Leaderboard
-
ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்8Points8907Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்6Points33600Posts -
island
கருத்துக்கள உறவுகள்5Points1747Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்5Points2957Posts
Popular Content
Showing content with the highest reputation on 01/31/24 in all areas
-
புது வரவு
4 points"கண்ணா நான் யாழை விட்டு எங்கே போவேன் " பதிவுகள் தான் போடவில்லை ..ஆவியாக இங்கே தான் உலாவுகிறேன்.4 points
-
பிரி(யா)விடை -T. கோபிசங்கர்
3 pointsபிரி(யா)விடை 9 ஜூலை 1995 காலமை ஆசுபத்திரீ; காலமை கணேசரட்ணம் சேர் ward round இல படிப்பிக்கேக்க patient ஐ விபரங்கள் சரியாக் கேட்டு வைக்கேல்லை எண்டு senior group இல எல்லாரையும் wardக்கு வெளீல கலைச்சு விட்டிட்டார். ஆர்டை நோயாளி எண்டு சேர் கேக்கேக்க ஒற்றுமையா காட்டிக் குடுக்காம விட்டிட்டு பிறகு “எல்லாம் அரவிந்தனால” எண்டு பெட்டைகள் விரலை நீட்ட, நான் canteen இல சாப்பிட்டிட்டு வாறன் எண்டு அரோ போனான். படிப்பை மட்டுமே மூச்சாயும் மூலதனமாயும் நினைச்சு வந்திருந்த எல்லாப் பொம்பிளைப் பிள்ளைகளும் சில பெடியளும் “சேர் இனிமே இப்பிடி நடக்காது” எண்டு சொல்லிக் காலில விழ, “சரி , இண்டைக்கு இரவும் நிண்டு எல்லாரும் full history யும் கேட்டு வையுங்கோ” எண்டு கணேசர் சொல்ல, “ஓம் சேர்” எண்டு சொன்னது நல்லூர் முருகனுக்கே கேட்டிச்சுது. பின்னேரம் போல “அடேய் இண்டைக்கு கணேசர் medicos nite க்கு chief guest ஆப் போறாராம் நாங்கள் பின்னேரம் வரத்தேவேல்லை” எண்டு சிலர் வெளிக்கிட “சேர் சொன்னாக் கட்டாயம் வருவார்” எண்டு பெட்டைகள் வெருட்ட வெளிக்கிட்ட பெடியள் திருப்பி நிண்டிச்சினம். ஆர்வக்கோளாறுக்காரர் எல்லாம் அண்டைக்கு வயித்துநோ , கட்டி வெண்டு வந்த ஆளை வைச்சு கட்டி கரைஞ்சு போற அளவுக்கு அமத்திப் பாக்க சிலர் மட்டும் Nursing பழக வந்த பிள்ளைகளோட “சள்” அடிச்சுக்கொண்டு இருந்திச்சனம். புத்தகத்தைப் படிச்சு ஏறாத அறிவை தலைக்கு கீழ படுக்க வைச்சு ஏத்திக் கொண்டு சிலர் இருந்திச்சினம். பாவம் இந்த குறூப் அண்ணாமாரும் அக்காமாரும் மட்டும் இரவிரவா ஆஸ்பத்திரீல நிக்க மருத்துவபீடம் களைகட்டி இருந்திச்சுது. பின்னேரம் medical faculty; Ragging நேரத்தில பாத்தோண்ணயே பிடிச்சதும் சரிவராம , “பழகப் பழகப் பிடிச்சிடும் எண்டு ஒண்டாப் படிச்சதும் சரிவராம கடைசி நாள் வரை முயற்சியைக் கைவிடாம தன்டை காதல் அம்புகளை இசை ரொக்கற்றில விட்டுக் கொண்டிருந்தார் ஒரு அண்ணா. மருத்துவ பீட farewell நிகழ்வில இது எப்பவுமே நடக்கிறது. இவர் விட்ட இசைத்தூதுக்கு இணை அனுசரணை வழங்கின பிரதாபன் organன்டை எந்தப்பக்கமும் எட்டா( வது ) சுரக்கட்டையை தேடித்தேடி வாசிக்க, எங்கடை பீலிங்குக்கு ஏத்த மாதிரி மழை மட்டும் பெய்யத் தொடங்கிச்சுது. முதலாவது வருசத்தில கம்பஸில நடக்கிற ஒவ்வொரு நிகழ்வுக்கும் புதுசா வாறாக்கள் தான் எடுபிடி , ஆனாலும் எங்களுக்கும் எல்லாத்திலேம் பங்கு கிடைக்கும் கட்டி முடிக்காத இப்பத்தைய Hoover Auditorium சுவருக்கு பாயைக் கட்டி வைச்சதால பேர் வந்த “பாய்க்கடை” . இந்தப் பாய்க்கடைப் பக்கம் காத்து வாங்கிறதுக்காக போன கூட்டம் நல்ல “கணகணப்போட” திருப்பி வந்திச்சுது. வந்த குறூப் சும்மா நிக்காமல் சுதியோட வந்து சோகப்பாட்டுக்கும் லயத்தோட ஆடத் தொடங்கிச்சுது. இந்த ஜோதீல பலர் சேர நல்ல பிள்ளைக்கு நடிச்சுக் கொண்டிருந்த சிலர் மட்டும் “வாங்கோ சேந்து குறூப்பா படம் எடுப்பம்” எண்டு சொல்லீட்டு இரகசியமா ரெண்டு பேரா போச்சினம் . படம் எடுக்கிறதை எட்டிப் பாப்பம் எண்டு போய்ப் பாத்தா இந்த ஊர்க்காரர் இந்தப் பள்ளிக்கூட காரர் எண்டு தேடிக் கூப்பிட்டும் தங்கடை சோடிகளோட இணைஞ்சும் படம் எடுத்துக்கொண்டு இருந்திச்சினம் கொஞ்சப் பேர். சோடிகளோட இணையாத பல பேர் இசையோட இணைஞ்சு இருத்திச்சினம். பெய்த மழையில கேட்ட பெரிய இடி உள்ளயா வெளியையா எண்டு தெரியாத அளவு உச்சம் தொட்டிருந்தது பிரியாவிடைப் party. மேடைக்குப் பக்கத்தில கொஞ்சப்பேர் “ குரங்குகள் போலே மரங்களின் மேலே“ எண்டு பாட்டை கும்பலா பாடமாக்கிக் கொண்டு இருந்திச்சினம், கடைசியாப் பாடிறதுக்கு. பிரியிற சோகம் பெரிசாக ஆடிற இடத்தை தாண்டி ஆக்கள் இருக்கிற இடத்தையும் ஆக்கிரமிக்கத் தொடங்கிச்சினம் . நாசூக்கா , நாகரீகமா “ நாங்கள் வெளிக்கிடிறம்“ எண்டு கொஞ்சக் காஞ்சிபுரம் கட்டினவையும், டை கட்டினவையும் வெளிக்கிடத் தொடங்கிச்சினம். உடுக்கேறியும் கலை வராத ஆக்களுக்கு கலவைப் பானம் குடுத்து ஆட வைக்க முயற்சிகள் தீவிரமா நடந்து கொண்டிருந்திச்சுது. இரவு ஆசுபத்திரி: வெளீல பெய்த மழையையும் இடிச்ச இடியையும் தாண்டி அங்க எங்களை விட்டிட்டு party போடிறவங்களைத் திட்டிக்கொண்டிருந்த studentsக்கு ஆசுபத்திரீல இருந்து “கணேசரட்ணம் சேருக்கு“ அம்புலன்ஸ் போகத் தான் ஆசுபத்திரி எல்லாம் தெரிய வந்திச்சுது ஒருக்கா மட்டும் கேட்ட இடி இறங்கினது நவாலி church க்க எண்டு. பள்ளிக்கூடக் காலத்தில ஆனந்தராஜா சேரை சுட்டிட்டாங்களாம் எண்டு கேட்ட உடன எப்பிடி கிரவுண்ட் வெறிச்சோடி ஆசுபத்திரி நிரம்பிச்சுதோ அப்பிடித்தான் இண்டைக்கும் நடந்திச்சுது மருத்துவபீடம் வெறிச்சோடி ஆஸ்பத்திரி நிரம்பிச்சுது. ஆசுபத்திரில இருக்கிற ஓரு அம்புலன்ஸை அனுப்பி என்ன செய்யிறது , எத்தினை வாகனம் தேவை எண்டு நிர்வாகம் யோசிக்க ஓட்டோ, மோட்டசைக்கிள் , land master எண்டு நிண்ட எல்லா வாகனத்திலேம் காயக்காரர் வந்திறங்கிச்சனம். வந்தவனுக்குப் பதிவு ஒண்டும் போடாமல் நேர வாட்டில விட்டிட்டு, பெரிய காயக்காரரை theatre க்கு கொண்டு போகத் தொடங்கிச்சினம். ஒப்பிரேசன் தியட்டருக்க போய்ப் பாத்தா ஒரு trolley இல ரெண்டு மூண்டு பேராக் கிடத்தி இருச்சினம். Theatre வாசலிலியே ஒப்பிரேசனுக்கு எடுக்க முதலே ஒவ்வொரு உயிராப் பிரியத் தொடங்கிச்சுது. வீம்பா அறிக்கை விட்டு நான் டொக்டரா வாறது தான் நோக்கம் எண்டு பாலர் வகுப்பிலயே சொல்லிப் படிச்சு வந்த வெள்ளைக் கோட்டுக் கார senior அக்கா மார் இறந்ததுக்கெல்லாம் உயிர் கொடுக்க முயற்சிச்சு சரிவராதெண்டு அறிஞ்சு விக்கி விக்கி அழுது கொண்டு நிண்டிச்சினம். கடைசியா OPD யில வந்திறங்கின tractor ஆல இறங்கக்கூடிய ஆக்கள் இறங்கி வர, இறங்க ஏலாததுகளை தூக்குவம் எண்டு போய் கையைப்பிடிச்சுத் தூக்கினவனுக்கு கைமட்டும் , காலைப் பிடிச்சவனுக்கு கால் மட்டும் கிடைச்சுது . முழுசா ஒண்டு கூட இருக்கேல்லை . எல்லாத் துண்டையும் இறக்கீட்டு அண்டிரவு முழுக்க கையெது காலெது எண்டு பாத்த jig saw puzzle மாதிரி பொருத்தீட்டு அடையாளம் கண்டு பிடிச்சாக்களை அப்பிடியே கட்டிக் குடுத்து விட்டிச்சினம் death certificate கூட இல்லாமல். அடுத்தநாள் விடியாத பொழுதில் செத்தவை ஆரார் எண்டு பேப்பர்காரான் தான் கண்டுபிடிச்சுப் போட்டிருந்தான். பொறுக்காத பொருந்தாத துண்டுகளின் கணக்கு எத்தினை எண்டு இப்பவரை தெரியாது. இந்த சோகத்தை ஊர் அழுது முடியமுதல் அடுத்தடுத்த ஊரிலேம் இடம் பெயர்வு வர எட்டுச் செலவு எட்டாமலும் , அந்திரட்டி அந்தரிச்சும் போனது . இடம்பெயர்வு 30/101995 “ பல்கலைக் கழகம் அகதி முகாமானது” எண்ட தலைப்போட ஒரு நாள் உதயன் வர அதோட சனம் ஒதுங்கின இடம் எல்லாம் அகதி முகாமாக மாற, அண்டின சனத்துக்கு அண்டைக்கு சமைச்சதை பிரிச்சுக் குடுத்துச் சாப்பிட்டிட்டு அடுத்த வேளை கூட சமைக்கலாமா இல்லையா எண்டு சனம் யோசிச்சுக் கொண்டு இருந்திச்சுது. ஸ்பீக்கர் வைச்சு ரோடு ரோடாப் போய் வெளிக்கிடச் சொன்னதை கேக்காம ரெண்டு நாள் பொறுத்துப் பாப்பம் எண்ட சனம் , துவக்குச்சூட்டுக்கும் அசையாத சனம், குண்டு விழுந்தாலும் வரமாட்டேன் எண்ட சனம் எல்லாம் கடைசீல வீம்பைக் கைவிட, உலக வரலாற்றில் முதன் முதலாக ஒரு இனமே மரதன் ஓடியது. உயிரற்றதை எல்லாம் அப்பிடியே விட்டிட்டு, மனமில்லாமல் அடை வைச்ச முட்டையைக் கூட அரை உயிரோட கொண்டு போச்சுது. படிப்புமில்லை இனி ஓடிப் பயனுமில்லை எண்ட சிலர் மட்டும் திருப்பி அடிப்பம் எண்டு அண்ணை வழி போக வழமை போல மற்றவர் எல்லாம் மந்தைகளாய் பிரிந்தனர். நான் தான் முன்னுக்கு ஓடிறன் எண்டு வந்தவனெல்லாம் நிண்ட இடத்திலேயே ஓடிக் கொண்டிருந்தான் . யாழ்ப்பாணத்தில இருந்த நாவக்குளிப் பாலத்துக்கால சனம் எல்லாம் தென்மராட்சிக்கு, பிரசவிச்சு வெளீல வரக் கஸ்டப்படிற பிள்ளை மாதிரி முக்கி ,மூச்சு முட்டி, இஞ்சி இஞ்சியாய் அசைஞ்சு கொஞ்சம் கொஞ்சமாய் வந்துது. “அறுந்து போவாங்கள் இப்பிடி செய்யிறதுக்கு ஒரேடியா குண்டைப் போட்டு எல்லாரையும் சாக்காட்டி விடலாம்” எண்டு ஒரு கிழவி சொன்னது ஆருக்கு கேட்டிச்சோ தெரியேல்லை அவனடிச்ச செல் நீர்வேலி தரவை வரைக்கும் வந்து விழ குடும்பமா, குறூப் குறூப்பா ஓடத் தொடங்கினவை எல்லாம் , கூட்டத்தில தாங்கள் எங்க நிக்கிறம் எண்டும் தெரியாம தங்களைச் சுத்தி ஆர் நிக்கினம் எண்டும் தெரியாம தேடிறதையும் கை விட்டிட்டு தனித்துப் போக , வாழக்கைச் சங்கிலிகள் கனக்க அறுந்து போய் தனி வளையங்களாகியது. விடை பெறாமலே பிரிஞ்ச கம்பஸ் பிரியாவிடையும் , சொல்ல முடியாமலே போன இடம் பெயர்வுகளும் கன பேரை பிறகு சேர்க்கவே முடியாத பிரிவிடையாப் போனது தான் சோகம். ஒண்டு மட்டும் உண்மை இடம் பெயர முதல் இருந்த யாழப்பாணம் இப்ப வரை இல்லை, இனிமேலும்…… Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்3 points
-
ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி சிறீதரன் கடிதம்!
2 pointsஇதுவே இந்த தமிழ் அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர் ஒருவர் இவ்வாறு ஒரு சிக்கலில் மாட்டியிருந்தால் நிதானமாக யாரைத் தொடர்பு கொண்டால் விஷயம் விரைவில் நடக்கும் என்பதை முறைப்படி விசாரித்து இலங்கை வெளிவிவகார அமைச்சை தொடர்பு கொண்டு தமது அரசியல் செல்வாக்கு, தனிப்பட்ட நட்புகள் ஆகியவற்றை பிரயோகித்து காதும் காதும் வைத்தமாதிரி விஷயத்தை கெட்டித்தனமாக முடித்திருப்பார்கள். பொது விஷயம் என்றால் பொங்குவதும் தங்கள் தனிப்பட்ட விடயம் என்றால் பம்முவதும் குழைந்து குழைந்து பேசி தமது அலுவலை முடிப்பதும் தமிழ் தேசிய அரசியலாளர்களுக்கு கைவந்த கலை.2 points
-
‘தமிழக கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது’- பழநி கோயில் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
‘தமிழக கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது’- பழநி கோயில் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
2 pointsஅப்படியே முஸ்லீம் நாடுகளில் இருந்து வரும் பெற்றோலியத்தை இந்துக்கள் உபயோகிக்க்கூடாது என்றும் கிறிஸ்தவர் கண்டுபிடித்த மின்சாரம் இந்து கோவில்களுக்குள் வரக்கூடாது என்றும் பிரித்தானியர் அறிமுகப்படுத்திய பாராளுமன்ற ஆட்சிமுறை இந்தியாவில் செல்லாது என்றும் ஒரு கோர்ட் உத்தரவைப் போட்டுவிடவேண்டியது தானே.2 points -
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அனைவரினதும் (குடியுரிமை பறிக்கப்பட்டு) நாடுகடத்தப்படவேண்டும்!2 points
-
உலகில் மழையே பெய்யாத கிராமம்!
2 points2 points
- இரண்டாம் பயணம்
2 pointsமீசாலையில் இருந்து நவிண்டிலில் 4 மாதங்கள் இடம்பெயர்ந்திருந்தோம். 96 உலகக்கோப்பை கிரிக்கெட் நாவலர் மடப்பக்கமாக உள்ள ஒரு வீட்டில் தான் சென்று பார்த்தோம்.2 points- இரண்டாம் பயணம்
2 pointsயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கான புகையிரதப் பயணம் சுவாரசியமாக அமைந்திருந்தது. பல விடயங்கள் குறித்து அலசினோம். பாடசாலை நாட்கள், நண்பர்கள், தொழில், பிள்ளைகள் என்று பல விடயங்கள். நானும் அதே புகையிரதத்தில் ஜெயரட்ணத்துடன் கொழும்பு செல்கிறேன் என்று அவரது மனைவிக்கு தெரிந்திருந்தமையினால் எனக்கும் சேர்த்து மதிய உணவு கொடுத்துவிடப்பட்டிருந்தது. சோறு, கோழிக்கறி, முட்டை, உருளைக்கிழங்கு என்று அருமையான வீட்டுச் சாப்பாடு. பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தோம். எனது தாயாரின் தங்கைகளில் ஒருவர் கம்பகவில் வாழ்ந்து வருகிறார். 80 களில் கிழக்கின் சிங்களக் குடியேற்றக்கிராமமான வெலிக்கந்தைக்கு தொழில் நிமித்தம் சென்றவேளை அங்கு அவருடன் பணிபுரிந்த அநுராதபுரத்தைச் சேர்ந்த சிங்களவர் ஒருவரை எனது சித்தி காதலித்து திருமணம் முடித்திருந்தார். வீட்டில் கடுமையான எதிர்ப்பு இருந்தபொழுதிலும் அவர் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. சித்தியின் கணவர் சுதந்திரக் கட்சியின் தீவிர ஆதரவாளர். சிறிமா முதல் சந்திரிக்கா வரை அனைத்து சுதந்திரக் கட்சித் தலைவர்களையும் தீவிரமாக ஆதரித்து வந்தவர். சந்திரிக்கா ஆட்சியில் இருந்தகாலத்தில் அவர் குறித்துப் பேசும்போது மரியாதையாக "மேடம்" என்றே பேசுவார். அவ்வளவு விசுவாசம். 80 களின் பிற்பகுதியிலும் 90 களின் ஆரம்பப்பகுதியிலும் சித்தியும் கணவரும் பதவிய, மணலாறு (வலிஓய), அத்தாவட்டுனுவெவ, சம்பத்நுவர ஆகிய சிங்களக் குடியேற்றங்களில் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வேலை செய்து வந்தார்கள். அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான். சித்தியின் கணவர் தனது மகனை சிங்கள பெளத்தனாக வளர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். எக்காரணம் கொண்டு அவன் தனது தாய்வீட்டாருடன் நெருங்கிப் பழகுவதை அவர் விரும்பவில்லை. மேலும், இனப்பிரச்சினை தொடர்பான சிங்களவர்களின் நிலைப்பாட்டினை அவனுக்குப் புரியவைப்பதிலும் அவர் வெற்றி கண்டிருந்தார். இதில் சித்தியின் சொல்லிற்கு எந்தப் பெறுமதியும் இருக்கவில்லை. அவர்களின் குடும்பம் தொடர்ச்சியாக சிங்களப் பகுதிகளிலேயே வாழ்ந்துவந்ததனால், சித்தியும் நாளடைவில் தன்னை ஒரு சிங்களப் பெண்ணாகவே அடையாளப்படுத்திக்கொண்டார். குடியேற்றக்கிராமங்களில் வாழ்ந்துவந்ததனால் இராணுவத்தினருடனான பழக்கமும், அப்பகுதிகள் மீதான புலிகளின் தாக்குதல்கள் தொடர்பான அனுபவமும் அவர்களுக்கு இருந்தது. நாம் 90 களின் ஆரம்பத்தில் கொழும்பிற்கு வந்ததையடுத்து சித்தியும் கொழும்பு மகாவலி அபிவிருத்திச் சபை அலுவலகத்திற்கு மாற்றலாகி வர சித்தியின் கணவரோ கஹட்டகஸ்டிகிலிய எனும் அநுராதபுரக் கிராமங்களில் ஒன்றில் கிராம சேவகராக பணியாற்றி வரலானார். சித்தியுடன் அவரது மகனும் கொழும்பில் எங்களுடன் தங்கிப் படித்துவந்தான். விடுமுறைகளுக்கு அநுராதபுரம் சென்று வரும்வேளை எனக்கும் சித்தியின் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும். எல்லையோரக் கிராமங்களில் நடக்கும் மோதல்களில் புலிகளைக் கொன்றுவிட்டோம், ஆயுதங்களைக் கைப்பற்றிவிட்டோம் என்று அரசதரப்புச் செய்திகளை அப்படியே உண்மையென்று நம்பி என்னுடன் வந்து வாதாடுவான். வயதில் சிறியவனான அவனிடம் நான் தேவையற்ற விதமாக அரசியல் பேசுவதாக சித்தி என்னைக் கடிந்துகொள்வதுண்டு. "நீங்கள் அவனுக்கு உண்மையைச் சொல்லி வளர்த்திருந்தால் அவன் இப்படிப் பேசமாட்டான்" என்று நான் கூறுவேன். ஆனால், அவரால் அதனைச் செய்யமுடியாது என்பது எனக்குத் தெரியும். ஆனால், காலப்போக்கில் சித்தியின் கணவரின் அதிதீவிர சிங்கள பெளத்த இனவாதம் மெளனித்துப் போனது, குறைந்தது அப்படிக் காட்டிக்கொண்டார். எனது தாயாரின் சகோதரர்கள் அவரது குடும்பத்திற்குப் பெருமளவு பண உதவிகளைச் செய்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் அவரது மருத்துவச் செலவுகளுக்கும் அவர்களே உதவிசெய்துவந்தனர். ஆகவே, தனது கடும்போக்கு அரசியலை எம்முடன் பேசுவதைத் தவிர்க்கத் தொடங்கினார். ஆனால் மகனோ அவரைவிடவும் மிகத்தீவிரமான சிங்களத் தேசியவாதியாக மாறிப்போனான். எனது தாயாரின் சகோதரர்கள் வெளிநாட்டிலிருந்து அவர்களைப் பார்க்கச் செல்லும் சந்தர்ப்பங்களில் மனம் புண்படும் விதமாக அரசியல் பேசியிருக்கிறான். சில முறை அவன் அப்படிப் பேசுவதை அவனது தந்தையே தடுத்து, "யாருடன் பேசுகிறாய் என்பதை மனதில் வைத்துக்கொள்" என்று கூறிய சந்தர்ப்பங்களும் இருந்திருக்கின்றன. அவர்களே இப்போது கம்பகவில் வசித்து வருகிறார்கள். சிட்னியிலிருந்து கிளம்பும்போது சித்தியின் கணவருக்குச் சுகமில்லை என்று கேள்விப்பட்டேன். சரி, இவ்வளவு தூரம் வந்துவிட்டேன், அவரையும் ஒருமுறை பார்த்துவிட்டே வரலாம் என்று எண்ணி ஜெயரட்ணத்திடம் விடைபெற்றுக்கொண்டு கம்பகவை புகையிரதம் அடைந்தபோது இறங்கிக்கொண்டேன். புகையிரத நிலையத்திலிருந்து அரைமணிநேர பஸ் பயணம், பின்னர் ஓட்டோவில் பத்துநிமிடம் என்று பயணித்து சித்தியின் வீட்டை அடைந்தேன். 2018 இல் பார்த்ததுபோல சித்தி இருந்தார். ஆனால் கணவரோ சற்றுச் சுகயீனமுற்று இருப்பது தெரிந்தது. சில வருடங்களுக்கு முன்னர் வீட்டில் ஏற்பட்ட விபத்தொன்றினால் நடக்க அவஸ்த்தைப்பட்டுக்கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் வரவேற்றார். ஊர்ப்புதினங்கள், தொழில், வாழ்க்கை என்று சில விடயங்கள் குறித்துப் பேசினோம். அரசியல் கடுகளவேனும் வெளியில் வரவில்லை. அதை அவரே தவிர்ப்பதுபோலத் தோன்றியது எனக்கு. மகன் திருமணம் முடித்து வேறு இடத்தில் வசித்துவருகிறான் என்று தெரிந்தது. தம்மை அடிக்கடி வந்து பார்ப்பதையே மகன் தவிர்க்கிறான் என்கிற கவலை அவர்கள் இருவரிடத்திலும் இருக்கிறது. விடைபெற்று வரும்போது என்னைக் கட்டியணைத்து வழியனுப்பினார் சித்தியின் கணவர். சிலவேளை தனது மகனை நினைத்து அவர் ஏங்கியிருக்கலாம். தனிப்பட்ட ரீதியில் அவருடன் எனக்கு மனக்கஸ்ட்டம் ஏதுமில்லை. நான் எதிர்ப்பது அவரது தீவிர சிங்கள பெளத்த மனநிலையினைத்தான். 40 வருட திருமணவாழ்வில் சிங்களவரான அவருக்கு தமிழர் தரப்பு நியாயத்தை சித்தியினால் எடுத்துக்கூறமுடியாமைக்காக அவர்மீது சற்று ஏமாற்றும் இற்றைவரை இருந்தே வருகிறது.2 points- புது வரவு
1 point- சிறீதரனுக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம்
சிங்களவர்களோடும் உலகத்தோடும் பேச்சுவார்த்தை நடத்தித் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் உள்ள பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாக சொல்லி தமிழர்களிடம் வாக்கு வாங்கி அரசியல் நடத்தும் தமிழரசுக் கட்சியின் தற்போதைய பிரச்சினையான சிறிதரன் அணி சுமத்திரன் அணிகளுக்கு இடையிலான பிரச்சினையே தீர்க்க முடியாமல் தள்ளாடுகிறது.இவர்களுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்த நோர்வேயைக் கூப்பிடலாமா?ஒரு கட்சியின் உள்ளக விடயங்கள் பொதுவெளியில் விவாதிக்கப்படுவது ஆரோக்கியமானதா?தமிழரசுக் கட்சியைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.1 point- Economic growth is the key to recovery | Raj Rajaratnam speech at Jaffna University
நல்ல ஒரு விடயத்தினை பகிர்கிறார், ஆனால் பார்வையாளர்களிடம் ஆர்வம் இல்லை.1 point- புது வரவு
1 pointஅக்கா… நீங்களும் அடிக்கடி காணாமல் போகின்றீர்கள். 😂 நீங்களும் தொடர்ந்து இணைந்திருங்கள்.🤣1 point- Leap Year: பிப்ரவரி 29 உடன் தொடர்புடைய சுவாரஸ்யமான பாரம்பரியங்கள்
Leap Year வராமல் போனால் என்ன அபாயம் வரும் தெரியுமா? Leap Year Reason Explained1 point- கொஞ்சம் ரசிக்க
1 point1 point- ‘தமிழக கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது’- பழநி கோயில் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
‘தமிழக கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது’- பழநி கோயில் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
1 pointநாகரீக வளர்ச்சியில் நிற்பவர்கள் சுனி முஸ்லிம்கள்தான் கடைக்கோடியில் நிற்கிறார்கள் என்று பார்த்தால் இந்திய இந்துக்கள் அவர்களுடன் போட்டி போடுகின்றனர். 🤨 சைவ சமயத்திற்கும் தடையா? 🥺1 point- இலங்கையில் நீர்த் தேக்கம் ஒன்றில் நீந்திச் செல்லும் யானைகள் - காணொளி
30 ஜனவரி 2024 வடக்கு இலங்கையில் உள்ள நீர்த் தேக்கம் ஒன்றில் யானை கூட்டம் நீந்திச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. இந்த பெரிய விலங்குகள் உண்மையிலேயே சிறப்பாக நீந்தக் கூடியவை. மனிதன் தவிர்த்து, பெரும்பாலான பாலூட்டிகளைப் போலவே, யானைகளும் இயற்கையிலேயே நீச்சல் திறன் கொண்டவை... அளவில் மிகப்பெரியதாக இருந்தாலும் நீரில் மிதப்பதற்கு போதுமான சக்தி யானைகளிடம் உண்டு. கால்களை துடுப்பாகவும் துதிக்கையை சுவாசிப்பதற்காகவும் யானைகள் பயன்படுத்துகின்றன. வலிமையான கால்கள் மற்றும் துதிக்கையை கொண்டிருப்பதால் யானைகளால் வெகு தூரம் வரை நீந்திச் செல்ல முடியும். 2017-ல் கடலில் 17 கிலோ மீட்டர் தொலைவுக்கு யானைகள் நீந்திச் செல்வதை இலங்கை கப்பற்படை கண்டறிந்தது. அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்பட்ட இந்த பலசாலி விலங்குகள் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டன. வெகுநேரம் நீந்திச் சென்று மறுகரையை அடைவதற்கு முன்பு சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக இந்த யானை கூட்டம் தண்ணீரில் விளையாடவும் செய்கிறது. https://www.bbc.com/tamil/articles/cek78dr810lo1 point- செல்லம்மாப்பாட்டி.(சிறுகதை)
1 point- மாலைத்தீவு நாடாளுமன்றில் கைகலப்பு : காணொளி உள்ளே
1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point1 point- அதிசயக்குதிரை
1 point- ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி சிறீதரன் கடிதம்!
1 pointஇப்படி எல்லாம் வித்தியாசம் தெரியாம அரசியல் செய்வது அங்கே உள்ள மக்களை மாயையில் எதிர்பார்ப்புகளுடன் வைத்திருந்து காலத்தை கொண்டு செல்வது இவற்றை தான் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் சிலரும் விரும்புகிறார்கள் .1 point- இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது! - சித்தார்த்தன்
ரண்டுபேரும் தேசத்திற்கு துரோகமிழைத்தவர்களுக்கு வெள்ளை அடிக்கும் போது பார்த்து பக்குவமாய் அடியுங்கோ. பெயின்ற் கீழ ஊத்திடக் கூடாது.1 point- இரண்டாம் பயணம்
1 pointஉங்களுடன் நாங்களும் கூடவே வரும் உணர்வைத் தந்திருக்கின்ரீர்கள்........! பாராட்டுக்கள்......ரஞ்சித் .......! 👍..... கிருபன் உவ்வளவு துல்லியம்...ஆமா...இங்கு சோளங்கன்...(கரண்வாய்தான்)>.கிரிக்கட்டு ரீமுமொன்று இருந்ததில்லே..அது இப்பவும் இருக்கா..1 point- கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
எல்லாமே மோடர் கூடம். கனடாவிற்கு வந்தும் திருந்தாத கூட்டத்தின் அங்கத்தவர் எண்ணிக்கை மிக மிக அதிகம். ☹️ இந்த எரிப்பு செயற்கையாக இருக்குமானால் அது, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள எத்தனிக்கும் அனைவருக்குமான எச்சரிக்கையாகத்தான் இருக்க முடியும். இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை ஒன்று ஆரம்பமானால் அதனால் யாருக்கு நட்டம். ?1 point- இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது! - சித்தார்த்தன்
சுரேஷ், செல்வம் அடைக்கலம், கோவிந்தம், வினோ, சிவசக்தி இன்னும் நிறைய பெயர்கள் எழுதலாம். இவர்கள் எல்லாம் செய்யாத கொலை குற்றங்களா? இன்று எப்படி இருக்கிறார்கள். அதே கட்சியில் இருந்து கொண்டுவெள்ளையும் சொள்ளையுமாக உடுத்திக்கொண்டு அரசியல் செய்கிறோம், மக்கள் சேவை செய்கிறோம் எண்டு திரியவில்லையா ? நான் இவரை ஒரேயடியாக நல்லவர் என்றோ சிறந்தவர் என்றோ கூறவில்லை. இந்த வெள்ளையும் சொள்ளையுமாக திரிகிற அரசியல் (?) வாதிகளுடன் ஒப்பிட்டுதான் கூறி இருந்தேன். இரண்டாய் உடைந்தால் என்ன மூன்றாய் உடைந்தால் என்ன? இவர்கள் கட்சி ஆரம்பித்து மக்கள் எதாவது பலனை கண்டார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா? இனியும் ஏதாவது செய்வார்கள் என்று சொல்ல முடியுமா? என்னை பொறுத்த வரைக்கும் நாம் பின்னோக்கி சென்றோமே ஒழிய முன்னோக்கி செல்லவில்லை.1 point- இரண்டாம் பயணம்
1 pointநன்றி கிருபன். படத்துடன். விளக்கம் அருமை நான் உந்த இடங்களுக்கு வந்தது இல்லை ஒரு சின்ன கிராமத்தில் நிறைய பாடசாலைகள் உண்டு ஆச்சரியமாய் இருக்கிறது கரணவாய்யில் அனைவரும் படித்தவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்1 point- இரண்டாம் பயணம்
1 pointமுன்னர் ஒரு காலத்தில் குஞ்சர்கடைச் சந்தியில் இருந்து கல்லுவம் போகும் வீதியில் “கரணவாய் 1 மைல்” என்று வழிகாட்டும் தூணில் இருந்தது. இது கரணவாய் மகாவித்தியாலயம் அமைந்துள்ள இடத்தையே கரணவாய் என்று குறிக்கும் என நினைக்கின்றேன். ஆனால் கரணவாய் எனும் கிராம நிர்வாக அலகு 750 இலக்க பஸ் போகும் யாழ்- பருத்தித்துறை வீதியின் இரு பக்கமும் வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டிருந்தது. அதன்படி பிரதான வீதியின் வடக்கில் எமது வீடும், எமது தோட்டங்கள் வீதிக்கு தெற்கேயும் இருந்தன. மாரி தொடங்கும் காலத்தில் அதிகாலையில் குழைவண்டில்கள் இந்தவீதியில் எமது தோட்டத்திற்கு அருகில் தரித்து நிற்கும்! 90களில் (என நினைக்கின்றேன்) கரணவாய் நிர்வாகத் தேவைக்காக மத்தி (யாழ்-பருத்தித்துறை வீதிக்கும், வதிரி-உடுப்பிட்டி வீதிக்கும் இடையே), வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு எனப் பிரிக்கப்பட்டது. இதன்படி எமது வீடு அமைந்துள்ள இடம் மத்தியிலும், தோட்டம் தெற்கிலும், நான் படித்த பாலர் பாடசாலை வடக்கிலும், பட்டம் அறுத்துக்கொண்டு போனால் விழும் இடம் மேற்கிலும் உள்ளன! கரணவாய் கிழக்குப் பகுதிக்கு போகவேண்டிய தேவை அநேகமாக இருந்ததில்லை. @ரஞ்சித் இன் அம்மம்மா வீடு நாவலர் மடத்தில் இருந்து தெற்கு நோக்கிப் போகும் பாதையில் உப்புவெளிக்கு வடக்கேயும் , விக்கினேஸ்வராக் கல்லூரிக்கு மேற்கேயும் உள்ள கரணவாய்-கரவெட்டி எல்லையில் உள்ள உச்சில் அம்மன் கோயிலடியில் இருக்கின்றது. நான் ஒரே ஒரு தடவைதான் குருக்கள்பகுதி, மணல்பாதிப் பக்கத்தால் இந்தக் கோயில் அமைந்துள்ள இடத்திற்குப் போயிருக்கின்றேன்.😊1 point- யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா:
1 pointவடமாகாண சபை குறுகி யாழ் மாவட்ட அதிகார சபையாக மாறப்போகுது போல....யாழ்மாவட்ட பண்பாடு.... யாழ் மாவட்ட தமிழர் பண்பாடு என்று சொல்லப்படாது... அதிகாரிகளே இதில் கவனமாக் இருங்கள் நாதஸ்வரம்,மேளம் ...இதெல்லாம் எங்கே? அதென்ன கும்பியாட்டம்...இதெல்லாம் இந்திய துணை தூதரகத்தின் நிகழ்ச்சி நிரல் போல தெரிகிறது ... இஸ்லாமிய நடனம் உண்டு ,கிறிஸ்தவ,பெளத்த பண்பாடுகள் எங்கே?1 point- அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் தொடர்
Good 🥰🙏............. இவர் தான் உண்மையான விளையாட்டு வீரர்...............தேசிய அணிக்கு இப்ப இருக்கும் வெஸ் இண்டீஸ் வீரர்கள் முக்கியம் கொடுப்பதில்லை.........இவர் முற்றிலும் மாரு பட்டவர் போல் தெரிகிறது வாழ்த்துக்கள்....................1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- மீனாச்சிபாட்டி(சிறுகதை)
1 point- கருத்து படங்கள்
1 point1 point- ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி சிறீதரன் கடிதம்!
1 pointஇந்திய, இந்திய அரசாங்கங்களை அணுகுவதற் மூலமே இந்த பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும். இந்திய குடிவரவு சட்டத்தின் கீழ் தான் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்திய குடிவரவு சட்டத்தின்படி முறைப்படியான ஆவணங்கள் அற்றவர்கள் இவ்வாறான சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். இதுவும் ஒருவகையில் சிறை தான். ஶ்ரீதரன் செய்ய வேண்டியது இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து இவர்களுக்கான பயண ஆவணங்களை இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகம் மூலம் இவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்வதே. பயண ஆவணங்களை இலங்கை அரசு வழங்குமானால் இந்திய அரசினால் இவர்களை தடுத்தது வைத்திருக்க முடியாது. இந்த விடயத்தில் எந்த அதிகாரமும் அற்ற தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதுவது வெறும் பயன்ற்ற அரசிலாகத் தான் இருக்க முடியும். ஏதோ தான் முயற்சி எடுத்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்தால் சரி என்று நினைக்கிறார் போல உள்ளது.1 point- இரண்டாம் பயணம்
1 pointகம்பகவிற்கு நான் சென்றபோது எனது அக்காவும் கொழும்பிலிருந்து வந்திருந்தார். சித்தியின் வீட்டில் மதிய உணவை உட்கொண்டுவிட்டு பிற்பகலில் கொழும்பிற்குக் கிளம்பினோம். வத்தளையில் அக்கா இறங்கிக்கொள்ள நான் கொட்டகேனவுக்கு வந்து சேர்ந்தேன். அன்றிரவு ஜெயரட்ணம் கொழும்பில் உள்ள ஹொட்டேல் ஒன்றில் தங்க ஏற்பாடு செய்திருந்தான். மறுநாள், மார்கழி 1 ஆம் திகதி அவனுடைய பிறந்தநாள். கொழும்பில் தன்னுடைய நண்பர் ஒருவரது திருமணத்திற்காக வந்திருந்த அவன் என்னையும் அன்றிரவு தன்னுடன் ஹோட்டலில் தங்குமாறு அழைத்திருந்தான். இரவு 8 மணியளவில் ஹொட்டேலுக்குச் சென்றேன். கிங்ஸ்பெரி என்று அழைக்கப்படும் ஐந்து நட்சத்திர விடுதி அது. 2019 ஈஸ்ட்டர் குண்டுத் தாக்குதலில் தாக்கப்பட்ட விடுதிகளில் ஒன்று. அறையில் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு இரவுணவிற்காக சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றோம். பல்வேறான உணவுவைகள். விரும்பியதைக் கூச்சமின்றி எடுத்துச் சாப்பிடக்கூடிய வசதி. உண்டு கொண்டிருக்கும் போது அங்கு கடமையாற்றும் பலர் நண்பனிடம் வந்து மரியாதையாகப் பேசுவதும் சுகம் விசாரிப்பதும் தெரிந்தது. அடிக்கடி இங்கு வந்துபோகிறான் என்பதும் புரிந்தது. உணவருந்திக்கொண்டே சுற்றுமுற்றும் நோட்டம் விட்டேன். சுமார் 200 அல்லது 250 விருந்தினர்கள் அங்கு உணவருந்திக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் சிங்களவர்கள். ஒரு சில முஸ்லீம் குடும்பங்களும் அங்கிருந்தன. தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் சிலர் குழுவாக வந்திருந்தனர். இரவுச் சாப்பாடு ஒருவருக்கு 7500 இலங்கை ரூபாய்கள். இலங்கையில் சாதாரண தொழில் செய்யும் ஒருவருக்கு ஒருவேளைச் சாப்பாட்டிற்கு இவ்வளவு தொகை செலுத்துவதென்பது நினைத்துப் பார்க்கமுடியாத விடயம். ஆனாலும், பலர் அங்கே இருந்தனர். சுமார் 9:30 அல்லது 10 மணியளவில் மீண்டும் அறைக்கு வந்தோம். பல்கனியில் இருந்தபடி காலிவீதியின் போக்குவரத்தைப் பார்த்துக்கொண்டே பேசினோம். இரவு 12 மணிவரை இருந்து நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி, அறையில் இருந்த கேக்கினை சிறிது வெட்டி உண்டுவிட்டு தூங்கிப்போனேம். முதலாம் திகதி காலை 7 மணிக்கு தூக்கம் கலைந்து எழுந்து, வழமைபோல நண்பனுக்கு முன்னர் காலைக்கடன் கழித்து, நண்பன் ஆயத்தமாகியதும் கீழே இருக்கும் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று முப்பது நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபட்டு, குளித்துவிட்டு காலையுணவிற்கு மறுபடியும் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றோம். நண்பனது பிறந்தநாள் குறித்து அங்கு பணிபுரிபவர்கள் நன்கு அறிந்தே இருந்தார்கள். ஆளாளுக்கு வந்து வாழ்த்துச் சொல்லிச் சென்றார்கள். நாம் காலையுணவை உட்கொண்டு முடித்ததும் தாமே தயாரித்து வைத்திருந்த பிறந்தநாள் கேக்கினை கொண்டுவந்து, சுற்றிநின்று சிலர் வாழ்த்துப்பாட, நண்பன் கேக்கினை வெட்டினான். அங்கும் சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம். சிறிதுநேரம் அறைக்குச் சென்று பேசிவிட்டு அவனிடமிருந்து விடைபெற்று நான் கொட்டகேனவுக்குப் போனேன். மறுநாள்ப் பயணம். கொழும்பில் சில பொருட்களை வாங்கவேண்டி இருந்தமையினால், பிற்பகலில் கொட்டகேனவை சுற்றி வலம் வந்தேன். இரவானதும் நான் தங்கியிருந்த உறவினர்கள் வீட்டில் சிலநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு 10 மணியளவில் குட்டித்தூக்கம் ஒன்றிற்காக முயன்றேன், தோல்வியில் முயற்சி முடிந்தது. அதிகாலை 3 மணிக்கு விமானம். விமான நிலையத்தில் இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னராவது நிற்கவேண்டும் என்பதால் 12 மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பினோம். சுங்கப் பகுதியில் பிரச்சினை ஏதும் இருக்கவில்லை. கூடவந்த சித்தப்பாவிற்கு சைகை காட்டி வழியனுப்பிவைத்து விட்டு தில்லிக்குச் செல்லும் இந்தியன் எயர்லைன் விமான அலுவலகம் நோக்கி நடக்கத் தொடங்கினேன்1 point- இரண்டாம் பயணம்
1 pointயாழ்ப்பாணத்தை மாலை 5 மணியளவில் வந்தடைந்தோம். அங்கிருந்து சித்தி தங்கியிருந்த பாஷையூர் மடத்திற்குத் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினேன். மறுமுனையில் பேசியவர் ஒரு கன்னியாஸ்த்திரி. "நீங்கள் யாருடன் பேசவேண்டும்?" என்று என்னைக் கேட்டார். சித்தியின் பெயரைக் கூறினேன். "சற்றுப் பொறுங்கள், அவரிடம் கேட்டுவிட்டு வருகிறேன்" என்று சென்றுவிட்டார். சுமார் 5 அல்லது 6 நிமிடங்கள் சென்றிருக்கும். மீண்டும் அவர் பேசினார், "தம்பி, அவாவால இப்ப வர ஏலாதாம், ஆறுதலாய் 8 மணிக்குப் பிறகு எடுக்கட்டுமாம்" என்று கூறினார். எனக்குப் புரிந்தது. சித்தியினால் பேசுமளவிற்கு தெம்பில்லை. அடிக்கடி அவரைச் சென்று பார்ப்பது கிட்டத்தட்ட ஒரு தொல்லையாகவே அவருக்கு மாறிப்போயிருந்தது. நேற்று மாலைதான் அவருடன் பேசிவிட்டு வந்தேன். சிலவேளை அதுபோதும் என்று கூட அவர் நினைத்திருக்கலாம். "பரவாயில்லை சிஸ்ட்டர், நான் நாளைக்கு மீண்டும் கொழும்பிற்குச் செல்கிறேன், அவருடன் ஆறுதலாய்த் தொடர்பு கொள்கிறேன் என்று சொல்லிவிடுங்கள்" என்று கூறிவிட்டுத் துண்டித்துக்கொண்டேன். பயணம் செல்லுமுன் அவருடன் பேசமுடியாது போனது சற்று வருத்தத்தைத் தந்தது. ஆனால் இரண்டு நாட்கள் அவருடன் இருந்து பேசிவிட்டேன். மற்றைய இரு சித்திமாரையும் கூட்டிவந்து அவரைக் காண்பித்துவிட்டேன். ஆகவே இப்போதைக்கு இது பரவாயில்லை என்று மனதை ஆறுதற்படுத்திக்கொண்டேன். இரவாவதற்கு இன்னும் சில மணிநேரம் மீதியாய் இருந்தது. யாழ்ப்பாணத்தில் சில பொருட்களை வாங்கவேண்டிய தேவை இருந்ததனால் மைத்துனரையும் கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில் இருக்கும் கடைத்தெருவிற்குச் சென்றேன். பனங்கட்டி, பனங்கற்காரம், கருவாடு என்று சில பொருட்களை வாங்கிக்கொண்டேன். உணவுப்பொருட்களை அவுஸ்த்திரேலியாவிற்குக் கொண்டுவருவதென்றால் அவற்றை நேர்த்தியாக காற்றுப்புகா பைகளில் அடைத்து, உணவுப்பொருளின் விபரம், காலாவதியாகும் திகதி போன்றவற்றையும் பொதிகளில் குறிப்பிடவேண்டும் என்பது கட்டாயம். அதுமட்டுமல்லாமல் உள்ளே கொண்டுவரும் பொருட்கள் பற்றி நீங்கள் தெரியப்படுத்துவதும் அவசியம். இல்லையென்றால் பொருட்களை எங்களுக்கு முன்னிலையிலேயே குப்பைத் தோட்டியில் கொட்டிவிடுவார்கள். தெரியப்படுத்தத் தவறுமிடத்து தண்டப்பணமும் கட்டவேண்டியிருக்கும். ஆகவே கடைக்காரரிடம் நான் கொள்வனவு செய்தவற்றை விபரமிட்டு பொதிசெய்து தருமாறு கேட்டபோது, "தம்பி ஒஸ்ட்ரேலியாவோ?" என்று அவர் கேட்டார். எப்படி தெரிந்துகொண்டீர்கள் என்று நான் கேட்கவும் "அங்கேயிருந்து வாற ஆக்கள் உப்பிடித்தானே கேக்கீனம்?" என்று சொன்னார். பொருட்களை வாங்கிக்கொண்டு மைத்துனரின் வீட்டை அடையும்போது இரவு 8 மணியாகிவிட்டிருந்தது. காலையில் மீண்டும் 5:45 மணிக்கு ரயில் ஏறவேண்டும். ஆகவே சின்னக்குளியலுடன் இரவுணவை முடித்தோம். அருமையான உழுத்தங்களி.பனங்கட்டி போட்டிருக்கலாம், சுவையே தனி. உண்டுவிட்டு மைத்துனருடனும் அவரது துணைவியாருடனும் பேசிக்கொண்டிருந்தேன். பெரும்பாலும் இறுதியுத்தகால அனுபவங்கள், இடைக்கிடையே உறவினர்கள் என்று சில விடயங்கள் பேசப்பட்டது. 11 மணியானதும் மாமியிடமும் விடைபெற்றுக்கொண்டு தூங்கச் சென்றேன். கால 4 மணிக்கு தூக்கம் கலைந்துவிட்டது. வழமைபோல அமைதியாகக் காலைக்கடன்கள், புறப்படுவதற்கான ஆயத்தப்படுத்தல்கள் என்று கிரமமாக ஈடுபடலானேன். நான் தயாராகும் சத்தம் கேட்டிருக்கவேண்டும். மைத்துனரும் துணைவியாரும் எழுதிருந்தார்கள். அங்கே நான் அருந்தும் கடைசிக் கோப்பியுடன் வீட்டில் இருந்தவர்களுக்கு விடைகொடுத்து, மைத்துனரின் மோட்டார் சைக்கிளில் ஏறி யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை வந்தடைந்தேன். ஓரளவிற்குச் சன நெரிசல் காணப்பட்டது. ஆனால், சரியான பெட்டியில் ஏறி ஆசனத்தில் அமர்வது சிரமமாக இருக்கவில்லை. கொண்டுவந்த பொருட்களைக் காட்டிலும் அதிகளவு பொருட்களை கொண்டு செல்கிறேன் என்பது பைகளைத் தூக்கித் தலைக்கு மேலால் உள்ள தட்டுக்களில் வைக்கும்போது புரிந்தது. நண்பன் ஜெயரட்ணமும் அதே புகையிரதத்தில் கொழும்பு செல்வதுபற்றிக் கூறியிருந்தமையினால், பைகளை வைத்துவிட்டு அவரைத் தேடிக் கண்டுபிடித்தேன். எனது பெட்டியில் இன்னொரு மூலையில் அவரது இருக்கை. அவருக்கருகில் இன்னொருவர் அமர்ந்திருந்தார். எனக்கருகில் இருந்த ஆசனம் காலியாகவே இருந்தமையினால், ஜெயரட்ணம் அங்கே வந்து அமர்ந்துகொள்ள நண்பனை மீண்டும் காணக் கிடைத்த கிடைத்த மகிழ்ச்சியில் கொழும்பு நோக்கிய புகையிரதப் பயணத்தை ஆரம்பித்தேன். மிக்க நன்றி அல்வாயான் !!!1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இரண்டாம் பயணம்
1 pointசரி, பயணத்திற்கு வரலாம். வட்டுவாகல்ப் பாலத்தினூடாக முல்லைத்தீவு நோக்கிச் செல்லத் தொடங்கினோம். பாலத்தின் முள்ளிவாய்க்கால் கரையில் பிரபல சிங்கள பெளத்த இனக்கொலையாளியும் போர்க்குற்றவாளியுமான கோத்தாபய ராஜபக்ஷ என்பவனின் பெயரில் அமைக்கப்பட்ட கடற்படை முகாம் காணப்பட்டது. அதன் வாயிலில் ஆக்கிரமிப்பாளர்கள் அகம்பாவத்துடன் நின்றுகொண்டு அப்பாலத்தால் போய்வருவோரை நோட்டம் விட்டபடி இருந்தனர். அப்பகுதியை வாகனத்தில் இருந்தவாறே காணொளி எடுத்துக்கொண்டிருந்த என்னைக் கண்ட சாரதி, "அண்ணை, கமராவை ஒளியுங்கோ, கண்டாங்கள் எண்டால் பிரச்சினை" என்று கூறவும், சடாரென்று கீழே பதித்துக்கொண்டேன். பாலத்தின் மறுகரையில் இன்னொரு சோதனைச் சாவடி. ஆயுதங்களுடன் ஆக்கிரமிப்பாளர்கள் வாகனங்களை மறித்துக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள். எம்மையும் கேட்டார்கள். முல்லைத்தீவிற்குப் போகிறோம், யாழ்ப்பாணத்திலிருந்து வருகிறோம் என்று கூறிய பின்னர் போக விட்டார்கள். அப்படியே முல்லைத்தீவு நகரைச் சுற்றி வந்தோம். ஒருகாலத்தில் தமிழர்களின் இராச்சியமாக, பலப்பிரதேசமாக இருந்த எமது தாயகத்தின் முக்கிய நகரம் ஒன்று சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் அகப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டுக் கிடப்பதைப் பார்த்தபோது ஆற்றாமையும், கோபமும் ஒருங்கே வந்தது. வரும் வழியில் புலிகளின் முகாம் இருந்த பகுதியில் சிங்களப் பேய்கள் கட்டிவைத்திருக்கும் வெற்றிச் சின்னத்தைப் பார்க்க வாகனம் நின்றது. மைத்துனர் படங்களை எடுத்துக்கொண்டு என்னைப் பார்த்து, "அண்ணை, நீங்கள் இதைப் படம் எடுக்கேல்லையோ?" என்று கேட்டார். "ஏன் சுவி, எங்களை அழிச்சு, அடிமைப்படுத்தினதை அவன் சாதனையாகக் கட்டிவைச்சிருக்கிறான், அதை ஏன் நான் பாக்கவேண்டும்?" என்று கேட்டேன். அவர் புரிந்துகொண்டார். "இல்லையண்ணை, வந்ததுக்கு சும்மா எடுத்துவைக்கலாம் எண்டபடியால் கேட்டன்" என்று கூறிச் சமாளித்தார். அப்பக்கமே நான் திரும்பவில்லை. எதற்கு திரும்பவேண்டும், எதற்குப் பார்க்கவேண்டும், எதற்குப் படமெடுக்க வேண்டும்? கொல்லப்பட்டது எனது மக்கள், அழிக்கப்பட்டது எனது போராட்டம், ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது எனது தாயகம், இந்த லட்சணத்தில் எம்மை ஆக்கிரமித்து நிற்பவனின் சாதனையினை எதற்காகக் நான் கொண்டாடவேண்டும்? ஆகவேதான் அந்த மிருகங்களின் அடையாளங்களை எங்கு செல்லினும் நிராகரித்து வருகிறேன். முல்லைத்தீவைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த வழியினால் மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தோம். வட்டுவாகல்ப் பாலத்தைக் கடந்து முள்ளிவாய்க்காலுக்குள் ஏறி அப்படியே சென்ற வழியில் திரும்பி வந்தோம். போகும்போது இருந்த உற்சாகம் எல்லோரையும் அப்போது கைவிட்டிருந்தது. எவரும் அதிகம் பேசவில்லை. இடையிடையே கடந்துசெல்லும் ஊர்கள் குறித்து எனது கேள்விகளும் அதற்கான மைத்துனரின் பதில்களையும் தவிர அதிகமாகப் பேசவில்லை. யாழ்ப்பாண மாவட்டத்திற்குள் நுழைந்தபோது கடும் பசி. எங்காவது வாகனத்தை நிறுத்திச் சாப்பிடலாம் என்று எண்ணியவாறு வீதியின் ஓரத்தில் இருந்த கடைகளைப் பார்த்துக்கொண்டே வந்தோம். சாவகச்சேரிப் பகுதியில் பிரதான வீதியின் வலப்புறத்தில் பழமையான ஆனால் அழகிய வீடொன்றில் வீட்டில் சமைத்த உணவுகளை பரிமாரிவருவதாக முகப்புத்தகத்தில் மைத்துனரின் மகன் பார்த்திருக்கிறார். ஆகவே அங்கு செல்வதாக முடிவெடுத்தோம். அப்பகுதியை அடைந்ததும் வாகனத்தை வீட்டின் முற்றத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றோம். மழை பெய்யத் தொடங்கியிருந்தது. கொத்து ரொட்டி, பிரைட் ரயிஸ் (Fried Rice) என்று ஆளாளுக்கு விரும்பியதை ஓடர் கொடுத்தோம். 15 - 20 நிமிடங்களில் ஆவிபறக்க உணவு கொண்டுவந்து பரிமாறப்பட்டது. சுவையானதாக இருந்தது. ஆனால், யாழ்ப்பாணத்தைக் காட்டிலும் இங்கு விலை அதிகமாக இருப்பதாக அவர் கூறினார். பரவாயில்லை, பசிக்கு வயிராற உண்ண, சுவையான உணவு. சற்று அதிகம் என்றாலும் திருப்தியாக இருந்தது. கட்டணத்தைச் செலுத்துவிட்டி மீண்டும் வாகனத்தில் ஏறிக்கொண்டோம். சாதுவான தூறளில் யாழ்ப்பாணம் நோக்கி வாகனத்தைச் செலுத்தத் தொடங்கினார் சாரதி.1 point- இரண்டாம் பயணம்
1 pointமுள்ளிவாய்க்காலில் இருந்து பரந்தன் முல்லைத்தீவு வீதிக்குச் சமாந்தரமாக கடற்கரையினை அண்மித்ததாக ஒரு சிறிய மண்வீதி செல்கிறது. இவ்வீதியின் இருபக்கத்திலும் இருந்த பற்றைக்காணிகளில் பல்லாயிரம் மக்கள் தமதுயிரைக் காத்துக்கொள்ள தஞ்சம் அடைந்திருந்தார்கள். கடற்கரையினை அடையும் பகுதியுடன் இவ்வீதி முடிவிற்கு வருகிறது. இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் குறித்து சில வலைத்தள பதிவாளர்கள் விலாவாரியாக எடுத்துரைத்திருக்கிறார்கள். அந்நாட்களில் பனைமரங்கள் சிலவிருந்த பகுதிக்குக் கீழாகத் தஞ்சம் அடைந்த மக்களை நோக்கி சிங்கள பெளத்தர்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பலரின் நினைவுகள் ஒரு காணொளி ஒன்றில் பகிரப்பட்டிருந்தன. அந்தப் பனைமரம், அப்பதிவில் குறிப்பிட்டதுபோலவே இன்னமும் அங்கு நிற்கின்றது. நாம் அப்பாதையால் பயணிக்கும்போது இருவர் மோட்டார் சைக்கிளில் எதிர்ப்புறமிருந்து வந்தார்கள். எங்கே போகிறீர்கள் என்று தமிழில் கேட்டார்கள். ஒரு இடமும் இல்லை, இடம்பார்க்க வந்தோம் என்று கூறினோம். இதற்குமேல் போகமுடியாது, பாதை இத்துடன் முடிகிறது, திரும்பிச் செல்லுங்கள் என்று கூறிவிட்டுத் தம் வழியில்ப் போனார்கள். அவர்கள் அந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். சுத்தத் தமிழில் பேசினார்கள். அப்பகுதியைச் சுற்றிச் சுற்றி வாகனத்தில் வலம் வந்தோம். மைத்துனர் தானும் தனது குடும்பமும் இறுதி நாட்களில் அப்பகுதியில் தஞ்சம் அடைந்திருந்த சில பகுதிகளைத் தேடிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு இடத்தையும் பார்த்தபோது, "இங்கதான், இங்கதான்" என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். அவரது மனோநிலை எனக்குப் புரிந்தது. இறுதியாக முள்ளிவாய்க்காலை விட்டு நீங்க மனமின்றி எமது பயணத்தைத் தொடர்ந்தோம். மீண்டும் அதே பரந்தன் முல்லைத்தீவு வீதியில் வாகனம் ஏறியது. குறுகலான வீதி, ஆனாலும் வாகனம் ஓரளவிற்கு ஓடக்கூடிய விதத்தில் பராமரிக்கப்பட்டிருந்தது. இடதுபுறம் முள்ளிவாய்க்கால், வலது புறம் நந்திக்கடல். சற்றுத் தொலைவில் அழகாக வர்ணம் பூசப்பட்டிருந்த வற்றாப்பளை அம்மன் கோயில். இவற்றினைக் கடந்துசெல்லும்போது மைத்துனர் தனது நினைவுகளைப் பகிரத் தொடங்கினார். இராணுவத்தை தாம் நேருக்கு நேராக, ஒரு சில நூறு மீட்டர்கள் தொலைவில் கண்டதாக அவர் கூறினார். தாம் தஞ்சம் அடைந்திருந்த பகுதியில் தன்னுடன் இன்னும் ஆயிரக்கணக்கானோர் வட்டுவாலக்ப் பாலத்தைக் கடந்து முல்லைத்தீவு நோக்கிச் செல்வதற்காக மெதுமெதுவாக நடந்துசெல்லும்போது பதிவாக நிலைஎடுத்துக்கொண்ட இராணுவத்தினர் தாம் இருந்த பகுதிநோக்கி கனரக இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டுக்கொண்டிருந்ததாக அவர் கூறினார். தாம் இனிமேல் இப்பகுதியில் இருக்க முடியாது. மீதமாயிருக்கும் அனைவரையும் உள்ளே வந்தவுடன் கொன்றுவிடுவார்கள், ஆகவே சாவரினும் பரவாயில்லை, பாலத்தின் அடுத்த பக்கத்திற்குப் போய்விட வேண்டும் என்கிற ஒற்றை எண்ணம் மனதில் இருக்க, மக்களோடு மக்களாக கையில் குழந்தைகளையும் சுமந்துகொண்டு பொழுது புலராத அவ்வேளையில் தாம் ஓடத் தொடங்கியதாக அவர் கூறினார். தம்முடன் கூட வந்த பல குடும்பங்களில் சிலர் ஓடிக்கொண்டிருக்கும்போதே சூடுபட்டுக் கீழே விழ, அவர்களை விட்டுவிட்டு அக்குடும்பங்கள் பாலம் நோக்கி ஓடிக்கொண்டிருந்ததை மைத்துனர் பார்த்திருக்கிறார். இராணுவத்தினரின் கடுமையான துப்பாக்கித் தாக்குதலுக்ககு முகம்கொடுத்து இறந்து வீழ்ந்தவர்கள் விழ, மீதியாக ஓடிக்கொண்டிருந்தோர் வட்டுவாகல்ப் பாலத்தின் முள்ளிவாய்க்கால்க் கரையினை அடைந்திருக்கிறார்கள். இப்போது இராணுவத்தை மிகக் கிட்டத்தில் அவர்களால் பார்க்க முடிந்தது. ஆயிரக்கணக்கான இராணுவத்தினர், முள்ளிவாய்க்கால் நோக்கி முன்னேற ஆயத்தமாக நிற்க, வட்டுவாகல்ப் பாலத்தின் இடப்புறமாகவும் வலப்புறமாகவும் ஆயிரக்கணக்கில் பிணங்கள் மிதந்துகொண்டிருப்பதை அப்போதுதான் மைத்துனர் கண்ணணுற்றிருக்கிறார். "இந்தப் பக்கமும், அந்தப்பக்கமும் ஒரே பிணக்குவியல் அண்ணா, பொம்மைகளைக் குப்புறப் போட்டுத் தண்ணிக்குள்ள தள்ளின மாதிரி, சிவந்து போய் ரோஸ் நிறத்தில இருந்தது. எப்ப செத்த சனங்களோ தெரியாது, கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் பிணங்கள்" என்று அவர் கூறினார். யுத்தத்தில் சிதைந்துபோய்க் கிடந்த வட்டுவாகல்ப் பாலத்தின் மீது பெருந்திரளான மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிநோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். பாதையின் அகலம் போதாமையினால் பலர் கழுத்தளவு நீரிற்குள் இறங்கி நடக்கத் தொடங்கினார்கள். இராணுவத்தினரின் பகுதிக்குள் வந்ததும் வெளியான இடமொன்றில் அவர்கள் இருத்திவைக்கப்பட்டார்கள். புலிகளுடன் முரண்பட்டு, இராணுவத்துடன் இணைந்துகொண்ட முன்னாள் போராளிகள் பலரை தான் அங்கு கண்டதாக மைத்துனர் கூறினார். அடிக்கடி ஒலிபெருக்கியில் பேசிய அவர்கள், "இயக்கத்தில ஒரு நாள் வேலை செய்த ஆக்களெண்டாலும் கையை உயர்த்திக்கொண்டு வந்திருங்கோ, விசாரிச்சுப்போட்டு விட்டுவிடுவம். நாங்களாப் பிடிச்சமெண்டால் தெரியும்தானே?" என்று மிரட்டல்கள் அவர்களால் விடுக்கப்பட்டன. இதனையடுத்து மக்களோடு மக்களாக நின்ற பல போராளிகள் கைகளை உயர்த்திக்கொண்டு முன்னால் செல்ல, அவர்களை இராணுவத்தினர் தனியாக அழைத்துச் சென்றதைத் தான் கண்டதாக அவர் கூறினார். மைத்துனர் இயக்கத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவர் அல்ல. வீதிப் புணரமைப்பு வேலைகளில் சம்பளத்திற்காக வேலை பார்த்தவர். ஆகவே, இயக்கத்தில் ஒருநாள் பணிபுரிந்தவர்கள் என்றாலும் முன்னால் வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டபோது அவர் தெரியாததுபோல் இருந்துவிட்டார். அன்று மைத்துனர் அடையாளம் கண்ட போராளிகள் பலர் உயிருடன் இல்லை. ஆனால், அவர்களை இராணுவம் அழைத்துச் சென்றதை அவர் கண்டிருக்கிறார். மைத்துனரைப் போல அக்காலை வேளையில் அப்பகுதியில் தடுத்துவைக்கப்பட்ட பல்லாயிரம் மக்களும் இதனைக் கண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் சாட்சியங்களை எவரும் கேட்கப்போவதில்லை.1 point- ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம்
1 pointமுஸ்லிம் மதவாதம் தான் மதவாத ஈரானின் நம்பிக்கை.1 point- இரண்டாம் பயணம்
1 pointகடற்கரையினை அண்மித்ததாகச் செல்லும் சிறிய வீதிவழியாக எமது வாகனம் பயணத்தைத் தொடர்ந்தது. வலைஞர்மடம் பகுதியிலிருந்து குறுகிய பாதை வழியாக மீண்டும் பரந்தன் முல்லைத்தீவு பாதைக்கு ஏறி சிறிய தூரம் ஓடியபின்னர் இடதுபுறமாகத் திரும்பி முள்ளிவாய்க்காலை அடைந்தோம். நான் பார்க்க வந்தது இந்த இடத்தைத்தான். என் உறவுகள் பல்லாயிரக்கணக்கில் சிங்கள இராணுவ மிருகங்களால் பலியிடப்பட்டதும் இந்த இடத்தில்த்தான். இந்தவிடத்தை காணொளிகளில் பார்க்கும் ஒவ்வொரு கணமும் மிகுந்த வலியை எனக்கு ஏற்படுத்தும். ஆனாலும், நாம் ஏன் சோர்ந்து வீழ்ந்துவிடக்கூடாது என்பதற்கும் இதே முள்ளிவாய்க்காலே எமக்குக் காரணமாகவும் அமைந்திருக்கும். அதைவிடவும் ஒட்டுமொத்த ஈழத்தமிழினத்திற்காகவும் தம்மை அர்ப்பணித்த லட்சக்கணக்கான மக்களினதும் இறுதிவரை தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய மாவீரர்களினதும் ஆன்மாக்கள் இப்பகுதியின் காற்றில் பரவியிருப்பதாக நான் உணர்கிறேன். ஆகவே தான் அந்த ஆன்மாக்களுக்கு எனது இறுதிவணக்கத்தைச் செலுத்த இங்குசெல்லவேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். நாம் வாகனத்தை வீதி முடிவடையும் இடத்தில் நிறுத்திவிட்டு இறங்கிக்கொண்டோம். முன்னிரவு பெய்த மழையால் நிலம் சற்று ஈரமாக இருந்தது. மணல் நிறைந்த மைதானம் போன்று காட்சியளித்த அப்பகுதியின் மத்தியில் சீமேந்தினால் கட்டப்பட்ட சிறிய நினைவுச் சின்னம் தெரிந்தது. அதனை நோக்கி நடக்கத் தொடங்கினோம். சுமார் 200 - 300 மீட்டர்கள் பக்க நீளத்தைக் கொண்ட சதுரவடிவ மைதானமாகக் காட்சியளித்தது அப்பகுதி. ஒருபுறம் பற்றைகளும், பனைமரங்களும் காணப்பட, இன்னொரு புறம் சில வீடுகள் தெரிந்தன. மக்கள் இப்போது அங்கு வாழத் தொடங்கியிருக்கலாம். இனம்புரியாத நிசப்தம் அங்கு நிலவியது. எந்தச் சத்தமும் இன்றி அமைதியாகக் கிடந்தது அந்தப் பகுதி. இற்றைக்கு 15 வருடங்களுக்கு முன் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஓலங்களையும், அழுகுரல்களையும் இடைவிடாது கேட்ட அந்தப் பூமி இப்போது அமைதியாகக் கிடந்தது. மணற்றரையூடாக நினைவுச் சின்னம் நோக்கி நடக்கத் தொடங்கினோம். மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள். நான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு காலடியிலும் எத்தனை உறவுகள் கொல்லப்பட்டிருக்கலாம்? எத்தனை உறவுகள் போராடி மடிந்திருக்கலாம்? எத்தனை பெண்களை சிங்கள மிருகங்கள் கடித்துக் குதறியிருக்கலாம்? சாவரும் வேளையில் அந்த உறவுகள் முகங்கொடுத்த அவலங்கள் எப்படி இருந்திருக்கும் ? என்று பல கேள்விகள் மனதில் எழ முள்ளிவாய்க்கால் பலிப்பீடத்தின் மத்திநோக்கி நடந்துகொண்டிருந்தோம். மைத்துனரின் மகனுக்கும், சாரதியாக வந்த இளைஞருக்கும் இப்பகுதி குறித்த பிரக்ஞை எவ்வளவு தூரத்திற்கு இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், எனக்கும் மைத்துனருக்கும் மனதில் எழுந்த எண்ணங்களைச் சொல்லில் வடித்துவிடமுடியாது. அப்பகுதியில் இறங்கியதுமுதல் மைத்துனர் தனது கையடக்கத் தொலைபேசியில் அப்பகுதியை ஒளிப்படமாக எடுக்கத் தொடங்கினார். அப்பகுதியில் கையில் குழந்தைகளைச் சுமந்துகொண்டு உயிர்காக்க ஓடிக்கொண்டிருந்த பொழுதுகள் அவரது நினைவிற்கு வந்திருக்கலாம். ஆகவே தான் எடுத்துக்கொண்டிருந்த ஒளிப்படத்துடன் பின்னணியில் தனது நினைவுகளையும் அவர் பகிர்ந்துகொண்டிருந்தார். நானும் ஒளிப்படம் எடுக்கத் தொடங்கினேன். இறுதி யுத்த காலத்திலும், அதற்குப் பின்னரான காலத்திலும் முள்ளிவாய்காலில் சிங்கள மிருகங்களால் நிகழ்த்தப்பட்ட மனித நாகரீகத்திற்கு முரணான படுகொலைகளை, அட்டூழியங்களை நான் அறிந்துகொண்ட வகையில் அந்த ஒளிப்படத்தில் பின்னணியில் பதிந்துகொண்டேன். ஆனால், எம்மைப்போல பலர் இந்த பகுதியைப் படமாக்கியிருப்பதுடன் அவலங்களையும் பதிந்திருக்கிறார்கள் என்பதால் எனது ஒளிப்படம் குறித்து நான் இங்கு தனியாகப் பதியவேண்டிய தேவையில்லை என்று நினைக்கிறேன். நீண்டநேரம் அப்பகுதியில் நின்றிருந்தோம். சுற்றிச் சுற்றி நடந்து அப்பகுதியினை அண்மித்துக் காணப்பட்ட இடங்களை, பற்றைகளை, பனைமரக் கூடல்களைப் பார்வையிட்டோம். மேல்மணலைத் தட்டிவிட்டுப் பார்த்தால் உடைந்த மட்பாண்டங்கள், அலுமினிய கோப்பைகள், எவர்சில்வர் பாத்திரங்கள், கிழிந்த உடைகள், செருப்புக்கள் என்று பல பொருட்கள் அப்பகுதியெங்கும் இன்னமும் பரவிக் கிடக்கின்றன. இவை எல்லாமே எமது உறவுகளால் அவர்களின் இறுதிக் கணங்களில் பாவிக்கப்பட்டவை. இவற்றுக்கு உணர்வுகளும், பார்வையும் இருந்திருந்தால் எம்மக்கள் பட்ட துன்பங்களை இன்று சாட்சியாகச் சொல்லியிருக்கும். ஆனால், சாட்சியங்கள் எதுவுமற்ற பாரிய இனக்கொலையொன்றினை சிங்கள பெளத்த தேசம் எம்மீது கட்டவிழ்த்து விட்டது என்பதே உண்மை. இறுதியாக முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தினைச் சிலமுறை சுற்றிவந்துவிட்டு அதன் முன்னால் நின்று படமெடுத்தேன். இது எனக்காக நான் எடுத்துக்கொண்டது. அநியாயமாகக் கொல்லப்பட்ட எனது உறவுகளைப் பார்க்கவந்தேன் என்பதை எனக்கு நானே அவ்வபோது சொல்லிக்கொள்ள எடுத்துகொண்டது, எதனையும் விளம்பரப்படுத்தவல்ல.1 point- அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் தொடர்
ஷமர் ஜோசப்பின் பந்துவீச்சில் அவுஸ்திரேலியாவை அதிரவைத்தது மேற்கிந்தியத் தீவுகள் 28 JAN, 2024 | 02:33 PM (நெவில் அன்தனி) பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (28) நிறைவுபெற்ற மிகவும் பரபரப்பான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் (பகல் இரவு) நடப்பு உலக டெஸ்ட் சம்பயின் அவுஸ்திரேலியாவை 8 ஓட்டங்களால் இளம் வீரர்களைக் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அபார வெற்றிகொண்டது. தனது 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஷமர் ஜோசப் மிகத் துல்லியமாக அவுஸ்திரேலியாவின் 7 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. ஷமர் ஜோசப் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலும் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 - 1 என மேற்கிந்தியத் தீவுகள் சமப்படுத்திக்கொண்டது. அடிலெய்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் அவஸ்திரேலியா 10 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது. 216 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா சகல விக்கெட்களையும் இழந்து 207 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. அவுஸ்திரேலியாவின் வெற்றிக்காக ஸ்டீவன் ஸ்மித் கடுமையாக முயற்சித்த போதிலும் ஏனையவர்களிடம் இருந்து போதுமான பங்களிப்பு கிடைக்கவில்லை. போட்டியின் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தனது 2ஆவது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 62 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா 3ஆவது விக்கெட்டில் ஸ்டீவன் ஸ்மித், கெமரன் க்றீன் ஆகியோர் பகிர்ந்த 71 ஓட்டங்களின் உதவியுடன் மொத்த எண்ணிக்கையை 113 ஓட்டங்களாக உயர்த்திக்கொண்டது. ஆனால், அதன் பின்னர் சீரான இடைவெளியில் வீரர்கள் ஆட்டம் இழக்க கடைசி 7 விக்கெட்கள் 94 ஓட்டங்களுக்கு சரிந்தன. ஷம்ரன் ஜோசப் 68 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தியுடன் அவருக்கு பக்கபலமாக பந்துவீசிய அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்களையும் ஜஸ்டின் க்றீவ்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். வியாழக்கிழமை (25) ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் பெற்ற 311 ஓட்டங்களையே அதிகப்பட்ச மொத்த எண்ணிக்கையாக இருந்தது. எணிக்கை சுருக்கம் மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 311 (ஜொஷுவா டா சில்வா 79, கவெம் ஹொஜ் 71, கெவின் சின்க்ளயா 50, அல்ஸாரி ஜோசப் 32, மிச்செல் 82 க்கு 4 விக்,, ஜொஷ் ஹேஸல்வூட் 38 - 2 விக்., நெதன் லயன் 81 - 2 விக்.) அவுஸ்திரேலியா 1ஆவது இன்: 289 - 9 விக். டிக்ளயார்ட் (உஸ்மான் கவாஜா 75, பெட் கமின்ஸ் 64, அலெக்ஸ் கேரி 65, அல்ஸாரி 84 - 4 விக்., கெமர் ரோச் 47 - 3 விக்.,) மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 193 (கேர்க் மேக்கென்ஸி 41, அலிக் அத்தானேஸ் 35, ஜஸ்டின் க்றீவ்ஸ் 33) அவுஸ்திரேலியா 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 216) சகலரும் ஆட்டம் இழந்து 207 (ஸ்டீவன் ஸ்மித் 91 ஆ.இ., கெமரன் க்றீன் 42, மிச்செல் ஸ்டார்க் 21, ஷமர் ஜோசப் 68 - 7 விக், அல்ஸாரி ஜோசப் 62 - 2 விக்.) ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன்: ஷமர் ஜோசப் https://www.virakesari.lk/article/1749871 point- இரண்டாம் பயணம்
1 pointஅம்பலவன் பொக்கனையிலிருந்து கடற்கரைச் சாலையூடாக வலைஞர் மடம் பகுதிக்கு வந்தோம். அண்மையில் பெய்த கடும் மழையினால் அப்பகுதியெங்கம் வெள்ளம் தேங்கி நின்றிருந்தது. இப்பகுதியில் பெரும்பாலான வீடுகள் இன்னமும் இடிந்த நிலையிலேயே காணப்படுகின்றன. நிலங்கள் மக்களின் பாவனையின்றி இருப்பதால் பாரிய பற்றைக்காடுகளாக வளர்ந்திருக்கின்றன. வெகு சிலரையே இங்கு காண முடிந்தது. இனக்கொலையாளிகளான சிங்களப் பேரினவாத மிருகங்களின் படங்களைத் தாங்கி நிற்கும் போரின் சாட்சிகளான வலைஞர் மடக் கட்டிடங்கள் இப்பாதையினால் பயணித்து வலைஞர் மடம் (முள்ளிவாய்க்காலுக்கு உட்பட்ட இன்னொரு பகுதி) பகுதியை வந்தடைந்தோம். இப்பகுதியில் காணப்பட்ட இரு கட்டடங்கள் இனக்கொலையில் முக்கிய பாத்திரத்தை வகித்திருக்கின்றன. மைத்துனரின் குடும்பமும் இடப்பெயர்வின்போது இப்பாகுதியில் பனைமரங்களுக்குக் கீழ் மறைப்புக்கட்டி வாழ்ந்திருக்கின்றது. இக்கட்டடங்களில் இருந்து சுமார் 50 மீட்டர்கள் தூரத்திலேயே அவரது குடும்பம் தஞ்சம் அடைந்திருந்தது. அக்காலத்தில் இப்பகுதியெங்கும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து காணப்பட்டதாக அவர் சொல்கிறார். இப்பகுதியிலும் ஆயிரக்கணக்கானோர் இராணுவத்தால் பலியிடப்பட்டனர். தற்காலிக வைத்தியசாலைகளாக மாற்றப்பட்டிருந்த இக்கட்டடங்களுக்குள் காயங்களோடு கொண்டுவந்து சேர்க்கப்பட்ட பலர் மருந்தின்றியும், கடுமையான இரத்தப்போக்கினாலும் இறந்துபோயினர். தான் அங்கிருந்த ஓரிரு நாட்களில் மட்டும் இக்கட்டடங்களுக்கு முன்னால் கிடத்திவைக்கப்பட்டிருந்த உடல்களின் எண்ணிக்கை பல நூறுகளைத் தாண்டும் என்று தனது நினைவுகளைப் பகிரும்போது கூறினார். கொல்லப்பட்டவர்களின் பிணங்களிலிருந்து வீசியவாடை அப்பகுதி முழுதையும் ஆக்கிரமித்திருந்தது. கொல்லப்பட்டவர்களைப் பற்றி எவரும் அதிகம் அக்கறை கொண்டிருக்கவில்லை. உயிருடன் மீதமாயிருப்போர் தமதுயிரைக் காத்துக்கொள்வதில் மட்டுமே அக்கறை காட்டினர். மரணம் என்பது மலிந்த பொருளாகிவிட்டிருந்தது என்று அவர் கூறினார்.1 point- ஊடக அடக்குமுறைகள், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து யாழில் போராட்டம்
அவர் ஜனாதிபதியின் ஆள்த் தானே?ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.1 point- செல்லம்மாப்பாட்டி.(சிறுகதை)
1 pointஅருமையான கதை.......எனக்கு என்னுடைய அம்மம்மாவை நினைவூட்டிச்சுது .......! 🙏 நன்றி யாயினி......!1 point- அதிசயக்குதிரை
1 point- சிந்தனைக்கு சில படங்கள்...
1 point- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
1 point- பிரி(யா)விடை -T. கோபிசங்கர்
0 pointsநண்பன் ஆனந்தழகனும் அவனது அம்மாவும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டனர். அன்றிரவு அந்த இடத்தால் குடும்பத்தோடு நடந்து(மானிப்பாய் சேர்ச் என நினைத்திருந்தோம்) ஆனைக்கோட்டை மூத்தவிநாயகர் கோவிலருகில் இருந்த பாடசாலையில் தங்கினோம். அடுத்த பகல் அவ்விடத்திற்கு மிக அருகில் மீண்டும் ஒரு தடவை ஆகாயத்தில் இருந்து குண்டு வீசப்பட்டது, அந்த சத்தத்தில் அப்பிடியே முகத்தடிய நிலத்தில் வீழ்ந்தது நல்ல நினைவு.0 pointsImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இரண்டாம் பயணம்