Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. ரசோதரன் கதை. உறவுகள் ஆகா ஓகோ என்று அடித்துப் பிடித்து ரசிக்கிறார்கள். நானும் ரசிப்போமே என்று கதையைப் பார்த்தேன், அம்மாடியோ கதை அப்படி நீளம். அளந்து பார்த்து இறங்கிப் போவதற்குள் சிட்னியில் இருந்து லொஸ்சேஞ்சல் போய்விடலாம் என்று தோன்றியது. என்றாலும் ஆவல் விடவில்லை, கோழிப் பொரியல் வாங்கி துண்டு துண்டாக தக்காழிக் குழம்பில் தொட்டு உண்பதுபோல் உறவுகளின் ஊட்டத்தையும் தொட்டுத் தொட்டு கதையை உண்டேன். ஆனந்தம் ஆனந்தம், அதுவே சுவையை அப்படி ஊட்டியது. “டேய் கஞ்சப் பயலே வறுத்த முழுக் கோழியை வாங்கித்தாடா” நாக்கு வாட்டி எடுத்தது. தாள் சில்லறையாகி சில்லறையும் தீர்ந்தது, முழுக்கோழி வாங்க நான் எங்கே போவேன்? பணிசெய்து பணம் உழைக்க முதுமை விடுமா???🥵
  2. தமிழ்மண் பாதுகாக்க போராடிய தலைவனையும் போராளிகளையும் மண்கவ்வ வைப்பதில் சிங்களத்துடன் முனைப்புடன் செயல்பட்ட ஒரு கட்சியின் ஊடகப் பேச்சாளரின் நாடகம் அரங்கேற முயல்கிறது.🤔
  3. எல்லா அழிவுகளும் ஆபத்துகளும் அமெரிக்காவிலேயே ஏன் வருகிறது என்ற யோசனையோடு நித்திரை கொண்டேன். கனவில் ஒரு சாத்திரி வந்தார், தற்போது அமெரிக்கர் என்று வாழும் மக்களால் கொல்லப்பட்ட பூர்வ அமெரிக்க குடிகளின் ஆவிகள் இன்னமும் அமெரிக்காவை சுற்றி வருவதாகச் சொன்னார். இப்போது இலங்கையிலும் அடிக்கடி பூமி நடுக்கம் வருகிறதாம். ஏன்??????
  4. மன்னரும் நானே மக்களும் நானே! மரம், செடி, கொடியும் நானே! சொன்னவன் பொலிசு, சொல்பவன் பொலிசு. துணிந்து நீ போதை ஏற்று.🤪 சிறீமாவோ காலத்தில் எட்டாம் வகுப்புடன் பொலிஸ் படையில் இணைக்கப்பட்டோரும், யெயவர்த்தன காலத்தில் இணைக்கப்பட்ட சிறைக் கைதிகளும் இன்னமும் சேவையில் இருக்கிறார்கள்போல் உள்ளது.🤔
  5. goshan_che குட்டுப் பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப் படவேண்டும் என்று சொல்வார்கள். நான் யாழ்களத்தில், தங்கத்தால் மகுடமே சூட்டிவந்துள்ள வரும் உறவுகளில் ஒருவரின் பத்து விரல்களாலும் ஆசீர்வாதமே பெற்றுவிட்டேன்.🙌 🙌 🙏
  6. அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித் தரள நீர்வடிய கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா? கயவனை காலால் மிதித்து இறையும் ஆடியது நல்லோர் இடரின்றி வாழ்வதற்கே.🙏
  7. அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்ட நிலையில் அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டிருந்தன. அந்த கம்பிகள் அண்மையில் திருட்டு போன நிலையில் , குறித்த பகுதி இடிந்து விழுந்துள்ளது. கம்பித் திருடர்களைக் கண்டுபிடித்து மின்சாரக் கம்பத்தில் கட்டித் தூக்கவேண்டும். இலங்கையில் பாரம்பரியங்களை பாதுகாக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சை அரசு உருவாக்கவேண்டும்.
  8. தலைவர் சூரியதேவன். இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன். சூரியன் உள்ளவரை இந்தப் பூமியில் இருப்பார். கற்பனை என்பது மனதில் புதிய கருத்துக்கள், பொருள்கள், உருவங்களை உருவாக்கும் திறன் கொண்டது. இது கதைகளை உயிர்ப்பிக்கவும், உணர்ச்சிகளைத் தூண்டவும், படிப்பவர்களை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்தவும் உதவுகிறது.😌
  9. கவலை வேண்டாம் சாத்தான் கீரிமலையில்தான் ஒருவரின் இறுதிப் பூசை நிகழ்ச்சி நடைபெறும்.
  10. உள்ளூர் ஊடகங்களில் காட்டப் பட்ட வீடியோக்கள் இன்னும் இணையத்தில் இருந்தால் அவற்றை நீங்கள் ஏன் வெளியிடவில்லை? வெளியிட்டால் உண்மைகள் வெளிப்பட்டு விடுமே என்ற பயமா? அதனால் நீங்கள்தான் இறுக கண்களை மூடிக் கொண்டிருப்பதுபோல் தெரிகிறது.😣
  11. பிரபாகரன் போன்ற தோற்றமுடைய சிங்கள இராணுவ வீரர் குறித்த கோட்பாடுகள் உள்ளன, 2010 இல், ஒரு விடுதலைப்புலிகள் ஆதரவு இணையதளம், பிரபாகரனின் சடலம் என்று காட்டப்பட்ட ஒன்று ஒரு சிங்கள இராணுவ வீரருடையது என்றும், அவர் பிரபாகரனைப் போலவே தோற்றமளித்தார் என்றும் கூறியது.
  12. கூட இருந்து குழி பறிப்போர், காட்டிக்கொடுப்போர், துரோகிகளுக்கு கிடைக்கும் தண்டனைகள் அவர்கள் சார்ந்தவர்களையும் நோகடித்து வேதனைப்படுத்துவதைத் தவிர்க்க முடியாது. ஒரு இனத்தையே அழிவிலிருந்து பாதுகாக்க தன் உயிரையே துச்சமென எண்ணிப் போராடும் ஒரு போராளிகள் இயக்கத்தைத் தூற்றுபவர்களை உலகமே தூற்றும்.
  13. வாலில்லா நாய்க்கு மனதுக்குள் ஒரு கொண்டாட்டம், முதுமொழி நினைவுக்கு வருகிறது.😆
  14. அது பிரபாகரனே என்று அறிவித்த சிங்களப்படை அதிகாரிகளை.
  15. அந்த வீடியோவை நீங்கள் பார்க்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்.
  16. கருனா அந்த உடலைப் பார்த்ததும் “மோடன்கள்” என்று கூறியதை வீடியோவுடன் பார்த்த ஞாபகம் உள்ளது. வேறு பலரும் இதனைப் பார்த்திருப்பார்கள் என நம்புகிறேன்.
  17. அன்று பல பேய்கள் அரசு செய்தன, சாத்திரங்கள் பிணம் தின்றன.🫣
  18. “இது முசுலீம் மக்களையும் அழைக்கலாம் தானே” என்று கேட்டால் சிறப்பாக இருக்கும்.
  19. டாக்டர் அர்ச்சுனாவைத் தூற்றத் தூற்ற அவர் உயர உயரப் பறக்கிறாரே!
  20. ஆழ்ந்த இரங்கல்! ஆத்மா இறைவனடி சேரட்டும்!!🙏
  21. கடதாசியால் மட்டும் துடைப்பதை விடவும் முதலில் கழுவி பின்பு கடதாசியால் துடைப்பது மனதுக்கு நிம்மதியும் ஆறுதலும் தருகிறதே!
  22. அனேகமாக பெண் சாரதிகள் இனிமேல் மேக்கப் போடாமல் வண்டி ஓட்டமாட்டார்கள் நம்பலாம்.👩‍🎤
  23. சம்பந்தன் இப்ப உயிருடன் இருந்திருந்தால் எதிராக இரண்டு வாக்குகள் பதிவாகி, வாக்கு என்ற ஒருமை நீங்கிப் பன்மையாகி, அதற்கொரு மரியாதை கிடைத்திருக்கும். 🤔

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.