Leaderboard
-
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்16Points2954Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்11Points20018Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்9Points33600Posts -
நிலாமதி
கருத்துக்கள உறவுகள்8Points11531Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/11/24 in all areas
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
அடிதடியில் அரிகரன் நிகழ்ச்சி! ***************************************** *இது முள்ளிவாய்க்காலில் கஞ்சி வாங்க நின்ற கூட்டமல்ல!, *முத்த வெளியில் கரிகரனைப் பார்க்க வந்த கூட்டம்.! கரிசனையில்லாத கூட்டம்.! *எங்கே போகிறது எம் சமுதாயம்? - இதிலே யாருக்கு இங்கு ஆதாயம்? *எப்போ ஆறியது இன அழிப்பின் காயங்கள்? இப்போ வெளுத்து விட்டது பலரின்… சாயங்கள்! *தமிழனைப் பார்த்தால் முப்பது ரூபா கூடக் கொடுக்காதவன், தமண்ணாவைப் பார்க்க முப்பதாயிரத்துடன் நிற்கிறான்….. *நட்புகளுக்குக் கூட கை கொடுக்காதவன், நடிகர்களுக்கு கை கொடுக்க மேடை ஏறுகிறான்! *ஆணும் பெண்ணும் என அத்தனை பேரும் கம்பத்தில்! அறுந்து விழுந்தால்…. அனைவரும் இருப்பார் நரகத்தில்..! *அப்படி இதிலென்ன மோகம்?... ஆருக்கு இதில் உண்டு லாபம்...? அங்கே, *கஞ்சப்பயல் எல்லாம், இலவசம் என்று வந்து,….. காசு கட்டியதுதான்….. கண்றாவியின் உச்சம்! *கஞ்சா அடித்தவனெல்லாம் களியாட்டம் என்று வந்து கால் கடுக்க நின்றதுதான் மிச்சம்.! “பனங்காட்டான்” என்றாலும் படித்தவன், பண்பாடு ஆனவன் என்ற பெயர் (எமக்கு) இருந்ததுண்டு! இன்று…. *படம் காட்டுபவர்கள் பின் ஓடிப் பெற்ற பெயர் “பட்டிக்காட்டான்!” -வெறும் “வெட்டிக்” காட்டான்.! *நடிப்பவர்களைச் சுமப்பது என்பது நமக்கெல்லாம் அவமானம்…! நாம் கேரளாவைப் பார்த்து அறிய வேண்டியது…. ஏராளம்…! *வெளிநாட்டுக் காசு இங்கு வெகுவாக இருக்குதென்று- பலருக்கு இங்கே கண்! .. - இதனால் பாழாய்ப் போகுது எமது மண்…! *இனியாவது, அனுப்புவதை நிறுத்துங்கள்! அலுப்பானவனை உழைக்க விடுங்கள்! *முடிவில், அடிதடியில் முடிந்திருக்கிறது அரிதரனின் நிகழ்ச்சி..! அவமானப் பட்டதில் அடமானம் போனது மகிழ்ச்சி?...... *கத்தலும், கதிரை எறிதலும் கலவரமும் என, காணொளிகளில் பல காட்சி! *நல்ல தலைவன் இல்லாததற்கு இவை எல்லாம் சாட்சி! *வடக்கிலும் சரி, கிழக்கிலும் சரி வலிகள் சுமந்த மக்களுக்கு வாழ்வு தருவது வேலை வாய்ப்புகள்தான்! *இவர்கள் செய்யும் வேலையெல்லாம் வெறும் ஏய்ப்புக்கள்தான்.! *கல்வி எம்நாட்டில் முக்கியம்தான்.. மறுப்பவரும் இல்லை! வெறுப்பவரும் இல்லை! *கட்டிக் கொடுங்கள் கல்லூரிகளை! கண்டிப்பவர்கூட எவரும் இல்லை..! *அதைவிட, முதலில் கற்பவனைத் தயார்படுத்துங்கள்! காலித் தனத்தைக் கட்டுப்படுத்துங்கள்! *கஞ்சா அடிப்பவன் கற்றுத் தெளிவானா? கஞ்சிக்கு வழியிலாதவன் கல்லூரிக்கு வருவானா? *கடைசியில் கிடைத்த நீதி……., *மக்களுக்குச் செய்ய ஆயிரம் உண்டு! மனம் வைத்தால் திருத்த வழிகளும் உண்டு! *காயப்பட்டவனுக்கு நாட்டில், கலைநிகழ்ச்சிகள் தேவையில்லை! வீட்டில், உலை எரிந்தாலே போதும்…! February 9, 2024 - எனது நீண்டகால நண்பரும் அயலவரும் எழுதிய கவிதை. மிகவும் தெளிவாக உள்ளத்தை தொட்டும் எழுதியுள்ளார்.6 points
-
பொருநைக் கரையினிலே - 1 - சுப.சோமசுந்தரம்
பொருநைக் கரையினிலே - 1 - சுப.சோமசுந்தரம் காவ்யா பதிப்பக நிறுவனர் பேரா.சு.சண்முகசுந்தரம் அவர்கள் தமது புதினங்களான பொருநை, கூவம் இவற்றில் முறையே தமது நெல்லை, சென்னை வாழ்க்கையினைச் சொல்லோவியமாய் வரைந்துள்ளார். இத்தலைப்புகளால் ஈர்க்கப்பட்ட அடியேன், "என் வாழ்க்கையைச் சித்தரிக்கப் பெரிதாக ஏதுமில்லையெனினும், பொருநைக் கரையிலேயே அநேகமாக வாழ்நாள் முழுதும் கழிக்கும், களிக்கும் பேறு பெற்ற நான் இங்கு கற்றதையும் பெற்றதையும் குறைந்தபட்சம் ஒரு கட்டுரையாய் அல்லது கட்டுரைத் தொடராய்ப் பதிவு செய்யலாமே என எண்ணியதன் வெளிப்பாடே இந்த என் எழுத்து. அக்காலத்தில் (ஓரளவு இக்காலத்திலும்) தலைப்பிள்ளை தாயாரின் ஊரில் பிறக்க வேண்டும் என்ற வழக்கத்தின்படி நான் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணிக் (பொருநை) கரையிலுள்ள அரியநாயகிபுரம் எனும் அழகிய கிராமத்தில் பிறவி எடுக்கும் பேறு பெற்றேன். பிறந்த ஊர் என்பதும் பள்ளிப் பருவத்தில் நீண்ட விடுமுறை நாட்களில் அங்கிருந்த ஆச்சி - தாத்தா வீட்டிற்குச் செல்வேன் என்பதுமே எனக்கும் அந்த கிராமத்துக்குமான தொடர்பு. மற்றபடி எனது தந்தையாரின் ஊரான பாளையங்கோட்டையே நான் வளர்ந்த, வாழ்ந்த ஊர். அதுவும் பொருநையின் கரையில் அமைந்த ஊர் என்பது எனக்கான பெரும்பேறு. தந்தையார் நெல்லை மாவட்டத்தில் அரசுப்பணியில் இருந்ததால், எனது சிறார் பருவத்தில் அவர்கள் வேலை பார்த்த கிராமத்தில் ஒரு பள்ளியில் சேர்த்தார்கள். செய்தி அறிந்த என் ஆச்சி (இந்த ஆச்சி என் அப்பாவின் தாயார்) உடனே அங்கு வந்து, "எங்கெங்கெல்லாமோ இருந்து நம்ம ஊரைத் தேடி வந்து பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். நீ என்ன இந்தப் பட்டிக்காட்டில் (!!) பிள்ளையைச் சேர்த்து இருக்கிறாய் ?" என்று என் அப்பாவைக் கடிந்து, என்னைப் பாளையங்கோட்டையில் படிக்க வைக்கத் தூக்கி வந்து விட்டாள். திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியதும் மேற்கொண்டு அன்று பேருந்து எதுவும் ஓடாது என்றதும் (அப்போதுதான் பிரதமர் நேரு இறந்த செய்தி வெளிவந்திருந்தது), என்னைத் தூக்கிக்கொண்டு சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாளை வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தாள். வரும்போது பாலத்தில் நின்றபடி எனக்குத் தாமிரபரணியைக் காண்பித்தாள். என் வாழ்க்கையில் விவரம் தெரிந்து நான் முதன் முதலில் பொருநையைக் கண்ணுற்ற தருணம் அது. நாங்கள் நின்ற அந்தப் பாலம் வரலாற்றுப் புகழ்பெற்ற சுலோச்சன முதலியார் பாலம் என்பதெல்லாம் பின்னர் என் ஆச்சி கதையாகக் கூறியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஓரளவு இறுதியில் கட்டப்பட்டது இந்தப் பாலம். அதற்கு முன் பொருநையாற்றின் கிழக்கில் உள்ள பாளையங்கோட்டைக்கும் மேற்கில் உள்ள திருநெல்வேலிக்கும் இடையே போக்குவரத்து, பரிசல் மூலமாகவே நடைபெற்று வந்துள்ளது. பரிசலில் இடம் கிடைக்க அவற்றை இயக்குவோருக்குக் கையூட்டு தரவேண்டிய சூழல் நிலவியபோது, பரிசல் குழாமில் அடிக்கடி தகராறுகளும் வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்று வந்துள்ளன. எனவே மாவட்ட ஆட்சியரின் பல பரிந்துரைகளுக்குப் பின் அங்கு ஒரு பாலம் அமைக்க ஆங்கில அரசால் ஒத்துக் கொள்ளப்பட்டது. எனினும் அதற்குரிய திட்டச் செலவான ஐம்பதாயிரம் ரூபாயை அதன் பயனாளிகளான மக்களிடமே நன்கொடையாகப் பெறத் திட்டமிடப்பட்டது. தங்களுக்குப் பெரிதும் பயனில்லாத திட்டங்களுக்கு ஆங்கிலேய அரசு (அன்றைய கம்பெனி அரசு) வரி வருவாயில் இருந்து செலவு செய்வதில்லை. அக்காலத்தில் செல்வந்தரும் நல்லுள்ளம் படைத்தவருமான திரு. சுலோச்சன முதலியார், அவருக்குக் கௌரவப் பதவியாக அளிக்கப்பட்டிருந்த சிரஸ்தார் பொறுப்பில் இருந்தார். மக்களிடம் நன்கொடை பெற்றுப் பாலம் கட்டும் பொறுப்பை அவரிடமே அளித்தது கம்பெனி அரசு. செல்வந்தரான அவர் பிறரிடம் நன்கொடை கேட்பதில் ஏற்பட்ட தயக்கத்தின் காரணமாகத் தமது சொந்தச் செலவிலேயே பாலம் கட்டித் தரத் தீர்மானித்தார். சில சொத்துக்களை விற்றது போக எஞ்சிய தொகைக்குத் தமது துணைவியாரின் இசைவுடன் அவர்தம் நகைகளையும் விற்றுக் கட்டினார். லண்டனில் தேம்ஸ் நதியின் மீது உள்ள 'வெஸ்ட் மினிஸ்டர்' பாலத்தின் மாதிரியில் கட்டப்பட்டது இப்பாலம். பின்னர் இயல்பாக சுலோச்சன முதலியார் பெயராலேயே இப்பாலம் வழங்கலாயிற்று. இப்பாலத்தையொட்டிய ஆற்றுப்பகுதியில் நான் கண்டவையும் கேட்டவையும் படித்தவையும் சில எப்போதும் நெஞ்சில் நிழலாடுகின்றன. பாலத்திலிருந்து பார்த்தால் தெரிகிறதே தைப்பூச மண்டபம் ! 1908 ல் 'திருநெல்வேலி எழுச்சி' எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க, மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்திற்குச் சில நாட்கள் முன்பு வங்காளப் புரட்சியாளர் விபின் சந்திரபாலின் விடுதலையைக் கொண்டாடும் வகையில் வ.உ.சிதம்பரனாரும் சுப்பிரமணிய சிவாவும் ஆங்கில ஆட்சியரின் தடையை மீறி இதே தைப்பூச மண்டபத்தில் வீர எழுச்சியுரை நிகழ்த்தினர் என்பது தோழர் இரா.வேங்கடாசலபதியின் 'திருநெல்வேலி எழுச்சி'யில் வாசித்து அறிந்தது. நெல்லை சந்திப்பில் அப்போது செயல்பட்ட ம.தி.தா. இந்துக் கல்லூரி வளாகத்தில் ஆரம்பித்த ஊர்வலம் தபால் நிலையம், நகராட்சி வளாகம் போன்றவற்றைத் தீக்கிரையாக்கிய திருநெல்வேலி எழுச்சியும், அதைத்தொடர்ந்து ஆங்கிலேயரின் அடக்கு முறையும் வாசித்து அறிந்தவை. நெல்லைக்காரனாக என்னைத் தலைநிமிரச் செய்பவை. 1970 களின் ஆரம்பத்தில் தூய சவேரியார் கல்லூரிப் பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் காவல்துறையினரால் அநியாயமாகத் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட பெருங் கொந்தளிப்பில் மாணவர் லூர்துநாதன் காவல்துறையின் தடியடிக்குப் பலியானது சுலோச்சன முதலியார் பாலத்திற்குக் கீழேதான். லூர்துநாதனை ஆற்றில் இருந்து மக்கள் தூக்கிய காட்சியை ஒரு பள்ளி மாணவனாக நான் பார்த்தது நேற்று நடந்தது போல் தோன்றுகிறது. 1999 ல் கூலி உயர்வு உட்பட நியாயமான காரணங்களுக்காகப் போராடிய மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் காவல்துறையால் ஓட ஓட விரட்டப்பட்டதும், உயிரைக் காத்துக் கொள்ள ஆற்றில் இறங்கியவர்களையும் விடாமல் அடித்ததில் பெண்கள், கைக்குழந்தை உட்பட பதினேழு பேர் உயிர்நீத்ததும் பொருநைக் கரைக்கு ஏற்பட்ட நீங்காத கறை. முதலாளிகளுக்குச் சேவகம் செய்வதில் ஜனநாயக (!) அரசுகள் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல போலும் ! தினமும் பாலத்தைக் கடந்து அலுவலகம் செல்லுகையில் இரத்தவாடை அடிக்கிறதே, அது என் போன்றோர்க்கு ஏற்பட்ட மனநல பாதிப்போ ! 1992 லும் தற்போது 2024 லும் பாலத்தை மூழ்கடித்துப் பொருநை ஆடிய கோரத்தாண்டவமும் மக்களுக்கு ஏற்பட்ட பெருஞ்சேதமும் என்றென்றும் நெஞ்சைப் பதற வைப்பவை. சுலோச்சன முதலியார் பாலத்தைக் காட்டிய ஆச்சி அதனைக் கடந்து சிறியதொரு பாலத்தின் கீழே ஓடுகிற ஒரு ஓடையைக் காட்டினாள். அதன் பெயர் 'பிள்ளையைப் போட்டுப் பலாப்பழம் எடுத்த ஓடை' என்றாள். பிற்காலத்தில் சுருக்கமாக 'பலாப்பழ ஓடை' என்றாகி தற்போது யாருக்கும் பெயரே தெரியாத ஓடையாகி விட்டது. ஒன்பதாம் நூற்றாண்டின் நடுவில் நிகழ்ந்ததாக ஒரு கதை சொன்னாள். அந்த ஓடையில் மிதந்து வந்த ஒரு பெரிய பலாப்பழத்தை எடுக்க ஆசைப்பட்ட தாய் ஒருத்தி தனது குழந்தையைக் கரையில் விட்டு விட்டுப் பலாப்பழத்தை விரட்டிச் சென்றிருக்கிறாள். குழந்தை மெதுவாகத் தவழ்ந்து ஆற்றில் மூழ்கி விட்டது. எனவே அந்த ஓடைப்பாலத்திற்கு அப்பெயர். இப்படி எத்தனையோ கதைகள் ஊரைச் சேர்ந்த பலர் சொல்வதால் அவற்றில் சில ஓரளவு உண்மையாய் இருக்க வேண்டும். எது எப்படியோ சில செவிவழிக் கதைகள் சுவாரஸ்யமானவை. பழைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் புகழ்பெற்ற தாமிர சபையான நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயில், சித்திர சபையான குற்றாலநாதர் - குழல்வாய்மொழி அம்மை திருக்கோயில், நவ திருப்பதி, நவகைலாய திருத்தலங்கள், குற்றாலம் மற்றும் பாபநாச நீர்வீழ்ச்சிகள், திருநெல்வேலி அல்வா, பத்தமடைப் பாய் என நெல்லையின் சிறப்புகள் எண்ணிலடங்கா. ஐவகை நிலங்களையும் தன்னகத்தே கொண்டது நான் சிறுவனாய்ப் பார்த்த பழைய திருநெல்வேலி மாவட்டம். இவையெல்லாம் பெரும்பாலும் அனைவரும் அறிந்தமையின், வெகுசனம் அறியாத சிலவற்றைத் தொட்டுச் செல்வது இங்கு பொருந்தி அமைவது. நானே கண்டுணர்ந்த எனது எண்ணவோட்டத்தைப் பகிர்ந்து அளித்தல் அதுவேயாம். இன்றைய பாளையங்கோட்டை நகரின் நடுப்பகுதிக்கு மேற்கே 'மேலக்கோட்டை வாசல்' உள்ளது. அதன் மேல் தளத்தில் 'மேடைப் போலீஸ் ஸ்டேஷன்' இருந்தது. இப்போது காவல்துறை சார்ந்த தகவல் கட்டுப்பாட்டு நிலையம் உள்ளது. கிழக்கே 'கீழக்கோட்டை வாசல்' உள்ளது. அதில் தற்போது தமிழ்நாடு அரசு அருங்காட்சியகம் இருக்கிறது. கோட்டையின் வடபக்க மதிற்சுவர் இன்றைய வடக்குக் கடைவீதி வழியாகச் சென்றது; தென்புறத்து மதிற்சுவர் சவேரியார் கல்லூரியின் முன்புறம் தற்போது செல்லும் முக்கிய சாலையின் மீது அமைந்திருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதி வரை பாளையங்கோட்டை ஒரு கோட்டை நகரமாக இருந்துள்ளது. அது ஒரு கற்கோட்டை. பதினெட்டாம் நூற்றாண்டிலேயே சிதிலமடையும் நிலையில் இருந்த கோட்டையின் மதிற் சுவர்கள் மக்களின் பாதுகாப்பு கருதி ஒரு சட்ட வரைவின் மூலமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயரால் தகர்க்கப்பட்டது. கோட்டையின் கிழக்கு, மேற்கு வாசல்கள் உறுதியானவையாக வீரர்கள் தங்கும் வசதியுடன் இருந்தன. அவை மட்டும் இடிபடாமல் மேற்கூறியவாறு இன்றும் பயன்பாட்டில் உள்ளன. நான் சிறுவனாக இருக்கும்போது அக்கோட்டை பற்றி என் ஆச்சி உட்பட சுற்றாரும் உற்றாரும் சொன்ன தவறான பாடம், அது வீரபாண்டிய கட்டபொம்மனால் கட்டப்பட்டது - அதாவது, பாளையக்காரர்களின் கோட்டை - என்பது. அதற்கேற்றாற் போல் சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கோட்டை இருந்த இடத்தின் தென்மேற்கு மூலையில் (பாளை பேருந்து நிலையம் அருகில்) கட்டபொம்மன் சிலை நிறுவப்பட்டிருந்தது. இக்கோட்டை நகரத்துக்கு 'பாளையங்கோட்டை' என்பது ஒரு தவறான பெயர் (misnomer) என்பதை என் குருநாதர் பேரா. தொ.பரமசிவன் அவர்களிடமே தெரிந்து கொண்டேன். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் திருநெல்வேலி ஆட்சியராயிருந்த ஜாக்ஸன் துரை பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் ஆட்சி புரிந்த வீரபாண்டிய கட்டபொம்மனை, வரி கட்டாமல் தவறியமைக்காக பாளையங்கோட்டை (அப்போது ஸ்ரீ வல்லப மங்கலத்தின் ஒரு பகுதி) கிழக்கு வாசலில் அக்காலத்தில் அமைந்திருந்த கச்சேரியில் (நீதிமன்றத்தில்) ஆஜராகுமாறு பணித்திருந்தார். அதன்படியும், தமது அமைச்சர் தானாபதிப் பிள்ளையின் ஆலோசனையின்படியும் கட்டபொம்மன் ஆஜரானார். மக்களால் பரவலாகப் பேசப்பட்ட இந்நிகழ்வு இவ்வூருக்கும் பாளையக்காரர்களுக்கும் உள்ள ஒரு தொடர்பு (ஆஜரான கட்டபொம்மனை ஜாக்ஸன் சந்திக்காமல் குற்றாலத்திற்கும் ராமநாதபுரத்திற்கும் பாளையக்காரர் படையினை அலைய விட்டதும், ராமநாதபுரத்தில் ஆங்கிலேய கம்பெனி படையினரோடு மோதல் ஏற்பட்டதும் தனிக்கதை). மற்றுமொரு தொடர்பு உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரை, முதல் பாளையக்காரர் போரில் கம்பெனிப் படையினரால் பிடிக்கப்பட்டு பாளையங்கோட்டையின் (அன்றைய ஸ்ரீ வல்லபமங்கலம்) கிழக்குக்கோட்டை வாசலின் கீழ்த் தளத்தில் சிறை வைக்கப்பட்டார். பின்னர் 1801 ல் அச்சிறையில் இருந்து தப்பினார் (சிறிது காலத்திற்குப் பின்னர் வேறு பாளையக்காரர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு, ஆங்கிலேயரிடம் மீண்டும் சிறைப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார் என்பதுவும் தனிக்கதை). இவ்விரண்டு நிகழ்வுகளும் மக்களால் பரவலாகப் பேசப்பட்டன. இக்கதைகளை மக்களிடம் பிற்காலத்தில் வாய்மொழியாகத் திரட்டிய ஒரு ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர் (அவரது பெயர் தொ.ப என்னிடம் சொல்லி நான் மறந்தது. தொ.ப இப்போது இல்லை. வாய்ப்பை ஏற்படுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆவணக் காப்பகத்தில் பெயரைத் தேட வேண்டும்) மக்கள் பேசிய மொழியிலிருந்து அரைகுறையாகப் புரிந்து, அக்கோட்டை பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்கள் கட்டியது எனப் பதிவு செய்துவிட்டார். அவர் ஒரு அரைகுறை வரலாற்று ஆய்வாளர் என்பதற்குச் சான்று - ஊர் மக்கள் ஏதோ ஒரு மலபாரி மொழி பேசினர் என்று அவர் குறிப்பது; தொன்மையான தமிழ் மொழி பற்றி ஏதும் அறியாதவர் என்பது. உடனே அப்போது இருந்த அரைவேக்காட்டு மாவட்ட அதிகார வர்க்கம் ஊருக்கு 'பாளையங்கோட்டை' எனப் பெயரிட்டிருக்க வாய்ப்புள்ளது. மற்றபடி அக்கோட்டை ஒன்பதாம் நூற்றாண்டில் வீரநாராயண பராந்தக பாண்டியனால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது கோட்டைக்கு நடுவே அம்மன்னனால் கட்டப்பட்ட கோபாலசுவாமி கோயிலில் கிடைத்த கல்வெட்டுகளின் தரவுகள் அடிப்படையில் அனுமான விதியாகக் (rule of inference) கொள்ளலாம் என்று பண்பாட்டு அறிஞர் தொ.பரமசிவன் அவர்களிடம் கேட்டிருக்கிறேன். அக்கோயிலின் பெருமாள் அம்மன்னன் பெயராலேயே 'வீரநாராயணர்' (வீரநாராயணர் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி) என்று முதலில் அழைக்கப்பட்டு, இப்போதிருந்து சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு 'வேதநாராயணர்' (வேத நாராயணர் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி) எனப் பெயர் மாற்றம் பெற்ற தகவல் அக்கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்தி. வேதாகமத்தினருக்கு 'வீரநாராயணர்' சரி வரவில்லை போலும். மேலும் வீரநாராயண பராந்தகனின் தந்தை பராந்தக நெடுஞ்சடையன் ஸ்ரீமாறன் ஸ்ரீ வல்லபன் ஆவார்; தனது தந்தையார் பெயரைக் கொண்டே அவ்வூருக்கு 'ஸ்ரீ வல்லப மங்கலம்' எனும் பெயர் சூட்டினான். பின்னர் அது 'பாளையங்கோட்டை' ஆன கதை முன்னம் நாம் பார்த்தது. மேற்கூறிய ராஜகோபாலசுவாமி கோயிலுக்குக் கிழக்கே சற்று தூரத்தில் அமைந்த சிவன் கோயில் (திரிபுராந்தீஸ்வரர் ஆலயம்) சேர மன்னன் உதயமார்த்தாண்ட வர்மன் ஆட்சிக் காலத்தில் (கிபி 16 ஆம் நூற்றாண்டில்) கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயிலிலும் பதினொரு கல்வெட்டுகள் கிடைக்கப் பெறுகின்றன. கோட்டை மற்றும் இவ்விரண்டு கோயில்கள் பற்றி மேலும் செய்திகளைப் பெற பேரா. தொ.பரமசிவன், பேரா. ச.நவநீதகிருஷ்ணன் எழுதிய "பாளையங்கோட்டை - ஒரு மூதூரின் வரலாறு" என்னும் நூலில் காணலாம். கோட்டையின் மேற்கு வாசலுக்கு அருகில் உள்ள ராமசாமி கோயில் பற்றிய குறிப்பும் அந்நூலில் உள்ளது. இவை தவிர நாட்டார் தெய்வங்களாக சிறிய அம்மன் கோயில்கள் பல உள்ளமை கோட்டை நகரத்தின் மற்றொரு வரலாற்றுச் சிறப்பு. இந்த அம்மன்கள் போர்க்காலத்தின் தாய்த் தெய்வங்கள் ஆகும் (War Deities). கோயில்கள் தோன்றிய வரிசைப்படி இந்த அம்மன்கள் சகோதரிகளாக மக்களால் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். மூத்த அம்மனான ஆயிரத்தம்மன் ஆயிரம் படை வீரர்களைக் கொண்ட பாசறைத் தெய்வமாக இருந்திருக்க வேண்டும். பதினெட்டாம் நூற்றாண்டில் போருக்குச் செல்லுமுன் இக்கோயிலில் வீரன் ஒருவனை நரபலி கொடுக்கும் வழக்கமும், பின்னர் அது எருமைப் பலியாகி, தற்காலத்தில் போர்க்கால விழாவான தசராவில் ஆடு பலியாக உருமாறி உள்ளது என்பது மக்களிடம் உள்ள செவிவழிச் செய்தி. பொருநையாற்றின் கரையில் வண்ணார்பேட்டையில் அமைந்துள்ளது பேராற்றுச்செல்வி அம்மன் கோயில். போருக்குச் செல்லும்போது கோட்டையின் வடக்கு வாசல் வழியாகவே படை கிளம்பி செல்வது வழக்கம். எனவே அவ்வாசலருகில் அமைந்திருக்கும் அம்மனான 'வடக்கு வாசல் செல்வி' இப்போது 'வடக்குவாச் செல்வி'. இப்படியே பல. இப்போது வருடந்தோறும் பாளையில் தசரா எனக் கொண்டாடப்படும் போர்க்கால விழா சுற்று வட்டாரத்தில் மிகப் பிரபலம். சுமார் பதினைந்து அம்மன்கள் சப்பர பவானியாக வருவது மக்களுக்குக் கண்கொள்ளாக் காட்சி. பதினெட்டாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் பாளையங்கோட்டை சிறிது காலம் ஆற்காட்டு நவாபின் தளபதியாய் இருந்த யூசுப் கானின் கட்டுப்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அப்போது இப்பகுதியில் தோன்றிய இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு ஊர்வலத்திற்கு எதிர்வினையாகவே, யூசுப் கான் ஆங்கிலேயரால் கொல்லப்பட்ட பிறகு, அம்மன் கோயில்களின் சப்பர பவனியோடு தசரா விழா கொண்டாடும் வழக்கம் பாளையில் தோன்றியிருக்கலாம் என்ற தொ.ப வின் ஊகத்தைக் கேட்டிருக்கிறேன். பழைய கோட்டையில் மேலவாசலில் இருந்து வட திசையில் சென்ற மதிலை ஒட்டிய தெரு சிறிது காலம் முன்பு வரை பாடைத் தெரு என வழங்கியது. ஊரில் இறந்தோரைத் தூக்கிச் செல்லும் பாடைகள் மற்ற தெருக்களுக்கு ஊடே செல்லாமல் ஊரின் மேற்குக் கோடியில் இருந்த அத்தெருவின் வழியே சென்று தாமிரபரணியின் வெள்ளக்கோயில் பகுதியைச் சென்றடையும். எனவே அது பாடைத் தெரு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மதிற்சுவர் இடிக்கப்பட்ட பின் அங்கே ஒரு ராணுவ உணவகம் (military canteen) அமைந்திருந்தது. அது பஞ்சாபி மொழியில் 'லங்கர் கானா' என அழைக்கப்பட்டது. சீக்கிய குருத்வாராக்களில் சமையல் செய்யும் இடத்திற்குப் பெயர் லங்கர் கானா. பாடைத் தெருவில் வீடுகள் வர ஆரம்பித்த பின் தெருவின் பெயரை 'லங்கர் கானா தெரு' என மாற்றிவிட்டனர். அங்கு வாழ்ந்த மக்களுக்கு 'பாடை' ஏதோ மனதை உறுத்தியிருக்கலாம். அத்தெருவிற்குக் கிழக்கே அதற்கு இணையாகச் செல்வது பெருமாள் மேல ரத வீதியாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் கோட்டை ஆங்கிலக் கம்பெனிப் படை மற்றும் யூசுப் கானின் தலைமையில் ஆற்காட்டு நவாபின் படை கோட்டையைத் தாக்கிய போது இறந்த வீரர்களின் உடல்கள் விழுந்த இடத்தில் சுடலை, கருப்பசாமி முதலிய நாட்டார் தெய்வங்களைத் தோற்றுவித்தனர். மேல ரத வீதியின் மேற்குப் புறத்தில் வீடு கட்டும் போது அத்தெய்வங்களின் பூடங்களை வீடுகளின் பின்புறம் வைத்துக் கட்டினர். வருடத்தில் ஒருமுறை அத்தெய்வங்களுக்குப் படையல் வைக்கும்போது கருப்பசாமிக்கு தோசை மாவில் கருப்பட்டி கலந்து, சுட்டு கருப்பட்டி தோசை படைக்கும் வழக்கம் இருந்தது. அதன் விவரம் மூத்தோரிடம் கர்ண பரம்பரையாக வந்திருக்க வாய்ப்பு இருந்தமையாலும், நான் அந்தத் தெருக்காரன் என்பதாலும் அவ்விவரம் சேகரிக்க பேரா. தொ.ப என்னைப் பணித்தார். கருப்பசாமிக்கும் கருப்பட்டிக்கும் பொதுவில் 'கருப்பு' எனும் வேடிக்கை விளக்கம் தவிர என்னால் வேறு விவரம் சேகரிக்க இயலவில்லை (!). கோட்டையைப் பாதுகாத்த படை பெரும்பாலும் மதுரையிலிருந்து வந்திருந்ததால், இறந்த வீரன் சார்ந்த இடத்தை வைத்து அவன் கருப்பசாமி ஆகியிருப்பான் என்பதும் அவன் வாழ்ந்த இடத்தில் கருப்பசாமிக்கான படையலில் அந்த வழக்கம் இருந்திருக்கலாம் என்பதும் ஒரு ஊகம். இப்படி பல வழக்கங்களும் கதைகளும் ! கருப்பட்டி தோசை கூட பண்பாட்டு அசைவின் ஒரு குறியீடோ ! இவ்வாறு நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுக்கான சிறந்த களமாக பாளையங்கோட்டை திகழ்வதும் இவ்வூருக்கான ஒரு சிறப்பு. ஒவ்வொரு சாதி, சமய, இனக்குழுவின் பங்களிப்பும் உண்டு. உதாரணமாக, விசயநகர ஆட்சிக் காலத்திலும் பின்னர் திருமலை நாயக்கர் காலத்திலும் மதுரைக்குப் புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் பரவிய சௌராட்டிரர்களின் பங்களிப்பினைப் பாளை சிவன் கோயில் சுற்று வட்டாரத்தில் காணலாம் - நெல்லை நகரில் தற்காலத்தில் நெல்லையப்பர் கோயில் சமீபத்தில் மார்வாடி ஜைன சமூகத்தினரைப் போல. நமது பாளையங்கோட்டைச் சித்திரம் இதுகாறும் பெரும்பாலும் கோயில்களையும் சாமிகளையும் சுற்றி அமைந்தது இயல்பான ஒன்றே ! நாத்திகராயிருப்பினும் பேரா. தொ.பரமசிவன் மக்களை வாசிக்க அவர்களின் கோயில்களையும் சமய நம்பிக்கைகளையும் அவை சார்ந்த பழக்க வழக்கங்களையும் வாசிக்க வேண்டுமென்பார். அவரிடம் பாடம் படித்த மாணவன் வேறு எப்படி எழுத முடியும் ? சரி, கோவில்கள், கோட்டை கொத்தளங்கள் மட்டும் இன்றைய பாளையங்கோட்டை ஆகுமா ? கோட்டை இடிந்து போயிற்றே ! அதன் எச்சங்களான மேல, கீழக்கோட்டை வாசல்கள் வரலாற்றுச் சின்னங்கள் ஆகிவிட்டனவே ! பாளையங்கோட்டைக்காரனாகிய நான் 'நான்' ஆக ஆனது 'தென்னகத்து ஆக்ஸ்போர்டு' என்று பெருமையுடன் நிற்கும் பாளையங்கோட்டையில் ஆயிற்றே ! அந்த முகத்தை இவ்வூருக்குத் தந்த கிறித்தவ மிஷனரிகளின் வரலாற்றைக் கூறினால்தானே இவ்வூரின் வரலாறு ஓரளவு முழுமை பெறும் ? பொருநைக்கு அக்கரையில் அமைந்த நெல்லை நகரத்தையும் சிறிதளவு தொட்டுக் காட்டினால்தானே கட்டுரைத் தலைப்பிற்கும், நான் அநேகமாகத் தினந்தோறும் அந்நகரைக் கடந்து சென்றதற்கும் நியாயம் கற்பிப்பதாகும் ? இவற்றை அடுத்த தொடராகப் பார்ப்போமா ?5 points
-
சுவிஸ் தம்பதிகளின் அன்பளிப்பு
5 pointsThanks to the Swiss couple ( Mr & Mrs Sritharan )who donated this very valuable & useful ultrasound scanner to the Chankanai Hospital.5 points
-
புதனும் புதிரும்
5 points6 17.12.2023இல் இல்ஸ்ஹொபன் கிராமத்தில் தோல்வியில் முடிந்த கொள்ளைக்குப் பின்னர், பொலிஸார் தேடிய காரைப் பற்றிய தகவல்களையும் அவர்களால் திரட்ட முடியாமல் இருந்தது. போக்குவரத்துப் பொலிஸாரின் கண்களில் கூட அந்தக் கார் படாமல் எங்கேயோ ஒழித்திருந்தது. வழக்கம் போல் அன்றும், போக்குவரத்துப் பணியில் இருந்தாள் லூயிஸா(21). காரின் வலது பக்கத்தில் அவள் அமர்ந்திருந்தாள். அவளது வேலைத் தோழன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். அவர்களது கார் ஹாகன்பாகர் றிங் என்ற இடத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. இங்குதான் எல்பிரிடே கூகெர் 2020இலும் ஹைடமேரி, எடித்லாங் ஆகிய இருவரும் 2022இலும் கொல்லப்பட்டிருந்தார்கள். “ஒருவேளை அன்று இல்ஸ்கொபனில், முதியவரின் மனைவி இல்லாமல் இருந்திருந்தால், அந்த முதியவரையும் அவன் கொன்றிருக்கலாம்” “இருக்கலாம். ஆனால் கொலையாளி தனியாக இருக்கும் முதுமை அடைந்த பெண்களைத்தானே குறி வைக்கிறான். ஒருவேளை இவன் கொள்ளையடிக்க மட்டும் வந்தவனாக இருக்கும் கொலையாளி வேறு ஒருத்தனாகவும் இருக்கலாம்” திடீரென லூயிஸா, “ நிறுத்து நிறுத்து. காரை நிறுத்து” என்று சென்னாள். “ஏன்? என்ன பிரச்சினை?” “அதிலே ஒரு சில்வர் கலரிலே VW கார் பார்க் பண்ணியிருந்தது. ஒருவேளை நாங்கள் தேடுற காராகக் கூட இருக்கலாம். வா பாத்திட்டு வருவம்” அந்த சில்வர் கலர் காருக்கு முன்னால் லூயிஸாவும் அவளது சக தோழனும் நின்றார்கள். இலக்கத் தகட்டில் பொதிகளை ஒட்டும் நாடாவால் ஒட்டிய தடயங்கள், VW station wagon, Silver நிறம் என அவர்கள் தேடும் காரின் அடையாளங்கள் அத்தனையும் பொருந்தி இருந்தன. ஆனால் காரின் இலக்கத் தகடு மட்டும் இல்லை. பொதுவாக இலக்கத் தகடு இல்லாத கார்களை வீதிகளின் ஓரத்தில் நிறுத்தி வைக்க முடியாது. அத்துடன் இலக்கத் தகடு இல்லாவிட்டால் அது பதிவில் இல்லை என்பது மட்டுமல்ல பயணிக்கவும் முடியாது. கார் பூட்டி இருந்தது. கார் கண்ணாடியூடாக உள்ளை பார்த்தார்கள். ‘ரெட் புள்’ குடிபான ரின்கள், பொதிகளை ஒட்டும் நாடாக்கள் என்பன காருக்குள் இருந்தன. ஆக, கார் பாவனையில் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று இருவரும் தீர்மானித்துக் கொண்டார்கள். அவர்களால் காரின் போனற்றைத் திறக்க முடிந்தது. இயந்திரத்தின் இலக்கத்தை எழுதிக் கொண்டு தங்கள் காருக்குத் திரும்பினார்கள். காரில் அமர்ந்து கொண்டே, தங்கள் வேலைத் தோழனைத் தொடர்பு கொண்டார்கள். “கார் எஞ்சின் ஒன்றின்ரை நம்பர் அனுப்பிறன். அதைப் பற்றி தகவல் வேணும்” தகவல் உடனேயே வந்தது, “அந்தக் கார் இப்ப பதிவிலை இல்லை” “கடைசிப் பதிவு ஆரின்ரை பேரிலை இருந்தது?” “அது… ஹூஸைன் என்றவரின்ரை பேரிலைதான் கடைசியா இருந்திருக்கு. ஆளின்ரை இடம் ஒப்பன் வைலர்” “இந்த விபரத்தை மேலதிகாரிக்குச் சொல்லிவிடு” ஒப்பன் வைலர் ஸ்வேபிஸ் ஹால் நகரில் இருந்து பதினைந்து கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிறது. திடீரென பொலிஸாரைக் கண்டதும் ஹூஸைனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சம்பிராதய கேள்விகளுக்குப் பிறகு, “VW station wagon, கார் எங்கே?” அந்தக் காரைப் பற்றிக் கேட்ட போது, ஹூஸைனின் முகம் இன்னும் வெளிறியது. “வித்துப் போட்டன்” “யாருக்கு வித்தனீ?” ஹூஸைனின் தலை மெதுவாக நிலத்தை நோக்கி குனிய ஆரம்பித்தது. “ சரி கார் விற்ற ஒப்பந்தத்தைக் காட்டு” “கார் விக்குற போது ஒப்பந்தம் ஒண்டும் போட இல்லை” “அதெப்படி ஒப்பந்தம் இல்லாமல் கார் கை மாறிச்சு?” “வாங்கினவர் அதை, தான் பதிவு செய்யிறன் எண்டு சொன்னவர்” “ஓ, அப்பிடியோ? சரி என்ன விலைக்கு வித்தனீ?” “350 யூரோக்களுக்கு” பொலிஸாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஹூஸைன் தடுமாறிக் கொண்டிருந்தான். பொலிஸார் அங்கிருந்தே “நாங்கள் குற்றவாளியை அடையாளம் கண்டு விட்டோம்” என்று தங்கள் தலைமை அதிகாரிக்கு அறிவித்தார்கள், 01.02.2023 புதன்கிழமை. அதற்கு முதல் நாள் செவ்வாய்க் கிழமை காலையில் டானியலின் மனைவி, குழந்தைகளின் அறையை விட்டு வெளியே வந்த போது அதிர்ந்து விட்டாள். அவள் முன்னால் ஆயுதத்துடன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்5 points
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
இந்த நிகழ்ச்சியை காணொளியாக எடுப்பதற்கு விஜய் தொலைக்காட்சிக்கு மட்டுமே அனமதி கொடுக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். அதற்குப் பெருந் தொகைப் பணத்தை ஏற்பாட்டாளர்கள் வாங்கியிருப்பார்கய். அதனால்தான் முதலில் இலவல நிகழ்ச்சி என்று சொல்லிவிட்டு விஐபிக்களுக்கென்று கட்டணம் வ~லித்தார்கள். இலவச பார்வையாளர்களுக்கும் கட்டணப்பார்வையாளர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி விட்டு தடுப்புச் சுவர் அமைத்து அதற்கப் அப்பால் இலவச பார்வையாளர்களை நிறுத்து வைத்தார்கள்.அகன்ற தொலைக்காட்சித்திரைகளை ஏமாற்றுவதற்காக வைத்து விட்டு தரம் குறைந்த முசறயில் ஒளிபரப்பியதத மட்டுமன்றி தரமற்ற ஒலிபரப்பையும் வேண்டுமென்றே செய்தார்கள். அப்படி செய்தால்தான் பின்பு விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு வியாபாரம் களைகட்டும். அல்லது அதற்கு அனுசரணையாளர்கள் ஆதரவுகொடுக்க மாட்டார்கள். மக்களும் பார்க்க மாட்டார்கள்.தொலைக்காட்சியின் ரிஆர்பி ரேட்டும் ஏறாது.ஆனால் சிறந்த ஒலிஒளித்தொகுப்புடன் முற்றிலும் இலவசமாக நடந்த சந்தோஷ்நாரயணனின் இசை நிகழi;ச்சி எந்தக் குழப்பமும் இல்லாமல் இதே நடத்தில் நடந்து முடிந்திருக்கிறது. மக்களும் எந்தப் பிரச்சினையம் இல்லாமல்கண்டு களித்திருந்தார்கள்.மக்களை ஏமாற்ற ஏற்பாட்டாளர்கள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது. பழியாழ்ப்பாண மக்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கிறது.4 points
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
90 களில் முற்றவெளியில் நடந்த இசை நிகழ்ச்சி. யாழ் முற்றவெளி இசை நிகழ்ச்சி:- யாழ் முற்றவெளி முற்று முழுதாக மக்களினால் நிரம்பியிருந்தது, இசையினையும் நிகழ்ச்சிகளையும் காணக் கூடிய மக்களின் எண்ணிக்கை அளவிட முடியாதது. அடுத்தடுத்த நாள்களில் வெளிவந்த வீரகேசரி கூடிய மக்களின் தொகை 'ஐந்து இலட்சம் ' எனச் செய்தி வெளியிட்டது ( நிகழ்வில் தொடக்கம் முதல் இறுதி வரை இருந்தவன் என்ற முறையில் அரை மில்லியன் என்ற தொகை சற்று அதிகம் தான், பாதியளவு இருக்கலாம் என எண்ணுகின்றேன்). இலங்கைப் படையினர் நிகழ்வினை அச்சுறுத்திக் குழப்ப முயன்ற போது சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருந்தனவே தவிர மற்றும் படி, நிகழ்வு இறுதி வரை அமைதியாகவே இடம் பெற்றது. நிகழ்வினை ஒழுங்குபடுத்திய மாணவர்களில் நானும் ஒருவன் என்பதால் மேடை உட்படப் பல இடங்களுக்கும் சென்று வந்ததில் மது போதையில் ஒருவரைக் கூடக் காணவில்லை. எந்தவொரு கெட்ட சொல்லும் எங்குமே ஒலிக்கவில்லை. நள்ளிரவில் நிகழ்ச்சி முடிந்த போதும், நிகழ்வுக்கு வந்திருந்த பெண்கள் உட்பட யாருக்கும் எந்த அச்சுறுத்தலும் இருக்கவில்லை. தடுப்பரண்கள் எதுவுமில்லை. வெறும் கயிறு மட்டுமே மேடைக்கு முன் கட்டப்பட்டிருந்தது. கூடியிருந்த இலக்கக் கணக்கான ( இலட்சக் கணக்கான) இளைஞர்களில் யாருமே கயிற்றினைத் தாண்டி வர முயலவில்லை. அப்படிக் கட்டுக்கோப்பாக இசை நிகழ்ச்சி நடந்து முடிந்தது 23.04.1990 இல் ஒரு திங்கள் கிழமையன்று. இசை நிகழ்ச்சியினை நடாத்தியது தேனிசைச் செல்லப்பா. இந்தியப் படை வெளியேறிய பின்பு, இலங்கைப் படையுடனான சண்டை தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற நிகழ்வு அது. புலிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு. புலிகளின் மாணவர் ( SOLT) அமைப்பிடமே நிகழ்வினை ஒழுங்குபடுத்தி, மக்களை அமர வைக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. போராளிகள் மேடைப் பாதுகாப்பினையும், வெளிப் பாதுகாப்பினையும் மட்டுமே முதலில் பார்த்துக் கொண்டனர். அப்போது முற்றவெளிக்கு அருகே கோட்டையில் குடியிருந்த இலங்கைப் படையினரின் கண் முன்னமே நிகழ்வு நடந்தது, அதனால் முதலில் சீருடை அணிந்த/ ஆயுதம் தரித்த புலிகள் தமது இருப்பினை மறைத்து, ஊர்திகளுக்குள்ளேயும், மறைவிடங்களிலும் மட்டுமே இருந்தனர். படையினரும் முதலில் ஆயுதம் எதுவுமின்றி கோட்டை மதில் மீது வந்து அமர்ந்து வேடிக்கை மட்டுமே பார்த்தனர். மக்கள் கூடக் கூட, படையினருக்குப் பொறாமை வந்திருக்க வேண்டும். சிறிது சிறிதாக ஆயுதங்களை மக்கள் கூட்டம் முன் காட்டிக் கொண்டு வந்தனர். அதன் பின்னரே புலிகளும் ஆயுதங்களுடன் சுற்றி வர வெளிப் பாதுகாப்பினைப் பார்த்துக் கொண்டனர். இரு தரப்பினரும் சில மீற்றர் இடைவெளியில் ஆயுதங்களுடன் நேருக்கு நேர் நீட்டியபடி இருந்தனர். இசை நிகழ்ச்சி தொடங்கியது. மக்கள் எதனையும் பொருட்படுத்தவில்லை, இசையில் மூழ்கிக் கிடந்தனர். இதே யாழ் மக்கள் தான். நிகழ்வின் நோக்கமும், கருப்பொருளும் அப்படிப்பட்டவை. நம்புங்கள் இதே முற்றவெளிதான். முற்றவெளியில் அன்று ஒலித்த தேனிசைச் செல்லப்பாவின் குரல் இன்றும் காதில் ஒலிக்கின்றது- " நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும், நாட்டின் அடிமை விலங்கு உடைக்கும் " . ஆம் அன்று அங்கு கூடிய மக்களுக்கு ஒரு குறிக்கோள் இருந்தது, அதனால் ஒழுங்கும் இருந்தது, நேற்று முற்றவெளியில் அடிதடி செய்தோருக்கு பொதுவான இலக்கும் இல்லை, தனிப்பட்ட இலக்குகளுமில்லை. இலக்கில்லாத பயணங்கள் தறி கெட்டே போகும்.🙏🙏🙏 வாட்சப்பில் வந்தது3 points
-
புதனும் புதிரும்
3 pointsகவியார். ஜேர்மன்காரரின். மரியாதை காற்றில் பறக்கிறது தயவுசெய்து எழுதுவதை ஒரு மாதம் ஒத்தி வையுங்கள் 🤣🤣🤣3 points
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
ஜனநாயகத்தின் உச்சம் பல கட்சிகள் இருப்பது .... ஏக பிரநிதிகளாக புலிகள் இருந்த காரணத்தால் தான் எமக்கு சரியான தீர்வு கிடைக்க வில்லை என பலர் சொன்னார்கள் இப்ப பல குழுக்கள் உண்டு இலகுவாக மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணலாம்... எங்கே ? அன்று ஏக பிரநிதிகள் ,மாற்று கருத்துக்களை உள்வாங்குவதில்லை என குற்றசாட்டு... இன்று பல குழுக்களாக இருக்கின்றீர்கள் ...ஒரு தலமைத்துவதின் கீழ் வாங்கோ...பேசிக்கலாம் என்று சொல்லுறீயள்... ஒரு காலத்தில் எது நடந்தாலும் புலிகள் என கூறுபவர்கள் ....இன்று எது நடந்தாலும் புலம் பெயர் தமிழர்கள் மீது குற்றசாட்டு...3 points
-
பொழப்புத் தேடி - மலையகத்தான் கதடா
2 pointsPolappu Thedi| மலையகத்தான் கதடா 2 Album New Official Video Song 2024 மலையக சமுதாயத்தில் மலையக மக்கள் வாழும் வாழ்க்கை கதையை ஒரு பாடலாக தயாரித்து உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம் ❤️.2 points
-
புதனும் புதிரும்
2 pointsஅழகானது மட்டுமல்ல அமைதியையும் பழமையையும் பேணிக் காக்கும் ஒரு நகரம்தான், யேர்மனியில் இருக்கும் ஸ்வேபிஸ் ஹால் நகரம். இரண்டாம் உலகப் போரில் குண்டுகளுக்குத் தப்பியது மட்டுமல்லாமல் போர் நடந்து கொண்டிருந்த போது யேர்மனியின் பல நகரங்களுக்கு உணவுகளை வழங்கிய பெருமையையும் இந்த நகரம் தனக்குச் சேர்த்துக் கொண்டுள்ளது.. கோடை என்றில்லை குளிர் காலங்களிலும் பல சுற்றுலாப் பயணிகள் இந்த நகரத்துக்கு வந்து போவார்கள். இரவு நேரத்தில் தேவாலயப் படிக்கட்டுகளில் நடக்கும் நாடகங்களைப் பார்ப்பதற்கு என்றே வெளி நகரங்களில் இருந்து பலர் வருவார்கள். எனக்கு, ஸ்வேபிஸ்ஹால் நகரம் பிடித்துப் போனதால்தான், ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக நான் இந்த நகரத்திலேயே வாழ்கிறேன். இது எனது தாயகத்தில் நான் வாழ்ந்ததை விட அதிகமான வருடங்கள். சரி விடயத்துக்கு வருகிறேன். சனிக்கிழமைகளில் வரும் பத்திரிகையில்தான் அதிகமான விளம்பரங்கள் வருகின்றன. வீடு விற்பனைகள், வேலை வாய்ப்புகள், வர்த்தக விளம்பரங்கள், மரண அறிவித்தல்கள் என்று ஏகப்பட்டவை அடங்கி சனிக்கிழமைப் பத்திரிகை ஊதிப் பெருத்துப் போய் இருக்கும். 17.12.2022 அன்று வந்த பத்திரிகையிலும், வழமைபோலவே எல்லா விடயங்களும் இருந்தன. அதில், மரண அறிவித்தல்கள் பகுதியில் எடித் லாங் (86), 14.12.2022, புதன்கிழமை காலமாகிவிட்டதாகவும் அவரது உடல் 19.12.2022 அன்று தகனம் செய்ய இருப்பதாகவும் தகவல் இருந்தது. என்னைப் போலவே, எடித் லாங்கினைத் தெரியாதவர்கள் அந்த அறிவித்தலைக் கடந்து போயிருப்பார்கள். ஆனால் எடித் லாங்கின் மரணம் ஒரு கிழமை கழித்து செய்தி ஒன்றைச் சொல்லக் காத்திருந்தது. எடித் லாங்கின் வீட்டில் இருந்து 315 மீற்றர் தூரத்தில் வசித்த இன்னும் ஒரு மூதாட்டி, எடித் லாங்கின் இறப்புக்குப் பின் ஒரு கிழமை கழித்து 21.12.2022,புதன் கிழமை அன்று இறந்து போனார். ஒரு கிழமை இடைவெளியில் அதுவும் சொல்லி வைத்தது போல் புதன்கிழமையில் அருகருகே வசித்த இரு மூதாட்டிகளுக்கு மரணம் சம்பவித்திருந்தது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. விசாரணைகளின் பின்னர், எடித் லாங்கின் மரணம், அவர் தரையில் தவறி விழுந்ததால் ஏற்பட்டது என அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் மற்றைய மரணம் ஒரு கொலை என்று அறிவிக்கப்பட்டது. நகரில் சந்தைக்கு வந்தவர்கள், வீதிகளில் சந்தித்துக் கொண்டவர்கள் என எல்லோர் வாய்களும் இந்த மரணங்களைப் பற்றிப் பேசிக் கொண்டன. “ஒருவேளை எடித் லாங்கின் மரணமும் கொலையாக இருக்குமோ?” என்ற சந்தேகம் மெதுவாக எழுந்தது. அதில் உண்மையும் இருந்தது. அமைதியாயிருந்த ஸ்வேபிஸ் ஹால் நகரம் மெது மெதுவாக அதை இழந்து கொண்டிருந்தது. அடுத்தடுத்து இரண்டு மரணங்கள். அதில் ஒன்று விபத்து, மற்றது கொலை, அதுவும் இரண்டும் சிறிய இடைவெளிகளில் உள்ள வீடுகளில் நடந்ததுள்ளன. இதையிட்டு ஸ்வேபிஸ் ஹால் நகரம் வெலவெலத்துப் போயிருந்த நேரத்தில், 25.01.2023 அன்று, அட அதுவும் கூட ஒரு புதன் கிழமைதான், நகரத்தில் இருந்து ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த மிஹேல்பாக் என்ற கிராமத்தில் 89 வயதான இன்னுமொரு மூதாட்டி, இறந்து போனார். 'அவரது இறப்பும் கொலைதான்' என விசாரணைகளை முடித்த பொலிஸ் உயர் அதிகாரி அறிவித்தார். யேர்மனியின் ஒரு ஓரமாக அமைதியாக இருந்த ஸ்வேபிஸ் ஹால் நகரம், அரச, தனியார் வானொலிகளில்,தொலைக்காட்சிகளில். இணையத் தளங்களில், சமூக வலைத்தளங்களில்... என்று எல்லாவற்றிலும் அடிபட்டுக் கொண்டிருந்தது. கொலைச் செய்திகளை வாங்கி, வெளி நாடுகளிலும் தங்கள் தங்கள் மொழிகளில் ஊடகங்களில் வெளியிடத் தொடங்கினார்கள். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். ஸ்வேபிஸ் ஹால் நகரத்தில் புதன் வந்தாலே நடுக்கம் வர ஆரம்பித்திருந்தது. வயோதிபம் வந்தாலே நடுக்கம் தானாக வந்து விடும். புதன் வந்தாலே ஸ்வேபிஸ் ஹாலில் முதியவர்கள் இன்னும் நடுங்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த நேரத்தில் இன்னொரு கொலையும் எல்லோர் கவனத்துக்கும் வந்தது. ஏற்கெனவே திகிலாகப் பேசப்பட்ட அந்தக் கொலை 2020 இல் நடந்தது. எல்பிரிடே கூகெர் என்பவர் ஸ்வேபிஸ் ஹால் நகரத்தில் தனிமையில் வசித்து வந்தவர். அவர் பியர் தயாரிக்கும் ஒரு நிறுவனத்துக்குச் சொந்தக்காரி. பெரும் செல்வந்தரான அவர் கொலை செய்யப்பட்டிருந்ததும் ஒரு புதன் கிழமைதான். ‘புதன் கிழமைகள் கொலையாளிக்குப் பிடித்த நாள் போல’ என்று பத்திரிகையும் ஒரு குண்டைத் தூக்கிப் போட எழுபதுக்கு மேலே உள்ளவர்கள், அடுத்த புதன் “ நீயா?, நானா? எதுக்கும் வியாழக்கிழமை இருந்தால் பார்ப்போம்” எனப் பேச ஆரம்பித்தார்கள். “கொரோனா வந்து கனக்க வயது வந்தவர்களை அள்ளிக் கொண்டு போயிட்டுது. இப்ப கொலையாளி ஒருத்தன் வந்திருக்கிறான். பொலிஸ் என்னதான் செய்து கொண்டிருக்கு?” என மக்களிடம் இருந்து முணு முணுப்பு வர ஆரம்பித்தது. “தனி ஒரு கொலையாளியா? அல்லது ஒரு குழுவா? கொலைக்கான காரணம் என்ன? இறந்து போன மூவர்களிடம் பெரியளவில் பணம் இருக்கவில்லை. ஒருவேளை பணம் இருக்கிறது என்று போய், எதுவும் கிடைக்காது ஏமாந்து போனதால், கொள்ளையடிக்க வந்தவன்/ வந்தவர்கள் கொலைகளைச் செய்தானா/செய்தார்களா? உறவுகளுக்குள் சொத்துப் பிரச்சினை ஏதாவது இருந்து அதனால் கொலைகள் நடந்திருக்குமா? வெவ்வேறு காரணங்களுக்காக நடத்தப்பட்ட கொலைகளை ஒன்றாக ஒரு புள்ளியில் இணைத்துப் பார்க்கிறோமா?” என்று பலவிதமான சந்தேகங்களும் ஊகங்களும் எழுந்தன. பொலிஸாரால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. திணறினார்கள்..2 points
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
நாடுமுழுவதிலும் இருந்து வந்துதான் இவ்வளவு இலட்ஷக்கணக்கான மக்கள் வருகை புரிந்துள்ளார்கள்......நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் நடந்ததால் யாழ்ப்பாண மக்கள் என்று குறிப்பிட்டு சொல்வது அபத்தமானது........எதோ நடந்து விட்டது .......சும்மா ஒரு பத்து, நூறுபேர் போதையில் குழப்பம் செய்தாலே மேற்கொண்டு நிகழ்ச்சி நடத்துவது சிரமமாகிவிடும்......அதுதான் நடந்திருக்கின்றது...... இதுபோன்ற கலைஞர்களின் நிகழ்ச்சிகளை மிகவும் பலமான உயரமான மேடைகள் அமைத்துத்தான் இங்கெல்லாம் நடத்துகிறார்கள்......அப்போதுதான் சனம் முண்டியடிக்காமல் எட்டத்தில் நின்று பார்க்கும்......!2 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
2 points
- அமெரிக்கா: இரானிய இலக்குகள் மீது பதிலடி தாக்குதல் - சிரியா, இராக்கில் என்ன நடக்கிறது?
தமிழரது போராட்டத்தின் நியாயமும், அவர்கள் மேல் நடத்தப்பட்ட அட்டூழியங்களையும் அறிந்திராத அற்பர்கள் தமது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் எதையும் எழுதலாம். இப்பதர்களிடமிருந்து நான் எதிர்ப்பார்ப்பதற்கு எதுவும் இல்லை. தாம் எழுதுவதைத் தாமே வாசித்து இன்புறலாம், வாழ்த்துக்கள்!2 points- தமிழரசுக் கட்சி ஒட்டுமா உடையுமா? - நிலாந்தன்
2 points- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
2 pointsபஸ்வண்டிப் படுகொலைகள் கடந்த அத்தியாயங்களில் தாக்கிவிட்டு மறையும் தந்திரத்திலிருந்து விடுபட்டு, நின்று சண்டையிடும் கெரில்லாக்கள் எனும் நிலைமைக்கு புலிகள் இயக்கத்தை பிரபாகரன் மாற்றிய சந்தர்ப்பங்கள் குறித்தும் அது எவ்வாறு முதலாவது ஈழப்போராக பரிணமித்தது என்பது குறித்தும் எழுதியிருந்தேன். இந்த மாற்றம் 1984 ஆம் ஆவணி மாதம் 4 ஆம் திகதில் கடலில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பிரபாகரனின் ஊரான வல்வெட்டித்துறை மீது இராணுவமும், கடற்படையும் சேர்ந்து நடத்திய கொடூரமான பழிவாங்கல்த் தாக்குதல்களுடனும் ஏக காலத்தில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களுடனும் ஆரம்பமானது. இராணுவத்தினரின் பழிவாங்கல்த் தாக்குதல்களுக்கான பதிலை ஆவணி 5 ஆம் திகதி நெடியகாடு பகுதியில் பொலீஸ் கொமாண்டோக்கள் மீது தாக்குதல் நடத்தி பொலீஸ் அத்தியட்சகர் ஜயசுந்தர உட்பட 8 பொலீஸாரைக் கொன்றதன் மூலமும், ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையத்தைத் தாக்கி பொலீஸ் பரிசோதகர் கணேமுல்லை உட்பட இன்னும் ஏழு பொலீஸரைக் கொன்றதன் மூலமும் புலிகள் கொடுத்தார்கள். தமது சகாக்களின் இழப்புகளுக்கான பழிவாங்கல்த் தாக்குதல்களில் இராணுவத்தினர் ஈடுபடத் தொடங்கினர். யாழ்ப்பாணத்தில் பொதுமக்களைக் கண்மூடித்தனமாகச் சுடத் தொடங்கிய இராணுவத்தினர், தனியார் கட்டடங்களுக்கும் தீவைத்தனர். யாழ்ப்பாணத்தில் ரோந்துவந்த இராணுவக் கவச வாகனம் மீது புலிகள் கிர்னேட் தாக்குதலை நடத்தி பெற்றொல்க் குண்டுகளை அதன் மீது வீசியபோது அது சேதமடைந்தது. புலிகளுடன் இணைந்துகொண்ட பொதுமக்கள் வீதிகளை அடைத்து மூடியதன் மூலம் இராணுவத்தினரின் போக்குவரத்தினைத் தடுத்தனர். அதிலிருந்து நிலைமை மோசமாகத் தொடங்கியது. வவுனியாவின் பொலீஸ் அத்தியட்சகர் ஆதர் ஹேரத் புலிகளால் கொல்லப்பட்டபோது பொலீஸார் பல பொதுமக்களை சுட்டுக் கொன்றனர். சுண்ணாகப் பொலீஸ் நிலையப் படுகொலையும், நாவற்குழியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் இராணுவத்தால் இழுத்துச் சென்று சுட்டுக்கொல்லப்பட்டமையும் தமிழ் மக்களைப் பெரிதும் ஆத்திரம் கொள்ள வைத்தது. மேலும் மன்னாரில் இராணுவத்தினரின் ரோந்து அணிமீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலுக்கு பழிவாங்கும் தாக்குதல்களை இராணுவத்தினர் மேற்கொண்டபோது மக்கள் புரட்சியின் பிரதேசம் விரிவடையத் தொடங்கியது. வல்வெட்டித்துறை மற்றும் ஊர்காவற்றுரை பொலீஸ் நிலையங்கள் மீதான புலிகளின் தாக்குதல்கள், கரவெட்டி, நீர்வேலி, பருத்தித்துறை, கொக்கிளாய் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதல்களுக்கு இராணுவத்தினர் மிகவும் மூர்க்கத்தனமான பழிவாங்கல்த் தாக்குதல்களை பொதுமக்கள் மேல் கட்டவிழ்த்து விட்டனர். ஹாட்லீக் கல்லூரி 2008 பருத்தித்துறை நகருக்கு அண்மையாக அமைந்திருக்கும் திக்கம் பகுதியில் பொலீஸார் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 5 பொலீஸார் கொல்லப்பட்டனர். இதற்குப் பழிவாங்க இராணுவம் நடத்திய தாக்குதலில் 16 பொதுமக்கள் அப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர். வடமாராட்சியின் புகழ்பூத்த கல்லூரியான ஹாட்லீக் கல்லூரிக்குள் நுழைந்த இராணுவத்தினர் சுமார் 100 ஆண்டுகள் பழமையான கல்லூரி நூலகத்தையும், இரசாயண ஆய்வுகூடத்தையும் எரித்து நாசமாக்கினர். கல்லூரி மாணவர்களை தூண்டிவிடும் நோக்கில் கல்லூரி வாயிலில் வேண்டுமென்றே பொலீஸ் கொமாண்டோக்களின் சோதனைச் சாவடியொன்று அமைக்கப்பட்டது. இதனையடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்துப் பாடசாலைகளிலுமிருந்த மாணவர்கள் இப்பொலீஸ் நிலையத்தை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு தமிழ் மக்கள் அனைவருமே இராணுவத்திற்கும், பொலீஸாருக்கும் எதிரான நிலைப்பாட்டினை எடுக்க ஆரம்பித்தனர். சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கம் பருத்தித்துறையில் பொதுமக்கள், இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டமையினைக் கண்டித்திருந்தார். அதற்கு ஏளனமாகப் பதிலளித்த லலித் அதுலத் முதலி, "யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது என்று அமிர்தலிங்கத்திற்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டிருந்தார். "தமிழர்கள் அமிர்தலிங்கத்தையும் அவரது சகாக்களையும் முற்றாக நிராகரித்து விட்டார்கள்" என்றும் லலித் கூறினார். தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வந்த தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை கண்டித்து, அதுகுறித்து விளக்கமளிக்குமாறு சர்வதேச அழுத்தம் லலித் அதுலத் முதலி மீது பிரயோகிக்கப்பட்டு வந்தது. தனது வாதத் திறமையினை வைத்து இவ்வகையான சவால்களை அவர் எதிர்கொள்ளத் தொடங்கினார். "சுண்ணாகம் சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்ணொருவரை விமானப்படையினர் சுட்டுக் கொன்றது எதற்காக?" என்று பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் ஜெரமி கோர்பின் லலித்திடம் வினவியபோது, "சந்தையின் கூரையின் மீதிருந்த பயங்கரவாதிகளை விமானப்படையினர் வானிலிருந்து சுடும்போது சன்னங்கள் கூரையினைத் துளைத்துக்கொண்டு வியாபாரிகள் மேல் பாய்ந்திருக்கலாம்" என்று பதிலளித்தார். ஜெரமி கோர்பின் வல்வெட்டித்துறையில் புலிகளுடனான கடற்சண்டையின் பின்னரும், நெடியகாட்டில் கண்ணிவெடித் தாக்குதலில் பலமான இழப்புக்களைச் சந்தித்ததன் பின்னரும் கடலில் இருந்து வல்வெட்டித்துறை, பருத்தித்துறை ஆகிய பகுதிகள் நோக்கி கடற்படையினர் பீரங்கித் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்திவந்தனர். திக்கம் பகுதியில் மேலும் இழப்புக்களை பொலீஸார் சந்தித்ததையடுத்து இப்பீரங்கித்தாக்குதல்களின் வீரியம் அதிகரித்துக் காணப்பட்டது. கரையோரக் கிராமங்கள் மீது கடலில் இருந்து பீரங்கித் தாக்குதல் நடத்துவதென்பது அன்றாட நிகழ்வாகிப்போனது. புரட்டாதி முதாலம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை பருத்தித்துறையில் கத்தோலிக்க மதகுரு ஒருவர் அன்றைய நாள் திருப்பலியை ஒப்புக்கொடுக்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கையில், திடீரென்று கடற்படையினர் கடலில் இருந்து பீரங்கித் தாக்குதலை ஆரம்பித்தனர். இத்தாக்குதலில் ஆலயமும், குருவானவரின் தங்கும் அறையும் சேதமடைந்தது. ஆலயத்திற்கு அருகில் இருந்த பல வீடுகளும் சேதமடைந்தன. புரட்டாதி 15 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் செருப்புத் தைக்கும் தொழிலாளியான தங்கத்துரையின் குடிசையின் முன்னால் செல் வீழ்ந்து வெடித்ததில் தலையில் குண்டுச் சிதறல்கள் பட்டு மனைவி அவ்விடத்திலேயே உயிர் துறக்க, தங்கத்துரை நிரந்தரமாகவே அங்கவீனரானார். இராணுவத்தினர் ரோந்து சுற்றும் கவச வாகனங்களில் இருந்தும் பீரங்கித் தாக்குதல்கள் மக்கள் மனைகள் மீது கண்மூடித்தனமாக நடத்தப்பட்டது. இத்தாக்குதல்களில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டபோது பலர் அங்கவீனர்களாயினர். மக்களின் அன்றாட வாழ்வும் முடங்கிப் போனது. 1984 ஆம் ஆண்டு புரட்டாதி 10 ஆம் திகதி கொக்கிளாயில் இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் ஒன்பது இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மறுநாள் சம்பவ இடத்திற்குச் சென்ற இராணுவத்தினர் வீதிகளில் தென்பட்ட நான்கு தமிழர்களைச் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் புலிகள் என்று இராணுவத்தின்னர் அறிவித்தபோது, மறுத்த புலிகள், அவர்கள் அனைவரும் பொதுமக்கள் என்று கூறியிருந்தனர். பஸ் படுகொலையும் கூட்டுப் பாலியல் வன்புணர்வுகளும் - 11, புரட்டாதி 1984 அதேநாள், புரட்டாதி 11 ஆம் திகதி இரவு, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பஸ்வண்டியை 46 பயணிகளுடன் கடத்திச் சென்ற இராணுவத்தினர், 60 வயதுச் சாரதி உட்பட 17 பேரைச் சுட்டுக் கொன்றனர். இப்படுகொலை தொடர்பான விடயங்களை யாழ்ப்பாணத்துப் பத்திரிக்கைகள் விலாவாரியாக செய்தியுடன் விளக்கியிருந்தன. ஈழநாடு பத்திரிக்கை இப்படுகொலையில் உயிர் தப்பிய 29 வயதுடைய கிறிஸ்ட்டோபர் பஸ்டியாம்பிள்ளை ஆனந்தராஜாவை பேட்டி கண்டிருந்தது. அப்பேட்டியின் குறிப்பிடப்பட்ட விடயங்கள் வருமாறு, "நான் எனது சித்தியுடன் கொட்டாஞ்சேனையில் வாழ்ந்து வருகிறேன். யாழ்ப்பாணம் செல்வதற்காக தனியார் கடுகதி பஸ்வண்டியில் இரவு 8 மணிக்கு கொழும்பு, புறக்கோட்டையில் ஏறினேன். அவ்வண்டியில் 46 பயணிகளும், இரு சாரதிகளும் இருந்தனர். அவர்களுள் ஒருவர் தமிழர், மற்றையவர் சிங்களவர். பயணிகளில் 10 இலிருந்து 15 வரையானவர்கள் பெண்கள். அவர்களில் இருவர் இளவயதுப் பெண்கள். அதிகாலை 2 மணிக்கு தேனீர் அருந்துவதற்காக றம்பாவ எனும் இடத்தில் வண்டி நிறுத்தப்பட்டது. அதுவரை வண்டியை சிங்களச் சாரதி ஓட்டிவந்திருக்க, அப்போதுதான் தமிழ்ச் சாரதி ஓட்டும் பொறுப்பினை எடுத்திருந்தார். வவுனியாவிற்கு இன்னும் 10 கிலோமீட்டர்களே இருக்க வீதியோரத்தில் நின்ற ஐந்து இராணுவத்தினர் வண்டியை மறித்தார்கள். அவர்கள் அனைவரும் திடகாத்திரமானவர்களாக இருந்ததுடன், ஒருவர் மட்டுமே சீருடையினை அணிந்திருந்தார். அவர்கள் மறிக்கவே, சாரதியும் வண்டியை நிறுத்தினார்". "பஸ்வண்டியில் ஏறிக்கொண்டதும், சீருடையில் காணப்பட்ட இராணுவத்தினன், "பஸ்வண்டியில் பயங்கரவாதிகள் எவராவது இருக்கிறார்களா என்று தாம் சோதனை செய்யவேண்டும்" என்று கூறினான். அவர்கள் அனைவரும் நிறைபோதையில் இருப்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்த துப்பாக்கிகள் குண்டுகள் ஏற்றப்பட்டுத் தயார் நிலையில் இருந்தன. அவர்களில் ஒருவன் தமிழர்களைக் கேவலமாகத் திட்ட ஆரம்பித்தான். "சிங்கள இராணுவத்தினரைக் கொன்றுவிட்டு விலைமாதர்களுக்குப் பிறந்த தமிழர்கள் சொகுசு பஸ் வண்டிகளில் பயணிக்கிறீர்களா" என்பது போன்ற மிகக் கேவலமான தூஷண வார்த்தைகளை அவன் பாவித்துத் திட்டினான். "முறைதவறிப் பிறந்த தமிழர்கள் எமது பொலீஸ் காரர்களில் எட்டுப் பேரை இன்றிரவு கொன்றிருக்கிறீர்கள், அதற்குப் பழிதீர்க்க உங்கள் அனைவரையும் நாம் இப்போது கொல்லபோகிறோம்" என்று அவன் கர்ஜித்தான்". "எனக்கு நடுங்கத் தொடங்கியது. பதற்றமாகிப் போனது. நான் பிரார்த்திக்கத் தொடங்கினேன். தமிழ்ச் சாரதியை வாகனத்தை விட்டு இறங்குமாறு சீருடையில் நின்ற இராணுவத்தினன் கட்டளையிட்டான். அதற்கு இணங்க மறுத்த சாரதி, "பயணிகளின் பாதுகாப்பு எனக்கு முக்கியமானது" என்று பணிவுடன் பதிலளித்தார். உடனேயே அவரை துவக்கின் பின்புறத்தால் அவன் கடுமையாகத் தாக்கினான். தான் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது அவர் "முருகா, முருகா, இந்த மக்களையெல்லாம் காப்பாற்று" என்று பலத்த குரலில் கத்தத் தொடங்கினார். பஸ்ஸைவிட்டு இறங்கும்படி வற்புறுத்தப்பட்ட அவரை, ஓடும்படி அவர்கள் பணித்தார்கள். அவரும் வீதியின் ஓரத்தில் இருந்த பற்றையொன்றினை நோக்கி ஓடத் தொடங்கினார். அவர் ஓடிக்கொண்டிருக்கும்போதே அவர் மீது ஒருவன் துப்பாக்கியால் சுட்டான், அவர் அவ்விடத்திலேயே இறந்து வீழ்ந்தார்". "அதன்பின்னர் பஸ்ஸிலிருந்த பயணிகளில் இளைஞர்களை அவர்கள் வெளியே இழுத்து எடுத்தார்கள். நான் எனது இருக்கையின் கீழ் பதுங்கிக் கொண்டேன். கீழே இறக்கப்பட்ட இளைஞர்களை ஓடும்படி கட்டளையிட்டு, அவர்கள் ஓடத் தொடங்கியதும் அவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கித்தாக்குதலை நடத்தினார்கள். அந்த இளைஞர்கள் அனைவரும் இறந்து வீழ்ந்தார்கள்". "பின்னர், நான் இருந்த இருக்கைப் பக்கம் வந்த ஒருவன் என்னை பிடித்து வெளியே இழுத்தான். தாம் வைத்திருந்த துப்பாக்கியின் பின்புறத்தால் என்னைச் சரமாரியாகத் தாக்கினார்கள். அவர்களில் ஒருவன் எனது முகத்தில் தான் அணிந்திருந்த பூட்ஸ் காலினால் பலமாக உதைந்தான். பஸ்ஸில் இருந்து வெளியே குதித்த நான் அதன் அடிப்பகுதியில் சென்று பதுங்கிக்கொண்டேன். அப்போதுதான் இன்னும் நான்கு பயணிகள் பஸ்ஸின் கீழ் பதுங்கியிருப்பது எனக்குத் தெரிந்தது". "என்னைக் கைவிட்டு விட்டு பஸ்ஸில் இருந்த இரு இளம் பெண்களிடம் அவர்கள் சென்றார்கள். நாம் மெது மெதுவாக பஸ்ஸின் அடிப்பகுதியில் இருந்து ஊர்ந்து சென்று அருகிலிருந்த காட்டிற்குள் ஒளிந்துகொண்டோம். அங்கிருந்து நீண்ட நேரம் நடந்து தமிழ்க் கிராமம் ஒன்றினை நாம் அடைந்தோம். அங்கிருந்து தப்பி வந்தோம்" என்று ஆனந்தராஜா கூறினார். இப்படுகொலையில் இருந்து உயிர் தப்பிய இன்னொருவர் 64 வயதுடைய கந்தையா பரமநாதன். பஸ்ஸில் நடந்த ஏனைய அநர்த்தம் குறித்து அவரிடம் பேட்டி காணப்பட்டது. கொழும்பில் தமிழர்கள் பெருவாரியாக வாழும் வெள்ளவத்தைப் பகுதியில் இருந்து தான் பஸ்ஸில் ஏறிக்கொண்டதாக அவர் கூறினார். "நான் றம்பாவ பகுதியில் பஸ்ஸை விட்டு இறங்கவில்லை. நான் ஒரு இருதய நோயாளி. இராணுவத்தினர் பஸ்ஸில் ஏறிய வேளை நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேன். யாரோ உரத்த குரலில் பேசுவது கேட்டு நான் விழித்துக்கொண்டேன். அவர்களில் ஐந்து பேர் இருந்தனர். ஒருவன் மட்டுமே சீருடையில் இருந்தான். மற்றைய நால்வரும் கட்டைக் காற்சட்டையும் டீ சேர்ட்டும் அணிந்திருந்தார்கள். அவர்கள் எல்லோருமே இராணுவத்தினர்தான் என்பதை நாம் புரிந்துகொண்டோம்". "அவர்கள் முதலில் சாரதியைச் சுட்டார்கள். பின்னர் இளைஞர்களைக் கொன்றார்கள். இளவயதுப் பெண்களையும், ஏனைய பெண்களையும் வெளியே இழுத்து எடுத்தார்கள். பெண்கள் ஓவென்று கதறியழவே நாம் உரத்த குரலில் சத்தமிடத் தொடங்கினோம். எம்மை அமைதியாக இருக்கும்படி அதட்டிய அவர்கள், இல்லாதுவிடில் அனைவரையும் சுட்டுக் கொன்றுவிடப்போவதாக மிரட்டினார்கள். பின்னர் பெண்கள் அனைவரையும் அவர்கள் பற்றைகளுக்குள் இழுத்துச் செல்ல நான் மயங்கிவிட்டேன்" என்று கந்தையா பரமநாதன் கூறினார். இக்கொடூரமான பஸ் படுகொலைகள் சென்னையில் தங்கியிருந்த முன்னணியின் தலைவர்களை கவலைப்படுத்தியிருந்தது. அனைத்துக் கட்சி மாநாடு புரட்டாதி 21 வரை பிற்போடப்பட்டது. அதன் இறுதிக் கூட்டமான புரட்டதி 3 ஆம் திகதி சந்திப்பில், அதிகாரப் பரவலாக்கலுக்கான அலகு குறித்து நெகிழ்வான தன்மையினை ஜெயார் காண்பித்திருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியினரும், பெளத்த மகா சங்கத்தினரும் மாவட்ட அபிவிருத்திச் சபைக்கு அதிகமாக எதனையும் தமிழர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்று வாதிட்டு வந்த நிலையில், இந்தியா, மாகாணசபை வரை அலகு விஸ்த்தரிக்கப்படலாம் என்று எதிர்ர்வுகூறத் தொடங்கியது. அமிர்தலிங்கம் கடுமையான தொனியில் ஜெயாருக்கு தந்தியொன்றினை அனுப்பினார். "இராணுவம் அப்பாவிப் பஸ் பயணிகளைப் படுகொலை செய்யும்போது அதன் அரசாங்கத்துடன் நாம் எப்படிப் பேசுவது?" என்று அவர் கேள்வியெழுப்பியிருந்தார். முன்னணியினது விமர்சனத்தையடுத்து இந்தியாவும் ஜெயவர்த்தன மீது அழுத்தம் கொடுத்தது. சர்வதேச ஊடகங்களிலும் இச்செய்தி வெளிவந்தபோது வேறு வழியின்றி இப்படுகொலைகளை விசாரிக்க பொலீஸ் குழுவொன்றினை ஜெயார் அமைத்தார். படுகொலை நடைபெற்ற இடத்திற்குச் சென்ற பொலீஸ் குழு, சேதப்படுத்தப்பட்டு, அநாதரவாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பஸ் வண்டியையும், அருகில் இருந்த புதர்களுக்குள் பெண்கள் அணியும் ஆடைகள் ஆங்காங்கே வீசப்பட்டுக் கிடப்பதையும் கண்டனர். புரட்டாதி மாதத்தின் இறுதிப்பகுதியிலும், ஐப்பசி மாதம் முழுவதிலும் தமது கண்ணிவெடித் தாக்குதல்களை புலிகள் தொடர்ச்சியாக நடத்தி வந்தனர். புரட்டாதி மாதத்தின் 3 ஆம் வாரத்தில் நடந்த தாக்குதலில் இரு பொலீஸார் கொல்லப்பட்டனர்.புரட்டாதி 22 ஆம் திகதி கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அரச பேச்சாளர் தமிழ்நாடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயங்கரவாதிகளின் படகைக் கடற்படையினர் தாக்கி அழித்தபோது 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறினார்.2 points- கனடாவில் வாழ முடியாமல் இந்தியர்கள் பலர் நாடு திரும்புவது ஏன்?
இந்தியர்கள் என்று சொல்லும்போது இங்கு இந்திய மாணவர்களை சொல்கிறேன். படிக்க என்று வருபவர்கள் வீட்டு வாடகை, உணவுப்பொருட்கள் என்பதை இருக்கும் பணத்தில் சமாளிக்க முடியாமல் இருக்கிறார்கள். பகுதி நேர வேலை எடுக்க முனையும்போது அது கிடைப்பதில்லை.இரண்டு மூன்று இடங்களில் சில மணித்தியால இரவு வேலை செய்வதால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. உணவுத்தேவைக்காக food bank எனும் (வறுமைக்கு கோட்டிற்குள் வாழும் கனடா மக்களுக்கு இலவசமாக கொடுக்கும் )அரச உலர் உணவு பெற அங்கு வரிசையில் நிற்கிறார்களாம்.மொத்தத்தில் "இவர்கள் " எதிர்பார்த்து வந்ததில் ஏமாற்றமே எனவே நாடு திரும்ப நினைக்கிறார்கள்.2 points- யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
மேலே உள்ள படங்களில் உள்ள ஒழுக்கமான மனிதர்களும் யாழ்ப்பாணத்தில் தான் வாழ்ந்தார்கள் .அதே முற்ற வெளி , தலைவரின் சுதுமலை பிரகடனத்தில் நம் மக்கள் நிற்கும் நிலையை பாருங்களேன் எத்தனை நேர்த்தி..!2 points- அமெரிக்கா: இரானிய இலக்குகள் மீது பதிலடி தாக்குதல் - சிரியா, இராக்கில் என்ன நடக்கிறது?
இது எமக்கு மட்டுமன்றி இந்த நூற்றாண்டில் விடுதலைக்காக போராடும் அத்தனை சிறுபான்மை இனங்களுக்கும் பொருந்தும்.. அது மட்டுமின்றி இந்தியா போன்ற பல தனித்துவ இனங்களை நசுக்கி மேற்குலகி விட்டுச்செல்லும்போது நாடாக உருவாக்கப்பட்டிருக்கும் பெரிய நாடுகளில் மொழியை கலாச்சாரத்தை காக்கப்போராடும் சிறுபான்மை இனங்களுக்கும் பொருந்தும்.. உடையார் எழுதியது இந்த நூற்றாண்டில் உலகம் முழுவதும் நசுக்கப்பட்டும் அளிக்கப்பட்டும் கொண்டிருக்கும் சிறுபான்மை இனங்களின் வரலாற்று துயரத்தின் விதை/வேர்.. இந்த நூற்றாண்டில் விடுதலைக்காக போராடும் மற்றும் போராடிய இனங்களின் அந்த போராட்ட தேவையின் ஆரம்ப புள்ளியை தேடிப்போனால் உடையார் எழுதியதில்தான் வந்து நிற்கும்.. இன்று உணவும் உடையுளும் தந்து நம்மை வாழவிட்டிருக்கிறார்கள் என்பதற்காக நாம் உட்பட பலநூறு சிறிபான்மை இனக்குழுக்களின் கட்டப்பொம்மன்களாக நாம் மாறி மேற்கை சகட்டுமேனிக்கு போற்ற முடியாது..2 points- அக்காவின் அக்கறை......!
1 pointஅக்காவின் அக்கறை அன்பாய் என்னை அருகிலிருத்தி வலிக்காமல் தலைவாரி வகிடெடுத்த பின்னாலே சித்திரமாய் திலகமிட்டுடுவாள் தந்தையே தடியெடுத்திடினும் தானோடி வந்து தாவியெடுத்தென்னை தன்னோடணைத்து தான் அடிவாங்கி என்துயர் போக்கிடுவாள் முழுபாவாடையை முன் இடுப்பில் சொருகி எட்டுக்கால் கோட்டில் எம்பி எம்பி ஆடுகையில் பின் எல்லோரையும் தள்ளி விட்டு எஞ்ஞான்றும் அவளே ஜெயித்திடுவாள் கபடி விளையாடுகையில் கிளிபோலப் பறந்து பறந்து காலாலே கலங்கடித்து காளையரையும் விரட்டிடுவாள் எதிர் வீட்டு முகுந்தனிடம் மட்டும் எப்போதும் சண்டையும் சச்சரவும் கேலிசெய்து கொண்டு அவன் ஓட ஓட கோலிகுண்டால் எறிந்து கொண்டு பின்னாலே ஓடுவாள் முற்றத்து மாமரத்தில் கொக்கத்டியெடுத்து முற்றிய மாங்காய்களை நான் பறிக்கையில் முன்னால் வந்த அக்காளும் தடியெடுத்து தனக்கும் ரெண்டு பிஞ்சு பறித்துக்கொண்டாள் அக்காளும் முன்போல் இல்லை குறும்புத்தனமும் குறைஞ்சு போச்சு தடியெடுத்த தந்தையும் "யாரடி அவன்" என்று தளராமல் அடிக்கின்றார் அக்காளை அன்று என்னைப் பொத்திக் காத்தவளை அருகில் நெருங்கவும் என்னால் முடியவில்லை குறுக்கேவந்த அம்மாவுக்கும் குறைவின்றி அடிவிழுது வாடிய மலர்க்குவியலாய் மண்ணில் புரளும் அக்காள் படலையை தள்ளியே பதற்றமாய் வந்தாள் மாமி தந்தையிடம் தடியைப் பிடுங்கி எறிந்தாள் உன்ர பிள்ளையை நீ அடி அல்லது கொல் -ஆனால் என்ர வாரிசை வம்சத்தை அழிக்க உனக்கேது உரிமை விக்கித்து நின்ற அப்பாவை விலக்கிவிட்டு -அக்காளை அணைத்தெடுக்கையில் அருகே வருகின்றான் முகுந்தனும் இரு இறக்கைக்குள் குஞ்சுபோல் கூடவே அக்காள் செல்ல அம்மாவின் முகத்தில் நிம்மதி, அண்ணாந்து ஆகாசம் பார்க்கிறாள்......! ஆக்கம் சுவி ......! யாழ் அகவை 26 க்காக ........!1 point- இன்றைய ஸ்பெசல்
1 pointசன்பிரான்ஸ்சிஸ்கோவில் 3 மாத. த்துக்கொரு தடவை தான் நண்டு பிடிக்க விடுவார்களாம். நேற்றைய தினம் கடலுக்கு போய் காவல் நின்று 4 நண்டுகள் ஒன்று 10$ படி வாங்கி வந்தோம். பேரனுக்கு நண்டு என்றால் அவரை நண்டுப்பிரியன் என்றே சொல்லலாம். இரவே அப்பப்பா கில் பண்ணு கறியைக் காச்சு என்று நின்றான்.பொறடா நாளைக்கு என்றேன். காலையில் எழும்பி இதே வேலையாகவே நின்றான். https://postimg.cc/gallery/zBh4N831 point- யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
1 point- யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
https://www.facebook.com/100040551832518/videos/1383766235840289/1 point- யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
இங்கு நடந்த விடயத்திற்கு பின்னால் உள்ள அரசியலை ஒருவரும் விளங்கிக் கொண்டதாக தெரியவில்லை. முன்னுக்கு நின்று குழப்பம் விளைவித்தவர்கள் யாழ் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்கள். சிறீலங்கா பொலிசாருக்கும் அது தெரியும். ஆனால் இடையில் புகுந்து காதைப் பொத்தி அடித்தது இந்திய பாதுகாப்பு ஊழியர். அதனை தொடர்ந்தே விடயம் பெரிதாகியது. எல்லாம் இந்திரன் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரக் கூடாது என்ற நல்ல எண்ணம் தான்.1 point- சிரிக்கலாம் வாங்க
1 point1 point- யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
யாழ்பாணத்தில் எதிர்காலத்தில் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் போது குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்காக பாடுபவர்கள் மற்றும் நடிகைகளை நெருங்கி இருந்து பார்ப்பதற்கு வசதியாக கனம் பொருந்திய காவாலிகள் எல்லோருக்கும் முதல் வரிசையில் இலவசமாக இருக்கை வசதிகள் ஒதுக்கபட வேண்டும் என்று வலவன், புத்தன் அண்ணா தலைமையிலான புலம்பெயர் ஈழதமிழர் குழு ஒன்று முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் கசிய தொடங்கி உள்ளது.1 point- பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக நெல் அறுவடை.
பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக நெல் அறுவடை. பாடசாலை வரலாற்றில் முதல் முதலாக இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காணியில் நெல் அறுவடை விழா இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மத்திய கல்லூரி சமூகத்தினால் சுமார் முக்கால் ஏக்கரில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக நெல் அறுவடை விழாவானது பாடசாலை முதல்வர் சபரி பூலோகராஜா தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் உதவிக்கல்விப் பணிப்பாளர் நளாயினி வசந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். குறித்த பாடசாலைக் காணி கடந்த வருடம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது. தரிசு நிலமாக காணப்பட்ட குறித்த காணியில் நெற்செய்கை மேற்கொண்டு இன்று அறுவடை செய்யப்பட்டுள்ளது. குறித்த செயற்பாடு தொடர்பில் அப்பாடசாலை சமூகத்தினருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு பாடசாலைகள், அரச நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களில் தரிசு நிலங்களாக காணப்படும் நிலையில் கிளிநொச்சி மத்திய கல்லூரி சமூகத்தின் செயற்பாடு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2024/13692971 point- சுவிஸ் தம்பதிகளின் அன்பளிப்பு
1 pointமக்களுக்கு பயனுள்ள அளப்பரிய உதவி .....அவர்கள் நல்லா இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.......! 🙏 நல்லதொரு இணைப்பு நன்றி சகோதரி.......!1 point- கருத்து படங்கள்
1 point1 point- பொழப்புத் தேடி - மலையகத்தான் கதடா
மாரி செல்வராஜா பாணியில் பாடல் படமாக்கப் பட்டிருக்கிறது. நன்றாக இருக்கிறது.1 point- இந்தியாதான் காப்பாற்றியது - இந்திய ஊடகத்திற்கான பேட்டியில் ரணில்
1 point- பொருநைக் கரையினிலே - 1 - சுப.சோமசுந்தரம்
சுப. சோமசுந்தரம் அவர்களே அருமை. வாசிக்க நன்றாக உள்ளது. 👍🏽1 point- பொருநைக் கரையினிலே - 1 - சுப.சோமசுந்தரம்
தாமிர பரணியாற்றின் மண் கொண்டு வந்து, யாழ்ப்பாணத்தில் வீடு கட்டினார்கள் என்று எமக்குக் கூறப்பட்டது. அவ்வளவு பெருமை பெற்றவள் பொருணை…! தொடருங்கள்…!1 point- பொருநைக் கரையினிலே - 1 - சுப.சோமசுந்தரம்
அகத்தியர் காவேரியை ஓடவிட்டு கூடவே தானும் நடந்து "நடந்தாய் வாழி காவேரி" என்றது போல் நீங்களும் பொருநையுடன் கூடவே பயணிக்கும் கட்டுரை ஒரு வரலாற்று ஆவணமாகவே மிளிர்கின்றது......தொடருங்கள் ஐயா ......! 👍1 point- புதனும் புதிரும்
1 point- புதனும் புதிரும்
1 point5 டானியல்(32), சேர்பிய நாட்டைச் சேர்ந்தவன். வேலை வாய்ப்புத் தேடி தனது மனைவி நத்தலி, பத்து, பன்னிரண்டு வயதான இரண்டு பிள்ளைகளுடன், 2022 செப்ரெம்பரில் யேர்மனிக்கு வந்தவன். தெரிந்தவர்கள் மூலமாக ஸ்வேபிஸ்ஹால் நகரத்துக்கு வந்து சேர்ந்தான். அவர்களுடன் சேர்ந்தே கட்டிட வேலைகள், தோட்ட வேலைகள் என்று கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். வேலை வாய்ப்புகளுக்காக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து பலர் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். இதில் அநேகமானவர்கள் கட்டிடத் தொழிலிலேயே கவனம் செலுத்துகிறார்கள். சிலர் அஸ்பாரகஸ் பிடுங்கி எடுப்பது ஸ்ரோபரி பழங்கள் பறிப்பது போன்ற வேலைகளை தோட்டங்களிலும் செய்வதுண்டு. கறுப்பு வேலை செய்து துரிதமாக பணம் சம்பாதித்துக் கொண்டு தங்கள் நாட்டுக்குப் போய் விடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் டானியல் குடும்பமாக யேர்மனிக்கு வந்தது, நிரந்தரமாகத் தங்குவதற்கான எண்ணமாக இருந்திருக்கலாம். டானியலின் மனைவி நத்தலி, அவுஸ்திரியாவில் சில காலம் வசித்ததால் அவளுக்கு யேர்மனிய மொழி தெரிந்திருந்தது. வேலைகள் ஓரளவுக்குக் கிடைக்க, வாழ்வதற்கு ஓரளவு பணம் அவர்களுக்கு வர ஆரம்பித்தது. தெரிந்தவர்களுடன் தங்கியிருந்தாலும் தங்கள் குடும்பத்துக்கு என்று தனி வீடு தேவை என்பதை உணர்ந்து, அவர்கள் வீடு தேட ஆரம்பித்தார்கள். அப்பொழுதுதான் டானியல் குடும்பத்துக்கு ரன்ஜா (34) அறிமுகமானார். ரன்ஜாவும் அவளது கணவரும் ஸ்வேபிஸ் ஹாலுக்கு அடுத்த நகரத்தில் புதிதாக ஒரு வீட்டை வாங்கியிருந்தார்கள். அங்கு சென்று வாழ்வதற்காக, தற்போது அவர்கள் வாழும் வீட்டை வாடகைக்கு, அதுவும் தற்காலி கமாக யாருக்காவது கொடுக்கலாம் என்று விளம்பரம் செய்ய, முதலாவதாக அவர்கள் முன் வந்து நின்றது டானியலும், அவனது மனைவி, பிள்ளைகளுமே. 1300 யூரோக்கள் மாத வாடகைக்கு அந்த வீடு டானியலுக்குக் கிடைத்தது. நத்தலிக்கு மொழி தெரிந்ததால் டானியலுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. வேலைக்குப் போவது. மாலையில் நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பது என்று அவன் எப்பொழுதும் வெளியிலேதான் இருந்தான். நத்தலி மட்டும் வீட்டில் இருந்தாள். ஹைடமேரியின் கொலையாளியைக் கண்டு பிடிக்க முடியாமல் பொலிஸார் திண்டாடிக் கொண்டிருந்தார்கள். சில தடயங்களை அவர்கள் சேகரித்து வைத்திருந்தாலும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள். நாட்கள் ஒவ்வொன்றாகக் கடக்க, 2020இல் நடந்த கொலையையே துப்புத் துலக்கி கண்டு பிடிக்காதவர்கள், இதைக் கண்டு பிடித்து விடுவார்களா? என்ற ஏளனப் பேச்சு வரத் தொடங்கியது. அதாவது பொலிஸ் துறையின் கையாலகத் தன்மையைக் குறித்து விமர்சனம் பெரிதாக வர ஆரம்பித்தது. மீண்டும் ஒரு புதன்கிழமை. 25.01.2023 ஸ்வேபிஸ் ஹாலில் இருந்து பத்து கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள மிஹேல் பாக் என்ற கிராமம் அல்லோலகலப்பட்டது.” ஹேரயுற்றே (83) என்ற மூதாட்டி கொல்லப்பட்டார் " என்ற செய்தி வந்தது. இருந்த தலையிடி காணாதென்று பொலிஸாருக்கு மேலும் தலையிடி கூடியது? ஹேரயுற்றே சாவியால், தனது வீட்டுக் கதவைத் திறந்து உள் நுளையும் போது, பல தடவைகள் மறந்து போய் சாவியை கதவிலே விட்டு விடுவதுண்டு. அதே குடியிருப்பில் வசிக்கும் ஒரு மூதாட்டி இதை அவதானித்து ஹேரயுற்றேயிடம் பல தடவைகள் எச்சரித்தும் இருக்கிறார். “இங்கை யார் வரப்போயினம்?” என்று ஹேரயுற்றே அவருக்குப் பதில் சொல்லியிருக்கிறார். ஆனால் கொலையாளி வந்திருந்தான். கதிரையில் சாய்ந்தபடி அவர் உடல் இருந்தது. அவரைச் சுற்றி இரத்தங்கள் தெறித்திருந்தன. தலை சிதைக்கப்பட்டிருந்தது. கை,தோள்பட்டை, தலை ஆகிய பகுதிகளில் குறைந்தது 26 தடவைகள், தாக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பபட்டிருப்பதாக அறிக்கை வந்தது. ஹேரயுற்றே வீட்டுக்கு வெளியே வெறும் 100 மீற்றர் தூரத்தில் ஒரு புதருக்குள் இரண்டு கையுறைகளையும், ஒரு சுத்தியலையைம் பொலிஸார் கண்டெடுத்தார்கள். ஹைடமேரியின் கொலைக்கான ஆயுதம் கிடைக்காது திணறிக் கொண்டிருந்த பொலிஸார் , ஹேரயுற்றேயின் கொலைக்கான ஆயுதம் கிடைத்த போது மிகுந்த உசாரானார்கள். அதைத் துப்புத்துலக்குதலுக்கான பெரும் உந்துதலாக அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். புதிதாக வாங்கிய சுத்தியல்.அதன்மேல் ஒட்டப்பட்டிருந்த விலை கூட இன்னமும் அகற்றப்படவில்லை. பழுப்பு நிறமான கைப்பிடியின் பிற்பகுதி சிவப்பு நிறத்தில் இருந்தது. அந்த சுத்தியலைத் தயாரித்த நிறுவனம் கோனெக்ஸ் என்றிருந்தது. அதை ஸ்வேபிஸ்ஹாலில் விற்பனை செய்பவர்கள் ‘ஹேசெலே’ கட்டிட பொருட்கள் விற்பனை நிலையம் என்பதும் தெரிந்தது. இரண்டு பொலிஸார் ஹேசெலே கட்டிட பொருட்கள் விற்பனை நிலையத்துக்குச் சென்றார்கள். “சமீபத்தில் இந்தவகையான சுத்தியலை யாராவது வாங்கியிருக்கிறார்களா? என்று பார்த்துச் சொல்லுங்கள்” என உரியவர்களிடம் கேட்டார்கள். கணினியில் நன்றாக அலசிப் பார்த்த அவர்கள் சொன்னார்கள், “யாரும் சமீபத்தில் இந்தச் சுத்தியலை வாங்கவில்லை” என்று “வேறு எங்கே வாங்கலாம்” பொலிசார் கேட்டார்கள். “ஒன் லைனில் கிடைக்கிறது” என்றார்கள்.1 point- சிரிக்கலாம் வாங்க
1 point1 point- யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
யாழ்ப்பாணத்தில் மட்டுமே கிடைக்கக் கூடிய சிறப்பு ரிக்கற்றுகள். வடக்கன்ஸ் வடக்கன்ஸ். யாழ்ப்பாணத்தில் மட்டுமே கிடைக்கக் கூடிய சிறப்பு ரிக்கற்றுகள்.1 point- யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
1 point- தமிழர்களின் பிரச்சினையை விடவும், சீனாவுடனான போட்டிக்கே மேற்குலம் முன்னுரிமை அளிக்கிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதங்கம்
பலஸ்தீனத்திற்கு ஏனைய இஸ்லாமிய நாடுகள் பணம் கொடுப்பது உலகம் இஸ்லாமிய மயமாக மாற வேணும் என்ற எண்ணத்தில்.....இஸ்ரேல் என்ற நாடு அதில் இருப்பது அவர்களுக்கு மிக பெரிய தடையாக உள்ளது வட ஆபிரிக்கா தொடக்கம் இந்தோனேசியா வரை இருக்கும் இஸ்லாமிய பெல்டில் ஒர் வேற்று மத நாடா ....என்ற நிலையில் அதை பலஸ்தீனர்களின் அழிவை கண்டுகொள்லாமல் ஏனைய இஸ்லாமிய நாடுகள் பணம் கொடுக்கின்றனர்... பலஸ்தீன கமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேலிய அரசு முற்றாக அழித்த பின்பு பலஸ்தீனர்கள் இஸ்ரேலியருடன் இணக்க அரசியல் செய்ய வேணும் என்பது எனது கருத்து1 point- யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
எத்தனையோ ஐரோப்பிய நாடுகளில் பல ஆண்டுகளாக நடிகர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன அதையெல்லாம் எமது இலங்கை வாழ் தமிழ் மக்கள் ஈழத் தமிழ் மக்கள் பார்ப்பதில்லை என்று நம்புவோமாக ஆனாலும் ஈழத்தில் ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்தால் கூட அதை பகிஷ்கரிக்க வேண்டும் என்று சிலரது மனநிலை இது என்னவாக இருக்கும் விரும்பியவர் பார்க்கட்டும் விருப்பமில்லாதவர் போகட்டும் இன்று யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் காட்டுமிராண்டிகள் போல நடந்து கொண்டது உலக நாடுகளில் உள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும் ஒரு இழுக்காகவே அமைகிறது.1 point- யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
யாழ்ப்பாணத்திற்கு எல்லாரும் வருவினம். ஏனெனில்.. அங்கு பணப்புழக்கம் அதிகம். இல்லாவிட்டால்.. சர்வதேச வர்த்தகக் கண்காட்சி.. உட்பட பல யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுக்க.. என்ன மூல காரணம்..??! அதேபோல்.. போதைப்பொருட்களும்.. மதுபானமும் வந்து குவிகிறது. காரணம்.. மீண்டும் யாழில் பணப்புழக்கம் அதிகம். குறிப்பாக புலம்பெயர் தமிழர்களின் பணம் அதிகம். அதை வறுக.. எல்லாரும் வருவினம். யாழுக்கான சொகுசு பஸ் சேவையை சிங்களவர்கள் தமிழர்களை விட திறம்பட நடத்தி.. ஒரு பஸ்ஸுக்கு இப்ப 10 பஸ் விடுகிறார்கள்.1 point- புதனும் புதிரும்
1 point4 ஸ்வேபிஸ் ஹால் நகரசபைக்கு உட்பட்டதுதான் இல்ஸ்கொபன் கிராமம். இது ஸ்வேபிஸ் ஹால் நகரில் இருந்து 10 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் இன்னுமொரு அமைதியான கிராமம். 87 சதவீதமான விவசாய நிலப்பரப்பைக் கொண்டது, இங்கு 6000க்கு சற்று அதிகமான மக்களே வசிக்கிறார்கள். பெரிய தொடர்மாடிக் குடியிருப்புகள் அதிகம் இல்லாத இந்தக் கிராமத்தில் தனித்தனி வீடுகளிலேயே பெரும்பாலானோர் வசிக்கிறார்கள். ஜனவரி 16, திங்கட்கிழமை அன்று, வீட்டின் அழைப்புமணிச் சத்தம் கேட்டு, முதியவர் (86) வந்து கதவைத் திறந்து பார்த்தால் அங்கே, கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒருவர் தனது கையில் லீடில் (Lidl super market) சுப்பர் மார்க்கெற்றின் வாராந்த பிரசுரங்களுடன் நின்றார். பனி விழும் குளிர்காலம். சூரியன் ஓய்வெடுக்கும் தருணம். கறுப்புக் கண்ணாடியுடன், சிரித்துக் கொண்டே, தன் வீட்டுக்கு முன்னால் நின்ற அந்நபரைக் கண்டதும், முதியவருக்கு ஆச்சரியமாக இருந்தது. “என்ன வேண்டும்?” என்று கேட்டார் அவன் கையில் இருந்த லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களைத் தூக்கிக் காண்பித்தான். “இதெற்கெல்லாம் பெல் அடிக்கத் தேவையில்லை. இந்தத் தபால் பெட்டிக்குள் போட்டு விட்டுப் போ” என்றார். அவன் அவரை நெருங்கி வந்தான். ஏதும் பேசவில்லை அவர் கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்தப் பிரசுரத்தைத் திணித்துவிட்டுப் போனான். “யாராயிருக்கும்? நான் சொன்னது இவனுக்கு விளங்கவில்லையா? வின்ரரிலும் கூலிங்கிளாஸ் போட்டிருக்கிறான். தலையில் ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ?” மனதில் எழுந்த கேள்விகளுடன் முதியவர் வாசல் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே போனார். அடுத்தநாள் மதிய நேரம். முதியவர், உணவை முடித்து விட்டு வரவேற்பறையில் இருந்தார். ஒரு குட்டித் தூக்கத்துக்காக அவரது மனைவி ஷோபாவில் படுத்திருந்தார். வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. வழமையாக இந்த நேரங்களில் யாரும் அழைப்பு மணியை அழுத்துவதில்லையே என்ற கேள்வி எழுந்தாலும், எழுந்து வந்து கதவைத் திறந்தார். அதே கறுப்புக் கண்ணாடி அணிந்த மனிதன். அதே உடுப்பு. நேற்றையைப் போல் இன்றும் அவன் கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் பிசுரங்கள். வீட்டின் வாசலில் நின்றபடியே,“நேற்றுத்தானே தந்துவிட்டுப் போனாய். பிறகு எதுக்கு இப்ப? அதுவும் மத்தியான நேரம்” என்று எரிச்சல் கலந்த குரலில் முதியவர் கேட்டார் முதியவரின் கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை. முதல்நாள் போலவே இன்றும் அவரை நெருங்கி வந்தான். தனது வலது கரத்தால் அவன் விட்ட குத்து, அவர் கண்ணாடிக்குக் கீழ், மூக்கின் மேல் வேகமாக வந்து விழுந்தது. வாசல் படியில் நின்ற முதியவர், நிலைதடுமாறி, வீட்டினுள்ளே விழுந்தார். வீழ்ந்தவர் அதிர்ச்சியில் இருந்து மீள முன்னரே அவரது நெற்றியில் அவனது துப்பாக்கி முனை இருந்தது. வெளியில் கேட்ட சத்தங்கள், முதியவரின் மனைவியின் சிறு தூக்கத்தைக் கலைத்து விட்டிருந்தது. ஷோபாவில் இருந்து எழுந்தவரை, கணவனின் “உதவி, உதவி செய்யுங்கள்” என்ற கூப்பாடு விரைவு படுத்தியது. விழுந்திருந்த முதியவரை அவன் காலால் உதைக்க எத்தனித்தபோது, வாசலோடு ஒட்டியிருந்த அறையின் ஒளி புகாத கண்ணாடிக் கதவினூடாக ஒருவர்( முதியவரின்மனைவி ) ஓடி வருவதை அவதானித்தான். யாரோ வருகிறார்கள் என்ற பதட்டத்தில் அவன் கால் ஒரு அடி பின் வைக்க, அந்தச் சந்தர்ப்பத்தை பயன் படுத்தி, தரையில் விழுந்திருந்த முதியவர் தன் காலால் பலம் கொண்ட மட்டும் கதவைத் தள்ள வாசல் கதவு மூடிக் கொண்டது. அவன் வெளியே. அவர்கள் உள்ளே. தகவல் கிடைத்து பொலிஸார் வந்திருந்தனர். கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தான் என்பதை முதியவர் மறக்காமல் சொன்னார். அவன் என் நெற்றியில் துப்பாக்கியை அழுத்திப் பிடித்த போது “நீ பணம்” என்று சொன்னான், என்பதையும் சொன்னார். பொலிஸாருக்குப் புரிந்து விட்டது. வந்தவன் வெளிநாட்டுக்காரன் மட்டுமல்ல, சமிபத்தில்தான் யேர்மனிக்கு வந்திருக்கிறான் என்பதுவும். இல்ஸ்கொபன் கிராமத்தின் வீதிகள், பூங்காவனம், விளையாட்டு மைதானம் என்று எல்லா இடங்களிலும் பொலிஸார் தேடினார்கள். அவன் அகப்படவில்லை. “கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களுடன் கறுப்புக் கண்ணாடியுடன் யாராவது நடமாடியதைப் பார்த்தீர்களா? “ என விசாரித்துப் பார்த்தார்கள். ஒரு பெண் சொன்னாள். “இன்று ஹோம் ஒபீஸ். மதிய இடைவேளைக்கு கொஞ்சம் காற்றாட வெளியே வந்த போது கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களுடன் ஒருவனைக் கண்டேன். கனிவான முகத்துடன்… “ஹலோ” சொல்லிச் சிரித்தான். நானும் ‘ஹலோ’ சொல்லிவிட்டுப் போனேன்” என்று. ஹேபாப் கடை வைத்திருந்தவர் சொன்னார், “ இங்கு உணவருந்த வருபவர்களை, அவர்கள் வெளியூரா, உள்ளூரா என என்னால் இனம் கண்டு கொள்ள முடியும். அவன் வெளிநாட்டவன்” என்று. ‘வந்தவன் கிராமத்தில் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவன் நிச்சயமாக இல்ஸ்கொபனை விட்டு வெளியே போயிருப்பான்’ என்று பொலிஸருக்குப் புலப்பட்டது. “புதிதாக, சந்தேகப்படும்படியான, வெளியாருடைய வாகனங்களை யாராவது கண்டீர்களா?” என்று கேட்டுப் பார்த்தார்கள். கொஞ்சம் பலன் கிடைத்தது. ஒரு கார். அதன் இலக்கத் தகட்டில் பொதிகளை ஒட்டும் நாடாவால் ( duct tape)ஒட்டிய தடயங்கள் இருந்தன. அந்தக் கார் VW station wagon, Silver நிறம் என அடையாளங்களைத் திரட்டிக் கொண்டார்கள். தேடுதலின் போது, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 250 மீற்றர் தூரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை அண்டிய பகுதியின் புதர்களுக்குள் இருந்து ஒரு சோடி கையுறைகளையும் ஒரு விளையாட்டுத் துப்பாக்கியையும், லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களையும் பொலிஸார் கண்டெடுத்தார்கள். அவனுடைய அங்க அடையாளங்களை முதியவரிடம் பெற்று, ஒரு கற்பனை முகத்தை (Fandom image) வரைய ஏற்பாடு செய்தார்கள்.1 point- யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
போர போக்கை பார்த்தால் அடுத்த முறை பொது தேர்தல் பிரச்சாரத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமன்னாவை அழைத்தால் அமோக வெற்றி பெறலாம்....இந்த புத்தனின் அறிவுக்கு எட்டுகிறது1 point- யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
ஜேர்மனியில் இருந்து நேரடியாக போய் குதிக்கலாமா?? அதென்ன சர்வதேச விமான நிலையம்?? உள்ளூர் அல்லது பிராந்திய விமான நிலையம் கட்டுநாயக்கவா??🤣 இவர்களுக்கு கொடுத்த வரவேற்பை பார்த்தால் முள்ளிவாய்க்கால் நடந்தது என்பதையும் இனப்படுகொலை நடந்தது என்பதையும் நம்ப முடியவில்லை1 point- புதனும் புதிரும்
1 point· வயது போனவர்களோடு நேரம் செலவிடுவது என்பது மீண்டும் கிடைக்காத ஒரு சந்தர்ப்பம்..🙏1 point- புதனும் புதிரும்
1 point3 ஏறக்குறைய 30 சென்டிமீட்டர் நீளத்துக்குக் காய்ந்து போயிருந்த நிலையில் அந்தக் கறை இருந்திருக்கிறது. வீட்டின் வாசலில் இருந்து சமையல் அறைக்குப் போகும் பாதையில் இருந்த இரத்தக்கறை, பார்வைக்கு இலகுவாகத் தெரிந்து விடும் விதமாகவே இருந்திருக்கிறது. ஆனாலும் பொலிஸாரின் கண்களுக்கு ஏனோ அது தெரியாமற் போய் விட்டது. சில வாரங்கள் போய் விட்டதால் அந்தக் கறை இப்பொழுது காய்ந்து கறுப்பு நிறத்துக்கு வந்து விட்டிருந்தது. உலர்ந்த அந்த இரத்தம் எடித் லாங்கின்(86) உடையது என்பதுவும் இப்பொழுது தெளிவாகிவிட்டது. அந்தக்கறையைப் பார்க்கும் போதே, இங்கே ஒரு குற்றம் நடந்திருக்க வேண்டும் என்பது வெள்ளிடை மலை. ஏனோ அது பொலிஸாருக்குத் தெரியாமற் போய் விட்டது. 14.12.2022 அன்று எடித் லாங் தனது சமையலறையில் இறந்திருந்தார். மாலையில் எடித் லாங்கின் மகள் ஹைக்கே(64), தனது தாயார் சமையலறையில் இறந்திருப்பதைக் கண்டு பொலிஸாருக்குத் தகவல் தந்திருக்கிறார். அவரது உடல் சமையல் அறையின் தரையில் இருந்தது. இடது கை பின் நோக்கி நீண்டிருந்தது. யாரோ அவரை அங்கே இழுத்து வந்து விட்டது போலவே அந்தக் காட்சி இருந்தது. அவசர உதவி மருத்துவரும், மருத்துவ உதவியாளர்களும் இதே கருத்தைத்தான் முன் வைத்தார்கள். ஆனால் குற்றப் பிரிவுப் பொலிஸார் அன்று மாலையே விசாரணைகளை நடத்தி, ”இந்த மரணத்துக்கும் வெளியாட்கள் எவருக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை. தரையில் விழுந்ததால், தலையில் காயம் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்திருக்கிறது. இது ஒரு விபத்து மரணம்” என்று அறிவித்தார்கள். ‘எடித் லாங் தடுமாறி விழுந்திருக்கிறார், உச்சந் தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. எடித்லாங்கின் கைப்பை திறந்திருந்தது. அந்தக் கைப்பை, பணம் இல்லாமல் வெறுமையாக இருந்தது’ எடித் லாங்கின் மரணச் சான்றிதழில் இப்படித்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் 19.12.2022, திங்கட்கிழமை எடித்லாங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. பொலிஸார் சிரத்தை எடுத்து எடித்லாங்கின் மரணத்தில் சரியான முறையில் விசாரணையை மட்டும் மேற்கொண்டிருந்திருந்தால், அடுத்து நடந்த கொலையை ஒருவேளை தடுத்திருக்கலாம். எடித்லாங்கின் இறப்பு விபத்தால் ஏற்பட்ட மரணம் என அறிவிக்கப் பட்டதால், கொலையாளி தன்னைத் தானே தட்டிக் கொடுத்து , அதே பாணியில் இன்னுமொரு கொலையையும் செய்வதற்கு ஏதுவாக எடித் லாங்கின் மரண விசாரணையின் தீர்ப்பு அமைந்து விட்டிருந்தது. எடித் லாங்கின் உடல் தகனம் செய்யப்பட்டதன் பின்னர் ஹைக்கே தனது தாயாரின் வீட்டை த் துப்பரவு செய்து ஒழுங்கு படுத்துவதற்குச் சென்று பார்த்த போது, தனது தாயார் விபத்தில் இறக்கவில்லை மாறாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான சில தடயங்களைக் கண்டறிந்தார். பாதுகாப்புக்கு என்று போடப்பட்டிருந்த கதவுச் சங்கிலி உடைக்கப் பட்டிருந்தது. தொலைபேசி வயர் துண்டிக்கப் பட்டிருந்தது. கட்டிலின் கீழ் இருந்த மரப் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. அந்த மரப் பெட்டியின் மீது இரத்தக் கறை இருந்தது. இந்தத் தகவல்களை உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவித்து தன் தாயின் மரணத்தில் இருந்த சந்தேகத்தையும் ஹைக்கே பதிவு செய்தார். மீண்டும், எடித்லாங்கின் வீட்டை பரிசோதித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக வீட்டைப் பூட்டி ‘சீல்’ வைத்து விட்டுப் போனார்கள். “கொலை நடந்திருப்பதற்கான சாத்தியம் இருப்பதை நாங்களும் ஏற்றுக் கொள்கின்றோம். மேலதிகத் தடயங்கள் கிடைக்கவில்லை. எடித் லாங்கின் உடலும் எரிக்கப்பட்டு விட்டது. ஆகவே மேற்கொண்டு எதுவும் செய்வதற்கு இல்லை. நீங்கள் அந்த வீட்டை இனி துப்பரவு செய்து கொள்ளலாம்” என பொலிஸ் தரப்பில் இருந்து, ஹைக்கேக்கு பதில் வந்தது. தாயின் இழப்பில் ஏற்பட்ட சோகம், பொலிஸாரின் கையாலாகத் தனம் எல்லாம் சேர்ந்து ஹைக்கேயால் நிம்மதியாக உறங்க முடியாதிருந்தது. அப்பொழுதுதான் ஸ்வேபிஸ் ஹால் நகரப் பத்திரிகையில் இந்த விடயத்தைப் பற்றி அலசி ஆராய்ந்து கொண்டிருந்த நிருபரின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. பத்திரிகை நிருபர், லுமினோல் எண்ணெய்யை ( Luminol oil)இணையத்தளத்தில் இருந்து வாங்கிக் கொண்டார். சந்தேகப்படும் இடங்களில் லுமினோலை பூசினால், அங்கே இரத்தம் இருந்தாலும், அவை சரியாகத் துடைக்கப்படாமல் இருந்தாலும் அந்தப் பகுதி ஒளிர ஆரம்பிக்கும். கொலைகள் நடக்கும் இடங்களில், விசாரணைகளில் தடயங்களைக் கண்டறிவதற்காக லுமினோலை புலானாய்வாளர்கள் பயன்படுத்துவார்கள். இப்பொழுது பத்திரிகை நிருபர் லுமினோலைப் பயன் படுத்தி ஒளிரும் இடங்களைப் படம் பிடித்துக் கொண்டார். “விசாரணையில் அசட்டையீனம். ஒரு கொலை, விபத்தாக காட்டப் பட்டிருக்கிறது” என்று அடுத்தநாள் பத்திரிகைச் செய்தியின் தலைப்பு இருந்தது. கூடவே, தரைக் கம்பளத்தின் கீழே இரத்தம் உறைந்திருந்தது. கொலையாளி அந்த இரத்தக் கறையை மறைப்பதற்காக, அவசரத்தில் பக்கத்தில் இருந்த கம்பளத்தை எடுத்து இரத்தம் இருந்த இடத்தில் போட்டு மூடி விட்டிருக்கிறார். கதவு வாசலில் இருந்து சமையலறை வரை தரையில் இரத்த அடையாளங்கள் இருக்கின்றன. அது எடித் லாங்கை, வாசலில் வைத்து தாக்கிக் கொலை செய்து விட்டு, கொலையாளி அவரை இழுத்து வந்து சமையலறையில் போட்டதைக் காட்டுகிறது. தரையில் இருந்த இறத்தக் கறையை சமையலறையில் இருந்த துணியினால் துடைத்து, பின் அதை சமையல் அறைத் தண்ணீர் தொட்டியில் கழுவியதற்கான அடையாளங்கள் இருக்கின்றன…” என படங்களுடன் செய்தி வெளியானது. உள்ளூரில் வெளியிடப்பட்ட இந்தச் செய்தியை யேர்மனியின் பல பாகங்களிலும் வெளியாகும் பல பத்திரிகைகள் வாங்கி தங்கள் தங்கள் பத்திரிகைகளிலும் பிரசுரித்தார்கள். இந்தச் செய்தியால், பொலிசார் மீது விமர்சனங்கள் எழுந்தன. பொலிசாரது செயற்பாடுகள் சரியாக அமையவில்லை என்பதால், மக்கள் பொலிசார் மீதான தமது அதிருப்தியை வெளிப்படையாகவே கதைத்தார்கள். பொலிஸாரின் மேலதிகாரி ஊடகவியலாளர்களை அழைத்து, தங்களது பக்க நியாயங்களைச் சொன்னார். “எடித் லாங், மருந்துகளை உட் கொள்பவர். மயக்கம் அவருக்கு அடிக்கடி வருவதுண்டு என்று அவரது குடும்ப வைத்தியர் குறிப்பிட்டிருக்கிறார். முதுமை, தள்ளாட்டம் என்பன காரணமாக அவர் விழுந்ததனால்தான் சம்பவம் நடந்திருக்கிறது என்ற நோக்கிலேயே நாங்கள் விசாரணைகளை மேற்கொண்டோம். எதுவானாலும் தவறு நடந்து விட்டது என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். அதற்காக வருந்துகிறோம். எடித் லாங்கின் வீட்டில் இருந்து மேற்கொண்டு தடயங்களை எங்களால் பெற முடியவில்ல. ஹைடமேரியின் கொலையில் இருந்து தடயங்களைச் சேகரித்து வைத்திருக்கிறோம். கொலையாளியைக் கண்டுபிடிக்கும் எங்களது வேலை தொடர்கிறது” பொலிஸாரிடம் இருந்து வந்த இந்தக் கருத்தைப் பற்றி எடித் லாங்கின் மகள் ஹைக்கே இப்படிச் சொல்லி இருந்தார், “ எனது தாயார் தலையில் தாக்கப் பட்டு கொல்லப் பட்டிருக்கிறார். பொலிஸார் அதை விபத்து என்றார்கள். நாங்கள் அதை கொலை என்று நிரூபித்திருக்கிறோம். தவறி விழுந்த ஒருவருக்கு உச்சந் தலையில் காயம் எப்படி ஏற்படும் என்றாவது குறைந்த பட்சம் அவர்கள் ஏன் விளங்கிக் கொள்ளவில்லை. ‘தவறு, வருந்துகிறோம்’ போன்ற சொற்களுடன் இந்த விடயத்தை பொலிஸ் தரப்பு கடந்து போயிருக்கிறது. எனக்கு அவர்கள் மேல் இருந்த நம்பிக்கையும் மரியாதையும் வெகுவாகக் குறைந்து விட்டன. மக்கள் மேல் தங்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டது என்பது பொலிஸாருக்கும், மரண விசாரணை மேற்கொண்ட அரச சட்டத்தரணிக்கும் தெளிவாகத் தெரிந்து விட்டது. ஆகவே நடந்த இரண்டு கொலைகளை யார் செய்தது என்பதை கண்டுபிடிப்பது மட்டுமல்லாமல் அதை விரைவாக முடிக்க வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு வந்தது.. கொலையாளியை க் கண்டு பிடிக்கும் வேலையை அவர்கள் செய்யட்டும். அந்த இடைவெளியில் நாங்கள் இல்ஸ்கொபன் கிராமத்துக்குப் போய் வருவோம்.1 point- யாழ்ப்பாணம் வந்தாராம் ரணிலார்- பா.உதயன்
விண்கல் வேகத்தில் வீழ்ந்த பொருளாதாரத்தை றொக்கற் வேகத்தில் உயர்த்தி உள்ளாராம்.1 point- மாதங்களில் நான் மார்கழி.
1 pointமாதங்களில் நான் மார்கழி. வீதியெங்கும் மாவிலைத் தோரணங்கள் வாசலெல்லாம் வண்ணக் கோலங்கள் பூசணிப் பூக்கள் மத்தியிலே சாணியில் பிள்ளையார் பூவினிலே மெல்லிய பனியுடன் மழைக்காலம் வகை வகையாய் பறவைகள் இசைக்கோலம் நிரை நிரையாய் எறும்புகள் ஊர்வலம் அவசர கதியில் மாந்தர் நகர்வலம் கோடை முடிந்தால் வந்திடும் மார்கழி வாடைக்காற்றும் வந்து வாட்டிடும் பீடை மாதமென்பார் பேதையர் சாடையினால் தை பிறக்கட்டுமென்பர் சோதிடர் பெருவிழாக்கள் குறைந்தாலும் திருவிழாக்கள் களை கட்டும் ஓதுவார் இறைபுகழ் ஓதிச் செல்ல சாதுக்கள் பஜனையில் கூடிச்செல்வர் அடிகளின் திருவெம்பாவை திக்கெட்டும் ஒலிக்க கோதையின் திருப்பாவை காற்றினில் தவழுவதால் மாதங்களில் நான் மார்கழி என்றே பகல்கின்றான் மாதவனும் .......! ஆக்கம் : சுவி ......!1 point- இரண்டாம் பயணம்
1 pointமாலை ஆறு மணிக்கு எழுந்திருப்போம் என்று நினைக்கிறேன். இன்னமும் வெளிச்சம் இருந்தது. வீட்டின் வெளிப்பகுதியிலிருந்து பேசத் தொடங்கினோம். கொழும்பில் கல்விகற்ற நாட்களில் நடந்தவை, தெரிந்த நண்பர்கள் பற்றிய விபரங்கள், அந்தநாள்க் காதல்கள், குடும்ப வாழ்க்கை என்று பல விடயங்கள் அலசப்பட்டன. நண்பர்களுடனான தனி விடுமுறைக் காலங்கள் குறித்துப் பேச வேண்டும். நாம் நாமாக இருப்பது நண்பர்களுடன் இருக்கும் வேளையில் மட்டும் தான் என்று நான் நினைப்பதுண்டு. எந்த விடயத்தையும் ஒளிவு மறைவின்றி, வெளிப்படையாக, கூச்சமின்றி, என்னைப்பற்றி என்ன நினைப்பான் என்கிற சிறிய அச்சமும் இன்றி எந்த விடயத்தையும் பேசமுடியும். உங்களுக்கு இதில் மாற்றுக் கருத்துக்களிருக்கலாம். ஆனால், நான் உணர்ந்துகொண்டது இதைத்தான். ஆகவே, பல விடயங்களை ஒளிவுறைவின்றிப் பேசினோம். ஏமாற்றங்கள், துரோகங்கள், வஞ்சனைகள், பிணக்குகள் கூட சம்பாஷணைகளில் வந்துபோயின. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிக்கிடும்போது ராசா அண்ணையையும் கூடிவரலாம் என்றே ஆரம்பத்தில் நண்பன் சொன்னான். அவருடன் பேசிக்கொண்டிருந்தால் நேரம் போவது கூடத் தெரியாது, ஆகவே நானும் உடனேயே ஓம் என்று கூறிவிட்டேன். ஆனால், உரும்பிராயிலிருந்து கிளம்பும்போது எமது முடிவை மாற்றிக்கொண்டோம். "மச்சான், அண்ணை வந்தால் எங்களால சுதந்திரமாக் கதைக்கேலாது. நீ அவரோட ஊர்க்கதை பேசிக்கொண்டிருப்பாய், அவர் நிக்கட்டும், நாங்கள் போட்டு வருவம். அவர் நாளைக்கு நாளண்டைக்கு எப்படியும் அங்க போவார்" என்று கூறவும் நானும் சரியென்றேன். ஆக, இந்தப் பயணம் நானும் நண்பனும் மட்டும் எமது கடந்தகால வாழ்க்கையை அலச, எடைபோட, சுக துக்கங்களை அலச நடத்தப்பட்டது என்றே வைத்துக்கொள்ளலாம். சிட்னியிலிருந்து கிளம்பும்போது "நீங்கள் பச்சுலர்ஸ் பாட்டிக்குத்தான் போறியள்" என்று சொல்லப்பட்ட குற்றச்சாட்டை ஓரளவிற்கு உறுதிப்படுத்தியிருக்கிறது அக்கராயன் நோக்கிய எனது பயணம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தபின்னர் 9 மணியளவில் இரவுணவு ஆயத்தமாகியிருந்தது. தேங்காய்ப்பூ பிசைந்த மா ரொட்டி. கூடவே கோழிக்கறி. அருமையான சாப்பாடு. பேசியபடியே இரவுணவை முடித்தோம். இருள் படர்ந்த இரவு, சுற்றியிருக்கும் மரங்களில் கூடுகளுக்குள் அடைக்கலாமிவிட்ட குருவிகளின் இரைச்சல். இடைக்கிடையே கிளைகள் வழியே தாவித் திரிந்த குரங்குகள், இடைவிடாது இரைச்சலிட்டுக் கொண்டிருந்த சில்வண்டுகள், இவை எல்லாவற்றிற்கிடையிலும் தொலைவில் கேட்ட புகையிரதச் சத்தம் என்று பல வருடங்களுக்குப் பின்னர் நகரத்தின் சலசலப்பும், அவசரமும் இன்றி, சிட்னியிலிருந்து வெகு தூரத்தில், மறுநாள் பற்றிய எந்தக் கவலையுமின்றி ஒரு இரவை முற்றாக உணரவும் அனுபவிக்கவும் முடிந்தது. 10 மணியளவில் தூங்கியிருப்போம். காலை 5 மணிக்கே தூக்கம் கலைந்துவிட்டது. வழமைபோல நண்பனுக்கு சிரமம் கொடுக்காது காலைக்கடன்களை முடித்துவரலாம் என்று கிளம்பினேன். வெளியில் வெளிச்சம் மெதுமெதுவாகப் பரவிக்கொண்டிருந்தது. காலைக்கடன் முடித்து, குளித்துவிட்டு வெளியே வரும்போது அந்த அம்மா காப்பி கொண்டுவந்திருந்தார். குடித்துக்கொண்டிருக்க நண்பன் எழும்பிவந்தான். "எப்படி நித்திரை?" என்று கேட்டேன். "மச்சான், சொன்னால்க் குறைநெய்க்கக் கூடாது, நல்லாத்தான் குறட்டை விடுறாய் நீ" என்று சொன்னதும் தூக்கிவாரிப்போட்டது எனக்கு. அட, இங்கையுமா? கடந்த சில மாதங்களாக நித்திரை கொள்வதென்பது என்னைப்பொறுத்தவரையில் ஒரு பிரச்சினையாகவே மாறியிருந்தது. இரண்டு, மூன்று மணித்தியாலங்கள் தூங்கினாலே போதும் என்கிற நிலையில்த்தான் நான் இருந்து வருகிறேன். யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் ஒழுங்குகள் செய்யத் தொடங்கிய நாளிலிருந்து இருந்த நித்திரையும் காணாமற் போய்விட்டிருந்தது. விமானத்தில் தூக்கம் வராது என்பதனால் சில நாட்களாகவே தூங்குவதென்பது பெரிய பிரச்சினையாக மாறிப்போயிருந்தது. ஆகவேதான், அக்கராயனில் தங்கிய இரவன்று அசதியில் நன்றாகவே நான் தூங்கியிருக்க வேண்டும். அது நண்பனின் தூக்கத்தைக் கலைத்துப் போட்டு விட்டது. காலை சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியது. காலையுணவு இடியப்பமும் சொதியும். அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு கிளம்புவதற்குத் தயாரானோம். நண்பனின் மோட்டார்ச் சைக்கிள் வியாபார ஸ்த்தாபனம் யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் அமைந்திருக்கிறது. அடிக்கடி தொலைபேசியில் நிலையத்தின் ஊழியர்களைத் தொடர்புகொண்டு அலுவல்கள் கிரமமாக நடப்பதை உறுதிப்படுத்திக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. மேலும், ஒருநாள் என்னுடன் செலவிட்டதனால் காலையிலேயே நிலையத்திற்குச் சென்று காரியங்களை மேற்பார்வை செய்ய நினைத்திருக்கலாம். "உன்ர பிளான் என்ன?" என்று கேட்டான். "கரவெட்டிக்குப் போய், மற்றைய இரண்டு சித்திமாரையும் கூட்டிக்கொண்டு சிஸ்ட்டர் அன்ராவிடம் போய்வரவேண்டும். இண்டைக்கு அதுமட்டும்தான்" என்று கூறினேன். தோட்டத்தில் கிடந்த தேங்காய்கள் சிலவற்றை அங்கிருந்தவர்கள் உரித்து காரில் வைத்தார்கள். அவற்றையும் எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டோம். அக்கராயன் வந்த அதே பாதை வழியே திரும்பினோம். முன்னைநாள் மாலை மாவீரர் தினம் நடைபெற்ற கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் மீண்டும் அநாதரவாகக் கிடந்தது. சுற்றிவரக் கொடிகள் இன்னும் அசைந்துகொண்டிருக்க, மக்களின்றி அமைதியாகக் கிடந்தது. முதள்நாள் கண்ட தென்னங்கன்றுகளும் காணாமற் போயிருந்தன. அக்கராயனிலிருந்து கிளிநொச்சி வரையிலான வீதிகளில் பல விடங்களில் மாவீரர்தின ஏற்பாடுகளின் மிச்ச சொச்சங்களை காலையிலும் காண முடிந்தது. மன்னார் பூநகரி நாவற்குழி பாதை வழியே யாழ்ப்பாணம் திரும்பினோம். இடையில் நிற்கும் எண்ணம் இருக்கவில்லை. முடிந்தளவிற்கு வேகமாகவே வண்டி பயணித்தது. காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் நண்பன் என்னை இறக்கிவிட, கன்னாதிட்டி வீதி நோக்கி நடக்கத் தொடங்கினேன்.1 point- இரண்டாம் பயணம்
1 pointகனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவிலேயே அக்கராயன் பகுதி வருகிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்ட எழில்மிகுந்த சாலையும் இப்பகுதியிலேயே இருக்கிறது. பிற்பகல் 3 மணியளவில் அக்கராயனில் அமைந்திருக்கும் நண்பனின் குடும்பத்திற்குச் சொந்தமான கமத்தினை அடைந்தோம். 90 ஏக்கர்கள் வயற்காணியும், தோட்டக்காணியும் கொண்ட பாரிய காணித்தொகுதி அது. நண்பனின் சகோதரர்கள் அனைவருக்கும் இங்கே காணித்துண்டுகள் அவர்களது தந்தையினால் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. வயல்கள் விதைக்கப்பட்டிருந்தன. அண்மையில் பெய்த கடும் மழையினால் வயல்களுக்குள் வெள்ளம் நிற்பது தெரிந்தது. நண்பனின் கமத்தில் பணிபுரிவோர் அடுத்த மழை ஆரம்பிக்கும் முன்னர் மருந்தடிக்கும் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. அவ்வாறே தோட்டக் காணிகளில் தென்னை மரங்களும் பழம் தரும் மரங்களும் காணப்பட்டன. சூரிய வெளிச்சம் நிலத்தில் விழுவதே அரிதாகும் அளவிற்கு அக்காணி சோலைபோன்று காட்சியளித்தது. மரமுந்திரிகை, தேக்கு மரங்களும் வரிசைக்கு நேர்த்தியாக நடப்பட்டிருந்தது. நண்பனின் சகோதரகள் அடிக்கடி இங்கு வந்து தங்கிச் செல்வதுண்டு, குறிப்பாக வெளிநாட்டில் வசிப்போர். விருந்தாளிகள் வந்தால் தங்குவதற்கென்று சகல வசதிகளுடனும் கூடிய விருந்தினர் மாளிகை ஒன்றினை அவர்கள் கட்டியிருந்தார்கள். மேற்கத்தைய பாணியில் அமைக்கப்பட்ட குளியல் அறைகள், கழிவறைகள், விருந்தினர் மண்டபம், படுக்கையறைகள் என்று நகரப்பகுதியில் இருந்து தொலைவாக அமைந்திருக்கும் ஒரு விவசாயக் கிராமத்தில் இவ்வாறான வசதிகளுடன் கூடிய விருந்தினர் மாளிகையினைக் காண்பது அருமையே. இந்த விருந்தினர் தங்குமிடத்தைப் பராமரிக்கவும், வயற்காணிகளையும், தோட்டக்காணிகளையும் பராமரிக்கவும் என்று சில பணியாளர்கள் இங்கே வசித்துவந்தனர். அவர்களுக்கென்று தனியான வீடுகளும் அங்கே கட்டப்பட்டிருந்தன. நாம் செல்லும் வழியில் கிளிநொச்சி நகரில் இருந்த அங்காடியொன்றிலிருந்து மீன்கள் சிலவற்றையும், இறால்களையும் வாங்கிச் சென்றிருந்தோம். நண்பனின் விருந்தினர் தங்குமிடத்தைப் பராமரிக்கும் அம்மா ஒருவர் அவற்றைத் துப்பரவு செய்து சமைக்கத் தொடங்கினார். சற்று ஓய்வெடுத்தபின், கமத்தில் இருந்த கிணற்றில் குளித்துவிட்டு சுற்றவர இருக்கும் காணிகளைப் பார்ப்பதற்கு நடந்துசென்றோம். நண்பனின் சகோதர்களின் காணிகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவை. சிலவற்றில் எல்லைகளே காணப்படவில்லை. இடையிடையே செல்லும் குறுக்கு வீதிகள் அவற்றை பிரித்துச் சென்றபோதும், அவை அனைத்துமே ஒரே பணியாளர்களால் பராமரிக்கப்பட்டு வந்தன. இக்காணிகளில் இருந்த பனை மற்றும் தேக்கு மரங்களில் மயில்கள் இருப்பதைக் கண்ணுற்றேன். மயில் இங்கு அடிக்கடி காணப்படும் ஒரு பறவை. அப்பகுதியில் எங்கேயோ ஒரு மூலையில் இருந்து மயில் அகவுவது கேட்டுக்கொண்டே இருக்கும். அக்காணிகளை அண்டிய வீடொன்றிற்குச் சென்றோம். நன்கு பரீட்சயமானவர்கள். அவ்வீட்டில் வசிக்கும் இளைஞன் ஒருவன் சண்டைக்கு வளர்க்கும் வெள்ளடியான் சேவல்களை வைத்திருந்தார். குறைந்தது 80 இலிருந்து 100 வரையான சேவல்களும், குஞ்சுகளும் அவரிடம் இருந்தன. தமக்குள் சண்டைபிடிக்கும் சேவல்களைத் தனியாகப் பிடித்து அடைத்து வைத்திருந்தார்கள். இப்போதும் சண்டைக்கு சேவல்களை வளர்க்கும் வழக்கம் இருக்கிறதா என்று கேட்டபோது, ஆம், ஆட்கள் வந்து வாங்கிச் செல்வார்கள். கறிக்கும் எடுப்பது உண்டு என்று அந்த இளைஞன் கூறினார். அப்படியே காணிகளிருந்து வெளியே வந்து வீதிக்கு ஏறினோம். அதுதான் ராசா அண்ணை மரம் நட்டு வளர்த்த வீதி. வீதியின் ஒரு எல்லையிலிருந்து மற்றைய எல்லைக்கு நடந்து சென்று சுற்றவர இருக்கும் வயற்காணிகளைக் கண்டு களித்தோம். இடையிடையே புகைப்படங்கள், செல்பிகள். வீதிக்குச் சமாந்தரமாக ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்காலுக்கு மேலாக சீமேந்தினால் பாலம் ஒன்றைக் கட்டியே நண்பனின் வீட்டிற்குச் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது. அக்கட்டிலிருந்து சிறிது நேரம் பழங்கதை பேசினோம். சிறிதுநேரம் பேசிக்கொண்டிருக்கப் பசியெடுத்தது. நாம் கொண்டுவந்திருந்த மீன், இறால் என்பவற்றைக் குழம்பாக வைத்திருந்தார் அந்த அம்மா. அவற்றுடன் கரட் சம்பலும், உருளைக்கிழங்குக் கறியும் பரிமாறப்பட்டது. வீட்டுக்கிணற்றில் ஆசைதீர குளித்த குளியலும், தோட்டக்காணிகளைச் சுற்றிவர நடந்த நடையும் களைப்பினையும் பசியினையும் ஒருங்கே ஏற்படுத்தியிருக்க வயிறார உண்டோம். தோட்டத்தில் காய்த்த பப்பாளிப்பழமும், வாழைப்பழமும் கொண்டுவந்தார்கள். சிறிது நேரத்தில் களைப்பு மிகுதியால் தூங்கிப்போனோம்.1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
- அமெரிக்கா: இரானிய இலக்குகள் மீது பதிலடி தாக்குதல் - சிரியா, இராக்கில் என்ன நடக்கிறது?
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.