Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Paanch

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  6,795
 • Joined

 • Last visited

 • Days Won

  17

Everything posted by Paanch

 1. விரக்தியடையும் மனங்கள் மேலும் விரக்தியடையாமல் உறுதிப்படவைக்கும் ஒரு பதிவு.
 2. மறுக்க முடியாத உண்மைதான் நிழலி அவர்களே! "கறையான் புற்றெடுக்க பாம்பு குடிகொள்ளும்". எங்கள் தமிழ் மண்ணில் பாம்பு குடிகொள்ளுது, குடிகொள்வதை எந்தக் கண்ணாடி கண்ணில்படாது மறைக்கிறது.??
 3. போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் சுமந்திரனுக்கே. ஆனாலும் ஒரு இனத்தைக் கொலைசெய்தவர்களுக்கும், கொள்ளையடித்தவர்களுக்கும் சார்பாகச் செயல்படுவதானது அதிகமாகத் தூற்றல் செய்யவே சொல்கிறது.
 4. அப்பன் இரந்துண்ணி ஆத்தாள் மலைநீலிஒப்பரிய மாமன் உறிதிருடி-சப்பைக்கால்அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத் தானுக்கிங்(கு)எண்ணும் பெருமை யிவை இயற்கையின் படைப்பில் எந்த உந்தலுக்கும் ஒரு பின் உந்தல் இருக்கும். அது கடவுள் என்றாலும், அவருக்கும் இருக்கும் என்பதைத் தைரியமாகச் சொல்லும் உரிமை, சைவ சமயத்தவரைத் தவிர வேறெந்தச் சமயத்தவருக்கும் இல்லை.
 5. இலங்கையில் இதுவரை நடைபெற்ற ஒவ்வொரு இனக்கலவரங்களிலும், பெரும் பொருளீட்டி இலாபம் கண்ட பலர் இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நாடறியும். ஆகவேதான் இன்னொரு கலவரம் எப்போது ஏற்படும் என்று எதிர்பார்த்து நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு இருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.
 6. அரசும் நானே நீதியும் நானே காவலும் நானே சொன்னது மகாவம்சம் இப்போ சொல்வது கோத்தா போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் புத்தருக்கே பரித்ராணய சாதூனாம் விநாசாய சத்ருதாம் தர்ம சம்தாபனார்த்தாய ரிச்சாட் பதியுதீன் யுகே யுகே.
 7. அடைக்கலம் தேடி வருவோரை அடித்து விரட்டும் அவுத்திரேலியா, கடத்தப்பட்டு வரும் திருட்டுப் பொருட்களை காசுகொடுத்து வாங்குகிறது.
 8. பச்சை பச்சையாகத் தொடர்ந்து காய்த்து யாழைக் குளிரவைக்கும் தோழர் புரட்சிக்கு வாழ்த்துக்கள்!!
 9. நினைப்பும் அதற்கான பழமொழியும் சரிதான், ஆனால் பிள்ளையான் பிரமாதமாகப் பிளைக்கிறாரே.???
 10. தமிழ் தேன் தேன் தேன் என்று தேனைமட்டுமா சிந்தும்...... டும் டும் டும் என்று கட்டியமும் கூறும். வாழ்த்துக்கள்!! தமிழ்நிலா.
 11. அன்புத் தம்பியை அணைத்தேன், தமிழ்சிறியை நினைத்தேன், நிலாமதியின் பகிர்வை ரசித்தேன், சுவியின் சுவையை வாசித்தேன். என் நன்றியையும் தேன் சொட்டத் தெரிவித்தேன்.
 12. ரீத்திசிற் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.!! இந்தியாவிலிருந்து துரத்தப்பட்ட காடையர் கூட்டமொன்று இலங்கைவந்து இன்றைய இலங்கையை ஆட்சிசெய்வது போலவே, இங்கிலாந்திலிருந்து துரத்தப்பட்ட காடையர் கூட்டமொன்றுதான் இன்றைய அவுத்திரேலியாவை ஆட்சி செய்கிறது. இவர்களிடம் அனுதாபத்தை அன்றி மனிதத்தையோ எதிர்பார்க்க முடியாது.
 13. *தமிழுக்கு இனிமை என்றொரு பெயர் உண்டு காரணம் ஏன் தெரியுமா?*.. தேன் கொண்டு வந்தவனை பார்த்து, நேற்று ஏன் தேன் கொண்டு வரவில்லை? என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவன் கூறிய இனிமை பொருந்திய பதில்.... ஐயா நீங்கள் கூறியதை நினைத் தேன் ! கொல்லிமலைக்கு நடந் தேன்! பல இடங்களில் அலைந் தேன்! ஓரிடத்தில் பார்த்தேன் ! உயரத்தில் பாறைத் தேன்! எப்படி எடுப்பதென்று மலைத் தேன்! கொம்பொன்று ஒடித் தேன்! ஒருகொடியை பிடித் தேன் ! ஏறிச்சென்று கலைத் தேன்! பாத்திரத்தில் பிழிந் தேன்! வீட்டுக்கு வந் தேன்! கொண்டு வந்ததை வடித் தேன்! கண்டுநான் மகிழ்ந் தேன்! ஆசையால் சிறிது குடித் தேன் ! மீண்டும் சுவைத் தேன் ! உள்ளம் களித் தேன்! உடல் களைத் தேன் ! உடனே படுத் தேன்! கண் அயர்ந் தேன்! காலையில் கண்விழித் தேன்! அப்படியே எழுந் தேன் ! உங்களை நினைத் தேன்! தேனை எடுத்தேன்! அங்கிருந்து விரைந் தேன் ! வேகமாக நடந் தேன்! இவ்விடம் சேர்ந் தேன் ! தங்கள் வீட்டை அடைந் தேன் ! உங்களிடம் கொடுத் தேன் ! என் பணியை முடித் தேன்.!! அதற்குத் தேன் பெற்றவர், தேனினும் இனிமையாக உள்ளது உமது பதில் இதனால் தான் நம் முன்னோர்கள் *தமிழை* *தமிழ்த்தேன்* என்று உரைத்தனரோ என கூறி... நான் மிகவும் மகிழ்ந் தேன் என்றார். மிக சிறப்பு... *தமிழ்த்தேன்* *தமிழை நேசிப்போம்...* *உயிர் முச்சாக சுவாசிப்போம்...* வாட்சப் மூலம் நான் சுவைத்த தேனை, உறவுகளும் சுவைக்கப் பதிந்தேன்.
 14. துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? யார் சொன்னது இல்லையென்று! இதோ எங்கள் அன்புத்தம்பி...! வாழ்த்துக்கள்!!
 15. "தமிழீழ மண்ணை மீட்பதற்குப் போராட புறப்பட்டவர்களில் ஒருவரான டக்ளசு தேவானந்தா என்பவரால், கௌதாரிமுனை மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியது". இப்படித் தலையங்கம் இட்டு அவரைக் கெளரவித்திருக்கலாமே.!!
 16. மாணவர்களுக்கும், பயிற்றுவித்தோருக்கும் வாழ்த்துக்கள்!! காற்று நிறைந்த பந்தை நீரில் அழுத்திவைக்க முயன்றாலும் சிறு தருணம் கிடைத்ததும் மேலே வந்துவிடும். அதுபோலவே அறிவுநிறைந்த வட கிழக்கு மாணவர்கள் கல்வியை அமுக்கி அழிக்க முயன்றாலும் தருணம் கிடைத்ததும் அவர்கள் மேலெழுந்து பிரகாசிப்பதை எவராலும் தடுக்க முடியாது.
 17. பழம் நழுவிப் பாலில் வீழந்தது பழமொழி. சனநாயகம் நழுவிப் பயங்கரவாதத்தில் வீழந்தது புதுமொழி.
 18. நீங்க வேற, இந்தியா தனது இந்திய மண்ணிலேயே நிம்மதியாகத் தூங்கமுடியாமல் சந்திர மண்டலத்துக்குப் போகுது.. செய்தி படிக்கவில்லையா.??
 19. வேலையற்றிருக்கும் இளைஞர்களின் குடும்ப வாக்குகள் அனைத்தும் டக்ளசு ஐயாவுக்குப் போய், அவர் அடுத்த சனாதிபதியாக வந்துவிடுவாரோ என்று மகிந்த குடும்பமே கலங்கிப்போய் இருக்கிறதாம். என்று நான் பகிடியாகத்தான் எழுதினேன், அந்தாள் அதனை உண்மை என்று நம்பி இப்பவே சனாதிபதி றேஞ்சுக்கு கதைவிடுது.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.