Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    8910
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46793
    Posts
  3. Kandiah57

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    4043
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20019
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/07/23 in all areas

  1. இப்போதும் அவையெல்லாம் கடைகளில் இருக்கு ஆனால் யாரும் அதிகம் வாங்குவதாய் தெரியவில்லை......! கொஞ்ச காலத்துக்கு முன் கார் ரேடியோ களவு உச்சத்தில் இருந்தது.....இப்ப எல்லோரும் கைபேசியில் பாட்டு கேட்பதால் ரேடியோ களவும் பெரும்பாலும் இல்லை......இப்ப கள்ளர்களும் வேறலெவல் வேறுமாதிரி களவுகள் என்று போகிறார்கள்......!
  2. ஆமாம் களவு எல்லா இடங்களிலும் தானே. பிறேக்கிலிருந்து ஸ்ரேறிங்குக்கும் போடுவார்கள் ஸ்ரேறிங்குக்கு குறுக்காகவும் போடுவார்கள். இப்போது அப்படி எதையும் காணவில்லை.
  3. நாடுதழுவிய அடக்குமுறைகள் வடக்குக் கிழக்கில் தமிழர் மீது அரச பயங்கரவாதத்தினைக் கட்டவிழ்த்துவிட்ட அதேவேளை தெற்கில் சிங்கள மக்கள் மீது தனது அடக்குமுறையினை ஜெயாரின் அரசாங்கம் மேற்கொண்டு வந்தது. 1980 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொது வேலை நிறுத்தப் போராட்டத்தினை தனது தொழிற்சங்கக் காடையர்களைக் கொண்டு கொடூரமாக அடக்கியதிலிருந்து தனக்கெதிரான சக்திகள் அனைத்தையும் இரும்புக் கரம் கொண்டு அடக்கி வந்தது. ஜெயவர்த்தனவின் அடக்குமுறைக்கு தமது எதிர்ப்பினைக் காட்டியவர்கள் என்றால் அது மொனராகலை மாவட்ட விவசாயிகளும் பல்கலைக்கழக மாணவர்களும் மட்டும்தான். சர்வதேச சீனி உற்பத்தி நிறுவனம் ஒன்று மொனராகலை மாவட்டத்தில் பொதுமக்களின் விவசாயக் காணிகளை அரச ஆதரவுடன் கபளீகரம் செய்ய முற்பட்டவேளை மொனராகலை மாவட்ட விவசாயிகள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். அவ்வாறே, பல்கலைக்கழக நிர்வாகத்தில் ஜெயவர்த்தன அரசின் தலையீட்டையும், இலவசக் கல்வி முறையில் ஜெயார் கொண்டுவர முயற்சித்த மாற்றங்களையும் பல்கலைக்கழக மாணவர்கள் கடுமையாக எதிர்த்திருந்தனர். மேலும் பல்கலைக் கழக மாணவர்களின் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கெதிராகவும், பொலீஸ் அக்கிரமங்களுக்கெதிராகவும் பின்னாட்களில் விரிவுபடுத்தப்பட்டது. கொழும்பு மற்றும் சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக் கழக மாணவர்கள் மீதான பொலீஸ் அடக்குமுறைகளையடுத்து கெலனிய, பேராதனை, றுகுண மற்றும் மட்டக்களப்பு பல்கலைக் கழக மாணவர்கள் தமது விரிவுரைகளைப் புறக்கணித்ததோடு 1983 ஆம் ஆண்டு மாசி மாதம் ஒருநாள் பகிஷ்கரிப்பையும் மேற்கொண்டார்கள். திருமதி விவியேன் குணவர்த்தன ஜெயவர்த்தனவின் அடக்குமுறை தனது எதிராளிகளை அடக்கிச் சிதறடித்ததுடன், தேர்தல்க் காலங்களில் வன்முறைகளைப் பாவிப்பதன் மூலம் வெற்றிகொள்ளும் நிலைமையினையும் அவருக்கு உருவாக்கிக் கொடுத்திருந்தது. எதிர்க்கட்சித் தலைவியான சிறிமா பண்டாரநாயக்கவை அரசியலிலிருந்து முற்றாக நீக்கிவிட்ட ஜெயாரினால் அதன் தொடர்ச்சியாக மக்களிடம் பிரபலயமடைந்துவந்த திரைப்படக் கலைஞரும் அரசியல்வாதியுமான விஜே குமாரதுங்க மீது நக்ஸலைட் எனும் பொய்யான குற்றச்சாட்டினைச் சுமத்திச் சிறையில் அடைக்கவும் முடிந்தது. இதில் வேதனை என்னவென்றால், தனது சகோதரியான சந்திரிக்காவின் கணவர் விஜே குமாரதுங்க சிறையில் அடைக்கப்படுவதற்கான சூழ்ச்சியில் அநுர பண்டாரநாயக்கவும் பங்குகொண்டதுதான். ஜனாதிபதி தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் தொடர்ச்சியான வன்முறைகள், அச்சுருத்தல்கள், கள்ளவாக்குகள் ஆகிய பல முறைகேடுகளிலும் ஜெயவர்த்தன அரசு இறங்கியிருந்தது. சுதந்திரக் கட்சியினரின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை பொலீஸாரைக் கொண்டு பொய்க்குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்வது, அக்கட்சியின் தேர்தல் முகவர்கள் மீது வீண்பழி சுமத்தி கைதுசெய்வது ஆகிய்வற்றை ஜெயவர்த்தனவின் அரசு தேர்தல் நடைமுறையாகவே கைக்கொண்டு வந்தது. தனது அடக்குமுறைக் குற்றங்களை மறைக்க ஜெயவர்த்தனவின் அரசு ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவ்வபோது காட்டி வந்தது. 1977 ஆம் ஆண்டு தேர்வுசெய்யப்பட்ட பாராளுமன்றத்தை வெகுஜன வாக்களிப்பின் மூலம் மேலும் ஆறு வருடங்களுக்கு ஜெயவர்த்தன நீட்டித்தபோது, உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் அதற்கெதிராக கடுமையான கண்டனங்கள் எழுந்திருந்தன. ஆகவே, இக்கண்டனங்களை நீர்த்துப் போகச் செய்வதற்காக சூழ்ச்சியொன்றில் இறங்கினார் ஜெயார். அதாவது, சர்வஜன வாக்கெடுப்பில் "ஆம்" என்கிற வாக்குகளைக் காட்டிலும் "இல்லை" என்கிற வாக்குகள் அதிகமாக அளிக்கப்பட்ட 18 தேர்தல்த் தொகுதிகளில் இடைத்தேர்தல்களை அவர் நடத்தினார். 1983 ஆம் ஆண்டு வைகாசி 18 ஆம் திகதி இந்தத் இடைத்தேர்தல்களிலும் ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சி 14 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இத்தேர்தல் முடிவுகளைக் கொண்டு தனது கட்சிக்கு இன்னமும் மக்கள் ஆதரவு இருக்கின்றது என்று ஜெயார் பிரச்சாரம் செய்துவந்தார். ஆனால், இந்த இடைத்தேர்தல்களில் ஜெயாரின் கட்சி மேற்கொண்ட கடுமையான முறைகேடுகளினூடாகவே அவரால் வெற்றிபெற முடிந்ததாக எதிர்க்கட்சிகள் அரசைக் குற்றஞ்சாட்டியிருந்தன. 1983 ஆம் ஆண்டு பங்குனி 7 முதல் 15 வரையான காலப்பகுதியில் அணிசேரா நாடுகளின் தலைவர்களின் மாநாடு இந்தியாவில் தலைநகர் புது தில்லியில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. இந்த நிகழ்வினையொட்டி, தமிழீழ விடுதலைப் புலிகள் குறிப்பாணை ஒன்றினை மாநாட்டின் தலைவருக்கும் ஏனைய அரசத் தலைவர்களுக்கும் அனுப்பியிருந்தனர். இந்த அறிக்கை இலங்கையில் தமிழ்மக்கள் மீது சிங்கள அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் பயங்கரவாதம் குறித்தும், இப்பயங்கரவாதத்தினை முறியடித்து தமிழ் மக்களுக்கான தனியான நாட்டினை உருவாக்க தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டம் ஒன்றினுள் இறங்குவதற்கான நியாயப்பாடுகள் குறித்தும் விளக்கியிருந்தது. "உலக நாடுகளின் சமூகத்திற்கு !, சிறிலங்கா தன்னை சொர்க்கபுரித் தீவென்று வெளியுலகில் பிரச்சாரம் செய்துவருவதோடு, பெளத்த கோட்பாடுகளான அகிம்சையினையும், சமாதானத்தினையும் கைக்கொண்டு, சோசலிஸ ஜனநாயகத்தினை அரசியலில் பின்பற்றுவதன் மூலம் நடுநிலையான அணிசேராக் கொள்கையினைக் கடைப்பிடித்து வருவதாகவும் பித்தலாட்டம் செய்து வருகிறது. ஆனால், சிறிலங்கா வெளியுலகிற்குக் காட்டிவரும் இந்த ஜனநாயக முகமூடியின் பின்னால் அது தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் இனரீதியான அடக்குமுறைகளும், அப்பட்டமான மனிதவுரிமை மீறல்களும் , இராணுவ பொலீஸ் அட்டூழியங்களும், இவை அனைத்தினூடான திட்டமிட்ட இனக்கொலையும் மறைந்து கிடக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த காலந்தொட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து, சர்வாதிகாரத்தனமான அரசியல் நடைமுறையினைக் கைக்கொண்டிருக்கும் சிறிலங்காவின் ஆளும் வர்க்கம், தேசிய இனவாதத்தினையும், மத அடிப்படைவாதத்தினையும் முடுக்கிவிட்டுள்ளதன் மூலம் தமது அதிகாரத்தை தக்கவைத்து வருகின்றன. மேலும், இதே அதிகார வர்க்கங்கள் தமிழ் மக்கள் மீது மிகவும் திட்டமிட்ட அடிப்படியில் மிகக் கொடுமையான இனவாத அரசியலை முன்னெடுத்தும் வருகின்றன". "இதில் வேதனை தரும் முரண்பாடு யாதெனில், உலக மனிதவுரிமை அமைப்புக்களால் குற்றஞ்சாட்டப்பட்ட, மனித குலத்திற்கெதிரான பாரிய குற்றங்களில் ஈடுபட்டு வருகின்ற சிறிலங்கா போன்ற சர்வாதிகாரத்தனமான நாடுகள் உலக அரங்கொன்றில் அகிம்சையினையும், சமாதானத்தையும் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொண்டு வலம்வருவதுதான்". "எமது குறிக்கோள் என்னவெனில், சிறிலங்கா பாஸிஸ அரசின் பொய் முகத்திரையினை சர்வதேச அரங்கில் துகிலுரிப்பதும், இந்த அராஜக அரசின் கீழ் எமது மக்கள் அடைந்துவரும் அவலங்களை வெளிக்கொணர்வதும், அடிமைகளாக கீழிறக்கப்பட்டு, மெதுவான சாவை எதிர்நோக்கியிருப்பதைக் காட்டிலும், வேறு எந்தத் தெரிவுகளும் இல்லாத நிலையில் கெளரவத்தினையும், சுதந்திரத்தினையும் அடைந்துகொள்ள எமது மக்கள் முன்னெடுத்திருக்கும் வீரம்செறிந்த போராட்டத்தினை நியாயப்படுத்துவதும் ஆகும்" என்று புலிகளின் அறிக்கை கூறியது. ஜெயவர்த்தனவின் அரசாங்கம் இராணுவத்தையும், பொலீஸாரையும் தனது அடக்குமுறையின் கருவிகளாகப் பாவித்து வந்தது. சமூக உரிமைகள் அமைப்பு இந்த அபாயகரமான மாற்றத்திற்கெதிராகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தது. இந்த அமைப்பின் தலைவரான ஆயர் வணக்கத்திற்குரிய லக்ஷ்மண் விக்கிரமசிங்க தலைமையில் 1983 ஆம் ஆண்டு சித்திரை 15 ஆம் திகதி கூடிய சமூக உரிமைகள் அமைப்பினர், அதிகரித்துவரும் பொலீஸ் அடக்குமுறைகள் பற்றியும், அடாவடித்தனங்கள் பற்றியும் விமர்சித்திருந்தன. மேலும், பொலீஸாரின் அடக்குமுறைச் சம்பவங்கள் குறித்த பட்டியல் ஒன்றினையும் இவ்வமைப்பு வெளியிட்டது. கொத்மலைப் பகுதியில் செய்தியாளர்கள் மீது பொலீஸார் நடத்திய தாக்குதல், கண்டி பொலீஸ் நிலையத்தில் நீதிக்குப் புறம்பான விதத்தில் கைதுசெய்து சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட 17 வயது இளைஞன், ஏக்கலை சுதந்திர வர்த்தக வலையத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளிகள் மீதான பொலீஸாரின் தாக்குதல்கள், ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல், மாத்தளை பொலீஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது பொலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட நபர், கொழும்பு நடைபாதை வியாபாரிகள் மீதான பொலீஸாரின் தாக்குதல்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விவியேன் குணவர்த்தன மீதான பொலீஸாரின் தாக்குதல் ஆகியன் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. எஸ். ஏ. டேவிட் சொலொமொன் அருளானந்தம் - காந்தீயம் ஆனால், தமிழ் மக்கள் மீது சிறிலங்காவின் பொலீஸாரும் இராணுவத்தினரும் கட்டவிழ்த்து விட்டிருந்த அடக்குமுறைகள் இங்கே பட்டியலிடப்பட்டவற்றைக் காட்டிலும் பல மடங்கு கொடுமையானவை. வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட தமிழர்கள் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்ததோடு, பொலீஸார் எழுதும் வாக்குமூலங்களை ஏற்றுக்கொள்ளுமாறும் கடுமையாகத் தாக்கப்பட்டு வந்தனர். இந்த வாக்குமூலங்கள் கைதுசெய்யப்பட்ட தமிழர்களுக்கெதிராகப் பொலீஸாரினால் பாவிக்கப்பட்டபோது, சிறிலங்காவின் நீதிமன்றங்களும் அவற்றினை முழுமையாக ஏற்றுக்கொண்டிருந்தன. 1983 ஆம் ஆண்டு சித்திரை 30 ஆம் திகதி வெளியான சட்டர்டே ரிவியூ பத்திரிக்கை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டு, கடுமையான சித்திரவதைகளை அனுபவித்த கட்டட வடிவமைப்பாளரும், காந்தீயம் அமைப்பின் தலைவருமான எஸ். அருளானந்தம் டேவிட் அவர்களின் அவலத்தினைச் செய்தியாகக் காவி வந்திருந்தது.
  4. அப்பாவி இளைஞரான நவரட்ணராஜாவை சித்திரவதைகளுக்குப் பின்னர் கொன்றுபோட்ட இராணுவப் புலநாய்வுத்துறை முதலாவது கவசவாகனச் சாரதி வாகனத்தின் தடுப்புக்களைப் பிரயோகித்தார். புலிகளின் தாக்குதலில் அந்த வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த இரு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். தமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த கவச வாகனம் சடுதியாக வீதியின் நடுவே நின்றதைக் கண்ட இரண்டாவது கவச வாகனத்தின் சாரதி, தனது வாகனம் முதலாவது வாகனத்துடன் மோதுப்படுவதைத் தவிர்க்க வீதியின் கரைநோக்கி வாகனத்தைச் செலுத்த, அது கண்ணிவெடியால் உருவாகியிருந்த கிடங்கிற்குள் வீழ்ந்தது. எதிர்பாராது நடந்த இந்த சம்பவத்தை அடுத்து நிலைகுலைந்துபோன புலிகள், தாக்குதல் திட்டத்தினைக் கைவிட்டு, தமது மினிபஸ் தரித்துநின்ற பரந்தன் பகுதிநோக்கி ஓடத் தொடங்கினர். அவசரத்தில், புலிகளின் அணியினைச் சேர்ந்த நால்வர் தமது பாதணிகளை அவ்விடத்திலேயே விட்டுச் சென்றிருந்தனர். அவற்றினைப் பரிசோதித்த ராணுவப் புலநாய்வுத்துறையினர் அவை காடுகளில் பாவிக்கப்படும் பாதணிகள் என்பதை அறிந்துகொண்டதோடு, அவற்றில் அதன் உரிமையாளர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதையும் கண்டுகொண்டனர். பாதணிகளில் கிட்டு, கணேஷ், விக்டர் மற்றும் பொட்டம்மான் ஆகியோரின் பெயர்கள் காணப்பட்டன. காடுகளில் பாவிக்கும் பாதணிகளை அதிகப் பாவித்துப் பழகியிருக்காமையினால், அவற்றுடன் ஓடுவதைக் காட்டிலும் வெறுங்காலுடன் ஓடுவதே அவர்களைப் பொறுத்தவரை அன்று இலகுவானதாக இருந்திருக்கிறது. மேலும், ராணுவ வாகனத்தின் அருகில் சிறிய காகிதம் ஒன்றினையும் புலநாய்வுத்துறையினர் கண்டெடுத்தனர். அக்காகிதத்தில் ஒருவருடைய பெயர் இருந்தது. திருகோணமலை மாவட்டம், கிளிவெட்டியை வதிவிடமாகக் கொண்ட சித்திரவேல் சிவானந்தராஜா என்பதே அந்தப் பெயர். இதனையடுத்து, கிளிவெட்டியைச் சேர்ந்த சிவானந்தராஜாவை விசாரிக்க ராணுவப் புலநாய்வுத்துறை அங்கு சென்றது. இராணுவத்தினருடன் பேசிய அவர், சார்ள்ஸ் அன்டனி எனப்படும் சீலன் தனது பாடசாலை நண்பர் என்றும், தன்னை புலிகளுடன் இணைந்துகொள்ளுமாறு அவர் வற்புருத்தி வந்ததாகவும், ஆனால் தான் இணைய விரும்பவில்லையென்றும் கூறினார். அவரை விடுதலை செய்த ராணுவப் புலநாய்வாளர்கள், கிளிவெட்டியைச் சேர்ந்த இன்னொரு இளைஞரான 28 வயது நிரம்பிய கதிர்காமத்தம்பி நவரட்ணராஜாவை பங்குனி 26 ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைப் பாவித்து குருநகர் முகாமிற்கு அழைத்து வந்ததோடு கடுமையான சித்திரவதைகளின்பின்னர், 1983 ஆம் ஆண்டு சித்திரை 10 ஆம் திகதி அவர் ராணுவத்தினரால் கொல்லப்பட்டார். அவர் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணத்தை ராணுவத்தினர் ஒருபோதும் கூறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தம்மால் கொல்லப்பட்ட நவரட்ணராஜாவின் உடலை யாழ் வைத்தியசாலையில் கையளித்த ராணுவத்தினர் அவர் சுகயீனம் காரணமாக இறந்தார் என்று கூறினர். அன்று, ராணுவத்தை எதிர்த்துக் கேள்விகேட்கும் துணிவு வைத்தியசாலையில் இருந்த எவருக்கும் இருக்கவில்லை. யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் தடயவியல் நிபுணராக பணியாற்றிவந்த மருத்துவர் என். சரவணபவனந்தன் கொல்லப்பட்ட நவரட்ணராஜாவின் பிரேதப் பரிசோதனையை நடத்தியிருந்தார். வைத்தியர் சரவணபவனந்தனால் வழங்கப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை பின்வருமாறு கூறியது, "இறந்துபோன நவரட்ணராஜாவின் உடலில் 25 வெளிக்காயங்களும், பத்து உட்காயங்களும் காணப்பட்டன. அவரது நுரையீரலில் காணப்படும் காயங்கள் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டவையாகும். அவரது மரணம் இதயம் மற்றும் சுவாசத் தொகுதிகளின் செயலின்மையினால் ஏற்பட்டிருக்கிறது. அவரது உடலின் தசைப் பகுதிகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாலேயே இந்த செயலிழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன். சரியான நேரத்தில் உரிய மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டிருப்பின் அவரது உயிரைக் காத்திருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்" என்று கூறப்பட்டிருந்தது. சித்திரை 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் சட்டர்டே ரிவியூ பத்திரிக்கை இளைஞர் நவரட்ணராஜாவின் மரணம் பற்றிய செய்தியைத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்ததோடு, வைத்தியர் சரவணபவனந்தனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் வைத்தியசாலையின் சவ அறைக்குச் சென்ற பொலீஸார் நவரட்ணராஜாவின் மரணம் தொடர்பாக வைத்தியர் வெளியிட்ட மருத்துவ அறிக்கையினைத் தேடியதாகவும், ஆனால் அதனை மருத்துவர் சரவணபவனந்தன் பாதுகாப்பாக மறைத்து வைத்துவிட்டதனால் பொலீஸார் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாகவும் கூறியிருந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அப்பாவி இளைஞரான நவரட்ணராஜாவின் சித்திரவதையும் அதன்பின்னரான கொலையும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் அரசு மீதும், இராணுவத்தினர் மீதும் அதீத கோபத்தினை ஏற்படுத்தியிருந்ததுடன், அரசிடமிருந்து மேலும் மேலும் அவர்களை அந்நியப்படவும் வைத்திருந்தது. கைதுசெய்யப்படும் அனைவரையும் சித்திரவதைக்குள்ளாகுதல் என்பது அன்றைய கால கட்டத்தில் இராணுவத்தினராலும் பொலீஸாரினாலும் பொதுவான நடைமுறையாகக் கையாளப்பட்டு வந்ததுடன், கைதுசெய்யப்படும் தமிழர்கள் அனைவரும் பாரபட்சமின்றி சித்திரவதைகளுக்கு முகம்கொடுத்துவந்தனர். இவ்வாறான செயற்பாடுகளால் தமிழ் மக்கள் அரச இயந்திரத்தின் ராணுவப் பொலீஸ் படைகளுடன் நேரடியான மோதல்களுக்கு தம்மை தயார்ப்படுத்தும் நிலைக்கும் இட்டுச் சென்றிருந்தது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு, சித்திரவதைகளை அனுபவித்துவருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்களால் சித்திரை 5 ஆம் திகதியன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நவரட்ணராஜா கொல்லப்படுவதற்கு ஐந்து தினங்களுக்கு முன்னரே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினைக் கலைக்க பொலீஸார் குண்டாந்தடிப் பிரயோகமும், கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதலையும் மாணவர் மீது மேற்கொண்டிருந்தனர். சித்திரை 5 ஆம் திகதி காலை, புனித ஜேம்ஸ் ஆலயத்திலிருந்து ஆரம்பித்து பிரதான வீதி வழியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஏற்பாடாகியிருந்தது. இதனையடுத்து புனித ஜேம்ஸ் தேவாலயத்தைச் சுற்றித் தடைகளை ஏற்படுத்திய பொலீஸார், அத்தேவாலயம் நோக்கி மாணவர்கள் வருவதைத் தடுக்க எத்தனித்தனர். ஆனால், அருகிலிருந்த புனித மரியாள் பேராலயத்திலிருந்து தமது பேரணியினை மாணவர்கள் ஆரம்பித்து நடத்தவே, அப்பகுதிக்குச் சென்ற பொலீஸார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி ஆர்ப்பாட்டத்தைக் கலைத்துப் போட்டனர்.
  5. இரண்டாவது கண்ணிவெடித் தாக்குதல் புலிகளின் மீள் எழுச்சி அரசாங்கத்தையும் இராணுவத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. வடக்கின் பாதுகாப்பு நிலைமையினை அது வெகுவாகப் புரட்டிப் போட்டிருந்தது. இங்கிலாந்துப் பத்திரிக்கையாளரான டேவிட் செல்போர்னுக்குச் செவ்வி வழங்கிய ராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்க, "நாம் தற்போது உச்சத்தில் இல்லை" என்று கூறியிருந்தார். டேவிட் செல்போர்ன் "பயங்கரவாதிகளே தாக்குதலையும் நேரத்தையும் தெரிவு செய்கிறார்கள், நாம் செய்வதெல்லாம் அதற்கான எதிர்வினை மட்டும்தான்" என்று திஸ்ஸ வீரதுங்க அவரிடம் கூறினார். தான் பிரித்தானியச் செய்தியாளரிடம் பேசிக்கொண்டிருக்கும் கணத்தில்க் கூட பிரபாகரன் கண்ணிவெடிப் போரினைத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார் என்பதோ அல்லது ராணுவத்தின் நடமாட்டங்கள் முடக்கப்பட்டு அவர்கள் முகாம்களுக்குள் அடைபடவேண்டிய நிலை உருவாவதையோ அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. பொன்னாலைப் பாலத்தைத் தகர்த்து கடற்படை ரோந்து அணியை அழிக்க புலிகள் எடுத்துக்கொண்ட முயற்சி தோல்வியடைந்தபோதிலும், அவர்கள் கண்ணிவெடித்தாக்குதல்கள் மீதான தமது நாட்டத்தினை ஒருபோதும் கைவிட்டிருக்கவில்லை. தமது தவறுகளில் இருந்து பல புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட அவர்கள், தமது உத்திகளை மேலும் மெருகேற்றிக்கொள்ள எத்தனித்தனர். கண்ணிவெடிகளை இயக்குவதற்கு ஜெனரேட்டர்களை எடுத்துச் செல்வது கடிணமானது என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டனர். காவிச்செல்வதற்குக் கடிணமானதாக இருந்த அதேவேளை, அதன் இரைச்சலும் புலிகளுக்கு சிக்கல்களைத் தோற்றுவித்திருந்தது. ஆகவே, ஜெனரேட்டர்களுக்குப் பதிலாக லொறிகளில் பாவிக்கப்படும் பற்றரிகளைப் பயன்படுத்தலாம் என்று புலிகள் முடிவெடுத்தனர். புலிகளின் இரண்டாவது கண்ணிவெடி முயற்சியும் பெரியளவில் வெற்றி பெற்றிருக்கவில்லை. 1983 ஆம் ஆண்டு, பங்குனி 4 ஆம் திகதி கிளிநொச்சி உமையாள்புரம் கோவிலின் அருகிலேயே இத்தாக்குதல் முயற்சி நடைபெற்றது. சீலனே இத்தாக்குதலுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். முதலாவது தாக்குதலைப் போலவே, இத்தாக்குதலிலும் செல்லக்கிளியே கண்ணிவெடிகளை வெடிக்கவைப்பதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். பொன்னாலைத் தாக்குதல் முயற்சியைப் போலல்லாது இந்தமுறை கண்ணிவெடித்தாக்குதலில் இருந்து தப்பியோடும் ராணுவத்தினர்மீது துப்பாக்கித் தாக்குதலையும் நடத்துவதென்று புலிகள் தீர்மானித்திருந்தார்கள். மினி பஸ்ஸில் தாக்குதல் நடைபெறப்போகும் இடத்திற்கு வந்திறங்கிய புலிகளின் அணி, வீதியில் இரு கண்ணிவெடிகளைப் புதைத்துவிட்டு அவற்றின்மீது தாரினை ஊற்றி மறைத்துக்கொண்டது. கண்ணிவெடிகளையும் பற்றரியையும் இணைக்கும் மின்கம்பிகளும் தாரினாலும், மண்ணினாலும் உருமறைப்புச் செய்யப்பட்டன. இரு குழுக்களாகத் தம்மைப் பிரித்துக்கொண்ட புலிகளின் அணி, வீதியின் இருமருங்கிலும் நிலையெடுத்துப் பதுங்கிக்கொண்டது. கிளிநொச்சி பொலீஸ் நிலையத்திற்குக் காவலுக்கு நிற்கும் இராணுவ அணிக்கு உணவுப் பொருட்களைக் காவிவரும் இராணுவ ரோந்து அணியே அவர்களின் அன்றைய இலக்கு. ஆனையிறவு தடை முகாமிலிருந்தே கிளிநோச்சிப் பொலீஸ் நிலைய ராணுவத்தினருக்கு மூன்றுவேளையும் உணவு கொண்டுவரப்பட்டது. காலை வேளையில் அவ்வீதியால் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு ஆதலால், காலையுணவைக் கொண்டுசெல்லும் ரோந்து அணியையே தாக்குவதென்று புலிகள் முடிவெடுத்தனர். இராணுவத்தினருக்கு உணவினை ஏற்றிச்செலூம் ட்ரக் வண்டி காலை 7 மணிக்கு ஆனையிறவு முகாமிலிருந்து கிளம்பியது. அதற்குக் காவலாக நான்கு ராணுவ வீரர்கள் சென்றனர். வீதியில் ராணுவ ட்ரக்கினைக் கண்டதும், தனது சக்காக்களை உசார்ப்படுத்தினார் சீலன். ஆனால் இந்தமுறையும் செல்லக்கிளியின் நேரம் தவறிவிட்டது. பொன்னாலைத் தாக்குதல் முயற்சியைக் காட்டிலும் இம்முறை கண்ணிவெடி இலக்கு அருகில் வரும்போது வெடித்திருந்தது. கண்ணிவெடி வெடித்தபோது வீதியில் உருவான கிடங்கினுள் ட்ரக் இறங்குவதற்குச் சற்று முன்னர் சாரதி ட்ரக்கினை நிறுத்திவிட்டார். ட்ரக்கிலிருந்ஃது வெளியே குதித்த ராணுவத்தினர் தாம் கொண்டுவந்த தானியங்கித் துப்பாக்கிகளால் சரமாரியாக எல்லாத்திசைகளிலும் சுட ஆரம்பித்தனர். புலிகளும் பதிலுக்கு இரு பக்கத்திலிருந்து ராணுவத்தினர் மீது தாக்கத் தொடங்கினர். இரு ராணுவ வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டது. அவர்கள் தமது ஆயுதங்களைக் கீழே எறிந்துவிட்டு ஆனையிறவு நோக்கி ஓடத் தொடங்கினார்கள். சாரதியும், வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு ஏனைய ராணுவ வீரர்களின் பின்னால் ஓடத் தொடங்கினார். வீதிக்கு வந்த புலிகள், ட்ரக் வண்டியின் பின்னால் மீள ஒருங்கிணைந்தார்கள். இருவர் ராணுவத்தினரின் ஆயுதங்களை எடுத்துக்கொள்ள மேலும் இருவர் ட்ரக் வண்டியின் அடியில் சென்று அதன் அமைப்பைச் சோதித்தார்கள். ராணுவத்திற்குக் கொண்டுவரப்பட்ட உணவினை உண்டுவிட்டு, குளிர்பானங்களையும் அருந்தினார்கள். அங்கிருந்து தப்பி ஓடிச்சென்ற இராணுவ வீரர்கள் ஆனையிறவு முகாமைச் சென்றடைந்து, மேலும் ராணுவ வீரர்களை அழைத்துக்கொண்டு அங்கு வருவதற்கு நேரம் எடுக்கலாம் என்பதை அறிந்திருந்த புலிகள், சாவகசமாக செயற்பட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், அங்கு எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. மாங்குளம் முகாமிலிருந்து பலாலி நோக்கி இரு ராணுவக் கவச வாகனங்கள் அவ்வீதியால் அப்போது வந்துகொண்டிருந்தன. முகாம்களுக்கிடையே ராணுவ வீரர்கள் இடம் மாறிக்கொள்ளும் வழமையான செயற்பாட்டிற்கமைய இவ்விரு கவச வாகனங்களிலும் ராணுவ வீரர்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர். முன்னால் சென்றுகொண்டிருந்த கவச வாகனத்தில் சென்றவர்கள் வீதியின் நடுவே தமக்கு முன்னால் ராணுவ ட்ரக் ஒன்று நிற்பதைக் கண்டுகொண்டார்கள். கவச வாகனத்தின் சாரதி, வீதியில் நின்ற ட்ரக் வண்டிக்கு அருகில் சீருடை அணிந்த சிலர் நிற்பதையும் கண்டுகொண்டார். புலிகளும் தம்மை நோக்கி இரு கவச வாகனங்கள் வேகமாக வருவதை அவதானித்தார்கள். உடனே வீதியின் கரைக்கு பாய்ந்த புலிகள், கவச வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள்.
  6. தங்கத்துரையின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பேச்சு அரச பயங்கரவாதினாலும், அடக்குமுறைகளாலும் பாதிக்கப்பட்ட தமிழர்களின் உணர்வுகள் பொங்கியெழுந்துகொண்டிருந்தவேளை, மாசி 17 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நீதிமன்றம் ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் அவ்வுணர்ச்சியைக் கட்டுக்கடங்காத கோபமாக மாற்றிவிட்டிருந்தது. பிரபாகரன் மதுரையை விட்டு வெளியேறி தாயகம் திரும்பிக்கொண்டிருந்த வேளை, நீர்வேலி வங்கிக்கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் நடேசன் சத்தியேந்திரா நீதிமன்றில் வரலாற்றைச் சுட்டிக் காட்டி ஆற்றிய வாதத் தொகுப்பில் குறிப்பிட்ட சில விடயங்கள் இலங்கையிலும் வெளிநாட்டிலும் வாழ்ந்துவந்த ஒவ்வொரு தமிழனின் உணர்வினையும் ஆளமான தாக்கத்தினைச் செலுத்தியிருந்தது. வழக்கறிஞர் நடேசன் சத்தியேந்திரா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எல்.டி. மூனெமலி தலைமையில் நடைபெற்ற இந்த வழக்கில் பிரதிவாதிகளாக தங்கத்துரை, குட்டிமணி, தேவன், சிவபாலன் மாஸ்ட்டர், நடேசநாதன் மற்றும் சிறி சபாராட்ணம் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர். ஆனால், சிறி சபாரட்ணம் தலைமறைவாகியிருந்தபடியினால், அவரின்றியே வழக்கு நடைபெற்றது. வழக்கில் பேசிய சத்தியேந்திரா, "குற்றஞ்சாட்டப்பட்ட எனது கட்சிக்காரர்கள் தொடர்பாக நான் ஒரு விடயத்தை இந்த நீதிமன்றில் வெளிப்படையாகக் கூறவிரும்புகிறேன். எந்தவொரு தனி மனிதனுக்கும் இருக்கும் விலை மதிக்கமுடியாத பொருளான தனது உயிரை, தனது மக்களின் விடுதலைக்காக கொடுக்க முன்வந்திருக்கும் எனது சமூகத்தைச் சேர்ந்த இந்த இளைஞர்களின் முன்னால் நான் தாழ்ந்து அடிபணிகிறேன்" என்று உணர்வு மேலிடக் கூறினார். மாசி 24 ஆம் திகதி குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆயுள்த்தண்டனையினை வழங்குமுன்னர், குற்றஞ்சாட்டப்பட்டவர்களைப் பார்த்து ஏதாவது கூற விரும்புகிறீர்களா என்று நீதிபதி கேட்டார். தங்கத்துரை தமிழில் உணர்வூர்வமான பேச்சொன்றினை வழங்க அதனை ஆரம்பத்திலிருந்தே நடேசன் சத்தியேந்திரா மொழிபெயர்த்துவந்தார். தங்கத்துரையின் பேச்சு நீண்டு செல்கையில் சத்தியேந்திரா அழத்தொடங்கினார். உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்ட சத்தியேந்திரா, தங்கத்துரையின் பேச்சினை தன்னால் தொடர்ந்தும் மொழிபெயர்க்க முடியாது என்று நீதிபதியினைப் பார்த்துக் கூறினார். சத்தியேந்திராவுக்கு இவ்வழக்கில் உதவிபுரிந்த சிவசிதம்பரம் தங்கத்துரையின் மீதிப் பேச்சினைத் தமிழில் மொழிபெயர்த்தார். நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் நடராஜா தங்கத்துரை - கொழும்பு, மாசி 24, 1983 தமிழர்களின் வரலாறு பற்றியும், சுதந்திரத்தின் பின்னர் அவர்கள் தொடர்ச்சியாக அரசுகளால் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்பட்டதையும், தமிழர்களுக்குச் சட்டபூர்வமாக வழங்கப்படவேண்டிய உரிமைகளை மிதவாதத் தலைவர்கள் பெற்றுக்கொடுக்கத் தவறியமையும், அரச பயங்கரவாதத்திற்கு முகம் கொடுக்க தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பித்ததையும் விளக்கப்படுத்திய தங்கத்துரை தனது பேச்சினை பின்வரும் வகையில் நிறைவு செய்தார். "நாம் வன்முறையினைக் காதலிப்பவர்கள் அல்ல. மனநோயினால் பாதிக்கப்பட்டவர்களும் அல்ல. எமது மக்களை விடுவிக்க போராடும் ஒரு இயக்கத்தின் போராளிகள் நாங்கள். எம்மைப் பயங்கரவாதிகள் என்று ஓயாமல் தூற்றிக்கொண்டிருக்கும் அந்த உன்னதமான மனிதர்களுக்கு நாம் ஒன்றைச் சொல்ல விழைகிறோம்". "நூற்றுக்கணக்கான தமிழர்கள் இரத்த வெள்ளத்தில் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டபோது பயங்கரவாதம் குறித்து நீங்கள் அச்சம் கொள்ளவில்லையா? இனவாதிகள் தமது வெறுப்பினை இந்த நாடு முழுவதும் காட்டுத்தீயைப் போல பரப்பியபோது உங்களுக்கு அச்சம் ஏற்படவில்லையா? அப்பாவித் தமிழ்ப்பெண்கள் உங்களால் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டபோது உங்களுக்கு பயங்கரவாதம் குறித்த பயம் ஏற்படவில்லையா? எமது கலாசாரப் பொக்கிஷங்களை நீங்கள் எரியூட்டியபோது உங்களுக்கு அச்சம் ஏற்படவில்லையா? 1977 ஆம் ஆண்டில் மட்டும் 400 தமிழர்கள் பலியிடப்பட்டு, அவர்களின் இரத்தத்தில் வானம் செந்நிறமாகியபோது பயங்கரவாதத்தினை நீங்கள் கண்டுகொள்ளவில்லையா?" "ஆக, தமிழ் ஈழத்தில் ஒரு சில பொலீஸ் காடையர்கள் கொல்லப்பட்டபோதும் சில லட்சம் ரூபாய்கள் வங்கிகளில் கொள்ளையிடப்பட்டபோதும் மட்டும்தான் பயங்கரவாதம் உங்களின் முகத்தில் அறைந்ததோ?" "ஆனால் என்னுடைய வேண்டுதல் என்னவென்றால், அதிகார வெறிபிடித்த சிங்கள அரசியல்வாதிகள் விதைத்த வினையினை அப்பாவிச் சிங்கள மக்கள் அறுவடை செய்யக் கூடாது என்பதுதான். நாம் அனுபவிக்கும் இன்னல்கள் எல்லாம் ஆண்டவன் எங்களைப் புனிதப்படுத்த அருளிய வரங்கள் என்று நான் நினைக்கிறேன். இறுதி வெற்றி எமதே!" இறுதி வெற்றி எமதே என்று தங்கத்துரை எதிர்வுகூறியபடி தனது பேச்சினை முடித்தபோது நானும் நீதிமன்றத்தில் இருந்தேன். அப்பாவிச் சிங்கள மக்கள் அதிகார வெறி பிடித்த சிங்கள அரசியல்வாதிகளின் செயலினால் பழிவாங்கப்பட்டு விடக்கூடாது என்று வேண்டுகிறேன் என்று அவர் கூறியபோது என்னால் அழுகையினைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்த அனைத்துத் தமிழர்களும் அழுதார்கள். தங்கத்துரை எம் அனைவரையும் உணர்வுகளால் இணைத்துவிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், இலங்கையிலும், வெளிநாட்டிலும் வாழும் தமிழர்களையும் அவர் உணர்வால் ஒன்றிணைத்தார். தமிழர்கள் உணர்வுரீதியாக ஒருங்கிணைவதை அவர் அன்று உறுதிப்படுத்திக்கொண்டார். தங்கத்துரையின் உரையின் இறுதிப்பகுதியை, குறிப்பாக அவரது உரையின் இறுதி வாக்கியத்தை மேற்கோள் காட்டித் தமிழ்ப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டதுடன், அந்தப் பேச்சு தமிழ் மக்கள் மேல் எவ்வகையான தாக்கத்தினைச் செலுத்தப்போகின்றது என்பது பற்றிய ஆசிரியத் தலையங்கங்களையும் வெளியிட்டிருந்தன. ஆனால், ஆங்கிலப் பத்திரிக்கைகள் தங்கத்துரையின் பேச்சினை முற்றாக இருட்டடிப்புச் செய்திருந்ததுடன், தங்கத்துரைக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தமிழ்ப் பயங்கரவாதத்தினை எவ்வாறு முடிவிற்குக் கொண்டுவரப்போகின்றது என்பது பற்றி எதிர்வுகூறியிருந்தன. சிங்களப் பத்திரிக்கைகளோ ஒரு படி மேலே சென்று, தங்கத்துரைக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை ஆரவாரத்துடன் வரவேற்றது மட்டுமன்றி, தமிழ்ப் பயங்கரவாதிகளைக் கைதுசெய்த பொலீஸாரையும், இராணுவத்தினரையும் வானளவப் புகழ்ந்து தள்ளியிருந்தன. தங்கத்துரையின் அன்றைய பேச்சு மொத்தத் தமிழ்ச் சமூகத்தின் மீதும், இலங்கை அரசியலின் எதிர்காலம் மீதும் செலுத்தவிருக்கும் தாக்கத்தினை சிங்கள ஊடகவியலாளர்கள் அன்று கண்டுகொள்ளத் தவறியிருந்தனர். இலங்கையின் இனப்பிரச்சினையில் இரு தரப்புக்கள் இருக்கின்றனர் என்பதையும் அவர்கள் உணர்ந்துகொள்ளத் தவறியிருந்தனர். ஒருபக்கச் சார்பாக செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்ததன் மூலம் தமது தலைவர்களால் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டு வந்த குற்றங்களைத் தூண்டிவிட்டதுடன், அவற்றினை ஆதரித்தும் அவர்கள் எழுதி வந்தனர்.
  7. ஊழல்ப்பெருச்சாளி ஆளாளசுந்தரமும் அவருக்குப் புலிகள் வழங்கிய எச்சரிக்கையும் நான்கு நாட்களின் பின்னர், மாசி 22 ஆம் திகதி பிரபாகரன் தனது விடுதலைப் போராட்டத்திற்கு இன்னொரு குணவியல்பையும் கொடுத்தார். மக்களை ஊழல்களிலிருந்தும் ஏனைய சமூகச் சீர்கேடுகளிலிருந்தும் காப்பவர்கள் என்பதே அது. பிரபாகரனின் சமூகச் சுத்திகரிப்பிற்கு முதலாவதாகத் தண்டிக்கப்பட்டவர் கோப்பாய்த் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எம். ஆளாளசுந்தரம் ஆகும். அவர் யாழ்ப்பாண பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகவும் கடமையாற்றி வந்தார். ஆளாளசுந்தரம் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்ததோடு வழக்கறிஞராகவும் பட்டம்பெற்றிருந்தவர். சிறிமாவின் அரசாங்கத்திடமிருந்து பதவிகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொண்ட சிறிமாவின் தமிழ் ஆதரவாளர்கள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வந்தவர். சிறிமாவின் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாண பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக இருந்தவரும் யாழ்நகர மேயருமான அல்பிரெட் துரையப்பாமீது கடுமையான விமர்சனங்களை ஆளாளசுந்தரம் முன்வைத்து வந்தார். பொதுக்கூட்டங்களில் பேசிய அவர், துரையப்பாவை "கூப்பன் கள்ளன்" என்று வெளிப்படையாக கேலிசெய்திருந்தார். ஆனால், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின்னர் ஜெயவர்த்தனவுடனான தமது நெருக்கத்தினைப் பாவித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தான் முன்னர் விமர்சித்து வந்த அதே ஊழல்களை தானும் செய்யலாயிற்று. ஆளாளசுந்தரம் யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் கூட்டுறவுச் சங்கத்தில் பல ஊழல்களும், முறைகேடுகளும், அதிகாரத் துஷ்பிரயோகங்களும் நடைபெறத் தொடங்கியதாக பலமான முறைப்பாடுகள் வெளிவர ஆரம்பித்திருந்தன. பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் ஊழியராகக் கடமையாற்றி வந்த மனோகரன், ஆளாளசுந்தரத்தினால் மேற்கொள்ளப்பட்டுவந்த ஊழல்களையும், முறைகேடுகளையும் சுட்டிக்காட்டியதுடன், அவரை உடனடியாக பதவி விலகவேண்டும் என்றும் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார். தனது குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கணக்குகளும், அதனோடு இணைந்த ஆவணங்களும் மூன்றாம் தரப்பு ஒன்றினால் ஆராயப்படவேண்டும் என்றும் கோரியிருந்தார். பின்னர் ஒரு நாள் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கணக்குகளும், ஏனைய ஆவணங்களும் பாதுகாக்கப்பட்டு வந்த அறை திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உள்ளிருந்த அனைத்து ஆவணங்களும் தீயில் சாம்பலாகிப் போயின. ஆளாளசுந்தரமே தனது முறைகேடுகளை மறைக்க ஆவணங்களை எரித்தார் என்று மக்கள் நம்பினர். ஆகவே, ஆளாளசுந்தரத்திற்கும், அவர் உறுப்பினராக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் ஒரு பாடத்தைப் புகட்ட எண்ணினார் பிரபாகரன். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தாம் விரும்பியபடி நடந்துகொள்ள முடியாதென்றும், மக்களின் நலனே அவர்களின் மிக முக்கியமான குறிக்கோளாக இருக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். ஒருநாள் இரவு கல்வியங்காட்டில் அமைந்திருந்த தனது வீட்டுக் கதவினை யாரோ தட்டும் சத்தம் கேட்டு, "யாரது?" என்று ஆளாளசுந்தரம் கேட்டார். "ஆளாள் அண்ணையைப் பாக்க வேணும்" என்று கதவின் வெளியில் இருந்து பதில் வந்தது. ஆளாளசுந்தரம் கதவைத் திறக்கவும், கணேஷ் என்று அழைக்கப்பட்ட புலிகளின் போராளியொருவர் அவரருகில் சென்று வலது காலில் துப்பாக்கியால் சுட்டார். "அண்ணை, இதை ஒரு எச்சரிக்கையாய் எடுத்துக்கொள்ளுங்கோ. இனிமேலும் உங்கட ஊழல் வேலைகளைச் செய்யாதேயுங்கோ" என்று அவரை எச்சரித்துவிட்டு தான் வந்த சைக்கிளில் திரும்பிச் சென்றுவிட்டார் கணேஷ். மறுநாள் யாழ்ப்பாணத்தில் அனைவரும் இச்சம்பவம் குறித்து பேசிக்கொண்டார்கள். "ஆளாளை புலியள் வெருட்டியிருக்கிறாங்கள்" என்று மக்கள் இச்சம்பவத்தை வரவேற்றுப் பேசத் தொடங்கினார்கள். ஆளாளசுந்தரத்தின்மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் வியப்படைந்திருந்த தமிழ் மக்களுக்கு நான்கு முக்கிய விடயங்களைப் பிரபாகரன் கூறியிருந்தார். முதலாவது, புலிகள் மீண்டும் செயலில் இறங்கிவிட்டார்கள் என்பது. இரண்டாவது, புலிகள் உங்களைப் பாதுகாப்பார்கள் என்பது. மூன்றாவது, ஊழல்களில் ஈடுபடும் அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பது. நான்காவது, தமிழீழ விடுதலைப் புலிகள் இனிமேல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் எடுபிடியல்ல என்பதே அவை நான்கும். மறுநாள், தமது கையொப்பத்துடன் துண்டுப் பிரசுரம் ஒன்றினை புலிகள் வெளியிட்டனர். சமூகத்திற்கெதிரான செயற்பாடுகள் கடுமையான குற்றங்களாக அதில் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், ஆளாளசுந்தரத்தினால் செய்யப்பட்டுவந்த சமூகத்திற்கெதிரான முறைகேடுகள் பற்றியும் விளக்கப்பட்டிருந்தன. ஆகவே, அவருக்கு எச்சரிக்கையொன்றினை விடுக்கும் முகமாக அவரது வலது காலில் தாம் துப்பாக்கியால் சுட்டதாக புலிகள் அத்துண்டுப் பிரசுரத்தில் மேலும் தெரிவித்திருந்தனர். ஆளாளாசுந்தரத்திற்கு புலிகளால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை எதிர்பார்த்த பலனைத் தந்திருந்தது. யாழ்ப்பாண பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் மொத்த நிர்வாகக் குழுவினரும் இதனைத் தொடர்ந்து தமது பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தனர். தமக்கெதிராகப் புலிகள் செயற்படமாட்டார்கள் என்று எண்ணியிருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் தலைவர்களுக்கு நடுக்கம் பிடித்துக்கொண்டது. தமது கட்சி உறுப்பினரான ஆளாளசுந்தரத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்து அமிர்தலிங்கம் அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார்.
  8. பிரபாகரனின் தாயகம் திரும்பலும் அரசியல் வெற்றிடத்தினை நிரப்பலும் பிரபாகரன் தமிழ்நாட்டிற்குச் சென்று சரியாக ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர், 1983 ஆம் ஆண்டு மாசி 18 ஆம் திகதி, காலை புலரும் முன் வல்வெட்டித்துறையில் தரையிறங்கினார். 1981 ஆம் ஆண்டு ஆனி 6 ஆம் திகதி, அதாவது யாழ் நூலகம் எரிக்கப்பட்டு ஆறு நாட்களுக்குப் பின்னர் அவர் தமிழ்நாட்டிற்குச் சென்றபோது அவர் மிகுந்த வருத்தமும், கோபமும் கொண்டிருந்தார். அவர் மீது இராணுவத்தினரும், பொலீஸாரும் கடுமையான அழுத்தத்தினைப் பிரயோகித்திருந்தனர். அவரது மறைவிடங்கள் ஒவ்வொன்றாகக் காட்டிக் கொடுக்கப்பட்டு சல்லடை போடப்பட்டன. அவரிடமிருந்த பணமும் அற்றுப்போயிருந்தது. அவரால் நம்பப்பட்ட பல நண்பர்கள் அவரை விட்டுச் சென்றிருந்தனர். தன்னையும், தனது போராட்ட அமைப்பையும் தக்கவைத்துக்கொள்ள டெலோ அமைப்புடன் சேர்ந்து, ஒரு பகுதியாக இயங்கவேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருந்தார். தமிழ்நாட்டில் அவர் தங்கியிருந்த 19 மாதங்களில் அவர் பல சிக்கல்களை எதிர்கொண்டபோதும், பாண்டி பஜார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் புலிகளியக்கத்தை மீளக் கட்டியெழுப்புவதில் வெற்றி பெற்றிருந்தார். தனது இயக்கத்தைப் பலப்படுத்தி தனித்து இயங்கும் நிலைக்கு அவர் உயர்த்தியிருந்தார். ஜெயவர்த்தன அரசின் அடக்குமுறைகள் தமிழர் தாயகத்தில் தோற்றுவித்திருந்த உணர்வெழுச்சிப் போராட்டங்கள் தனது ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்குத் தகுந்த சூழ்நிலையினை ஏற்படுத்தியிருப்பதை பிரபாகரன் உணர்ந்தார். மேலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஜெயவர்த்தனவிடம் முற்றாகச் சரணடைந்திருந்த நிலையில் மக்களால் அவர்கள் கைவிடப்படுவதன் மூலம் அரசியல் தலைமைக்கான வெற்றிடம் ஒன்றும் உருவாகிவருவதையும் அவர் உணர்ந்துகொண்டார். பேபி சுப்பிரமணியம் இவ்விரு விடயங்கள் குறித்தும் அவர் பேபி சுப்பிரமணியத்துடனும் நெடுமாறனுடனும் ஆலோசனைகளை நடத்தினார். "ஒரு ஆயுதப் போராட்டத்தினை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான சூழ்நிலையொன்று உருவாக்கப்பட்டிருக்கிறது, ஜெயவர்த்தனவுக்கே நன்றிகள்" என்று பிரபாகரன் தன்னிடம் கூறியதாக நெடுமாறன் நினைவுகூர்திருந்தார். "நாம் செய்யவேண்டியதெல்லாம் மக்கள் உருவாக்கித் தந்திருக்கும் இந்த உந்துசக்தியை மேலும் தீவிரமாக்குவதுதான். இச்சந்தர்ப்பத்தைத் தவறவிடுவோமானால், இந்த உணர்வெழுச்சி அடங்கிப் போய்விடும்" என்று பிரபாகரன் விவாதித்திருக்கிறார். சீலனின் முழங்கால் காயம் குணமடைந்ததைத் தொடர்ந்து, அவரையும் தன்னுடம் தாயகத்திற்கு அழைத்து வந்த பிரபாகரன் மக்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டச் சூழ்நிலையினை போராட்டத்தின் இன்னொரு படியான ஆயுத மோதலுக்கு முன்கொண்டுசெல்லத் தீர்மானித்தார். தனது சிறுபராயம் தொட்டு எண்ணிவந்த ஆயுத ரீதியிலான தாயக விடுதலைப் போராட்டத்தினை முழுமூச்சுடன் ஆரம்பிக்க முடிவெடுத்தார். எதிரி மீது திருப்பியடிக்க, பலமாகத் திருப்பியடிக்க அவர் முடிவெடுத்தார். ஆனால் அவருக்கு ஒரு பிரச்சினையிருந்தது. அதுதான் தமிழ்நாட்டில் அவருக்கு இன்னமும் இருந்த நீதிமன்றப் பிணை. தான் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குத் தப்பிவந்தது தெரியவருமிடத்து தனக்குப் பிணைநின்ற நெடுமாறனுக்கு சங்கடத்தையும் அசெளகரியங்களையும் அது ஏற்படுத்தும் என்று அவர் அஞ்சினார். நீதிமன்றம் அவரை பிணையில் விடுதலை செய்த நாளிலிருந்து அவர் நெடுமாறனின் மதுரை வீட்டிலேயே தங்கியிருந்தார். "நான் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பினால் உங்களுக்கு ஏதும் பிரச்சினை வருமா?" என்று நெடுமாறனிடம் வினவினார் பிரபாகரன். "என்னைப்பற்றிக் கவலைப்படவேண்டாம். உங்களுக்கும் உங்களின் போராட்டத்திற்கும் நண்மையானதைச் செய்யுங்கள்" என்று பதிலளித்தார் நெடுமாறன். பிரபாகரன் வல்வெட்டித்துறையில் வந்திறங்கிய நாள்வரை, சாவகச்சேரி பொலீஸ் நிலையத் தாக்குதலை விடுத்து பெருமளவில் அமைதியாகவிருந்த புலிகளின் படை அன்று மாலையே பொலீஸாரையும், இராணுவத்தையும் கலங்கவைக்கும் தாக்குதல் ஒன்றினை நடத்தியது. நெடுமாறனுடன் தலைவர் - 1980 களில் அன்று இரவு 8:15 மணிக்கு பருத்தித்துறை பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலீஸ் பரிசோதகர் எ.கே. ஆர். விஜேவர்த்தன சிகரெட்டுக்களை வாங்கிவர "சிறி கபே" எனும் தேநீர்ச் சாலைக்கு தனது ஜீப்பில் சென்றிருந்தார். அவரது குடும்பம் விடுமுறை நாட்களில் அவரைப் பார்க்க அங்கு வந்திருந்தது. ஆகவே, குடும்பத்தினருடன் பொழுதைக் களிக்க சில நண்பர்களையும் அன்று அவர் இரவு விருந்திற்கு அழைத்திருந்தார். அவர் சிகரெட்டுக்களை வாங்கிக்கொண்டு மீண்டும் தனது ஜீப்வண்டியில் ஏறும்போது அதுவரை அவரைத் தொடர்ந்துவந்த நான்கு புலிகள் அவரைச் சுட்டுக் கொன்றனர். தனது அதிகாரி வாகனத்தில் ஏறுவதற்கு வாகனத்தின் கதவினைத் திறந்துவிட வெளியே வந்த சாரதி வீரசிங்கவும் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இரு பொலீஸாரையும் சுட்டுக் கொன்றுவிட்டு அந்தப் பொலீஸ் வாகனத்தில் தப்பிச்சென்றது புலிகளின் அணி. 31 சிறி 5627 எனும் இலக்கமுடைய அந்தப் பொலீஸ் ஜீப் வண்டி மறுநாள் புத்தூர்ப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. விஜேவர்த்தனவின் மீதான தாக்குதலை திட்டமிட்டவர் பிரபாகரனே. இத்தாக்குதல் பற்றி மறுநாள் வெளிவந்த ஈழநாடு பத்திரிக்கை விரிவான தகவல்களை வெளியிட்டிருந்தது. மேலும் தொடர்ந்து வந்த நாட்களில் இத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள், மாத்தையாவைத் தேடிப் பிடிப்பதற்கு உருவாக்கப்பட்டிருந்த ராணுவப் புலநாய்வுத்துறையின் குழு வல்வெட்டித்துறைக்குச் சென்றமை போன்ற தகவல்களையும் அது வெளியிட்டு வந்தது. பருத்தித்துறை பொலீஸ் அதிகாரியின் மரணம் வல்வெட்டித்துறைப் பகுதியில் நிம்மதியினை ஏற்படுத்தியிருந்ததுடன், மக்களும் அதனை வரவேற்றிருந்தனர். மக்களைப் பொறுத்தவரை பொலீஸ் அதிகாரி விஜேவர்த்தன ஒரு கொடுமையான பயங்கரவாதியாகத் திகழ்ந்தார். பொதுமக்களை அச்சுருத்தவும், துன்புறுத்தவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினூடாகத் தனக்கு வழங்கப்பட்ட அளவுக்கதிகமான அதிகாரங்களை அவர் விருப்பத்துடன் பாவித்து வந்தார். ஆகவே, அவ்வாறான கொடுமையான அதிகாரி ஒருவர் களத்திலிருந்து அகற்றப்பட்டது தமிழ் மக்களைப் பொறுத்தவரை நிம்மதியளிக்கும் விடயமாகவும், புலிகளால் தமக்கு செய்யப்பட்ட உதவியாகவும் தெரிந்தது. தனது ஆயுதப் போராட்டத்திற்கு புதிய குணவியல்பினைக் கொடுக்கும் தாக்குதலாக விஜேவர்த்தனவின் தாக்குதலை பிரபாகரன் திட்டமிட்டார். "மக்களைப் பாதுகாக்கும் காவலர்கள்" என்பதே அந்த விசேடமான குணவியல்பு !
  9. தமிழர்களின் உணர்வெழுச்சிப் போராட்டங்களும் ஓரத்தில் நின்று வேடிக்கை பார்க்க நினைத்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் பாதிரியார்கள் மற்றும் நித்தியானந்தனின் கைதுகளையடுத்து யாழ்க்குடாநாட்டில் இடம்பெற்றுவந்த போராட்டங்கள், சத்யாக்கிரகங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் ஆகியவை மொத்த தமிழ் மக்களையும் அரசுக்கெதிரான போராட்டக் களத்திற்கு இழுத்துச் சென்றிருந்தன. இப்போராட்டங்கள் மக்களை உத்வேகப்படுத்தியிருந்ததுடன் அரசுக்கெதிரான போராட்ட மனோநிலைக்கும் உயரே தள்ளியிருந்தன. போராட்டங்களை அடக்குவதற்கு ஜெயவர்த்தனவின் அரசு மேற்கொண்ட குறுகிய பார்வை கொண்ட ராணுவ பொலீஸ் அடக்குமுறைகள் மக்களை மேலும் மேலும் போராட்டங்கள் நோக்கி இழுத்துவந்ததுடன், ஓரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியையும் வேண்டா வெறுப்பாக போராட்டத்தில் இறங்க வைத்திருந்தது. போராட்டங்களின் தொடர்ச்சியாக வடக்குக் கிழக்கில் ஒருங்கிணைந்த வகையில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கார்த்திகை 30 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தாம் மக்களால் புறக்கணிக்கப்பட்டு விடக் கூடும் என்கிற ஒரே காரணத்திற்காக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் கலந்துகொள்ளத் தீர்மானித்தது. முன்னணியின் இந்தச் சந்தர்ப்பவாதத்தினைச் சுட்டிக் காட்டியிருந்த சட்டர்டே ரிவியூ பத்திரிக்கை அவர்களின் பங்களிப்பை, "மக்கள் போராட்டத்திற்கு கும்பலோடு கும்பலாக கோவிந்தா பாட வந்தவர்கள்" என்று கேலி செய்திருந்தது. தமிழர் தாயகத்தில் புதிதாக எழுந்துவந்த தமிழ் மக்களின் எழுச்சியை ஜெயவர்த்தனவும் அவரது பாதுகாப்புத் தரப்புக்களும் கணிக்கத் தவறியிருந்தன . புனித அந்தோணியார் ஆலயம், இரம்பைக் குளம் - வவுனியா மக்கள் எழுச்சிப் போராட்டங்களுக்குப் பழிவாங்கலாக அரசு மேற்கொண்டுவந்த அடக்குமுறைகள் மக்கள் போராட்டங்களுக்கு உத்வேகத்தை அளித்ததோடு மக்களின் பங்களிப்பினையும் அதிகரிக்கச் செய்தன. மார்கழி 15 ஆம் திகதி வவுனியா இரம்பைக்குளத்தில் அமைந்திருந்த புனித அந்தோணியார் ஆலயத்தினுள் நுழைந்த கலகம் அடக்கும் பொலீஸார் அப்பாவிகள் மீது தடிகளாலும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளாலும் தாக்குதல் நடத்தினர். மார்கழி 18 ஆம் திகதி வெளிவந்த சட்டர்டே ரிவியூ பத்திரிக்கை வவுனியா இரம்பைக் குளத்தில் தமிழ்மக்கள் மீது பொலீஸார் நடத்திய தாக்குதலை பின்வருமாறு விவரித்திருந்தது. "மார்கழி 15 ஆம் திகதி ஆலய முன்றலில் தமிழர், முஸ்லீம்கள், பெளத்தர்கள் என்று வேறுபாடின்றிச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்பிள்ளைகள், பெண்கள், சிறுவர்கள், ஆண்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். பாடசாலை மாணவிகளால் ஒழுங்குசெய்யப்பட்ட மெளன நடைப்பயணப் போராட்டத்தில் பங்கேற்றிருந்த மாணவிகள் தமது வாய்களை மூடி துணைகளைக் கட்டி, உடைகளில் கறுப்புத் துணித்துண்டுகளை அணிந்துகொண்டு வீதியால் வந்துகொண்டிருந்தனர். மாணவிகள் வீதிக்கு வந்தபோது அவர்கள் மீது பாய்ந்த பொலீஸ் காடையர்கள் அவர்களின் தலை முடியினைப் பிடித்து இழுத்துக் கீழே வீழ்த்தியதுடன் அவர்கள் மீது சரமாரியாக கால்களால் உதைக்கத் தொடங்கியதுடன் தடிகளால் தாக்குதலும் நடத்தினர். தமது மெளன நடைப்பயணப் போராட்டத்தை பொலீஸார் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து வீதியிலேயே அமர்ந்துவிட்ட மாணவிகள் மீது பொலீஸார் லத்திகளால் கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். மேலும், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடமான அந்தோணியார் ஆலயத்திற்குச் சென்ற பொலீஸார், அங்கு பொலீஸாரின் தாக்குதலில் இருந்து தம்மைக் காத்துக்கொள்ள தஞ்சமடைந்திருந்த நூற்றுக்கணக்கான பெண்கள், சிறுவர்கள் மீது குண்டாந்தடிப் பிரயோகம் மேற்கொண்டனர்" என்று எழுதியது. பொலீஸாரின் அடக்குமுறை மூலம் தமிழ் மக்களின் போராட்டங்களை அடக்கிவிடலாம் என்று அரசு எண்ணியது. ஆனால், அரசு எதிர்பார்த்ததற்கு எதிர்மாறாகவே சம்பவங்கள் நடந்தேறின. போராட்டம் மக்கள்மயப்படுத்தப்பட்டதோடு மக்களின் உணர்வுகள் கட்டுக்கடங்காமல்ப் போனதுடன் மக்களை ஒன்றிணையவும் உதவியது. வயது, பால், சாதி, சமூக அந்தஸ்த்து என்று எந்தவித வேறுபாடும் இன்றி மக்கள் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததுடன், தம்மை அடக்கி ஒடுக்குவதற்கு அரசால் பாவிக்கப்பட்டு வந்த கொடுமையான பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கெதிரான தமது கடுமையான எதிர்ப்பினைத் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வந்தனர். போராட்டங்களின் முன்னால் நின்று செயற்பட்ட பல்கலைக் கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் தமது மொத்த எதிர்ப்பினையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கெதிராகக் குவித்து ஆக்ரோஷமாகப் போராடி வந்தனர். 1983 ஆம் ஆண்டு தை மாதம் 26 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை யாழ்ப்பாணத்தில் நடத்தினர். யாழ்ப்பாணத்தின் தெருக்களில் பேரணியாகச் சென்ற மாணவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், கொடுமையான இச்சட்டத்தைப் பாவித்து அரசு கைதுசெய்து தடுத்து வைத்திருந்த மாணவர்த் தலைவர்கள், மதத் தலைவர்கள், சமூக சேவகர்கள் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றும் கோஷமிட்டபடி சென்றனர். இப்பேரணியின் பின்னர் நான்கு நாள் சத்தியாக்கிரக நிக்ழவினையும் அவர்கள் மாசி 1ம் ஆம் திகதியிலிருந்து மேற்கொண்டனர். சத்தியாக்கிரகப் போராட்டத்தின் இறுதிநாளான மாசி 4 அன்று வடக்குக் கிழக்கு மாகாணங்களின் அரச சேவைகள் அனைத்தும் முற்றான ஸ்த்தம்பித நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. இச்சத்தியாக்கிரக போராட்டத்தின் இறுதிநாளான மாசி 4 என்பது இலங்கையின் சுதந்திர நாள் என்பது குறிப்பிடத் தக்கது. தலைவருடன் சீலன் மிகுந்த அரசியல் அவதானியாகத் திகழ்ந்த பிரபாகரன், வடக்குக் கிழக்கில் நடைபெற்று வந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்களையும் அவற்றுக்கெதிரான அரசின் அடக்குமுறைகளையும் நன்கு கூர்ந்து அவதானித்து வந்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரிடமிருந்து தமிழ் மக்களைத் தலைமை தாங்கும் பொறுப்பினை தான் எடுத்துக்கொள்ளும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஜெயவர்த்தனவின் அரசே உருவாக்கிவருவதை அவர் நன்கு உணர்ந்துகொண்டார். மேலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை மக்கள் புறக்கணிக்கும் நிலை உருவாகும்போது அதனால் ஏற்படும் அரசியல் வெற்றிடத்தை உமா மகேஸ்வரன் அபகரித்துக்கொள்வதைத் தடுப்பதும் அவருக்குத் தேவையாக இருந்தது. ஆகவே, ஏற்பட்டுவந்த அரசியல் மாற்றங்கள் குறித்து தனது நெருங்கிய சகாக்களான பேபி சுப்பிரமணியத்துடனும், சீலனுடனும் பிரபாகரன் தீவிர ஆலோசனைகளை நடத்தினார். சீலன் தனது முழங்கால் காயத்திலிருந்து தேறிவந்துகொண்டிருந்தார். மேலும், தாயகத்தில் ஏற்பட்டுவந்த அரசியல்ச் சூழ்நிலைகள் குறித்து தனது வழிகாட்டியான நெடுமாறனுடனும் பிரபாகரன் பேசினார். நெடுமாறனின் ஆசியோடும், சீலனின் துணையுடனும் 1983 ஆம் ஆண்டு மாசி 18 ஆம் திகதி அதிகாலை தமிழ்நாட்டிலிருந்து நாடு திரும்பினார் பிரபாகரன். அவர் நாடுதிரும்பிய முதல் நாள் மாலையே அவரின் வருகையினை அறிவிப்பதாக பருத்தித்துறை பொலீஸ் நிலையத்தின் அதிகாரியான இ.கே.ஆர். விஜேவர்த்தன புலிகளால் கொல்லப்பட்டார்.
  10. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் தன்னெழுச்சிப் போராட்டங்கள் பாதிரியார் டொனால் கனகரட்ணத்துடன் அவரது தாயாரும் சகோதரிகளும் கார்த்திகை 14 ஆம் நாள் இடம்பெற்ற கத்தோலிக்கப் பாதிரியார் சிங்கராயரின் கைது, மறுநாள் 15 ஆம் திகதி இடம்பெற்ற பாதிரியார் சின்னராசாவின் கைது, கார்த்திகை 18 ஆம் நாள் இடம்பெற்ற மெதொடிஸ்த்த திருச்சபையின் மதகுரு ஜயதிலகராஜாவின் கைது, மார்கழி 15 ஆம் திகதி இடம்பெற்ற அங்கிலிக்கன் திருச்சபையின் பாதிரியார் டொனால்ட் கனகரட்ணத்தின் கைது மற்றும் கார்த்திகை 20 ஆம் திகதி இடம்பெற்ற நித்தியானந்தன் தம்பதிகளின் கைது ஆகியன தமிழ் மக்களிடையே கொந்தளிப்பான மனோநிலையினை உருவாக்கின. உணர்வெழுச்சியால் ஆட்கொள்ளப்பட்ட மக்கள் கூட்டத்தின் ஆர்ப்பாட்டங்களாக இந்த உணர்ச்சி மாறியது. தமிழர் விடுதலைப் போராட்டத்தில் இக்களம் தனித்தன்மையானதும், தன்னெழுச்சியான நிகழ்வாகவும் கருதப்படுகிறது. ஆயிரக்கணக்கான பாதிரியார்கள், கன்னியாஸ்த்திரிகள், சமயப் பணியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட மக்கள் கூட்டத்தினர் தேவாலயங்களினுள்ளும், அவற்றின் முன்னாலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அரச நிர்வாக அலுவலகங்களின் முன்னால் மறியல்ப் போராட்டங்கள், சத்தியாக்கிரகப் போராட்டங்கள் ஆகியவற்றிலும் அவர்கள் ஈடுபலாயினர். "முறிந்த பனை" ஆவணம் இந்தப் போராட்டங்கள் பற்றி விரிவான தகவல்களை வழங்குகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஆங்கிலப் வாரப் பத்திரிக்கையான சட்டர்டே ரிவியூ இனை மேற்கோள் காட்டி முறிந்த பனை இந்த போராட்டங்கள் குறித்த பதிவினை பேசுகிறது. கொழும்பில் ராணுவ அறிக்கைகளை மட்டுமே தனது செய்தியாக வெளியிட்டுவந்த லேக் ஹவுஸ் பத்திரிக்கைகளுக்கு யாழ்ப்பாணத்தில் எழுந்து வந்த மக்களின் உணர்வலைகள் குறித்து அறிவேதும் இருக்கவில்லை. அவர்களின் கவலையெல்லாம் சிங்களவர்களின் நலன்களைப் பற்றி பேசுவது மட்டும்தான். இதனையே அவர்களின் சிறிலங்காவின் நலன்கள் என்கிற போர்வையில் செய்துவந்தார்கள். 1982 ஆம் ஆண்டு கார்த்திகை 20 ஆம் திகதி வெளிவந்த சட்டர்டே ரிவியூ தனது ஆசிரியர் தலையங்கத்தினை, "பேனாவையும் கத்தியையும் கொண்டு நடத்தும் ஊடக சிறுமையினை நிறுத்து" என்று என்று விழித்திருந்தது. அரச ஆதரவுடன் தமிழ் மக்களுக்கெதிரான வன்மப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டிருந்த கொழும்புப் பத்திரிக்கைகளின் இனவாத நிலைப்பாட்டினை இக்கட்டுரை கடுமையாகக் கண்டித்திருந்தது. மதகுருக்களைக் கைதுசெய்ய அரச உயர்பீடம் எடுத்த தீர்மானங்கள் அனைத்துமே அவர்கள் அனைவரையும் "பயங்கரவாதிகளாகக்" காட்டுவதன் மூலம் கொழும்புப் பத்திரிக்கைகளால் நியாயப்படுத்தப்பட்டு வந்தது. மதகுருக்களின் கைதுகள் குறித்துச் செய்தி வெளியிட்ட கொழும்புப் பத்திரிக்கைகள், "பயங்கரவாத மதகுருக்கள் கைது" என்று தலைப்பிட்டே செய்தி வெளியிட்டன. சட்ட அதிகாரத்தினையும் நீதித்துறையினை ஒருங்கே தமது கைகளுக்குள் எடுத்துக்கொண்ட கொழும்பின அரச தனியார் இனவாதப் பத்திரிக்கைகள் கைதுசெய்யப்பட்ட அனைவரும் பயங்கரவாதிகள் தான் என்று தம் பங்கிற்கு தீர்ப்பிட்டிருந்தன. பாதிரியார் கனகரட்ணம் சில நாட்களுக்குப் பின்னர் விடுதலையான செய்தியை லேக் ஹவுஸின் சிங்களப் பத்திரிக்கைகள் முற்றாக இருட்டடிப்புச் செய்ய, ஆங்கிலப் பத்திரிக்கையான டெயிலிநியூஸும், தமிழ்ப் பத்திரிக்கையான தினகரனும் அச்செய்தியை வேண்டுமென்றே பத்திரிக்கையின் உட்புறத்தில் சிறு பெட்டிச் செய்தியாக வெளியிட்டு உண்மை வெளிவருவதைத் தடுத்திருந்தன. பிலிமத்தலாவை பாதிரியார் பயிற்சிக் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றி வந்த கனகரட்ணம் அடிகளார் 1977 ஆம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அரச ஆதரவிலான திட்டமிட்ட வன்முறைகளினைக் கண்டிக்கும் நோக்கில் 1978 ஆம் ஆண்டு சுதந்திர நாளன்று தனது கல்லூரியில் சிங்கள தேசத்தின் கொடியினை ஏற்றுவதை நிராகரித்திருந்தார். இதனையடுத்து சில சிங்கள மாணவர்கள் இதுகுறித்து முறைப்பாடு செய்த நிலையில் கனகரட்ணம் தனது பதவியைத் துரந்ததுடன், வவுனியாவின் எல்லைப்புறக் கிராமமொன்றில் தமிழ் சிங்கள இனங்களிடையே அமைதியை உருவாக்கும் நோக்கில் "ஒற்றுமை இல்லம்" எனும் அமைப்பினை ஆரம்பித்து நடத்திவந்தார். ஆனால், அவர் தமிழ்ப் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறார் எனும் பொய்யான குற்றச்சாட்டில் அரசாங்கத்தால் கைதுசெய்யப்பட்டார். அப்பகுதியில் இருந்த சிங்களவர்கள் சிலருக்கும் பாதிரியாருக்கும் இடையே இருந்த நெருங்கிய நட்பினால் அவர் குற்றமற்றவர் என்பதை உணர்ந்துகொண்ட அரசாங்கம் சில நாட்களின் பின்னர் அவரை விடுதலை செய்திருந்தது.
  11. ஏழு தேநீர் போடவோ என்கிறா சித்தி. ஓம் கொண்டுவாங்கோ என்றுவிட்டு சாய்மனைக் கதிரையில் இருந்து எழுகிறேன். உள்ளே சென்று வீட்டைப் பார்க்க மனதில் இது இப்ப என் வீடு இல்லை என்னும் எண்ணம் தோன்றி அலைக்கழிக்கிறது. பத்து ஆண்டுகளின் முன்னர் என் கணவரின் சகோதரர் ஒருபுறம், என் அம்மாவின் தங்கை பிள்ளைகள் ஒருபுறம் தமக்குத் தான் வீடு என்று கதைத்துக்கொண்டு திரிந்ததாலும் கணவரின் தொடர் கரைச்சல் காரணமாக அந்த வீட்டை என் தங்கைக்குக் கொடுத்து இரண்டு மாதங்கள் சரியான தவிப்பாகிவிட திரும்ப எனக்குத் தா என்று கேட்டதற்கு நான் விக்கமாட்டான். கேட்காதைங்கோ என்றுவிட்டாள். வேறு காணிகள் வாங்குவதற்கு நான் ஆசைப்பட்டபோதெல்லாம் அங்க ஆர் போய் இருக்கப்போறது சும்மா இரு. என்ர காணி இருக்குத்தானே. வேணுமென்டால் அதில போய் வீடுகட்டி இருக்கலாம் என்னும் கணவரின் அதட்டலாலும் காணிகள் வாங்கும் ஆசையே போய்விட, இப்ப வீட்டுக்குள் நின்று பார்க்கும்போதுதான் அவசரப்பட்டு விற்றுவிட்டேன் என்று மனதில் வேதனை எழுகிறது. தேநீர் குடித்தபின் தங்கை வீட்டுக்குச் செல்கிறோம். வெளிநாடு தோற்றுப்போகுமளவு பார்த்துப்பார்த்து வீட்டைத் திருத்தி வைத்துள்ளனர். 2- 2.20 நீள அகலத்துடன் தேக்குக் கட்டிலும் மெத்தையும் யன்னல் திரைச் சேலைகளும் ஏசியும் என பார்க்கவே ஆசையாக இருக்கிறது. அறையுடனேயே ரொய்லெட் வசதியுடன் கணவரும் வீட்டைச் சுற்றிப் பார்க்கிறார். மகளுக்கும் பிடித்துவிட ஒரு இரண்டு மூன்று நாட்கள் தூங்குவதும் கதைப்பதும் உண்பதுமாக காலம் களிக்கிறது. வீட்டின் முன்பகுதி முழுவதும் விதவிதமாக பூங்கன்றுகள் சாடிகளிலும் நிலங்களிலும் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அடுத்த வாரம் அங்குள்ள கருணாகரப் பிள்ளையார் கோவில் தேர் என்பதனால் எனக்கும் மகளுக்கும் சேலை வாங்குவது சட்டை தைக்கக் கொடுப்பது என்று நேரம் ஓடிப்போக மனிசன் வேட்டி கட்டிக்கொண்டு மேலே ஒன்றும் போடாமல் கோயிலுக்குத் தயாராகி வருகிறார். அப்பா சேர்ட்டை மறந்திட்டியள் என்று சிரிக்கிறாள். கோயிலுக்கு உள்ளே சேர்ட் போடக்கூடாது என்று மச்சாள் சொல்ல எதுக்கும் சேர்ட்டைப் போட்டுக்கொண்டு வாங்கோ. உள்ள போகும்போது கழற்றி இடுப்பில் கட்டிக்கொண்டு போகலாம் என்கிறேன். கோயிலில் முன்பு போல் பெரிதாகக் கூட்டம் இல்லை. இணுவிலுக்கும் உரும்பராய்க்கும் நடுவே இருப்பதால் இரு ஊரவரும்முன்னர் நிறையவே வருவார்கள். இம்முறை சிறிய குழந்தைகளையும் இளம் பெண்களையோ ஆண்களையோ அல்லது கொஞ்சம் வயது முதிர்ந்தவர்களையோ அங்கு காணமுடியவில்லை. எங்கள் வயதை ஒத்தவர்கள் தான் அதிகம் காணப்பட்டனர். விசாரித்தபோது பிள்ளைகளுக்குப் பள்ளி. பெரியவர்களும் யூனி, வேலை. மற்றவர்கள் வரப் பஞ்சியில் வரவில்லை என்றனர். அம்மன் கோவிலுக்கு என்றால் நிறையப்பேர் லீவு போட்டுவிட்டும் வருவினம். இந்தக் கோவிலுக்குக் குறைவு என்கிறா மச்சாள். சனம் குறைவாக இருந்தது பார்க்க ஒரு மாதிரித்தான் இருந்தது. நான் சாதாரணமாகவே கோயில்களுக்குச் செல்வதில்லை. மகளுக்காகவும், சரி கன நாட்கள் தேர் பார்த்து. போவோம் என்று போனது. கடும் வெயில் வேறு. காலையில் உணவுமில்லை. தேர் மெதுவாக நகர நகர கால்களிலும் வெயிற்சூடு மட்டுமன்றி குறுணிக் கற்கள் குற்றுவதும் தாங்கவே முடியாததாகிவிட்டது. மூன்றாவது வீதிவரை பொறுமையோடு இருந்த எனக்குப் பொறுமை போய்விட தேரைக் கடந்து சென்று செருப்பை எடுக்கவும் ஏலாமல் தவிப்புடன் நிற்கிறேன். வெறுங்காலுடன் வீடும் செல்ல முடியாது. மேற்கொண்டு தேருக்குப் பின்னால் போவதில்லை என்று முடிவெடுத்து தண்ணீர்ப் பந்தல் ஓரமாக நிற்கிறேன். கணவர் தூரத்திலிருந்து பார்த்துவிட்டாற்போல் என்னருகே வருகிறார். சர்க்கரைத் தண்ணீர் அல்லது மோர் குடிக்கப் போகிறாயா என்று கேட்க சரியான விடாய் தான் ஆனாலும் வேண்டாம் என்கிறேன். மகளும் தகப்பனும் சர்க்கரைத் தண்ணீர் வாங்கிக் குடிக்கின்றனர். ஒரு வாளியில் தண்ணீர் வைத்து சில்வர் கப்புகளைக் கழுவிக் கழுவி அடுக்குகிறார்கள். என்ர செருப்பை எடுத்துக்கொண்டு வாறியளோ ? நான் போகப்போறன் என்கிறேன். நான் அப்பாவுடன் வருகிறேன் என்கிறாள் மகள். தேர் தெற்கு வீதிக்கு நகர மச்சாளிடம் திறப்பை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து ஒரு தேநீர் போட்டுக் குடித்தபின்னர் தான் மனம் அசுவாசமடைகிறது. அடுத்தநாள் கோட்டையைச் சுற்றிப் பார்க்கச் செல்வோம் என முடிவெடுத்து பேருந்தில் யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து நடந்து செல்கிறோம். என் ஒன்றுவிட்ட அண்ணா சிவகுமாரனுடன் சேர்ந்து சில விடயங்களைச் செய்ததாலும், துரையப்பா கொலைவழக்கில் கைதாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். அவரைப் பார்ப்பதற்கு அம்மா என்னையும் அழைத்துக்கொண்டே கோட்டைச் சிறைக்குச் செல்வார். அகளிக்குள் முதலைகளெல்லாம் இருக்கின்றனவோ இல்லையோ. நான் அம்மாவுடன் அதைக் கடந்து உள்ளே செல்லும்வரை முதலை பாய்ந்து வந்து இழுத்தாலும் என்ன செய்வது எனப் பயந்தபடி அம்மாவின் கையை இறுக்கிப் பிடித்தபடி செல்வேன். இப்ப எல்லாம் தரைமட்டமாகிக் கிடப்பதைப் பார்க்க மகிழ்ச்சி ஏற்பட்டாலும் எத்தனை உயிர்கள் இதற்காகக் காவு கொள்ளப்பட்டன என எண்ணும்போது வேதனையாகவுமிருந்தது. இப்போது முன்னர் போன பாதை அன்றி வேறு பாதை அமைக்கப்பட்டிருந்தது. நானும் கணவரும் இலங்கை ஐடி வைத்திருந்தபடியால் எமக்கு 100 ரூபாய்களும் மகளுக்கு 1250 ரூபாய்களும் அறவிட்டனர். எக்கச்சக்கமான சிங்கவர்கள், சிங்களப் பள்ளி மாணவிகள் என சிங்களப் பிரதேசத்தில் நிற்பதுபோன்ற எண்ணமே ஏற்பட்டது. நாம் போனது 11 மணிக்கு கடும் வெயில். ஒரு 15 நிமிடத்தில் பார்த்துவிட்டு மேலே இருந்த ஒரு மரத்தடியில் வேரில் நான் இருக்க கணவனும் மகளும் புல்லின்மேல் அமர்கின்றனர். மகள் கோட்டையைப் பற்றிக் கேள்விகள் கேட்க நானும் கணவரும் தெரிந்தவற்றைக் கூறுகிறோம். மீண்டும் வெளியில் வந்து முனியப்பர் கோவிலடியிலும் சிறிதுநேரம் இருந்துவிட்டு பக்கத்தில் இருக்கும் நூலகத்தையும் பார்ப்போம் என்று சொன்னால் அங்கும் நிறைய ஆட்கள். ஆனால் நூலகத்தில் ஏதோ வேலை நடப்பதாகக் கூறி யாரையும் உள்ளே விடவில்லை. வெளியே சென்று உணவருந்தலாம் என்று பார்த்தால் வீதிகளில் ஓட்டோவைக் காணவில்லை. யாழ் பேருந்து நிலையம்வரை சென்று அங்கிருந்து ஒரு ஓட்டோவை அமர்த்திக்கொண்டு ஒரு நல்ல கோட்டலாகக் கொண்டுபோக முடியுமா என்று கேட்க, தட்டாதெருவுக்குக் கிட்ட ஒன்று இருக்கு. அங்கு போகலாமா என்று சாரதி கேட்கிறார். சரி என அங்கு சென்றால் அதைப் பார்க்க நல்ல உணவகம் போலவே இல்லை. ஆனால் சரியான சனம். மணமும் நன்றாகவே இருக்கு. ஆக எடுப்பு எடுக்காதை சாப்பிட்டுப் பார்ப்பம். நல்லம் இல்லை என்றால் இனிமேல் வராமல் விடுவம் என்கிறார். மகளும் தகப்பனுக்கு சப்போட செய்ய நாம் ஓரிடத்தில் அமர்கிறோம். ஒரு மட்டன் பிரியாணியும் 2 சீபூட் பிரைட் ரைஸ்சும் மாம்பழ, அன்னாசி யூசும் மாறும் கோலாவும் ஓடர் செய்துவிட்டு காத்திருக்கிறோம். சுற்றிவரப் பார்த்தால் ஏ லெவல் படிக்கும் மாணவர்கள் போல. ஒரு பத்துப்பேர் ஒரு பெரிய மேசையைச் சுற்றி அமர்ந்திருக்கின்றனர். அனேகமாக பக்கத்தில் இருக்கும் ஆண்கள் கல்லூரி மாணவர்களாய்த்தான் இருக்க வேண்டும். கடைகளில் வந்து உண்ணுமளவு இப்ப மானவர்களின் நிலை மாறிவிட்டதா என்கிறேன். ஏனம்மா ஏதாவதொரு மாணவனின் பிறந்தநாளாகக் கூட இருக்கலாம் தானே என்கிறாள் மகள். என்ன வெளிநாட்டுக் காசாய் இருக்கும் என்று கணவர் கூற, அதைப் பற்றி உங்களுக்கு என்ன? நீங்களா பணம் கொடுக்கப் போகிறீர்கள் என்கிறாள். முதலில் யூசைக் கொண்டு வருவார்கள் என்று பார்த்தால் எதையும் காணவில்லை. யாரிடமும் கேட்கலாம் என்றாலும் அவர்களையும் காணவில்லை. சிறிது நேரத்தில் எல்லாம் ஒன்றாக வருகிறது. கரண்டியும் ரிசுவும் தரமுடியுமா என்று கேட்க கொண்டுவந்து தருகிறார். உணவு நினைத்ததிலும் மேலாக நன்றாகவே இருக்கிறது. டிசேர்ட் இல்லையோ என்கிரா மகள். றியோவில் போய் உண்போம் என்கிறார் மனிசன். ஐஸ்கிரீம் சாப்பிட இன்னொருநாள் தனியப் போவம். இப்ப இங்க ஏதும் இருக்கா கேட்பம் என்றுவிட்டு அதில் நின்ற வேலையாளைக் கூப்பிட்டு என்ன இருக்கு என்று கேட்க வனிலா ஐஸ் மட்டும்தான் இருக்கு என்கிறார். அதை வாங்கி ஆடிப்பாடி உண்டு விட்டு வெளியே செல்கிறோம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.