ஆண்டு: 1990 திகதி: சூன் 15, 1990 அடிபாட்டுக் காலம்: காலை வேளை நிகழ்வு இடம்: தலைமன்னார் பழையபாலம் இறங்குதுறை நிகழ்வு விரிப்பு: தலைமன்னார் கோட்டை காவல்துறை நிலையம் கைப்பற்றப்பட்ட பின்னர் பழையபாலம் இறங்குதுறை பரப்பில் அமைந்திருந்த கடற்படை முகாம் மீது காலை வேளையில் விடுதலைப்புலிகள் திடீர் தாக்குதலை மேற்கொண்டனர். சமரின் முடிவில் கடற்படை முகாம் விடுதலைப்புலிகள் வசமானது. அப்போது அங்கே தரித்து நின்ற படகொன்று புலிகளால் தாக்கப்பட்டு அதிலிருந்த படைக்கலன்களும் படைய ஏந்தனங்களும் கைப்பற்றப்பட்டதுடன் படகும் மூழ்கடிக்கப்பட்டது. அத்துடன் ஒட்டு மொத்த தலைமன்னாரும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: சுடுகலப் படகு சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்: வீரவேங்கை புலொமின் ஆதாரம்: உதயன்: 16/06/1990 | ஈழநாதம்: 16/6/1990 திகதி: சூன் 16, 1990 அடிபாட்டுக் காலம்: பகல் வேளை நிகழ்வு இடம்: காங்கேசன்துறை ஹாபர் வியூ படைமுகாம் நிகழ்வு விரிப்பு: காங்கேசன்துறை ஹாபர் வியூ படைமுகாமில் தரித்து நின்று கரையோரப் பரப்புகள் மீது சுட்டுக்கொண்டிருந்த கப்பல் மீது தவிபு இனர் மேற்கொண்ட உந்துகணைத் (rocket/unguided missile) தாக்குதல்களில் அக்கப்பலின் இயந்திர அறை, கணினி கட்டுப்பாட்டறை, மற்றும் கதுவீ (RADAR) என்பன உடைத்தெறியப்பட்டது. இத்தாக்குதலில் அதிலிருந்த கடற்படையினரில் 20 பேர் கொல்லப்பட்டனர் என சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் நாயகம் சிறில் ரணதுங்கா 23/06/1990 அன்று தெரிவித்தார். புலிகள் தரப்பில் தாக்குதலின் போது இழப்பேதுமில்லை. ஆனால் நடந்த எதிர்பாராத வெடிநேர்ச்சி ஒன்றில் 6 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். சேதப்பட்ட (சிறியளவு) கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: அறியில்லை கல வகை: (படைத்துறை) கப்பல் சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 20 பேர் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: 6 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் விவேகன், கப்டன் அன்சார், 2ம் லெப்டினன்ட் ஸ்ராலின், வீரவேங்கை கரன், வீரவேங்கை தவா, வீரவேங்கை சிறி ஆதாரம்: ஈழநாதம்: 17&24 /6/1990, உதயன்: 17/06/1990 திகதி: சூலை 7, 1990 அடிபாட்டுக் காலம்: அறியில்லை நிகழ்வு இடம்: காங்கேசன்துறை துறைமுகம் நிகழ்வு விரிப்பு: யாழ் குடாநாட்டிலுள்ள சிறிலங்காப் படையினருக்குத் தேவையான உணவுப்பொருட்களையும் போர்த்தளவாடங்களையும் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த காங்கேசன் துறைமுகத்திற்கு அருகில் நின்றிருந்த சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்றின் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடாத்தினர். இதில் கப்பல் சேதமடைந்தது. சேத விரிப்பு தெரியவில்லை. இத்தாக்குதலால் வழங்கல் முயற்சி தோல்வியடைந்து கப்பல் பின்வாங்கியது. இத பின்னர் அவ்விடத்திற்கு வந்த கடற்படைப்ப் படகு ஒன்று கடலில் நின்றபடி கரையோரப் பரப்புகள் மீது சுடுகலன் கொண்டு தாக்குதல் நடாத்தியது. ஆயினும், அப்பரப்பு மக்கள் ஏற்கனவே இடம்பெயர்ந்துவிட்டமையால் எவ்வித உயிர்ச்சேதம்மும் ஏற்படவில்லை. சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: கப்பல் கல வகை: சுடுகலப் படகு சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: இழப்பில்லை ஆதாரம்: ஈழநாதம்: 9/7/1990 திகதி: சூலை 10, 1990 அடிபாட்டுக் காலம்: சாமம் 10:15 நிகழ்வு இடம்: வல்வெட்டித்துறைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: இது வல்வெட்டித்துறையில் தரிபெற்று தமிழக-தமிழீழ வழங்கல்களைக் குழப்பிக்கொண்டிருந்த தாய்க்கப்பல் மீது கடற்புறாக்களும் கடற்கரும்புலிகளுமாக மேற்கொண்ட வலிதாக்குதல் ஆகும். தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் டேவிட் எ முகுந்தனின் கட்டளையின் கீழ் அவர் உட்பட லெப் கேணல் அருச்சுனா மற்றும் கப்டன் தினேஸ் ஆகியோரை படகுக் கட்டளை அதிகாரிகளாகக் கொண்ட 3 படகுகள் எடித்தாராவிற்குப் பாதுகாப்பாக நின்ற கடற்கலங்கள் மீது தாக்குதலைத் தொடுத்து அவற்றைத் திசைதிருப்பக் கடற்கரும்புலிகள் எடித்தாரா மீது மோதியிடித்தனர். இத்தாக்குதலை தேசியத் தலைவர் அவர்கள் வல்வெட்டித்துறைக் கடற்புறாத் தளத்திலிருந்து நெறிப்படுத்திக் கட்டளைகளை வழங்க கட்டளையாளர் பிருந்தன் மாஸ்ரர் மற்றும் துணைக் கட்டளையாளர் லெப். கேணல் சாள்ஸ் எ புலேந்திரன் ஆகியோர் தேசியத் தலைவரின் அருகிலிருந்து அக்கட்டளைகளுக்குச் செயல்வடிவம் தந்தனர். இந்நடவடிக்கைக்கான மேலதிக வேலைத் திட்டங்களை தண்டையல் கப்டன் மோகன் மேத்திரி தலைமையிலான அணி செவ்வனவே செய்து தந்திருந்தது குறிப்பிடத்தக்கது. போதியளவு வெடிமருந்து இல்லாத காலமென்பதாலும் எவ்வளவு வெடிமருந்து பயன்படுத்த வேண்டுமென்ற பட்டறிவு இல்லாததாலும் கப்பல் மூழ்கடிக்கப்படவில்லை. சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: எடித்தாரா கல வகை: கண்காணிப்புக் கட்டளைக் கப்பல் படிமம்: படிமப்புரவு: சிறிலங்காக் கடற்படை சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: பலர் காயப்பட்டோர்: பலர் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 3 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 வகுப்புப் பெயர்: அறியில்லை ஆதாரம்: உயிராயுதம்-1 | உதயன்: 12/07/1990 | கட்டுரை: எடித்தாரா மீதான முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் வரலாறு | கரும்புலி காவியம் பாகம் - 1 திகதி: செப்டெம்பர் 13, 1990 நிகழ்வு இடம்: யாழ் களப்பு (Jaffna lagoon) நிகழ்வு விரிப்பு: சிறிலங்காப் படைத்துறையானது தவிபுவின் யாழ் கோட்டை முற்றுகையை முறியடித்து யாழ் நகரையே கைப்பற்றும் திட்டத்தோடு 13/09/1990 அன்று 'போட் (Fort) நடவடிக்கை' என்ற பாரிய படைய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது. இது முப்படைகளையும் ஒருங்கிணைத்து மண்டைதீவைக் கைப்பற்றி அங்கு நிலைபெறும் படையினரைக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு தரையிறக்க முயற்சியாகும். இதற்காக கஜபாகு கப்பல், 28 சுடுகலப் படகுகள் (வகுப்புப் பெயர் அறியில்லை), 4 சிறிய படகுகள், 20 சேணேவிகள், நான்கு தாக்குதல் உலங்குவானூர்திகள் மற்றும் இரண்டு அவ்ரோ வானூர்திகள், இரண்டு "சீனச் சகடை" என்ற தமிழ்ப் பட்டப்பெயரைக் கொண்ட வை- 8, வை - 12 வானூர்திகள், ஆகக்குறைந்தது ஒரு சியாமா செட்டி உட்பட எட்டு வானூர்திகள் ஆகியன உடன் கஜபாப் படையணி மற்றும் சிங்கப் படையணிகளின் வீரர்களைக் கொண்ட 4000 தரைப்படையினர் இந்நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் குறித்த சமயத்தில் மண்டைதீவிலிருந்து கடற்படைப் படகுகள் மூலம் யாழ் கோட்டையை அண்மித்த வேளை கோட்டை வலுவெதிர்ப்பில் ஈடுபட்டிருந்த தவிபுக்கும் கடற்படையினருக்குமிடையே கடற்சமர் வெடித்தது. இந்தக் கடற்சமரில் கடற்படையினரின் படையெடுப்பு முயற்சி முறியடிக்கப்பட்ட போதிலும் சில படையினர் காயக்காரர்களோடு கோட்டைக்குள் சேணேவிகளையும் கொண்டு உள்நுழைந்தனர். இச்சமரில் கடற்படைப் படகுகள் சில மூழ்கடிக்கப்பட்டதாக தவிபு அறிவித்திருந்த போதிலும் சிங்களத் தரப்போ தம் தரப்பில் 6 படையப் படகுகள் சேதமடைந்தன என்று செய்தி வெளியிட்டிருந்தது. இச்சமரில் கொல்லப்பட்ட படையினரின் சடலங்கள் கரையிலும் கடலினுள்ளும் கிடந்தன. ஏனைய படையினர் மண்டைதீவுக்குப் பின்வாங்கினர். இதன் போது தரைப்படையினருக்கு உதவியாக வந்த வான்படையின் சியாமா செட்டி குண்டுவீச்சு வானூர்தி விடுதலைப்புலிகளால் கடலினுள் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதே சமயம் அற்றை நாளில் வான்படையினரின் அவ்ரோ வானூர்தி 10 "பொஸ்பரஸ்" குண்டுகளை யாழ்நகரில் மாலை 5 மணி முதல் 6 மணிவரை வீசியது. கடற்படைக்கு உதவியாக வந்த கஜபாகு கலம் மூலம் நான்கு சிறிய படகுகளில் படையினர் சிறுத்தீவு ஆத்துவாயை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நேரம் நீர் ஆழமின்மையால் கரைதட்டிக்கொண்டன. இவர்களை எதிர்கொண்ட தவிபு-க்கும் படையினருக்கும் இடையில் மோதல் வெடித்தத்தில் சில படையினர் கொல்லப்பட்டிருக்கலாமென்று புலிகள் தெரிவித்தனர். இப்படகுகளைப் பாதுகாக்க மூன்று குண்டுதாரிகள் தொடர்ந்து குண்டுவீச்சில் ஈடுபட்டன. அத்தோடு அப்படகுகளில் இரண்டை கடற்படையினர் மிகுந்த இடர்களுக்கும் நடுவணில் கட்டியிழுத்துச் சென்றனர். இரண்டை மாலை நான்கு மணியளவில் கடற்படையினர் வந்து கொண்டு சென்றனர். இச்சமரின் போது கோட்டைப் பரப்பிலிருந்து சிறிதளவு ஆயுதங்களும் படையத் தளபாடங்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதே நேரம் யாழ் கோட்டை வாசலில் நடந்த சமரில் “சலாமன்” என்ற கவசப் பாரவூர்தி தகர்க்கப்பட்டதோடு கோட்டையின் பக்கவாடு, பண்ணைப் பரப்பில், மற்றொரு கவசவூர்தி கண்ணிவெடியில் சிக்கிச் சிதறியது. இதில் படையினர் பலர் கொல்லப்பட்டனர். படிமங்கள்: கோட்டை வாயிலில் அழிக்கப்பட்ட சலாமன் கவசவூர்தி | படிமப்புரவு: தவிபு வழியாக உதயன் தரையிறங்க வந்த படையினர் விட்டுச் சென்ற கண்ணிவெடி கண்டுபிடிக்கும் ஏந்தனம் (equipment) | படிமப்புரவு: தவிபு வழியாய் உதயன் தோல்வியில் முடிந்த கோட்டை முற்றுகை முறியடிப்புச் சமரில் கொல்லப்பட்ட படையினரின் சடலங்கள் சிதறிக்கிடப்பதைக் காண்க | படிமப்புரவு: ஈழநாதம் 17/9/1990 சேதப்பட்ட கடற்கலங்கள்: 6 கடற்கலப் வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: சுடுகலப் படகுகள் (விதப்பான கடற்கலவகை அறியில்லை) சிறிலங்காக் முப்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 26 பேர் வான்படை: ஒரு வானோடி தரைப்படை: நான்கு அதிகாரிகள் மற்றும் 19 தரைப்படையினர் கடற்படை: 2 கடற்கலவர் (Seamen) காயப்பட்டோர்: 106 பேர் வீரச்சாவடைந்த தரைப்புலிகள்: 13 பேர் தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் ஆனந்தபாபு, கப்டன் அஞ்சனா, லெப். நெப்போலியன், வீரவேங்கை ரெஜினோல்ட், வீரவேங்கை சுரேன், வீரவேங்கை குணேஸ், வீரவேங்கை நிவாஸ், வீரவேங்கை றொபின், வீரவேங்கை தமிழ்ச்செல்வன், வீரவேங்கை குருபரன், வீரவேங்கை நிக்கலஸ், வீரவேங்கை விஜயன், வீரவேங்கை சந்திரபாபு ஆதாரம்: உதயன்: 14,15 & 16/09/1990 | ஈழநாதம்: 14 & 16/09/1990 | கட்டுரை: 'அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - 192' திகதி: செப்டெம்பர் 16, 1990 அடிபாட்டுக் காலம்: அறியில்லை நிகழ்வு இடம்: காங்கேசன்துறை கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: படகில் பயணம் செய்த படையினர் மீது கடற்புறாக்கள் கடலில் வைத்தே தாக்குதல் நடத்திப் படகைச் சேதப்படுத்தினர். சேதப்பட்ட (சிறிதளவு) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: கடற்படைப் படகு (விதப்பான கல வகை அறியில்லை) சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 1 ஆள் காயப்பட்டோர்: 1 ஆள் வீரச்சாவடைந்த கடற்புறாக்கள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 17/09/1990 திகதி: ஒக்டோபர் 14, 1990 அடிபாட்டுக் காலம்: சாமம் 10:30 மணியளவில் நிகழ்வு இடம்: தலைமன்னார் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: பொதுமக்களின் மீன்பிடிப்படகு ஒன்றைத் தாக்குவதற்காக சிங்களக் கடற்படையினர் அதைத் துரத்திச் சென்ற போது கடற்புறாக்கள் வழிமறித்து வலிதாக்குதல் செய்தனர். சிங்களப் படகு சேதமடைந்தது. சிறிதளவு படைக்கலன்கள் கைப்பற்றப்பட்டன. சேதமடைந்த படகிற்கு என்ன நடந்தது என்பது பற்றிப் புலிகள் தெரிவிக்கவில்லை. சேதப்பட்ட (சிறிதளவு) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: சிறு படகு (விதப்பான கல வகை அறியில்லை) சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 1 ஆள் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புறாக்கள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 16/10/1990 திகதி: ஒக்டோபர் 25, 1990 அடிபாட்டுக் காலம்: வைகறை 5:30 மணியளவில் நிகழ்வு இடம்: செம்பியன்பற்றுக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: புலிகளின் கடல் கண்ணிவெடியில் சிக்கிப் படகு வலுத்த சேதமடைந்தது. சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: கடற்படைப் படகு (விதப்பான கல வகை அறியில்லை) சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: பலர் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புறாக்கள்: இல்லை ஆதாரம்: உதயன்: 27/10/1990 திகதி: நவம்பர் 7, 1990 அடிபாட்டுக் காலம்: காலை 8:30 மணியளவில் நிகழ்வு இடம்: முள்ளிக்குளம் (புத்தளம்) கடற்பரப்பு. இன்னும் விதப்பாகவெனில் குதிரைமலையைச் சுற்றியுள்ள கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: குறித்த கடற்பரப்பில் இரண்டு படகில் படையினர் வந்த போது தரையிலிருந்து 500 யார் தொலைவில் வைத்து பின்னால் வந்த இரண்டாவது படகு மீது உந்துகணை செலுத்தி (ஆர்பிஜி) மூலம் உந்துகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்தப் படகு நகராமல் நிற்க முன்னால் வந்த படகு அதைக் கட்டியிழுத்துச் செல்ல முற்பட்டது. அப்போது அப்படகு மீது புலிகள் சுடுகலச் சூடு நடத்தினர். பின்னர் படையினர் மேலும் மூன்று படகுகளில் வந்து சேதமடைந்த படகைக் கட்டியிழுத்துச் சென்றனர். சேதப்பட்ட (சிறிய) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: படகு (விதப்பான கல வகை அறியில்லை) சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புறாக்கள்: இல்லை ஆதாரம்: உதயன்:09/11/1990 ******