Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    19670
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46979
    Posts
  3. இணையவன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    8
    Points
    7613
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    8975
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/01/23 in all areas

  1. அண்ணா, அப்படி கோபம் வரவில்லையென்றால்த்தான் நீங்கள் கவலைப்பட வேண்டும். தலைவரின் சரித்திரத்தை எழுதுவதாலேயே பல விடயங்களை என்னால் அறியவும் உணரவும் முடிகிறது. தலைவர் ஏன் ஆயுதப் போராட்டமே சரியான வழியென்று தீர்மானித்தார் என்பதை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அன்றிருந்த நிலையினைக் காட்டிலும் தமிழினம் இன்று கையறு நிலையில் இருக்கிறது. அன்று ஆயுதப் போராட்டம் ஒன்று உருவாவதற்குக் காரணமாக இருந்தவற்றைக் காட்டிலும் பன்மடங்கு காரணங்கள் எமக்கு இன்று இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக எம்மீது திட்டமிட்ட இனக்கொலையொன்று அரங்கேற்றப்பட்டிருப்பதோடு, எமது தாயகம் முற்றான ராணுவ ஆக்கிரமிப்பில் அமிழ்ந்து கிடக்கிறது. எமக்கான வழியினை அவர் காட்டிச் சென்றிருக்கிறார், வழிதொடர்வதே எமது கடன் !
  2. தமிழர்களின் வாழ்வுபற்றியோ அல்லது அவர்கள் எம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதுபற்றியோ நான் கவலைப்படவில்லை - ‍ ஜே ஆர் ஜெயவர்த்தன‌ டேவிட் செல்போர்னினால் சர்வதேசத்தில் தெரிவிக்கப்பட்ட திருகோணமலை வன்முறைகள் தொடர்பான செய்திகளை எப்படியாவது நீர்த்துப்போகச் செய்ய ஜெயார் விரும்பினார். அதற்காக அமிர்தலிங்கம் தனக்கு ஆடி 6 ஆம் திகதி எழுதிய கடிதத்தினை பிரச்சாரப் பொருளாக்கினார் ஜெயார். ஆகவே சனடாவில் வசித்துவந்த தனது ஆலோசகரான ஜெயரட்ணத்துடன் தொலைபேசியில் உரையாடிய ஜெயார், அரச ராணுவத்தினரினுள்ளும் பொலீஸாரினுள்ளும் வேரூன்றிப் போயிருக்கும் தமிழ் மக்கள் மீதான வெறுப்புப் பற்றி அமிர்தலிங்கம் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகப் பேசினார். அரசாங்கத்திற்கும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் இடையே உயர் மட்ட பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்படுவதன் மூலம் இனங்களுக்கிடையிலான பகைமையுணர்வினைக் குறைக்கலாம் என்று அவர் கூறினார். "உங்கள் நண்பரிடம் நான் உயர் மட்டப் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதில் ஆர்வமாக உள்ளேன் என்று கூறுங்கள். இப்பேச்சுவார்த்தைகளை ஆடி 9 ஆம் திகதி நாம் ஆரம்பிக்கலாம்" என்று வில்சனூடாக அமிர்தலிங்கத்திற்குச் செய்தியனுப்பினார் ஜெயார். ஜெயரட்ணம் வில்சன் தன்னிடம் கொண்டுவந்த செய்தி குறித்து அமிர்தலிங்கம் திருப்தியடையவில்லை. அவர் வில்சனிடம் இவ்வாறு கூறினார், "முன்னர் நடந்த கூட்டங்களில் அவர் ஏற்றுக்கொண்ட விடயங்களை முதலில் செய்து முடிக்கச் சொல்லுங்கள், பின்னர் புதிய கூட்டங்கள் குறித்துப் பேசலாம்" என்று கூறினார்.பின்னர் ஜனாதிபதிக்கு அனுப்பிய இரண்டு பக்கங்கள் கொண்ட கடிதத்தில் செய்வதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏழு விடயங்கள் குறித்து எழுதியிருந்தார். மேலும் எட்டு புதிய விடயங்கள் குறித்து தான் ஜனாதிபதியுடன் பேச விரும்புவதாகவும் கூறியிருந்தார். அமிர்தலிங்கத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் வருமாறு, "நாம் கலந்துகொண்ட முன்னைய கூட்டங்களில் செய்வதாக உறுதியளித்த கீழ்வரும் விடயங்கள் குறித்து இதுவரை எதுவித நடவடிக்கைகளும் உங்கள் தரப்பிலிருந்து எடுக்கப்படமை குறித்து நான் வருத்தம் அடைகிறேன்". 1. வவுனியா தொல்பொருள் திணைக்கள வளாகத்தில் சட்டத்திற்கு முரணான வகையில் எழுப்பப்பட்டிருக்கும் புத்தர் சிலையினை அகற்றுவது தொடர்பான இணக்கப்பாடு. 2. வவுனியா மாவட்டத்தில் கொக்கச்சன்குளத்தில் புகையிலைக் கூட்டுத்தாபனத்திலன் பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் சிங்கள குடியேற்றத்தினை அகற்றுவது தொடர்பான இணக்கப்பாடு. 3.உப பொலீஸ் மா அதிபர் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் வைகாசி 31 ஆம் திகதி முதல் ஆனி 3 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் படுகொலைகளிலும், தமிழ் மக்கள் மீதான வன்முறைகளிலும் ஈடுபட்டவர்கள் என்று கண்டறியப்பட்ட பொலீஸ் அதிகாரிகள் மீது இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பிரதம நீதியரசருக்கு குற்றவாளிகள் குறித்த தகவல்கள் அனுப்பப்பட்ட போதிலும் இதுவரையில் அதுகுறித்த மேலதிக நடவடிக்கைகளை எடுக்க அரசு மறுத்து வருகிறது. 4. மாவட்ட அதிகார சபைகளுக்கூடாக அமைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்ட ஊர்லகாவல்ப் படையினை இதுவரை அரசு அமைக்க முன்வரவில்லை. 5. தமிழ் மற்றும் முஸ்லீம் பொலீஸ் அதிகாரிகளை வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு இடமாற்றம் செய்தல். வட மகாணத்திற்கு தமிழ் அதிகாரிகளை அனுப்பியதன் மூலம் அங்கு நிலைமை ஓரளவிற்கு சுமூகமாக்கப்பட்டிருந்தாலும் கூட ஏனைய தமிழ் பேசும் மாவட்டங்களில் நிலைமை மோசமடைந்து வருகிறது. மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் கடமையில் இருந்த தமிழ் பொலீஸ் அதிகாரிகளை அகற்றிவிட்டு அங்கு சிங்கள அதிகாரிகளை அரசாங்கம் அமர்த்தி வருகிறது. எம்முடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு முரணாக இந்த மாவட்டங்களில் அதிகளவு சிங்கள அதிகாரிகளை அரசாங்கம் பதவியில் அமர்த்தி வருகிறது. 6. தமிழ் பொலீஸ் அதிகாரிகளை கடமைக்குச் சேர்த்துக்கொள்வது என்கிற தீர்மானம் தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. 7. திஸ்ஸமாராமைப் பகுதிகளில் நடத்தப்பட்ட வன்முறைகளையடுத்து அகதிகளாக்கப்பட்ட தமிழர்கள் மீள்குடியேற்றப்பாடுவார்கள் என்கிற உறுதிப்பாடு இதுவரையில் செயற்படுத்தப்படவில்லை. திஸ்ஸமாராமக் குளம் மேலும், ஜெயவர்த்தனா பிரஸ்த்தாபித்த ஆடி 9 ஆம் திகதி கூட்டத்தில் தான் எட்டு விடயங்கள் குறித்து பேச விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். முதலாவதாக மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரங்களை மேம்படுத்துவது மற்றும் அவற்றினை இயங்கச் செய்வது தொடர்பான விடயம். இரண்டாவது, மகாவலி அபிவிருத்தித் தட்டத்தின் மூலம் வீடுகளையும் நிலங்களையும் தமிழ் மக்களுக்கு ஒதுக்குவது, வன்முறைகளினால் அழிக்கப்பட்ட வீடுகளை மீளக் கட்டிக் கொடுப்பது மற்றும் பலகலைக் கழக அனுமதியில் திருத்தங்களை மேற்கொள்வது. தனது பொறிக்குள் அமிர்தலிங்கம் விழாது சாதுரியமாகத் தப்பிக்கொண்டது ஜெயாருக்கு ஆத்திரத்தினை ஏற்படுத்தியிருந்தது. எந்த விடயங்களை பேச்சுவார்த்தையில் இருந்து விலக்குவது என்று அவர் நினைத்திருந்தாரோ, அதே விடயங்களை அமிர்தலிங்கம் மீண்டும் பேச்சுவார்த்தையில் விவாதிக்கக் கேட்டுக்கொண்டது அவரது சினத்தை இரட்டிப்பாக்கியிருந்தது. மேலும், ஆடி 6 ஆம் திகதி காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையிலிருந்து ஐந்து கண்ணிவெடிகளை இயக்கும் கருவிகளை புலிகள் எடுத்துச் சென்றிருந்ததும் அவரது சினத்திற்கு இன்னொரு காரணம். சீலன் தலைமையில் சீருடைகளை அணிந்து சென்ற புலிகளின் அணியொன்று அதிகாலை இரண்டரை மணிக்கு காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையின் வாயிலை அடைந்தது. தனது வாகனத்திலிருந்து கீழிறங்கிய சீலன் வாயிலில் காவலுக்கு நின்றிருந்த இராணுவ வீரரை தனக்கருகில் வருமாறு அழைத்தார். வந்திருப்பது ராணுவ அதிகாரியொருவர் என்று நினைத்த ராணுவ வீரர்கள் அவரருகில் சென்று அவருக்கு சல்யூட் செய்தனர். அவர்களுடன் சிங்களத்தில் பேசிய சீலன், "தொழிற்சாலையிலிருந்து கண்ணிவெடிகளை இயக்கும் கருவிகளை புலிப் பயங்கரவாதிகள் எடுத்துச் செல்ல திட்டமிட்டு வருவதாக எமக்குச் செய்தி வந்திருக்கிறது. மேலதிக பாதுகாப்பிற்காக நாம் வந்திருக்கிறோம். எவரையும் உள்ளே வரவிடாதீர்கள். எவராவது இங்கு வந்தால் அவர்களை இங்கேயே மறித்து வைத்துக்கொண்டு எம்மை அழையுங்கள், நாம் வந்து அவர்கள் பற்றி விசாரிக்கிறோம்" என்று கூறினார். அதன் பின்னர் வெடிக்கும் கருவிகள் சேமித்துவைக்கப்பட்டிருந்த தொழிற்சாலையின் சேமிப்புக் கிடங்கிற்கு நேரடியாக தமது வாகனத்தை புலிகள் செலுத்திச் சென்றனர். தொழிற்சாலை ஊழியர் ஒருவரூடாக தாம் பெற்றுக்கொண்டிருந்த திறப்பினைக் கொண்டு சேமிப்புக் கிடங்கினைத் திறந்தனர். அங்கிருந்த ஐந்து வெடிக்கவைக்கும் கருவிகளையும் எடுத்துக்கொண்டு, சேமிப்புக் கிடங்கினை மீளவும் பூட்டிவிட்டு அங்கிருந்து அகன்ற புலிகள், வாயிலுக்கு வரும்போது வாகனத்த்தை மெதுவாகச் செலுத்தி வாயிலில் காவலுக்கு நின்ற ராணுவ வீரர்களுக்கு நன்றி கூறிவிட்டு தப்பிச் சென்றனர். காங்கேசந்துறைத் தொழிற்சாலையிலிருந்து கண்ணிவெடிக் கருவிகள் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டமை மற்றும் யாழ்தேவி ரயில் டெலா இயக்கத்தால் எரிக்கப்பட்டமை ஆகிய விடயங்களுக்காகப் பழிவாங்கவேண்டும் என்று அரசு நினைத்தது. ஆகவே, யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை உட்பட அத்தியாவசிய சேவைகள் அனைத்தையும் அது நிறுத்தியது. தனியார் போக்குவரத்தையும் முடக்கிப் போட்டது. யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஆறு தனியார் பஸ் வண்டிகள் ஈரப்பெரிய குளத்தில் வழிமறித்து எரிக்கப்பட்டன. பருத்தித்துறையிலிருந்து கொழும்புநோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிமீது ராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் சிங்களச் சாரதி காயமடைந்தார். யாழ்ப்பாணத்தின் பிரதான போக்குவரத்துச் சாதனமான துவிச்சக்கர வண்டிகளைத் தடைசெய்யவது தொடர்பாகவும் அமைச்சரவை ஆலோசனைகளை நடத்தியது. தெற்கில் ஜெயாருக்கான ஆதரவு வளரத் தொடங்கியிருந்த காலமது. சுதந்திரக் கட்சிக்குள் பிளவொன்றினை அவரால் உருவாக்க முடிந்திருந்தது. தனது 40 வருட அரசியல் வாழ்க்கையின் நிறைவைக் கொண்டாடும் நிகழ்வில் சுதந்திரக் க‌ட்சியைச் சேர்ந்த அநுர பண்டாரநாயக்கவை அவரால் கலந்துகொள்ள வைக்க முடிந்திருந்தது. அநுரவின் இந்தச் செயலினையடுத்து சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான விஜய குமாரதுங்க மற்றும் அவரது மனைவி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோர் சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறியிருந்தனர். மிகப் பிரபலமான நடிகரும், கவர்ச்சியான அரசியல்வாதியுமான விஜய குமரதுங்கவின் வெளியேற்றத்தினையடுத்து ஏற்கனவே பலவீனமடைந்திருந்த சுதந்திரக் கட்சி மேலும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது. விஜயகுமரதுங்கவை நக்சலைட்டுக்களுக்கு ஆதரவு வழங்கினார் என்று பொய்க்குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி தண்டிக்க முயன்றபோதும் ஜெயாரினால் விஜயகுமாரதுங்க உட்பட்ட சுதந்திரக் கட்சியின் பலத்தினை சிதைக்க முடிந்திருக்கவில்லை. ஆனால், அநுரவை தனது அரசியல் நிக‌ழ்விற்கு வரவழைத்த சிறிய நடவடிக்கை மூலம் விஜயவை கட்சியிலிருந்து வெளியேறவும், சுதந்திரக் க‌ட்சியைப் பிளவுபடுத்தவும் ஜெயாரினால் முடிந்திருந்ததுடன் தெற்கில் தனது செல்வாக்கினையும் அதிகரிக்க முடிந்திருந்தது. ஆனால், தனது செல்வாக்கினை வடக்குக் கிழக்கில் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பது ஜெயாருக்கு ஆத்திரத்தினை ஏற்படுத்தியது. ஆகவே, தான் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் நடத்தப்போவதாகத் தெரிவித்திருந்த ஆடி 9 ஆம் திகதிய கூட்டத்தை இரத்துச் செய்த ஜெயார், ஆடி 12 ஆம் திகதி டெயிலி டெலிகிராப் பத்திரிகையாளர் கிரகம் வோர்ட்டிற்கு வழங்கிய செவ்வியில் தமிழருக்கும், முன்னணியினருக்கும் கடுமையான செய்தியொன்றினை வழங்கியிருந்தார். "ஒன்றில் வழிக்கு வாருங்கள் அல்லது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்பதுதான் அவரது செய்தியின் சாரம்."தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்பட எனக்கு தற்போது நேரமில்லை. அவர்களைப்பற்றி என்னால் இப்போது நினைக்க முடியாது. அவர்களது வாழ்வு பற்றியோ அல்லது எம்மைப்பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுபற்றியோ நான் கவலைப்படவில்லை. பயங்கரவாதிகள் முற்றாக அழிக்கப்படும்வரை நாம் விரும்புவது நடக்கப்போவதில்லை. ஒரு நோயை அழிக்கும்வரை அந்த நோயாளியை எப்படிக் குணப்படுத்தமுடியாதோ அதுபோலத்தான் இதுவும்" என்று ஜெயார் தெரிவித்தார். மேலும் முன்னணியினரின் வாயை அடக்க ஒரு விடயத்தைக் கூறினார் ஜெயார், "இதுவரை காலமும் பயங்கரவாதிகளின் சார்பாக முன்னணியினர் பேசிவந்தனர், ஆனால் அது இனிமேல் நடக்கப்போவதில்லை". விஜய குமாரதுங்க, மாலினி பொன்சேக்கா, லக்கி டயஸ் மற்றும் ரஞ்சித் குமார‌ அரசியல் யாப்பில் ஆறாம் சட்டத் திருத்தத்தை ஜெயார் முன்வைத்ததும் அந்தச் சந்தர்ப்பத்தில்த்தான். முன்னணியினருடனான உயர் மட்டக் கூட்டத்தை இரத்துச் செய்திருந்த ஜெயார், உடனடியாக அமைச்சரவையின் உள்க்கூட்டத்தினைக் கூட்டி காமிணி திசாநாயக்க மற்றும் லலித் அதுலத் முதலி ஆகியோருடன் முன்னணியினரை மெளனிக்கவைக்கும் வழிமுறைகள் குறித்து ஆராய்ந்தார். ஜெயாருடன் நெருக்கத்தினை ஏற்படுத்த நினைத்திருந்த லலித் அதுலத் முதலி இச்சந்தர்ப்பத்தினைப் பாவித்து பிரிவினைவாதத்தினை ஆதரித்து எவரும் பிரச்சாரம் செய்வதனைத் தடுக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்யவேண்டும் என்கிற ஆலோசனையினை ஜெயாரிடம் முன்வைத்தார்.
  3. ஓம், இப்படித் தான் நடந்திருக்கிறது. அது நான், எங்காவது உடையாமல் சிக்கிக் கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகங்கள் இருந்த போது எழுதியது.
  4. Variety of images · Rejoindre Reena Mayekar · · தெனாலி ராமன் இரவில்படுக்க போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்துருப்பதை பார்த்துவிடுகிறான்... திருடன் என்று கத்தினால் நிச்சயம் மற்றவர்கள் பிடிப்பதற்குள் ஒடிவிடுவான்... தனிப்பட்ட முறையில் தெனாலிராமனால் முடியாது... மனைவியை கூப்பிட்டு வாய்கொப்பளிக்க தண்ணீர் கேட்கிறான்.. சொம்பு சொம்பாக வந்து கொடுக்கிறாள். புதரில் மறைந்து இருக்கும் திருடன் மீது கொப்பளிக்கிறான்.. ''என்னது..எவ்வளவு தண்ணீர் வந்து கொடுப்பது நிறுத்தமாட்டியா.''.கத்துகிறாள் மனைவி. ''என்னது எதிர்த்தா பேசுகிறாய்.''அவள் மேல் துப்புகிறான் ''என்னது கேட்பதுற்க்கு ஆளில்லையா..''அலற துவங்குகிறாள் மனைவி.. தெனாலி ராமன் வீட்டீல் என்ன பிரச்சனை என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வருகிறார்கள்.. ''என்ன தெனாலிராமா இது '' கேட்கிறார்க்ள.. ''பாருங்கள்..எவ்வளவு நேரமாக இந்த ஆளின்மீது துப்புகிறேன்..ஒன்றுமே சொல்லவில்லை..ஒரு தடவை துப்பியதும் ஊரை கூட்டி விட்டாள் ''எனகிறான்தெனாலிராமன்... திருடன் பிடிபடுகிறான்.... சமயோசிதத்தின் அவசியத்தை உணர்த்துகிறது இந்த கதை.... திருடன் பிடிபட்டது இருக்கட்டும் ... அவன் போனதுக்கு அப்புறம் தெனாலிராமன் அலறத் துவுங்குகிறான் யாரும் கண்டுக்கல.... எனவே சமயோசித புத்தி சம்மசாரத்திடம் செல்லாது என்று காலங் காலமாய் உணர்த்துகிறது இந்தக் கதை......... இதில் யார் தென்னாலிராமனின் மனைவி என்று கேட்கக் கூடாது........! 😂
  5. பெளத்த துறவிகளின் கைகளில் தவழும் தானியங்கித் துப்பாக்கிகள் ‍ இங்கிலாந்துச் செய்தியாளர் டேவிட் செல்போர்ன் எனும் இங்கிலாந்துச் செய்தியாளர் மஞ்செஸ்டர் கார்டியன் எனும் பத்திரிகைக்கும் ஏனைய வேறு பத்திரிகைகளுக்கும் செய்தியாளராகப் பணிபுரிந்து வந்தவர். லலித் அதுலத் முதலியுடன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர். 1982 ஆம் ஆண்டு அவர் இலங்கைக்கு பயணம் செய்தபோது ஜெயவர்த்தனவுக்கும், காமிணி திஸாநாயக்கவுக்கும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். ஒருநாள் பொதுக்கூட்டம் ஒன்றிற்காகச் சென்றுகொண்டிருந்த ஜெயவர்த்தன, காரில் தன்னுடன் அந்தச் செய்தியாளரையும் அழைத்துப் போனார். செய்தியாளர்களை தன்பக்கம் இழுத்துக்கொள்வதற்கு ஜெயார் பாவித்த வழிமுறைகளில் இதுவும் ஒன்று. காரில் பயணித்துக்கொண்டிருந்த ஜெயாருக்கும் டேவிட் செல்போர்னுக்கும் இடையிலான சம்பாஷணை தமிழர்களின் பிரச்சினை குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் தடம் மாறியது. தனது அறிக்கையில் லலித் அதுலத் முதலி கூறியவற்றை செல்போர்ன் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார். "நாங்கள் சிலரின் தலைகளை நொறுக்கப் போகிறோம்" என்பதுதான் லலித் அதுலத் முதலி செபோர்னிடம் கூறிய வார்த்தை. ஆனால் பின்னாட்களில் தான் அப்படிச் சொல்லவில்லை என்பதனை மறுத்திருந்த லலித் அதுலத் முதலி, செல்போர்னை தனது எதிரியாகவும் பார்க்கத் தலைப்பட்டிருந்தார். 1983 ஆம் ஆண்டு செல்போர்ன் மீண்டும் இலங்கைக்கு வந்திருந்தபோது உளவாளிகள் அவரைப் பின் தொடர்ந்திருந்தார்கள் என்று அவர் குறிப்பிடுகிறார். தேர்தல் கடமையில் இருந்த ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பழிவாங்கலாக இராணுவம் வெறியாட்டம் ஆடிய கந்தர்மடம் பகுதிக்கு செல்போர்ன் சென்றிருந்தார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களிடம் செல்போர்ன் பேசியபோது, கந்தர்மடத்திற்கு வந்திறங்கிய இராணுவத்தினர் தமது அதிகாரி அங்கு வரும்வரையில் காத்திருந்ததாகவும், அவர் வந்து உத்தரவு பிறப்பித்த பின்னரே தாக்குதலை ஆரம்பித்ததாகவும் அவரிடம் கூறியிருக்கின்றனர். செல்போர்ன் அமிர்தலிங்கத்தையும் செவ்வி கண்டிருந்தார். அமிர்தலிங்கம் அவருடன் பேசும்போது "புலிகளின் செயற்பாடுகளை தமிழ் மக்கள் ஆதரிப்பதாகவும், அதனாலேயே அவர்களை பாதுகாப்பதாகவும்" கூறியிருக்கின்றார். மேலும், "தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் முன்னணியில் திக‌ழ்பவர்கள் புலிகள் தான்" என்றும் அமிர் செல்போர்னிடம் தெரிவித்திருக்கிறார். பின்னர், செல்போர்ன் பிரதம நீதியரசரர் நெவில் சமரக்கோனையும் செவ்வி காண ஒழுங்கு செய்திருந்தார். . ஆனி 11 ஆம் திகதி உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ரத்வத்தை, பேர்சி சொலிம் தோமே, சொய்சா ஆகியவர்களுக்கெதிராக ஜெயார் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டதையடுத்து நீதியரசர் ஜெயாருடன் முரண்பட்டிருந்த வேளை அது. கம்யூனிசக் கட்சியின் உறுப்பினரான விவியேன் குணவர்த்தண மீது கொள்ளுப்பிட்டிய பொலீஸார் நடத்திய தாக்குதலைக் கண்டித்து அவர் தொடர்ந்திருந்த வழக்கில் நீதி வழங்கியவர்களே இந்த மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் ஆகும். அதற்குப் பழிவாங்கலாகவே அவர்களுக்கெதிராக ஆர்ப்பாட்டக்காரர்களை ஜெயார் தூண்டிவிட்டிருந்தார். செல்போர்னுடனான செவ்வியின் போது ஜெயார் குறித்து கடுமையான விமர்சனங்களை பிரதம நீதியரசர் முன்வைக்கலாம் என்று அஞ்சிய அரசு, ஆனி 25 ஆம் நாள் இரவு, செல்போர்னைக் கைது செய்து நாடு கடத்தியிருந்தது. தம்புள்ளை குகை விகாரை நன்கு அறியப்பட்ட செய்தியாளரைக் கைது செய்து நாடு கடத்தியமை இலங்கை அரசுக்கு சர்வதேசத்தில் அபகீர்த்தியை ஏற்படுத்தியிருந்தது. மஞ்செஸ்ட்டர் கார்டியன் பத்திரிக்கையில் செல்போர்ன் எழுதிய "வன்முறைகளை தடுக்கத் தவறிய இலங்கை ராணுவம்" எனும் தலைப்பிலான செய்தி அதிகம் பகிரப்பட்டதோடு வேறு பல செய்தித்தாள்களிலும் மேற்கோள் காட்டப்பட்டு வெளிவந்திருந்தது. ஆடி 6 ஆம் திகதி வெளிவந்த இச்செய்தியை இந்தியாவின் முக்கிய பத்திரிக்கைகளும் மீள் பிரசுரித்திருந்தன. தான் எழுதிய செய்தியாக்கத்தில் செல்போர்ன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார், "காவி உடை தரித்த பெளத்த பிக்குகளின் கைகளில் இன்று தானியங்கித் துப்பாக்கிகள் பளபளக்கின்றன". மேலும், இலங்கை அரசாங்கத்தின் வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் புரட்டாதி மாதத்தில் சத்தியாக்கிரக நிகழ்வொன்றினை நடத்துவதற்கும் உத்தேசித்திருக்கிறார்கள் என்று அவர் எழுதியிருந்தார்.
  6. தமிழர்கள் மீதான வன்முறைகளில் விருப்பத்துடன் பங்கேற்ற சிங்கள் குடியேற்றவாசிகள் தான் அனுப்பிய தந்தியைத் தொடர்ந்து ஆடி 5 ஆம் திகதி கடிதம் ஒன்றினையும் அமிர்தலிங்கம் ஜெயாருக்கு அனுப்பியிருந்தார். வன்முறைகளின் அளவு குறைந்திருந்தபோதும், பதட்ட நிலை அங்கு தொடர்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார். " கடந்த இரவு கூட தமிழரான சுந்தரன் சிங்களக் காடையர்களால் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்" என்று கூறியதோடு தமிழ் மக்கள் மிகுந்த அச்சத்தின் மத்தியிலேயே வாழ்ந்துவருவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இக்கடிதத்தில் இராணுவத்தினரின் இனக்குரோத மனோநிலையினை வெளிப்படுத்தும் சம்பவங்கள் பற்றியும் அவர் குறிப்பிடத் தவரவில்லை. "திருகோணமலையில் நடைபெற்ற வன்முறைகளின்போது ராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் கவனத்திற் கொள்ளத் தக்கது. அபயபுர பகுதியில் இரண்டு தமிழர்களை வெட்டிக் கொன்றுவிட்டு, இன்னும் பலரை வாட்களால் வெட்டிக் காயப்படுத்திய சிங்களக் காடையர்கள் கூட்டத்தின்மீது தமிழ் கடற்படை அதிகாரியொருவர் நடவடிக்கை எடுத்தவேளை அவர்மீது மிகக்கடுமையான தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார்கள் அவருடன் கூடவே அப்பகுதியில் கடமைக்கு நின்ற‌ சிங்கள கடற்படை வீரர்கள். அரச படைகளுக்குள் இனவாதம் எவ்வளவு ஆளமாக ஊடுருவியிருக்கிறது என்பதற்கு இந்த ஒரு நிகழ்வு சிறந்த எடுத்துக் காட்டாகும்" என்று அமிர் கூறியிருந்தார். "பொலீஸாரும், ராணுவத்தினரும், சாதாரண சிங்களப் பொதுமக்களும் இனவாதம் தலைக்கேறிய நிலையில் திருகோணமலையில் தமிழர்கள் மீது தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்கள் மீதான வன்முறையென்பது வைரஸ் கிருமி போல சிங்களவர்களிடையே பரவி வருவதுடன், இந்த அபாயகரமான வைரஸின் தோற்றிடம் சிங்கள அரசியல்வாதிகள் தான் என்பதில் எனக்குச் சந்தேகம் எதுவும் இல்லை"என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இனவாதத்திற்கும் பாஸிஸத்திற்கும் எதிரான அமைப்பின் பிரதிநிதியான நான்ஸி மரே திருகோணமலையில் நடைபெற்ற தமிழர் மீதான சிங்களவர்களின் வன்முறைகள் குறித்து தான் எழுதிய "இனவாதம் கொண்ட சர்வாதிகார அரசு" எனும் புத்தகத்தின் "தமிழர்களுக்கு எதிரான அரசாங்கம்" எனும் அத்தியாயத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். "இரண்டு மாதகாலமாக நடைபெற்ற தமிழர் மீதான திட்டமிட்ட வன்முறைகளால் திருகோணமலை நகரம் பாழடைந்துபோய்க் காணப்படுகிறது. ஆயிரக்கணக்கானோரின் வீடுகள் எரிக்கப்பட்டு, ஆடி மாத இறுதியில் குறைந்தது 30 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழர்களின் சொத்துக்கள் மீதான தாக்குதலை அவதானிக்கும் எவருக்கும் அவை மிகவும் திட்டமிட்ட ரீதியில் ஒரே பாணியில் நிகழ்த்தப்பட்டிருப்பது தெரியவரும். அண்மைய வருடங்களில், மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் சிங்களவர்கள் மட்டுமே பயனடைய வேண்டும் என்கிற நோக்கத்தோடு செயற்பட்டு வரும் அரசு, தமிழரின் பிரதேசங்களான கிழக்கு மாவட்டங்களில் அதிகளவில் சிங்களவர்களைக் குடியேற்றி வருகிறது. 1983 ஆம் ஆண்டளவில் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகள் சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இக்குடியேற்றங்களுக்கு வந்துசேரும் சிங்களவர்கள் தமது குடியேற்றங்களை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் தமிழர்கள் மீதான தாக்குதல்களில் விருப்பத்துடன் பங்கேற்று வருவது தெரிகிறது. இப்பகுதியில் அமெரிக்காவின் பிரசன்னத்தை தமிழர்கள் எதிர்ப்பதனால், சிங்களவர்களிடம் அமெரிக்காவின் இருப்பென்பது அவசியமானது எனும் தோற்றப்பட்டை உருவாக்குவதிலும் அரசு முயன்று வருகிறது" என்று குறிப்பிடுகிறார்.
  7. ராணுவத்திற்கும், பொலீஸாருக்கும் தண்டனைகளில் இருந்து விலக்களிக்கும் அரசின் சட்டம் 1983 ஆம் ஆண்டு ஆனி 3 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது வடக்கில் நிலைகொண்டிருக்கும் பொலீஸாரும், ராணுவத்தினரும் தேடியழிக்கும் நடவடிக்கைகளுக்கான முழு அதிகாரத்தினையும் இனிமேல் கொண்டிருப்பார்கள். இதன் நிமித்தம் ஏற்படும் அனைத்துக் குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்தும் அவர்களுக்கு பூரண விலக்களிக்கப்படும். பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட முழு அறிக்கையின் வடிவமும் கீழே, அரச படைகளையோ பொதுமக்களையோ கொல்வது குறித்து எந்த தயக்கமும் காட்டாத ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரச படையினருக்கும் பொலீஸாருக்கும், நவடிக்கைகளின்போது ஏற்படும் குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்து முற்றான விலக்கு அளிக்கப்படும். பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும் அரச படையினர் மனிதநேயத்தையும், நீதிவிசாரணைகள் பற்றிய அச்சத்தையும் பற்றிச் சிந்திக்காது தமது கடமையில் கவனம் செலுத்துவதற்காக இந்த விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு போர்க்காலச் சூழ்நிலையென்பதனால், இச்சூழலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் ராணுவத்தினரையும் பொலீஸாரியும் பாதுகாக்கவேண்டிய தேவை எமக்கு இருக்கிறது. இந்த தண்டனை விலக்கு 1983 ஆம் ஆண்டு ஆனி 3 ஆம் திகதி கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டம் 15 A இன் மூலம் சட்டமாக்கப்பட்டது. இதன்படி ராணுவத்தினராலும், பொலீஸாரினாலும் சுட்டுக் கொல்லப்படும் எவரினதும் உடல்களை ராணுவத்தினரே எரித்துவிடவும், இக்கொலைகளில் ஈடுபட்டவர்களின் அடையாளங்களை வெளியிடுவதைத் தவிர்க்கவும், இக்கொலைகள் தொடர்பான விசாரணைகளை தடுக்கவும் இந்தச் சட்டம் அனுமதியளிக்கிறது. தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கான அரசின் அங்கீகாரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் போராளிகள் அரசிற்கொரு செய்தியினை வழங்கினர். தேர்தல்களில் பங்குபற்றக் கூடாது என்கிற புலிகளின் தடையினையும் மீறி உள்ளூராட்சித் தேர்தலில் பங்குகொள்ள முடிவெடுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் திலகரை புலிகள் சுட்டுக் கொன்றனர். யாழ்ப்பாண வைத்தியசாலை ஊழியரான திலகர் ஆனி 4 ஆம் திகதி காலை 6:15 மணியளவில் சுடப்பட்டார். ராணுவத்திற்கும் பொலீசாருக்கும் குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்து பூரண விலக்கு அளிக்கப்படுவதாக அரசு அறிவித்த 24 மணிநேரத்திற்குள் திலகர் கொல்லப்பட்டமையானது, போராளிகள் ஆயுதப் போராட்டம் மூலம் தமது இலக்கினை அடைவதில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதனையே காட்டியிருந்தது. பொதுமக்கள் உரிமைகள் அமைப்பு ஜனாதிபதி ஜெயாருக்கு அனுப்பியிருந்த தந்தியில் அரசால் கொண்டுவரப்பட்டிருக்கும் அரச படைகளுக்கான தண்டனைகளிலிருந்தான விலக்கிற்கெதிராக தனது கண்டனத்தைப் பதிவுசெய்திருந்தது. இவ்வமைப்பின் தலைவரான குருநாகல் மாவட்ட கத்தோலிக்க ஆயர் லக்ஷ்மண் விக்கிரமசிங்கவும் செயலாளர் டெஸ்மன் பெர்ணான்டோவும் இத் தந்தியில் கையொப்பமிட்டிருந்தார்கள். நீதித்துறையின் அடிப்படை உரிமைகளை அனைத்து மக்களுக்கும் சமமாகப் பாவித்து குற்றமிழைப்பவர்கள் அனைவரும் சட்டத்தின் முன்னால் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். இல்லாதுவிடில் ஜனநாயகத்தின் அடிப்படையான நீதித்துறையின் இலக்கணங்களை அரசு காற்றில் பறக்கவிட்டதாகிவிடும் என்றும் அவர்கள் எச்சரித்திருந்தார்கள். இப்புதிய சட்டம் அரச ராணுவத்தினருக்கு மட்டுமல்லாமல், அரச ஆதரவுடனான சிங்கள தீவிரவாதிகளுக்கும் அனுகூலமாக அமைந்தது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்ததையடுத்து தமிழரின் வீடுகள், கடைகள், கோயில்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்க ஆரம்பித்தன. வடக்குக் கிழக்கில், குறிப்பாக திருகோணமலையில் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டபோதும் தமிழர் மீதான கொடூரங்கள் தொடர்ச்சியாக நடந்தே வந்தன. பல குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக செய்திகள் வந்தன. இவற்றில் ஒருவர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்திருந்தனர். ஊரடங்கு நேரத்தில் ஒருங்கமைக்கப்பட்ட சிங்களப் பயங்கரவாதிகளால் தமிழர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் அகோரத்தினை தமிழ்ப் பத்திரிகைகள் வெளியிட்டு வந்தன. தமிழர் மீதான தாக்குதலில் ஈடுபட்ட சிங்களக் காடையர்களுக்குப் பாதுகாப்பு வழங்கிய அதேவேளை, தாக்குதல்களிலிருந்து தப்பியோடிக்கொண்டிருந்த தமிழர்களை. "ஊரடங்கை மீறினார்கள்" என்று சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்றது. பகல் வேளைகளில் தமிழ்க் கிராமங்களுக்குள் புகுந்த ராணுவத்தினர் அங்கிருந்த ஆண்களை விசாரணைக்கென்று வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல, இக்கிராமங்களுக்குள் இரவு வேளையில் நுழைந்த சிங்களக் காடையர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், தமிழர்களின் விலைமதிப்பற்ற பொருட்களைக் கொள்ளையடித்தபின் வீடுகளையும், உடைமகளையும் எரியூட்டினர். பல தமிழ்ப் பெண்கள் சிங்களக் காடையர்களால் கூடாகப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டனர். ஆனிமாதத்தின் பிற்பகுதியில் வடக்கிலும், திருகோணமலையிலும் சூழ்நிலை மோசமடைந்து வந்தது. யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பேரூந்து மீது ராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது சாரதி கொல்லப்பட்டதுடன் பல தமிழர்கள் படுகாயமடைந்தனர். காயப்பட்ட பயணிகளை அடித்துவிரட்டிய ராணுவத்தினர் பேரூந்திற்கு தீமூட்டினர். ஆனால் மறுநாள் செய்தித்தாள்களில் பேரூந்தினை தமிழ்ப் போராளிகளே தாக்கிவிட்டு சாரதியைக் கொன்று பேரூந்திற்கும் தீவைத்ததாக ராணுவம் கூறியிருந்தது. பாராளுமன்றத்தில் பேசிய அமிர்தலிங்கம், இத்தாக்குதலில் காயப்பட்டு உயிர்தப்பிய பயணிகளுடன் தான் பேசியதாகவும், இப்பேரூந்துமீது தாக்குதலை நடத்தி சாரதியைக் கொன்றது ராணுவத்தினரே என்றும், காயப்பட்ட பயணிகளை அடித்து விரட்டி பஸ்ஸிற்குத் தீவைத்தது ராணுவத்தினரே என்றும் கூறியிருந்தார். மேலும், கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ஆறு தமிழர்களைப் பாதுகாப்புப் படையினர் கொன்றிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். திருகோணமலையில் தமிழர்களின் நிலைமை மிகவும் பாரதூரமாக இருந்தது. இது இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் வாழ்ந்த தமிழர்களுக்கு மிகுந்த வருத்தத்தினை அளித்திருந்தது. கலாநிதி எஸ்.ஏ. தர்மலிங்கமும் கோவை மகேசனும் திருகோணமலையின் நிலவரம் குறித்து தந்தி ஒன்றினை கொழும்பில் இருந்த சில வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு அனுப்பியிருந்தனர். திருகோணமலையில் வசிக்கும் தமிழர்கள் மிகவும் பாரதூரமான நிலையொன்றிற்கு முகம் கொடுத்து வருகின்றனர். அரசு அறிவித்த ஊரடங்கு வேளையிலும் படுகொலைகள், கடையுடைப்புக்கள், வீடெரிப்புக்கள் என்று தமிழருக்கெதிரான வன்முறைகள் தங்குதடையின்றி நடந்துவருகின்றன. இனவாதம் கொண்ட இலங்கையின் பாதுகாப்புப் படைகளே இந்த நாசச் செயல்களின் பின்னால் இருக்கின்றன. தமிழர் மீது நடந்துகொண்டிருக்கும் திட்டமிட்ட இனவழிப்பினை சிநேகபூர்வமான நாடுகள் உடனடியாக தடுத்து நிறுத்த முன்வரவேண்டும் என்பதே அந்தத் தந்தி கூறிய செய்தியாகும். திருகோணமலை தமிழ் ஈழ விடுதலை முன்னணி திருகோணமலையில் நடைபெற்றுவந்த தமிழர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வண்ணம் யாழ்ப்பாணத்தில் பூரண ஹர்த்தால் ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தது. திருகோணமலையில் தமது சகோதர்கள் மீது சிங்கள அரசு , அரச ஆதரவிலான சிங்களக் காடையர் கும்பல்களும் புரிந்துவரும் கொடூரங்கள் குறித்த செய்திகளை அறிந்தபோது மனதிற்குள் பொங்கிக்கொண்டிருந்த யாழ்ப்பாணத் தமிழர்கள் தமது உணர்வுகளை வெளியிட இந்த ஹர்த்தால் வடிகால் அமைத்துக் கொடுத்தது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஹர்த்தால் பூரண வெற்றி அடைந்திருந்தது. யாழ்ப்பாணத்தில் அனைத்துக் கடைகளும் பூட்டப்பட்டன். வாகனப் போக்குவரத்து முற்றாக ஸ்த்தம்பித்துப் போனது. யாழ்ப்பாணமெங்கும் சனநடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. மக்கள் வீதிகளுக்கு இறங்குவதையே முற்றாகத் தவிர்த்திருந்தனர். யாழ்ப்பாணத்தை ஸ்த்தம்பிக்கச் செய்த ஹர்த்தாலினால் ராணுவத்தினரும் பொலீஸாரும் கொதித்துப் போயினர். அரசு ஆத்திரத்தில் கறுவிக்கொண்டிருந்தது. ஜெயார் தனது பாணியிலேயே யாழ்ப்பாணத் தமிழரின் ஹர்த்தாலுக்குப் பதிலளித்தார். ஆடி 2 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த சுதந்திரன் மற்றும் சட்டர்டே ரிவியூ பத்திரிக்கைகள் முடக்கப்பட்டன. கலாநிதி தர்மலிங்கமும் கோவை மகேசனும் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டார்கள். அரசு சார்பாகப் பேசிய அதிகாரி டக்கிளஸ் லியனகே ஹர்த்தாலின்போது அரச உடமைகள் மீது சேதம் விளைவிக்கப்பட்டதாலேயே பத்திரிக்கைகள் மீதான தடையும், பலரின் கைதுகளும் இடம்பெற்றதாகக் கூறி அவற்றினை நியாயபடுத்தினார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாக அரசு கூறிய வன்முறைகளுக்கும் தமிழ் ஈழ விடுதலை முன்னணிக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. டெலோ அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற டெலா அமைப்பே இந்த வன்முறைகளில் ஈடுபட்டிருந்தது. ஓபரோய் தேவனால் இயக்கப்பட்ட டெலா இயக்கம் பஸ்வண்டிகளை எரித்து தபால் அலுவலகங்கள் உட்பட சில அரச கட்டடங்களுக்குச் சேதம் விளைவித்திருந்தது. மேலும் கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே சேவையில் ஈடுபட்டு வந்த யாழ்தேவி கடுகதி புகையிரதத்தையும் டெலா அமைப்பு பகல்ப்பொழுதில் எரித்தது.
  8. தமிழர் மீதான கூட்டுத் தண்டனைக்கான விதைகளை விதைக்கத் தொடங்கிய சிங்களப் பேரினவாதம் தமிழ் மீனவர்கள் மீது சிங்கள மீனவர்கள் நன்கு ஒருங்கமைக்கப்பட்ட முறையில் தாக்குதல் ஒன்றினை நடத்திய நாளான 1983 ஆனி 2 ஆம் திகதி நான் திருகோணமலையில் இருந்தேன். அந்நேரம், மீன்வளத்துறை அமைச்சர் பெஸ்டஸ் பெரேராவினால் சிங்களக் குடியேற்றப்பகுதியான சமுத்திரபுரவில் பாடசாலை ஒன்று திறந்துவைக்கப்பட்டிருந்தது. அந்நிகழ்வில் நான் கலந்துகொண்டிருந்தபோது திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் நிர்வாகி எம். செல்வராஜா என்னைப் பார்க்க அவசரமாக வந்திருந்தார். "சபா, பிரச்சினை தொடங்கீட்டுது. தமிழர்களின் படகுகளை கடந்த இரவு அவர்கள் எரித்து விட்டார்கள்" என்று கூறிவிட்டு மீன்வளத்துறை அமைச்சர் பெஸ்டஸ் பெரேராவிடம் இதுகுறித்துப் பேசியதுடன் பிரச்சினை மேலும் பெரிதாகாது பார்த்துக்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டார். திருகோணமலையில் அதிகரித்து வந்துகொண்டிருந்த பதற்றத்தை என்னால் அன்று காலையில் இலகுவாக உணர்ந்துகொள்ள முடிந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடிநின்று கடந்த நாள் நடைபெற்ற அசம்பாவிதங்கள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். பல சிங்களவர்கள் வெளிப்படையாகவே, "தமிழர்களுக்கு ஒரு பாடத்தைப் புகட்டவேண்டும், அவர்களின் தலைகளை நொறுக்க வேண்டும்" என்று பேசினார்கள். லலித் அதுலத் முதலி மற்றும் ஜெயார் அடிக்கடி பாவித்த இவ்வார்த்தைகள் சாதாரண சிங்களவர்களின் நாவிலும் அப்போது தவழ்ந்துகொண்டிருந்தன. மீன்வளத்துறை அமைச்சுபற்றி நான் செய்தி சேகரிப்பதில்லை, ஆனால் அமைச்சர் எனக்கு நன்கு பரீட்சயமானவர். கத்தோலிக்கரான அமைச்சர் பெஸ் டஸ் பெரேராவை யாழ்ப்பாண மீனவ சமூகத்துடனும், யாழ்ப்பாண கத்தோலிக்கத் திருச்சபையுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுமாறு ஜெயார் பணித்திருந்தார். ஜெயாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களில் பெஸ்டஸ் பெரேராவும் ஒருவர். 1972 ஆம் டட்லி சேனநாயக்கவுடன் ஜெயார் முரண்பட்டபோது பெஸ்டஸ் பெரேரா ஜெயாருக்கு ஆதரவாக நின்றார். ஆபத்தான வேளைகளில் தனக்கு ஆதரவாக நின்றவர்களை பின்னர் தான் அதிகாரத்திற்கு வந்ததும் அரவணைத்துக்கொள்ளும் நற்பண்பு ஜெயாருக்கு இருந்தது. ஆகவே, 1977 ஆம் ஆண்டு தான் ஆட்சியைக் கைப்பற்றியபோது பெஸ்டஸ் பெரேராவுக்கு மீன்பிடித்தித்துறை அமைச்சினை வழங்கினார் ஜெயார். இனப்பிரச்சினை தொடர்பான செய்திகளை சேகரிப்பதில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நான், பெஸ்டஸ் பெரேராவுடன் நெருங்கிப்பழகும் பல சந்தர்ப்பங்களைப் பெற்றிருந்தேன். பெஸ்டஸ் பெரேரா 1983 ஆம் ஆண்டு ஆனி 1 ஆம் திகதி திருகோணமலைக்குப் பயணமான ஊடக் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். நாம் பயணம் செய்துகொண்டிருந்த வான் குருநாகல் நகர் மத்தியை அடைந்தபோது கறுப்புச்சட்டை அணிந்த இளைஞர்கள் சிலர் வீதியின் குறுக்கே, எமது வாகனத்தின் முன்னால் பாய்ந்து சாரதியை வாகனத்தை நிறுத்துமாறு பணித்தனர். ஆனால், சாரதியோ அவர்களை நோக்கி வாகனத்தை நிறுத்தாது தொடர்ந்து செலுத்தவே அந்த இளைஞர்கள் விதியின் ஓரத்திற்குப் பாய்ந்து விலகிக்கொண்டார்கள். நகரில் இருந்த பல தமிழர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு சிங்களவர்களால் சூறையாடப்பட்டுக்கொண்டிருந்ததை வாகனத்தில் இருந்த அனைவரும் கண்ணுற்றோம். தமிழ் ஆண்கள் வீதிகளுக்கு இழுத்துவரப்பட்டு சிங்களவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள். தமிழர்களைத் தேடித் தேடி வேட்டையாடிக்கொண்டிருந்த அந்தச் சிங்களக் காடையர் கூட்டத்தின் கண்களிலிருந்து என்னை, என்னுடன் வந்த சிங்களப் பத்திரிக்கையாளர்கள் காத்துக்கொண்டார்கள். எமது வாகனம் நகரின் எல்லையினைத் தாண்டிச் சென்றபோது, "நாம் சபாவைக் காப்பற்றிவிட்டோம்" என்று எனது சிங்கள நண்பர்கள் தமக்குள் குதூகலித்துக்கொண்டார்கள். அன்று காலை, வவுனியா நகரில் கொல்லப்பட்ட இரு விமானப்படை வீரர்களின் இழப்பிற்குப் பழிவாங்க நாடு முழுவதிலும், சுமார் 50 இடங்களில் தமிழ் மக்கள் மீது ஒருங்கமைக்கப்பட்ட ரீதியில் "கூட்டுத் தண்டனை" ஒன்று சிங்களவர்களால் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. அவ்வாறான தண்டனை வழங்கப்பட்ட இடங்களில் ஒன்றான குருநாகல் நகரில் வாழ்ந்து வந்த தமிழர்களும் தண்டிக்கப்பட்டார்கள். அன்று காலை வவுனியால் பணியாற்றி வந்த நான்கு விமானப்படை வீரர்கள் நகருக்கு மரக்கறிகளைக் கொள்வனவு செய்ய வந்திருக்கிறார்கள். பெரேரா, குணசேகர ஆகிய வீரர்கள் தமது ஜீப் வண்டிக்கு அருகே காவல் நிற்க ஏனைய இருவரும் சந்தையின் உட்பகுதிக்குச் சென்றுவிட்டார்கள். இவர்களின் வருகைக்காகக் காத்திருந்த நான்கு புளொட் போராளிகள் இவர்கள் இருவர் மீதும் கைக்குண்டுகளை எறிந்துவிட்டு, அவர்கள் சுதாரிப்பதற்குள் அவர்கள் மீது துப்பாக்கிகளால் சுடத் தொடங்கினார்கள். அந்த வீரர்கள் இருவரும் இறந்து விழ, அவர்களின் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு புளொட் போராளிகள் தலைமறைவானார்கள். தமது விமானப்படையினர் மீதான தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ராணுவம் இறங்கியது. வவுனியா நகரில் இருந்து இரு கிலோமீட்டர்கள் தூரத்தில் அமைந்திருக்கும் கோவில்குளத்திற்குச் சிவில் உடைகளில் சென்ற ராணுவத்தினர் அப்பகுதியில் காந்தியம் அமைப்பினால் பராமரிக்கப்பட்டுவந்த பண்ணை மீது தாக்குதல் நடத்தி, அப்பண்ணையில் இருந்த பயிர்களையும், சேமிப்பிடங்களையும், கொட்டகைகளையும் எரித்தார்கள். மேலும், பண்ணையில் பாவிக்கப்பட்டு வந்த உழவு இயந்திரங்கள், போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட வான்கள் என்பனவும் ராணுவத்தால் எரிக்கப்பட்டன. தாக்குதல் ஆரம்பித்த வேளையில் பண்ணையிலிருந்து தப்பியோடிய தமிழ் விவசாயிகள் தமது உயிரைக் காப்பாற்றிக்கொண்டார்கள். திருகோணமலையில் தமிழரின் மீன்பிடிப் படகுகள் எரிக்கப்பட்டதன் பின்னால் இருந்தது இராணுவத்தினர்தான் என்று செல்வராஜா என்னிடம் தெரிவித்தார். "தம்மை பின்புலத்தில் வைத்துக்கொண்டு, சிங்களக் காடையர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதை அவர்கள் ஊக்குவித்து வருகிறார்கள்" என்று அவர் என்னிடம் கூறினார். ஆனி 3 ஆம் திகதி இரவு இவ்வாறான, ராணுவத்தினரின் பின்னணியில் நடந்த தாக்குதல் ஒன்றினை திருகோணமலை நகரில் நான் கண்டேன். திருகோணமலை பிரதான வீதியில் அமைந்திருந்த மன்ஷன் விடுதியில் வெடிபொருட்கள மறைத்துவைக்கப்பட்டிருப்பதாக தமக்குக் கிடைத்த தகவல்களையடுத்து ராணுவம் அங்கு தேடுதல் நடத்துவதற்குச் சென்றிருப்பதாக எமக்குச் செய்தி கிடைத்திருந்தது. ஆகவே, இதுபற்றிச் செய்தி சேகரிக்க எமது ஊடக் குழு அங்கு சென்றிருந்தது. நாம் அங்கு சென்றபொழுது ராணுவம் தனது தேடுதலை முடித்துவிட்டிருந்தது. அந்த விடுதியில் வெடிபொருட்கள் எவையும் இருக்கவில்லை. செய்தி சேகரிக்கச் சென்ற எமக்கு அது ஏமாற்றத்தைத் தந்திருந்தது. ஆனால், சற்று நேரத்தின் பின்னர் எமக்கு இன்னொரு திகைப்பூட்டும் செய்தி கிடைத்தது. அப்பகுதியில் அமைந்திருந்த இன்னொரு கட்டடத்திற்கு ராணுவம் தேடுதல் நடத்தச் சென்றிருந்தது. மன்ஷன் விடுதியில் காவலுக்கு நின்றிருந்த இரு பொலீஸாரையும் கூட்டிக்கொண்டு இந்தக் கட்டடத்திற்கு ராணுவம் சென்றது. அப்போது, சந்தைப்பகுதியிலிருந்து காடையர் கூட்டமொன்று வெளியே வந்துகொண்டிருந்ததை நாம் கண்டோம். மன்ஷன் விடுதிக்குள் நுழைந்த அந்தக் காடையர் குழு அவ்விடுதியில் இருந்த அனைத்தையும் அடித்து உடைக்கத் தொடங்கியது. பின்னர், தாம் கொண்டுவந்திருந்த பெற்றொலினை விடுதி மீது ஊற்றி அதற்குத் தீவைத்தது. அந்த விடுதிக்குச் சொந்தக்காரர் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நெமினாதன் என்பதை நாம் பின்னர் அறிந்துகொண்டோம். இத்தாக்குதலைத் தொடர்ந்து, திருகோணமலை நகரில் தமிழர்களின் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கின. ஒருங்கமைக்கப்பட்ட வலையமைப்பும், தாக்குதல் நடத்தப்படுவதற்கான சூழ்நிலையும் அங்கு மிகவும் திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்டுள்ளதை நாம் உணர்ந்துகொண்டோம். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இளம் வாகனச் சாரதியான சபாரட்ணம் பழணிவேலின் படுகொலை குறித்து நான் இங்கு முன்னர் குறிப்பிட்டிருந்தேன். வைகாசி 30 ஆம் திகதி அதிகாலை திருகோணமலை நோக்கிச் செல்லும் பஸ் வண்டியில் தனது உறவினர்களை ஏற்றிவிடுவதற்காக பழனிவேல் தனது வாகனத்தை ஓட்டிச் சென்றார். வல்வெட்டித்துறையிலிருந்து பருத்தித்துறை பஸ்நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பழனிவேலின் வாகனம் மீது அதிகாலை 4:30 மணிக்கு வல்வெட்டித்துறை ராணுவக் காவலரணில் கடமையில் நின்ற கோப்ரல் எம் விமலரட்ண கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். கொல்லப்பட்ட பழனிவேலின் உடலை வீதியில் இழுத்துவிட்ட ராணுவத்தினர் அதன் மீது தமது ராணுவ ட்ரக் வண்டியை ஏற்றிச் சிதைத்தனர். பழனிவேலின் கொலைக்காக கோப்ரல் விமலரட்ண கைதுசெய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். தமிழர் மீதான கொலைகளுக்கு இறுதியாகத் தண்டிக்கப்பட்ட ராணுவ வீரர் விமலரட்ணதான் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த நிகழ்வும், இதற்கு முதல் நடத்தப்பட்ட நவரட்ணராஜா மீதான படுகொலை தொடர்பான நீதிவிசாரணையும் ராணுவத்தையும், அரசாங்கத்தையும் ஆத்திரப்பட வைத்திருந்தது. ஆகவே, இவ்வாறான நீதிவிசாரணைகளிலிருந்து தனது ராணுவத்தினரைப் பாதுகாக்க ஜெயார் தனது வழமையான சதிகளை அரங்கேற்றத் தொடங்கினார். தனது ஏவலாளிகளில் ஒருவரின் ஊடாக இப்பிரச்சினையினை பாராளுமன்றத்திலோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிலோ விவாதிப்பதன் மூலம் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜெயார் விரும்பினார். இவ்வாறு செய்வதன் மூலம் உள்நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் தான் அழுத்தம் காரணமாகவே சில விடயங்களைச் செய்யவேண்டி ஏற்ப்பட்டதாகக் காட்டுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். இத்தருணத்தில், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் அனைத்து சரத்துக்களையும் நடைமுறைப்படுத்துவதன் மூலம் பயங்கரவாதத்தை அழிக்க ஜனாதிபதி முன்வரவேண்டும் என்கிற தீர்மானத்தை தனது கட்சியின் செயற்குழு நிறைவேற்றுவதை ஜெயார் உறுதிப்படுத்திக்கொண்டார். மிகவும் கொடூரமான இச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான பொதுமக்கள் ஆதரவினை இனவாதம் கக்கும் பத்திரிக்கைகளான தி சண், தி ஐலண்ட் மற்றும் இவற்றின் சிங்கள மொழிப் பத்திரிக்கைகள் உருவாக்கிவந்தன. ஜெயாரின் ஆட்சிக் காலம் முழுவதும் லலித் அதுலத் முதலியே அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளராகச் செயற்பட்டு வந்தார். ஊடகங்களுக்குத் தேவையான தகவல்களை அவரே வழங்கியும் வந்தார். அவரை ஊடகவியலாளர்கள் "செய்தியாளன்" என்றே அழைத்து வந்தார்கள். அவருக்கு எவற்றினைச் செய்தியாக்கவேண்டும், எவற்றினைச் செய்தியாக்கல் ஆகாது என்கிற அறிவு இருந்தது. அரசாங்கத்தின் நலன்களுக்காக ஊடகங்களை எவ்வாறு கையாள்வது என்பது அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. அவர் ஊடகங்களுடன் நட்புப் பாராட்டி வந்தார். அனைத்துப் பத்திரிக்கை ஆசிரியர்களுடனும் சிநேகபூர்வமான உறவை ஏற்படுத்திக்கொண்ட லலித், திறமைவாய்ந்த நிருபர்களுடனும் தொடர்புகளைப் பேணிவந்தார். நோர்ட்டன் வீரசிங்கவும் நானும் டெயிலி நியூஸ் பத்திரிக்கையில் அவரது நண்பர்களாக இருந்தோம். அவருக்குத் தெரிந்தவர்களுக்கு தனது பிரத்தியே தொலைபேசி தொடர்பெண்ணை அவர் வழங்கியிருந்தார். அந்த தொலைபேசி எண்ணுடன் காலை 5:30 மணியிலிருந்து நீங்கள் அவரைத் தொடர்புகொள்ள முடியும். ஒவ்வொரு செவ்வாய் காலை உணவின்போதும் நாம் அவருடன் தொடர்புகொள்வது வழக்கம். ஒவ்வொரு புதன் நாளிலும் அமைச்சரவையில் விவாதிக்கப்படவிருக்கும் முக்கிய விடயங்கள் தொடர்பான தகவல்களை அவர் செவ்வாயன்றே எம்முடன் பகிர்ந்துகொள்வார். ஜெயாருடன் அவரது ஏவலாளிகள் இவ்வாறான நாள் ஒன்றில், தி சண் பத்திரிக்கையின் நிருபர் ஜெனிபருக்கு செய்தியொன்றினை காலையுணவை அருந்தியவாறே லலித் வழங்கியிருந்தார். செய்தியை வழங்கிய பின்னர் ஜெனிபரைப் பார்த்து, "இது உங்களுக்கான செய்தியல்ல, டெயிலி நியூஸுக்கானது. ஏனென்றால், டெயிலி நியூஸில் வரும் செய்திகளை மக்கள் அப்படியே நம்பப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். ஆகவே, அவர்களுக்கு தகவல்களையும் உங்களுக்குப் பிரச்சாரச் செய்திகளையும் நான் தர விரும்புகிறேன்" என்று கூறினார். பொதுமக்கள் கருத்தறியும் வல்லமை அதுலத் முதலிக்குக் கைவந்த கலை. தனியார் ஊடகங்களைப் பாவித்து அரசுக்குச் சார்பான பிரச்சாரங்களை முன்னெடுப்பதில் அவர் கைதேர்ந்து விளங்கினார்.
  9. காந்தியத்தை அழிக்கத் திட்டம் போட்ட ஜெயாரும், ஏமாற்றப்பட்ட சம்பந்தனும் திருக்கோணேஸ்வரர் ஆலயம் 60 களுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் திருகோணமலை மாவட்டத்தின் அரச அதிபர்களாக சிங்களவர்களையே நியமித்து வருகின்றன. தமிழ் மாவட்டமான திருகோணமலையினைச் சிங்களமயமாக்குவதற்கு சிங்கள அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படுவது அவசியம் என்று அரசுகள் கருதிவந்தன. இவ்வாறான அரச அதிபர்களில் ஒரு சிலர் நேர்மையான, பாகுபாடற்ற மனிதர்களாக இருந்தனர். ஆனால், பெரும்பாலான அரச அதிபர்கள் அரசாங்கத்தின் கருவியாகச் செயற்பட்டு திருகோணமலையினைச் சிங்கள மயமாக்கும் அரசின் திட்டத்தினை தமது தலையாய கடமையாகக் கொண்டு நிறைவேற்றி வந்தனர். இந்த இரண்டாம் வகை அரசாங்க அதிபர்களே ஜெயாரின் காலத்தில் திருகோணமலையினை நிர்வகித்து வந்தனர். 1978 ஆம் ஆண்டிலிருந்து 1983 ஆம் ஆண்டுவரை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக ஜயதிஸ்ஸ பண்டாரகொட கடமையாற்றினார்.இவரது காலத்திலேயே திருகோணமலையில் சிங்களமயமாக்கல் துரித கதியில் இடம்பெற்று வந்தது. அரச திணைக்களங்களுக்கென்று மிகப்பெரியளவில் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டதோடு, இக்காணிகள் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு வந்தார்கள். சுமார் 5000 ஏக்கர்கள் கொண்ட கொழும்பு வீதியுடன் அமைந்திருந்த நீண்ட நிலப்பரப்பு துறைமுக அதிகாரசபையினால் கையகப்படுத்தப்பட்டது. இதைவிட மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் உல்லாசப் பயணத்துறைக்கென்றும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கென்றும் இன்னும் பிற அரச திணைக்கங்களுக்கென்றும் அரசால் கையகப்படுத்தப்பட்டு வந்தன. தமிழ் பெளத்தர்களின் புராதனச் சின்னம் ஒன்றின் பின்னணியில் தெரியும் நீலப்பனிக்கைக் குளம் திருகோணமலைக்கு வடக்காக இருந்த திரியாய் பகுதியில் அரசு திட்டமிட்டிருந்த மரமுந்திரிகைத் திட்டத்தினை ஜெயார் இரத்துச் செய்தமைக்காக தான் அவருக்கு நன்றிகூறியதாக சம்பந்தன் என்னிடம் தெரிவித்திருந்தார். திரியாய்க் கிராமம் மிகத் தொன்மையான தமிழ்க் கிராமம் ஆகும். நீலப்பனிக்கைக்குளம், 1940 ஆம் ஆண்டு புனருத்தாரனம் செய்யப்பட்டபின்னர் இக்குளத்திற்கு அண்மையாக உள்ள கிராமங்களில் நெற்பயிர்ச்செய்கை நடைபெற்று வந்தது. நிர்வாகக் கோளாறு ஒன்றின் காரணமாக இக்காணிகளில் விவசாயம் செய்துவந்த தமிழர்களுக்கான காணி உரிமைப் பத்திரத்தினை அன்றைய நிர்வாகம் வழங்கத் தவறியிருந்தது. 1980 ஆம் ஆண்டு, இப்பகுதிக்கு வந்த திருகோணமலை அரச அதிபர் ஜயதிஸ்ஸ பண்டாரகொட, தமிழ் விவசாயிகளுக்கு இக்காணிகளுக்கான உரிமையாளர் பத்திரம் இன்மையினால் அவர்கள் உடனடியாக இப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கட்டளையிட்டதுடன், இப்பகுதியில் 2000 ஏக்கரில் மரமுந்திரிகைத் திட்டம் ஒன்றினை தாம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறினார். திரியாயில் தமிழ் விவசாயிகளை விரட்டிவிட்டு மரமுந்திரிகைத் திட்டம் ஒன்றினை அரசாங்க அதிபர் நடைமுறைப்படுத்தவுள்ளதை அறிந்த சம்பந்தன் உடனடியாகக் கொழும்பிற்குச் சென்று தோட்டப் பயிர்ச்செய்கை கைத்தொழில் அமைச்சர் ஜயவர்தனவைச் சந்தித்து இதுகுறித்துப் பேசினார். நெற்பயிற்செய்கை நடக்கும் காணிகளில் மரமுந்திரிகை செய்ய அரச அதிபர் முயற்சிப்பது குறித்து அமைச்சர் அறிந்தபோது திகைப்படைந்தார். மரமுந்திரிகைப் பயிர்ச்செய்கைக்கு அதிக நீர் தேவைப்பாடதென்பதுடன் சாதாரண தரையமைப்பே அதற்கு உகந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. "இந்தத் திட்டத்திற்கான உத்தரவைனை வழங்கியது யார்?" என்று சம்பந்தர் அமைச்சரைக் கேட்டார். தன்னை மன்னித்துவிடும்படி கேட்டுக்கொண்ட அமைச்சர், மரமுந்திரிகைத் திட்டத்திற்கான உத்தரவு அதிமேலிடத்திலிருந்தே தனக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார். அதிமேலிடம் என்று அமைச்சர்களும், அதிகாரிகளும் குறிப்பிடுவது ஜனாதிபதி ஜெயாரைத்தான் என்பதை சம்பந்தன் அறிந்தே வைத்திருந்தார். "என்னால் எதுவும் செய்யமுடியாது, நீங்கள் பெரிய மனிதரிடம் தான் இதுகுறித்துப் பேச வேண்டும்" என்று அமைச்சர் கைவிரித்து விட்டார். ஆகவே, சம்பந்தன் ஜெயாரைச் சந்தித்துப் பேசினார். ஜெயாரின் சிந்தனையில் ஏறும்வகையில் சம்பந்தன் அவரிடம் இவ்விடயத்தைப் பற்றி வினவினார், "இப்பகுதியில் வாழ்ந்துவருவது தமிழர்களா சிங்களவர்களா என்பதை விட்டு விடலாம், ஆனால், நெற்பயிர்ச்செய்கைக்காக கிராமக் குளத்திலிருந்து நீர்ப்பாசணம் செய்யப்பட்ட காணிகளில் மரமுந்திரிகையினை பயிர்செய்த முதலாவது ஜனாதிபதி என்கிற பெயர் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?" என்று அவரைப் பார்த்துக் கேட்டார் சம்பந்தன். இதனையடுத்து மரமுந்திரிகைத் திட்டத்தை இரத்துச் செய்யும் உத்தரவினை ஜெயார் வழங்கினார். தனது ஆட்சிக்காலத்தின் ஆரம்பப்பகுதியில் தன்னை ஒரு நீதியான அதிபராகக் காட்ட முனைந்திருந்தார் ஜெயார். ஜெயாரிடமிருந்து டெயிலி நியூஸ் பத்திரிகைக்கு உத்தரவு ஒன்று வந்திருந்தது. தான் வழங்கும் ஒவ்வொரு பேச்சும் தான் பேசியதுபோல, அதே ஒழுங்கில் அச்சிடப்படவேண்டும் என்பதே அந்த உத்தரவு. இதற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்த பத்திரிக்கை ஆசிரியர், "நாம் ஒரு பத்திரிக்கை தான் நடத்துகிறோம், பாராளுமன்றப் பதிவேடு அல்ல" என்று கூறினார். "நீங்கள் பேசிய ஒழுங்கிலேயே நாம் அதனைப் பிரசுரித்தால் உங்கள் பேச்சின் கருப்பொருள் பத்திரிக்கைச் செய்தியின் அடித்தளத்திற்கல்லவா போய்விடும்?" என்று அவர் ஜெயாரிடம் கேட்டார். அதற்குப் பதிலளித்த ஜெயார், "எனக்கு செய்தி முக்கியமில்லை, எனது பேச்சு சரித்திரத்தில் இடம்பெறவேண்டும், அவ்வளவுதான்" என்று தீர்க்கமாகக் கூறினார். இவ்வாறே எனது நண்பரும், பிரபல நீதிமன்ற செய்தியாளருமான நோர்ட்டன் வீரசிங்க ஜெயாரினால் ஒரு ஜனாதிபதியின் பேச்சினை சேகரிக்கும் நிருபராக ஆக்கப்பட்டார். அவரது வேலையெல்லாம் ஜெயாரின் பேச்சினை அப்படியே எழுதிக்கொள்வது. பின்னர் அதனை ஜெயாரிடம் காட்டி பிரசுரிப்பதற்கான அனுமதியினைப் பெற்றுக்கொள்வது என்பதாகவே இருந்தது. பெரும்பாலான நேரங்களில் ஜெயாரின் பேச்சு பத்திரிக்கையின் அதிகாலை நேர வெளியீட்டில் உள்ளடக்க முடியாது போய்விடும். சிலவேளைகளின் அவரின் பேச்சு மறுநாள் வெளியீட்டிலேயே வந்திருந்தது. மரமுந்திரிகைத் திட்டத்தை இரத்துச் செய்யும் ஜெயாரின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதாக சம்பந்தன் என்னிடம் கூறினார். காமிணி திசாநாயக்கவுடனான சம்பந்தனின் அனுபவம் வித்தியாசமானது. தமிழரின் பூர்வீக கிராமமான பெரியவிளாங்குளம் பகுதியில் ஐரோப்பிய நாடுகளின் பண உதவியோடு காமிணி திசாநாயக்க மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் "மகாடிவுளுவெவ" என்று சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சிங்களக் குடியேற்றம் ஒன்று நடைபெற ஆரம்பித்திருந்தது. இதனை அறிந்த சம்பந்தன் உடனடியாக இந்தக் குடியேற்றத்தை நிறுத்துமாறு காமிணியிடம் கோரியிருந்தார். சபந்தனின் முன்னால் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகக் கூறிய காமிணி அவர் முன்னாலேயே அத்திட்டத்தினை இரத்துச் செய்யும் உத்தரவினை மகாவலி அபிவிருத்திச் சபைக்கு வழங்கினார். ஆனால், சம்பந்தனை ஏமாற்றிய காமிணி, உடனடியாக திருகோணமலை அரச அதிபரான ஜயதிஸ்ஸ பண்டாரகொடவை தொலைபேசியில் தொடர்புகொண்டு , பெரியவிளாங்குளம் பகுதியை முற்றான சிங்களக் குடியேற்றமாக்கும் திட்டத்தினை துரிதப்படுத்தி, தான் அனுப்பிய இரத்துச் செய்யும் உத்தரவு அரச அதிபருக்குக் கிடைப்பதற்கு முன்னர், திட்டம் பூர்த்தியாக்கப்படவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார். பின்னாட்களில் தான் எமாற்றப்பட்டதை சம்பந்தன் அறிந்துகொண்டபோது மனமுடைந்துபோனார். எப்படியான சிங்கள இனவாதிகளுடன் தாம் அரசியல் நடத்தவேண்டி இருக்கிறது என்று என்னிடமும் சலித்துக்கொண்டார். ஜெயாருடன் இன்னொரு விடயம் குறித்தும் சம்பந்தன் பேசியிருந்தார். அதுதான் காந்தியம் செயற்பாடுகள் குறித்து சிங்கள, ஆங்கில ஊடகங்கள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டு. சம்பந்தன் ஜெயாரைச் சந்தித்த அதே காலையில் சண்டே ஐலண்ட் பத்திரிக்கையும், தி வீக்கெண்ட் பத்திரிக்கையும் காந்தியம் மீது கடுமையான பிரிவினைவாதக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து செய்திகளைக் காவிவந்திருந்தன. சண்டே ஐலண்ட் பத்திரிக்கையில் எழுதிய பீட்டர் பாலசூரிய காந்தியம் மற்றும் ரெட்பாணா அமைப்புக்கள் மீது விசாரணை என்கிற தலைப்பில் செய்திவெளியிட்டிருந்தார். "மட்டக்களப்பில் சமூக சேவைகளில் ஈடுபட்டுவரும் தொண்டு நிறுவனமான ரெட்பாணாவின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி ஜெயவர்த்தனா தனிப்பட்ட ரீதியில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக நம்பகமாகத் தெரியவந்திருக்கிறது. அமைச்சர் K. W. தேவநாயகத்தின் குற்றச்சாட்டொன்றினை அடிப்படையாக வைத்தே ஜனாதிபதி இந்த விசாரணையினை மேற்கொள்ளவுள்ளார். மட்டக்களப்பில் ரெட்பாணாவும், வடக்கில் காந்தியமும் செய்துவரும் பல நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சந்தேகம் கொண்டிருப்பதாகவும், இதனாலேயே அரசாங்கத்தை அவர் எச்சரித்தார் என்றும் தெரியவருகிறது. காந்தியத்தின் செயற்பாடுகளை அமைச்சர் தேவநாயகம் சந்தேகிப்பதால், அந்த அமைப்பின் செயற்பாடுகள் குறித்த விரிவான அறிக்கையொன்றினை அவரது சமூக நலன் அமைச்சு ஜனாதிபதிக்கு உடனடியாக வழங்கவேண்டும் என்றும் கோரப்பட்டிருக்கிறது" என்பதே ஐலண்ட் பத்திரிக்கையின் செய்தியாகும். இதேவகையான செய்தியையே தி வீக்கெண்ட் பத்திரிக்கையில் ரனில் வீரசிங்கவும் ஜெனிபர் ஹென்றிக்ஸும் எழுதியிருந்தார்கள். "காந்தியம் மற்றும் ரெட்பாணா அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து அமைச்சர் தேவநாயகம் உயர் மட்ட அமைச்சர் கூட்டத்தில் எழுப்பிய சந்தேகங்களையடுத்து இவ்விரு அமைப்புக்கள் மீதும் விசாரணைகள் ஆரம்பமாகவிருப்பதாக நம்பகமாகத் தெரியவருகிறது. ஸ்கண்டிநேவிய நாடுகளின் பண உதவியுடன் செயற்பட்டுவரும் இந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் அமைச்சும், சமூக சேவைகள் அமைச்சும் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளன" என்பதே அந்தச் செய்தியாகும். சிங்கள அரசில் அமைச்சராகவிருந்த தேவநாயகம் என்னிடம் மேலும் பேசிய சம்பந்தன், காந்தியம் மற்றும் ரெட்பாணா அமைப்புக்கள் மீதான விசாரணைபற்றி தான் அறிந்துகொண்டவுடன் அமைச்சர் தேவநாயகத்துடன் தான் உடனடியாகத் தொடர்புகொண்டு ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று வினவியதாகவும், அதற்குப் பதிலளித்த அமைச்சர் தேவநாயகம், இந்த அமைப்புக்கள் குறித்து தான் எந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் பேசியதில்லையென்றும், ஆனால் தனது பெயரைப் பாவிப்பதன்மூலம் இச்செய்திக்கும் உத்தியோகபூர்வ அந்தஸ்த்தினைக் கொடுக்க சிலர் முயல்வதாகவும் கூறியதோடு இச்செய்தி உண்மையாக இருக்கலாம், ஏனென்றால் ஜனாதிபதி ஜெயவர்த்தனவே இந்த விசாரணைகள் நடக்கவேண்டும் என்று விரும்புவதாகவும் கூறினாராம். "நான் ஜனாதிபதி ஜெயவர்த்தனவுடன் பேசும்போது காந்தியத்தை முற்றாக நசுக்கிவிடும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது தெரிகிறது என்று கூறினேன். பட்டிணியினாலும், ஏழ்மையினாலும் வாடும் மக்களுக்கு காந்தியம் சிறப்பான தொண்டினை ஆற்றி, அவர்களை கெளரவத்துடன் வாழ வழி வகுத்து வருகிறது. என்னுடன் வந்து காந்தியம் செய்துவரும் தொண்டினை ஜெயார் பார்க்கவேண்டும் என்று அவரிடம் கேட்டேன். அதற்குப் பதிலளித்த ஜெயார், நீங்கள் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் நான் வந்து பார்க்கவேண்டிய தேவையில்லை என்று கூறி எனது கோரிக்கையினை அவர் மறுத்துவிட்டார்" என்று சம்பந்தன் என்னிடம் கூறினார். காந்தியத்தின் செயற்பாடுகளைத் தன்னுடன் வந்து பார்வையிடுமாறு தான் கேட்டுக்கொண்ட கோரிக்கையினை ஜெயார் நிராகரித்தபோதே காந்தியத்தை அழிக்க அவர் உறுதிபூண்டுவிட்டார் என்பதை தான் அறிந்துகொண்டதாக சம்பந்தன் என்னிடம் கூறினார். பின்னாட்களில் நடந்த சம்பவங்கள் இதனை உறுதிப்படுத்தின என்றும் சம்பந்தன் கூறினார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.