Leaderboard
-
suvy
கருத்துக்கள உறவுகள்9Points33600Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்9Points46791Posts -
Maruthankerny
கருத்துக்கள உறவுகள்8Points10720Posts -
Justin
கருத்துக்கள உறவுகள்6Points7053Posts
Popular Content
Showing content with the highest reputation on 01/16/24 in all areas
-
டாடோ என்கின்ற டாலிபோ
4 points23.03.2023, செவ்வாய்க்கிழமை அன்று ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக எனது மகனின் வீட்டுக்குப் போயிருந்தேன். எனது மகனின் மனைவி வழி சொந்தங்களும் எங்களுடன் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்திருந்தார்கள். கதைகள் பல்வேறு விடயங்களைத் தொட்ட படி போய்க் கொண்டிருந்தன. அன்றைய தினம் நான் வசிக்கும் நகரத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்திருந்தது. “நண்பகலில் கட்டிட ஒப்பந்தக்காரர் ஒருவர், அவரது வீட்டில் இருந்து கடத்தப்பட்டார்” என்பதே அந்தப் பரபரப்புச் சம்பவம். சம்பவத்தை யாரும் பார்த்ததாக அறிவிக்கவில்லை. இணையத்திலும், உள்ளூர் வானொலியிலும்தான் செய்தி வெளியாகியிருந்தது. மகனின் சகலன் ஆதியும் கட்டிட ஒப்பந்தக்கார நிறுவனமொன்றின் சொந்தக்காரன். ஆகவே அவனுக்கு அந்தச் செய்தியில அதிக நாட்டம் இருந்ததில் வியப்பில்லை. கடத்தப்பட்டவரைத் தனக்குத் தெரியுமென்றும் குறோஸியா நாட்டைச் சேர்ந்தவன், வயது 50க்குள்தான் இருக்கும் என்றும் ஆதி சொன்னான். கொலை, கடத்தல், கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதை மருந்துகள் என ஏகப்பட்ட செய்திகள் நாளாந்தம் தவறாமல் வந்து கொண்டிருக்கும் போது, வந்த இந்தச் செய்தியும் அது போல ஒரு செய்தி தான் என்ற எண்ணமே எனக்குள் இருந்தது. அதனால் எங்கள் நகரில் நடைபெற்ற அந்தக் கடத்தல் சம்பவத்தில் எனக்கு எந்த ஆர்வமும் ஏற்படவில்லை. “அந்த ஒப்பந்தம் காரனின் பெயர் டாலிபோ“ என்று ஆதி குறிப்பிட்ட போது, எனது மகன் என்னைப் பார்த்துக் கேட்டான், “உங்களின்ரை குளியல் அறை செய்தது ஆர்?” “டாடோ” என்றேன். “அது அவனுக்கு நெருக்கமானவர்கள் அவனை அழைக்கும் பெயராக இருக்கலாம். அவனுடைய குடும்பப் பெயர் தெரியுமோ?” என்று எனது மகன் மீண்டும் கேட்க என் தலை இல்லை என்று வலம் இடம் ஆடியது. 2020இல் எங்களை வெளியில் நடமாட விடாது வீட்டுக்குள்ளே கொரோனா அடைத்து வைத்திருந்த ஆரம்ப கால நேரம். மிகவும் நெருக்கமானவர்கள் மட்டும் அத்தியாவசியத் தேவைகளுக்காகச் சந்திக்கலாம், அதுவும் நான்கு பேர்கள் மட்டும் ஒன்று கூடலாம் என்ற அறிவிப்பினால் வீட்டுக்குள்ளேயே அடைந்திருந்தேன். பென்சன் எடுத்து விட்டு வீட்டுக்குள்ளேயே இருந்ததால் நிறைய ‘போர்’ அடித்துக் கொண்டிருந்தது. அப்பொழுதுதான் நீண்டநாள் நான் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்த குளியல் அறையைத் திருத்தினால்... என்ற எண்ணம் எனக்குள் வந்தது. இணையத்தில் தேடி எனது நகரில் இருக்கும் ஒரு பிளம்பர் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளும் போது ஜோர்க் அறிமுகமானார். தொழிலாளிகள் யாரும் வேலைக்கு வராததால் கையைப் பிசைந்து கொண்டு வீட்டில் இருந்து பியர் குடித்து, வயிறு வளர்த்துக் கொண்டிருந்த (ஜோர்க்) முதலாளிக்கு எனது அழைப்பு உற்சாகத்தைத் தந்திருக்க வேண்டும். எனது வேண்டுகோளை உடனேயே ஏற்றுக் கொண்டார். கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொள்வதற்காக தானே தனக்குத் தெரிந்த ஒரு கட்டிடக்காரரை அழைத்து வருவதாகவும் சொன்னார். அப்படி அவர் அழைத்து வந்தவன்தான் டாடோ(47). டாடோவும் ஒரு நிறுவனத்தின் முதலாளி. ஆக மூனாவின் குளியலறை வேலைக்கு இரண்டு மூனாக்கள் வேலைக்கு வந்தார்கள். உயரமான, பருத்த உடம்புவாசிதான் டாடோ. “குளியலறை என்பதால் ஜோர்க் சட்டப்படிதான் எல்லாம் செய்வார். ஏதாவது பைப் லீக்காகினாலோ, உடைந்தாலோ கொம்பனியின் உத்தரவாதம் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் பின்னால் எது நடந்தாலும் காப்புறுதி ஈடு செய்யாது. ஆனால் என்னுடைய வேலை அப்படி இல்லை. ‘கறுப்பு’த்தான். மணித்தியாலத்துக்கு 42 யூரோ தர வேண்டும்” என்று டாடோ கேட்டுக் கொண்டான். கறுப்புத்தானே எனக்குப் பிடித்த கலர். ஒத்துக் கொண்டேன். டாடோவும், ஜோர்க்கும் குளியலறைத் திருத்தத்துக்கான முழுப் பொருட்களையும் தாங்களே கொள்வனவு செய்து எனது சிரமத்தைக் குறைத்துக் கொண்டார்கள். நான் செய்து கொடுத்த ‘சிக்கன் றோல்ஸ்’ மற்றும் அடிக்கடி நான் கொடுக்கும் கோப்பி, மதிய உணவான சோறு, கறிகள் எல்லாம் அவர்களுக்குப் பிடித்துப்போக, மாலையில் வேலை முடிய “பியர் கொண்டு வா” என்று என்னிடம் அவர்கள் உரிமையுடன் சொல்லும் அளவுக்கு நெருக்கமாகிப் போனோம். அவர்கள் இருவரும் கேட்டுக் கொண்டதற்கமைய அவர்களை கேலிச்சித்திரமாகவும் வரைந்து கொடுத்திருந்தேன். நான் வரைந்த சில படங்கள் எனது கைத் தொலைபேசியிலும் இருந்தன. தேடிப் பார்த்த போது டாடோவின் படமும் அங்கே இருந்தது. “டாடோ இப்படித்தான் இருப்பான்” என எனது மகனுக்குக் காட்டினேன். மகன் ஆதியிடம் கொடுக்க, அதைப் பார்த்து விட்டு, “இவன்தான்... இவன்தான் டாலிபோ” என ஆதி கூவ, மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய அந்தக் கொண்டாட்டத்தை என்னால் ரசிக்க முடியாமல் போயிற்று. “மிகவும் இலாபமான முறையில் வீடுகளைக் கட்டித்தருவதாக பலரோடு ஒப்பந்தம் செய்திருக்கிறன். என்னட்டை ரூமேனியாவிலை இருந்து வந்த வேலையாட்கள் இருக்கினம். அவையள் சட்டப்படியான வேலையாட்கள் இல்லை. மணித்தியாலத்துக்கு ஏழு, எட்டு யூரோக்கள் குடுத்தால் போதும். இரவு பகல் என்று பாராமல் வேலை செய்வாங்கள். இப்ப கொரோனா வந்ததாலை எல்லாரும் தங்கடை நாட்டுக்கு திரும்பிப் போட்டாங்கள். வேலையாட்கள் இல்லை. சட்டப்படி சம்பளம் கொடுத்துச் செய்யிறதெண்டால் கட்டுப்படி ஆகாது. பயங்கர நட்டம்தான் வரும். கொரோனா எப்ப தொலையுமோ? போனவங்கள் எப்பத் திரும்ப வரப்போறாங்களோ? இல்லாட்டில் வராமலே இருந்திடுவாங்களோ? என்று டாடோ என்னிடம் கவலைப் பட்டுச் சொன்னது நினைவுக்கு வந்தது. டாடோ நல்லதொரு வேலையாள். பழகுவதற்கு இனிமையானவன். அவனுக்கு ஏன் இந்த நிலமை வந்தது? யார் டாடோவைக் கடத்தி இருப்பார்கள்? எதற்காகக் கடத்தினார்கள் என்று எனக்குக் குளப்பமாக இருந்தது. அடுத்தநாள், தொலைக்காட்சியில் டாடோவின் செய்திகள் வந்து கொண்டிருந்தன. பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக டாடோவின் செய்தியே இருந்தது. Mann aus Schwaebisch Hall nach Brandenburg entfuehrt – mutmassliche Entfuehrer forderten Loesegeld Zwei Maenner sollen einen 46-Jaehrigen in ein Auto gezerrt und verschleppt haben. Einer der Verdaechtigen war vergangene Woche an einer Schiesserei in Berlin beteiligt (ஸ்வேபிஸ் ஹாலில் இருந்து பிராண்டன்பூர்க்கிற்கு ஒருவர் கடத்தப்பட்டார் - கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் கடத்தப்பட்டவரை மீட்பதற்கு ஒரு தொகை பணத்தைக் கேட்கிறார்கள். இரண்டு பேர் 46 வயதுடைய ஒருவரை இழுத்துச் சென்று காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. சந்தேக நபர்களில் ஒருவர் கடந்த வாரம் பெர்லினில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார்) கொஞ்சம் கொஞ்சமாக விபரங்கள் வெளியேவர ஆரம்பித்தன4 points
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
இப்போதிருக்கும் ஈரானை வளர்த்தது மேற்குநாடுகள்தான் பொய் பிரச்சாரம் பொருளாதார தடை (சிறுவர்கள் பால்மா உட்பட) என்று ஒரு மனித இனத்தையே கடந்த 60 வருடமாக சுரண்டி சின்னாபின்னாமாக்கி ஜெனிவா கோன்வின்சனுக்கு எதிரான பல செயல்களை நடத்தி இனி தன் பலமே தன் விதியென இப்போதைய ஈரானை வளர்த்தது மேற்குநாட்டு பொருளாதார ஆக்கிரமிப்பும் அடாவடித்தனமும்தான். இஸ்ரேல் தேவையான போது வகை தொகை இன்றி எத்தனை அப்பாவி மக்களையும் கொல்ல வேண்டும் அதை தட்டி கேட்க தடுக்க அந்த பிராந்தியத்தில் யாருமே இருக்க கூடாது எனும் கொள்கை விதிக்கு அமையவே சதாம் பேரழிவு ஆயுதம் வைத்திருக்கிறார் என்று பொய் கூறி மில்லியன் கணக்கான அப்பாவி இராக்கியர்களை கொன்று குவித்து அவர்களின் பொருளாதாரங்களை வளங்களை எல்லாம் சூறையாடி போனவர்கள் இந்த உலகில் கடந்த நூறு வருடமாக மனித அநீதி இழைத்து மேற்கு நாடுகள்தான் லெபனான் மீதான போர் இப்போ கவுதிக்கள் கப்பலை தாக்கியதால் தொடங்கியது என்றுதான் மூளைசலவைக்கு உட்பட்டு வாழும் மேற்குநாட்டு வாசிகள்போல இங்கும் சிலர் கூவுவார்கள் கடந்த 10 வருடமாக அங்கே குண்டு வீசி அப்பாவிகளை கொன்றுவருகிறார்கள் என்பது உங்களுக்கும் மறந்தே இருக்கும் என்றே முழுமையாக நம்புகிறேன்3 points
-
கொழும்பில் உள்ள 500 கட்டடங்களை அகற்ற தீர்மானம்
அது தண்ணில கட்டின வீட்டைதான் இடிப்பினமாம்......சைடில இருக்கிற சின்ன வீடுகளை இடிக்க மாட்டினம்.......! 😁3 points
-
யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
நன்றி பகிர்வுக்கு, நல்ல செயல்கள் செய்கின்றார்👍, இந்த தியாகி பெரியவர் இன்னும் பல மக்களுக்கு உதவ வேண்டும் பல ஆண்டுகள் வாழ்ந்து🙏3 points
-
யாழ்ப்பாணத்திற்கு_ஒரு_ஆறு
3 pointsஇந்த விஷயத்தை படித்து விளங்கி அதை தனது வாக்காளர்களுக்கு சொல்லி புரியவைக்கும் திறமையும் பக்குவமும் தமிழரசுக் கட்சியின் தலைவராக வர ஆசைப்படும், இரணை மடு குளத்து வான் பாயும் மீதி நன்னீரை யாழ் மாவட்ட மக்களுக்கு பயன் பட அனுமதிக்க மறுக்கும் திரு பள்ளிக்கூட அதிபர் ஸ்ரீதரனுக்கு உண்டா??3 points
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
இப்போ? என்று எந்த காலத்தை குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை ஈரான் மீதான மேற்குலகின் ஆதிக்க வெறி யுத்தத்தை கடந்த 60 வருடமாக பொருளாதார ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் செய்தே வருகின்றனர் நாகரீகமாக ஆறாறிவு மனிதன் வளர தொடங்கி ஆடைகள் அணிய தொடங்கியபின் மீண்டும் வேடுவர்கள் காட்டுவாசிகளாக மாறி பெண்கள் ஆடைகள் இல்லாமல் அலைவதும் கண்டவர்கள் கண்டவர்களுடன் தெருநாய்கள்போல பாலியல் கொளவ்தும் சுதந்திரம் எனும் மூளைசலவைக்கு ஆளாகாமல் போகிறார்களே எனும் ஆத்திரம் கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று சிலர் மேலே கூவுவதுபோலவும் இருக்கலாம்2 points
-
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!
பின்லாந்து பின்லாந்தியருக்கே இங்கிலாந்து இங்கிலாந்துக்காரர்களுக்கெ அவை எம்மைப்போன்ற வந்தேறிகுடிகளுக்கானதல்ல. சிலவேளை கனடா வந்தேறு குடிகளுக்கானதாக இருக்கலாம் காரணம் அது பல்லின மக்களது குடியேற்ற நாடாகவே இப்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இலங்கைத்தீவில் தமிழினம் என்பது நீண்டகாலமாக வாழும் இனக்குழுமம் அவர்களுக்குத் தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றில் யோக்கியதை இருக்கு அதை மறந்துவிட்டுப் பேசாதீர்கள்.2 points
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
2 pointsதலைமைத்துவத்தை பற்றியும் அதன் தற்போதைய நடைமுறை விடயங்கள் குறித்தும் எனக்கு தெரியாது. ஆனால், ஈழத்தமிழ் சாதாரண மக்களிடையே மதவாதம், மத வெறி பெரியளவில் இருக்கவில்லை, என்பதே எனது அபிப்பிராயம். மதங்களை கடந்து தமிழர்களாகவே சினேகித பூர்வமாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால், சமீபத்தில் இந்திய ஆர். எஸ்.எஸ், பா.ஜ.க போன்றன மதவாத நச்சு செடிகளை ஈழத்தமிழரிடையே விதைக்க முயன்று வருகின்றனர். அதற்கு உள்ளூர் தமிழர்கள் சிலரையும் பயன்படுத்துகின்றனர். அவர்களின் அஜென்டாவே சச்சிதானந்தம் போன்றவர்கள் பரப்பும் நச்சுக்கருத்துக்களும் சமீபத்திய சில பிரச்சனைகளும். இருந்தாலும், இது ஈழத்தமிழரினையே எடுபடாது என்பதே எனது அனுமானம். ஆகவே இதனை ஒரு கட்சிக்குள்ளான இரு நபர்களின் தலைமைத்துவத்துக்கன போட்டி என்ற வகையில் எடுப்பதே சரியானது. இதற்குள் நீங்கள் மதத்தினை வலிந்து இழுப்பது எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தலாம் என்பது எனது அவதானிப்பு.2 points
-
யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
என்ன பயம்?? இவரிடம் இராணுவ தளபதி வந்தார் மகிந்தவின் மூத்த மகன் இரண்டு தடவைகள் வந்தார் ரணில் வந்தார்…… இன்னும் பல முக்கியமான நபர்கள் வந்திருக்கலாம் எல்லோரையும் சமாளித்து செய்து வருகிறார் அனுரதபுரத்திலும் சில சிங்கள குடும்பகளுக்கு உதவியதுண்டு ...பயப்படவேண்டாம் 🤣🤣2 points
-
2024 பொங்கல் வாழ்த்துகள்
2 pointsராசவன்னியன் அண்ணா, இணையவன் அண்ணா , கந்தையா அண்ணா, ஏராளன் , நியாயம் , புரட்சிகர தமிழ்தேசியன், Island , Suvy , நீங்கள் தெரிவித்த பொங்கல் நல்வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்2 points
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
2 pointsகிறீஸ்தவ மதவாதம் உங்களைப் போன்றவர்களின் மண்டைக்குள் இருக்கும் வரை விடிவில்லை…. தங்களின் தலைவராக ஓர் கிறீஸ்தவரை ஏற்றுக் கொண்ட தமிழினம் என்பதை மறந்து இன்று கிறீஸ்தவனால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று மதவாத உரிமை கொண்டாடும் நிலையில் நீங்கள்….2 points
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
2 pointsநம்மை பொருத்தவரை ஸ்ரீதரன் கூட அந்த பதவிக்கு தகுதி இல்லாதவர் அவரை விட்டால் வேறு வழியில்லை . சுமத்திரன் தலைவராய் வந்தால் அவ்வளவுதான் சிதறு தேங்கா .இங்கு இந்துவா கிறிஸ்த்தவனா என்று குறுகிய மனப்பான்மையில் பார்க்காமல் தமிழர் நலன் என்று பார்ப்பது நல்லது .2 points
-
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!
நீங்கள் அடிப்படை வாதத்தை ஆதரீக்கின்றீர்கள். சிங்கள அடிப்படைவாதமும் இருந்தே ஆகவேண்டும் என்று கூறுகின்றீர்கள். சகோதரத்துவம் சுரணை கெட்டது என்று அதைச் சாடுகின்றீர்கள். அடிப்படை வாதம் என்பது ஏன் ஆபத்தானது என்று உலகில் கூறப்படுகின்றது என்றால், அது சகிப்புத்தன்மையற்றது . அடிப்படைவாதம் என்பது பலமடையும் போது அங்கு வாழும் சிறுபான்மை இனங்களை அழித்து விடும். இலங்கையில் சிங்கள அடிப்படைவாதம் பலமடைந்து அது தமிழ் இனத்தை முற்றாக அழிப்பதை நீங்கள் தர்ககரீதியில் ஆதரிக்கின்றீர்கள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஏனென்றால் அடிப்படைவாதம் சிங்களவருக்கும் தேவை என்று நீங்கள் அதை ஆதரித்திருப்பதால். பின்லாந்தில் வலதுசாரி அரசு இன்று இருந்தாலும், பின்லாந்து அடிப்படை வாத நாடு அல்ல. வலது சாரிக்கும் அடிப்படைவாதத்திற்கும் வித்தியாசம் உள்ளது. மொத்த சனத்தொகையில் 5 வீதமே உள்ள சுவிடிஷ் மக்களுக்காக அவர்களது மொழியை அரச கரும மொழியாக அரசியலமைப்பில் சேர்ததுள்ள நாடு எப்படி அடிப்படைவாத நாடாக இருக்க முடியும். சகோதரத்துவம் உள்ள நாடுதான். நீங்கள் அடிப்படைவாதியாக இருப்பதில் இருப்பதில் யாருக்கும் பிரச்சனை இல்லை. அப்படியே இருந்துவிட்டு போங்கள். ஆனால் அடிப்படை வாதக்கருத்தை நீங்கள் பொதுவெளியில் வைக்கும் போது அதை தவறு என்று சொல்லும் உரிமை எமக்கு உண்டு.1 point
-
யாழில் இடம்பெற்ற மாபெரும் பட்டத்திருவிழா
Published By: DIGITAL DESK 3 16 JAN, 2024 | 10:19 AM தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் இராட்சத ‘விசித்திர பட்டத்திருவிழா' திங்கட்கிழமை (15) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற பட்ட போட்டியில் பலவிதமான வண்ணங்களில் விசித்திர பட்டங்கள் செய்து அதனை போட்டியாளர்கள் பறக்க விட்டனர். https://www.virakesari.lk/article/1740261 point
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
ரம்பின் காலத்தில் இரானிய முக்கிய தளபதி ஈராக்கில் வைத்து ரொன் தாக்குதலில் 3 வருடம் முதல் கொல்லப்பட்டார். அண்மையில் அவரின் நினைவு நாளன்று அவரது சமாதியிலும் குண்டு வெடித்து பலர் சாக இன்னும் பலர் காயமடைந்திருந்தனர். 1977 க்கு முன்னர் ஈரான் ஒரு குட்டி அமெரிக்காவாக இருந்தது.1 point
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
ஈரானில் தேர்தல் என்றாலும் நடக்கிறது சவூதியில் அணைத்து வளங்களையும் மன்னர் சொத்துக்களாக்கி ஒரு கூறு கெட்ட குடும்பமே வாழ்ந்துவருகிறது குர்திஸ் மக்கள் மீதும் ஈரான் மீதும் குண்டுகளையும் இவர்களின் இரசாயனங்களை கொட்டி அப்பாவி மக்களை கொல்லுமட்டும் சதாம் ஹுசேன் சிறந்த ஜனநாயகவாதி. இனி நான் குண்டுகள் வீச மாடடேன் என்றால் பேரழிவு ஆயுததாரி1 point
-
யாழ்ப்பாணத்திற்கு_ஒரு_ஆறு
1 pointSivasubramaniam-jothilingam Jothilingam · #யாழ்ப்பாணத்திற்கு_ஒரு_ஆறு யாழ் குடாநாடானது மிகவும் குறைந்தளவான 30' மழைவீழ்ச்சியினை பெறுகின்ற அதே வேளை வட மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் 60' இற்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. குடாநாட்டின் வேளாண்மையை அபிவிருத்தி செய்வதற்கு ஏனைய பகுதிகளில் பெறப்படும் செல்வமாகிய மேலதிக மழை நீரை இப்பகுதிக்கு பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு நியாய பூர்வமான விருப்பமாகும். 1930ம் தசாப்த ஆரம்பத்தில் குடாநாட்டில் பரந்திருந்த உவர் நீர் ஏரிகளை பயன்படுத்தும் முகமாக அவற்றை நன்னீராக்க வேண்டும் என்ற கருத்தை காலஞ் சென்ற சட்டவாக்க சபை உறுப்பினரான மு.பாலசிங்கம் அவர்கள் தனது மனதில் உருவாக்கினார். மாமன்னர் பராக்கிரமபாகுவின் சிந்தனையின் ரூபமான மிகவும் பரவலாக பேசப்பட்ட கருத்தானது 'வானத்திலிருந்து விழும் ஒரு மழைத்துளியும் மண்ணுக்கு பயன்படாமல் கடலை சென்றடைய விடக்கூடாது' என்ற சித்தாந்தமே மதிப்புக்குரிய மு.பாலசிங்கம் அவர்களது கருத்தாகும். இந்தச் சிந்தனையே வட மாகாணத்தின் முக்கிய ஆதாரமான கனகராயன் ஆற்றின் வெள்ள நீரை முற்று முழுதாக பயன்படுத்துவது என்ற எண்ணக்கரு உருவாக வழி கோலியது. இந்த ஆறு வவுனியாவில் உருவாகி புளியங்குளம் மாங்குளம் ஊடாக இரணைமடுக் குளத்தை நிரப்புகின்றது. இதன் மேலதிக நீர் ஆனையிறவு ஏரியை அடைகின்றது. இது ஆனையிறவு பாலத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கடலுடன் இம் மேலதிக நீரானது வீணாக இப் பாலத்தினுடாக பெருங்கடலை சென்றடைகிறது. 1949 மாசியில் ஓர் நாளில் இத் தெரு ஊடாக சுற்றுலாவிற்கு சென்ற குடும்பத்தினர் ஆனையிறவு பாலத்தின் அண்மையில் நண்பகல் உணவிற்காக இளைப்பாறினர். அவரின் சிறிய மகன் இவ் ஏரியில் கை கழுவும் பொழுது ஏரியின் மேற்குப்பகுதி கடலுடன் தெடர்புடையதாக இருந்தாலும் கிழக்குப் பகுதியில் நன்னீர் இருப்பது எவ்வாறு? என்று கேட்ட வினாவிற்கு அன்பான தந்தை அதன் காரணத்தை விளக்கினார். அந்தச் சிறுவன் உடனடியாக 'நாங்கள் கொஞ்ச மண்ணை காரில் கொண்டுவந்து இந்தப் பாலத்தை நிரப்புவோம், இதனால் நன்னீர் ஏரி உருவாகும் என்று பதிலளித்தான். அந்த வருடம் கனகராயன் ஆற்றில் வெள்ளம் பாய்ந்தது. இரணைமடுக் குளம் நிரம்பி வான் பாய்ந்தது. மேலதிக நீர் தெருவின் கிழக்கில் உள்ள ஆனையிறவு ஏரியை நிரப்பியது. இரணைமடுக் குளம் தை மாதத்தில் வான் பாயவிடப்பட்டாலும் மாசி மாதத்தில் கூட கிழக்கு ஏரி நன்னீராகவே காணப்பட்டது. எனினும் இப்பாலத்தினை மண் கொண்டுவந்து நிரப்பினாலொழிய இந்நீர் பாலத்தினூடாக கலக்கும் கடல்நீரால் விரைவாக உவர்நீராக மாறிவிடும். தற்போது நடைமுறைப்படுத்தும் ஆனையிறவு ஏரியை நன்னீராக்கும் திட்டத்தின் அடிப்படையானது கிழக்கு ஏரி வருடம் முழுவதும் நன்னீராகவே இருக்க வேண்டும். ஆனையிறவு ஏரி ஆனையிறவு தொடக்கம் சுண்டிக்குளம் வரையுள்ள சுமார் 11,400 ஏக்கர் பரப்பை கொண்டது. இவ் ஏரி கனகராயன் ஆறு, நெத்தலி ஆறு, பிரமந்தலாறு, தேராவில் ஆறு மற்றும் சிற்றாறுகளிலிருந்து வரும் நீரை பெறுகின்றது. இதன் வடக்கே வானைக் குளமும் தெற்கே கரைச்சி காணிகளையும் கொண்டுள்ளது. பாலத்திற்கு அருகில் ஓர் தடுப்பை ஏற்படுத்தி சுண்டிக்குளத்திற்கு அண்மையில் பொருத்தமான வான்கட்டை அமைப்பதனுாடாக இவ் ஏரிக்குள் உட்புகும் நன்னீரானது ஆனையிறவு நன்னீர் தேக்கமாக உருவாகும். முள்ளியான் பகுதியூடாக வடக்கில் அமைந்த வாய்க்கால்கள் இந்நீர் தேக்கத்தை யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஏரியாகிய வடமராட்சியைத் தொடும். நீண்ட நீர்ப்பரப்பை உடைய வடமராட்சி ஏரியானது பச்சிலைப்பள்ளியில் அமைந்த முள்ளியானில் இருந்து செம்பியன்பற்று, எழுதுமட்டுவாள், வரணி, கரவெட்டி, வல்லைவெளி, ஊடாக பரந்து சென்று வல்வெட்டித்துறைக்கு அண்மையில் உள்ள தொண்டமானாற்றினூடாக கடலுடன் தொடுக்கிறது. இதன் கிளையானது சரசாலையில் தொடங்கி யாழ்ப்பாணப் பட்டினம் நோக்கி பரந்து செம்மணிக்கு அண்மையில் உள்ள அரியாலைக் கடலை அடைகின்றது. இது கிட்டத்தட்ட ஒரு மைல் அகலமாக குடாநாட்டில் இருதயப் பகுதியில் கூடுதலாகவோ குறைவாகவோ முழுமையாக பரந்து காணப்படுகின்றது. இது குடாநாட்டின் வாழ்க்கையிலே தாக்கத்தை செலுத்தும் முழுமையான வைப்பகமாக இருக்கிறது. தொண்டமானாற்றில் பூர்த்தியாக்கப்பட்ட 600 அடி நீளமான தடுப்பணை ஊடாக கடல் நீர் உட்புகுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆனையிறவில் செய்யப்பட வேண்டிய வேலைத்திட்டம் மூன்று பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. ஆனையிறவு பாலத்திற்கு அருகிலே உள்ள தடுப்பணை கனகராயன் ஆற்றிலிருந்து வரும் வெள்ள நீரை சேமித்து பாதுகாத்து மேற்குப் பகுதியில் உள்ள கடல் நீர் ஊடுருவாமல் தடுக்கும். இதன் கிழக்கு எல்லையில் சுண்டிக்குளத்தில் அமைந்த ஒன்றேகால் (1.25) மைல் நீளமான பாதையோடு இணைத்து கட்டப்பட்ட தடுப்பணையும், வானும் மேலதிக வெள்ள நீரை பாதுகாப்பாக கடலுக்குள் செலுத்துவதற்கும், கடல் நீர் கிழக்கிலுள்ள ஏரியினுள் உட்புகாலும் உறுதிப்படுத்தும், இவ்வாறு கிழக்கிலும் மேற்கிலும் அமைக்கப்பட்ட கட்டமைப்புக்கள் மேலதிக வெள்ள நீரை பெற்று பாதுகாப்பாக சேமித்து வைக்கும். அதே நேரத்தில் இதன் மூன்றாவது அங்கமான இணைப்புக் கால்வாய் தேங்கிய நீரை யாழ்ப்பாண குடாநாட்டின் இருதயப்பகுதிக்கு கொண்டு செல்லும், இவ் வேலைத்திட்டத்தின் முடிவில் கனகராயன் ஆற்றின் வெள்ள நீர் ஆனையிறவு ஏரி மற்றும் வடமராட்சி ஏரிகளின் உவர் நீர் தன்மையை படிப்படியாக நீக்குவதற்கு பயன்படும். வண்டல் படுக்கை அமைந்த இரண்டாம் நிலை தேக்கத்திலும் பார்க்க உவர் நீர் வெளியேறி களிமண் படுக்கையுள்ள முதன்மை நீர்த்தேக்கம் அமைவதற்கு விரைவுபடுத்தும். குறுகிய காலத்தில் உவர்த்தன்மை குறைப்பானது உடனடியாக முடிவுக்கு கொன்டுவரப்பட முடியாத போதிலும் இதனால் ஏற்படும் நன்மைகளைப் பெறுவதற்கு அதிக காலம் காத்திருக்கத் தேவையில்லை. இதன் பயன்கள் உடனடியாக வந்தடையாமல் ஒவ்வொரு மழைக்காலத்தின் பின்பும் மேலும் மேலும் விருத்தியடையும். மேலும் பகுதியான உவர் நீரானது பயன்படுத்த முடியாவிட்டாலும் வேளாண்மைக்கு உகந்ததாக காணப்படும் அதேவேளை இந்நிலை குடா நாட்டின் கரையோரப் பகுதிகளில் உள்ள பல கிணறுகள் மூலமாக செய்யப்படும் வேளாண்மையினால் இது புலப்படும். நாட்கள் செல்லச் செல்ல மாசி பங்குனி சித்திரை மாதங்களில் உள்ள கூடிய வெப்பத்தினால் குறிப்பிடத்தக்க ஆவியாதல் நிகழும் இரண்டாம் நிலை நீர்த்தேக்கத்தின் கூடிய அளவான நீர் இழப்பை ஆனையிறவு நீர் தேக்கத்திலிருந்து நீரை கால்வாயினுடாக செலுத்தி இரண்டாம் நிலை தேக்கத்தை தொடர்ந்தும் நிரம்பல் நிலையில் வைத்திருக்கலாம். இவ்வாறான நிரப்பு நிலையானது தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக் காலமான ஆனி, ஆடி மாதங்களில் ஏற்படும் பாரியளவு ஆவியாதலின் விளைவாக இச் செயற்பாடு சாத்தியமற்றதாக இருக்கும். இதன் விளைவாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஏரி அமையும் பாரிய நன்னீPரேரியைக் கொண்டிருப்பதன் விளைவாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள நிலங்கள் விருத்தியடைந்து பன்மடங்கு நன்மையடையும். இதன் மூலம் நிலக்கீழ் நீர் தாராளமாக அமைவதோடு நீர் மட்டமும் உயர்வடையும் வருடங்கள் செல்லச் செல்ல கிணற்று நீர் மட்டமும் உயர்வடையும். இந்நிலத்தின் கீழுள்ள மண்ணின் ஈரப்பதன் அதிகரிக்கும். தாவர வளர்ச்சி பல்கிப் பெருகும். தென்னைகளுக்கும் ஏனைய மரங்களுக்கும் கோடையில் ஏற்படும் உற்பத்தி வீழ்ச்சி நிலைமை இல்லாமல் போகும். இத் திட்டம் அமைந்துள்ள ஏரியின் அண்மையில் உள்ள 15,000 ஏக்கரிலும் மேலான காணிகள் வேளாண்மை விருத்திக்கு உதவும். மேலும் வவுனியா மாவட்டத்தில் உற்பத்தியாகும் கனகராயன் ஆற்றின் நீரை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கொண்டுவந்து தொண்டமானாறு மற்றும் யாழ்ப்பாணப் பட்டிணத்தின் எல்லையில் அமைந்துள்ள அரியாலையில் உள்ள வானூடாக பாயச் செய்யும். இதுவே யாழ்ப்பாணத்துக்கான நீர்த் தேவையை பூர்த்தி செய்ய சரியான தீர்வு. (இலங்கை எந்திரிமார் சங்கத்தின் ஞாபகார்த்த வெளியீட்டில் கௌரவிக்கப்பட்ட மிகச் சிலரில் ஒருவரானவரும் முன்னாள் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராக கடமையாற்றிய எந்திரி.எஸ் ஆறுமுகத்தின் தூரநோக்கை விளங்குவதற்கு அடிப்படையாக 1954 இல் முதன் முறையாக வெளியிடப்பட்ட இக் கட்டுரை மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது. தமிழாக்கம் ஏந்திரி.ஏ.ரகுநாதன், இளைப்பாறிய நீர்ப்பாசனப் பணிப்பாளர், ஏற்பாட்டுக்குழு எந்திரி.எஸ்.ஆறுமுகம் நினைவுப் பேருரை யாழ்ப்பாணம் 11.01.2012)1 point
-
யாழில் இடம்பெற்ற மாபெரும் பட்டத்திருவிழா
பட்டங்களே பல கதைகளை சொல்கின்றது. ஏனெனில் அந்த மண் வீரம் செறிந்த மண். ஆனாலும் இந்த பட்ட தொழில் நுட்பம் தமிழ்நாட்டில் பேசப்படுகின்றது.1 point
-
யாழ்ப்பாணத்திற்கு நீதி அமைச்சர் விஜயதாச விஜயம்
அன்று தொடக்கம் தமிழர் பிரதேசங்களில் நடக்கும் நல்லிணக்க விடயங்களில் சிதம்பர ரகசியம் ஒன்றுமில்லை. தமது வீட்டிற்கு இராணுவ/கடற்படை அதிகாரிகளை கடவுளுக்கு நிகராக வரவழைத்து பார்ட்டி கேளிக்கைகள் செய்து சுய இன்பம் காணும் சம்பவங்களை கண்டு தான் வந்துள்ளோம் தம் இனம் ,தம் மக்கள்,தம் நிலம் என சிந்திப்பவர்கள் தமிழர் சார்ந்த கட்சிகளை ஆதரிப்பார்கள். சிங்களை கட்சிகளை ஆதரித்து பிரச்சாரம் செய்பவர்கள் சுய நலம் மிக்கவர்களாகவே இருந்துள்ளார்கள். இது நான் கண்ட அனுபவங்கள். தங்கள் சுய நலன்களுக்காக எதையும் செய்யும் தமிழர்கள் நிறையவே உள்ளார்கள்.1 point
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
ஒரு காலத்தில் ஈராக்கும் ஈரானும் அமெரிக்காவின் தோழமை நாடுகள் என்பதை பலர் இலகுவாக மறந்து விடுகின்றனர். முதுகில் குத்துபவர்களை முஸ்லீம்கள் கருவறுக்கவும் தயங்க மாட்டார்கள்.1 point
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
நீங்கள் ஏன் இதை திரும்ப திரும்ப எழுதுகிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை இறைமை இல்லாத இடங்களில் இருக்கும் மக்களை கொன்று போடலாம் தவறில்லை என்கிறீர்களா அல்லது வேறு ஏதாவது சொல்ல வருகிறீர்களா என்று புரியவில்லை? ஈரானை யார் வளர்த்தார்கள் எனும் கேள்விக்கு இப்போதைய ஈரானை கடந்த 100 வருடங்களாக இந்த பூமியில் மனித அழிவுகளை செய்துவரும் மேற்கு நாடுகள்தான் வளர்த்தார்கள் என்று எழுதினேன். அதில் ஏதும் தவறு இருப்பின் விவாதிக்கலாம்1 point
-
யாழில் இடம்பெற்ற மாபெரும் பட்டத்திருவிழா
சிறப்பாக உள்ளது. இந்தியா செந்தில் தொண்டமானை கொண்டு ஜல்லிக்கட்டு மாட்டு சண்டையை இலங்கை தமிழர்களிடம் திணிக்க முயற்ச்சித்ததிற்கு பதிலாக பட்டத்திருவிழாவை தமிழர்கள் பிரதேசங்களில் நடத்த ஏற்பாடு செய்திருக்கலாம்.1 point
-
யாழ்ப்பாணத்திற்கு நீதி அமைச்சர் விஜயதாச விஜயம்
அரிசி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தேசியமயமாகி வரும் பால் சக்கரை ஐம்ப் லோனில் இறக்குமதி ஆகி வரும் அவற்றை ஒன்றாக போட்டு பொங்கி சிங்கள பேரினவாதி ஒருவரையும் அழைத்துவந்து மாலை போட்டு தொடக்கி வைத்தால் அதுதான் தேசிய நல்லிணக்க பொங்கல்1 point
-
யாழ்ப்பாணத்திற்கு நீதி அமைச்சர் விஜயதாச விஜயம்
நம்புவது போல நடிக்கின்றனர் போல....அல்லது நடியுங்கள் என வற்புறுத்தப்படுகின்றனரா?1 point
-
பேக்கும் பிசாசுக்குமான போட்டி.
1 pointபோறவர், வாறவர், தடுக்கி விழுந்தவர் என்று எல்லாரும் மணித்தியாலக் கணக்காகக் கதைக்கிறார்கள், வீடியோக்களுக்குப் பஞ்சமில்லை, ஆனால் கேட்கவும் பார்க்கவும் ஆட்கள் இல்லை!😂1 point
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
அன்ரன் பாலசிங்கம் எழுதிய போரும் சமாதானமும் புத்தகம் நூலகம் இணையத்தில் இருக்கிறது. https://noolaham.net/project/720/71906/71906.pdf "ஒஸ்லோ பிரகடனம்" என்று அழைக்கப் படும் தீர்மானத்தின் விளக்கம் பக்கம் 669 இல் இருந்து 672 வரையான பகுதியில் இருக்கிறது. வாசித்துப் பாருங்கள். என் அபிப்பிராயம்: புலிகளுக்குப் பின்னான காலத்தில் "எக்க ராஜ்ஜிய, எக்கிய ராஜ்ஜிய" என்று தமிழ் அரசியல் விமர்சகர்கள் "சொற்சிலம்பம்" ஆடியது போலவே ஒஸ்லோ பேச்சு வார்த்தையிலும் சொற்களை வைத்து இரு தரப்பும் விளையாடியிருக்கின்றனர். பக்கம் 672 இல் தடித்த எழுத்தில் இருப்பதைப் பார்த்தால், புலிகள் "ஈயம் பூசின மாதிரியும் இருக்கோணும்" என்ற மன நிலையில் இருந்திருப்பதாக நான் கருதுகிறேன்.1 point
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointபோராளிகளுடன் இணைந்து செயற்பட்ட பொதுமக்கள் ஒட்டுசுட்டான் பொலீஸ் முகாம் மீதான தாக்குதலில் பரமதேவா முக்கியமான பாத்திரத்தினை வகித்திருந்தார். ஆகவே, அவரை கிழக்கு மாகாணத்தில் புலிகளின் நடவடிக்கைகளை முடுக்கிவிட பிரபாகரன் அனுப்பிவைத்தார். அடுத்துவந்த இரு மாதங்களுக்கு கிழக்கில் இராணுவத்தினருக்குத் தலையிடியைக் கொடுக்கும் நடவடிக்கைகளில் பரமதேவா ஈடுபட்டார். களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற தாக்குதல் முயற்சியொன்றில் அவர் மரணமடைந்தார். அவரது இழப்பு புலிகளை பெரிய அளவில் பாதித்திருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஐந்தாவது இரவாக மோதல்கள் தொடர்ந்து நடைபெற்றன. கடைகளை உடைத்துத் திறந்த இராணுவத்தினர் அவற்றைக் கொள்ளையிட்டதுடன், தீவைத்து எரித்தனர். வீதிகளிலும், வீடுகளிலும் இருந்த பொதுமக்களைச் சுட்டுக் கொன்றனர். போராளிகளும் தொடர்ச்சியாக இராணுவத்தினர் மீதும், பொலீஸார் மீதும் யாழ்ப்பாணத்து வீதிகளில் தாக்குதல்களை நடத்தி வந்தனர். இவ்வாறான தாக்குதல்களில் இராணுவத்தினரிடமிருந்து ஆயுதங்களும் வெடிபொருடகளும் அவர்களால் கைப்பற்றப்பட்டன. இடைக்கிடையே வாகனங்களும், பணமும் அவர்களால் கொள்ளையிடப்பட்டன. இதே காலப்பகுதியில் சமூகவிரோதிகளுக்கும், இராணுவத்தினருக்காக உளவுபார்த்தவர்களுக்கும் ஆங்காங்கே மின்கம்ப மரணதண்டனைகளும் வழங்கப்பட்டு வந்தன. காங்கேசந்துறைச் சீமேந்துத் தொலிற்சாலையிலிருந்து நான்கு துப்பாக்கிகள், குண்டுவெடிக்கவைக்கும் கருவிகள், ஜீப் வண்டி ஆகியவை போராளிகளால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. சுண்ணாம்புக் கற்களை அகழ்ந்து எடுக்கும் சுரங்கப்பகுதியில் பாறைகளை வெடிக்கவைத்து விட்டு , நான்கு ஆயுதம் தரித்த காவலாளிகள் பாதுகாப்பு வழங்க, பொறியியலாளர் ஏ. ஜேசுதாசன் மீதி வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு ஜீப் வண்டியில் வந்துகொண்டிருந்தார். திடீரென்று வாகனத்திற்கு முன்னால் வீதியில் குதித்த ஐந்து ஆயுதம் தரித்த இளைஞர்கள் ஜீப் வண்டியை மறித்தனர். பின்னர், ஜீப் வண்டியையும், காவலர்கள் வைத்திருந்த ஆயுதங்கள், ரவைகள், வெடிபொருட்கள் என்று அனைத்தையும் எடுத்துக்கொண்டு சென்றனர். அவ்வாறே, வங்கிகள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், அரச திணைக்களங்கள் ஆகியவற்றிலிருந்தும் போராளிகளால் ஆயுதங்களும், ரவைகளும் எடுத்துச் செல்லப்பட்டன. தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டடத்திற்கு வந்த நான்கு ஆயுதம் தரித்த இளைஞர்கள், கட்டடத்தின் கதவுகளை உடைத்துத் திறந்து அங்கிருந்த பணத்தையும், துப்பாக்கி ஒன்றையும் எடுத்துச் சென்றனர். இன்னொரு குழு பண்டைத்தரிப்பு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான கட்டடத்திலிருந்து பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த அரச திணைக்களம் ஒன்றிற்குள் புகுந்த இளைஞர் குழு ஒன்று காவலாளியை மிரட்டி அங்கிருந்த தட்டச்சுச் செய்யும் இயந்திரத்தையும், ரோனியோ இயந்திரத்தையும், காவலாளியின் துப்பாக்கியையும் எடுத்துச் சென்றது. ஒட்டுமொத்த யாழ்ப்பாணக் குடாநாடுமே கலவர பூமியாகக் காட்சியளித்தது. பொதுமக்களும் வீதிகளுக்கு இறங்கியிருந்தனர். தம்மால் எடுத்துவரக்கூடிய மரக்குற்றிகள், சீமேந்துத் தூண்கள், கற்கள் ஆகியவற்றை வீதிகளுக்குக் குறுக்கே இட்டு தடைகளை ஏற்படுத்தினர். சிலவிடங்களில் டயர்களும் வீதிக்குக் குறுக்கே போடப்பட்டு எரிக்கப்பட்டன. இராணுவ முகாம்களையும் , பொலீஸ் நிலையங்களையும் சூழவுள்ள வீதிகளில் இத்தடைகள் ஏற்படுத்தப்பட்டு, அவர்களை முடக்குவதே பொதுமக்களின் நோக்கமாக இருந்தது. பொதுமக்களால் ஏற்படுத்தப்பட்ட வீதித் தடைகளுக்கு அருகே போராளிகள் கண்ணிவெடிகளைப் புதைக்கத் தொடங்கினர். இவ்வாறான பதட்டமான சூழ்நிலையில் அரசுக்குச் சொந்தமான வங்கியொன்று இரு போராளிக் குழுக்களால் கொள்ளையிடப்பட்டது. ஸ்டான்லி வீதியில் அமைந்திருந்த இலங்கை வங்கியினைக் கொள்ளையிடும் நோக்கத்தில் பலநாட்களாக ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு அதற்கான நடவடிக்கைகளைத் திட்டமிட்டும் தகவல்களைச் சேகரித்தும் வந்திருந்தது. இன்னொரு சிறிய போராளி அமைப்பான தமிழீழ தேசிய விடுதலை முன்னணி எனும் அமைப்பும் இதே வங்கியைக் கொள்ளையிட நடவடிக்கைகளை எடுத்து வந்தது. பொதுமக்களின் எழுச்சியைப் பாவித்து அன்றிரவு ஸ்டான்லி வீதி வங்கியைக் கொள்ளையிடுவதே அந்த அமைப்பின் நோக்கம். அதற்காக இரு பாரவூர்திகளையும் ஒரு வான் ரக வாகனத்தையும் தமிழ் ஈழத் தேசிய விடுதலை முன்னணி கடத்திச் சென்றது. அந்த வாகனங்களில் அவ்வமைப்பின் போராளிகள் ஏறிக்கொண்டார்கள். வங்கிக்கொள்ளை விசாரணைகளின்போது சாட்சியங்கள் கூறுகையில் குறைந்தது 50 போராளிகளாவது அந்த வாகனங்களில் இருந்தார்கள் என்று கூறியிருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு உப இயந்திரத் துப்பாக்கியும் (எஸ் எம் ஜி) சில கிர்னேட்டுக்களும், சில சுழழ்த் துப்பாக்கிகளும் இருந்தன. வங்கியின் முன்னால் அமைந்திருந்த கதவினை உடைத்துத் திறந்த அவர்கள், உள்ளே நுழைந்து குண்டுகளை வெடிக்க வைத்தனர். வங்கியின் உட்பகுதியில் இருந்த பலமான கதவு குண்டுவெடிப்பினால் உடைந்து வீழ்ந்தது. பணமும், நகைகளும் பாதுகாப்பாக வைத்திருந்த ஒரு பெட்டகத்தை அவர்கள் எடுத்துச் சென்றார்கள். அத்துடன் உள்ளேயிருந்த ரைபிள்களையும் எடுத்துச் சென்றார்கள். ஆனால், ஏனைய நகைகளும் பணமும் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பான அறையினை அவர்களால் உடைக்கமுடியவில்லை. ஆகவே, நேரத்தை விரயமாக்காது தாம் வந்த வாகனங்களிலேயே தப்பிச் சென்றார்கள். இந்த வங்கிக்கொள்ளை பற்றி ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு அறிந்துகொண்டது. உழவு இயந்திரம் ஒன்றினை எடுத்துக்கொண்டு வங்கியை நோக்கிச் சென்றது அவ்வமைப்பின் குழு ஒன்று. வங்கிக்கொள்ளையினை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்களின் உதவியுடன், மீதமாகவிருந்த நகைகளும் பணமும் வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தை அவர்கள் எடுத்துச் சென்றனர். "எங்கள் பிள்ளைகளே எங்கள் காவலர்கள்" ஆவணி 6 ஆம் திகதி, அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டத்தினப் பாவித்து இராணுவம் தொடர்ச்சியாக அட்டூழியங்களில் ஈடுபட்டு வந்தது. தம்மீதான போராளிகளின் தாக்குதல்களுக்குப் பழிவாங்குவதற்காக பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலை அது நடத்தி வந்தது. ஆனால், போராளிகளும் தொடர்ச்சியாக இராணுவத்தின் மீது தாக்குதல்களை நடத்தியே வந்தனர். அரசின் ஒடுக்குமுறையினால் ஏலவே பாதிக்கப்பட்டிருந்த தமிழர்களைப் பொறுத்தவரை தம்மைக் காக்கவேண்டிய இராணுவமும், பொலீஸும், கடற்படையும் தம்மீது தாக்குதல் நடத்தி, பலரைக் கொன்றும், சொத்துக்களைச் சூறையாடியும் வந்தமை கடுமையான அதிருப்தியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஆகவே, இயல்பாகவே அவர்கள் போராளிகளின் பக்கம் சாயவேண்டிய நிலை ஏற்பட்டது. போராளிகளுக்கு, தாமாகவே முன்வந்து, விருப்புடன் தமிழர்கள் உதவும் சூழ்நிலை அங்கு உருவானது. போராளிகளுக்கான மக்களின் ஆதரவு பல்கிப் பெருகத் தொடங்கியது. "எங்கள் பிள்ளைகளே எங்கள் காவலர்கள்" எனும் மனோநிலை அனைவர் மனதிலும் ஆழமாக வேரூன்றிக்கொண்டது. அரச படைகளை, "சிங்கள இராணுவம், சிங்களப் பொலீஸ், அந்நியர்கள், ஆக்கிரமிப்பாளர்கள்" என்று தமிழர்கள் அழைக்கும் நிலை உருவானது. ஆவணி 6 ஆம் திகதி, யாழ்ப்பாணம் மக்கள் வங்கிக்கிளை தனது நாளாந்த அலுவல்களை ஆரம்பித்த வேளை மக்களோடு மக்களாக பத்து இளைஞர்கள் சுழழ்த் துப்பாக்கிகளுடன் உள்நுழைந்தனர். சிறிது நேரத்தின் பின்னர், 'நாங்கள் இங்கே குண்டுகளை வைத்திருக்கிறோம், அனைவரும் ஓடித் தப்புங்கள்" என்று அவர்கள் கூச்சலிட்டார்கள். அங்கிருந்த பொதுமக்கள், ஊழியர்கள், முகாமையாளர் என்று அனைவருமே வங்கியை விட்டு வெளியே ஓட ஆரம்பித்தார்கள். இந்தக் கலவரத்தில் அங்கிருந்த மூன்று காவலாளிகளிடமிருந்த துப்பாக்கிகளையும் குண்டுகளையும் அந்த இளைஞர்கள் பறித்துச் சென்றார்கள். வவுனியாவில் இடம்பெற்ற பழிவாங்கல்ப் படுகொலைகளும், கூட்டுப் பாலியல் வன்புணர்வும் வவுனியா நகரிலும் அன்று போராளிகளால் சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. பொலீஸ் அத்தியட்சகர் ஆர்தர் ஹேரத் வழமைபோல தனது காரியாலயத்திற்குள் நுழைந்து தனது இருக்கையில் அமர்ந்துகொண்டார். அவரது மேசைக்குக் கீழே பொறுத்தப்பட்டிருந்த நேரம் குறித்து வெடிக்கும் குண்டு செயற்பட வைக்கப்பட, பொலீஸ் அத்தியட்சகர் உடல்சிதறி மரணமானார். புளொட் அமைப்பே இந்தக் குண்டினை வைத்திருந்தது. காந்தியம் அமைப்பில் அக்காலத்தில் செயற்பாடு வந்த சந்ததியாரே இக்குண்டுவெடிப்பைத் திட்டமிட்டு நடத்தியதாக கூறப்பட்டது. காந்தியம் தலைவர்கள் மீது பொலீஸார் நடத்திய அடாவடித்தனம், இந்திய வம்சாவளித் தமிழர்களை காந்தியத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றியமை ஆகிய காரணங்களுக்காக பொலீஸார் மீது இத்தாக்குதலை புளொட் நடத்தியிருந்தது. ஹேரத் மரணிப்பதற்கு இரு மாதங்களுக்கு முன்னர் மாங்குளம் வாடி வீட்டில் அவரைச் சந்தித்தேன். லலித் அதுலத் முதலியின் விஜயத்தை செய்தியாக்குவதற்காக நான் அங்கு சென்றிருந்தேன். ஹேரத்தின் மரணத்திற்குப் பழிதீர்க்க இராணுவமும் பொலீஸாரும் செயலில் இறங்கினார்கள். வவுனியா நகரப்பகுதிக்கு வாகனங்களில் வந்திறங்கிய 25 பொலீஸார், அங்கிருந்த தமிழருக்குச் சொந்தமான அனைத்துக் கடைகளையும் அடித்து நொறுக்கியதுடன் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகமும் செய்தனர். நகரில் இயங்கிவந்த "வேல் கபே" எனும் உணவு விடுதிக்குள் நுழைந்த பொலீஸார் அதன் உரிமையாளரையும், உணவருந்திக்கொண்டிருந்த ஆறு பொதுமக்களையும் சுட்டுக் கொன்றனர். அன்றிரவு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தனியார் பேரூந்தொன்றில் பயணம் செய்த நான்கு தமிழ்ப் பெண்களை, பேரூந்தினை மறித்த விமானப்படடையினர் தம்முடன் இழுத்துச் சென்றனர். கூட்டாகப் பாலியல் வன்புணர்வுள்ளாக்கப்பட்ட அந்த நான்கு பெண்களும் பின்னர் விமானப்படையினரால் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டனர். மறுநாளான ஆவணி 7 ஆம் திகதி, வவுனியாவிலிருந்து மன்னார் செல்லும் வழியில், நகரில் இருந்து மூன்று கிலோமீட்டர்கள் தொலைவில் கொல்லப்பட்ட மேலும் 10 தமிழர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால், வழமைபோல பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட லியனகே, இத்தமிழர்கள் அனைவரும் போராளிக் குழுக்களுக்கிடையிலான மோதலில் அகப்பட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று கூறினார். மேலும், ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையத் தாக்குதலுக்குப் பழிவாங்கிய பொலீஸார் சரித்திர முக்கியத்துவம் பெற்ற தம்பலகாமம் சிவன் கோயிலை இடித்து நொறுக்கியதுடன், பூசகரையும் அடித்து இழுத்துச் சென்றனர். சுண்ணாகம் பொலீஸ் நிலையப் படுகொலை ஆவணி 9 ஆம் திகதி, மொத்தத் தமிழினத்தையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய படுகொலையொன்று நடந்தேறியது. யாழ்ப்பாணப் பொலீஸ் நிலையத்திற்கு அடுத்ததாக, சுண்ணாகத்தில் அமைந்திருக்கும் பொலீஸ் நிலையமே வடபகுதியில் இருந்த பொலீஸ் நிலையங்களுக்குள் பெரியதாக இருந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தினூடாக கைதுசெய்யப்பட்ட பல தமிழ் இளைஞர்கள் சுண்ணாகம் பொலீஸ் நிலையத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்கள். யாழ்ப்பாணம் - காங்கேசந்துறை வீதியில் அமைந்திருந்த இரண்டு மாடிகளைக் கொண்ட இப்பொலீஸ் நிலையம் மீது புதன்கிழமை டெலோ அமைப்பினர் நடத்திய தாக்குதல் முயற்சி பொலீஸாரினால் முறியடிக்கப்பட்டிருந்தது . ஆனால், புதன் இரவும் இன்னொரு தாக்குதல் முயற்சியில் டெலோ அமைப்பினர் இறங்கப்போகிறார்கள் என்கிற செய்தி பொலீஸாருக்குக் கிடைத்தது. பின்னாட்களில் நடந்த விசாரணைகளின்போது, அன்றிரவே சுண்ணாகம் பொலீஸார் யாழ்ப்பாணப் பொலீஸ் நிலையம் நோக்கிச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அவ்வாறு யாழ்ப்பாணத்திற்குப் போகும் முன்னர், தாம் அடைத்துவைத்திருந்த இளைஞர்கள் அனைவரையும் ஒரு அறைக்குள் அடைத்துப் பொலீஸார் பூட்டினர். அந்த இளைஞர்களின் கைகள் பின்னால் கட்டப்பட்டும், கண்கள் மறைக்கப்பட்டும், அவர்கள் கூச்சலிடாதபடி வாய்களுக்குள் துணிகள் பொதிந்தும் அடைக்கப்பட்டார்கள். பின்னர், அவ்வறையின் கதவினை எவராவதுதிறக்க எத்தனித்தால், அவ்வறையினை முற்றாக இடித்துத் தரைமட்டமாக்கக் கூடியவகையில் பாரிய குண்டொன்றைப் பொலீஸார் பொறுத்திவிட்டுச் சென்றார்கள். அன்று உயிர்தப்பிய சிலர் விசாரணைகளின்போது பேசுகையில், தம்மில் சிலர் ஒருவாறு கைக்கட்டுக்களையும், வாயில் அடைக்கப்பட்ட துணிகளையும் அகற்றிவிட்டு உதவி கோரிக் கூச்சலிட்டிருக்கிறார்கள். பொலீஸார் வெளியேறியபின்னர் அப்பகுதியில் குழுமிய பொதுமக்கள் உள்ளிருந்து வரும் கூச்சல்களைச் செவிமடுத்தவுடன், கதவினை உடைத்துத் திறக்க எத்தனித்திருக்கிறார்கள். இதன்போது கதவில் பொறுத்தப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இக்குண்டுவெடிப்பில் உள்ளே அடைக்கப்பட்டிருந்த இளைஞர்களும், உதவிக்கு வந்த பொதுமக்களுமாக குறைந்தது 20 பேர் அவ்விடத்திலேயே உடல்சிதறிக் கொல்லப்பட்டார்கள். பொலீஸாரினால் தடுத்துவைக்கப்பட்டு, பின்னர் திட்டமிட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்களின் மரணங்களை கொழும்பு ஊடகங்கள் பின்வருமாறு தலைப்பிட்டு மகிழ்ந்தன, "பயங்கரவாதிகளின் தாக்குதலை பொலீஸார் முறியடித்து விட்டனர்". இப்படுகொலை பற்றிய பொய்ப்பிரச்சாரத்தை அவை முடுக்கிவிட்டிருந்தன. சண்டே ஒப்சேர்வர் தனது செய்தியில் பயங்கரவாதிகளின் தாக்குதலை பொலீஸார் முறியடித்து விட்டதாகவும், மேலதிக ஆளணி உதவி பொலீஸாரால் விடுக்கப்பட்டதாகவும் எழுதியது. மேலும், சுண்ணாகம் பொலீஸாரின் உதவி கோரலினையடுத்து யாழ்ப்பாணத்திலிருந்த ஏனைய பொலீஸ் நிலையங்களில் இருந்து பொலீஸார் விரைந்து சென்று சண்டையில் ஈடுபட்டதாகவும், கடுமையான சண்டையில் இருபதிற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அச்செய்தி கூறியது. நாவற்குழி படுகொலை மறுநாள், ஆவணி 10 ஆம் திகதி இரவு, குருதியை உரையவைக்கும் இன்னொரு கொடூரமான படுகொலை ஒன்று இராணுவத்தினரால் அரங்கேற்றப்பட்டது. 10 பேர் கொண்ட குடும்பம் ஒன்று கைதடியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி தனியார் வாகனமொன்றில் பயணம் செய்துகொண்டிருந்தனர். இவர்களுள் ஆறு பேர் குழந்தைகள். நாவற்குழி இராணுவத் தடைமுகாமின் அரணில் நின்ற இராணுவத்தினர் அவ்வண்டியை மறித்தனர். முகாமின் அருகிலிருந்த ஆள் ஆரவாரம் அற்ற இடமொன்றிற்கு இழுத்துச் செல்லப்பட்ட அக்குழந்தைகளும் பெற்றோரும் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இப்படுகொலையினை அரச வானொலி பிரச்சாரப்படுத்திய விதம் தமிழ் மக்களை மேலும் ஆத்திரம்கொள்ள வைத்தது. "கைதடிப்பகுதியில் இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள் " என்று பொதுமக்களின்படுகொலை பிரச்சாரப்படுத்தப்பட்டது.1 point -
தலைமுடியால் உலக சாதனை படைத்த திருச் செல்வம்!
ஏலும் என்றால் பிடுங்கி பார் என்றும் சொல்லலாம் 😂1 point
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
பாவம் ஈரானியர்கள் தருணம் பார்த்துக் கொண்டே இருப்பவனை விருந்து வைத்து உள்ளே எடுக்கிறார்கள். இனி இவர்களுக்காகவும் இரங்க மனம் இடம் தராது. கமாசை அமெரிக்கா தான் வளர்த்து இஸ்ரேல் மீது தாக்குதல் செய்ய வைத்தது என்பவர்கள் இரானை யார் வளர்த்து தாக்க சொன்னது என்பார்கள் என்று பார்ப்போம்1 point
-
யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
தமிழர்களை செருப்பு மாதிரி பாவிப்பது தானே இவர்களது வேலை.1 point
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
1 pointஇது பிழையான கருத்து சுமந்திரனை புறக்கணிக்கும் காரணம் கிறிஸ்த்தவன். என்பதற்காக அல்ல அவரது செயல்பாடுகள் ஐக்கிய தேசிய கட்சியின் செயல்கள போல் இருக்கிறது தமிழரசு கட்சி ஐக்கிய தேசிய கட்சி இல்லை அவர் ஐக்கிய தேசிய கட்சியில். தொடர்ந்து இருந்து இருக்கலாம் ஆனால் ரணில் இவரை தமிழரசு கட்சிக்குள்ளே புகுத்தி இருக்கலாம் உடைப்பதற்க்காக என்று கருதுகிறேன் மேலும் தமிழர்கள் அரசியலில் சமயம் பார்ப்பதில்லை இனம் தான் பார்க்கிறார்கள் அதாவது தமிழ்மொழியை பார்க்கிறோம் செல்வாவையும். பல பாதிரியார்களையும் சுத்த தமிழர்களாகப் பார்த்தோம். பார்ப்போம் சுமத்திரன். சட்டத் தொழிலில் பாவிக்கும் பொய்யை அரசியலில் பாவிப்பதை தவிர்ப்பது நல்லது பாராளுமன்ற தேர்தலில் அடாவடித்தனங்களைச் செய்து வென்றது போல் கட்சித்தலைவர். பதவியையும் கைப்பற்ற முயற்சிகள் செய்யக்கூடாது1 point
-
தமது வீதியை புனரமைத்து தருமாறு வடமாகாண ஆளுநருக்கு 96 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பியுள்ள மக்கள்
1 point
- தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
1 pointஉங்கள் கூற்று உண்மையானால் சுமந்திரன் பா. உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்க மாட்டார். ஆகவே உங்கள் மதவாத விசங்களை விதைக்காதீர்கள்.1 point- உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- யாழில் இடம்பெற்ற மாபெரும் பட்டத்திருவிழா
அருமையான பட்டங்கள் அற்புதமான கலைஞர்கள் .......அனைவருக்கும் பாராட்டுக்கள்.......! 👍1 point- முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
இறுதியில், யானை பார்த்த குருடனின் நிலையில் இந்தத் திரியின் நிலை 🤣1 point- திருமணம் செய்த பெண்ணை தூக்கிட்டு கொலை செய்த பெற்றோர்
@Cruso ஏன் இந்த ஓரவஞ்சனை? நான் என்ன வைத்துக்கொண்டா இல்லையென்கிறேன்? 🤣1 point- யாழ்ப்பாணத்திற்கு நீதி அமைச்சர் விஜயதாச விஜயம்
ஆனந்த சங்கரி ஐயாவும் விஜேதாச ராஜபக்ஷேயும் சேர்ந்தால் அது நல்லிணக்கம். அதை பொங்கலாக கொண்டாடுகிறார்கள்.1 point- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
சார்! இந்த உருட்டுக்கு நீங்கள் ஒரு பதில் சொல்லியே ஆகணும்...😃1 point- தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
1 pointசிங்களவனால் தமிழனுக்கு தீர்வா??? முதலில் சோனகர்கள் தற்போது உங்களைப் போன்ற தமிழ் கிறீஸ்தவர்கள். பூனைக் குட்டி வெளியில் வந்து விட்டது. தமிழர்கள் எப்போதும் சைவர்களுக்கு தீர்வு என்று கேட்டது கிடையாது. சிவபூமி சிவசேனை ஓன்றும் அரசியல் கட்சி அல்ல. வெளியில் இருந்து யாரும் உபதேசம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை ஆனால் உதவி என்றவுடன் பல்லைக் காட்டிக் கொண்டு வந்து விடுவீர்கள்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointமுதலாம் ஈழ யுத்தம் 1984 ஆம் ஆண்டு ஆவணி மாதம் தமிழரின் தாயக விடுதலைப் போராட்டத்தின் முக்கிய திருப்புமுனையாக இருந்தது. சென்னையில் பேசிய பிரபாகரன் இதுவரை காலமும் தாக்கிவிட்டு ஒளிந்துகொள்ளும் முறையில் இருந்து நிலையான போர்புரியும் கெரில்லாக்களாக தாம் மாற முடிவெடுத்திருப்பதாகக் கூறியதுடன், ஏனைய அமைப்புக்களையும் தம்முடன் இணைந்து பொது எதிரிக்கெதிராகப் போராடி தாயகத்தையும் மக்களையும் காத்துக்கொள்ள உதவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த பிரகடனத்தோடு தனது அமைப்பின் ஆயுதப் போராட்டத்தை இன்னொரு படிநிலைக்கு உயர்த்திவிட்டிருந்த பிரபாகரன் அதற்கான தலைமையினையும் வழங்கினார். அக்காலத்தில் இருந்த போராளித் தலைவர்களில் பிரபாகரனே இவ்வகை படிநிலை மாற்றத்தினை முதன்முதலாக கைக்கொண்டவர் என்பது முக்கியமானது. மேலும், இந்த அறிவிப்போடு முதலாவது ஈழப்போர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தும் வைக்கப்பட்டது. முதலாவது ஈழப்போர் 1984 ஆம் ஆண்டு ஆவணி 4 ஆம் திகதி பொலிகண்டியை அண்டிய கடலில் , வல்வெட்டித்துறைக்கு அருகாமையில் இடம்பெற்ற கடற்சமருடன் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்த கடற்படைப் படகு தனது ரேடரில் தெரிந்த புலிகளின் படகு நோக்கித் துப்பாக்கித் தாக்குதலை ஆரம்பித்தது. புலிகளும் திருப்பித் தாக்கினார்கள். சிறிதுநேரம் மட்டுமே நடைபெற்ற தீவிரச் சண்டையில் ஆறு கடற்படையினர் புலிகளால் கொல்லப்பட்டதுடன் இன்னும் சிலர் காயமடைந்தனர். சீனாவில் தயாரிக்கப்பட்ட இன்னொரு பீரங்கிப்படகில் இருந்த 9 கடற்படையினர், சேதமடைந்த படகில் கிடந்த கொல்லப்பட்டவர்களையும், காயப்பட்டவர்களையும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். புலிகளின் படகில் பயணம் செய்த நான்கு போராளிகளும் காயமேதும் இன்றித் தப்பித்ததோடு, படகும் பாதுகாக்கப்பட்டது. புலிகளுடனான தனது முதலாவது கடற்சமரிலேயே கடுமையான இழப்புக்களைக் கடற்படை சந்தித்தது. இது அவர்களைப் பொறுத்தவரை ஒரு பிரச்சினையாக மாறியது. அதுலத் முதலி கொதித்துப்போனார். மறுநாள் காலை பொலீஸாரும் இராணுவமும் இணைந்து வல்வெட்டித்துறைப் பகுதியைச் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதேவேளை பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறை மீது கடற்படையும் இராணுவமும் இணைந்து கடுமையான தாக்குதலை மேற்கொண்டனர். வல்வெட்டித்துறைக் கடற்கரைப்பகுதி தமது கண்காணிப்பிற்குட்பட்ட பகுதி என்று கடற்படையால் அறிவிக்கப்பட்டது. கரையில் கட்டப்பட்டிருந்த மீனவர்களின் குடிசைகள் பீரங்கிப் பாடகிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் தீப்பிடித்து எரிய, வீதியால் வந்த கடற்படையினர் மீனவர்களின் படகுகளுக்குத் தீமூட்டினர். சுமார் 5000 பொதுமக்கள் ஊரைவிட்டு வெளியேறி அருகிலிருந்த பாடசாலையினுள் தஞ்சமடைந்திருந்தனர். நூற்றிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இராணுவத்தினராலும், கடற்படையினராலும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களுள் குழந்தைகளும் முதியவர்களும் அடங்கும். வல்வெட்டித்துறைப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலீஸாரும் இராணுவத்தினரும், அவ்வூரில் இருந்த உடல்வலுக் கொண்ட ஆண்கள் அனைவரையும் திறந்த வெளியொன்றில் கூடுமாறு கட்டளையிட்டனர். குறைந்தது 300 ஆண்கள் அவ்வாறு கைதுசெய்யப்பட்டனர். குழுக்களாகச் சென்ற இராணுவத்தினர் அருகில் இருந்த கிராமங்களுக்குள் சென்று கண்களில் பட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று பொதுமக்களைச் சுட்டுக் கொன்றதுடன் வீடுகளுக்கும் வாகனங்களுக்கும் தீவைத்தனர். இராஜாங்க அமைச்சகத்தின் பேச்சாளர் டக்ளஸ் லியனகே பத்திரிக்கையாளர்களின் மாநாட்டில் பேசும்போது சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் இன்னும் 300 பயங்கரவாதிகளைத் தாம் கைதுசெய்திருப்பதாகவும் கூறினார். இதுதொடர்பாக டெயிலி நியூஸ் வெளியிட்ட செய்தியின் முதலாவது பந்தி பின்வருமாறு கூறியது, "வல்வெட்டித்துறைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பொலீஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் 300 பயங்கரவாதச் சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளனர் என்று கொழும்பிற்குக் கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பல பயங்கரவாதிகள் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது....." அன்றைய நாள் நகர்ந்தபொழுது வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற படுகொலைகள், கைதுகள், சொத்தழிப்புக்கள் குறித்த தகவல்கள் யாழ்க்குடாநாடெங்கும் பரவியது. யாழ்ப்பாணத்தில் கடுமையான பதற்றம் நிலவியதோடு, கடற்சமரில் கொல்லப்பட்ட கடற்படையினரின் உடல்கள் இராணுவத்தால் மீட்கப்பட்டு பலாலியூடாக கொழும்பிற்கு எடுத்துசெல்லப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது. கவச வாகனங்களில் வலம்வந்த இராணுவத்தினர் யாழ் வைத்தியசாலைக்கு எதிர்ப்புறமாக இருந்த கட்டடங்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கித் தாக்குதல்களை நடத்திக்கொண்டு சென்றனர். பின்னர் அவ்வாகனம் யாழ்ச் சந்தைப்பகுதி நோக்கி நகர்ந்தபடி தாக்குதல் நடத்தியவேளை புலிகள் அதனை நோக்கி கிர்னேட்டுக்களாலும், பெற்றொல்க் குண்டுகளாலும் தாக்குதல் நடத்தினர். புலிகளோடு இணைந்த பொதுமக்கள் கற்களாலும் ஏனைய பொருட்களாலும் கவசவாகனம் மீது எறியத் தொடங்கினர். உள்ளிருந்த இராணுவத்தினர் பொதுமக்கள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இந்தச் சண்டை சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. முடிவில் கவச வாகனத்திற்குச் சேதம் ஏற்பட்டதுடன் ஒரு இராணுவத்தினரும் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து யாழ்நகர் முழுவதும் குண்டுத் தாக்குதல்களால் அதிர்ந்தது. பல பொதுமக்கள் இராணுவத்தால் சகட்டுமேனிக்குக் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். மிகப்பழமையானதும், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததுமான யாழ்நகரம் முதலாவது ஈழப்போரின் சண்டையினை அன்று தரிசித்தது. லியனகேயின் அலுவலகம் விடுத்த பத்திரிக்கையாளருக்கான குறிப்பில் யாழ்ப்பாணத்தில் பலர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது. கொல்லப்பட்ட அனைவருமே பயங்கரவாதிகள் என்று அவ்வறிக்கை கூறியதுடன், இராணுவத்தினருடனும், பொலீஸாருடனுமான மோதல்களில் இவர்கள் கொல்லப்பட்டதாகவும் மேலும் கூறியது. அன்று இரவாகியதும், யாழ்ப்பாண நகரில் ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் பிறப்பித்தது. இராணுவத்தினரும் பொலீஸாரும் குழுக்களாக யாழ்நகரப்பகுதிகளிலும், கிராமங்களிலும் வலம் வந்தனர். அன்றிரவு முழுவதும் பொதுமக்களைக் கொன்றதுடன், சொத்துக்களுக்கும் தீமூட்டியபடி அவர்கள் வலம்வந்தனர். யாழ்ப்பாணம் பலாலி வீதியின் இருமரங்கிலும் இருந்த பெரும்பாலான கடைகளும், சில வீடுகளும் இராணுவத்தால் எரிக்கப்பட்டன. பலாலிக்கு அருகில் அமைந்திருந்த அச்சுவேலிக் கிராமம் மிகக்கடுமையாகத் தாக்கப்பட்டது. அங்கிருந்த பல கடைகளும் வீடுகளும் இராணுவத்தால் தீக்கிரையாக்கப்பட்டன. எரிக்கப்பட்ட வீடுகளில் மல்லாகம் நீதிமன்ற நீதிபதியின் வீடும் அடங்கும். அவ்வீட்டின் முன்னால் காவலுக்கு நின்ற பொலீஸாரை கலைத்துவிட்டே இராணுவத்தினர் அதற்குத் தீமூட்டினர். புலிகள் பதில்த் தாக்குதலில் இறங்கினர். அன்றிரவு, ஆவணி 5 ஆம் திகதி, வல்வெட்டித்துறைக்கு அண்மையாக இருக்கும் நெடியகாடு எனும் பகுதியூடாக ரோந்துவந்த பொலீஸ் இராணுவ கூட்டு அணிமீது தாக்குதல் நடத்தினர். அன்று பின்னேரம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்திருந்த பொலீஸ் நிலையம் மீதும் குண்டுத்தாக்குதல் நடத்தியிருந்தனர். அன்றிரவு முழுவதும் முதலாவது ஈழப்போர் மிகத் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. 1987 ஆம் ஆண்டு ஆடியில் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்வரை இப்போர் தொடர்ந்து நடைபெற்றது. நெடியக்காடு எனும்பகுதியில் வீதியின் ஓரத்தில் பாரிய கண்ணிவெடி ஒன்றினைப் புதைத்த புலிகள், வீதியின் இருமருங்கிலும் பதுங்கியிருந்தவாறு இரவுநேர பொலீஸ் - இராணுவ கூட்டு ரோந்து அணியின் வருகையினை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர். இந்த ரோந்து அணியில் மூன்று கவச வாகனங்கள், ஒரு ஜீப் வண்டி ஒரு ட்ரக் வண்டி என்று ஐந்து வாகனங்கள் வரிசையாக வந்துகொண்டிருந்தன. முன்னால் வந்துகொண்டிருந்த ஜீப் மீது கண்ணிவெடித் தாக்குதலை நடத்திவிட்டு ஏனையவற்றின்மீது துப்பாக்கித் தாக்குதலை புலிகள் நடத்த ஆரம்பித்தனர். எட்டு பொலீஸ் அதிரடிப்படையினரும் அவர்களின் தளபதியான உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் சிறீ ஜயசுந்தரவும் அவ்விடத்தில் பலியானார்கள். ஒட்டுசுட்டானில், இருள் சூழ்ந்த மாலை வேளையில் மாத்தையா தலைமையில் 60 புலிகள் இரு குழுக்களாகப் பிரிந்து நிலையெடுத்துக் காத்திருந்தனர். சுமார் 50 பொலீஸார் தங்கியிருந்த இருமாடிக் கட்டத்தின் பிற்பகுதிக்கு புலிகளின் குழுவொன்று சென்றது. இக்கட்டத்தில் இருந்த பொலீஸாரில் 30 பேர் இஸ்ரேலியக் கமாண்டோக்களினால் பயிற்றப்பட்ட கெரில்லா எதிர்ப்பு அதிரடிப்படை வீரர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. மற்றைய குழு முகாமின் முற்பகுதியில் இருந்து தாக்குதலை ஆரம்பித்தது. கட்டடத்திற்குள் இருந்த பொலீஸார் முகாமினைக் காத்துக்கொள்ள முகாமின் முன்புறம் நோக்கி ஓடினர். அப்போது முகாமின் பிற்பகுதியில் நிலையெடுத்திருந்த இரண்டாவது குழு முகாமிற்குள் நுழைந்துகொண்டது. உள்ளே நுழைந்தவுடன் கிர்னேட்டுக்களை வீசியும், குண்டுகளை வெடிக்கவைத்தும் தாக்குதல் நடத்தி பொலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடையுமாறு கோரியது. பொலீஸார் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, தப்பியோடினர். புலிகள் ஆயுதங்களைக் கைப்பற்றிக்கொண்டதுடன், கட்டடத்தையும் குண்டுவைத்து தகர்த்துவிட்டுச் சென்றனர். புலிகளால் எடுத்துச் செல்லப்பட்ட ஆயுதங்களில் நான்கு இயந்திரத் துப்பாக்கிகள், மூன்று 0.303 ரைபிள்கள், நான்கு ரிப்பீட்டர் ரைபிள்கள்,இரண்டு 0.38 கைத்துப்பாக்கிகள் மற்றும் பெருமளவு துப்பாக்கி ரவைகள் என்பன அடங்கும். கொல்லப்பட்ட எட்டு பொலீஸ் கமாண்டோக்களில் பொலீஸ் பரிசோதகர் கணேமுல்லையும் ஒருவர்.1 point- கருத்து படங்கள்
1 point1 point- தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
1 pointதமிழர் தரப்பில் என்றுமே மதவாதம் இருந்ததில்லை. உங்கள் நலனுக்காக்காக தயவு செய்து மத வாதத்தை புகுத்த வேண்டாம். தமிழர்கள் என்றுமே மதவாதம்,இனவாதம் இல்லாதவர்கள். கருத்தில் கொள்ளுங்கள்.1 point- சிரிக்கலாம் வாங்க
1 point1 point- ஓட்ஸ் அன்ட் கொனி
1 point- ஓட்ஸ் அன்ட் கொனி
1 point- ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!
தமிழ் தேசியவாதம் இப்போது தமிழ் இனவெறி அடிப்படை வாதமாக மாறிக்கொண்டு வருவதை எழுஞாயிறு அவர்களுன் கருத்து காட்டுகிறது. சிங்கள் தாயாருக்கு பிறப்பதோ, சிங்கள் காதலி இருப்பதோ குற்றமாக கருதும் அளவுக்கு இனவெறி. நாட்டுக்காக போராடும்போதே இந்த இனவாதம் என்றால் நாடும் அதிகாரமும் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்கிறேன்.1 point- ஓட்ஸ் அன்ட் கொனி
1 point- ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!
தலையங்கம் சுப்பரோ சுப்பர். 😏1 point - தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.