Everything posted by Paanch
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
அனேகமாக இறப்புவரும் இறுதிநேரத்தில் மனிதர்கள் தாங்கள் புரிந்த தவறுகளை வெளியிட்டு, தங்கள் மனதிற்கென்றாலும் அமைதியைத் தேடுவதை அறிந்துள்ளோம். சோனியா தேடினாரா.? அவருக்கு மனம் என்று ஒன்று உள்ளதா.??🤔
-
எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்.. டக்ளஸ் தேவானந்தா
“அப்பன் குதிருக்குள் இல்லை” அத்தியடிக் குத்தியனும் குற்றவாளி இல்லை.🧐
-
இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப்பிடித்து பார்க்கக்கூடாது.- பழமொழி.🤣 தானம் கொடுத்த கெலின் விசிறியைச் சுற்றிப் பார்க்கக்கூடாது.- புதுமொழி.😁
-
முன்னாள் பெண் போராளி வெளிநாட்டில் உயிரிழப்பு.!
வீர வணக்கங்கள்.!!🙏🙏
-
இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
https://www.facebook.com/reel/1567565054
-
சீனாவின் மலிவான இறக்குமதி - பிரித்தானியாவில் பணவீக்கம் குறைய வாய்ப்பு
மாற்றம் ஒன்றே மாறாதது. அமெரிக்காவின் ஏற்றம் இறங்கத் தொடங்கியுள்ளது. 🤔
-
தமிழரசுக் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர். - சுமந்திரன் அதிரடி. -
மகிந்தரின் திட்டப்படி, சம்பந்தர்மூலம் திருவளர் சுமந்திரன் அவர்களை தமிழரசுக் கட்சிக்குள் கொண்டுவந்ததே கட்சியைக் காலிபண்ணுவதற்கு என்ற ஐயம் உள்ளது. இது ஐயமில்லை உண்மையே என்பதுபோல், சுமந்திரனும் தான் உள்ளேவந்த காரியத்தைக் கனகட்சிதமாக நிறைவேற்றி வருவது கண்கூடு. என் கதை முடியும் நேரம் இது என்பதை சொல்லும் தமிழரசுக் கட்சி
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
ஐயையோ டக்ளஸ் தேவானந்தா கைதா?? இவருக்காக தீக்குளிக்கப் போவது யார்???🧐
-
தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது - வட இலங்கையின் சங்க நாயக்க தேரர்
ஏற்கெனவே அல்ல, இன்றும் தமிழர்கள் புத்தரைக் கடவுளாகவே வணங்குகிறார்கள், வழிபடுகிறார்கள். சாதி, சமயம், மதம் கடந்து எங்கு ஒரு கடவுளுக்குரிய கோவிலைக் கடந்து செல்லும் சந்தர்ப்பம் நேரும்போதும் நெஞ்சில் கைவைத்து மானசீகமாகவேனும் தமிழர்கள் வணங்கிச் செல்வதைக் காணலாம். தமிழ் இனத்தவரைத் தவிர வேறு எந்த இனத்தவரிடையும் இந்தப் பண்பைக் காண்பது அரிது.
-
தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது - வட இலங்கையின் சங்க நாயக்க தேரர்
தையிட்டியில் மட்டுமல்ல இலங்கையில் தமிழர்களுக்குச் சொந்தமான பகுதிகள் எங்குமே விகாரைகள் வரப்போவது உறுதி. “நந்தவனத்தில் ஓர் ஆண்டி” பாடல் இலங்கைத் தமிழருக்காகவே பாடப்பட்டதுபோல் உள்ளது.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
குடும்பத்துக்குள்ளேயே ஏற்றத்தாழ்வு, தராதரம் பார்ப்பவர்கள் நிறைந்த மாவட்டம் யாழ்ப்பாண மாவட்டம். இதற்குள்தான் நானும் பிறந்து வளர்ந்தேன். குறியேறிகளுக்கு தேனீர் கொடுக்கவும் சிரட்டையை நாடுதே என்மனம்.🧐
-
இலங்கைத் தமிழர் தீர்வு விடயத்தில் அழுத்தங்களை வழங்குவோம் - தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்
நம்பிட்டோம்.🥴
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலி அவர்கள் என்றும் இளமையாக இருந்து யாழுக்கு நிழல்தர வேண்டுகிறேன்.🙏
-
“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!
யாழ்தேவி தொடர்உந்தில் உள்ள கழிப்பறையில் உள்ள நீர்த்தொட்டியில் யாரோ ஒருவர் தனது அந்த உறுப்பையும் கழுவிவிட்டு சென்றுவிட அத்தொட்டியில் நீர் நிரப்பி தன்முகம் கழுவிய இன்னொருவரின் கண்கள் பழுதடைந்ததான செய்தியை பத்திரிகை ஒன்றில் அன்று படித்த ஞாபகம் உள்ளது.🫣
-
வரலாறு, சித்திரக்கலை பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை – பிரதமர்!
சிங்கப்பூரே போற்றும் தமிழர்களின் நிர்வாகத்தில் சிறப்புற்று விளங்கிய இலங்கையை, சிங்களவர் நிர்வாகத்தைக் கொண்டுவந்து எப்படிச் சிதைவடையச் செய்தோம் என்ற வரலாறும் இருக்கிறதே, அதுவும் கற்பிக்கப்படுகிறதா??.🤔
-
அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு
கடல்நீரில் தத்தளிப்பவன் சிறு துரும்பைக் கண்டாலும் அதனைப்பற்றி தன் உயிர் காப்பாற்றவே முயல்வான். துரும்புபற்றி ஆராயமாட்டான். சொல்லவெண்ணா துன்பங்களை அனுபவித்துவரும் தமிழர்களும் அப்படித்தான். கோத்தபாயாவே அனுரா வடிவில் வந்தாலும் பற்றிக்கொள்ளவே முயல்வார்கள்.
-
அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு
நிலாவைக் காட்ட நரி நண்டுகளை அழைத்த கதையை, அம்புலிமாமாவில் என் சிறுவயதில் படித்துள்ளேன்.🤣🤣
-
பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்தில் யாழ்.பல்கலை மாணவர்கள் 19 பேர் மறியலில்
இது பகிடிவதை அல்ல சகோதரவதை. “அறியாதார் வாயில் மண்ணு” இதனைத் தீர்க்கப் பெற்றோரிடம் சென்றிருக்க வேண்டும். ஏன் நீதிமன்றம் சென்றார்கள்.???🤔
-
வெள்ளத்தில் மூழ்கிய Sri Lanka; தமிழர்களின் நிலை என்ன? | Ditwah Cyclone
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நேற்று 25 கார்த்திகை அன்று தம்பி தமிழ்சிறியை அவர் மகள் யாழினி தாத்தாவாக்கிவிட்டார். அவர் குடும்பத்தில் உதித்த முதல் பேரப்பிள்ளை, பேத்தியின் பெயர் சிவானி. பேத்தி சிவானி வளமுடன் வாழ வாழ்த்துக்கள்!!🙌- உயிரை பறிக்கும் “மாவா”!!
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை இதை எண்ணிடாமல் சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை இருக்கும் வரை இன்பங்களை அனுபவிக்கும் தன்மை இல்லை என்றால் வாழ்வினிலே உனக்கு ஏது இனிமை. மருதகாசி அவர்கள் இந்தப் பாடலை இயற்றியபோது குட்காவும் இல்லை மாவாவும் இல்லை என்று எண்ணுகிறேன்.🤔- துபை விமானக் கண்காட்சியில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் - என்ன நடந்தது?
என் சிறுவயதில் ஒரு விமான விபத்து செய்தி வந்தால் அது அதிசயமாகவும், ஆச்சரியமாகவும், பயமாகவும் இருக்கும், இப்பொதெல்லாம் விபத்துப் பற்றிய செய்திகள் சாதாரணமாகிவிட்டது.- ஹிட்லரின் ரத்தக்கறை படிந்த துணியை மரபணு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு என்ன?
நான் கேட்டது உண்மை. சொன்னவர் பொய்யனா? மெய்யனா?? எனக்குத் தெரியாது.- ஹிட்லரின் ரத்தக்கறை படிந்த துணியை மரபணு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு என்ன?
போலாந்து நாட்டில், வட்டமான மேசை ஒன்றில் சில யேர்மானியர்களை நிறுத்தி, அவர்கள் நாக்கை இழுத்து மேசையில்வைத்து ஆணியடித்து யூதர்கள் கொடுமை செய்ததை கிட்லர் கண்டாராம். தெருவைக் கடக்க சிரமப்படும் முதியவர்களுக்கு உதவிபுரியாமல் அங்கு காணப்படும் இளைஞர்களைக் கைதுசெய்து கிட்லர் பெரும் தண்டனை கொடுப்பாராம். மேற்கூறிவற்றை யேர்மன் முதியவர் ஒருவர் சொல்லக் கேட்டுள்ளேன்.🤔- ஜனாதிபதி முதலில் தன் கட்சி உறுப்பினர்களை போதை வர்த்தகத்திலிருந்து விலகுமாறு அறிவுறுத்துவது அவசியம் – நாமல் ராஜபக்ஷ
சாத்தான் குடும்பத்தில் பிறந்த ஒன்று வேதம் ஓதுகிறது.🤗 - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.