Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    39346
    Posts
  2. தனிக்காட்டு ராஜா

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    9977
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33372
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    8975
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/19/23 in all areas

  1. Variety of images · Rejoindre Anu Anish · · ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை நேரம் நடைபயிற்சி போனாங்க. ஒரு ஆத்தங்கரை ஒரமா போயிட்டு இருந்தாங்க. அப்போ அங்கே ஒரு கொடியில வெள்ளரிக்காய் காய்ச்சு தொங்குவதை பார்த்த ராஜா... "மந்திரி அந்த வெள்ளரிக்காய பறிச்சுட்டு வா சாப்பிடலாம்"ன்னு சொன்னார். *மந்திரி பறிக்க போனார். அங்கே உக்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான். ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அது தின்னா வாந்தி தான் வரும்.* *ராஜா சொன்னார். யோவ் மந்திரி.!! அத பறிச்சு சாப்பிடு. வாந்தி வருதான்னு பாக்கலாம்.* *வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டார். உடனே மந்திரிக்கு குமட்டிக்கிட்டு ஒரே வாந்தி.* *ராஜா கேட்டார். யோவ்.!! கபோதி..!! இதுக்கு என்ன தீர்வு.? ன்னு.* *அந்த குருடன் சொன்னான். அது பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும். அத கையில கசக்கி மந்திரி வாயில விட்டா வாந்தி நிற்கும்ன்னு.* *ராஜாவும் அப்படியே பண்ண... மந்திரிக்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரிக்கு போன உசுரு திரும்பி வந்தது.* *ராஜா குருடனை பார்த்து கேட்டார். உனக்கு தான் கண் தெரியாதே.? எப்படி சரியா தீர்வு சொன்னாய்.? குருடன் சொன்னான். ராஜா..!! இந்த நாட்ல எங்கேயும் பஞ்சம் பசி பட்டினி. அப்படி இருக்கும் போது எவனாவது வெள்ளரி பிஞ்ச விட்டு வச்சிருப்பானா.? எப்பவும் இயற்கை ஒரு நோய் கொடுக்கற காய கொடுத்தா இறைவன் பக்கத்துலயே ஒரு மாற்று மருந்து வெச்சிடுவார்.* *ராஜாவுக்கு சந்தோஷம்.* *இந்தா ஒரு டோக்கன். என் அரண்மனையில கிழக்கு வாசலுக்கு போ. பட்டை சாதம் கொடுப்பாங்க. சாப்பிட்டு ஜாலி யா இரு. சொல்லிவிட்டு ராஜா போய்ட்டார்.* *கொஞ்ச நாள் கழித்து ஒரு வெளியூர் வியாபாரி ராஜா கிட்ட வந்தான். ராஜா என்கிட்ட வைரம் நிறைய இருக்கிறது. வாங்குறீங்களா ன்னு கேட்டான்.* *இது ஒரிஜினலா போலியா ன்னு எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு ராஜாவுக்கு குழப்பம். மந்திரிய கூப்பிட்டார்.* *ஏற்கனவே ஒரு தடவை வாந்தி எடுத்த அனுபவம் இருந்ததால...* *வைரத்தை முழுங்கித்தொலைக்க சொன்னா என்ன பண்றதுன்னு பயந்துட்டு தெரியாதுன்னுட்டார்.* *ராஜா சொன்னார். மந்திரி.!! போய் அந்த கபோதிய கூட்டிட்டு வா. அவன்தான் காரண காரியத்தோட சரியாக சொல்லுவான்.* *மந்திரி போய் அந்த குருடனை கூட்டிட்டு வந்தார். ராஜா சொன்னார். டேய் இது ஒரிஜினல் வைரமா.? போலி வைரமா.? இல்லன்னா ரெண்டும் கலந்து இருக்கா ன்னு பார்த்து சொல்லு.* *அந்த குருடன் அந்த மொத்த வைரத்தையும் எடுத்து மத்தியான வெயில்ல கொண்டு போய் வெச்சான். கொஞ்ச நேரம் கழித்து அதை கையில எடுத்து பிரிச்சு.... ராஜா இதெல்லாம் வைரம். மற்றது எல்லாம் கண்ணாடின்னு பிரிச்சு கொடுத்துட்டான்.* *வியாபாரியும் எதோ தெரியாம நடந்துடுச்சு ன்னு சொல்லி எல்லா வைரத்தையும் இனாமா கொடுத்துட்டு நழுவிட்டான்.* *ராஜாவுக்கு ஆச்சர்யம்.* *எப்படிப்பா கண்டு பிடிச்ச.? விவரமா சொல்லு.?* *குருடன் சொன்னான்.* *ராஜா.!! வெயில்ல வைரம் சூடாகாது. ஆனா கண்ணாடி சூடாகும். அதனால சூடானது எல்லாம் கண்ணாடின்னும் சூடு ஆகாதது எல்லாம் வைரம்ன்னும் பிரிச்சேன்.* *ராஜா சந்தோஷமா பாக்கெட்ல கைய விட்டு ஓரு டோக்கன் எடுத்து குருடன் கிட்ட குடுத்து போடா மேற்கு வாசலுக்கு. டோக்கன குடுத்து பட்டை சாதம் வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இருன்னு சொல்லி அனுப்பி வச்சார்.* *இப்படியே கொஞ்ச நாள் போச்சு. ராஜா தன் மகனுக்கு கல்யாணம் பண்ண வரன் தேட ஆரம்பிச்சார். பக்கத்து ஊர்ல இருந்து எல்லாம் இளவரசி கொடுக்க தயாராக இருந்தாங்க. ராஜாவுக்கு குழப்பம்.* *யாரை தேர்ந்து எடுப்பதுன்னு. மந்திரிகிட்ட கேட்கிறார். எல்லா பொண்ணுமே நல்லா இருக்குன்னு பயந்து கிட்டே மந்திரி சொல்றார்.* *ராஜா பார்த்தார்.* *கூப்புடுங்கடா அந்த கபோதிய.* *குருடன் வந்தான்.* *ராஜா குருடன் கிட்ட சொன்னார். என் மகனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பார்க்குறேன். எந்த ராஜாவோட குமாரி சரியா இருக்கும்ன்னு காரண காரியத்தோட தெளிவா சொல்லு.* *குருடன் சொன்னான்.* *ராஜா..!! அடுத்த நாட்டை விட்டுட்டு அதுக்கு அடுத்த நாட்டு ராஜாவோட பொண்ண பாருங்கன்னான். அந்த ராஜா உங்க சம்பந்தி ஆயிட்டா பக்கத்து நாட்டு ராஜா உங்க ரெண்டு பேருக்கும் நடுவில இருப்பான். அப்போ எல்லை பிரச்சினை வராது. பொண்ண கொடுத்ததால அந்த இடைப்பட்ட பகுதில பிரச்சினை வராம பார்த்துப்பான்.* *ராஜாவுக்கு ஒரே குஷி.* *சபாஷ்.!! இந்தா டோக்கன். அரண்மனையின் வடக்கு வாசலுக்கு போடா. பட்டை சாதம் குடுப்பாங்க. வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு அப்படின்னார்.* *குருடனும் போய்ட்டான்.* *கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள் ராஜா அந்த குருடனை தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு வர சொன்னார்.* *டேய்.!!* *நான் ஒன்னு கேட்பேன். சரியா காரண காரியதோட சொல்லனும்.* அப்படின்னார். குருடனும் சரின்னான். இந்த ஊர்ல எல்லோரும் என்னைய *பிச்சைகாரனுக்கு பிறந்த பய அப்படின்னு சொல்றாங்க. இதுக்கு நீ என்ன சொல்ற.? சரியா சொல்லனும் என்றார்.* *குருடன் அமைதியா இருந்தான்.* *பதிலே பேசல.* *ராஜா திரும்ப கேட்டார்.* *குருடன் அமைதியா சொன்னான்.* *ராஜா நீங்க திரும்ப திரும்ப கேட்கறதால சொல்றேன்.* *நெசமா நீங்க பிச்சை காரனுக்கு பிறந்தவன் தான். அதுல சந்தேகமே வேணாம் அப்படின்னான்.* *ராஜாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. ரொம்ப வருத்தம். ஏன்டா என்னய பார்த்தா இப்படி கணிச்சே..?? ன்னு வருத்தமா கேட்டார்.* *ராஜா...* *முதல்ல குமட்டி காய பத்தி சொன்னேன். நீங்க சந்தோஷம் ஆயிட்டீங்க. ஆனா குடுத்தது பட்டை சாதத்துக்கு இலவச டோக்கன்.* *நிஜமான ராஜாவா இருந்தா கையில இருந்த மோதிரத்தை கழட்டி குடுத்து இருப்பார்.* *அப்புறம் கோடி கணக்குல வைரம் கிடைக்க வழி செஞ்சேன். நிஜமான ராஜாவா இருந்தா கழுத்துல இருந்த வைர மாலைய குடுத்து இருப்பார்.* *ஆனா நீங்க குடுத்தது பட்டை சாத டோக்கன்.* *மூன்றாவது... ஒரு ராஜ்ஜியமே உங்க கைகுள்ள வருவதற்கு வழி சொன்னேன். உண்மையான ராஜாவா இருந்தா நாலு கிராமத்த எழுதி குடுத்து இருப்பார்.* *நீங்க குடுத்தது வடக்கு வாசல் பட்டை சாத டோக்கன்.* *ஆக.... சோத்தை தாண்டி உங்க எண்ணம் போகல. உலகத்துலேயே பெரிய விஷயம் சோறுன்னு முடிவு பண்ணிட்டீங்க. இதுல இருந்து தெரியல.?* *நீங்க பிச்சைக்காரனுக்கு பிறந்தவன்னு.? ஏன்னா உங்க புத்தி டோக்கனோடவும் பட்டை சாதத்தோட வும் முடிஞ்சு போச்சு. அதுக்கு மேல போகல என்றான்.* *மன்னர் வெட்கி தலைகுனிந்தார்.* நீங்கள் யார் என்பதை உங்களிடம் இருக்கும் *பணமோ,சொத்தோ,* *பதவியோ* தீர்மானிப்பதில்லை.. *உங்கள் எண்ணங்களே தீர்மானிக்கின்றன......!
  2. சந்திரயான் 3: தலையெழுத்தே இந்த '15 நிமிடங்களில்' தான் உள்ளது - விக்ரம் லேண்டர் எப்படி தரையிறங்கும்? முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் பதவி, முதுநிலை விஞ்ஞானி, விஞ்ஞான் பிரசார் அமைப்பு 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஆகஸ்ட் 23ஆம் தேதி, மாலை 5:32. அப்போதுதான் இஸ்ரோ விஞ்ஞானிகளை பதைபதைக்க வைக்கும் 15 நிமிடங்கள் தொடங்கவுள்ளன. அந்தப் பதினைந்து நிமிடங்களில்தான் நிலாவுக்கு மேலே 30 கி.மீ உயரத்தில் இருக்கக்கூடிய சந்திரயான்-3 விண்கலத்தை நிலாவில் தரையிறக்குவார்கள். கடந்த முறை சந்திரயான் 2 திட்டத்தில் இந்த இடத்தில்தான் தோல்வியடைந்தது. அப்போது நடந்த தவறுகளை பகுப்பாய்வு செய்து, இந்த முறை அதிலிருந்து மேம்படுத்தப்பட்ட சந்திரயான் விண்கலத்தை அமைத்துள்ளார்கள். இந்த 15 நிமிடங்களில் சந்திரயான் அது எட்டு கட்டங்களாக தரையிறங்கும் செயல்முறையை மேற்கொள்கிறது. அந்த எட்டு கட்டங்கள் என்னென்ன, கடந்த முறை நடந்த தவறு இப்போது நடக்காமல் இருக்க என்ன மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பன குறித்து இனி விரிவாகக் காண்போம். படக்குறிப்பு, விண்வெளியில் நிலாவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் சந்திரயான் விண்கலம் முதலில் நிலாவைச் சுற்றி வரும். பிறகு நீள்வட்டப் பாதையில் கோழி முட்டையைப் போன்ற வடிவில் சுற்றி வரும். தரையிறங்கும் நிகழ்வின் முதல் கட்டம்: வைரத்தை வைரத்தால் அறுக்கும் யுக்தி விண்வெளியில் நிலாவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் சந்திரயான் விண்கலம் முதலில் நிலாவைச் சுற்றி வரும். பிறகு நீள்வட்டப் பாதையில் கோழி முட்டையைப் போன்ற வடிவில் சுற்றி வரும். அந்த நேரத்தில், நிலவுக்கு நெருக்கமாக இருக்கையில் 30 கி.மீ தொலைவிலும் தூரத்தில் இருக்கும்போது 100 கி.மீ தொலைவிலும் இருக்கும். அப்படிச் சுற்றி வரும் நேரத்தில், ஆகஸ்ட் 23ஆம் தேதி 30 கி.மீ. என்ற நெருக்கமான தொலைவில் இருக்கும் சூழலில் தான் நிலாவின் தென் துருவத்தில் மென்மையாகத் தரையிறங்கும் செயல்முறையை அது மேற்கொள்ள இருக்கிறது. இந்த நேரத்தில் விண்கலம் தரையிறங்குவதற்குப் பயன்படுத்தும் அதன் நான்கு கால்களும் கீழ்நோக்கி இருக்காமல், பக்கவாட்டில் நோக்கியிருக்கும். அதை எப்படி கீழ்நோக்கித் திருப்பி, தரையிறக்குவார்கள்? படக்குறிப்பு, ஒருபுறத்தில் ராக்கெட்டின் எரிபொருள் எரியும்போது மறுபுறத்தில் விண்கலத்திற்கு தள்ளுவிசை கிடைக்கும். அதற்குப் பின்னால் இருப்பதும் ராக்கெட் தொழில்நுட்பம்தான். வைரத்தை வைரத்தால் அறுப்பது போல, ராக்கெட் உதவியுடன் விண்வெளிக்கு ஏவப்பட்ட சந்திரயான் விண்கலத்தை, அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலாவிலும் தரையிறக்கப் போகிறார்கள். இதை ஓர் எளிமையான சான்றோடு கூற முடியும். தோட்டத்தில் நீர் பாய்ச்சும்போது குழாயில் இருந்து தண்ணீர் படுவேகமாக வரும். அப்போது, அதற்கு எதிர்புறத்தில் குழாயைப் பிடித்திருப்பவர் கைகளில் ஒரு தள்ளுவிசை உணரப்படும். அதுதான் ராக்கெட் தத்துவம். ஒரு புறத்தில் ராக்கெட்டின் எரிபொருள் எரியும்போது மறுபுறத்தில் தள்ளுவிசை கிடைக்கும். சந்திரயான் விண்கலத்தில் பக்கவாட்டில் தெரியும் கால்களில் சிறு ராக்கெட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். அவற்றை இயக்கினால் அதற்குப் பின்புறத்தில், அதாவது விண்கலத்தின் மேல் பகுதியில் ஒரு தள்ளுவிசை கிடைக்கும். படக்குறிப்பு, தள்ளுவிசை காரணமாக வேகம் படிப்படியாகக் குறைந்து நிலாவிலிருந்து 7.4 கி.மீ தூரத்திற்கு வரும்போது அதன் வேகம் மணிக்கு வெறும் 1200 கி.மீ. என்ற அளவுக்கு குறையும். அப்போது முன்னோக்கிச் செல்லும் விண்கலத்தின் வேகம் குறையும். அப்படி வேகம் குறைந்தால் அது மென்மையாகத் தரையிறங்கும். முப்பது கி.மீ தொலைவில் நிலவைச் சுற்றி வரும்போது சந்திரயானின் வேகம் மணிக்கு 6000 கி.மீ. இந்தத் தள்ளுவிசை காரணமாக வேகம் படிப்படியாகக் குறைந்து நிலாவிலிருந்து 7.4 கி.மீ தூரத்திற்கு வரும்போது அதன் வேகம் மணிக்கு வெறும் 1200 கி.மீ. என்ற அளவுக்கு குறையும். இந்த மொத்த நிகழ்வும் நடந்து முடிய 10 நிமிடங்கள் ஆகும். ஆக, தரையிறங்குவதற்கான அந்த 15 நிமிடங்களில் 10 நிமிடங்கள் முடிந்துவிட்டது. அடுத்த ஐந்து நிமிடங்களில் சந்திரயான் ஏழு கட்டங்களை வெற்றிகரமாகத் தாண்டியாக வேண்டும். இரண்டாவது கட்டம்: நிலாவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்த கூகுள் மேப் படக்குறிப்பு, முடிவு செய்யப்பட்ட இடத்தில் தரையிறங்குவதற்கான பாதையில் சரியாகச் செல்கிறதா அல்லது பாதையைச் சிறிதளவு மாற்றி, சரிசெய்ய வேண்டுமா என்ற முடிவை இரண்டாவது கட்டத்தில் எடுப்பார்கள். இரண்டாவது கட்டத்தில் 7.4 கி.மீ உயரத்தில் இருந்த விண்கலத்தை படிப்படியாகக் குறைத்து 6.8 கி.மீ உயரத்திற்குக் கொண்டு வருவார்கள். இந்தக் கட்டத்தில் இரண்டு முக்கியமான விஷயங்கள் நடக்கின்றன. அதில் முதலாவதாக பக்கவாட்டில் பார்த்தவாறு இருக்கும் விண்கலத்தின் கால்களை தரையிறங்க வசதியாக கீழ்நோக்கித் திருப்ப வேண்டும். பக்கவாட்டில் இருக்கும் கால்களை சுமார் 50 டிகிரி அளவுக்குத் திருப்புவார்கள். இரண்டாவதாக, முடிவு செய்யப்பட்ட இடத்தில் தரையிறங்குவதற்கான பாதையில் சரியாகச் செல்கிறதா அல்லது பாதையைச் சிறிதளவு மாற்றி, சரிசெய்ய வேண்டுமா என்ற முடிவை இந்தச் சூழலில்தான் எடுப்பார்கள். நாம் கார் ஓட்டும்போது வழியைத் தெரிந்துகொள்ள கூகுள் மேப்பை பயன்படுத்துவது போலத்தான் இதுவும். விண்கலத்தில் இருக்கும் செயற்கை நுண்ணறிவு கருவி அதற்கான பணிகளைச் செய்யும். அதை எப்படிச் செய்யும்? மொபைல்களில் முகத்தை அடையாளம் கண்டு அன்லாக் செய்துகொள்வதற்காகப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைப் போலவே, விண்கலத்தின் செயற்கை நுண்ணறிவு கருவியில் ஒரு தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. அந்தத் தொழில்நுட்பத்தில் ஏற்கெனவே தரையிறங்கும் பகுதியைப் படம்பிடித்து பதிவேற்றியுள்ளார்கள். படக்குறிப்பு, படங்களை ஒப்பிட்டு விண்கலத்தின் வழித்தடப் பாதையை முடிவு செய்து செயற்கை நுண்ணறிவு கணினி விண்கலத்தை இயக்கும். இந்த இரண்டாவது கட்டத்தில் விண்கலத்தின் செயற்கை நுண்ணறிவு கருவி அதன் பாதையைப் படம்பிடித்துக்கொண்டே செல்லும். அது எடுக்கும் படங்களை, அதில் பதிவேற்றி வைத்துள்ள படங்களோடு ஒப்பிட்டு, சரியான பாதையைக் கண்டறிந்து செல்லும். படங்களை ஒப்பிட்டு விண்கலத்தின் வழித்தடப் பாதையை முடிவு செய்து அந்த செயற்கை நுண்ணறிவு கணினி விண்கலத்தை இயக்கும். மூன்றாவது கட்டம்: விண்கலத்தின் ‘ராக்கெட் பிரேக்’ தற்போது நிலாவின் மேற்பரப்பில் இருந்து 800 மீட்டர் உயரத்திற்கு விண்கலம் இருக்கும் வகையில் அதைக் கீழே இறக்குவதுதான் மூன்றாவது கட்டம். பக்கவாட்டில் 50 டிகிரிக்கு திருப்பப்பட்ட விண்கலத்தின் கால்களை நேராக கீழ்நோக்கி இருக்கும் வகையில் திருப்புவதுதான் இந்தக் கட்டத்தில் செய்யப்படும் முதல் விஷயம். சைக்கிளில் பிரேக் பிடித்தால் வேகம் குறைவதைப் போல், ராக்கெட்டின் இஞ்சினை முன்புறமாக இயக்கினால் விண்கலத்தின் வேகம் படிப்படியாகக் குறைந்துகொண்டே வரும். மணிக்கு 1200 கி.மீ வேகத்தில் சென்றுகொண்டிருந்த விண்கலம், 800 மீட்டர் உயரத்திற்கு வரும்போது, அதன் முன்னோக்கிச் செல்லும் வேகம் பூஜ்ஜியமாகிவிடும். நான்காவது கட்டம்: அடி மேல் அடி வைத்து நகரும் விக்ரம் லேண்டர் படக்குறிப்பு, விண்கலம் அடி மேல் அடி வைத்து 800 மீட்டர் உயரத்தில் இருந்து 150 மீட்டர் உயரத்திற்கு வந்து சேரும். இந்தக் கட்டத்தில் விண்கலத்தின் ராக்கெட் விசையைக் குறைத்துவிடுவார்கள். விண்கலம் அடி மேல் அடி வைத்து 800 மீட்டர் உயரத்தில் இருந்து 150 மீட்டர் உயரத்திற்கு வந்து சேரும். அப்படி வந்து சேர்ந்ததும், 22 நொடிகளுக்கு அந்தரத்தில் அப்படியே மிதக்கும். இந்தச் சூழ்நிலையில்தான் விண்கலத்தில் இருக்கும் ‘இடர் உணர் ஆபத்து தவிர் கேமராக்கள்’ வேலை செய்யத் தொடங்கும். தரையிறங்கும் விண்கலத்தின் நான்கு கால்களில் ஒன்று பாறை மேல் பட்டாலோ, குழிக்குள் சென்றாலோ விண்கலம் சாய்ந்துவிடும். சரிவில் தரையிறங்கினால் கவிழ்ந்து தலைகுப்புற விழுந்துவிடக்கூடும். இத்தகைய இடர்கள் இல்லாத இடத்தைக் கண்டறிய வேண்டும். அத்தகைய இடத்தைத் தேர்வு செய்யக்கூடிய செயற்கை நுண்ணறிவு கருவி சந்திரயான் 3இன் கணினியில் பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டத்தில்தான் நிலாவின் எந்தப் பகுதியில் தரையிறங்குவது என்பதைத் துல்லியமாக அந்த விண்கலம் முடிவு செய்யும். நிலா தனது ஈர்ப்புவிசையால் விண்கலத்தைப் பிடித்து இழுக்கும். அதற்கு சரிசமமாக விண்கலத்தின் கால்களில் உள்ள ராக்கெட்டுகள் மேல்நோக்கிய தள்ளுவிசையைக் கொடுக்கும் வகையில் இயங்கும். இதன்மூலம் விண்கலம் கீழேயும் விழாமல் மேலேயும் செல்லாமல் அந்தரத்தில் இருக்கும். அப்போது கீழே இருக்கும் பகுதிகளில், பெரிய குழிகள் மட்டுமின்றி சின்னச் சின்ன குழிகள், சிறு சிறு கற்கள் உட்பட அனைத்தையும் அதனால் மிகத் துல்லியமாக ஆராய முடியும். இப்படியே பக்கவாட்டில் நகர்ந்தபடி ஆராய்ந்து துல்லியமாக எந்த இடத்தில் தரையிறங்க வேண்டும் என்பதை முடிவு செய்யும். ஐந்தாவது கட்டம்: நிலாவின் மேற்பரப்பை நெருங்கும் விண்கலம் படக்குறிப்பு, இந்த முறை விண்கலத்தில் லேசர் டாப்லர் வெலாசிமீட்டர் என்ற புதிய கருவியை இஸ்ரோ இணைத்துள்ளது. நிலாவின் மேற்பரப்பில் இருந்து 150 மீட்டரில் இருந்த விக்ரம் தரையிறங்கி கலன், 60 மீட்டர் உயரத்திற்கு கீழே இறங்குவதுதான் ஐந்தாவது கட்டம். இப்போது எந்த இடத்தில் தரையிறங்க வேண்டுமோ அந்த இடத்தில் விண்கலம் இருக்கிறது. இந்த நிலையில், கீழ்நோக்கி இறங்கக்கூடிய ராக்கெட்டின் விசையைக் கொஞ்சம் குறைத்தால் என்ன நடக்கும்? நிலாவினுடைய ஈர்ப்புவிசையின் கை ஓங்கி, மெல்ல மெல்ல காற்றில் மிதந்து விழுகும் இறகைப் போல விண்கலம் கீழ்நோக்கிச் செல்லும். இந்த முறை விண்கலத்தில் லேசர் டாப்லர் வெலாசிமீட்டர் என்ற புதிய கருவியை இஸ்ரோ இணைத்துள்ளது. இந்தக் கருவி நிலாவின் தரையை நோக்கி ஒரு லேசர் கற்றையை அனுப்பும். அந்த லேசர் கற்றை திரும்பி மேல்நோக்கி வரும். அதை உணர்ந்து, விண்கலம் எவ்வளவு வேகத்தில் கீழ்நோக்கிச் செல்கிறது என்பதை கணத்திற்கு கணம் கணக்கிடும். அதைப் பொருத்து, கூடுதல் வேகம் இல்லாமல் தேவைப்படும் வேகத்தில் தரையிறங்கும் வேலையை அந்தக் கணினி செய்யும். அந்த அளவுக்கு ராக்கெட்டை நுணுக்கமாக இயக்கும் வேலையை செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினி செய்யும். ஆறாவது கட்டம்: விண்கலத்தை கீழே விழாமல் தடுக்கும் எளிய நுட்பம் படக்குறிப்பு, அதிக வேகத்தில் கீழே இறங்கினால் மென்மையாகத் தரையிறங்காமல் விழுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதைத் தவிர்க்க இஸ்ரோ ஒரு புதுமையான நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது. அதன்பிறகு அறுபது மீட்டர் உயரத்தில் 10 மீட்டர் உயரத்திற்கு விண்கலத்தைக் கீழே இறக்குவதுதான் ஆறாவது கட்டம். இந்தச் சூழலில் பயன்படுவதற்காக விண்கலத்தில் மற்றுமொரு சிறப்பம்சத்தை விஞ்ஞானிகள் வைத்துள்ளார்கள். விண்கலத்தின் கீழ்பகுதியில் தரையைப் பார்த்தவாறு ஒரு கேமரா பொருத்தப்பட்டிருக்கும். அது தொடர்ச்சியாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டே இருக்கும். அது எதற்காக? இதை ஒரு எளிய சான்றுடன் விளக்கலாம். நமக்கு எதிரே ஒரு பேருந்து வந்துகொண்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம். அது தொலைவில் இருக்கும்போது அதன் உருவம் மிகவும் சிறியதாகத் தெரிகிறது. ஆனால், பேருந்து நம்மை நெருங்க நெருங்க, அந்த உருவம் பெரிதாகிக் கொண்டே வரும் அல்லவா! பேருந்தின் உருவம் எவ்வளவு வேகமாக நம் கண்களுக்குப் பெரிதாகப் புலப்படுகிறது என்பதை வைத்து பேருந்தின் வேகத்தைக் கணக்கிட முடியும். அதேபோல, விண்கலம் கீழ்நோக்கிச் செல்லும்போது அது எடுக்கும் புகைப்படங்களில் நிலவின் தரைப்பரப்பு எவ்வளவு வேகமாகப் பெரிதாகிறது என்பதை அடிப்படையாக வைத்து எவ்வளவு வேகத்தில் விண்கலம் கீழ்நோக்கி வருகிறது என்பதைக் கணக்கிடலாம். ஒன்றுக்கு இரண்டான பாதுகாப்பு என்பதே இதன் நோக்கம். அதிக வேகத்தில் கீழே இறங்கினால் மென்மையாகத் தரையிறங்காமல் விழுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதைத் தவிர்க்கவே இத்தகைய புதுமையான நுட்பங்கள். ஏழாவது கட்டம்: விண்கலத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் திக்... திக்... நிமிடங்கள் படக்குறிப்பு, நிலாவின் தரைப்பரப்பு முழுக்க மிகவும் மெல்லிய மண் துகள்கள் நிறைந்திருக்கும். இப்போது நிலவின் தரைப்பரப்பில் இருந்து வெறும் 10 மீட்டர் உயரத்தில் விண்கலம் இருக்கிறது. இந்த நேரத்தில் ராக்கெட் அனைத்தையும் ஆஃப் செய்துவிட்டு விண்கலத்தை நிலத்தில் கல் விழுவதைப் போல் தொப்பென விழ வைப்பார்கள். இதுதான் ஏழாவது கட்டம். தரையிறங்கும் கடைசி நொடி வரை ஏன் ராக்கெட்டுகளை இயக்கவில்லை? ஏனெனில், நிலாவின் தரைப்பரப்பு முழுக்க மிகவும் மெல்லிய மண் துகள்கள் நிறைந்திருக்கும். தரை வரைக்கும் ராக்கெட்டை இயக்கிக்கொண்டே இறங்கினால், அந்த மண் துகள்கள் புழுதியாக மேலெழும்பும். அப்படி எழும்பும் தூசுகள் விண்கலத்தின் மேற்பரப்பில் உள்ள சூரியத் தகடுகளில் படிந்து சூரிய ஒளியைத் தடுத்து மின்சாரமே உற்பத்தி செய்ய முடியாத அபாயம் ஏற்பட்டுவிடலாம். அதைத் தவிர்ப்பதற்காகவே இந்த யுக்தி. அப்படி விழும்போது நொடிக்கு 2 மீட்டர் என்ற வேகத்தில் விழ வைக்கவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. ஆனால் தவறுதலாக நொடிக்கு 3 மீட்டர் என்ற வேகத்தில் விழுந்தாலும்கூட அதைத் தாங்கக்கூடிய அளவுக்கு தரையிறங்கி கலனின் கால்களை அமைத்துள்ளார்கள். முதல் கட்டம் முடிந்த பிறகு, இரண்டாவது கட்டத்தில் 800 மீட்டர் உயரத்தில் இருந்த விண்கலம் ஏழாவது கட்டத்தில் வெறும் பத்து மீட்டர் உயரத்திற்கு வந்து சேர வெறும் 4:30 நிமிடங்களே ஆகும். இந்த நேரத்தைத்தான் விண்கலத்தின் “திக்... திக்... நிமிடங்களாக” விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். படக்குறிப்பு, ஊர்திக்கலன் வெளியே வந்ததும் அதன் தாய்க்கலனான தரையிறங்கி கலனை புகைப்படம் எடுக்கும். தாய்க்கலன் ஊர்திக்கலனை புகைப்படம் எடுக்கும். இந்த விண்கலத்திற்கு வாழ்வா சாவா என்று அதன் தலையெழுத்தை தீர்மானிக்கப் போகும் நிமிடங்கள் அவை. இந்த நேரத்தில் விண்கலம் எப்படி இயங்க வேண்டும், பக்கவாட்டில் நகர வேண்டுமா, கீழே எவ்வளவு வேகத்தில் இறங்க வேண்டும் என அனைத்தையும் விண்கலத்தின் உள்ளே இருக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு கணினிதான் தீர்மானிக்கும். அந்த நேரத்தில் விண்கலத்தின் தலையெழுத்து அந்த செயற்கை நுண்ணறிவு கையில்தான். எட்டாவது கட்டம்: கண்கொள்ளா காட்சியை காணக் காத்திருக்கும் உலகம் ஒருவழியாக தரையிறங்கி கலன் கீழே இறங்கிவிட்டது. ஆனாலும் விழுந்த வேகத்தில் தூசுகள் மேலே எழும்பியிருக்கும். அவை அடங்கும்வரை ஏதும் செய்யாமல் விண்கலம் அப்படியே இருக்கும். அனைத்தும் அடங்கிய பிறகு, கங்காரு தனது வயிற்றுக்குள் குட்டியை வைத்திருப்பது போலவே, வயிற்றுக்குள் தரையிறங்கி கலன் வைத்திருக்கும் ஊதிக்கலனை வெளியே கொண்டு வரும். ஊர்திக்கலன் வெளியே வந்ததும் அதன் தாய்க்கலனான தரையிறங்கி கலனை புகைப்படம் எடுக்கும். தாய்க்கலன் ஊர்திக்கலனை புகைப்படம் எடுக்கும். அந்த புகைப்படங்களின் கண்கொள்ளாக் காட்சியைக் காண இந்தியா மட்டுமின்றி உலகமே காத்திருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/c90jpn908zxo
  3. சிறுபான்மையினரை வன்முறைகள் ஊடாக வழிக்குக் கொண்டுவருவது பெரும்பானமையினரின் உரிமை ‍ - சிறில் மத்தியு ஆறாவது திருத்தத்தினை முன்வைத்து உரையாற்றினார் பிரதமர் பிரேமதாச. தமிழர்களைச் சீண்டும் விதமாக அவரது பேச்சு அமைந்திருந்தது. சிங்கள இனத்தின் சரித்திரம், அந்த இனத்தின் நாகரீக வளர்ச்சி, அதனூடாக இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அபிவிருத்தி, இலங்கையில் பெளத்தத்தை வளர்க்கவும் அதனைக் காக்கவுமென்று கெளதம புத்தரே தமது இனத்திடம் கொடுத்திருக்கும் பாரிய பொறுப்பு என்று தனது இனத்தையும், மதத்தையும் மட்டுமே முன்னிறுத்தி அவரது பேச்சு அமைந்திருந்தது. மேலும் தனது பேச்சின் ஒரு இடத்தில் சிங்கள இனம் தமிழர்களின் ஆக்கிரமிப்புக்களைத் தொடர்ச்சியாக முறியடித்து வெற்றிகொண்டு வருவதாகவும், சிங்களவர்களை எவராலும் வீழ்த்த முடியாது என்றும் கூறினார். 13 இராணுவத்தினரின் மரணத்திற்குப் பழிவாங்க சிங்கள மக்கள் தன்னெழுச்சியுடன் நடத்திய தமிழர்கள் மீதான படுகொலைகளை தான் புரிந்துகொள்வதாகவும் அது இயல்பானதுதான் என்றும் நியாயப்படுத்தினார். மேலும், தமிழர்கள் மீதான தாக்குதல்களின் பின்னர் சிங்கள மக்களின் கோபம் அடங்கியிருக்கும் என்று தான் கருதுவதாகவும், ஆகவே இனிமேல் அவர்கள் அமைதியடையலாம் என்றும் உரைத்தார். இறுதியாக, அரசியல் யாப்பில் ஏற்படுத்தப்போகும் புதிய மாற்றம் தமிழ்ப் பயங்கரவாதத்தை முற்றாகவே அழித்துவிடும் என்றும் சூளுரைத்தார். தனது உரையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மீது கடுமையான விமர்சனத்தை பிரேமதாச முன்வைத்தார். அக்கட்சியின் தலைவர் அமிர்தலிங்கம் அரசாங்கத்துடன் இணங்கி நடக்கவேண்டும் என்றும், தனது இரட்டை முக நாடகத்தைக் கைவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தெற்கில் சிங்களவர்களுக்கு நல்லவர் என்கிற இனிய முகத்தையும், வடக்கே செல்லும்போது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் முகத்தையும் அவர் அணிவதைக் கைவிடவேண்டும் என்றும் அவர் கூறினார். பிரேமதாசவின் உரையினை மேற்கோள் காட்டி டெயிலிநியூஸ் பின்வருமாறு தலைப்பிட்டிருந்தது, "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கான பாதை இனி மூடப்படும் - ‍ பிரதமர்". பிரேமதாசவைத் தொடர்ந்து பேசிய சிறில் மத்தியு, அதுலத் முதலி, காமிணி திசாநாயக்க, காமிணி ஜயசூரிய ஆகியோர் தமது பங்கிற்கு தமிழர்கள் மீதான தமது வெறுப்பினை தமது பேச்சுக்களில் கொப்பழித்து உமிழ்ந்தனர். ஆனால், அவர்கள் அனைவரினதும் பேச்சுக்களின் சாராம்சம் ஒன்றுதான், அதாவது தமது இராணுவத்தினரில் 13 பேரைப் புலிகள் கொனறதற்காக‌ சிங்கள மக்கள் உணர்வெழுச்சியால் உந்தப்பட்டு நடத்திய எதிர்வினையே தமிழர்கள் மீதான தாக்குதல்கள் என்பதும், அது நடத்தப்பட்டது இயல்பானது தான் என்பதும். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைத் தடைசெய்வதற்கான இரண்டு காரணங்களை முன்வைத்து சிறில் மத்தியூ பேசினார். முதலாவது காரணம், சிங்களவர்கள் நாட்டின் பெரும்பான்மையினராக இருப்பதனால், அவர்களுக்கே நாட்டினை ஆளும் உரிமையும் அதிகாரமும் இருக்கிறது என்று வாதாடினார். தனது வாதத்திற்கு ஆதரவாக மலேசியாவின் மகதிர் மொகம்மட்டின் பூமி புத்திர கட்சியினரை உதாரணமாகக் காட்டிப் பேசினார். மலேசியாவில் மலே முஸ்லீம்கள் மட்டுமே நாட்டினை ஆளமுடியும் என்கிற கொள்கையினை மகதீர் மொகம்மட்டின் பூமி புத்ர (மண்ணின் மைந்தர்கள் மட்டுமே அந்த மண்ணை ஆள முடியும்) எனும் இனவாதக் கட்சி தனது பிரதான கொள்கையாகக் கொண்டு இயங்கிவந்தது என்பது குறிப்பிடத் தக்கது. மலேசியாவில் வாழ்ந்துவரும் தமிழர்களும் சீனர்களும் மலேசியாவை விட்டு நீங்க நேர்ந்தால் அவர்கள் திரும்பிச் செல்வதற்கு இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இருக்கின்றன. ஆனால் மலேசியர்களுக்கு நாடென்று வேறு எதுவும் இல்லையென்று மகதீர் மொகம்மட் வாதாடி வந்தார். எந்த இனம் ஒன்று தான் வாழும் நாட்டை விட்டால் வேறு வாழ்வதற்காக நாடொன்றினைக் கொண்டிருக்கவில்லையோ, அந்த இனமே தான் வாழும் நாட்டின் உண்மையான மைந்தர்கள் என்றும், அந்த நாட்டின் பெரும்பான்மையினரான அம்மக்கள் கூட்டமே அந்நாட்டினை ஆளவும், சலுகைகளை அனுபவிக்கும் உரிமைகளையும் கொண்டிருக்க வேண்டும் என்றும் மகதிர் தொடர்ச்சியாக வாதாடி வந்தார். தொடர்ந்து பேசிய மத்தியு, வெறும் 53 வீதம் மட்டுமே உள்ள மலேசிய முஸ்லீம்கள் அந்த நாட்டினை ஆளவும், அனுபவிக்கவும் முடியுமென்றால் 70 வீதம் சனத்தொகையினைக் கொண்டிருக்கும் இலங்கையின் சிங்களவர்களே இந்நாட்டினை ஆளவும், சலுகைகளை அனுபவிக்கும் உரிமையினையும் ஏன் பெற முடியாது என்று கேள்வி எழுப்பினார். நாட்டின் பெரும்பான்மையின மக்களே மொத்த நாட்டினை ஆளவும், சலுகைகளை அனுபவிக்கவும் முடியும் என்கிற நிலையில், பெரும்பான்மையின மக்களின் நாட்டின் மீதான அதிகாரத்தினை சிறுபான்மையின மக்கள் கூட்டங்கள் ஏற்க மறுக்கும்போது அவர்களை அடிபணிய வைத்து வழிக்குக் கொண்டுவர வன்முறையினைப் பாவிப்பது எந்தவிதத்திலும் குற்றமாகாது என்று அவர் வாதாடினார். சிறுபான்மையினரை வழிக்குக் கொண்டுவர பெரும்பான்மையினம் வன்முறையில் ஈடுபடுவது அவர்களுக்கு இருக்கும் தடுக்க முடியாத உரிமை என்று அவர் கூறினார். தனது வாதத்திற்கு வலுச்சேர்க்க மலேசியாவில் சீன இனத்தவர் மீது மகதீர் மொகம்மட்டின் பூமி புத்ர கட்சியினர் நடத்திய தாக்குதல்கள் குறித்துக் குறிப்பிட்ட மத்தியு, "சீனர்களின் ஆதிக்கத்தை அடித்து உடைப்பதற்கு மலேசிய முஸ்லீம்களுக்கு ஆறுநாட்கள் தேவைப்பட்டது. சீனர்களின் செல்வாக்கினை ஆறு நாட்களின் பின்னர் பொறுமையிழந்தே முஸ்லீம்கள் அடக்கினார்கள். ஆனால், இங்கே தமிழர்களின் அட்டகாசத்தினை 10 வருடங்களாக சிங்கள மக்கள் பொறுமையாக சகித்து வந்திருக்கிறார்கள். அதன்பின்னரே, தமது உரிமையினைப் பாவித்து தமிழர்களுக்குப் பாடத்தைப் புகட்ட எண்ணினார்கள்" என்று கூறினார்.
  4. இதில் ஈடுபடும் ஆணோ , பெண்ணோ, தத்தமது சட்டபூர்வமான துணைகளும் இப்பிடி குருவி சுடப்போனால் கெம்பி எழுவினம் . தேன் பூசி எழுதப்படும் மனோவியல் என்று மறைக்கப்படும் சால்ஜாப்புகள் எல்லாம் அங்கே பல்லிளித்து அடிபட்டுப்போகும் . போங்கய்யா, போய் புருஷன் பெண்சாதிக்கு உண்மையாய் இருந்து சீவியுங்கப்பா ....
  5. மிதவாதத் தமிழ்த் தலைமையினையும், போராளி அமைப்புக்களையும் ஒரே நேரத்தில் அழித்துவிடக் கங்கணம் கட்டிய ஜெயார் வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னரான பத்திரிக்கையாளர் மாநாடு தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. டெயிலிநியூஸ் பத்திரிகைக்காக பிற்பகல் நடைபெற்ற இக்கூட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். இதற்கு முதல்வாரத்தில் இடம்பெற்ற மாநாட்டில் தமிழர் மீதான வன்முறைகளையடுத்து என்னால் கலந்துகொள்ள முடியாமற் போயிருந்தது. 1978 ஆம் ஆண்டு ஆனந்த திஸ்ஸ டி அல்விஸினால் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னரான வாராந்த பத்திரிக்கையாளர் மாநாடுகளில் ஒன்றைத்தவிர அனைத்து மாநாடுகளிலும், 1997 இல் நான் இளைப்பறும் வரை கலந்துகொண்டே வந்திருந்தேன். அங்கு பேசிய ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் ஆறாம் திருத்தம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, மறுநாளே வக்களிப்பிற்கு விடப்படும் என்று கூறினார். அனைத்துக் கட்சி பாராளுமன்ற வட்டமேசை மாநாடு குறித்த ஜெயவர்த்தனவின் அறிக்கை அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அதனை தனது பின்னேரச் சேவையில் ஒலிபரப்ப, பத்திரிக்கைகள் மறுநாள் காலை செய்தியாக அதனை வெளியிட்டிருந்தன. ஆவணி 4 ஆம் திகதி காலை அரசாங்கத்தின் பாராளுமன்றக் குழுவின் முன்னால் உத்தேச ஆறாம் திருத்தத்தைச் சமர்ப்பித்தார். இரு காரணங்களை முன்வைத்து ஜெயாரினால் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. முதலாவதாக நக்சலைட்டுக்களின் சதியே தமிழர்கள் மீதான தாக்குதல்களுக்கான மூல காரணம் என்கிற தனது புனைவினை ஒரு செய்தியாக‌ தனது அரச பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கவேண்டிய தேவை ஜெயாருக்கு இருந்தது. இரண்டாவதாக மிதவாதாத் தமிழ்த் தலைவர்களை அரசியலில் இருந்து ஓரங்கட்டிவிட்டு தமிழ்ப் போராளிகளை இராணுவ பலத்தைக் கொண்டு அழித்துவிடுவது குறித்து தனது பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கவேண்டிய தேவையும் அவருக்கு இருந்தது. தனது பாராளுமன்ற உறுப்பினர்களின் முன்னிலையில் பேசிய ஜெயார் ஆறாம் திருத்தச் சட்டத்ததின் அடிப்படையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் சத்தியப்பிரமாணம் செய்து பேச்சுக்கு வந்தால் ஒழிய அவர்களுடன் பேசபோவதில்லை என்று கூறினார். மேலும், மிக விரைவில் தமிழ்ப் போராளிகளை தான் அழித்துவிடுவதாகவும் சூளுரைத்தார். ஆவணி 4 ஆம் திகதி, வியாழன் பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. சம்பிரதாய கேள்வி பதில் நேரம் முடிந்தவுடன், வழமையான பாராளுமன்ற விதிமுறைகளை மீறி, 6 ஆம் திருத்தச் சட்டத்தின் மீதான விவாதத்தை ஆரம்பித்து உடனடியாகவே அதனை நிறைவேற்றும் நடவடிக்கையில் ஜெயாரின் அரசு இறங்கியது. வழமையான பாராளுமன்ற நடவடிக்கைகளின் பிரகாரம் பாராளுமன்றக் கூட்டங்கள் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கும், வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்கும் நிறைவுபெறும் என்பது குறிப்பிடத் தக்கது. பிரதமர் ரணசிங்க பிரேமதாச பின்வரும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார், "இலங்கை ஒரு சுதந்திரமான, இறையாண்மையுள்ள, ஒருமித்த நாடாக இருக்கும் நிலையில் அதன் சுதந்திரத்தையும், இறையாண்மையினையும், நில உறுதிப்பாட்டையும், ஒற்றுமையினையும் பாதுகாப்பது அரசின் கடமையாகும். இந்நிலையில், இலங்கையின் சுதந்திரத்திற்கும், இறையாண்மைக்கும், நில உறுதிப்பாட்டிற்கும் தனிநபர்களோ, அரசியற்கட்சிகளோ, அமைப்புக்களோ சவால் விடும் தறுவாயில், அவற்றினைத் தடுக்கவும், இச்செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்குத் தண்டனை வழங்கவும் நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும், அதன்படி கீழ்க்கண்ட நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் என்று தெரிவிக்கிறேன்", 1. இலங்கையினுள் தனியான நாட்டினை உருவாக்க நேரடியாகவோ மறைமுகமாகவோ, இலங்கையினுள்ளோ அல்லது வெளிநாடுகளில் இருந்தோ உதவும், பணம் வழங்கும், பிரச்சாரம் செய்யும், ஊக்குவிக்கும் தனிநபரோ அல்லது அமைப்போ முற்றாகத் தடைசெய்யப்படுவர். 2. எந்தவொரு அரசியற்கட்சியோ அல்லது அமைப்போ இலங்கையினுள் தனியான நாடொன்றினை உருவாக்குவதை தனது குறிக்கோளாகக் கொண்டிருக்க முடியாது. 3. மேலே பகுதி 1 இல் குறிப்பிட்டுள்ளதன்படி நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அடையாளம் காணப்படுபவர், தனது சிவில் உரிமைகள் முடக்கப்பட்டு 7 வருடங்கள் சிறைத்தண்டனையினை அனுபவிக்க நேரிடும். மேலும், நீதிமன்றத்தினால் குற்றவாளியென்று அடையாளம் காணப்படுபவரினதும், அவரது குடும்பத்தினது அசையும் , அசையா சொத்துக்கள் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்படும். மேலும் பகுதி 1 இன் படி குற்றவாளியாக அடையாளம் காணப்படுபவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக அல்லது அதற்கு நிகரான பதவியில் இருப்பவராக இருந்தால் அவரது பதவி பறிக்கப்படும். 4. இப்பகுதி 12 உப பகுதிகளைக் கொண்டிருந்ததுடன், அவற்றில் அரசியற் கட்சிகளைத் தடைசெய்வது, அவர்களின் சிவில் உரிமைகளை முடக்குவது உட்பட பல த‌ண்டனைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆறாவது திருத்தச் சட்டம் கீழ்க்கண்டவாறான "உறுதிமொழி" கூற்றினைக் கொண்டிருந்தது, "..........ஆகிய நான், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பை நான் முழுமையாக ஏற்றுக்கொண்டு அதனைக் காத்து நிற்பேன் என்று உண்மையாகவும் நேர்மையாகவும் உறுதிமொழி வழங்குகிறேன். மேலும், இலங்கை எனும் நாட்டினுள் இன்னொரு தனிநாட்டினை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எதிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, இலங்கையினுள் இருந்தோ அல்லது வெளிநாடுகளில் இருந்தோ உதவவோ, பணம் வழங்கவோ, பிரச்சாரம் செய்யவோ, ஊக்குவிக்கவோ மாட்டேன் என்றும் உறுதி வழங்குகிறேன்”.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.