Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. குருவுக்கு "மிஞ்சிய" சிஷ்யன். அது அந்தச் சிஷ்யனை உருவாக்கிய குருவுக்கே பெருமை சிஷ்யனுக்கு அல்ல.🙏
  2. தமிழினம் தனக்கென்று உரிமையோடு வாழ்வதற்கு இலங்கையிவ் மண் இல்லை ஆனால் “யாழ்ப்பாணத்தில் எக்ஸ்போ 2024”🤭 “இரவல் புடவையில் இது நல்ல கொய்யகம்”
  3. மனிதனைக் கடவுளாக நினைப்பதை கைவிட வேண்டும். ஒரு மனிதன் எந்நிலைக்கு வந்தாலும் அந்த மனிதனை மனிதனாக நினைக்கும் எண்ணத்தை மேம்படுத்த வேண்டும்.😌
  4. எங்கள் சந்திப்பில் சந்தணம் மணக்குது, குங்குமம் துலங்குது, கற்பூரம் ஒளிருது சூப்பர் என்று பாராட்டுபவர்களும் இருக்கிறார்கள். அட கடவுளே! என்று அழைத்து சந்தி சிரிக்க வைப்பவர்களும் இருக்கிறார்களே!!🤔😩
  5. பூத்தது எல்லாம் காய்பதில்லை, கழுத்தில் ரெலஸ்கோப் மாட்டியவன் எல்லாம் டாக்டராவதில்லை.🩺🤷‍♂️🤷‍♀️
  6. ஆமாம் சில பொது மக்களும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த காரணத்தால் முள்ளிவாய்காலின் தமிழின அழிப்புக்கு துணபோன கருநாய்களும், அவர்கள்போன்ற சிலரும் உண்மையில் இன்று ஹீரோக்களாகவே மாறி விட்டார்கள்.😳
  7. சிறு மாற்றம் செய்ய வேண்டுகிறேன் நொச்சி அவர்களே! இலங்கை சுதந்திரமடைந்து இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்றிய காலம் முதல்…. தமிழர்களை ஏமாற்ற முடியாது. சிங்களப் பெரும்பான்மையை உயர்த்திச் சிங்களம் அங்கு அரசை நிறுவிக்கொண்டால் திருகோணமலையை தனவசப்படுத்திக்கொள்ளலாம் என்ற நப்பாசை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இருந்து வந்துள்ளது. அதனால்தான் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் திருகோணமலையை அமெரிக்காவுக்கு கொடுத்து வட்டுக்கோட்டைத் தீர்மானப்படி தமிழர் அரசமைத்து அதன் ஆதரவோடு திருகோணமலையையே எங்கள் தலைநகராக்கிக் கொள்ளலாம் என்று வெளிப்படையாகவே மேடையில் பேசியதை நானும் கேட்டுள்ளேன்.
  8. டிரம்பை சுட்டது சுட்து என்று எல்லோருமே மக்களுக்கு சூட்டைக் கிளப்புகிறர்கள், உண்மை அதுவல்ல… டிரம்பிற்கு சிறுவயதிலேயே காதுகுத்தி விழா கொண்டாடியிருந்தால் இந்தப் பிரச்சனையே வந்திராது. இன்றைய நவீன உலகில் நவீனமுறையில் மேத்தியூ துப்பாக்கியால் டிரம்புக்கு காதுகுத்தியுள்ளார் அவ்வளவே.🤪
  9. தமிழன் என்றோர் இனமுண்டு (நாமக்கல் கவிஞர் வெ . இராமலிங்கம்) தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு அமிழ்தம் அவனுடை மொழியாகும் அன்பே அவனுடை வழியாகும் அறிவின் கடலைக் கடைந்தவனாம் அமிர்தத் திருக்குறள் அடைந்தவனாம் பொறியின் ஆசையைக் குறைத்திடவே பொருந்திய நூல்கள் உரைத்திடுவான் கலைகள் யாவினும் வல்லவனாம் கற்றவர் எவர்க்கும் நல்லவனாம் நிலைகொள் பற்பல அடையாளம் நின்றன இன்னும் உடையோனாம் சிற்பம் சித்திரம் சங்கீதம் சிறந்தவர் அவனினும் எங்கே சொல் வெற்பின் கருங்கல் களிமண்போல் வேலைத் திறத்தால் ஒளிபண்ணும் மானம் பெரிதென உயிர்விடுவான் மற்றவர்க் காகத் துயர்படுவான் தானம் வாங்கிடக் கூசிடுவான் தருவது மேல் எனப் பேசிடுவான்
  10. செய்தால் பிழைச்சுப் போக்காதோ?? பாவம் அதுவும் சாமியார் ஒன்றுக்கு இரண்டு வேலைசெய்து குடும்பத்தைக் காப்பாற்றுவதாகக் கேள்வி.😮‍💨
  11. இங்கு யேர்மனியில் எல்லா விதமான மசாச்சுகளும் யேர்மனிய பெண்களும் செய்வார்கள், ஆனால் உந்த மசாச்சுகளால் தப்பித்தவறி ஏதாவது நடந்தால்…. அதற்கு காரணமான அண்ணன், தம்பிகள், தாத்தாக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீவனாம்சம் கட்டி வாழவேண்டிய நிலையும் ஏற்படலாம். நான் அறிந்தவரையில் பல துருக்கி ஆண்கள் இந்த நாட்டைவிட்டே ஓடியிருக்கிறார்கள்.😳
  12. தமிழ் இனிமை என்று அளவுக்கு மிஞ்சி அள்ளிப் பருகியதால் வந்த மயக்கத்தின் (வெறி) விளைவாக இருக்குமோ?? சிலர் தங்கள் வெறிக்கு, வாய்குரிசியாக வறுவல் தேடுவதுண்டு, கிந்தியும் ஒரு வறுவலாக இருக்குமோ??🤔
  13. எனது தவறான புரிதலைச் செம்மைப் படுத்திய இருவருக்கும் நன்றிகள்.🙏🙏
  14. முரட்டு ஆண்மையைத்தான் பெண்மை விரும்பும் என்று உடற்கூற்று நிபுனர்கள் வெளியிட்ட செய்தியைப் படித்துள்ளேன். இங்கு ஆண்மை மலராகி பெண்மையை சாய்க்கிறது. டைவேசில்தான் முடியுமோ…..😳😩
  15. நாங்கள் உண்ணும் உணவு வயிற்றுக்குள் சென்று பல இரசாயன மாற்றங்கள் அடைந்து உடலுச் சக்தியைக் கொடுத்து எம்மை வாழவைப்பதையும், சில உணவுகள் நோய்களைக் கொடுத்து எம்மை வருத்துவதையும் அனுபவத்திலும் அறிந்துள்ளோம். பயித்தம் பணியாரம் பயறு வறுத்து உருட்டிச் செய்வது. அந்தப் பயறு வயிற்றுக்குள் சென்று கெட்ட நாற்றமுள்ள காற்றை உற்பத்தி செய்து வெளியேற்றுவதும் நாம் அனுபவத்தில் கண்ட உண்மை. எங்கள் அன்புக்கும், அபிமானத்திற்கும் உரிய தமிழ் சிறித் தம்பி பயித்தம் பணியாரம் உண்டு கெட்ட காற்றும் உற்பத்தியாகி வெளியேறினால்….. அந்த நாற்றம்…. கட்டையோ, குட்டையோ, நெட்டையோ அழகிகளையும் அவர் அருகேகூட நிற்கவிடாமல் துரத்தியடித்து அவருக்கு மன நோயை ஏற்படுத்திவிடும் என்று எண்ணியதால்…. பயித்தம் பணியாரத்தைப் பார்சலில் இருந்து எடுத்துவிட்டேன். தமிழ் சிறி! தம்பி உங்கள் வருகைக்காக பலகாரப் பார்சல் எங்கள் வீட்டில் காத்துக் கிடக்கிறது.😌😀
  16. கொஞ்சமென்ன நிறையவே அங்கு வழங்கிய பலகாரப் பைகளை… பிள்ளைகளுக்கு, பேரன் பேத்திகளுக்கு என்று நானும் என் பதிவிரதையும் கேட்டுப்பெற்று பெரிய பாசல் கட்டுமளவுக்கு பலகாரங்கள் கொண்டுவந்துள்ளோம். உங்களுக்கும் ஒரு பார்சல் கட்டியிருக்கு, ஆனாலும் உங்கள் பார்சலில் உள்ள…. நீங்கள் விரும்பும் பயித்தம் பணியாரங்களை உங்கள் நன்மைக்காக வெளியே எடுத்துவிட்டேன். ஏன்? என்பதை நீங்களும், சில கள உறவுகளும் யோசித்து மண்டையைப் போட்டு உடைத்தபின்பு, ஆறுதலாக எழுதுகிறேன்.😆
  17. வாழ்த்துக்களுக்கு வாழ்த்துக் குறிகளைக் “!!” காணவில்லை, வயிற்ரெரிச்சலில் சொல்வதுபோல் உள்ளது.😩
  18. எங்கள் குடும்ப நண்பர் ஒருவரின் மகளுக்குத் திருமணம், எங்ளுக்கு அழைப்புவந்து நாங்கள் அங்கு புறப்படுகின்றோம், நண்பருக்கு சாமியாரைத் தெரியாது, சிறியரும் வைத்தியசாலையில் இருப்பதால் அவரால் வரமுடியாது, வந்தாலும் மூக்கு அறுபட்டிருப்பதல்….அவரால் மூக்குமுட்ட சாப்பிடவும் முடியாது, கவலையோடு செல்கிறேன்.😒
  19. நான் இன்னும் இளமையானவன்தான் தம்பி. என் வயது 18. சஎழுத்துக்கு “அ” முன்னலை வகிப்பதுபோல் எண்ணுக்கு “1” முன்னலை, அதனால் 1றை முன்னுக்குப் போட்டேன்.🤪
  20. வணக்கம் வன்னியரே! உங்கள் மனம் வெள்ளை மனம், அதுதான் எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகிறீர்கள், ஆனாலும் இதனால் எங்களுக்கு வரக்கூடிய ஆபத்தையும் நீங்கள் உணரவில்லையா? எங்கள் மூவரையும் உருக்கி உருமாற்றி விற்கவா, அடகுவைக்கவா என்று பல கள உறவுகள் கூட்டம்போட்டுத் திட்டமிடுவதை இன்னுமா அறியவில்லை???😲🤭
  21. இண்டையோடு விட்டன் கொண்டலடி. மூக்குள்ளவரை சளி இருக்கும், இலங்கையில் சிங்களர் நிர்வாகம் இருக்கும்வரை கடன் இருக்கும்.🤧
  22. அத்தியடில் குத்தியன் இருப்பதாக எண்ணிவந்தேன்…. நல்ல கவிஞர் இருப்பதையும் இன்று கண்டேன், வாழ்த்துக்கள்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அவர்களே!!🙌 பெயர் எழுதிக் களைத்துவிட்டேன். வணக்கம்!👋

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.