Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33600
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87990
    Posts
  3. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    9308
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/15/24 in all areas

  1. யாழ் இணைய உறவுகள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.
  2. தவறான தகவல் கந்தையா அண்ணா. ரணில் மட்டுமல்ல இலங்கையின் எந்த அதிபரும் வெளி நாடு சென்ற வேளை பதவி இறக்கப்பட்டவில்லை. அதே நேரத்தில் JVP யின் அழுத்தத்தால் ரணில் இடை நடுவில் பதவி இறக்கப்பட்டார் https://www.aljazeera.com/news/2004/2/7/sri-lankas-parliament-is-dissolved
  3. ராசவன்னியன் அண்ணா, இணையவன் அண்ணா , கந்தையா அண்ணா, ஏராளன் , நியாயம் , புரட்சிகர தமிழ்தேசியன், Island , Suvy , நீங்கள் தெரிவித்த பொங்கல் நல்வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்
  4. புலிகளை அழிக்க முன் அமெரிக்க இந்திய மேற்கு நாடுகள் நாங்கள் புலிகளை அழிக்க போகிறோம்.நடந்து முடிந்த பின் தமிழர் பிரச்சனைகளைத் தீர்ப்போம். அதுவரை பேசாமல் இருங்கள் என்று சொல்லி தமிழர் தரப்பில் பேரம்பேசும் சக்தியை அழித்தவர்கள் இன்னமும் யாருக்காக ஏன் காத்திருக்கிறார்கள்?
  5. இலங்கை ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரமடைந்த பின்னர் ஈழத்தமிழர் பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பமாகியது.அதன் பின்னர் தந்தை செல்வாவின் ஆணித்தரமான முன்னெடுப்பின் மூலமாக தமிழர் உரிமைப்பிரச்சனை பூதாகரமாகியது. அதன் பின் ஆயுத போராட்டங்களும் அமைதி பேச்சுவார்த்தைகளுக்கும் பஞ்சமில்லை.இப்போது 2024ம் ஆண்டில் காலடி வைத்துள்ளோம்.. எனவே அன்று தொடக்கம் இன்று வரைக்கும் சிங்களம் ஈழத்தமிழர்களுக்கு எதையுமே விட்டுக்கொடுக்க தயாரில்லை என்பதை எல்லோரும் கண்கூடாகவே பார்க்கின்றோம். வந்த சந்தர்ப்பங்களை தவற விட்டார்கள் என சொல்வதற்கு ஈழத்தமிழர் பிரச்சனை ஒன்றும் அதிஷ்டலாப சீட்டு விவகாரம் அல்ல. நியாயமான முறையில் சட்டப்படி தீர்க்கப்பட வேண்டிய விவகாரம்.
  6. தமிழ் மக்களின் கவனத்தை பெறாத தமிழரசுக்கட்சியின் தேர்தல் | அரசியல் களம் | ஆய்வாளர் அருஸ் | இலக்கு
  7. https://www.parliament.lk/ta/prime-ministers இலங்கைப் பாராளுமன்ற இணையத்தளத்தில் இருந்து வெட்டி எடுத்த படத்தை மேலே இணைத்துள்ளேன். இலங்கையின் சனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமானவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 2022 ஜூலை மாதம் 21 ஆம் திகதி இலங்கையின் சனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அவர் ஆறு முறை இலங்கையின் பிரதமராக பதவிவகித்துள்ளார். சனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்கள் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர், 1993–94 காலப்பகுதியில் முதற் தடவையாக ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதமராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர், சந்திரிக்கா குமாரதுங்க சனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் 2001 முதல் 2004 வரை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை வழிநடத்த, பிரதமராக பதவியேற்றார். 2015 ஜனவரியில், சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் உருவான கூட்டரசாங்கத்தின் பிரதமராக அவர் பதவியேற்றார். அவரது இந்நியமனம் 2015 ஆகஸ்ட் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் இலங்கை மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. 2018 அக்டோபரில் அவரை சட்டவிரோதமாக பதவியிலிருந்து அகற்றிய பின்னர், 2018 டிசம்பர் மாதம் மீண்டுமொருமுறை அவரை பிரதமராக நியமிப்பதற்கு சனாதிபதி சிறிசேன நிர்ப்பந்திக்கப்பட்டார். 2019 நவம்பரில், ஐ.தே.க.வின் சனாதிபதி வேட்பாளர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், அவர் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். 2022 ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் சீரழிவைத் தடுத்துநிறுத்த, தனது நிபுணத்துவத்தையும் அனுபவத்தையும் வழங்குவதற்காக ஓர் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்குமாறு சனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் 2022ஆம் ஆண்டு மே மாதம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்டார். அவர் 1946 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட இலங்கையின் மிகப் பழமையான அரசியற் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராவார். அவர் 1977 ஆம் ஆண்டிலிருந்து (2020 ஆகஸ்ட் முதல் 2021 ஜூன் வரை ஒரு பத்து மாத இடைவெளியைத் தவிர) அனைத்துப் பாராளுமன்றங்களிலும் பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றிய இலங்கையின் மிகவும் மூத்த, அனுபவமிக்க ஒருவராவார். https://www.presidentsoffice.gov.lk/index.php/the-president/?lang=ti WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Sri Lanka plunges into constitutional crisis இலங்கை அரசியல் யாப்பு நெருக்கடிக்குள் மூழ்கிப்போயுள்ளது By K. Ratnayake 5 November 2003 Use this version to print | Send this link by email | Email the author இலங்கையின் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மூன்று ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அமைச்சர்களை முக்கிய பொறுப்புக்களில் இருந்து விரைவாக வெளியேற்றவும் பாராளுமன்றத்தை நவம்பர் 19 வரை ஒத்திவைப்பதற்காகவும் தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியதன் மூலம், நேற்று ஒரு கூர்மையான அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்தார். குமாரதுங்க, அரசாங்கத்துக்கு எதிரான தனது நடவடிக்கைகளை மேற்கொண்டது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாஷிங்டனில் இருந்துகொண்டிருந்த போதேயாகும். அவர் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷை இன்று சந்திக்கவிருந்தார். குமாரதுங்க பாதுகாப்பு, உள்துறை மற்றும் ஊடக அமைச்சுக்களை தனது கைகளில் எடுத்துக்கொண்டதோடு, திலக் மாரபன, ஜோன் அமரதுங்க மற்றும் இம்தியாஸ் பகீர் மார்கர் ஆகியோரையும் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கினார். இந்த மூவரும் எஞ்சிய பொறுப்புக்களை கொண்டிருப்பதோடு அமைச்சரவையிலும் உள்ளனர். ஒவ்வொரு அமைச்சுக்குமான உயர் மட்ட அலுவலர்களும் பதிலீடு செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்ற ஒத்திவைப்பானது நவம்பர் 12 அன்று முன்வைக்கப்படவிருந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதைத் தடுக்கும். இராணுவத்தை வழிநடத்தும் வகையில், ஜனாதிபதி தேசிய தொலைக்காட்சி நிலையங்கள், வானொலி, அரசாங்க அச்சகம் மற்றும் தலைநகரில் உள்ள பிரதான மின்நிலையங்களில் துருப்புக்களை குவித்துள்ளார். அமைச்சர்களை விலக்குவதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதா என்பதை நிச்சயிப்பதற்காக ஒரு விசேட பொலிஸ் குழுவொன்று அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அமெரிக்க, பிரித்தானிய, நோர்வே மற்றும் இந்தியத் தூரகங்களுக்கு வெளியிலும் மற்றும் இலங்கைக் கண்காணிப்புக் குழுவுக்கு வெளியிலும் பாதுகாவலர்கள் இருத்தப்பட்டனர். நாடு பூராவும் பொலிசார் அதிக விழிப்புடன் இருத்தப்பட்டிருந்ததோடு எல்லா விடுமுறைகளும் விலக்கப்பட்டன. நாட்டின் வடக்கில், கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான பிரதான பாதையில் நுழைவாயிலில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நேற்றுப் பின்னிரவு தேசிய தொலைக்காட்சியில் தோன்றிய குமாரதுங்க அவரது நடவடிக்கைகள் "தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு" அவசியமானது எனக் குறிப்பிட்டார். "கடந்த சில மாதங்களாக காணப்பட்ட கொந்தளிப்பான அபிவிருத்திகள் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட விளைபயனற்ற நடவடிக்கைகளும் என்னை உறுதியானதும் நிலையானதுமான நடவடிக்கைகளை எடுக்கத் தள்ளியது," என அவர் குறிப்பிட்டார். ஆனால் அவர் தனது அசாதாரணமான நகர்வுக்கு தெளிவான காரணங்களையோ அல்லது தனது அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதையிட்டோ தெளிவுபடுத்தவில்லை. https://www.wsws.org/tamil/articles/2003/nov/101103_SLConCris.shtml
  8. இந்த சம்பவம் நடைபெற்ற இடம் இந்தியா என்பதால் செய்தி ஆச்சரியத்தை தரவில்லை.
  9. தமிழரசு கட்சியின் தலைவர்கள் தமிழ் மக்கள் தானே?
  10. மேற்குலகு தான் தப்ப எதையும் செய்யும். ஆனால் தான் கொண்ட கொள்கையை என்றும் மாற்றாது. இதுவரை மாற்றியதும் இல்லை. இதனால் தான் இந்த பூமி இன்றும் கலவர பூமியாக உள்ளது.
  11. யாழ் இணையத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியிருப்பதால் சாக்குச் சொல்லாமல் நிச்சயமாக நீங்கள் பதில் எழுத வேண்டும். கருத்தை நீக்க வேண்டுமா இல்லையா என்பது கள விதிகளைப் பொறுத்தது.
  12. சிங்களவனால் தமிழனுக்கு தீர்வா??? முதலில் சோனகர்கள் தற்போது உங்களைப் போன்ற தமிழ் கிறீஸ்தவர்கள். பூனைக் குட்டி வெளியில் வந்து விட்டது. தமிழர்கள் எப்போதும் சைவர்களுக்கு தீர்வு என்று கேட்டது கிடையாது. சிவபூமி சிவசேனை ஓன்றும் அரசியல் கட்சி அல்ல. வெளியில் இருந்து யாரும் உபதேசம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை ஆனால் உதவி என்றவுடன் பல்லைக் காட்டிக் கொண்டு வந்து விடுவீர்கள்.
  13. ஐயா சம்பந்தனுக்கு கோபம் வந்துவிட்டது. இனி ரணில் சரி.
  14. நாங்கள் கோவைக்காயை இரு முறைகளில் வெட்டி சமைத்துப் பார்த்தோம். நீளவாட்டில் வெட்டியதை விட, குறுக்கு வாட்டில் ஒரு சென்ரிமீற்றர் அளவில் வெட்டியது மிக சுவையாக இருந்தது. 👍 கோவைக்காயை இதுவரை சாப்பிடாமல், வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கி விட்டேன் என்று இப்போ கவலையாக உள்ளது. 🤣 ஆம். சென்ற சனிக்கிழமை சிலோன் தமிழ்க்கடையிலும் விற்பதை கண்டேன். 🙂
  15. இந்தியாவை எதிர்க்கக்கூடிய ஒரு சக்தி மேற்குலகிற்குத் தேவைப்பட்டது(சீனாவுக்கு தாய்வான் போல), எப்போது விபு க்கள் தமது சொல்லைக் கேட்கும் நிலையில் இல்லை என்று மேற்குலகு உணரத் தலைப்பட்டதோ அந்தக் கணமே விபு க்களை அழிப்பது என்று மேற்கு முடிவு செய்துவிட்டது. அதன் விளைவு May 2009. தமிழருடன் ஒப்பிடும்போது சிங்களம் மிகவும் இலகுவாக மேற்கத்தேய அணுகுமுறைகளுடன் ஒத்துப்போகும் ஒரு இனம் என்பதை நாம் ஆழமாகக் கவனிக்க வேண்டும். மேற்குலகுக்கு தற்போது உள்ள ஒரே ஒரு பிரச்சனை ராசபக்சேக்களின் சீனா நோக்கிய நகர்வு மட்டும்தான். சிங்களம் எப்போது மேற்கின் அணுகுமுறைக்கு (மீண்டும்) ஒத்துழைக்கத் தொடங்குகிறதோ அந்தக் கணமே இலங்கையில் இனப்பிரச்சனை உள்ளது எனும் மேற்குலகின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும்.
  16. அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.
  17. அனைத்து கள உறவுகளுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
  18. அனைத்துலக தமிழீழ சொந்தங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.. 90 & 80 கிட்ஸ் நினைவாக பொங்கல் வாழ்த்து அட்டை...
  19. யாழ் களத்தில் இடைப்பட்ட காலத்தில் பச்சைப் புள்ளி மற்றும் சிவப்பு புள்ளி வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. பின்னைய காலங்களில் புள்ளி வழங்கும் முறைமைகள் தவறான முறையில் பாவிக்கப்பட்டமையினால் பல அறிவுறுத்தல்களின் பின்னர் சிவப்பு புள்ளி வழற்கும் முறை முற்றாக நிறுத்தப்பட்டது. பின்னைய காலங்களில் பச்சைப்புள்ளி வழங்கும் முறையிலும் சிலரால் விடயத்திற்கு புள்ளிகள் வழங்கப்படாது எழுதியவருக்கு என்று / இணைத்தவருக்கே புள்ளி வழங்கப்பட்டதை பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிந்தும் புரிந்தும் கொண்டமையால் புள்ளிகள் வழங்கியவர் விபரங்களை மறைக்க வேண்டிய நிலைமைக்கு வந்திருந்தோம். தற்போது மீண்டும் பழைய நிலைக்கு பச்சைப் புள்ளிகள் வழங்கியவர்களை பார்வையிடும் வசதியையும் சிவப்பு புள்ளி வழங்கும் முறையை மீண்டும் அறிமுகப்படுத்தத் தீர்மானித்துள்ளோம். அதேவேளை புள்ளிகள் வழங்குபவர்கள் சரியான முறையில் வழங்குகின்றார்களா என்பதையும் கண்காணிப்போம். தவறாகப் பயன்படுத்துவதும் குழுக்களாக இணைந்து புள்ளிகள் வழற்குவதும் கண்டுபிடிக்கும் பட்சத்தில் அந்த குறிப்பிட்ட உறுப்பினர்கள் சில காலத்திற்கோ அல்லது நிரந்தரமாகவே புள்ளி வழங்கும் முறையில் தடை வழங்கப்படும். கால மாற்றத்திற்கேற்ப இடை நிறுத்தப்பட்ட இந்த புள்ளி வழங்கும் முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றது.
  20. பெரிய மனுசர், பெரிய மனுசர்தாய்யா. அதுதான் அழகு. 😃 ஆனாலும் அரசியல் கருத்துக்களை ஈயம் பூசினால் போல வைப்பதில் தவறில்லை. நீங்கள் கருத்து வைக்காமல், வெளியாட்களாகிய நாங்கள் கருத்து வைப்பதால் என்ன பயன்? 😌
  21. Sritharan Gnanamoorthy மேஜர் சோதியா! மேஜர் சோதியா என்றவுடன் நெடிதுயர்ந்த தோற்றம்,வெள்ளை நிறம், சிரித்த முகம் இவைதாம் எம் நினைவுக்கு வரும்.நான் முதன் முதலில் சோதியாவை மணலாற்றுக் காட்டில் புனிதபூமியிற்தான் பார்த்தேன்.நான் தலைவரோடு வாழ்ந்த அந்த மறக்க முடியாத நாட்களின் போதுதான் அடிக்கடி அவரைப் பார்க்க முடிந்தது. "பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை". பெண்கள் விடுதலை பெறாமல் தேசவிடுதலை முழுமை பெறாது என்பதனால்தான் மகளிர் படையணியை உருவாக்கினார் தேசியத் தலைவர் அவர்கள். "பெண்கள் சம உரிமை பெற்று ஆண்களுடன் கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாக தமிழீழம் அமைய வேண்டும் என்பது எனது ஆசை" என்றார் தேசியத் தலைவர் அவர்கள். அந்த சிந்தனையின் வெளிப்பாடாகவே 1985 ஆம் ஆண்டு பெண் போராளி களுக்கான பயிற்சிப் பாசறை தமிழ்நாட்டிலே ஆரம்பிக்கப் பட்டது. தமிழ்நாடு திண்டுக்கல் சிறுமலைப் பகுதியில் 1985 ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி பெண் போராளிகளுக்கான பயிற்சிப் பாசறை ஆரம்பித்து வைக்கப்பட்டது.அந்த முகாம் மகளிர்க்கான முதலாவது முகாம். ஆனால் அது தமிழ்நாட்டிலே நடைபெற்ற புலிகளின் ஏழாவது பயிற்சி முகாம் ஆகும். யாழ் மாவட்டம் வடமராட்சி நெல்லியடியை பிறப்பிடமாகக் கொண்ட மைக்கேல் வசந்தி அந்தப் பயிற்சி முகாமிலேயே சோதியாவாக மாற்றம் பெற்றார்.83 ஆம் ஆண்டின் கறுப்பு ஜூலையே இளைஞர்களை மட்டுமின்றி இளம் பெண்களையும் விடுதலைப் போராட்டம் பற்றி சிந்திக்க வைத்தது. விடுதலை இயக்கங்களோடு தங்களை இணைத்துக் கொண்டு போராட முன்வந்தவர்களில் ஒருவரே மைக்கல் வசந்தி.இவரது சகோதரரும் இவரும் ரெலோ இயக்கத்தில் இணைந்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். ரெலோ இயக்கத்தினர் ஏனோ தெரியவில்லை, பெண்களுக்கு பயிற்சி கொடுக்க முன்வராது அவர்களை கைவிட்டிருந்தனர்.தமிழ்நாட்டில் கைவிடப்பட்டிருந்த நிலையில் இருந்த பெண்கள் பற்றி தேசியத்தலைவர் அறிந்து கொண்டார்.அவர்களையும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொள்ள எண்ணி கேணல் சங்கரையும்,ரகுவப்பாவையும் அனுப்பி எங்கள் அமைப்பில் இணைந்து கொள்ள விரும்பியவர்களை அழைத்து வரும்படி ஏற்பாடு செய்தார்.அப்படி அழைத்து வரப்பட்டவர்களில் ஒருவர்தான் மைக்கேல் வசந்தி. இயக்கத்தில் இணைந்து கொள்வதற்காக வந்திருந்த பெண்களுக்காக சென்னை திருவான்மியூர் பகுதியில் வீடொன்றில் வாடகைக்கு எடுத்து தங்க வைக்கப் பட்டிருந்தார்கள்.தேசியத்தலைவர் அவர்களினதும், திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களினதும் கண்காணிப்பில் இவர்கள் பராமரிக்கப் பட்டார்கள்.பயிற்சிப் பாசறைக்குச் செல்வதற்கு முன் அரசியல் வகுப்புக்கள், கராத்தே பயிற்சி என்பன நடத்தப் பட்டன. 1985 ஆகஸ்ட் மாதம் 18 ஆம் நாளில் ஆரம்பிக்கப்பட்ட மகளிர்க்கான முதலாவது பயிற்சிப் பாசறை தான் சோதியாவை புடம் போட்டு எடுத்தது. தாதியர் பயிற்சியில் ஈடுபாடு கொண்டிருந்த சோதியா அந்த பயிற்சி முகாமில் ஒரு போராளியாக மட்டுமன்றி மருத்துவதாதியாகவும் பணி புரிந்தவர். ஓட்டத்தில் தொடங்கி,கயிறு ஏறுதல், மலை ஏறுதல் என்றெல்லாம் கடுமையான பயிற்சிகளை முடித்துக் களைத்துப் போய் வந்தவர்களுக்கெல்லாம் அக்காவாக,தாயாக,மருத்தவச்சியாக செயற்பட்டவர் சோதியா. காய்ச்சல்,வயிற்றுவலி,கைகால் வலி என்று வேதனைப் பட்டவர்க்கெல்லாம் தனது களைப்பும் பாராது ஓடி ஓடி சேவை செய்தவர் சோதியா.சாப்பிடுவதற்குக்கூட நேரமின்றி சக போராளிகளுக்கு மருந்துகள் கொடுப்பதிலும் அவர்களைப் பராமரிப்பிலும் முகம் சுளிக்காது செயற்பட்டவர் அவர்.அந்த முகாமிலேயே பயிற்சியாளர்களினதும்,தேசியத் தலைவர் அவர்களினதும் பாராட்டைப் பெற்றவர் சோதியா. சோதியாவின் பரிவும் இரக்கமும், சக போராளிகளின் மீதான கவனிப்பும் அவரது மருத்துவப் பணியும் அவரை ஒரு தாயாக,நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதி புளோரன்ஸ் நைட்டிங்கேல் உடன் சோதியாவை உருவகப்படுத்தும் அளவுக்கு அவரது பணிகள் இடம் பெற்றிருந்தன. தமிழ்நாட்டில் பயிற்சியை முடித்துக் கொண்டு ஈழத்துக்குத் திரும்பிய சோதியா சிங்கள,இந்திய இராணுவங் களுக்கு எதிரானபோர் நடவடிக்கைகளில் பங்கேற்றார்.89 களின் போது மணலாற்றுக் காட்டிற்குச் சென்று சேர்ந்த சோதியா அங்கு விடியல் முகாம் அமைத்தல் உட்பட பல பணிகளிலும் பங்கேற்றார்.திசையறி கருவியின் உதவியோடு காட்டினுள் நகர்தல், கம்பாலா மூலம் சுமைகளைத் தூக்குதல் என அனைத்து விதமான பணிகளிலும் தானும் ஒருவராக பங்கேற்று, அவர்கள் களைப்புற்ற வேளைகளில் அவர்களோடு உட்கார்ந்து அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டியவர்.ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் அனைத்துக் கடமைகளையும் பொறுப்பேற்றுச் செய்தமை,புதிய போராளிகளை உருவாக்குதல்,அவரது மருத்துவப் பணிகள்,அவரது தலைமைத்துவப் பண்பு என்பனவற்றையும் அவதானித்த தேசியத் தலைவர் அவர்கள் சோதியாவை மகளிர் படையணியின் முதற் தளபதியாக நியமனம் செய்தார். ஆரம்பத்தில் மருத்துவம்,தொலைத் தொடர்பு சேவைகள் என செயற்பட்ட சோதியாவுக்கு தளபதியாக நியமிக்கப் பட்ட பின்பு பொறுப்புக்கள் அதிகரித்தன. பெண் போராளிகளின் சகல விதமான பிரச்சனைகளையும் உடனுக்குடன் தேசியத் தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று அனைத்து குற்றம் குறைகளையும் நிவர்த்தி செய்தார். போராளிகள் நோய்வாய்ப்படும்போது அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் கொடுப்பதோடு மாத்திரம் நின்று விடாது அவர்களுக்கு தைரியம் ஊட்டி அவர்களை எழுந்து நடமாடச் செய்வார். மற்றையவர்களுக்கு மருத்துவராக சேவையாற்றி அவர்களது நோய் அறிந்து மருத்துவம் பார்த்த சோதியா தனது உடலில் ஏற்பட்ட நோயைக் கண்டறிய முடியாமற் போனமை பெரும் துயரமான சம்பவமே.சாதாரண காய்ச்சல் என்று எண்ணி மாத்திரைகளோடு வாழ்ந்த அவரை நோயின் தாக்கம் அதிகரித்த போது தேசியத்தலைவரின் பணிப்பிற்கு அமைய சக போராளிகள் வல்வை ஊறணி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார்கள்.அங்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காது அவர் மரணத்தைத் தழுவிக் கொண்டார். சக போராளிகளோடு நடந்து சென்றவரை உயிரற்ற உடலாக சவப்பெட்டியில் சக போராளிகள் தோளில் சுமந்து வந்த போது தேசியத் தலைவர் உட்பட புனிதபூமியில் வாழ்ந்த நாம் அனைவருமே ஆற்ற முடியாத துயரில் மூழ்கிப் போனோம். இறுதிக் கணங்களில் சக போராளி களிடம் தனது உடல் புனிதபூமியிலே விதைக்கப்பட வேண்டும் என தனது இறுதி விருப்பத்தைத் தெரிவித்திருந் தார். அதற்காக புனிதபூமியில் குழியும் தயார் செய்யப்பட்டிருந்தது.சோதியாவின் உடலோடு புனிதபூமிக்கு வந்த சோதியாவின் உறவினர் ஒருவர் தேசியத்தலைவரிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். சோதியாவின் பெற்றோர்,உறவினர்கள், ஊரவர்கள் சோதியாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்.அவர்களது குடும்பசேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும்.அதற்கான சந்தர்ப்பத்தைத் தாருங்கள் என்று கேட்டுக்கொண்ட போது எதுவித மறுப்பும் இன்றி சம்மதம் தெரிவித்ததோடு அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளு மாறும் போராளிகளிடம் பணித்தார் தலைவர். புனிதபூமியில் சோதியாவின் வித்துடலுக்கு இறுதி மரியாதை செய்த பின், தேசியத்தலைவர் அவர்கள் பூனிதபூமியில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து பெட்டியினுள் இட்டு சோதியாவை வழியனுப்பி வைத்தார். சோதியாவின் வித்துடல் சக பெண் போராளிகளால் எடுத்துச் செல்லப்பட்டு வடமராட்சியின் சில பகுதிகளுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட பின் கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் மத நிகழ்வுகள் இடம்பெற்ற பின்,சோதியா குடும்பத்தினர்களுக்கான சேமக்காலையில் அவரது வித்துடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சோதியாவுக்கு நினைவுக் கல் வடமராட்சி எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேஜர் சோதியாவின் நினைவாக 14.07.96 இல் சோதியா படையணி உருவாக்கப்பட்டது.
  22. ஒன்றை தவிர வடக்கு கிழக்கை நிர்வாகரீதியாக பிரித்ததில் மட்டும் வெற்றி
  23. நாம் குறுகிய காலம் பாவித்துவிட்டு மாற்றும் கைத்தொலைபேசிகள் ஆபிரிக்காவில் மனிதர்கள் வெறும் ஒருசில டொலர்கள் சம்பளத்தில் இரத்தம் சிந்தி உயிரைக் கொடுத்துச் சுரங்கங்களிலிருந்து எடுத்துத் தரும் கனிமப் பொருட்களைக் கொண்டுள்ளன. நான் தற்போது பாவிக்கும் iPhone 6s 2016 ஜனவரியில் மகளுக்கு வாங்கியது. 2020 மீள்மெருகேற்றப்பட்ட iPhone X ஒன்றை வாங்கிக் கொடுத்துவிட்டு iPhone 6s இனை எனதாக்கிக் கொண்டேன். இதன் பற்றியை மட்டும் மாற்றினேன். இது பாவிக்க முடியாமல் போகும் போது மகளின் iPhone X இனை நான் எடுத்துக் கொள்வேன். பொதுவாக அப்பிள் மென்பொருள் மீள் பதிவுகளை (system security update) 7 வருடங்களுக்கு மேல் செய்துகொள்ள முடியும். Google Pixel தவிர்ந்த ஏனைய Android கைத் தொலைபேசிகளில் பொதுவாக 4 வருடங்களே இதன் ஆயுட்காலம். நான் 25 வருடங்களாகப் பாவிக்கும் கணணிகளும் அப்பிள்தான். வீட்டில் நான் பாவித்த iMac (ஏற்கனவே பாவித்த ஒருவரிடமிருந்து 2011 இல் வாங்கியது) தற்போது எனது மாமனார் ytube பார்ப்பதற்காகப் பாவிக்கிறார். 2013 இல் வாங்கிய iMac 21 தற்போது பாவிக்கிறேன். இதன் Disk வேகம் முறைந்தது என்பதாலும் வேலையில் மடிக்கணணி தந்துள்ளதாலும் இதனைப் பாவிப்பது இப்போது மிகக் குறைவு. அப்பிள் பொருட்கள் விலை அதிகமானாலும் அவற்றைப் பாவிக்கும் காலம் அதிகமானதாலும் பழுதுகள் வருவது முறைவு என்பதாலும் தொடர்ந்து அவற்றையே பாவிக்கிறேன்.
  24. நீங்கள் கூறியது தகவல் தவறு மட்டுமல்ல, ஒட்டு மொத்தமாக இடைக்கால நிர்வாக அலகு சமர்பிக்கப்பட்ட காரணத்தைக்கூட உங்கள் சுய இன்பத்துக்கக வசதிகேற்ப மாற்றும் முயற்சி. 2003 ஒக்ரோபரில் இடைக்கால நிர்வாக அலகு வரைபு சமர்பிக்கப்பட்டது. சுனாமி நடந்தது 2004 டிசம்பரில். இதை யாரும் உறுதிப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. அல்பேர்ட் அயன்ஸ்ரைனின் பொது சார்பியல் கோட்பாட்டின்படி ரைம் ரவல்ஸ் செய்தாலும் நடந்த உண்மை தேதிகளை உங்கள் வசதிக்காக மாற்ற முடியாது. அது என்னாலும் முடியாது. நான் கூறியது நடந்த உண்மைகள் மட்டுமே. உண்மைகள் உங்களுக்கு கசந்தால் அதற்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது.
  25. விபு க்களை இங்கே கொண்டுவருவதை முடிந்த அளவு தவிர்க்கலாம். அது தேவையற்ற விமர்சனங்களுக்கும் குழப்பங்களுக்கும் வழிவகுக்கலாம் என்பது என் கருத்து.
  26. மனித உரிமை.....மனித உரிமை என வாய் கிழிய கத்துபவர்கள் தான் மனிதர்களை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். உண்மைக் கதைகளை சொன்ன உதயகுமாருக்கு நன்றிகள்.
  27. வணக்கம் வாத்தியார்......! ஆண் : நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கெறங்கி போனேன்டி ஆண் : அடியே சூடான மழையே கொடைக்குள் நனஞ்சுக்கலாமா கொடியே வெத்தல கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா ஆண் : அழகே தாவணி பூவே தேன எடுத்துக்கலாமா கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்கலாமா பெண் : நீ கட்டும் வேட்டி மடிப்புல நா மயங்கி போனேனே உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே பெண் : வண்டு சாமந்தி பூவில் நாயனம் ஊதுது மாமா மனசு ஆசையினாலே ஊஞ்சல் ஆடுது மாமா பெண் : மலரும் தாவணி பூவில் தேன எடுத்துக்க மாமா கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்க மாமா ஆண் : நீ வெட்டி வெட்டி போடும் நகத்தில் எல்லாம் குட்டி குட்டி நிலவு தெரியுதடி ஆண் : உன் இடுப்பழகில் ஒரசும் கூந்தலிலே பத்திகிட்டு மனசு எரியுதடி பெண் : சிக்கி முக்கி கல்ல போல என்ன சிக்கலிலே மாட்டாதே தாலி ஒன்னு போடும் வர என்ன வேறெதுவும் கேக்காதே ஆண் : அந்த வானம் பூமி எல்லாம் இங்க ரொம்ப பழசு அட நீயும் நானும் சேர்ந்திருக்கும் காதல் தாண்டி புதுசு பெண் : மாமா நீங்க தூங்கும் மெத்தையிலே என்னோட போர்வை சேர்வதெப்போ பெண் : மாமா நீங்க வாங்கும் மூச்சினிலே என்னோட துடிப்பு சேர்வதெப்போ ஆண் : ஏன் ஆயுள் ரேகை எல்லாம் உன் உள்ளங்கையில் ஓடுதடி உன் உள்ளங்கை அழகினிலே ஆச உச்சி வர ஊறுதடி பெண் : நான் சூடும் பூவில் உங்க வாசம் சேர்ந்து வந்து வீசுது என் கழுத்து கிட்ட முத்தம் தந்து மயிலிறகாக கூசுது.......! --- நீ கட்டும் சேல மடிப்புல---
  28. ஆதாரங்களுடன் ஆரம்பமாகிய இஸ்ரேல் மீதான போர்க்குற்ற விசாரணை | அரசியல் களம் | ஆய்வாளர் அருஸ் |
  29. From Separation To Federalism? There seem good reasons for satisfaction and the Sri Lankan assertion that the two sides are firmly entrenched on the peace path and would reach the 'point of no-return to war' by the middle of 2003. Updated: 03 Feb 2022 5:25 pm The most significant achievement of the Oslo talks in December 2002 was the categorical statement, made by the head of the negotiating team of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), Anton Balasingham, that the militant organization was prepared to accept a federal unit for the north and east within a united Sri Lanka. This statement represents a crucial development in the conflict transformation process in Sri Lanka. This transition from secession to internal autonomy is the outcome of two decades of civil war, combined with political and strategic sensitivity to radically new circumstances of global, regional and national politics. The details of the talks were not outlined and different positions taken by the two sides on various vital issues have not been disclosed at the conclusion of the talks. The process designers have obviously been careful to send out a positive message through the substance as well as symbolism of the talks. At the press conference held after the conclusion of discussions, the two negotiating teams, as well as the Norwegian interlocutors, expressed ‘complete satisfaction’ on the progress, and an earnest desire to carry forward the peace process. With the autonomy announcement, the LTTE has repositioned itself vis-à-vis the Sri Lankan state in such a way that returning to the old Eelam (separate state) goal would not be particularly viable. However the trajectories of transforming the LTTE’s proclamation of autonomy into a stable political commitment will be contingent on how the government handles the future challenges and progress towards the establishment of a firm mechanism for devolving power to the north and east regions. That is an extremely hazardous path and substantial reforms will be required to reach that goal. The history of Sri Lankan agreements and subsequent failures of implementation goes back five decades. The differences between the two principal ethnic communities in the country came into prominence even before independence in 1948. The Sri Lankan state was not founded on a collective idea acceptable to the principal ethnic minority – the Tamils – and this has manifested itself, first in peaceful and non-violent protests, and subsequently in an armed struggle that has created critical constitutional and legal challenges to the state and its institutions. Democratic Tamil leaders of the Federal Party (FP) had advocated a federal solution from the very beginning. However, various agreements – such as the Bandaranaike-Chelvanayagham (1957), Senanayake-Chelvanayagham (1965), the Annexure C Formula proposed by Special Indian Envoy G. Parthasarathy to President Jayewardene (1983), the Indo-Sri Lanka Agreement (1987) – were either abrogated or were not fully implemented. Similarly, all rounds of negotiations between the government and the LTTE – Thimpu (1985), Delhi and Bangalore (1987), Colombo (1989-90) and Colombo (1994-95) – faced the same fate, with disastrous results in terms of escalating violence after each debacle. Political analysts are, however, much more optimistic about the current peace process. The post-9/11, global anti-terrorism drive; pressure from the Tamil Diaspora on the LTTE; the realization on the part of the government and people of Sri Lanka as well as the LTTE that no side could attain a final military victory; and growing economic compulsions are some of the international and domestic factors underlying this https://www.outlookindia.com/website/story/from-separation-to-federalism/218279/amp
  30. சமஷ்டி(உள்ளக) என்கிற அடிப்படையில் இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பும் இணங்கியிருந்தன என்பதுதான் என் புரிதல். தற்போது அது தொடர்பான தரவுகள் என்னிடம் இல்லை. முடிந்த அளவு தேடிப்பார்த்து இணைக்கிறேன். (சஷ்டியை ஏற்றுக்கொள்வதாக கொள்கையளவில் இணங்கியதன் பின்ணணியிலே கருணாவின் பிளவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன) முதலலாவது பந்தியை பார்க்கவும் 👇 https://reliefweb.int/report/sri-lanka/breakthrough-sri-lanka-peace-negotiations Breakthrough in Sri Lanka peace negotiations Format News and Press Release Source Govt. Norway Posted 5 Dec 2002 Originally published 5 Dec 2002 The third session of Sri Lanka peace negotiations was completed in Oslo today. The government and LTTE have decided to explore a political solution founded on internal self-determination based on a federal structure within a united Sri Lanka. This is a most positive breakthrough in the peace negotiations and an important step in the direction of a solution for lasting peace in Sri Lanka, says Deputy State Secretary Vidar Helgesen in the Norwegian Ministry of Foreign Affairs. The parties agreed on a common declaration (attached) Statement of the Royal Norwegian Government Oslo, 5 December 2002 Parties have decided to explore a political solution founded on internal self-determination based on a federal structure within a united Sri Lanka The third session of peace talks between the Government of Sri Lanka (GOSL) and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) was held in Oslo, Norway on 2 to 5 December 2002. In a frank, open and constructive manner, the parties focused on three major areas: Consolidation of the ceasefire Humanitarian and rehabilitation action Political matters The parties agreed on a working outline defining the objective as well as a number of substantive political issues for negotiation. Responding to a proposal by the leadership of the LTTE, the parties agreed to explore a solution founded on the principle of internal self-determination in areas of historical habitation of the Tamil-speaking peoples, based on a federal structure within a united Sri Lanka. The parties acknowledged that the solution has to be acceptable to all communities. Guided by this objective, the parties agreed to initiate discussions on substantive political issues such as, but not limited to: Power-sharing between the centre and the region, as well as within the centre Geographical region Human Rights protection Political and administrative mechanism Public finance Law and order The parties recognised that progress on political issues must be supported by the continued consolidation of the Ceasefire Agreement. New concrete measures will be taken to facilitate further de-escalation and to improve normalcy: The GOSL will shortly return one of the hotels in Jaffna to its original use The LTTE will ensure that all future transportation of area commanders will take place under the supervision of the Sri Lanka Monitoring Mission (SLMM) The LTTE will accept the right of political groups to carry out political work, including in the Jaffna peninsula and the islands, provided that they are unarmed, as stipulated by the Ceasefire Agreement The GOSL will, in consultation with all relevant parties and groups, evolve a solution to the problems arising from recent developments in the Delft island The parties will facilitate restoration and rehabilitation of places of worship in the north and the east belonging to all religious communities. On the basis of their firm conviction that the maintenance of law and order in the north and east is of paramount importance, the parties agreed to request the Sub-Committee on De-escalation and Normalization to propose a common approach to settling cases involving the disputed use of private property, where such use has been impeded by the conflict. Furthermore, the LTTE will ensure that the activities of their law and order mechanisms will not be extended beyond the areas dominated by the LTTE. The parties strongly underlined the need to move rapidly on humanitarian and rehabilitation efforts in the north and east. For this purpose, the early establishment of the North-East Reconstruction Fund will be critical. The parties agreed that the custodian of the fund should be selected and modalities for its operation agreed at the next meeting of the Sub-Committee on Immediate Humanitarian and Rehabilitation Needs. The parties expressed their appreciation of the strong support extended by several governments to the peace process at the Sri Lanka Support Meeting held in Oslo on 25 November, and urged these governments to rapidly release funds needed for humanitarian and rehabilitation efforts. The parties agreed that a committee of women will be instituted to explore the effective inclusion of gender issues in the peace process. The committee will also, on a regular basis, submit proposals relating to women's interests to the sessions of negotiations and to the sub-committees of the peace process. The committee will consist of four representatives of each party. As a priority area identified by the parties for humanitarian action, the parties stressed the need to improve the situation for children affected by armed conflict. Inspired by the international norms protecting the rights of the child, the parties underlined that children belong with their families or other custodians and not in the workplace, whether civilian or military. The LTTE will engage in a partnership with the United Nations Children's Fund (UNICEF) to draw up an action plan for restoring normalcy to the lives of children, and the parties called on the international community to provide financial support for such an action plan. The GOSL will, in order to arrive at the broadest possible consensus, establish an appropriate mechanism for consultation with all segments of opinion as part of the ongoing peace process.
  31. பரந்துபட்ட பார்வையுடன் எமது வரலாற்றை அவதானித்தால் உங்கள் இந்த கருத்தில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளமுடியும். ஆனால் துரதிஷர்ரவசமாக ஏற்கனவே எமது மண்டைக்குள் புகுத்தப்பட்ட ஒற்றைத்தன்மையான உணர்சசி அரசியல் கோட்பாடுகளினால் மட்டுமே நாம் எமது அரசியலை கொண்டு செல்வோம் என்று அடம் பிடிப்பதால் இதுவரை நாம் போராடியதாக கூறப்பட்ட அரசியல் தீர்வு கிடைக்கப்போவதில்லை. இதை மாற்றும் சகதி எதில்காலத்தில் தாயகத்தில் வாழப்போகும் மக்களுக்கு இருக்குமேயானால் அவர்களாவது அதிஷ்ரசாலிகளாக இருப்பர்.
  32. நீங்கள் சொல்ல விரும்புவது புரிகிறது. ஆனாலும் realty என்ன? இன்று நாம் கையறு நிலையில் நிற்கிறோம். இல்லையா? எங்கள் நிலத்தில் உள்ள மக்களிடம் இருந்த அற்ப சொற்ப பலமும் இல்லாமல் போய்விட்டது. வெளிநாடுகளில் உள்ளவர்களோ ஆளாளுக்கு நான்கு திசைகளாகப் பிரிந்துவிட்டோம். எங்களிடம் எஞ்சியிருப்பது என்ன? இதிலிருந்துதானே எமது தவறுகளை எடைபோட முடியும்? இன்னும் 10 வருடங்கள் கழித்து தாயக மக்களின் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். எனது ஆதங்கம்/கோபம் புரியும்.
  33. அப்படி நடந்தால் உலக அதிசயங்களில் ஒன்றாகத்தான் இருக்கும். இங்குள்ள எழுதப்படாத சட்ட்ங்களால் அரசியல்வாதிகள் பாதுகாக்கப்படுவதே சரித்திரம். சரித்திரத்தை அப்படி இலகுவாக மாற்ற முடியாது.
  34. 1997 ல் மாகாண சபையை தவற விட்டோம். 2005ல் சமஷ்டியை தவறவிட்டோம். 2005ல் கைகூடி வந்த சமஷ்டியை/மாநில சுயாட்சியை ஏற்றிருந்தால் இன்றைய சூழலில் இலங்கைத் தமிழர்தான் தென்னாசியாவின் இராஜாக்கள். ஏனென்றால் எங்களிடம் பலமும் ஒழுக்கமும்(விபு க்களிடம்) இருந்தது அந்த சமஷ்டியைக் குழிதோண்டிப் புதைத்து இப்போது கோவணமும் இல்லாமல் ஓடித்திரிவதை மறந்துவிட்டீர்களா? இந்த சிந்தனை முறையின் விளைவுதான் ஆயுதப் போராட்டமும் அழிந்து இலங்கைத் தமிழர் நடுத்தெருவுக்கு வரக் காரணம். புலம்பெயர் டமில்ஸ் இதற்கு மிகவும் முக்கிய காரணம். 😏
  35. இந்த இமயமலை பிரகடனம் ஒரு குறிகோள். உள் வராது” காரணம் பிக்குமார். நோக்கம் வெளிநாட்டு தமிழரின் பணத்தை சுருட்டுவது இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது பழைய இலங்கையை உருவாக்குவது ஆனால் சுரேன் அனைவரும் இலங்கையில் சமன் என்று தீர்வு பெற முயல்கிறார் இது தமிழருக்குகான தீர்வு இல்லை எந்த பிக்குவும். தமிழர்கள் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று சொல்லவில்லை எந்த சிங்கள கட்சியும். தமிழர்கள் பிரச்சனை தீர்க்கபட வேண்டும் என்று சொல்லவில்லை அரசாங்கம் கூட தமிழர்கள் பிரச்சனை தீர்க்கபட வேண்டும் என்று சொல்லவில்லை ஆகவே இங்கே பேச்சுவார்த்தை இல் ஈடபட்ட இருபகுதியும். 100 % வெளிப்படையாக முரண்பாடுகளோடு இருக்கிறது எங்கே ஒரு குறிகோள். உண்டு”??? இந்த பேச்சுவார்த்தை தமிழரகளும். சிங்களவரும். ஒரு குறிகோள் உடன். பேசவில்லை இந்த பேச்சுவார்த்தை தொடரந்தாலும் தொடங்க முதலே தோல்வி ஆகும் 70 ஆண்டு காலத்தில் தமிழர்கள் எந்தவொரு தீர்வையும். குழப்பியது இல்லை இனிமேலும் குழப்பமாட்டார்கள்
  36. இப்போது மேற்கொள்ளப்பட்ட இமயமலைப் பிரகடனமும் அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதற்குள் அடங்கும்? போர்த்துக்கொண்டு குப்பறப் படுத்துக்கொண்டால் எதுவுமே நடைபெறாது. வைக்கோற் பட்டடை நாய் தானும் உண்ணாது, உண்ணவரும் மாட்டையும் விடாது என்பதற்கு எமது கொஞ்ச புலம்பெயர் டமில்ஸ் நல்ல உதாரணம். 😏
  37. தமிழ்க்கடையளிலை விக்கிதோ? கேட்டதாலை குமாரசாமிக்கு சுகர் வருத்தம் இருக்கெண்டு நினைக்கப்படாது சிறித்தம்பி 😂
  38. அந்தப் பிள்ளையின் இறப்பால் துயர் உற்று இருக்கும் குடுமபத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு..🙏 இதில் கருத்து பகிரும் உறவுகள் தயவு செய்து இந்தப் பதிவோடு விட்டு விடுங்கள்..ஒரு பெண் பிள்ளையின் இறப்பில் கூட உங்களுக்கு வேண்டாத விமர்சனம் வேணுமா..உங்களால் ஏன் அந்த பிள்ளையை உங்கள் சகோதரியாக இல்லை ஒரு பெண் பிள்ளையாக தன்னும் நினைக்க முடியாதிருக்கிறது..?தவறாக நான் எதுவும் பகிரவில்லை..கடந்த சில நாட்களாக இந்தப் பகுதி படும் பாட்டை பார்த்து விட்டு தான் இந்தக் கருத்தை பகிர்கிறேன்.
  39. நடந்த மரணங்களைப் பற்றிய உத்தியோகபூர்வமான விபரங்கள் வராமல், அவற்றைப் பற்றி எதுவித ஆதாரங்களும் இல்லாமல் எழுந்தமானத்திற்கு எழுதுவதும், சம்பந்தமில்லாத விடயங்களை (உறுதி செய்யப்படாத) எழுதி திசையைத் திருப்புவதும் ஆர்வக்கோளாறு அல்லது விடுப்புக்கேட்கும் மனநிலை என்றுகொள்ளமுடியாது. அதையும் தாண்டி ஏதோ ஒரு வெறுப்பு இருக்கின்றது. குடும்பத்தினருக்கு மேலும் வேதனைகளைக் கொடுக்காமல் இருக்க முயற்சிக்கவேண்டும்.
  40. என்ன சொல்கிறீர்கள்? நெடுக்கரின் குடியேறி எதிர்ப்பு மனநிலை அவர் குடியேறியாக இருந்த போதே அவரது எழுத்தில் வெளிவந்திருக்கிறது. ஓரினச் சேர்க்கையாளர் மீதான காண்டு போலி விஞ்ஞானக் கட்டுரையை இணைத்து வாதிடும் அளவுக்கு வெளிப்பட்டிருக்கிறது. இறந்தது பெண், கொன்றது ஆண் என்பதால் கொன்றவரை விட்டு விட்டு, எல்லாரையும் கை காட்டியிருக்கிறார்! இது பழைய நெடுக்கர் தான்! புதிதாக ஒன்றுமில்லை😎. நோர்வே ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லை, ஆனால் ஐரோப்பிய ஒன்றிய பயண ஏற்பாடான செங்கன் (Schengen) நடைமுறையில் இருக்கிறது. எனவே, செங்கனில் இல்லாத பிரிட்டனின் பிரஜைகள் நடந்து தான் போக வேணும்! "போலந்துக் காரன் சட்டரீதியாக பிரிட்டனுக்குள் வரவும் கூடாது - எனவே ஐ.ஓவில் இருந்து நாம் அவுட், ஆனால் பிரிட்டன் பிரஜைகளை ஐரோப்பிய நாடுகளில் திறந்த வீட்டினுள் செல்லப் பிராணி செல்வது போல அனுமதிக்கவும் வேண்டும்!" இரண்டையும் எப்படி எதிர்பார்க்க முடியும்😎?
  41. தமிழர்களுக்குள் நடந்த கொலையில் பாதிக்கப்பட்டது அப்பாவி தமிழ் பெண். கொலையாளி தமிழர். கொலையாளி மீது கோபம் வரவில்லை. ஆனால், நோர்வே இமிக்கிறேசனை திட்டுகின்றீர்கள். பாகிஸ்தானியரை, சோமாலியரை கிழக்கு. ஐரோப்பியரை, உக்கிரேனரை கேய், லெஸ்பியனை எல்லாம் இதற்குள் இழுத்து அவர்கள் தான் இதற்கு காரணம் போல்…….. என்ன டிசைனப்பா நீங்கள்.
  42. இந்த விசயத்தில சுவியண்னை போல யாரோடும் மல்லுக்கு போகாத ஜீவன் கள்தான் பாவம்... நிறைய இடத்தை பச்சை போட்டு சுவி அண்னை நல்லா மாட்டிகிட்டாரு...(மாட்டிவிடுவம்.. எல்லாரும் தேடிப்பாத்து கும்மட்டும்... மவனே கருத்து எழுதாமல் எஸ்கேப் ஆகவா பாக்கிறியள்..🤣 நாங்க மட்டும் கருதுது எழுது எல்லாரிட்டையும் அடிவாங்கனும்..) 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.