நாட்டில் கைதுசெய்யப்பட்ட விபரம் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் வீரப்பிட்டியவுக்கும் ஜனாதிபதி ஜெயவர்த்தனவுக்கும் தெரியப்படுத்தப் பட்டது. உடனடியாக பாதுகாப்புச் சபையைக் கூட்டிய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் வீரப்பிட்டிய, பாதுகாப்புச் சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து மூன்று முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினர். முதலாவது, பிரபாகரனையும், உமா மகேஸ்வரனையும் உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்துமாறு இந்தியாவிடம் உத்தியோகபூர்வாமகாக் கோரிக்கை முன்வைப்பது. இரண்டாவதாக பொலீஸ் மா அதிபர் ருத்ரா ராஜசிங்கம் தலைமையிலான பொலீஸ் குழுவொன்றினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி அவர்கள் இருவரையும் நாடுகடத்தும் ஒழுங்குகளை தமிழ்நாட்டு பொலீஸாருடன் சேர்ந்து செய்வது. மூன்றாவது, அவர்கள் இருவரையும் கைதுசெய்ய உதவியவர்களுக்கு பத்து லட்சம் இலங்கை ரூபாய்களை சன்மானமாக வழங்குவது.
  9. சர்வஜன வாக்கெடுப்பு ஜெயாருடன் அமைச்சர்களும், ரோகண விஜேவீரவும் குட்டிமணியை தனது கட்சியினூடாக பாராளுமன்ற உறுப்பினராக்குவதற்கு தாம் எடுத்த முயற்சி கடுமையான கணடங்களையும், பின்னடைவையும் சந்தித்திருந்த வேளையில், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தும் விதத்தில் இன்னுமொரு நடவடிக்கையினையும் ஜெயவர்த்தனா செய்தார். அதுதான் 1983 ஆம் ஆண்டின் மத்தியில் வரவிருந்த பாராளுமன்றத் தேரெதல்களுக்குப் பதிலாக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்தப்போவதாக அவர் விடுத்த அறிவிப்பு. தனது இரண்டாவது ஜனாதிபதிக் காலத்திற்கான பதவியேற்பினை மாசி மாதம் 4 ஆம் திகதிவரை தாமதப்படுத்தியதன் மூலம், ஜெயார் மேலும் மூன்றரை மாதங்கள் தனது முதலாவது ஜனாதிபதிக் காலத்தை நீட்டித்துக்கொண்டார். தனக்கு பாராளுமன்றத்தில் அன்றிருந்த ஐந்தில் நான்கு பெரும்பான்மையினை தனது இரண்டாவது ஜனாதிபதிப் பதவிக்காலம் முழுவதற்கும் அனுபவிக்க அவர் விரும்பினார். அநுராதபுரத்தில் ஜனாதிபதித் தேர்தல்ப் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவேளை ஜெயவர்த்தன, தனது திட்டம்பற்றி முதன்முதலாக சில தகவல்களை வெளியிட்டார். "இனிவரும் பத்தாண்டுகளுக்கான இலங்கையின் வாக்காளர் வரைபடத்தினை நான் வெளியிட விரும்புகிறேன்" என்று ஜெயார் கூறியபோது பலருக்கும் அது புரிந்திருக்கவில்லை. ஆனால், இப்படிக் கூறியதன் மூலம் தான் அனுபவித்துவந்த பாராளுமன்றம் ஊடான பலத்தினை அவர் இன்னும் ஆறு வருடங்களுக்கு நீட்டிக்க விரும்பியிருந்தார் என்பதை அவருடன் இருந்த வெகு சிலரே உணர்ந்திருந்தனர். தான் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டு மூன்று நாட்களின் பின்னர் தனது திட்டத்தினை நடைமுறைப்படுத்தினார் ஜெயார். வழமைபோல தனக்கு விசுவாசமான அமைச்சர்களில் ஒருவரைக் கொண்டு இதனை அவர் ஆரம்பித்து வைத்தார். இம்முறை அவர் அனுப்பிய ஆள், பிரதமர் ரணசிங்க பிரேமதாசா ஆவார். ஜெயாரின் கட்டளைப்படி பாராளுமன்றத்தில் பேசிய பிரேமதாசா, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தேதி குறிப்பிடாத இராஜினாமாக் கடிதங்களை உடனடியாக ஜனாதிபதி ஜெயவர்த்தனவிடம் கையளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதற்கு பாராளுமன்றத்தின் தொடர்ச்சியான ஆதரவு தமக்கு வேண்டும் என்பதால், நடைமுறையில் உள்ள பாராளுமன்றம் மேலும் ஆறு வருடங்களுக்கு நீட்டிக்கப்படுவதற்கு மக்கள் ஆணையொன்று கேட்கப்படும் என்றும் பிரேமதாசா அறிவித்தார். பிரேமதாசவின் ஆலோசனைகளை அன்று பின்னேரமே ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு முழுமனதாக ஏற்றுக்கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழு பிரேமதாசாவின் கோரிக்கையினை முற்றாக ஏற்றுக்கொண்டு தமது திகதியிடப்படாத இராஜினாமக் கடிதங்களை கையளிக்க ஒத்துக்கொண்டதுடன், சர்வஜன வாக்கெடுப்பொன்றின்மூலம் நடப்புப் பாராளுமன்றத்தினை மேலும் ஆறு வருடங்களுக்கு நீட்டிப்பதையும் ஏற்றுக்கொண்டனர். பாராளுமன்றக் குழுவினருடன் பேசிய ஜெயார், திகதியிடப்படாத இராஜினாமாக் கடிதங்கள் தேவையேற்படும்போது பின்னொரு காலத்தில் பாவிக்கப்படும் என்று கூறினார். பாராளுமன்ற உறுப்பினர்களின் திகதியிடப்படாத கடிதங்கள் பாதுகாப்பாக பெட்டகம் ஒன்றில் பூட்டி வைக்கப்பட்டதுடன், இவற்றின்மூலம் பாராளுமன்றத்தின் ஐந்தில் நான்கு பெரும்பான்மையினை மேலும் 6 வருடங்களுக்கு நீட்டிப்பதற்கான ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பூரண ஆதரவினை உறுதிப்படுத்திக் கொண்டதுடன் , அவர்கள் மீதான முற்றான அதிகாரத்தையும் ஜெயார் நிலைநாட்டிக்கொண்டார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.