Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்14Points88770Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்14Points19626Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்9Points39286Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்9Points3104Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/16/26 in Posts
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஐக்கிய அமீரகம் அணி, சொஹைப் கானின் அதிரடியான 68 (48 பந்துகள்) ஓட்டங்களுடனும், அலிஷான் ஷரஃபுவின் நிதானமான 40 (31 பந்துகள்) ஓட்டங்களுடனும் 9 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, இப்ராஹிம் ஸட்ரானின் வேகமான 53 (41 பந்துகளில்) ஓட்டங்களுடனும், அஸ்மதுல்லா ஓமர்ஸாயின் ஆட்டமிழக்காத மின்னல் வேகத்தில் எடுத்த 40 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும், டர்விஷ் ரசூலியின் விரைவான 33 (23 பந்துகள்) ஓட்டங்களோடும் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 162 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஐக்கிய அமீரகம் அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுபெடுத்தாடிய இங்கிலாந்து அணி, வில் ஜக்ஸின் ஆட்டமிழக்காமல் மின்னல் வேகத்தில் எடுத்த 53 (22 பந்துகள்) ஓட்டங்களுடனும், டொம் பன்டனின் விரைவான 30 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி, பென் மனென்டியின் புயல்வேக 60 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், கிரான்ட் ஸ்டூவர்ட்டின் வேகமான 45 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜஸ்டின் மொஸ்காவின் விரைவான 43 (34 பந்துகள்) ஓட்டங்களோடும் போராடியபோதும் இறுதி ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தமையால் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 178 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இத்தாலி அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அவுஸ்திரேலியா அணி, ட்ரெவிஸ் ஹெட்டின் மின்னல்வேக 56 (29 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் மிற்செல் மாஷின் புயல்வேக 54 (27 பந்துகள்) ஓட்டங்களுடனும் அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றபோதும் சிறிலங்கா அணியின் பந்துவீச்சாளர்களின் இறுக்கமான பந்துவீச்சால் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 181 ஓட்டங்களையே பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி பதும் நிஸங்கவின் ஆட்டமிழக்காமல் மரண அடியுடன் எடுத்த 100 (52 பந்துகள்) ஓட்டங்களுடனும், குசல் மென்டிஸின் புயல்வேக 51 (38 பந்துகள்) ஓட்டங்களுடனும் 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 184 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: சிறிலங்கா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த ஐந்து பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: முதல்வர் @alvayan நாற்காலியைப் பலப்படுத்தி உட்கார்ந்திருக்கின்றார். சுமைதாங்கியாக @suvy ஐயா அமைந்துள்ளார்!4 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்கள் ஐபிஎல் களப்போட்டியில் அப்படியே அசையாமல் முதலாவது இடத்திலேயே நின்ற கணக்கையும், இந்தக் கணக்கையும் கூட்டிப் பார்த்தால் உலகத்தில் ஒரு சமநிலை இருக்கிற மாதிரியே தெரிகின்றது.....................🤣. 🤣............. ரஜனி, கமல் எல்லாம் இருக்க 'கரகாட்டக்காரன்' வந்து ஊரெல்லாம் ஓடினது போல.............. படம் முடிய வாழைப்பழக் காமெடி போல காமெடி மட்டும் தான் நினைவில் நிற்கும்.................🤣.2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
என்ன நடக்குது அண்ணா இங்கே.............. நாளைக்கு ஸ்கொட்லாந்தும் அயர்லாந்தும் வென்றால், நான் மெகா மில்லியன், பவர்பால், இப்படி எல்லா லாட்டரி டிக்கெட்டுகளையும் எடுத்துப் பார்க்கலாம் போல...................2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
🤣................ முன்னர் ஏதோ ஒரு வருட உதைபந்தாட்ட உலகக் கோப்பை போட்டிகளில் ஒரு ஆக்டோபஸ் (தமிழ்: கோவலன்) தெரிவுகள் செய்ததை செய்திகளில் பார்த்திருக்கின்றேன்............ பெரிய வித்தியாசம் இல்லை................🤣.2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்பாடா இப்பதான் நிம்மதியாய் இருக்கு . .....அங்கன இங்கன அலையத் தேவையில்லை . .......! 😂2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
15வது ஓவரில் இருபது ரன்னா....................... மாட்ச் முடிய முழுச் சிறீலங்காவுமே புகை மயக்கத்துக்கு போகப் போகுது...................🤣. 🤣.............. இன்னும் நான்கு ஓவர்கள் தானே, அண்ணா................ உண்மையா உண்மை தெரிஞ்சிடும்..................🤣.2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆரம்பவீரர்கள் நல்லா இருப்பதால் ஸ்மித்துக்கு இடம் இல்லை என்பது லொஜிக்கலாகத்தான் இருக்கிறது. ஆனால் என்னை பொறுத்த மட்டில் ஸ்மித் ஒரு கிரிகெட் அசுரன். வெட்ட வெட்ட புதிய ஆளாய் உருவாகும் வல்லமை உண்டு. போலராக, கடைநிலை பேட்ஸ்மேனாக வந்து, முதல் நிலை டெஸ்ட் பேட்ஸ்மேனாகி, போலிங் போடுவஐதையே விட்டு விட்டார், டெஸ்ட் மட்டுமே ஆடல்கூடியவர் என சொன்ன போது ஒருநாள் போட்டியிலும் விளையாடினார். இத்தனைக்கும் பார்க்க வெறுப்புவரும் ஆட்டம். அவரின் T20 அண்மைய form ஐ இதன் தொடர்சியாகவே நான் பார்க்கிறேன். சகல எதிர்பார்ப்புக்களையிம் உடைத்து இதிலும் ஒரு கடைசி காட்டு காட்ட அவரால் முடியும் என நான் நம்புகிறேன். ஆனால் மார்ஷ்சுக்கு உண்மையில் காயம் என்றால் தான் அவர் உள்ளே வரமுடியும் என்பதையும் ஏற்கிறேன்.2 points
-
கருத்து படங்கள்
2 points2 points
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாயை அவிட்டு விடுங்க. முதலமைச்சர் @alvayan க்கு வாழ்த்துக்கள்.2 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்று 250 கிலோமீற்றர் மழைக்குள் பயணம் செய்யவேண்டியிருந்ததால் ஒரு மட்ச்சும் பார்க்கவில்லை! திரும்பவும் 250 கிலோமீற்றர் ஓடி, வந்த கையுடன் முதல்வேலையாகப் புள்ளிகளைத்தான் கணக்கிட்டேன்.☺️ ஆவலுடன் காத்திருப்பார்கள் என்ற நம்பிக்கைதான் 🤩 அதுதானே!😜2 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உங்களுக்கில்லாமலா செம்பா. வாங்கிறதுதான் வாங்கிறியள் கோல்ட் பிஸ்கெட்டா வாங்குங்கோ😂 இதில சொப்பன சுந்தரி யாருங்கோ😂 ஓமாம்👍1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பின் வாங்கில் இருந்த @ரசோதரன் சொல்வளி கேட்டு வாங்கு மாறி இருந்ததால் கூடுதல் புள்ளிகளை எடுத்து முன்னேறுகிறார். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பது இதைத் தான்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளை செவ்வாய் 17 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து CAN எதிர் NZ அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் கனடா எல்லோருக்கும் முட்டைகள் பரிமாற வாய்ப்புள்ளதா? 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRE எதிர் ZIM 10 பேர் அயர்லாந்து அணி வெல்வதாகவும் 13 பேர் ஸிம்பாப்வே அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். அயர்லாந்து வசீ புலவர் நியூ பலன்ஸ் சுவி கோஷான் சே நியாயம் எப்போதும் தமிழன் ரசோதரன் பிரபா நந்தன் ஸிம்பாப்வே செம்பாட்டான் ஏராளன் சுவைப்பிரியன் அல்வாயன் ஈழப்பிரியன் வாத்தியார் கறுப்பி வாதவூரான் வீரப் பையன்26 கிருபன் அஹஸ்தியன் கந்தப்பு நிலாமதி இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம் SCOT எதிர் NEP 17 பேர் ஸ்கொட்லாந்து அணி வெல்வதாகவும் ஆறு பேர் மாத்திரம் நேபாளம் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். நேபாளம் சுவைப்பிரியன் அல்வாயன் கறுப்பி கிருபன் கோஷான் சே கந்தப்பு இப்போட்டியில் எவர் புள்ளிகள் எடுப்பார்கள்?1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் வாதாவூரனுக்கு பயந்து நாயை அவிழ்த்து விட, சுவி அண்ணாஃ நாய்க்கு பிஸ்கெட்டை போட்டுட்டு, வீட்டுக்குள்ள பூந்திட்டார்😂 அதே 😂1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை வைத்தார்கள் ஆப்பு எல்லாருக்கும். இங்கே பதிவுகளை வாசிச்சா, அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. இலங்கையின் சுழல் பந்தாளர்களை கேள்வி கேக்கிறார் ஒருவர். மட்டையாளர்களை நக்கல் அடிக்கிறார் ஒருவர். நான் சிலவேளை நினைப்பது. நானும் இவர்களும் ஒரே போட்டியைத்தான் பார்க்கிறோமா என்று. 😁😛1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வீரப்பையன் கூறுவார் பின்னால பாருங்கோ பின்னால பாருங்கோ என, தற்போது நீங்கள் அவரின் இடத்தை எடுத்து விடுகிறீர்கள், போட்டி ஆரம்பிக்கும் போது ஆமை போலவும் முடிக்கும் போது முயல் போலவும் முடிக்கிறீர்கள்.🤣 உங்களுக்கு ஏதாவது கெளரவப்பட்டம் கொடுப்பதற்கு யாராவது சிபாரிசு செய்யவேண்டும்.🤣1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதென்ன சாட் குரு ஆசிரமா புக வர😂 இதெல்லாம் ஞான திருஸ்டி…😂1 point- வெடுக்கு நாறிமலையில் சிவாரத்திரி தின வழிபாடுகள்!
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுமூகமாக நடைபெற்ற சிவராத்திரி வழிபாடுகள் ; துரைராசா ரவிகரன் பங்கேற்பு 16 Feb, 2026 | 10:45 AM தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) சிவராத்திரி தின பூசை வழிபாடுகள் எவ்வித இடையூறுகளுமின்றி சுமூகமான முறையில் இடம்பெற்றதுடன் குறித்த பூசைவழிபாடுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். குறிப்பாக கடந்தகாலங்களில் வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரிதின வழிபாடுகளில் பொலிசாரால் கடுமையான குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டுவந்தன. இந்நிலையில் இம்முறை இடம்பெறும் சிவராத்திரி தின பூசை வழிபாடுகளில் குழப்பங்கள் ஏற்படுத்தப்படாது சைவமக்கள் சுதந்திரமாக வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்படவேண்டுமெனவும், சைவப்பெருமக்களின் வழிபாட்டுரிமை பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடந்த வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற வவுனியாவடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வலியுறுத்தியிருந்தார். அதன்போது சைவமக்கள் சுதந்திரமாக வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்படுமென வன்னிமாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்திலே சுமூகமாகவும் சிறப்பாகவும் சிவராத்திரி பூசை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன. அந்தவகையில் வெடுக்குநாறி மலை உச்சியில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரப் பெருமானுக்கு அபிசேகம் செய்யப்பட்டு பூசைவழிபாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. அத்தோடு அங்கு சிவராத்திரிதின கலைநிகழ்வுகளும் சிறப்பான முறையில் இடம்பெற்றன. மேலும் குறித்த ஆதிலிங்கேஸ்வவர் ஆலயத்திற்குச் செவ்வதற்கான வீதி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆலயத்தில் இடம்பெறும் சிவராத்திரி வழிபாடுகளுக்கு பக்தர்கள் சென்று வருவதற்காக ஆலய நிர்வாகத்தினரால் உழவியந்திரங்கள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன. அந்தவகையில் பெருத்த போக்குவரத்து நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பெருந்திரளான பக்தர்கள் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசை வழிபாடுகளில் பங்கேற்றிருந்ததுடன், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான செல்வராசா சுசீலன், தர்மலிங்கம் சுசீலன், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளையின் செயலாளர் ச.தவேந்திரராசா, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வவர் ஆலய அறங்காவலர் சபைத்தலைவர் பூபலசிங்கம், செயலாளர் ச.வசந்தன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். ஆலயத்திற்குச் செல்லும் பாதை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தமையால் பக்தர்களுக்கான போக்குவரத்து சேவையை வழங்கிய உழவியந்திரங்கள் புதையுண்டதுடன், ஆலயத்திற்கு குடிநீர் தாங்கியை எடுத்து வந்த உழவியந்திரமும் புதையுண்டதால் சிறிது நேரம் போக்குவரத்து தடங்கலும் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு செல்வதற்கான வீதிச்சீரமைப்புத் தொடர்பில் எதிர்காலத்தில் தம்மால் கவனஞ் செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக ஆலயத்திற்குச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் பாதிக்கப்பட்டுள்ள குறித்த வீதியானது வனவளத் திணைக்களத்தினுடைய பகுதிகளை ஊடறுத்துச்செல்வதால் வனவளத்திணைக்களத்தின் அனுமதிகள் பெறவேண்டியிருப்பதாகவும், அதற்கமைய அனுமதிகளைப் பெற்று வீதியை சீரமைப்பதுதொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்தார். மேலும், குறித்த சிவராத்திரி பூசை வழிபாடுகள் இடம்பெறும்போது வெடுக்குநாறிமலை ஆலயச்சூழலில் பொலிஸார் பாதுகாப்புக்கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். https://www.virakesari.lk/article/2387651 point- நெடுந்தீவு மக்களின் நீண்டகாலப் போக்குவரத்துத் துயரம் நீங்கியது: கடற்படைப் படகு மூலம் கொண்டு செல்லப்பட்ட புதிய பஸ்!
நெடுந்தீவு மக்களின் நீண்டகாலப் போக்குவரத்துத் துயரம் நீங்கியது: கடற்படைப் படகு மூலம் கொண்டு செல்லப்பட்ட புதிய பஸ்! Published By: Digital Desk 1 16 Feb, 2026 | 10:33 AM நெடுந்தீவில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, கடற்படையின் விசேட படகு மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. நெடுந்தீவில் இதுவரை காலமும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஒரு பஸ் மாத்திரம் சேவையில் ஈடுபட்டிருந்ததாகவும், நீண்ட நாட்களாக குறித்த பஸ், பழுதடைந்த நிலையில், கடும் சிரமத்திற்கு மத்தியில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மக்கள் போக்குவரத்தில் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர். இதனை தொடர்ந்து, கடந்த செப்டெம்பர் 18ஆம் திகதி போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு விசேட கூட்டத்தில், இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்;ளது. இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் கூறியிருந்த நிலையில், சுமார் 05 மாதங்களின் பின்னர் புதிய பஸ், சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, இதுவரை காலமும் நெடுந்தீவில் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பஸ், திருத்த வேலைகளுக்காக யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/2387631 point- 89,000 இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!
1 point89,000 இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்! தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மாநிலத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நீண்டகால குடியுரிமைப் பிரச்சினை மற்றும் சட்டப்பூர்வ அந்தஸ்து குறித்து “மனிதாபிமான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற” தீர்வைக் கோரி முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து நேற்று இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின், இந்த பிரச்சினை “ஆழ்ந்த மனிதாபிமான, அரசியலமைப்பு மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது” என்றும் விவரித்தார். அத்துடன், சுமார் 89,000 இலங்கைத் தமிழர்கள் அகதிகள் முகாம்களுக்குள்ளும் வெளியேயும் தமிழ்நாட்டில் தொடர்ந்து வசிக்கின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் இந்தியாவில் பிறந்தவர்கள், மேலும் பலர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், 1983 ஆம் ஆண்டு முதல், அடுத்தடுத்த தமிழக அரசாங்கங்கள், மத்திய அரசின் ஒப்புதலுடன், இலங்கையில் இன மோதலில் இருந்து தப்பி ஓடியவர்களுக்கு தங்குமிடம், கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றை வழங்கியுள்ளன. இருப்பினும், பலர் குடியுரிமை அல்லது நீண்டகால விசா அந்தஸ்தைப் பெற முடியாமல் தவிக்கின்றனர் என்றும் அடிக்கோடிட்டுக் காட்டினார். அத்துடன், மாநில ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளைக் குறிப்பிட்டு, குடியுரிமை விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதைத் தடைசெய்யும் முந்தைய நிர்வாக வழிமுறைகளை இரத்து செய்யுமாறும், பொருத்தமான இடங்களில் கடவுச்சீட்டு மற்றும் விசா தேவைகளைத் தள்ளுபடி செய்யுமாறும், விரைவான செயலாக்கத்திற்காக மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு அதிகாரங்களை வழங்குமாறும், 2025 ஜனவரி 9 ஆம் திகதி வரை தங்கியிருந்த பதிவுசெய்யப்பட்ட இலங்கைத் தமிழ் நாட்டினரை “சட்டவிரோத குடியேறிகளாக” கருதக்கூடாது என்பதை முறையாக தெளிவுபடுத்துமாறும் ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தினார். இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்கள் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக “கண்ணியத்துடனும், ஒழுக்கத்துடனும், ஆழமான கலாச்சார உறவுடனும்” வாழ்ந்ததாக ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், மனிதாபிமான அடிப்படையில் சாதகமான முடிவை எடுக்குமாறும் பிரதமரை வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டு குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டமூலம், 2025 மீதான விவாதங்களின் போது, அகதிகள் பிரச்சினையை திமுக ஒருபோதும் தன்னிடம் எடுத்துச் செல்லவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியபோது, இந்தப் பிரச்சினை நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்டது. இந்தக் கூற்றை திமுக எம்பி கனிமொழி கருணாநிதி மறுத்தார், அவர் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கடிதங்களின் விவரங்களை மேற்கோள் காட்டினார். இந் நிலையில் அரசியல் ரீதியாக, பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான பிரச்சாரக் கருப்பொருள்களாக ஆளும் திமுக தமிழ் மொழி, அடையாளம் மற்றும் பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்தி வரும் நேரத்தில் தமிழக முதலமைச்சரின் இந்தக் கடிதம் வந்துள்ளது. இந்தக் கடிதம் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை மற்றும் சட்ட தெளிவுக்காக அழுத்தம் கொடுப்பதன் மூலம், திமுக தமிழ் ஆதரவு வாக்காளர்களையும் இலங்கை அகதிகளின் அனுதாபிகளையும் ஒருங்கிணைக்க முயல்கிறது. நீண்ட காலம் தங்கியிருந்த போதிலும், இதுவரை 11 இலங்கை அகதிகளுக்கு மட்டுமே இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் மட்டுமே வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளார், மீதமுள்ள பத்து பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர், இது அவர்களின் நிலையை முறைப்படுத்துவதில் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. https://athavannews.com/2026/14650081 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
விளையாட்டு இன்னும் முடியல ஹா ஹா😄😛...............1 point- "கணவரின் இறுதிச்சடங்குக்கு கூட செல்லவில்லை" - பிரிட்டனின் புதிய சட்டத்தால் இலங்கை மக்கள் சந்திக்கும் சவால்கள்
விதிமுறை மாற்றம் அனைவரையும் உள்ளடக்கியதே என்கிறார்கள். ஆனால் குறித்த நாட்டுக்கு தேவைப்படும் வேலை செய்ய வந்தோருக்கு 3,5 வரிடத்திலேயே நிரந்தர வதிவுரிமை கிட்டுமா போல கூட மாற்றலாமாம். நான் நினைக்கிறேன். ரிபோர்ம் வெற்றி தவிர்க்க முடியாதது என. இரு பெரிய கட்சிகளும் இந்த விடயத்தில் அவர்களுக்கு மக்கள் கொடுத்த கடைசி வாய்ப்பையும் தவற விட்டுள்ளார்கள்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முழுவதையும் வாசித்த பின், ஆஸ்திரேலியா - இலங்கை இந்த இரண்டு அணிகளில் ஒன்று வெல்லப் போகுது என்றே தெரிகின்றது................🤣. இலங்கை அணியை நான் தெரிவு செய்வது மிகக் குறைவு............ அவர்கள் தோற்க வேண்டும் என்றே நினைப்பேன்............... அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்படி இலங்கை அணியை தெரிவு செய்தேனோ............... ஏதோ புகை மயக்கம் போல.............🤣.1 point- இலங்கையர்களுக்கு இந்தி கற்பதற்கு இந்தியா உதவி!
கிந்தி கற்பவர்களுக்கு பின்னர் றோவில் வேலையும் எடுத்து கொடுப்பார்களோ?1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இரண்டாவது இனிங்ஸில் மைதான ஈரலிப்பால் பந்து வீசுவதும் கடினம் அதே நேரம் இந்த மெதுவான ஆடுகளத்தில் பந்து ஸ்கிடியாகி மட்டைக்கு இலகுவாக வரும் இலகுவாக அடிக்கலாம், அதனால் முதலில் பந்து வீச முடிவு செய்தார்கள். 181 அவுஸ்ரேலிய இலக்கு ஒரு வெற்றிக்கான இலக்கு! இலங்கை வெல்வது கடினம்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை படுதோல்வி அடைய போகினம் நாணயத்தில் வென்று பந்து வீச்சை தெரிவு செய்தவை நினைப்பு ஏதோ உலகில் சிறந்த பந்து வீச்சாளர்களை வைத்து இருக்கிறோம் ஹா ஹா......................மதிஷனாவை விட தமிழ் பெடியன் நல்லா சுழல் பந்து போடும் அந்த தமிழ் பெடியனை அணியில் சேர்ப்பதில்லை........................1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ITA 135 / 5 / 14.3......! அது நடந்திடுமோ . ......!1 point- புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
கப்டன் ரஞ்சன் (லாலா) ” மக்கள் போராட்டம்’ என்ற தமக்கே புரியாத சில தத்துவங்களைப் பேசுபவர்கள் தாங்கள் பேசுவது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பதைப் பற்றி யோசிக்காமல் அதை புலிகள் செய்கிறார்கள். ஆகவே கட்டாயம் அதைப் பிழை என்று தான் சொல்லவேண்டும். அப்படிச் சொன்னால் தான் நான் சிறந்த முறையில் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கிறேன் என தங்கள் இயக்கம் நற்சான்றிதழ் வழங்கும் என நினைத்து எங்களைத் தவிர எல்லோரும் கெரில்லாப் போராட்டத்தை கிண்டல் செய்து வந்த காலத்தில் நேரடியாக பொதுமக்களைத் கலந்து கொள்ளும் இராணுவத்தாக்குதல் ஒன்றை நடைமுறையில் முதன் முதலாக நடைமுறைப்படுத்தியவன் ரஞ்சன். பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத் தாக்குதல் மூலம் “இதுவும் மக்கள் போராட்டம் தான் புரிந்து கொள்ளுங்கள் ! ” என பாடம் புகட்டியவன் ரஞ்சன். இன்று இந்த மக்கள் எழுச்சிகளைக் காணும் போது உனது தியாகங்கள் வீண்போகவில்லை நாளைய தமிழீழ வரலாற்றில் உனது பெயரில் இன்றைய சிறுவர்களால் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்றெல்லாம் உன்னிடம் சொல்லவேண்டும் போல இருக்கும், கண்ணெதிரே நீ இல்லாவிட்டாலும் என் எண்ணங்களை என் உள்ளத்தில் நிறைந்திருக்கும் உன்னிடம் பகிர்ந்துகொள்ள என்றுமே நான் தயங்குவதில்லை. ஒவ்வோர் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியும் உன்னை எனக்கு ஞாபகப்படுத்தியே தீரும், இயக்கத்தின் முழுநேர போராளியாக எழுபத்தி எட்டாம் ஆண்டில் நீ அடியெடுத்து வைத்த நாள் அது தானடா. 78ஆம் ஆண்டு மார்கழியில் இயக்க ரீதியாக அறிமுகமான நீ துண்டுப் பிரசுரம் கொடுத்தல், இயக்கத்திற்கு ஆட்சேர்த்தல், எதிரியின் நடமாட்டங்களை எமக்குத் திரட்டி தருதல் போன்ற வேலைகளை அதுவரையில் செய்து வந்தாய். சிறு அசைவைக்கூட மிகவும் திட்டமிட்டே நடைமுறைப்படுத்த வேண்டிய அந்தக் காலகட்டத்தில் உனது பணி இயக்கத்திற்கு மிகவும் தேவையாக இருந்து. கட்டையான கறுவலான உனது உருவத்தை காணுபவர்கள் உன்னை இயக்கத்தைச் சேர்ந்தவன் என ஒருபோதும் நினைக்கமாட்டார்கள். உனது உருவஅமைப்பு இரகசியமான வேலைகளை உன் முலம் செய்து கொள்ளுவதற்கு மிகவும் ஏற்றதாக இருந்தது. விடுதலைப் போராட்டத்தில் முழுநேரமாக இணைந்துகொண்ட ஆரம்ப காலத்தில் நீ பட்ட கஷ்டங்களை இன்று விடுதலைப் பாதையில் காலடி எடுத்து வைக்க எண்ணும் அத்தனை போராளிகளும் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள், அப்போது தான் சுதந்திரத்தின் பெறுமதி எத்தகையது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியும். நீயும் நானும் குறிப்பிட்ட அக்காட்டில் கொட்டில் அமைத்து பண்ணை வேலைகளை செய்வதற்காகப் புறப்பட்டோம். யாழ்பாணத்தில் இருந்து வாளியில் சில அத்தியாவசியப் பொருட்களுடன் அங்கே சென்றோம். மழையினாலும் புயலினாலும் அந்தப் பாதையில் சீர்குலைந்து காணப்பட்டது பலத்த சிரமத்தின் மத்தியில் எமது பிரயாணத்தை மேற்கொண்டோம். எமது பிரயாணத்தின் கடைசி எட்டு மைல்களையும் நடந்தே போகவேண்டியிருந்து இவ்வளவு தூரம் நடந்து போவது உனக்கு பழக்கமில்லாத விடயமாக இருந்தாலும் உனது ஆர்வம் கையில் வாளியையும் பொருட்களையும் மாறி, மாறித் துக்கிச் சென்று எமது பிரயாணம் முடியும் இடம் வரை கொண்டுபோக வைத்து. இரவு பத்து மணியளவில் நாம் சந்திக்க வேண்டியவரின் வீட்டுக்குச் சென்றதும் ‘அப்பாடா’ என்று நிம்மதியுடன் எமது நோக்கத்தைத் தெரிவித்தோம். ஆனால் நாம் எதிர்பாத்துச் சென்றவர் மனதில் என்னதான் குடியிருந்ததோ? கையை விரித்து விட்டார். மீண்டும் திரும்பி எட்டு மைல்கள் நடந்துவந்து பஸ் மூலம் யாழ்ப்பாணம் திரும்பி வந்தோம். பளையில் கிடுகு வாங்கிக்கொண்டு மீண்டும் அங்கே சென்றோம்.போக்குவரத்து மேற்கொள்ளவது சிரமமாகவே இருந்து. எமது பிரயாணம் முன்று நாட்கள் தொடர்ந்தது, இரவில் நடைபாதையே எங்கள் மஞ்சம். கொட்டும் மழையும் கிடுகிடுக்கும் பனியும் எங்கள் இலட்சிய உணரவை மீண்டும் பட்டை தீட்டின. வாகனப் பிரயாண முடிவில் எட்டு மைல் தூரமும் மாறிமாறி கிடுகுக் கட்டைத் தூக்கிக்கொண்டு சென்றோம். எமக்கென ஒரு கொட்டில் போட்டு அதனுள்ளேயே படுத்து உறங்கிய அன்று ஏற்பட்ட உணர்வு அலாதியானது தான். ஒரு ஏக்கர் காணியை திருத்தத் தொடங்கினோம். இடையில் இயக்கத்தின் வேறு அலுவல்களுக்காக நான் யாழ்பாணம் வந்துவிட்டேன். உனக்குப் பின் வந்த வேறு சிலருடன் நீ இணைந்து நீ அந்தக் காணியை சிறந்ததொரு பண்ணையாக்கினாய். விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கு மிளகாய்ச் செய்கையைப் ப்ற்றி படிப்பிக்கக் கூடியளவு அனுபவம் உன்னை ஆக்கிவைத்தது. ‘சித்தாந்த வேறுபாடு’ என்ற பெயரில் இயக்கத்தை நாசஞ் செய்யப் புறப்பட்ட குழு உன்னையும் இயக்கத்தை விட்டு பிரிக்க பெருமுயற்சியெடுத்தது. நீ அவர்களுக்கே புத்திசொல்லி வந்த நீங்கள் வடிவாகச் சாப்பிட்டுவிட்டுப் போங்கோ என்று சாப்பாடு கொடுத்து அனுப்பிவைத் தாய். இவனுக்காக இவ்வளவு தூராம் அலைந்தோமே என்று புறுபுறுத்து விட்டுச் சென்றனர் அவர்கள். ‘தம்பி’யின் மீது நீ கொண்டிருந்த நம்பிக்கை தொடர்ந்து இயக்கத்தில் உன்னை இயங்க வைத்தது. மாவட்ட அபிவிருத்திச்சபை என்னும் மாயமான போராட்டத்தில் இடையே வேடிக்கைப் பொருளாகக் கொண்டு வந்தனர் கூட்டணியினர். கிராம யாத்திரை என்ற பெயரில் அவர்களது நாடகம் ஆரம்பமாயிற்று. கூட்டத்தில் கேள்வி கேட்ட இளைஞர் குழப்பவாதிகள், அரசின் கைக்கூலிகள் என்று முத்திரை குத்தினர் பதில் சொல்லத் தெரியாத கூட்டணியினர். நீயும் சங்கரும், சீலனும் உங்களுக்குத் தெரிந்த வழியில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டீர்கள்.S.S.O பதவிகளுக்காகவும் வேலை வங்கிப்படிவத்துக்காகவும் ஏங்கித் திரிந்த கூட்டணியின் தொண்(குண்)டர்கள் சீலனைக் கட்டிப்பிடித்தனர். கட்டிபிடித்தவரின் பின்னால் சென்று உனது சிலிப்பரை தூக்கி முதுகில் வைத்துக் “ஹான்ஸ் அப்” என்று நீ சொன்னதும் நிலை குலைந்தனர் அந்த வீராதிவீரர்கள். நீ வைத்திருப்பது என்ன என்பதை திரும்பியும் பார்க்காமல் தமது எஜமானர்களை நோக்கி ஒடித்தப்பினர். உனது சமயோசித புத்தி அன்று சீலனைக் காப்பாற்றியது. நீரவேலி வங்கிப் பணத்தைக் காப்பாற்றுவதில் நீ எடுத்துக் கொண்ட சிரமங்கள் எழுத்தில் வடிக்கமுடியாதவை இராணுவத்தினர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றால் அதற்குக் கொஞ்சநேரம் முன்தான் நீ அங்கிருந்து அவற்றை அகற்றியிருப்பாய். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக இராணுவத்தினர் மீதான தாக்குதலை மேற்கொண்ட மூவரில் ஒருவன். மக்கள் நடமாட்டம் நிறைந்த யாழ் நகரில் சீலனின் தலைமையில் கைத்துப்பாக்கியுடன் அச்சாதனையைப் புரிந்தீர்கள். இராணுவத்தினரின் றைபிளைப் பாதுகாப்பாக வைத்துவிட்டு நாம் தங்கியிருந்த இடத்தை நோக்கி வந்தபோது பக்கத்து வீட்டு அக்கா “சம்பவம் முடிந்து பெடியன்கள் சென்ற போது நான் கண்டேன்” என்று சொன்னா. என்னமாதிரி சம்பவம் நடந்தது என்று எதுவும் அறியாதது போல விசாரித்துத் தெரிந்துகொண்டாய். நல்லவேளை அவ பதற்றத்தில் இருந்ததாலும் நேடியாகக் காணாததாலும் அந்த இடத்தைவிட்டு மாறவேண்டிய நிலமை ஏற்படவில்லை. பயிற்சிக்காக இந்தியா சென்றாய், பயிற்சி முகாமின் ‘கொத்துரோட்டி ஸ்பெசலிஸ்ட்’ நீ. ஏற்கெனவே உன்னிடம் இருந்த சுறுசுறுப்பு, துணிவு என்பவையும் கராட்டித்திறமயும் பயிற்சி முகாமில் உனது திறமையில் பளிச்சிட வைத்தன. மீண்டும் புலேந்திரனுடன் தமிழீழம் வந்தாய், வரும் போது வள்ளக்காரர் உங்களைப் பேசாலைக் கரையில் இறக்கி விட்டனர். கரை இறங்கிய உங்களை அங்கே குடியிருந்த சிங்களக் காடையர் பிடித்துக்கொண்டனர். எமது மண்ணில் அண்டிப் பிழைக்க வந்தவர்கள் எம்மையே அதிகாரம் செய்து இந்த மண்ணிற்குச் சொந்தக்காரர்களான எம்மை அடிமைகளாக நடத்துகிறார்களே என அனைவரும் குமுறினோம். சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் 30 காபைன் சகிதம் புகுந்து விளையாடினாய். தாக்குதல் முடிந்து வரும் போது காயமுற்ற ஒவ்வொருவரையும் கட்டிப்பிடித்து அழுதாய் உனது கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப பெருகியதை அன்றுதான் முதன்முறையாகக் கண்டேன். உமையாள்புரத் தாக்குதல், கந்தர்மடத்தாக்குதல் என்பனவும் உன் திறமையைப் பளிச்சிட வைத்தன. யாழ் கச்சேரியில் இராணுவத்தினருக்கும், கூட்டணியினரும் பாதுகாப்பு மகாநாடு கூட்ட இருந்த சமயத்தில் முதல் நாளிரவு மகாநாடு நடக்க இருந்த மண்டபத்திற்கு குண்டு வைத்துப் பல்வேறு நடவடிக்கைகள் மூலமாகவும் எமது எதிர்ப்பைத் தெரிவித்தோம். அன்று மண்டபத்தின் உட்சுவர்களில் பூவரசம் இலைகளாலும் பூக்களாலும் “பாதுகாப்பு மகாநாடு யாரை பாதுகாக்க” என்று எழுதியிருந்தாய், உனது கேள்வி மக்களைச் சிந்திக்க வைத்து பத்திரிகைகள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தன. அன்று பாதுகாப்பு மகாநாடு கூடிய கூட்டணியினர் நீண்டகால இடைவெளிகளின் பின்னர் மெல்ல மெல்ல வந்து பதுங்கு குழியில் பாதுகாப்பைத் தேடிக் கொண்டனர். உள்ளூராட்சித் தேர்தலில் பருத்தித்துறையில் ஐ.தே கட்சியின் தலைமை வேட்பாளராக இருந்த இரத்தினசிங்கம் உனது ஆசிரியர். ஆனாலும் உனது பார்வையில் துரோகி என்றே இருந்தது. உரிய இடத்திற்கு அனுப்புவதற்கு உனது பங்கையும் வழங்கினாய். மீசாலையில் சீலனை இழந்த வேதனை சில நாட்களாக உன்னுள்ளத்தில் குடிகொண்டிருந்தது. உனது உணர்வுகளுக்கு வாய்ப்பளிக்க ‘திருநெல்வேலித் தாக்குதல்’ சந்தர்ப்பமளித்தது. மதிலுக்கு மேல் நடப்பது உனக்குத் தெரியாமலிருக்கும் என்பதற்காக சீமேந்துக் கற்களை உனது உயரத்திற்கு ஏற்றவாறு அடுக்கினாய் தனியே நின்று தலைவருக்கு அடுத்ததாக நின்றது நீ தான். தலைவருக்கு அருகில் கிறனைட் வீழ்ந்ததும் பதறி விட்டாய். தமிழ் மக்களின் அதிர்ஷ்டம் கைக்குண்டு சக்தியிழந்தது. அன்றைய தாக்குதலில் சுறுசுறுப்பாக எல்லா இடமும் திரிந்தாய். ஒரு வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டது அம்மானை இழந்ததால் இந்த வெற்றியினை நினைத்து பூரிக்கும் நிலையில் நாம் இல்லை. தொடர்ந்து வந்த இனக்கலவரம் ஆயிரக்கணக்கில் இளைஞர்களை போராட்டத்தில் உள்வாங்கியது. கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு சில நூறு பேரை மட்டுமே நாம் எம்முடன் இணைத்துக் கொண்டோம். அப்போது நடந்த இரண்டு பயிற்சி முகாம்களில் முதாவதற்கு பொன்னம்மானும், இரண்டாவதற்கு நீயும் பொறுப்பாக விளங்கினீர்கள் பயிற்சி முகாம் முடிந்து வந்ததும் அதிரடிப்படையினர் மீதான தாக்குதலை பருத்தித்துறையில் நடத்தினாய். பருத்தித்துறை பொலிஸ் நிலையம் வரை அதிரடிப்படையினரை ஒட ஒட விரட்டினாய். அதன் பின்னே பருத்தித்துறை பொலிஸ் நிலையம் உனது தலைமையிலான பொதுமக்களின் போராட்டத்தில் உன்னிடம் வீழ்ச்சியடைந்தது. ஆயுதங்கள் பொலிஸ் நிலைய ஆவணங்களுடன் நீயும் நானும் பொலிஸாரிடம் பறிகொடுத்த மோட்டார் சைக்கிளும் எமது கையில் கிடைத்தன. மோட்டார் சைக்கிள் பறிகொடுத்த அந்தச் சம்பவத்தை நினைக்கையில் உனது நிதானத்தை மேச்சிகொள்வேன். கடல்வழியாகப் பயணம் மேற்கொள்ளும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நீயும் நானும் பயணமானோம் வழியில் போலிஸாரிடம் மாட்டிக்கொண்டோம் எமது பையை சோதனையிட்ட போலிஸார் “இதென்னடா கிறனைட்டோ” என்றுகேட்டபடியே எடுத்த பொருள் கிறனைட்டாக இருக்கவே அதிர்ச்சியடைந்து நின்ற அந்தக் கணநேரத்தில் போலிஸாரிடமிருந்து பிலிம் றோஸ், படங்களை என்பவற்றை பறித்துக்கொண்டு”ஒடிவா” என என்னையும் கூட்டிக்கொண்டு ஒடினாய். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்தான் எம்மால் பறிகொடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் எமது கையில் கிடைத்தது அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. போலிஸ் நிலைய ஆவணத்திலிருந்து கிடைத்த விபரங்களின் படி துரோகி நவரட்ணத்திற்கு உரிய தண்டனை வழங்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டாய். ஆனால் உனது சேவை நீண்டகாலம் தமிழினத்திற்குக் கிடைக்கக் கூடாது என்ற துரிஷ்டமோ விதி உன்னையும் எம்மையும் பிரித்துவிட்டது. வாகனத்தில் சீலனின் போஸ்டரை ஏற்றிவந்து கிட்டுவின் காருக்கு வழிகாட்டியாக நீ மோட்டார் சைக்கிளில் விக்கியுடன் வந்துகொண்டிருந்தாய், தொண்டமானாற்றில் அதிரடிப்படையினர் உன்னை வழி மறித்த போது நீ அவர்களை போக்குக் காட்டிவிட்டு தப்ப முயன்றாய் ஜீப்பினால் அதிரடிப்படையினர் உன்னை மோத முயன்றனர். வெட்டவெளிப் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளை நீ திருப்பி அது எதிர்பாராமல் சேற்றினுள் சிக்கியது. சேற்றிலிருந்து எழும்பி தப்பியோடினீர்கள். அதிரடிப்படையினர் சுட்டனர் தப்பி ஒடிய நீங்கள் ஒரு சைக்கிளை எடுத்தபோது சைக்கிள் உரிமையாளர் தடுத்தார். நிலைமையை விளக்கியபோதும் கொடுக்கவில்லை. முடிவு உங்களை நெருங்கி வந்தது. அதிரடிப்படையினர் துப்பாக்கி வேட்டுகளுக்கு நீ இரையானாய். உனது உயிரைக் கொடுத்து பின்னால் காரில் வர இருந்த அனைவரது உயிரையும் நீ காப்பாற்றினாய். உனது தியாகத்தை அர்த்தமுள்ளதாக்கி விட்டாய். உன் உயிரை பலியெடுத்த அதிரடிப்படையினர் நெடிய காட்டில் எமது கண்ணிவெடியில் பலியாகி விட்டனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றிய நாட்குறிப்பொன்றில் உன்னைச் சுட்டது தானே என ஒருவன் குறிப்பிட்டிருந்தான். அனைவரது இதயத்திலும் “கட்டைக்கறுவல்” ரஞ்சன் நீக்கமற நிறைந்திருக்கிறான். நினைவுப்பகிர்வு:- அஜித் வெளியீடு :களத்தில் இதழ் 2ம் லெப்டினன்ட் பீரிஸ் மனுவல் ஞானப்பிரகாசம் பரப்புக்கடந்தான், வட்டக்கண்டல், மன்னார். இம் மாவீரரின் முழுமையான விபரம் படையணி/துறை: நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப்பெயர்: பீரிஸ் இயற்பெயர்: மனுவல் ஞானப்பிரகாசம் சொந்த இடம்: பரப்புக்கடந்தான், வட்டக்கண்டல் மாவட்டம்: மன்னார் வீரப்பிறப்பு: 06.09.1960 வீரச்சாவு: 01.02.1985 பால்: ஆண் வீரச்சாவடைந்த மாவட்டம்: மன்னார் வீரச்சாவு நிகழ்வு விபரம்: பள்ளமடுப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு துயிலுமில்லம்: ஆட்காட்டிவெளி துயிலும் நிலை: நினைவுக்கல் அமைவிடம்: ஒரே குடும்ப மாவீரர்: பீரிஸ் - பீற்றர் - இராசதுரை மூலம்: கோப்பு (1982-2004) மேஜர் அல்பேட் மேஜர் அல்பேட் ச.கந்தையா ரூபதநிதி அச்சுவேலி தெற்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:24.06.1961 வீரச்சாவு:21.12.1985 நிகழ்வு:யாழ்ப்பாணம் சுதுமலையில் எமது முகாமொன்றினை சிறிலங்கா படையினர் சுற்றிவளைத்தபோது ஏற்பட்ட சமரில் வீரச்சாவு நாம் ஏராளமான மரணத்தைக் கண்டுவிட்டோம். தோழர்களின் சாவு எம்மைப் பாதிக்காது. வீரமரணம் எமக்குப் பரீட்சையமானது. சாவைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம் என்றுதான் நாம் இறுமாந்திருந்தோம். ஆனால் உன் மரணத்தைச் சந்தித்தபோது எம் இதயம் உருக்குலைந்து தளர்ந்து, எம் உள்ளம் சூனியமாகியதை நாம் எப்படி வெளிபடுத்த முடியும். 6 அடி 2 அங்குலமான உன் உயரமான (நீளமான) உடல் அசையாது கிடந்த நிலைகண்டு மக்கள் பதறியதை, உன் கிராமமே கலங்கியதைக் கண்டு உன்மரணம் தமிழ் மக்களை எந்த அளவுக்குப் பாதித்திருகின்றது என்பதை அறிந்து நாம் துடித்தோம். எம் முகாம்களில் ஒன்று இராணுவத்தினால் தாக்கப்படுகிறது என்பதை அறிந்து எம்மை விடுவிக்க விரைந்த நீ எம் அன்புப் பிணைப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டாய். கிராமச் சனங்களோடு பழகும் போது அந்தச் சனங்களோடேயே ஒன்றிப்போகும் உன் எளிமையான தோற்றம், எம்மை எல்லாம் பிரமிக்கச்செய்தது. எம் புலம்பலை நிறுத்திவிட்டு அல்பேட்டைப் பற்றி…. பண்டிதர் ஆயுதக் கிடங்குகளுக்குப் பொறுப்பாக இருந்து வேலை செய்த காலத்தில் பண்டிதருக்கு அடுத்தபடியாக இருந்து வேலை செய்து இயக்கத்தின் நன் மதிப்பைப் பெற்றவன், ‘கந்தையா’ என்று செல்லமாக பண்டிதரால் அழைக்கப்பட்டவன். அச்சுவேலியில் நடைபெற்ற எம் தளம் மீதான இராணுவ முற்றுகையில் தன்னுடைய துப்பாக்கியில் இருந்த குண்டுகள் தீரும்வரை போராடி வெற்றிகரமாக வெளியேறியவன். பண்டிதரைப் பலிகொண்ட அந்தப் பெரிய முற்றுகையில் இருந்து வெற்றிகரமாக வெளியேறியதே அவனுடைய திறமைக்குச் சான்றாகும். பண்டிதரின் மறைவுக்குப் பின் ஆயுதக் கிடங்குகளின் பொறுப்பாளராகப் பணியாற்றி பண்டிதர் இழப்புக்கு ஈடு செய்தவன். 1982ம் ஆண்டு தொடக்கம் தன்னை எம் இன விடுதலைக்காக அர்பணித்துப் பணியாற்றியவன். அல்பேட்டை காணும் யாரும் போரிடுவதில் அனுபவம் மிக்கவன் என்பதை தவறின்றி ஊகிக்க முடியும். முதல் பார்வைக்கு அவன் வயது இருபதுக்கு மேல் இருபத்துநாலுக்கு உள்ளதாகவே இருக்கும் என்று தோன்றும். ஆனால் வெய்யிலிலும் காற்றிலும் அடிபட்டிருந்த அவன் முகத்தையும் கண்களின் அருகிலும் நெற்றியிலும், வாயின் பக்கங்களிலும் நுண்ணிய இழைகளாக விழுந்திருந்த சுருக்கங்களையும் சிந்தனையின் ஆழ்ந்தகளைத்த கருவிழிகளையும் உற்றுகவனித்தபின் அவன் வயதில் இன்னும் பத்து ஆண்டுகளைக் கூட்டலாம் போலிருக்கும். அல்பேட் கோபித்ததை, கோபப்பட்டதை நாம் காணவில்லை என்றே கூறலாம். ஏனோ தெரியவில்லை அவனுக்குக் கோபம் வருவதில்லை. நாம் சிலவேளைகளில் வேண்டுமென்றே சீண்டுவோம். அப்போதுகூட அவன் எருமை மாட்டில் மழைபெய்வது போல இருப்பான். அன்பினால் வழிநடத்தி, அரவணைப்பால் பாதுகாத்து, அவன் வளர்த்த அவனுடைய வீரர்கள், அல்பேட்டைப் போலவே உருவாகி இருப்பதைக் கண்டு வியப்புடன் அல்பேட்டுக்குத் தலை வணங்குகின்றோம். குழந்தைகள் என்றால் அல்பேட்டுக்கு அலாதி பிரியம். குழந்தைகளோடு பழகும்போது அவனும் ஒரு குழந்தையாகி மழலை மொழி பேசுவதைக் கண்டு நாம் சிரித்த பொழுதுகள் ஏராளம். எமது முகாம்களில் அல்பேட்டைச் சுற்றி ஒரு மழலைப்பட்டாளமே இருக்கும். அந்த சின்னஞ் சிறுசுகள், அல்பேட்டைக் காணாமல் தவித்த தவிப்புக்கள், அவர்களைப் பொறுத்தவரையில், அவன் கோவிலுக்குப் போய்விட்டான். கோவிலிலிருந்து வருவான். வரும்போது அவர்கள் அடிக்கடி கேட்ட, சொல்லிவிட்ட சாமான்கள் வேண்டி வருவான். அல்பேட் அவர்களை ‘குட்டிச் சாத்தான்’ என்று அழைப்பது வழக்கம் அந்தக் குட்டிச் சாத்தான்கள் அல்பேட் கோவிலுக்குப் போய்விட்டதை, போய்விட்ட செய்தியை மிகவும் சந்தோஷத்துடனும் மிகுந்த குதூகலத்துடனும் தமக்குள்ள பரிமாறிக்கொண்டார்கள். அவர்கள் அந்த மழலைகள், அல்பேட் கோவிலுக்குப் பொய் திரும்பி வருவான் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்…. யாழ் பொலிஸ் நிலையத் தாக்குதலின் போது இராணுவத் தந்திரத்துக்கமைய கோட்டையில் இருந்து எதிரிகளை வெளியில் வராமல் தடுக்கும் பொறுப்பும் கோட்டை மீதான தொடர்ந்த தாக்குதலை நடத்தும் பொறுப்பும் அல்பேட்டிடம் கொடுக்கப்பட்டிருந்தது. தனது பணியைச் செவ்வனே செய்துமுடித்து எமது வெற்றிக்கு வழிவகுத்தவன். ஒருநாள் விடியற்காலை அல்பேட் தன் முகாமில் உள்ள தோழர்களை தினசரி காலைப்பயிற்சிக்குத் தயார் படுத்திக் கொண்டிருக்கையில், தொலைத்தொடர்பு சாதனம் (வோக்கி ரோக்கி) அலறியது. அவன் வோக்கியை இயக்கி அழைத்த இடத்துடன் தொடர்பை ஏற்படுத்தியபோது, சுதுமலையில் உள்ள எமது முகாம் ஒன்று இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டும் செய்தி கிடைத்தது. அல்பேட் தன் தோழர்களைப் பார்த்து உரக்க அழைத்து விரைந்து, ஆயுதங்களுடன் வானில் (வாகனம்) ஏறி விரைந்தான். வான் இணுவில் பகுதியால் சுதுமலையை அண்மித்தபோது மூன்று ‘பெல் ஏ,பி, 412′ ரக ஹெலிகாப்டர்கள் அப்பகுதியை சுற்றிச் சுற்றி மெசின் கண்ணினால் குண்டுமழை பொழிந்து கொண்டிருந்தது. மேலே வானத்திலே வட்டமிட்டுக்கொண்டிருந்த அலுமினியப் பறவைகளில் ஒன்று உயரத்தில் இருந்து பாய்ந்து மலையில் வழுகி வருவது போல மிகமிக வேகமாக வாகனத்தை நோக்கிப் பாய்ந்து வந்து ’50 கலிபர் மெசின் கண்’ணினால் சுட்டுத் தள்ளியது. குண்டு வரிசைகள் வாகனத்திற்கு மிக அருகாக நிலத்திலே கோடிட்டுச் சென்றது. குறிதவறிவிட்டது. அல்பேட் தன் தோழர்களைப் பார்த்து ‘டே தும்பியில் இருந்து சுடுறாங்கள் கவனமாக இருங்கோ’ என்று கூறி முடிக்கவும், (பெல் ஏ,பி, 412 ஹெலிகாப்டர்களை நாங்கள் ‘தும்பிகள்’ என்று அழைப்பது வழக்கம்) உருமறைப்பு வர்ணம் பூசப்பட்ட இன்னொரு அலுமினியத் தும்பி பக்கவாட்டாக தாழப்பறந்து வந்தது. “சுடப்போறான், வானை எங்காவது ஒருபுறம் திருப்பி ஒதுக்கு” என்று கத்தினான் அல்பேட். வான் ஒதுங்க அல்பேட் தோழர்களுடன் கீழே பாய்ந்த போது விமான எஞ்சின் கடகடப்புச் சத்தத்துடன் மெசின் கண்ணின் இடைவிடாத குண்டுச்சத்தத்துடன் தும்பி தாழப்பறந்து சென்றது. வானுக்கு முன்பாக குறுக்குப்பாட்டாக குண்டு வரிசை மண்ணிலே கோடிட்டது. குறி தவறிவிட்டார்கள். மறுபடியும் இன்னும் அருகாக அல்பேட்டும், வானும், சேதமின்றித் தப்பித்துக்கொண்டது. அல்பேட் தன் “வோக்கி ரோக்கியுடன்’ முகாமுக்குத் தொடர்பு கொண்டபோது, முகாமுக்கு பின்பாக ஹெலிகாப்டர்கள் இராணுவத்தினரை இறக்கிய தோட்டப்பகுதியான இடத்திற்குச் செல்லுமாறு பணிக்கப்பட்டது. குழு அவ்விடத்தை அணுகியபோது இராணுவக் கமாண்டோக்கள் தாம் இறங்கிய இடத்தில் சிலரை நிலைப்படுத்திவிட்டு, மற்றும் சிலர் முகாமை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அல்பேட் கிளர்ச்சியுற்றான். ஆனால் அது சாவு குறித்த அச்சமில்ல. மிக, மிக வீரமுள்ள பதற்றமற்ற மனிதர்களுக்க இயல்பான ஒன்று. ஆபத்து பற்றிய முன்னுணர்வு தானும் இல்லை இது. அவன் கவலைப்பட்டது கமாண்டோக்களை எப்படியாவது தடுக்க வேண்டும். தோட்டங்களில் சில சில இடங்களில் மரவள்ளிச் செடிகள் மிக அழகாக செழிப்பாக செறிவாக வளர்ந்திருந்தது. உயர்ந்து செழிப்பாக செறிவாக வளர்ந்திருந்த மரவள்ளிப் பற்றைகள் ஒளியைப் புகவிடாமல் இருட்டைக் கொடுத்துக்கொண்டிருந்தன. அல்பேட் தனது குழுவினர் சகிதம் அவர்களைத் தாக்கத் தொடங்கினான். இராணுவத்தினர் 2 அங்குல சிறிய மோட்டார் சகிதம் எதிர்த்தாக்குதல் நடத்தினர். முன்னேறிய இராணுவக் கொமாண்டோக்கள் மீதும் பலத்த தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னேறியவர்கள் மீதும் தாக்குதல், நிலைகொண்டு காவல் செய்துகொண்டிருப்பவர்கள் மீதும் தாக்குதல், வானத்தில் சுற்றிக்கொண்டிருந்து இவர்களுக்கு காவல் செய்யும் அலுமினியப் பறவைக்கும் தாக்குதல். பலமணி நேரம் இடைவிடாத தாக்குதல். கமாண்டோக்கள் பின்வாங்கத் தொடங்கினார்கள் பின்புறத்தில் அவர்களை விமானம் ஏறவிடாமல் செய்வதற்காக யமனைப் போல் நின்றுகொண்டிருந்தான் அல்பேட் எனவே அல்பேட் குழுவின் மேல் பலத்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பலவர்ணம் பூசப்பட்ட பெல் ஏ,பி, 412′ ரக ஹெலிகாப்டர்கள் மூன்றும் தம்முடைய எம் 60 ரக மெசின் கண்ணாலும் வட்டமிட்டுத் தொடர்ந்து தாக்குதலை நடாத்தின. அல்பேட் குழுவினரை நோக்கி வந்த மோட்டார் குண்டுகள் வெடித்துக் கொண்டிருந்தன. திடீரென்று அல்பேட் சுருண்டு விழுந்தான். இடது கண்ணுக்கு கிழே பெரிய ஓட்டை அதிலிருந்து குருதி ஊற்றெடுத்துப் பாயும் நீர்த்தாரைகள் போல பாய்ந்தது. அல்பேட்டைத் தூக்கிக் கொண்டு சிலர் பின் விரைகின்றனர். அல்பேட்டுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பாகவே அவன் தன் உயிரை இந்த மண்ணின் விடுதலைக்காக அர்ப்பணித்துவிட்டான். நினைவுப்பகிர்வு:- கிட்டு.1 point- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
பகுதியாகவேனும் வேலையில் தொடர்வது… பர்சுக்கு மட்டும் அல்ல, உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்லதுதான். நேரம் கிடைக்கும் போது யாழுக்கும் வாருங்கள். இதை ஏன் தமிழர்கள் ஆதரிக்கிறார்கள்? எப்போதும் வன்முறையை வீரம் என்றும், பிற்போக்குதனத்தை மானம் எனவும் விளங்கி கொள்வதால்.1 point- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
நன்றி. கோஷான். ஜேர்மனியில். பென்சன். குறைவு. எனவே. பகுதி. நேர. வேலை. தேடினேன். முதலாளி. சொன்னான். முழு நேரமாக. செய். என்று. எனக்கு. விருப்பமில்லை. முழுநேரம். செய்வது. ஆனால். வயது. போனாவர்கள். வேலை. எடுப்பது. இங்கே. கஸரம். எனவே. செய்கிறேன். பேஸ்புக்கில். இந்த. கொலையை. ஆதரித்து. பல. தமிழர்கள். கருத்துப் போட்டார்கள். அது. தான். யாழ் எப்படி. என்று. எட்டிப் பார்த்தேன். இங்கேயும். அதே. கதை. தான் அதே நேரம். 1987 இல். ஜேரமனியில். நடந்த. ஒரு. சம்பவம். நினைவுக்கு. வந்தது. அந்த. நேரம். வேலை செய்ய. இங்கு. அனுமதியில்லை. காட்ஸ். விளையாடுவது. பியர். பெட்டியாக. எடுத்து வைத்து. குடிப்பது. நகருக்குள். சுற்றி திரிவது. பொழுதோபோக்கு. இப்படி. குடித்த. ஒருவர். கார் ஒடிப் போனார். இடையில். பொலிஸ்சார். மறித்தார்கள். அவன். பயந்து. நிறுத்தாமல். ஒடி. 57. இலக்கம். Auto Bahn க்கு. எடுத்து. வேகமாக. ஒடினான். இரண்டு. பொலிஸ். கார் துரத்தி. பின்னுக்கும். முன்னுக்கும். நின்று. மறித்துவிட்டார்கள். மாறாக. சுடவில்லை. முதலில். கை கொடுத்தார்கள். குடித்து. இருகிறியா. என்று. கேட்டு. பரிசோதித்து. சில. புள்ளிகள. குறைத்து. ஆறு. மாதம். கார் ஒட. தடை. செய்தார்கள். அவன் இன்று அவுஸ்ரேலியாவில். குடும்பமாக. வாழ்கிறான். தமிழர்கள். இதை ஏன். ஆதரிக்கிறார்கள் ? நன்றி. வணக்கம்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஸ்மித் வருகையோடு அவுஸ் மீள் எழுச்சி கொள்ளும் என நினைக்கிறன். பாவி மக்கா, பேட்டிங்கின் அத்தனை விதிகளையிம் மீறிய ஒரு ஸ்டைல் - ஆனாலும் அவுட் ஆக்க முடியாது. மார்ஸ்ஷ் விதைபையில் காயம் அடைந்துள்ளாராம்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- "கணவரின் இறுதிச்சடங்குக்கு கூட செல்லவில்லை" - பிரிட்டனின் புதிய சட்டத்தால் இலங்கை மக்கள் சந்திக்கும் சவால்கள்
மொழிபெயர்ப்பு. 5 வருடத்தில் நிரந்தர வதிவுரிமை எடுத்த பின், குழந்தை பெற்றால் - இருவரும் உழைக்க தேவையில்லை, ஒருவர் உழைக்க மற்றவர் பிள்ளையை பார்க்க, சோசல் காசில் காலம் தள்ளலாம் என நினைத்தோம். இதில் சரி பிழை சொல்ல நான் வரவில்லை. ஆனால் இப்படியான திட்டமிட்ட சோசல் சுரண்டலால்தான் 5 வருடத்தில் இருந்து 10, 15 என யோசிக்கிறார்கள். ரிபோர்ம் பார்ட்டி அரசு அமைக்கின், பிரிதானிய பிரஜைகளுக்கு மட்டுமே சோசல் காசாம். நிரந்தர வதிவுடமை இருந்தாலும் கிடையாதாம்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்படி ஒரு கெட்ட எண்ணமும் இல்லை😂 பாக்கிஸ்தான் இந்தியாவை வெண்டாலும் வெல்லலாம்….நான் வீட்டில் இருந்து வெளியேறுவது மட்டும் நடக்காது என்பது எழுதப்படாத விதி. கணிப்பு அப்படி😂1 point- Germany இல் உயில் எழுதுவது பற்றி ஆலோசனைகள்
Germany இல் எனக்கு தெரிந்த பெண் ஒருவர் தனது சொத்து (வீடு, bank இல் இருக்கும் பணம் ஆகியவற்றை பிள்ளைகளுக்கு என்று உயில் எழுதி, Dolmetscher மூலம் tranlate செய்து கை எழுத்து போட்டு வைத்து வைத்திருப்பதாக சொன்னாள். இது சாத்தியமா ? இப்படியும் செய்யலாமா?1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாப்பம். நான் அவுஸ் போட்டியில் மேலே போகும் என கணித்தும் உள்ளேன். எனவே நாளைக்கு அவுஸ் வெண்டாலும் பின்னடிக்கு உதவும்😂. இத்தோட போட்டியை கான்சல் பண்ணி, யாரும் வெல்லவில்லை என அறிவித்தாலும் எனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை😂.1 point- இனித்திடும் இனிய தமிழே....!
1 pointCheran Senguttuvan | Sivaji,Rajasulochana,SSR | kalaignar Karunanithi..........! 😀1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வாதவூரன் வீட்டையே சுத்தி, சுத்தி நோட்டம் விடுறார்…. வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பில்லை 😂1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உங்கள் கடமை புல்லரிக்க வைக்குது. 💥 அடிக்கடி 250 km போவீங்கள் போல. எப்போதும் கவனமாவே ஓடுங்க.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி, டிபேந்திர சிங் ஐரீயின் வேகமான 58 (47 பந்துகளில்) ஓட்டங்களைத் தவிர மற்றையோர் துடுப்பாட்டத்தில் நிலைத்து ஆடாததால் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, அணித்தலைவர் ஷாய் ஹோப்பின் ஆட்டமிழக்காத அதிரடியான 61 (44 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷிம்ரோன் ஹெட்மயரின் ஆட்டமிழக்காத வேகமான 46 (32) ஓட்டங்களுடனும் 15.2 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்த நிலையில் 134 ஓட்டங்கள் எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்கு முதலாவது அணியாகவும் தகுதி பெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நேபாளம் அணி வெல்லும் எனக் கணித்த @வாத்தியார் க்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா அணி சஞ்சய் கிருஷ்ணமூர்த்தியின் ஆட்டமிழக்காத மின்னல்வேக 68 (33 பந்துகள்) ஓட்டங்களுடனும், மொனாக் பட்டேலின் புயல்வேக 52 (30 பந்துகள்) ஓட்டங்களுடனும் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் லோரன் ஸ்டீன்கம்ப்பின் வேகமான 58 (39 பந்துகள்) ஓட்டங்களைத் தவிர மற்றையோர் துடுப்பாட்டத்தில் நிலைத்து ஆடிப் பங்களிக்காததால் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: ஐக்கிய அமெரிக்கா அணி 31 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நமீபியா அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்குப் புள்ளிகள் இல்லை. எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்டஇந்திய அணி இஷன் கிஷானின் மின்னல்வேக 77 (40 பந்துகள்) ஓட்டங்களுடனும், சூரியகுமார் யாதவின் நிதானமான 32 (29 பந்துகள்) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பற்கொடுத்து வெளியேறியதால் 34 ஓட்டங்களிலேயே 4 முக்கிய நட்சத்திர விக்கெட்டுகளை இழந்திருந்தது. விக்கெட் காப்பாளர் உஸ்மான் கான் அதிரடியாக 44 ஓட்டங்களை எடுத்த போதிலும் அவரின் விக்கெட் வீழ்ந்த பின்னர் எவரும் நிலைத்து ஆடாததால் 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது. முடிவு: இந்திய அணி 61 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 20 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த மூவருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: முதல்வர் நாற்காலியிலும் இறுதி சுமைதாங்கியிலும் மாற்றம் இல்லை!1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டிகள் முடிஞ்சு எவ்வளவு நேரம் ஆயிற்று. கிருபன் ஐயா கொஞ்சம் ஒருக்கால் வந்து இன்றைக்கு கதிரையில் குந்துவது யார் சுத்த வர நின்று கதிரையை பிடித்து ஆட்டுவது யார் யார் என்ற ஒழுங்கை சட்டு புட்டு என்று அறிவிச்சுவிட்டு போனால் நாங்கள் எங்கள் வேலைகளை பார்க்க போயிடலாம்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- கொஞ்சம் ரசிக்க
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- நான் ரசித்த விளம்பரம் .
1 point- ஒபாமாவை குரங்காக சித்தரிக்கும் காணொளி.. பகிர்ந்து பின் நீக்கிய ட்ரம்ப்.
ட்றம்புக்கு… 79 ஆகியும், மூளை 10 வயதிற்கு மேல் விருத்தி அடையவில்லை.1 point- பிரித்தானிய பிரதமர் - சீன ஜனாதிபதி சந்திப்பு!
*பிரித்தானிய பிரதமர் - சீன ஜனாதிபதி சந்திப்பு! --- --- --- *பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒன்றுசேர முடியுமா? --- --- --- சீனா எந்த வகையில் வளர்ந்தாலும், வளர்ச்சி அநை்தாலும் ஏனைய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், (Xi Jinping) இன்று வியாழக்கிழமை பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை (Keir Starmer) சந்தித்த போது கூறினார். சீனத் தலைநகர் பீஜிங்கில் இச் சந்திப்பு இடம்பெற்றது. டொனால்ட் ட்ரம்ப்பின் சர்வதேசச் சட்டங்களை மீறிய நகர்வுகளின் பின்னர், முதற் தடவையாக இச் சந்திப்பு இடம்பெற்றிருக்கிறது. அமைதியான வளர்ச்சிக்கு உரிய உறுதிப்பாட்டை வலியுறுத்திய ஜி ஜின்பிங், சீனா ஒருபோதும் போரைத் திணிக்காது என்றும் எடுத்துரைத்தார். வெளிநாட்டுகளில் ஒரு அங்குல நிலத்தை, சீனா ஆக்கிரமிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். “ட்ரம்பின் செயற்பாடுகளினால், ஐரோப்பிய நாடுகளை நோக்கி. சீனா நேசக் கரம் நீட்டுகிறது” என்று, நான் சென்ற 18 ஆம் திகதி யாழ் உதயன் சஞ்சீவி ஞாயிறு வார இதழில் எழுதிய கட்டுரையை இச் சந்திப்பு நியாயப்படுத்துகிறது. ஆனால், பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒன்று சேர முடியுமா? இருந்தாலும், ட்ரம்பின் தன்னிச்சையான முடிவுகள், சிலவேளை, பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் விரும்பியோ விரும்பாமலோ குறிபிட்ட சில காலத்துக்கேனும், ஒன்று சேரும் வாய்ப்புகள் இல்லாமில்லை. இப் பின்னணியிலேதான், இந்தியா அவசர அவசரமாக இலங்கையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முழு முயற்சி எடுக்கிறது. இது பற்றியும் சென்ற ஞாயிற்றுக்கிழமை எனது கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது... இது பற்றிய மேலும் விளக்கங்கள், எனது அடுத்த புவிசார் அரசியல் கட்டுரைகளில் வெளிவரும். அதேவேளை, தமிழ்த் தேசியக் கட்சிகளிடையேயான மோதல், கட்சியின் உள்ளக மோதல், தற்போதைய புவிசார் அரசியல் சூழலில், ஆரோக்கியமானது அல்ல. சுமந்திரன், சிறீதரன் -- சுமந்திரன், கஜேந்திரகுமார் இது பற்றி உணரத் தலைப்பட வேண்டும்... கட்சி வேறுபாடுகள் இருந்தாலும், அரசியல் தீர்வு விடயத்தில், ஈழத்தமிழர்களாக ஒரு புள்ளியில் நிற்க வேண்டிய காலமிது... அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid02PbTsURNBj7iXkcMRzMcuyFbE7Ltn9hFpmJUkefWUiP4KKk4578A1SE3pEMbMVAXXl/?1 point - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.