Leaderboard
-
Kapithan
கருத்துக்கள உறவுகள்8Points9308Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்7Points87990Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்6Points33600Posts -
தனிக்காட்டு ராஜா
கருத்துக்கள உறவுகள்5Points9976Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/09/24 in all areas
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
இன்னும் 10 ஆண்டுகள் அதிகம் அதற்கிடையில் போர் நடந்ததே மறந்து விடும் இளம் சமுதாயம் அவர்களை குறைசொல்ல முடியாது உலக நாடுகளின் தொழிநுட்ப வளர்ச்சியும் ஒரு காரணம் இப்ப யார் இங்கு மிக பிரபலமாகுவது என்ற போட்டி 30000 சின்ன காசு போட்டோக்கு அதைவிட அதிகம் செலவு செய்பவர்கள் ஏராளமான இங்கு உள்ளாரகள் இதில் ஏழைகளை ஒதுக்கி விடுங்கள் நாளுக்கு 2500 கூலிக்காக ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்4 points
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
இந்த இசை நிகழ்ச்சியை பல மில்லியன் செலவு செய்து ஒழுங்கு செய்தது.. இந்திரன் (நடிகை ரம்பாவின் கணவர்). காரணம்.. தான் அமைத்த நொதேர்ன் யுனி க்கு புரமோசனுக்கு. இவர் வெளியில் சொல்வது போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வழங்குவதாக.. ஆனால்.. இவரின் யுனியில் முதுமானிப் பட்டங்களுக்கான கல்வி தான் வழங்கப்படுகிறது தற்போது. அதற்காக அறவிடப்படும் பணம்.. இலங்கையின் இதர அரச சார் பல்கலைக்கழகங்களில் அறவிடப்படும் தொகையிலும் அதிகம்.மேலும் இவரின் யுனியில் கல்வி கற்பிப்பது.. 90% தென்னிலங்கை பேராசிரியர்களும்.. விரிவுரையாளர்களும். ஆக.. கல்வி தமிழர்களின் முதலீடு என்று தெரிந்து.. அதில் முதலிட்டு இலாபம் ஈட்டுவதற்காக நடத்தப்படும் ஒரு நிகழ்வே இது. தனது மனைவிக்கிருந்த செல்வாக்கை.. இதற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார் அவ்வளவே. இதில்.. தமிழர்கள் பெருமைப்பட எதுவும் இல்லை. இசை நிகழ்ச்சிக்கு போனாமா.. ரசிச்சமா என்றுவிட்டுப் போக வேண்டியான். அந்தச் சந்தர்ப்பத்தை பாவிப்பது தவறாகத் தெரியவில்லை. அதற்கு மாறாக நடிகைகளோடு.. கலைஞர்களோடு காசு கொடுத்து படமெடுக்கனும் என்பதை எல்லாம் ஒரு அறிவார்ந்த மக்கள் கூட்டமாக யாழ்ப்பாண கலாரசிகர்கள் செய்ய மாட்டினம் என்று நம்புவோமாக.3 points
-
புதனும் புதிரும்
3 points4 ஸ்வேபிஸ் ஹால் நகரசபைக்கு உட்பட்டதுதான் இல்ஸ்கொபன் கிராமம். இது ஸ்வேபிஸ் ஹால் நகரில் இருந்து 10 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் இன்னுமொரு அமைதியான கிராமம். 87 சதவீதமான விவசாய நிலப்பரப்பைக் கொண்டது, இங்கு 6000க்கு சற்று அதிகமான மக்களே வசிக்கிறார்கள். பெரிய தொடர்மாடிக் குடியிருப்புகள் அதிகம் இல்லாத இந்தக் கிராமத்தில் தனித்தனி வீடுகளிலேயே பெரும்பாலானோர் வசிக்கிறார்கள். ஜனவரி 16, திங்கட்கிழமை அன்று, வீட்டின் அழைப்புமணிச் சத்தம் கேட்டு, முதியவர் (86) வந்து கதவைத் திறந்து பார்த்தால் அங்கே, கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒருவர் தனது கையில் லீடில் (Lidl super market) சுப்பர் மார்க்கெற்றின் வாராந்த பிரசுரங்களுடன் நின்றார். பனி விழும் குளிர்காலம். சூரியன் ஓய்வெடுக்கும் தருணம். கறுப்புக் கண்ணாடியுடன், சிரித்துக் கொண்டே, தன் வீட்டுக்கு முன்னால் நின்ற அந்நபரைக் கண்டதும், முதியவருக்கு ஆச்சரியமாக இருந்தது. “என்ன வேண்டும்?” என்று கேட்டார் அவன் கையில் இருந்த லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களைத் தூக்கிக் காண்பித்தான். “இதெற்கெல்லாம் பெல் அடிக்கத் தேவையில்லை. இந்தத் தபால் பெட்டிக்குள் போட்டு விட்டுப் போ” என்றார். அவன் அவரை நெருங்கி வந்தான். ஏதும் பேசவில்லை அவர் கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்தப் பிரசுரத்தைத் திணித்துவிட்டுப் போனான். “யாராயிருக்கும்? நான் சொன்னது இவனுக்கு விளங்கவில்லையா? வின்ரரிலும் கூலிங்கிளாஸ் போட்டிருக்கிறான். தலையில் ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ?” மனதில் எழுந்த கேள்விகளுடன் முதியவர் வாசல் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே போனார். அடுத்தநாள் மதிய நேரம். முதியவர், உணவை முடித்து விட்டு வரவேற்பறையில் இருந்தார். ஒரு குட்டித் தூக்கத்துக்காக அவரது மனைவி ஷோபாவில் படுத்திருந்தார். வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. வழமையாக இந்த நேரங்களில் யாரும் அழைப்பு மணியை அழுத்துவதில்லையே என்ற கேள்வி எழுந்தாலும், எழுந்து வந்து கதவைத் திறந்தார். அதே கறுப்புக் கண்ணாடி அணிந்த மனிதன். அதே உடுப்பு. நேற்றையைப் போல் இன்றும் அவன் கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் பிசுரங்கள். வீட்டின் வாசலில் நின்றபடியே,“நேற்றுத்தானே தந்துவிட்டுப் போனாய். பிறகு எதுக்கு இப்ப? அதுவும் மத்தியான நேரம்” என்று எரிச்சல் கலந்த குரலில் முதியவர் கேட்டார் முதியவரின் கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை. முதல்நாள் போலவே இன்றும் அவரை நெருங்கி வந்தான். தனது வலது கரத்தால் அவன் விட்ட குத்து, அவர் கண்ணாடிக்குக் கீழ், மூக்கின் மேல் வேகமாக வந்து விழுந்தது. வாசல் படியில் நின்ற முதியவர், நிலைதடுமாறி, வீட்டினுள்ளே விழுந்தார். வீழ்ந்தவர் அதிர்ச்சியில் இருந்து மீள முன்னரே அவரது நெற்றியில் அவனது துப்பாக்கி முனை இருந்தது. வெளியில் கேட்ட சத்தங்கள், முதியவரின் மனைவியின் சிறு தூக்கத்தைக் கலைத்து விட்டிருந்தது. ஷோபாவில் இருந்து எழுந்தவரை, கணவனின் “உதவி, உதவி செய்யுங்கள்” என்ற கூப்பாடு விரைவு படுத்தியது. விழுந்திருந்த முதியவரை அவன் காலால் உதைக்க எத்தனித்தபோது, வாசலோடு ஒட்டியிருந்த அறையின் ஒளி புகாத கண்ணாடிக் கதவினூடாக ஒருவர்( முதியவரின்மனைவி ) ஓடி வருவதை அவதானித்தான். யாரோ வருகிறார்கள் என்ற பதட்டத்தில் அவன் கால் ஒரு அடி பின் வைக்க, அந்தச் சந்தர்ப்பத்தை பயன் படுத்தி, தரையில் விழுந்திருந்த முதியவர் தன் காலால் பலம் கொண்ட மட்டும் கதவைத் தள்ள வாசல் கதவு மூடிக் கொண்டது. அவன் வெளியே. அவர்கள் உள்ளே. தகவல் கிடைத்து பொலிஸார் வந்திருந்தனர். கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தான் என்பதை முதியவர் மறக்காமல் சொன்னார். அவன் என் நெற்றியில் துப்பாக்கியை அழுத்திப் பிடித்த போது “நீ பணம்” என்று சொன்னான், என்பதையும் சொன்னார். பொலிஸாருக்குப் புரிந்து விட்டது. வந்தவன் வெளிநாட்டுக்காரன் மட்டுமல்ல, சமிபத்தில்தான் யேர்மனிக்கு வந்திருக்கிறான் என்பதுவும். இல்ஸ்கொபன் கிராமத்தின் வீதிகள், பூங்காவனம், விளையாட்டு மைதானம் என்று எல்லா இடங்களிலும் பொலிஸார் தேடினார்கள். அவன் அகப்படவில்லை. “கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களுடன் கறுப்புக் கண்ணாடியுடன் யாராவது நடமாடியதைப் பார்த்தீர்களா? “ என விசாரித்துப் பார்த்தார்கள். ஒரு பெண் சொன்னாள். “இன்று ஹோம் ஒபீஸ். மதிய இடைவேளைக்கு கொஞ்சம் காற்றாட வெளியே வந்த போது கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களுடன் ஒருவனைக் கண்டேன். கனிவான முகத்துடன்… “ஹலோ” சொல்லிச் சிரித்தான். நானும் ‘ஹலோ’ சொல்லிவிட்டுப் போனேன்” என்று. ஹேபாப் கடை வைத்திருந்தவர் சொன்னார், “ இங்கு உணவருந்த வருபவர்களை, அவர்கள் வெளியூரா, உள்ளூரா என என்னால் இனம் கண்டு கொள்ள முடியும். அவன் வெளிநாட்டவன்” என்று. ‘வந்தவன் கிராமத்தில் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவன் நிச்சயமாக இல்ஸ்கொபனை விட்டு வெளியே போயிருப்பான்’ என்று பொலிஸருக்குப் புலப்பட்டது. “புதிதாக, சந்தேகப்படும்படியான, வெளியாருடைய வாகனங்களை யாராவது கண்டீர்களா?” என்று கேட்டுப் பார்த்தார்கள். கொஞ்சம் பலன் கிடைத்தது. ஒரு கார். அதன் இலக்கத் தகட்டில் பொதிகளை ஒட்டும் நாடாவால் ( duct tape)ஒட்டிய தடயங்கள் இருந்தன. அந்தக் கார் VW station wagon, Silver நிறம் என அடையாளங்களைத் திரட்டிக் கொண்டார்கள். தேடுதலின் போது, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 250 மீற்றர் தூரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை அண்டிய பகுதியின் புதர்களுக்குள் இருந்து ஒரு சோடி கையுறைகளையும் ஒரு விளையாட்டுத் துப்பாக்கியையும், லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களையும் பொலிஸார் கண்டெடுத்தார்கள். அவனுடைய அங்க அடையாளங்களை முதியவரிடம் பெற்று, ஒரு கற்பனை முகத்தை (Fandom image) வரைய ஏற்பாடு செய்தார்கள்.3 points
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
2 points
- கொஞ்சம் ரசிக்க
2 points2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- அமெரிக்கா: இரானிய இலக்குகள் மீது பதிலடி தாக்குதல் - சிரியா, இராக்கில் என்ன நடக்கிறது?
அந்த தொட்டிலில் தான் நீங்கள் வாழ்கின்றீர்கள். உங்கள் குழந்தைகள் நிம்மதியாக வள்ர்கின்றார்கள்.2 points- தமிழர்களின் பிரச்சினையை விடவும், சீனாவுடனான போட்டிக்கே மேற்குலம் முன்னுரிமை அளிக்கிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதங்கம்
ஆக இலங்கைக்குள் பிரச்சனை நீடிப்பது இந்தியாவுக்கும் மேற்குக்கும் தத்தமது நோக்கத்துக்காக எப்போதும் தேவை. இது தெரிந்தும் நாங்கள் என்ன செய்யப்போகின்றோம்?மீண்டும் மீண்டும் சிங்களவரைக் குற்றம் சாட்டி அவர்களுடன் கொழுவிக்கொண்டே இருந்து இந்தியாவுக்கும் மேற்குக்கும் துருப்புச் சீட்டாக்கவே இருந்து சீரழியப் போகின்றோமா அல்லது சிங்களவர் கொடுப்பதை வாங்கி அவர்களுடன் இணைந்து வாழ்ந்து தமிழரும் சிங்களவரும் ஒற்றுமையாக வாழ முயற்சி எடுக்கப் போகின்றோமா? அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது தமிழப் பழ மொழி தான் என்றாலும் அது இலங்கையர்களாக சிங்கள தமிழ் மக்கள் இருவருக்கும் பொருந்தும்2 points- தமிழர்களின் பிரச்சினையை விடவும், சீனாவுடனான போட்டிக்கே மேற்குலம் முன்னுரிமை அளிக்கிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதங்கம்
மாலைதீவை போல் கைமீறி போகாமல் அனைத்து கைங்கரியங்களையும் இந்தியா செய்யும்.2 points- தமிழர்களின் பிரச்சினையை விடவும், சீனாவுடனான போட்டிக்கே மேற்குலம் முன்னுரிமை அளிக்கிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதங்கம்
மேட்கு நாடுகள் இலங்கையில் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், இந்தியா தன்னை மீறி எதுவும் நடக்க கூடாது என்பதில் அவதானமாக இருக்கிறது. இப்போது இந்தியா முழுமையாக திருகோணமலை பகுதியை கட்டுக்குள் கொண்டுவந்து விட்ட்து. அந்த பகுதியில் தொழில் பேடடைகள், அபிவிருத்தி எல்லாமே அவர்கள் கைகளில். இன்னும் ETCA ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்துப்பட இருக்கிறது. எனவே அமெரிக்கா, மேட்கு நாடுகளை விட இவர்களின் ஆதிக்கம்தான் அதிகரிக்க சந்தர்ப்பம் இருக்கிறது.2 points- தமிழர்களின் பிரச்சினையை விடவும், சீனாவுடனான போட்டிக்கே மேற்குலம் முன்னுரிமை அளிக்கிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதங்கம்
75 ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டை உருவாக்கி அதை தமது நலனுக்கா இதுவரை காலமும் கட்டி காத்து வருகிறது .... கடலில் தீவுகளை உருவாக்கி சீனா வல்லாதிக்க ஆசையை நிறை வேற்ற துடிப்பது போல ....மேற்கு 75 வருடங்களுக்கு முதலே இதை செய்ய தொடங்கி விட்டது ....இந்தியா பலம் பொருந்திய நாடாக வரும் பொழுது அதை கட்டுப்படுத்த அருகில் ஓர் தீவு தேவை என்பது அவர்களின் அன்றைய அரசியல் வியூகம்.... அவர்கள் உருவாககிய நாட்டை சீனா வந்து குத்தகைக்கு எடுக்க இலகுவில் விட மாட்டார்கள்.... அவுஸ்ரேலியாவுக்கு அருகில் பப்புவாகினி என்ற நாட்டிலும் இதே நிலை2 points- புதனும் புதிரும்
1 pointஅழகானது மட்டுமல்ல அமைதியையும் பழமையையும் பேணிக் காக்கும் ஒரு நகரம்தான், யேர்மனியில் இருக்கும் ஸ்வேபிஸ் ஹால் நகரம். இரண்டாம் உலகப் போரில் குண்டுகளுக்குத் தப்பியது மட்டுமல்லாமல் போர் நடந்து கொண்டிருந்த போது யேர்மனியின் பல நகரங்களுக்கு உணவுகளை வழங்கிய பெருமையையும் இந்த நகரம் தனக்குச் சேர்த்துக் கொண்டுள்ளது.. கோடை என்றில்லை குளிர் காலங்களிலும் பல சுற்றுலாப் பயணிகள் இந்த நகரத்துக்கு வந்து போவார்கள். இரவு நேரத்தில் தேவாலயப் படிக்கட்டுகளில் நடக்கும் நாடகங்களைப் பார்ப்பதற்கு என்றே வெளி நகரங்களில் இருந்து பலர் வருவார்கள். எனக்கு, ஸ்வேபிஸ்ஹால் நகரம் பிடித்துப் போனதால்தான், ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக நான் இந்த நகரத்திலேயே வாழ்கிறேன். இது எனது தாயகத்தில் நான் வாழ்ந்ததை விட அதிகமான வருடங்கள். சரி விடயத்துக்கு வருகிறேன். சனிக்கிழமைகளில் வரும் பத்திரிகையில்தான் அதிகமான விளம்பரங்கள் வருகின்றன. வீடு விற்பனைகள், வேலை வாய்ப்புகள், வர்த்தக விளம்பரங்கள், மரண அறிவித்தல்கள் என்று ஏகப்பட்டவை அடங்கி சனிக்கிழமைப் பத்திரிகை ஊதிப் பெருத்துப் போய் இருக்கும். 17.12.2022 அன்று வந்த பத்திரிகையிலும், வழமைபோலவே எல்லா விடயங்களும் இருந்தன. அதில், மரண அறிவித்தல்கள் பகுதியில் எடித் லாங் (86), 14.12.2022, புதன்கிழமை காலமாகிவிட்டதாகவும் அவரது உடல் 19.12.2022 அன்று தகனம் செய்ய இருப்பதாகவும் தகவல் இருந்தது. என்னைப் போலவே, எடித் லாங்கினைத் தெரியாதவர்கள் அந்த அறிவித்தலைக் கடந்து போயிருப்பார்கள். ஆனால் எடித் லாங்கின் மரணம் ஒரு கிழமை கழித்து செய்தி ஒன்றைச் சொல்லக் காத்திருந்தது. எடித் லாங்கின் வீட்டில் இருந்து 315 மீற்றர் தூரத்தில் வசித்த இன்னும் ஒரு மூதாட்டி, எடித் லாங்கின் இறப்புக்குப் பின் ஒரு கிழமை கழித்து 21.12.2022,புதன் கிழமை அன்று இறந்து போனார். ஒரு கிழமை இடைவெளியில் அதுவும் சொல்லி வைத்தது போல் புதன்கிழமையில் அருகருகே வசித்த இரு மூதாட்டிகளுக்கு மரணம் சம்பவித்திருந்தது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. விசாரணைகளின் பின்னர், எடித் லாங்கின் மரணம், அவர் தரையில் தவறி விழுந்ததால் ஏற்பட்டது என அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் மற்றைய மரணம் ஒரு கொலை என்று அறிவிக்கப்பட்டது. நகரில் சந்தைக்கு வந்தவர்கள், வீதிகளில் சந்தித்துக் கொண்டவர்கள் என எல்லோர் வாய்களும் இந்த மரணங்களைப் பற்றிப் பேசிக் கொண்டன. “ஒருவேளை எடித் லாங்கின் மரணமும் கொலையாக இருக்குமோ?” என்ற சந்தேகம் மெதுவாக எழுந்தது. அதில் உண்மையும் இருந்தது. அமைதியாயிருந்த ஸ்வேபிஸ் ஹால் நகரம் மெது மெதுவாக அதை இழந்து கொண்டிருந்தது. அடுத்தடுத்து இரண்டு மரணங்கள். அதில் ஒன்று விபத்து, மற்றது கொலை, அதுவும் இரண்டும் சிறிய இடைவெளிகளில் உள்ள வீடுகளில் நடந்ததுள்ளன. இதையிட்டு ஸ்வேபிஸ் ஹால் நகரம் வெலவெலத்துப் போயிருந்த நேரத்தில், 25.01.2023 அன்று, அட அதுவும் கூட ஒரு புதன் கிழமைதான், நகரத்தில் இருந்து ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த மிஹேல்பாக் என்ற கிராமத்தில் 89 வயதான இன்னுமொரு மூதாட்டி, இறந்து போனார். 'அவரது இறப்பும் கொலைதான்' என விசாரணைகளை முடித்த பொலிஸ் உயர் அதிகாரி அறிவித்தார். யேர்மனியின் ஒரு ஓரமாக அமைதியாக இருந்த ஸ்வேபிஸ் ஹால் நகரம், அரச, தனியார் வானொலிகளில்,தொலைக்காட்சிகளில். இணையத் தளங்களில், சமூக வலைத்தளங்களில்... என்று எல்லாவற்றிலும் அடிபட்டுக் கொண்டிருந்தது. கொலைச் செய்திகளை வாங்கி, வெளி நாடுகளிலும் தங்கள் தங்கள் மொழிகளில் ஊடகங்களில் வெளியிடத் தொடங்கினார்கள். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். ஸ்வேபிஸ் ஹால் நகரத்தில் புதன் வந்தாலே நடுக்கம் வர ஆரம்பித்திருந்தது. வயோதிபம் வந்தாலே நடுக்கம் தானாக வந்து விடும். புதன் வந்தாலே ஸ்வேபிஸ் ஹாலில் முதியவர்கள் இன்னும் நடுங்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த நேரத்தில் இன்னொரு கொலையும் எல்லோர் கவனத்துக்கும் வந்தது. ஏற்கெனவே திகிலாகப் பேசப்பட்ட அந்தக் கொலை 2020 இல் நடந்தது. எல்பிரிடே கூகெர் என்பவர் ஸ்வேபிஸ் ஹால் நகரத்தில் தனிமையில் வசித்து வந்தவர். அவர் பியர் தயாரிக்கும் ஒரு நிறுவனத்துக்குச் சொந்தக்காரி. பெரும் செல்வந்தரான அவர் கொலை செய்யப்பட்டிருந்ததும் ஒரு புதன் கிழமைதான். ‘புதன் கிழமைகள் கொலையாளிக்குப் பிடித்த நாள் போல’ என்று பத்திரிகையும் ஒரு குண்டைத் தூக்கிப் போட எழுபதுக்கு மேலே உள்ளவர்கள், அடுத்த புதன் “ நீயா?, நானா? எதுக்கும் வியாழக்கிழமை இருந்தால் பார்ப்போம்” எனப் பேச ஆரம்பித்தார்கள். “கொரோனா வந்து கனக்க வயது வந்தவர்களை அள்ளிக் கொண்டு போயிட்டுது. இப்ப கொலையாளி ஒருத்தன் வந்திருக்கிறான். பொலிஸ் என்னதான் செய்து கொண்டிருக்கு?” என மக்களிடம் இருந்து முணு முணுப்பு வர ஆரம்பித்தது. “தனி ஒரு கொலையாளியா? அல்லது ஒரு குழுவா? கொலைக்கான காரணம் என்ன? இறந்து போன மூவர்களிடம் பெரியளவில் பணம் இருக்கவில்லை. ஒருவேளை பணம் இருக்கிறது என்று போய், எதுவும் கிடைக்காது ஏமாந்து போனதால், கொள்ளையடிக்க வந்தவன்/ வந்தவர்கள் கொலைகளைச் செய்தானா/செய்தார்களா? உறவுகளுக்குள் சொத்துப் பிரச்சினை ஏதாவது இருந்து அதனால் கொலைகள் நடந்திருக்குமா? வெவ்வேறு காரணங்களுக்காக நடத்தப்பட்ட கொலைகளை ஒன்றாக ஒரு புள்ளியில் இணைத்துப் பார்க்கிறோமா?” என்று பலவிதமான சந்தேகங்களும் ஊகங்களும் எழுந்தன. பொலிஸாரால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. திணறினார்கள்..1 point- யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
1 point- இரும்புத் தளபதியைப் பதவி நீக்கிய உக்ரேன் ஜனாதிபதி!
நடிகருக்கு இவரின் பிரபல்யம் குடைச்சலைக் கொடுத்திருக்கும் 🤣1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- அமெரிக்கா: இரானிய இலக்குகள் மீது பதிலடி தாக்குதல் - சிரியா, இராக்கில் என்ன நடக்கிறது?
ஏற்றுக்கொள்கிறேன். முகமறியாத ஒருவருடைய குறியீட்டுப் பெயரைக் குறிப்பிடுவதால் ஒருவர் பெரியவர் /சிறியவர் ஆகலாம் என்பது கேள்விக்குறியே. 100% உண்மை.1 point- அமெரிக்கா: இரானிய இலக்குகள் மீது பதிலடி தாக்குதல் - சிரியா, இராக்கில் என்ன நடக்கிறது?
இந்த மேற்கின் சதியால்தான் நாம் சொந்த ஊரைவிட்டு இடம் பெயர வேண்டியிருந்த து, இல்லாவிட்டில் சொந்த மண்ணில் மானத்துடன் வாழ்ந்திருப்போம் இங்கு வந்து இப்படியொரு கேள்விக்கு ஆளாகியிருக்கமாட்டோம் பிரச்சனைகளை சமாளித்து ஈழத்தில் வாழ்பவர்கள்👍🙏1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- அமெரிக்கா: இரானிய இலக்குகள் மீது பதிலடி தாக்குதல் - சிரியா, இராக்கில் என்ன நடக்கிறது?
அதுவும் உண்மைதான். அதற்காக பிழையான ஒன்றைச் சரியென்று கூற முடியாது அல்லவா? தனது நலனுக்காக அரசுகள் எதையும் செய்ய ஆயத்தமாகவே உள்ள.1 point- அமெரிக்கா: இரானிய இலக்குகள் மீது பதிலடி தாக்குதல் - சிரியா, இராக்கில் என்ன நடக்கிறது?
பொதுவாக நாடுகள் தமது சுயநலனின் அடிப்படையில் தமது படைகளை வேறு நாடுகளில் நிலைநிறுத்துகிறது, அதற்கு இந்தியா கூட விதிவிலக்கில்லை, தற்ப்போது அமெரிக்கபடைகள் உல்கெங்கிலும் ஏறத்தாழ 800 நிலைகள் அளவில் கொண்டுள்ளது என கருதுகிறேன். அமெரிக்க நிலைகள் இவ்வாறு உலகளவில் பரந்திருப்பது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு பெரிதும் உதவுகிறது, உதாரணமாக இரண்டாம் உலகப்போரின் போது தனது பிரத்தான் வழ்ங்கல் பாதையில் முள்ளாக இருந்த முத்து துறைமுகத்தினை ஜப்பான் அழித்தது. தனிய தேசிய பாதுகாப்பு மட்டுமன்றி பொருளாதார நலனடிப்படையிலும் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன, ஆனால் அந்த படையினருக்கான செலவினை அந்தந்த நாடுகளே பொறுப்பேற்கவேண்டும் அதே நேரம் அந்த தொகை குறித்த நாடுகளின் படை செலவினை விட அதிகமாகும் என நாடுகள் குறைபட்டாலும் அந்த தொகையினை செலுத்த முன்வருவதன் நோக்கம் குறித்த நாட்டின் எதிரிகள் தாக்கும்போது அமெரிக்க படையினன் ஒருவர் பாதிக்கப்பட்டாலே அமெரிக்கா ஒரு முழு அளவிலான போர் பிரகடந்த்துடன் எதிரி நாட்டுடன் மோதும் என்ற எதிர்பார்ப்பு. இந்த படைகள் குறித்த நாட்டில் பல சட்ட ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபடுகின்ற நிலையில் உள்ளூர் மக்களின் எதிர்ப்புகளினிடையே படைகள் தங்கியுள்ளன, கடந்த காலத்தில் போதைவஸ்து போன்ற சட்ட விரோத நடவடிக்கைகள் ஊடாக வரும் பணத்தில் அமெரிக்க உளவு நிறுவனம் நாடுகளில் குழப்பத்தினை ஏற்படுத்தும் குழுக்களை போசித்தது. நாடுகளின் ஜனநாயக அரசுகள் கூட கவிழ்க்கப்பட்டு, தற்போதுள்ள சர்வாதிகார சூழ்நிலைக்கு வித்திட்டு தனது நலஙளை பின்னர் அவர்களுடனும் மோதும் நிலையில் அமெரிக்கா இருந்து வருகிறது, இதனை குறையாக கூறவில்லை யதார்த்தினை கூறுகிறேன்.1 point- Economic growth is the key to recovery | Raj Rajaratnam speech at Jaffna University
தகவல்களுக்கு நன்றி கப்பித்தான், ஆரம்பத்தில் பார்த்த காணொளியினுடன் ஒப்பிடும் போது இது ஒரு சாதாரண விடயமாக இருந்தது, மேலதிகமாக உங்கள் காணொளியினை பார்க்கும்போது இது ஒரு மிக பெரிய ஒரு முக்கியமான நிகழ்வாக தெரிகிறது, இது தொடர்பான மேலதிக காணொளிகள் இருந்தால் இணைக்கமுடியுமா? குறிப்பாக தமிழகத்திலிருந்து வந்திருந்த அந்த தொழில் முனைவரின் reverse acquisition நிகழ்வினை பார்க்க ஆர்வமாக உள்ளது. அது மட்டுமல்லாமல் பல முக்கியமான விடயங்கள் இந்த நிகழ்வில் பகிரப்பட்டுள்ளதனை உணர முடிகிறது, இந்த நிகழ்வினை முழுமையாக ஆவணப்படுத்தி அனைத்து மக்களிடமும் எடுத்து சென்றிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.1 point- கனடாவில் இருந்து வந்து காதை பறி கொடுத்தார்
ச அப்படியில்லை சும்மா பகிடிக்கு இனியும் யாரையும் சந்திக்கும் எண்ணம் இல்லை என்றே நினைக்கிறன். நன்றி🙏🙏 நல்லபடியாக அமையட்டும் உங்கள் பயணம் வாய்ப்பில்ல வாய்ப்பில்ல இந்த கூத்தாடிகளோடு காவடி ஆட அண்ண1 point- அமெரிக்கா: இரானிய இலக்குகள் மீது பதிலடி தாக்குதல் - சிரியா, இராக்கில் என்ன நடக்கிறது?
பயங்கரவாதத்தின் தொட்டில் மேற்குலகுதானே 😀 வெறுப்பது என்றால் உங்கள் கோபம் மேற்கை நோக்கியே இருக்க வேண்டும். 😉1 point- யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
இலங்கைத் தமிழர்கள்( வெளிநாட்டுக்காரர் உட்பட )சீரழிந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. இனிமேலும் மீட்க முடியாது என்றே நினைக்கின்றேன். பலர் திடீர் பணக்காரர் ஆக எதையும் செய்ய தயார், நல்ல கல்வியில், கடும் உழைப்பில் இனியும் அக்கறை இல்லை, பாடசாலை ஆசிரியர்களோ சமூக வலைத்தள அடிமைகள், எந்த வேலையையும் உருப்படியாக செய்யும் திறமை அற்ற தொழிலார்கள், இளசுகள் என்ற போர்வையில் நாச வேலைகளைச் செய்யும் வப்புகள்,கழுசறைகள் ( பெண் பிள்ளைகளும் இதில் சரி சமனாக அடக்கம் ) இப்படி இலங்கையில் உள்ளவர்களை இங்கிருந்து படங்காட்டி கெடுத்ததில் புலம் பெயர்ந்த தமிழர்க்கு பெரும் பங்கு உண்டு. அங்கோன்றும் இங்கொன்றுமாக ஒரு சில நல்ல குடும்பங்கள் இந்த சூழலுக்குள் சிக்கி என்ன செய்வது என்று தெரியாமல் மனதுக்குள் அழுது புலம்புகின்றன. இங்கே உள்ள ஓரளவு நல்ல மனிதர்களோ வெளியே தம்மை தமிழர் என்று இனம் காட்டிக் கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றன1 point- தமிழர்களின் பிரச்சினையை விடவும், சீனாவுடனான போட்டிக்கே மேற்குலம் முன்னுரிமை அளிக்கிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதங்கம்
நீங்கள் கூறுவது உண்மை. ஆனாலும் இலங்கையில் தனது செல்வாக்கை முன்நிலைப்படுத்த புலம்பெயர் தமிழரூடாகத் தொடர்ச்சியாக மேற்கு முயற்சிக்கும். எமது தமிழ்த் தேசிய உணர்வு நிலத்தில் தொடர்ச்சியாகப் பேணப்பட வேண்டுமாயின் நிலத்திலுள்ளவர்களது பொருளாதார, சமூக, அரசியல் கட்டமைப்புக்கள் பலப்படுத்தப்பட வேண்டும்.1 point- தமிழர்களின் பிரச்சினையை விடவும், சீனாவுடனான போட்டிக்கே மேற்குலம் முன்னுரிமை அளிக்கிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதங்கம்
நாங்கள் இந்தியாவே ஒன்றும் செய்யப்போவதில்லை என்கிறோம் நீங்கள் ஒரேயடியாக மேற்க்கிற்கே போய்விட்டீர்கள்.பேசாமல் சிங்களவனுடன் சேர்ந்து அவன் தருவதை வாங்கிக்கொண்டு இருந்தால் கோவணமாவது மிஞ்சும்.அதைவிட்டு இந்தியாவுக்கு வால்பிடிச்சுக்கொண்டு திரிந்தால் சோத்துக்கே சிங்கியடிக்கும் நிலைதான் வரும். இப்பவே முக்கால்வாசி அந்த நிலை தான். நாட்டில் முக்கால்வாசி மூளைசாலிகள் வெளியேறிவிட்டார்கள், ஏற்கனவே மூன்றாம் பெரும்பாண்மை இனி இந்தியா பிடித்துத்தரும் தமிழீழத்தில் 60 தாண்டிய கிழடு கட்டைகள் தான் சீவிக்கப்போயினம்1 point- மிரட்ட வரும் EL-NINO
1 pointகடந்த வாரம் ஐரோப்பிய நாடுகளில் விவசாயிகளால் பெருமளவில் எடுக்கப்பட்ட போராட்டத்தின் ஒரு விளக்கமாக இந்த காணொளியைப் பார்க்கலாம்.1 point- அமெரிக்கா: இரானிய இலக்குகள் மீது பதிலடி தாக்குதல் - சிரியா, இராக்கில் என்ன நடக்கிறது?
அமெரிக்காவை அல்லது பிரிட்டனை ஒருக்கால் ஈரானுக்குள் இறங்கி அடிக்க பார்க்க ஆசையாக உள்ளது. வாழ்நாளில் நடக்காது போலுள்ளது. 🙃 அது சரி இஸ்ரேலுக்குள் கார் குண்டு தாக்குதல் நடாத்தியது யார்? (ஒரு மாதம் இருக்கும் என நினைக்கிறேன்). மேற்கு ஊடகங்கள் பம்மியது நினைவில் உள்ளது.🙂1 point- உங்க கிட்னியை புதுசா வைத்திருக்க இந்த பதிவை படிங்க..!
urinary tract infection,bladder stone... etc...எதற்கும் குடும்ப வைத்தியரோடு ஆலோசித்துப் பாருங்கள்.ஏன் எனில் வயது வந்தவர்களுக்கு இதர நோய்களின் அறிகுறிகள் பற்றி வைத்தியர்கள் ஆரம்பத்தில் சொல்ல மாட்டார்கள்...ஓரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் இரண்டு 2,3தடவைகள் வைத்தியசாலைக்கு அலைந்த பின் தான் உமக்கு இது பற்றித் தெரியாதா என்று கேட்பார்கள்...? சிலவேகைளில் கூடப் போற பாவத்திற்கு அதாவது குடும்ப உறுப்பினர்கள். பேச்சும் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.1 point- சித்த மருத்துவர் சிவராமன் வீட்டு கல்யாண விருந்து குறித்து நம்மோடு பகிர்ந்து கொள்ளும் சிவராமன் & மாதம்பட்டி ரங்கராஜ் பேட்டி
Wow wow wow இணைப்புக்கு நன்றி ஏராளன்.1 point- யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
இந்திரன். சொல்லுகிறார். போர முடிச்சாது என்று சினிமாகாரர் வந்தது சந்தோசமாம் இந்த சினிமாகாரரகள் இந்தியார்கள் அவர்களுக்கு மேள தாளத்துடன் பெரிய வரவேற்பு கொடுப்போம் ஆனால் இந்தியாவை திட்டி தீர்ப்போம். ஏனென்றால் இந்த சினிமாகாரருக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் ஒரு சம்பந்தமில்லை ஆமா இவர்கள் 2009 எங்கே போனார்கள்?? இந்தியாவில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி உழைத்து கொண்டிருந்தார்கள் வை.கோ வை நெடுமாறனை திட்டுவோம். ஏன்?? அவர்கள் விடுதலை அமைப்பு வளர எந்தவொரு எதிர்பார்ப்புகள் இன்றி உழைத்தவார்கள் இந்தியாவுடன் தமிழ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினால் தீட்டி கொட்டுவோம் ஆனால் இந்தியா சினிமாகாரரை நாங்கள் அழைக்கலாம். நாங்கள் தலைவர் வழியில் போரடுகிறோம். அடுத்த பாட்டுக் கச்சேரி முள்ளிவாய்க்காலில் வைத்தாலும் ஆச்சர்யமில்லை ஏனெனில் முள்ளிவாய்க்காலுக்கும் சினிமா கச்சேரிக்கும் என்ன சம்பந்தம் சம்பந்தமில்லை அல்லவா?? குறிப்பு,...இலங்கை போருக்கு பட்ட கடனிலிருந்து. போர் முடிந்து 15 ஆண்டுகள் ஆகியும் இன்னும் மீளவே இல்லை ஆனால் புலிகள் தரப்பு 2009 இல் மீண்டு விட்டார்கள் யார் மீட்டது ?? விடுதலை உணர்வு உள்ள தமிழர்கள் 🙏1 point- ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்
அங்கே சாந்தனை இலங்கை கொண்டுவர சாந்தனின் அம்மா உறவினர்கள் பல பிரமுகர்களை பிடித்து முயற்சித்துகொண்டிருக்க இவர்கள்...1 point- யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
1 point- யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்கள் ஏதோ யோகியம் எண்டமாதிரி நாங்கள் நினைக்கிறம் தமன்னா ரஜனிகாந்தின் படத்தில அரையும் குறையுமா நிண்டு காவாலா எனும் பாட்டுக்கு ஆடுறதை த்ப்லைக்காட்சியில் போட்டு தங்கள் பிள்ளைகளை அதே மாதிரி ஆடச்சொல்லி (நண்டு சிண்டுகளுக்கு) பழகிப் பின்னர் பிறந்த நாள் விழா சாமத்திய வீடுகளில மேடையில் ஏத்தி ஆடுறதும் நாங்கள் சொல்லும் குற்றத்தில சேருமா இல்லையா? நான் அறிய ஒரு தாயும் மகளும் யாழ்ப்பாணத்தில பவுடர் வித்துக்கொண்டு திரிகினம் அவர்களுக்குப் பஞ்சம் என்றோ அல்லது குடும்பத்தில் ஆண்தலைமை போரில் இறந்தோ காணமல் போனதோ இல்லை ஆனால் மேலதிக சொகுசு தேவைப்படுகுது மகளது கைப்பையில் அவர் தனது தொலைபேசி இலக்கத்தை எழுதி வைத்திருக்கிறார், அவருக்கு போதைப்பொருள் கொடுத்து விற்கச்சொன்னவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். அவரை தாயும் மகளும் பொஸ் எனத்தான் அழைக்கிறார்கள் இகைவிட தமண்ணா வந்ததும் கரிகரன் வந்ததும் மோசமான செயலா? இலங்கை அரசாங்கம் பாடசாலைப் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் எனும் திட்டத்தைக் கொண்டுவந்ததே வருமானம் குறைவான குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களில் நன்றாகப் படிக்கக்கூடியவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவுகளை வழங்கி அவர்களது கல்விக்கு ஊக்கமளிப்பதற்காகவே. ஆனால் இப்போது என்ன நடந்தது இலங்கையில் முதல் நிலைப் பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான போட்டிப்பரிட்சையாக மாற்றியமைக்து ஏழை மாணவர்களுடன் வசதிபடைத்த மாணவர்களைப் போட்டி போடவைத்து தங்களது பிள்ளைகளை சிறந்த மாலைநேர ரியூசன் கல்வி நிறுவனக்களில் சேர்த்து மதிப்பெண்கள் பெறப்பண்ணி ஏழை மாணவர்களது சந்தர்ப்பங்களைத் த்ட்டிப்பறிக்கிறார்களே அதை விட இது மோசமான செயலா? இல்லாவிடில் மாவட்டம்தோறும் முதல்நிலைப் பாடசாலைகள் தங்களது மாணவர் சேர்க்கையில் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் எடுத்து வரும் மாணவர்களுக்கு அனுமதியில் முதலிடம் கொடுத்து அனைத்து மாணவர்களையும் ஏழை மாணவர்களுடன் போட்டிக்கு முகம்கொடுக்கப்பண்ணும் முறையைவிட இது மோசமான செயலா? சரி இல்லாதுவிட்டால் அரசாங்கம் பட்டதாரிகளையும் உயர்தரப் பரீட்சையில் நல்லதராதரம் எடுத்தவர்களையும் தெரிவுசெய்து அவர்களுக்கு கற்றல் கற்பித்தல் சம்பந்தமான சிறப்புப் பயிற்சி கொடுத்து ஆசிரியர்களாக்கி வருடத்தில் பாதி நாளே பாடசாலை நாளாக்கி ஆனால் வருடம் முழுமைக்கும் மாதாமாதம் சம்பளம் கொடுத்து வருடத்துக்கு இரண்டுதடவை ரெயில்வே வாரண்ட் கொடுத்து பிள்ளைகளைப் ப்டிப்பியுங்கோ எனச்சொன்னால் அப்படி அவர்கள் தங்களது மாணவர்களுக்கு கற்பித்திருந்தால் தமிழர் பகுதி ஈறாக இலங்கைத் தீவு எங்கும் ஏன் ரியூட்டரிக்கொட்டில்கள் மானவர்களால் நிறைந்திருக்கு அங்கு படிப்பிக்கும் ஆசிரியர்கள் என்ன தேவ லோகத்திலிருந்தா வந்தவர்கள்? உங்களுக்குத் தெரியுமா எத்தனை பாடசாலை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வகுப்புகளின் மாணவர்களுக்க்ச் சரியாகப் படிப்பிக்காது அவர்களே ரியுட்டரிக் கொடில்களில் மாங்கு மாங்கு எனப் படிப்பித்து சித்தியடையும் மாணவர்களது படங்களை பேனர்களில் அச்சடித்து தங்கள் மாணவர்கள் சித்தி அடைந்துள்ளார்கள் என விளம்பரப்படுத்துகிறார்கள். அவர்களிடம் வினவுங்கள் அவர்கள் படிப்பிக்கும் பாடசாலையில் அவரது வகுப்பில் அதே பாத்தில் எத்தனைபேர் சித்தியடைந்தார்கள் என பூச்சியம் இவைகளைவிட தமண்ணா வருவது தவறா?1 point- அமெரிக்கா: இரானிய இலக்குகள் மீது பதிலடி தாக்குதல் - சிரியா, இராக்கில் என்ன நடக்கிறது?
ஈரான் வெறும் வாய் சவடால் அடிக்காத தான் சரி. இஸ்ரேல் காசா நோக்கி படையெடுத்தால் தாம் சும்மா இருக்கப் போவதில்லை என்று முதலில் சூளுரைத்தனர். இஸ்ரேல் படையெடுப்புத் தொடங்கி மூன்று மாதம் முடியப் போகுது, ஆனால் ஈரான் பம்மிக் கொண்ஂடு இருக்கின்றது. அதே போல், சிரியா / ஈராக்கில் உள்ள தன் சார்பு அமைப்புகள் மீது தாக்குதல் தொடுத்தால், சும்மா இருக்க மாட்டேன் என்றது. ஆனால் அமெரிக்காவும் பிரித்தானியாவும் , "இந்தா அடிக்கப் போறம்" என்று கால அவகாசம் கொடுத்து தாக்குதல் செய்யும் போதும், அடியை வாங்கிக் கொண்டு இருக்கின்றது. பொருளாதாரத்தில் நலிவுற்று இருக்கும் பாகிஸ்தான் மீது மட்டும் தான் ஒரு சிறு தாக்குதலைச் செய்தது. தன் நாட்டில் உள்ள மக்களில், முக்கியமாக பெண்களின் அடிப்படை உரிமைகள் எல்லாவற்றையும் இராணுவக் கரம் கொண்டு நசுக்கி, மீறும் பெண்களை அடித்தே கொல்லும் ஈரானிய அரசு, மற்ற விடயங்களில் வெறும் வாய்சவடால்களுடன் காலத்தைக் கடத்துகின்றது.1 point- தமிழர்களின் பிரச்சினையை விடவும், சீனாவுடனான போட்டிக்கே மேற்குலம் முன்னுரிமை அளிக்கிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதங்கம்
இந்து சமுத்திரத்தில் சீனாவின் பிரசன்னத்தைக் கட்டுப்படுத்துவதற்கு US+West எடுத்திருக்கும் போடுதடி India. ஆகவே இலங்கையில் இந்தியாவின் பிரசன்னத்தை ஓரளவுக்கேனும் மேற்கு அனுமதித்துத்தான் ஆக வேண்டும். அதனால் இலங்கை இனப்பிரச்சனையில் தற்போதைய நிலையில் இந்தியாவை மீறி எதனையும் மேற்கு செய்யப்போவதில்லை. தனது தேவைக்கு பாவிக்க மேற்குலகு எம்மை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க விரும்பும்.1 point- Economic growth is the key to recovery | Raj Rajaratnam speech at Jaffna University
இந்தக் காணெளியில் offshore வாய்ப்புகளைப் பற்றியும் கூறுகிறார்கள். உண்மையில் நாங்கள் வட்டத்தை விட்டு யோசிக்காதமையால் பல offshore வாய்ப்புகளை விட்டுவிட்டோம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஏனெனில் கடந்த சில மாதங்களாக எனது வேலையில் offshore சென்ற பிரிவில் ஒரு பகுதியினருக்கு பயிற்சி அளித்து வருகிறேன், அவர்களுடன் கதைக்கும் பொழுது எனக்குத் தோன்றுவது எங்களால் ஏன் இந்தமாதிரி offshore வேலை ஒப்பந்தங்களை எடுக்கமுடியாமல் போய்விட்டது என்று. நாட்டுப் பிரச்சனை ஒரு காரணமாக இருந்திருந்தாலும் கூட நாங்கள் எப்பொழுதும் ஒரு சில தொழில்களைத் தவிர மற்றொன்றையும் யோசிப்பதில்லை என்பதும் பல offshore வாயப்புகளை விட காரணமாக இருந்திருக்கும். இந்த கருத்தரங்கில் கூறியது போல குறுகியநோக்கில் அல்லது குறுகியவட்டத்திற்குள் மட்டுமே யோசிக்காமல் எம்மைச்சுற்றியுள்ள வளங்கள்/தேவைகளுக்கு ஏற்ப எமது முயற்சிகளை தொடங்கவேண்டும். காணெளியில் சில நல்ல முயற்சிகளை தொடங்கியுள்ளவர்களையும் பார்க்க முடிந்துள்ளது. உடனடி இலாபம் என்பது நிலையில்லாத ஒன்று என்பதை விளங்கி, தொடங்கியுள்ள முயற்சிகளில் வளரவேண்டும்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- கருத்து படங்கள்
1 point1 point- ஏமாறாதீர்கள் நடந்தது என்ன? Canadian Tamil Channel
அங்கை இருந்து ஸ்பொண்சர் பண்ணச் சொல்லி சொந்தக்காரர்கள் கேட்டு கடுப்பான 2 பேர் சேர்ந்து இப்படி ஒரு காணொளி விடுகினமோ யார் கண்டது.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- Economic growth is the key to recovery | Raj Rajaratnam speech at Jaffna University
1 point- இந்தியா பறந்தார் அனுரகுமார!
1 point1 point- நீயா நானா: 17 ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் டாக் ஷோ அடிக்கடி பேசுபொருளாவதன் பின்னணி
சிறு வர்களில் இருந்து வயதானவர் வரை எல்லோரையும் இணைக்கிறார்கள் . சில சமயம் கணவன் எதிர் மனைவியை கூப்பிடும் போது அவர்கள் பிரச்சினையை உலகத்துக்கே பறை சாற்றுவது போல இருக்கும் .சில விடயங்கள் வீட்டிலேயே பேசித் தீர்த்து கொள்ளலாம். ஒருவர் மற்ற்வரை சந்தி சிரிக்க வைப்பது போல "மல்லாக்க படுத்து எச்சி உமிழ்வது போல" என்பார்கள்.1 point- யாழ் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது : சரத் வீரசேகர!
நீர்மூழ்கி கப்பல் நிட்பதை காணவில்லையாம். தங்களுக்கு தெரியாமல் கடலுக்குஅடியால் வந்து விடடார்களாம். விரைவில் விரட்டி அடிப்பதாக கூறி உள்ளார். எப்படி இருந்தாலும் புலிகளுடனோ , தமிழர்களுடனோ பேச்சுவார்த்தை இல்லை என்று சொல்கிறார். அதாவது தமிழர்களுக்கு பிரச்சினை இல்லை என்பதுதான் அவரது கருத்து. விமல், கம்மன்பில , வீரசேகர போன்றோரை இணங்க வைப்பது நாய் வாலை நிமிர்த்துவது போல.1 point- Economic growth is the key to recovery | Raj Rajaratnam speech at Jaffna University
அன்று நடந்த உரையின் முழு வடிவத்தை இணையத்தில் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. அரங்கினுள் குறைவான எண்ணிக்கையிலான பார்வையாளர்களே உள்ளனர். எல்லோருக்கும் பயன்படும் வகையில் இவ்வாறான உரைகளைச் சம்பந்தப்பட்டவர்கள் முழுமையாகப் பதிவு செய்து வெளியிட ஆவனை செய்ய வேண்டும். எமது ஊடகங்களும் பயனுள்ள விடயங்களில் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.1 point- யாழ் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது : சரத் வீரசேகர!
உண்மை தான் ஆனால் சுதந்திரம் என்பது கொடி பிடிப்பது இல்லை அதாவது சிங்கம் உள்ள கொடி உந்த சிங்கம் உள்ள கொடியை இறக்கும் நாள் தான் தமிழனின் சுதந்திர தினம்1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointபுத்திஜீவிகளும் புலிகள் இயக்கமும் நிர்மலா தன்னுடன் சேர்ந்து பணியாற்றப்போகிறார் என்று பிரபாகரன் கூறியபோது அடேல் பாலசிங்கம் மகிழ்ச்சியடைந்தார். விடுதலை வேட்கை எனும் புத்தகத்தில் எழுதிய அடேல், ஆங்கிலம் பேசத் தெரிந்த, பெண்ணியம் சார்ந்த அறிவுஜீவி ஒருவர் தன்னுடன் பணிபுரியப்போவதாக அறிந்தபோது மிக்க மகிழ்ச்சியடைந்தேன் என்று எழுதுகிறார். நிர்மலாவை புலிகளின் பெண்போராளிகளின் அணிக்குத் தலைவராக நியமிக்கலாமே என்று அடேல் பிரபாகரனிடம் வினவியிருக்கிறார். ஆனால், அடேலின் ஆலோசனையினை பிரபாகரன் ஏற்கவில்லை. நிர்மலாவைப் பொறுத்தவரை பெண்விடுதலை என்பது மேற்கத்தைய சமூகத்தினை அடிப்படையாகக் கொண்டது என்றும், தமிழீழப் பெண்களின் விடுதலை தொடர்பான தனித்தன்மையினை நிர்மலாவின் கொள்கைகள் எடுத்தியம்பவில்லை என்றும் பிரபாகரன் கூறியிருக்கிறார். தமிழீழப் பெண்களின் விடுதலை எனும் கருதுகோள் மேற்கத்தைய பாணியிலும் இருந்து வேறுபட்டது என்று அவர் கூறினார். தமிழீழப் பெண்கள் தம்மை சமூகத்தின் முக்கிய பாத்திரமாக அடையாளப்படுத்தி, அதனை தம்முள் உணர்ந்துகொள்ளும் விதமாக தமிழீழப் பெண்களின் விடுதலை அமையவேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். தனது புத்தகத்தில் தொடர்ந்து எழுதும் அடேல் பிரபாகரன் கூறியது சரியானது என்பதை தான் உணர்ந்துகொண்டதாக எழுதுகிறார். "நிர்மலாவின் அதிதீவிர பெண்விடுதலைக் கொள்கைகளை எம்முடன் இருந்த பெண்போராளிகள் புரிந்துகொள்ளச் சிரமப்பட்டனர். தமது தாயகத்தின் விடுதலைக்காகப் போராட வந்திருந்த பெண்களுக்கும் நிர்மலா அமைத்துக்கொள்ள முயன்ற பெண்விடுதலைக்கும் இடையே பாரிய வேறுபாடு இருப்பதை அறிந்துகொண்டேன். அப்பெண்களைப் பொறுத்தவரை நிர்மலாவின் பெண்விடுதலை தொடர்பான புரிதலோ அல்லது அதற்கான அவசியமோ இருந்ததாக நான் கருதவில்லை" என்று அடேல் எழுதுகிறார். அடேலின் வேண்டுகோலினை பிரபாகரன் நிராகரித்தமைக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. பிரபாகரனைப் பொறுத்தவரை அறிவுஜீவிகள் ஆயுதப் போராட்டத்தின் அங்கமாக தம்மை இணைத்துக்கொள்வது சாத்தியமற்றது என்று நம்பினார். ஏனென்றால், அவர்கள் தம்மைப் பற்றியே மட்டும் சிந்திக்கும் தன்மை கொண்டவர்கள். அனைத்தும் தமக்குத் தெரியும் என்கிற மனோநிலையில் வாழ்பவர்கள். தனித்துச் சுதந்திரமாக இயங்கவேண்டும் என்று எண்ணுபவர்கள். கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது என்பது அவர்களால் முடியாத காரியம். விவாதிப்பதிலும், தலைமைக்கெதிராகப் புரட்சி செய்வதிலும் காலத்தைச் செலவிடுபவர்கள். தமது கருத்துக்களால் தம்மைச் சுற்றியிருப்போர் தமது பணிகளைப் புரிய இடைஞ்சலாக இருப்பவர்கள். இப்படியானவர்கள் அனுதாபிகளாகவும், ஆதரவாளர்களாகவும் இருக்கலாமேயன்றி, ஒருபோது ஆயுதப் போராட்ட அமைப்பிற்குள் நேரடியாக பங்களிப்புச் செய்ய முடியாதவர்கள் என்று பிரபாகரன் நம்பினார். புத்திஜீவிகளும், இடைநடுவில் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டவர்களும் போரிடும் அணிகளுக்குள் இணைத்துக்கொள்ளப்படமுடியாதவர்கள் என்று பிரபாகரன் நம்பினார். இராணுவ அணிகளுக்கு வெளியிலேயே அவர்களுக்கான பணிகள் கொடுக்கப்படவேண்டும் என்று அவர் விரும்பினார். ஆகவேதான் நித்தியானந்தன் விடுதலைப் புலிகள் சஞ்சிகையின் ஆசிரியராக பிரபாகரனால் நியமிக்கப்பட்டார். அவர் எழுதும் ஆக்கங்களை பேபி சுப்பிரமணியத்திடம் காண்பித்து அவரின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று அவர் கேட்கப்பட்டார். இதனை ஏற்றுக்கொள்ளாத நித்தியானந்தன் தனது மனைவியான நிர்மலாவையும் கூட்டிக்கொண்டு 1984 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறினார். கிராமப்புறங்களில் இருந்து போராட வந்திருந்த பெண்களுடன் தன்னால் பணியாற்ற முடியாது என்று நிர்மலா சொல்லியிருந்தார். இப்பெண்கள் பற்றிக் கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைக்கத் தொடங்கினார். தனது நிலைப்பாட்டில் உறுதியாகவிருந்த பிரபாகரன் ஈரோஸ் அமைப்பினைக் கலைத்துவிட்டு அதன் தலைவர் பாலகுமாரும்,உதவித்தலைவர் பரா எனப்படும் பரராஜசிங்கமும் புலிகள் இயக்கத்திடம் வந்தபோது அவர்களை இராணுவ அணிகளுக்குள் உள்வாங்கவில்லை. அவர்களுக்கு பொது நிர்வாகச் சேவைகளிலேயே பணியாற்ற வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. திட்டமிடல்த் துறைக்குப்பொறுப்பாக பாலகுமாரும் நீதித்துறைக்குப் பொறுப்பாக பராவும் நியமிக்கப்பட்டனர். புலிகள் தமது நடவடிக்கைகளில் புதிய கட்டத்தை அடைந்துவிட்டார்கள் என்பதனை மட்டக்களப்புச் சிறைச்சாலையின் இரண்டாவது உடைப்புக் காட்டியது. இது நடைபெற்று ஐந்துநாட்களுக்குப் பின்னர், காரைநகர் கடற்படை முகாமுக்கு விஜயம் செய்துவிட்டு கொழும்பு திரும்புவதற்காக கடற்படைத் தளபதி பாவித்த சீபிளேன் ரக விமானத்தை அவர்கள் எரியூட்டினார்கள். காரைநகரிலிருந்து புறப்பட்டு சில நிமிடங்களிலேயே இயந்திரக் கோளாறு காரணமாக விமானியால் பருத்தியடைப்புப் பகுதியில் திடீரென்று விமானம் தரையிறக்கப்பட்டது. காரைநகர் முகாமிலிருந்து 8 கிலோமீட்டர்கள் தூரத்தில் விமானம் தரையிறங்கியிருக்க, கடற்படைத் தளபதி முகாமிற்கு நடந்துசெல்ல, நான்கு கடற்படை வீரர்கள் விமானத்திற்குக் காவல்காத்து நின்றனர். அப்பகுதிக்கு வந்த புலிகள் காவலுக்கு நின்ற கடற்படை வீரர்களைத் துரத்திவிட்டு விமானத்திற்குத் தீமூட்டிச் சென்றனர். அதேநாள் இரு ஈ.பி.ஆர்.எல்.எப் போராளிகள் துணிகரமான நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டார்கள். வீதியால் சென்ற பாரவூர்தியொன்றினை ஆயுதமுனையில் கடத்திச் சென்று, நேரே வந்துகொண்டிருந்த பொலீஸ் வாகனம் ஒன்றுடன் மோதி அதில் பயணம் செய்த உதவிப் பொலீஸ் பரிசோதகர் ஒருவரையும் மூன்று கொன்ஸ்டபிள்களையும் காயப்படுத்தினர். இரு நாட்களுக்குப் பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த வீதி வரைபடங்களை நான்கு ஆயுதம் தரித்த இளைஞர்கள் எடுத்துச் சென்றனர். தேசியப் பந்தோபஸ்த்து அமைச்சரான லலித் அதுலத் முதலியைக் கொல்லும் முயற்சியுடன் ஆனி மாதம் முடிவிற்கு வந்தது. காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பாதுகாப்பு ஊழியராகக் கடமையாற்றும் அதிகாரியொருவர் மறைத்துவைக்கப்பட்டிருந்த பாரிய குண்டைக் கண்டுபிடித்தார். ஏழாவது மாடியில் அமைந்திருக்கும் அலுவலகத்திற்கு பந்தோபஸ்த்து அமைச்சர் வரவிருந்த வேளையில் இறுதிநேர பாதுகாப்புச் சோதனைகளில் ஈடுபட்ட ஊழியரே இக்குண்டைக் கண்டுபிடித்தார். ஐந்தாவது மாடிக்கும் ஆறாவது மாடிக்கும் இடையில் இருந்த சேமிப்பு அறையிலேயே இக்குண்டு மறைத்துவைக்கப்பட்டிருந்தது. குண்டைக் கண்டுபிடித்தபின்னர், அதனை வெடிக்கவைக்கும் அழுத்தியை அகற்றியெடுத்து, தனது மேலதிகாரியிடம் கொண்டுசென்று காண்பித்தார் அவர். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ராஜாங்க அமைச்சின் செயலாளர், "அதிஷ்ட்டவசமாக அது சரியான நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இலங்கையில் இதுவரையில் கண்டெடுக்கப்பட்ட பாரிய குண்டு இதுதான். இதற்குள் 45 ஜெலிக்னைட் குச்சிகள் அடுக்கப்பட்டிருந்தன. இக்குண்டு வெடித்திருந்தால் 14 மாடிகள் கொண்ட இக்கட்டிடம் முற்றாக இடிந்து வீழ்ந்திருக்கும்" என்று கூறினார். மேலும், "இக்குண்டு லலித்தின் அலுவலகத்திற்கு நேர் கீழே பொறுத்தப்பட்டிருக்கிறது. லலித் ஏழாவது மற்றும் எட்டாவது மாடிகளையே அதிகம் பயன்படுத்துவார்" என்றும் அவர் கூறினார். ஆடி மாதம் முழுவதிலும் சிறு சிறு தாக்குதல்ச் சம்பவங்கள் இடம்பெற்றன. இவற்றுடன் சுற்றிவளைப்புக்களும், சமூக விரோதிகளுக்கான தண்டனைகளும் வழங்கப்பட்டன. இம்மாதத்தில் ஒரேயொரு இராணுவ வீரர் மட்டுமே கொல்லப்பட்டிருந்தார். பூநகரிப் பகுதியில் காட்டிற்குள் விறகெடுக்கச் சென்றவேளை கட்டுத் துப்பாக்கி ஒன்றில் அகப்பட்டு அவர் கொல்லப்பட்டார்.1 point- கணவரின்(39) ஆணுறுப்பைத் துண்டித்த மனைவி(34) கைது.
இப்பவெல்லாம் எடுத்த வீச்சுக்கு மெயின் சுவிச்சையே ஓவ் பண்ணுறாங்களே.1 point- கணவரின்(39) ஆணுறுப்பைத் துண்டித்த மனைவி(34) கைது.
நித்திரைக்கு போகும் நேரத்தில் .....................................................................கடவுளே .1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கொஞ்சம் ரசிக்க