Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87992
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    38771
    Posts
  3. மெசொபொத்தேமியா சுமேரியர்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    8557
    Posts
  4. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    11531
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/07/23 in all areas

  1. பதினெட்டு ஒரு பத்து நிமிடங்களில் எனது சித்தியையும் கூட்டிக்கொண்டு வந்துவிட சித்தி வழமையாக நான் அழைக்கும் ஓட்டோக்காரருக்கு போன் செய்ய அவரும் உடனேயே வந்துவிடுகிறார். நான் கண்ணைத் திறந்து பார்க்கிறேன். இன்னமுமே எதுவும் தெரியவில்லை. சித்தியை அழைத்துவந்த உறவினரின் வீடு அருகிலேயே இருப்பதனால் அவர் ஸ்கூட்டியை தன் வீட்டில் கொண்டுபோய் விடுகிறேன் என்று கூற நான் தலையாட்டுகிறேன். அவரிடம் ஸ்கூட்டியில் வேலை செய்பவர்களுக்கான உணவு இருக்கு. தயவுசெய்து அவர்களுக்கு அதைக் கொண்டு சென்று கொடுக்க முடியுமா என்று கேட்க ஓமக்கா நான் கட்டாயம் கொண்டுபோய் குடுக்கிறன் என்கிறார். உது இப்ப முக்கியமோ என்கிறா சித்தி. சரியில்லை சித்தி அவர்களுக்காகச் சமைத்தது. உங்களுக்கு என்ன பிரச்சனை என்கிறேன். அதன்பின் அவர் ஒன்றும் கூறாமல் வாயை மூடிக்கொள்ள நான் கண்களைத் திறக்காமலேயே இவ்வளவும் கதைக்கிறேன். எங்கே கொண்டுபோறது என ஓட்டோக்காரர் கேட்க பெரியாசுபத்திரி என்கிறா. அங்க சரியான சனமாய் இருக்கும். தெல்லிப்பளைக்கே கொண்டுபோவம் என்று அவர் சொல்ல ஓட்டோ நகர்கிறது. ஓட்டோவுக்குள் இருக்க இருக்க முழங்கால் நோவெடுக்கிறது. எவ்வளவு நேரம் எடுத்தது என்று தெரியவில்லை. மருத்துவமனை வந்துவிட நீங்கள் இருங்கோ. நான் போய் அவையைக் கூட்டிக்கொண்டு வாறன் என்று சொல்லிவிட்டு போக, நான் கண்ணைத் திறக்கிறேன். கண் கண் கொஞ்சம் மங்கலாகத் தெரிகிறது. சக்கரநாற்காலியுடன் ஒருவர் வர ஓட்டோக்காரர் பக்கத்தில் வருகிறார். இறங்கி இதில இருங்கோவென்று சொல்ல நான் ஒருவாறு இறங்கி இருக்கையில் அமர, அவர் என்னைத் தள்ளிக்கொண்டு செல்ல சித்தியும் ஓட்டோக்காரரும் வருகிறார்கள். இடது முழங்காலும் வலது பாதமும் விண் விண் என்று தெறிப்பதுபோல் இருக்கு. அங்கு மூன்று மருத்துவத் தாதியரும் இரு மருத்துவர்களும் நிற்கின்றனர். அன்று பெரிதாக ஆட்களும் இல்லைப்போல. ஒரு பெரிய கோல் போன்ற பகுதியில் ஒரு இருபது கட்டில்கள் இருக்கின்றன. ஒரு சிறுவனும் தாயும் மற்றும் ஒரு வயதுபோன பெண்ணும் மட்டுமே இருக்கின்றனர். என் பெயர் விபரம் எல்லாம் பதிந்து என்ன நடந்தது என்று கேட்டு எழுதிவிட்டு இருங்கோ வைத்தியர் வந்து பார்ப்பார் என்று கூறிவிட்டு அந்தப்பக்கம் உள்ள அறை ஒன்றுக்குள் எல்லோரும் சென்று கதைத்து சிரித்து ஏதோ அதுக்கே வந்ததுபோல் இருக்கின்றனர். ஒரு தாதி மருத்துவர் ஒருவரைப் பார்த்து கிரிபத்தும் இருக்கு சாப்பிடுங்கோ என்றுவிட்டு அப்பால் செல்கிறார். நான் அந்த வாங்கிலேயே இருக்கிறேன். வாங்கில் தொடர்ந்து பலகையை அடிக்காது அதிக இடைவெளி விட்டு அடித்திருக்க அதுவேறு பயங்கர நோவை ஏற்படுத்துகிறது. வைத்தியர் வந்து சும்மா வாயால் கேட்டுவிட்டு ஒரு ஏற்பூசி போட்டுவிடுங்கோ. நாளைக்குத்தான் எக்ஸ்றே எடுக்கலாம் என்கிறார். நாளை வரை எக்ஸ்ரே எடுக்காமல் இருக்க ஏலாது எனக்குச் சரியான நோவா இருக்கு என்கிறேன். இண்டைக்கு புது வருடம் எண்டதால எக்ஸ்றே எடுக்கிறவர் வரமாட்டார் என்றவுடன் நான் அப்ப வேறு மருத்துவமனைக்குப் போறன் என்கிறேன். உடனே அவர் இல்லை இல்லை நான் எதுக்கும் வேறை யாரையும் வரச் சொல்லுறன். பொறுங்கோ என்றுவிட்டுப் போக தாதி ஊசியைக் கொண்டுவந்து போடுறா. அதன்பின் மீண்டும் எல்லோரும் அந்த அறைக்குள் சென்று கதைத்துச் சிரிப்பதும் உண்பதுமாக இருக்க, இன்னொரு தாதி வர எத்தனை மணிக்கு எக்ஸ்றே எடுப்பார்கள் என்கிறேன். ஒண்டரைக்குத்தான் அவர் வருவார் என்றுவிட்டு அவ செல்ல நான் சித்தியை தேவையில்லாமல் ஏன் நிற்பான். போங்கோ. எக்ஸ்றே முடிந்ததும் நான் ஓட்டோவுக்குப் போன் செய்கிறேன். எனக்கு தண்ணீர் போத்தல் மட்டும் வாங்கித் தந்துவிட்டுச் செல்லுமாறு கேட்க ஓட்டோக்காரர் சென்று வாங்கி வருகிறார். அவர்கள் சென்றபின் மேலும் அரை மணிநேரம் யாரும் தாதிமார் வருவார்கள் என்று பார்த்தால் யாரையும் காணவில்லை. யாரும் இருக்கிறீர்களா என்று மூன்று தரம் பெலத்துக் கூப்பிட்டபின் ஒருதாதி வெளியே வந்து என்ன இடைஞ்சல் தருகிறாய் என்பதுபோல் பார்த்துவிட்டு சிங்களத்தில் ஏதோ சொல்கிறா. எனக்கு சிங்களம் தெரியாது என்று தமிழில் சொல்ல அவ உள்ளே சென்று இன்னொருவரை அனுப்புகிறா. என்னால் தொடர்ந்து இப்பிடி இருக்க முடியவில்லை. உடலெல்லாம் நோவாக இருக்கு. நான் படுக்கவேண்டும் என்கிறேன். எட்டாம் நம்பர் பெட்டுக்குப் போங்கோ என்கிறா. நான் எழுந்து நொண்டி நொண்டி அந்தக் கட்டிலைத் தேடிப் போக என்ன நம்பர் என்று அந்த வார்டில் பிள்ளையுடன் இருந்த பெண் கேட்கிறா. நான் 8 என்றதும் அந்த அம்மாவுக்குப் பக்கத்தில என்கிறா. நான் நடந்து சென்று கட்டிலை அண்மிக்கிறேன். கட்டிலில் ஒரு விரிப்புக்கூட இல்லை. ஏன் கட்டிலுக்கு ஒன்றும் விரிக்காமல் இருக்கினம் என்று கேட்க எனக்குப் பக்கத்துக் கட்டிலில் இருக்கும் முதிய பெண் நீங்கள் தான் பிள்ளை எல்லாம் கொண்டுவரவேணும். உங்களுக்குத் தெரியாதோ என்கிறா. நான் சித்திக்குப் போன் செய்து உணவும் படுக்கை விரிப்பும் ஓட்டோக்காரரிடம் கொடுத்துவிடுமாறு சொல்கிறேன். என்னால் இருக்கவே முடியவில்லை. நான் எப்போதும் ஒரு shawl- சால்வையையும் கழுத்தில் சுற்றிக்கொண்டுதான் போவது. அதனால் அதை எடுத்து கட்டிலில் விரித்துவிட்டு ஒரு பக்கமாக தலைக்கு கையைக் கொடுத்துக்கொண்டு படுத்ததுதான் தூங்கியும் விட்டேன். அக்கா எழும்புங்கோ என்று கூப்பிடுவதுபோல் கேட்க ஓட்டோக்காரர் இரு பைகளுடன் நிற்கிறார். எக்ஸ்றே எடுத்தாச்சோ என்று கேட்க இல்லை என்று தலையாட்டுகிறேன். நான் ஒருவாறு எழுந்து கட்டிலுக்கு விரிப்பை விரித்துவிட்டு மீண்டும் அமர அவர் உணவுக்கான பையைத் தந்துவிட்டு தாதிமார் நிற்குமிடம் சென்று எப்போது எக்ஸ்றே எடுப்பினம் என்று கேட்க இன்னும் ஒன்றரை மணித்தியாலம் செல்லும் என்று கூற அவர் வந்து என்னிடம் விடையத்தைச் சொல்லி அக்கா நீங்கள் சாப்பிட்டுவிட்டு இருங்கள். எல்லாம் முடிந்ததும் போன் செய்யுங்கோ என்றுவிட்டுப் போக வளவில் வேலை செய்பவரிடம் இருந்து போன் வருகிறது. அக்கா இப்பதான் அண்ணை சாப்பாடு கொண்டுவந்து தந்ததிட்டுப் போறார். மோட்டசயிக்கிளோட விழுந்து அடிபட்டிட்டுது எண்டு சொன்னவர். இப்ப உங்களுக்கு ஓகேயோ என்கிறார். ஓம் இன்னும் எல்லாம் முடியேல்லை என்றுவிட்டு அவர்களின் வேலை பற்றிக் கேட்க, அக்கா நன்றி அக்கா உதுக்குள்ளையும் சாப்பாட்டைக் கொண்டுபோய் குடுக்கச் சொல்லியிருக்கிறியள். நாங்கள் பாண் வாங்கிச் சாப்பிட்டிருப்பம் தானே என்று நெகிழ்ந்துபோய் சொல்கிறார். அதனால் என்ன வடிவாச் சாப்பிட்டுவிட்டு வேலையைச் செய்யுங்கோ என்கிறேன். அதன்பின் நான் எனது உணவை எடுக்கிறேன். பக்கத்தில் இருக்கும் முதியவரை சாப்பிட்டிட்டீங்களோ என்று கேட்க இல்லைப் பிள்ளை. என்ர மகள் வாறன் எண்டவள். இன்னும் காணேல்லை என்றவுடன் கொஞ்சம் தாறன் நீங்களும் சாப்பிடுங்கோ என்றபடி அவரின் பதிலை எதிர்பாராது அவரிடம் ஒரு பெட்டியைக் கொடுக்க எந்த மறுப்பும் கூறாது வாங்கி உண்கிறார். அதன்பின் தூங்காது கட்டிலில் சாய்ந்து அமர்ந்து எப்போது என்னை அழைப்பார்கள் என்று பார்த்துக்கொண்டிருக்க, ஒருவர் சக்கர நாற்காலியுடன் வந்து என்னை அழைத்துப்போய் மீண்டும் கொண்டுவந்து விடுகிறார். மேலும் இரண்டுமணிநேரம் சென்றபின்னும் என் எக்ஸ்றே ரிசல்ற் வந்தபாடில்லை. அதில் ஒரு பெண் நிலத்தைச் சுத்தம் செய்துகொண்டிருக்க ஒருக்கா தாதி ஒருவரைக் கூப்பிட முடியுமா என்று கேட்க அவ அங்கு சென்று சொல்லியபின்னும் யாரும் வருவதாய்க் காணவில்லை.ஒருக்கா சிறுநீர் கழித்துவிட்டு வருவோம் என்று சென்றால் நாற்றம் எதுவும் பெரிதாக இல்லை என்றாலும் நிலமெங்கும் தண்ணீராக இருக்கு. மீண்டும் சென்று கட்டிலில் அமர்ந்தபின்னும் எவரையும் காணவில்லை. கணவர் இப்ப நித்திரையால் எழுந்திருப்பார் என்று எண்ணிக்கொண்டு போனை எடுத்தால் போனில் 2 % தான் பற்றறி இருக்கு என்று சிவப்பில் காட்டுது. கட்டிலுக்கு மேலே சார்ச் செய்வதற்கான இடம் இருப்பினும் எந்த வயரும் என்னிடம் இல்லை. நான் எங்கு சென்றாலும் power bank ஐ கொண்டுதான் செல்வேன். இன்று அது ஸ்கூட்டியுடன் போய்விட்டது. ஓட்டோக்காரருக்கு போன் செய்தால் தான் வேறு ஒரு சவாரியில் இருப்பதாகவும் உங்களுக்கு வேறு ஒருவரை அனுப்பிவிடவா என்று கேட்கிறார். வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றுவிட்டு மெதுவாக நொண்டியபடி தாதிமார் இருக்கும் இடத்துக்கு செல்கிறேன். அவர்களின் இடத்தில் ஒரு எல்லாம் போடக்கூடிய போன் வயர் இருக்க, எனது போனுக்கு சார்ச் இறங்கிவிட்டது. எனக்கு ஒருக்கா தரமுடியுமா என்கிறேன். அது தமது பாவனைக்குரியது அங்கு நாம் சாச் செய்ய முடியாது என்கிறார். கணவனுக்கு போன் செய்யவேண்டும். நீங்கள் சார்ச் செய்து தாருங்கள். வேண்டுமானால் நான் பணம் தருகிறேன் என்றவுடன் ஒரு நக்கல் சிரிப்புச் சிரித்துவிட்டு அப்படி எல்லாம் செய்ய முடியாது. இது ஒன்றும் தனியார் மருத்துவமனை இல்லை என்றுவிட்டு தன்பாட்டில் இருக்க இது தனியார் மருத்துவமனை இல்லையா என்கிறேன். அதனால் என்ன? நீங்கள் ஒரு உதவி செய்ய மாட்டேன் என்கிறீர்கள் என்று சிறிது பெரிதாகக் கேட்க அந்த நேரம் பார்த்து ஒரு இளம் வைத்தியர் வந்து அவவிடம் என்ன என்று கேட்க அவ சிங்களத்தில் அவருடன் கதைக்கிறா. உடனே நான் எனக்கு சிங்களம் தெரியாது அதனால் நீங்கள் என் பிரச்சனைதான் கதைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தமிழில் எனக்கும் புரியும்படி கதையுங்கள் என்று சொல்கிறேன். அவவுக்கு தமிழ் வடிவாத் தெரியாது என்கிறார் வைத்தியர். அப்ப என்னுடன் தமிழில் தானே கதைத்தவ என்கிறேன். ஓகே இப்ப உங்கள் பிச்சனை என்ன என்கிறார். நான் போன்சார்ச் பற்றிச் சொல்ல, நீங்கள் கோவிக்கவேண்டாம். இதில சார்ச் செய்ய அனுமதி இல்லை என்றவுடன் நான் வெளியே செல்ல எனக்கே செல்கிறீர்கள் என்கிறார். நான் யாரையும் பிடித்து ஒரு சாச்சர் வாங்கப்போகிறேன் என்றபடி அவரின் அனுமதிக்குக் காத்திருக்காமல் மெதுவாக நொண்டியபடி நடக்க வெளிநாடுகளில் மருத்துவர்களும் தாதியர்களும் எத்தனை பண்பாக நடப்பார்கள் என எண்ணிப் பெருமூச்சு வருகிறது. நான் அன்றுதான் அந்த மருத்துவமனைக்கு முதன் முதலில் வந்ததாலும் சிறுவயதில் வெளிநாடு வந்துவிட்டதாலும் யாழ் மருத்துவமனைதான் அரசாங்க மருத்துவமனை என்று எண்ணியிருந்தேன். சித்தியும் யும் ஓட்டோக்காரர் சொன்னவுடன் எதுவும் பேசாததால் இங்கு வந்து மாட்டுப்பட்டாச்சே என எண்ணியபடிநடக்கிறேன். நடந்தது சரியான நோவெடுக்க அதில் இருந்த ஒரு இருக்கையில் யாராவது வருக்கிறார்களா என்று பார்த்தபடி இருக்க மருத்துவமனையில் வேலை செய்யும் ஒருவர் என்னைக் கடந்து செல்ல தம்பி எனக்கு ஒரு உதவி செய்கிறீர்களா என்று கேட்க, போனவர் நின்று என்ன என்கிறார். நான் விடயத்தைக் கூற பக்கத்தில ஒரு கடையும் இல்லை. ஒரு ஐந்து நிமிடம் போனால்தான் ஒரு கடை இருக்கு. பொறுங்கோ நான் என மோட்டார் சயிக்கிளைக் கொண்டுவாறன் என்றுவிட்டு எடுத்துக்கொண்டுவர நான் இரண்டாயிரம் ரூபாய்களை எடுத்துக் கொடுக்க அவர் சென்று வாங்கி வருகிறார். அவருக்கு 1000 ரூபாய்களைக் கொடுத்து தம்பி உங்கள் பெற்ரோல் காசுக்கு வைத்துக்கொள்ளுங்கோ என்று கூற வாங்கிக் கொள்கிறார். அவருக்கு நன்றி கூறிவிட்டு உள்ளே செல்ல இரண்டு வைத்தியர்கள் நிற்க என் ரிசல்ட் வந்துவிட்டதா என்கிறேன். அது நாளைக்குத்தான் வரும் என்கின்றனர். எனக்கு உடனே வெளிநாடு நினைவில் வர, எக்ஸ்றே எடுத்தது வர நாளையாகுமா என்கிறேன். இல்லை எக்ஸ்றேயை யாழ் மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கு. நாளை தான் பார்த்துச் சொல்வார்கள் என்கிறார். உதை முதலே சொன்னால் நான் அப்போதே வீட்டுக்கு சென்றிருப்பேனே என்றுகூற உங்களுக்கு இங்கு பதிவு போட்டாச்சு. நாளை பெரிய மருத்துவர் வரும்வரை நீங்கள் போக முடியாது என்கிறார். நான் இன்று இரவு இங்கு தங்க முடியாது. போய்விட்டு நாளை காலை வருகிறேன் என்று பெரிய மருத்துவர் வந்துதான் உங்களை டிஸ்சார்ச் செய்யமுடியும் என்றுவிட்டு அவர் சென்றுவிட நான் சென்று போனை சார்சில் போடுகிறேன். அந்த நேரம் அங்கு வந்த தாதி நீங்கள் எட்டுமணிக்குப் பிறகுதான் சார்ச் போடலாம் என்கிறா. ஏன் இப்ப போட்டால் என்ன என்று கேட்க கரண்ட் காசு கூட வரும் என்கிறா. நானோ அதைக் கழற்றாமல் எனக்குக் கட்டாயம் போன் செய்ய வேணும் என்றுவிட்டு இருக்க, அவர் கோபமாக வேகமாகச் செல்கிறார். அவருடன் சேர்ந்து இன்னொரு தாதியும் வந்து இப்ப போடக் கூடாது என்கிறா. எனக்கு இத்தனை நேரம் அடக்கிவைத்த கோபம் மேலெள நீங்கள் மனிதர்களா?? ஒரு மனிதாபிமான உதவிகூட செய்யாமல் இப்பிடி காட்டு மிராண்டிகள் போல நடக்கிறீர்கள். நான் இங்கு நிற்க முடியாது என்கிறேன். நீங்கள் இன்று போக முடியாது என்று கூறிவிட்டு இருவரும் செல்கின்றனர். நான் போனை எடுத்துப் பார்க்க சிறிது சார்ச் ஏறியிருக்க, என் தங்கையின் கணவனுக்கு போன் செய்து விடயத்தைக் கூற அக்கா ஒரு மணித்தியாலம் பொறுங்கோ வாறன் என்று கூறிவிட்டு போனை வைக்க நானும் மனதுள் கறுவியபடி எதுவும் செய்ய முடியாது காத்திருக்க என் தங்கையின் கணவர் இரண்டு மணி நேரத்தில் பின் வர இருட்டியும் விடுகிறது. அவர் வந்து நான் கதைச்சுப் பார்க்கிறன் அக்கா என்றுவிட்டு அங்கு நின்ற வைத்தியாரிடம் வீட்டுக்குப் போவதைப் பற்றிக் கூற அவரும் மறுத்துவிட நான் அவர்களிடம் சொல்லாமலே போவம் செய்வதைச் செய்யட்டும் என்கிறேன். அவர் என் பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வர நானும் அவருடன் வந்து தாதிமார் இருக்கும் இடத்தடிக்கு வர போன் சார்ச் போட வேண்டாம் என்று சொன்ன தாதி நிற்க, நான் வீட்டுக்குப் போகிறேன் என்று கூறிவிட்டு அவர் ஏதோ சொல்ல அதைக் காதில் வாங்காது வெளியே வருகிறேன். அதில் நின்ற ஓட்டோவில் என்னை ஏறச் சொல்லிவிட்டு அவர் பின்னே வர வீடு வந்து அடுத்தநாள் மாலைவரை காத்திருந்து தனியார் மருத்துவமனைக்குச் சென்று ஒரு அரைமணிநேரக் காத்திருப்புக்குப் பின் எக்ஸ்றே எடுத்து அடுத்த பத்து நிமிடத்தில் காலில் முறிவு ஒன்றும் இல்லை என்று மருத்துவர் கூறி பாண்டேச் போடும்படி கூறி மருந்தும் எழுதித் தர ஆக 2800 ரூபாய்கள் தான். அடுத்தநாள் முழங்காலுக்கும் பாதத்துக்கும் பாண்டேச் 10000 ரூபாய்களுக்கு வாங்கி அணிந்து இரண்டு நாட்களின் பின் மீண்டும் ஓட்டோவில் வளவுக்குச் சென்று வந்து ஒருமாதம் முடிந்தபின் தான் மீண்டும் ஸ்கூட்டியை எடுத்து ஓட ஆரம்பித்தது.
  2. ஏராளன், நீங்கள் முன்பே தெரியப் படுத்தியது நல்ல விடயம். எனக்கும் இதுவரை நான்கைந்து முறை குறுகிய நேரம் தடைப் பட்டு மீண்டும் சரி வந்தது. சேர்வர் பிரச்சினை போலுள்ளது.
  3. என்னாது ஆட்டோவோ??????? நான் சொந்த பிளைட் வாங்கிறன்.. அத்தாரும் நானும் பலாலியிலை போய் இறங்கிறம்.... நாங்கள் ஆரெண்டு காட்டுறம்..
  4. எல்லோரது கருத்துக்களுக்கும் நன்றி. நேரம் கிடைக்கும்போது ஒவ்வொருவருக்கும் பதில் தருகிறேன். சென்ற பெப்ரவரி இறுதியில் இலங்கைக்கு 6 நாள் பயணம் போயிருந்தேன். இங்கிருந்து அங்கு போய்க் குடியேறிய ஒருவரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. குறுகிய பயணமானாலும் பல அனுபவங்கள் கிடைத்தன. அதீதமான கற்பனைகளுடன் சென்றால் ஏமாற்றம்தான் உண்டாகும். ஒவ்வொரு சமுதாயமும் அதன் சூழலுக்கேற்ப மாற்றங்களை அடைந்துகொண்டே இருப்பது நியதி. எமது சமுதாயம், கலாச்சாரம் எல்லாம் இப்போது இதுதான். எப்படி இதற்குள் நுளைய வேண்டும் என்பதே முதலாவது பிரச்சனை. இனொன்றும் உறுதியாக விளங்கியது. போதை மது விற்பனை, குழுக்கள், எமது அரசியல், இந்த மூன்றில் ஒன்றைக் கூட நெருங்காமல் கடந்து செல்ல வேண்டும். இதைப்பற்றிக் கொஞ்சம் எழுதி பின்னர் அழித்து விட்டேன். வீணான பிரச்சனை வேண்டாம் என்பதால் இத் திரியிலும் இவற்றைக் கடந்து செல்வோம்.
  5. எல்லோரும் எல்லா நலமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.......! 🙏
  6. பதினேழு இடையில எழுதினதை விட்டிட்டு வேறு ஒண்டுக்கு வாறன். இணுவிலில இருந்து வாங்கிய வீட்டுக்குப் போவதற்கு ஒவ்வொருதடவையும் 2000 கொடுக்கிறதாலை எதுக்கும் நீ ஒரு ஸ்கூட்டி எடுத்து ஓடன் எண்டு மனிசன் சொல்ல எனக்கும் ஆசை பிடித்துக்கொண்டுது. ஆரைப் பார்த்தாலும் ஸ்கூட்டி. மோட்டார் சயிக்கிளோ அல்லது ஸ்கூட்டி இல்லாத வீடே இல்லைஎண்டு சொல்லலாம். பக்கத்தில இருக்கிற கடைக்குப் போறதுக்கும் நடக்காமல் விசுக்கெண்டு அதிலதான் போயினம். பெண்கள் பின்னால் இரண்டு பிள்ளைகள், முன்னால் ஒரு பிள்ளையை நிக்கவச்சு லாவகமா ஓட்டிக்கொண்டு போறதைப் பார்க்க எனக்கே ஆச்சரியம். காலையிலும் மாலையிலும் பள்ளிக்கூட வாசலைப் பார்த்தால் ஸ்கூட்டிகள் தான். நான் 34 ஆண்டுகளாகக் கார் ஓடுறன். உது ஒடுறது பெரிய வேலையோ எண்டு நினைச்சு நானும் கணவரின் தம்பி மகனுமாக கடை கடையாய் ஏறி இறங்கி ஸ்கூட்டி தேடினால் எல்லாம் படு விலை. ஆறு ஏழு இலட்சங்களுக்குக் குறைய ஒன்றுகூட இல்லை. நீங்கள் நிக்கப்போறது இன்னும் நாலோ ஐந்து மாதங்கள் தானே சித்தி. பழசை வாங்கி ஓடிப்போட்டு விட்டுட்டுப் போனாலும் நட்டம் இல்லை என்று கூறி தனக்குத் தெரிந்த சிலரிடம் கூறி ஒரு ஸ்கூட்டியைக் கண்டுபிடிச்சம் கொக்குவிலில். போய் பார்த்தால் வெள்ளை நிறம். சின்னன். இருந்து பார்த்தால் கால் நிலத்தில வடிவா முட்டுது. என்ன ஒகேயா சித்தி என்றுவிட்டு நாளை இணுவிலில் உள்ள ஒரு கறாச்சின் பெயரைச் சொல்லி கொண்டுவரச் சொல்லியாச்சு. விலை மூண்டு லட்சம் என்று தொடங்கி இரண்டு லட்சம் என்று முடிவாச்சு. நானும் நாளைக்கு வாங்கினால் இரண்டு மூன்றுநாட்கள் ஓடிப் பழகி ஓடலாம் என்ற கற்பனையில் கணவரிடம் சொல்கிறேன். 2 லட்சம் என்றால் சரியான பழைய மொடல் போல இருக்கே என்ற கணவர் தமையனின் மகனுக்கு போன் செய்து விசாரிக்க, ஓம் சித்தப்பா அந்த மொடலுகள் பழுதானால் திருத்த பாட்ஸ் எடுக்கிறதுதான் கஸ்டம் என்கிறார். அப்ப அதை வாங்க வேண்டாம் என்றுவிட்டு தான் ஒரு youtube வீடியோ ஒன்றை எனக்கும் பெறாமகனுக்கும் அனுப்புகிறார். விலை ஐந்து இலட்சத்துக்கு ஒரு ரூபாய் குறைய. ஏன் இவ்வளவு காசுக்கு என்கிறேன் நான். நங்கள் இனி அடிக்கடி போகத்தானே போறம். உது இரண்டுபேர் போகவும் வசதிபோல இருக்கு என்று உடனே பணத்தை அனுப்பிவிட அடுத்தநாளே அதை வாங்கியாச்சு. மூன்று நாட்களுக்கு நீங்கள் ஓடலாம். அதன் பிறகு ஒரு வாரத்தில் புத்தகம் வந்துவிடும். ரோட்டக்ஸ் கட்டியபின்தான் ஓடலாம் என்றனர். இப்போதெல்லாம் பிரதான வீதிகளில் மட்டுமன்றி சிறிய உள் வீதிகளில் கூட போலீஸ் நின்று வாகனங்களை மறித்து சோதனை செய்வது வழக்கமாகிவிட எதுக்கும் மூன்று நாளில் நீங்கள் பழகிவிடுவியள் சித்தி என்று பெறாமகன் உற்சாகப்படுத்த அவரையும் கூட்டிக்கொண்டு ஒரு விளையாட்டு மைதானத்துக்குப் போகிறேன். மழை பெய்த தண்ணீரும் சில இடங்களில் தேங்கி நிற்க நான்கு மாடுகளும் கட்டப்பட்டிருக்க எனக்கோ பயம் பிடித்துக்கொண்டது. இண்டைக்கு நீங்கள் கனக்க ஓடமாட்டியள் என்று என்னிடம் ஸ்கூபியைத் தந்தால் பயங்கரப் பாரம். ஆனாலும் ஒருவாறு நேராகப் பிடித்து மெதுவா ஒரு ஆறு சுற்றுச் சுற்றிவர பயத்தில் போதும் இன்று என்றுவிட்டு போய்விட்டோம். அடுத்தநாளும் ஒரு அரை மணித்தியாலம் இடதுபுறம் வலதுபுறம் திருப்பிப் பழகி றோட்டில ஒடுவம் சித்தி என்கிறார். எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் எல்லாம் சிறிய வளைவுகளுடன் கூடிய ஒழுங்கைகள். எனக்கு அங்கு ஓடுவதை எண்ணவே பயமாகவும் இருக்கு. ஒரு எல் போட் போட்டு ஒடுவமோ என்றுகேட்க அவர் விழுந்து விழுந்து சிரிக்க எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்க உங்களுக்கு 8 வருட லைசென்ஸ் தந்திருக்கிறாங்கள். பிறகு போலீஸ் மறிச்சால் தேவையில்லாத பிரச்சனையாயிடும் என்றதும் தான் எனக்குப் புரிய ரோசமும் வருகிறது. மூன்று நாட்கள் முடிந்தபின்னும் புத்தகம் வரவில்லை. அனுப்பிவிட்டதாகச் சொல்கிறார்கள் என்கின்றனர். இரு வாரங்கள் இந்தா வருது. அந்தா வருது என்றுவிட்டு அது தொலைந்துவிட்டதாம். புதிதாக அனுப்புகிறார்கள் இன்னும் இரண்டுநாட்கள் பொறுங்கோ என்றபின் நான் போனில் குடுத்த கரைச்சலில் மூன்றுவாரமாகியும் புத்தகம் வராமல் இருக்க அதன் கொப்பியை வற்சப்பில் அனுப்பிவிட கொண்டுபோய் ரோட்டக்ஸ் எடுத்தாச்சு. முதல்முதல் றோட்டில ஓட மிகவும் மெதுவாக ஓடிக்கொண்டுபோக என்னை முந்திக்கொண்டு சின்னப் பெடியள் சயிக்கிளில என்னை சிரித்தபடி முந்திக்கொண்டுபோக நானோ அசரவில்லை. எல்லாத் தொடருந்துப் பாதைகளும் மீண்டும் போடும்போது மிக உயரமாகவே போட்டுள்ளதால் அதில் நின்று ஏற்றத்தில் திருப்ப பயந்து முதலே இறங்கி ஸ்கூட்டியை உருட்டிக்கொண்டுபோய் அந்தப்பக்க நேர் வீதியில் மீண்டும் ஏறி உரும்பராய் சந்திவரை 35 ,40 இல் ஓடி சந்திகழிய பெரிதாக வாகனங்கள் முன்புபோல் இல்லை என்பதனால் 50 வரை ஓடி முடிச்சு, கணவருக்கோ மனிசி காசு மிச்சம் பிடிக்கிறாள் என்ற மகிழ்ச்சி. இப்பிடியே ஒருமாதம் இணுவிலுக்கும் வீட்டுக்கும் போய்வர வீட்டு வேலைகளும் நடக்க அடுத்தநாள் வருடப்பிறப்பு. காணியில் தேவையற்ற மரங்கள் பல முளைத்திருந்தன. அதனால் காணியை சுத்தப்படுத்தும் வேலை நடந்துகொண்டிருக்க அடுத்தநாள் புதுவருடம் என்பதால் வேலையை நிறுத்துவோம் என்றவுடன் இல்லை நாங்கள் வேலைக்கு வருகிறோம். வீட்டில நிண்டு என்ன செய்யிறது என்றார்கள். காணியில் வேலை செய்பவர்களுக்கு 3000 ரூபாய்கள் நாட்கூலி என்பதனால் உணவை அவர்களே கொண்டு வருவார்கள். சிலவேளைகளில் அவர்களுக்கு உணவு கொண்டுவர வேண்டாம் என்றுவிட்டு நான் கொண்டுபோவேன். அவர்கள் மகிழ்வுடன் உண்பதைப் பார்க்க ஒரு திருப்தி இருக்கும். நாளைக்கு ஒரு ஆடு அடிச்சு சமைச்சுக்கொண்டு வாங்கோ என்றார்கள் பகிடிக்கு. நானும் ஒன்றென்ன இரண்டே அடிச்சால் போச்சு என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். நாளை அவர்களுக்கு ஆட்டுக்கறி காய்ச்சிக் கொடுத்தால் என்ன என்று யோசனை எழ அடுத்தநாள் காலையில் ஏழு மணிக்கே எழுந்து மருதனார்மடம் சென்று பெற்றோல் அடித்துக்கொண்டு சந்தையில் மரக்கறிகளும் வாங்கியபின் இணுவில் சந்தைக்குச் சென்றால் மூன்று ஆடுகள் கட்டித் தூக்கி இறைச்சி வாங்க சரியான சனம். 20 நிமிடக் காத்திருப்புக்குப் பின்னர் 6000 ரூபாய்களுக்கு இறைச்சி வாங்கிக்கொண்டு வந்து கழுவி வெட்ட வெறுத்துவிட்டது. ஏனெனில் லண்டனில் எல்லா இறைச்சியுமே சமைக்கும் பதத்துக்கு வெட்டித் தருவதால் இருபது ஆண்டுகளின் பின்னர் வெட்டுவது கொடுமையாக இருக்க, நல்ல காலம் லண்டனில் இருந்தே கத்தி வெட்டும் பலகை எல்லாம் கொண்டு சென்றதில் தப்பித்தேன் என்ற எண்ணம் எழுந்தது. மிகச் சுவையாக இறைச்சி, கத்தரிக்காய் பால்கறி, பருப்பு, வெங்காயமும் தக்காளிப்பழமும் தயிரும் போட்ட சம்பல் என்று செய்து லண்டனில் இருந்து கொண்டுபோன உணவுகள் கொண்டுசெல்லும் பிளாஸ்டிக் பெட்டிகளில் போட்டு,பாஸ்மதி அரிசி இரண்டு கிலோ வாங்கி அதைச் சமைக்காது அங்கு கொண்டுசென்று சுடச்சுட அரிசியைச் சமைத்து அந்த வீட்டில் உள்ள இருவருக்கும் கொடுத்து உண்ணலாம் என்ற எண்ணத்தில் கறிகளை ஸ்கூட்டியில் பொருட்கள் வைக்க இருக்கும் இடத்தில் வைத்து மூடி சரியாக ஒன்பது மணிக்கு ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தாச்சு. ஆறேழு வளைவுகளில் வளைந்து நிமிர்ந்து தொடருந்துத் தடத்துக்கு அருகே செல்லும் வீதியால் சென்று பிரதான வீதிக்கு ஏறமுதல் இருபக்கமும் பார்த்துக்கொண்டிருக்க வாகனங்கள் வந்தபடி இருக்கின்றன. சாதாரணமாக நான் வலது பக்கம் திரும்பவேண்டும். இறங்கி உருட்டிக்கொண்டு போய் மற்றப்பக்கம் நின்று ஏறுவதுதான் வழமை. மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை என்றாலும் ஒரு மாதமாக ஓடுகிறேன். இன்று ஒருக்கா உருட்டாமல் அதில் நின்று அப்படியே திருப்புவோம் என எண்ணி இருபக்கமும் பார்க்க தூரத்தில் ஒரு வாகனத்தைத் தவிர வேறு வாகனங்களைக் காணவில்லை. இதுதான் சரியான நேரம் என எண்ணி அக்சிலேற்றரைத் திருப்பியவுடன் ஸ்கூட்டி பாய்கிறது. நான் தண்டவாளத்தில் தூக்கி எறியப்பட என்முகம் கற்களில் தேய்ந்தபடி செல்வது தெரிய, அந்த நிலையிலும் நிவேதாவுக்கு இனி முகம் இலை என்று மனம் எண்ணுகிறது. ஒரு நான்கு மீற்றர் தூரம்வரை சென்றபின் நின்றுவிட இரு கைகளிலும் சிறு காயங்கள். என்னை யாரோ இருவர் நிமிர்த்தி இருத்த உடனே என் முகத்தைத் தடவக் கையைக் கொண்டுபோகிறேன். தலைக்கவசத்தின் பிளாஸ்டிக் மூடி கையில் பட என் முகத்தில் கீறல் எதுவும் படவில்லை என்று மனதுக்கு அசுவாசமாகிறது. இருந்தாலும் கையை விட்டுத் தடவிப் பார்த்து எதுவும் ஆகவில்லை என்று நிம்மதி ஏற்பட, தங்கச்சி எழும்புங்கோ என என் கைகளைப் பிடித்து இருவர் தூக்குகின்றனர். கால் நோவெடுக்கிறதுதான் என்றாலும் தெரியாதவர்கள் முன் தண்டவாளத்தில் இருப்பது அவமானமாகப்பட, முயன்று எழும்பி அவர்கள் பிடித்தபடி வர, நல்ல காலமடா அக்காவுக்கு கால் முறியவில்லை என்று ஒருவர் சொல்வது கேட்கிறது. அருகில் இருக்கும் கடைக்கருக்கே செல்ல ஒருவர் ஒரு கதிரை கொண்டுவந்து தர அமர்கிறேன். கண்களிரண்டும் கலங்கலாகி எதுவுமே தெரியாமல் கண்களை மூடியபடி சாய, அக்கா நீங்களோ? என்று எனது உறவினர் ஒருவரின் குரல் கேட்கிறது. அவர் யார் என்று புரிந்தாலும் கண்ணைத் திறந்து பார்க்க முடியாமல் இருக்கு. நான் வேறை யாரோ எண்டு நினைச்சுத்தான் போன்னான். பிறகும் மஞ்சள் நிற ஸ்கூட்டி என்றவுடனதான் நீங்களாய் இருக்குமோ என்று திரும்பி வந்தனான் என்கிறார். கண் திறக்க ஏலாமல் இருக்கு, தலை சுத்துது என்றதும் கடையில் தண்ணீர் போத்தல் ஒன்று வாங்கி என்னைக் குடிக்கச் செய்தபின் இப்பிடியே இருங்கோ அக்கா நான் போய் உங்கட சித்தியைக் கூட்டிவறான் என்றபடி செல்கிறார். ஸ்கூட்டி எங்கே என்றதற்கு பக்கத்திலதான் நிக்குது அக்கா. இந்தாங்கோ திறப்பு என்று என் கைக்குள் திறப்பை வைக்கிறார். என் கைப்பையின் நினைவு வர அதையும் என்னிடம் தந்துவிட்டு கடைக்காரரிடம் பார்த்துக்கொள்ளுங்கோ வாறன் என்றுவிட்டுச் செல்கிறார்.
  7. பதினைந்து இரவு கொழும்பு சொய்சா புரத்தில் இருந்து 10 மணிக்கு வெளிக்கிட்ட சொகுசு பஸ் விடிகாலை 4.30 க்கு இணுவிலுக்கு வந்துவிட்டது. ஒருவருக்கு 4500 ரூபாய்கள். நல்ல வசதியான பஸ்தான். ஓட்டுனர் சிங்களத்திலும் தமிழிலும் மாறிமாறிக் கதைக்க அவர் சிங்களவரா தமிழரா என்றுகூட மட்டுக்கட்ட முடியவில்லை. அடுத்தநாள் எல்லோரும் வரவேற்பறையில் இருந்து கதைத்துக்கொண்டிருக்க காணிகள் பார்த்த கதையும் வருகிறது. வேறு காணிகள் பார்க்கவில்லையோ என்கிறா மச்சாள். பார்த்துப் பார்த்து களைத்துவிட்டது. மிஞ்சிப்போனால் உதயனின் காணி இருக்குத்தானே. அதற்குள் ஒரு சிறிய வீட்டைக் கட்டிக்கொண்டாவது இருக்கலாம் தானே என்கிறேன். உடனே கணவரின் தங்கை மகள் “தோட்டக் காணிக்குள் எப்பிடி நீங்கள் வீடு கட்ட முடியும்? நாங்கள் விடவே மாட்டோம்” என்கிறா. கணவர் இதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போய் நிற்க எனக்குக் கோபம் வருகிறது. “எம்மை வீடு கட்ட வேண்டாம் என்று எப்படி நீங்கள் சொல்ல முடியும். உங்கள் அம்மா சொன்னாக்கூடப் பரவாயில்லை” என்கிறேன். “ ஏன் அவள் இந்த வீட்டுப் பிள்ளை தானே. அவளுக்குக் கதைப்பதற்கு எல்லா உரிமையும் இருக்கு” என்கிறா. இருக்கட்டும். எனக்குச் சொந்தமான காணியில் நான் எதுவும் செய்ய முடியும் என்கிறார் கணவர். இல்லை அண்ணா சுற்றிவர மற்றவர்கள் தோட்டம் செய்யும் போது அவர்கள் ஓம் என்று சொல்லாமல் நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்கிறா தங்கை. அப்படியும் இருக்குமோ என்று நான் எண்ணிவிட்டுப் பேசாமல் இருக்க, அப்ப நீயே இந்தக் காணியையும் எடுத்துக்கொண்டு காசைத் தா என்கிறார் கணவர். உடனே அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. ஒரு இரண்டு ஆண்டுகள் செல்ல வாங்குவதைப்பற்றி யோசிக்கிறேன். அதுவும் நான் தான் விலையைச் சொல்வேனே தவிர நீங்கள் சொல்லும் விலைக்கு நான் வாங்கமாட்டேன் என்கிறா. எம்மை விட அவர்களிடம் பணம் இருப்பது ஊருக்கே தெரிந்த விடயம். என் மகள் என்னை நிமிர்ந்து பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு இருக்கிறாள். இத்தனை நேரம் சும்மா பார்த்துக்கொண்டிருந்த தங்கையின் கணவர் சரிசரி தேவையில்லாமல் உந்தக் கதையள் எதுக்கு நிப்பாட்டுங்கோ என்று கூறிய பின் யாரும் எதுவும் பேசாது எழுந்து செல்கிறோம். எனக்கு மனதுள்ளே கனன்றுகொண்டிருக்கிறது. கணவர் இதை எதிர்பார்க்கவே இல்லை என்பது அவர் என்னிடம் ஆதங்கத்தில் மீண்டும் மீண்டும் புலம்பியதில் இருந்து புரிய, என் தங்கையின் கணவருக்கு போன் செய்து உங்களுக்குத் தெரிந்த லோயர் யாராவது இருந்தால் கூறுங்கள் என்கிறேன். தனக்கு நன்கு தெரிந்தவர் மணிவண்ணன். நான் சொல்லி விடுகிறேன். போய்ப் பாருங்கள் என்கிறார். அடுத்தநாள் காலையே செல்வோம் என எண்ணிப் போன் செய்தால் மாலைதான் தாம் திறப்பதாக கூற மாலை 5.30 இக்குப் போய் காவலிருக்கிறோம். திறந்தவுடன் இன்னொரு ஆணும் ஒரு பெண் வக்கீலும் இருக்கின்றனர். மணிவண்ணன் வர ஏழரை ஆகும் என்கிறார். எனக்கு ஒருவிதமான கூச்சமாகவும் இருக்கு. அந்தப் பெண் வக்கீலிடம் விபரம் கேட்க, உங்கள் பெயரில் காணி இருந்தால் நீங்கள் என்னவும் செய்யலாம். யாருக்கும் விற்கலாம். என்கிறா. கணவரின் முகத்தில் விளக்கெரிகிறது. ஆனாலும் காணி உங்கள் பெயரில் இருந்தாலும் அவர்கள் சோழவரியை இருபது ஆண்டுகளுக்குமேல் கட்டியிருந்தால் அவர்களுக்குக் காணி சொந்தமாவதற்குரிய சட்டங்கள் இந்த நாட்டில் இருக்கு. எனவே உங்கள் பெயரில் சோழவரி கட்டுவதற்குரிய ஏற்பாட்டைப் பாருங்கள் என்கிறார். அடுத்தநாளே பிரதேச சபைக்குச் சென்று கணவரின் பெயரில் சோழவரியை மாற்றுவதற்குரிய படிவத்தைக் கேட்டால் படிவம் 300 ரூபாய்கள். அத்துடன் அந்த நிலத்துக்குரிய திட்டம் மற்றும் தாய் உறுதி, காணி உறுதி என்பன கட்டாயம் வேண்டும் என்கின்றனர். ஏற்கனவே காணிக்குத் திட்ட வரைபு இருக்கிறதா என்று கேட்க கணவர் தெரியாது என்கிறார். தங்கையிடம் தான் கேட்கவேண்டும். கணவனோ நீயே கேள் என்கிறார். எனக்கோ சங்கடமாக இருக்கு. ஆனாலும் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருக்க, என் நல்ல நேரம் வீட்டுக்குச் சோழவரி கட்டும் விலைப் பட்டியலை ஒருவர் மணி அடித்துத் தந்துவிட்டுப் போக என்ன உது என்கிறேன் மச்சாளிடம். சோழவரி கட்டவேண்டும். அதுதான் என்கிறா. கடிதம்போடாமல் கொண்டு வந்தா தருவார்கள் என்கிறேன் நம்பாமல். இது வெளிநாடில்லை. இங்க வீடுவீடாக கொண்டுபோய் குடுப்பினம் என்றவுடன் தோட்டத்தின் சோழவரியும் அப்படித்தானோ என்கிறேன். :தோட்டத்தின்ர சோழவரி உங்கள் பெயரிலோ இருக்கு? :இல்லை அம்மாவின் பெயரில் தான் தொடர்ந்து கட்டிக்கொண்டு இருக்கிறம். :இனிமேல் நீங்களே கட்டிக்கொண்டிருக்காமல் உதயனின் பெயருக்கு மாத்தி விடுவம். :அது கன காசு சிலவு மச்சாள். பேசாமல் அம்மாவின் பெயரிலேயே இருக்கட்டும். :என்ன சிலவு ? :பிளான் எல்லாம் கீற வேணும். அதுக்கு கன காசு. போக சேவையர்மார் செய்து முடிக்க நாலைஞ்சு மாசம் செல்லும். அதுக்குள்ள அண்ணா திரும்பப் போயிடுவார் எல்லோ. :காசு பிரச்சனைஇல்லை. அதை நாங்கள் குடுப்பம். ஆரும் இருந்தாச் சொல்லுங்கோ. :எனக்கு ஒருத்தரையும் தெரியாது. :உங்கள் மகனும் கட்டட அளவையாளர்தானே. அவருக்கு கட்டாயம் தெரிஞ்சிருக்கும் தானே. :அவன் போன் செய்யேக்குள்ள கேட்டுப்பாக்கிறன். :தோட்டத்துக்கு சோழவரி கட்டுற துண்டை ஒருக்கா தாங்கோ பார்ப்பம். :தேடித்தான் எடுக்கவேணும். இவர் வந்ததும் கேட்டுப் பார்க்கிறன். :சரி. மச்சாளுக்கு நாம் காணி அளப்பது பிடிக்கவில்லை என்று தெரிந்ததும் உதை உப்பிடியே விடுவம். உங்கள் அம்மாவின் பெயரில் தான் சோழ வரி கட்டுறதாலை எந்தப் பிரச்சனையும் இல்லை என்கிறேன். நீ குழப்பாதை. பிளானைக் கீறி எடுத்தால்தான் உவவுக்கு கொஞ்சம் பயம் வரும் என்கிறார். அடுத்த நாளே என் தங்கையின் கணவர் ஒரு நில அளவையாளரைத் தொடர்புகொண்டு வார இறுதியில் வருவதாகக் கூற தங்கையிடமும் கூற தங்களுக்கு ஒரு சாமத்தியவீடு இருப்பதாகவும் அதனால் தாங்கள் நிற்கமாட்டோம் என்றும் கூற அடுத்த வார இறுதிக்கு அது ஒத்திவைக்கப்படுகிறது. கணவர் இன்னும் ஒரு எட்டு நாட்கள் தான் நிற்பார். அவரில்லாது காணி அளப்பது சரியானதாக இருக்காது என்பதனால் அடுத்த வாரமும் அவர்கள் ஏதும் சாட்டுச் சொல்லி தட்டிக்கழித்தால் என்ன செய்வது என்று யோசனை ஓடுகிறது. நில அளவையாளர் பக்கத்துக் காணிக்காரரின் பெயர்களும் தேவை என்கின்றார். சகோதரியும் கணவரும் தமக்குத் தெரியாது என்கின்றனர். என்ன நீங்கள். இங்கேயே இருக்கிறியள். பக்கத்து காணிக்காரரைத் தெரியாமல் இருக்கிறியளா? என்கிறார் கணவர். நல்ல காலத்துக்கு கணவரின் அண்ணா ஒருவர். அவருக்கு காணிக்காரரின் பெயர்கள் தெரிந்தபடியால் அலைச்சலின்றி பெயரை அளவையாளரிடம் கொடுக்க அவரும் காணி அளப்பதற்கு வருகிறார். எல்லாமாக மூன்றுபேர் வருகின்றனர். இரண்டு மணி நேரத்தின் பின் தங்கையின் எட்டுப் பரப்புப் போக எமக்கு ஐந்து பரப்பு வருகின்றது என்கிறார் அளவையாளர். தங்கையின் கணவருக்கு டென்ஷன் ஏற்பட அதெப்படி வரும். எங்கட காணியில குறைச்சு அளந்திட்டியளோ என்று கோபமாகக் கேட்கிறார். அதற்கு அந்த நில அளவையாளருடன் வந்தவர் “தம்பி நீங்கள் உப்பிடிக்க கதைக்கக் கூடாது. நாங்கள் பத்து ஆண்டுகளாகத் தொழில் செய்கிறம். ஒருவரும் உப்பிடிச் சொன்னதில்லை. முந்தி காணியளை காலாலைதான் அளக்கிறது. கூடக் குறைய வாறது தான் “ என்றவுடன் சயிக்கிளை எடுத்துக்கொண்டு அவர் தன் வீட்டுக்குப் போகிறார். என்னடா இது என்று எமக்குக் குழப்பமாக இருக்க அளவையாளர் சொல்கிறார் கூட இருப்பதை இரண்டாகப் பிரித்துவிடவோ என்று. ஓம் அப்பிடிக்க செய்யுங்கோ பிரச்சனை இல்லை என்று நான் கூற, நீ வாயை மூடிக்கொண்டு இரு. இது என்ர காணி. நானே முடிவை எடுக்கிறன். அஞ்சு நிமிஷம் பொறுங்கோ என்றுவிட்டு பக்கத்தில் இருக்கும் அண்ணாவின் வீட்டுக்குச் செல்கிறார். நானும் மற்றவர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள “இது எனக்குத்தான் கெட்டபெயர். நான் தான் தடுத்திட்டன் என்று தங்கச்சியார் நினைக்கப்போறா, இந்தாள் ஏன் இப்பிடிச் செய்யுது” என்கிறேன். “அவை சகோதரங்கள். கதைச்சு முடிவெடுக்கட்டும் அக்கா. நீங்கள் தலையிடாதேங்கோ” என்கிறார் அளவையாளர். சிறிது நேரத்தில் கணவரும் தமையனும் ஒருபக்கத்தால் வர மறுபக்கம் தங்கையின் கணவரும் வருகிறார். தங்கையின் கணவர் "இவர் குடும்பத்தைப் பார்த்ததுக்கு மாமி நாலேகால் பரப்பு மட்டும்தான் எழுதினவா. ஆனபடியால் மிகுதி எங்களுக்குத்தான் சேரவேண்டும். நான் இரண்டு மூண்டு பேரிட்டை இப்ப விசாரிச்சிட்டுத்தான் வாறன் " என்கிறார். உடனே தமையன் "இல்லை உங்களுக்கு வீடுவளவும் காணியும் சீதனம் தந்தபடியால் சீதனக் காணி தவிர மிகுதி தம்பிக்குத்தான் சேரவேணும். நீங்கள் கதைப்பதற்கு ஒன்றும் இல்லை" என்றவுடன் "எனக்கு இவை அளந்ததில நம்பிக்கை இல்லை. திரும்ப வேறு யாரையும் கொண்டு அளவுங்கோ" என்று கூற சேவையருக்குக் கோபம் வந்துவிட்டது. என் கணவரைப் பார்த்து உங்களுக்கு வேறை யாரையும் கொண்டு அளக்கவேணும் என்றால் அளவுங்கோ என்கிறார். எனக்கு நாலேகால் பரப்பில் கால் பரப்பு குறைந்தால் இவர்கள் எனக்குத் தரவா போகிறார்கள். நீங்கள் அளந்ததில் எனக்கு எந்தக் குறையுமில்லை. நீக்கள் எங்கள் காணிக்குரிய பிளானை கீறி ரெஜிஸ்டர் பண்ணித் தாங்கோ. மச்சான் நீங்கள் வேறு ஒருவரைப் பிடித்து உங்கள் காணி எட்டுப் பரப்பும் இருக்கிறதா என்று பாருங்கள் என்றவுடன் அளவையாளர்கள் எல்லைக் கற்களை நான்குபுறமும் கிண்டித் தாட்டுவிட்டுச் செல்கின்றனர்.
  8. வணக்கம், ஆரோக்கியமான உரையாடல்களுக்காகவும் யாழ் கள உறவுகளுக்கிடையேயான இலகுவான மற்றும் சுமூகமான கருத்தாடல்களுக்கான மேடையாகவும் அமைக்கப்பட்டு இருந்த திண்ணை, பல முறை விதி மீறல்களை பற்றி குறிப்பிட்டும் அவற்றை அலட்சியம் செய்து யாழ் கள விதிகளுக்கு முற்றிலும் எதிராகவும், களத்தில் நீக்கப்படுகின்ற விதி மீறல்களுக்குரிய கருத்துகளை வைப்பதற்கான தளமாகவும்,குழுவாதத்தை தூண்டுவதற்கான வெளியாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தமையால் யாழில் இருந்து நீக்கப்படுகின்றது. நன்றி நிர்வாகம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.