Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    88402
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    32727
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    20186
    Posts
  4. satan

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    10204
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/13/26 in Posts

  1. 2) முன்னோடிக்கான இரண்டாவது நன்கொடை ரூபா 10,493.65 சதம் 13/01/2026 கிடைக்கப்பெற்றது. இன்றைய 13/01/2026 வங்கி மீதி ரூபா 111,573.67 சதம் ஆகும். இரண்டாவது நன்கொடையை அனுப்பி வைத்த உறவிற்கு மிக்க நன்றி. உங்கள் ஒவ்வொருவரின் கூட்டு முயற்சியால் முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 வெற்றி பெறட்டும்.
  2. கண்கள் செருகிக் கொண்டு வருகின்றது. ஆள்… தப்புவது கடினம். தேசியக் கொடியை... அரைக் கம்பத்தில் பறக்க விடுங்கப்பா.
  3. விமலுக்கு நன்றாகவே தெரியும், தான் உண்ணாவிரதமிருந்தால் எல்லாரும் சேர்ந்து தன்னை சாக விட்டுவிடுவார்கள் என்பது. அதனாலேயே சத்தியாக்கிரகமாக மாற்றியிருப்பார். அவர் என்ன போராட்டம் செய்தாலும் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படப்போவதில்லை, இருந்து, எழும்பி, பின் களைத்து வராமலே போய்விடுவார். இவருக்கு இருப்பது வாய் மட்டுந்தான். திஸ்ஸ விகாரைக்கு மக்களை திரட்ட பிக்குகளையும் திரட்டிக்கொண்டு தெருவில நின்று ஊழையிட்டு விட்டு போய் படுத்தவர், இப்போ வந்து கருணாநிதி ஸ்ரைலில் கருப்பு கண்ணாடி, வந்த கணத்திலேயே படுத்துவிட்டார், தூக்கம் கலைய எழும்பிப்போவார். பொதுஅரங்கில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இப்படி அசிங்கமாக பேசிக்கொண்டு, எப்படி கல்வி திட்டத்திற்கு எதிராக சத்தியாக்கிரகம் செய்ய முடியுது இவரால்? அசிங்கமாக பேசுவது இவர்களுக்கு சர்வ சாதாரணம், பிறகு கல்வி திட்டம் பிழையாம் என்கிற குற்றச்சாட்டு. இவரை ஏன் இன்னும் போலீசார் கைது செய்யவில்லை? ஒரு நாட்டின் பிரதமரை பகிரங்கமாக இழிவு படுத்துவதை வேடிக்கை பார்ப்பது தான் பொலிஸாரின் கடமையா? ஐ .நாவின் மனித உரிமையாளரை தான் கலியாணம் கட்டுகிறேன் என்று சொன்னார் மேவின், அது அவரின் கருத்து சுதந்திரமென்று விளக்கமளித்தார் மஹிந்தா. இதுதான் ஒரு நாட்டின் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம், கருத்துச்சுதந்திரம். நாமல் பேரணி நடத்தினார் எதுவும் சாதிக்க முடியவில்லை. வந்தது இயற்கை சீற்றம். பயமுறுத்தல், இல்லாத விடயங்களை பரப்புதல், சேறடித்தல் வேலைகளை செய்கிறார். பூச்சாண்டி பிடிக்கும் என்று குழந்தைகளுக்கு பயம் காட்டுவதுபோல், அமெரிக்கா இலங்கைக்குள் நுழையப்போகுதாம் என்று அனுராவுக்கு பயம் காட்டுகிறார். இவர் எதிர்கால ஜனாதிபதியாம். இவர் ஜனாதிபதியாக வந்தால் எப்படியிருக்கும்? இனவாதம் மதவாதம் பேசும் அரசியல் கலாச்சாரமே இந்த நாட்டில் இருக்கவேண்டும், அது இல்லாத, பேசாதவர் அரசியல் செய்யக்கூடாது என்பது இவர்களின் எழுதப்படாத சட்டம். எப்போ இவர்களின் ஊழல், கொலை, கொள்ளை வெளிவருகிறதோ, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறதோ உடனே நாட்டை குழப்பி, ஆட்சியை பிடித்து தம்மை புனிதர்களாக, சிங்கள, பௌத்த காவலர்களாக காட்டுவார்கள். இதில இன்னொரு பகிடி என்னவென்றால்; தேசிய மக்கள் சக்தி பாரியளவில் பொய்பிரசாரங்களை மேற்கொண்டு ஆட்சியை கைப்பற்றியதால்தெய்வ கோபம் ஏற்பட்டு நாடு அனர்த்தங்களை எதிர்நோக்கியதாம், வஜிர அபேவர்த்தன சொல்கிறார். அப்போ, சுனாமி ஏன் வந்தது? எத்தனை உயிர்களை துடிக்க துடிக்க கொன்று குவிக்கும்போது தெய்வம் மகிழ்ச்சியடைந்ததோ? சரி, இவர்களது பொய்யால் அனர்த்தம் ஏற்பட்டதென்றால் அவர்கள் ஆட்சியை கைப்பற்றியவுடன் அல்லவா அனர்த்தம் நேரிடிருக்க வேண்டும்? பருவகால அனர்தத்திற்கும், தெய்வ கோபத்திற்கும் வேறுபாடு தெரியாத அமைச்சர். கல்வியறிவு இல்லை, திறமையில்லை நாட்டை நிர்வகிக்க. இனவாதம், மதவாதம் பேசி அரசியலை கைப்பற்றி கொள்ளையடிப்பது, கேள்வி கேட்போரை கொலை செய்வது, இவர்கள்தான் சிறந்த அரசியல்வாதிகள். நாட்டில் மக்களை சிந்திக்க விடுவதில்லை, உண்மையை தெரிந்துகொள்ள அனுமதிப்பதில்லை.
  4. சொந்த பணமா? கடனோடு கடனாக ஏத்திவிட வேண்டியது தானே. வந்தா மலை போனா மயிர்.
  5. அத தெரண கருத்துப்படம்.
  6. ராஜபக்ச குடும்பத்தை தவிக்க விட்டதற்கு பாவமன்னிப்பு கேட்க போயிருப்பாரோ?
  7. இவர் இப்போது பாராளுமன்றில் இல்லை. மக்களால் தூக்கி எறியப்பட்டுள்ளார். இது சுழற்சி முறையிலான நுhதனமான போராட்டம். எட்டுமணிநேர வேலை மாதிரி.
  8. இரவு, பகல் போராட்டம் என கூறி... நள்ளிரவில் வீட்டிற்கு சென்று திரும்பிய விமல் வீரவன்ச. 😂
  9. கிந்தியாவுக்கு வளர்த்த புலி (கடாய்) மார்பில் பாய்ந்த (மார்பை புளந்த) கதை இது. எப்படி கிந்தியா தனது நீண்டகால நலன்கள் கருதி இலங்கை தமிழர்கள் வாழ்க்கையை நாசமாக்கியதோ அவ்வாறே தமது நீண்ட கால நலன்கள் கருதி இலங்கை தமிழர்கள் இந்தியாவின் எதிரிகளுக்கு உதவிசெய்ய வேண்டும் என்பது தற்காலத்தில் பலரது மனநிலையாக உள்ளது. சோனியா கிழவிக்கு தன்னாலோ அல்லது தனது பிள்ளைகளாலோ கிந்தியாவின் பிரதமராக வரமுடியவில்லை என்பது கடைசிவரை நிறைவேறாத ஆசையாகவும், ஏமாற்றமாகவும் அமைகின்றது.
  10. 12 Jan, 2026 | 05:58 PM வட மாகாண முதலீட்டு மாநாடு (NIS) 2026 யாழ்ப்பாணத்தில் உள்ள திருவள்ளுவர் கலாசார மையத்தில் ஜனவரி 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இலங்கையின் போர் பிந்தைய பொருளாதார மாற்றப் பயணத்தில் இந்த மாநாடு ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், கொள்கை வடிவமைப்பாளர்கள், அபிவிருத்தி கூட்டாளிகள் மற்றும் தமிழ் புலம்பெயர் சமூகத்தை ஒன்றிணைத்து, வட மாகாணத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு மூலோபாய திருப்புமுனையாக NIS 2026 அமைந்துள்ளது. பல தசாப்தங்களாக வட மாகாணம் பயன்படுத்தப்படாத பெரும் திறன்களைக் கொண்டிருந்தாலும், சிதறிய நிர்வாக அமைப்புகள், முடிவெடுப்பாளர்களை அணுக முடியாத நிலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட முதலீட்டு வசதி இல்லாமை போன்ற காரணங்களால் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த நிலையை உறுதியாக மாற்றுவதே NIS 2026இன் நோக்கம். வட மாகாணத்தில் இதுவரை நடைபெற்ற மாநாடுகளில் முதன்முறையாக, முழுமையான முதலீட்டாளர் மையப்படுத்தப்பட்ட மாநாடாக இது அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆர்வத்தை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், அந்த ஆர்வத்தை நடைமுறை நடவடிக்கைகளாக மாற்றுவதற்காகவே இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் ஓர் உயர் தாக்கம் கொண்ட மேடை நிலையான பிராந்திய வளர்ச்சிக்கு முதலீட்டாளர்களும் தொழில்முனைவோரும் அளிக்கும் பங்களிப்பு மிக முக்கியமானது. இந்த உண்மையை மையமாகக் கொண்டு NIS 2026 அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள், அரசாங்க அதிகாரிகள், மாகாண தலைமைத்துவம், தனியார் துறை பிரதிநிதிகள் மற்றும் நிறுவனத் தரப்பினருடன் ஒரே கூரையின் கீழ் நேரடியாக கலந்துரையாடுவதற்கான அபூர்வ வாய்ப்பை இந்த மாநாடு வழங்குகிறது. சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், தொடக்க நிறுவனங்கள், இளங்கலை மற்றும் பட்டதாரி மாணவர்கள் உள்ளிட்ட தொழில்முனைவோர், உண்மையான முதலீட்டு வாய்ப்புகள், கொள்கை விளக்கங்கள், நிதி வழித்தடங்கள் மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றை நேரடியாக அறிந்து கொள்ள முடியும். அனுமதிகள், கூட்டாண்மைகள் மற்றும் நீண்டகால வளர்ச்சியை தீர்மானிக்கும் முடிவெடுப்பாளர்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு பலருக்கு இதுவே முதன்முறையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த மாநாடு எதிர்காலத்தை நோக்கி அமைக்கப்பட்ட ஒரு ஊக்கமளிக்கும் நிகழ்வாகும். இது நம்பிக்கையை உருவாக்குகிறது, புதுமைகளை ஊக்குவிக்கிறது மற்றும் வட மாகாணம் தீவிரமான முதலீடுகளை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளது என்ற வலுவான செய்தியை வெளிப்படுத்துகிறது. ஆளுநர் அலுவலகத்தில் ஒரே மைய செயலகம் NIS 2026இன் முக்கியமான பெறுபேறுகளில் ஒன்றாக, முதலீட்டாளர்கள் மற்றும் திட்ட முன்மொழிவாளர்களுக்காக உருவாக்கப்பட்ட தனிப்பட்ட செயலகம் ஆளுநர் அலுவலகத்தில் நிறுவப்படவுள்ளது. இந்த செயலகம், வட மாகாணத்தில் எதிர்கால முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுக்க விரும்பும் அனைவருக்கும் ஒரே மைய ஒருங்கிணைப்பு நிலையமாக செயல்படும். இந்த முயற்சி முன்னுதாரணமற்றது. முதலீட்டாளர்கள் முதன்முறையாக, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும், திட்ட முன்னேற்றங்களை கண்காணிக்கவும், ஒழுங்குமுறை தேவைகளை தெளிவுபடுத்தவும், நிர்வாக தடைகளை தீர்க்கவும் ஒரு மையப்படுத்தப்பட்ட நிறுவன அமைப்பைப் பெறுகின்றனர். மாநாட்டின் இரண்டு நாட்களுடன் இந்த முயற்சி முடிவடையாது. NIS 2026 உருவாக்கும் வேகமும் தாக்கமும் தொடர்ந்து நிலைத்திருக்க இந்த செயலகம் ஒரு நிரந்தர பாரம்பரியமாக அமையும். ஒரு நிகழ்வைத் தாண்டிய கட்டமைப்பு மாற்றம் NIS 2026 ஒரு சின்ன நிகழ்வாகவோ அல்லது ஒருமுறை நடைபெறும் விளம்பர முயற்சியாகவோ அல்ல. இது பிராந்திய வளர்ச்சியை அணுகும் முறையில் ஒரு அடிப்படை கட்டமைப்பு மாற்றமாகும். கொள்கை, நிர்வாகம், முதலீடு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை ஒரே சூழலில் ஒருங்கிணைப்பதன் மூலம், வட மாகாணத்தை போட்டித்திறன் கொண்ட, நம்பகமான முதலீட்டு இலக்காக உருவாக்குவதற்கான முதல் ஒருங்கிணைந்த முயற்சியாக இந்த மாநாடு அமைகிறது. பங்கேற்கும் அழைப்பு NIS 2026 என்பது யோசனைகள் நிறுவனங்களுடன் சந்திக்கும் இடம். கனவுகள் வாய்ப்புகளுடன் இணையும் தருணம். வட மாகாணத்தின் எதிர்காலம் உறுதியான வடிவம் பெறத் தொடங்கும் மேடை என்றும் கூறப்படுகிறது. வட மாகாண முதலீட்டு மாநாடு யாழ்ப்பாணத்தில் ஜன. 21 ஆரம்பம் | Virakesari.lk
  11. உணவுப் பாத்திரத்தில் இருக்கும் அலுமினியம் அமில உணவுகளைச் (தேசிக்காய்ப் புளி, மரப்புளி) சமைக்கும் போது சிறிது உணவுடன் சேரலாம். இதை leeching என்பார்கள். ஆனால், அப்படி உணவுடன் சேரும் அலுமினியம் உடலில் இருந்து அகற்றப் படும் அளவுக்கு மிகவும் குறைவான அளவு தான். இந்த அலுமினியத்தால் மூளை, நரம்பியல் பாதிப்புகள் ஏற்படுமென்பதற்கு ஆதாரங்கள் இல்லை. இன்னொரு விடயம், அலுமினியம் மண்ணிலும், தண்ணீரிலும் கூட இயற்கையாக இருக்கும் ஒரு உலோகம். மண்பானையில் இருந்து அலுமினியம் உணவுக்குள் கசியாதா? யாராவது இதை ஆராய்ந்து பார்த்திருக்கிறார்களா? மற்றபடி, மண்பானையில் சமைப்பதும் தண்ணீர் பரிமாறுவதும் தனிப் பட்ட விருப்பங்கள்.
  12. தேசிய பூங்கா - அல்பெர்டா - கனடா
  13. ஊருக்கு போய் சொகுசு வீட்டை கட்டியபின் வெளி நாட்டில் இருந்து zoom மூலமும், CCTV மூலமும் சதா கண்காணித்து கொண்டிருக்கும் உரிமையாளர்களுக்கு இது பற்றி அறிய முடியாதா?
  14. சுப.சோமசுந்தரம் ஐயா அவர்களே... நல்ல ஒரு பகிர்விற்கு நன்றி. 🙏
  15. "பல் துலக்கும்போது வெடித்த கழுத்து ரத்தக்குழாய்" - அரிதான நிகழ்வுக்கு என்ன காரணம்? பட மூலாதாரம், Lakshmi Jangde படக்குறிப்பு, ராகுல் குமார் ஜங்டே, டிசம்பர் 1-ஆம் தேதி தனக்கு ஏற்பட்ட அந்த தாங்க முடியாத வலியை நினைவு கூர்கிறார். கட்டுரை தகவல் விஷ்ணுகாந்த் திவாரி பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் "அன்று காலை நான் பல் துலக்கிக் கொண்டிருந்தபோது எனக்கு விக்கல் எடுத்தது. அதன் பிறகு, எனது தொண்டையின் வலது பக்கத்திற்குள் ஒரு பலூன் வேகமாக வீங்குவது போன்ற உணர்வு ஏற்பட்டது. சில நிமிடங்களிலேயே எனது தொண்டை முழுவதுமாக வீங்கிவிட்டது, கண்கள் இருட்டும் அளவுக்குக் கடுமையான வலி ஏற்பட்டது." சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரைச் சேர்ந்த ராகுல் குமார் ஜங்டே, டிசம்பர் 1-ஆம் தேதி தனக்கு ஏற்பட்ட அந்த தாங்க முடியாத வலியை நினைவு கூர்கிறார். அப்போது அவர் தனது மனைவியிடம், "ஏதோ சரியில்லை, நாம் உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்" என்று மட்டும் கூறியுள்ளார். அதன் பிறகு அவருக்கு நினைவு திரும்பியபோது, ராய்ப்பூரில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். அவருக்கு ஏற்பட்ட அந்த பாதிப்பு எந்த காயத்தினாலோ அல்லது நோயினாலோ ஏற்படவில்லை, மாறாக அது ஒரு அரிய நிகழ்வு என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் கழுத்தில் உள்ள ஒரு தமனி தானாகவே வெடித்துவிட்டது. இது மருத்துவ மொழியில் 'ஸ்பாண்டேனியஸ் கரோடிட் ஆர்டரி ரப்சர்' என்று அழைக்கப்படுகிறது. மாநிலத்தில் பதிவான இது போன்ற முதல் நிகழ்வு இதுவாகும். பீம்ராவ் அம்பேத்கர் மருத்துவமனையின் இதயம், மார்பு மற்றும் ரத்த நாள அறுவை சிகிச்சை பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் சுமார் 6 மணி நேர சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு ராகுலின் உயிரைக் காப்பாற்றினர். இந்த நிலை ஏன் ஆபத்தானது? பட மூலாதாரம்,Dr. Krishnakant Sahu படக்குறிப்பு,இந்த ஸ்கேன் ராகுலின் நிலையை தெளிவுபடுத்துகிறது, அவரது வலது கரோடிட் தமனி, அதன் சிதைவு ஆகியவற்றைக் காட்டுகிறது. அதே துறையின் தலைவரான மருத்துவர் கிருஷ்ணகாந்த் சாஹு பிபிசி இந்தியிடம் கூறுகையில், "கழுத்தில் உள்ள ரத்த நாளம் வெடிப்பது உயிருக்கு ஆபத்தான ஒரு நிகழ்வு. இதற்குச் சிகிச்சை அளிக்காவிட்டால், சில நிமிடங்களிலேயே மரணம் ஏற்படலாம். ஆனால், இது பெரும்பாலும் கடுமையான விபத்துக்கள் அல்லது தொண்டை புற்றுநோய் போன்ற நோய்களின் போதுதான் நடக்கும். ஒரு சாதாரண மனிதருக்குக் கழுத்து ரத்தக்குழாய் தானாகவே வெடிப்பது என்பது மிகவும் அரிதான நிகழ்வு," என்றார். தொடர்ந்து பேசிய அவர், "மருத்துவ இதழ்களின் படி, இதுவரை உலகம் முழுவதும் இது போன்று 10 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. அந்த அளவுக்கு இது அரிதானது," என்றார். 40 வயதான ராகுல், ராய்ப்பூர் அருகிலுள்ள பன்புரி பகுதியில் வசிக்கிறார். அவர் பெண்களுக்கான அழகுசாதனப் பொருட்கள் விற்கும் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவரது குடும்பத்தில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உள்ளனர். தமக்கு இதற்கு முன்பு இது போன்ற எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டதில்லை என்று ராகுல் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால், அந்த டிசம்பர் காலை நடந்தது ராகுலுக்கு மட்டுமல்ல, மருத்துவர்களுக்கும் ஒரு சவாலான விஷயமாக அமைந்தது. மருத்துவப் பரிசோதனையில் ராகுலின் வலது பக்க கழுத்து நாளம் வெடித்திருப்பது தெரியவந்தது. பொதுவாக, கழுத்தில் உள்ள வலது மற்றும் இடது நாளங்கள் இதயத்திலிருந்து மூளைக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தைக் கொண்டு செல்கின்றன. இதயத்திலிருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்த நாளங்கள் தமனிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நாளங்களின் வலைப்பின்னல் மனித உடல் முழுவதும் மிகவும் பாதுகாப்பாகப் பரவியுள்ளது. மருத்துவர்களின் கூற்றுப்படி, உடலில் ஒரு இடத்தில் காயமோ அல்லது கிழிவு ஏற்பட்டால், அது இதயத்திலிருந்து ரத்தத்தை வழங்கும் நாளங்களைப் பாதித்து ரத்தப்போக்கை ஏற்படுத்தினால் மட்டுமே உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இதயத்திலிருந்து உடலின் பிற பகுதிகளுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இந்த நாளங்கள் மிக அதிக அழுத்தத்தில் பாய்வதால், அதிக அளவு இரத்தம் மிக விரைவாக இழக்கப்படும். இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர் கிருஷ்ணகாந்த் சாஹு தலைமையிலான குழு மேற்கொண்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், "எந்தவித காயம், தொற்று, புற்றுநோய் அல்லது முன்கூட்டிய நோய் ஏதுமின்றி கழுத்தில் உள்ள நாளம் தானாகவே வெடிப்பது ஒரு அரிய நிகழ்வு," என்றார். ராகுலின் கழுத்தில் வலது நாளம் வெடித்ததால், கழுத்துப் பகுதியில் ரத்தம் வேகமாக நிரம்பியது. தமனியைச் சுற்றி ரத்தம் தேங்கியதால் ஒரு பலூன் போன்ற அமைப்பு உருவானது. இதனை மருத்துவ மொழியில் 'சூடோஅன்யூரிசம்' என்று அழைக்கிறார்கள். மருத்துவர் சாஹு இதுகுறித்து கூறுகையில், "உலகெங்கிலும் உள்ள மருத்துவ இதழ்களில் இது போன்ற சம்பவங்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். எனது பணிக்காலத்தில் இது போன்ற ஒரு சம்பவத்தை நான் பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை," என்றார். உயிரைக் காப்பாற்றுவது எவ்வளவு கடினம்? பட மூலாதாரம்,Dr. Krishnakant Sahu படக்குறிப்பு,மருத்துவமனையில் மருத்துவர்களும் ஊழியர்களும் தன்னை கையாண்ட விதம் தனக்கு தைரியத்தை அளித்ததாக ராகுல் கூறுகிறார். இதுகுறித்த மேலதிக விபரங்களைப் பகிர்ந்த மருத்துவர் சாஹு, "எளிமையாகச் சொன்னால், ரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்பு பக்கவாதத்தை உண்டாக்கும். ஆனால் ராகுலின் விஷயத்தில், பிரச்னை இன்னும் ஆபத்தானது. நாளமே வெடித்துவிட்டது. அங்கு உருவான ஒரு சிறிய ரத்தக் கட்டி கூட மூளையை அடைந்திருந்தால், முடக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருந்தன," என்றார். பெரிய ரத்தக் கட்டிகளோ அல்லது அதிக எண்ணிக்கையிலான கட்டிகளோ மூளையை அடைந்தால், முழு மூளையும் சேதமடையக்கூடும் அல்லது நோயாளி 'மூளைச்சாவு' அடையும் நிலை கூட ஏற்படலாம். அறுவை சிகிச்சைக்கு முன்பும், அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தபோதும், நாளம் மீண்டும் வெடிக்கும் அபாயம் இருந்ததாக அவர் விளக்கினார். அப்படி நடந்திருந்தால், கட்டுப்பாடற்ற ரத்தப்போக்கினால் சில நிமிடங்களிலேயே நோயாளி இறந்திருக்கக்கூடும். ராகுல் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது அவரது நிலைமை சீராக இல்லை. அவரது கழுத்திற்குள் அதிக ரத்தம் சேர்ந்திருந்ததால், அறுவை சிகிச்சையின் போது நாளத்தை துல்லியமாகக் கண்டறிவது மிகவும் கடினமாக இருந்தது. "கழுத்தின் இந்தப் பகுதியில் பேச்சு, கை கால்களின் அசைவு மற்றும் இதயத் துடிப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் பல முக்கியமான நரம்புகள் உள்ளன. நாங்கள் ஒரு சிறிய தவறு செய்திருந்தாலும், அது நோயாளிக்கு வாழ்நாள் முழுவதும் குறைபாட்டையோ அல்லது மரணத்தையோ ஏற்படுத்தியிருக்கும்," என்று மருத்துவர் சாஹு குறிப்பிட்டார். நாளத்தைக் கண்டறிந்து அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கே மருத்துவர்களுக்கு சுமார் ஒன்றரை மணி நேரம் ஆனது. முழு அறுவை சிகிச்சையும் 5 முதல் 6 மணி நேரம் நீடித்தது. வெடித்த நாளத்தைச் சரிசெய்ய 'பொவைன் பெரிகார்டியம் பேட்ச்', அதாவது மாட்டின் இதயத்தைச் சுற்றியுள்ள சவ்வு பயன்படுத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ராகுலுக்கு 12 மணி நேரம் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருந்தது. "ராகுலுக்கு சுயநினைவு திரும்பிய பிறகு, முதலில் அவருடன் பேசி அவரது குரலைச் சரிபார்த்தோம். பின்னர் அவரது கைகால்களின் அசைவுகளையும், பின்னர் அவரது முக அசைவுகளையும் சரிபார்த்து, ரத்தக் கட்டிகள் ஏதும் மூளையை அடையவில்லை என்பதையும், அறுவை சிகிச்சையின் போது எந்த முக்கிய நரம்புகளும் காயமடையவில்லை என்பதையும் உறுதி செய்தோம்," என்று மருத்துவர் சாஹு கூறினார். ராகுலின் மனைவி லட்சுமி ஜங்டே பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், ஆரம்ப நாட்கள் மிகவும் பயமாக இருந்ததாகவும், நிலைமை மிகவும் தீவிரமாக இருந்தது என்று மருத்துவர்கள் தெளிவாகக் கூறியிருந்ததாகவும் தெரிவித்தார். "இப்போது அவர் குணமடைவதைப் பார்க்கும்போது, அவரது கழுத்து ரத்தக்குழாய் வெடித்தது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை," என்கிறார் அவர். சதீஷ்கரில் இது போன்று நிகழ்வது முதல் முறை என மருத்துவர்கள் கூறியபோது தான் மிகவும் பயந்ததாக ராகுல் கூறுகிறார். ஆனால் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அளித்த தைரியம் அவரை மீட்டெடுத்தது. தற்போது அவர் ஒரு மாதத்திற்கும் மேலாகப் பார்க்காத தனது குழந்தைகளை, குறிப்பாகத் தனது மகளைச் சந்திக்க வீட்டிற்குச் செல்லத் தயாராகி வருகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp82vde6506o
  16. இந்த பிந்திய ஞானோதய பதிவை அடிக்கடி பல பொது ஊடகங்களில் படித்துள்ளேன்.உலகிற்கு முன்னுதாரண செய்தியாக/தகவலாக இருந்தாலும் யாருமே மனம் மாறப்போவதுமில்லை.திருந்த போவதுமில்லை. தம்மிடம் இருப்பதை ஏழை எளிய மக்களுக்கு பகிரப்போவதுமில்லை. ஏன் ஞானோதயகாரரின் குடும்பமும் சாதாரண வாழ்க்கை வாழப்போவதுமில்லை.😀 இணைப்பிற்கு நன்றி சுவியர்.🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.