Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Paanch

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  6,795
 • Joined

 • Last visited

 • Days Won

  17

Everything posted by Paanch

 1. 1956 ஆம் ஆண்டு சூன் 5 ஆம் நாள் இலங்கை நாடாளுமன்றத்தில் "சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி" என்ற சட்டம் நிறைவேற்றப் படுவதற்கு முன் வட கிழக்குத் தமிழ் பாடசாலைகளில் சிங்களப் புத்த பிக்குகளும் ஆசிரியர்களாக வந்து சிங்களம் படிப்பித்தார்கள். தமிழ் மாணவர்களும் ஆர்வத்தோடு சிங்கள மொழி கற்றார்கள். அரச கருமமொழிச் சட்டத்தை நிறைவேற்றிச் சிங்கள மொழி தமிழர்மீது திணிக்கப்பட்டதால் அந்த மொழி கற்றல் தடைப்பட்டது. பலாத்காரத்தை யாரும் விரும்புவதில்லை.
 2. தமிழனை கொன்றழித்து வென்ற இராணுவம் என்று அரச ஊதுகுழல்கள் அனைத்திலும் திரும்பத் திரும்ப ஒலிக்கவிட்டால் சிங்கள மக்கள் களிப்போடு குத்தாட்டம் போடுவார்கள்.
 3. அநியாயத்தையும் ஆணித்தரமாகக் கதைக்கக்கூடிய சுதந்திரம் கொண்ட ஒரு களம் யாழ்களம்.
 4. உண்மைதான். ஆனாலும் நான் எனது உணர்வைத்தான் வெளிப்படுத்தினேன். பிறரைச் சங்கடப்படுத்த அல்ல.
 5. இராசபுத்திரன் சாணக்கியன் என்று வந்திருந்தால் சங்கடம் ஏதும் வந்திராது. அந்த 'இரா' சம்பந்தரையும் ஞாபகப்படுத்தி விட்டதுதான் சங்கடம்.
 6. ஞானப்பிரகாசம் பிரகாசு என்ற மாவீரருக்கு வீர வணக்கங்கள். ஆயுதம் கொண்டு போராடி மக்களை வாழ்விக்க முயன்று மடிந்த வீரர்கள் மாவீரர்கள் என்றால், உடலால் ஊனமாகியபோதும், அறிவு ஆயுதம் கொண்டு போராடி மக்களை வாழ்விக்க முன்நின்று மறைந்த ஞானப்பிரகாசம் பிரகாசு அவர்களும் மாவீரர்தான்.
 7. பெயருக்கும் பொருத்தமான ஒரு தமிழர். வாழ்த்துக்கள். அந்த 'இரா' தான் வேறெதையோ நினைவூட்டிச் சங்கடப்படுத்துகிறது.
 8. பரசிவன் கழுத்திலிருந்து சுமந்திரன் சொல்கிறார். அவருக்குப் பாலூற்றி வணங்கும் சில பக்தகோடிகள் யாழ் களத்திலும் உண்டு. அவர்களுக்கு ஆமா போடாவிட்டால்..... கந்தையா அவர்களே! உங்கள் கருத்துக்களும் கந்தலாகும்.
 9. பெளத்த அடிப்படைவாதமான உள் சட்டி, இசுலாமிய அடிப்படைவாதமான புறச்சட்டியைப் பார்த்துக் கறுப்பு எண்டு சொல்லுது.
 10. பாவம், அவர் இப்பதான் வந்தவர் (Just -in) யோசிக்க விடுங்கோ சாமியார்.
 11. நான் செய்தியை இணைக்கவில்லையே படத்தைத்தானே இணைத்தேன். இந்தத் திரி ஒரு பகிடியைப் பதிந்து போட்டதாக எனக்குத் தெரிந்தது. பகிடியில் பலதும் பத்தும் வருமே ஐயா.!
 12. ஏன்? அந்தப் பெண்ணுக்கு அவரைப் பரிசாகக் கொடுக்கவா....?? கோசான்
 13. ஆண் வழி, பெண் வழி. இந்த வழியில் நிற்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவென்ன? இந்த உறவை அறியத்தந்தால் அறிந்தவற்றைக் கொண்டு உதவலாம் என எண்ணுகிறேன்.
 14. எங்களுக்கு அம்மா வெறும் தேத்தண்ணி ஒருகையிலும், கொஞ்சச் சீனியை மறுகையிலும் அம்மா தருவா. நான் கண்ணை மூடு மட மட வென்று குடித்துவிட்டு கடைசியிலை இருக்கும் கொஞ்சத் தேத்தண்ணியிலை மற்றக்கையிலுள்ள சீனியைப்போட்டு இனிக்க இனிக்கக் குடித்து மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது. மட்டக்கிளப்பை நினைக்கத்தான் எனக்குப் பெரும் கவலையாக இருக்கிறது. அங்குதான் சீனி போடுபவர்கள் அதிகம். போட்டு அடி உதை வாங்கியவர்களையும் கண்டுள்ளேன். தனிக்காட்டு ராசாவுக்கும் அனுபவம் இருக்கலாம்.
 15. முதலையின் வாயிலிருந்து தப்பினால்..... 'என் தம்பி இருக்கிறான் பார்த்துக்கொள்வான்' என்று முதலை சொல்லும் என ஒரு பழமொழி உண்டு. பல்லிதான் அதன் தம்பி. முதலையும் பல்லியும் போன்ற உறவுகளைக் கொண்டதே இலங்கையை ஆண்டுவரும் சிங்களக் கட்சிகள். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
 16. நீங்கள் ஆர்வமாக இருந்தாலும், ஆரவாரம் காட்டினாலும் எதையும் புடுங்க முடியாது. அன்று அரச நிர்வாகத்தில் தமிழர்களின் பங்கு ஓரளவுக்கேனும் இருந்ததால், இலங்கையைப் பார்த்து சிங்கப்பூரே வியந்தது.
 17. முயற்சி திருவினையாகும். அது எந்தக் களத்திலும், எந்தக் காலத்திலும்.
 18. இந்த அறிவித்தல்மூலம் அந்த வீரமங்கையின் ஏழ்மை நிலை புரிகிறது. குழந்தை சுகதேகியாகிப் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். அந்த தொண்டு நிறுவனத்திற்கு நன்றி.
 19. By Shana NO COMMENTS கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ம் திகதி அதிகாலை 4 மணி வரைக்கும் இந்த ஊரடங்கு அமுல்செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவின் போது 19 செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, கீழ் காணும் 19 செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது 1. சுகாதார சேவைகள் 2. பொலிஸ் நிலையங்கள் 3. கிராம அலுவலகர்கள் 4. அனைத்து துறைகளைச் சேர்ந்த களவிஜய அதிகாரிகள் 5. உள்ளுராட்சி அமைப்புக்கள் ( தேவையான ஆளனியுடன் இயங்க முடியும்) 6. நாளாந்த பயன்பாட்டுக்கான தேவைகள் (மின்சாரம், நீர், தொலைத்தொடர்பு விநியோகம், எரிவாயு விற்பனை நிலையம், பெற்றோல் நிரப்பு நிலையம், மோட்டார் சைக்கிள் திருத்துமிடம், சாலை ,கட்டுமானப் பணி) 7. விவசாயம், கால்நடை மற்றும் மீன்பிடி ( மாவட்ட எல்லைகளைத் தாண்டாது) 8.பலசரக்கு கடைகள், பல்பொருள் அங்காடிகள் ஒன்லைன் விநியோகத்தில் செயற்படல் 9. அத்தியாவசியப் பொருட்கள் விநியோகஸ்தர்கள் 10.வெதுப்பகங்கள் (நடமாடும் விற்பனை) 11. வங்கிகள் (மட்டுப்படுத்தப்பட்ட நிதி பரிவர்த்தனை) 12. போக்குவரத்து – அத்தியாவசிய / பிற அனுமதிக்கப்பட்ட, நோயாளிகளின் அவசர தேவை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 13. இறுதிச் சடங்குகள் – 24 மணிநேரத்தில் மேற்கொள்ளுதல், குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் (கொரோனா அற்ற மரணங்களின் போது மாத்திரமே) 14. ஓரே நேரத்தில் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியேற அனுமதிக்கப்படுவர் 15. 65 வயதிற்கு மேற்பட்டோர், நாற்பட்ட நோயாளிகள் மருத்துவ தேவைகளை தவிர்த்து வெளியில் செல்ல முடியாது 16. தனிப்பட்ட கூட்டங்களை நடாத்த முடியாது 17. தினசரி ஊழியம் பெறும் தொழிலாளிகள் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் 8. சுற்றுலா தொடர்பான செயற்பாடுகளுக்கு மேலே இருந்து விலக்கு அளிக்கப்படும் 19. மாவட்ட, உள்ளூர் கொவிட் குழுக்களால் தீர்மானக்கப்பட்ட முடிவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 20. முற்றிலும் உண்மை. முந்தி வந்த செவியைப் பிந்திவந்த கொம்பு மறைப்பது இயல்பு. ஆனால் கொம்பு முறியக்கூடியது, முறியும். செவி முறியாது மடித்தாலும் நிமிர்ந்துவிடும்.
 21. நானும் சிறுவயதில் பனை ஓலைப்பாய், கடகம், நீற்றுப்பெட்டி, போன்றவற்றை இழைத்த அனுபவம் உண்டு. ஆனால், யு வடிவில் மருத்துவ சோதனைக்குழாய் போல இழைக்கப்பட்ட வெங்காயப் பையைக் கண்டதில்லை. யாரிடமாவது அதன் படம் இருந்தால் தயைசெய்து போட்டுவிடுங்களேன்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.