Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Paanch

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  6,795
 • Joined

 • Last visited

 • Days Won

  17

Everything posted by Paanch

 1. பனை ஓலையில் இழைத்த வெங்காயக் கூடைகள் இவைதானா? ஆனால் ஓட்டைகளைக் காணவில்லையே.??
 2. நானும் மொக்கன்கடையில் பலமுறை சாப்பிட்டுள்ளேன், அதனால்தான் ஏராளனின் கேள்விக்கு மொக்குத்தனமாகப் பதில் கூறிவிட்டேனா.....???? மன்னித்துக் கொள்ளுங்கள் ஏராளன் அவர்களே.!!
 3. குழம்பையும் ஆணம் என்றும் சொல்வதுண்டு. மற்றும்படி சொதியை ஆணம் என்றும், ஆணத்தைச் சொதி என்றும் சொல்வது அவரவர் நாட்டு வழக்கம்.
 4. என் பதிவிற்கான மூலத்தை இங்குதான் கண்டெடுத்தேன். நன்றி நிழலி.
 5. நானும் மட்டக்களப்பில் பல காலம் வாழ்ந்துள்ளேன் அங்கு "சொதி" என்று சொல்லக் கேட்டதில்லை. "ஆணம்" என்றுதான் சொல்லக் கேட்டுள்ளேன்.
 6. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக தலைமை காரியாலயம் அப்படிக் கோரவில்லை எனத் தெரிகிறது. அப்படியானால் இது கவுண்டமணி செந்தில் வாழைப்பழக் காமெடியாக இருக்குமோ?
 7. அனேகமாக வெளிநாட்டுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்களும், சுற்றுலாப் பயனிகளுமே கொரோனாவை முதலில் தென்னிலங்கைக்குக் கொண்டுவந்தனர். பின்னர் அங்கிருந்து தமிழர் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதும், அனுப்பப்படுவது பற்றியும், யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
 8. யோகன் அவர்களின் ஆக்கத்தைப் பிரதிபண்ணிப் பதியும்போது சில எழுத்துக்களை இயன்றளவு சரிசெய்யவும் முயன்றுள்ளேன். உங்கள் சிந்தனையில் உதித்தவையும் ஞாபகம் வந்தது. ஆனாலும் பனைகளைத் தறித்து அழிப்பதை ஊக்குவிக்கக்கூடாது என்ற எண்ணமும் ஏற்பட்டது. எங்கள் தமிழ்படை தறித்தது பாதிப்பைத் தரவில்லை, அவர்கள் தறித்த குற்றத்திற்கு ஈடாக ஈழத்தில் 5இலட்சம் பனை மரங்களை நாட்டும் முயற்சியை மேற்கொண்டனர். ஆனால் சிங்களப்படை ஒன்றைக்கூட நாட்ட முன்வந்ததாக அறிந்ததில்லை. உண்மைதான்! ஆனாலும் பனைக்குப் பின்னால் இருக்கும்போது தலையில் பனங்காய் வீழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களும் ஞாபகத்திற்கு வந்தனர். (சுற்றுலாப் பயனி ஒருவர் ஈழத்தில் உலாவியபோது, அதிகாலையில் பனைகளுக்குப் பின்னால் சில தலைகள் தெரிந்ததைக் கண்டு "அது என்ன செய்கிறார்கள்" என்று கேட்டுள்ளார், பயனியின் வழிகாட்டியாக வந்தவருக்கு அவமானமாகப் போய்விட்டது. "அது அவர்கள் அதிகாலையில் சூரியக்குளியல் எடுக்கிறார்கள்" என்று சொல்லிச் சமாளித்தாராம்.)
 9. சுட்ட பனம்பழத்தைப் பழப்புளித் தண்ணியில் தோய்த்துச் சூப்பிய அந்நாள் ஞாபகத்திற்கு, நிழலி அவர்களின் பதிவு என்னைக் கொண்டு சென்றதுமட்டும் அல்லாது, யாழ்கள உறவுகள் சிலருக்கு எங்கள் பனை ஒரு கற்பகதரு என்றும், அதன் மகத்துவம் தெரியாதிருப்பதும் தெரியவந்தது, கற்பகதரு பற்றிப் பாரிசில் இருந்து யோகன் என்பவர் அன்று தந்த ஆக்கத்தை இங்கு தருகிறேன். ஈழத் தமிழரின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த, இந்தப் பனை மரத்தை அதன் முழுப் பயன் கருதி “கற்பகதரு” என்பர். போர்ச்சூழலிலும், பல தழிழர்களின் வாழ்வாதாரமாகத் திகழும், பனையின் பயன் பற்றி எமது இளைய தலைமுறையில் அறியாதிருக்கும் சிலர் அறிய பகிர்வதே இப்பதிவின் நோக்கம். இளையோர் மாத்திரமன்றி நகர்ப்புற வாழ்வோடு தம்மை இணைத்துக்கொண்ட சில 50 க் கடந்தவர்கள் கூட அறியப் பல பனை பற்றிய தகவல்கள் உள்ளதாலும் பலவற்றை மறக்கக் கூடிய சூழ்நிலையில் வாழும் எல்லோருக்குமுரிய மீட்டலாக இது அமைகிறது. குருத்து:- பனை தறிக்கும் போதோ, ஓர் வடலியை வெட்டிப் பிளந்தோ மரத்தின் வட்டுப் (தலை) பகுதியின் மிக இளம் மிருதுவான ஓலை மற்றும் மட்டைப் பகுதிகள் குருத்து என்பர். இது இனிப்புச் சுவையுடன் மிக ருசியாக இருக்கும். கள் :- பூம்பாளையைச் சீவிக் கள் இறக்குவார்கள். முட்டிக்குள் சுண்ணாம்பிட்டு சேகரித்த கள்ளைக் கருப்பணியென்பர், தென்னிந்தியாவில் பதநீர் என்பர். சூட்டு உடம்புக்காரர் பதநீரைக் காலையில் அளவுடன் குடிப்பது நல்லதென்பர். சுண்ணாம்பு இடாதிருக்கும் கள்ளானது சிறிது நேரத்தில் நொதித்துப் போவதால் சற்றுப் புளிப்பு இருக்கும், இதைக் குடித்தால் வெறிக்கும். அளவுடன் குடித்தால் தீங்கற்ற பானம். பனங்கட்டி:- இதைப் பனைவெல்லம், பனங்கருப்பட்டி எனவும் கூறுவர். கருப்பணியைப் பதமாக வற்றக் காச்சிப் பெறும் இனிப்புப் பொருள் இது. இதைச் சீனிக்குப் பதில் பாவிக்கும் பழக்கம் உண்டு. ஆயுள் வேத வைத்தியத்தில் தேனுடன் உட்கொள்ளும் மருந்துகளுக்கு தேன் கிடைக்காத போது இதைச் சேர்க்கும்படி வைத்தியர்கள் கூறுவார்கள். சலரோகமுள்ளவர்கள் கூட சிறிது பாவிக்கலாம். ஈழத்தில் பருத்தித்துறை இதன் தயாரிப்பிலும் செய்பாங்கிலும் பிரபலம். நுங்கு:- பனங்காயின் இளம் பருவத்தில் முற்றாத விதையை வெட்டி அதன் உட்பகுதியை உண்பர். மிக இனிமையான உணவு. பனம்பழம்:- இதைச் சுட்டு, சற்றுப் புளிக்கரைசலில் தோய்த்துச் சாப்பிட்ட அருமையாக இருக்கும். பசியும் அடங்கும். பனங்காய்ப் பணியாரம்:- பிளிந்தெடுத்த பனம்பழக்களியுடன் கோதுமை மாவும் சேர்த்து கொதிக்கும் எண்ணெயில் பாக்களவு உருண்டைகளாக உருட்டிப் போட்டுப் பொரித்தெடுப்பது. மிக்க வாசமாகவும் சுவையாகவும் இருக்கும், சுமார் ஒரு வாரகாலம் எந்தவிதமான விசேட பாதுகாப்புமின்றி வைத்துச் சாப்பிடக் கூடியது. பனாட்டு:- பனம்பழக்களியை பாயில் ஊற்றி வெய்யிலில் காயவைத்துத் தட்டுத்தட்டாக வெட்டி மடித்து, ஓலை உமலில் கட்டி அடுப்படிப் பறனில் புகைபடக் கூடியதாகக் கட்டி வருடக்கணக்கில் வைத்து உண்ணக்கூடிய பனம் பண்டம். தேங்காய்ச் சொட்டுடன் உண்பதற்கு மிக அருமையாக இருக்கும். அதிகமாக இதனைக் காலை, மாலை உணவுடன் உண்பார்கள். சீக்காய்:- இது நொங்கு முற்றி வரும் செங்காய்ப்பதம். இதன் தோலைச் சீவி, மஞ்சள் சதைப் பகுதியை தட்டுத்தட்டாக அரிந்து சப்பிடலாம். அதனுள் இருக்கும் சாற்றை உறிஞ்ச அதன்சுவை ஆகா சொல்ல வார்த்தைகள் இல்லை. பூரான்:- பனம் விதையைக், கிழங்கிற்காகப் பாத்தி போட்டு அவை முளைத்துவரும் நேரத்தில் அதன் பூரான் மாத்திரம் முதிர்ந்துவிடும். அந்த விதையைப் பிளந்து உள்ளிருக்கும் பூரானை உண்ண மிகுந்த சுவையாக இருக்கும். முளை முதிர்ந்துவிட்டால் உள்ளே பூரான் இறுக்கமாக இராது. இதைச் “சிதவல்” என்பர். நீர்த்தன்மையுடன் சுவை குன்றியிருக்கும். ஒடியல்:- “நாராய் நாராய் செங்கால் நாராய்-பனம்படு கிழங்கின் பிளந்தன்ன வாய்” என உவமை கொண்ட இக்கிழங்கை இரண்டாகப் கிழித்துக் காயவைத்துப் பெறுவதைப் ஒடியல் என்பர். அவித்துக் காயவைத்தால் புளுக்கொடியல் என்பர் அதனை அப்படியே முறித்து உண்ணலாம். ஒடியலை இடித்து அரித்து எடுக்கும் மாவுடன் முருங்கையிலை சேர்த்துப் பிட்டு அவிப்பர். கறியுடனோ, சீனி, சக்கரையுடனோ சாப்பிடலாம். அன்றைய தமிழரின் பாரம்பரிய உணவிது. அடுத்து இம்மாவில் தயாரிக்கப்படும் முக்கிய உணவு கூழ். இதில் சைவக்கூழ், மச்சக்கூழ் எனக் காச்சுவார்கள். ஒடியல்மாவுடன் மிளகாய், உள்ளி, மிளகு, புளி, உப்பு கரைசல், உழுந்து, பயறு, மரவள்ளிக்கிழங்கு, பூசணிக்காய், ஈரப்பலாக்காய், பலாக்கொட்டை, அவரைக்காய், முல்லை, முசுட்டை, முருங்கைக் கீரை சேர்த்துக் காச்சுவதுண்டு, தேங்காய்ச் சொட்டும் சேர்த்தால் அருமையாக இருக்கும். இது ஒரு நிறையுணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கானது. இத்துடன் மீன், நண்டு, கணவாய், இறால், திருக்கை, மட்டிச்சதை சேர்த்துச் சமைப்பது மச்சக்கூழ். இது மச்சப் பிரியர்களுக்கு. முல்லைத்தீவு சார்ந்த இடங்களில் இத்துடன் மான், மரை வத்தல் இறைச்சியும் சிறிது சேர்ப்பர். இது தடிமனுக்கு நல்ல கைவைத்தியம். அவித்த கிழங்கு:- இதை மாலை நேரச்சிற்றுண்டியாக உண்பர். கிழங்குக்காலத்தில் இலங்கையில் சகல இனமக்கள் வீட்டிலும் உண்பர். கிழங்குத் துவையல்:- அவித்த நன்கு தும்பு வார்ந்து எடுத்த கிழங்குத் துண்டுகளுடன் பச்சைமிளகாய், உள்ளி, மிளகு, உப்பு, வெங்காயம் சேர்த்திடித்து உருண்டையாக்கி உண்பர். செமிபாட்டை இலகுவாக்கி சிறுவர்கூடச் சாப்பிடக் கூடியது. மிக வாசமாகவும், சுவையானதும் கூட. புழுக்கொடியல்:- அவித்த கிழங்கை நன்கு தும்புவார்ந்து இரண்டாகப் பிளந்து நன்கு வெயிலில் காயவைப்பது. இதை நீளமாகவும், வட்டமாகவும் சீவிக் காயவிடுவதுமுண்டு. அதைச் சீவலொடியல் என்பர். மாலை நேரச்சாப்பாடு, தேங்காச்சொட்டுடன் பிரமாதமாகக் கூட்டுச் சேரும். பலவருடம் பாதுகாக்கக் கூடியது. இதனை இடித்துவரும் மாவுக்கு தேங்காய்த் துருவல், சீனி, சர்க்கரை, பனங்கட்டி சேர்த்து சிறுவர்களுக்கும் பல்லுச் சப்பமுடியாத முதியவர்களுக்கும் கொடுப்பர். அண்றைய நாட்களில் பற்கள் பலமாக வருவதற்கும் இதைக் கடித்துச் சாப்பிடுவார்கள். சுவடி:- ஆதிகாலத்தில், எழுது பொருளாகப் பனையோலைச் சுவடிகளே பயன்படுத்தப்பட்டது. இன்றும் பல சங்க இலக்கியங்கள் பலையோலைச்சுவடியாக பல நூலகங்களில் உண்டு. யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது தேடக்கிடைக்காத பல சுவடுகள் எரிந்தன. பண்டைய தமிழ் எழுத்துக்களுக்கு குற்றிடுவதில்லை. காரணம் ஓலையில் எழுத்தாணியால் குற்றிட்டால் கிழிந்துவிடுமென்பதால் குற்றுத் தவிர்க்கப்பட்டதென்பர். கால்நடை உணவு:- புல் அருகியுள்ள காலங்களில் பச்சோலை வெட்டிக் கிழித்து மாமு ஆட்டிற்கு உணவாக போடுவர். கூரை:- ஓட்டுப் பாவனை வருமுன் இல்லங்கள் பனையோலை, தென்னங்கிடுகு, வைக்கோல் என்பவற்றால் வேயப்பட்டது. வெப்பவலையமான எங்கள் பிரதேசங்களில் இக்கூரைகள் மிகுந்த சுவாத்தியமாக அமைந்த தென்பதை அவற்றில் வாழ்ந்து அனுபவித்தோர் இன்றும் கூறக்கேட்கலாம். பனையோலைக் கூரை அதில் தேர்ந்தோராலே நேர்த்தியாக வேயக்கூடியது. வேலியடைத்தல்:- அன்றைய கதியால் வேலிகளுக்கு முகமறைப்பாகவும், பாதுகாப்பாகவும், பனையோலையோ, தென்னங்கிடுகோ கொண்டு மறைத்தடைக்கும் வழக்கம் உண்டு. இவை செலவு குறைந்தது. கதியாலுக்குப் பதில் பனைமட்டையும் வேலியடைக்க உபயோகிப்பர். பன்ன வேலை:- இது பனையோலை குறிப்பாகக் குருத்தோலை, நார், ஈர்க்கு, மட்டை என்பவற்றைக் கொண்டு வீட்டுக்குத் தேவையான பாவனைப் பொருட்களான பெட்டி, கடகம், சுளகு, பாய், நீற்றுப்பெட்டி, தடுக்கு, குட்டான், உமல், தொன்னை, வட்டில், விசிறி, தொப்பி, கிலிகிலுப்பை என்பவற்றை இழைப்பதாகும். ஈழத்தில் அன்றைய பெண்கள் பங்கேற்கும் முக்கிய குடிசைக் கைத்தொழில். அடுக்குப் பெட்டி:- இன்றைய அடுக்கு அலுமினியம், எவர் சில்வர்ச் சட்டிகள் போல், அன்று அடுக்குப் பெட்டிகள் 1/2′ முதல் 1 1/2′ விட்டம் வரை சுமார் 1/2′ உயரத்தில் ஒன்றினுள் ஒன்று வைக்கக் கூடியதாக இழைக்கப்பட்டவை. ஒரு அடுக்கில் 5 முதல் 10 பெட்டிகள் இருக்கும்…பலவித தேவைகளுக்கும் அவற்றின் அளவுக்கேற்ப பயன்படுத்துவர். நல்ல இளங்குருத்தோலையில் இழைத்தவை அதிகம் நனையவிடாமலோ, அல்லது காயவிடாமலோ நிழலில் பாவித்தால் 15 வருடங்கள் கூடப் பழுதுபடாமல் இருப்பவையும் உண்டு. அஞ்சறைப் பெட்டி(ஐந்தறைப்பெட்டி):- சுமார் 8″- 10″ , நீள அகலமுள்ள சற்சதுரவடிவான பெட்டி, இருஅடுக்கு அமைப்பாக இருக்கும் முதல் அடுக்கு, பெட்டியின் 1/2 வாசி உயரத்துடன் 4 அறைகளாகப் பிரித்திருப்பார்கள். கீழ்த் தட்டுஅப்படியே இருக்கும் மேல்தட்டு தனியே எடுத்து கீழ்த்தட்டுள் உள்ளவற்றை எடுக்கலாம். அன்றைய நாட்களில் சந்தை வியாபாரிகள் சில்லறைக் காசுகள் வைக்க இதனைப் பாவித்தனர். சமையலறையிலும், பலசரக்குப் பெட்டியாகவும், ஆயுள் வேத வைத்தியர்கள் மருந்து காவும் பெட்டியாகவும், பாவித்தார்கள். இதை 9 அறையுடனும் இழைப்பர். இன்று காட்சிக்குக் கூட ஒன்று கிடைக்குமோ! தெரியவில்லை. கொட்டைப்பெட்டி:-இதை வெற்றிலை பாக்கு, புகையிலை பாவிப்பவர்கள். அதைப் பத்திரமாக வைப்பதற்கு உபயோகிப்பர். இது ஒன்றினுள் ஒன்றை வைக்கக் கூடிய வகையில் 3 அல்லது 4 தட்டையான அமைப்புடைய வாய்திறந்த அமைப்பில், தனியான மூடியுடன் கூடியது. இடுப்பில் செருகக் கூடிய தட்டையாகவும், சிறிய அமைப்பிலும் நிறவோலைகளால் அழகிய வேலைப்பாடுகளுடன் இருக்கும். மூடு பெட்டி:- சாதாரண பல அளவுப்பெட்டிகளுக்கு பொருத்தமான மூடியும் இழைத்து, மூடியில் பனையீர்க்கால் வசதியாகத் திறந்து மூடக் கைபிடியும் வைத்திருப்பார்கள். வட்டில்:-பழையகாலங்களில் பயணங்களுக்கு, வேலைக்குச் செல்வோர் சாப்பாடு எடுத்துச் செல்ல பாவித்த சிறிய பெட்டி. நல்ல இளங்குருத்தோலையில் மிக நெருக்கமாக இழைத்தது. இலகுவில் இறுக்கம் குறைந்த கறிகள் வெளியேறாது. கழுவிக் கழுவிப் பல காலம் பாவிப்பர். சுளகு:- பனையீர்க்காலும், மட்டையாலும் பின்னுவது. அரைச் செவ்வக வடிவில் புடைப்பதற்கும், வட்டவடிவில் உணவுப்பொருட்களைக் காயவைப்பதற்கும் பல அளவுகளில் முடைவார்கள். கடகம்:- பனையோலை நார் கொண்டிழைப்பது, சாதாரண பனையோலைப் பெட்டிக்கும் கடகத்துக்கும் உள்ள வித்தியாசம் கடகத்துக்கு வெளிப்பாகம் நாரால் இழைத்து வாய்ப்பகுதிக்கு பலத்திற்காக தடிப்பான நார் பொருத்தியிருப்பார்கள். பாவனையிலும் கடகத்தின் உபயோகத்துக்கு சாதாரண பெட்டியைப் பாவித்தால் பிய்ந்து விடும். உ+ம்- மண், கல் அள்ளுதல். சும்மாடு என்பது பாரமான பொருட்களைத் தலையில் காவும் போது அழுத்தாமல் மென்மையாக இருக்க பழைய துணி, சால்வை, முந்தானைச் சேலை போன்றவற்றால் உடன் செய்வது. அதாவது வட்டவடிவமாக ஒரு சாண் விட்ட அளவில் சுருட்டுவது. இதை துணிவகையிலேயே செய்வர். தலைக்கு மெத்தென இருப்பதே நோக்கமும் தேவையும். பட்டை:- இளங்குருத்தோலையில் செய்வர். இது தோட்டத்துப் பயிர்களுக்குத் தண்ணீர் தண்ணீர் ஊற்றவும். கிணற்றில் இருந்து நீர் அள்ளவும் பாவிப்பர். சுமார் 1 கலன் கொள்ளக் கூடியவையும் செய்வர்.திருகணை:- கழிவு ஈர்க்கை ஒரு சாண் விட்டமுள்ள வட்டமாகச் சுற்றி, அதற்கு முறுக்கிய ஈர்க்கால், மேற்சுற்றுச் சுற்றுவர். பனை, சட்டி, குடம் உருளாமல் இருக்க உபயோகிப்பர். உறி:-திருகணைக்கு 3, 4 ஈர்க்கில் பின்னிய சுமார் 3′ நீளமான தொடுப்பு (கயிறு போல்) தொங்குப்படி அமைத்து சாப்பாட்டுப் பொருட்களை பூனை, நாயிடமிருந்து பாதுகாக்கப் பாவித்தார்கள். (வெண்ணெய் உண்ணும் கண்ணன் படத்தில் பார்த்திருப்பீர்கள்) உமல்:-பலையோலையில் இழைப்பது. இன்றைய பசுமதி அரிசிப்பை போல் இருக்கும். அன்று பொருள் காவப் பாவித்தார்கள். பிளா:-உடன் தேவைக்குப் பச்சையோலையிலும் பல காலப் பாவனைக்கு குருத்தோலையிலும் அரை முட்டைவடிவில் அமைப்பது. கிராமக் கோவில்களில் சித்திரைக் கஞ்சிக்கும் வயல் வேலை செய்யும் போது சாப்பிடவும் பாவிப்பர். சுடு சாப்பாடு பச்சையோலையை வேகவைக்கும் போது வரும் வாசமே! அருமையாக இருக்கும். குருத்தோலைப் பிளா கள்ளுத் தவறணைகளில் வைத்திருப்பர். தொன்னை:-பனையோலையில் உடன் பாவனைக்கு இழைக்கப்படும்;சிறு பெட்டிகள்; வழிபாடுகளுக்குப் பாவிப்பது. இந்தோனேசியா,தாய்லாந்து,கம்போடியா போன்ற நாடுகளிலும் வழிபாட்டில் இத் தொன்னைகள் முக்கிய இடம் வகுக்கின்றன. பறி:-மீனவர்கள் பிடித்த மீனைக் கரைக்குக் கொண்டுவர பாவித்த ஒடுங்கிய வாயுடைய பைபோன்ற அமைப்புடையது. நீற்றுப்பெட்டி:-பனையோலை,ஈர்க்குக் கொண்டிழைக்கப்படும் கூம்புவடிவுடையது;இதை உணவுப்பண்டங்களை அவிக்க, திரவப் பதார்த்தங்களை வடிக்க உபயோகிப்பர். பாய்கள்:- படுக்க உபயோகிக்கும் 5’x7′ பாய்கள், சூடடிக்கப் பாவிக்கும், பந்தலுக்கு விரிக்கும் 20’x 25′ களப்பாய்கள், பந்திக்கு விரிக்கும் 2’x30′பந்திப்பாய், பிற்கூறிய இரண்டும் முற்றாகப் பாவனையற்று விட்டது. முற்றலோலையில் பனாட்டுப் போட பனாட்டுப் பாயுமுண்டு. ஒரு தடவையே பாவிப்பர். தடுக்கு:-பிறந்த குழந்தைகளைக் கிடத்தப் பாவிக்கும் 3’x3′; சிறு பாய், குறிப்பாக எண்ணெய் பூசிக் காலை இளஞ் சூரியக் குளியலுக்குப் பிள்ளையை இதில் கிடத்துவார்கள். தட்டி:-அன்றைய வீடுகளுக்கு, பாய், மட்டை, சலாகை கொண்டு செய்யப்படும் மறைப்பு. குட்டான்:-பனையோலையில் இழைக்கப்படும். பொதியாக்கக் கொள்கலன். இதைப் பனங்கட்டிப் பொதியாக்கத்துக்குப் பயன்படுத்துவார்கள்.3″x6″ முதல் 1/2″x1″ அளவில் கூடச் செய்வார்கள். நெட்டி:-அளவாக வெட்டிய பனையோலை; கரண்டிகள் போல் சுடு களி உண்ணப் பயன்படுத்துவர். விசிறி, தொப்பி, கிலுகிலுப்பை:- முழு வடலி ஓலையில் விசிறி செய்வார்கள். வார்ந்த ஓலையால் தொப்பி சிறுவர் விளையாடக் கிலுகிகுப்பை இழைப்பார்கள். விளக்குமாறு:- கழிவு ஈர்க்கினால் செய்யப்படும். அன்றைய சமையலறை இருந்து கூட்ட இச்சிறிய விளக்குமாறு மிக உதவியது. வாழ்விடங்கள்:-வீடு, முதலான கட்டிடங்களின் கூரைகளின் மரப்பகுதிகளான வளை, தீராந்தி, பாவுமரம், சலாகை என யாவும் பனைமரத்தைத் தறித்து, அளவாக வெட்டிச் சீவி எடுப்பார்கள். 40′ நீளமானமரத்தில் சுமார் 25′ வைரமான பகுதியாக பாவுமரமாகவும் ஏனையபகுதில் சுமார் 10′ வைரம் குறைந்த பகுதி சலாகை யாக்கப்படும். துலா:- ஓர் முழுமரத்தின் வைரப்பகுதில், துலாச்செய்து அன்று, கிணற்றில் தண்ணீர் அள்ளினர். நீர் இறைப்பு இயந்திர வருகையின் பின் படிப்படியாக வழக்கொழிந்து போய்விட்டது. இறங்கு துறைகள்:- குறிப்பாக தீவுப்பகுதிகளில் இறங்கு துறைகள் கல்லாலும் மண்ணாலும் அமைத்தபோதும், அதன் படகுகள் முட்டும் நுனிப்பகுதி பனைமரத்தாலானதாகவே காணக்கூடியதாக இருந்தது. காரணம் ஏனைய மரங்களிலும் பனைவைரம் உப்புநீரில் உழுத்துப்போகும் தன்மை மிகக் குறைந்தது. அதனால் நீண்ட காலம் பயனில் இருக்கக் கூடியது. வண்டில் துலா:-வண்டிலின் அடிப்பாகத்திலமைந்துள்ள நீண்ட நுகத்தடி பொருத்தும் பகுதி. இதுவும் பனை வைரத்திலேயே அமைப்பார்கள் அதன் உறுதிக்காக. தேர் சப்பறம்:- கோவில் கட்டுத் தேர், சப்பறத்தின் சகடைக்கு மேற்பகுதி அடிப் பனை வைரங்களாலே செய்யப்பட்டவை, பாவித்தபின் கழட்டி வைப்பர், அவற்ருக்கு வயதெல்லை இல்லை. நிழலில் இருப்பதால் பலகாலம் பாவனையில் இருக்கும். நெருப்புத் தவிர வேறு எதிரி இல்லாதது. பிள்ளைத் தண்டு:- இதுவும் கோவில்களில் விக்கிரகங்களை விழாக்காலத்தில் திருவாசியுடன் கூடியருப்பில் வைத்து வாகனங்களுக்கோ தேருக்கொ சுமந்து வரும் சுமார் 2.5 மீட்டர் நீளமுள்ள பனை வைரத்தில் உருளையாகச் சீவப்பட்டது. சுமார் 200கிலோ நிறை தாங்கக் கூடியது. எந்தக் கோவிலிலும் குறைந்தது ஒரு சோடியாவது இருக்கும். மரக்குத்திகள்:-அன்று பாரமான பொருட்களை இடம் பெயர்க்க உருளையாக பனைமரத் துண்டுகள் பாவிப்பர். மரவேலை:- குறிப்பாக ஆணிக்குப் பதிலாக பொருத்துக்களுக்குச் சீவிய பனைவைரம் பாவிக்கப்பட்டது. கொட்டுப்பனை:- எங்கள் நாட்டுப் பச்சைக்கிளிகளும், மைனாக்களும் தம் பாதுகாப்பான வாழ்விடங்களாகத் தேர்வு செய்தது. இக் கொட்டுப்பனைகளே!!!(இறந்த பனைகள்) விறகு:- பனையின் சகல பாகங்களும் விறகாகப் பாவிக்கப்படும். ஓலை, மட்டை, பன்னாடை, கொக்கரை, பாளை, மூரி, ஊமல், பழுதடைந்தமரம் யாவும் எரிக்க உதவும். எரிபொருட் செலவைக் குறைத்தது. பசளை:- பனையோலை முதல் அத்தனை பனைக்கழிவுகளும் உழுத்தால் நல்ல இயற்கைப் பசளையே! சுற்றுச் சூழலுக்கு எந்த மாசும் ஏற்படுத்தாதது. விவசாயத்தில் ஈழத்தில் பெரும் பங்கேற்றது. பனைக் கழிவுகள்.
 10. அகதிகளை வரவேற்று பாதுகாக்கும் அதேவேளை, அகதியாக ஆக்குபவர்களுக்கு ஆயுதங்களும் வழங்கிப் பொருளையும் தேடும் பலே கில்லாடி அரசுகளில் பிரித்தானியாவும் ஒன்று.
 11. அன்று மனிதர்கள் இறக்க ஆயிரம் சாட்டுகள் உண்டு ஆயிரம் நோய்கள் உண்டு இன்று மனிதர்கள் இறக்க ஒரே ஒரு சாட்டு உண்டு ஒரே ஒரு நோய் உண்டு. அதுதான் கொரோனா.
 12. சாடிக்குள் மூடிவைத்த பூதங்களைத் திறந்துவிட்டதால் அவை வெளியேவந்து செய்த பல அட்டூழியங்கள் பற்றிய பாப்பாக் கதைகளும் பல உண்டு. இந்தக் கனிமங்களைப் பூட்டி வைத்திருக்கும் பூமியைத் திறந்துவிட்டு, அவை வெளியே வந்தபின் அவற்றை முறையாகப் பாதுகாக்கத் தெரியாததோ அன்றித் தவறியதே, அவை இன்று இயற்கையின் இயல்பான செயற்பாடுகளை மாற்றிப் பூமியையும் அழிவுக்கு உள்ளாக்கி வருகிறது. இது இப்படியே போனால் இந்தப் பூமிக்கோளில் உயிர்கள் உருவம் பெறும் நிகழ்வுகள் வெகுவிரைவில் இல்லாது போய்விடும்போல் தெரிகிறது.
 13. சீலையை வித்துச் சீலா மீன் வாங்கு என்று ஊரில் சொல்வார்கள். இனிமேல் சிறீலங்காவை வித்து சீனாவை வாங்கு என்று சொல்வார்களோ.....
 14. கோபமாய் பேசின..... குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்கோறு எவன் சொன்னது? அந்தச் சிந்தனை எங்களை அவமானப்படுத்தும் இழிய சிந்தனை. விளக்கம் கேட்ட கடவுளிடம் அவை விளக்கின: எங்கள் இனத்திலிருந்து மனிதன் வந்தான் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது! ஏனென்றால்....!! குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து உளறிக்கொட்டி, மனைவி மக்களைப்போட்டு உதைப்பதில்லை. எந்த ஒரு குரங்கும் தன் மனைவியைத் தவிக்கவிட்டு ஓடிப்போனதில்லை. தன் குட்டியைப் பட்டினி போட்டதில்லை. தாறுமாறான வாழ்க்கை நடத்தியதில்லை. தற்கொலை எதுவும் செய்து கொள்வதில்லை. எந்த ஒரு குரங்கும் நிலங்களைச் சுற்றி வேலிபோட்டுச் சொந்தம் கொண்டாடியதில்லை. ஈட்டி, கத்தி. துப்பாகிகளை ஏந்திப் போராடியதில்லை. கூட்டம் கூட்டமாய்க் கொன்று போட்டதில்லை. அணுகுண்டு போட்டு நகரங்களை அழித்ததில்லை. எந்த ஒரு குரங்கும் கண்டபடி புகையைக் கக்கி மரங்களை வெட்டி இயற்கையைக் கோரப்படுத்தியதும் இல்லை. பூமியை வெப்பப்படுத்தியதும் இல்லை. எங்களை அவமானப்படுத்தும் அந்தப் பொய்க் கண்டு பிடிப்பை உடனே தடைசெய். குரங்குப் புத்தி. கழுதைப் புத்தி. நாய்ப் புத்தி. இதெல்லாம் நல்ல புத்திதான். அந்த மனிதப் புத்திதான் சரியில்லை... Suryan FM Radio
 15. நான் பாடையில் என்று நுணிப்புல் மேய்ந்துவிட்டேன். மன்னிக்கவேண்டும் புத்தர் பெருமானே..
 16. பேயை விரட்டும் சக்திபடைத்த உன்னால் இந்தப் பொலீசாரை விரட்ட முடியவில்லையே.....! என்னடா சாமியார் நீ.....??
 17. தமிழனுக்குத் தமிழன்தான் எதிரி. இது மாறாதவரையில் இந்த உலகின் மண்ணில், அவனுக்கு எங்குமே சொந்தம் கிட்டாது. கிட்டினாலும் ஆள்பவன் வேறு இனத்தவனாகவே இருப்பான்.
 18. சிறீலங்கா அரசு இனிப் பெரும் வளர்ச்சியைப் பெறும். ஏனெனில், கழிவு, குப்பைகள் எல்லாவற்றையும் கூட்டி எடுத்து உரமாக்கி அரசுக்கு ஊட்டப்படுகிறதே!!
 19. இன்று பிலவ வருடத்தில் வந்த ஆடிமாதத்தின் முடிவுநாள் 32. இந்த ஆடியில் வரும் அமாவாசை விரத நாளில் மிக முக்கியத்துவம் பெறுவது காற்று ஊட்டியன் காய், இந்தக் காயை காத்தோட்டிக்காய் என்றும் பேச்சுவழக்கில் கூறுவார்கள். தாவரங்களுக்கும் உயிருண்டு. ஆகவே அந்தத் தாவரங்களைக் கொன்று தின்பதால் ஏற்படும் பாவங்களைப் போக்குவதற்காக, மிகவும் கசப்பான இந்தக் காயை வருடத்தில் ஒரு நாள், அதாவது ஆடிமாதத்தில் வரும் அமாவாசை அன்று பொரித்துச் சாப்பிட்டுத் தங்களை வருத்திக்கொள்வார்கள் சைவர்கள் என்ற ஐதீகமும் உண்டு. பஞ்ச பூதங்களால் உருவான எங்கள் உடம்பு அவற்றின் தாக்கங்களாலும் அல்லல் படுவதுண்டு, ஆகவே அந்தத் தாங்களிலிருந்து விடுபடுவதற்கு, எம் முன்னோர்கள் கண்டுபிடித்து, எமது ஆரோக்கிய வாழ்விற்கு காட்டிய வழிகள் வியப்பையும், ஆச்சரியத்தையும் அளிக்கின்றன. காத்தூட்டியன் காய் இன்று சந்தையில் ஒருகாய் 20-50 ரூபாய்களிலும் ஒரு கிலோ 1300-2500 ரூபா வரையிலும் விற்கப்படுகிறது #ஆடிஅமாவாசை தினம் மற்றும் அவற்றிற்கு முன்னைய தினங்களில் மட்டுமே இவற்றினை சந்தைகளில் காணலாம் காத்தூட்டியன் காயினை ஆடி அமாவாசை தினத்தன்று இந்துக்கள் பயன்படுத்துவதன் நோக்கம் என்ன என்பதை விளக்கவாரியாக அறிந்து கொள்ளலாம் வாருங்கள் ... #காத்தூட்டியன்காய் ஆடி அமாவாசை விரத நாளில் மிக முக்கியம் பெறும் பொரியல். ஆடி அமாவாசையும் காற்று+ஊட்டியன் காயும் ஆடி அமாவாசைக்கு எல்லோரும் காத்தூட்டியன் காய் என்று சாம்பிராதாயத்துக்காக வாங்கி சமைப்பார்கள். அதன் முக்கியத்துவமும் சரியான விளக்கமும் இல்லாமையினால் எனது சிறிய விளக்கம்.. ஆடி மாதம் தட்சனாய காலம் ஆரம்பித்து விட்டது அதாவது சூரியன் தெற்கு நோக்கி செல்கிறது /விலத்தி செல்கிறது என்று மற்றவர்களால் குறிப்பிடப் பட்டாலும் சூரியன் அசைவதில்லை பூமியின் சரிவு சற்று வடக்கு நோக்கித் திரும்புவதாக எடுத்து கொள்ளலாம். அத்துடன் 6 பருவகாலங்களில் முதுவேனில் காலம் கார்காலத்திற்கு மாறும் காலம் ஆகும். எனவே இக்காலத்தில் உடலின் மூன்று தாதுகளான வாத, பித்த, கபம் குழப்பமடைந்து இருக்கும். உடல் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும். அதனால் தான் ஆடி மாதத்தில் நோய் கிருமி தாக்கம் வழமையை விட அதிகமாக காணப்படும். இதனாலயே இம் மாதம் அம்மனுக்குரிய மாதம் என வேப்பிலை மஞ்சளின் பங்களிப்பு கூடிய மாதமாகவும் உள்ளது.(கிருமி தாக்கம் குறைப்பதற்காக) காத்தூட்டியன் காய் அதிகளவு கைப்பு சுவை கொண்டிருக்கும் அதன் பஞ்ச பூத உள்ளடக்கம் வளி +ஆகாயம் # இது வளி தோசமான வாத தோசத்தை அதிகரிக்கும் தன்மை உடையது, வாத தோசத்தின் சிறப்பு மற்றைய 2 தோசங்களையும் சமன் செய்ய கூடியது அதனால் பித்த, கப தோசத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். காத்தூட்டியன் காய் ஆடி மாதத்திலே தான் காய்க்கும் சிறப்புடையது. இந்த மாதம் முழுவதும் இதை சமையலில் பயன்படுத்தலாம் ஒரு முறையாவது பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஆடி அம்மாவாசைக்கு பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. அனைவரும் பயன் படுத்தி இயற்கையுடன் சேர்ந்து ஆரோக்கியமாக வாழ்வோம். கரவை வெல்லன் விநாயகர்
 20. இலங்கை சுந்திரமடைந்த நாளின் பின்னர் இனக்கலவரம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட முதலாவது தமிழின அழிப்பிற்கும், தொடரும் அழிப்புகளுக்கு எண்ணை வார்க்கும் இந்தியாவின் செயற்பாடுகளும் மனதில் சொல்லொன்னாத் துயரங்களை ஏற்படுத்தி வருகிறது. அதில் ஒரு துயரை நீக்கிவிடுவது போன்ற இந்தச் செய்தி சிறிது ஆறுதல் தருகிறது. இது தவறு. குற்றவாளிகளாகக் காண்பிக்கப்பட்ட... என்பதே சரியானது.
 21. வயதானவர்கள் தவறி விழுவது ஏன்....????? பொதுவாக 65 வயதிற்குமேல், பணி ஓய்வும் பெற்றுக்கொண்ட பின்னரே மனிதர்கள் வயதானவர்களின் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள். பாவம் சுமந்திரன் தன் பிரச்சனைகளையும், ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளையும் சுமந்து சுமந்து தனது 57வது வயதில் விரும்பியோ, விரும்பாமலோ வயதானவர்களின் பட்டியலில் தன்னைச் சேர்த்துவிட்டாரே.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.