இரஸ்சிய நாணய வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்த இரஸ்சிய நிதியமைச்சரின் கருத்தான "இரஸ்சியா தங்கம் மற்றும் வேறு நாட்டு நாணயங்களை மீண்டும் வாங்க உள்ளது" எனும் அறிவிப்பாகும்.
உக்கிரேன் யுத்தத்தின் பின் இரஸ்சிய பொருளாதாரம், பொருளாதாரத்தடையாலும் போரினால் ஏற்படுகின்ற செலவினாலும் மிகவும் பாதிப்படைந்தமையால் தற்காலிகமாக வேறுநாட்டு தங்கம் மற்றும் நாணயங்களை வாங்குவதை நிறுத்தியிருந்தது மட்டுமின்றி தனது இருப்புகளை விற்றிருந்ததாக கூறப்படுகிறது.
அதற்கு காரணம் ஓய்வூதிய நிதியத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டது, போரினால் ஏற்பட்ட அதிகரித்த செலவினை ஈடுகட்ட இரஸ்சிய அரசு ஓய்வூதிய நிதியினை(NWF) பாவித்ததாக கூறுகிறார்கள்.
இரஸ்சிய நிதியமைச்சரின் கருத்து வெளியானபோது இரஸ்சியா தனது நாணயத்தின் பெறுமதியினை திட்டமிட்ட முறையில் வலுவிழக்க முயற்சிக்கிறதா எனும் எண்ணம் ஏற்பட்டது(Dirty float).
காரணம் ஒபெக் மற்றும் ஒபெக் + நாடுகள் தமது எண்ணெய் உற்பத்தியினை குறைப்பதாக அறிவித்தன அது உலக பொருளாதாரம் சமகால நிகழ்வுகளால் ஏற்படும் பொருளாதார சரிவினால் எரிபொருள் உற்பத்தியாளர் நட்டமடையாமல் காப்பதற்காக (அடிப்படை உற்பத்தி செலவு) என கூறப்பட்டாலும் கிட்டதட்ட நாளொன்றிற்கு 5% உற்பத்திகுறைப்பினை மேற்கொள்ள உத்தேசித்துள்ளன ஆனால் உலக பொருளாதார சுருக்கம் 2-3 விகித அளவிலேயே ஏற்படும் என கருதுகிறார்கள்.
உற்பத்தியினளவினை தேவைக்கு அதிகமாக குறைக்கும் போது ஏற்படும் தட்டு பாட்டால் எரிபொருள் விலை அதிகரிக்கும்.
ஆகவே இது ஒரு சந்தை ஏகபோக(Monopoly) நடவடிக்கையாகவே கருத இடமுண்டு.
இந்த நடவடிக்கையால் எதிர்காலத்தில் ரூபிளின் பெறுமதி அதிகரிப்பினை தடுப்பதற்காகவே நிதியமைச்சினால் தனது சொத்து இருப்பு அதிகரிப்பிற்காக தங்கம் மற்றும் வேறு நாட்டு நாணயத்தினை வாங்கும் அறிவிப்பு ஏற்படுத்தப்பட்டதோ என கருதினேன்.
நாணயத்தின் பெறுமதியினடிபடையில்(Purchasing Power Parity) இந்தியாவிற்கு அடுத்த நிலையில் 5ஆவது நிலையில் இரஸ்சிய பொருளாதாரம் உள்ளதாக கூறுகிறார்கள்.
நாணயத்தின் உண்மையான பெறுமதியினை கணிப்பதற்கு முதலீட்டாளர் பாவிக்கும் கருவிPurchasing Power Parity
https://www.statista.com/statistics/274326/big-mac-index-global-prices-for-a-big-mac/
பிக் மக் இன்டெக்கில் இரஸ்சியா இல்லை, இரஸ்சியாவில் மக்டொனால்ட் தற்போது இல்லை என கருதுகிறேன் ஆனால் கூடை பொருள்களினடிப்படையில் கணிக்கப்படும் கணிப்பு மிகவும் நம்பகமான நடைமுறை என கருதப்படுகிறது.
ஆனால்
1.ஏற்றுமதி இறக்குமதி நிலுவை:
இரஸ்சியாவின் ஏற்றுமதினளவினை விட இறக்குமதி அதிகம் அதனால் நாணய பெறுமதி குறைவாகவே இருக்கும்.
2.அதிகரித்த வட்டி விகிதம்
இரஸ்சிய பணமுறி கிட்டத்தட்ட 11.72%(Yield) இந்த நிலை பணவிக்கத்தினை உருவாக்கும் இதனால் பணத்தின் பெறுமதி குறையும்.
3.தொடரும் போர்
எந்த ஒரு பொருளாதாரமும் போரினால் பதிப்படையும் இந்த நிலையில் தொடருகின்ற போர் இரஸ்சிய நாணயத்திற்கு உவப்பானதல்ல.
4.பாதீட்டு பற்றாக்குறை
போர் மற்றும் பொருளாதார தடையினால் இரஸ்சியாவினது செலவுகள் அதிகரித்தமையால் ஏற்படும் பாதீட்டு பற்றாக்குறை பணத்தின் பெறுமதி குறையும்.
இந்த காரணிகள் ரூபிளிற்கு பாதகமான விடயங்கள் (மேற்கு ஊடகங்களில் வந்த செய்திகளினடிப்படையில்) மேலோட்டமாக இந்த தரவுகளினடிப்படையில் பார்க்கும் போது ரூபிளில் முதலிடுவது சாதகம் அற்றது என கருதுகிறேன் (தவறான கருத்தாக இருக்கலாம்).
ஆனால் முதலீட்டாளர்கள் பல தரவுகளினடிப்படையில் செயல்படுவதால் சந்தை நடவடிக்கையினை(Price action) அவாதனித்து முதலிடுவது பாதுகாப்பானது என கருதுகிறேன்.
எரிபொருளில் முதலிடுவது தற்போதய பூகோள அரசியல் நிலவரங்களின்டைப்படையில் சாதகமாக தோன்றுகிறது(என்ணெய் உற்பத்தி குறைப்பு, மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள புதிய நிலவரங்கள்) (தவறான கருத்தாக இருக்கலாம்).