Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. அன்புள்ள சுமேரியரே மூட்டைப் பூச்சியினால் நீங்கள் படும் சிரமத்தை வடிவேலு அவர்களும் யாழில் படித்துவிட்டு, ஒரு நவீன மெசினை உருவாக்கிப் பாவம் அவர் படும் பாட்டைப் பாருங்கள்.
  2. உங்களின் அருமையான கதை அந்தநாள் ஞாபகத்தை எனக்குக் கொண்டுவந்தது புத்தரே, எனது இல்லத்தரசி அன்று என் காதலியாக இருந்ததால் உங்களைப்போல் நல்லூரில் பெண்களுக்குக் கடலைபோடும் எண்ணத்திற்குக்கூட என் இதயம் இடம்தரவில்லையே.😩
  3. நெடுக்காலைபோவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக!!
  4. இதுதான் தாயுள்ளம் தங்கையே! சிறித்தம்பியின் கால் கவனம் என்று நீங்கள் கவலை கொள்வது தெரிகிறது. இதுதான் சமயம் என்று சாமியார் அவரைச் சண்டைக்கு இழுப்பதும் தெரிகிறது.😲 குசும்புகளுக்கு அப்பால், வைத்தியர்கள் தரும் சிகிச்சையை விடவும், யாழ்கழ உறவுகள் காட்டும் அன்புதான் தன்னை வெகு சீக்கிரமாகக் குணப்படுத்தி வருவதாகச் சிறித்தம்பி கூறினார்.🤗
  5. இற்றைவரை பல பிறந்தநாள் கண்டு மலர்ந்த தம்பி தமிழ்சிறியே!
  6. நுணாவிலான் அவர்களுக்கு!
  7. இறுதிச் சடங்கிற்கு வரமாட்டார் என்பது உண்மைதான். ஆனால் அது ஒரு துடக்குச் சம்பவமாக அவரவர் சாதியைப் பொறுத்து 14, 21, 31 நாட்கள் எனப் பேணப்பட்டு அக்கால முடிவில் துடக்கைக் கழிக்க அந்தணர் வருவார். வந்து அதற்கான வருவாயையும் பெற்றுச் செல்வார்.
  8. அகத்தியன் மற்றும் நுணாவிலான் இருவரும்
  9. வைத்தியரின் வருமானம் ஒருவரது சாவுடன் முடிந்துவிடுகிறது. நீத்தார் கடன் செய்விக்கும் அந்தணனின் வருவாய் ஒவ்வொரு வருடமும் அந்த ஒருவரின் உறவினர்கள் உயிரோடு இருக்கும்வரை வரும்.🤗
  10. எது பிளாஸ்டிக் அரிசி? உண்மையில் பிளாஸ்டிக் அரிசி என்பது பிளாஸ்டிக்கில் செய்யப்படுவதில்லை. உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் செயற்கைப் பிசினைக் கலந்து, பிளாஸ்டிக் அரிசி செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கனவே தங்கள் நாட்டு உயர்ந்த அரிசி வகையிலேயே போலியைத் தயாரித்து விற்பனை செய்த சீனா, தற்போது முழுக்க முழுக்க செயற்கை அரிசியைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டது. எப்படிக் கண்டுபிடிப்பது? பிளாஸ்டிக் அரிசி தனியாக விற்பனை செய்யப்படுவதில்லை. இவை அரிசியுடன் கலக்கப்பட்டே விற்பனைக்கு வருகின்றன. தவிர, சமைத்தால் மட்டுமே அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்க முடியும். சமைத்த பிறகு பிளாஸ்டிக் அரிசி முழுவதும் வேகாமல் முரட்டுத்தன்மையுடன் இருக்கும். பொதுவாக அரிசியை வேகவைத்தால் அதிலிருக்கும் ஸ்டார்ச், மேலே படலமாகப் படியும். பிளாஸ்டிக் அரிசி வேகும்போது கண்ணாடி போன்ற படலம் வரும். இதை வெயிலில் காயவைத்தால் மெல்லிய பிளாஸ்டிக் ஷீட் போல மாறிவிடும். பிளாஸ்டிக் அரிசியை நெருப்பில் காட்டினால் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மணம் வெளிப்படும். சர்க்கரையில் கலந்திருக்கும் ரவையையும், மிளகுடன் கலக்கப்பட்டிருக்கும் பப்பாளி விதையையும் நம்மால் கண்டுபிடித்துவிடுகிற மாதிரி பிளாஸ்டிக் அரிசியை எளிதில் அடையாளம் காணமுடியாது. இதற்கென இருக்கும் ஆய்வகங்களின் துணையோடு மட்டுமே இந்த ரசாயன அரிசியை, திட்டவட்டமாக இனம் காணமுடியும்.
  11. சரசுவதி என்றாலே அவர் கைகளில் யாழைக் காணலாம். யாழுடன் பிறந்த சரசுவதி பேசிய மழலைதான் மலையாளம் என்று சொல்வார்கள். அதனால்தான் அவர்களின் தமிழ் உச்சரிப்பு யாழில் உள்ளது போல் இருக்கிறது.
  12. உங்களுக்கு எழுதிய மடல் கண்டு இரண்டுநாளாக வீட்டிலை எனக்குச் சோறில்லை ஐயா.😭
  13. தம்பி விசுகு அவர்களே! இதுக்கு என்ன சொல்லப்போறீங்க...!!⬇️⬇️ சிறித்தம்பிக்கு இப்படி நடந்திராவிட்டால், எனக்குமுதலே இந்தச் செய்தியை அவர் படித்தறிந்து, யாழ்களத்தில் ஒரு பட்டாளத்தையே அழைத்துச்செல்லப் பாய்ந்து வந்து எழுதியிருப்பார்.😋
  14. அன்புள்ள குமாரசாமி அவர்களே! நாங்களும் தாய்லாந்து செல்வோமா......???🤩😋 பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சாமிகளே!!🤗
  15. ஆமாம் எங்களுக்கும் தெரியும். இந்தப் படுகொலையில் சுப்பிரமணிய சுவாமி, சந்திரா சுவாமி, சோனியாகாந்தி எனப் பலரின் பெயர்களை இந்தியப் பத்திரிகைகள் பலவும் அன்று வெளிப்படுத்தினவே.
  16. உணவும் உடற்பயிற்சியும்.? ஒரு மருத்துவரின் பதில்.! மருத்துவர் யார்? என்று கேட்கக்கூடாது.!! கே: உடற்பயிற்சி இதயத்தை வேகப்படுத்தி ஆயுளை நீட்டிக்குமா? ப: பல துடிப்புகளுக்கு மட்டுமே இதயம். இதயத்தை வேகப்படுத்துவது நீண்ட காலம் வாழ வைக்காது; இது வேகமாக ஓட்டுவதன் மூலம் காரின் ஆயுளை நீட்டிப்பதாகக் கூறுவது போன்றது. நீண்ட காலம் வாழ வேண்டுமா? நன்றாகத் தூங்குங்கள். கே: நான் மது அருந்துவதை குறைக்க வேண்டுமா? ப: இல்லை. பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் மது. பழம் மிகவும் நல்லது. பிராந்தி காய்ச்சி வடிகட்டிய ஒயின், அதாவது அவை பழத்திலிருந்து தண்ணீரை எடுக்கின்றன, அதனால் நீங்கள் இன்னும் அதிக நன்மைகளைப் பெறுவீர்கள். பீர் கூட தானியத்தால் ஆனது. தானியமும் நல்லது. கே: பொரித்த உணவுகள் உடலுக்கு மோசமானவை அல்லவா? ப: காய்கறி எண்ணெயில் வறுத்தால் நல்லது. காய்கறிகள் எப்படிக் கெட்டது? கே: சாக்லேட் நல்லதா? கெட்டதா? ப: கோகோ பீன், இன்னொரு காய்கறி, இது சிறந்த நல்ல உணவு! சரி... உணவுமுறை பற்றி நீங்கள் கொண்டிருந்த தவறான எண்ணங்களை இது நீக்கியிருக்கும் என நம்புகிறேன். 1. டிரெட்மில்லைக் கண்டுபிடித்தவர் 54 வயதில் இறந்துவிட்டார் 2. யிம்னாடிக்சைக் கண்டுபிடித்தவர் 57 வயதில் இறந்தார் 3. உலக உடற் கட்டமைப்பு சாம்பியன் 41 வயதில் இறந்தார் 4. உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான மரடோனா, தனது 60வது வயதில் இறந்தார். ஆனாலும் 5. KFC கண்டுபிடிப்பாளர் 94 வயதில் இறந்தார். 6. நூடெல்லா பிராண்டின் கண்டுபிடிப்பாளர் 88 வயதில் இறந்தார். 7. கற்பனை செய்து பாருங்கள், சிகரெட் தயாரிப்பாளர் வின்சுடன் 102 வயதில் இறந்தார் 8. அபின் கண்டுபிடித்தவர் 116 வயதில் பூகம்பத்தில் இறந்தார் 9. கெனெசி கண்டுபிடிப்பாளர் 98 வயதில் இறந்தார். ஆகவே உடற்பயிற்சி ஆயுளை நீட்டிக்கும் என்ற முடிவுக்கு இந்த மருத்துவர்கள் எப்படி வந்தார்கள்?? முயல் எப்பொழுதும் மேலும் கீழும் குதிக்கும் ஆனால் அது 2 வருடங்கள் மட்டுமே வாழ்கிறது உடற்பயிற்சி செய்யாத ஆமை 200 ஆண்டுகள் வாழ்கிறது. எனவே, கொஞ்சம் ஓய்வெடுங்கள், நிதானமாக இருங்கள், சாப்பிட்டு, குடித்து, உங்கள் வாழ்க்கையை நன்றாக அனுபவியுங்கள்... 😋
  17. நான் சிறுவயதில் படித்த திருநெல்வேலி சைவப் பள்ளிக்கூடத்தில் ஒரு கணக்கு வாத்தியார் எங்களுக்குக் கணக்குப் படிப்பித்தார், பாடநேரத்தில் தனது தோட்டத்திற்குச் சென்று புகையிலைக் கன்றுப் பாத்திகளுக்குத் தண்ணீர்பாச்சிச் செல்வம் சேர்த்தார்.
  18. நல்ல காலம் இந்தக் கலாச்சாரம் வருவதற்கு முன்னரே எங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டது வன்னியரே.🤗
  19. வாலி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
  20. ஒருவர் தினமும் கடைப்பிடிக்க வேண்டிய சில ஆரோக்கியமான பழக்கங்கள் என்ன? 1. காலையில் எழுந்ததும் போன் முகத்தில் முழிக்காமல் இருப்பது 2. டீ குடித்துவிட்டு தான் பல்லு விலக்க போவேன் என்ற கொள்கையை கடைபிடிக்காமல் இருப்பது 3. சாப்பிடும் உணவில் ருசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது. 4. நாம் லேட்டாக கிளம்பி விட்டு, கிளம்பும்போது லேட் ஆகிருச்சேனு வீட்டில் இருக்கும் மனைவி மீதும் அம்மாவின் மீதும் கோபப்படாமல் இருப்பது 5. தொலைக்காட்சி பார்ப்பதில் வீட்டில் உள்ள அனைவருக்கும் சம உரிமை அளிப்பது 6. நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று ஒரு வேலையை தள்ளிப்போடாமல் இருப்பது 7. தினமும் நமக்காகவும் நம்மளை சுற்றி இருப்பவர்களுக்காகவும் சாமி கும்பிடுவது 8. விலை மதிக்க முடியாத நம்முடைய பற்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தினமும் இரவு தூங்கும் முன் பல் துலக்குவது 9. சாலையில் கண்ட இடத்தில் எச்சில் துப்பாமலும் குப்பை போடாமலும் இருப்பது 10. அனைவரிடமும் மரியாதையாகவும் அன்பாகவும் பேசிப் பழகுவது 11. தினமும் நமக்காக கஷ்டப்பட்டு சமையல் செய்யும் அம்மாவையும் மனைவியையும் மனம் திறந்து பாராட்டுவது.பாராட்டவில்லை என்றாலும் குறை கூறாமலாவது இருப்பது. 12. ஒருவர் நமக்கு செய்த உதவியை எந்த காலத்திலும் மறக்காமல் நன்றியுடன் இருப்பது. இவை அனைத்தும் எனக்கு தெரிந்த சில ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள். பிடித்ததை கடைபிடியுங்கள் பிடிக்காததை விட்டுவிடுங்கள். ஆரோக்கியமான வாழ்விற்கு வாழ்த்துக்கள். பொறுமையுடன் படித்ததற்கு நன்றி… நன்றி… நன்றி…
  21. இன்று தமிழ்ப் புத்தாண்டு. இந்நாளில் இதுவரை பிந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கத் தவறிய அனைவருக்கும் சூரியனை வரவேற்றுப் பொங்கிய பொங்கலையும் உண்டு வாழ்த்துவதில் என்மனமும் பொங்குகிறதே.🤗

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.