Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33047
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    88827
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33381
    Posts
  4. valavan

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    1582
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/30/23 in Posts

  1. ஓயாத நிழல் யுத்தங்கள் – 1 இது வரை இரு உலகப் போர்களை உலகம் கண்டிருக்கிறது. இவற்றுள் இரண்டாவது உலகப் போரின் பின்னர் இரு துருவங்களாக உருவான தேசங்கள் பனிப்போர் எனப்படும் நிழல் யுத்தங்களில் ஈடுபட்டதன் தாக்கம் இன்றும் உலகின் அரசியல், பூகோள நிலைமைகளில் எதிரொலிக்கிறது. அமெரிக்காவின், ஐரோப்பாவின் சில நகரங்களில் இன்றும் பனிப்போர் காலக் கட்டமைப்புகள் - அணுவாயுதத் தாக்குதலில் இருந்து காக்கும் காப்பரண் கட்டிடடங்கள்- நிலைத்திருக்கின்றன. 90 இற்குப் பிறந்த இளவல்களுக்கு இந்தக் கட்டிடங்கள் பற்றி எதுவும் தெரியாது. 90 களில் வயசுக்கு வந்த (சுவியர் சில சமயங்களில் குறிப்பிடும் 90’s kids) எங்கள் போன்றோருக்கு பனிப்போரின் முடிவு காலம் ஒரு “வாழ்ந்த அனுபவம்”. தனிப்பட்ட ரீதியில், என் வாசிப்பார்வத்தை வளர்த்ததில் பனிப்போருக்கு பெரிய பங்கிருக்கிறது. இதை ஒரு தட்டையான வரலாறாகச் சொல்லி விட முடியாது. ஆனால், அந்தக் காலங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் சார்ந்து முப்பரிமாணச் சித்திரமாக எங்கள் நினைவுகள் இருக்கின்றன. இவை சார்ந்து சில கட்டுரைகளை தனித்தனியாக எழுதும் முயற்சி இது. இதன் மூலம் உலக வரலாற்று வாசிப்பையும், பகிர்வையும் ஊக்குவிக்கும் ஒரு சிறு முயற்சி. இரு முன்னறிவித்தல்கள்: 1. இது மிகவும் மெதுவாக நகரப் போகும் ஒரு முயற்சி, எழுதுபவருக்கு வேறு வேலைகள் இல்லாமல் வெட்டியாக இருக்கக் கிடைக்கும் போது மட்டும் இது எழுதப் படும். 2. இந்தத் தொகுப்பில் இணைக்கும் படங்கள் அனேகமாக அமெரிக்க ஆவணக்காப்பகத்தில் (National Archives) இருந்து எடுக்கப் பட்டவையாக இருக்கும். இதன் அர்த்தம், அமெரிக்கா சொல்வதை மட்டும் விபரிக்கும் நோக்கமல்ல. இந்த ஆவணக்காப்பகத்தில் தான் பெரும்பாலான அரிய புகைப்படங்கள் பதிப்புரிமையில்லாமல் பயன்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன. கொரியா ஜூன் ஜூலை மாதங்கள் கொரிய தீபகற்பத்திற்கு முக்கியமான மாதங்கள். ஜூன் மாதம் 25, 1950 இல் கொரிய நேரப்படி அதிகாலையில் வடகொரியாவின் படைகள் சத்தமில்லாமல் எல்லையைத் தாண்டி தென் கொரிய தலை நகர் நோக்கி நகர்ந்தன. இது ஏன் முக்கியமெனில், இரண்டாம் உலகப் போரின் பின்னர், உலகில் முதன் முதலாக ஒரு நாட்டின் படைகள் எல்லை தாண்டி இன்னொரு அயல் நாட்டினுள் நுழைவது இது தான் முதல் தடவை. 3 ஆண்டுகள் கழித்து, பல இலட்சம் அமெரிக்க, கொரிய, மற்றும் சீனப் படைகள் உள்ளடங்கிய தரப்புகள் பலியான பின்னர் ஜூலை 27, 1953 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கொரிய யுத்தம் முடிவுக்கு வந்தது. எப்படி இரு கொரியாக்கள் உருவாகின? ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த கொரியாவை, இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் தற்காலிகமாக சோவியத்தும், அமெரிக்காவும் பாதியாகப் பிரித்து அங்கேயிருந்து சரணடைந்த ஜப்பானியப் படைகளை அகற்றுவது எனத் தீர்மானிக்கப் பட்டிருந்தது. இதை எப்படிச் செய்வதென யோசித்துக் கொண்டிருக்கும் போதே, சோவியத் நாடு தன் படைகளை வட கொரியாவில் நிலை நிறுத்த ஆரம்பித்தது. அவசர அவசரமாக அமெரிக்கா தன் படைகளை தெற்கில் குவிக்க ஆரம்பித்தது. கொரிய தீபகற்பம், 38thparallel சமாந்தரக் கோடு எனப்படும் latitude இன் படி வட, தென் கொரியாக்களாக உருவானது. இதன் பின்னர், 1946 இல் தற்போதிருக்கும் (கோசானின் தெய்வமச்சான்) கிம்மின் தாத்தா கிம் இல் சங் வட கொரியாவில் கம்யூனிச ஆட்சியை நிறுவியதுடன் அந்த 38 சமாந்தர எல்லைக் கோடும் அப்படியே நிரந்தர எல்லையாக நிலைத்து விட்டது. இந்த எல்லையைத் தாண்டித் தான் 1950 இல் வட கொரிய படைகள் தெற்கை ஆக்கிரமிக்க முனைந்தன. இந்த வடகொரிய ஆக்கிரமிப்பிற்கு ஒரு பின்கதை இருக்கிறது - இது ஒரே இரவில் நிகழ்ந்த ஒரு திடீர் நடவடிக்கையல்ல. உலகப் போர் முடிந்த பின்னர் 1948 இல், பசுபிக் பிராந்தியத்திலிருந்து அமெரிக்கா தன் பெருமளவிலான படைகளை அகற்றி விட்டிருந்தது. ஜப்பான், பிலிப்பைன்ஸ் தளங்களில் மட்டும் அமெரிக்க படைகள் இருந்தன, ஆனால் பாரிய யுத்த தயாரிப்புகள் இருக்கவில்லை. இதைக் கவனித்த வட கொரியாவின் கிம் இல் சங், ஸ்ராலின் தெற்கை ஆக்கிரமிக்க தங்களுக்கு உதவ வேண்டுமெனத் தொடர்ந்து நச்சரித்து வந்தார். முதலில் மறுத்த ஸ்ராலின், ஒரு கட்டத்தில் அனுமதியும் கொடுத்து தனது இராணுவ ஜெனரல்களைத் தாக்குதல் திட்டம் தயாரிக்கவும் வழங்கினார். பின்னர் படிப்படியாக, சோவியத் ஆயுதங்கள், விமானத் தாக்குதல் பாதுகாப்பு என்பனவும் சோவியத் மூலம் கிடைத்தன வட கொரியாவிற்கு. இதையெல்லாம் இன்னொரு கம்யூனிசத் தலைவர் பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்: சீனாவின் மாவோ சே துங் தான் அவர். மாவோ, ஸ்ராலினை உலக கம்யூனிசப் பிதாமகராக ஏற்றுக் கொள்வதைத் தந்திரமாகத் தவிர்த்து வந்த ஒருவர். 1950 இல் தான் மாவோ தன் கம்யூனிச ஆட்சியை சீனாவில் ஓரளவுக்கு நிலை நாட்டி விட்டு, தப்பிப் போய் போர்மோசா (Formosa) தீவில் (இன்று தாய்வான் என்று அழைக்கப் படும் தீவு) தனிதேசம் அமைத்திருந்த போட்டிக் குழுவை நோக்கிப் பாய திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் கிம் இல் சங் ஸ்ராலினை நெருங்கி தெற்கைத் தாக்க அனுமதியும் உதவியும் பெற்று, மாவோவின் கனவுக்கு மறைமுக ஆப்பு வைத்திருக்கிறார். அமெரிக்க வடிவில் வந்த ஆப்பு கிம் இல் சங், மாவோவிற்கு வைத்த இந்த மறைமுக ஆப்பு அமெரிக்கக் கடற்படையின் வடிவில் வந்திறங்கியிருந்தது. "தாய்வானிற்கு இராணுவ ரீதியில் உதவப் போவதில்லை" என்ற முடிவை எடுத்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரூமன், வட கொரியாவின் ஆக்கிரமிப்பை முறியடிக்க ஒரு மட்டுப்படுத்தப் பட்ட "பொலிஸ் நடவடிக்கையை" அனுமதித்தார் (இந்தப் பதத்தில் இருந்து தான் பின்னாளில் அமெரிக்கா "உலக பொலிஸ்காரன்" என்ற சொற்பதம் உருவாகியிருக்கக் கூடுமென நினைக்கிறேன்). அதே நேரம், இந்த நடவடிக்கையில் அமெரிக்கா கவனம் செலுத்தும் போது, மாவோ தாய்வானை நோக்கிப் படையெடுக்கக் கூடும் என்ற ஊகத்தில், அமெரிக்க கடற்படையின் 7வது கப்பற் படையை (7th Fleet) தாய்வான் சீனா எல்லையில் தொடர் ரோந்து செய்யவும் ட்ரூமன் கட்டளை பிறப்பித்திருந்தார். இது தான் மாவோ, 1950 இல் தாய்வானை நோக்கி சீன மக்கள் இராணுவத்தை ஏவாமல் தவிர்த்தமையின் பிரதான காரணம். வடகொரியாவின் மீது நடவடிக்கை எடுத்த ஐ.நா பாதுகாப்புச் சபை இன்று ஐ.நா பாதுகாப்புச் சபை உலக வல்லரசுகளின் போட்டிக் களமாக திகழ்கிறது. ஆனால், 1950 இல் உருவாக்கப் பட்ட புதிதில், உண்மையாகவே உலக சமாதானம், பாதுகாப்பு என்பவற்றைப் பேணும் அதன் பணியை சீரியசாகச் செய்ய முயன்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்த அடிப்படையில், இதன் முதல் பணியாக, வட கொரியா மீது நடவடிக்கை எடுத்து தென்கொரியாவை விட்டு படைவிலகலைக் கோரும் தீர்மானத்தை ஏகமனதாக ஐ.நா பாதுகாப்புச் சபை எடுத்தது. ஆனால்,கொஞ்சம் நிதானித்து இந்த தீர்மானத்தை ஆராய்ந்தால், இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேறவும் சோவியத் நாடு தான் மறைமுகக் காரணமாக இருந்தது என்பதைக் காணலாம். 50 களில் இருந்த ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக (எனவே வீட்டோ அதிகாரமுடைய நாடுகள்) அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனக் குடியரசு, சோவியத் நாடு என்பன இருந்தன. இங்கே “சீனக் குடியரசு” என்பது தாய்வானில் இருந்த, மேற்கு ஏற்றுக் கொண்ட சீனா, தற்போதிருக்கும் “மக்கள் சீனக் குடியரசு” அல்ல என்பதைக் கவனிக்க வேண்டும். கம்யூனிச சீனாவான மக்கள் சீனக் குடியரசை, ஐ.நா அங்கீகரிக்காமல் இருந்ததை எதிர்த்து, சோவியத் நாடு ஐ.நா பாதுகாப்புச் சபையை பகிஷ்கரித்துக் கொண்டிருந்த காலப் பகுதியில் தான், வட கொரியா மீது படையெடுக்கும் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்புச் சபை எடுத்தது. எனவே, ஸ்ராலின் ஒரு பக்கம் கிம் இல் சங்கிற்கு தெற்கை ஆக்கிரமிக்க உதவி செய்தபடியே, ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் வட கொரியா மீதான எதிர் நடவடிக்கையை தடுக்காமலும் விட்டிருக்கிறார். இது முட்டாள் தனமென சில ஆய்வாளர்கள் சொல்கின்றனர். ஆனால், ஸ்ராலினின் நடவடிக்கைகளின் பின்னால் இன்னொரு உள் நோக்கம் இருந்திருக்கலாம். மேற்கு ஐரோப்பாவில் கண் வைத்திருந்த சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடனேயே, சோவியத் ஒன்றியமும், மேற்கும் கொள்கையளவில் இரு துருவங்களாக உருவாகின. இந்த விரிசல்கள், ஐரோப்பாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக நடத்தப் பட்ட பொற்ஸ்டாம் (Potsdam Conference) மாநாட்டிலேயே வெளிப்பட ஆரம்பித்து விட்டன. சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பாவை மட்டுமன்றி, மேற்கு ஐரோப்பாவையும் கம்யூனிச குடையின் கீழ் கொண்டு வரும் ஆர்வத்தில் காய் நகர்த்தியது. இதற்கு மிகச் சிறந்த சாட்சியமான சம்பவம் கொரிய யுத்தம் ஆரம்பிப்பதற்கு சரியாக இரு ஆண்டுகள் முன்னர், ஜூன் 1948 இல் சோவியத் ஒன்றியம் மேற்கு பேர்லினிக்கான வினியோகப் பாதைகளை ஒரு தலைப்பட்சமாக மூடிய நிகழ்வு. நேட்டோ அமைப்பு உருவாக வித்திட்ட இந்த நிகழ்வை, ஒரு தனிக் கட்டுரையில் பின்னர் பேசலாம். சுருக்கமாகச் சொன்னால், மேற்கின், அமெரிக்காவின் படைகளை ஐரோப்பாவில் இருந்து, தொலைவிலிருக்கும் கொரியா நோக்கிப் போக வைத்தால், தனது மேற்கு ஐரோப்பா நோக்கிய விரிவாக்கம் இலகுவாகலாம் என்ற ஸ்ராலினின் கணிப்பும் வட கொரியாவை அவர் யுத்தமொன்றை நோக்கித் தள்ளக் காரணமாக இருந்தது. சுதாரித்து, வென்று பின் தோற்ற மேற்கு இஞ்சொன் தரையிறக்கத்தின் போது அமெரிக்கப் படையினர். எழுபதாயிரம் அமெரிக்க மரைன்கள், 200 இற்கு மேற்பட்ட கடற்கலங்களில் தரையிறங்கிய இந்த தாக்குதல். பட உதவி நன்றியுடன்: அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம். ஐ.நா வட கொரியா மீது பொலிஸ் நடவடிக்கையை எடுத்த போதும், ஐ.நா படைகளின் பிரதான அணியாக அமெரிக்காவின் படைகளே விளங்கின. அமெரிக்காவோடு, தென்கொரியாவின் இராணுவமும் சம எண்ணிக்கையில் நடவடிக்கையில் இணைந்தது. தெற்கின் உள்ளே நன்கு ஊடுருவி விட்ட வட கொரிய இராணுவத்தை நேரடியாக அவர்களுக்குப் பரிச்சயமான நிலப்பரப்பில் எதிர் கொள்வது தற்கொலைக்குச் சமன் என அமெரிக்க இராணுவ வல்லுனர்கள் கருதினர். இந்த சந்தர்ப்பத்தில் தான், பசுபிக் பிராந்தியத் தளபதியாக இருந்த ஜெனரல் மக் ஆர்தரின் இராணுவ அனுபவம் மீண்டும் பயன்பட்டது. நோர்மண்டி தரையிறக்கம் போல, ஆனால் எண்ணிக்கையில் சிறிதாக, வட கொரிய படைகளின் பக்க வாட்டில் அமெரிக்க மரைன் டிவிஷன் ஒன்றை 1950 செப்டெம்பரில் இன்ஞொன் (Inchon) என்ற பகுதியில் மக் ஆர்தர் தரையிறக்கினார். இஞ்சொன் தரையிறக்கம் நோர்மண்டி போல பெரிதாகப் பேசப்படா விட்டாலும், பல வழிகளில் அது நோர்மண்டியை விட வெற்றிகரமானதாகக் கருதப் படுகிறது. ஒரு நாளில் இஞ்சொன் அமெரிக்க மரைன்களிடம் வீழ்ந்து, அடுத்த 11 நாட்களில் வட கொரிய படைகள் சியோலில் இருந்து பின்வாங்கி வடக்கு நோக்கிப் பின்வாங்க ஆரம்பித்தமைக்கு இஞ்சொன் தரையிறக்கம் தான் மூலக் காரணி. 1950 ஒக்ரோபர் 1 ஆம் நாள், ஐ.நா வின் கட்டுப்பாட்டில் தென் கொரியா வந்தது. 38 வது அகலாங்கு எல்லை மீண்டும் வட, தென்கொரியாக்களின் எல்லையாக உருவானது. அடுத்து நடந்த நிகழ்வுகள், அபரிமித வெற்றியுணர்வு எப்படி தோல்விகளுக்கு வழி வகுக்கும் என்பதைப் பற்றிய ஒரு பாடம்! ஜெனரல் மக் ஆர்தர், வட கொரியப் படைகளை, வடக்கு நோக்கி மேலும் துரத்திச் செல்ல வாஷிங்ரனிடம் அனுமதி கேட்கிறார். இதன் மூலம், வட கொரிய இராணுவ பலத்தை நிரந்தரமாக அழித்து, வட - தென் கொரியாக்களை ஒரே தேசமாக இணைப்பதே நோக்கம். இது நிகழ்ந்தால், சோவியத் ஒன்றியத்திற்கும், சீனாவுக்கும் மிக நெருக்கமாக ஒரு மேற்கின் இராணுவப் பிரசன்னம் உருவாகும். இதை, சோவியத் ஒன்றியமும், சீனாவும் எப்படி எதிர் கொள்ளும் என்ற கேள்வியைக் கேட்டு பதிலைத் தேட அமெரிக்காவின் பாதுகாப்புக் கட்டமைப்பில் யாருக்கும் தோன்றவில்லை அப்போது. இதன் பிரதான காரணம், வட கொரியாவை நிரந்தரமாக ஆக்கிரமிக்க அமெரிக்க அரசியல் தலைமைகள், மற்றும் பொதுமக்கள் அமைப்புகளின் ஆதரவு இருந்திருக்கிறது. அமெரிக்கா இந்த தொடர் இராணுவ நடவடிக்கைக்கு பச்சைக் கொடி காட்டியதோடு, ஐ.நாவும் வட தென் கொரியா என்ற பதங்களைத் தவிர்த்து "முழுக் கொரியாவிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்" என மறைமுகமாக கொரியாக்களை இணைப்பதற்கு ஆதரவு தெரிவித்தது. எனவே, குறுகிய காலத்தில், 38 வது அகலாங்கு எல்லையைக் கடந்து , வட கொரியாவின் பியொங் யாங்கை அமெரிக்கப் படைகள் கைப்பற்றின. தொடர்ந்து, வட கொரிய - சீன எல்லையில் இருக்கும் யாலு நதி நோக்கியும் அமெரிக்க இராணுவம் நகர ஆரம்பித்த போது சீனா தன் பங்களிப்பைத் தீவிரமாக்கியது. சீனாவின் "கம்யூனிசத் தொண்டர்கள்" “கம்யூனிசத் தொண்டர் படை” என்பது தான், சீனா வட கொரியாவினுள் அனுப்பிய தன் சீன மக்கள் இராணுவத்திற்கு இட்ட பெயர். சீனாவிடம் ஆட்பலம் - மூன்று இலட்சம் படையினர் வரை- இருந்த அளவுக்கு தொழில் நுட்பம் இருக்கவில்லை. ஆனால், வடக்கு நோக்கி நகர்ந்த ஐ.நா படைகளை (பெருமளவுக்கு அமெரிக்க படைகள்) தங்கள் அலை அலையான ஆட்பலம் மூலம் சீன இராணுவம் துவம்சம் செய்ய ஆரம்பித்தது. அமெரிக்கர்களுக்கு இருந்த பிரதான பலம் விமானப் படை. இந்த அமெரிக்க வான்படை மேலாண்மையை ஈடு கட்ட, சோவியத் ஒன்றியம் தன் “மிக்” ஜெற் விமானங்களைப் பயன்படுத்தி யாலு நதிப் பகுதியில் மட்டும் தனது சொந்த விமானிகளை வைத்து நடவடிக்கைகளில் ஈடு பட்டது. எனவே நடைமுறையில், இது அமெரிக்க, சோவியத், சீனப் படைகளிடையேயான போர் என்றாலும், மூன்றாம் உலகப் போர் உருவாகும் ஆபத்தைத் தவிர்க்க மூன்று நாடுகளும் இதனை வெளிப்படையாக அறிக்கையிடவில்லை. இறுதியில், 3 வருடங்கள் முன்னகர முடியாத பதுங்கு குழி யுத்தத்தை எதிர் கொண்ட ஐ.நா படைகள், பின்வாங்கி 38 வது அகலாங்குக் கோட்டு எல்லையில் மீண்டும் பிரிக்கப் பட்ட கொரியாவை ஏற்றுக் கொண்டதோடு, கொரியப் போர் ஜூலை 27, 1953 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. ஜூலை 27, 1953 இல், ஐ.நா படைகளின் தளபதியான அமெரிக்க ஜெனரலும், வட கொரிய இராணுவ ஜெனரலும் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டதோடு கொரிய யுத்தம் ஓய்வுக்கு வந்தது. பட உதவி நன்றியுடன்: அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம். போரில் இருந்து உதித்த நாயகர்களும் வில்லன்களும் கொரிய யுத்தம் அமெரிக்காவிற்கு பாதகமாகத் திரும்பிய போது, ஜப்பான் மீது அணுவாயுதத் தாக்குதலை எதிர்த்த மக் ஆர்தர், சீனாவின் மீது அணுவாயுதம் பயன்படுத்த வேண்டுமென்று வாதிட ஆரம்பித்தார். ஆனால், 1945 இல் ஜப்பான் நிலையும், 1950 களில் கொரிய நிலையும் ஒன்றல்ல என்ற தெளிவான பார்வையோடிருந்த அமெரிக்க அதிபர் ட்ரூமன், மக் ஆர்தரின் கோரிக்கையை நிராகரித்து, போரை விரைவாக முடித்து வைக்க விரும்பினார். இதற்காக ஒரு கட்டத்தில், ட்ருமன் ஜெனரல் மக் ஆர்தரை அவரது பசுபிக் கட்டளைத் தளபதி பதவியிலிருந்து நீக்கவும் வேண்டியிருந்தது. இதன் பின்னரே, கொரிய தீபகற்பத்தின் போர் வெப்பம் ஓரளவு தணிந்து, போர் ஓய்வுக்கு வந்தது. மறுபக்கம், ஸ்ராலின் மார்ச் 1953 இல் இறந்து போக, ஸ்ராலினை விட சிறிது வித்தியாசமான பார்வை கொண்ட குருசேவ் சோவியத் தலைவரானார் - இதுவும் கொரியாவில் சோவியத்தின் பங்களிப்பை மாற்றியது என்கிறார்கள். சீனாவின் மாவோவும், வட கொரியாவின் கிம் இல் சங்கும் தங்கள் கம்யூனிச ஆட்சியை உள்நாட்டில் பலப்படுத்திக் கொண்டனர். இரு கொரியாக்களுக்குமிடையேயான 38 வது அகலாங்கு எல்லை, பனிப்போரில் ஒரு முக்கிய எல்லைக் கோடாக நிலைத்து, இன்றும் தொடர்கிறது. - முற்றும்
  2. இந்தப் படங்களையும் சம்பவங்களையும் மக்கள் விடுதலை முன்னணியினர் மறந்து மறைத்து இப்போ எதோ தாங்கள் தான் தமிழருக்கு உரிமை கொடுகப் போகிறவர்கள் மாதிரி நடிக்கிறார்கள்.
  3. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்ற மாதிரி, மீனுக்கு இரண்டு பக்கமும் பிடி. அருமையான புகைப்படம், சுவியர். 🙂
  4. அமைச்சரவைக் கூட்டம் கறுப்பு யூலை நடந்த பிரதேசங்கள் நாட்டில் தமிழர்கள் மீது தனது அமைச்சர்களினாலும், தனது கட்சிக் குண்டர்களாலும், அரச படைகளினாலும் நடத்தப்பட்டுவந்த வன்முறைகளைப் பற்றி கிஞ்சித்தும் கலவரப்படாத‌ ஜெயவர்த்தன வழமைபோல தனது வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தை புதன்கிழமை காலை நடத்தினார். கூட்டத்தில் பேசிய அமைச்சர்கள் அனைவரும் அமிர்தலிங்கத்தையும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் துரோகிகள் என்று வசைபாடியதுடன், கலவரங்களைத் தூண்டியவர்கள் என்றும் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கத்தைக் கைதுசெய்யவும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியைத் தடைசெய்யவும் வேண்டுமென்று சிறில் மத்தியு அங்கே கேட்டுக்கொண்டார். அமைச்சர்களான காமிணி ஜயசூரியவும் ரஞ்சித் அத்தப்பத்துவும் அவரை ஆதரித்துப் பேசினர். கலவரங்களினால் தனது சிங்கள மக்கள் எவ்வாறான அவலங்களை அனுபவிக்கிறார்கள் என்று இரக்கமாகப் பேசிய லலித் அதுலத் முதலி, தனது இன மக்கள் வரிசையாக தெருக்களில் பாண் வாங்குவதற்கு நின்ற காட்சி தன்னை மிகவும் பாதித்ததாகக் கூறினார். தனது அமைச்சினூடாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்களின் சேமிப்புக் கிட்டங்கிகளில் இருந்த உணவுப்பொருட்களை தான் கிரமமாக அனுப்பிவைத்து சிங்கள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தது குறித்துத் தான் பெருமைப்படுவதாகக் கூறினார் லலித். அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ஜெயார், நாட்டினைத் துண்டாட செயற்படும் அல்லது தூண்டும் எந்தவொரு தனிநபரையோ அல்லது கட்சியையோ தடைசெய்யும் சட்டத்தினை அரசியலமிப்பில் சேர்க்கப்போவதாகக் கூறினார். அரசியலமைப்பிற்கெதிராக‌ச் செயற்படும் எவருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்படுவதோடு அவர்களின் அனைத்துச் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார். இப்படிச் செய்வதனூடாக சாதாரண சிங்கள மக்களின் மனங்களில் எழுந்துவரும் ஆத்திரத்தினை அடக்கமுடியும் என்றும் அவர் நியாயப்படுத்தினார். ஆனால், ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுப்போன தமிழ் மக்கள் குறித்த வருத்தத்தினை ஜெயாரோ அல்லது அவரின் சிங்கள அமைச்சர்களோ தெரிவிக்க‌ விரும்பவில்லை. சிறுபான்மையினங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் இரு அமைச்சர்களான ஏ.சி. எஸ் ஹமீதும், தொண்டைமானும் ஜெயாரின் யோசனையினை எதிர்த்தனர். அரசியலமைப்பில் ஏற்படுத்தப்படும் மாற்றம் விபரீதமாகவே முடியப்போகிறது என்று ஹமீத் அரசை எச்சரித்தார். தமிழர்களை இது மேலும் உறுதிப்படுத்தும், அவர்களை கட்டுப்படுத்த முடியாது போய்விடும் என்று அவர் கூறினார். "நீங்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை பாராளுமன்றத்திற்கு வெளியே தள்ளிவிட்டு யாருடன் பேசப்போகிறீர்கள்? உங்களின் செயல்களால் இந்தியாவை உள்ளே இழுத்துவிடப்போகிறீர்கள்" என்று அவர் கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைத் தடைசெய்வதனூடாக தமிழ் மக்களை ஒதுக்கிவிடப்போகிறீர்கள். இது ஆயுத அமைப்புக்களை மேலும் பலப்படுத்தப் போகிறது என்று தொண்டைமான் கூறினார். "தமிழ் மிதவாதிகளைப் பலவீனப்படுத்துவதனூடாக தமிழ் ஆயுத அமைப்புக்களைப் பலப்படுத்த விரும்புகிறீர்களா?" என்று அவர் அரசாங்கத்தைப் பார்த்துக் கேட்டார். மக்கள் விடுதலை முன்னணியினரின் பேரணி ஒன்று. இனவாதப் பிக்குவான எல்லே குணவன்ச தேரை உரையாற்ற அவரின் வலதுபுறத்தில் இன்னொரு பெயர்போன இனவாதியான மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச. ஆனால், ஜெயவர்த்தனவோ அல்லது அவரின் அமைச்சர்களோ தொண்டைமானினதும் ஹமீதினதும் கருத்துக்களைச் செவிசாய்க்கும் நிலையில் இருக்கவில்லை. தாம் செய்யவேண்டியது குறித்து அரசாங்கம் தீர்க்கமாக இருந்ததுடன், அவற்றை நடைமுறைப்படுத்துவது பற்றியே அவர்களின் சிந்தனையெல்லாம் இருந்தது. தமிழர்களைப் பலவீனப்படுத்தி, அவர்களை அடிமைப்படுத்தும் நோக்கத்தைத்தவிர வேறு எதுவும் அவர்களின் சிந்தனையில் இருக்கவில்லை. ஆகவே, தான் திட்டமிட்டது போலவே அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அமைச்சர் லலித் அதுலத் முதலியையும், அமைச்சரவைச் செயலாளரான சமரசிங்கவையும், சட்ட வரைஞரான ரொட்றிகோவையும் ஜெயார் பணித்தார். பின்னர் காமிணியின் பக்கம் திரும்பி, பெளத்த பெரமுன எனும் அதிதீவிர சிங்கள பெளத்த கட்சியின் இனவாதப் பேச்சாளரான எல்லே குணவன்ச தேரவவுடன் சந்திப்பொன்றினை ஒழுங்குசெய்யுமாறும் கேட்டுக்கொண்டார் . அதன்பின்னர் அமைச்சரவையில் பேசிய ஜெயார், சிறைச்சாலைப் படுகொலைகள் சர்வதேசத்தில் அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தார். ஆகவே, மீதமிருக்கும் தமிழ்க் கைதிகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்றிவிட வேண்டும் என்று அவர் கூறினார். உடனடியாக இதனை மறுத்த அமைச்சர்களான அதுலத் முதலி, சிறில் மத்தியூ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர், யாழ்ப்பாணத்திற்கு இவர்கள் மாற்றப்படும் பட்சத்தில் அவர்கள் தப்பியோடிவிடுவார்கள் என்று கூறினர். அதற்குப் பதிலளித்த ஜெயார், தனது உடனடியான கவலை என்னவென்றால் இரண்டாவது படுகொலையொன்றினைத் தடுப்பதுதான் என்று கூறினார். கூட்டத்தின் முடிவில் தமிழ்க் கைதிகளை மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு மாற்றலாம் என்று ஜெயார் முடிவெடுத்தார். அன்று பிற்பகல் கூடிய தேசிய பாதுகாப்புக் கூட்டம், அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவதென்று முடிவெடுத்தது. சிறைச்சாலை உதவி ஆணையாளர் ஜான்ஸும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். "இதுவரை நீங்கள் முகம்கொடுத்த பிரச்சினைகளினால் நிறையவே களைத்துப் போயிருப்பீர்கள்" என்று ஜான்ஸைப் பார்த்து ஜெயார் கூறினார். பின்னர் கூட்டத்திலிருந்தவர்களைப் பார்த்து ஜான்ஸிற்கு குளிர்பானம் ஒன்றை வழங்குமாறு பணித்தார். ஜான்ஸுடன் பேசிய ஜெயார், அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி கொழும்பில் தமிழ்க் கைதிகளைத் தொடர்ந்தும் வைத்திருப்பது பாதுகாப்பானது அல்ல என்பதனால் அவர்களை மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு விமானம் மூலம் கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகளைச் செய்யுமாறு கூறினார். இராணுவத்தின் பிரிகேடியர் மனோ மடவெலையுடன் இணைந்து இச்செயற்பாட்டினை முன்னெடுக்குமாறு அவரைப் பணித்தார். ஜான்ஸ் மாலை 4:15 மணிக்கு சிறைச்சாலைக்குத் திரும்பினார். தமிழக் கைதிகள் மீதான இரண்டாவது படுகொலைகள் அப்போது ஆரம்பித்திருந்தன. அவர் உடனடியாக பிரிகேடியர் மடவெலைக்குத் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார். அப்போது ஜெயாருடன் பேசிக்கொண்டிருந்த பிரிகேடியர் மடவெலை, நிலைமையினை விளக்கி ராணுவக் கொமாண்டோ அணியின் சிறந்த அதிகாரியான சுனில் பீரிஸை சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி கொமாண்டோ அணி ஒன்றுடன் சுனில் பீரிஸ் சிறைச்சாலைக்குக் கிளம்பிச் சென்றார். வழமை போல சிறைக்கைதிகளுக்கு மாலை 4 மணிக்கு இரவுணவு பரிமாறப்பட்டது. தேவாலயப் பகுதியில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளுக்கான உணவினை மேற்பார்வையாளர் டொன் அல்பிரெட் வழங்கினார். அல்பிரெட் தன்னுடன் ஒரு சாவிக் கொத்தை வைத்திருப்பது வழமையானது. சி 3, டி 3 ஆகிய பகுதிகள் வெறுமையாகிவிட்டதனால், ஏ 3 பிரிவின் வாயிலுக்கு அவர் உணவினைக் கொண்டு சென்றார். இப்பகுதியிலேயே மிகவும் ஆபத்தான கைதிகளும், தப்பியோட எத்தனித்த கைதிகளும் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். அப்பகுதியின் சிறைக்கதவினைத் திறந்துவிட்ட மேற்பார்வையாளர், கைதிகளை வந்து தமது உணவினைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறினார். காவலுக்கு அருகில் ஒரு காவலாளியும் நின்றிருந்தார். இரண்டாவது விசாரணை நடைபெற்ற ஜூலி 28 ஆம் திகதி சாட்சியமளித்த மேற்பார்வையாளர் அல்பிரெட், தான் கதவினைத் திறந்தவுடன் வெளியே பாய்ந்துவந்த சிங்களக் கைதிகள் தன்னைப் பிடித்துக்கொண்டு சாவிக்கொத்தைப் பறித்ததாகவும், தொலைபேசியைப் பிடுங்கி எறிந்ததாகவும், தன்னுடன் காவலுக்கு நின்ற காவலாளையைத் தாக்கி கீழே வீழ்த்திவிட்டு மாடிநோக்கி ஓடியதாகவும் கூறினார். ஓடும்பொழுது ஏனைய சிங்களக் கைதிகளையும் தம்முடன் சேர்ந்துகொள்ளுமாறு அவர்கள் அழைத்ததாகவும் கூறப்பட்டது. சிறைச்சாலையில் தொழிநுட்ப வகுப்புக்களை நடத்திவந்த ஆசிரியர் திலகரட்ண பேசும்போது, அன்று தாக்குதலுக்குத் தலைமை தாங்கியவர்கள் நேராக உபகரணங்கள் சேகரித்துவைக்கப்படும் அறைநோக்கிச் சென்று, கதவினை உடைத்து அங்கிருந்த இரும்புக் கம்பிகள், கோடரிகள், வாட்கள் மற்றும் தோட்டம் செய்வதற்கென்று பயன்படுத்தப்பட்டு வந்த கூரான ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, 28 தமிழ்க் கைதிகளும் 9 தொழில்சார் வல்லுனர்களும் அடைக்கப்பட்டிருந்த கட்டடம் நோக்கி ஆவேசத்துடன் ஓடிச்சென்றதைக் கண்டதாகக் கூறினார். தேவாலயப் பகுதியிலிருந்துசுமார் 50 மீட்டர்கள் தொலைவிலேயே இளவயது கைதிகளுக்கான கட்டடம் அமைக்கப்பட்டிருந்தது. அக்கட்டடத்தை சுற்றி இரண்டு மீட்டர்கள் உயரம் கொண்ட மதில் அமைக்கப்பட்டிருந்தது. சிறைச்சாலையின் பிரதான வாயிலுக்கு நேர் எதிராக இக்கட்டடத்தின் வாயில் அமைக்கப்பட்டிருந்ததோடு, அக்கதவினைத் தள்ளித் திறக்கும் வகையிலும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வாயிலில் காவலுக்கு நின்ற‌ காவலாளி டொன் நிக்கொலஸ் பேசுகையில், ஆயுதம் தாங்கிய கைதிகள் சுற்றுமதிலினால் ஏறி உட்புறம் குதிக்க, அவர்களைத் தொடர்ந்து ஏனைய கைதிகளும் உள்ளே நுழைந்ததாகவும், அவர்கள் வாயிற்கதவினை உடைத்துத் திறந்ததாகவும் கூறினார். தன்னை இறுகப் பிடித்துக்கொண்ட சில கைதிகள், தான் வைத்திருந்த சாவிக்கொத்தினை பலவந்தமாகப் பறித்துக்கொண்டதாக அவர் மேலும் கூறினார். அந்தச் சாவிகளைக் கொண்டு அக்கட்டத்தின் பிரதான கதவினை திறந்த சிங்களக் கைதிகள் தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்த அறைகள் நோக்கி ஓடிச்சென்றதைக் கண்டதாக அவர் கூறினார். முதலாவது தொகுதி சிங்களக் கைதிகள் அக்கட்டத்தின் கீழ்ப்பகுதியில் 28 தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் நுழைய இன்னொரு பகுதி சிங்களக் கைதிகள் கட்டடத்தின் மேற்பகுதிக்குள் நுழைந்தார்கள். தமிழர்களைக் கொல், தமிழர்களைக் கொல் என்று ஆக்ரோஷமாகக் கத்தியபடி அப்பகுதியில் தமிழர்களைத் தேடத் தொடங்கியது அக்குழு. நடப்பது என்னவென்பதை உணர்ந்துகொண்ட 28 தமிழ்க் கைதிகளும் தமது சிறைக்கதவுகளை உட்புறமாகப் பூட்டிக்கொண்டார்கள். அப்பகுதியின் அறைகள் சிலவற்றில் ஒருகைதியும், இன்னும் சிலதில் மூன்று கைதிகளும் அடைக்கப்பட்டிருந்தார்கள். மேலும், அந்தக் காவலாளி கூறுகையில் கீழ்த்தளத்திற்குச் சென்ற சிங்களவர்கள் அங்கிருந்த தமிழர்களைக் கொல்லப்போவதாக அச்சுருத்திக்கொண்டதைத் தான் கண்டதாகவும் கூறினார்.
  5. வாகனங்களில் தமிழர்களைக் கொழுத்திய சிங்களக் காடையர்கள் ‍- தொடரும் இனக்கொலை ஜூலை 1983 கண்டியில் திங்கட்கிழமையும், செவ்வாய்க்கிழமை காலையும் சுமூகமான நிலைமை நிலவியது.ஆனால், செவ்வாய் மதியத்திற்குப் பின்னர் அங்கும் சிங்களவர்களால் தமிழர் மீதான வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டன. கண்டி மாவட்டத்தின் உதவிப் பொலீஸ் மா அதிபர் பிராங்க் டி சில்வா மேலதிகமான பொலீஸாரை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தினார். செவ்வாயன்று சந்தைப்பகுதியில் திடீரென்று கூட்டம் ஒன்று கூடுவதை அவர் அவதானித்தார். ஆகவே, அவர்களை கலைந்துபோகச் செய்வதற்கு அப்பகுதிக்கு பொலீஸார் சிலரை அவர் அனுப்பி வைத்தார். பொலீஸாரைக் கண்டதும் அவ்விடத்தில் இருந்து கலைந்து சென்ற அந்தக் கூட்டம் பிறிதொரு இடத்தில் மீண்டும் ஒன்றுகூடியது. அக்கூட்டத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கண்டி நகரில் நிலைகொண்டிருந்த இலங்கை ராணுவத்தின் சிங்க ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த ராணுவத்தினரே என்பதை அவர் உணர்ந்துகொண்டார். அன்று மாலை, ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கக் குண்டர்களான ஜாதிக சேவக சங்கமயவின் உறுப்பினர்கள் கொழும்பிலிருந்து கண்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டதும் அங்கு பெரும் வன்முறைகள் வெடித்துக் கிளம்பின. கைத்தொழில் அமைச்சர் சிறில் மத்தியூவினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில் இந்தக் குண்டர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். ஏற்கனவே நகரில் கூடிநின்ற இராணுவ வீரர்களுடன் சேர்ந்துகொண்ட சிறில் மத்தியூவின் குண்டர்கள் கண்டிநகரின் வீதிகளில் சென்றுகொண்டிருந்த தமிழர்களைத் தாக்கத் தொடங்கினர். வாகானங்களில் சென்றுகொண்டிருந்த தமிழர்கள் வெளியே இழுத்துத் தாக்கப்பட்டு அவர்களின் வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டது. நகரின் பெரும்பாலான இடங்களில் வசித்துவந்த தமிழர்களின் வீடுகளும், வியாபார நிலையங்களும் இராணுவத்தினராலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தொண்டர்களாலும் எரியூட்டப்பட்டன. கண்டியில் தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட மனிதநேயத்திற்கெதிரான தாக்குதல்களின் சம்பவங்கள் பல ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒல்லாந்து நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரின் அனுபவத்தினை இங்கு பகிர்கிறேன். கண்டியின் பிரதான வீதியில் தமிழர் ஒருவர் கடையொன்றினை நடத்தி வந்திருந்தார். அவரைத் தாக்குவதற்கு சிங்களக் காடையர் குழுவொன்று ஆயத்தமாகியது. முதலில் அவரது கடைக்குத் தீவைத்தது அந்தக் கும்பல். தப்பியோட எத்தனித்த அந்தத் தமிழரை அக்கும்பல் பிடித்துக்கொண்டது. எரிந்துகொண்டிருந்த அவரின் கடையின் தகரக் கூரையின் மீது அவரை வீசியெறிந்தது சிங்களக் குழு. அவர் இருமுறை எரிந்துகொண்டிருந்த கூரையிலிருந்து சறுக்கிக் கீழே விழுந்தார். அவரை மூன்றாம் முறை அந்தக் கும்பல் கூரையின் மீது எறிந்தது. இம்முறை அவர் கீழே உருண்டு விழவில்லை. அவரது உடலை எரிந்துகொண்டிருந்த கூரை பற்றிக்கொள்ள, அவரது உடல் கூரை மீதிருந்தே எரிய ஆரம்பித்தது. இதுபோன்ற மிலேச்சத்தனத்தை நான் உலகில் வேறு எங்கிலும் நான் அறியவில்லை என்று அந்த வெளிநாட்டவர் கூறுகிறார். தமிழர்களை அவர்கள் பயணம் செய்துகொண்டிருந்த வாகனங்களில் வைத்தே எரித்துக் கொன்ற சிங்களவர்கள் இதேவகையான இரத்தத்தை உரைய வைக்கும் சம்பவம் ஒன்றினை நோர்வேயிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணியொருவர் விபரிக்கிறார். கொழும்பு நகருக்கு வந்துகொண்டிருந்த மினிபஸ் ஒன்றினை சிங்களவர்கள் வீதியில் மறித்தனர். அதிலிருந்த தமிழர்கள் அல்லாதவர்கள் அனைவரையும் வாகனத்தை விட்டு கீழிறங்குமாறு சிங்களக் காடையர்கள் கட்டளையிட்டனர். அவர்கள் இறங்கியதும் தமிழர்கள் வாகனத்தில் இருக்க, அதன் கதவுகளை அடைத்துச் சாத்தியது அக்குழு. பின்னர் அவ்வாகனத்தின் மீது பெற்றோலினை ஊற்றிப் பற்றவைத்தது. உள்ளே குறைந்தது 20 தமிழர்கள் இருந்தார்கள். எரிந்துகொண்டிருந்தபோது அவர்கள் எழுப்பிய ஓலம் மிகவும் அவலமானது. சிலர் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து வெளியே பாய எத்தனித்தார்கள். ஆனால், அவர்களை மீண்டும் எரிந்துகொண்டிருந்த வாகனத்தினுள் தள்ளிவிட்டு அதனைச் சுற்றி நின்று எக்காளமிட்டு குதூகலித்தது அக்குழு. செவ்வாய்க்கிழமை நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் ஆகிய பகுதிகளுக்கும் தமிழர்மீதான வன்முறைகள் பரவத் தொடங்கின. இப்பகுதிகளில் இருந்த தமிழரின் வீடுகளும், வியாபார நிலையங்களும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களால் எரியூட்டப்பட்டன. அப்பகுதியின் பிரதியமைச்சரும் அவரது செயலாளருமே இத்தாக்குதல்களை முன்னின்று வழிநடத்தினர். அமைச்சரின் செயலாளர் பின்னாட்களில் கண்துடைப்பிற்காக கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டார். 2004 இல் பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்குப் போட்டியிட்ட D.A.W. குணசேகர அமைச்சரின் செயலாளரை அந்நாட்களில் சிறையில் சந்தித்திருந்தார். இச்சந்திப்புப் பற்றி பிறிதாக ஆராயலாம். எரிந்துகொண்டிருக்கும் தமிழரின் வாகனம் ஒன்று, தமிழினக்கொலை ஜூலை 1983 1999, ஆடி 30 ஆம் திகதி குணசேகர டெயிலி நியூஸ் பத்திரிக்கையில் "கறுப்பு ஜூலை : மீள்பார்வை" எனும் தலைப்பில் எழுதிய கட்டுரை கீழே, புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதியமைச்சர் ஒருவரின் செயலாளர் தமிழர் மீதான வன்முறைகளுக்காக எவ்வாறு பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டு அடைத்துவைக்கப்பட்டார் என்பதைச் நான் சொல்வது அவசியமானது என்று கருதுகிறேன்.தன்னை விடுதலை செய்யக்கோரி மனுவொன்றினை ஜனாதிபதி ஜெயவர்த்தனவுக்கு அனுப்புமாறு அவர் என்னைக் கோரியிருந்தார். அவர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தபொழுதிலும் நான் மகிழ்வுடன் அவரின் வேண்டுகோளினை ஏற்றுக்கொண்டேன். இதில் உள்ள‌ உண்மையென்னவென்றால், அமைச்சரினால் தனக்கு வழங்கப்பட்ட கட்டளையினையே தான் மேற்கொண்டதாக அவர் என்னிடம் கூறினார். நகரில் வரிசையாக இயங்கிவந்த தமிழர்களின் கடைகள் அனைத்தையும் எரிப்பதே அமைச்சர் அவருக்கு வழங்கியிருந்த பணி. அவர் கேட்டுக்கொண்டதன்படி நான் ஜெயாருக்கு அவரது விடுதலையைக் கோரி அனுப்பிய மனுவை மறுநாளே பெற்றுக்கொண்ட ஜெயார், அவரை உடனடியாக விடுதலை செய்தார். செயலாளரை உடன் வந்து பொறுப்பெடுத்துச் செல்லுமாறு அமைச்சர் பணிக்கப்பட்டார். இப்படித்தான் நீதி நிலைநாட்டப்பட்டது. கண்டியில் தமிழர்கள் மீது ராணுவத்தினராலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தொண்டர்களாலும் நடத்தப்பட்ட தாக்குதல்கள், சிறிது சிறிதாக மலையகமெங்கும் பரவத் தொடங்கின. புதன்கிழமை கம்பொல, நாவலப்பிட்டிய, பதுளை ஆகிய இடங்களுக்கும், வியாழக்கிழமை பசறைக்கும், வெள்ளியன்று நுவர எலியவுக்கும் வன்முறைகள் பரவின.
  6. ஏழு ஜனாதிபதிகள் கிண்டிய... 13 எனும் அல்வா. இன்னும்... அது, அடிப் பிடிக்காமல் இருப்பது அதிசயம்தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.