Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    20018
    Posts
  2. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    53011
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87990
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/14/23 in all areas

  1. போராளியின் இறுதி வெடி ! எல்லாம் முடிந்துவிட்டது. முன்னால் கடல் பின்னால் நிலம். இதுதான் நான் இறுதியாக காணப்போகும் விடியும் வானம். நிலம் பூராவும் எதிரிகள். கந்தகமணம். சிறு பற்றைகள். அவற்றுக்கப்பால் நம் நிலம்பூராயும் எதிரிகள். எதிரிகள் பேசும் சத்தம் கேட்கிறது.வானம் வெளித்ததும் அவர்கள் முழுமையாக பிடித்துவிடுவார்கள். சிலவேளை இறுதியாய் இருப்பது நாம் இருவராக இருக்கலாம். எங்கள் தரப்பின் துப்பாக்கி வேட்டுகள் பூராகவும் ஒய்ந்துவிட்டது. திடீரென ஏற்பட்ட புவி அதிர்வில் உதிர்ந்த கோட்டைபோல் ஆகிவிட்டது எங்கள் தேசம். அருகே கபிலன். அவன் கட்டாய ஆட்சேர்ப்பில் வந்த பிள்ளை. ஆனால் கடைசிவரை என்னோடு வந்துவிட்டான். நீ போய்விடு என்றால் அடம்பிடித்துவிட்டான். என்னோடு ஒரு வருடமாகத்தான் இருந்தான். சரணடைய மறுத்தே விட்டான். எத்தனையோ போராளிகளை சந்தித்தேன். இவன் வாழ வேண்டிய பிள்ளை. ‘அண்ண உங்களுக்கு என்ன முடிவோ அதுவே எனக்கும் என்கிறான்.’ கபிலன் அறிவான பிள்ளை. ஒரு முழுமையான போராட்ட வாழ்வில் என் இறுதி கணம் கபிலன் அருகில் முடியப்போகிறது. எம்மை உயிரோடு எதிரி பிடிக்க முடியாது. இரண்டு குப்பிகள், இரண்டு கைத்துப்பாக்கி. இதுபோதும். நளாவும் வீரச்சாவு என்று அறிந்தேன். முக்கியமான அந்தத்தாயுடன் சேர்ந்து நளா வெடித்துச்சிதறிவிட்டாள். பிள்ளைகளோடு எவ்வளவு பிரியமாக இருந்தாள் ? அவளால் இதை எப்படிச்செய்ய முடிந்தது ? அவள் தியாகங்களுக்கு உலகில் உதாரணம் கிடையாது. தாயை விட்டுவிட்டு போர்க்களம் சென்ற பிள்ளைகள் இருந்தார்கள். தன் குழந்தைகளை விட்டுவிட்டு களமுனை சென்று வெடிக்கும் தாயை யாரும் அறிந்ததுண்டா ? தன் வீரச்சாவவைக்கூட மக்கள் அறியார் என்று தெரிந்தும், போராட்டம் இன்றோ நாளையோ வீழ்ந்துவிடும் என்று அறிந்தும் அவள் தன் மண்ணுக்காக வீழ்ந்தாள். அவளை இந்த இறுதி நேரத்தில் நினைக்கவேண்டும். என் மனம்போல இருந்தாள். பிள்ளைகளை உறவுகளுடன் விட்டுவிட்டு களமுனையில் கடைசிவரை நின்ற தாயாக நளா இருப்பாள். அது யாருக்கும் தெரியாமல் இருக்கும். இப்போது நடக்கும் எந்தக்காவியத்தையும் சொல்பவர்கள் உயிரோடு இருக்கப்போவதில்லை. நானே ஒருமுறை , ‘நீ பிள்ளைகளோடு வெளியேறு’ என்றபோது, மறுத்துவிட்டு கோள்சறோடு களமுனை சென்றாள். அன்பு நளா ! உன் திண்மை என்னிடம் இல்லை. உனக்கு என் நன்றி. நான் போராளியாக மட்டும் இருந்தேன். நீ தாயாக, போராளியாக, மனைவியாக.. என் விழுப்புண்கள் வலிதரும்போது தாதியாக.. உன் மனபலம் எந்த இரும்பையும் நொருக்கும். எந்த வலியையும் தாங்கும். நான் வலியால் துடிக்கும்போது ‘ஒருதளபதி இப்படி துடிப்பதா’ என்பாய். ஒருபோதும் உனக்கு வலித்தபோதும் நீ துடித்ததில்லை. எத்தனை மகத்தான துணையாக இருந்தாய் ? உன் உடல் எங்கு சிதறியதோ நானறியேன். ஆனால் இந்த நிலத்தில் மிக அருகில் எங்கோ வெடிகுண்டு கட்டி வெடித்தாய் என்பது மட்டும் தெரியும். சூரியன் வரமுதல் உன்னை என் ஆன்மா சந்திக்கும். மறுமுறை பூரணவாழ்வு கிடைத்தால் உன்னோடு வாழவேண்டும். நாம் குறைந்த நாட்கள் வாழ்ந்து, நிறைய நாட்கள் போராளியாக இருந்தோம். ஓ.. என் பிள்ளைகள் ! ஆகரன் ! சிந்துசை ! நீங்கள் இப்போது வவுனியா அகதி முகாமில் இருப்பீர்கள். என் பிள்ளைகள் என்று இராணுவம் கண்டுபிடிக்காமல் இருக்கவேண்டும். நீங்கள் கேட்ட பரிசுப்பொருட்களை தமிழீழம் கிடைத்தததும் வேண்டித்தருவேன் என்றேன். உங்கள் அடிமைப்பட்ட இனத்தின் தந்தையால் அதை செய்ய முடியவில்லை. என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். ஆனால் அப்பாவையும், அம்மாவையும் நினைத்தபடியே இருப்பீர்கள். உங்களை அனாதையாக்கி விடப்போகிறோம். இந்த பாவப்பட்ட பெற்றோரை பற்றி என்ன நினைப்பீர்களோ தெரியவில்லை. எப்போதும் உங்களை பேரன்போடு வருடும் உங்கள் அம்மா நேற்று மாலை இறந்துவிட்டார். உங்கள் அப்பா இன்னும் சிறிய நேரத்தில். அப்பா, அம்மாவின் கனவுகளை மறக்க மாட்டீர்கள். எப்படியும் உங்களை என் தம்பி லண்டன் அழைத்துவிடுவான். நீங்கள் உறுதியோடு வளருங்கள். நம் மக்கள் உங்களை கைவிட மாட்டார்கள். அந்த நம்பிக்கையில்தான் நாம் போகிறோம். ஓ.. எத்தனை தியாகங்கள் ? எத்தனை உயர்த வீர புருசர்கள் ? எத்தனை தியாகங்களால் தேசம் உருவானது. இதோ.. இதோ.. எல்லாம் முடியப்போகிறது. இந்த முடிவு வேறொன்றின் தொடக்கம் ஆகலாம். ஆனால் இந்த உலகு அதர்ம அச்சிலே சுழல்கிறது. அதை மாற்றும் மனிதன் வருவான். காலம் எல்லாவற்றையும் உருவாக்கும். இந்தப்போராட்டம் உயிர்களை கொல்லத்தோன்றியதில்லை. கொலைகளை நிறுத்தத்தோன்றியது. அவர்கள் தமிழர்களை தேடித்தேடி வேட்டையாடியபோது விரும்பா பிறப்பாகத்தானே பிறந்தது. இத்தனை இளைஞர்களின் உயிர்களும் இந்தத்தோல்விக்காகவா கொடுக்கப்பட்டது ? இத்தனை இறப்புகளும் நம் விடுதலைக்காகவே விதைக்கப்பட்டது. எப்படி இது தோற்றது? காலம் ஆராய்ந்து கருத்திடட்டும். அது காலத்தின் வேலை. நான் நம்மக்களுக்காக உண்மையாய் இருந்தேன். இந்த மரண நொடிவரை. என்னைப்போலவே உயிர் கொடுத்த என் வீரர்களும். இது நம் கடன். அதை நாம் தவமாக செய்தோம். இங்கினியாகலையில் காடையர்கள் 150 இளைஞர்களை வெட்டியதில் ஆரம்பித்தார்கள். அதன்பின் எத்தனை கொலைகளை மக்கள் சந்தித்தார்கள். ? ஆண்டாண்டு காலம் வாழ்ந்த எங்கள் மண்ணில் எங்கள் மக்கள் முப்பது ஆண்டுகளாக துரத்தப்பட்டும், கொல்லப்பட்டதால்தானே ஆயுதம் ஏந்தினோம். ! அன்று அந்தக்கொலைகளை தடுத்திருந்தால் இந்த கொலைத் தொழிலை நாம் விரும்பி ஏற்றிருப்போமா ? எனக்கு அந்த நாள் நினைவுக்கு வருகிறது.. வவுனியா எல்லைக்கிராமத்தில் நாம் இருந்தோம். எப்போதும் பதட்டத்துடனே ஐயா, அம்மா இருப்பார்கள். காடையர்கள் எப்போது வருவார்கள் ? வந்தால் மொத்த உயிரும் சிரச்சேதம் செய்யப்படும் என்று தெரியும். எமக்கு பாதுகாப்பென்று அன்று யாருமில்லை. நம்முயிரை எப்போதும் பறிக்கும் உரிமை சிங்களக்காடையருக்கு இருந்தது. முதலில் எனக்கு ஏன் இப்படி நடக்கிறது ? மனிதர்களை மனிதர்கள் கொல்ல எப்படி முடிகிறது ? சிங்களவர்களுக்கு நாம் என்ன செய்தோம் ? என்று புரியவில்லை. ஒருநாள் அருகே இருந்த கிராமத்தில் புகுந்து வெட்டிவிட்டு சென்றுவிட்டனர். அம்மா கண்ணீரோடு இருந்தார். அப்போதுதான் அம்மாவிடம் ‘ஏன் அம்மா சிங்களவர் எம்மை கொல்கிறார்கள் ? ’ என்று கேட்டேன். அம்மாதான் கொலைகாலக்கதைகளைச்சொன்னார். என் மனமெங்கும் வேதனையும், கொடும் கோபமும் இருந்தது. இதற்கு சிறுவனான என்னால் எப்படி தடுக்க முடியும் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டிருந்தேன். இந்தச்சம்பவம் நடைபெற்று சரியாக ஒருமாதம் கழிய எம் கிராமம் தாக்கப்பட்டது. என் அப்பா படுகாயத்தோடு தப்பியிருந்தார். மாட்டுப்பட்டவர்கள் வீடுகள் கொழுத்தப்பட்டு தலைகளை வேலிகளில் குத்திவிட்டு சென்றனர். பள்ளிக்கூடத்தால் வந்த எனக்கு கிடைத்த காட்சி மனிதத்தலைகளும், எரிந்த வீடுகளும். எங்கள் வீடும் எரிந்திருந்தது. முதல்நாள் என்னோடு விளையாடிய பத்துவயதான சிவதாசன் தலை வேலியில் குத்தப்பட்டிருந்தது. பிள்ளைத்தாச்சியாக இருந்த வக்சலா அக்காவின் வயிறு கிளிக்கப்பட்டு சிசுவை எடுத்து தடியில் குத்தி வைத்திருந்தார்கள். ஆண்களின் உடலங்கள் அங்கம் அங்கமாக வெட்டப்பட்டிருந்தது. இந்தக்காட்சிதான் என்னை ஆயுதம் ஏந்த தள்ளியது. வன்னியில் மாத்தையா அண்ணரின் தொடர்புள்ளவர்களோடு தொடர்பை கடுமையான பிரயத்தனத்தில் ஏற்படுத்தி புலிகள் இயக்கத்தில் இணைந்தேன். எனது நோக்கம் எங்கள் மக்களை காப்பதே. அதைவிடுத்து எந்த மாற்றமும் என்னிடம் இருந்தால் மரணம்தான். என்று நானே முடிவெடுத்திருந்தேன். இயக்கத்தினுள் நடந்த சூறாவளிக்காலத்தில் என் மனம், உடல் வதங்கியகாலம். என் விரல் நகங்கள் பிடுங்கப்பட்டபோதும் நான் உண்மையான என் கனவில் உறுதியாக இருந்தேன். போராட்டம் என்பது எவ்வளவு கடுமையானது என்பதை சொல்லித்தந்தது அந்த நாட்கள். உயிரையும் கொடுத்து காக்க வேண்டியவரே தவறு செய்திருந்தால் உங்களால் என்ன செய்யமுடியும் ? எந்த நிலையிலும் இறுதிவரை களமுனையில் போராடிச்சாவதே என் நோக்கம். நான் பார்த்த இனக்கொலைக்காட்சி எப்போதுமே என் மனதில் இரும்புத்திரையாக நிற்கும். அதனாலே உறுதியோடு இருந்த என் நிலையால் 1994 இல் மீண்டும் இயக்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டேன். அதைவிட கொடுமையான காலத்தை நான் சந்தித்ததில்லை. இதோ இப்போது நாம் முற்றாக அழியும் நிமிடங்களானாலும் நாம் நம் மக்களுக்காக இறக்கின்றோம் என்ற நிம்மதி உண்டு. போராடப்புறப்பட்டவர்களின் ஆசைகளால் ஏற்படும் தவறுகளால் இழந்த உயிர்களும், தவறும் இலட்சியச்சியத்தை விட கொடிய விசம் வேறொன்றுமில்லை. எந்தச்சூழலிலும் என்கிராமத்தில் நான் கண்ட காட்சிதான் எத்தடையையும் தாங்கி இந்த மக்கள் இலட்சியத்தில் என்னால் இந்த நிமிடம்வரை நிற்க முடிந்தது. எங்கள் மக்களுக்கு என்ன சொல்வது ?! உங்கள் இயக்கம் உங்களை விட்டுப்போகிறது. உங்களில் இருந்துதோன்றிய இந்த வீரர்களில் சில தவறுகளும் பல தியாகங்களும் நிகழ்ந்தன. எந்த சமூக அமைப்பிலும் குழப்பமானவர்கள் இருப்பார்கள். அவர்களின் செயல்களால் உங்களுக்காக உயிர்கொடுத்த அந்த உன்னதங்களை மறந்து விடாதீர்கள். உங்களை மீண்டும் ஒரு அனாதை நிலையில் விட்டுவிட்டு நாம் செத்துப்போகிறோம். நீங்கள் பட்ட துயர்களுக்கு உண்மையானவர்கள் உண்மையாக இறுதிவரை போராடினோம். எங்களை மீறிய முட்கள் உங்களை குத்தியதை நாம் அறிவோம். உங்களின் நல்வாழ்வுக்காக உண்மையோடிருந்த உங்கள் பிள்ளைகளின் ஏக்கங்கள் ஒருநாள் உங்களுக்கு நிம்மதியான வாழ்வைத்தரும். நீங்கள் ஒற்றுமையாக காத்திருங்கள். உங்கள் பிள்ளைகளை அறிவானவர்களாக வளர்த்தெடுங்கள். வரலாறு உங்கள் கைகளில் ஒருநாள் வந்துசேரும். மனிதனை மனிதன் கொல்வது கொடிது. இந்த கொடிய காலம் எங்கள் கரங்களில் திணிக்கப்பட்டது. கொலைவெறியற்ற சிங்களம் உருவானால் மட்டுமே தமிழர்கள் பாதுகாப்பாக வாழமுடியும். அதன் வழிமுறைகளை கண்டுபிடிக்க உங்கள் குழந்தைகள் முயலட்டும். எங்கள் மரணத்தின் பின்னாவது உலகம் உங்களை காக்கும். விடமாட்டார்கள் ! எங்கள் மக்கள் விடமாட்டார்கள் ! நம் தமிழக உறவுகள் கொதித்தெழுவார்கள் ! புலம்பெயர் உறவுகள் சேர்ந்தெழுவார்கள். இந்த இழப்பு. இன்னொன்றை பிறப்பிக்கும். நிச்சயம் நம் மக்களின் கொடிய வாழ்வு முடிவுக்கு வரும். எங்கள் மக்களே ! சென்று வருகிறோம். மண்ணே ! உன்மடியில் நீண்ட ஓய்வெடுக்கப்போகிறேன். ‘’கபிலன் ! கபிலன் ! வானம் வெளிக்கிறது.. தயாராகு… இதோ நான் தயாராகிவிட்டேன் . குப்பியை வாயில் கடித்ததும் காதுக்குள் பிஸ்ரலால் சுட்டுவிடு. அடுத்த நொடி உடல்மட்டும் மிஞ்சும்.’’ வலப்பக்கத்தில் தென்னைமரம் ஒன்று நின்றது. காகம் ஒன்று பதட்டத்தோடு குறுக்கே பறந்து சென்றது. அலை வீசிய கடல் அழுதுகொண்டிருந்தது. எங்கள் கடலில் எதிரிகளின் போர்க்கப்பல் தெரிந்தது. எங்கும் துப்பாக்கி இயங்கிக்கொண்டே இருந்தது. அவை இராணுவத்தின் துப்பாக்கிச்சத்தங்கள்தான். அவர்கள் வீரர்கள் வாழ்ந்த காற்றுக்கும் சுட்டுக்கொண்டிருந்தார்கள். மேகங்கள் ஒன்றையும் காணவில்லை. அதிகாலைக்குருவிகளின் சத்தம்கூட இல்லை. அவை எங்கு பறந்து போயினவோ தெரியவில்லை. தங்களோடு வாழ்ந்தவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று பறவைகள் அழுதிருக்கும். மனிதர்களை நினைத்து அவை குளம்பிப்போயிருக்கும். ‘இவர்கள் அறிவற்றவர்கள்’ என்று அவை நினைத்திருக்கும். மனிதனை மனிதன் கொல்வதை பார்க்கும் பறவைகளால் வேறெதை நினைக்க முடியும். ?! அண்ணருக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. வரலாறு ஒரு பெருமகனை இழந்துகொண்டிருக்கிறது. வரலாற்றில் இருந்து மனிதர்கள் கற்காவிட்டால் அவை மீண்டும் மீண்டும் நிகழும். ‘’ கபிலன்…. கபிலன்.. சத்தம் அருகே கேட்கிறது. நிலம் வெளிக்கிறது, தயாராகு ! நாம் உயிருடன் பிடிபடக்கூடாது.. நாமிருவரும் இந்த மண்ணில் வாழும் நிமிடங்கள் இவைதான். ‘’ இருவரும் தயாரானார்கள். குப்பி கொடுப்பில் வைக்கப்பட்டது. வலக்கையில் இருந்த பிஸ்ரல் காதோரம் வந்தபோது, இடக்கை அருகே இருந்த அறுகம்புல்லோடு சேந்த தாய்மண்ணை அள்ளி நெஞ்சில் வைத்துக்கொண்டு தளபதி ஜெயம் 1994 இல் தலைவரால் மீண்டும் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியை தன் காதோரம் வைத்து விசையை அமத்தினார். பட்ட்டீர்ர்….பட்ட்டீடர்ர்.. ! ‘புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் ‘ என்று கூற அதன்பிறகு அந்த நிலத்தில் யாரும் இருக்கவில்லை. - அகரன் பூமிநேசன் https://www.facebook.com/profile.php?id=61554181222805
  2. புளியமரம் மட்டுமன்றி இலுப்பை, வேம்பு போன்ற எண்ணெய் வித்துள்ள மரங்களும் நடவு செய்யலாம்......பிற்காலத்தில் வருமானத்துக்கு உதவும்.......! 👍
  3. ஒரு நகரத்தின் அனைத்துமக்களும் ஒரே கட்டிடத்திற்குள் இருந்தால் எப்படி இருக்கும்?அந்தக்கட்டத்திற்குள் ரெஸ்ரோரன்ற்,ஜிம்,பார்க்,ஹாஸ்பிட்டல் என அனைத்துமே இருந்தால் எப்படி இருக்கும்? வேலைக்கு செல்லும்போது ட்ராபிக்கில் அகப்பட்டு நீண்ட நேரம் காத்திருக்கதேவையில்லை ,தியேட்டருக்கு போவது என்றாலும் உடனே சென்றுவிடலாம்,நினைக்கவே மலைப்பாக இருக்கின்றதல்லவா?இதெல்லாம் சாத்தியமா ஏதோ ஹாலிவூட் படமா என எண்ணத்தோன்றுகிறதா? ஆம் இதெல்லாம் பொய் அல்ல உண்மைதான் உலகின் ஒரே பில்டிங்கில் வசிக்கும்மக்களைப்பற்றித்தான் பார்க்கப்போகின்றோம் இந்தவிடயமெல்லாம் வெளி உலகத்திற்கு நீண்ட நாட்களுக்குத்தெரியவே இல்லை ஆனால் அங்குவாழும் ஒரு பெண் தனது டிக்டாக் வீடியோவில் இந்தவிடயங்களைத்தெரியப்படுத்தியிருந்தார் அந்த வீடியோ வைரலாகியது இதன்பின்னர்தான் உலகிற்கு இப்படி ஒரு நகரம் இருப்பதே தெரியவந்துள்ளது இந்த நகரத்தின் பெயர் விஸ்டர் இந்த நகரம் அலாஸ்காவில் அமைந்திருக்கின்றது அலாஸ்கா இரத்தம் உறையும் அளவிற்கு மிகவும் குளிரான பிரதேசம் இந்த நகரத்தில் ஒட்டுமொத்தமாகவே 220 சிட்டிசன்கள்தான் வசிக்கின்றார்கள் அவர்கள் சாப்பிங்க்,தியேட்டர்,ஸ்கூல் ஆபிஸ் என எங்குசெல்வது என்றாலும் லிப்டில் இருக்கும் நம்பர்களை அழுத்தினால்போதுமானது.14 மாடிகளைக்கொண்டிருக்கும் பெஜிச் டவர் என்றழைக்கப்படும் இந்த கட்டிடத்தினுள்தான் நகரத்தில் வசிப்பருக்கு பெரும்பாலும் தேவையான அனைத்துமே உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஒரு போலீஸ் ஸ்டேசன் 2 சூப்பர் மார்க்கெட்கள்,இண்டோர் பிளேகிரவுண்ட்,ஆபிஸ்,லவுண்ரி,போஸ்ட் ஆபிஸ் அதோடு கிளினிக் இதைவிட பேஸ்மெண்டில் ஒரு சர்ச்சும் இருக்கின்றது.இதனால் இங்குவசிக்கும் சிட்டிசன்கள் மாதக்கணக்காக வெளியே செல்லாமல் இதனுள்ளேயே இருப்பார்கள்.அதிகமான குளிர்காரணமாக இவர்கள் வெளி உலகத்துடன் தொடர்புகொள்வதற்கு இருக்கும் ஒரே ஒரு வீதியும் பனியால் மூடப்பட்டுவிடும் எனவே இவர்கள் இந்தக்கட்டிடத்துக்குள்ளேயே தம் வாழ்க்கையை தொடருகின்றார்கள்.கோடைகாலங்களில் மீன் பிடித்தல்தான் இவர்களது தொழிலாக இருக்கின்றது அதிகமானவர்கள் கோடைகாலத்தில் மீன் பிடித்தலையே தொழிலாக செய்கின்றார்கள்.இந்த நகரத்திற்கு அரசு எந்த ஒரு பப்பிளிக் ட்ரான்ஸ்போற்ட்டையும் உருவாக்கவில்லை இதனால் காரிலோ அல்லது கப்பலிலோதான் இந்த நகரத்திற்கு பயணிக்கமுடியும் கோடைகாலத்திலும் மிக அதிக நேரம் மழைபெய்துகொண்டே இருக்கும். நவம்பரில் இருந்து பெப்ரவரி வரை தொடர்ச்சியாக 4 மாதங்கள் சூரியனையே இந்த நகரத்தில் இருப்பவர்கள் பார்க்கமுடியாது.இந்த நகரத்துக்கு நுழைவதற்கு பயன்படுத்தும் ஒரே ஒரு வீதியும் பல குகைவழிப்பாதைகளைக்கொண்டது இரவில் இந்த குகைவழிப்பாதைகள் மூடப்பட்டுவிடும் இதனால் குளிர்காலத்தில் இந்த நகரத்தில் குற்றங்கள் மிகமிகக்குறைவாகவே காணப்படும் காரணம் ஏதாவது தவறுசெய்துவிட்டு தப்பிச்செல்லவே முடியாது வெளியே சென்றால் குளிரிலேயே உறைந்து மரணிக்கவேண்டியதுதான். ஏதாவது இடத்திற்குசென்று நீங்கள் தொலைந்துவிடவேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் நீங்கள் செல்லவேண்டிய இடம் இதுதான்.இங்கே வாழும் மக்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் மிக நட்பாகவே பழகுகின்றார்கள் மாணவர்கள் டவுட் என்றால் உடனே ஓடிச்சென்று ஆசிரியரின் கதவைத்தட்டுகின்றார்க்ள்.சில மாதங்களில் மட்டும் அனைத்து கடைகளும் இங்கே மூடப்பட்டிருக்கும் அவ்வாறான நேரங்களில் தனிமை அவர்களை வாட்டும் உடனே ஒவ்வொருவரும் வேறு வேறு தளத்துக்கு சென்று அங்கிருப்பவர்களுடன் தங்கள் நாளை மகிழ்ச்சியாக செலவிடுகின்றார்கள். மிகவும் குளிரான நாளில் பனிப்பொழிவு சுமார் 20 அடிகள்வரை உயரும் அதோடு 60 மைல் வேகத்தில் குளிர்காற்றும் இங்கே வீசிக்கொண்டிருக்கும் இதன் காரணமாக பனிக்கரடிகள்கூட வெளியே வருவதில்லை அதோடு பனிக்கரடிகள் இங்கே அதிகம் என்ற காரணத்தினாலும் பிளே கிரவுண் பில்டிங்கின் உள்ளேயே அமைக்கப்பட்டிருக்கின்றது இங்கே விவசாயம் மற்றும் காய்கறிகள் உற்பத்திசெய்வதற்காக மிகப்பெரிய தனி அறை ஒன்றை உருவாக்கியிருக்கின்றார்கள்,கோடைகாலம் தொடங்கப்போகின்றது என்றவுடன் காய்கறிகளை நட ஆரம்பித்துவிடுவார்கள் சூரிய ஒளிக்காக ஸ்பெஸலாக உருவாக்கப்பட்ட மின் விளக்குகளைப்பயன்படுத்துகின்றார்கள் இவற்றின் மூலமே இங்கு விவசாய உற்பத்தி நடைபெறுகின்றது வாழ்வதற்கு இவளவு கடினமான இடத்தில் எதற்காக மக்கள் வசிக்கின்றார்கள் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம் ஆனால் இவர்கள் தாமாக விரும்பி இங்கே குடியேறவில்லை.1943 இல்தான் இந்த நகரம் உருவாக்கப்பட்டது அமெரிக்க ராணுவத்தின் காம்ப் ஒன்றை நிறுவுவதற்காக தனிமைப்படுத்தப்பட்ட இடம் ஒன்று தேவைப்பட்டபோதுதான் இந்த இடம் அதற்காக தெரிவுசெய்யப்பட்டது.எதிரிகளின் கண்களில் அகப்படாத மலைகளால் சூழப்பட்ட பாதுகாப்பான பிரதேசம்தான் உண்மையில் தேவையாக இருந்தது ஆனால் இந்த இடம் இயற்கையாகவே அவர்கள் எதிர்பார்த்ததுபோல் அமைந்திருந்தது அதோடு மைனஸ் டிகிரி வெப்ப நிலையில் குளிர் இருக்கும்போது இங்கே இருக்கும் கடல் நீர் உறைவதில்லை எனவே இராணுவத்தளபாடங்களை கப்பல் மூலம் நகர்த்துவதற்கு இந்த இடம் மிகப்பொருத்தமாக இருந்தது. அதோடு இந்த நகரத்துக்கான வீதி 3 கிலோமீட்டர் நீளத்திற்கு மலையைக்குடைந்து இராணுவத்தினரால் அமைக்கப்பட்டது.இராணுவ காம்பை அடுத்து ஒரே உருவில் கட்டப்பட்ட சிறிய சிறிய வீடுகள் அமைக்கப்பட்டன ,இப்போது அங்கு காணப்படும் பக்னர் பில்டிங்க் பொறியியலாளர்களுக்காக கட்டப்பட்டது.தற்போது மக்கள் வசித்துவரும் 14 மாடிகளைக்கொண்ட ஹோஜ் பில்டிங்தான் அப்போது இராணுவ வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டது பின்னர் இந்த பில்டிங்க் பெஜ்ஜி டவர் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.அமெரிக்க பாராளுமன்றத்தைச்சேர்ந்த ஒருவர் விமானவிபத்தில் இங்கே காணாமல்போனார் இதன்பின்னரே இந்தக்கட்டடத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.இந்தக்கட்டிடத்தை அண்டன் ஆண்டர்சன் என்ற பொறியியலாளர் வடிவமைத்திருக்கின்றார். 1964 மார்ச் 27 இல் அலாஸ்காவில் 9.2 ரிக்டர் அளவில் பாரிய நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டது 1200 அணுகுண்டுகள் வெடித்தால் என்ன சக்தி வெளிப்படுமோ அந்த அளவுக்கு இந்த நில நடுக்கம் பாதிப்பை ஏற்படுத்தியது இந்த நில நடுக்கம் ஏற்படுத்திய சுனாமி அலையில் அந்த நகரமே துடைத்தெறியப்பட்டது தற்போது இருக்கும் 14 மாடிகளைக்கொண்ட கட்டிடம்கூட பாரிய சேதமடைந்தது.இதனால் இராணுவம் உடனடியாக அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட்டது ஆனால் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய மக்கள் அங்கேயே தங்கிவிட்டார்கள். 1969 இல் இது தனி நகரம் என்ற அங்கீகாரத்தைப்பெற்றுக்கொண்டது.இந்த சம்பவம் நடந்தபோது நகரத்தில் தங்கியிருந்த பொறியியலாளர்கள் மற்றும் வேலைசெய்தோரின் பிள்ளைகள்தான் இப்போது இந்த நகரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.பக்னர் பில்டிங்க் இப்போதும் உடைந்த நிலையில்தான் காணப்படுகின்றது.இதை மீண்டும் கட்டுவதற்கு இடிக்கவேண்டி ஏற்படும் இதனால் ஏற்படும் தூசுக்களால் அதிக பாதிப்புக்கள் ஏற்படும் அதோடு அதற்கான பொருட்களைக்கொண்டுவருவதும் மிகக்கடினமான வேலை எனவே அந்த பில்டிங்கை மக்கள் அப்படியே விட்டுவிட்டார்கள்.பாதிப்படைந்த பெஜ்ஜி டவர்ஸை மட்டும் மக்கள் சரிசெய்து இன்றுவரை பயன்படுத்திவருகின்றார்கள். இங்கே வசிக்கும் சிலர் வேலைசெய்வதற்காக இந்த நகருக்கு 105 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அஞ்சோரா எனப்படும் நகரிற்கு செல்கின்றார்கள் ஆனால் அந்த நகரத்திற்கு செல்வதற்கும் குகைவழிப்ப்பாதைக்கு வருடத்திற்கு 500 டாலர்கள் பணம் செலுத்தவேண்டும்.கோடைகாலத்தில் இந்த நகரம் சுற்றுலாப்பயணிகளால் நிரம்பிவழிகின்றது உலகின் பல்வேறுபாகங்களில் இருந்து இங்கே மக்கள் வந்துகொண்டிருக்கின்றார்கள்,கடல்,ஏரிகள்,காடுகள்,பனிக்கரடிகள்,கடல்சிங்கம் என சுற்றுலாப்பயணிகளைகவரும் பலவிடயங்கள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன அதோடு ஆழ்கடல் மீன்பிடியும் இங்கே மிகப்பிரபலம் ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இங்கே வசித்துவந்தமக்கள் வேறு நகரங்களுக்கு இடம்பெயர ஆரம்பித்துள்ளார்கள் இதனால் 200 அப்பார்ட்மெண்ட்கள் இப்போது காலியாக உள்ளன.அதோடு பலர் இந்த அப்பார்ட்மெண்ட்களை வாங்கிக்கொண்டுமிருக்கின்றார்கள். மிக பிஸியாக சுற்றிக்கொண்டும் இந்த உலகில் இருந்து கொஞ்சம் தனிமைவேண்டுமாக இருந்தால் நிச்சயம் இந்த இடம்தான் யாருக்கும் முதலாவது தெரிவாக இருக்கமுடியும் https://www.manithanfacts.com/2023/12/whittier alaska.html
  4. ஜேர்மனியில் இந்த ஆண்டுக்கான 11 வயதின் கீழ் பூப்பந்தாட்டத்தில் சிறந்த வீரர்கள தெரிவுசெய்யப்பட்ட தமிழ் வீரர்கள். ஜேர்மனியில் ஆண்டு முழுவதும் மாகாணங்கள், மாவட்டங்களுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றன. பல நூற்றுக்கணக்கானவர்கள் போட்டியில் பங்கு பெற்றபோதும், இந்த ஆண்டின் இறுதிப் போட்டிக்குபுள்ளிகளின் அடிப்படையில் ஆண், பெண் உட்பட 36 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். பங்கு பற்றிய ஆட்டத்தில் 5 சிறந்த புள்ளிகள் எடுத்த போட்டியாளர்கள் ஜேர்மன் ரீதியில் தெரிவு செய்யப்பட்டனர். பெண்கள் பிரிவில் இரண்டு தமிழ் சிறுமிகள் தெரிவு செய்யப்பட்டனர். 👉தமிழி.மார்க்கண்டு ஜெர்மன் தழுவிய போட்டிகளில் இரண்டு போட்டிகளில் முதலிடம் பெற்றார். ஜெர்மன் ரீதியிலான தரவரிசையில் இவர் மூன்றாம் இடத்தில் உள்ளார். 👉அனிகா .ஆனந் இவர் பல போட்டிகளில் முன்னிலை வகித்து ஜெர்மன் ரீதியிலான தரவரிசையில் 17 வது இடத்தை பெற்றுள்ளார். 👉ஹர்சத்குமார் கர்த்திக் இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தி யேர்மன் தழுவிய போட்டிகளில் ஐந்து போட்டிகளில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். ஜேர்மன் ரீதியிலான தரவரிசை பட்டியலில் இவர் இரண்டாம் இடத்தை பெற்று தகுதி நிலையை அடைந்ததுள்ளார். இறுதிப் போட்டிகளின் போது மிகவும் சிறப்பான ஆட்டத்தை இறுதிச் சுற்று வரை அனிகா வெளிப்படுத்தினார். தமிழி மிகவும் சிறப்பாக விளையாடி கால் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் ஜேர்மன் தழுவிய தரவரிசையில் 5 ஆம் நிலையை எட்டியிருந்தார். இதில் அதிநுட்பமாகவும் தனது திறமையையும் துடுப்பாட்டத்தில் வெளிப்படுத்தி மிக சிறப்பாக விளையாடி அனைவரினதும் பாராட்டையும் பெற்ற ஹர்சத்குமார் முதலிடத்தை பெற்று இந்த ஆண்டுக்கான ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை பெற்றார். இரட்டையர் ஆட்டத்தில் அனிகா கால் இறுதி வரை முன்னேறி வெளியேறினார். ஹர்சவத் குமார் அரையிறுதி வரை முன்னேறி மிகக் கடுமையான போட்டியின் மத்தியில் மூன்றாம் இடத்தைத் தனது ஆக்கினார். தமிழி மிகவும் திறமையாக விளையாடி இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தை வெற்றிகொண்டார். இந்த ஆண்டின் பூப்பந்தாட்டு போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி ஜேர்மன் ரீதியில் இவர்கள் தங்களின் தடங்களை பதித்துள்ளனர். ஜேர்மன் தரவரிசையில் ஹர்சத் குமார் 2ம் இடத்தையும், தமிழி 3ம் இடத்தையும்.அனிக்கா 17ம் இடத்தையும் எட்டியுள்ளனர். இவர்களினது கடினமான பயிற்சியும் பெற்றோர்களின் விடாமுயற்சியும் தமிழர்களாகிய எம்மை இன்று பெருமை கொள்ள வைக்கிறது. வரும் காலத்தில் இன்னும் பல தமிழ்ச் சிறார்கள் பல சாதனைகளைப் படைக்க இவர்கள் முன்னுதாரணமாக இருக்கட்டும். ஸ்ரீ ஸ்ரீ
  5. 👇 கீழே இருக்கிற வரியைப் பார்க்காமல் எனக்குப் பதில் எழுதியிருக்கிறீர்கள்! பெரியோர் பார்த்துப் புரிந்து கொள்வர் என நினைக்கிறேன்!
  6. இலங்கையைப் பொறுத்தவரை ஒருவர் வாத்தியார் என்றால் சாகும்வரை வாத்தியார் தான் பொலிஸ் என்றால் சாகும்வரை பொலிஸ் தான். பாங்கர் என்றால் சாகும்வரை பாங்கர் தான் அவவும் ஒரு நடிகையாகவே இருந்துட்டு போகட்டுமே. இதுக்கும் மேலே சொல்வதானால் ஐயா சம்பந்தரைப் பாருங்கள்.சாகும்வரை எம்பி யாகவே இருப்பார். ஒருவர் திருமணத்துக்கு முன் எப்படியெல்லாம் இருந்தார் என்பது அழகல்ல.
  7. அவர் நடிப்பில் இருந்து ஒய்வு பெற்றதாக அறிவிக்காத படியால்... இப்போதும் நடிகைதான். அவர் எப்போதும் நடிக்க வரலாம். 😂
  8. இந்நாடு சிங்கள நாடல்ல, தமிழ்நாடுமல்ல இலங்கை என்ற எம் தாய்நாடு, ஒரு “சிங்கள பௌத்த நாடு” என்ற தமக்கு மட்டுமே என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான “தனித் தமிழ்நாடு” என்ற சிந்தனையும் மறைய வேண்டும். சகலருக்கும் சொந்தமான, இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு என்ற அடிப்படையே உங்கள் நடவடிக்கைக்கு ஆரம்ப புள்ளியாக இருக்க வேண்டும் என பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற, சிறந்த இலங்கைக்கான சங்க (பெளத்த) மன்றம், உலகத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளுடனான சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம், பெளசி, திகாம்பரம், வேலுகுமார், உதயகுமார், தவ்பிக் ஆகியோரும் கலந்துக்கொண்ட இந்நிகழ்வு பற்றி ஊடகங்களுடன் உரையாடிய பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மேலும் கூறியதாவது, சிங்கள - பெளத்த நாடு என்ற சிந்தனை, இலங்கையில் நிரந்தர அமைதி, வளர்ச்சி, மகிழ்ச்சி ஏற்பட தடையாக இருக்கிறது என சந்திப்பில் கலந்துக் கொண்ட தேரர்களை நோக்கி சிங்கள மொழியில் கூறினேன். அதேவேளை இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான தனித் தமிழ்நாடு என்ற சிந்தனையும் மறைய வேண்டும் என சந்திப்பில் கலந்துக் கொண்ட உலகத் தமிழர் பேரவை அங்கத்தவர்களை நோக்கி தமிழிலும், ஆங்கிலத்திலும் கூறினேன். உங்களது இந்த முயற்சியை நாம் வரவேற்கிறோம். அரசியல்வாதிகளை, அரசியல் கட்சிகளை விலத்தி வைத்து விட்டு நேரடியாக நீங்கள் இந்த முயற்சி செய்வதும் இந்த முதற்கட்டத்தில் சரிதான். முதல் கட்டத்தை வெற்றிகரமாக கடந்து விட்டால், அடுத்த கட்டத்தில் அது அரசியல் கட்சிகளிடம்தான் வரவேண்டும். பாராளுமன்றத்தில்தான் இன்றைய சட்டங்கள் திருத்தப்பட முடியும். புதிய சட்டங்கள் உருவாக்கப்பட முடியும். ஆகவே அது வரும்போது வரட்டும். ஆனால், இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு என்ற அடிப்படையே உங்கள் நடவடிக்கைக்கு ஆரம்ப புள்ளியாக இருக்க வேண்டும். இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்ற தமக்கு மட்டுமே என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான தனித் தமிழ்நாடு என்ற சிந்தனையும் மறைய வேண்டும். இந்த அடிப்படை ஆரம்ப புள்ளியாக ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் இந்த முயற்சிபயனற்றதாகி விடும். “76 விகிதம் சீனர்களை கொண்ட சிங்கப்பூர், அரசியல் சட்டப்படி தம்நாட்டு பன்மைத்துவத்தை கொண்டாட முடியும் என்றால், ஏன் இலங்கையில் எம்மால் அதை கொண்டாட முடியாது?” என்ற கேள்வியை முயற்சியில் ஈடுபடும் தேரர்களை நோக்கி நான் எழுப்பவில்லை. ஏனெனில் இம்முயற்சி வெற்றி பெறுவது பெருமளவில் அவர்கள் தரப்பில்தான் உள்ளது என்பது எனது அபிப்பிராயம். முதலிலேயே அவர்களை தளர்வடையச்செய்ய நான் விரும்பவில்லை. ஆனால், அடுத்த முறை இதை நான் கேட்பேன். இத்தகைய கேள்விகளை ஏற்கனவே பாராளுமன்றத்திலும், உள்நாட்டு மேடைகளிலும் நான் பலமுறை எழுப்பியுள்ளேன் என தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=181386
  9. பால் வண்ணம் பருவம் கண்டு .........! 😍
  10. மிக உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருக்கிறீர்கள் போலுள்ளது. 😜
  11. மரங்கள் வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். அப்படி வெட்டுவதாயின் அரச அனுமதி வேண்டும் என சட்டங்களை கொண்டுவர வேண்டும்.
  12. ஓம்…ஜனநாயக நாடுகளில் இது ஒரு பிரசிச்சினை. அதிகாரம் கட்சிக்கு கட்சி மாறுவதால் சில விடயங்களில் கொள்கை தளம்பல் இருக்கும். பொதுவாக இது அமெரிக்க வெளியுறவு கொள்கையில் இருப்பதில்லை. ஆனால் உக்ரேன் விடயத்தில் இருக்கிறது. காங்கிரஸ் மட்டும் அல்லாது பிரெசிடென்சியும் ரிப்பளிக்கன் வசமானானால் செலன்ஸ்கி தலைமையிலான உக்ரேனுக்கு சங்குதான். இது புட்டினுக்கும் தெரியும் - ஆகவேதான் he is playing the long game. விடுதலைபுலிகள் பற்றி முன்னர் எழுதும் போது ஒரு தடவை எழுதினேன். Perfect should never be the enemy of the good. அதாவது நாம் விரும்பும் இலட்சிய தீர்வை அடைவதற்க்காக, கிடைக்க கூடிய நல்ல தீர்வை கைவிடக்கூடாது. செலன்ஸிக்கும் அதுதான். அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரைக்கும்தான் நேரம். அதற்குள் ஒன்றில் இழந்த 20% உக்ரேனை மீட்கவேண்டும், அல்லது மிகுதியையாவது தக்கவைக்கும் ஒரு உடன்படிக்கைக்கு போகவேண்டும். ஆனால் இது ஒன்றும் புதிய விடயம் அல்ல. புட்டின் உக்ரேனில் இறங்கிய தருணமே, டிரம்ப் இதர தீவிர வலது ரிபப்ளிகன் ஆட்கள் சொன்னதை வைத்து, பைடன் தோற்றால் இப்படி ஆகும் என நான், ஜஸ்டின் போன்றோர் முன்பே எழுதியுள்ளோம். பிகு ஆனால் அரசியலில் எதுவும் விரைவில் மாறலாம். தீவிர வலதுசாரிகளின் டார்லிங் தற்போதைய அர்ஜெண்டீனா அதிபர். அவரின் பதவி ஏற்பில் அவர் செலென்ஸ்கியை கொஞ்சாத குறை அவ்வளவு அரவணைப்பு. செலன்ஸ்கியின் தென், வட அமெரிக்க பயணங்கள் தனியே ஊடகங்களை வாசித்துவிட்டு வாந்தி எடுப்போர் சொல்வது போல் “பிச்சை பயணமாக” மட்டும் இல்லாமல், ஆர்ஜெண்டினா வழியாக, American Right இடம் தன்னை/உக்ரேனை re position பண்ணும் முயற்சியாயும் இருக்கலாம்.
  13. கற்பனைக் குதிரையைத் தட்டிவிடல் என்பது இதுதானோ 🤣
  14. அவரை தற்போதும் நடிகை என்று அழைப்பது பொருத்தமானதா? 😁 (இலங்கையில் தற்போது இலண்டனா அல்லது கனடாவா என்று போட்டி?🤣)
  15. இந்த சின்னக்குழுவின் முயற்சியால் சில வேளை சில சிறிய நன்மைகளாவது தயகத்தில் வாழும் வந்து விடுமோ என்று பலரும் பதட்டப்படுவது தெரிகிறது. எவரும் பதட்டப்பட வேண்டாம் இந்த தீர்மானங்கள் முயற்சிகள் எந்த பலனையும் தரப்போவதில்லை. எமது அபிமான அரசியல் தலைவர்கள் தாயகத்தில் அரசியல் தீர்வு என்றும் இரு தேசம் ஒரு நாடு என று பம்மாத்து விட்டபடி தமது வாழ்நாள் முழுவதும் அரசியல் நடத்தலாம். அவரவர் அபிமானத்துக்குரிய புலம் பெயர் அரசியல் செயற்பாட்டாளர்கள், நண்பர்கள் அவர்களது வாழ்நாள் முழுவதும் தமது ஈழ வியாபாரத்தை தொடரலாம். நாமும் இங்கே அடிக்கடி வந்து ஒப்பாரி வைக்கலாம். இவ்வாறான எமது ஆசைகள் தொடந்து எமது வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்ற சூழ்நிலை பிரகாசமாக இருக்கும் போது ஏனப்பா இந்த பதட்டம். உலக தமிழர் பேரவை என ற இந்த சிறிய அமைப்பு எங்கள் ஆசைகளை சின்னாபின்ன படுத்தும் சக்தி அற்றது என்ற உணமையை உணருங்கள் அதை விட, வெற்றி வாதத்தில் திளைக்கும் சிங்கள இனவாதிகள் இருக்கும் போது நாம் ஏன் பதட்டப்பட வேண்டும். அவர்கள் தானே எமது சொத்துக்கள். எமது கவலைகளை அவர்கள் பார்ததுக் கொள்வார்கள். Don’t worry. Be happy.
  16. எழுதினால்…. எல்லாம் தெரிஞ்ச மாதிரி ஒவ்வொரு திரியிலும் எழுதுறார்….. சதா யாழில் கிடக்கிறார்…வேலைக்கு போறேல்லையோ…. சுய விலாசம் காட்ட எழுதுறார்…. இத்யாதி…இத்யாதி…. தேவையில்லை அண்ணை…. எதாவது புளிச்சல் ஜோக்கை கொப்பி பேஸ்ட் அடிப்பது, அல்லது கருத்தேதும் எழுதாமல் திரிக்கு திரி ஆட்களை குறிவைத்து தாக்குவது… இப்படி நாட்களை ஜாலியாக கழிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறேன்.
  17. பின்னை எங்களை மாதிரி 3 வேலை செய்யும் அகதிகள் மேற்குக்கு கிடைப்பார்களா?
  18. இப்பதானே காட்சி ஆரம்பிச்சிருக்கு ராசா....இனித்தான் ஆட்டமே இருக்கு ராசா....😂 நீ தனிச்சுப்போவாய் எண்டு அப்பவே படிச்சு படிச்சு சொன்னமே கேட்டியே ராசா.... 😎
  19. உண்மையையும் யதார்த்தத்தையும் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வந்தோம்.அதற்கு பதில் கருத்து வைக்காமல் தனிமனித தாக்குதலாக உக்ரேன் சம்பந்தப்பட்ட திரிகள் அனைத்தையும் நீட்டிச்சென்றார்கள். நான் ஜேர்மனியில் இருந்து கொண்டு ரஷ்யாவின் அரசியல் சார்பாக கருத்து வைத்ததினால் என்னை நன்றி கெட்டவன் என முடித்தே விட்டார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.