Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    53011
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87990
    Posts
  4. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    15741
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/24/23 in Posts

  1. அனேகமான மேற்கு நாட்டு விமான சேவைகளில் துப்பாக்கியையும் சன்னங்களையும் வேறாக்கி Hold luggage (UK) அல்லது Checked-in luggage (US/Canada) இல் எடுத்துச் செல்லலாம். கையோடு கொண்டு செல்லும் (hand luggage) பயணப் பொதியில் எடுத்துச் செல்ல முடியாது. செக்ட் இன் லக்கேஜில் கொண்டு செல்பவர், அதை விமானப் பொதியை விமான சேவையிடம் கையளிக்கும் போது அறிக்கையிட (declare) வேண்டும். "ஏதாவது அறிக்கையிட வேண்டிய, தடை செய்யப் பட்ட பொருட்கள் இருக்கின்றனவா?" என பொதியை ஏற்கும் விமான சேவை ஊழியர் கேட்க வேண்டியது அவரது சட்டக் கடமை. பயணி "இல்லை" எனப் பதில் அளித்தால் பொதியை அங்கேயே திறந்து பரிசோதிக்கும் உரிமை (search power) விமான சேவையின் ஊழியருக்கு இல்லை. அதோடு அவர் பணி முடிந்தது. துப்பாக்கி எடுத்துச் செல்லும் பயணி பொய்யைச் சொன்னால் அடுத்து என்ன நடக்கும்? விமான சேவையின் ஊழியர் நிறையைச் சரிபார்த்து, லேபலைப் போட்டு கவுண்டருக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் கொன்வேயர் பெல்ட்டில் பயணைப் பையைப் போடுவார். அது ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கும் பகுதிக்குச் செல்லும். ஹீத்ரோவில் நவீன முப்பரிமாண (3D) ஸ்கேனர் 2022 இல் இருந்து பயன்பாட்டில் இருக்கிறது. இந்த ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்வது விமான சேவையின் பணி அல்ல, அது விமான நிலையைப் பாதுகாப்பு அதிகாரிகளின் பணி. இந்தப் பாதுகாப்பு ஊழியர்களுக்கு பிரச்சினைக்குரிய பொதிகளைத் திறந்து சோதனை செய்யவும், பயணியையும், பொதியையும் விமானத்தில் ஏற்றாமல் தடுக்கவும் உரிமை இருக்கிறது. இந்தச் சோதனையில் ஒரு பிரச்சினைக்குரிய பொருள் தப்பினால், அது விமானம் ஏறி இலங்கை போயிருக்கும். இலங்கையில் ஸ்கானர் பாவிக்கின்றனரா தெரியாது, ஆனால் "அறிக்கையிட எதுவும் இல்லை" என்று நிறையப் பொதிகளை உருட்டிக் கொண்டு செல்ல முயற்சித்தால் நிச்சயம் நிறுத்தி எல்லாப் பைகளையும் திறந்து சோதிப்பர் - இது சுங்க அதிகாரிகளின் சோதனை. உணர்ச்சி மயப்பட்டு நாம் எதுவும் எழுதலாம். ஆனால், தரவுகளைப் பரிசோதித்த பின்னர் எழுதினால் இது போன்ற திரிகளில் பயணம் செய்யும் மக்களுக்குத் தெளிவையூட்டலாம் . நான் மேலே குறிப்பிட்ட தகவல்கள், பிரிட்டனின் அரச வலைத் தளத்திலேயே இருக்கும் தகவல்களில் இருந்தும், என் பயண அனுபவங்களில் இருந்தும் பெற்றவை.
  2. இன்றைய தினம் பிறந்தநாள் காணும் ஏராளனை வாழ்த்துங்களேன்!😜
  3. தமிழ் மக்கள் உறுதியான முடிவெடுக்க வேண்டிய நேரமிது | அரசியல் களம் | ஆய்வாளர் அருஸ்
  4. என்ன... பொசுக்கெண்டு இப்பிடி, சொல்லிப் போட்டீங்க. இவ தானே கஞ்சா பயிர் செய்கை செய்ய வேண்டும் என்றும், விபச்சாரதை நவீனப் படுத்த வேண்டும் என்றும், மது பானக் கடைகளை நீண்ட நேரம் திறந்து வைத்திருக்க வேண்டும் என்றும் சொன்ன ஆள். பெளத்த துறவியாக இவ நடித்தால்... அந்தப் புத்தனை அவமதிக்கிற மாதிரி இருக்காதா.
  5. நாங்கள் இந்த வீட்டுக்கு வந்து இருபது ஆண்டுகள் முடியப்போகிறன. காலம் தான் எத்தனை வேகமாக எல்லாவற்றையும் கடந்துபோக வைக்கிறது. ஆசைகள் தான் மனிதனை ஆட்டிப் படைக்கின்றது. எனினும் பல ஆசைகள் நிராசையாகியும் போயிருக்கின்றனதான். நல்ல ஆசைகள் முயற்சியின் காரணமாக நிறைவேறி மனதுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுப்பதோடு மட்டுமல்லாது திருப்தியுடன் வாழ்வை நகர்த்திச் செல்கின்றன. திருப்தி எப்போது இல்லாது பேராசை மேலோங்குகிறதோ அதன்பின் மனிதன் வாழ்வின் இன்பமான நாட்களைத் தொலைத்து இன்னும் இன்னும் என்று வசந்தங்களை எல்லாம் தொலைத்து ஒன்றுமில்லாதவனாகி விடுகிறான். நான் மகிழ்வாகவும் நிம்மதியாகவும் தானே இப்பொழுது இருக்கிறேன் என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். சுற்றிவர கண்ணாடி அறையினுள் தொங்கும் பூங்கன்றுகளை ஆசைதீரப் பார்க்கிறேன். எத்தனை தடவைகள் பார்த்தாலும் அலுக்காத பச்சைப் பசேல் எனவும் வண்ணவண்ண நிறங்களுடனும் பூத்துக் குலுங்கும் இந்தச் செடிக்கொடிகளை நாள் முழுதும் பார்த்துக்கொண்டே இருந்தாலும் எனக்குச் சலிப்பதில்லை. எட்டு ஆண்டுகளுக்கு முன் இதைக் கட்டியபோதும் சரி அதன்பின் சில மாதங்களாக நான் பட்ட மன வேதனையையும் எண்ண இப்போ சிரிப்புத்தான் வருகிறது. என் நீண்ட நாள் ஆசையான குளிர் காலத்திலும் பூங்கன்றுகள் வளர்ப்பதற்கான கண்ணாடி அறை ஒன்றை அமைப்பது குறித்து கணவருடன் பலநாட்கள் தர்க்கம் செய்தாகிவிட்டது. அந்தாளும் அசையிற மாதிரி இல்லை. நானும் விடுவதாய் இல்லை. “உதெல்லாம் வீண் செலவு. கொஞ்ச நாள் சும்மா இருக்க உன்னால முடியாது. காசை கரியாக்கிறதெண்டால் முன்னுக்கு நிப்பாய்” “இருந்தாப்போல செத்திட்டால் என்ர ஆசை நிறைவேறாமல் போயிடுமப்பா” “நீ ஒண்டைச் செய்ய நினைச்சால் செய்து முடிக்குமட்டும் விடவே மாட்டாய். உப்பிடிச் சொல்லிச் சொல்லியே எல்லாத்தையும் நிறைவேற்றிக் கொள்” “நான் என்ன நகை நட்டு வாங்கித் தாங்கோ என்றா கேட்கிறன்” “என்னவோ செய்து முடி” அடுத்த நாளே நான் வேலையைத் தொடங்கியாச்சு. சாதாரணமாக எந்தச் சிறிய கட்டட வேலை செய்வதாயினும் கவுன்சிலில் அதற்கான வரைபைக் கொடுத்து சிறிது பணமும் செலுத்தி அதற்கான அனுமதியைப் பெறவேண்டும். சாதாரணமாக மூன்று அடி உயரமும் மூன்று அடி நீளமும் இருந்தால் சரி. சரிவான கூரைக்கு அனுமதி தந்திருக்க, வேலை ஆரம்பிக்க வேலைகளைச் செய்வதற்கு ஒரு தமிழர் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டி ருந்தார். சமரில் முழுவதும் திறப்பதுபோல் மடியும் கதவுகள்வரை போட்டாச்சு. கூரை வேலை மட்டுமே மிகுதியாக இருக்க விக்டோரியன் ஸ்டைல் கூரை இன்னும் நன்றாக இருக்கும் அக்கா என்கிறார் அந்தத் தமிழர். எனக்கும் ஆசை எட்டிப்பார்க்க கவுன்சிலில் சாய்வான கூரை என்றுதானே கொடுத்துள்ளோம் என்கிறேன். பக்கத்து வீட்டுக்காரர் பிரச்சனை இல்லையோ என்கிறார். அந்தக் கிழவன் கொஞ்சம் துவேஷம் தான். ஆனால் கிழவி நல்லது என்கிறேன். அப்ப நான் விக்டோரியன் கூரையே போட்டு விடுறன். ஒரு ஆயிரம் பவுண்டஸ் தான் அதிகம் என்கிறார். அப்ப கவுன்சிலுக்கு அறிவிக்கத் தேவை இல்லையோ என்கிறேன். அவங்களுக்கு அறிவிச்சு திருப்ப பிளான் கீறி காசும் நாளும் விரயம் அக்கா என்கிறார். அந்தக் கூரையை எத்தனை பதிவாகப் போட முடியுமோ போடுங்கோ என்கிறேன். அவர்களும் எவ்வளவு பதிவாக்கமுடியுமோ அவ்வளவு பதித்தேதான் போட்டுவிட்டுப் பார்த்தால் மிக அழகாக இருக்க என் கண்ணே பட்டுவிடும்போல் கண்ணாடி அறை ஒளிர்கிறது. எதற்கும் ஒருக்கா அளந்து பார்ப்போம் என்று அலுமினிய அளவுநாடாவை எடுத்து அளந்து பார்க்க மூன்று மீற்றர் இருக்கவேண்டிய உயரம் முப்பது சென்ரிமீற்றர் அதிகமாக இருக்கிறது. என் மகிழ்ச்சி எல்லாம் ஒரு நொடியில் வடிந்துபோக ஒப்பந்தக்காரருக்கு போன் செய்கிறேன். அது பெரிய பிரச்சனை இல்லை அக்கா. நீங்கள் வீணாப் பயப்படாதைங்கோ என்கிறார். இதுக்கு மிஞ்சி என்ன செய்ய வருவது வரட்டும் என்று நான்கு மாதங்கள் பயத்துடனேயே கழிய குளிரும் குறைந்துகொண்டு வர சிறிது சிறிதாகப் பூங்கன்றுகள் எல்லாம் வைத்து கண்ணாடி அறை மிக அழகாகக் காட்சிதருகிறது. இலைதுளிர் காலமும் வந்துவிட எனக்கு அந்த அறையுள் நிற்பதும் இரசிப்பதுமாக காலம் நகர வெயிலும் எறிக்க ஆரம்பிக்கிறது. கணவர் கண்ணாடி அறையின் கதவுகளை முழுவதுமாகத் திறந்துவிடுகிறார். அந்தக் கண்ணாடி அறையின் அழகு தோட்டம் முழுதுமே பிரதிபலிக்கிறது. சமையல் செய்தபடியே நான் அவற்றை இரசித்தபடி இருக்க, அங்கு ஒரு சிறிய வட்ட மேசையும் கதிரைகளுமாய் நாம் உணவை அங்கு இருந்து இயற்கையை இரசித்தபடி உண்பதும் மனதுக்கு மகிழ்வாய் இருக்கிறது. வீண் காசு என்ற கணவரே உன்ர ஐடியா நல்லாத்தான் இருக்கு என்று கூற என் மனம் நிறைந்துபோகிறது. பிள்ளைகளும் படங்கள் எடுத்து அம்மாவின் பூங்கன்றுகள் என்று இன்ஸ்ரகிறாமில் படங்கள் போட எனக்குப் பெருமிதமாயும் இருக்கு. பறவைகளும் அணில்களும் போடும் உணவுகளைக் கொத்தி உண்பதும் ஒலி எழுப்புவதுமாக இருக்க அவற்றை இரசித்தபடி பார்த்துக்கொண்டிருக்கவே பொழுது போய்விட ஆறு மாதங்கள் முடிந்து போயிருந்தது. ஒருநாள் நானும் கணவரும் மட்டும் மதிய உணவை இரசித்துச் சுவைத்து உண்டு கொண்டு இருக்கிறோம். பக்கத்து வீட்டுக்கு அவர்களின் நண்பர்கள் யாரோ இருவர்கள் வந்திருக்கிறார்கள் போல. பெரிதாக சிரித்துக் கதைப்பது கேட்கிறது. சாதாரணமாக யாருமே வந்து நான் பார்ப்பதில்லை. யாராய் இருக்கும் என்கிறேன் கணவரைப் பார்த்து. நான் என்ன சாத்திரம் தெரிஞ்ச ஆளே. உன்னை மாதிரித்தான் நானும் என்று கணவர் சிரிக்க, அவர்கள் பக்கமிருந்து எமது கண்ணாடி அறையின் பக்கம் ஒரு தடி நீள்கிறது. நான் தான் அதை முதலில் பார்க்கிறேன். அங்க பாருங்கோப்பா. எங்கட சுவரை அளக்கினமோ என்கிறேன். அதுகள் என்ன செய்யுதோ. உனக்கு எப்பவும் வீண் பயம் என்றபடி அவர் திரும்பிப் பார்க்க மறுபடி மறுபடி கண்ணாடிச் சுவரில் ஒரு தடியை வைத்துப் பார்ப்பதைக் கணவரும் கண்டுவிடுகிறார். நீ சொன்னது சரிதான். உதுகள் எங்கடை சுவரை அளந்துதான் பார்க்குதுகள். பொறு பார்ப்போம் என்றுவிட ஏன் அளக்கிறீர்கள் என்று அஞ்சலாவிடம் கேட்கட்டா என்கிறேன். பேசாமல் இரு, சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி எண்டதுபோல நீ கேட்கப்போய் பெரிசுபடுத்தாதை என்றுவிட்டு எழுந்துவிட நானும் யோசனையோடு எழுகிறேன். அடுத்துவந்த ஒவ்வொருநாளும் எனக்கு நிம்மதி இன்றிக் கழிய சரியாக ஒரு மாதத்தின் பின் ஒருநாள் கவுன்சிலில் இருந்து நான் எதிர்பார்த்த கடிதம் வந்திருக்க படபடப்புடன் கடிதத்தை உடைக்கிறேன். நீங்கள் கவுன்சிலில் தந்த பிளானில் இல்லாத விக்டோரியன் ஸ்ரையில் கண்ணாடி அறையைக் கட்டியுள்ளதாக எமக்கு முறைப்பாடு வந்துள்ளது. வருகிற வெள்ளி கவுன்சிலில் இருந்து ஒருவர் அதைப் பார்க்க வருவார் என்று போட்டிருக்க, எனக்குக் கோபம், அவமானம், ஏமாற்றம் எல்லாம் ஒன்றாக எழுகின்றன. மனிசனுக்கு போன் செய்கிறேன். “அண்டைக்கே சொன்னனான். உதுகளின்ர குணத்துக்கு வளவுக்குள்ள வந்த ஆமையை அடிச்சுச் சாப்பிடாட்டிலும் எங்கேயாவது கொண்டுபோய் விட்டிருக்கவேணும். நீயும் மேளும் தடுத்திட்டியள்” “ஆமையின்ர பாவம் எங்களுக்கு எதுக்கப்பா? எப்பிடி உதுகளுக்கு நாங்கள் சாய்வான கூரைக்குத்தான் குடுத்தனாங்கள் எண்டு தெரிஞ்சது?” “நாங்கள் கட்ட முதலே கவுன்சில் அவர்களுக்கும் கடிதம் போடும்” “அப்ப முதலே உவை எங்களுக்குச் சொல்லி இருக்கலாம் தானே” “அவை உன்ர சொந்தக்காரரே. சரி வீட்டை வந்து கதைக்கிறன்” என்றபடி கணவரின் போன் நிறுத்தப்பட யோசனையோடு நானும் போனை வைக்கிறேன். . இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது நினைவில் வருகிறது. பக்கத்து வீட்டார் ஒரு ஆமையை வளர்க்கின்றனர். நாம் வந்தநாள் முதல் சமரில் பகலில் அவர்கள் பின் வீட்டுத் தோட்டத்தில் அங்கும் இங்குமாய் திரியும் இரவில் அதைப் பின் வளவில் உள்ள கட்டடத்தின் உள்ளே விட்டு அடைத்துவிடுவார்கள். ஆனால் அந்த கட்டட அமைப்பு எப்படி இருக்கு என்று பார்க்கவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தாலும் இதுவரை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததே இல்லை. ஒருநாள் பக்கத்து வீட்டு ஆமை எங்கள் வளவுக்குள் வந்துவிட்டது. இந்தப் பத்து ஆண்டுகளில் இதுதான் முதல் தடவை. மகள் கண்டுவிட்டு கணவரைக் கூப்பிட்டுக் காட்ட கணவர் அதைக் கையில் எடுத்து இரண்டு கிலோ இருக்கும் போல. கறி வைத்தால் எப்பிடி இருக்கும் என்கிறார் கணவர். நானும் மகளும் ஒரே நேரத்தில் உங்களுக்கு விசரா என்கிறோம். கிழவன்ர கொழுப்புக்கு உதுதான் செய்யவேணும் என்கிறார் மீண்டும். கடைசிவரை உதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்று நான் கூற லபக் என்று மகள் ஆமையைக் கணவரின் கைகளிலிருந்து வாங்கி விடுவவிடுவென்று கொண்டுசென்று அவர்களிடம் கொடுத்துவிட்டு வருகிறாள். அடுத்தநாள் என்னைக் காணும்போது இரண்டு மூன்று தடவை ஆமையைக் கொடுத்ததற்கு அஞ்சலா என்னிடம் நன்றி கூற எனக்கே ஒருமாதிரியாகிப்போகிறது. ************ கவுன்சில்க் கடிதம் வந்த அடுத்தடுத்த நாட்கள் வெளியே செல்லும்போது அஞ்சலாவையோ கணவனையோ கண்டும் காணாமல் செல்லவாரம்பிக்கிறேன். கணவனும் யாருக்கும் எதுவுமே சொல்வதில்லை என்று கூற நான் வணக்கம் சொல்கிறனான் என்கிறாள் மகள். அதற்கு நான் எதுவும் கூறாது அமைதி காக்கிறேன். நீங்கள் அவர்களைக் கோபித்து என்ன பயன். முதலே சரியாகச் செய்திருக்க வேண்டும். அவர்கள் இந்த நாட்டவர். நாம் வெளிநாட்டவர். சட்டதிட்டத்துக்கு அமையச் சரியாக நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன குற்றம் அம்மா என்கிறாள். என்னிடம் அதற்குப் பதில் இல்லைத்தான். எம் வீட்டுக்கு பின்னால் உள்ள எத்தனையோ வீடுகளுக்கு நாம் கட்டியதிலும் உயர்வான நான்கு மீற்றர் உயரக் கண்ணாடி அறைகள் கூடக் கட்டப்பட்டிருக்க இந்தக் கேவலம் கெட்டதுகள் எரிச்சலில் கவுன்சிலுக்குச் சொல்லியிருக்குதுகள் என்று மனதுள் பொருமியபடி அடுத்த வாரத்துக்காகக் காத்திருக்கிறேன். ஒரு வாரத்தின் பின் வந்த கவுன்சில் பொறியியலாளர் நீங்கள் கூரையை மாற்றவே வேண்டும். உயரத்தைக் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறேன். ஆனால் எல்லாம் சரி என்ற பத்திரத்தை என்னால் வழங்க முடியாது என்கிறார். இந்தளவோடு விட்டாரே என மனதில் நிம்மதி ஏற்பட வேறுவழியின்றிக் கூரை மாற்றிய செலவு 1500 பவுண்டஸ் நட்டமாகியதுதான் மிச்சம் என்று கணவர் புறுபுறுத்ததை கேட்டும் கேளாதாவளாய் இருக்க மட்டுமே முடிந்தது. மாற்றிய கூரையைப் பார்க்கும் நேரம் எல்லாம் பக்கத்து வீட்டின் மேல் வரும் கோபம் மாறாமலே ஒரு ஆண்டு ஓடிப்போக வேலை முடிந்து ஒருநாள் வந்து இறங்கும்போது பக்கத்து வீட்டின் முன் ஆம்புலன்ஸ் நிற்க என்னவாக இருக்கும்என்று யோசித்தபடி உள்ளே செல்கிறேன். அடுத்தநாள் மாலை கடைக்குச் செல்வதற்காக வெளியே சென்றபோது வழியில் அஞ்சலா வந்துகொண்டிருப்பது தெரிய நானாகவே வணக்கம் என்றுவிட்டு யாருக்கு என்ன பிரச்சனை? நீ ஓகே தானே என்கிறேன். அஞ்சலாவின் முகம் சோர்ந்து போய் இருக்கிறது. மார்க்குக்கு நேற்று காட் அற்றாக் வந்து வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றவர்கள். இன்று கண் திறந்துவிட்டார். ஆனால் ஒரு காலும் கையும் இயல்பாக இல்லை என்கிறார். அவருடன் ஆறுதலாகக் கதைத்துவிட்டு வந்தாலும் நீ எனக்குச் செய்ததுக்கு வேணும் என்று என் மனம் எண்ண, அற்ப மகிழ்ச்சிகூட எட்டிப்பார்க்கிறது. அதன்பின் எப்போதாவது மார்க்கை பிரத்தியேக வாகனம் வந்து அழைத்துப்போகும். அதுதவிர வெளியே அவரைக் காணவே இல்லை. ஆனாலும் அஞ்சலாவை சுகம் கேட்பதை நான் நிறுத்தவில்லை. நாம் முதல் முதல் அந்த வீட்டுக்கு வரும்போதே வீட்டின் வாசலுக்கு அண்மையில் மிகப் பெரிய ஊசி இலை இன மரம் ஒன்று நீண்டு நெடிதாய் வளர்ந்திருந்தது. பார்ப்பதற்கு அழகாய் இருந்ததுதான். ஆனாலும் வீட்டுக்கு அண்மையில் இதை ஏன் வைத்தார்கள் என்னும் அளவு அதன் கிளைகள் வாசல் கதவைத் திறக்க முடியாதபடி பெரிதாகிக் கொண்டிருந்தன. நாம் கதவைத் திறந்து உள்ளே செல்லாது அந்த மரத்தை வெட்டுவோமா என்று கதைத்துக்கொண்டு நிற்க, பக்கத்து வீட்டு வெள்ளைக்காரர் ஒரு அறுபது வயதாவது இருக்கும் வணக்கம் என்கிறார். நாமும் வணக்கம் சொல்லி முடிய நீங்கள் தான் இங்கு குடிவருக்கிறீர்களா என்கிறார். ஓம் என்று என் கணவர் தலையாட்ட வாடகைக்கு இருக்கப்போகிறீர்களா என்கிறார் மீண்டும். இல்லை இதை நாம் வாங்கிவிட்டோம். எமது சொந்த வீடு என்று கூறி முடிய முதலே இந்தமரத்தை வெட்டிவிடுங்கள். இதன் வேர் என் வீட்டு அத்திவாரத்தையும் வெடிக்கச் செய்துவிடும் என்கிறார். என்னடா இது வந்து வீட்டுக்குள் செல்லவே இல்லை. இந்த மனிதன் மரத்தை வெட்டச் சொல்கிறதே என்கிறேன். நீயும் வெட்டுவது பற்றிக் கதைத்தாய் தானே. பிறகெதற்கு கிழவனைக் குறை சொல்கிறாய் என்று கணவர் என்னை கடிந்துவிட்டு வெட்டத்தான் வேண்டும். நாம் இன்றுதான் வந்திருக்கிறோம். நிறைய வேலைகளிருக்கு. முடிந்தபிறகு பார்ப்போம் என்று கூறி உள்ளே செல்கிறோம். ஒரு ஐந்து நிமிடங்கள் ஆகவில்லை. கதவின் அழைப்பு மணி அடிக்க யார் என்று பார்த்தால் பக்கத்துவீடுக்காரர் மரம் அரியும் வாள் ஒன்றுடன் நிற்கிறார். நான் கீழே உள்ள கிளைகளை வெட்டிவிடுகிறேன் மிகுதியை நீங்கள் வெட்டுங்கள் என்று சிரித்தபடி கூற, சரி வெட்டுங்கள் என்கிறார் கணவர். நாம் உள்ளே சென்று வேறு விடயங்களைக் கதைத்துவிட்டு வந்து பார்த்தால் மரத்தின் அரைவாசிக் கிளைகள் வெட்டப்பட்டு எம் வீட்டின் முற்றத்தில் குவிக்கப்பட்டிருக்க இனி நீங்கள் வெட்டுங்கள் என்று கூறி வாளையும் எம்மிடம் தந்துவிட்டு அவர் உள்ளே போக, நானும் கணவரும் சேர்ந்து மிகுதியை வெட்டிக் குவித்துவிட்டோம். பக்கத்து வீட்டுக் கணவன் மனைவி இருவரும் வெளியே வந்து இப்போதுதான் வீட்டைப் பார்க்க நன்றாக இருக்கு என்று முகமெல்லாம் பல்லாய் கூறிவிட்டுச் செல்ல நாமும் நல்லதொரு சனம் பக்கத்தில என்று மகிழ்ந்துதான் போனோம். அந்தமரத்தின் கிளைகளை அகற்ற நான்கு தடவை காரில் கொண்டுசெல்லவேண்டி இருந்தது வேறு கதை. அதன் பின் எம்மைக் கண்டால் ஒரு வணக்கம் சொல்வதோடு சரி. அவர்களுக்கு ஏதும் எம் உணவு செய்துகொண்டுபோய் கொடுப்போமா என்கிறேன் கணவரிடம். நாங்கள் குடுக்க, அவை தர எதுக்கு உதெல்லாம் பேசாமல் இரு என்று கணவர் சொன்னது எனக்கும் சரியாகவே படுகிறது. அதன்பின் ஐந்து ஆண்டுகள் வணக்கம் சொல்வதுடனேயே கழிகிறது. நத்தார் தினத்துக்கு இரு வாரத்துக்கு முன்னர் வாழ்த்து மடல் போட, நாமும் திருப்ப அவர்களுக்குப் போடுவதுடன் எங்கள் உறவு நிறைவடைந்துவிடும். மூன்று பிள்ளைகளுடன் இருந்த எமக்கு சமையலறை மிகச் சிறிதாக இருக்க வீட்டைப் பின்புறமாக நீட்டுவதற்கு ஆலோசித்து அந்த வேலைகளில் இறங்க, சைனீஸ் வேலையாட்கள் கூறிய பொருட்களை கடைகளில் ஓடர் செய்ய, அவர்கள் வாகனங்களில் கொண்டுவந்து இறக்குகின்றனர். மரக் குற்றிகள், நீளமான பலகைகள் என்பன வந்து இறங்குகின்றன. அவர்கள் நடைபாதையில் அவற்றை இறக்கி வைக்கின்றனர். சில பலகைகள் ஆறு மீற்றர் நீளம் கொண்டவை, அவை பக்கத்து வீட்டு வாசலைக் கடந்து நிற்கின்றன. இன்னும் சிறிது நேரத்தில் வேலையாட்கள் வந்துவிடுவார்கள். அதன்பின் அவர்கள் இறக்கியவற்றை உள்ளே கொண்டு செல்வார்கள். “நாங்கள் அதை எடுத்துக்கொண்டு போய் உள்ளே வைப்போமா” என்று கணவரைக் கேட்கிறேன். “நீ உன்ர அலுவலைப் பார். அவங்கள் தூக்கி வைப்பாங்கள்” என்று கணவர் சொல்லி முடிக்குமுன்னரே எங்கள் அழைப்புமணி கோபத்துடன் அழுத்துப்பட கணவர் சென்று கதவைத் திறக்க, பக்கத்து வீட்டு மனிதர் தன் வளவில் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நிற்கிறார். “நீயா மணியை அழுத்தினாய்” “ஓம் நான் தான். நீ உடனடியாக உந்தப் பலகைகளை எடு. எனக்கு இடைஞ்சலாக இருக்கு” “உனக்கென்ன இடைஞ்சல்? உன் வீட்டுக்குள்ளா வைத்திருக்கிறோம்” “என் வாசல் வரை வந்திருக்கு. நான் வெளியே செல்லவேண்டும்” “உனக்கு அவசரம் என்றால் கடந்து செல். இன்னும் 10 நிமிடங்களில் வேலையாட்கள் வந்து தூக்குவார்கள்” “நான் போலீசுக்கு போன் செய்யப் போகிறேன்” “தாராளமாகச் செய்” கணவர் கதவை அடித்துச் சாத்திவிட்டு வருகிறார். “என்னப்பா பிரச்சனை” “பக்கத்து வீட்டுக் கிழடு சரியான துவேஷம். மரங்கள் தனக்கு இடைஞ்சலாம். உடனே தூக்கு என்கிறது” “அதுக்குத்தான் நான் முதலே நாங்கள் தூக்குவம் என்றனான்” “நீ உன்ர அலுவலைப் பார். அவர் போலீசுக்கு அடிக்கமாட்டார். எங்களை வெருட்டுறார்” “இத்தனை ஆண்டுகளாய் இருக்கிறம். ஒரு சத்தம் கூடப் போட்டதில்லை. அடிமனதில் நாங்கள் கறுப்பர் எண்டது உதுகளுக்கு இருக்கு. அதின்ர வெளிப்பாடுதான் இது” “சரியப்பா டென்ஷன் ஆகாமல் பெல் அடிக்குது. திரும்பக் கிழவன்தானோ தெரியேல்லை. போய் கதவைத் திறவுங்கோ” அடுத்தநாள் காலை நான் வேலைக்குச் செல்ல வெளியே வர, நான் எப்ப வருவேன் என்று பார்த்துக்கொண்டு இருந்ததுபோல் பக்கத்துவீட்டுப் பெண் கதவைத் திறந்து வணக்கம் என்கிறார். அவருக்கும் வயது ஒரு ஐம்பத்தைந்து அறுபது இருக்கலாம். குறை நினைக்காதை டியர். என் கணவர் கொஞ்சம் முசுடு. நேற்று அப்படிக் கதைத்துவிட்டார். மன்னித்துக்கொள் என்கிறார். எனக்கு உடனே மனது இளகிப்போக அதனால் என்ன. நாம் எதுவும் நினைக்கவில்லை என்று கூற அஞ்சலாவின் முகம் மலர்ந்துபோக நான் பாய் என்றுவிட்டுக் காரில் ஏறுகிறேன். அதன்பின் என் கணவர் பக்கத்து வீட்டுக்காரருக்கு வணக்கம் எதுவும் சொல்வதில்லை. ஆனால் என்னை கண்டால் அவர் வணக்கம் சொல்ல நானும் சொல்வேன். அஞ்சலாவைக் கண்டால் மட்டும் நின்று கதைபேன். அவவும் நானும் பிள்ளைகளின் படிப்பு என் வேலை இப்படி இரண்டு மூன்று விடயங்களைக் கதைத்துவிட்டு போய்விடுவோம். நாம் மூன்று பிள்ளைகள் என்பதால் வாரத்தில் இரு நாட்கள் உடைகளைத் துவைத்துக் காயவிடுவோம். கோடை காலங்களில் வெளியே போட்டால் அன்றே காய்ந்துவிடும். குளிர் காலத்தில் வீட்டின் உள்ளே இரண்டு நாட்கள் எடுக்கும். கொடி முழுவதும் எம் ஆடைக்களால் நிரம்பி வழியும். ஆனால் அவர்கள் வீட்டில் இரண்டு மூன்று ஆடைகளே காயப்போட்டிருக்கும். பணத்தை ஏன் இப்படிமிச்சம் பிடிக்கின்றனர். வெள்ளைகள் வாழ்வை நன்றாகத்தானே அனுபவிக்கின்றனர். இவர்கள் மட்டும் ஏன் இப்படி என்று எண்ணிக்கொள்வதோடு சரி. கேட்பதற்கு முடியவில்லை. நாம் ஒருதடவை நானும் கணவரும் கிரேக்கத்துக்குச் சென்று வந்தபோது எம்மைக் கண்ட அஞ்சலா “ஓ விடுமுறைக்குச் சென்று வருகிறீர்களா” என்றுமட்டும் கேட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அடுத்த நாள் என்னைக் கண்டபோது எங்கே சென்றீர்கள்? என்றார். நான் கிரேக்கம் என்றதும் வாயைப் பிளந்தபடி பயமின்றிப் போய் வந்தீர்களா என்றார். நீங்கள் அங்கு சென்றிருக்கிறீர்களா? மிக அழகிய இடம். எந்தப் பயமும் இல்லை என்கிறேன். நான் லண்டன் நகருக்கே இதுவரை சென்றதில்லை. என் கணவருக்கு எங்கு செல்வதும் பிடிக்காது என்றுகூற எனக்கு நம்பமுடியாததாக இருக்கிறது. கோடை மாரி குளிர் வெயில் என்று காலங்கள் எத்தனை விரைவாகச் சென்றுவிட்டன. *********************************** நாம் லண்டன் வந்து பதினெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டதை நம்பத்தான் முடியாமல் இருக்கு. பதினெட்டு ஆண்டுகளா என்னும் மலைப்போடு பல யுகங்கள் ஆகிவிட்டதான ஆயாசமும் சேர்ந்துகொள்கிறது. இத்தனை ஆண்டுகளில் பக்கத்து வீட்டுக்கு ஒருநாள் கூட நாங்கள் போக முடியவில்லையே என்னும் ஆதங்கம் மனதில் ஏற்படுகிறது. சில நண்பர்கள் அயல் நாட்டுப் பக்கத்து வீட்டாரைப் பற்றிச் சொல்லும்போது எமக்கும் ஒரு நல்ல நட்பான பக்கத்து வீடு அமைந்திருக்கலாமோ என்னும் எண்ணம் எழும். நாம் மட்டும் எல்லோரோடும் நட்போடுதான் பழகினோமா என்னும் கேள்வியும் கூடவே எழும். பிடித்தவர்களுடன் மட்டும்தானே நெருக்கமாகினோம். எமது பக்கத்து வீட்டாருக்கும் எமக்கும் நல்ல பொருத்தங்கள் இல்லைபோல என நானே என்னை ஆற்றிகொள்கிறேன். ஒருநாள் அவர்கள் வீட்டுக்கு இரண்டு மூன்று வெள்ளை இனத்தவர் வந்துபோக ஏதும் விசேடமாக இருக்குமோ என்று எண்ணியபடி செல்கிறேன். மூன்றாவது வீட்டில் வசிக்கும் ஆபிரிக்கப் பெண்மணி எப்பவாவது கண்டால் நின்று கதைப்பார். அன்று கண்டவுடன் மார்க் எப்படி இறந்தார் என்று கேட்கிறார். இறந்துவிட்டாரா? எனக்கு இதுவரை தெரியாதே என்கிறேன். நேற்று இரவு நான் வேலை முடிந்து வந்தபோது அம்புலன்சில் ஏற்றினார்கள். முகத்தை மூடியிருந்தது. அதனால்தான் கேட்டேன் என்கிறார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஊரில் என்றால் ஒருவர் இறந்தால் அடுத்தமணியே அனைவருக்கும் தெரிந்துவிடும். பக்கத்து வீட்டில் இருந்தும் எனக்குத் தெரியவில்லை என்பது வெட்கமாகவும் குற்றஉணர்வாகவும் இருக்க கணவருக்குப்போன் செய்கிறேன். கணவர் போனை எடுக்கவில்லை. அஞ்சலாவின் வீட்டுக் கதவைத் தட்ட அவரே வந்து திறக்கிறார். “நான் மார்க் பற்றிக் கேள்விப்பட்டேன்” “ஓ நேற்று மாலை இறந்துவிட்டார். இரவு ஏழு மணிவரை வீட்டில் வைத்திருந்தோம். அதன்பின் கொண்டுசென்றுவிட்டார்கள்” “ஏலாமல் இருந்தாரா” “ஆறு மாதங்கள் படுத்த படுக்கைதான். ஒரு நர்ஸ் வந்து பார்த்துவவிட்டுச் செல்வார். எனக்கு அவரை கோமில் கொண்டுபோய் விட விருப்பம் இல்லை. என் பிள்ளைகள் பலதடவை சொன்னார்கள்” “உனக்குப் பிள்ளைகள் இருக்கின்றார்களா??” “ஓம் இரண்டு ஆண் பிள்ளைகள். ஒருவன் திருமணமாகி மான்சஸ்ரரில் இரண்டு குழந்தைகளுடன் இருக்கிறான். மற்றவன் திருமணம் செய்யவில்லை. அவனும் தூரத்தில்த்தான்.” “நான் அவர்களை ஒருநாளும் கண்டதில்லையே” “அவர்களுக்கு எங்கே நேரம். கடைசி மகன் அப்பப்ப வந்துவிட்டுப் போவான். அவனுக்கும் தகப்பனுக்கும் சரிவாராது” “அவர்கள் வந்திருக்கிறார்களா?” “இல்லை நாளைதான் வருவார்கள்” “தனியாகத்தான் வீட்டில் இருக்கிறாயா? யாரும் துணைக்கு இல்லையா?” “இல்லை எனக்குப் பழகிவிட்டது” “உனக்கு உணவு ஏதும் கொண்டுவந்து தரட்டுமா??” “வேண்டாம், வேண்டாம். என்னிடம் உணவு இருக்கிறது” “ஏதும் தேவை என்றால் என்னைக் கூப்பிடு” “நன்றி தேவை என்றால் அழைக்கிறேன்” வீட்டுக்கு வந்தபின் மனதில் எதுவோ அடைத்ததுபோல் இருக்க அஞ்சலா என்னை வீட்டுக்குள் வா என்று அழைக்காததும் மனதை எதுவோ செய்ய மனிசிக்கும் என்ன பிரச்சனையோ என்று மனதைத் தேற்றிக் கொள்கிறேன். ஒரு வாரத்தின் பின் மார்க்கின் மரண வீடுக்கு நானும் கணவரும் சென்றிருந்தோம். எல்லோருடனும் கை குலுக்கிய பிள்ளைகள் எம்முடனும் அடுத்த வீட்டு ஆபிரிக்கப் பெண்ணிடமும் கை குலுக்காததை கவனித்தபின் மனதில் சிறிது ஆசுவாசம் ஏற்பட்டதுதான். ஒரு மாதம் செல்ல மீண்டும் இலைதளிர் காலத்தில் கடைசி மகன் தாயுடன் வசிக்க வந்துவிட பக்கத்து வீட்டில் பேச்சும் சிரிப்புமாக அஞ்சலாவின் வாழ்கை மாறியிருந்தது. கொடிகளில் விதவிதமாக அழகிய ஆடைகள் காய்ந்தன. எழுபத்தைந்து வயதான முகத்தில் ஒரு பளபளப்பும் மலர்ச்சியும் தெரிந்தன. கிழவியைப் பாத்தியே. விதவிதமாய் உடுப்புப் போடுது என்று கணவர் நக்கலாகக் கூற எனக்குக் கோபம் வருக்கிறது. அந்தக் கிழவன் சரியான அடக்குமுறையாளனாகத்தான் இருந்திருக்க வேண்டும். இப்பவாவது அந்த மனிசி தன் ஆசைப்படி வாழட்டுமன். உங்களுக்கு அதில் என்ன நட்டம் என்கிறேன். கடந்தவருடம் இலங்கை சென்று ஆறு மாதங்களின் பின் தான் நான் திரும்பி வந்தேன். அடுத்தநாள் நான் வெளியே செல்ல என்னைக் கண்ட அஞ்சலா “ஓ டியர் உன்னை இத்தனை நாள் நான் காணவில்லை. எங்கே சென்றாய், உனக்கு ஏதும் ஆகிவிட்டதோ என்று நான் பயந்துவிட்டேன்” என்றபடி கட்டியணைக்க நான் திக்குமுக்காடிப்போய் பேச்சற்று நிற்கிறேன்.
  6. இந்த ஆரியர் குளத்தை திருத்தும்போது நான் நிறைய இடங்களில் கண்டனம் செய்திருக்கிறேன் காரணம் யாழ் மாநகரசபைக்கு அப்படி எதையும் தொடர்ந்து பராமரிக்கும் வளமோ அல்லது தொழில்நுட்ப அறிவோ அறவே இல்லை என தவிர அங்கு அதிகாரிகள் உட்பட தொழிலாளர் வரைக்கும் அசமந்தப்போக்குடன் நடப்பவர்கள் தைவிடக் கேவலம் யாழ் குடாநாட்டில் அதுவும் யாழ் மாநகர சபை எல்லைக்குள்ளும் அதன் சுற்றுப்புறங்களிலும் வதிவோர் கொஞ்சமேனும் சமூக அக்கறை இல்லாத கூட்டம். யாழ் பேரூர்ந்து நிலையத்தைச் சுற்றி நடக்கும் அக்கிரமமும் குற்றச்செயல்களும் சொல்லி மாளாது. இப்போது இருக்கும் கார்கிள்ஸ் பூட்சிற்றிக்கு அருகாமையில் வெளியூர் செல்வதற்காக ஒரு தரிப்பு நிலையம் கட்டினார்கள் ஆனால் நாங்கள் அங்கு வண்டிகளை நிறுத்தமாட்டோம் என தனியார் மற்றும் அரச போக்குவரத்தாளர்கள் அடம்பிடிக்கிறார்கள்.
  7. இன்றைய தினம் பிறந்த நாள் காணும் ஏராளனுக்கு உடல் உள நலனை இறைவன் தர வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் ( இந்தக் காலண்டரை யாரோ ஒளிச்சு வைத்து விடடார்கள். யாருக்கு எப்ப பிறந்த நாள் என்று பார்க்க முடியாமல் இருக்கு )😃
  8. இந்த ஆரிய குளம் புனரமைக்கப்பட்ட போது, நாக விகாரைக்கு வரும் சிங்கள யாத்திரிகர்கள் வந்து இளைப்பாறுவதற்கே மேயர் மணிவண்ணன் இதை புனரமைக்கிறர் என்று வசைபாடி பேட்டி கொடுத்து தனது இனவாதத்தை கக்கினார் கஜேந்திரகுமார். இன்று பராமரிப்பின்றி குளம் மீண்டும் அசுத்தமடையும் போது எந்த தமிழ் அரசியல்வாதியோ தமிழ் தேசியம் பேசும் எவரோ கவலைப்பட்டப் போவதில்லை. அதை திரும்பிக்கூடப் பார்க்கப போவதில்லை யாராவது அரச ஆதரவுடன் இதை மீண்டும் புரனமைத்து பரமரித்தால் மீண்டும் தமது இத்துப்போன அரசியலுடன் அதனை வசைபாடி அவருக்கு துரோகிப்பட்டம் கொடுக்க வருவார்கள்.
  9. அடிப்படையே தெரியாமல் தான் வாழ்ந்து வருகிறீர்கள் போலும். கையில் கொண்டு போபவை எல்லாம்.. நேரடியாகவும்.. உதிரப்படும் பிரதான பெரிய பொதிகள் ஸ்கான்.. உட்பட பல்வேறு சோதனைகளுக்கு அப்புறம் தான் விமானத்தில் ஏறும். இதில் எயார்லைனின் பங்களிப்பும் உள்ளது. ஆக.. இந்த துப்பாக்கி ஒன்றில் பிரித்தானியாவில் அனுமதி பெற்று பிரதான பொதியில் கொண்டு செல்லப்பட்டிருக்கும். சொறீலங்காவில் ஸ்கான் செய்து பொதிகள் வெளியே விடப்படும் பொறிமுறை இருந்தால்.. அல்லது பிரித்தானியாவில் இருந்து அறிவிக்கட்டிருந்தால்.. சொறீலங்கா.. ஆட்கள் காசுக்கு இவரை பிடிச்சு வெருட்டி இருக்கலாம். அவர் மசிய மாட்டார் என்றால்.. உடனடியாக.. சொறீலங்கா.. புலனாய்வுத்துறையிடம் கையளிப்போம் என்று வெருட்டு. அப்படி நிகழ்ந்திருக்கவே வாய்ப்பிருக்குது. ஏனெனில்.. ஒரு பயணி என்னென்ன பொருட்களோடு பயணிக்கிறார் என்பது எயார் லைன்சுக்கு தெரியும்.
  10. அது பழைய காலம் சாமியார் ஆனாலும் விசா இல்லாதவர் கூட ஒரு மணி நேர விமான சுத்திகரிப்பு வேலையில் ஏஜென்ட் மூலம் வருகிறார்கள் அதில் பிளாக் லிஸ்ர்ரில் உள்ள நாடுகளை சேர்ந்தவர்களும் வருகிறார்கள் ஏதோ ஒரு நாள் பிரச்சனை வெடிக்கும் ஆனலும் பாதுகாப்பு ஐந்தடுக்கு உள்ளபடியால் அமைதியாக போகுது . இது ஒரு செட்டப் ஆக இருக்கலாம் கொஞ்சம் வெயிட் பண்ணுவம் .
  11. இது உங்க வீடாக்கா, அல்லது இந்த படம் எங்காவது சுட்டதா. காலம் கெட்டு கிடக்கு நீங்கவேற. சொந்த வீட்டு படத்தை இணையத்தில இணைக்கிறது உங்க விலாசத்தை கொடுக்கிறதுக்கு சமனானது. நான் உங்க இடத்தை சேர்ந்தவன் கிடையாது ஆனாலும் இந்த படத்தை வைச்சு நீங்க இருக்கிற இடத்தை என்னால் சொல்ல முடியும். இனிமேல் பாத்து பண்ணுங்கக்கா.
  12. 54 வயது இங்கிலாந்துப் பிரஜை என்டோன்ன வெள்ளை போல என்று நினைத்தால் கொம்பனி பொறுப்பில்லை. யாராவது, தீவிர தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டிருந்த ஒருத்தரை, உள்ளுக்கு போட்டு, அவரது இயக்கத்தை தடுக்க, இது, புனையப்பட்டிருக்காலம். ஹீத்ரோ விமான நிலையத்தில், டெர்மினல் 5 பிராஜெக்ட் ஒன்றில் வேலை செய்திருப்பதால், உள்ளே, கன்வேயர் பெல்ட் எப்படி இயங்குகிறது என்று, எமது மென்பொருள் பிராஜெக்ட் டீம் போய் பார்த்தது. மனிதர்கள் பரிசீலனை செய்வதிலும், மென்பொருள், ஸ்கேன் பக்காவாக பிடித்து விடும். மேலும், விமான நிலையங்களில் உள்ள பலவீனங்களை கண்டறிய, அரச, ரகசிய அனுமதியுடன், சிலர் துப்பாக்கி, கைக்குண்டுகள் கொண்டு போய் அவ்வப்போது பரிசோதனை செய்வார்கள். இது, என்ன கதை என்று விரைவில் தெரியவரும்.
  13. அவங்களுக்கு புத்தம் என்றால் தமிழனை கொலை செய்வது என்பது மட்டுமே தெரிந்த ஒன்று தயவு செய்து சிங்களவர்களை நல்லவனாக்கி விடாதிர்கள் 2௦௦9 பால்சோறு தின்றவர்களுக்கு படியளக்கனும்காலம் காத்து கொண்டு இருக்குது .
  14. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ அறிமுகவுரை இந்த ஆவணக்கட்டில் ஈழத் தமிழர்கள் மீது இலங்கை முஸ்லீம்; 1988 ஏப்ரல் 19ம் திகதி இவர்களை 'முஸ்லிம்கள்' என்ற தனி இனக்குழுவாக விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொண்டனர் (LTTE-Muslim Accord, the satanic force, பாகம்- 1, பக்கம்: 747); ஊர்காவல்படை மற்றும் ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் மாத்திரமே ஒருமுகப்படுத்தப்பட்டு பதிவுசெய்யப்படும். முஸ்லிம்கள் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்டதென்று (புலிகள் மறுத்துள்ள போதிலும்) அவர்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவை குறித்து எதுவுமே பதிவிடப்படாது என்பதையும் முன்கூட்டிய பறைந்துகொள்கிறேன். இதைத் தொகுப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று, இலங்கை முஸ்லிம்கள் எப்பொழுதும் தம்மால் எழுதப்படும் கட்டுரைகளிலும் புத்தகங்களிலும் தமது தரப்பால் தமிழர் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் அனைத்தையும் வேண்டுமென்று மறைத்தே தமிழர் தரப்பு மீதான கொலைப் பழிகளை விரிப்பர். அவ்விரிப்புகளில் நல்லபிள்ளை வேடமிட்டு தாம் முதலில் தமிழரைத் தாக்கவில்லை என்பது போன்றும் தமிழரே சும்மா இருந்த தம்மைத் தாக்கினர் என்பதான தோற்றப்பாட்டையும் உண்டாக்கியிருப்பர். அதாவது மெய்மைக்கு மாறாக பொய்யான தோற்றப்பாட்டை உண்டாக்கியிருப்பர். மேலும், அதில் தமிழர் தரப்பு மீது குற்றஞ்சாட்டப்பட்ட கொலைகள் ஏற்படுவதற்கு வழிவகுத்த தம்மால் தமிழருக்கு ஏவல்செய்யப்பட்ட படுகொலைகள் குறித்து கிஞ்சித்தும் எழுதியிரார். ஆகவே காலம் காலமாக இருந்துவந்த இந்த முஸ்லிம் பக்கம் மட்டும் நியாயம் கேட்பு என்பதற்கு மாறாக தமிழர் தரப்பின் நியாயப்பாடுகளையும் எடுத்துரைக்க இவ் ஆவணக்கட்டு முயலும். மேலும் தமிழர் தரப்பும் இதுநாள் வரை வீரியமாக சிங்களவரின் படுகொலைகளை ஆவணப்படுத்தியது போல் முஸ்லிம்களின் அட்டூழியங்களை ஆவணப்படுத்த சிரத்தை எடுத்ததில்லை என்பது எம்தரப்பின் வலுவீனமே. ஆகவே அக்குறையினை போக்கும் படியாகவும் தமிழர் தரப்பு அனுபவித்த கொடுமைகளை எடுத்துரைக்கவும் இவ்வாவணக்கட்டு எழுதப்படுகிறது. இதில் எனது சொந்த எழுத்தாக ஆதாரங்களின் துணையோடு எழுதியிருப்பது "முன்னுரை" மாத்திரமே. மேற்கொண்டு பதிவிட இருப்பவை எல்லாம், பல்வேறு நம்பகமான வலைத்தளங்கள், மாதயிதழ்கள், நாளேடுகள் மற்றும் சில குறிப்பிட்ட பன்னாட்டு அமைப்புகளால் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள், ஊர்காவல்படை, & காடையர்கள் பற்றியும் அவர்களால் ஈழப்போர் காலத்தில் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் பற்றியும் வெளியிடப்பட்ட கட்டுரைகள், செய்திகள் மற்றும் அறிக்கைகள் ஆகியவையே ஆகும். சுருகங்கச் சொல்லின் ஒரு தொகுப்பாக இருக்கும். இவ் ஆவணக்கட்டானது தொடர்ந்து என்னால் இற்றைப்படுத்தப்பட்டு எமது தமிழ் தேசத்திற்கு இலங்கை முஸ்லிம்களின் இனவெறியால் ஏவல்செய்யப்பட்ட அட்டூழியங்கள் தொடர்பான ஒரு பாரிய வரலாற்றுப் பேழையாக, அடுத்தடுத்த தலைமுறைகளின் வரலாற்று அறிவுப்பெட்டகமாக பேணப்படும். *****
  15. போராளியின் இறுதி வெடி ! எல்லாம் முடிந்துவிட்டது. முன்னால் கடல் பின்னால் நிலம். இதுதான் நான் இறுதியாக காணப்போகும் விடியும் வானம். நிலம் பூராவும் எதிரிகள். கந்தகமணம். சிறு பற்றைகள். அவற்றுக்கப்பால் நம் நிலம்பூராயும் எதிரிகள். எதிரிகள் பேசும் சத்தம் கேட்கிறது.வானம் வெளித்ததும் அவர்கள் முழுமையாக பிடித்துவிடுவார்கள். சிலவேளை இறுதியாய் இருப்பது நாம் இருவராக இருக்கலாம். எங்கள் தரப்பின் துப்பாக்கி வேட்டுகள் பூராகவும் ஒய்ந்துவிட்டது. திடீரென ஏற்பட்ட புவி அதிர்வில் உதிர்ந்த கோட்டைபோல் ஆகிவிட்டது எங்கள் தேசம். அருகே கபிலன். அவன் கட்டாய ஆட்சேர்ப்பில் வந்த பிள்ளை. ஆனால் கடைசிவரை என்னோடு வந்துவிட்டான். நீ போய்விடு என்றால் அடம்பிடித்துவிட்டான். என்னோடு ஒரு வருடமாகத்தான் இருந்தான். சரணடைய மறுத்தே விட்டான். எத்தனையோ போராளிகளை சந்தித்தேன். இவன் வாழ வேண்டிய பிள்ளை. ‘அண்ண உங்களுக்கு என்ன முடிவோ அதுவே எனக்கும் என்கிறான்.’ கபிலன் அறிவான பிள்ளை. ஒரு முழுமையான போராட்ட வாழ்வில் என் இறுதி கணம் கபிலன் அருகில் முடியப்போகிறது. எம்மை உயிரோடு எதிரி பிடிக்க முடியாது. இரண்டு குப்பிகள், இரண்டு கைத்துப்பாக்கி. இதுபோதும். நளாவும் வீரச்சாவு என்று அறிந்தேன். முக்கியமான அந்தத்தாயுடன் சேர்ந்து நளா வெடித்துச்சிதறிவிட்டாள். பிள்ளைகளோடு எவ்வளவு பிரியமாக இருந்தாள் ? அவளால் இதை எப்படிச்செய்ய முடிந்தது ? அவள் தியாகங்களுக்கு உலகில் உதாரணம் கிடையாது. தாயை விட்டுவிட்டு போர்க்களம் சென்ற பிள்ளைகள் இருந்தார்கள். தன் குழந்தைகளை விட்டுவிட்டு களமுனை சென்று வெடிக்கும் தாயை யாரும் அறிந்ததுண்டா ? தன் வீரச்சாவவைக்கூட மக்கள் அறியார் என்று தெரிந்தும், போராட்டம் இன்றோ நாளையோ வீழ்ந்துவிடும் என்று அறிந்தும் அவள் தன் மண்ணுக்காக வீழ்ந்தாள். அவளை இந்த இறுதி நேரத்தில் நினைக்கவேண்டும். என் மனம்போல இருந்தாள். பிள்ளைகளை உறவுகளுடன் விட்டுவிட்டு களமுனையில் கடைசிவரை நின்ற தாயாக நளா இருப்பாள். அது யாருக்கும் தெரியாமல் இருக்கும். இப்போது நடக்கும் எந்தக்காவியத்தையும் சொல்பவர்கள் உயிரோடு இருக்கப்போவதில்லை. நானே ஒருமுறை , ‘நீ பிள்ளைகளோடு வெளியேறு’ என்றபோது, மறுத்துவிட்டு கோள்சறோடு களமுனை சென்றாள். அன்பு நளா ! உன் திண்மை என்னிடம் இல்லை. உனக்கு என் நன்றி. நான் போராளியாக மட்டும் இருந்தேன். நீ தாயாக, போராளியாக, மனைவியாக.. என் விழுப்புண்கள் வலிதரும்போது தாதியாக.. உன் மனபலம் எந்த இரும்பையும் நொருக்கும். எந்த வலியையும் தாங்கும். நான் வலியால் துடிக்கும்போது ‘ஒருதளபதி இப்படி துடிப்பதா’ என்பாய். ஒருபோதும் உனக்கு வலித்தபோதும் நீ துடித்ததில்லை. எத்தனை மகத்தான துணையாக இருந்தாய் ? உன் உடல் எங்கு சிதறியதோ நானறியேன். ஆனால் இந்த நிலத்தில் மிக அருகில் எங்கோ வெடிகுண்டு கட்டி வெடித்தாய் என்பது மட்டும் தெரியும். சூரியன் வரமுதல் உன்னை என் ஆன்மா சந்திக்கும். மறுமுறை பூரணவாழ்வு கிடைத்தால் உன்னோடு வாழவேண்டும். நாம் குறைந்த நாட்கள் வாழ்ந்து, நிறைய நாட்கள் போராளியாக இருந்தோம். ஓ.. என் பிள்ளைகள் ! ஆகரன் ! சிந்துசை ! நீங்கள் இப்போது வவுனியா அகதி முகாமில் இருப்பீர்கள். என் பிள்ளைகள் என்று இராணுவம் கண்டுபிடிக்காமல் இருக்கவேண்டும். நீங்கள் கேட்ட பரிசுப்பொருட்களை தமிழீழம் கிடைத்தததும் வேண்டித்தருவேன் என்றேன். உங்கள் அடிமைப்பட்ட இனத்தின் தந்தையால் அதை செய்ய முடியவில்லை. என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். ஆனால் அப்பாவையும், அம்மாவையும் நினைத்தபடியே இருப்பீர்கள். உங்களை அனாதையாக்கி விடப்போகிறோம். இந்த பாவப்பட்ட பெற்றோரை பற்றி என்ன நினைப்பீர்களோ தெரியவில்லை. எப்போதும் உங்களை பேரன்போடு வருடும் உங்கள் அம்மா நேற்று மாலை இறந்துவிட்டார். உங்கள் அப்பா இன்னும் சிறிய நேரத்தில். அப்பா, அம்மாவின் கனவுகளை மறக்க மாட்டீர்கள். எப்படியும் உங்களை என் தம்பி லண்டன் அழைத்துவிடுவான். நீங்கள் உறுதியோடு வளருங்கள். நம் மக்கள் உங்களை கைவிட மாட்டார்கள். அந்த நம்பிக்கையில்தான் நாம் போகிறோம். ஓ.. எத்தனை தியாகங்கள் ? எத்தனை உயர்த வீர புருசர்கள் ? எத்தனை தியாகங்களால் தேசம் உருவானது. இதோ.. இதோ.. எல்லாம் முடியப்போகிறது. இந்த முடிவு வேறொன்றின் தொடக்கம் ஆகலாம். ஆனால் இந்த உலகு அதர்ம அச்சிலே சுழல்கிறது. அதை மாற்றும் மனிதன் வருவான். காலம் எல்லாவற்றையும் உருவாக்கும். இந்தப்போராட்டம் உயிர்களை கொல்லத்தோன்றியதில்லை. கொலைகளை நிறுத்தத்தோன்றியது. அவர்கள் தமிழர்களை தேடித்தேடி வேட்டையாடியபோது விரும்பா பிறப்பாகத்தானே பிறந்தது. இத்தனை இளைஞர்களின் உயிர்களும் இந்தத்தோல்விக்காகவா கொடுக்கப்பட்டது ? இத்தனை இறப்புகளும் நம் விடுதலைக்காகவே விதைக்கப்பட்டது. எப்படி இது தோற்றது? காலம் ஆராய்ந்து கருத்திடட்டும். அது காலத்தின் வேலை. நான் நம்மக்களுக்காக உண்மையாய் இருந்தேன். இந்த மரண நொடிவரை. என்னைப்போலவே உயிர் கொடுத்த என் வீரர்களும். இது நம் கடன். அதை நாம் தவமாக செய்தோம். இங்கினியாகலையில் காடையர்கள் 150 இளைஞர்களை வெட்டியதில் ஆரம்பித்தார்கள். அதன்பின் எத்தனை கொலைகளை மக்கள் சந்தித்தார்கள். ? ஆண்டாண்டு காலம் வாழ்ந்த எங்கள் மண்ணில் எங்கள் மக்கள் முப்பது ஆண்டுகளாக துரத்தப்பட்டும், கொல்லப்பட்டதால்தானே ஆயுதம் ஏந்தினோம். ! அன்று அந்தக்கொலைகளை தடுத்திருந்தால் இந்த கொலைத் தொழிலை நாம் விரும்பி ஏற்றிருப்போமா ? எனக்கு அந்த நாள் நினைவுக்கு வருகிறது.. வவுனியா எல்லைக்கிராமத்தில் நாம் இருந்தோம். எப்போதும் பதட்டத்துடனே ஐயா, அம்மா இருப்பார்கள். காடையர்கள் எப்போது வருவார்கள் ? வந்தால் மொத்த உயிரும் சிரச்சேதம் செய்யப்படும் என்று தெரியும். எமக்கு பாதுகாப்பென்று அன்று யாருமில்லை. நம்முயிரை எப்போதும் பறிக்கும் உரிமை சிங்களக்காடையருக்கு இருந்தது. முதலில் எனக்கு ஏன் இப்படி நடக்கிறது ? மனிதர்களை மனிதர்கள் கொல்ல எப்படி முடிகிறது ? சிங்களவர்களுக்கு நாம் என்ன செய்தோம் ? என்று புரியவில்லை. ஒருநாள் அருகே இருந்த கிராமத்தில் புகுந்து வெட்டிவிட்டு சென்றுவிட்டனர். அம்மா கண்ணீரோடு இருந்தார். அப்போதுதான் அம்மாவிடம் ‘ஏன் அம்மா சிங்களவர் எம்மை கொல்கிறார்கள் ? ’ என்று கேட்டேன். அம்மாதான் கொலைகாலக்கதைகளைச்சொன்னார். என் மனமெங்கும் வேதனையும், கொடும் கோபமும் இருந்தது. இதற்கு சிறுவனான என்னால் எப்படி தடுக்க முடியும் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டிருந்தேன். இந்தச்சம்பவம் நடைபெற்று சரியாக ஒருமாதம் கழிய எம் கிராமம் தாக்கப்பட்டது. என் அப்பா படுகாயத்தோடு தப்பியிருந்தார். மாட்டுப்பட்டவர்கள் வீடுகள் கொழுத்தப்பட்டு தலைகளை வேலிகளில் குத்திவிட்டு சென்றனர். பள்ளிக்கூடத்தால் வந்த எனக்கு கிடைத்த காட்சி மனிதத்தலைகளும், எரிந்த வீடுகளும். எங்கள் வீடும் எரிந்திருந்தது. முதல்நாள் என்னோடு விளையாடிய பத்துவயதான சிவதாசன் தலை வேலியில் குத்தப்பட்டிருந்தது. பிள்ளைத்தாச்சியாக இருந்த வக்சலா அக்காவின் வயிறு கிளிக்கப்பட்டு சிசுவை எடுத்து தடியில் குத்தி வைத்திருந்தார்கள். ஆண்களின் உடலங்கள் அங்கம் அங்கமாக வெட்டப்பட்டிருந்தது. இந்தக்காட்சிதான் என்னை ஆயுதம் ஏந்த தள்ளியது. வன்னியில் மாத்தையா அண்ணரின் தொடர்புள்ளவர்களோடு தொடர்பை கடுமையான பிரயத்தனத்தில் ஏற்படுத்தி புலிகள் இயக்கத்தில் இணைந்தேன். எனது நோக்கம் எங்கள் மக்களை காப்பதே. அதைவிடுத்து எந்த மாற்றமும் என்னிடம் இருந்தால் மரணம்தான். என்று நானே முடிவெடுத்திருந்தேன். இயக்கத்தினுள் நடந்த சூறாவளிக்காலத்தில் என் மனம், உடல் வதங்கியகாலம். என் விரல் நகங்கள் பிடுங்கப்பட்டபோதும் நான் உண்மையான என் கனவில் உறுதியாக இருந்தேன். போராட்டம் என்பது எவ்வளவு கடுமையானது என்பதை சொல்லித்தந்தது அந்த நாட்கள். உயிரையும் கொடுத்து காக்க வேண்டியவரே தவறு செய்திருந்தால் உங்களால் என்ன செய்யமுடியும் ? எந்த நிலையிலும் இறுதிவரை களமுனையில் போராடிச்சாவதே என் நோக்கம். நான் பார்த்த இனக்கொலைக்காட்சி எப்போதுமே என் மனதில் இரும்புத்திரையாக நிற்கும். அதனாலே உறுதியோடு இருந்த என் நிலையால் 1994 இல் மீண்டும் இயக்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டேன். அதைவிட கொடுமையான காலத்தை நான் சந்தித்ததில்லை. இதோ இப்போது நாம் முற்றாக அழியும் நிமிடங்களானாலும் நாம் நம் மக்களுக்காக இறக்கின்றோம் என்ற நிம்மதி உண்டு. போராடப்புறப்பட்டவர்களின் ஆசைகளால் ஏற்படும் தவறுகளால் இழந்த உயிர்களும், தவறும் இலட்சியச்சியத்தை விட கொடிய விசம் வேறொன்றுமில்லை. எந்தச்சூழலிலும் என்கிராமத்தில் நான் கண்ட காட்சிதான் எத்தடையையும் தாங்கி இந்த மக்கள் இலட்சியத்தில் என்னால் இந்த நிமிடம்வரை நிற்க முடிந்தது. எங்கள் மக்களுக்கு என்ன சொல்வது ?! உங்கள் இயக்கம் உங்களை விட்டுப்போகிறது. உங்களில் இருந்துதோன்றிய இந்த வீரர்களில் சில தவறுகளும் பல தியாகங்களும் நிகழ்ந்தன. எந்த சமூக அமைப்பிலும் குழப்பமானவர்கள் இருப்பார்கள். அவர்களின் செயல்களால் உங்களுக்காக உயிர்கொடுத்த அந்த உன்னதங்களை மறந்து விடாதீர்கள். உங்களை மீண்டும் ஒரு அனாதை நிலையில் விட்டுவிட்டு நாம் செத்துப்போகிறோம். நீங்கள் பட்ட துயர்களுக்கு உண்மையானவர்கள் உண்மையாக இறுதிவரை போராடினோம். எங்களை மீறிய முட்கள் உங்களை குத்தியதை நாம் அறிவோம். உங்களின் நல்வாழ்வுக்காக உண்மையோடிருந்த உங்கள் பிள்ளைகளின் ஏக்கங்கள் ஒருநாள் உங்களுக்கு நிம்மதியான வாழ்வைத்தரும். நீங்கள் ஒற்றுமையாக காத்திருங்கள். உங்கள் பிள்ளைகளை அறிவானவர்களாக வளர்த்தெடுங்கள். வரலாறு உங்கள் கைகளில் ஒருநாள் வந்துசேரும். மனிதனை மனிதன் கொல்வது கொடிது. இந்த கொடிய காலம் எங்கள் கரங்களில் திணிக்கப்பட்டது. கொலைவெறியற்ற சிங்களம் உருவானால் மட்டுமே தமிழர்கள் பாதுகாப்பாக வாழமுடியும். அதன் வழிமுறைகளை கண்டுபிடிக்க உங்கள் குழந்தைகள் முயலட்டும். எங்கள் மரணத்தின் பின்னாவது உலகம் உங்களை காக்கும். விடமாட்டார்கள் ! எங்கள் மக்கள் விடமாட்டார்கள் ! நம் தமிழக உறவுகள் கொதித்தெழுவார்கள் ! புலம்பெயர் உறவுகள் சேர்ந்தெழுவார்கள். இந்த இழப்பு. இன்னொன்றை பிறப்பிக்கும். நிச்சயம் நம் மக்களின் கொடிய வாழ்வு முடிவுக்கு வரும். எங்கள் மக்களே ! சென்று வருகிறோம். மண்ணே ! உன்மடியில் நீண்ட ஓய்வெடுக்கப்போகிறேன். ‘’கபிலன் ! கபிலன் ! வானம் வெளிக்கிறது.. தயாராகு… இதோ நான் தயாராகிவிட்டேன் . குப்பியை வாயில் கடித்ததும் காதுக்குள் பிஸ்ரலால் சுட்டுவிடு. அடுத்த நொடி உடல்மட்டும் மிஞ்சும்.’’ வலப்பக்கத்தில் தென்னைமரம் ஒன்று நின்றது. காகம் ஒன்று பதட்டத்தோடு குறுக்கே பறந்து சென்றது. அலை வீசிய கடல் அழுதுகொண்டிருந்தது. எங்கள் கடலில் எதிரிகளின் போர்க்கப்பல் தெரிந்தது. எங்கும் துப்பாக்கி இயங்கிக்கொண்டே இருந்தது. அவை இராணுவத்தின் துப்பாக்கிச்சத்தங்கள்தான். அவர்கள் வீரர்கள் வாழ்ந்த காற்றுக்கும் சுட்டுக்கொண்டிருந்தார்கள். மேகங்கள் ஒன்றையும் காணவில்லை. அதிகாலைக்குருவிகளின் சத்தம்கூட இல்லை. அவை எங்கு பறந்து போயினவோ தெரியவில்லை. தங்களோடு வாழ்ந்தவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று பறவைகள் அழுதிருக்கும். மனிதர்களை நினைத்து அவை குளம்பிப்போயிருக்கும். ‘இவர்கள் அறிவற்றவர்கள்’ என்று அவை நினைத்திருக்கும். மனிதனை மனிதன் கொல்வதை பார்க்கும் பறவைகளால் வேறெதை நினைக்க முடியும். ?! அண்ணருக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. வரலாறு ஒரு பெருமகனை இழந்துகொண்டிருக்கிறது. வரலாற்றில் இருந்து மனிதர்கள் கற்காவிட்டால் அவை மீண்டும் மீண்டும் நிகழும். ‘’ கபிலன்…. கபிலன்.. சத்தம் அருகே கேட்கிறது. நிலம் வெளிக்கிறது, தயாராகு ! நாம் உயிருடன் பிடிபடக்கூடாது.. நாமிருவரும் இந்த மண்ணில் வாழும் நிமிடங்கள் இவைதான். ‘’ இருவரும் தயாரானார்கள். குப்பி கொடுப்பில் வைக்கப்பட்டது. வலக்கையில் இருந்த பிஸ்ரல் காதோரம் வந்தபோது, இடக்கை அருகே இருந்த அறுகம்புல்லோடு சேந்த தாய்மண்ணை அள்ளி நெஞ்சில் வைத்துக்கொண்டு தளபதி ஜெயம் 1994 இல் தலைவரால் மீண்டும் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியை தன் காதோரம் வைத்து விசையை அமத்தினார். பட்ட்டீர்ர்….பட்ட்டீடர்ர்.. ! ‘புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் ‘ என்று கூற அதன்பிறகு அந்த நிலத்தில் யாரும் இருக்கவில்லை. - அகரன் பூமிநேசன் https://www.facebook.com/profile.php?id=61554181222805
  16. விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள். பொதியில் உள்ள பிரச்சனைய பொறுத்து அவர்கள் சுங்க அதிகாரிகளை அழைப்பார்கள். ஆனால் சாதாரணமாக அவர்கள் முதலில் தெரிவிப்பது விமான சேவை ஊழியர்களுக்கு. சொன்னதில் தவறு ஏதும் இல்லை. Heathrow இல் இந்திய பாதுகாப்பு ஊழியர்கள் சாதாரணமாக ஹிந்தி மொழியில் வேலையின் போது ஊரையாடுவதை கண்டுள்ளேன்.
  17. ரவைக்களின் உள்ளே வெடி மருந்து இருக்கிறது ... வெடி மருந்து கீத்ரோ விமான நிலையத்தை கடந்து விமானத்தில் ஏறி இருக்கிறது என்றால் .... கொஞ்சம் அதிர்ச்சியான தகவல்தான். எனது ஊகத்தில் இதன் உரிமையாளர் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் வைத்திருப்பவர் உரிமத்தின் பிரதி ஒன்றையும் பாக்கில் வைத்திருந்து இருக்க சாத்தியம் உண்டு அதனோடு பொதியை பூட்டு போட்டு பூட்டியிருக்கலாம் குறித்த பொதியை ஆட்கள் யாரும் பார்க்க தேவையில்லை .... அதை ஸ்கேனர் தானகவே தடுத்து இருக்கும் அதை மீள் பரிசோதனை செய்தவர்கள் குறித்த நபர் பதிவு செய்து கொண்டு போகிறாரா? இல்லையா? எனும் குழப்ப நிலையில் அதனால் விமானத்தில் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதால் ஏற்றி இருப்பார்கள் ஆனால் குறித்த நபரின் (பெயருடன்) பொதி ஒன்றில் துப்பாக்கி இருக்கிறது என்பது முதன்மை விமானிக்கும் கொழும்புக்கும் அறிவித்து இருப்பார்கள். இந்த தகவலின் அடிப்படையிலில்தான் கொழும்பில் குறித்த பொதி சுங்க அதிகாரிகளிடம் சேரும். இந்தியர்கள் பலர் டுபாய் அபுதாபியில் இருந்து தங்கத்துடன் சென்று இந்தியாவில் பிடிபடுவார்கள் தலைக்குள் வைத்தது பெண்கள் உள்ளாடைக்குள் வைத்து கொண்டு சென்று எல்லாம் பிடிபடுவார்கள் அவர்களை இந்திய அதிகாரிகள் எதோ சாமர்த்தியம் செய்து பிடித்ததுபோல செய்தி போடுவார்கள் உண்மையில் அதன் பின்னனியில் இருப்பது துபாய் அபுதாபி ஸ்கேனர்கள்தான். 24 கரட் சுத்த தங்கம் மெடல் டெக்டாட்டோரில் (Metal Detectors) பிடிபடாது அதனுடன் செப்பு கலந்த பின்தான் மெடல் டெக்டோட்டோர் சத்தம் செய்யும். இதனை சாதகம் ஆக்கியே தங்கம் கடத்துபவர்கள் செயல்படுகிறார்கள். ஆனால் துபாய் அபுதாபி ஸ்கேனர்கள் இவற்றை துல்லியமாக காட்டுகிறது ...... அவர்களுக்கு தங்கம் விற்றாயிற்று அதன் பின்பு ஒரு இந்தியரை பிடித்து சிறையில் வைத்து வழக்கு வைத்து உணவு கொடுப்பது வீண் செலவு என்பதால் இந்தியாவுக்கு தகவல் அனுப்பிவிட்டு இருந்துவிடுவார்கள் ....... விமானம் போய் இறங்குமுன்பே யார் தங்கத்துடன் வருகிறார் என்பது அவர்களுக்கு தெரிந்துகொண்டுதான் மிகுதி ஸீன் எல்லாம் உருவாக்குவார்கள் (Scene create) .
  18. நல்லவேளை சுமே ஆன்ரி 1998 இல் வீடு வாங்கவில்லை! எதிர்ப்பக்கம் 47 நம்பரில் எங்கள் நண்பர்கள் வாடகைக்கு இருந்தவீடுதான் எங்கள் வார இறுதிக் கொட்டகை! எங்கள் பார்ட்டிகளாலும், பேசிய “வார்த்தை”களாலும், சத்தத்தாலும் அந்தத் தெருவே அதிர்ந்துகொண்டிருக்கும்! கிழவனைக் கண்ட ஞாபகமே இல்லை!
  19. கொஞ்சம் பொறுங்கோ, அக்கா இதற்கும் ஒரு கதை எழுதுவா…
  20. Canadian Tamil Congress · இலங்கையில், குறிப்பாகப் போரின் இறுதிக் கட்டங்களில், இலங்கையில் நடந்த மனித உரிமை அநியாயங்களுக்கு, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை அடைவதற்கு உழைப்பது கனடியத் தமிழர் பேரவையின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் இலங்கையில் நிலையான நீண்டகால சமாதானத்தை உருவாக்குவதற்கான செயல்முறைக்கும் ஆதரவளிக்கும் போது, கனடியத் தமிழர் பேரவையானது இலங்கைத் தமிழ் மக்களின் நலன்களுக்கான ஆணையை விட்டுக் கொடுக்காது, சமரசம் செய்யாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்கின்றோம். கனடிய தமிழர் பேரவையின் முழுமையான ஊடக அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது. ----------------------------------------------------------------- கனடிய தமிழர் பேரவை ஊடக வெளியீடு 21/12/2023 கனடியத் தமிழர் பேரவை (CTC) இமாலயப் பிரகடனத்தைக் கையளிப்பதற்காக மகிந்த ராஜபக்சாவை சந்தித்தமையால் எமது மக்களுக்கு ஏற்பட்ட வலியை உணர்ந்து ஆழமாக வருந்துகிறது. இந்த ஆண்டு 2023 ஏப்ரலில் உலகத் தமிழர் பேரவையின் (GTF) பிரதிநிதிகள் மற்றும் இலங்கையில் உள்ள பல்வேறு பௌத்த உயர் மதபீடங்களின் மூத்த பௌத்த பிக்குகள் நேபாளத்தின் நாகர்கோட்டில் உரையாடல்களை மேற்கொண்டு இமாலயப் பிரகடனத்தை உருவாக்கினார்கள். (பிரகடனத்தின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது). இந்த நடவடிக்கையின் அடுத்த கட்டமாக, இரு தரப்பினரையும் உள்ளடக்கிய தூதுக்குழு இலங்கையில் பல்வேறு சந்திப்புகளை நடத்தியது. அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிஸ் மற்றும் கனடா நாட்டு இராஜதந்திரிகள் உட்பட இலங்கையின் முக்கியமான அனைத்து மதத் தலைவர்கள், சிவில் சமூகத் தலைவர்கள், இலங்கை ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், பெரும்பாலான தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள், இன்னாள் சபாநாயகர்கள், அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரையும் தூதுக்குழுவினர் சந்தித்து உரையாடியிருந்தார்கள். இமாலயப் பிரகடனத்தைக் கையளித்து, தேசிய உரையாடலை ஆரம்பிக்க நாடு முழுவதும் உள்ள மக்களிடம் இந்த முன்னெடுப்பு எடுத்துச் செல்லப்படும் என்பதைத் தெரிவிப்பதே இந்தச் சந்திப்புகளின் பிரதான நோக்கமாகும். இமாலயப் பிரகடனத்தைப் பெற்றுக்கொண்ட அனைவரும் இந்த முன்னெடுப்புக்குத் தமது முழு ஆதரவைத் தருவதாக கூறியதோடு மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழ்த் தலைவர்கள் தலைமையில் இலங்கையில் நிரந்தர சமாதானத்துக்கான அரசியல் முன்னெடுப்புகள் நடைபெறக்கூடிய சூழலை உருவாக்க இத் தேசிய உரையாடல் உபயோகமாக அமையுமெனவும் குறிப்பிட்டிருந்தார்கள். இமாலயப் பிரகடனத்தின் பன்மைத்துவ ஈடுபாட்டிற்கான ஆணையின் ஒரு பகுதியாக, தற்போதைய இலங்கை நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவையும் தூதுக்குழுவினர் சந்தித்திருந்தனர். இமாலயப் பிரகடனம் மற்றும் அர்த்தமுள்ள உரையாடலுக்கான முக்கியத்துவத்தைப் பற்றி இலங்கையில் செல்வாக்குள்ள அனைவருக்கும் தெரியப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக மட்டுமே இந்தக் கூட்டம் இடம்பெற்றிருந்தது. இந்தச் சந்திப்பு மற்றும் சந்திப்பின் படங்கள், புலம்பெயர் தமிழர்களிடமும், கனடியத்தமிழர்களிடமும் வேதனை தரும் வகையில் தீவிரமாக உணர்வுகளைத் தூண்டியுள்ளன என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். கனடியத் தமிழர் பேரவை உண்மையிலேயே இது குறித்து ஆழமாக வருந்துகிறது. இவ்வாறான வேதனை உணர்வினை எமது மக்களுக்கு ஏற்படுத்துவதைக் கனடியத் தமிழர் பேரவை தனது நோக்கமாக கொண்டிருக்கவில்லை. இமாலயப் பிரகடனத்தின் முதன்மையான நோக்கமும், அதைத் தொடர்ந்து நடைபெறும் அனைத்துச் சந்திப்புகளும், ஈழத்தமிழர்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வை அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தேசிய உரையாடலை ஆரம்பிப்பதாகும். அத்துடன் தீவில் உள்ள அனைத்து முக்கிய பங்குதாரர்களையும் இந்த முயற்சியில் ஈடுபடுத்துவதாகும். நாங்கள் அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை. அவ்வாறான வேலைத்திட்டம் இலங்கையில் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் தலைவர்களைச் சார்ந்த விடயமாகும். கனடிய தமிழர் பேரவை 2009 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) பங்கேற்பது உட்பட உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், அதற்கான பொறுப்புக்கூறல் மற்றும் ஈழத்தமிழ் மக்களின் நீதிக்காகக் கடுமையாக முன்னின்று உழைத்து வருகின்றது. இலங்கையில், குறிப்பாகப் போரின் இறுதிக் கட்டங்களில், இலங்கையில் நடந்த மனித உரிமை அநியாயங்களுக்கு, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை அடைவதற்கு உழைப்பது கனடியத் தமிழர் பேரவையின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் இலங்கையில் நிலையான நீண்டகால சமாதானத்தை உருவாக்குவதற்கான செயல்முறைக்கும் ஆதரவளிக்கும் போது, கனடியத் தமிழர் பேரவையானது இலங்கைத் தமிழ் மக்களின் நலன்களுக்கான ஆணையை விட்டுக் கொடுக்காது, சமரசம் செய்யாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்கின்றோம். தூரதிர்ஷ்டவசமாக, இமாலயப் பிரகடனத்தின் உண்மையான நன்நோக்கம் குறித்துத் தவறான விளக்கங்கள் பரப்பப்பட்டுக் கனடியத் தமிழர் பேரவை அலுவலகர்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராகத் தேவையற்ற தாக்குதல்கள் நடந்துவருகின்றன. நீண்டகாலமாக கனடியதமிழர் பேரவையின் பொறுப்புக்கூறல், நீதியை நிலைநாட்டுதல் மற்றும் சமாதானத்துக்கான பணியையும் முன்னேற்றத்தையும் இழிவுபடுத்தும் இத்தகைய செயல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். மேலதிக தகவல்கள் மற்றும் ஊடக விவரங்களுக்கு, கீழுள்ள மின்னஞ்சல் முகவரியோடு தொடர்பு கொள்ளவும்: info@canadiantamilcongress.ca
  21. தளபதி ஜெயத்துக்கும், நளா அக்கா, கபிலனுக்கும் வீர வணக்கம். உலக அமைதிக்காய் சிலுவை சுமந்தவர் பிறந்த நாளில்… எமது உரிமைக்காய் சிலுவை சுமந்தவகளை நினைவூட்டிய பகிர்வு. அழவைத்தாலும்…பகிர்வுக்கு நன்றி @nunavilan @முதல்வன் உங்கள் பதிவு பிள்ளைகள் நன்றாக இருக்கிறார்கள் என்ற தகவலை தருகிறது நன்றி🙏.
  22. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஏராளன். எல்லாம் கேட்டு வாங்க வேண்டிக்கிடக்கு....🤣
  23. பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் தம்பி.🖐
  24. சிரிப்புகளுக்கு பலப்பல அர்த்தங்கள்.......! 😂
  25. வெளிநாட்டு போத்தலிற்கு ஆசைப்பட்ட பிச்சுமணி - கடுப்பான அக்குட்டி
  26. கடவுள் தந்த இரு மலர்கள்........! 😍
  27. சர்வகட்சி மாநாடு -‍ ஜெயவர்த்தனவின் சூழ்ச்சி சர்வகட்சி மாநாட்டிற்கான அழைப்பு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு வந்து சேரும்வரைக்கும் அனைத்து விடயங்களும் சிற்ப்பாக நடந்துவருவது போன்ற தோற்றப்பாட்டினையே உருவாக்கியிருந்தது. மக்கள் விடுதலை முன்னணி, நவ‌ சம சமாஜக் கட்சி ஆகிய கட்சிகள் ஜெயாரினால் தடைசெய்யப்பட்டிருந்ததையடுத்து ஏனைய அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வந்த ஜெயார், தான் தில்லியில் நடத்திய பேச்சுக்கள் குறித்து அவர்களுக்கு விளக்கியதுடன், அவைகுறித்த ஒருமித்த கருத்தினை ஏற்படுத்தவே தான் சர்வகட்சி மாநாட்டினை கூட்டவிருப்பதாக கூறத் தொடங்கினார். அரசியல்க் கட்சித் தலைவர்களை சந்தித்து வந்த அதேவேளை பல பெளத்த மதகுருக்களின் அமைப்புக்களையும் அவர் சந்திக்கத் தவறவில்லை. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும் தம் பங்கிற்கு சில சந்திப்புக்களை மேற்கொண்டனர். எம்.ஜி.ஆர், கருநாநிதி உட்பட பல தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைச் சந்தித்த அவர்கள் ஜெயவர்த்தனவுக்கும் பாரத்தசாரத்திக்கும் இடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு குறித்து விளக்கமளித்தனர். மேலும், ஆயுத அமைப்புக்காளான புலிகள், புளொட், டெலோ, ஈரோஸ் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புக்களின் பிரதிநிதிகளிடமும் இதுகுறித்துப் பேசினர். அதிகாரம் கொண்ட பிராந்திய அலகுகள் மற்றும் அவற்றுக்குக் கொடுக்கப்படவிருக்கும் மிகக்குறைந்த அதிகாரங்கள் குறித்த தமது கடுமையான அதிருப்தியினை போராளி அமைப்புக்கள் முன்னணியினரிடம் தெரிவித்தனர். இதன்பின்னர், போராளி அமைப்புக்கள் இந்த முயற்சிகளுக்கான தமது எதிர்ப்பினை முன்னணியின் தலைவர்களிடம் முன்வைத்தனர். குறிப்பாக, பிரபாகரன் தனது விமர்சனத்தில் "தமிழ் மக்களின் ஆணையினை நிராகரிக்க முன்னணியினருக்கு எந்த அதிகாரமும் கிடையாது" என்று வாதிட்டார். போராளிகளைச் சமாதானப்படுத்த எத்தனித்த அமிர்தலிங்கம், ஜெயவர்த்தனவுடன் தாம் சமரசம் செய்யவேண்டி வந்தமைக்கான காரணங்களை முன்வைக்கத் தொடங்கினார். அவர் முன்வைத்த முக்கிய மூன்று காரணங்களும் பின்வருமாறு அமைந்திருந்தன, 1. இந்திரா காந்தியின் அழுத்தத்தினாலேயே தாம் சமரசத்தில் ஈடுபட வேண்டி வந்தது. 2. சிங்களவர்கள், தமிழர்களுக்கு ஒருபோதும் நியாயமான தீர்வினைத் தரமாட்டார்கள் என்பதனை உலகிற்குக் காட்ட இச்சந்தர்ப்பத்தைப் பாவிப்பதோடு, தமிழர்களின் விடுதலைக்கு ஆயுதப் போராட்டமே சரியானது என்பதை நியாயப்படுத்த சர்வகட்சி மாநாட்டினைப் பாவிப்பது. 3. தமிழர்கள்மீது அரசு நடத்திவரும் படுகொலைகளை வெளிக்கொணரவும், தமிழர்கள் எதிர்நோக்கும் அவலங்களை உலகறியச் செய்யவும் சர்வகட்சி மாநாட்டினைக் களமாகப் பாவிப்பது. ஆனால், அமிர்தலிங்கம் முன்வைத்த இக்காரணங்கள் எவற்றையும் போராளி அமைப்புக்கள் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஜெயவர்த்தனவை நம்பவேண்டாம் என்று போராளி அமைப்புக்கள் அமிர்தலிங்கத்தை எச்சரித்தன. தனது இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்ளவே ஜெயவர்த்தன சர்வகட்சி மாநாட்டினைக் கூட்டுவதாக அவர்கள் கூறினர். தமிழ்ப் போராளி அமைப்புக்களை முற்றாக அழித்துவிடவே அவர் முயல்கிறார் என்றும் அவர்கள் வாதாடினர். 1983 ஆம் ஆண்டு மார்கழி 21 ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல்க் கட்சிகளின் மாநாடு ஒன்றினை ஜெயார் கூட்டினார். பின்வரும் அரசியற் கட்சிகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். இலங்கை சுதந்திரக் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சி, கம்மியூனிஸ்ட் கட்சி, மகஜன எக்சத் பெரமுன, தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என்பனவே அக்கட்சிகளாகும். இக்கூட்டத்தினை இரு முக்கிய விடயங்கள் குறித்த அவர்களின் கருத்தினை அறிந்துகொள்ளவே தான் நடத்துவதாகக் கூறினார். முதலவாது விடயம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பேச்சுக்களை மீளவும் ஆரம்பிப்பது. இவ்விடயத்தில் கட்சிகள் தமது சம்மதத்தினைத் தெரிவித்தன. சுதந்திரக் கட்சியின் குழுவிற்குத் தலைமை தாங்கிய சிறிமா, "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் பேச்சுக்களுக்கு அழைக்கப்பட வேண்டும் என்பதனை நாம் தொடர்ச்சியாகக் கூறியே வந்திருக்கிறோம்" என்று பதிலளித்தார். இரண்டாவது விடயம் சர்வகட்சி மாநாடு நடத்துவதற்கான இடம், காலம், பேசப்படும் விடயங்கள் குறித்ததாக அமைந்தது. சுமார் 90 நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சர்வகட்சி மாநாட்டினை 1984 ஆம் ஆண்டு தை மாதம் 10 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்துவதென்று கலந்துகொண்டவர்களால் தீர்மானிக்கப்பட்டது. தமிழ்க் காங்கிரஸைச் சேர்ந்த குமார் பொன்னம்பலம் கூட்டத்தில் பேசும்போது, "தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினை அடைந்துகொள்வதற்கு சர்வகட்சி மாநாட்டிற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?" என்று ஜெயாரைப் பார்த்து வினவினார். பொன்னம்பலத்திற்குப் பதிலளித்த ஜெயார், தை மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கும் சர்வகட்சி மாநாடு தொடர்ச்சியாக 10 நாட்கள் நடைபெறும் என்றும், சுமார் 30 மணித்தியாலங்களுக்கு நடக்கப்போகும் கலந்துரையாடல்களின் மூலம் தீர்வொன்றினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தான் நம்புவதாகவும் கூறினார். சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்படவிருக்கும் விடயங்கள் குறித்து பேசப்பட்டபோது, இந்தியாவில் ஜெயார் மேற்கொண்ட பேச்சுக்களின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து சிறிமா ஜெயாரிடம் கேட்டார். அதற்குப் பதிலளித்த ஜெயார், தில்லியில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து 10 நாட்களில் தான் பேசுவதாகக் கூறினார். பின்னர் நீலன் திருச்செல்வத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜெயார், சர்வகட்சி மாநாட்டிற்கு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை அழைக்க தான் முடிவெடுத்திருப்பதாகக் கூறினார். இதனையடுத்து சென்னையில் அறிக்கையொன்றினை வெளியிட்ட அமிர்தலிங்கம் ஜெயாரின் இம்முடிவு குறித்த தமது கட்சியின் மகிழ்ச்சியைத் தெரிவித்தார். ஆனால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை சர்வகட்சி மாநாட்டிற்கு அழைப்பது எவ்வாறு என்கிற கேள்வி எழுந்தபோது சிக்கலொன்று உருவாகியது. சர்வகட்சி மாநாட்டின் செயலாளரான பீலிக்ஸ் டயஸ் அபயசிங்கவிடம் பேசிய நீலன் திருச்செல்வம், சென்னையிலிருக்கும் அமிர்தலிங்கத்திற்கு அழைப்பினை நேரடியாக அனுப்பலாம் என்று ஆலோசனை வழங்கினார்.ஆனால், முன்னணியினருடன் பேச்சுக்களில் ஈடுபடுவதில்லை என்கிற அமைச்சரவை தீர்மானம் இன்னமும் நடைமுறையில் இருப்பதனால், சென்னைக்குத் தனது பிரதிநிதியொருவரை நேரடியாக அனுப்பி அமிர்தலிங்கத்திடம் அழைப்பினை வழங்குவதை அரசு விரும்பவில்லை. இவ்வேளையில் மார்கழி 30 ஆம் திகதி தில்லிக்குப் பயணமாகும் ஏற்பாடுகளில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சத்வால் ஈடுபட்டிருந்தார். முன்னணியினருக்கான அழைப்பினை வழங்குவது குறித்த சிக்கலின்போது உதவுவதற்கு அவர் முன்வந்தார். தில்லிக்கான தனது பயணத்தின்போது சென்னையில் தரித்துச் சென்ற சத்வால், சர்வகட்சி மாநாட்டிற்கான அழைப்பினை அமிர்தலிங்கத்திடம் கையளித்துச் சென்றார். சர்வகட்சி மாநாட்டிற்கு அமிர்தலிங்கத்திற்கு அனுப்பப்பட்ட அழைப்பில் இரு சேர்க்கைகள் அடங்கியிருந்தன. முதலாவது சேர்க்கையில் பகிரங்கமாக வெளியிடப்பட்ட ஐந்து ஆவணங்கள் அடங்கியிருந்தன. அவற்றுள் முதலாவது ஆவணம் ஆடி இனக்கொலை முடிவுற்ற ஒரு சில நாட்களின் பின்னர் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நரசிம்ம ராவின் விஜயம் குறித்து வெளியிடப்பட்ட அரச ஊடக அறிக்கை. இரண்டாவது, ஜெயாரின் விசேட தூதராக இந்தியா சென்ற அவரது சகோதரரான இன்னொரு ஜெயவர்த்தன, சண்டே ஒப்சேர்வர் பத்திரிகைக்கு ஆவணி 14 ஆம் திகதி வழங்கிய செவ்வி. மூன்றாவது ஆவணம், பார்த்தசாரதியுடன் ஆவணி 25 முதல் 29 வரையான நாட்களில் இலங்கை அரசாங்கம் முதன்முதலாக நடத்திய பேச்சுக்கள் தொடர்பாக ஜனாதிபதிச் செயலகம் வெளியிட்டிருந்த அறிக்கை. நான்காவது ஆவணம் கார்த்திகை மாதத்தில் பார்த்தசாரதியுடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் தொடர்பாக ஜனாதிபதிச் செயலகம் வெளியிட்ட அறிக்கை. ஐந்தாவது ஆவணம் தில்லியிலிருந்து திரும்பியபின்னர் மார்கழி முதலாம் திகதி ஜெயார் வெளியிட்ட அறிக்கை என்பனவாகும். அழைப்பிதழின் இரண்டாவது இணைப்பு பின்வரும் தலையங்கத்தைக் கொண்டிருந்தது. சர்வகட்சி மாநாட்டில் பேசப்படும் விடயங்களை தீர்மானித்துக்கொள்ள பின்வரும் விடயங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதன்படி பின்வரும் 14 விடயங்களை இரண்டாவது இணைப்பு கொண்டிருந்தது, 1. தனிநாட்டிற்கான கோரிக்கையினை முற்றாகக் கைவிடுவது. 2. ஒரு மாகாணத்திற்குள் அமைந்திருக்கும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை அம்மாகாணத்தில் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாகவும் அம்மாகாண சபை உறுப்பினர்களின் சம்மதத்தினூடாகவும் இணைத்துக்கொள்வது. 3. பிராந்திய சபைகளைக் கொண்டிருக்கும் பிராந்தியங்களில் பெரும்பான்மைப் பலத்தினைக் கொண்டிருக்கும் கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியினால் அப்பிராந்தியத்தின் முதல்வராக நியமிக்கப்படுவார். அவரால் அமைக்கப்படும் பிராந்திய சபை உறுப்பினர்களுடன் இணைந்து அவர் செயற்படுவார். 4. மத்திய அரசிடமிருந்து பிராந்திய சபைக்கு வழங்கப்படாத எந்த அதிகாரமும் ஜனாதிபதியினாலும், பாராளுமன்றத்தாலும் பொறுப்பேற்கப்பட்டிருக்கும். நாட்டின் இறையாண்மை,ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வளர்ச்சி, அபிவிருத்தி ஆகியவை தொடர்ந்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். 5. பிராந்திய சபைகளுக்கு வழங்கப்படவிருக்கும் பொறுப்புக்கள் பற்றி இனிமேல்த்தான் தீர்மானம் எடுக்கப்படும். இவ்விடயங்கள் தொடர்பாக தகுந்த சட்டங்களை இயற்றுவதற்கு அப்பிராந்தியங்களுக்கு அதிகாரம் தரப்படும். வரி அறவிடுதல், கட்டணங்களை அறவிடுதல், மத்திய அரசாங்கத்திடமிருந்து கடன்களை பெற்றுக்கொள்ளுதல் ஆகிய விடயங்களுக்கு பிராந்திய சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படும். 6. திருகோணமலைத் துறைமுகத்தினை மத்திய அரசாங்கமே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். 7. பிராந்தியங்களில் உயர் நீதிமன்றங்கள் செயற்பட அதிகாரம் கொடுக்கப்படும் அதேவிடத்து உச்ச நீதிமன்றம் நாட்டின் அனைத்துப் பாகங்களுக்கும் மேலான, அரசியலமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்ட அதிகாரத்தைக் கொண்டிருக்கும். 8. பிராந்தியங்களில் கடமையில் ஈடுபடுவோருக்கும், வேறுபகுதிகளிலிருந்து அப்பிராந்தியத்தில் கடமைக்கு வருவோருக்கும் பிராந்திய யாப்பின்படி அதிகாரம் வழங்கப்பட்டிருக்கும். 9. பிராந்தியத்திற்குள் ஆட்சேர்ப்பிற்கும், ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கும் என்று பொதுமக்கள் சேவைகள் ஆரம்பிக்கப்படும். 10.அரச சேவைகளிலும், முப்படைகளிலும் சனத்தொகை விகிதாசாரத்திற்கேற்ப பணியமர்த்தல்கள் நடைபெறும். 11.பிராந்தியத்தின் சனத்தொகை விகிதாசாரத்திற்கேற்ப பிராந்தியத்திற்கான பொலீஸ் படைப்பிரிவிற்கு பணியாளர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். 12. காணிப் பங்கீடு தொடர்பாக தேசியக் கொள்கையொன்று வரையறுக்கப்படும். 13. உத்தியோகபூர்வ மொழியான சிங்களம், தேசிய மொழியான தமிழ் ஆகியவை தொடர்பாக அரசியல் யாப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுவதோடு தேசிய கீதம், தேசியக் கொடி தொடர்பாகவும் மாற்றங்கள் உள்வாங்கப்பட்டு யாப்பில் சேர்த்துக்கொள்ளப்படும். 14. அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்ட எதிர்ப்பினை அனைத்துக் கட்சிகளும் முன்னெடுக்க வேண்டும். என்று அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.
  28. அடுத்த தேர்தலில் இந்தியாவின் ஆதரவு ஜனாதிபதி வெற்றி பெற்றால் இவரின்ட கனவு சில சமயம் பலிக்கும் இல்லை என்றால் மீண்டும் வேதாளம் ...Murunga
  29. பொத்தம் பொதுவா எல்லா விமானா சேவையையும் இங்கு எழுத முடியாது எழுதினால் யாழ் படுத்து விடும் அவ்வளவு தரவுகள் .
  30. அன்பென்ற மழையிலே....💗
  31. இனியும் ஏமாற்றத்தான் போகிறார்கள். தமிழ் மக்களும் ஏமாறத்தான் போகிறார்கள்.
  32. இப்போது கஜேந்திரகுமார் அவர்கள் ஒரு நடைமுறை சாத்தியமான இடத்துக்கு வந்திருப்பதாக தெரிகின்றது. நல்ல முன்னேற்றம்.
  33. நன்றி பகிர்விற்கு…. அக்கோய் தமிழ் ஆட்கள் அவசரத்திற்கு வந்து வேலை செய்வார்கள் ஆனால் உயரத்தால அகலத்தால கூட்டி குறைத்து சிக்கலில மாட்டி விடுவினம் அதோட bill உம் தர மாட்டினம். நீங்கள் பரவாயில்லை எமது வீட்டிற்கு பின் வீட்டுக்காரர் இறந்தது 4 வருடங்களிற்கு பின்னரே எமக்கு தெரிந்தது.
  34. Heathrow விமான நிலையத்தின் பரிசோதனைகள் எந்த கேவல நிலையில் உள்ளன என்று தெரிகிறது.
  35. சொறீலங்கா எயார் லைன்ஸ் பிரித்தானியாவில் வைச்சே இதை தடுத்திருக்கலாமே. காசுக்கு பார்த்தும் பார்க்காமலும் ஏத்திறது.. ஏத்திப் போட்டு கொழும்பில வைச்சு மிச்சம் மீதியை புடுங்கிறது. சொறீலங்கா உல்லாசப் பயணத்துறைக்கு உகந்த நிர்வாக முறைமையற்ற நாடாகி விட்டது.
  36. ஓட்டை உடைசல் கப்பலாக இல்லாமல் ஒழுங்காய் பறக்கிற விமானமாய் பிடித்திருக்கிறார்கள்......! 😁
  37. பிள்ளைப் பராயத்திற்கே அழைத்துச் செல்லும் கதைகள்.........! 👍 பகிர்வுக்கு நன்றி வெங்காயம் ........!
  38. பொன்முடி வழக்கின் தீர்ப்பு ஏற்படுத்தும் விளைவுகள்! -சாவித்திரி கண்ணன் திராவிட இயக்க சித்தாந்தத்தை கரைத்து குடித்தவர், சமூக நீதி குறித்த உரைவீச்சை மெய் சிலிர்க்க பேசுபவர்! மெத்த படித்தவர், ஒரு ஆசிரியரின் மகனாக எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்! ஆனால், ஆட்சி அதிகாரம் அவரை நிறைவடையவே இயலாத செல்வத் தேடலில் பொருளாதார குற்றவாளியாக்கியது; செஞ்சி ராமச்சந்திரன் இவரை பட்டைதீட்டி இளம் தலைவராக கட்சித் தலைமைக்கு அடையாளம் காட்டினார்! ஆனால், கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் மாவட்ட திமுகவை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு புதிய இளம் தலைமுறையில் யாரும் மேலேழுந்து வர முடியாமல் குடும்ப அரசியல் செய்து கோலோச்சி வந்தவர் தான் பொன்முடி! சூர்யா கல்வி குழுமம் என்ற பெயரில் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், பாலி டெக்குனிக்குகள்…என கல்வியை பெரு வணிகமாகக் கொண்டுள்ள ஒருவரை கல்வித் துறைக்கு அமைச்சராக நியமிப்பதே தார்மீக ரீதியில் மிகத் தவறான அணுகுமுறை! 2006 தொடங்கி 2011 வரையிலான பதவி காலத்திலேயே துணைவேந்தர் பதவி தொடங்கி பேராசிரியர்கள் பணியிடம் வரை அனைத்துக்கும் ‘ரேட்’ நிர்ணயித்து உயர்கல்வித் துறையை உயர்மட்ட லஞ்சத் துறையாக மாற்றிய பொன்முடியையே மீண்டும் அமைச்சராக்கி அழகு பார்த்தாரே ஸ்டாலின்…! கேட்பதற்கே நாதியில்லை என்ற எண்ணம் தானே! எந்தத் துறைக்கு அமைச்சராக இருந்தாலும், அந்தத் துறையில் உச்சபட்ச கொள்ளையை நிகழ்த்துவது பொன்முடியின் வாடிக்கையாக ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கிறது! போக்குவரத்து துறைக்கு அமைச்சராக இருந்தார். அதை மேன்மேலும் சுரண்டி வழித்தெடுத்து நஷ்டத்தில் ஆழ்த்தி தன்னை வளப்படுத்திக் கொண்டார். கனிம வள அமைச்சராக இருந்த போது கனிம வளத்தை காப்பாற்றி பாதுகாப்பதை விடுத்து கடைவிரித்து களவாடினார். கல்வித் துறை அமைச்சரான பிறகு அதை கடைத்தேற்ற இயலாத அளவுக்கு கரப்ஷன், கலெக்‌ஷன் துறையாக்கிவிட்டார்! அதிகார துஷ்பிரயோகம் என்பதை தன் பிறப்புரிமை போல பாவிப்பார்! அத்துமீறி பொதுச் சொத்தை சூறையாடுவதை குற்றவுணர்வின்றி செய்வார். வழக்குகள் எத்தனை வந்தாலும் அவற்றை தகர்த்து தூள் தூளாக்குவார்! இது வரை அவர் பாதையில் இடையூறுகள் எதுவும் நிரந்தரமாக இருந்ததில்லை. விழுப்புரம், திண்டிவனம், மதுராந்தகம்..என வட தமிழகமெங்கும் விரிந்து பரந்த சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பி உள்ளார்! அவர் வாங்கி குவித்துள்ள சொத்துக்களின் எண்ணிக்கை அவருக்கே ஞாபகம் இருக்குமா? என்பது சந்தேகமே! இது தவிர எண்ணற்ற வியாபார நிறுவனங்கள்..! இப்படிப்பட்டவர்களுக்கு பொதுச் சேவை குறித்த எண்ணம் எப்படி வரும்? அதற்கு நேரமும் அனுமதிக்காதே!’அரசியல் அதிகாரம் என்பது சொத்துக்களை வாங்கி குவிப்பதற்கான ‘லைசென்ஸ்’ என்ற புரிதல் தான் இன்றைய அரசியல்வாதிகளுக்கு உள்ளது போலும்! 1990 களில் சைதை ஸ்ரீ நகர் வடக்கு காலனியில் அரசுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை மாமியார் பெயருக்கு மாற்றி, அபகரித்து செய்த விவகாரம் 16 ஆண்டுகளாக கோர்ட்டில் பல கட்ட முன்னேற்றமும், பின்னேற்றமுமாக நகர்ந்தது! ஐ.ஏ.எஸ் அதிகார ராஜரத்தினம் உள்ளிட்ட 90 பேர் வரை சாட்சியம் சொன்ன அந்த வழக்கில் கடைசியாக இதே சென்னை உயர்நீதிமன்றம் அவரை விடுவித்தது! நீதிபதி ஜெயவேல், ஆவணங்கள், சாட்சிகள் எதையும் கவனத்தில் கொள்ளாமல், ”குற்றச்சாட்டை அரசு தர்ப்பில் சரியாக நிருபிக்கவில்லை” எனக் கூறி விடுவித்த அதிசயமும் நடந்தது. இன்று வரை சைதைவாசிகள், ”இந்த அக்கிரமத்துக்கு தண்டனை இல்லாம போச்சே..” என அங்கலாய்ப்பது வழக்கம். 2006 முதல் 2011 வரையிலான கால கட்டத்தில், திமுகவின் உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த பொன்முடி மீது 2011ஆம் ஆண்டு ஊழல் வழக்கு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை காவல்துறை கண்காணிப்பாளர் கன்னியப்பன் என்பவரால் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக தொடர்ந்த வழக்கின் தொடர்ச்சி தான் தற்போது பொன்முடிக்கு சிறை தண்டனை பெற்றுத் தந்துள்ளது. அவ்வழக்கு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பின்னர் விழுப்புரம் ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதில் 37 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டனர். அரசு தரப்பு வழக்கறிஞர் சண்முக வேலாயுதம் போதுமான ஆதாரங்களை எடுத்து வைக்காமல் சொதப்பினார். ஐந்தாண்டு விசாரணை முடிவில் விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுந்தரமூர்த்தி ஏப்ரல் 18-2016 பிறப்பித்துள்ள உத்தரவில், ’’குற்றச்சாட்டுகளை உறுதி செய்யத் தேவையான ஆதாரங்கள் இல்லை’’ என்று தெரிவித்து, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரையும் விடுவித்தார். இதில் தண்டனை வழங்கப்பட்டிருந்தால், அவர் தேர்தலில் நிற்கும் தகுதியை அன்றே இழந்திருப்பார். அதைத் தான் தற்போது மீண்டும் எடுத்து விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். கனிம வளத்துறை மந்திரியாக இருந்த போது தன் மகனுக்கு செம்மண் குவாரியில் மணல் அள்ள அதிகார துஷ்பிரயோகம் செய்தார். இதில் அவரது மகன் அனுமதிக்கப்பட்ட அளவையும் மீறி, 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரி செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக மற்றொரு வழக்கு இழுவையில் உள்ளது. இது தொடர்பான சொத்து குவிப்பு வழக்கில் பல்லாண்டுகள் ஆட்டம் காண்பித்து, அழகாக தன்னை விடுவித்துக் கொண்டவர் தான் பொன்முடி! அதைத் தான் ஆனந்த் வெங்கடேசன் மீண்டும் தூசு தட்டி எடுத்தார். அந்த வழக்கை எந்த நீதிபதி விசாரிப்பது என்பதில் இன்னும் உயர் நீதிமன்றம் முடிவுக்கு வராமல் உள்ளது. இந்த வழக்கு 2002 ஆம் ஆண்டு போடப்பட்டதாகும். ஒரு தலைமுறை கடந்து போகும் இவ்வழக்கை எப்படியெப்படி எல்லாம் இழுத்தடிப்பது, சாட்சிகளை பிறழ் சாட்சிகளாக்குவது என்பதில் எல்லாம் சர்வ வல்லமை காட்டி, நீதித் துறையையே நிலைகுலைய வைத்தார் பொன்முடி! ஆனபோதிலும் விழுப்புரம் மாவட்ட மாஜிஸ்திரேட் மிக நேர்மையாக சபலத்திற்கு ஆளாகாமல் வழக்கை கையாண்டார். 172 சாட்சிகளை விசாரித்து 381 ஆவணங்கள், தரவுகள் எல்லாவற்றையும் சரிபார்த்து தீர்ப்புக்கான தேதியை முடிவெடுக்கும் தருணத்தில், ஆளும் கட்சி என்ற அதிகார பலத்தை முழுவீச்சில் பயன்படுத்தி உயர் நீதிமன்றத்திற்கே அழுத்தம் தந்து – அந்த வழக்கில் தனக்கு தண்டனை உறுதி என்ற சூழலில் – வழக்கை விழுப்புரம் கோர்ட்டில் இருந்து வேலூர் கோர்ட்டுக்கு மாற்ற வைத்து தனக்கு சாதகமான தீர்ப்பை வாங்கினார். இந்த சூழலில் எம்பி, எம்.எல்.ஏக்கள் தொடர்பான ஊழல்களை விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை தானே வலிந்து எடுத்து விசாரிக்கத் துணிந்தார்! நீதிபரிபாலன முறையிலேயே தவறு நடந்துள்ளது என பகிரங்கப்படுத்தி, இந்த வழக்கை கையில் எடுத்தார். அவரை ‘கேரக்டர் அசாசினேஷன்’ செய்ய ஆளும்தரப்பு என்னென்னவோ திட்டங்களை தீட்டிப் பார்த்தது! ஆனால், நேர்மைக்கு இலக்கணமான நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அசரவில்லை. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யும் வரை பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைத்திருப்பது என்பது அதிகார மேல்மட்டத்தில் இருப்பதால் பொன்முடிக்கு கிடைத்த சலுகையாகத் தான் கொள்ள வேண்டியுள்ளது! 21 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு கடும் முயற்சிக்கு பிறகு தீர்ப்பை உறுதிபடுத்த முடிந்தாலும் கூட – காலதாமதமாக வேணும் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது என்றாலும் கூட – அவர் சிறை செல்லாமல் இருக்க முடிவது என்பது நம் நாட்டு நீதிபரிபாலன முறையில் உள்ள கோளாறாகவே பார்க்க வேண்டியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நீதியை பாரபட்சமின்றி அணுகும் நீதிபதி இதை எடுத்து விசாரிக்கும்பட்சத்தில் பொன்முடி தண்டனை உறுதியாகும்! அங்கும் அதிகார அழுத்தங்கள் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் தான் இவரது தண்டனை உறுதிப்படும். அப்படி பொன்முடி தண்டிக்கப்படும் பட்சத்திலாவது இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள் கொஞ்சம் தங்கள் குற்றங்களை, கொள்ளைகளை குறைத்துக் கொள்ள முடிந்தால், அதுவே இந்த தீர்ப்பினால் பொது மக்களுக்கு விளைந்த உண்மையான நன்மையாக இருக்கும். இத்துடன் முன்னாள் அதிமுக அதிகார மையங்களின் வழக்கும் வேகம் பெற்று தீர்ப்புகள் வரட்டும். இந்த ஆட்சியிலேயே பொன்முடியை விஞ்சும் அளவுக்கு ஊழல் செய்பவர்கள் மீதும் வழக்குகள் பாயட்டும். இவை நடப்பதற்கு இது ஆரம்பமாக இருக்கட்டும். இந்த வழக்கின் மேல்முறையீட்டில் பொன்முடிக்கு தண்டனை உறுதியாகும் பட்சத்தில், 2024க்கு பிறகு திமுகவின் அரசியலே திசைமாறலாம்! சாவித்திரி கண்ணன் அறம் இணைய இதழ் https://aramonline.in/16090/ponmudy-convicted-h-c/
  39. ஆசிரியர்களை மெய்சிலிர்க்க வைக்கும் நடனம்.......! 😂
  40. நன்றி நுணா பதிவிற்கு. சிந்துசையின் அண்மைய காணொளி ஒன்று பார்த்தேன். பெற்றோருக்கு பெருமை சேர்த்த பிள்ளை. ஒருகணம் ஜெயமண்ணையின் முகமும் அவரின் பொறுமையும் கண்முன்னே வந்து போகிறது. புலனாய்வுப்பிரிவால் நகங்கள் புடுங்கப்பட்ட பின்னரும் நாட்டுக்காக எந்த தயக்கமும் இல்லாமல் போராடுவது மண்ணின் மீதான பற்றை எடுத்தியம்புகிறது.🥲 வீரவணக்கம்
  41. சிங்களம் இவர்களை எப்படியாவது உள்வாங்கி விடுகிறது.
  42. வடக்குக் கிழக்கை இணைப்பதை மறுத்த ஜெயாரும், அதனைத் தீர்வாக ஏற்றுக்கொள்ள முடிவெடுத்த அமிர்தலிங்கமும் இந்தியாவில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டிற்குப் பின்னர் இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்திருந்த கோவாவிற்கு தலைவர்கள் விடுமுறையினைக் களிக்கச் சென்றனர். ஜெயவர்த்தனவுடனானான தனது சம்பாஷணைகளைத் தொடர்வதற்காக பார்த்தசாரதியும் கோவாவிற்குச் சென்றிருந்தார். இச்சம்பாஷ்ணைகளில் அதிகாரம் மிக்க அலகுகள் குறித்தும், இவ்வலகுகளுக்கு பகிர்ந்தளிக்கக் கூடிய அதிகாரங்கள் குறித்தும் அவர் விளக்கினார். ஆனால், அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் அலகுகள் எனும் கருத்தினை எதிர்த்த ஜெயார், அலகுகளுக்காக அதிகாரங்களை மேம்படுத்துவது குறித்துச் சிந்திக்கலாம் என்று தெரிவித்தார். எப்படியிருந்தாலும், பேச்சுக்களை மேலும் இழுத்தடிப்பதற்கான இன்னொரு வழிமுறையினை அவர் முன்வைத்தார். அதுதான் சர்வகட்சி மாநாடு. பார்த்தசாரதியினால் முன்வைக்கப்படும் அதிகாரம் மிக்க அலகுகள் எனும் தீர்வினை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கையில் அனைத்துப் பகுதிகளில் இருக்கும் அரசியற்கட்சிகளையும் ஒரு மேடைக்கு அழைத்து, அவர்களுடன் கலந்தாலோசித்து, அவர்கள் அனைவரினதும் சம்மதத்தினைப் பெறுவது அவசியம் எனத் தெரிவித்தார். இதனை பார்த்தசாரதியும் ஏற்றுக்கொண்டார். தனது முயற்சி வெற்றியளிப்பதாகக் கருதிய பார்த்தசாரதியும், ஜெயாரை மேலும் சில தினங்கள் தில்லியில் தங்கிச் செல்லுமாறு வேண்டிக்கொண்டார். மேலும், இந்திராவைச் சந்திப்பதற்கான ஜெயாரின் சம்மதத்தையும் பார்த்தசாரதி பெற்றுக்கொண்டார். கார்த்திகை 29 ஆம் திகதி பொதுநலவாய அமைப்பு நாடுகளின் கூட்டம் நிறைவுபெற்றது. அன்றிரவு தனது இறுதி முயற்சியை செய்ய எண்ணினார் பார்த்தசாரதி. ஜெயவர்த்தன தங்கியிருந்த விடுதிக்கு நீலன் திருச்செல்வத்தையும், தொண்டைமானையும் அழைத்துச் சென்றார் . அங்கு பரந்துபட்ட அதிகாரப் பரவலாக்கலுக்கான தனது திட்டத்தை முன்வைத்தார். மகாணசபை அதிகாரப் பரவலாக்கம் அல்லது பிராந்திய அதிகாரப் பரவலாக்கம் என்பன ஜெயார் முன்வைக்க விரும்பும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளைக் காட்டிலும் தமிழரின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய உகந்தவை என்று அவர் கூறினார். "அதிகாரத்தையும் வளங்களையும் மேம்படுத்துவதற்கு இவ்வகையான தீர்வே உகந்ததாக இருக்கும். தனிநாடு எனும் தீர்வை முன்வைக்கும் தமிழருக்கு அதற்கு மாற்றான, உகந்த தீர்வொன்றினை முன்வைப்பது அவசியமாகும்" என்று அவர் வாதிட்டார். லங்கா கார்டியன் பத்திரிக்கையில் பின்னாட்களில் எழுதிய நீலன் அன்று ஜெயவர்த்தனவின் விடுதியில் நடந்த சம்பாஷணை குறித்து பின்வருமாறு எழுதுகிறார். "ஜெயவர்த்தன களைத்துப் போய் சோர்வாகக் காணப்பட்டார். பார்த்தசாரதி முன்வைத்த அதிகாரம் மிக்க அலகுக்கான மாதிரியினை சலனமின்றி பார்த்துக்கொண்டிருந்தார். அங்கு நடப்பவை குறித்து அக்கறையற்றுக் காணப்பட்ட ஜெயார், தனக்கு விளக்கமளிக்கப்பட்டுக்கொண்டிருந்த விடயங்கள் குறித்து தெளிவான சிந்தனையினைக் கொண்டிருந்தவர் போன்று எனக்குத் தெப்படவில்லை. அன்றைய சம்பாஷணைகள் முடிந்து பார்த்தசாரதியுடன் நாம் அங்கிருந்து மீளும்போது, "எனக்கு 73 வயதாகிறது, தொண்டைமானுக்கு 70 வயது. அந்த மனிதருக்கோ 80 ஐத் தாண்டிவிட்டது. அவரது வயது அவர்மீது கடுமையான அழுத்தத்தினைக் கொடுக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று எம்மிடம் அவர் தெரிவித்தார். ஆனால், ஜெயவர்த்தனா எவராலும் மதிப்பிப்பட முடியாத, புதிராகவே தெரிந்தார். நாம் அன்றிரவு பேசிய விடயங்கள் குறித்து அவர் தொடர்ச்சியாக சிந்த்தித்து வந்ததோடு மறுநாளே மாகாணசபைகளை உருவாக்குவது குறித்து சம்மதமும் தெரிவித்திருந்தார்". கார்த்திகை 30 ஆம் திகதி மீண்டும் ஜெயாரைச் சந்தித்த பார்த்தசாரதி, நீலன், மற்றும் தொண்டைமான் ஆகியோர் முன்னிரவு தம்மால் பிரஸ்த்தாபிக்கப்பட்ட மாகாணசபை அலகுகள் குறித்து வினவினர். அன்று காலை ஜெயார் உற்சாகத்துடனும், புத்துணர்ச்சியுடனும் காணப்பட்டதாக நீலன் என்னிடம் தெரிவித்தார். பார்த்தசாரதி தன்னிடம் தெரிவித்த சிபாரிசுகள் குறித்து தான் நீண்டநேரம் சிந்தித்ததாக ஜெயார் கூறியிருக்கிறார். "உள்நாட்டில் இதற்குக் கடுமையான எதிர்ப்புக்கள் கிளம்பலாம். ஆனாலும், மாகாணசபைகளை அமைக்க நான் தீர்மானித்துவிட்டேன்" என்று ஜெயார் அவர்களிடம் கூறினார். "மிகத் துணிவான இந்த முடிவினை எடுத்ததற்காக நான் ஜனாதிபதியைப் பாராட்டினேன்" என்று தொண்டைமான் என்னிடம் தெரிவித்தார். அப்போது, சர்வகட்சி மாநாட்டில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் பங்குபற்றுவதில் இருக்கும் சிக்கல் குறித்து பாரத்தசாரதி தனது கரிசணையை முன்வைத்தார். முன்னணியினரையும் ஜெயார் சர்வகட்சி மாநாட்டிற்கு அழைக்கவேண்டும் என்று அவர் கோரினார். அதற்குப் பதிலளித்த ஜெயார், பிரிவினைவாதத்தைக் கைவிடும்வரைக்கும் முன்னணியினருடன் பேசுவதில்லை என்பது அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட முடிவு என்று கூறினார். அதன்பின்னர் பேசிய பார்த்தசாரதி, முன்னணியினரும் அரசாங்கத்துடன் பேசுவதில்லை எனும் முடிவில் இருப்பதாகக் கூறினார். "அரசாங்கமும் முன்னணியினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதே அவசியமானது" என்று பார்த்தசாரதி கூறவும், தான் இவ்விடயத்தை சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்போவதாக ஜெயார் பதிலளித்தார் தமக்கிடையே ஒத்துக்கொள்ளப்பட்ட மாகாணசபைகள் முறையிலான தீர்வுகுறித்த நகலை ஜெயாரிடம் அவர்கள் மூவரும் முன்வைத்தனர். அதனை வாங்கிக் கவனமாகப் படித்தார் ஜெயார். அதனைப் படித்துவிட்டு பார்த்தசாரதியைப் பார்த்து பின்வருமாறு வினவினார் ஜெயார், "இதில் நான் எங்கே கைய்யொப்பம் இடுவது?". அதற்குப் பதிலளித்த பார்த்தசார்தி, "இது ஒரு ஒப்பந்தம் அல்ல, நகல் மட்டுமே. ஆகவே, இங்கு கைய்யொப்பங்கள் தேவையில்லை" என்று கூறினார். கார்த்திகை 30 ஆம் திகதி மாலை இந்திராவைச் சென்று சந்தித்தார் ஜெயார். பேசப்பட்டு வந்த மாகாணசபை முறைபற்றி அவர்கள் கலந்துரையாடினர். பேசுவார்த்தைகளில் காணப்பட்ட முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்த இந்திரா, வடக்கும் கிழக்கும் இணைந்த ஒற்றையலகு ஒன்று உருவாவதே சரியானது என்று கூறினார். இதனை ஆட்சேபித்த ஜெயார், கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் பெரும்பான்மையாக வாழ்வதாகவும், கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைக்கப்படும் பட்சத்தில் இச்சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களின் எதிர்காலம் அச்சுருத்தலுக்கு உள்ளாகும் என்றும் கூறினார். மேலும், தனது ஆதரவாளர்களின் நம்பிக்கையினை தான் இழப்பது ஆபத்தானது என்றும் கூறினார். ஆகவே, தன்னால் மாகாணசபைகளை மட்டுமே அமைக்க முடியும் என்றும், தேவையேற்படின் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும், தமிழ்த் தலைமை விரும்பினால் வடக்குக் கிழக்கு இணைப்பினை சர்வகட்சி மாநாட்டில் முன்வைத்து தமக்கான ஆதரவினைத் திரட்டிக்கொள்ளட்டும் என்றும் மேலும் தெரிவித்தார். ஜெயார் கொடுத்த வாக்குறுதியினால் இந்திரா திருப்தியடைந்தார். "இறுதித் தீர்விற்கான முதற்படியாக இது அமையட்டும்" என்று அவர் கூறினார். மாகாணசபை திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவாதத்தினை இந்திராவுக்கு ஜெயார் வழங்கினார். வடக்கும் கிழக்கும் இணைக்கப்படுவது குறித்த ஜெயாரின் கருத்து அமிர்தலிங்கத்தைப் பொறுத்தவரையில் உவப்பானதாக இருக்கப்போவதில்லை என்று இந்திரா தெரிவித்தார். ஆனாலும், அமிர்தலிங்கத்தையும் இத்திட்டத்தினுள் உள்வாங்க தான் முயலப்போவதாகத் தெரிவித்த இந்திரா, இலங்கையினை எக்கட்டத்திலும் பிரிக்க இந்தியா அனுமதிக்கப்போவதில்லை என்றும், இலங்கையின் இறையாண்மை, பூகோள‌ உறுதிப்பாடு, சுதந்திரம் ஆகியவற்றை இந்தியா வெகுவாக மதிப்பதாகவும் ஜெயாரிடம் உறுதிபடத் தெரிவித்தார். பின்னர் முன்னணியின் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன், நீலன் திருச்செல்வம் ஆகியோரையும் தொண்டைமானையும் இந்திரா சந்தித்தார். தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் உத்தேச தீர்வுத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அவர்களை வேண்டிக்கொண்டார் அவர். இதனையடுத்து இத்திட்டத்தினை ஏற்றுக்கொள்வதாகச் சம்மதம் தெரிவித்த அமிர்தலிங்கம், வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படாது போகுமிடத்து தமிழர்களின் ஏகோபித்த எதிர்ப்பினை தாம் சந்திக்க நேரும் என்றும் இந்திராவிடம் தெரிவித்தார்.
  43. சாதாரண ஒரு பொதுமகனாலேயே இந்த தோல்வியை இத்தனை வருடம் கடந்தும் ஏற்றுக் கொள்ள முடியவில்லையே. உயிரை வெறுத்து ஆயுதம் தூக்கியவர்கள் எப்படி தாங்குகிறார்களோ? இது எப்போதும் எனக்குள் இருக்கும் கேள்வி. இணைப்புக்கு நன்றி நுணா.
  44. முன்னுரை தமிழீழத்தின் சுதந்திரத்திற்கான விடுதலைப் போராட்டத்தில் சிங்கள அரசின் படைத்துறை இயந்திரத்தின் கைகளால் தென் தமிழீழ தமிழ் மக்கள் பட்ட துன்பங்களும் துயரங்களும் சொல்லொணாதவை. சிங்கள இனவாதிகளால் ஏலவே திட்டமிடப்பட்ட ஒரு மண் பறிப்பு நிகழ்சி நிரலுக்கு ஏற்ப, தமிழரின் ஊர்மனைகள் அழிக்கப்பட்டு மண்பறிக்கப்பட்டுச் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தியதால் தமிழரின் ஆட்புலங்கள் திட்டமிட்டு சுருக்கப்பட்டன. இந்த ஊர்மனைகளில் வாழ்ந்த அல்லது விரட்டியடிக்கப்பட்ட பின் ஊர் திரும்பவிழைந்த தமிழரின் உயிர்கள் சிங்களப்படைகளாலும், சிங்களக் குடியேற்றவாசிகளை கொண்டு உருவாக்கப்பட்ட “ஊர்காவல்படை” என்ற துணைப்படையாலும் காவுகொள்ளப்பட்டன. இவ்வாறான சூழ்நிலையில் அகப்பட்டு தென் தமிழீழ தமிழ் மக்கள் அல்லுற்றுக்கொண்டிருந்த வேளையில் அழிவு மற்றொரு வடிவத்திலும் வந்து சேர்ந்தது. தமிழர்களோடு 'பிட்டும் தேங்காய்ப் பூவும்' போல முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர் என்ற அரசியல்வாதிகளின் கூற்றானது - குறிப்பாக, தமிழரசுக் கட்சி சார்பில் 1960 & 1968 ஆண்டு தேர்தலில் போட்டியிட்டிருந்த அமரர் அல்ஹாஜ் எஸ். சி. எம். மசூர் மௌலானா இவ்வுவமையைப் பாவித்துள்ளார் - பொய்யாகும் வகையில் தமிழர் மீதான முஸ்லிம்களின் தாக்குதல்கள் முற்றிப்போயிருந்தன, குறிப்பாக 1990ம் ஆண்டளவில். அமரர் எஸ். சி. எம். மசூர் மௌலானா 1985இற்கு முந்தைய காலகட்டத்தில் தமிழர்கள் மீது முஸ்லிம்களால் ஆங்காங்கே பெருந் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் முதன்முதலில் செய்யப்பட்டது 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ம் திகதி வீரமுனை (Tamilnation: State and Muslims Desecrate Ancient Tamil Village, K.N.Tharmalingam, Northeastern Herald May/June 2003) ஊரை எரித்தழித்தது ஆகும். இதுபோன்றவற்றில் குறிப்பிடத்தக்கது 1967 ஏப்ரலில் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்ட சாய்ந்தமருது தமிழ்ப் பிரிவு அழிப்பு (Tamilnation: New Year’s Bloody Dawn: Karativu 1985 K.N.Tharmalingam - Northeastern Herald October/November 2003). இவை மட்டுமன்றி இரு தரப்பிற்குமிடையில் காணிச் சிக்கல்கள் என இன்னும் பல சிக்கல்கள் நடந்தேறியிருந்தன. ஆனால் 1985 ஏப்ரலில் நடந்த 'காரைதீவுப் புத்தாண்டுத் தாக்குதல்' போன்று சிங்கள அரசின் துணையோடு அவை நடைபெற்றிருக்கவில்லை. இவ்வாறாக, அவ்வப்போது நடைபெற்றுவந்த உள்ளூர் குமுகாய மோதல்களை ஊதிப்பெருப்பித்து தொடர் இன-மத மோதலாக்கிய பெருமை ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவையும் லலித் அதுலத்முதலியையுமே சாரும். அமரர் எம்.எச். மொகமது காரைதீவுப் புத்தாண்டுத் தாக்குதலை சிங்கள அரசின் துணையோடு முஸ்லிம்கள் வெற்றிகரமாக நிறைவேற்றினர். இவ்வழிப்புக்குத் துணையாக அப்போதைய சிறிலங்கா அதிபர் ஜே.ஆர். ஜெயவர்தனாவால் எம்.எச். மொகமது என்ற முஸ்லிம் அமைச்சரும் அவரின் ஆதரவாளர்களும் கொழும்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். தாமதமாகினும், இவ்வழிப்பின் போது வெளி மாவட்ட முஸ்லிம்களும் பங்கேற்றிருந்தனர் என்ற தகவலை அமைச்சர் எஸ்.தொண்டமான் புலப்படுத்தினார் (Sri Lanka Guardian: Non –Tamil identity of Muslims 1 & 2 - A.R.M. Imtiyaz And S.R.H. Hoole). இத்தாக்குதல்களுக்கு சிங்கள வான்படையின் உலங்குவானூர்திகளும் உதவி புரிந்தன என்பது கவனமெடுக்க வேண்டிய தகவலாகும் (Tamilnation: New Year’s Bloody Dawn: Karativu 1985 K.N.Tharmalingam - Northeastern Herald October/November 2003). மேற்குறிப்பிடப்பட்ட சிறிலங்காவின் முஸ்லிம் அமைச்சர் அமரர் எம்.எச். மொகமது, 1983 கறுப்பு சூலை இனப்படுகொலையின் போது தனது முஸ்லிம் ஆதரவாளர்களை குண்டர்களாகப் பாவித்து மத்திய கொழும்பில் வாழ்ந்து வந்த தமிழர்களையும் அழித்துள்ளார் என்பது கூடுதல் தகவலாகும் (Sri Lanka Guardian: Non –Tamil identity of Muslims 1 & 2 - A.R.M. Imtiyaz And S.R.H. Hoole). எவ்வாறெயினும் அக்காலத்திலும் ஆங்காங்கே வெகுசில முஸ்லிம்கள் தம்மை மத அடிப்படையில் முஸ்லிமெனாது, பேசும் மொழியால் தமிழராக மட்டும் அடையாளப்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். முதல் இஸ்லாமியத் தமிழ் மாவீரர் லெப். ஜோன்சன் {ஜெயா ஜுனைதீன்}, 2.6.1986 அன்று தலைநகர் திருமலைக்கு அருகிலுள்ள மேன்காமம் என்ற சிற்றூரிலிருந்து பிடித்துச்செல்லப்பட்டு சிங்களக் குடியேற்ற ஊரான தெகிவத்தையிலிருந்த படைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 தமிழ்ப் பெண்கள் (ஆகக் குறைந்து ஒராள் ஆடை களையப்பட்டு) குறித்த தகவல்களை மேஜர் கணேஸின் முகாமிற்கு ஓடிவந்து வழங்கிய இளைஞன் (விடுதலைப்புலிகள் குரல் 11) என்பன 1987இற்கு முன்னர் நடைபெற்ற நிகழ்வுகளில் நானறிந்த குறிப்பிடத்தக்கன ஆகும். தமிழ்த் தேசியப் போராட்டத்திற்குள் மதப் பிளவையும் குழப்பத்தையும் நிரந்தரமாக விதைப்பதை நோக்கமாகக் கொண்டு சிங்களத் தலைவர்களால் கேந்திர கொள்கை மொசாட்டின் ஆற்றுகையோடு வகுப்பிக்கப்பட்டது. அவற்றுள் ஒன்றுதான் முஸ்லீம் ஊர்காவலர்களைப் பாவிப்பதாகும் (Tamilnation: The forced evacuation of Muslims in 1989: Some Reflections, Nadesan Satyendra, 1996). அதை முஸ்லிம் குமுகாயத்திற்குள் நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிறுவனர் மு. ஹு. மு. அஷ்ரப் முக்கிய பங்கு வகித்தார். அக்கால கட்டத்தில் சிறிலங்கா அரசோடு சேர்ந்தியங்கி வந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதில் முக்கிய பங்காற்றியது (விக்கிலீக்ஸ்: SOURCE REPORT ON MUSLIM MILITANCY IN SRI LANKA). இஸ்லாமிய ஜிகாத் என்ற பயங்கரவாதக் குழுவின் நிறுவனரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிறுவனருமான அமரர் மு. ஹு. மு. அஷ்ரப் கிழக்கு மாகாணத்தில், 1990களுக்கு முன்னர், அஷ்ரப் தனது தொடர்புகளைப் பயன்படுத்தி "இஸ்லாமிய ஜிகாத்" என்ற அமைப்பை நிறுவினார். அதில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் உடன் தொடக்கத்தில் தொடர்பு/உறுப்பினராக இருந்த தமிழீழத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களை சேர்த்துக் கொண்டார். பின்னர் மதவெறி மூலம் உந்தப்பட்ட பன்னூறு முஸ்லிம் இளைஞர்கள் தாமாக இணைந்துகொண்டனர். இடையில், அஷ்ரபினால் மேற்கோள்ளப்படவிருந்த மற்றொரு நாசத் திட்டத்தையும் குறிப்பிட விரும்புகிறேன். 1992ம் ஆண்டில், அஷ்ரப் மீண்டும் ஒரு தமிழின அழிப்பிற்கு வலுச்சேர்க்கும் வகையில் கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார். அவ்வாண்டு சூலை மாதத்தில் தனி முஸ்லிம் படையணி ஒன்றை சிறிலங்கா படைத்துறையில் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் சிறிலங்கா படைத்துறை அதிகாரி ஒருவர் இக்கோரிக்கை கருத்தில் கூட எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று மறுத்துரைத்திருந்தார். அப்போது சிறிலங்காவின் ஒட்டுக்குழுவாக விளங்கிய புளட் அமைப்பினைச் சேர்ந்த சித்தார்த்தன், இவ்வுருவாக்கல் மூலம் அஷ்ரப் புதிய சிக்கல்களைத் தோற்றுவிக்க முயல்கிறார் என்று மறுதலித்தார் (முஸ்லிம் ஜிகாத் படையணி: தமிழ்க்குழுக்கள் ஆட்சேபம், 1992/07/31, ஈழநாதம்). இந்த புளட் கும்பலும் (தமிழர்களால் ஆனது), இதே போன்று இன்னொரு கும்பலான ரெலோவும் சிங்களப் படைகளோடு சேர்ந்து தமிழர்களை கொலை செய்தது, 1990களில், என்பது குறிப்பிடத்தக்கது. இது மறுக்கப்பட்டமையால், பின்னர் மீளவும் 19/10/1992 அன்று மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார் அஸ்ரப். அதில் முஸ்லிம் படைத்துறைப் பிரிவொன்றை அமைக்கத் தவறினால் தாம் தனி போராளிப் படை ஒன்றை அமைப்போம் என்று உரைத்தார். மட்டுமின்றி சிறிலங்காப் படைத்துறையில் முஸ்லிம் பிரிவு அமைக்க தாம் 10 ஆயிரம் முஸ்லிம்களைத் தருவோம் என்றும் அதனை கொண்டு சிறிலங்காப் படைத்துறையில் உள்ள ஆளணி சிக்கல்களைத் தீர்ப்பதோடு புலிகளுக்கு எதிராகவும் போராடலாம் என்றார். அத்துடன் புலிகளுக்கு மொசாட் உதவுவதாக குற்றஞ்சாட்டியதோடு புலிகளுக்கு எதிராக "ஜிகாத்" என்ற புனிதப்போரை அறிவிக்கவும் தயங்க மாட்டோம் என்றார் (தனிப் போராளிப் படை அமைப்போம்: அஸ்ரப் அரசுக்கு எச்சரிக்கை, 1992/010/19, உதயன்). இவ்வாறு இஸ்லாமிய ஜிகாத் என்ற பயங்கரவாத அமைப்பில் இணைந்து கொண்டவர்கள், பின்னாளில், இந்தியப்படை ஈழ மண்ணிலிருந்து வெளியேறியவுடன், பிரேமதாசா அரசினால் உருவாக்கப்பட்ட ஊர்காவல்படையினுள் உள்வாங்கப்பட்டனர் (உதயன்: 27/05/1995, "ஜிகாத் " இயக்கம் மீண்டும் தமிழர் விரோத நடவடிக்கை). இந்த இனமுரண் வளர்ப்பு வேலையானது இந்திய அமைதிப்படையின் கொடூரமான காலகட்டத்திற்குப் பின் உடனடியாக, இரண்டாம் ஈழப்போர் வெடிக்க முன்னர், பிரேமதாசாவால் முன்னெடுக்கப்பட்ட நாச வேலைத்திட்டங்களில் ஒன்றாகும். இத் துணைப்படையானது சிறிலங்கா அரசாங்கத்தால் நேரடியாக முஸ்லிம்கள் வாழும் 'ஊர்களை காக்கப்பதற்கான படை' என்று பொருள்படத்தக்க "ஊர்காவல் படை" என்ற பெயரில் ஒரு துணைப்படையாக உருவாக்கப்பட்டது ஆகும். இதன் மூலம் ஜே.ஆர்-முதலி திட்டத்தின் தொடர்ச்சியாக, அதன் அடுத்த கட்டமாக, முஸ்லிம்களை அவர்கள் அரசியல்வாதிகள் மூலம் தமிழர் தம் பகைவர் என்ற கொதிநிலைக்கு 1990 இல் இருந்த பிரேமதாச அரசாங்கம் கொணர்ந்து இருந்தது. இதற்கு அதாவுல்லா போன்ற அடுத்த கட்ட தலைவர்களும் இவ்வினமுரணை வளர்ப்பதில் முன்னின்று செயல்பட்டார்கள். திரு. ஏ. எல். எம். அதாவுல்லா முஸ்லிம் ஊர்காவல்படைக்கு உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் சிறிலங்காப் படையப் புலனாய்வுப் பிரிவினதும், சிறப்பு அதிரடிப்படையினதும் ஒத்துழைப்புகளும் ஆயுதப் பயிற்சி மற்றும் ஆயுதங்களும் கிடைக்குமாறும் சிறிலங்கா அரசு வழிவகை செய்து வளர்த்தெடுத்தது. இந்தப் படைக்குத் தேவையான ஆயுதங்கள் சில நேரங்களில் அதாவுல்லாவிற்குச் சொந்தமான ஊர்திகளில் கொண்டுசெல்லப்பட்டு வழங்கப்பட்டன. இரண்டாம் ஈழப்போரின் தொடக்க ஆண்டான 1990 இல் முஸ்லிம் காடையர்களாலும் (மதவெறி பீடித்த முஸ்லிம்கள்) முஸ்லிம் ஊர்காவற்படையினராலும் (முன்னர் ஜிகாத்) கொலைவெறித் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. இவர்களை சிங்கள சிறப்பு அதிரடிப்படை பின்னின்று இயக்கியது. இந்தச் சிறப்பு அதிரடிப்படையிலும் பல முஸ்லிம்கள் இணைந்து தமிழர் மீதான தாக்குதல்களை முன்னின்று நடாத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதல்கள் சிங்கள இனவாதத்தின் தமிழர் மீதான கோரங்களுக்கு நிகரான ஒரு கட்டுமான-இனப்படுகொலையின் முஸ்லிம் மதவாத பயங்கரவாதத்தின் பாணியாக இருந்தது. இதன் காரணமாக தென் தமிழீழம் வாழ் தமிழ் மக்கள் அல்லோலகல்லோலப்பட்டனர். இலங்கையின் கிழக்கு மாகாணத்தின், தென் தமிழீழத்தின், இன விகிதாச்சாரத்தை மறுவடிவமைப்பதில் முஸ்லிம் பயங்கரவாதிகளின் பயங்கரவாதச் செயல்களும் சிங்களவரின் பேரினவாத வன்முறைச் சம்பவங்களும் முக்கிய பங்கு வகித்தன. இந்த மாற்றத்தால் 1948 க்கு முன்னர் தமிழர்கள் அறுதிப் பெரும்பான்மை என இருந்த நிலையிலிருந்து மூவின சமநிலை என்ற நிலைக்கு இம்மாகண சனத்தொகை மாற்றங்கண்டது. முஸ்லிம் மதப் பயங்கரவாதம் மூலம் மட்டு-அம்பாறை மாவட்டங்களில் பெரிய முஸ்லிம் ஊர்களுக்கு அருகில் இருந்த சிறிய தமிழ் ஊர்களில் வாழ்ந்த தமிழர்களை கொன்று/விரட்டி விட்டு அதன் காணிகளில் நிலப் பரப்புகளை தமது ஊர்களோடு இணைத்துக்கொண்டனர். அதில் வசித்த தமிழர்கள் கொல்லப்பட்டதனாலோ விரட்டியடிக்கப்பட்டதனாலோ மீளத் திரும்பேலாமல் செய்யப்பட்டனர். இச்செயலிற்கு சிறிலங்காவின் சிங்கள அரசும் துணை நின்றது. இதன் மூலம் தமிழரின் இனப்பரம்பல் குறைக்கப்பட்டது. முஸ்லிம் ஆயுதக் குழுவினர் சிங்களப் படையினரின் துணையோடு, குறிப்பாக சிறப்புப் பணிக்கடப் படை (STF) என்ற சிறப்பு அதிரடிப்படை, தமிழர்களின் ஊர்மனைகளை மண்ணாக்கியதோடு சொத்துக்களை எல்லாம் நாசப்படுத்தினர். அத்தோடு தாங்கள் தாக்கும் ஊர்களில் வாழும் தமிழ் மக்களை கொன்று குவித்ததோடன்றி அங்கு வாழும் தமிழ்ப் பெண்களை காட்டுத்தனமாக வன்புணர்வு செய்து கொடூரமான முறைகளில் கொலை செய்தனர். அகதி முகாம்கள் என்ற போர்வையில் சிங்கள அரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு முகாம்களுக்குள் புகுந்து தமிழர்களை கட்டுக்கட்டாகப் பிடித்துச்சென்று கொன்றொழித்தனர். இக்கொலைகளில் பெரும்பாலானவை சாட்சியங்கள் கிடக்காதவாறு துடைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான முஸ்லிம் பயங்கரவாதத்தின் படுகொலைகளால் தமிழர்கள் பட்ட வேதனைகள் கொஞ்சநஞ்சமல்ல. வீடுவாசல்களைத் துறந்து மரங்களுக்குக் கீழும், மதகுகளுக்குக் கீழும், படுவான்கரைக் காடுகளிலும், ஆற்றங்காரை ஓரங்களில் சிறு குடிசைகள் அமைத்தும் தப்பியொட்டி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இவர்களில் சிலர் ஒருநேர உணவிற்கே வழியின்றியும் சிலர் இரவு வேளைகளில் ஊர்மனைகளுக்குச் சென்று தேங்காயையும் மாங்காயையும் எடுத்து வந்து உண்ணும் அவல நிலைக்கும் தள்ளப்பட்டிருந்தனர். ('துன்பங்களைப் பகிர்ந்துகொள்வோம்' & 'இப்படித்தான் தென்தமிழீழம் விடுதலைப்போருக்கு விலை செலுத்துகிறது' ஐப்பசி-கார்த்திகை 1990, விடுதலைப்புலிகள்) 1732 ச. மைல் பரப்பளவான அம்பாறை மாவட்டத்தில் 1200 ச. மைல்களை சிங்களவர்கள் வன்வளைத்துவிட்டார்கள், 1990 வரையில் ('துன்பங்களைப் பகிர்ந்துகொள்வோம்', ஐப்பசி-கார்த்திகை 1990, விடுதலைப்புலிகள்). அம்பாறையின் ஏனைய இடங்களில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஏனைய இடங்களில் வாழும் தமிழர்கள் 80,000 பேரை பயங்கரவாதம் மூலம் விரட்டி வந்தனர், 1991 வரையில். 1990களில், ஒரு கட்டத்தில், முஸ்லிம் ஊர்காவல் படையினரின் கொலைவெறிக் கோரத் தாக்குதல்கள் ஓய்ந்தாலும், பின்னாளில் ஜெனீவா போர்நிறுத்த உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டதன் பின்னர் மீண்டும் முளைவிட்டது. அது ஏற்கனவே செயலுற்றுக்கொண்டிருந்த ஏனைய ஒட்டுக்குழுக்களுடன் சேர்ந்து இயங்கத் தொடங்கியது. இத்தகவலானது 2006ம் ஆண்டு இரண்டாம் மாதத்தில் ஜெனிவாவில் வைத்து 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் அவர்களால் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பெருத்த சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது. ஆனால் இவ்வறிக்கையின் முழு விரிப்பும் புலிகளால் ஏனோ பொதுவெளியில் - ஊடகங்களுக்கு - வெளியிடப்படவில்லை. கசிந்த குறிப்பிடத்தக்க தகவல்களை சண்டே லீடர் வாரயேடு 2006ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் வெளியிட்டது. இத்தகவலையெடுத்து பல்வேறு தமிழ் நாளேடுகள் வெளியிட்டிருந்தன. இவ்வறிக்கையில், குறிப்பாக, திருகோணமலை மாவட்டத்தில் நூர்தீன் நிஜாம், நூர்தீன் ஷரோம், பஷீன் ஷரோம், குனேஸ் நஜீம் ஆகியோர் தலைமையில் இயங்கும் ஜிகாத் குழுக்கள் என்ற முஸ்லிம் ஆயுதக்குழுக்களின் முழு விரிப்பும் தெரிவிக்கப்பட்டிருந்தது (தினக்குரல் வழியாக யாழ் கருத்துக்களம் 2: முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பில் பஃவ்ரல் அமைப்பு வெளியிட்ட அறிக்கை, 19/03/2006). தென் தமிழீழத்தில் ஜிகாத் குழுக்களின் முதன்மைத் தளங்களாக மூதூர், கிண்ணியா, தோப்பூர், ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி, அக்கரைப்பற்று போன்ற சிறிலங்காப் படைகளின் வன்வளைப்பிற்குட்பட்ட பரப்புகள் விளங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது (தினக்குரல் வழியாக யாழ் கருத்துக்களம் 2: முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பில் பஃவ்ரல் அமைப்பு வெளியிட்ட அறிக்கை, 19/03/2006). மேலும், அம்பாறை மாவட்டத்தில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய முஸ்லிம் அரசியல்வாதி ஒருவருடன் இந்த ஆயுதக் குழுக்கள் கமுக்கமாக செயற்படுவதாக பல தரப்பினராலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இவ்வறிக்கையில் இவர்களுக்கு நிதியுதவி மற்றும் ஆயுதப் பயிற்சி வழங்கியோர் குறித்த தகவல்களும் இடம்பெற்றிருந்ததாக கசிந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜிகாத் அமைப்புடன் தொடர்புடைய பல முக்கிய முஸ்லிம் பயங்கரவாதிகள் 2006ம் ஆண்டிற்கு முன்பு இஸ்லாமிய மதக் கல்வியைப் பெறுகிறோம் என்ற போர்வையில் பாக்கிஸ்தானிய புலனாய்வுத்துறையின் ஆதரவுடன் பாக்கிஸ்தானுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் பாக்கிஸ்தானின் மலைச் சாரல்களில் லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் உள்வாங்கப்பட்டு ஆயுதப் பயிற்சியை அவர்களிடத்தில் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2006ம் ஆண்டில் சிறிலங்காவிற்கான அரசதந்திரியாக பணியாற்றிய பாக்கிஸ்தான் உளவுத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் ஜிகாத் ஆயுதக்குழுவிற்கு பயிற்சி அளித்து ஒருங்கிணைத்து உதவியதாகவும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது (வீரகேசரி வழியாக யாழ் களம் 2: புலனாய்வு பிரிவின் நெறிப்படுத்தலில் திருகோணமலையில் ஜிகாத்குழு, 12/03/2006). முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கும் பாக்கிஸ்தானுக்குமான தொடர்பை பின்னாளில் கசிந்த விக்கிலீக்ஸ் தகவல்கள் மூலமும் உறுதிப்படுத்தக்கூடியதாக உள்ளது. விக்கிலீக்ஸின் தகவலின் படி, தமிழீழத் தலைநகர் திருகோணமலையில் நொக்ஸ் குழு (மதிப்பிற்குரிய ஆங்கிலேயன் ஒருவரின் பெயரால் பெயரிடப்பட்டது), ஒசாமா குழு, ஜெட்டி குழு (Jetty==இறங்குதுறை. இதில் துறைமுகத்தில் வேலை செய்யும் முஸ்லீம்களே பெருவாரியாக இடம்பெற்றிருந்தனர்.) ஆகியன செயற்பட்டன. அம்பாறையில், முஜாகிதீன் குழு செயலுற்றது. 2006இன் நிலைமையின் படி 150 ஆயுததாரிகள் இதில் உறுப்பினராய் இருந்துள்ளனர். இந்த ஆளணி எண்ணிக்கையானது ஒசாமா குழுவை விட அதிகமாகும். இந்தக் குழுக்களிடம் புலிகளிடமிருந்து பிரிந்து சென்று தேச வஞ்சகமிழைத்த கருணா குழுவினது ஆயுதங்கள் இருந்தனவாம் (விக்கிலீக்ஸ்: SOURCE REPORT ON MUSLIM MILITANCY IN SRI LANKA). சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவர் திரு. ரவூப் ஹக்கீம் | இப்படமானது இவர் சிறிலங்கா அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றஞ்சாட்டல்களுக்கு மறுப்புத் தெரிவித்து சிங்கள அரசைக் காப்பாற்ற அல் ஜெசீரா தொலைக்காட்சியில் நேர்காணல் வழங்கிய போது எடுக்கப்பட்டதாகும். இவ்வாறாக முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் குறித்த ஆதாரங்கள் தவிபு ஆல் முன்வைக்கப்பட்ட போதிலும் அப்படி எதுவும் இல்லையென்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அடியொட்ட மறுத்துரைத்தார். ஆயினும் பஃவ்ரெல் (PAFFREL) அமைப்பு தம்மிடம் இதற்கான ஆதரங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளதென்று தினக்குரல் 19/03/2006 அன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இதே ஹக்கீம் தான் 2002ம் ஆண்டு சூன் 23ம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூதூர் அரசியல்துறை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களின் செயற்பாட்டை அக்குழுக்களின் பெயரைக் குறிக்காமல் ஒப்புக் கொண்டார் (புதினம்: கிழக்கில் உதயமாகிறது "ஜிகாத்" குழு!, 28/03/2006) என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற இந்த முஸ்லிம் பயங்கரவாதக் குழுக்களின் செயற்பாடுகளால் தமிழர்கள் எண்ணற்ற வேதனைகளை அனுபவித்தனர். எனினும் தென் தமிழீழம் வாழ் தமிழ் மக்கள் இக்கொடுமைகளையெல்லாம் தாங்கியபடியே மனவுறுதி தளராமல் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பங்களித்தனர். *****
  45. தாண்டியடி (புதுமண்டபத்தடி) மாவீரர் துயிலுமில்லம் "தாய்நிலத்தை காதல் செய்து தாலிகட்டிக் கொண்டவர்! தலைமகனை நெஞ்சினிலே தாங்கி நிற்கச் சொன்னவர்!" கல்லறைகள் கட்டப்படாத மாவீரர் பீடம்:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.