Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. மெஸ்சியை ஆபிரிக்கா எப்போ வாங்கியது? பாவம் அந்தக் கண்டத்தின் சூட்டிலை நல்லா கறுத்துப் போனார்.🥶😮‍💨
  2. பிந்தியதால் என்வரையில் நில்மினி தங்கைக்கு சிறிது இளமையைக் கூட்டிவிட்ட மகிழ்வோடு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!🙌 இதுவரை வாழ்த்தத் தவறிய கள உறவுகள் அனைவரின் பிறந்த நாளுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக!🙌🙌
  3. அதுதான் சம்பந்தர் பிரிந்துவிட்டாரே….இனியும் பிரிப்பதற்கு யார்தடை?? சம்பந்தரின் வாரிசுகள் யாராவது.???🧐
  4. இலங்கையில் தற்போது 10 பெரும் செல்வந்த அரசியல்வாதிகளின் பட்டியலைப் பார்த்தோம். பிச்சைப் பாத்திரம் ஏந்தியபின்பு பத்து இருபது என்று அதற்கு மேலும் பெருகுவது உறுதி.🤔
  5. அதிசாலை ஐந்து மணிக்கு எழுந்து தூக்கக் கலக்கத்தில் எங்கள் சாமியாரைச் சாடிவிட்டேன். மன்னித்தருளுக.😔🙏
  6. மாம்பழம் கிடைக்காத கவலையில் எங்கள் சாமி முருகன் அங்கியைத் துறந்தாலும் அங்குள்ளதை மற்றவருக்கு காட்டாமல் கோமணத்துடனாவது நின்றார்.😌 எங்கள் குமாரசாமியோ தனது தீவிர பக்தனென்றும் பாராமல் என் அங்கியைக் காரணம் காட்டினாலும்… எனது கோமணத்தையும் உருவி அனைவருக்கும் காட்டிக் கொடுத்துவிட்டாரே என அவரது பின்னூட்டம் எண்ண வைக்கிறது.!!🤔😳😂
  7. நீங்கள் தவறாகவே செய்திருந்தாலும் என்மனம் அதனை நிறைவாகவே ஏற்றுக்கொள்ளும் கவி அவர்களே.!😌
  8. என் சுயநினைவால் ஓரளவு உலகைப் புரிந்துகொள்ள வந்ததும், இந்துமதத்தில் அதன் சுய புராண ஏமாற்றுகளில் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது ஆயினும் அவற்றில் சில கோட்பாடுகள் வாழ்க்கையை ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய உபதேசங்களைக் கொண்டிருப்பதை மறுக்கவும் முடியாது. “தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்”. பெற்றோரும், சுற்றத்தாரும் கடவுள்கள் பற்றியும், ஆலயவழிபாடு பற்றியும் என்னைத் தொட்டிலில் ஆட்டும்போதே ஊட்டியவை என் அறிவில் கல்மேல் எழுத்துப்போல் பதிந்துவிட்டது. தவிர திருநெல்வேலி பழங்கிணற்றடி பிள்ளையார் கோவிலில் அதன் பூசை புணர்கார வழிபாடுகளை என் பெரியப்பா ஒருவர், அவர் உடம்பு இயலாமல் போகும்வரை மேற்கொண்டு வந்தார், தும்பிக்கையான்மேல் அவர் எனக்கு ஏற்படுத்திய பக்தியும், நம்பிக்கையும் இன்றுவரை ஏற்பட்ட பெரும் துன்பங்களையும் நீர்த்துபோக வைத்துள்ளது. யேர்மனி சுற்காட் நகரில் ஆரம்பிக்கப்பட்ட சித்திவினாயகர் ஆலயத்தில் பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலை இயக்கத்திற்கு ஆதரவானவர்கள் அதிகம் இருந்தும் அதற்கு எதிரானவர்கள்களின் கைகளிலேயே நிர்வாகம் இருந்ததினால் குழப்பங்கள் ஏற்படத் தொடங்கிது, நிர்வாகத்தைக் கையேற்று அதனைச் சீர்செய்ய முயன்ற வேளை பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலை இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது, அதன் பின்னரே விடுதலைக்கு ஆதரவுதந்த சிலரின் உண்மைச் சொரூபம் வெளிவரத் தொடங்கியது. இதனால் ஏற்மபட்ட மனவுளைச்சலில் மௌனமாக இருந்த வேளையில்தான் பிள்ளையார் தன் தம்பி பாலமுருகன் பெயரில் ஒரு கோவிலை எங்கள் இல்லத்தின் அருகே நிறுவினார். அந்தக் கோவிலுக்கு நான் சென்றதும் அதன் அழகும் நிர்வாகமும் என் மனவுளைச்சலுக்கு ஒரு ஆறுதல் தந்ததை உணர்ந்ததால் தொடர்ந்து அங்கு செல்ல முடிவுசெய்து செல்கிறேன். தமிழையும் அதன் கோட்பாடுகளையும் அழித்துவரும் வடவர் மொழியையும் அவர்கள் மதமான இந்து சமயக் கோட்பாடுகளையும் உணர்வுபூர்வமாக உள்வாங்கிய நிலைதான், நான் திருவிழாவில் மேலங்கியுடன் நிற்பதும், சில சமயப் பிறழ்வுகழும் இங்கு சில கள உறவுகளின் கண்களை உறுத்தியுள்ளது. கேலிச் சித்திரம் வரைவதில் புகழ் பெற்ற என் மதிப்புக்குரிய நண்பர் கவி அவர்கள் எனக்கு சித்திரம் வரைந்து என்னைக் கோமாளியாக்காமல் இருப்பதற்கு நன்றி!!🙏🙌
  9. அப்படி அல்ல சுவைப்பிரியரே! துஷ்டரைக் கண்டால் தூர விலகு. அவர்கள் தமிழர்கள் இத்திரியிலும் துஷ்டர்களைக் கண்டு விலகி நிற்கிறார்கள். 😔
  10. காமத்தின் உச்சமே அறியாது கருத்தரித்துக் குழந்தைகள் பெற்ற அன்னையர்களும் உண்டு எனச் செய்திகளும் வந்துள்ளன. 5 வருடங்களாக காதலித்து ஒன்றிணைந்த போதும் காணமுடியாத அந்த உச்சத்தைக் கலியாணம் செய்து காணமுடியுமா… என்ற ஏக்கமும், ஆதங்கமும் மன உளைச்சலை ஏற்படுத்தி அந்தக் காரியத்தைச் செய்ய வைத்திருக்கலாம். அவர் டாக்டர் பயிர்ச்சி பெறுபவர் படித்தவர், கல்லானாலும் கணவன் என்கிற பழைய பஞ்சாங்கம் அவரிடம் அற்றுப் போயிருக்கும். 🤔
  11. சம்மபந்தர் மட்டுமா தூக்கிப் பிடிக்கிறார்????😳🤔 பாம்பின் நஞ்சு கொடியது உயிரைக் கொல்லும். ஆனால் அதுவே மனிதரின் கொடிய நோய்களைத் தீர்ப்பதற்கு ஒரு மருந்தும் ஆகிறது. சம்பந்தரின் தமிழின துரோகத் தலைமை வாழ்க்கையும் தமிழினத்திற்கு ஒரு மருந்தாகட்டும். சம்பந்தரின் ஆத்மா சாந்திபெற வேண்டுவதோடு, அவர்போன்றோர் இனிப் பிறவாதிருக்கவும் இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏
  12. அங்கே பனைமரங்கள் இருந்தால் இன்னும் பெருமை, பனைமரத்தில் ஏறி ரம்பாவைப் பார்க்கலாம், அத்தோடு யாழ் இந்துமகளிர் கல்லூரியையும் பனைமரத்திலிருந்தே பார்க்கலாம்.🧐🤩😍
  13. ஆனாலும் பக்கத்து இலைக்குப் பாயாசம் வேண்டும் என்று கேட்பதுபோல் உள்ளது சிறித்தம்பியரின் பின்னூட்டம்.😆
  14. எங்களுக்கு பலகாரப் பொதி கிடத்தது சுவைப்பிரியனையும் பாதித்துள்ளதே…..!அப்பனே முருகா!!🤔🙏
  15. சிங்களம் பலுக்கல் பொருள் தமிழ் பொருள் வகை ආදායම් ஆதாயம வருமானம் ஆதாயம் நயம் வணிகம் අක්කා அக்கா தமக்கை அக்கா தமக்கை உறவுமுறை අම්බලම அம்பலம தெருவோரத் தங்குமிடம் அம்பலம் பொதுவிடம் நாடோறும் ඇම්බැට්ටය எம்பெட்டய நாவிதன் அம்பட்டன் நாவிதன் வணிகம் ආණ්ඩුව ஆண்டுவ அரசாங்கம் ஆண்டான் தலைவர் நடப்பிக்கை ආප්ප ஆப்ப அப்பம் அப்பம் அப்பம் உணவு අරලිය அரலிய அரளி அரளி அரளி நிலைத்திணையியல் අවරිය அவரிய கருநீல நிலைத்திணை அவுரி கருநீல நிலைத்திணை நிலைத்திணையியல் චීත්තය (ச்)சீத்தய சீத்தை சீத்தை சீத்தை வணிகம் එදිරිය எதிரிய எதிர்ப்பு, பகைமை எதிரி போட்டியாளர், பகைவன் படை ඉඩම இடம தளம், நிலம் இடம் இடம், தளம் அமைப்பு ඊළ ஈழ ஈழை ஈழை ஈழை நாடோறும் ඉලක්කය இலக்கய குறி இலக்கு குறி படை ඉළන්දාරියා இழன்தாரியா இளைய மனிதன் இளந்தாரி இளைய மனிதன் நாடோறும் ඉළවුව இழவுவ இறப்பு, இறுதிச் சடங்கு இழவு இறப்பு நாடோறும் ඉරට්ට இரட்ட இரட்டை, இரட்டையெண் இரட்டை இரட்டை, இரட்டையெண் வணிகம் කඩල (க்)கடல கடலை கடலை கடலை உணவு කඩය (க்)கடய கடை கடை கடை வணிகம் කඩියාලම (க்)கடியாலம கடிவாளம் கடிவாளம் கடிவாளம் படை කංකාණියා (க்)கங்(க்)காணியா மேற்பார்வையாளர் கங்காணி கண்காணிப்பவர் நடப்பிக்கை කලඳ (க்)கல(ந்)த எடைக்கான சிறு அலகு கழஞ்சு 1.77 கிராம் எடை வணிகம் කලවම (க்)கலவம கலவை, கலப்பு கலவை கலவை நாடோறும் කාල (க்)கால காற்பங்கு கால் காற்பங்கு வணிகம் කළුදෑවා (க்)கழுதேவா கழுதை கழுதை கழுதை நாடோறும் කම්බිය (க்)கம்பிய கம்பி கம்பி கம்பி வணிகம் කාන්දම (க்)கான்தம காந்தம் காந்தம் காந்தம் வணிகம் කණ්ණාඩිය (க்)கண்ணாடிய கண்ணாடி, மூக்குக் கண்ணாடி கண்ணாடி கண்ணாடி, மூக்குக் கண்ணாடி நாடோறும் කප්පම (க்)கப்பம வரி கப்பம் வரி படை කප්පර (க்)கப்பர சிறு கப்பல் கப்பல் கப்பல் வணிகம் කැරපොත්තා (க்)கெர(ப்)பொத்தா கரப்பான் கரப்பான் கரப்பான் நாடோறும் කරවල (க்)கரவல உலர்ந்த மீன் கருவாடு உலர்ந்த மீன் உணவு කාසිය (க்)காசிய நாணயம் காசு சிறிதளவிலான மாற்றிய பணம், நாணயம் வணிகம் කට්ටුමරම් (க்)கட்டுமரம கட்டுமரம் கட்டுமரம் கட்டுமரம் வணிகம் කිට්ටු (க்)கிட்டு நெருக்கம், அருகே கிட்டு நெருக்கம், அருகே நாடோறும் කොඩිය (க்)கொடிய கொடி கொடி கொடி நடப்பிக்கை කොල්ලය (க்)கொல்லய கொள்ளை கொள்ளை கொள்ளை படை කොම්බුව (க்)கொம்புவ ෙஇன் பெயர் கொம்பு ளகரத்தின் பெயர் நாடோறும் කොණ්ඩය (க்)கொண்டய கொண்டை கொண்டை கொண்டை நாடோறும் කොත්තමල්ලි (க்)கொத்தமல்லி கொத்தமல்லி கொத்தமல்லி கொத்தமல்லி நிலைத்திணையியல் කෝවිල (க்)கோவில இந்துக் கோயில் கோயில் கோயில் நாடோறும் කුඩය (க்)குடய குடை குடை குடை நாடோறும் කූඩය (க்)கூடய கூடை கூடை கூடை நாடோறும் කූඩුව (க்)கூடுவ கூடு, கூண்டு கூடு கூடு, சிறு பெட்டி நாடோறும் කුරුම්බා (க்)குரும்பா இளந்தேங்காய் குரும்பை இளந்தேங்காய் உணவு කුලිය (க்)குலிய வாடகை கூலி வாடகை நடப்பிக்கை මලය மலய மலைநாடு மலை வரை இடப்பெயர் මරක්කලය மரக்கலய படகு மரக்கலம் படகு மீன்பிடி මස්සිනා மஸ்சினா மச்சான் மச்சினன் மச்சான் உறவுமுறை මුදල முதல பணம் முதல் முதல் வணிகம் මුදලාලි முதலாலி வணிகர், கடையொன்றின் உரிமையாளர் முதலாளி வணிகர் வணிகம் මුදලි முதலி பெயரின் பகுதியொன்று முதலியார் குலப் பெயர் ஒன்று பெயர் මුරුංගා முருங்கா முருங்கை முருங்கை முருங்கை உணவு[1] නාඩගම நாடகம மேடை நாடகம் நாடகம் நாடகம், மேடை நாடகம் பண்பாடு නංගී நங்கீ தங்கை நங்கை இளம்பெண் உறவுமுறை ඕනෑ ஓனே வேண்டும் வேண்டும் வேண்டும் நாடோறும் ඔත්තේ ஒத்தே ஒற்றை எண் ஒற்றை ஒற்றை எண் வணிகம் පදක්කම (ப்)பதக்கம பதக்கம் பதக்கம் பதக்கம் நடப்பிக்கை පළිය (ப்)பழிய பழி பழி குற்ற உணர்வு, பழி படை පරිප්පු (ப்)பரிப்பு பருப்பு பருப்பு பருப்பு உணவு පත්තු කරනවා (ப்)பத்து (க்)கரனவா ஒளியூட்டு, தீ வை பற்று தீப்பிடி நாடோறும் පොරය (ப்)பொரய போர் போர் போர் படை පොරොන්දුව (ப்)பொரொன்துவ உடன்படிக்கை, உறுதிமொழி பொருந்து பொருந்து, உடன்படு நாடோறும் පොරොත්තුව (ப்)பொரொத்துவ தாழ்த்தல், காத்திருத்தல் பொறுத்து காத்திருத்தல் நாடோறும் සල්ලි சல்லி பணம் சல்லி நாணயம் வணிகம் සෙරෙප්පුව செரெப்புவ செருப்பு செருப்பு செருப்பு நாடோறும் සුරුට්ටුව சுருட்டுவ சுருட்டு சுருட்டு சுருட்டு நாடோறும் තක්කාලි (த்)தக்காலி தக்காளி தக்காளி தக்காளி உணவு තල්ලු කරනවා (த்)தல்லு (க்)கரனவா தள்ளு தள்ளு தள்ளு நாடோறும் තනි (த்)தனி தனி தனி தனி நாடோறும் තරම (த்)தரம அளவு, நிலை, எண்ணிக்கை தரம் தரம் வணிகம் තාත්තා (த்)தாத்தா தந்தை தாத்தா தாத்தா உறவுமுறை තට්ටු කරනවා (த்)தட்டு (க்)கரனவா தட்டு தட்டு தட்டு நாடோறும் උඩැක්කිය உடெக்கிய குறுகிய மேளமொன்று உடுக்கை குறுகிய மேளமொன்று நாடோறும் උදව්ව உதவ்வ உதவி உதவி உதவி நாடோறும் උලුක්කුව உலுக்குவ சுளுக்கு சுளுக்கு சுளுக்கு நாடோறும் උරුමය உருமய வழிவழி உரிமை, உரித்துடைமை உரிமை உரித்துடைமை, உரிமை நடப்பிக்கை වෙඩි තියනවා வெடி (த்)தியனவா சுடு வெடி சூடு, வெடி படை වෙරි வெரி குடித்த நிலை வெறி பித்து நாடோறும்ண
  16. இந்தத் திரியை குத்துவிளக்கில் போட்டு நெய்யூற்றி விளக்கேற்றி அந்த மங்கல ஒளியின் பிரகாசத்தில் எங்கள் உடல் உபாதைகளின் அவலங்கள், துன்பங்களைத் துடைத்ததெறிந்து அமைதிபெறுவதற்கு, ஆறுதல் அளித்த, அளித்துவரும் அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.!!🙏😍
  17. கந்தையா57 ஐயா! உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா!! இது என்கணிப்பு அல்ல, கூக்கிள் ஆண்டவர் மேற்கொண்டு தந்த கணிப்பு என்பதைக் குறிப்பிட்டும் உள்ளேன். ஆண்டவர்மேல் குற்றம் கண்டு, மறுபடியும் முதுகில் பிரம்படி வாங்கிக் கொடுத்து உலக மானிடர் அனைவர் முதுகிலும் இரண்டாவது தழும்பையும் ஏற்படுத்த என்மனம் ஒப்பவில்லை ஐயா!!🤔😟
  18. தமிழ்நாடு தனிநாடல்ல அது இந்தியாவில் இருக்கிறது, இந்தியாவில் இருக்கின்ற பல மொழிகள் சங்கத் தமிழோடு சேர்ந்து இனிமை பெற்று உருவான தமிழ் சொற்கள் தமிழ்நாட்டுத் தமிழில் ஒலிப்பது வரவேற்கக்கூடியதே. இலங்கையில் அப்படியல்ல, இருமொழிகள் மட்டும் பேசும் இரு இனங்களைக் கொண்டநாடு. அதில் ஒரு மொழிசார்ந்த இனமான சிங்களத்தை தமிழ்மொழி பேசுபவன் பேசினாலே, பேசியவன் பிடரிக்குச் சேதம் என்று பழமொழியே இருக்கும்போது…சங்கத் தமிழோடு சேர்ந்து சிங்களமும் உருவாக்கிய சொற்களைப் பாவித்தால் அது தமிழன் உயிருக்கே உலைவைக்கும்.😳 பழைய சங்கத் தமிழ் சொற்கள் இலங்கையில் நிலைத்து நிற்பதும் நன்மைக்கானதே.🤔
  19. பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள்* நாம் – முதல் தலைமுறை, தந்தை + தாய் – இரண்டாம் தலைமுறை, பாட்டன் + பாட்டி – மூன்றாம் தலைமுறை, பூட்டன் + பூட்டி – நான்காம் தலைமுறை, ஓட்டன் + ஓட்டி – ஐந்தாம் தலைமுறை, சேயோன் + சேயோள் – ஆறாம் தலைமுறை, பரன் + பரை – ஏழாம் தலைமுறை, ஆக, பரன் + பரை = பரம்பரை ஒரு தலைமுறை – சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால், ஏழு தலைமுறை – 480 வருடங்கள்.. ஈரேழு தலைமுறை – 960 வருடங்கள்.. (கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)ஆக, பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்குதலை முறையாக என்று பொருள் வரும். வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை.. ஆதாரம் கூக்கிள் ஆண்டவர்.
  20. நாங்கள் இலங்கையின் முதல் 10 கோடீசுவர அரசியல்வாதிகளையும் மறக்கமாட்டோம். சனாதிபதி அவர்களே! 1 மகிந்த 18 பில்லியன் டொலர் 2 அர்யுன ரணதுங்க 6 கோடி 80 லட்சம் டொலர் 3 மைத்திரி 1 கோடி 40 லட்சம் டொலர் 4 தொண்டமான் 19 லட்சம் டொலர் 5 கருணா 17 லட்சம் டொலர் 6 பௌசி 14 லட்சம் டொலர் 7 சந்திரிகா 14 லட்சம் டொலர் 8 அனுரகுமார 13 லட்சம் டொலர் 9 அதாவுல்லா 9 லட்சம் டொலர் 10 ரணில் என்ற நீங்கதான் 8 லட்சத்து 60 ஆயிரம் டொலர்.
  21. வணக்கம் நில்மினி. எதிர்பாராத யாழ்கள உறவுகளின் சந்திப்பு தரும் மகிழ்ச்சி என்றும் நினைவில் நிலைத்திருக்கும். அதனை ஏற்படுத்தித் தந்த தமிழ்சிறிக்கு நன்றிகள். உங்கள் எழுத்துக்கள் எல்லை தாண்டி நீண்டாலும் வாசிக்கத் தயாராகி உள்ளோம். சமீபத்தில் சந்தித்த மூன்று கள உறுப்பினர்களான எங்கள் தலைகள் இற்றைவரை யாழ்களத்தில் எப்படி உருட்டப்படுகிறது என்பதை அறிவீர்கள், நீங்களும் எங்களுடன் சேர்ந்தால் அது எங்களுக்கு ஒரு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அள்ளித் தரும் என நம்பலாம். நிச்சயம் உங்களுக்கு ஒரு பலகாரப்பொதியைச் சிறித்தம்பி கட்டியிருப்பார் எனவும் நம்பலாம். ஏனென்றால் உங்களையும் என்னையும் அவர் சந்திக்கவைத்த பகுதி பலகாரம், உணவு உண்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதி. 🤪🤤
  22. வேலி அடைக்கும்போது கதியால் தள்ளிப்போட்டுக் காணிசேர்க்கும் கலையை நான் அறிந்த காலத்திலிருந்தே யாழ்ப்பாணத்தில் கற்பிக்கிறார்கள். அதனைக் கற்பதற்கு எனக்கும் ஆர்வம் ஏற்பட்டபோது…. அம்மா கண்டித்ததால் அந்தக் கற்கை நெறியைக் கற்காமல் கைவிட்டது உண்மை.🤔

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.