Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    87992
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    32013
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    7055
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    38771
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/12/23 in all areas

  1. தம்பீ... பின்னாலை பாரப்பு. 😂 கொஞ்சம் அங்காலை தள்ளி நில்லப்பா. 🤣
  2. உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியாகி இன்று 50 ஆண்டுகள் முடிந்து 51 -ஆவது ஆண்டு தொடங்குகிறது. அரை நூற்றாண்டு காலம். வாகனத்தில் செல்லும்போது வேகமாக நம்மைக் கடந்து செல்லும் காட்சிகளாய், காலப் பயணத்தில் இந்த 50 ஆண்டுகளில் நம்மைக் கடந்து சென்ற காட்சிகள்தான் எத்தனை? அமைதியாய், அதிர்ச்சியாய், ஆயாசமாய், அதிசயமாய், ஆரவாரமாய் கடந்துபோன நிகழ்வுகள்தான் எத்தனை, எத்தனை? காலங்கள் மாறலாம். காட்சிகள் மாறலாம். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வாலிபன் என்றுமே வாலிபன்தான். உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்புக்காக 1970-ம் ஆண்டு கீழ்திசை நாடுகளுக்கு மக்கள் திலகம் பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூரில் அங்கு வசிக்கும் தமிழர்கள் அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தனர். திரைப்படத்தில் 'சிக்குமங்கு சிக்குமங்கு' பாடலில் இங்கு பதிவிட்டுள்ள படத்தில் அணிந்துள்ள காஸ்ட்யூமில் நடித்திருப்பார். அந்தக் காட்சி படமாக்கப்பட்ட இடம் சிங்கப்பூரின் டைகர்பாம் பார்க். நாம் தலைவலிக்காக தடவிக் கொள்ளும் டைகர்பாம் தைலம் கம்பெனிக்காரர்கள் அமைத்த பூங்கா அது. அந்தப் பாடல் காட்சிக்கான ஒப்பனையுடன் திறந்தவெளி அரங்கில் ஆயிரக்கணக்கான சிங்கப்பூர் வாழ் தமிழர்களிடையே உரையாற்றுகிறார் மக்கள் திலகம்! Swaminathan Sridhar Muktha films 60
  3. அதுதானே பார்த்தன் வந்து போங்கள் 👌👌 உரியவர் தான் வேண்டுமென நினைக்கலாம் அல்லது உயரதிகாரிக்கு விபரத்தை தெரிவியுங்கள்
  4. சீலன் பற்றிய தகவல்களை எமக்கு வழங்கியது கத்தோலிக்க மதகுரு ஆபரணம் சிங்கராயரே - கப்டன் முனசிங்க கத்தோலிக்க மதகுருக்களுக்கெதிரான உறுதியான ஆதாராங்களைப் பெற்றுக்கொண்ட பின்னர், அவர்கள் பணிபுரிந்த ஆலயங்களையும், தங்கியிருந்த விடுதிகளையும் சோதனையிடுவதற்கான அனுமதியினை பாதுகாப்பு அமைச்சிடமிருந்து இராணுவத்தினரும் பொலீஸாரும் பெற்றுக்கொண்டனர். பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியும், இராஜாங்க அமைச்சராக வீரப்பிட்டியவும் இத்தேடுதல் நடவடிக்கைகளினால் கத்தோலிக்க மக்களிடையே அதிருப்தி ஏற்படாது இருக்கத் தேவையானவற்றைச் செய்ய எத்தனித்தனர். ஆகவே, இத்தேடுதல் நடவடிக்கைகளுக்கு தகுந்த சூழ்நிலையினை மக்களின் மனங்களில் விதைக்கும் பொறுப்பு லேக் ஹவுஸ் பத்திரிக்கையான டெயிலி நியூஸிடம் கொடுக்கப்பட்டது. மேலும், அவர்களைக் கைதுசெய்வதற்கான சூழ்நிலையும் ஒரேவேளையில் உருவாக்கப்பட்டு வந்தது. இதன் முதற்படியாக, குறிப்பிட்ட சில கத்தோலிக்கக் குருக்கள் யாழ்க்குடாநாட்டில் புலிகளின் செயற்பாடுகளுக்கு உத்வேகமான பங்களிப்பினை வழங்கிவருவதாக செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டது. இச்செய்தியினைத் தொடர்ந்து இம்மதகுருக்களின் ஆலயங்களையும், விடுதிகளையும் சோதனையிடும் நடவடிக்கைகள் குறித்து பொலீஸாரும், இராணுவத்தினரும் சிந்தித்து வருகிறார்கள் என்றும் செய்தி பரப்பப்பட்டது. இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக பத்திரிக்கையில் வாசகர்கள் கருத்து எனும் பெயரில் அரசின் திட்டமிட்ட பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இவ்வாறான "வாசகர்" கருத்துக்களில் பெரும்பாலானவை அம்மதகுருக்களைக் கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தன. இவ்வாறான ஒரு வாசகர் கடிதத்தில், "சட்டத்தின் முன்னால் அனைவரும் சமமே, மதகுருக்கள் உட்பட" என்று எழுதப்பட்டிருந்தது. தமிழ்க் கத்தோலிக்க மதகுருக்களுக்கெதிரான உணர்வுகளை மக்களிடையே தூண்டிவிட்டபின்னர் அவர்களைக் கைதுசெய்யும் அனுமதியினைப் பாதுகாப்பு அமைச்சு வழங்கியது. ஆனால், கைது நடவடிக்கைகளும், தேடுதல்களும் கத்தோலிக்க மக்களின் உணர்வுகளைப் பாதிக்காத வண்ணம் நிகழ்த்தப்படவேண்டும் என்று பொலீஸாரும் இராணுவத்தினருக்கும் அறிவுருத்தப்பட்டது. இதன்படி, கத்தோலிக்கப் பாதிரியாரான ஆபரணம் சிங்கராயர் அவர்களின் ஆலயமான கரையூரில் அமைந்திருந்த அமல உற்பவம் எனும் ஆலயத்தில் முதலாவதாகச் சோதனையினை நடத்துவதென்றும், இச்சோதனைக்கு கத்தோலிக்க ராணுவ அதிகாரி ஒருவரை பொறுப்பாக நியமிக்கலாம் என்றும் இராணுவத்தால் தீர்மானிக்கப்பட்டது. பொலீஸ் அதிகாரிகள் வட்டத்தில் ஒரே ஒருவர் மட்டுமே கத்தோலிக்கராக இருந்தார், அவர் ஒரு உப பொலீஸ் அத்தியட்சகர். ஆரம்பத்தில் அவ்வதிகாரியை சோதனையிடும் குழுவிற்கு தலைமைதாங்குவதைப் பலர் எதிர்த்தபோதும், அவர் தலைமையிலேயே சோதனை இடம்பெற்றது. பாதிரியார் சிங்கராயருக்கும் புலிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதற்கான ஆதாரங்கம் தம்மிடம் கிடைத்திருப்பதாக இராணுவத்தினர் கூறினர். கார்த்திகை 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட சிங்கராயர் குருநகர் இராணுவ முகாமிற்கு விசாரணைக்காக இழுத்துச் செல்லப்பட்டார். மறுநாள் நெடுந்தீவு புனித் யோவான் ஆலயம் சோதனையிடப்பட்டதுடன் அவ்வாலயத்தின் பங்குத் தந்தையான பாதிரியார் பிலிப் அன்டன் சின்னையா கைதுசெய்யப்பட்டார். விசாரணைக்காக அவரையும் இராணுவம் குருநகர் ராணுவ முகாமிற்கு இழுத்துச் சென்றது. மதகுருக்களைக் கைதுசெய்த விடயம் மக்களிடையே ஆத்திரத்தினை ஏற்படுத்தவே ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் ஏற்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான மாணவர்கள், மதகுருக்கள், கன்னியாஸ்த்திரிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன் உண்ணாவிரத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர். யாழ்ப்பாண ஆயராக இருந்த தியோகுப்பிள்ளை தனது கடுமையான கண்டனத்தை ஜனாதிபதிக்குத் தெரிவித்திருந்தார். தியோகுப்பிள்ளை 1982 ஆம் ஆண்டு கார்த்திகை 18 ஆம் திகதியளவில் பாதிரியார் சிங்கராயரிடமிருந்து வாக்குமூலத்தினைப் பொலீஸார் முழுதாகப் பெற்றுக்கொண்டனர். சிங்கராயருடன் நீண்டநேரம் முனசிங்க மறுநாள் உரையாடியிருந்தார். அவ்வுரையாடலின்போது தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் குறித்தும், கிராமப்புறங்களில் இளைஞர்கள் எதிர்நோக்கும் கஷ்ட்டங்கள் குறித்தும் முனசிங்கவிடம் பேசியிருந்தார் சிங்கராயர். நள்ளிரவு வரை இந்த சம்பாஷணைகள் இடம்பெற்றிருந்தன. முக்கியமான தகவல் "மறுநாள் காலை என்னுடம் பேசவேண்டும் என்று சிங்கராயர் கூறியிருந்தார். நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது, அவர் நடுங்கிக்கொண்டிருந்தார். நான் உங்களிடம் ஒரு விடயத்தைக் கூறவேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். நான் அவரை ஆசுவாசப்படுத்தினேன். அவர் கதிரையில் அமர்ந்துகொண்டார். எனது கைகளை இறுகப் பற்றிக்கொண்ட அவர் பேசத் தொடங்கினார். அவரது உடலில் இன்னமும் நடுக்கம் தெரிந்தது". "மெதொடிஸ்த்த மதகுருவான ஜயதிலகராஜாவின் சகோதரரான மருத்துவர் ஜயகுலராஜாவே இன்றுவரை சீலனுக்கு மருத்துவ சிக்கிச்சையினை வழங்கிவருகிறார்" என்று அவர் என்னிடம் கூறினார். நான் அவரிடம் அந்த விலாசத்தினைக் கேட்க அவரும் அதனை என்னிடம் கூறினார்" என்று முனசிங்க என்னிடம் கூறினார். "அது எனக்குப் போதுமானதாக இருந்தது. இந்த விசாரணைகளில் ஒரு திருப்புமுனையாக சிங்கராயர் வழங்கிய தகவல் அமைந்திருந்தது" என்று முனசிங்க கூறினார். "நான் உடனடியாகவே அச்செழுவில் அமைந்திருந்த மெதொடிஸ்த்த ஆலயத்திற்கு இன்னும் ஒரு அதிகாரியையும், இரு ராணுவ வீரர்களையும் அழைத்துக்கொண்டு சென்றேன். நாங்கள் சிவில் உடையிலேயே இருந்தோம். மதகுரு ஜயதிலகராஜா அங்கிருக்கவில்லை. பின்னர் அங்கிருந்து புத்தூரில் அமைந்திருந்த புனித லூக்கு தேவாலயத்திற்கு நாம் சென்றபோது வைத்தியர் ஜயகுலராஜா அங்கிருந்தார். அவர் தனது காரினைக் கழுவிக்கொண்டிருந்தார். எம்மைக் கண்டதும் அவர் பதற்றமடைந்தார். "நீங்கள் பொலீஸிலிருந்து வருகிறீர்களா?" என்று எங்களைப் பார்த்துக் கேட்டார். நாங்கள் இராணுவத்தினர் என்று கூறவும், அவரது பயம் இரட்டிப்பானது". "நான் நேராகவே அவரிடம் கேட்டேன், "நீங்கள் சீலனுக்கு சிகிச்சையளித்து வருகிறீர்களா?" "ஆம் என்று ஒத்துக்கொண்ட வைத்தியர் ஜயகுலராஜா, தனது சகோதரனான பாதிரியார் ஜயதிலகராஜாவினாலேயே சீலனுக்கு சிகிச்சையளிக்க வேண்டி ஏற்பட்டதாக அவர் கூறினார்". "இப்போது சீலன் எங்கே?" என்று முனசிங்க அவரைப் பார்த்துக் கேட்டார். "அவர் சிகிச்சைக்காக தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டார்" என்று வைத்தியர் ஜயகுலராஜா பதிலளித்தார். "ஏனைய காயப்பட்டவர்கள்?" என்று முனசிங்க அவரிடம் மீண்டும் கேட்டார். "அவர்களையும் இந்தியாவிற்கு சிகிச்சைக்காக அனுப்பி விட்டார்கள், அவர்களின் பெயர்கள் புலேந்திரனும், ரகுவும் ஆகும்" என்று வைத்தியர் பதிலளித்தார். "சீலன் இந்தியாவுக்குச் செல்லுமுன் எங்கே தங்கியிருந்தார்" என்று முனசிங்க வைத்தியரிடம் கேட்டார். "புலிகளின் அனுதாபிகள் என்று அறியப்பட்ட ஒரு குடும்பத்துடன் அவர் தங்கியிருந்தார்" என்று வைத்தியர் பதிலளித்தார். மேலும் நேரத்தை விரயமாக்குவதைத் தவிர்க்க எண்ணிய முனசிங்க இரு சகோதரர்களையும் இழுத்துச் சென்று விசாரிக்க முடிவெடுத்தார். தன்னுடன் வந்திருந்த அதிகாரியையும், ஒரு ராணுவ வீரரையும் வைத்தியரின் காரினை ஓட்டிவருமாறு பணித்துவிட்டு, தனது ஜீப்பில் வைத்தியரை ஏற்றிக்கொண்டு அச்செழுவில் அமைந்திருக்கும் மெதொடிஸ்த்த ஆலயத்திற்குச் சென்றார் முனசிங்க. அச்செழுவில் ஆலயத்தின் பின்னால் அமைந்திருந்த மதகுருவின் விடுதிக்குச் சென்று தாம் ராணுவத்திலிருந்து வந்திருப்பதாக முனசிங்க கூறவும் மதகுரு ஜயதிலக ராஜா அதிர்ந்த்து போனார். "என்னை எதற்காகச் சந்திக்க வந்தீர்கள்?" என்று பாதிரியார் முனசிங்கவைப் பார்த்துக் கேட்டார். "புலிகளுடனான உங்களின் தொடர்புபற்றி விசாரிக்கவே வந்திருக்கிறேன்" என்று முனசிங்க பதிலளித்தார். புலிகளுடன் தனக்கு தொடர்புகள் எதுவும் இல்லையென்று பாதிரியார் ஜயதிலகராஜா மறுத்தார். மேலும், காயப்பட்ட மூன்று புலிகளுக்கும் தான் மருத்துவ சிகிச்சையளிக்க உதவியதாக ராணுவத்தினர் கூறிய குற்றச்சட்டையும் அவர் மறுத்தார். இது நடந்துகொண்டிருக்கும்போது மற்றைய ராணுவத்தினருடன் அங்கு வந்துசேர்ந்த அவரது சகோதரரான வைத்தியர் ஜயகுலராஜா, தனது சகோதரனைப் பார்த்து ராணுவத்திடம் உண்மையைக் கூறும்படி அறிவுருத்தினார். "நான் அவர்களிடம் எல்லா உண்மைகளையும் கூறிவிட்டேன், நீங்களும் அப்படியே செய்யுங்கள்" என்று தனது சகோதரனுக்கு அறிவுரை கூறினார் வைத்தியர். இதன்பின்னர் மதகுரு ஜயதிலகராஜா உண்மையைக் கூறினார். மாத்தையாவையும் இன்னும் சில புலிப்போராளிகளையும் தனக்கு சிலகாலமாகத் தெரிந்திருந்ததாகவும், ஆகவேதான் காயப்பட்ட போராளிகளை மாத்தையா தன்னிடம் அழைத்துவந்தபோது தான் அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் ஒழுங்குகளை தனது சகோதரரூடாக மேற்கொண்டதாக அவர் கூறினார். மேலும், ரகுவையும் புலேந்திரனையும் சிறிய சிக்கிச்சைகளுக்குப் பின்னர் புலிகளின் முகாமிற்கு தனது சகோதரரான வைத்தியர் அனுப்பிவிட்டதாகவும், சீலனைத் தொடர்ந்தும் சிகிச்சையளித்துப் பராமரிக்க தனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றுடன் வைத்துக்கொண்டதாகவும் கூறினார். அதன்பின்னர், சீலனை வைத்துப் பராமரித்துவந்த குடும்பம் பற்றி சகோதரர்களிடம் விசாரித்தார் முனசிங்க. பாதிரியார் ஜயதிலகராஜா அக்குடும்பத்தின் பெயர்களையும் விலாசத்தினையும் முனசிங்கவிடம் கொடுத்தார். அக்குடும்பத்தின் பெயர் நிர்மலா நித்தியானந்தன் என்றும் அவர்கள் நல்லூரில் வசித்துவருவதாகவும் பாதிரியார் கூறினார். பின்னர் அக்குடும்பத்தின் விலாசமான 330, நாவலர் வீதி, நல்லூர் என்பதையும் பாதிரியார் முனசிங்கவிடம் கொடுத்தார். உடனடியாக குருநகர் முகாமிற்கு தொலைபேசியூடாக அழைப்புவிடுத்த முனசிங்க, மேலதிகப் படையினரை வருமாறு அழைத்தார். சுமார் 45 நிமிடங்களின் பின்னர் ராணுவ அதிகாரியும், ராணுவக் கொமாண்டோ வீரர்கள் சிலரும் ஜீப் வண்டியில் வந்திறங்கினர். முனசிங்க தன்னுடன் பாதிரியார் ஜயதிலகராஜாவை ஜீப்பில் அழைத்துக்கொண்டு நல்லூரில் அமைந்திருந்த நிர்மலா நித்தியானந்தனின் வீட்டிற்குச் சென்றார். முதலாவது ஜீப் வண்டியில் இரு ராணுவ வீரர்களுக்கு நடுவில் பாதிரியார் அமர்த்தப்பட்டிருந்தார். இரண்டாவது ஜீப் வண்டியில் மேலதிக ராணுவ வீரர்கள் அவர்களைப் பிந்தொடர்ந்து பயணித்தனர். "நான் முன்னால் சென்றேன். நாம் நாவலர் வீதியை அடைந்தவுடம் பாதிரியார் ஜெயதிலகராஜா நிர்மலாவின் வீட்டினைக் காட்டினார். நான் ஜீப்பிலிருந்து இறங்கி வீட்டின் கேட்டினைத் திறந்தேன். எனது கொமாண்டோ வீரர்கள் சிரமமின்றி வீட்டினுள் நுழையும்வகையில் இரு கேட்டுக்களையும் நான் அகலத் திறந்துவிட்டேன். வாயிலில் இருந்து தொலைவாகவும், சிறிய வீட்டின் அருகிலுமாக எனது ஜீப் வண்டியை நான் நிறுத்திக்கொண்டேன். பின்னால் வந்த கொமாண்டோ அணியின் வாகனம் வந்துசேர்வதற்கு சில நேரம் எடுத்தது. அவ்வீட்டினை கொமாண்டோக்கள் சுற்றிவளைத்துக்கொண்டனர். ஒரு வீரர் சிறிய வீட்டின் பின்கதவு நோக்கி ஓடிச்சென்றார். கையில் துப்பாக்கியை ஏந்தியபடி நான் அவரின் பின்னால் விரைந்தேன். சிறிய வீட்டின் பின்கதவினூடாக ஒருவர் தப்பியோடுவதற்கு எத்தனிப்பதை நான் கண்டேன். என்னுடன் நின்ற கொமாண்டோ வீரர் தான் வைத்திருந்த MP5A3 துப்பாக்கியால் தப்பிச்செல்ல முயன்ற நபர் மீது சுட்டார். ஓரிரு வேட்டுக்கள் அந்தநபர் மீது பட்டிருக்கவேண்டும், ஆனாலும் அவர் தப்பிவிட்டார்" என்று முனசிங்க என்னிடம் கூறினார். MP5A3 - தானியங்கித் துப்பாக்கி
  5. சிங்கராயரின் கைது மினிபஸ்ஸினைக் கைவிடுமுன்னர் அச்செழுப் பகுதியில் இயங்கிவந்த மெதடிஸ்த்த தேவாலயத்திற்கு ஓட்டிச் சென்ற மாத்தையா அங்கிருந்த கிறிஸ்த்தவ மதகுரு ஜயதிலகராஜாவைச் சந்தித்தார். தேவாலயத்தின் பின்னால் இருந்த மதகுருவின் வாசஸ்த்தலத்திற்குக் காயப்பட்ட போராளிகள் கொண்டுசெல்லப்பட்டனர். ஏனையவர்கள் அந்த மினிபஸ்ஸில் தமது முகாம் நோக்கிச் சென்றார்கள். முகாமின் அருகில் அவர்கள் இறங்கியபின்னர், போராளிகளில் ஒருவர் அதனை நவாலி வரை ஓட்டிச் சென்று விட்டுவிட்டு முகாம் திரும்பினார். காயப்பட்ட போராளிகளின் நிலையினை அவதானித்த மதகுரு ஜயதிலக்கராஜா, காயப்பட்ட போராளிகளையும், மாத்தையாவையும் தனது காரில் ஏற்றிக்கொண்டுபுத்தூர் மெதடிஸ்த்த வைத்தியசாலையில் பணிபுரிந்த தனது சகோதரரான வைத்தியர் ஜயகுலராஜாவிடம் அழைத்துச் சென்றார். காயப்பட்ட போராளிகளுக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யப்படவேண்டும் என்று மாத்தையாவிடம் கூறிய ஜயகுலராஜா, கடுமையாகக் காயப்பட்டிருந்த சீலனின் உடலில் இருந்து பெருமளவு குருதி வெளியேறியுள்ளதால், அவர் தொடர்ச்சியாக வைத்தியர்களால் கண்காணிக்கப்பட்டுப் பராமரிக்கப்படவேண்டும் என்று கூறினார். மேலும், சீலனைப் பரிசோதித்த ஜயகுலராஜா, சீலனின் முழங்காலில் ஐந்து குண்டுச்சிதறல்கள் பாய்ந்திருப்பதாக கூறினார். அவரது முழங்காலின் ஒரு பகுதியூடாக மூன்று சன்னங்கள் வெளியேறியிருக்கும் காயங்களைக் காட்டிப் பேசிய ஜயகுலராஜா, இன்னும் இரு சன்னங்கள் முழங்காலுக்குள் சிக்கியிருப்பதாகவும் கூறினார். அக்குண்டுகளை அறுவைச் சிகிச்சை ஒன்றின் மூலமே வெளியே எடுக்கமுடியும் என்கிற நிலையிருந்தது. ரகுவையும், புலேந்திரனையும் முகாமிற்கு அழைத்துச் செல்லலாம் என்று மாத்தையாவிடம் கூறிய ஜயகுலராஜா, சீலனை தனக்குத் தெரிந்த இன்னொரு வீட்டில் வைத்து பராமரிக்க முடியும் என்றும் கூறினார். ஆரம்பச் சிகிச்சைகளின் பின்னர் வைத்தியர் ஜயகுலராஜாவின் விடுதியில் தங்கவைக்கப்பட்ட சீலன், இரவானதும் வைத்தியருக்குப் பரீட்சயமான குடும்பம் ஒன்றுடன் தங்கவைக்கப்பட்டார். ரஜினி திரணகம சீலனைப் பாதுகாப்பாக பராமரிக்க அனுப்பப்பட்ட வீடு, இலக்கம் 330, நாவலர் வீதி , யாழ்ப்பாணம் எனும் முகவரியை உடைய நிர்மலா நித்தியானந்தனின் வீடாகும். அக்காணியில் இரு வீடுகள் கட்டப்பட்டிருந்தன. காணியின் மத்தியில் பெரிய வீடொன்றும், ஓரத்தில் இன்னொரு சிறிய வீடும் கட்டப்பட்டிருந்தது. நிர்மலா நித்தியானந்தன் மற்றும் அவரது கணவர் முத்துப்பிள்ளை நித்தியானந்தன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளர்களாகக் கடமையாற்றி வந்தவர்கள். அக்காணியிலிருந்த சிறிய வீட்டிலேயே அவர்கள் தங்கியிருந்தார்கள். நிர்மலா நித்தியானந்தனின் பெற்றோரான ராஜசிங்கம் தம்பதிகள் பெரிய வீட்டில் தங்கியிருந்தனர். நிர்மலா நித்தியானந்தன் நிர்மலாவின் வீட்டிற்கு அன்றிரவு சீலனை அழைத்துச் சென்ற வைத்தியர் ஜயகுலராஜா, நிர்மலாவையும், அவரது தங்கையும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வைத்தியராகக் கல்வி கற்றுவந்தவருமான ரஜனியையும் அழைத்து சீலனின் காயங்கள் பற்றியும், அவரது மருத்துவ தேவைபற்றியும் விளங்கப்படுத்தினார். நித்தியானந்தன் தம்பதிகள் பயன்படுத்திய இரட்டைக் கட்டிலில் சீலன் கிடத்தப்பட்டார். அவரது முழங்காலில் இருந்து இன்னமும் இரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது. அவர்களுக்கு இன்னொரு கண்டிப்பான கட்டளையினையும் ஜயகுலராஜா இட்டார். தானோ அல்லது ராஜனோ அன்றி வேறு எவரும் இவ்வீட்டினுள் அனுமதிக்கப்படக் கூட்டது என்பதே அது. இங்கே ராஜன் என்று அவர் கூறியது மாத்தையாவைத்தான். மாத்தையாவின் இளம்பராயப் பெயர் ராஜன் என்பது குறிப்பிடத் தக்கது. மாத்தையா வைத்தியர் ஜயகுலராஜாவிடமிருந்து மருந்துகளையும், அறிவுருத்தல்களையும் எடுத்துக்கொண்டு நிர்மலாவின் வீட்டிற்குச் சைக்கிளில் சென்றுவந்தார். ராஜசிங்கம் தம்பதிகள் தமது குடும்பத்தில் ஒருவரைப்போல சீலனைக் கவனித்து வந்தார்கள் நிர்மலாவும் அவரது கணவர் நித்தியானந்தனும். சீலனின் சிறுபராய வாழ்க்கையின் கஷ்ட்டங்களையும், போராட்டத்தின் மீது அவர் வைத்திருந்த அர்ப்பணிப்பையும் கண்டபோது அவர்மீது அவர்களுக்கு இரக்கமும், இனம்புரியாத பாசம் ஏற்பட்டு விட்டது. தனது குடிகாரத் தந்தையாலும், வேலைவாய்ப்பின்றி சுற்றித் திரிந்த அண்ணனாலும் தனது சிறுபராயத்தில் ஏற்பட்ட கஷ்ட்டங்கள் குறித்து சீலன் அவர்களிடம் கூறியிருந்தார். தனது குடும்பத்தை தனது தாயாரே மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் கவனித்து வந்ததாகக் கூறிய சீலன், அவரைத் தனியே தவிக்கவிட்டு வந்ததற்காக மனம் வருந்துவதாகவும் கூறியிருந்தார். மேலும், புலிகள் இயக்கத்தில் சேர்வதற்காக மதகுரு சிங்கராயரே தனக்கு ஊக்கம் தந்ததாகவும் அவர் கூறினார். சீலனைப் பராமரித்து வந்த நிர்மலா, சீலனின் வலியைத் தடுக்கும் ஊசிகளைக் கேட்டபோது, சிங்கராயர் தனக்குத் தெரிந்த மருந்தகம் ஒன்றிலிருந்து அவற்றினைப் பெற்று மாத்தையாவிடம் வழங்கினார். நிர்மலாவிடமும், நித்தியானந்திடமும் பேசிய சீலன், தனது வீட்டின் ஏழ்மையினைப் போக்குவதைக் காட்டிலும், தமிழ் மக்களின் விடுவிற்காகப் போராடுவதே அவசியமானது என்று தான் நினைத்ததாலேயே தான் வீட்டை விட்டு வெளியேறி புலிகளுடன் இணைந்ததாகக் கூறினார். பிரபாகரன் போன்ற உன்னதமான தலைவர் ஒருவரின் கீழ் செயற்படுவது தான் அடைந்த பாக்கியம் என்று சீலன் கூறினார். "பிரபாகரன் ஒரு மேன்மையான தலைவர்" என்று சீலன் அவர்களிடம் அடிக்கடி கூறிக்கொள்வார். பிரபாகரனின் மேன்மை பற்றி விளக்குவதற்காக சீலன் ஒரு சம்பவத்தை அவர்களுக்குக் கூறினார். ஒருமுறை போராளி ஒருவர் வாந்தியெடுக்கும் நிலையில் இருந்தபோது, பிரபாகரன் தனது கைகள் இரண்டையும் சேர்த்து அவற்றிற்குள் வாந்தியெடுக்கும்படி அந்தப் போராளியிடம் கூறியிருக்கிறார். ஆனால், அதனைச் செய்ய அப்போராளி தயங்கியபோது, "நாம் தோழர்கள், நீ தயங்காது வாந்தியெடு" என்று பிரபாகரன் அப்போராளிக்குத் தைரியமூட்டியதாக சீலன் அவர்களிடம் கூறினார். வலதுபக்கத்தில் சரத் முனசிங்க பின்னாட்களில் பயங்கரவாதி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்கிற குற்றச்சாட்டில் நிர்மலாவும், அவரது கணவர் நித்தியானந்தனும் ராணுவத்தால் குருநகர் முகாமில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபோது இதுகுறித்து நிர்மலா சரத் முனசிங்கவிடம் கூறியிருக்கிறார். முனசிங்க தான் 2000 இல் எழுதிய "ஒரு ராணுவ வீரரின் பார்வையிலிருந்து" எனும் புத்தகத்தில் இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். தனது புத்தகத்தின் இறுதி நகலை என்னிடம் படித்துப் பார்த்துக் கூறுங்கள் என்று முனசிங்க என்னிடம் கேட்டிருந்தார். ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தினைப் பாவித்து அவரிடமிருந்து பல தகவல்களை நான் அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. சாவகச்சேரி பொலீஸ் நிலையம் மீதான தாக்குதல் தொடர்பாக அவர் மேற்கொண்ட விசாரணை, மீசாலை பகுதியில் அவர் நடத்திய தேடுதலின்போது ஏற்பட்ட சீலனின் மரணம், திருநெல்வேலித் தாக்குதல் ஆகியவை தொடர்பான பல விடயங்களை நான் அறிந்துகொள்ள முடிந்தது. சீலன் தன்னிடம் கூறிய போராளி ஒருவரின் வாந்திபற்றிய சம்பவத்தை நிர்மலா முனசிங்கவிடம் விபரிக்கும்போது குறுக்கிட்ட முனசிங்க, "உங்களின் சீலனை நான் விரைவில் பிடிப்பேன்" என்று கூறவும், "தயவுசெய்து அதைச் செய்யாதீர்கள், ஏனென்றால் அவரை உங்களால் உயிருடன் பிடிக்க முடியாது" என்று நிர்மலா கூறியிருக்கிறார். அன்டன் சின்னராசா பிலிப் சீலன் பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு இரு நாட்களுக்குப் பின், கார்த்திகை 20 ஆம் திகதி நிர்மலாவின் வீட்டைத் தாம் சோதனையிட்டதாக முனசிங்க என்னிடம் கூறினார். தாம் தற்செயலாகவே சீலனை நித்தியானந்தன் தம்பதிகள் பராமரித்து வருவதை தெரிந்துகொண்டதாகக் கூறினார். ராணுவ புலநாய்வுத்துறைக்குக் கிடைத்த தகவல்களின்படி இரு கத்தோலிக்கப் பாதிரியார்களான சிங்கராயரும், சின்னராசாவும் புலிகளின் பிரச்சார வேலைகளில் மும்முரமாக செயற்பட்டு வருவதையும் , அவர்களின் நிதிக் கொடுக்கல் வாங்கல்களை கவனித்துவருவதையும் தாம் அறிந்துகொண்டதாகக் கூறினார். ஆகவே இவர்கள் இருவரையும் ராணுவப் புலநாய்வுத்துறை தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்தது.
  6. Thoduwanam - தொடுவானம் · ஒற்றை மரத்துக்காக பாதையை மாற்றிய பொறியாளர்கள்
  7. பிசுபிசுத்துப்போனன் கண்ணிவெடித் தாக்குதல் சதாசிவம் செல்வநாயகம் - செல்லக்கிளி சுமார் 3 மாதங்களுக்குப் பின்னர், புரட்டாதி 19 ஆம் திகதியன்று, ஜனாதிபதி ஜெயவர்த்தன தேர்தல்ப் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தார். இந்தநாளே, செல்லக்கிளி தலைமையிலான புலிகளின் முதலாவது தோல்விகரமான கண்ணிவெடித் தாக்குதல் எத்தனிக்கப்பட்டது. ஜெயாரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவுக்கும் முகமாக, தமிழ் ஈழ விடுதலை முன்னணி, ஈழ மாணவர் அமைப்பு மற்றும் கொம்மியூனிஸ்ட் அமைப்புகள் ஒழுங்குசெய்த ஹர்த்தால் நிகழ்விற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் இந்தக் கண்ணிவெடித் தாக்குதலை புலிகள் திட்டமிட்டிருந்தனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில், யாழ்நகரிலிருந்து 2 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்த விவசாயக் கிராமமான கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர் செல்லக்கிளி. புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினராக இருந்த செல்லக்கிளி, பஸ்டியாம்பில்லை மீதான துணிகரமான திடீர்த் தாக்குதலின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர். தம்மைக் கைதுசெய்ய வந்திருந்த பஸ்டியாம்பிள்ளை தலைமையிலான பொலீஸ் குழுவினரை கண்ணிமைக்கும் நேரத்தில் சுட்டு வீழ்த்தியவர். பஸ்டியாம்பிள்ளை தேநீர் அருந்த எத்தனிக்கும்போது, அவரின் இயந்திரத் துப்பாக்கியைப் பறித்து அதனாலேயே அவரைச் சுட்டுக் கொன்றவர். செல்லக்கிளியின் துரித அசைவுகளுக்காகவும், சூழ்நிலையினை அவதானித்துச் செயற்படும் விவேகத்திற்காகவும் பிரபாகரன் அவரை கண்ணிவெடித் தாக்குதல்களுக்குப் பொறுப்பாக நியமித்திருந்தார். வீதியில் கண்டெடுக்கப்பட்ட வெடிக்காத நிலையிலிருந்த கண்ணிவெடியைப் பரிசோதித்த ராணுவ குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் அது புலிகளால் உருவாக்கப்பட்டதுதான் என்பதை உறுதிப்படுத்தினர். அக்குண்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை. உள்ளே அடைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளும் சரியான முறையில் அடைக்கப்பட்டிருக்கவில்லை. உருக்கு இரும்பிலான கோதுகளினுள் ஐந்து கிலோகிராம் வெடிபொருட்களும்,இரும்புத் துண்டுகளும் அடைக்கப்பட்டிருந்தது. ஹொண்டா மின்பிறப்பாக்கியொன்றிலிருந்து இக்குண்டினை வெடிக்கவைக்க மின்சாரக் கம்பிகள் இணைக்கப்பட்டிருந்தன. பொண்ணாலை வீதியூடாக தினம் தோறும் பயணிக்கும் கடற்படையினரின் ரோந்தைக் குறிவைத்து தமது முதலாவது பரீட்சார்த்த கண்ணிவெடித் தாக்குதலை நடத்தலாம் என்று செல்லக்கிளியும் தோழர்களும் தீர்மானித்தார்கள். காரைநகர் கடற்படை முகாமினுள் குடிநீர் இருக்கவில்லை. முகாமினுள் உப்புத்தண்ணிர்ரே கிடைத்தது. ஆகவே, முகாமின் பாவனைக்காக யாழ்ப்பாணப் பெருநிலப்பரப்பில் அமைந்திருந்த மூளாய்க் கிராமத்திலிருந்தே குடிநீர் கடற்படையினரால் எடுத்து வரப்பட்டது. ஒவ்வொருநாள் காலையும் இதற்காக முகாமிலிருந்து மூன்று தண்ணீர்த் தாங்கி வாகனங்கள் வெளிக்கிளம்பிச் செல்லும். புரட்டாதி 29 ஆம் திகதி, காலை 6:30 மணிக்கு வழமை போல மூன்று தண்ணீர் தாங்கி வண்டிகளுடன் கடற்படை அணியொன்று கிளம்பிச் சென்றது. இந்த அணிக்கு கடற்படை அதிகாரியான செல்வரட்ணம் பொறுப்பாக இருந்தார். முன்னால் சென்ற இரு ஜீப் வண்டிகளில் 12 கடற்படை வீரர்கள் ஏறிக்கொள்ள, கடற்படை வாகனத் தொடரணி மெதுவாக பொன்னாலை வீதியூடாக நகர்ந்துசெல்லத் தொடங்கியது. காரைநகர் பொன்னாலை வீதி புரட்டாதி மாதம் என்பது பொதுவாக யாழ்க்குடாநாட்டைப் பொறுத்தவரையில் வறட்சியான காலமாகும். வட கிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்றின் மூலம் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு மழைவீழ்ச்சியைக் கொண்டுவரும் காலம் புரட்டாதி மாதத்திற்குப் பின்னரே ஆரம்பிக்கிறது. யாழ் ஏரியினால் உருவாக்கப்பட்ட மணற்திட்டுக்கள் அவ்வீதியின் இருமரங்கிலும் தொடர்ச்சியாகக் காணப்படும். சில மணற்திட்டுக்களில் சிறிய பற்றைகளும் அவ்வபோது வளர்ந்திருக்கும். வீதியின் தென்முனையிலிருந்து சுமார் 100 மீட்டர்கள் தொலைவில் நான்கு அகழிகளை செல்லக்கிளியும் தோழர்களும் வெட்டினார்கள். இந்த அகழிக்குள் அவர்களால் கொண்டுவரப்பட்ட கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டன. புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளுக்கு இணைக்கப்பட்ட நீண்ட மின்கம்பிகள் மணற்மேட்டின் பற்றைகளுக்குப் பின்னால் மறைத்துவைக்கப்பட்டிருந்த மின்பிறப்பாக்கிக்கு இணைக்கப்பட்டிருந்தன. மின்கம்பிகள் வெளித்தெரியாவண்ணம் அவற்றின் மீது தாரும், மணலும் கொட்டப்பட்டு உருமறைப்புச் செய்யப்பட்டிருந்தது. மின்பிறப்பாக்கிக்கு அருகில் ஒளிந்திருந்த செல்லக்கிளி கையில் கண்ணிவெடியினை இயக்கும் கருவியை வைத்திருந்தார். மின்பிறப்பாக்கியை இயக்குவதற்குப் பொறுப்பாக அருணாவும் அருகில் இருந்தார். வழமைபோல, அதே நேரத்திற்கு கடற்படையின் வாகனத் தொடரணி அவ்வீதியூடாக வந்தது. வாகனங்களின் வேகத்தைத் தவறாகக் கணிப்பிட்ட செல்லக்கிள், தொடரணியில் முன்னால் வந்துகொண்டிருந்த ஜீப் வண்டி சுமார் 50 மீட்டர்கள் தொலைவில் வரும்போதே கண்ணிவெடியின் இயக்கு கருவியை அழுத்திவிட்டார். முதலாவது கண்ணிவெடி வெடித்துச் சிதறியபோது உள்ளிருந்த இரும்புத் துண்டுகளும், கற்களும் மணலும் நாலாபுறமும் வெடித்துச் சிதறின. அவ்வெடிப்பு சுமார் ஒரு மீட்டர் ஆளமான அகழியொன்றை வீதியில் ஏற்படுத்தியது. ஆனால், மீதி மூன்று கண்ணிவெடிகளும் வெடிக்கத் தவறிவிட்டன. தாக்குதல் முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, தன்னுடன் இருந்த அனைவரையும் தாம் வந்திருந்த மினி பஸ் நோக்கி ஓடுமாறு கட்டளையிட்டார் செல்லக்கிளி. அருணா மின்பிறப்பாக்கியையும் தூக்கிக் கொண்டு ஓடினார். ஆனால், பாரம் மிகுதியால் அவர் சிரமப்பட்டதுடன், ஏரிக்கரை மண்ணில் அவரது கால்கள் புதைய ஆரம்பித்தன. ஆகவே, வேறு வழியின்றி, மின்பிறப்பாக்கியை அவ்விடத்திலேயே விட்டு அவர் ஓடத் தொடங்கினார். கடற்படை அணிக்கு முன்னால் 50 இலிருந்து 100 மீட்டர்கள் தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த புலிகளை நோக்கிக் கடற்படையினர் ஒரு துப்பாக்கி வேட்டையேனும் தீர்க்க நினைக்கவில்லை. இத்தாக்குதல் குறித்த விசாரணையில் சாட்சியளித்த செல்வரட்ணம், தனது வீரர்கள் அனைவரும் தமக்கு முன்னால் நடப்பதைப் பார்த்து அதிர்சிக்குள்ளாகி விக்கித்து நின்றுவிட்டதாகக் கூறினார். யாழ்ப்பாணத்தில் பிரபலமான மிட்சுபிஷி ரோசா மினிவான் கடற்படையினர் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு நடப்பதை அறியமுன்னர், புலிகள் அங்கிருந்து மறைந்துவிட்டார்கள். சுமார் 400 மீட்டர்கள் வரை ஏரிக்கரை மணலில் ஓடி, தமக்காகக் காத்து நின்ற ரோசா பஸ் வண்டியில் ஏறி மூளாய் நோக்கித் தப்பொஇச் சென்றது புலிகளின் அணி. முதல் நாள் இரவு கடத்தப்பட்ட அந்த பஸ்வண்டியில் மூளாயிலிருந்து பொன்னாலைப் பகுதிக்கு புலிகளின் தாக்குதல் அணி வந்திருந்தது. தாக்குதல் தோல்வியின் பின்னர், மயிரிழையிலேயே அவர்கள் தப்பிச் சென்றார்கள். கடற்படை சுதாரித்துக்கொண்டு தாக்குதலில் இறங்கியிருந்தால் புலிகளின் தாக்குதல் அணியில் அனைவரும் கொல்லப்பட்டிருப்பார்கள். இத்தாக்குதல் தொடர்பாக நடந்த விசாரணைகளில் செல்வரட்ணத்தை விசாரித்த உயரதிகாரி, "நீங்கள் அன்று சுட்டிருந்தால், புலிகளின் முதுகெலும்பை முறித்திருக்கலாம்" என்று ஆத்திரத்துடன் கத்தினார். புலிகளின் முதலாவது கண்ணிவெடித் தாக்குதல் தோல்வியடைந்தது. ஆனால், இந்தத் தோல்வியே கண்ணிவெடித் தாக்குதலை புலிகளின் தாக்குதல் முறைகளில் இலங்கை படைகளுக்கு கடுமையான உயிரிழப்பை ஏற்படுத்தும் ஆயுதமாக நுணுக்கமாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கும் உத்வேகத்தினைக் கொடுத்திருந்தது. பின்னாட்களில் நடைபெற்ற புலிகளின் பல வெற்றிகரமான கண்ணிவெடித் தாக்குதல்களையடுத்து, தெற்கின் ஊடகங்கள் உள்நாட்டுப் போரினை. "கண்ணிவெடிப் போர்" என்று அழைக்கும் நிலையும் உருவாகியிருந்தது. இராணுவத்தைக் கட்டுப்படுத்தவும், அவர்களின் நடமாட்டத்தை முடக்கவும் கண்ணிவெடித் தாக்குதல்களை புலிகள் மிகவும் துல்லியமாகப் பாவிக்கத் தொடங்கினர். செல்லக்கிளியைப் பொறுத்தவரையிலும் இத்தாக்குதலின் தோல்வி அரிய சந்தர்ப்பம் ஒன்றினைத் தவறவிட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தது. அரசாங்கம் மீதும் கடுமையான தாக்கத்தைச் செலுத்தக்கூடியதும், தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெறுவதற்கான இன்னொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தரக்கூடியதுமான ஒரு தாக்குதலை புலிகளால் வெற்றிகரமாக நடத்திமுடிக்க முடியாது போய்விட்டது. யாழ்ப்பாணக் கோட்டை 2019 இல் ஆனால், இத்தாக்குதல் தோல்வியினால் எல்லாமே இழந்துவிட்டதாகவும் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது. யாழ்ப்பாணக் கோட்டையில் அன்று காலைவரை தங்கியிருந்த ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கு இக்கண்ணிவெடி முயற்சி பற்றி உடனடியாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் மிகவும் சினமடைந்து காணப்பட்டார். இக்கண்ணிவெடித்தாக்குதல் பற்றி ஆராய்வதற்கு தேசிய பாதுகாப்புச் சபையினை அவர் உடனடியாகக் கூட்டியிருந்தார். இராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்க, பொலீஸ் மா அதிபர் ருத்ரா ராஜசிங்கம், வடமாகாண இராணுவத் தளபதி சிறில் ரணதுங்க, வடமாகாண உதவி ராணுவத் தளபதி லயனல் பலகல்ல, கப்டன் சரத் முனசிங்க, யாழ்ப்பாணத்திற்கான ராணுவப் புலநாய்வுத்துறையின் தளபதி உட்பட பல மூத்த ராணுவ பொலீஸ் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இலங்கை ராணுவத்தின் பேச்சாளராகப் பின்னாட்களில் கடமையாற்றிய கேணல் சரத் முனசிங்க ஜெயவர்த்தன மிகவும் கோபத்துடன் காணப்பட்டார். புலிகளின் மீளெழுச்சி பற்றி தனக்குத் தெரியத் தராமைக்காக கப்டன் சரத் முனசிங்கவை அவர் கடுமையாக வைதார். முனசிங்கவைப் பார்த்து ஜெயார் பின்வருமாறு கேட்டார், "பிரபாகரன் தற்போது எங்கே?". "அவர் மதுரையில் இருக்கிறார்" என்று முனசிங்க பதிலளித்தார். கண்ணிவெடித்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாரென்று கேட்டறிந்துகொண்ட ஜெயார், "இந்த சிக்கலை நாம் முளையிலேயே கிள்ளி எறியாதுவிட்டால், எமக்குப் பெரும் பிரச்சனையாக இது மாறச் சந்தர்ப்பம் இருக்கிறது" என்று அவர் கூறினார். ஆனால், தனக்கெதிராக நடத்தப்பட்ட ஹர்த்தாலினாலோ, அல்லது தனது வருகையினையொட்டு நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலினாலோ ஜெயார் பயந்து ஓடிவிடவில்லை. தனது திட்டத்தின்படியே யாழ்ப்பாணம் முத்தவெளியரங்கில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த தேர்தல்ப் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். ஜெயாருக்கு முன்னதாக காமிணி திசாநாயக்க மேடையில் பேசினார். தனது பேச்சின் நிறைவில் , "எமது தலைவர் இப்போது உங்கள் முன் உரையாற்றுவார். அவர் உங்களிடத்தில் முக்கியமான விடயம் ஒன்றுபற்றிப் பேசுவார்" என்று கூறி முடித்தார். அடுத்ததாக ஜெயவர்த்தன பேசத் தொடங்கினார். தமிழர்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகள் பற்றித் தனக்குத் தெரியும் என்று அவர் கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடனான பேச்சுவார்த்தைகளினூடாக தான் தமிழர்களின் பிரச்சினை குறித்து அறிந்துகொண்டதாக அவர் கூறினார். 1977 ஆம் ஆண்டின் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவற்றை உள்ளடக்கியிருந்ததாகவும் அவர் கூறினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கானஅடிப்படைகளை தான் உருவாக்கியிருப்பதன் மூலம் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவிருப்பதாக அவர் கூறினார். தனது அடுத்த இலக்கு மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் பலப்படுத்துவதே என்று கூறிய ஜெயார், அதற்கான மக்களை ஆணைக்காகவே தான் தமிழ் மக்களிடம் வந்திருப்பதாகவும் கூறினார். ஈரோஸ் அமைப்பினரால அனுப்பப்பட்ட இளைஞர் ஒருவர் கூட்டத்தில் இருந்து எழுந்து, "அப்படியானால், பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து எதற்காகப் பாதயாத்திரை சென்றீர்கள்?" என்று ஜெயாரைப் பார்த்துக் கேட்டார். அதற்குப் பதிலளித்த ஜெயார், "ஆம், நான் எதிர்த்தேன். இனிமேலும் யாராவது அந்த ஒப்பந்தத்திற்கு புத்துயிர் கொடுக்க நினைத்தாலும், நான் மீண்டும் கண்டிக்குப் பாத யாத்திரை போவேன்" என்று அகம்பாவத்துடன் அந்த இளைஞனைப் பார்த்துக் கூறினார். ஆனால், ஜெயார் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவரது மேடையைச் சுற்றியிருந்த தூண்களுடன் இணைத்துக் கட்டப்பட்டிருந்த கயிறுகளை சில ஈரோஸ் இளைஞர்கள் அறுத்தெறிந்தார்கள். இதனையடுத்து மேடை சரிந்துவிழ, மேடையிலிருந்த காமிணியும், ஜெயாரும் கீழே விழுந்தார்கள். ஆனால், ஜெயாருக்கு உடம்பில் காயங்கள் எதுவும் படவில்லை. ஆனால், அவரது இதயத்தில் பலமான அடியொன்று விழுந்துவிட்டது. 79 வயதான ஜெயாரின் 50 வருடகால அரசியல் வாழ்க்கையில் அன்றுபோல் என்றுமே அவர் அவமானப்பட்டதில்லை. ஆகவே, தமிழருக்குச் சரியான பாடம் ஒன்றினைக் கற்றுக்கொடுக்கவேண்டும் என்கிற அவரது வெறி இன்னும் இன்னும் அதிகமாகியது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.