Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19670
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8975
    Posts
  3. தனிக்காட்டு ராஜா

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    9977
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    88827
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/14/23 in all areas

  1. 3.9 மில்லியன் இலங்கையர், உணவு பற்றாக் குறையில் வாடுகின்றனர்.
  2. தமிழினப் படுகொலை மூலம் தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்த ஜெயவர்த்தன‌ தமிழர்கள் தம்மை ஒரு இனமாக உணர்ந்துகொள்வதற்கான இரண்டாவது காரணத்தையும் ஜெயாரே வழங்கினார். தமிழர்களுக்குச் சொந்தமான வீடுகளையும் கடைகளையும் எரித்ததன் மூலம், "நீங்கள் ஏன் இங்கு இருக்கிறீர்கள்? இது உங்களுக்கான நாடு இல்லை. உங்களது தாயகம் வடக்கும் கிழக்கும்தான், ஆகவே அங்கேயே உங்களை அனுப்புகிறேன்" எனும் செய்திதான் அவர் வழங்கிய இரண்டாவது காரணம். அகதிமுகாம்களில் அடைக்கலாகியிருந்த தமிழர்களை கப்பல்கள்கள் மூலமாகவும், பந்தோபஸ்த்துடனான புகையிரதங்கள் மூலமாகவும் அவர்களின் தாயகமான வடக்குக் கிழக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். கொழும்பிலிருந்து தமிழ் அகதிகளை ஏற்றிச்சென்ற விசேட புகையிரதங்கள் வவுனியா வரை இடையில் எங்கும் நிறுத்தப்படவில்லை. வவுனியாவை அடைந்தத பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் வரையான அனைத்து புகையிரத நிலையங்களிலும் அவை தரித்தே சென்றன. தமிழர்களை ஏற்றி அனுப்புவதற்காக கப்பல்களையும் புகையிரதங்களையும் ஒழுங்குசெய்துகொடுத்த அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் பிரட்மன் வீரக்கோனை தமிழர்கள் நன்றியுடன் நினைவுகூர்வார்கள். இந்த விசேட தமிழ் அகதிகள் புகையிரதங்களில் தாயகம் நோக்கிப் பயணித்த பல நண்பர்களுடன் நான் பின்னாட்களில் பேசியபோது, வவுனியா நகரை அடைந்தபின்னரே தம்மால் நிம்மதியாக மூச்சுவிட முடிந்ததாகக் கூறினார்கள். "நாங்கள் எமது தாயகத்திற்கு வந்துவிட்டதை உணர்ந்தோம்" என்று என்னிடம் கூறினார்கள். தமிழர்கள் மீதான ஜெயார் தலைமையிலான அரசாங்கத்தின் தாக்குதல்கள் தமிழர்கள் வடக்கும் கிழக்கும் தமது தாயகம் என்பதை உணர்ந்துகொள்ள உதவியிருந்தது. "சிங்களவர்கள் எம்மை அடித்துக் கலைத்தது அந்த நிலத்திற்கே, அந்த நிலத்திலேயே நாம் பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறோம்" என்று இன்று கனடாவில் வாழ்ந்துவரும் முன்னாள் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் என்னிடம் கூறினார். யாழ்ப்பாணத்தில் கப்பல்களில் இருந்து இறக்கப்படும் தமிழ் அகதிகள் 1983 தமிழர்களின் ஆயுத‍ விடுதலைப் போராட்டம் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் வரலாற்றாசிரியர்கள் அப்போராட்டத்தினை வீச்சம்பெற வைக்க சிறிமாவோ பண்டாரநாயக்கவும் ஜெயவர்த்தனவும் செய்த பங்களிப்புக்கள் குரித்து அலசுவது அவசியமானது. என்னைப்பொறுத்தவரை, இவர்கள் இருவரினதும் பங்களிப்புக்களும் முக்கியமானவை என்பதுடன், போராட்டம் கூர்மையடைவதற்கு முக்கிய காரணங்களாகவும் அமைந்திருந்தவை. இவர்கள் இருவரினதும் ஆட்சிக்காலங்களில் இவர்களின் செயற்பாடுகளைப் பதிவுசெய்வதற்கான சந்தர்ப்பங்கள் எனக்குக் கிடைத்தது அதிஷ்ட்டம் என்றே கருதுகிறேன். சிறிமாவோவின் ஆட்சிக்காலத்தில் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக அவரால் மேற்கொள்ளப்பட்ட பல தீர்மானங்களையும் அதன்பின்னரான நிகழ்வுகளையும் நான் பதிவுசெய்திருக்கிறேன். அத்துடன், சிறிமாவின் தீர்மானங்களுக்கெதிராக தமிழ்த்தலைமைகள் அன்று எடுத்த நடவடிக்கைகளையும் நான் பதிவுசெய்திருக்கிறேன். சிறிமா தனது முதலாவது ஆட்சிக்காலத்தில் தனிச் சிங்களச் சட்டத்தினை முழுமையாக அமுல்ப்படுத்துவதற்குத் தீவிரமாக முயன்றார். இதற்கு எதிர்வினையாக தமிழர் தரப்பால் 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகம் ஒன்று நடத்தப்பட்டது. மொத்தத் தமிழினமும் உணர்வுரீதியாகத் திரண்டெழுந்து அரச அதிகாரத்தை எதிர்க்கமுடியும் என்கிற உணர்வினை இச்சத்தியாக்கிரக நிகழ்வு எடுத்தியம்பியது. சத்தியாக்கிரக போராட்டத்தை சிறிமாவோ ராணுவ அடக்குமுறை கொண்டு நசுக்கியபோது, அதனால் வெகுண்டெழுந்த சுமார் 20 தமிழ் இளைஞர்கள் தோல்வியடைந்த முதலாவது ஆயுதப் போராட்ட அமைப்பான "புலிப்படை" எனும் அமைப்பை உருவாக்க உந்தியிருந்தது. மேலும், சிறிமா தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த 1970 ஆண்டின் பல்கலைக்கழகத் தரப்படுத்தல் முறை தமிழ் மாணவர் பேரவை எனும் புரட்சிகர மாணவர் அமைப்பினைத் தோற்றுவிக்க உதவியிருந்தது. 1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பின் மூலம் தமிழர்களை மேலும் அந்நியப்படுத்திய சிறிமாவின் நடவடிக்கைகள் குறித்தும் தொடர்ச்சியாகப் பதிவுசெய்து வந்திருக்கிறேன். தரப்படுத்தலும், 1972 ஆம் ஆண்டு குடியரசு யாப்புமே தமிழர்கள் ஆயுதப் போராட்டம் நோக்கிச் செல்வதற்கான முக்கியமான காரணங்களாக இருந்ததாக நான் நம்புகிறேன். 1977 ஆம் ஆண்டு ஜெயவர்த்தன ஆட்சிப்பீடம் ஏறிய போது நான்கு சிறியளவிலான தமிழ் ஆயுதப் போராட்ட அமைப்புக்களே இருந்தன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 30 போராளிகளே செயற்பட்டு வந்ததோடு சுமார் 200 ஆதரவாளர்களை அது கொண்டிருந்தது. புளொட் அமைப்பில் ஏறக்குறைய இதே அலவிலான போராளிகள் இருந்தார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஈரோஸ் அமைப்புக்களில் இதனைக் காட்டிலும் குறைவான போராளிகளே அப்போது இருந்தார்கள். ஆனால், ஜெயார் தனது அரச தலைமையிலான வன்முறைகள், குறிப்பாக யாழ் நூலக எரிப்புப் போன்றவற்றின் ஊடாக இந்தச் சிறிய ஆயுத அமைப்புக்கள் தம்மை விரிவாக்கிக்கொள்ள அவசியமான‌ சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். மேலும், 1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு பாடம் ஒன்றினைப் புகட்ட ஜெயாரும் அவரது அரசும் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் ஆயுதப் போராட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகளை கொடுத்து உதவின. பெரும்பாலான இந்த தமிழ் இளைஞர்கள் கல்வியறிவில் சிறந்து விளங்கியவர்களாக இருந்ததோடு, ஜெயாரின் இராணுவம் மற்றும் பொலீஸரைக் காட்டிலும் புத்திசாலிகளாகவும் திகழ்ந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. தமிழ் மிதவாதிகளைத் தொடர்ச்சியாக அழித்துவந்ததன் மூலம் ஜெயவர்த்தனா ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் தொடர்ந்து பலம்பெறவும், மக்களிடையே நன்மதிப்பைப் பெறவும் உதவியிருந்தார். இதுகுறித்து நாம் இனிவரும் அத்தியாயங்களில் பார்க்க முடியும். மேலும் தொடர்ந்து எழுதுவதற்கு முன்னர், த வீக் சஞ்சிகைக்கு ஜெயவர்த்தனா வழங்கிய குறிப்பு ஒன்றினைக் கூறிவிட்டுத் தொடர விரும்புகிறேன். நிருபர் : முன்னாள் பிரத மந்திரி சிறிமாவோ பண்டாரநாயக்க, தமிழர்கள் தமது தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிடச் செய்வதற்கு தமிழர்களுக்குச் சில சலுகைகளை உங்களின் அரசாங்கம் வழங்கலாம் என்று கூறியிருப்பது குறித்து உங்களின் கருத்தென்ன? ஜெயவர்த்தன : தனிநாட்டிற்கான சிந்தனையே சிறிமாவின் ஆட்சிக்காலத்திலேயே முதன்முதலாக தமிழர்களால் முன்வைக்கப்பட்டது. அவர் தனது ஆட்சிக்காலத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு எவ்வாறான சலுகைகப் பொதியினை வழங்க எண்ணியிருந்தார் என்பதை நாம் அறியோம். அன்றே அதனை அவர் வழங்கியிருந்தால் இன்று இப்பிரச்சினை இவ்வளவு தூரத்திற்கு தீவிரமடைந்திருக்காது. ஜெயவர்த்தனா அரசியலில் எவ்வளவு தூரத்திற்குச் சூழ்ச்சியானவர் என்பதைக் காட்டவே அவரது மேற்சொன்ன அவரது கூற்றினை குறிப்பிட்டிருந்தேன். இவ்வாறு சிறிமாவை குறைகூறுவதன் மூலம் அவரது ஆலோசனைகளை வெளிக்கொணரவைத்து, அவற்றை தான் தமிழர்களுக்கு வழங்குவதன் மூலம் ஏற்படப்போகும் விளைவுகளை சிறிமாவின் மீது சுமத்துவதே அவரது நோக்கமாக இருந்தது. லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஞாயிறுப் பத்திரிக்கைகளான சண்டே ஒப்சேர்வர் மற்றும் சிங்கள வார இறுதிப் பத்திரிக்கையான சிலுமின ஆகியவற்றில் த வீக் சஞ்சிகைக்குத் தான் வழங்கிய பேட்டியினை மீள்பிரசுரிக்குமாறு ஜெயார் பணித்தார். மேலும், இதனை மீள்பிரசுரிப்பதனூடாக பத்திரிக்கை வாயிலாக சிறிமா இதற்குப் பதில்தரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் அவர் முன்வைத்தார். ஆனால், ஜெயாரின் பொறியில் சிக்குவதை சிறிமா சாதுரியமாகத் தவிர்த்துக்கொண்டார். ஜெயாருக்கு அவர் வழங்கிய பதிலில், "அவருக்குத் தேவையென்றால், தான் வைத்த பொறியில் இருந்து தானே மீள வெளியே வருவதுதான் அவர் செய்யவேண்டியது" என்று அவர் கூறினார். இந்த நேரத்திலேயே தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வொன்றினை முன்வைக்குமாறு ஜெயவர்த்தனா மீது இந்தியா அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்தது. இந்தியாவின் பார்த்தசாரதி இக்காலத்தில் தீர்வொன்றிற்காக உழைத்துக்கொண்டிருந்தார். அதுவே இணைப்பு "சி" என்று பின்னர் அறியப்பட்டது. அதுகுறித்து பின்னர் பேசலாம். புலம்பெயர்ந்து வாழ்ந்துவந்த தமிழர்கள் மத்தியிலும் ஜூலை படுகொலைகள் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தன. மூன்றுவகையான விளைவுகளை இத்தாக்குதல்கள் அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தன. முதலாவதாக, அனைத்து இலங்கைத் தமிழர்களையும் அது ஒன்றாக இணைத்திருந்தது. இரண்டாவதாக, இலங்கைத் தமிழர்களுக்கும், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பிஜித் தீவுகள், மொறீஷியஸ், தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் வாழ்ந்துவந்த ஏனைய தமிழர்களுக்கும் இடையே ஒரு பிணைப்பினையும் இது ஏற்படுத்திவிட்டிருந்தது. மூன்றாவதாக, புலம்பெயர்ந்து வாழ்ந்துவந்த தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே பாரிய பிளவினை இது ஏற்படுத்தியிருந்தது. தமிழினப் படுகொலைகள் நடைபெற்று முடிந்த சில நாட்களின் பின்னர் லண்டனில் வாழ்ந்துவந்த எனது சகலர் எனக்கு எழுதிய கடிதத்திலிருந்து ஒரு பகுதியினை இங்கே இணைக்கிறேன். அங்கு வைத்தியராகப் பணிபுரிந்து வந்த அவர், படுகொலைகளின் பின்னரான புலம்பெயர் தமிழர்களின் உணர்வினை தனது கடிதத்தில் எழுதியிருந்தார். "படுகொலைகள் பற்றிய செய்திகள் இங்கே பரவியபோது ஒட்டுமொத்த தமிழினமும் தாங்கொணாத் துயரினுள் மூழ்கியது. ஒவ்வொருவரும் தமக்கு முடிந்த வழிகளில் நடைபெற்றுவரும் அக்கிரமங்கள் குறித்து அறிய முயன்றுகொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தமது உறவுகளினதும், நண்பர்களினது பாதுகாப்புக் குறித்து மிகுந்த அச்சத்துடன் அவர்கள் பற்றிய தகவல்களைத் தேட ஆரம்பித்திருந்தனர். அவர்கள் எல்லோருமே மிகுந்த விரக்தியும், கோபமும் கொண்டிருந்தனர். தமது இன அடையாளமும், கெளரவமும் காயப்பட்டுப் போனதாக அவர்கள் உணர்கின்றனர். இளைஞர்கள் பழிவாங்கும் தாக்குதல்கள் குறித்துப் பேசிவருகின்றனர். அவர்களுள் சிலர் நாடுதிரும்பி ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட விரும்புகின்றனர். ஜெயவர்த்தனா தமிழர்களின் உணர்வு நரம்புகளைச் சீண்டிப்பார்த்திருக்கிறார் என்று நினைக்கின்றேன். அவர்கள் நிச்சயமாக அவருக்குத் திருப்பி அடிப்பார்கள்"என்று எழுதப்பட்டிருந்தது.
  3. ஆனால் அவர்களோ முகப்புத்தகத்தில் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட எமது ஊர் பாதுகாப்பு படையினர் என வெள்ளையடித்து சொல்கின்றனர் அந்த ஊர்காவல் படையினரை ஏறாவூர், சம்மாந்துறை,நிந்தவூர், கல்முனை,சாய்ந்தமருது மருதமுனை
  4. பாவம் முனியம்மா, வெறும் பத்தாயிரம் ரூபாயுடன்…. எப்படி குடும்பம் நடத்தப் போகின்றார் என்று தெரியவில்லை. 😂 (ரசித்து…. வாசித்து சிரித்த… அருமையான கதை. நன்றி சுவியர்.) 🤣
  5. கிளுவை கதியால்களுடன் கம்பீரமான வேலி .......! 👍
  6. ஆழ்ந்த நினைவஞ்சலிகள். முஸ்லீம் தலைவர்களுக்கு இந்த படுகோலைகளைப் பற்றி எதுவுமே தெரியாது. இணைப்புக்கு நன்றி ஏராளன்.
  7. ஈழத்தமிழர் விடயத்தில் ஆரம்பத்திலிருந்தே தனது தேசிய பாதுகாப்புக் குறித்து கவனம் செலுத்திவந்த இந்தியா இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் இந்தியாவின் உணர்வு குறித்த விடயங்களையும் ராவின் கடிதம் விளக்கியிருந்தது. இந்தியாவின் கரிசணைக்கான நான்கு காரணங்கள் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. முதலாவது, இலங்கைத் தமிழர்கள் மீதான சிங்களவர்களின் தாக்குதல்கள் இந்தியாவில் வாழும் தமிழர்களின் உணர்வுகளைப் பாதிக்கும் என்பது. தமிழ்நாட்டில் இத்தாக்குதல்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வந்ததோடு, இலங்கையில் தமிழர்களைக் காப்பாற்ற இந்தியா தலையீடு செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இரண்டாவது இலங்கையில் காணப்படும் ஸ்த்திரமற்ற நிலமை இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுருத்தலாக மாறும் என்பது. மூன்றாவது, இலங்கையில் ஏற்படும் ஸ்த்திரமற்ற நிலைமையினைப் பாவித்து வெளிநாட்டுச் சக்திகள் இலங்கையினுள் நுழைந்துவிடும் என்பது. நான்காவதாக, இலங்கையில் ஏற்படும் நிலைமைகளைப் பாவித்து இந்தியாவில் ஸ்த்திரமற்ற நிலைமையினை உருவாக்கி பலவீனப்படுத்த வெளிநாட்டுச் சக்திகள் முனையும் என்பது. இலங்கைக்கு ஆயுத உதவிகளைச் செய்யவேண்டாம் என்று இந்தியா கேட்டுக்கொண்டதையடுத்து, அனைத்து நாடுகளும் அதற்குச் சம்மதம் தெரிவித்திருந்தன. இந்தியாவைப் பிராந்திய வல்லரசாக ஏற்றுக்கொண்ட அந்த நாடுகள் அதன் கோரிக்கைக்கு இணங்க, இலங்கைக்கு உதவிசெய்யப்போவதில்லை என்று தெரிவித்தன. லோக்சபாவில் இந்திரா காந்தியினதும் ராவினதும் பேச்சுக்கள் மற்றும் ராவின் கடிதம் ஆகியவை இந்திராவின் எண்ணத்தை அடிப்படையாக வைத்து இலங்கை தொடர்பாக இந்தியா வரிந்துகொண்ட வெளிநாட்டுக் கொள்கைக்கான அடித்தளத்தை தெளிவாகக் காட்டியிருந்தது. இதற்குப் பின்னர் வந்த காலங்களில் இடம்பெற்ற விடயங்கள் அந்த வெளியுறவுக் கொள்கையினை வழிநடத்திச் செல்ல உதவியிருந்தன. இதுபற்றி பின்னர் ஆராயலாம். லோக் சபாவில் இந்திரா காந்தியும், ராவும் உரையாற்றுவதற்கு முதல்நாள், ஆவணி 1 ஆம் திகதி இலங்கையரசு வெளியிட்ட செய்தியொன்றில், வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கு இலங்கை முயல்கிறது எனும் செய்தியினை முற்றாக நிராகரித்திருந்தது. புது தில்லியில் இலங்கையின் தூதராக கடமையாற்றிவந்த பேர்ணாட் திலகரட்ண இந்தியாவுக்கெதிரான நாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய இலங்கை முயல்கிறது எனும் செய்தியினை அறிக்கை ஒன்றின் மூலம் மறுதலித்திருந்தார். இதேவகையான அறிக்கையொன்றினை கொழும்பில் இலங்கையரசும் வெளியிட்டிருந்தது. தில்லியில் வெளிநாட்டமைச்சர் ஹமீது மேற்கொண்டுவந்த பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு உடனடியாக அவரை நாடு திரும்புமாறு ஜெயார் பணித்தார். ஆவணி 1 ஆம் நாள் இரவும் ஹமீது தில்லியிலிருந்து கொழும்பிற்குப் பயணமானார். தில்லி விமான நிலையத்தில் அவரைச் சூழ்ந்துகொண்ட பத்திரிக்கையாளர்கள் வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயலவில்லை எனும் இலங்கை அரசின் அறிக்கை பற்றிக் கேட்டபோது, "நாம் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முனைகிறோம் எனில், அது இந்தியாவாகத்தான் இருக்கும் என்பதை உங்களுக்கு உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்" என்று கூறிச் சமாளித்தார். இந்திய சஞ்சிகையான "த வீக்" இன் செய்தியாளர் பட்ரிக் மைக்கல் ஜெயாரை ஐப்பசி 1 ஆம் திகதி பேட்டி கண்டிருந்தார். "உங்கள் நாடு இந்தியாவைத் தவிர்த்து வேறு நாடுகளில் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயல்வதாகப் பரவிய வதந்திகள் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?" என்று மைக்கல் கேட்டபோது, "இது வெறும் புரளியே அன்றி வேறில்லை என்பதை நான் பலமுறை கூறிவிட்டேன்" என்று காட்டமாகப் பதிலளித்தார். ஆனால் இலங்கையின் மறுதலிப்பை எவறுமே நம்பவில்லை, குறிப்பாக இந்தியா இலங்கையரசின் மறுதலிப்புக்களை எரிச்சலுடனேயே பார்த்தது. மேலும், ஜெயார் பின்னாட்களில் அவ்வப்போது வழங்கிய பேச்சுக்களில் தான் வெளிநாடுகள் சிலவற்றிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயன்றதை ஒப்புக்கொண்டிருந்தார். 1987 ஆம் ஆண்டு ஐப்பசி 25 ஆம் திகதி சண்டே ஒப்சேர்வர் பத்திரிக்கைக்கு வழங்கிய செவ்வியில், "இந்தியாவின் அழுத்தம் அதிகமாக இருந்த அந்த நாட்களில் வெளிநாட்டு ஆயுதக் கொள்வனவுகளுக்கான நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டதாக‌" ஜெயார் கூறினார். தமிழர்களின் எதிர்ப்புணர்வு எதிர்வரும் அத்தியாயங்களில் இலங்கை தொடர்பான இந்திராவின் நிலைப்பாடு பற்றியும், அதனூடாக வரியப்பட்ட இந்திய வெளிநாட்டுக்கொள்கை பற்றியும் விரிவாகப் பார்க்கலாம். தமிழர் மீதான வன்முறைகளும், அதனைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய ஜெயார் முயன்றதும் இலங்கை தொடர்பான இந்திராவின் நிலைப்பாட்டையும், வெளியுறவுக் கொள்கையினையும் ஒரு திசையில் முன்னோக்கித் தள்ளியிருந்தது. அதேவேளை தமிழர் மீதான சிங்களவர்களின் வன்முறைகள் இலங்கை மற்றும் இந்தியத் தமிழர்களை அதுகுறித்து ஒரு திசையில் எதிர்வினையாற்றவும் தூண்டியிருந்தன. இலங்கையில் தமிழர் மீதான சிங்களவர்களின் தாக்குதல்களைக் கண்டித்து தமிழ்நாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் குறித்து முன்னர் குறிப்பிட்டிருந்தேன். தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வீதியில் இறங்கிய தமிழர்கள், தமது சகோதரர்களைக் காப்பாற்ற இந்தியா உடனடியாக இலங்கையில் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த கரிசணையும், ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற மனோநிலையும் இந்த ஆர்ப்பாட்டங்களை சுமார் ஒருவார காலம்வரை நீடிக்க வைத்தன. பின்னர் தமிழ்நாட்டு அரசியலில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுக்கும் நடவடிக்கைகள் அரங்கேறத் தொடங்கின. தமிழ்நாட்டில் அன்று ஆட்சியிலிருந்த எம்.ஜி. ராமச்சந்திரனின் அ.தி.மு. க அரசும், எதிர்க்கட்சியாகவிருந்த மு. கருனாநிதியின் தி.மு.க கட்சியும் தமிழர்களுக்கு யார் அதிகளவு ஆதரவினை வழங்குவது என்பதனை மக்களுக்குக் காட்டும் போட்டியில் குதித்திருந்தன. ஆவணி 1 ஆம் திகதி பொது வேலை நிறுத்தம் ஒன்றிற்கு மு. கருனாநிதி அழைப்பு விடுத்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அதே ஆவணி 1 ஆம் திகதி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவினைக் காட்ட பொதுமக்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அந்த திங்கட்கிழமை மொத்த தமிழ்நாடுமே முற்றான ஸ்தம்பித நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. மேலும், அனைத்துக் கட்சிக் குழுவொன்று அதே நாளான ஆவணி 1 ஆம் திகதி பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்து இலங்கைத் தமிழரைப் பாதுகாக்க இந்தியா உடனடியாக இலங்கையில் தலையீடு செய்யவேண்டும் என்று அழுத்தம் கொடுத்திருந்தது. தமிழர்களைக் கொன்றுவரும் சிங்களக் காடையர்களை அடக்குவதற்கு ஜெயார் எதனையும் செய்ய விரும்பவில்லை என்று அவர்கள் இந்திரா காந்தியிடம் சுட்டிக் காட்டியிருந்தனர். மேலும் தாக்குதல்களின் வீரியம் குறையத் தொடங்கியவேளை நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் பேசிய ஜெயவர்த்தன, தமிழர்கள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்தி ஊக்குவித்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்தியாவுக்கெதிரான நாடுகளிலிருந்து ஜெயார் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயன்றுவருவது குறித்து இந்திரா மெளனமாக இருந்துவிடமுடியாது என்றும் அவர்கள் சுட்டிக் காட்டினர். மேலும், வெளிவிவகார அமைச்சர் ராவ் இலங்கைக்குச் சென்றிருக்காதுவிட்டால், இன்றுவரை தமிழர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டிருக்கும் என்றும் கூறினர். இலங்கை மீது இந்தியா ராணுவ நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்வதான சூழ்நிலை அந்தத் திங்கட்கிழமை என்றுமில்லாதவாறு அதிகமாகவே தென்பட்டிருந்தது. சுமார் ஒருவார கால விடுமுறைக்குப் பின்னர் வேலைக்குத் திரும்பியிருந்த எனக்கு லேக் ஹவுஸ் நிலையத்தில் இச்செய்தியே பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது தெரிந்தது. டெயிலி நியூஸின் ஆசிரியர் பகுதிக்கு அன்று நான் நுழைந்தபோது எனக்கு ஏற்பட்ட உணர்வுகுறித்து நாம் பேசவேண்டும். அங்கிருந்த ஆசிரியர் முதல், அலுவலக சிற்றூழியர்கள் வரை அனைவரும் எழுந்து நின்று எனக்கு வணக்கம் செலுத்தியதுடன், "எங்களை மன்னித்துவிடுங்கள்" என்றும் கோரினர். ஆசிரியரான மணிக் டி சில்வா என்னிடம் வந்து, "உங்களுக்கு நடந்த அனைத்து இன்னல்களுக்காகவும் எங்களை மன்னித்துவிடுங்கள், தயவுசெய்து இச்செயல்களுக்கான மொத்த சிங்கள இனத்தையும் எதிரிகளாகப் பார்க்காதீர்கள்" என்று கேட்டுக்கொண்டார். நான் உண்ர்ச்சிவசப்பட்டு அழத்தொடங்கினேன். "இல்லை மணிக், சிங்கள மக்களுக்கெதிராக எந்த பழிவாங்கும் உணர்வும் என்னிடம் இல்லை" என்று அவரிடம் நான் கூறினேன். நான் இந்தச் சம்பவத்தையும், இதுபோன்ற இன்னும் சில நிகழ்வுகளையும் தமிழர்கள் மீது சிங்களவர்கள் ஒரு இனமாகத் தாக்கவில்லை, மாறாக ஒரு சிறு பகுதியினரே அரசியல் ஆதாயத்திற்காக அதனைச் செய்தார்கள் என்று தமிழ் நண்பர்களுடன் பேசும்போது உதாரணங்களாக எடுத்துக் கூறியிருக்கிறேன். இத்தாக்குதல்கள் நிச்சயமாக சிங்கள மக்கள் உணர்வெழுச்சியால் உந்தப்பட்டு செய்த தன்னெழுச்சியான தாக்குதல்கள் இல்லை. தமது அரசியல் அதிகாரத்திற்கு சவால் விட்டார்கள் என்கிற காரணத்தை முன்வைத்து, அரசாங்கமும், அதிகாரத்தில் இருந்தவர்களும் தமிழர்களுக்கு ஒரு பாடத்தினைப் புகட்ட செய்த திட்டமிட்ட வன்முறைகளே இவை என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. ஆவணி முதலாம் வாரத்தில் சிங்கள மக்களிடையே கடுமையான‌ அச்ச நிலையொன்று உருவாகியிருந்தது. இந்தியா தமது நாட்டின்மீது இராணுவ நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்ளப்போகிறது என்பதே அது. காமிணி திசாநாயக்கவின் தலைமையில் இயங்கிவந்த ஜாதிக எஸ்டேட் தொழிலாளிகள் தொழிற்சங்க செயற்கூட்டத்திலும் இது எதிரொலித்தது. கூட்டத்தில் நிலவிய அச்ச நிலையினைப் போக்க காமிணி திசாநாயக்க அக்கூட்டத்திலிருந்தவர்களைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், "நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம், இந்தியா எம்மீது இராணுவ நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்ள முன்னர், 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் இருக்கும் தமிழர்கள் அனைவரையும் நாம் கொன்றுவிடுவோம்". இதன்பின்னர் கூட்டம் சலசலப்பின்றி நடந்தேறியது. தம்மீதான மிலேச்சதனமாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகளும், அதன் பின்னரான அரசாங்கத்தின் தலைவர், அமைச்சர்கள், இனவாதிகள் கக்கிவந்த இனவாத நியாயப்படுத்தல்களும் தமிழர்கள் மனதில் ஆழமான வடுவொன்றை ஏற்படுத்தி விட்டிருந்தன. தாம் பல்லாண்டுகளாக வாழ்ந்துவந்த இடங்களிலிருந்து ஒரு இரவில் வேறோடு பிடுங்கி எறியப்பட்டு அகதிமுகாம்களில் தஞ்சம் கோரியபோதுதான் தமிழர்கள் தம்மை ஒரு இனமாக உணர்ந்துகொணடனர். பிரதேச வேறுபாடுகள், மத வேறுபாடுகள், சமூக ஏற்றத்தாழ்வுகள், பொருளாதார வேற்றுமைகள் ஆகிய தடைகள் எல்லாவற்றையும் களைந்து தமிழர்களாக ஒன்றாகும் நிலையினை சிங்களக் காடையர்கள் படுகொலைகள் ஊடாக தமிழர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தனர். பிரபல தொழிற்சங்கவாதியான கே. சி. நித்தியானந்தா இந்த வன்முறைகளினால் பாதிக்கப்பட்டு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டப அகதிகள் முகாமில் தஞ்சமடைந்திருந்தவேளை ஒரு விடயத்தைக் கூறியிருந்தார், "தமிழர்களின் விடுதைப் போராட்டத்திற்கு ஜெயார் செய்திருக்கும் மகத்தான சேவை என்னவெனில், தமிழர்கள் தம்மை தனியான இனமாகவும், தனியான தேசமாகவும் உணரவும் செயற்படவும் உந்தித் தள்ளியிருப்பதுதான்" , மேலும் உதட்டில் புன்னகையுடன் தொடர்ந்த அவர், "நாம் இதுவரை எம்மை ஒரு தேசிய இனமாகவும், எமக்கான தேசம் ஒன்றினை உருவாக்கவும் முயலாததற்கான தண்டனையே அவர் எம்மீது மேற்கொண்ட இந்தப் படுகொலைகள்" என்றும் கூறினார்.
  8. சீரக சம்பா காளான் புரியானி..
  9. இந்தியாவுக்குப் பாடம்புகட்ட வெளிநாடுகளில் ஆயுதம் வாங்க முனைந்த ஜெயார் ஜூலை 31, ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த சண்டே ஐலண்ட் பத்திரிக்கையில், வெளிநாட்டுச் சக்தியொன்றிடமிருந்து தனக்கு வரவிருக்கும் இராணுவ அழுத்த‌த்தைச் சமாளிக்க இலங்கை அமெரிக்கா, இங்கிலாந்து, பாக்கிஸ்த்தான், வங்காளதேசம் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ள முயன்றுவருவதாகச் செய்தி வெளியிட்டிருந்தது. மிகார எனும் புனைபெயரில் எழுதிவந்த ரணதுங்க, இலங்கைக்குச் சவாலாக இருக்கும் அந்த வெளிநாட்டுச் சக்தி "இந்தியா" தான் என்று எழுதியிருந்தார். கொழும்பில் தங்கியிருந்த இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை, இந்தியாவுக்கெதிரான நாடுகளிலிருந்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ள முனையும் செய்தியை அடிப்படையாக வைத்து அறிக்கைகளை இந்தியாவுக்கு அனுப்பியிருந்தார்கள். மேலும், ஜெயவர்த்தனவின் அமைச்சரவையில் இருக்கும் முக்கிய அமைச்சர்கள் இந்திராவின் தொலைபேசி அழைப்பையும், ராவின் திடீர் விஜயத்தையும் தேவையற்ற தலையீடாகப் பார்ப்பதாகவும் அவர்கள் கூறியிருந்தார்கள். இந்தச் செய்தி இந்தியாவுக்குத் தலையிடியாய் மாறியது. இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் தாம் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக உணர்ந்தார்கள். இந்திரா காந்தி கடும் சினம்கொண்டார். சிலகாலமாகவே அமெரிக்கா நோக்கிச் சாயும் ஜெயவர்த்தனவின் நடவடிக்கைகள் அவருக்கு எரிச்சலைக் கொடுத்துக்கொண்டிருந்தன. ஆகவே, இந்தியாவின் நலன்களை மீறி ஜெயார் செயற்பட முடியாதென்பதை அவருக்கு உணர்த்தவேண்டும் என்று திடசங்கற்பம் பூண்டார். இதற்கான அடித்தளத்தை உருவாக்க இந்திரா எண்ணினார். அதன்படி இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையினைத் தீர்த்துவைக்க இந்தியாவுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்றும் இந்தியாவைத் தாண்டி எந்தவொரு வெளிச்சக்தியும் இவ்விவகாரத்தில் இலங்கையில் தலையீடு செய்ய முடியாது என்றும் அவர் கூறினார். இந்தியாவுக்கு பகைமையான நாடுகள் என்று இந்தியா கருதிய சில நாடுகளிலிருந்து இலங்கை ஆயுதங்களைத் தருவிப்பதைத் தடுப்பதற்கு இந்திராவின் அறிவுருத்தல்களின் பெயரில் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம் இரு விடயங்களைச் செய்தது. முதலாவது, ராவின் வருகையின் இலங்கை உதாசீனம் செய்யும் பட்சத்தில் இலங்கைக்கெதிரான இராணுவ நடவடிக்கை ஒன்றினை இந்தியா ஆரம்பிக்கும் எனும் வதந்தியை வேண்டுமென்றே ஊடகங்கள் ஊடாகக் கசியவிடுவது. இரண்டாவது, ஜெயவர்த்தன ஆயுதங்கள் வாங்க எண்ணியிருக்கும் நாடுகள் அடங்கலாக அனைத்து சர்வதேச நாடுகளையும் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கவேண்டாம் என்று கோருவது. வெளிவிவகார அமைச்சர் ‍ ஹமீத் நான் முன்னர் குறிப்பிட்டது போல, ஜெயவர்த்தனவைக் கையாள இந்தியா இரு முனைகளைப் பாவிக்க எண்ணியிருந்தது. முதலாவது இராணுவ நடவடிக்கை. இரண்டாவது இராஜதந்திர ரீதியிலான நெருக்குவாரம். இராஜதந்திர ரீதியிலான இந்தியாவின் அணுகுமுறை, ராவை இலங்கைக்கு அனுப்பி, தமிழர்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவது. ராணுவ அணுகுமுறை என்பது பரா இராணுவத்தினரைத் தரையிறக்கி, விமான நிலையங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதன் மூலம் இலங்கையில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்ட ஜெயவர்த்தனவுக்கு அழுத்தம் கொடுப்பது. ஜெயவர்த்தனவும் அவரது அமைச்சரவை மற்றும் இராணுவத் தலைமைப்பீடத்தினர் போன்றோரும் இந்தியாவின் இராணுவத் திட்டம் குறித்து அறிந்தே இருந்தனர். இந்தியாவின் இராணுவக் கலூரியில் பயிற்சிகளை மேற்கொண்டிருந்த இலங்கை ராணுவத்தின் மேஜர் ஜெனரல் நளின் செனிவிரட்ன இவ்விடயம் தொடர்பாக இந்தியாவில் பேசப்பட்டதை அறிந்தவுடன் உடனடியாக அதனை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஹமீதிடம் அறியத் தந்தார். அக்காலத்தில் தென்னாசிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் சார்க் மாநாடு இந்தியாவின் தலைநகர் தில்லியில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. இந்த மாநாட்டிற்கு ஹமீதை அனுப்பிய ஜெயவர்த்தன, இலங்கையை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் உத்தேச இராணுவ நடவடிக்கை குறித்து தெளிவுபடுத்த இந்திராவுடன் பேசுமாறு கோரினார். ஆவணி 1 ஆம் திகதி இந்திராவைச் சந்தித்த ஹமீத் இதுகுறித்துக் கேட்டார். இதற்குப் பதிலளித்த இந்திரா இலங்கையில் நடக்கும் சம்பவங்கள் இந்தியாவைக் கவலை கொள்ள வைத்திருப்பதாகக் கூறியதுடன் , இலங்கையினை ஆக்கிரமிக்கும் நோக்கம் தனக்கு இல்லையென்றும் உறுதியளித்தார். இந்திராவின் இந்த உறுதியளித்தலை உடனடியாக ஜெயாருக்கு அறிவித்தார் ஹமீத். ராவ் தனக்கு பரிந்துரைத்ததன்படி தமிழ் அகதிகள் பிரச்சினையினைக் கையாள இலங்கைக்கு உதவ இந்திரா முடிவெடுத்தார். ஆவணி 2 ஆம் திகதி லோக்சபாவில் பேசிய இந்திரா இந்த உதவிகள் குறித்துப் பேசினார். அப்பேச்சின்போது இலங்கையின் பிரதேச ஒருமைப்பாட்டினை இந்தியா முழுமையாக மதித்து ஏற்றுக்கொள்கிறதென்று கூறியதுடன் இலங்கைக்கான மனிதாபிமான உடவிகளைச் செய்ய இந்தியா விரும்புகிறதென்றும் கூறினார். தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே தமிழ் அகதிகள் பிரச்சினையும் ஆரம்பித்துவிட்டது. கொழும்பில் மட்டும் 14 அகதி முகாம்கள் உருவாக்கப்பட்டன. திங்கட்கிழமை இரவிற்குள் சுமார் 20,000 அகதிகள் இந்த முகாம்களில் அடைக்கலம் தேடியிருந்தனர். நாடு முழுவதற்கும் வன்முறைகள் பரவியபோது மேலும் பல அகதி முகாம்கள் உருவாக்கப்பட்டன. ஆரம்பத்தில் இந்த அகதிமுகாம்களை யார் பொறுப்பெடுப்பது எனும் பிரச்சினை உருவாகியது. இதனையடுத்து வெள்ளியன்று அத்தியாவசிய சேவைகளுக்கான ஆணையாளரான பிரட்மன் வீரக்கோனை அகதிமுகாம்களுக்கான நிவாரண வழங்கலை கண்காணிக்குமாறு ஜெயவர்த்தன பணித்தார். அகதி முகாம்களில் அடைக்கலமாகியிருந்த தமிழ் அகதிகளை அவர்களின் தாயகமான இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளை பிரட்மன் வீரக்கோன் மேற்கொண்டார். ஆரம்பத்தில் கப்பல்கள் மூலமாகவும், பின்னர் புகையிரதங்கள் ஊடாகவும் தமிழ் மக்கள் தமது தாயகம் நோக்கி அனுப்பிவைக்கப்பட்டார்கள். தமிழர்களுக்கெதிரான சிங்களவர்களின் வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது வார இறுதியில் சுமார் 300,000 தமிழர்கள் இடம்பெயரச் செய்யப்பட்டனர். கொழும்பு துறைமுகத்தில் தாயகம் நோக்கிச் செல்ல கப்பலுக்காகக் காத்திருக்கும் தமிழ் அகதிகள், ஆவணி 1983 பெருந்தோட்டங்களில் வாழ்ந்துவந்த தமிழர்களும், கொழும்பில் நிரந்தரமாக வாழ்ந்துவந்த தமிழர்களும் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்தனர். இவர்களுள் சிலர் வடமாகாணத்திற்கு அவர்களின் உறவினர்களுடன் தங்குவதற்காக அனுப்பிவைக்கப்பட்டனர். ஏனையவர்கள் அகதிமுகாம்களிலேயே பல மாதங்கள் வாழவேண்டியதாயிற்று. தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் நாடுமுழுதிலும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை வெறும் 350 மட்டுமே என்று கூறிய அரசு, தமிழர்களுக்குச் சொந்தமான 18,000 வீடுகளும் வியாபார நிலையங்களும் அழிக்கப்பட்டதாகவும், சுமார் 100,000 தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டதாகவும் கூறியது. சுயாதீனமான தரவுகளின்படி கொல்லப்பட்ட தமிழர்களின் உண்மையான எண்ணிக்கை இதனைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் என்று கூறின. தற்போது குறைந்தது 2,500 தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் என்கிற ரீதியில் இலங்கைக்குத் ராவ் மேற்கொண்டிருந்த விஜயம் தொடர்பாக அவரையே பாராளுமன்றத்தில் உரையாற்றுமாறு பணித்த இந்திரா, இலங்கை இந்தியாவைத் தவிர்த்து வெளிநாடுகளில் ஆயுதங்களை கொள்வனவு செய்ய முயல்வது குறித்த விபரங்களையும் அச்சபையில் தெரிவிக்குமாறு கோரினார். பாராளுமன்றத்தில் ராவ் ஆற்றிய உரை இருபகுதிகளைக் கொண்டிருந்தது. முதலாவது பகுதி இலங்கையில் இருந்த இந்தியர்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்புக் குறித்த கரிசணை பற்றி விளக்கியது. பின்னர் அவர் பேசும்போது, "இந்தியர்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் அவர்களின் பாதுகாப்புக் குறித்த கவலைகளுக்கப்பால், இந்தியாவைப் பூர்வீமகாகக் கொண்ட பலர் கொல்லப்பட்டிருப்பது குறித்த, குறிப்பாக நாடற்றவர்களாக்கப்பட்டுள்ள பல இந்திய உறவுகள் குறித்த ஒட்டுமொத்த இந்தியாவின் கவலையும் எமக்கிருக்கிறது. இது ஒரு மனிதாபிமான பிரச்சினை. குடியுரிமையினால், நாடுகளின் எல்லைகளால் பிரிக்கப்பட்டிருந்தாலும் எமக்கு மிக அருகில் இருக்கும் நெருங்கிய கலாசார பிணைப்புடைய அயலவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சொல்லொணாத் துயரங்கள் குறித்து இந்தியா பேசாமலிருக்க முடியாது" என்று கூறிய ராவ், . மேலும், கொழும்பில் இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் வாழ்ந்துவந்த தமிழர்களை அவர்களின் தாயகமான வடக்குக் கிழக்கிற்கு அனுப்பிவைப்பதற்கான கப்பல்களை வழங்குமாறும், அகதி முகாம்களில் இருக்கும் தமிழ் மக்களுக்கான எரிபொருள், மருந்துவகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான உதவிகளையும் வழங்குமாறு இலங்கை அரசு இந்தியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறினார். இந்தியக் கப்பல் ஒன்றில் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகள் ‍ ஆவணி 1983 இலங்கை கேட்டுக்கொண்டதற்கமைய இந்தியா எரிபொருள், மருந்துவகை, உடைகள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் என்பவற்றை இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்தது. தமிழ் அகதிகளை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்ல கப்பல்களையும் வழங்கியது. தனது பேச்சின் இரண்டாவது பாகத்தில் இலங்கையரசாங்கம் அமெரிக்கா, இங்கிலாந்து, பாக்கிஸ்த்தான், சீனா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயன்றுவருகிறது என்கிற செய்தியை முன்வைத்தார். தனது விஜயத்தின் பின்னரே இந்த ஆயுதக் கொளவனவு முயற்சியில் இலங்கையரசு இறங்கியிருக்கிறது என்றும் கூறினார். இதுகுறித்த மேலதிகத் தகவல்களை தன்னால் வழங்கமுடியாது என்று கூறிய ராவ், பாராளுமன்றமும் நாட்டு மக்களும் இதுகுறித்து அறிந்திருப்பது அவசியம் என்றும் கூறினார். மேலும், வெளிநாட்டுச் சக்தியொன்று தமது நாட்டின் உள்விவகாரங்களில் தேவையற்ற விதத்தில் செல்வாக்குச் செலுத்த நினைப்பதாலேயே இலங்கை வெளிநாடுகளிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயல்கிறதென்றும், அந்த வெளிநாட்டுச் சக்தி இந்தியாவே என்று இலங்கை அரசு கூறியிருப்பதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் கீழ்ச்சபையில் பேசிய ராவ், இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி, இலங்கை ஆயுதக் கொள்வனவில் ஈடுபடப்போவதாகக் குறிப்பிடும் நாடுகளுடன் இந்தியா தொடர்புகொண்டு தனது கரிசணையினை வெளியிட்டிருப்பதுடன், இலங்கையில் நிலவும் சூழ்நிலை தொடர்பாகவும் அந்நாடுகளுக்கு விளக்கமளித்திருக்கிறது. நிலைமைகளின் ஏற்படப்போகும் மாற்றங்களையடுத்து வெளிநாட்டுத் தலையீடுகள் இப்பிராந்தியத்தில் ஏற்பட வாய்ப்பிருப்பதாக இந்தியா கருதுகிறது என்றும் கூறினார். அதன் பின்னர் பேசிய ராவ், எச்சக்தியாக இருந்தாலும் இலங்கை விவகாரத்தில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று எச்சரிக்கையினையும் விடுத்தார். இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாக சர்வதேசம் கருதக் கூடாது என்றும் கூறினார். இந்தியாவின் தவிர்க்கமுடியாத அயல்நாடாக இலங்கை இருப்பதால் இலங்கையில் நடைபெறும் விடயங்கள் இந்தியாவில் பல பின்விளைவுகளை ஏற்படுத்துவதைத் தவிர்க்கமுடியாது இருக்கிறது என்றும் கூறினார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பிலும், நலனிலும் இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் தாக்கம் செலுத்துவதால், அவைகுறித்து இந்தியா வாளாவிருக்க முடியாது என்றும் ராவ் கூறினார். "எம்முடன் பேசிய இலங்கை அதிகாரிகள் எமக்குச் சார்பாகவே பேசினார்கள். இலங்கை தனக்குத் தேவையான உதவிகளை இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். அது இரு அரசாங்கங்களுக்கும் இடையே பரஸ்பர ரீதியில் இலகுவாகச் செய்துகொள்ளக்கூடிய ஒரு விடயமாகும்" என்று கூறினார். இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சு நடத்திய விசாரணைகளின்போது இலங்கையரசாங்கம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயன்று வருவது உண்மையென்று உறுதிப்படுத்தப்பட்டது. ஆகவே, இலங்கையின் இந்த வெளிநாட்டு ஆயுதக் கொள்வனவு முயற்சியை இந்திய வெளிவிவகாரத்துறை தடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கியது. சர்வதேசமெங்கும் வியாப்பித்திருந்த இந்தியா இராஜதந்திர வலையமைப்பு இந்தப் பணிக்காக முடுக்கிவிடப்பட்டது. சர்வதேச நாடுகளில் இந்தியாவின் தூதர்களாக பணிபுரிந்தவர்களை வெளிநாட்டுவிவகார அமைச்சகத்திற்கு அழைத்துப் பேசிய அதிகாரிகள், ராவ் எழுதிய "இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம்" என்கிற சாராம்சத்துடனான கடிதங்களை தத்தமது நாடுகளுக்கு எடுத்துச் சென்று வழங்குமாறு கோரினார்கள்.
  10. இந்தியக் காரணி தமிழர் மீதான வன்முறைகளையடுத்து தேவையற்ற வெளிநாட்டு தலையீடுகளை தனது அரசாங்கம் எதிர்கொள்ளப்போகிறதென்பதை இந்திரா காந்தியுடனான தொலைபேசி அழைப்பினையடுத்து ஜெயார் உணர்ந்துகொண்டார். முதலாவதாக, தமிழர்களை பலவீனப்படுத்த தான் எடுத்திருக்கும் முயற்சிகள் தனது அரசியல் எதிர்காலத்தைப் பலவீனப்படுத்தியிருப்பதையும், சிங்கள மக்களை இனமாகப் பலவீனப்படுத்தியிருப்பதையும், சர்வதேசத்தில் சிங்கள மக்களின் பெயரினைக் களங்கப்படுத்தியிருப்பதையும் அவர் உணர்ந்தார். இரண்டாவதாக தமிழர் மீதான தனது அரசின் வன்முறைகள் இலங்கையில் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கான சந்தர்ப்பத்தினை இந்தியாவுக்கு ஏற்படுத்தி விட்டிருப்பதையும் அவர் உணர்ந்துகொண்டார். இந்திரா காந்தியின் தொலைபேசி அழைப்பும், அதன்பின்னரான நரசிம்ம ராவின் விஜயமும் ஜெயாரின் சுதந்திரத்தையும் ஆட்சியதிகாரத்தையும் ஓரளவிற்குக் கட்டிப் போட்டதுடன், அவரைத் தற்காப்பு நிலைக்கும் தள்ளி விட்டது. மேலும், எந்த நடவடிக்கைகயினையும் எடுப்பதற்கு தனக்கிருக்கும் அதிகாரம் தற்போது இந்தியாவின் தேசிய நலனினால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் அவர் உணரத் தலைப்பட்டார். தமிழர்களுக்குச் சரியான பாடம் ஒன்றினைப் படிப்பிப்பதற்கு அவர் முன்னெடுத்த தாக்குதல்கள் சர்வதேச ரீதியில் அவரையும் அவரது அரசாங்கத்தையும் "கண்காணிக்கப்பட வேண்டியவர்கள்" எனும் பட்டியலில் இணைத்துவிட்டிருந்தது. சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டுக் கிடக்கும் தமிழ்க் கர்ப்பிணிப் பெண் ஒருவர் ‍ இனக்கொலை 1983 வெள்ளிக்கிழமை தனது கண்டிநோக்கிய பயணத்தை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவ், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஹமீதுடன் சுற்றுப் பேச்சுக்களை ஆரம்பித்தார். தான் பயணித்த இடங்களிலெல்லாம் தமிழர்கள் வீதிகளில் வைத்துச் சிங்களவர்களால் அடித்தும் எரித்தும் கொல்லப்படுவதையும், அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு எரிக்கப்படுவதையும் தான் கண்ணுற்றதாக ஹமீதிடம் கூறினார். மேலும், மலையகப் பகுதிகளில் தமிழர்களுக்கெதிரான வன்முறைகளை சிங்களவர்கள் மீண்டும் ஒருமுறை நடத்தத் தயாராவதாக தனக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்திருப்பதாக ராவ் கூறினார். "அரசாங்கத்தின் உறுப்பினர்கள், வன்முறைகளை ஒவ்வொரு நகருக்கும் பரப்பி வருகிறார்கள் என்று என்னிடம் கூறப்பட்டிருக்கிறது" என்று ஹமீதிடம் கூறிய ராவ், இந்திய உயர்ஸ்த்தானிகருக்கு காலை முதல் பல தொலைபேசி அழைப்புக்கள் மலையகத்திலிருந்து வந்துகொண்டிருப்பதாகவும், அவை நுவரெலியா பகுதியில் உள்ள தமிழர்களைக் குறிவைத்து தாக்குதல்களை ஆரம்பிக்க அப்பகுதியில் வசிக்கும் சிங்களவர்கள் ஒன்றுதிரண்டுவருவதாக முறையிடப்பட்டிருப்பதாகவும் கூறினார். ராவ் கூறியதன்படியே, நுவரெலியா நகரப்பகுதியில் வெள்ளி பிற்பகல் தமிழர் மீதான தாக்குதல்களை சிங்களவர்கள் ஆரம்பித்தனர். அதுவரைக்கும் நகரப்பகுதியை பொலீஸாரும், இராணுவத்தினரும் காவல்காத்து வந்தனர். நகருக்கு வந்த வாகனங்கள் அனைத்தும் சோதனையின்பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டன. தமிழ்ப் பயணிகளை தமது பஸ்களில் ஏற்ற்வேண்டாம் என்று நடத்துனர்கள் சிங்களவர்களால் அறிவுருத்தப்பட்டனர். பொலீஸாரும் தம் பங்கிற்கு தமிழர்களை அடைந்து கிடக்குமாறு பணித்திருந்தனர். நுவரெலியாவின் பாராளுமன்ற உறுப்பினர் ரேணுகா ஹேரத்தின் அறிவுருத்தலின்படி நகரில் குழப்பங்களை உருவாக்கக் கூடியவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்களை பொலீஸார் தடுத்து வைத்திருந்தனர். மேலதிக பொலீஸ் ரோந்துகளும் நகர்ப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன. ரேணுகா ஹேரத் மகாவலி அபிவிருத்தியமைச்சரும், ஜெயாரின் மிக முக்கிய சகாவுமான‌ காமிணி திசாநாயக்க வெள்ளி காலை 10 மணிக்கு விமானப்படை உலங்குவானூர்தி ஒன்றின் மூலம் நுவரெலியா நகருக்குச் சென்றார். அங்கிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களைச் சந்தித்து கூட்டம் ஒன்றினை நடத்தினார். காமிணி திசாநாயக்க‌ நுவரெலியாவில் தனது ஆதரவாளர்களுக்கு முன்னால் பேசிய காமிணி இனத்துவேஷம் மிக்க கருத்துக்களை வெளியிட்டார், "நீங்கள் நாட்டை நேசிக்கும் சிங்களவர்கள் இல்லையா? ஏன் இன்னும் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள்?" நுவரெலியாவின் மிகப்பலமான ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளரை பொலீஸார் கைதுசெய்து வைத்திருப்பதாக ஏனைய உறுப்பினர்கள் காமிணியிடம் முறையிட்டதுடன், அவரின்றி தம்மால் தமிழர்கள் மீது தாக்குதல்களை ஆரம்பிப்பது கடிணம் என்றும் கூறினர். அதற்குப் பதிலளித்த காமிணி அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் உறுதியளித்தார். அவர் கூறியவாறே, பிற்பகலுக்குள் அவர்கள் அனைவரையும் பொலீஸார் விடுவித்தனர். பொலீஸாரினால் விடுவிக்கப்பட்ட காடையர்களின் முன்னணித்தலைவர்கள் உடனடியாகச் செயலில் இறங்கினர். பெற்றொல் பரல்கள், இரும்புக் கம்பிகள், வாட்கள், வெட்டரிவாள்கள் என்பன துரித கதியில் சேகரிக்கப்பட்டன. அவர்களின் முதலாவது இலக்கு நுவரெலியாப் பகுதியில் அமைந்திருந்த சைவக் கோயிலும் அங்கே தங்கியிருந்த சைவக் குருக்களும்தான்.தாக்குதல் ஆரம்பித்தவேளை குருக்கள் தப்பிக்கொள்ள, கோவில் முற்றாக இடித்து எரிக்கப்பட்டது. காடையர்களுடன் பெருமளவு சிங்கள மக்களும் தாக்குதல்க் குழுவில் இணைந்துகொண்டனர். அதுவரையில் நகர்ப்பகுதியில் காவலில் இருந்த இராணுவத்தினரும், தமது நிலைகளைக் கைவிட்டு தமிழர்களைத் தாக்கிவரும் குழுவுடன் இணைந்துகொண்டனர். இராணுவ வாகனங்களுக்கு என்று சேமித்துவைக்கப்பட்ட பெற்றொல் பரல்கள் சிங்களக் காடையர்களுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்டது. தாக்குதல் ஆரம்பித்து இரண்டு மணிநேரத்திற்குள் நுவரெலியா நகர்ப்பகுதியில் இயங்கிவந்த அனைத்துத் தமிழர்களின் கடைகளும் எரியூட்டப்பட்டன. நகர்ப்பகுதியில் தமிழர்கள் தாக்கப்பட்டு கடைகள் எரிக்கப்படுவதை அறிந்து உடனடியாக அப்பகுதிக்குச் சென்ற அமைச்சர் ரேணுக்கா ஹேரத்தை அக்கும்பல் விரட்டியடித்தது. மிகுந்த வேதனையோடு அவர் வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் நுவரெலியாவை விட்டே சென்றுவிட்டதாக அப்பகுதியின் எமது நிருபரான ராஜரட்ணம் கூறியிருந்தார். "நகரமே நெருப்புக்கடலில் மிதந்துகொண்டிருக்க, அவர் நகரை விட்டுச் சென்றார்" என்று அவர் கூறினார். ஹமீதிடம் பேசிய ராவ், "இந்தியத் துணைத் தூதர் மற்றும் அவரது அதிகாரிகள் எனக்கு கூறியிருக்கும் தகவல்களின்படி நுவரெலியாப் பகுதியில் தமிழர் மீதான தாக்குதல்களை உங்களின் அமைச்சரவை முக்கியஸ்த்தர் ஒருவரே முன்னின்று நடத்திவருவதாகக் கூறப்பட்டிருக்கிறது" என்று கூறினார். மாத்தளை சிறி முத்துமாரியம்மன் ஆலயம் கண்டி, மாத்தளை, நுவரெலியா, நாவலப்பிட்டி, பதுளை ஆகிய பகுதிகளில் தமிழர் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல்கள் தொடர்பாக தனக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களை ஹமீதிடம் கொடுத்த ராவ், இத்தாக்குதல்ப் பட்டியல்களில் தமிழர்களின் ஆலயங்களும் இணைக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன என்பதனையும் சுட்டிக் காட்டினார். மேலும், மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தை சிங்களவர்கள் முற்றாக எரித்ததை அவர் ஹமீதிடம் காண்பித்தார். அன்று மாலை சிறு எண்ணிக்கையிலான தமிழ்க் கல்விமான்கள் ராவைச் சந்தித்தார்கள். இத்தாக்குதல்கள் நன்கு திட்டமிட்டே நடத்தப்பட்டு வருவதாக அவர்கள் ராவிடம் கூறினர். தமிழர்களின் பொருளாதாரத்தை, கல்வித்தகமையுடனான செல்வாக்கினை, வர்த்தகத் தளத்தை சிதைத்து அழிக்கும் நோக்கிலேயே நடத்தப்பட்டு வருவதாகக் கூறினர். இத்தாக்குதல்களின் மூலம் தமிழர்கள் இந்நாட்டில் தமது இருப்புக் குறித்த அச்சத்தைக் கொண்டிருப்பதாகவும் கூறினர். வெள்ளி இரவு கொழும்பிலிருந்து கிளம்பிய ராவ், சனிக்கிழமை இந்திராவைச் சந்தித்து தனது அறிக்கையினைச் சமர்ப்பித்தார். மேலும், இலங்கையின் நிலைமைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், ஆனால் தமிழர்கள் தமது இருப்புக் குறித்த ஐயத்தையும் அச்சத்தையும் கொண்டிருப்பதாகவும் கூறினார். மேலும், தனக்குக் கிடைத்த தகவல்களின்படி கொழும்பில் அமைக்கப்பட்டிருக்கும் பல அகதி முகாம்களின் நிலை மிக மோசமாகக் இருப்பதாகவும் கூறினார். ஆகவே, தமிழ் அகதிகளைக் கையாளும் நடவடிக்கைக்கு இலங்கைக்கு இந்தியா உதவ வேண்டும் என்றும், தமிழர்களைப் பாதுகாக்க இந்திய இராணுவத்தை அங்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.
  11. பாதுகாப்புத் தருவதாக நகைவியாபாரிகளிடமிருந்து பணம் வாங்கி ஏமாற்றிய பிரேமதாசவும், தற்காப்பில் இறங்கிய நகைக்கடை ஊழியர்களும் - தமிழர்களின் பொருளாதாரத்தை அழித்த இனக்கொலை ஜூலை 1983 அன்று பிற்பகலுக்குப் பின்னரே நிலைமை ஓரளவிற்குத் தணிந்தது. நூற்றுக்கணக்கான வீடுகளும் கடைகளும் கொள்ளையிடப்பட்டபின் எரிக்கப்பட்டிருந்தன. பல லொறிகள் எரிந்து போயிருந்தன. வீதிகளெங்கும் சாம்பல்த் துகள்கள் பறந்துகொண்டிருக்க, ஆங்காங்கே தமிழரின் எரிந்துபோன வாகனங்களிலிருந்து புகை இன்னமும் வெளிவந்துகொண்டிருந்தது. அன்றுமட்டும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது 35 ஆவது இருக்கலாம் என்று பொலீஸார் கணக்கிட்டனர். இவர்களுள் சிலர் கொள்ளையில் ஈடுபட்ட காடையர்கள், பொலீஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானவர்கள். வன்முறைகள் பரவலாக நடந்திருந்தன. காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் அம்புலன்ஸ்களின் ஒலி நள்ளிரவு வரை கொழும்பின் வீதிகளில் பட்டு எதிரொலித்துக்கொண்டிருந்தது. சிங்களவர்களால் புனையப்பட்ட "புலிகளின் கொழும்பு வருகை" பலரின் உயிரைக் குடித்திருக்க, அந்நாளில் தேசத்தின் விதியும் மாறிப்போனது. எட்வேர்ட் குணவர்த்தன கொல்லப்பட்ட தமிழர்கள் பற்றிய உண்மையான தகவல்களை தனது புத்தகத்தில் எழுத விரும்பவில்லை. உயர் பொலீஸ் அதிகாரி என்கிற வகையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையினைக் குறைத்து எழுதுவதைத்தவிர அவருக்கு வேறு வழிகள் இருக்கவில்லை. நான் அன்று காஸல் வீதியில் அமைந்திருந்த வீட்டிலேயே தங்கியிருந்தேன். மறுநாள் காலை தெகிவளையில் எரிக்கப்பட்ட எமது வீட்டினைச் சென்று பார்த்து வரலாம் என்று எனது மகன்கள் என்னிடம் கேட்டனர். அத்துடன், அயல்வீட்டில் நாம் விட்டிவிட்டு வந்த எமது நாயைப்பற்றியும் அவர்களுக்குக் கவலை இருந்தது. நான் அவர்களைப் போக அனுமதிக்கவில்லை. எனது முடிவு அவர்களுக்கு வருத்தத்தை அளித்ததை என்னால் உணர முடிந்தது. தமது நண்பர்கள் தமது எரிந்த வீடுகளைப் பார்க்கச் செல்கிறார்கள் என்று என்னிடம் அவர்கள் கூறினார்கள். நானோ நிலைமை சீராகும்வரை பொறுத்திருக்கலாம் என்று கூறிவிட்டேன். காலை 10 மணியிருக்கும். நாம் இருந்த பம்பலப்பிட்டி, காலி வீதிப்பகுதியிலிருந்து கடுமையான இரைச்சல் எமக்குக் கேட்டது. வீதியில் வாகன நெர்சில ஏற்பட்டிருந்ததுடன், தமது வாகனங்களில் இருந்து சாரதிகள் ஒலியெழுப்பிக்கொண்டிருந்தார்கள். வீதியில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை வாகன நெரிசல் காணப்பட்டது. அவை அனைத்துமே கொழும்பிலிருந்து வெளியேறச் செல்ல எத்தனிப்பது தெரிந்தது. பம்பலப்பிட்டியில் எம்முடன் தங்கியிருந்த எனது மருமகன் மிகுந்த பதற்றத்தோடு வீடு நோக்கி ஓடிவந்துகொண்டிருந்தார். "மாமா, உடனே வீட்டிற்கு ஓடுங்கள், அவர்கள் தமிழர்களைக் கொன்றுகொன்டிருக்கிறார்கள்" என்று என்னைப்பார்த்துக் கூறினார்.டிக்மன்ஸ் வீதிக்கு அருகில் தமிழ் இளைஞர் ஒருவரை சிங்களவர்கள் தாக்கிக்கொண்டிருப்பதைத் தான் கண்டதாகவும், பொலீஸ் பார்க் பகுதியில் தமிழர் ஒருவரின் உடல் வீதியில் எரிந்துகொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். கொழும்பிலும், புறநகர்ப்பகுதிகளிலும் அன்றும் தமிழர்கள் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டார்கள். எனது மகனின் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த மாணவன் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டதை நாம் அன்று காலை அறிந்துகொண்டோம். புலிகளின் வெள்ளிக்கிழமை தமிழ் மக்களின் சரித்திரத்தைப் பொறுத்தவரையில் ஒரு கரிநாளாகப் பதியப்பட்டு விட்டது. படுகொலைகள் மீளத் தொடங்கியது எப்படி? சிங்கள ஆசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் சிங்கள மக்களின் தன்னெழுச்சியான கோபமே கொலைகளுக்குக் காரணம் என்று நிறுவுவதில் பிடிவாதமாக இருந்தது தெரிந்தது. சிங்கள கெளரவத்திற்கு தமிழரால் ஏற்படுத்தப்பட்ட இழுக்கிற்கான பதிலடியே இந்தப் படுகொலைகள் என்று அவர்கள் வாதிட்டனர். "இழிவான தமிழர்கள் எம்மைத் தாக்குவது எங்கணம்?" என்பதே அவர்களின் ஆத்திரத்திற்குக் காரணமாக இருந்ததாக சிங்கள கல்விமான்களும், ஆராய்ச்சியாளர்களும் நிறுவுகின்றனர். ஆனால், தமிழ் செய்தியாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் வெள்ளிக்கிழமை புலிகளின் வருகை தொடர்பான படுகொலைகளை வேறு கோணத்தில் இருந்து பார்க்கின்றனர். பெருமளவு தமிழ் நகைக்கடைகள் அமைந்திருக்கும் செட்டியார்த் தெருமீதான திட்டமிட்ட தாக்குதல்களும் கொள்ளைகளும் பின்னர் நாடு முழுவதற்குமான தமிழர் மீதான வன்முறையாக மாறியது என்பதே அவர்களின் வாதம். அதிகாரத்தின் மமதை எனும் தனது புத்தகத்தில் ராஜன் ஹூல் , புலிகளின் வெள்ளிக்கிழமைத் தாக்குதல்கள் நன்கு திட்டமிட்ட வகையில் தமிழரின் வர்த்தகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறுகிறார். அன்றாடப் பொருட்களின் மொத்த வியாபாரமும், நகை வியாபாரமும் தமிழர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. புறக்கோட்டைப் பகுதி மொத்த வியாபாரத்திற்கான முக்கிய இடமாக அமைந்திருக்க செட்டியார்த் தெரு நகை வியாபாரத்திற்கான முக்கிய இடமாக இருந்துவருகிறது. திங்கட்கிழமை புறக்கோட்டையில் தமிழர்களின் மொத்த வியாப நிலையங்கள் இலக்குவைக்கப்பட்டபோதிலும், செட்டியார்த்தெரு மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கவில்லை. இதற்கான காரணத்தையும் ராஜன் ஹூல் விளக்குகிறார். "ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தாக்குதல்களையடுத்து, செட்டியார்த் தெருவில் இயங்கிவந்த பிரபலமான நகை வியாபாரங்களான பழமுத்து முத்துக்கருப்பன் செட்டியார், உதயா, அம்பிகா, லலிதா, நித்திய கல்யாணி உட்பட பல நகை வியாபாரங்கள் கொழும்பில் மிகுந்த செல்வாக்குள்ள முக்கிய புள்ளி ஒருவருக்கு பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்து தமது வியாபாரங்களைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்குமாறு வேண்டியிருந்தனர். முக்கியமான நகை வியாபாரிகள் பிரதமர் பிரேமதாசாவுக்கு நெருக்கமாகக் காணப்பட்டதுடன், உதயா நகை மாளிகை பிரேமதாசாவின் அரசியல் நடவடிக்கைகளுக்குத் தொடர்ச்சியாகப் பண உதவி செய்துவந்ததுடன் அவரின் அரசியல்ப் பிரச்சாரத்திற்கான செலவையும் ஏற்றுக்கொண்டு வந்திருந்தது. வன்முறைகள் ஆரம்பிக்க சில மணித்துளிகளுக்கு முன்னர், பிரேமதாசாவின் வலதுகரமாக இயங்கிய நெல்சன் எனும் நபர் செட்டியார்த்தெருவில் இருக்கும் நகைக்கடைகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அதன் உரிமையாளர்களுக்கு அறிவித்திருந்தார். அதன்படி கடற்படையும் பொலீஸாரும் இணைந்த காவல் அணிகள் செட்டியார்த்தெருவின் இரு அந்தங்களான பிரதான வீதி மற்றும் துறைமுக வீதி ஆகிய இடங்களில் நிலைகொண்டிருந்தன. ஜூலை 25 முதல் 28 வரையான காலப்பகுதியில் நாட்டிலிருந்த தமிழர்களின் பொறுளாதார வளங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, எரியூட்டப்பட்டுக்கொண்டிருக்க, இந்த வீதியில் இருந்த சில வியாபாரங்கள் மட்டும் தப்பவைக்கப்பட்டன". ஆனால், அரசியல்வாதிகளை முழுதுமாக நம்பமுடியாது என்று எண்ணிய நகைவியாபாரிகள், தம்பங்கிற்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தனர். . தமது வியாபார நிலையங்களில் பணிபுரிந்து வந்த இளைஞர்களை தமது வியாபார நிலையங்களைப் பாதுகாக்கும் கடமையில் அமர்த்தினர். தற்காப்பிற்கென்று அமிலங்கள் நிரப்பட்ட கண்ணாடி பள்ப்புக்கள் மற்றும் தமது நகைத்தொழிலில் பயன்படுத்தும் ஏனைய இரசாயணங்களைக் கொண்டு ஆயுதங்களை அவர்கள் தயாரித்து வைத்துக்கொண்டனர். வெள்ளி காலை 10 மணியளவில் செட்டியார்த்தெருவிற்குப் பாதுகாப்பாளித்துக்கொண்டிருந்த கடற்படையினரும் பொலீஸாரும் திடீரென்று விலக்கிக் கொள்ளப்பட்டனர். உடனடியாக பிரதான வீதி ஊடாகவும், துறைமுக வீதியூடாகவும் சிங்களக் காடையர்கள் செட்டியார்த்தெருவில்க் கூட ஆரம்பித்தனர். பிரேமதாசாவைத் தொடர்புகொள்ள நகைவியாபாரிகள் எடுத்த பல முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தன. வேறு வழியின்றி, தம்மைத்தாமே காத்துக்கொள்ள தீர்மானித்தனர் செட்டியார்த்தெருவின் வியாபாரிகள். பிரதான வீதியில் அமைந்திருந்த தமது கடைகளை நோக்கி ஓடிவந்துகொண்டிருந்த சிங்களவர்கள் மீது கடைகளின் கூரைகளின் மீது நிலையெடுத்திருந்த தமிழ் இளைஞர்கள் அசிட் போத்தல்களை விட்டெறிந்து தாக்கத் தொடங்கினர். தமிழர்கள் திருப்பித்தாக்குவார்கள் என்பதை எதிர்ப்பார்த்திருக்காத சிங்களவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களுக்கு இது பழக்கமானதல்ல. கடந்த சில நாட்களாக தமிழர்கள் எவருமே தம்மைத் திருப்பித் தாக்கவில்லை எனும் உணர்வே அவர்களை தைரியமாக அவர்கள் மீது தாக்குதல் நடத்த உந்தியிருந்தது. "புலிகளைத் தவிர தமிழர்கள் எவரும் எம்மை எதிர்க்கமுடியுமா?" என்பதே அவர்களுக்கிருந்த ஒரே கேள்வி. ஆகவே, இங்கிருந்துதான் புலிகள் கொழும்பிற்கு வந்துவிட்டார்கள் என்கிற வதந்தி உருவெடுத்தது. உடனடியாக பொலீஸார் இப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டதுடன், நகைக்கடைகளின் கூரைகள் மீது தற்காப்பிற்காகக் காத்து நின்ற நகைக்கடை ஊழியர்கள் மீது உலங்குவானூர்திகளினால் தாக்குதல் நடத்தப்பட்டது. நகைக்கடைகளைப் பாதுகாக்க கூரை மீது காவலிருந்த பன்னிரண்டு அப்பாவித் தமிழ்த் தொழிலாளிகள் விமானப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் மட்டக்களப்பு மற்றும் மலையகத்தைச் சேர்ந்தவர்கள். அதன் பின்னர் செட்டியார்த்தெருவில் இராணுவ அணியொன்று பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்டது. இந்திய தலையீட்டின் மூலம் தமிழருக்குக் கிடைத்த முதலாவது உதவியென்று இதனைக் குறிப்பிட முடியும்.
  12. கொழும்பிற்கு வந்த புலிகளும், பொலீஸ் நிலையங்களுக்குள் பதுங்கியிருந்த பொலீஸாரும் வெள்ளியன்று ராவ் உலங்குவானூர்தியொன்றில் கண்டிக்குச் சென்றார். இந்திய தூதரகத்திலிருந்து விமானப்படை முகாமிற்கு அவர் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது வீதியில் அச்சத்துடன் நடமாடிய மக்களை அவர் கண்டார். உலங்குவானூர்தியிலிருந்து கொழும்புப் பகுதியில் தமிழர்கள் வீதிகளில் கொல்லப்பட்டு எரிக்கப்படுவதையும், அவர்களது சொத்துக்கள் சூறையாடப்படுவதையும் அவரால் பார்க்க முடிந்தது. வெள்ளிக்கிழமை கொழும்பில் புலிகள் தாக்கப்போவதாக வந்த வதந்திகளையடுத்து காலை 9 மணியிலிருந்து மக்கள் அச்சத்துடன் ஓடிக்கொண்டிருந்தார்கள். வீதிகள் வாகன நெரிசலால் ஸ்த்தம்பித்துப் போயிருக்க, வாகனச் சாரதிகள் தமது வாகனங்களின் ஹோர்ன்களை அழுத்திக்கொண்டிருந்தார்கள். எல்லோரிடமும் அச்சமும், பதற்றமும் குடிகொண்டிருந்தது. புலிகள் கொழும்பிற்கு வந்துவிட்டார்கள் என்பதே அனைவரினதும் பேச்சாகவிருந்தது. கலவரம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது அமைதியாகக் கிடந்த பொலீஸாரின் வானொலி வலையமைப்பு மறுபடியும் சுறுறுப்பாக இயங்கத் தொடங்கியது. "புறக்கோட்டையிலிருந்து பொலீஸ் ரோந்து அணி கட்டுப்பாட்டு நிலையத்தினை அழைக்கிறது" "கூறுங்கள் புறக்கோட்டை ரோந்து அணி" என்று கட்டுப்பாட்டு நிலையம் (Police radio network) பதிலளித்தது. "புறக்கோட்டைப் பகுதியில் பதற்றம் அதிகரித்து வருகிறது. புலிகள் எல்லாப் பகுதிகளிலும் பதுங்கியிருந்து சிங்களவரைத் தாக்க ஆயத்தமாகி வருவதாக வதந்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. எம்மிடம் பேசிய பொதுமகன் ஒருவர் நீல நிறத்தில் சீருடை அணிந்த பல புலிகள் வீரா விடுதியில் நிற்பதைத் தான் கண்டதாகக் கூறினார். நாங்கள் அவ்விடம் நோக்கிச் செல்கிறோம்" என்று பொலீஸ் ரோந்து அணி கூறியது. அந்த நாள் நிலவிய குழப்பத்தினையும் பதற்றத்தினையும் உதவிப் பொலீஸ் மா அதிபர் எட்வேர்ட் குணவர்த்தன தனது புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார், "சிறிது சிறிதாக வதந்தி எல்லாவிடங்களிலும் பரவத் தொடங்கியது. மக்கள் எல்லாத் திசைகளிலும் ஓடத் தொடங்கினர். "புலிகள் ,கொழும்பிற்கு வந்துவிட்டார்கள், அவர்கள்இராணுவத்தினரைத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள், இங்கிருந்து தப்பியோடுவோம்" என்று பலரும் பேசிக்கொண்டிருந்தார்கள். கடை உரிமையாளர்கள் அவசர அவசரமாக தமது கடைகளை இழுத்துச் சாத்திக்கொண்டிருந்தார்கள். பஸ்கள் , லொறிகள், கார்கள் என்று அனைத்து வாகனங்களும் புறக்கோட்டைப் பகுதியிலிருந்து முண்டியடித்து வெளியேறிக்கொண்டிருந்தன. நகரப்பகுதிக்கு வந்த இராணுவக் கவச வாகனங்கள் ஆங்காங்கே நிலையெடுத்து நிற்கத் தொடங்கின. தமிழர்களுக்குச் சொந்தமான வியாபார நிலையங்கள் என்று தாம் கருதிய இடங்கள் மீது இராணுவத்தினர் தாம் கொண்டுவந்த ரவைகள் தீரும்வரை சுட்டுக்கொண்டிருந்தனர். தமிழர்களின் கடைகள் எல்லாமே புலிகளின் மறைவிடங்களாக ராணுவத்தால் கருதப்பட்டு அவற்றின்மீது கண்மூடித்தனமாக துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டது. நகரப்பகுதியில் கேட்ட தானியங்கித் துப்பாக்கிகளின் ஒலி அப்பகுதியெங்கும் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக்கொண்டிருந்தது. விமானப்படைக்குச் சொந்தமான இரு உலங்குவானூர்திகள் தமிழர்களின் வியாபார நிலையங்கள் மீது தொடர்ச்சியான துப்பாக்கித் தாக்குதல்களை மேற்கொண்டதுடன் குண்டுவீச்சிலும் ஈடுபட்டன. ஏற்கனவே எரிந்துகொண்டிருந்த கட்டடங்களுக்கு அண்மையாக தாழ்வாகப் பறந்து அவை தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியெங்கும் புகைமண்டலமாகக் காணப்பட்டது. இது மக்களிடையே மிகுந்த குழப்பத்தினையும் அச்சத்தினையும் ஒருங்கே ஏற்படுத்தியிருந்தது. ராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்ட இந்தப் பதற்றமான சூழ்நிலை சிங்களக் காடையர்கள் மீள் ஒருங்கிணையவும், வன்முறைகளில் ஈடுபடவும் உகந்த சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொடுத்தது. செட்டியார்த்தெருவிலிருந்த தமிழரின் வியாபார நிலையங்கள் நோக்கி வந்த காடையர் குழுவை இராணுவம் அப்பகுதியிலிருந்து விரட்டியது. டாம் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல லொறிகளை அக்கும்பல் எரியூட்டியது. அப்பகுதியில் தமிழ் வியாபார நிலையங்களுக்கு முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்களை புரட்டிப் போட்ட அக்கும்பல் அவற்றிற்கு தீவைத்தது. தமிழர்களால் நடத்தப்பட்டு வந்த "சிட்டி மிஷன்" எனும் தங்கும் விடுதியும் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தது. அவ்விடுதியின் அருகில் சணல் நூற்ச் சாக்குகள் மற்றும் உரப்பைகளை சேமித்து வைக்கும் பாரிய சேமிப்பு நிலையத்திற்கு தீ பரவவே அது சுவாலை விட்டு எரியத் தொடங்கியது. அக்கட்டடத்திலிருந்து எழுந்த‌ கரும்புகை பல கிலோமீட்டர்கள் தூரத்திற்குத் தெரிந்தது. பீடிகளை மொத்த வியாபாரமாகச் செய்துவந்த தமிழரான சங்கரசிவம் கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டதுடன், அவரது காரினுள் வைத்தே எரிக்கப்பட்டார். அவரது சிங்கள வாகனச் சாரதியை அக்காடையர் குழு எதுவும் செய்யாமல் விட்டுவிட்டது. அப்பகுதியில் வியாபாரங்களில் ஈடுபட்ட பல தமிழர்கள் பொலீஸாரின் ட்ரக் வண்டிகளிலும், பஸ்வண்டிகளிலும் ஏற்றப்பட்டு அகதி முகாம்களுக்கு அனுப்பப்பட்டு வந்தனர். புறக்கோட்டைக்கு அண்மையாக அமைந்திருந்த கிராண்ட்பாஸ் பகுதியில் தமிழர்களை சிங்களவர்கள் வாட்களால் வெட்டிக் கொல்லத் தொடங்கியிருந்தார்கள். அப்பகுதியில் இயங்கிவந்த பிரபல பலசரக்குக் கடையின் உரிமையாளரான திருப்பதி முதலாளி சிங்களவர்களால் கூட்டாக வாட்களாலும் கோடரிகளாலும் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரின் மோதிரங்களைத் திருடுவதற்காக அவரது விரல்களை அக்கும்பல் வெட்டி எடுத்திருந்தது. பேலியகொடைப் பகுதியில் அமைந்திருந்த பாற்பண்ணைப் பொருட்களை விற்கும் தமிழரின் உணவு விடுதியான அம்பாள் விடுதி முற்றாக எரிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் பிற்பகுதியில் வளர்க்கப்பட்டு வந்த பால்மாடுகள் இழுத்துச் செல்லப்பட்டு இறைச்சிக்காகக் கொல்லப்பட்டன. அப்பகுதியில் இயங்கிவந்த தமிழருக்குச் சொந்தமான‌ சினிமாத் திரையரங்குகளை அப்பகுதி வாழ் சிங்களவர்களுடன் காடையர்கள் சேர்ந்து எரித்தனர். காலை 11 மணியளவில் கொழும்பு நகர் மட்டுமல்லாமல் அதனைச் சுற்றியிருந்த பகுதிகளிலும் பாரிய குழப்பம் நிலவியது. புலிகள் பெரும் எண்ணிக்கையில் நகரினுள் ஊடுருவி விட்டதாக எண்ணிய பொலீஸார் தமது வீதிக் கடமைகளைக் கைவிட்டு விட்டு நேரே தமது பொலீஸ் நிலையங்களுக்கு ஓடிவிட்டனர். நகரிலிருந்து தப்பியோட எத்தனித்த வாகனங்களையும், பாதசாரிகளையும் வீதி ஒழுங்குகளுக்கு அமைய வழிநடத்த பொலீஸார் இன்றி எங்கும் பாரிய சனநெரிசலும், வாகன‌ நெரிசலும் காணப்பட்டது. வீதிகள் எங்கும் சனநெரிசலாகக் காணப்பட்டதுடன், பதற்றமும் தெரிந்தது. பெண்களும், சிறுவர் சிறுமியரும் கைகளில் தலையணைகளையும்,பைகளையும், சூட்கேஸுகளையும் எடுத்துக்கொண்டு வீதிகள் வழியே ஓடிக்கொண்டிருந்தனர். உயிரைக் காப்பாற்ற ஓடிக்கொண்டிருந்த அப்பாவிகளுடன் சேர்ந்து திருடர்களும் கைகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள், டெக்குகள், வானொலிப் பெட்டிகள் போன்றவற்றைக் காவிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தனர். இக்குழப்பமான சூழ்நிலையும் சனநெரிசலும் தங்குதடையற்ற சூறையாடல்களையும், உடமை எரிப்புக்களையும் ஊக்குவித்திருந்தது. இதற்கு மேலதிகமாக, பொலீஸ் தலைமையகத்திலிருந்து அனைத்துப் பொலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்ட செய்தியான, "உங்களின் பொலீஸ் நிலையங்களைப் பாதுகாக்க எதிர்த்துச் சண்டையிடுங்கள்" என்கிற செய்தியும் பொலீஸாரிடையே குழப்பத்தையும், பீதியினையும் ஏற்படுத்தி விட்டிருந்தது. "பொலீஸ் நிலையங்கள் புலிகளால் தாக்கப்பட்டுக் கைப்பற்றப்படும் நிலை காணப்படுகிறது" என்கிற பொலீஸ் செய்தியை பதற்றமடைந்திருந்த பொலீஸ் அதிகாரியொருவர் பொலீஸாரின் பிரதான செய்தி வலையமைப்பில் பரவ விடவே பொலீஸாரிடயே கடுமையான அச்சம் நிலவத் தொடங்கியது. வீதிகளில் துணிவுடன் கடமையிலிருந்த ஒரு சில பொலீஸ்காரர்களும் இச்செய்தியைக் கேள்விப்பட்டபோது எல்லாவற்றையும் விட்டு விட்டு தமது நிலையங்களுக்குத் திரும்பியிருந்தனர். வீதி ரோந்து அணிகளும் பொலீஸ் நிலையங்களுக்குள் முடங்கிக்கொண்டன. கொள்ளுப்பிட்டி பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரியொருவர் நிலையத்தின் முன்னால் இருந்த அலங்காரக் கற்களினால் கட்டப்பட்ட சுவரில் தனது .303 துப்பாக்கியின் பின்புறத்தால் இடித்து ஓட்டைகளை உருவாக்கினார். அவற்றினூடாக முன்னேறி வரும் புலிகள் மீது இயந்திரத் துப்பாக்கிகளால் தாக்குவதே அவ‌ரது திட்டம். கொழும்பிலிருந்த அனைத்துப் பொலீஸ் நிலையங்களும் தமது பிரதான நுழைவாயிலை அடைத்தன. மேலும், பொலீஸ் நிலையங்களைச் சுற்றி பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு பொலீஸார் நிலையெடுத்துக் காத்திருந்தனர். தெகிவளைப் பொலீஸ் நிலையம் ஹில் வீதியின் இரு எல்லைகளையும் முற்றாகவே அடைத்துவிட்டிருந்தது. தெகிவளை சுற்றுவட்டத்திலிருந்து ஹில் வீதிக்கான நுழைவுவழி இரும்புக் கதவுகளால் அடைக்கப்பட்டதுடன், அப்பகுதியில் பொலீஸார் வீதியில் படுத்திருந்து முன்னேறி வரும் புலிகளுக்காகக் காத்திருந்தனர். விரல் விட்டு எண்ணக்கூடிய சில பொலீஸ் அதிகாரிகளே துணிவாக வீதிகளில் வலம் வந்தனர். அல்பா 2 மற்றும் கொழும்பு வடக்குப் பிரிவு 2 ஆகிய அணிகளின் பொலீஸ் அதிகாரிகள் வீதிகளில் வலம்வந்து கொண்டிருந்ததுடன் பொலீஸ் ரேடியோச் செய்தி வலையமைப்பில் உச்சஸ்த்தானியில் கட்டளைகளை வழங்கிக்கொண்டிருந்தனர். "அல்பா 2 பேசுகிறேன், அல்பா 2 பேசுகிறேன். நான் காஸ்வேர்க்ஸ் வீதியின் சுற்றுவட்டத்தினருகில் நிற்கிறேன். பயப்பட வேண்டும், வீதிக்கு வாருங்கள். நான் வெளியிலேயே நிற்கிறேன். இங்கே புலிகள் எவரும் இல்லை. துப்பாக்கிச் சண்டைகள் ஏதும் நடைபெறவில்லை". "கோழைகளே, பதுங்கியிருந்தது போதும், வெளியே வாருங்கள்" என்று ஆத்திரத்துடம் ரேடியோவில் பேசிக்கொண்டிருந்தார். அவரின் கட்டளையைக் கேட்டு சில பொலீஸார் வீதிகளில் எட்டிப் பார்க்கத் தொடங்கினர். சுற்றுப்புறங்களில் இருந்து கொழும்பு கோட்டைப் பகுதி மற்றும் பெட்டா நோக்கி ஓடிக்கொண்டிருந்த மக்களில் தமிழர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன் அவர்களின் உடமைகளும் சிங்களவர்களால் சூறையாடப்பட்டன. அவர்கள் பயணம் செய்துவந்த வாகனங்கள் வீதிகளில் நிறுத்தப்பட்டு எரிக்கப்பட்டன. ஆனால், வன்முறைகளில் ஈடுபட்ட சிங்களவர்களின் எண்ணிக்கை முன்னைய இரு நாட்களுடன் ஒப்பிடும்பொழுது சற்றுக் குறைவாகவே காணப்பட்டது. திங்கட்கிழமை நடைபெற்ற சில நிகழ்வுகளையடுத்து பெரும்பாலான வன்முறைக் கும்பல்கள் அடங்கிப்போயிருந்தன. சிங்களத்தைச் சரளமாகப் பேச முடியாத முஸ்லீம்களும், சில சிங்களவர்களும் வன்முறைக் கும்பல்களால் தாக்கப்பட்டனர். புலிகள் கொழும்பிற்கு வந்திறங்கிவிட்டார்கள் என்கிற செய்தியின் தாக்கம் எப்படியிருந்ததென்றால், கொழும்பின் புறநகர்ப்பகுதிகளிலும் சிங்களவர்கள் வாட்கள், கோடரிகள், இரும்புக் குழாய்கள், மண்வெட்டிகள் போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வீடுகளின் முன்னால் புலிகளை எதிர்பார்த்துக் காவலிருக்கத் தொடங்கியிருந்தார்கள்.
  13. ஆனால் காத்தான் குடி படுகொலையை மட்டும் தூக்கி க்கொண்டு வருவாங்கள் பக்கத்து ஊரான எங்கள் ஊரில் அகதிகளாக தஞ்சமடைந்த உறவுகள் அதிகம் . வீரமுனை வளத்தாப்பிட்டி, வீரச்சோலை, திராய்க்கேணி மல்வத்தை மல்லிகைத்தீவு சம்மாந்துறை அட்டப்பள்ளம், நிந்தவூர், என ப்ல கிராமங்களில் இருந்து வந்து கோயில்களிலும் , மைதானங்களீலும் குடிசைகள் கொட்டில்கள் அமைத்து வாழ்ந்துவந்தார்கள் அப்ப வயது எனக்கு 6 அவை யாவும் நினைவில்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.