Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. கையைவிட்டுப் போன பொதி திரும்ப வந்தால் கண்டபடி எல்லாம் திறக்கக் கூடாதாம். இன்றைய அறிவியல் உலகில் விமானத்தில் வரும் பயனிகளின் பொதிகளையும் மிக நுட்பமாகத் திறந்து போதைப் பொருட்களையும் அதற்குள் வைத்துக் கடத்துகிறார்களாம்.😳
  2. நன்றி சோதரி சுமேரியரே! உங்கள் மகிழ்ச்சி என்னையும் பற்றிக்கொண்டது. உங்கள் தந்தை மதிப்புக்குரிய நாகலிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வில் உங்களைச் சந்தித்த பின்பு இப்போதுதான் தொடர்புக்கான பாதையை எமது யாழ்களம் வகுத்துத் தந்துள்ளது. களத்திற்கு நன்றிசெலுத்தி உங்களது பதிவையும் பார்த்தேன் தமிழ் அப்படியே இளமை மாறாது துள்ளி விளையாடுகிறது. உறவுகளும் வாசகர்களும் மகிழ உங்கள் உடல்நலமும் பாதுகாத்துத் தொடர்ந்து யாழில் எழுதுங்கள்.🙌
  3. சுமேரியரா? மெசொப்பொத்தேமியா சுமேரியரா?? ஆச்சரியம்🤔. வருக! வருக!! யாழ்வருகை நல்வரவாகட்டும் சோதரி. 🙏
  4. காபியை விடவும் காபியின் வரலாற்றுப் பதிவு சுவையாக உள்ளது கிருபன் அவர்களே! ஆனாலும் நான் காபி அருந்துவதை விட்டுவிட்டேன். காலையில் காபி அருந்திக் கழிப்பறையில் இருந்து களிப்புடன் வெளியே வருபவர்களைக் கண்டுள்ளேன். சிலர் உள்ளிருந்து முக்கி முனகிக் கண் சிவந்து வருவதையும் கண்டுள்ளேன். நான் இரண்டாவது ரகம்.
  5. கற்பனையும் புனைவும்: இது பலாச்சுளையை தேனில் தோய்த்து சுவைப்பது போன்ற இனிமை உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தியதால் எழுந்த கேள்வியா? 🤔 தத்தக்கப் பித்தக்க நாலு கால், தானே நடந்தால் இரண்டுகால், முத்திப் பழுத்தால் மூன்றுகால், பழுத்து விழுந்தால் எட்டுக்கால். இவைகளில் ஒரு பருவம்தான் அவர் உறவே!🤪 28வது யாழ்களத்தின் பிறந்ததினத்தை கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்வதை விட்டு தமிழ் வழியில் பல பழங்கள்கொண்ட பஞ்சாமுறுத பிரசாதத்தை உறவுகளுக்கும் ஊட்டிக் கொண்டாடி மகிழ்விக்க விரும்பினேன் சுவியர் அவர்களே! 😁
  6. படிப்பதினால் மட்டும் அறிவு வளர்வதில்லை. என்னடா விளையாட்டு வீட்டைபோய் படியிங்கோடா. அவன் சித்தப்பாவின் அதட்டல் அவனையும் அவன் அண்ணனையும் மற்றும் நண்பர்களையும் நடுங்கி ஒடுங்கவைக்கும். அவர் கையில் அருகே இருக்கும் வேலியில் ஒடித்த நீண்ட கிளிசூரியோ பூவரசம் கம்பு ஒன்று மேலும் கீழும் ஆடி அண்ணன் தம்பி இருவரினதும் கால் கைகளைப் பதம்பார்க்கும். இது அவர்கள் பள்ளிக்கூடம் முடிந்த மாலை நேரங்களில், லீவு நாட்களில்கூட அவர்கள் விளையாடும் இடங்களில் நடக்கும் சம்பவம். சித்திரையில் அதுவும் வருடப்பிறப்பு அன்று தம்பி பிறந்த தோசம் காரணமாகவே சில மாதங்களில் அவர்கள் அப்பா இறந்துவிட்டதாக சொந்தங்களால் காரணம் கூறப்பட்டது. காரணம் எதுவக இருந்தாலும், பெரியப்பாக்களும் சித்தப்பாவுமே இவர்கள் குடும்பத்துக்கு உதவிகள் செய்து அவர்களைப் பாதுகாத்து வந்தார்கள். ஆனாலும் சித்தப்பா சற்று வித்தியாமானவர். தான் பெற்ற பிள்ளைகளை மிகுந்த செல்லம் கொடுத்து வளர்க்கும் அவர் தன் அண்ணனின் பிள்ளைகளை அதட்டி ஒடுக்கி வைத்திருப்பதில் கர்வம் கொள்பவர். அண்ணனின் பிள்ளைகள் என்றாலும் அவர்களைச் சீராக வளர்க்கிறேன் என்று தன்னை ஒரு சிறந்த காவலனாக காட்டிக்கொள்வதில் பெருமை கொள்பவராக இருந்தார். அண்ணனின் பிள்ளைகளை ஒரு டாக்டராகவோ, எஞ்சினியராகவோ வளர்த்தெடுப்பேன் என்று எல்லோரிடமும் சொல்லி இறுமாப்படைவார். ஆனால் “படிடா படிடா” என்று படுத்துபவருக்கு என்ன படிக்கவேண்டும் எப்படிப் படிக்கவேண்டும் என்று சொல்லவோ வழிகாட்டவோ தெரியாது. ஒரு டாக்டர், எஞ்சினியர் என்றால் தன் பிள்ளைகளைத் தன்வழி வருவதற்கான வழிமுறைகளைச் சொல்லிக்கொடுத்து வளர்க்க முடியும். கடையொன்றில் சிப்பந்தியாக வேலைபார்க்கும் சித்தப்பாவால் உப்பு எப்படிக் கட்டுவது, சீனி, சக்கரை எப்படிச் சரை கட்டுவது என்பதைத்தவிர வேறென்ன சொல்லிக்கொடுக்க முடியும். “அடியாதமாடு படியாது” என்பது போன்ற முதுமொழிகளுகான விளக்கங்களை தனது பெரியப்பாவின் பிள்ளைகள்மூலமே பரிசோதனை செய்து விளங்கிக்கொள்வது வழக்கமான செயலாகியது. கல்கி, குமுதம், ஆனந்தவிகடனில் வரும் கதைகள், நாவல்கள், கட்டுரைகளைப் படித்து தம்பிக்கு தானும் ஏதாவது எழுதவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனாலும் அவன் கையெழுத்தை அவனாலேயே திரும்ப வாசிக்க முடியவில்லை. அத்தனை மோசமான எழுத்து வடிவங்கள். இருந்தும் சிறந்த எழுத்தாளர், திரைப்படங்களுக்கும் கதை வசனங்கள் எழுதி பாராட்டுகள் வாங்கும் கலைஞர் கருனாநிதியின் கையெழுத்து ரெம்பவும் மோசமானது என்பதையும், அவர் எழுதுவதை வாசிக்கக் கூடிய ஒருவரை உதவிக்கு வைத்துள்ளனர் என்ற செய்தியையும் அவன் அறியவந்ததும், வந்த தயக்கம் நீங்கியது. அவன் எழுத்தையும் வாசித்து அறியக்கூடியவர்கள் உலகில் இல்லாது இருப்பார்களா? சூரியன் காலையில் பிரகாசமாக எழுந்தான், மாலையில் ஒளியிழந்து மறைந்தான், சந்திரன் மலர்ந்தான் என்று ஏதேதோ எழுதி வீரகேசரிக்கு அனுப்பும் எண்ணத்தோடு அண்ணா அக்காமாரிடம் காட்டினான், அவர்கள் அதனைச் சிரமத்தோடு வாசித்தாலும் பின்பு செய்த பரிகாசம் அவன் ஆர்வத்தை அடக்கிச் சோர்வடையச் செய்தது. அவ்வேளையில்தான் யாழ் இணையம் என்ற ஒரு களத்தை திரு மோகன் அவர்கள் ஆரம்பித்தார். களத்தில் இணையும் வழிமுறைகளும் இருக்கவே அவனும் இணைந்து உறுப்பினராகி எழுத ஆரம்பித்தான். சித்தப்பா பிள்ளைகளின் வேண்டுதலில், சித்தப்பா தன் பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுத்த கணனியில், அவர் வேலைக்குச் செல்லும் நேரங்களில் சென்று பயிற்சி பெற்றுவந்தது இணையத்தில் எழுத உதவியது. இணையம் அவனையும் அரவணைத்தது. சித்தப்பாவின் பிள்ளைகள் அவர்கள் அப்பனைப்போல் அல்லாது நண்பர்கள்போல் பழகினார்கள். யாழ்கள உறவுகளும் அவன் எழுதும் தமிழை வரவேற்றுப் பாராட்டவே வானத்தில் பறந்தான். இன்றும் பறக்கிறான். பறக்கும்போது அவன் சிந்தனையில் எழுந்த, தமிழின் பெருமைகளை அறிந்த, அறிந்தும் மறந்த சில விடயங்களைத் திரும்பவும் நினைவூட்ட விரும்பினான். அதனால் அவன் விருப்பமும் கீழே பதிவாகியுள்ளது. தமிழினம் முதல் தலைமுறை: நாம் இரண்டாம் தலைமுறை: தாய் தந்தை மூன்றாம் தலைமுறை: பாட்டன் பாட்டி நான்காம் தலைமுறை: பூட்டன் பூட்டி ஐந்தாம் தலைமுறை: ஓட்டன் ஓட்டி ஆறாம் தலைமுறை: சேயோன் சேயோள் ஏழாம் தலைமுறை: பரன் பரை பரன்+பரை இதுவே பரம்பரை எனும் தமிழ்சொல்லாக மருவி வழக்கில் உள்ளது. ஒரு தலைமுறை என்பது தோராயமாக 60 வருடங்கள் என்றும், 7 தலைமுறை 480 வருடங்கள் என்றும் ஈரேழு தலைமுறை 960 வருடங்கள் என்றும்(கிட்டத்தட்ட 1000 வருடங்கள்) ஆக பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு பதின்நாங்கு தலைமுறையாக என்று பொருள் வருமாறு தமிழ் மொழி வகுத்துள்ளது. இப்படியான அமைப்பு வேறெந்த மொழிகளிலும் இருப்பதாகத் தெரியவில்லை. எண்கணிதம் 1= ஒன்று -one 10= பத்து -Ten 100= நூறு -Hundred 1000= ஆயிரம் -Thouand 10000= பத்தாயிரம் -Ten Thousand 100000= நூறாயிரம் -Hundred Thousand 1000000= பத்துநூறாயிரம் -One Million 10000000= கோடி -Ten Million 100000000= அற்புதம் - One Hundred Million 1000000000= நிகரபுதம் - One Billion 10000000000= கும்பம் - Ten Billion 100000000000= கணம் - Hundred Billion 1000000000000= கற்பம் - One Trillion 10000000000000= நிகற்பம் - Ten Trillion 100000000000000= பதுமம் - Hundred Trillion 1000000000000000= சங்கம் - One Zillion 10000000000000000= வெல்லம் - Ten Zillion 100000000000000000= அன்னியம் - Hundred Zillion 1000000000000000000= அர்த்தம் - ? மேலும் எழுத ஆங்கிலத்தில் சொற்கள் தெரியவில்லை. 10000000000000000000= பராத்தம் - ? 100000000000000000000= பூரியம் - ? 1000000000000000000000= முக்கோடி - ? 10000000000000000000000= மகாயுகம் - ? நாம் கெடுவதற்குக் காரணங்களை நமது ஒளவை மூதாட்டியாரும் அழகாகச் சொல்லியுள்ளார். 01 பார்க்காத பயிரும் கெடும் 02 பாசத்தினல் பிள்ளையும் கெடும் 03 கேளாத கடனும் கெடும் 04 கேட்டால் உறவும் கெடும் 05 தேடாத செல்வம் கெடும் 06 தெகிட்டினால் விருந்தும் கெடும் 07 ஓதாத கல்வியும் கெடும் 08 ஒழுக்கமில்லா வாழ்வும் கெடும் 09 சேராத உறவும் கெடும் 10 சிற்றின்பம் பெயரும் கெடும் 11 நடாத நட்பும் கெடும் 12 நயமில்லா சொல்லும் கெடும் 13 கண்டிக்காத பிள்ளை கெடும் 14 கடன்பட்டால் வாழ்வு கெடும் 15 பிரிவால் இன்பம் கெடும் 16 பணத்தால் அமைதி கெடும் 17 சினமிகுந்தால் அறமும் கெடும் 18 சிந்திக்காத செயலும் கெடும் 19 சோம்பலினால் வளர்ச்சி கெடும் 20 சுயமில்லா வேலை கெடும் 21 மோகித்தால் முறைமை கெடும் 22 முறையற்ற உறவும் கெடும் 23 அச்சத்தால் வீரம் கெடும் 24 அறியாமையால் முடிவு கெடும் 25 உழாத நிலமும் கெடும் 26 உழைக்காத உடலும் கெடும் 27 இறைக்காத கிணறும் கெடும் 28 இயற்கையை அழிக்கும் நாடும் கெடும் 29 இல்லாளில்லா வம்சம் கெடும் 30 இரக்கமில்லா மனிதம் கெடும் 31 தோகையினால் துறவு கெடும் 32 துணையில்லா வாழ்வு கெடும் 33 ஓய்வில்லா முதுமை கெடும் 34 ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும் 35 அளவில்லா ஆசை கெடும் 36 அச்சப்படும் கோழை கெடும் 37 இலக்கில்லா பயணம் கெடும் 38 இச்சையினால் உள்ளம் கெடும் 39 உண்மையில்லா காதல் கெடும் 40 உணர்வில்லாத இனமும் கெடும் 41 செல்வம் போனால் சிறப்பு கெடும் 42 சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும் 43 தூண்டாத திரியும் கெடும் 44 தூற்றிப்பேசும் உரையும் கெடும் 45 காய்க்காத மரமும் கெடும் 46 காடழிந்தால் மழையும் கெடும் 47 குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும் 48 குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும் 49 வசிக்காத வீடும் கெடும் 50 வறுமை வந்தால் எல்லாம் கெடும் 51 குளிக்காத மேனி கெடும் 52 குளிர்ந்து போனால் உணவு கெடும் 53 பொய்யான அழகும் கெடும் 54 பொய்யுரைத்தால் புகழும் கெடும் 55 துடிப்பில்லா இளமை கெடும் 56 துவண்டிட்டால் வெற்றி கெடும் 57 தூங்காத இரவு கெடும் 58 தூங்கினால் பகலும் கெடும் 59 கவனமில்லா செயலும் கெடும் 60 கருத்தில்லா எழுத்தும் கெடும் இந்த 60ஐயும் அறிந்துகொண்டால் நம் வாழ்க்கை கெடவே கெடாது.
  7. இந்த அமெரிக்க ஈரான்போர் உலக நடைமுறையில் ஒரு மாற்றத்தையும் கொண்டுவரலாம். இயந்திரங்களை உருவாக்கும் தொழிற்சாலைகள், இயந்திரங்களை இயக்குவதற்கு எண்ணைக்குப் பதிலாக வேறு மாற்றுவழிகளைத் தேடவும் முயற்சிக்கலாம். சூரிய ஒளியைப் பாவிக்கும் தொழில் நுட்பம் போன்றவை.🤩
  8. அண்டத்தில் பல சூரிய குடும்பங்களைக் கண்டுபிடித்துள்ளார்கள் நம்ம வான் ஆராய்சியாளர்கள் அங்கு ஒரு சூரிய குடும்பத்தில் எங்கள் பூமியைப் போன்று ஒரு கோளும் உள்ளதையும் கண்டுள்ளார்கள். அக்கோளில் 40 மாதங்கள் ஒரு வருடம்போல் தெரிகிறது. அங்கு இந்தியர்களே முதலில் குடியேறுவார்கள் என ஏராளன் அவர்களும் தற்போது கண்டுபிடித்ததுள்ளார்.😂
  9. தமிழினத்தின் பாரம்பரிய பண்பாடுகளில் ஒன்று, ஒருவர் இறந்துவிட்டால் பறை அடிப்போரை அழைத்து பறை அடித்து ஊரவர்களுக்கு அறிவிப்பார்கள். அந்தத் தமிழர்களின் பண்பாட்டை இன்று அமெரிக்க மக்களும் பின்பற்ற விரும்பி தங்கள் இறப்பை உலகத்துக்கு அறிவிக்கப் “பறையை” முன்னதாகவே அழைத்து வந்துவிட்டார்கள் போன்று தோன்றுகிறது.😳
  10. ‘அடப்பாவி’ நான் ஒரு நேர்சு என்றுதான் எண்ணினேன்.🧐 வயித்தைப்பற்றி எரியுது.😩
  11. இது விவகாரமான கேள்வியல்ல. விபரமான கேள்விதான் உறவே!! மாமனிதர் விருது மாமனிதர் விருது – தமிழீழத்தின் அதிஉயர் விருதினை ஈழப்போராட்டத்தில் பல்வகைகளிலும் தோளோடு தோள்நின்று பங்காற்றிய கவிஞர் காசி ஆனந்தன் அவர்களுக்கு மேதகு தலைவர் வே. பிரபாகரனால் அவர்களால் வழங்கப்பட்டது. பின்னர் தமிழகத்திலேயே தங்கிவிட்ட காசி ஆனந்தன் இன்றும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக அங்கு குரல் கொடுத்தவண்ணமுள்ளார்.
  12. அர்ச்சுனா அர்ச்சனை செய்த டொக்டர் சத்தியமூர்த்தி அவர்களும், மாமனிதர் டொக்டர் சத்தியமூர்த்தி அவர்களும் ஒருவரா? அன்றி வேறு வேறான இருவரா?? கவி அருனாசலம் அவர்களே???
  13. அம்மா என்ற சொல் இயற்கையில் தோன்றிய ஒன்றாகும். பிறந்த குழந்தை அழுவதும், சிரிப்பதுமாக வாயை மூடி மூடித் திறக்கின்றது. குழந்தை வாயைத் திறக்கும் போது அ என்ற ஒலி எழுகின்றது. வாயை மூடும் போது ம் என்ற ஒலி எழுகின்றது. ம்+அ. ம்ம -ம்ம -என்ற ஒலி மீண்டும் மீண்டும் வெளிவரும் போது அது அம்மா என்ற தமிழ் சொல்லைத் தருகின்றது. தமிழ்மொழி இனிமையானது, சுவையானது. அதனால்தான் பூச்சி புழுக்கள்கூட தமிழுக்குள் புகுந்து தமிழைத் தின்பதற்கு முனைகின்றன.😲
  14. வாள் என்பது கையாள்வதற்கு ஏதுவாக நீண்டகூர்மையான உலோக அலகு கொண்ட ஒரு பழங்கால ஆயுதம் இது வெட்டுவதற்கும் குத்துவதற்கும் பயன்படுகிறது. இன்று அது அறிவியல் உலகம் கண்டுபிடித்த துப்பாக்கியையும் வென்றுள்ளது. பல நூற்றாண்டுகளாகப் போர்க்களங்களில் முக்கிய ஆயுதமாக இருந்த இதுதற்காலத்தில் வாள்வீச்சு என்ற ஒலிம்பிக் விளையாட்டுப் பிரிவிலும் பயன்படுத்தப்படுகிறது. எம்ஜீஆர் அவர்கள் ரசிகர்களிடம் பிரபலம் அடைவதற்கு இந்த வாள்வீச்சும் ஒரு காரணமாக இருந்துள்ளது.🤺
  15. முன்னைய மன்னர் ஆட்சியின் ஆட்சி மோதல்களில், பூமியில் உயிர்கள் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாகி அழிந்தன அழிக்கப்பட்டன. பூமி பாதிப்பின்றிச் சுற்றியது. தற்போது மக்கள் ஆட்சியில் மக்கள் அறிவும் அதிகரித்த ஆட்சி மோதல்களில், உயிர்களோடு பூமியும் பாதிப்புக்கு உள்ளாகி அழிந்துவிடும்போல் தெரிகிறது. மக்களாட்சியை விடவும் மன்னராட்சி பூமிக்கு மேலானதுபோல் தோன்றுகிறது.
  16. 50+ likes · 2 weeks ago இந்தியாவில் பதவியில் உள்ள நீதிபதிகளுக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளில் 8,630 புகார்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்தில் பெறப்பட்டதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  17. படரவேண்டிய இடத்தில் படராமல் தவறான இடத்தில் தவறாகப் படர்ந்த முல்லைச் செடிக்கு தன் தேரையே கொடுத்தான் காவலன் பாரி வள்ளல் அன்று. இனிப்பு உண்ணும் ஆசையால் இனிப்பைத் திருடித் தவறுசெய்த இளம் முல்லைகளைக் கைதுசெய்து படம்காட்டுகிறது காவல்துறை இன்று.😲
  18. தேரர்களால் களங்கப்படும் பௌத்தம்! written by Admin July 9, 2023 நவகமுவ பிரதேசத்தில் தேரர் ஒருவரையும், இரண்டு பெண்களையும் தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் காவற்துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தேரர் ஒருவரும், இரண்டு பெண்களும் குழுவொன்றினால் நிர்வாணப்படுத்தப்பட்டு பொல்லால் தாக்கப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார். தேரர் ஒருவர் மற்றும் இரண்டு பெண்களின் ஆடைகளை கலைத்து, அவர்களை நிர்வாணப்படுத்தி, கடுமையாக தாக்கியமை பாரிய குற்றமாகும். எவருக்கும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது. உடனடியாக குறித்த குழுவினர் கைது செய்யப்பட வேண்டும். மேலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு மேல் மாகாண சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் நவகமுவ காவற்துறை தலைமையகத்துக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
  19. இந்தப் பதிவு துயர்பகிர்வோம் பகுதியில் வரவேண்டிய பதிவு என எண்ணுகிறேன். தவறுதலாக வாழும் புலம் பகுதியில் வந்துவிட்டது.😢
  20. கீழே விளக்கு ஏற்றப்படும்போது, மேலே உள்ள சுவரில் உருவாகும் நிழல் சிவபெருமான்.🙏
  21. றோசா என்றாலே அது மனதுக்கு மென்மையை உணர்த்தி நறுமணத்தையும் அள்ளி வீசும். ஆனால் தமிழ்சிறி தம்பிக்கு முள்ளாக குத்தி வைத்தியசாலைக்கும் அனுப்பி வைத்துள்ளதே.😳 தம்பி தற்போது வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலம்பெற்று வர இறைவனை வேண்டுகிறேன். மேலும் உறவுகளுக்கு விபரங்களை அறியத்தந்து அவர்களின் மனங்களை ஆறுதல்படுத்துமாறு தம்பியைத் தயவுடன் வேண்டிக் கொள்கிறேன்.🙏
  22. நமசிவாயம் முருகா வாருங்கோ தங்களின் யாழ்வரவு நல்வரவாகட்டும்.🙏🙏🙏
  23. அடித்ததும் “தமிழர்கள்தான் நாங்கள்” என்று இன்றும் மாவீரர் தினம், கல்விக் கழகம் அது இது என்று அப்பாவியாக ஏமாறும் தமிழர்களிடம் அடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
  24. அரசியலே தமிழினத்தை அழிப்பதற்கு இனவாதிகளின் ஆசீர்வாதத்துடன் நடைபெறுவது பூரணச் சந்திரன்போல் பளிச்சிடுகிறது. இதற்கு இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து இன்றுவரை இலங்கையை ஆட்சிசெய்யும், ஆட்சிசெய்த சிங்களத் தலைவர்களின் செயற்பாடுகளே ஆதாரம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.