Leaderboard
-
suvy
கருத்துக்கள உறவுகள்8Points33600Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்8Points19129Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்8Points46790Posts -
alvayan
கருத்துக்கள உறவுகள்6Points5417Posts
Popular Content
Showing content with the highest reputation on 12/30/23 in all areas
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
1. இந்த வீடியோவில் விஜயகாந்த் எப்படி பட்ட தமிழ் உணர்வாளராய் இருந்தார் என மிக அழகாக கூறப்பட்டுள்ளது. இந்த விஜயகாந்தைத்தான், அவரின் கடைசிகாலங்களில் தெலுங்கன், தமிழை தமில் என உச்சரிப்பவர் என சிலர் விமர்சித்தனர். 2. அரசியல் என வந்து விட்டால் அதன் பின் சதிகளை சந்திக்காமல் இருக்க முடியாது. ஆனால் தனியே சதிகள் மட்டும் அல்ல. உண்மையில் நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் அதே கூர்மையோடு sharpness அரசியலில் இருந்திருப்பின் - இன்றைக்கு அவர் முதல்வராக கூட வந்திருப்பார். கட்சி தொடங்கிய சில காலத்திலேயே அவரின் sharpness அதள பாதாளத்தில் வீழ்ந்து விட்டது. இந்த வீழ்ச்சியின் ஆரம்பம்தான் பொது இடங்களில் அவர் அநாகரீகமாக நடக்க தொடங்கியது. இதை ஜெயும், கருணாநிதியும் கீழ்தரமாக பாவித்து கொண்டார்கள். அதன் பின் சுதீசும், பிரேமலதாவும் அவரை ஒரு பொம்மை போல முன்னிறுத்தி எந்த ஊழல் அரசியலை கேப்டன் வெறுத்தாரோ அதையே செய்தார்கள். இப்ராஹிம் ராவுத்தரை கேப்டன் பிரிந்ததில் ஆரம்பித்து, குடிப்பழக்கத்தை நிறுத்துகிறோம் என சிகிச்சை கொடுத்து அவரை மரத்துப்போக செய்தது, அவர் சேர்த்த எம் எல் ஏக்களை, கட்சியை சிதற அடித்தது என எதிரிகளை விட கூட இருந்தோரின் சுயநலத்துக்கு கேப்டன் பலியாகியதுதான் அதிகம். கேப்டன் வாழ்நாள் கனவாக தொடங்கிய கட்சி, கடைசியில் வெளிபடையாக பண பேரம் படியாததால் கடைசி நேரத்தில் கூட்டணி மாறிய அவலத்தை கண்டது. அதேபோல் எதை விடவும் கட்சிக்கு சுதீஸ் ராஜ்யசபா போவதே முக்கியம் என சுருங்கியும் போனது. கேப்டன் ஒரு அற்புதமான ஆத்மா. இப்போ அவருக்கு கிடைக்கும் புகழாஞ்சலி எல்லாம் அவர் சுயநினைவில், தன் கட்டுப்பாட்டில் இருந்த போது அவர் நடந்து கொண்ட விதத்துக்கு கிடைக்கும் கெளரவம், அங்கீகாரம். ஆனால் கடந்த 20-15 வருடங்களாக அவர் விஜயகாந்தாகவே இருக்கவிலை என்பதே உண்மை.5 points
-
பாரிய நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை
வரப்போகுது வரப்போகுது என்று சொல்லி ஒரு நாள் திரும்ப வரப்போகுது என்று வைப்போம். எச்சரிக்கை கொடுப்பது சரி. இன்னோர் சுனாமி அழிவின் பாதிப்புக்களை தடுக்க/குறைக்க எப்படியான முன்னேற்பாடுகள் தற்போது உள்ளன? எச்சரிக்கை கொடுக்கப்பட்டால் அந்த எச்சரிக்கையை மக்கள் செவிமடுத்து கேட்டு தம்மை பாதுகாக்கும் ஏற்பாடுகளில் இறங்குவார்களா? இயற்கை அழிவுகளுக்கான ஆபத்துக்கள் நிறையவே உள்ளன. இதற்கான தயார்ப்படுத்தல் உள்ளதா?4 points
-
இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
3 pointsதமிழினத்தின் கலாச்சாரத்தை,மொழியை,பண்பாடுகளை,இருப்பிடத்தை,உரிமைகளை வேரோடு அழிக்க எதிரி கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றான். நாமோ ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என பாடிக்கொண்டு திரிவோம். இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.3 points
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
நீங்கள் தூண்டியது இல்லை என்பதை நிறுவ இல்லை எப்படி முடியும்??? அது முடியாத காரியம் உங்கள் எழுத்தில் எந்த கோபமும் இல்லை ஆனால் தமிழர்களின் தீர்வுக்காக உழைக்கிறேன் என்று நாடகம் ஆடுவது கோபத்தை தரும் தருகிறது நீங்கள் ஒருவர் மட்டுமே யாழ் களத்தில் கேட்கும் கேள்விகளுக்கு பதில்கள் அளிக்க முடியாத கருத்தாளன். உங்களால் முடியாதாதை நாங்களும் எதிர்பார்க்க கூடாது அதாவது பதில்கள் வழங்கும் அற்றல். திறமை இல்லை3 points
-
இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
2 pointsநான் "படித்த நல்ல பின்புலம் " என்று சொன்னது தவறாக புரிந்துகொள்ளப்பட அதிக வாய்ப்பு இருப்பதை அப்படி எழுதும் பொழுது உணர தவறி விட்டேன். எங்களுக்கு இருக்கும் அக்கறை ஏன் இந்தப் பிள்ளையை பெற்ற பெற்றோருக்கு இல்லை என்று யோசித்த பொழுது அந்தப் பெற்றோருக்கு பக்குவமோ, தெளிவான தூர நோக்குடனான சிந்தனையோ ஏன் இல்லாமல் போனது என்ற கேள்வி வந்ததால் அப்படி சொல்லி விட்டேன். "எப்பொழுதுமே பெற்றோரின் நல்ல கல்விப் பின்புலம் என்பது மட்டுமே பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்வதில் செல்வாக்கு செலுத்தும் காரணி" என்னும் கூற்று தவறுதான். தவறுக்கு மனதார வருந்துகிறேன். குறிப்பிட்டு காட்டிய @Kapithan @விளங்க நினைப்பவன் @நிழலி ஆகியோருக்கு நன்றி2 points
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு கோலம் போடும் பாட்டாலே மயிலு இள மயிலு மாமன் கவி குயிலு ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே பெண் : ஒன்ன எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன் கன்னிப் பொண்ணுதானே என் மாமனே என் மாமனே பெண் : ஒத்தையிலே அத்த மக ஒன்ன நெனச்சி ரசிச்ச மக கண்ணு ரெண்டும் மூடலையே காலம் நேரம் கூடலையே பெண் : மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு நானா மாறக் கூடாதா நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம் கூடும் காலம் வாராதா மாமன் காதில் ஏறாதா பெண் : நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம் மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான் இந்த நேரந்தான் பெண் : ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன் ஓலப்பாய போட்டு வச்சேன் இஷ்டப்பட்ட ஆச மச்சான் என்ன மேலும் ஏங்க வச்சான்..........! --- ஊரு சனம் தூங்கிருச்சு ---2 points
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
2 points
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
2 points- கருத்து படங்கள்
2 points2 points- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
அப்படிக் கோபப்படுபவர்களின் கோபம் உண்மையானதாக இருக்குமாயின் அவர்களும் அவர்களைத் தடவிக்கொடுத்து உசுப்பேற்றி வேடிக்கை பார்ப்போரும் வெளிநாடுகளிற்கு வராமல் இலங்கையில் இருந்து ஆயுதம் தூக்கியிருக்க வேண்டும். 😏 கனடாவில் இருப்பவர்களையே காட்டிக்கொடுப்பதற்கு ஓடித்திதிரியும் நீங்கள்...ஊருக்குப்போனால் என்ன செய்வீர்கள்..யாழில் முதலில் உங்கள் உய்த்தறிதல் வேலையை கைவிடுங்கள்...இனத்துக்கு ஏதாவது நன்மை செய்யவேண்டுமென்றால்...நல்லது செய்யும் நல்ல தகுதியானவரை தெரிவு செய்து ஆதரியுங்கள்.. ..அனைவரும் ஆதரவுதருவோம் (உண்மையானால்)நடிப்பின்மூலம்.....இனத்தை அழிக்க கனவு கண்டல் அது என்றைக்குமே பலிக்காது..இனத்தை அழிக்க கான்சர்நோய் போல செயல்படாதீர்கள்... இந்தத் திரியிலல்ல..நான் பல திரிகளில் அவதானித்த பின்பே உங்களுடன் மோத வெளிக்கிட்டேன்...ஏனெனில் யாழின் நீண்ட கால வாசகன்...உங்களைத்தவிர நான் யாருடனும் முரணாண கருத்தெழுதி...பழக்கப்பட்டவனுமல்ல.. எனது கேள்விகளுக்கு பதிலளிக்காவிட்டால் என்னிடம் இருந்து பதில் வரும் என யாரும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். உங்கடை கேள்விகளீல் என்ன இருக்கிற்து என்பதை ..திருப்பிப் பாருங்கள்....அப்ப விளங்கும்...எதுவுமே கிடையாது...அதில் இருப்பது நீ சொல்லு பார்ப்பம்... இதுவா கேள்வி...இதைத்தான் சொல்வது ..அந்த நோய் என்று..2 points- இரண்டு சிறுவர்களையும் நிர்வாணமாக்கி தடுத்துவைத்துள்ள இஸ்ரேல் இராணுவத்தினர்- வெளியாகியுள்ளது புதிய வீடியோ
உரிமைகளைப் பறித்து உயிர்களைப் பலியெடுத்து உயிர்வாழும் உலகு. இதில் சனநாயகமாம்... மனித உரிமையாம்.... மனித உரிமை சபையாம்.. மனித உரிமைக் காவலர்களாம்...2 points- பலவீனமான நிலைக்கு செல்கின்றதா இஸ்ரேல்?
பலவீனமான நிலைக்கு செல்கின்றதா இஸ்ரேல்? | அரசியல் களம் | அரசியல் ஆய்வாளர் அருஸ்1 point- இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
1 point- பாரிய நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை
இதுவே இலங்கை அரசினதும் ,பெரும்பான்மை இனத்தினதும் இலகு வழி...பாவத்துக்கு இரங்கிப்போட்டதை..பக்கெடில் நிரப்பிவிட்டு..ஆடம்பரமும் அதிகாரமும்1 point- செவ்வரத்தம் பூக்காறி-பா.உதயன்
1 point1 point- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
நான் எப்பவும் சொந்தமாகவே யோசிப்பேன்..செய்வேன்..ஏவலாளிகளின் சொல்லுக்கோ ,காசுக்கோ ஆசைப்பட்டு...இனத்தை அழித்து ஒழித்து...செயல்பட விரும்புவதில்லை .. விரும்பவும் மாட்டேன்..1 point- நீங்களும் ஆகலாம் நொஸ்டிரடாமஸ் 2023
வரும் 2024 வருடத்துக்கான எனது கணிப்புக்களை இன்னும் 36 மணிநேரங்களுக்குள் எதிர்பாருங்கள்………1 point- மஜ்னு முதல் மாமாக்குட்டி வரை
1 pointமஜ்னு முதல் மாமாக்குட்டி வரை சி.சரவணகார்த்திகேயன் காதல் - எத்தனை இனிமை ததும்பும் ஒரு சொல்! எவ்வளவு இன்ப மயமான ஒரு செயல்! காதலின் ஆதார குணம் பரஸ்பரத் தன்மை. ஆனால் காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரி அனுபவத்தை அளிக்கிறதா? ஆணின் காதலும் பெண்ணின் காதலும் ஒன்று போலவேதான் நமது சமூகத்தால் அணுகப்படுகிறதா? காதலில் இருக்கிறதா சமத்துவம்? வரலாறு நெடுகிலும், புராணப் பக்கங்களிலும், இலக்கிய இடுக்குகளிலும் ஆண்களின் காதலானது கொண்டாடப்படாதது மட்டுமின்றி கண்டுகொள்ளப்படாதது மட்டுமல்லாது, கேலிக்கும் கிண்டலுக்கும் வசைக்கும் வெறுப்புக்கும் உள்ளாகியேதான் வந்திருக்கிறது. ஆணின் காதல் என்பது அவனது இதர வெற்றிகளைக் காட்டி அடையும் ஒரு பரிசாகவே காலங்காலமாகவே இருந்து வருகிறது. இரண்டாமிடத்திலுள்ள ஒருவன் எப்படிப் பொன் பதக்கத்தை விரும்ப முடியாதோ, அதே போல் முதலிடத்தில் வந்த ஒருவன் ஒருபோதும் வெள்ளிப் பதக்கத்தைக் கனவு கண்டு விட முடியாது. அப்படி நடந்தால் அது ஒரு பிறழ்வு. இன்னும் சொன்னால் ஆண்களின் காதல் என்பது பெண்களுடனான போராட்டம் மட்டும் அல்ல, சக ஆண்களுடனான போரும்தான். அவனது காதலுக்கு ஆண்களுமே எதிரிகளே. ஆண் தான் காதலிக்க ஒரு பக்கம் ஆக மென்மையான கவிதைகளைப் புனைய வேண்டி இருக்கிறது; மறுபுறம் ஆகக் கொடூரமான வழிகளில் குருதி சிந்தவும் வேண்டி உள்ளது. பெண்கள் மீது உடல்ரீதியான வன்முறைகளை, பாலியல் குற்றங்களை இழைக்கும் அதே ஆண்தான் மறுபுறம் உயிருருகக் காதலிக்கவும் அதன்நிமித்தம் துயருறவும் செய்கிறான். அப்படி நாமறிந்த சில ஆண்களுக்குப் பின் இருக்கும் அரிதான காதலைப் பார்ப்போம். (இலக்கியமோ திரைப்படமோ மக்களின் வாழ்விலிருந்து பாதிப்பை எடுத்துக் கொண்டு திரும்ப மக்களின் வாழ்விலேயே செல்வாக்கு செலுத்துகிறது. எனவே நிஜமாக வாழ்ந்த காதலர்களுடன் மனிதக் கற்பனையில் உதித்த காதலர்களும் இப்பட்டியலில் உண்டு.) * (1) மஜ்னுவின் காதலிலிருந்தே ஆரம்பிக்கலாம். அவன் ஏழாம் நூற்றாண்டு அரபுப் பழங்குடி. காஸ் இபின் அல்-முலவ்வா என்பதே அவனது அசல்ப் பெயர். பள்ளிப் பருவத்திலேயே உடன் படித்த லைலா அல்-ஆமிரியா என்பாளைக் காதலிக்க ஆரம்பித்தான். பித்தேறி அவளது அழகை வர்ணித்துக் கவிதைகள் எழுதினான். அவளை ஈர்க்க அவற்றைத் தெரு முனைகளில் நின்றுக் கூவி வாசித்தான். அவனை எல்லோரும் மஜ்னு(ன்) என அழைக்க ஆரம்பித்தனர். அரபியில் அதற்குப் ‘பைத்தியம்’ என்று பொருள். அவள் விழுந்தாள். ஆனால் அவளது பெற்றோருக்கு பைத்தியம் என்றழைக்கப்படும் அவனுக்கு அவளை மணம் முடித்துத் தர விருப்பமில்லை. அவர்களைப் பிரித்து அவளுக்கு வேறு கல்யாணம் செய்து வைத்தனர். மனம் உடைந்த மஜ்னு பாலைவனத்துள் புகுந்தான். மிருகங்களுடன் வாழத் தொடங்கினான். அங்கும் மணலில் குச்சி வைத்து லைலா பற்றிக் கவிதைகள் எழுதினான். இதைக் கண்டு சகியாத அவன் தந்தை அவனது காதல் பித்தினை ஒழிக்க காபா என்ற புனிதத் தலத்துக்கு அழைத்துச் சென்ற போது லைலாவின் மீதான காதல் இன்னும் நூறு மடங்கு பெருக வேண்டும் என இறையிடம் வேண்டிக் கொண்டான் மஜ்னு. மறுபக்கம் லைலா கணவனை நெருங்க விடவே இல்லை. நிராகரிப்பின் வலியிலேயே அவன் செத்துப் போனான். அதன் பிறகு லைலாவைச் சந்திக்கப் பல வாய்ப்பிருந்தும் மஜ்னு பாலைவன வாசத்தை விடுத்து அவளை வந்து சந்திக்கவே இல்லை. (கதையின் ஒரு வடிவில் லைலா அவனைத் தேடிப் போய்ச் சந்திந்த போதும் கூட அவன் அவளைத் தொடவே இல்லை என்று இருக்கிறது.) லைலா அந்தத் துக்கத்திலேயே உளம் வெதும்பி நோய் கண்டு இறந்தாள். செய்தி அறிந்து பாலைவனத்தை விடுத்து நகருள் நுழைந்த மஜ்னு அவளைப் புதைத்த சமாதியின் அருகிலேயே படுத்து அழுதே உயிர் விட்டான். மரணத்தில்தான் மஜ்னுவும் லைலாவும் சேர்ந்தார்கள். இருவரும் இறுதி வரை தொட்டுக் கொள்ளவே இல்லை. எது மஜ்னுவை அப்படிப் பிடிவாதமாக இருக்க வைத்தது? ஆன்மீகக் காரணங்கள் சொல்கிறார்கள். காதலின் மிகப் பரிசுத்தமான வடிவம் அது என்கிறார்கள். ஆனால் அது ஆணுக்கான பிரத்யேகத் திமிரின் துயர் என்றே எனக்குத் தோன்றுகிறது. * (2) அடுத்தது ரோமியோவும் ஜூலியட்டும். இது ஷேக்ஸ்பியரின் நாடகம். மான்டேக் மற்றும் கேப்புலெட் என்ற இரண்டு இத்தாலிய அதிகாரக் குடும்பங்களுக்குள் பல காலமாக, பல முறை ரத்தம் சிந்திய ஜென்மப் பகை. ரோமியோ மான்டேக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஜூலியட் கேப்புலட் குடும்பத்தில் ஒருத்தி. ஒரு முறை ரோமியோ உள்ளிட்ட மாண்டேக் குடும்ப இளைஞர்கள் சிலர் கேப்புலெட் குடும்பத்தில் ஒரு விருந்து நடப்பதை அறிந்து அதற்குள் ஊடுருவுகின்றனர். அங்கு அவர்கள் நுழைவதன் நோக்கமே ரோமியோ தான் காதலிக்கும் ரோஸ்லின் என்ற பெண்ணைச் சந்திப்பதே. மறுபக்கம் விருந்து நடப்பதே ஜூலியட்டுக்கு மணம் முடிக்க அவள் தந்தை மாப்பிள்ளை பார்த்திருப்பதன் நிமித்தமே. ஆனால் அந்த விருந்தில் விபத்தாக ரோமியோவும் ஜூலியட்டும் சந்தித்துக் கொள்ள, முதற் பார்வையிலேயே இருவருக்கும் காதல் பற்றிக் கொள்கிறது. அதற்குள் மான்டேக் இளைஞர்கள் கண்டறியப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். அன்று இரவே மாளிகையின் உப்பரிகை வழி ஜூலியட்டின் படுக்கை அறைக்குள் நுழைந்து காதலைச் சொல்கிறான் ரோமியோ. மறுநாள் இருவரும் ரகசிய மணம் செய்து கொள்கிறார்கள். ரோமியோ அன்றிரவு அவளைத் திறக்கிறான். இனித்த உடலுடன் ஜூலியட் வீட்டுக்குத் திரும்புகிறாள். மறுநாள் நடக்கவிருந்த ஜூலியட்டின் திருமணம் அவளது சகோதரனை ரோமியோ ஒரு தெருக் கைகலப்பில் கொன்றதால் ஒரு நாள் தள்ளிப் போடப்படுகிறது. ஜூலியட் கல்யாணத்திலிருந்து தப்பிக்க அவளுக்கு ரகசியத் திருமணம் செய்து வைத்த பாதிரியார் ஒரு யோசனை சொல்கிறார். அவர் அவளுக்கு மயக்கமூட்டும் ஒரு மருந்தை அளிப்பார். அவள் இறந்தது போல் நடிக்க வேண்டும். சமாதி செய்ததும் ரோமியோ வந்து அவளை மீட்டு இருவரும் சேர்வது. திட்டப்படி அவள் இறந்தது போல் நாடகமாட சமாதி செய்யப்படுகிறாள். ஆனால் அவளை மீட்க ரோமியோ வர வேண்டும் என்று பாதிரியார் அனுப்பிய தகவல் ப்ளேக் தொற்று காரணமாகப் போய்ச் சேரவில்லை. மாறாக, அவள் இறந்த செய்தி அவனைச் சேர்கிறது. அவள் சமாதிக்கு வருகிறான் ரோமியோ. அங்கே அழுது கொண்டிருந்த ஜூலியட்டின் மாப்பிள்ளையைக் கொன்று, தானும் விடமருந்தி உயிர் விடுகிறான். பாதிரியார் வந்து ஜூலியட்டை மீட்க, மயக்கம் தெளிந்து எழுந்தவள் விஷயமறிந்து சமாதியை விட்டு வர மறுத்துத் தற்கொலை செய்து கொள்கிறாள். அங்கு வந்த இரு பகையாளிக் குடும்பங்களும் அத்துயரின் மேல் சமாதானம் கொள்கின்றன. மிகச் சுலபமாக, மிகச் சுபமாக முடிந்திருக்க வேண்டிய எளிய காதல் கதை. ஆனால் ஆண்களுக்கு மத்தியிலான பகையே ரோமியோவின் காதலைக் கொன்றது. ஆண் தன் காதலை நிலை நாட்ட தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. அஃதில்லை என்றாகும் போது அவன் தன்னைத் தானே மாய்க்கவும் தயங்குவதில்லை. * (3) கிரேக்க புராணத்தில் ஒரு காதல் கதை இருக்கிறது. பாரிஸ் - ஹெலன். பாரிஸ் ட்ராய் நகரில் வாழ்ந்த இளவரசன். ஹெலன் ஸ்பார்டா நகரில் வாழ்ந்த மெனெலௌஸ் என்ற அரசனின் மனைவி. பாரிஸ் ஒரு முறை ஸ்பார்டா நகருக்கு விருந்தாளியாக வந்த போது ஹெலன் அழகில் அவள் மீது மோகம் கொள்கிறான். அப்படிப் பிறனில் விழையுமளவு நிகரற்ற உயரழகு வாய்த்தவள்தான் ஹெலன். அவளுக்கும் பாரிஸின் மேல் காதல் உண்டாகிறது. பாரிஸ் ஹெலனை ட்ராய்க்குத் தூக்கிச் செல்கிறான். மெனெலௌஸ் சினமுற்று, தன் சகோதரன் உதவியுடன் ஆயிரம் கப்பல்களில் படைகளுடன் போய் ட்ராய் நகர் மீது போர் தொடுக்கிறான். (ஹெலனை “the face that launched a thousand ships” என்றுதான் வரலாறு வர்ணிக்கிறது.) ஆனால் ட்ராய் வலுவான கோட்டை என்பதால் பல்லாண்டு தாக்குப் பிடிக்கிறது. பாரிஸ் ஹெலனை ஒப்படைக்க மறுத்து விடுகிறான். இறுதியில் பிரம்மாண்ட மரக் குதிரையில் பரிசுப் பொருட்களை அனுப்பிச் சமாதானம் செய்வதாக மெனெலௌஸ் அனுப்பியதை நம்பி கோட்டைக் கதவுகள் திறக்கப்பட, மரக் குதிரை உள்ளே நுழைகிறது. அதில் ஒளிந்திருந்த வீரர்கள் இரவில் வெளியே வந்து ட்ராய் நகரைத் தாக்கத் தொடங்குகிறார்கள், கோட்டைக் கதவுகளைத் திறந்து விடுகிறார்கள். சில நாட்களிலேயே ட்ராய் வீழ்கிறது. பாரிஸ் கொல்லப்படுகிறான். ஹெலன் மறுபடி மெனெலௌஸ் மனைவியாகி ஸ்பார்டா நகருக்குத் திரும்புகிறாள். பெண் மீதான காதலின் நிமித்தம் ஒரு போர் நடந்து ஒருவன் செத்து ஒரு நகரம் அழிக்கப்படுகிறது. ஹோமரின் இலியட் மற்றும் ஒடிஸி காவியங்களில் இந்தக் கதை சொல்லப்படுகிறது. நம் ராமாயணத்தை இதனுடன் இணை வைக்கலாம். இங்கும் சீதையின் பொருட்டே ராமன் இலங்கை மீது போர் தொடுத்து அழிக்கிறான்; ராவணனை வேரறுக்கிறான். இதில் பாரிஸ், மெனெலௌஸ் ஆகிய இரண்டு ஆண்களில் யாரேனும் ஒருவர் போய்த் தொலைகிறது என ஹெலனை விட்டுக் கொடுத்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. ஆணுக்குக் காதல் என்பது தன் பலத்துக்கும் அதிகாரத்துக்கும் கிடைக்கும் அங்கீகாரம். ஆக, அதன் பரிசான காதலியை மற்றொருவன் அபகரித்துச் செல்வது என்பது அவனது தன்முனைப்புக்கு விடுக்கப்படும் சவால். அதனால்தான் இப்படி முட்டாள்தனமான லாப நஷ்டக் கணக்கு கொண்ட யுத்தங்களை அவன் வரலாறெங்கும் நிகழ்த்தி இருக்கிறான். அரசன் என்றால் போர் நிகழும். சாதாரணன் அவனளவில் இதே போல் போராடுகிறான். ஆண் மரித்தே போனாலும் காதலை மீட்கவே முனைவான். அவனது பிறவிச் சாபம் அது. (4) 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிச்சக்ரவர்த்தி கம்பரின் மகன் அம்பிகாபதி. அப்போது நாட்டை ஆண்டிருந்த இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் மகளான அமராவதி மீது அவனுக்குக் காதல். அம்பிகாபதியும் நல்ல கவி. அதனால் இயல்பாகவே அமராவதிக்கு அவன் மீது காதல் வந்தது. சொற்களும் வெட்கமுறும் வண்ணம் அமராவதியின் அழகை அம்பிகாபதி பாடல்களாக வடித்துக் கொண்டே இருந்தான். அரசனுக்கு இது தொடர்பாக சந்தேகம் எழ, அவன் கம்பரையும் அவரது மைந்தனையும் அரண்மனைக்கு விருந்துக்கு அழைத்தான். அங்கே அமராவதியின் பேரெழில் கண்டு நிலை தடுமாறிய அம்பிகாபதி அவளை வர்ணித்து ஒரு பாடலைப் பாட ஆரம்பித்தான். குலோத்துங்கன் கடும் கோபம் கொள்ள, சூழலைச் சமாளிக்க கம்பர் அப்பாடலை சரஸ்வதி தேவி மீது பாடி முடித்தார். அன்றைக்கு அம்பிகாபதியின் தலை தப்பித்தாலும் தும்மலும் காதலும் அப்படி அடக்கி வைத்து விட முடியுமா என்ன! ஒரு நாள் விஷயம் வெளியே வந்தது. சினத்தின் உச்சத்தில் மன்னன் அம்பிகாபதிக்கு மரண தண்டனை விதித்தான். கம்பர் கண்ணீருடன் கருணை கோரி நின்றார். ஒட்டக்கூத்தர் ஆலோசனைப்படி அம்பிகாபதி காதல் கலவாத பக்திப் பாடல் நூறு பாடிக் காட்டினால் அவனை மன்னித்து விடுவதாக அறிவித்தான் மன்னன். அம்பிகாபதியின் திறனுக்கு அச்சவால் பிள்ளை விளையாட்டு. மறுநாள் அவை கூடியது. அமராவதி ஒரு திரைக்குப் பின் அமர்ந்து நடப்பதைக் கவனித்திருந்தாள். அம்பிகாபதி பாட ஆரம்பித்தான். அமராவதி ஒவ்வொரு பாடலாக எண்ணிக் கொண்டே இருந்தாள். நூறு பாடல் பாடி முடித்ததும் அவள் உற்சாகமாக திரையை விலக்கி அம்பிகாபதி முன் வந்து நின்றாள். அவளது நல்வனப்பைக் கண்டு வெறியேறிய அம்பிகாபதி உடனே ஒரு காதல் பா இசைத்தான். அவ்வளவுதான் ஒட்டக்கூத்தர் அவன் தோற்றதாக அறிவித்தார். ஏனெனில் அம்பிகாபதி பாடிய முதற்பா கடவுள் வாழ்த்து. அது பாடல் கணக்கில் வராது. எனவே அவன் அது வரை 99 பக்திப் பாடல்கள் மட்டுமே பாடியிருந்தான். இதை அறியாத அமராவதி அவன் முன்பு தோன்றி, அவனது கவனத்தைச் சிதற வைத்து தொடர்ச்சியை அறுத்து விட்டாள். சோழக் கோ அம்பிகாபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றினான். கம்பர் மனமுடைந்து நாட்டை விட்டு வெளியேறினார். சிறிது காலத்தில் அமராவதியும் துயரில் உழன்றே செத்துப் போனாள். காதலர்கள் வழமை போல் மரணத்தில் சேர்ந்தனர். பெண்ணின் அவசரத்துக்கும் சேர்த்து ஆணே காதலில் தண்டனையை அனுபவிப்பதை இதில் கவனிக்கலாம். அவனது போராட்டம் உலகோடு மட்டுமல்ல, காதலியோடும்தான். * (5) 16ம் நூற்றாண்டில் அம்பிகாபதி - அமராவதி கதைக்கு நேர் எதிரான ஒரு கதை உண்டு. அன்றைய முகலாய சாம்ராஜ்யத்தில் அக்பர் அரசனாக, (பிற்பாடு ஜெஹாங்கீர் எனப் புகழ் பெற்ற) சலீம் இளவரசனாக இருந்தார்கள். லாஹூரைச் சேர்ந்த புத்திசாலிப் பெண் ஷர்ஃப்-உன்-நிசா அக்பரின் அரசவையில் இடம் பெற்றிருந்தாள். அவளுக்கு இன்னொரு பெயர் அனார்கலி. அப்போது அலுவல் நிமித்தம் தேச இளவரசனுடனும் பழக வேண்டிய சூழல் அமைந்த போது சலீமுக்கும் அனார்கலிக்கும் காதல் முகிழ்த்தது. மனதைக் கடந்து உடலுக்கும் விரைவிலேயே தாவியது. விஷயம் பேரரசன் அக்பர் காதுகளுக்குச் சென்றது. அக்பரின் எச்சரிக்கைகள் ஏதும் சலீமின் காதில் விழவில்லை. எல்லாம் காதல் படுத்தும் பாடு. சலீம் தன்னைப் புராதன அரேபியத்தின் மஹா காதலனான மஜ்னு என்றே கருதிக் கொண்டான். அனார்கலியின் மீது காதலை அளவின்றிப் பொழிந்தான். அக்பருக்கு வேறு வழி இல்லை. சலீம் இல்லாத சமயம் அக்பரின் ஆணைப்படி அனார்கலியைச் சுற்றி நால் புறமும் நெருக்கமான சுவர் எழுப்பி காற்றுப் புகாமல் மூடினார்கள். உயிருடன் சமாதி. விஷயமறிந்து சலீம் அங்கே வந்து சேர்வதற்குள் அவள் செத்துப் போனாள். அதற்கு சலீம் எப்படி எதிர்வினை ஆற்றினான் என்பது பற்றி வரலாற்றில் குறிப்புகள் இல்லை. ஆனால் அதன் பிறகு அனார்கலி சமாதி இருந்த இடத்தில் ஒரு நினைவு மாளிகை எழுப்பினான். அது இன்றும் லாஹூரில் காற்றுடன் மௌனக் காதல் கதைகள் சொல்லியபடி நிற்கிறது. அதன் பிறகு சலீம் பேரரசனாகி நன்கு நாடாண்டான். புகழ் பெற்ற அரசி நூர் ஜஹான் உள்ளிட்ட பலரை மணம் செய்து கொண்டான். ஆனால் அவை யாவும் புற வரலாறுதாம். அகத்தில் ஒரு பெண்ணின் மரணத்துக்குத் தன் காதல் காரணமாகி விட்டதை எண்ணி ஆயுள் முழுக்கக் குற்றவுணர்வுடனே வாழ்ந்து மடிந்திருப்பான். கற்பனைக்கெட்டாத சர்வாதிகாரம் கொண்ட தன் தகப்பனை ரகசியமாக வெறுத்திருப்பான். அவளற்ற வெறுமையில் திணறியிருப்பான். யோசித்துப் பார்த்தால் இதிலுமே ஆண்தான் பலி. அனார்கலியின் கல்லறை மீது ‘மஜ்னு சலீம் அக்பர்’ என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள வரி: “என் காதலியின் முகத்தை இன்னொரு முறை நான் கரத்தில் ஏந்த முடிந்தால் கடவுளுக்கு நான் செத்து உயிர்த்தெழும் வரை நன்றியுடைவனாயிருப்பேன்.” செத்தவளுக்கு ஒரு நாள் வேதனையோடு போனது. இருப்பவனுக்குத் தினமும் ரணம். * (6) இதே போல் இன்னொரு துன்பியல் கதை ஆன்டணியும் க்ளியோபாட்ராவும். இதையும் ஷேக்ஸ்பியர் நாடகமாக்கி இருக்கிறார் என்றாலும் இது உண்மையில் நடந்த வரலாறு. க்ளியோபாட்ராவுக்கு ஏராளம் கணவர்கள் காதலர்கள் உண்டு என்றாலும் மனித குலம் ஆன்டணியை மட்டுமே அவளது காதலன் என்று நினைவில் கொள்ளக் காரணம் உண்டு. க்ளியோபாட்ரா கிறிஸ்து பிறப்பதற்கு ஐம்பதாண்டுகள் முன் எகிப்தில் வாழ்ந்த பேரரசி. அன்றைய தேதியில் உலகப் பேரழகி. “The nose of Cleopatra: if it had been shorter, the whole face of the earth would have changed” என்று 17ம் நூற்றாண்டு ஃப்ரெஞ்சு தத்துவ ஞானி ப்ளைஸ் பேஸ்கல் அவளது மூக்கு குறித்து எழுதினார். ஆண்கள் அவளை அடையத் துடித்தனர். தன் தந்தை மறைவுக்குப் பின் தனது சகோதரர்கள் இருவரையும் மணம் செய்து நாட்டை ஆட்சி செய்தவள். அதே சமயத்தில் ரோம் மன்னன் ஜூலியஸ் சீஸருடன் காதல் உறவில் இருந்து குழந்தை பெற்றவள். சீஸர் எதிரிகளால் கொலை செய்யப்பட்ட பின் அவரிடம் தளபதிகளாக இருந்த மார்க் ஆன்டணியும் மார்கஸ் ஏமிலியுஸ் லெபிடஸும் சீஸரின் வளர்ப்பு மகனான ஆக்டேவியன் சீஸரும் அதிகாரத்தைப் பங்கு போட்டுக் கொண்டனர். ரோம் ராஜ்யத்தின் கீழிருந்த எகிப்தைக் கவனிக்கும் பொறுக்கு ஆன்டணிக்கு வந்தது. அவர் அங்கிருந்த ஏழாம் க்ளியோபாட்ராவையும் சேர்த்தே கவனித்துக் கொண்டான். ஆன்டணிக்கு க்ளியோபாட்ரா தன் போர்ப் படைகளின் ஆதரவை நல்கினாள். பதிலுக்கு அவளுக்குத் தொந்தரவாக அவளது சகோதரி ஒருத்தியைக் கொன்றழித்தான் ஆன்டணி. இருவரும் எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரில் இரவு பகல் பாராது, புறச் சூழல் பற்றிய கவலைகள் இல்லாது காதல் பறவைகளாகத் திரிந்ததற்குச் சான்றுகள் இருக்கின்றன. இடையே ஆன்டணிக்கும் ஆக்டேவியனுக்கும் உரசல்கள் எழுந்தன. அதைச் சரி செய்ய ஆக்டேவியனின் தங்கையை ஆண்டனி மணந்தான். அதே சமயம் க்ளியோபாட்ராவின் உறவும் தொடர, அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தது ஆக்டேவியனுடனான பகையை அதிகரித்தது. அதன் உச்சமாக ஆன்டணி க்ளியோபாட்ராவை அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டு ஆக்டேவியனின் தங்கையுடனான திருமணம் உறவை முறித்து அவளைத் திருப்பி அனுப்பினான். கடுப்பான ஆக்டேவியஸ், ஆன்டணியை ரோமின் துரோகி என அறிவித்து க்ளியோபாட்ரா மீது போர் தொடுத்தான். யுத்தத்தில் தோல்வியுற்ற ஆன்டணியும் க்ளியோபாட்ராவும் எகிப்துக்குத் தப்பித்து ஓடினார்கள். ஆக்டேவியன் எகித்துக்கும் அவர்களைத் தேடி வந்தான். அங்கே இருவரும் வெவ்வேறு இடங்களில் ஒளிந்திருந்தார்கள். க்ளியோபாட்ரா தற்கொலை செய்து இறந்ததாக வந்த தவறான செய்தியை நம்பிய ஆன்டணி வாளின் மீது பாய்ந்து தானும் சாக முயன்றான். உயிர் போய்க் கொண்டிருக்கையில் க்ளியோபாட்ரா உயிருடன் இருப்பதை அறிந்து கொண்டான் ஆன்டணி. அவனது நண்பர்கள் அவனை க்ளியோபாட்ரா ஒளிந்திருந்த இடத்துக்குத் தூக்கிச் செல்ல, அவளது மடியில் கிடந்து உயிர் துறந்தான் ஆன்டணி. ஆக்டேவியினால் அவமானப்படுத்தப்படுவோம் என்று அஞ்சிய க்ளியோபாட்ரா ஒரு கொடிய விடமுடைய நாகத்தைத் மார்பில் கொத்த விட்டு இறந்தாள் எனகிறார்கள். அவள் ஆக்டேவியனையும் மயக்க முயன்று தோற்றதாலேயே இறந்தாள் என்று ஒரு வடிவமும் உண்டு. ஆன்டணி - க்ளியோபாட்ரா ஆகிய இரண்டு பெருந்தடைகளும் நீங்கியதால் ரோம் சாம்ராஜ்யத்தின் எதிர்ப்பற்ற ஒற்றை அரசனானன் ஆக்டேவியன். க்ளியோபாட்ராவின் காதலர்களில் ஆன்டணி ஏன் தனித்துவமானவன்? அவன் மட்டுமே அவளுக்காக உயிரை விட்டான். ஆண் போரில் தோற்று நாட்டை விட்டோடிய போதும் கலங்காதவன். ஆனால் காதலி செத்ததாகச் செய்தி கேட்ட கணம் வாழ்வு வெறுத்தான். ஆண்கள் காதலின் பொருட்டு உணர்ச்சி வசப்படும் தருணங்களும் இவ்வாறு உண்டு. * (7) 1997ல் வெளியான திரைப்படமான Titanic ஆண் காதலின் மற்றொரு பரிமாணத்தைக் காட்டுகிறது. தியாகம். 1912ல் டைட்டானிக் என்ற பிரம்மாண்ட சொகுசுக் கப்பலில் ரோஸ் என்ற பெண்ணும், அவளுக்கு நிச்சயம் செய்திருக்கும் பெரும்பணக்காரனான கேல்டனும், அவளது தாயும் கிளம்புகின்றனர். அத்திருமணம் தங்களைக் கடனிலிருந்து மீட்கும் என்பது அந்த அம்மாளின் நம்பிக்கை. ரோஸுக்கு அதில் விருப்பமில்லை. அதே கப்பலில் ஜேக் என்ற இளைஞனும் சூதாட்டத்தில் மூன்றாம் வகுப்பு டிக்கெட் ஜெயித்து நுழைகிறான். ரோஸ் விரக்தியில் கப்பலிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போகும் போது ஜேக் காப்பாற்றுகிறான். அவர்களுக்குள் நட்பும், சீக்கரம் காதலும் உண்டாகிறது. ஜேக் ரோஸை நிர்வாணமாக வரைகிறான். அவளுடன் கலவி கொள்கிறான். அப்போது கப்பல் பெரிய பனிப்பாளத்தில் மோதிச் சேதமுறுகிறது. கேல்டன் ரோஸில் நிர்வாண ஓவியத்தைப் பார்த்து சினத்தில் ஜேக்கைக் கப்பலில் ஓர் அறையில் விலங்கிட்டு சிறை செய்கிறான். கடல் நீர் புக, கப்பல் மூழ்க ஆரம்பிக்கிறது. அதில் ஆபத்து காலப் படகுகள் அதிகமில்லை என்பதால் பெண்களும், குழந்தைகளும், சில பணக்காரர்களும் இருக்கும் சொற்ப படகுகளில் கடலில் இறக்கப்படுகிறார்கள். ரோஸ் படகேறப் போகும் தாயையும் கேல்டனையும் விட்டு விலகி ஜேக்கைத் தேடிப் போகிறாள். அவனை விடுவிக்கிறாள். ஜேக்கும் ரோஸும் பெரும் சிரமத்திடையே தப்பிக்க முனைகையில் கப்பல் இரண்டாக உடைந்து மொத்தமும் மூழ்குகிறது. ஜேக் ரோஸை ஒரு மரப் பலகை மீது ஏற்றுகிறான். அவனும் உடன் ஏற இடமில்லை என்பதால் உறையும் குளிருடைய கடல் நீரில் அவன் அவளைப் பற்றியபடி மிதந்து இறந்து கடலுக்குள் போகிறான். உயிர் காக்கும் படகு ஒன்று வெகுநேரம் கழித்து வந்து ரோஸை மீட்கிறது. ரோஸ் இறுதி வரை திருமணம் செய்யாமல் ஜேக்கின் மனைவி என்ற அடையாளத்துடனேயே வாழ்ந்து முடிக்கிறாள். இது மேலே பார்த்த சலீம் அனார்கலி கதைக்குத் தலைகீழானது. இங்கே காதலி தன் காதலனை நினைத்தபடி ஆயுள் முழுக்கத் தனித்தே வாழ்ந்து மரிக்கிறாள். ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய அம்சம் வேறொன்று. ஆண் பலவான். எப்படிக் கப்பல் மூழ்குகையில் உயிர் பிழைக்க பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ அப்படி இருக்கும் ஒரு மரப் பலகையில் காதலன் ஏறாமல் காதலிக்கு விட்டுத் தருவதே அறமும் காதலும். அப்படித்தான் ஒரு காதலன் நடந்து கொள்ள முடியும். தன் உயிரைக் கொடுத்தேனும் காதலியின் உயிரைக் காக்க வேண்டும் என்பது எழுதப்படாத ஆனால் பரவலாக ஏற்கப்பட்ட விதி. அவனுக்கும் ஒரு பலகை இருந்திருக்கலாம் என்று நமக்குத் தோன்றுமே ஒழிய, அவளுக்கு பதில் அவன் மரப் பலகையில் ஏறிப் பிழைத்திருக்கலாம் என்று தோன்றவே செய்யாது. அப்படித்தான் மனித இனம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. ஆண் காதலில் தியாகம் செய்யச் சித்தமாக இருக்க வேண்டும், தன் உயிரையும் கூட. * (8) 1956ல் தி. ஜானகிராமனால் எழுதப்பட்ட மோக முள் நாவல் மற்றுமொரு கோணத்தைத் தருகிறது. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் தஞ்சையில் நிகழும் கதை. பாபு கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் மிக்க, இருபது வயதைத் தொடும் பிராமண இளைஞன். யமுனா அவளை விட பத்து வயது அதிகம் கொண்ட மராட்டியப் பூர்வீகம் கொண்டவள். பால்யத்திலிருந்தே யமுனாவுடன் பழகி வரும் பாபுவுக்கு வயது வரும் போது அவளது அழகு மனதில் மோகத்தை எரியச் செய்கிறது. விபத்தாக பக்கத்து வீட்டுக் கிழவனின் இளம் மனைவியுடன் கூடி விடுகிறான். அது தான் யமுனா மீதான காதலை அவனுக்கு உணர்த்துகிறது. அவள் கடவுள் போல் தோன்றுகிறாள். அவளுக்கு துரோகம் செய்து விட்டதாகத் தோன்றுகிறது. அவளிடம் எல்லாவற்றையும் சொல்கிறாள். சமூகத்தைக் காட்டி இது பொருந்தாக் காதல் என்று சொல்லி நிராகரித்து ஊரை விட்டுப் போகிறாள். அந்தத் துயரிலிருந்து வெளிவரும் உத்தேசத்தில் வெறியுடன் கர்நாடக இசை கற்கத் தொடங்கி அதில் முன்னேற்றம் காண்கிறான். எட்டாண்டுகள் கழித்து யமுனாவைச் சென்னையில் சந்திக்கிறான். வறுமை அவள் இளமையைக் குலைத்து விட்டிருந்தது. அப்போதும் யமுனா திருமணம் செய்து கொள்ளவே இல்லை. பாபுவுக்குத் தன்னைத் தருகிறாள். கலவி முடிந்ததும் பாபுவிடம் “எல்லாம் இதற்குத்தானா?” என்று கேட்கிறாள். பாபுவிடம் அதற்குப் பதில் இல்லை. “இதற்குத்தான்” என்று அவளே பதில் சொல்கிறாள். அதன் பிறகும் அவர்கள் சேர்ந்து வாழ்வதில்லை. அவ்வளவுதான் அவர்களின் உறவு. பாபு இனி அவன் வழியைப் பார்த்துக் கொண்டு ஒரு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். இதில் கவனித்தால் ஆண் இந்தக் காதலில் தன் காதல் அல்லது காமம் சார்ந்து எந்த முடிவையும் எடுப்பதே இல்லை என்பது விளங்கும். பெண்ணே வழி நடத்துகிறாள். கிழவரின் இளம் மனைவியுடன் பாபு கூட நேர்ந்ததும் அவளது முடிவுதான். இறுதியில் யமுனாவுடன் புணர நேர்ந்ததும் அவளது முடிவே. பாபு இதில் வெறும் உடல் மட்டுமே. தொடர்ந்து காமத்தைக் கையில் பிடித்துக் கொண்டு அலைவது மட்டுமே அவனுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. காதலோ காமமோ முடிவுகளைப் பெண்களே எடுக்கிறார்கள். யமுனா பாபுவுக்குத் தன் உடலை ஒப்புவிக்கும் இடத்தில் நிகழும் உரையாடல் இது: “எனக்கு நீதான் வேணும்.” “சரி எடுத்துக்கோ…” “அன்னிக்கி நான் கேட்டேனே?” “அப்ப எனக்கு மனசு இடங்கொடுக்கவில்லை. இப்ப உயிரில்லாமல் கிடக்கும் போது போனால் போறது என்று தோன்றுகிறது.” “உயிரில்லா பொருளையா என்னிடம் கொடுக்கிறாய்?” “நீ உயிர் கொடேன்.” போனால் போகிறது என்றுதான் யமுனா சம்மதிக்கிறாள். அதில் காமம் பெறும் சுயநலம் இருக்கிறது. அதற்காக மற்றவரிடம் போகாமல் பாபுவைத் தேர்ந்தெடுப்பதில் அவளது காதல் துலங்கத்தான் செய்கிறது. ஆனால் பாபு இதில் வெறும் பகடைக்காய்தானே! காதலில் ஆயுள் முழுக்க பெண்களால் அலைக்கழிக்கப்படுவதே ஆண்களின் விதி. * (9) 2018ம் ஆண்டு வெளியான 96 படத்தை இதன் இன்னோர் உதாரணமாகக் கொள்ளலாம். பள்ளிக் காலத்தில் ராமும் ஜானுவும் சொல்லிக் கொள்ளாமலே காதலிக்கிறார்கள். சூழல் அவர்களைப் பிரிக்கிறது. கல்லூரிக் காலத்தில் ஜானுவைத் தேடி வரும் ராம் ஒரு சிறிய குழப்பத்தில் ஜானுவுக்குத் தன் மீது விருப்பமில்லை என்று எண்ணிக் கொள்கிறான். அவளைத் தொந்தரவு செய்யாமல் விலகுகிறான். ரகசியமாக அவள் திருமணத்துக்குச் சென்று காண முடியாமல் ஓடி வருகிறான். பிற்பாடு இருபதாண்டுகள் கழித்து பள்ளி ரீயூனியனில் ராமும் ஜானுவும் சந்திக்கிறார்கள். ராம் மாறவே இல்லை. அவன் காதலும். ஜானு திருமணமாகிக் குழந்தை பெற்றவள். காமத்தின் சாயை சிறிதுமின்றி அவ்விரவை அவர்கள் ஒன்றாகக் கழிக்கிறார்கள். ராம் திருமணம் செய்து கொள்ளாதது மட்டுமின்றி, இன்னும் கன்னித்தன்மை இழக்காது இருக்கிறான் என்பதை ஜானு புரிந்து கொள்கிறாள். குற்ற உணர்வில் அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்துகிறாள். அழுது விடை பெறுகிறாள். ராம் திருமணம் செய்யப் போவதில்லை. ஜானுவுடனான தன் பள்ளிக்கால நினைவுகளைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்தது போலவே அந்த ஓர் இரவையும் இனி அவன் ஞாபகங்களில் ஏந்தி நின்று மகிழ்ச்சி கொள்ளப் போகிறான். இதில் கவனிக்க வேண்டியது ராம் ஏன் அப்படித் திருமணம் செய்யாமல் இருக்கிறான் என்பதே. ஜானுவின் காதலும் குறைத்து மதிப்பிட முடியாது. அவனுக்கு இணையாக அவளும் அவனை நினைத்துக் கொண்டுதான் இருக்கிறாள். ஆனால் அவன் மட்டுமே அந்த முடிவெடுக்கிறான். காரணம் ஆண் என்ற திமிர்தான். அவனால் முடியும். அவன் சமூகத்துக்காக ஒரு சமரசத்துக்குள் புக வேண்டியதில்லை. இரட்டை வாழ்க்கை வாழும் கட்டாயம் இல்லை. அதனால் அவன் தன் காதலைப் பற்றிக் கொண்டு வாழ்கிறான். ஆண் என்ற அகங்காரம் காதலில் மட்டுமல்ல, காதல் பிரிவிலும் தூக்கலாகவே இருக்கும். பெண் அதை உள்ளுக்குள் புதைத்து வளைந்து கொடுக்க, ஆண் பிடிவாதமாய் நிற்பான். அதன் வழி தனக்குத் தானே வதை தருவான். அதைப் பற்றி அவனுக்குக் கவலை இல்லை. * (10) 2022ல் வெளியான லவ் டுடே படத்தில் காதலில் பெண்களே முடிவெடுக்கும் இடத்தில் இருப்பதை, ஆண் அதைச் செயல்படுத்தும் இடத்தில் மட்டுமே இருப்பதைச் சுட்டும் ஒரு நல்ல சமகால உதாரணத்தைக் காணலாம். அதில் பிரதானக் காதலர்கள் உத்தமனும் நிகிதாவும் என்றாலும் நான் இங்கே குறிப்பது மாமாக் குட்டி நிகிதா ஜோடியைப் பற்றி. மாமக்குட்டி நிகிதாவின் முன்னாள் காதலன். அவனிடமிருந்து அவள் விலகி வந்து வெகு நாளாகிற்று. இப்போது அவள் காதலிப்பது உத்தமனை. ஆனால் உத்தமனுடன் பிணக்கு உண்டாகும் போது அவள் மனம் இயல்பாகவே மாமாக் குட்டியைத் தேடுகிறது. அவனை சென்னையிலிருந்து பாண்டிச்சேரி வரை இரவில் காரில் லாங் ட்ரைவ் போய் வரலாமா எனக் கேட்கிறாள். அவனுக்கு நிச்சயம் சந்திப்பைத் தாண்டி அதில் வேறு எதிர்பார்ப்பு இருந்திருக்கும். எனவே உடனே சம்மதித்து அழைத்துப் போகின்றான். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி ஏதும் நடப்பதில்லை. அது வெறும் சைவப் பயணம். அவள் தன் மனக் கிலேசத்தைச் சரி செய்து கொண்டு திரும்புகிறாள். அவன் ஏமாற்றம் அடைந்திருக்க வேண்டும். அல்லது தன்னை நீங்கிப் போன காதலி இன்னும் தன்னிடம் இளைப்பாறல் தேடுகிறாள் என்பதையே தனக்கான அங்கீகாரமாகக் கூட கருதிக் கொண்டிருக்கலாம். ஆனால் இதில் கவனிக்க வேண்டியது இந்நாள் காதலன் மட்டுமல்ல, முன்னாள் காதலன் கூட காதலியின் கையில் பாவைதான். அவள் நினைப்பு மிக எளிதில் நிறைவேறும், அந்த இடத்தில்தான் இயற்கை ஆணையும் பெண்ணையும் வைத்திருக்கிறது என்பதைத்தான். * காதலிக்க ஆண், பெண் இருவரும் அவசியம். ஆனால் இரண்டும் வெவ்வேறு. சொல்லப் போனால் இரண்டும் நேரெதிர். காமத்தின் பொருட்டே ஆண் காதல் என்பது பரவலாக நம்பப்படுகிறது. ஆனால் அதைத் தாண்டி பல சிடுக்கான விஷயங்களை அடக்கியது. காதலிக்கும் ஆண் உண்மையில் சிறகுகள் கட்டப்பட்ட பட்சி போன்றவன். அக்காதல் தீரும் வரை அல்லது அவன் சாகும் வரை பறக்க இயலாத சாபம் அவனைப் பீடிக்கும். ஆணுக்குக் காதல் என்பது வெற்றி. அதற்காகப் போர் எடுப்பான். அவனுக்குக் காதல் என்பது மானம். அதற்காக உயிரைக் கொடுப்பான். இப்படிச் சொல்கையில் ஒரு காதல் உறவில் அவனே ஆதிக்கம் செலுத்துபவன் போன்றதொரு தோற்றம் எழுந்தாலும் அது உண்மையில்லை. அது எல்லாம் வெளியே. காதலுக்குள் நடப்பது வேறு கதை. அவன் தொடர்ந்து தன் காதலியுடன் போராடுகிறான். அவளால் அலைக்கழிப்படுகிறான். காதலுக்காக அவன் தியாகங்கள் செய்வான். காமத்தின் பொருட்டே ஆணின் காதல் என்று சொல்லப்படுவதைக் கூட உடைத்து காதலின் நிமித்தம் புலனை அடக்குவான். காதலில் அவனது எதிரிகள் பட்டியல் நீளமானது. காதலியின் குடும்பம் தொடங்கி சக ஆண்கள், பெற்றோர், உற்றார், சமூகம், அந்தக் காதலி வரை சகலரும் விரோதிகளே! ஒட்டுமொத்தமாக யோசித்துப் பார்த்தால் ஆண்களின் அத்தனை கீழ்மை நிறைந்த அயோக்கியத்தனங்களையும் தாண்டி காதலிக்கும் ஆண்களின் மீது ஒருவிதமான பரிவுதான் உண்டாகிறது. ஏனெனில் அவனுக்கு காதல் என்பது காதல் மட்டுமல்ல. மஜ்னு முதல் மாமாக் குட்டி வரை காதலன்கள் யாவரும் பரிதாபத்துக்குரியோரே! *** http://www.writercsk.com/2023/02/blog-post.html1 point- Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
1 point- Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
இது என்றும் பலருக்கு புரியப்போவதில்லை அவர்கள் தமிழர்கள் எனினும் இந்தியார்கள் .. ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள்1 point- இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
செண்டை என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு தாள இசைக்கருவியாகும். இக்கருவி பரவலாகக் கேரளம், கருநாடக மாநிலத்தின் துளு நாடு பகுதி மற்றும் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது. துளு நாட்டில் இது செண்டே என்று அழைக்கப்படுகிறது. செண்டை வாசிக்கும் கலைஞர்கள் செண்டை மேளம் பண்டைய தமிழ் இசை தோற்கருவி "கொடுகொட்டி" என்பதன் பரிணாம வளர்ச்சியே ஆகும். செண்டை 18ம் நூற்றாண்டில் முழுமையான தற்கால வடிவம் பெற்றது. https://ta.m.wikipedia.org/wiki/செண்டை பிகு எடுத்து அடிடா பாட்டன் பறையை…. தூக்கி அடிடா முப்பாட்டன் செண்டையை…1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
குண்டடிக்குள்ளும் குதூகலம் ......! 😁1 point- இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
செண்டை மேளம் அடி நல்லாத்தானே இருக்கு! புதியவற்றை வரவேற்க யாழ்ப்பாணத்தார் எப்பவும் பின்னடிப்பினம்!1 point- இலங்கையின் அனைத்து துறைமுகங்களையும் இந்தியாவுடன் இணைக்கும் திட்டம்!
புதிய தூதுவருக்கு இலங்கையின் அரசியல் சாணக்கியம் இன்னும் விளங்கவில்லை...இவர் இன்னும் இரண்டு ஆண்டுகளில் பதவி விலகிவிடுவார் அதுவரை .....சிங்களம் சுழிச்சு விளையாடும் எல்லாம் உனக்கு தான் ,,,,என காய் நக்த்துவார்கள்.... கொழும்பு துறைமுகத்தில் ஒர் பகுதியை கூட தன் வசபடுத்த முடியவில்லை ....இந்த லட்சணத்தில் எல்லா துறைமுகமும்...கேட்கிறவன் .....கேனையன் என்றால் எருமை மாடு ஐ போன் பேசுமாம்1 point- நாகபட்டினம் - காங்கேசன்துறை சரக்குக் கப்பற்சேவை விரைவில்!
புலம் பெயர் தமிழர்களின் பணத்தை இந்தியா,மற்றும் இலங்கை யின் பொருளாதரத்தை வளர்ச்சியடைய செய்யும் சித்து விளையாட்டுகளில் இதுவும் ஒன்று... 1) கோவிலை கட்டி அதற்கு கருங்கல்,மற்றும் ஏனைய தளபாடங்களை நேரடியாக யாழில் இறக்குமதி செய்தல் 2)மக்கள் இல்லாத ஊரில் பெரிய கோவிலை கட்டுதல் 3)தென்னிந்திய இசை கலைஞர்களை பலாலிக்கு நேரடியாக அழைத்தல் இந்திய விமான சேவை 4)மைக்,மற்றும் ஏனைய தொழில்நுட்ப சாதனங்கள்,தொழில்நுட்பவியலாளர்களை அனுப்புதல்1 point- நாகபட்டினம் - காங்கேசன்துறை சரக்குக் கப்பற்சேவை விரைவில்!
உங்கன்ட வயசுக்காரங்கள் எல்லாரிடமும் கேட்கலாம்...தமிழ்சிறி சொல்வதை நான் முற்று முழுதாக ஆமோதிக்கிறேன் ண்ணே உது சரக்கு(சாமான் கப்பல்) ....நாங்கள் பாடசாலையில் படிக்கும் பொழுது சொல்லும் சர,,,அல்ல1 point- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
1 pointபுலிகேசி ஒரு பயந்த நகைசுவை சுபாவம் கொண்டவரே தவிர சேலன்ஸ்கிபோல கொடியவன் அல்ல ........ செலென்ஸ்கி மிக கொடூரமானவன் அவனுக்கும் உக்ரைன் மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. செலென்ஸ்கி ஒரு சியோனிஸ்ட் அவனுக்கு உக்ரைன் மக்கள் இறப்பு என்பது ஆனந்தமானது உக்ரைனுக்கு உதவிக்கு என்று கொடுத்த மில்லியன் டாலர்களை சுருட்டிக்கொண்டு இருக்கிறான். மார்ச் மாதம் தேர்தல் வைக்க வேண்டும் .... அப்படி நடந்தால் உக்ரைன் மக்கள் அடித்தே துரத்துவார்கள் என்பது அவனுக்கு நான்கே தெரியும் என்பதால் இந்த போரை சாட்டி அவன் தேர்தலை வைக்கப்போவதில்லை. இனி மேற்கு அண்ணர் வாக்கு சாவடிகளை களவாடும் வேலை எல்லாம் செய்து முடித்த பின்னர்தான் ஒரு சுத்துமாத்து தேர்தலை வைப்பார்கள்1 point- This Israeli Soldier Fought In Gaza. Now He Speaks Out
This Israeli Soldier Fought In Gaza. Now He Speaks Out1 point- Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
ஒரு மனிதன் நேர்மையாக நீதி நியாயமாக கள்ளம் கபடமில்லாமல் இருந்தால் விரைவாக மரணிக்கப்பப்படுவதும் தாழ்த்தப்படுவதும் இந்த உலகின் நடை முறைகளில் ஒன்று. மற்றும் படி அரசியலில் பல சில குளறுபடிகள் எங்கும் இருக்கத்தான் செய்யும். ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்தால் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய நாறல் மட்டைகள்.1 point- இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
உண்மையில் அந்தப் பிள்ளையை நினைக்கப் பாவமாக இருக்கிறது. வாசகர்சாலை, ஊர்ச் சங்கங்கள், அந்தப் பிள்ளையின் பாடசாலை போன்றவற்றில் பாராட்டு விழாக்களை ஏற்பாடு செய்திருந்தால் அது பலருக்கும் முன்மாதிரியான செயற்பாடாக இருந்திருக்கும். இந்தக் கொண்டாட்டங்கள் பிள்ளையைப் பப்பாளி மரத்தில் ஏற்றிவிடும் செயற்பாடாக இருக்கப்போகிறது. ☹️1 point- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வாஸ்தவம் தான். இணைய உலகில் புகுந்த ஆரம்பத்தில் நாங்கள் ஒரு மின்னஞ்சலை அனுப்பிவிட்டு அது போய் சேர்ந்துவிட்டது எனும் (செண்ட்) செய்தி காண்பிக்கும்வரை நீண்டநேரம் பொறுமையுடன் பார்ப்போம். டயல் அப் இண்டர்நெட் நிலவியபோது பலவிதமான சத்தங்கள் எல்லாம் நெட்வேர்க் ஊடாக கேட்க ஒரு பக்கத்தை பார்ப்பதற்கும், புரட்டுவதற்கும் இடையில் அது லோட் செய்யும்போது அந்த இடைப்பட்ட நேரத்தில் பலவித காரியங்களை செய்துவிடுவோம். இப்போது எல்லாம் வேகமாகத்தான் உள்ளது. இருபத்து ஐந்து வருடங்கள் முன்புடன் ஒப்பிடும்போது இப்போது அசுரவேகம் என கூறவேண்டும். இருந்தும் என்ன பயன்? எமது வாழ்க்கை தரம் முன்னேறி உள்ளதா? உலகில் அமைதி நிலவுகின்றதா? மனிதன் முன்பை விட மகிழ்ச்சியாக வாழ்கின்றானா? எல்லாம் சிந்திக்கவேண்டிய விடயங்கள். இப்போது ஒரு சில நிமிடங்களில் எவ்வளவோ தகவல்களை பரிமாறுகின்றோம், தரவேற்றுகின்றோம், இறக்குகின்றோம். தகவல்கள் அசுர வேகத்தில் பரிமாறப்படுகின்றன. இருந்தும் என்ன பயன்? பல வினாக்கள் எழுகின்றன.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இலங்கையின் அனைத்து துறைமுகங்களையும் இந்தியாவுடன் இணைக்கும் திட்டம்!
விமானநிலையத்தைத் தானே கொடுத்தாங்க. துறைமுகம் சீனாவிடம் தானே இருக்கு?1 point- Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
மிகச் சிறந்த மனிதர். நல்ல அரசியல்வாதியாகவும் இருந்தவர். நேற்று முழுதும், நல்லா பழகிய ஒருவரை இழந்துவிட்டதாக மனம் அரட்டிக் கொண்டு இருந்தது. இவரது அரசியல் வாழ்வையும் நாசமாக்கியவர் வேறு யாரும் இல்லை...வைகோ தான்.1 point- இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
1 point- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
சரி தான் நான் நினைத்தது 100%உண்மையே ஏன் தான் இப்படியானவர்கள். குறைந்த தீர்வு யார் தகுதியான தலைவர் இலங்கையில் புலம்பெயர் நாட்டில் ஒரு தலைவர் தேடுகிறார்கள் என்று தெரியவில்லை குறிப்பு,. .யாரையும் குறிப்பிடவில்லை1 point- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
1) அல்வாயனின் எழுத்துக்களில் தனிநபர் தாக்குதல் மோசமாக இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் தாங்கள் அதனை நியாயப்படுத்துகிறீர்கள். (தனிநபர் தாக்குதலை ஊக்குவிப்பவருக்கு தங்களின் பதில் என்ன?) 2) என்னுடைய கருத்துகள் ஈழத்தில் உள்ள எமது மக்களின் இன்றைய யதார்த்த நிலையை சிந்தித்து எழுதப்படுபவை.. இது பலருக்கு கோபத்தை உண்டாக்குமானால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. அப்படிக் கோபப்படுபவர்களின் கோபம் உண்மையானதாக இருக்குமாயின் அவர்களும் அவர்களைத் தடவிக்கொடுத்து உசுப்பேற்றி வேடிக்கை பார்ப்போரும் வெளிநாடுகளிற்கு வராமல் இலங்கையில் இருந்து ஆயுதம் தூக்கியிருக்க வேண்டும். 😏1 point- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
இந்த திரியில். முதலிலிருந்து வாசித்து பாருங்கள் அவரை அப்படி எழுத தூண்டியது நீங்கள் தான் என்பது புரியும் இது என்னுடைய கணிப்பு துணிவு இருந்தால் இல்லை என்று நிறுவுங்கள் பார்க்கலாம், ஒவ்வொரு திரியிலும். குறைந்த பட்ச முன்மொழிவுகளை கேட்டு கேட்டு தமிழர்கள் தீர்வுகள் என்பதை போட்டு சிதைக்கப்பட்டுவிட்டது,..இது உங்களுடைய திட்டமிடப்பட்ட செயல்பாடுகள் ஏன் இப்படி கேட்கவேண்டும் .??? நாங்கள் சிறுபான்மையினர் என்பதால் நாங்கள் ஆளப்படவேண்டியவர்களாகவும் உரிமைகள் குறைந்தவர்களாகவும் இருக்க வேண்டுமா??? ஒரு நாட்டுக்குள் பெரும்பான்மையானவர்கள் அதிக உரிமைகள் உடையவர்கள் சிறுபான்மையினர் குறைந்த உரிமைகள் உடையவர்கள் இதுவா உங்கள் கொள்கை ?? இன்றைக்கு தமிழர்களின் தீர்வுகள் குறைத்து குறைத்து இல்லாமல் போய்விட்டது தமிழர்கள் தான் இப்படி செய்தார்கள் மற்றும் சிங்கள தலைவர்கள் தீர்வுகளுடன். ...தமிழருக்கு உரிய உயர்ந்த தீர்வுகள் வைத்து கொண்டு யாரிடம் கொடுப்பது என்று அலைவது போல ஒரு விம்பத்தை கானல்நீரை கடுமையாக உழைத்து உருவாக்கி வைத்திருக்கிறீர்கள் தமிழருக்கு நீங்கள் விரும்பும் குறைந்த பட்ச தீர்வுகள் வழங்க வேண்டும் என்று பகிங்கரமாக சொன்ன உறுதி அளித்த ஒரு சிங்களத்தலைவரை,.ஒரேயொரு சிங்களத்தலைவரை சுட்டி காட்டுங்கள் பார்க்கலாம். முடியாது ஒருபோதும் முடியாது எவராலும் முடியாது.... இப்படி ஒரு சிங்களத்தலவர் இல்லாத போது தமிழர்கள் எப்படி தீர்வுகள் பெற முடியும்???? தமிழருக்கு எப்படி நேர்மையான தலைவர் இருந்தாலும் கூட தீர்வுகள் பெற முடியாது . . ...நன்றி வணக்கம் 🙏1 point- நாகபட்டினம் - காங்கேசன்துறை சரக்குக் கப்பற்சேவை விரைவில்!
101´வது முறையாக மீண்டும் கப்பல் சேவை பொங்கலுக்கு ஆரம்பிக்கப் போகின்றது. சம்பந்தன் ஐயாவின் பொங்கல் தீர்வுடன் இதுகும் வருவது சந்தோசம். 😂1 point- கருத்து படங்கள்
1 point1 point- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
அமைச்சர் செய்ய சொன்னார் ; நான் செய்தேன்-..இதுதான் இப்ப யாழில்😋1 point- Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
தமிழ் நாட்டு இதர நடிகர்கள் அச்சமடையுமளவிற்கு மனித நேயமிக்கவர் என கூறுகின்றார்கள். ஏனைய நடிகர்களை திட்டுவது போல் விஜய்காந்த் அவர்களை திட்டியதை நான் எங்கும் காணவில்லை.1 point- இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
இந்தியாவுக்கு ஆயிர கணக்கில் இனி பாட சென்று விபச்சார விடுத்துதிகளில் இருந்து மீட்டு வராதவரை ஓகே. கலைதுறை என்பது பொதுகவே உலகம் பூரா ஓரிருவருக்கு அபராத வெற்றியையும் ஆயிரக் கணக்கவனவர்களுக்கு வாழ்வை சீரழித்த கதையாகவே தொடர்கிறது1 point- ரஷ்யாவின் ஆயுத உதவியை விட குறைந்தளவில் ஆயுதங்களைப்பெறும் உக்ரைன்
1) இது NATO வின் Proxy War என்று உலகமே ஒத்துக்கொண்டுவிட்டது. 2) கண்ணாடிக்கு முன்பு நின்றுகொண்டு ஏசக்கூடாது.1 point- கருத்து படங்கள்
1 point1 point- பக்கத்து வீடு
1 pointஓ டியர். இப்போ தான் உங்களின் பக்கத்து வீடு வாசிக்க முடிந்தது. நல்ல அயலவர்கள் கிடைப்பதற்கும் கொடுத்து வைக்க வேண்டும். கொசுறு தகவல்: நண்பர் ஒருவர் உறவினர் ஒருவரின் செத்த வீட்டுக்கு சென்றார். வாசலில் பாதுகாப்பு காவலர்(security guard) நின்றார். அவரும் ஆச்சரியப்பட்டு ஏன் செத்த வீட்டில் பாதுகாப்பு காவலர் நிற்கிறார் என கேட்க, ஒருவர் இறந்தவரின் கடைசி ஆசை தனது 4 மருமகள்கள் தனது செத்த வீட்டுக்கு வரக்கூடாது என இறக்க முன் சொல்லி இருந்தாராம்.😄 அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஒழுங்கு செய்யப்பட்டதாம்.😁 அதற்கு பிறகு அந்த மருமகள்களின் ஆட்கள் செத்தவீட்டுக்கு வந்து செத்த வீடு அடிபிடியில் முடிந்து பொலிசும் வந்ததாக கேள்வி. (இடம் : கனடா)1 point- பக்கத்து வீடு
1 pointஅப்ப நாலைஞ்சு வீடு வைச்சிருக்கிற என்ரை மச்சானை ஏணிவைச்சாலும் தொடேலாது எண்டுறியள்? 😂1 point- துறவியாகும் டயானா கமகே?
1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- செவ்வரத்தம் பூக்காறி-பா.உதயன்
1 pointகவனம் உதயன்......மெல்ல அணைத்து நீங்கள் செல்லமாக எதோ சொல்லப்போக தேனீக்கள் கொட்டப்போகுது ............! 👍1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு