Everything posted by Paanch
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
உண்மைதான். சிறுவயதில் தவறான தகவல் ஒன்றை உண்மை என நம்புவதற்குரிய காரணிகளும் அமைந்ததால் அது உண்மை என்றே என் மனதில் இன்றுவரை பதிந்துவிட்டது. இன மத வேறுபாடின்றி சேர் பொன் இராமநாதன் அவர்களை அன்று சிங்களரும் தமிழரும் பல்லக்கில் ஏற்றிச் சுமந்து சென்றமை, பாராளுமன்றத்தில் அவருக்குச் சிலை நிறுவியமை போன்ற உண்மைகள். தவறைச் சுட்டியமைக்கு நன்றி!
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
உங்கள் விளக்கம் வரவேற்கக்கூடியது. 🤩
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
இதற்கு ஏன் பரிசோதனை? சுதந்திரமடைந்த இலங்கையின் முதல் சனாதிபதியே ஒரு தமிழர்தான். தற்போதும் சனாதிபதி தேர்வுக்கு ஒரு தமிழர் போட்டியிட்டால்…. இங்கு பல கருத்துக்கள உறவுகளின் கருத்துப்படி அவர் தோல்வியுற்றாலும், சிங்கள மக்களிடமிருந்து அவருக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன என்பதை அறிவதற்குக் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவும் அது அமையும். சிங்களவர் அனைவரும் கெட்டவர்கள் அல்ல, தமிழர்கள் அனைவரும் நல்வர்களும் அல்ல. அனுராதபுரத்தில் 1977ல் நடந்த கலவரத்தில் சிங்களக் காடையர்களிடமிருந்து எங்கள் குடும்பம் ட்படப் பல தமிழர்களைக் காப்பாற்றிது சிங்களவர்கள்தான். இதற்கு ஏன் பரிசோதனை? சுதந்திரமடைந்த இலங்கையின் முதல் சனாதிபதியே ஒரு தமிழர்தான். தற்போதும் சனாதிபதி தேர்வுக்கு ஒரு தமிழர் போட்டியிட்டால்…. இங்கு பல கருத்துக்கள உறவுகளின் கருத்துப்படி அவர் தோல்வியுற்றாலும், சிங்கள மக்களிடமிருந்து அவருக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன என்பதை அறிவதற்குக் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவும் அது அமையும். சிங்களவர் அனைவரும் கெட்டவர்கள் அல்ல, தமிழர்கள் அனைவரும் நல்வர்களும் அல்ல. அனுராதபுரத்தில் 1977ல் நடந்த கலவரத்தில் சிங்களக் காடையர்களிடமிருந்து எங்கள் குடும்பம் உட்படப் பல தமிழர்களைக் காப்பாற்றிது சிங்களவர்கள்தான்.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
பூந்திலட்டிலை எம்மாம் பெரிய புழுகள் நுழைந்து துள்ளுதுகள் இதைப்பார்த்த பின்னரும் பார்சல் கட்ட மனம் வருமா? இதைச் செஞ்சவரை கொஞ்சத்தான் மனம்வருமா?? மூஞ்சைகழுவி எவ்வளவு நாளாச்சோ??? 😟 பெரிசு! நீங்கள் சாமியாரைத் தவறாக எண்ணவேண்டாம்!! சைனாவிலோ, கொரியாவிலோ நீங்கள் புலம்பெயர்ந்து இருப்பதாக அவர் பிழையாக எண்ணிவிட்டார்போல!!!.😳
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
கந்தையா அவர்களுக்குக் கண்பார்வை 57க்கும் மேலை.😳
-
நாட்டில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் உயர்வு
இலங்கை ஒரு இனம் வாழும் நாடல்ல. பிறப்பு விகிதம் எந்த இனத்தில் குறைவடைந்துள்ளது?? எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.😳
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
எங்கள் மூன்றுபேரின் சந்திப்புக்கும் வந்த வாழ்த்துக்ககளயும் வரவேற்புகளையும் காணும்போது….. யாழ்கள உறவுகள் அனைவரையும் அழைத்து ஒரு கொண்டாட்ட விழா வைக்கலாமோ என்று தோன்றுகிறது. 🤪 சாமியார் மோதிரம் மாத்தி முடிந்ததும், சிறியர் முறுக்குச் சாப்பிட்டு முடிந்ததும் வைக்கச் சொல்லி ஒரு பட்சி சொல்லுது.😆
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்திய இலங்கை நாடுகளுக்கு கடல் எல்லைகள் உண்டா? அதனைக் கண்டுபிடிப்பது எவ்வாறு?? மதில் கட்டப்பட்டுள்ளதா? அல்லது சிலைகள் நிறுவப்பட்டுள்ளனவா?? சிலைகள் தட்டுப்பாடென்றால் இலங்கை அகழ்வாராச்சி நிறுவனத்திடம் ஏராளமான சிலைகள் இருப்பதாகச் செய்திகள் வருகின்றனவே!!😆
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
சும்மா சொல்லக்கூடாது... பூந்தி லட்டு ஒவ்வொரு கடிக்கும் சொர்க்க உலகம் தெரிஞ்சிருக்குமே? 😀அந்த மாதிரி ரேஸ்ற் என்ன....😂 பூந்தி லட்டு உருட்டின கைக்கு மோதிரமே போடலாம் 😎 போற போக்கைப் பார்த்தால் சாமியார் மோதிரம் போடமாட்டார்… மோதிரம் மாத்திப்போடுவர் போலத் தெரிகிறது.😋
-
பிரபாகரனுக்கு நன்றி கூறவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன? தமிழன் பிரபாகரனையும் நக்கும், சிங்கள நாயக்கர்களையும் நக்கும்.🤪
-
ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு ஊடகவியலாளருக்கு யேர்மனியில் அதி உயர் விருது கிடைத்திருக்கிறது
ஊடகத்துறை சார்ந்தவர்கள் அனேகமாக உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்கும் பணிகளைச் செய்யும்போது, அந்த உண்மைகளின் சூட்டினால் அவர்களே தாக்கப்பட்டு அவதிப்படுவதைக் காண்கின்றோம். இதில் சாதாரண மக்களை விடவும் அதிகாரம் உள்ளவர்களால் தாக்கப்படும் போது உயிருக்கே ஆபத்து நேர்ந்துவிடுவதையும் கண்டுள்ளோம். இங்கே துமிலன் அவர்களின் அறிக்கையால் உண்மைஅறிந்த காவல்துறை மன்னிப்புக் கேட்டாலும், இது தனக்கு நேர்ந்த ஒரு அவமானமாக, இழிவாக அந்தத் துறையின் அதிகாரவர்க்கம் அதனை எண்ணவைத்து, துமிலன் தொடரப்போகும் செய்திகளில் சிறு தவறு கண்டாலும் அதனை ஊதிப் பெருப்பித்து தனது சூட்டைத் தணிக்க முற்படலாம். ஆகவே துமிலன் தனது தொடரப்போகும் பணியை, மிகவும் அவதானமாகவும், கவனமாகவும் மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகிறேன்.🙌
-
ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு ஊடகவியலாளருக்கு யேர்மனியில் அதி உயர் விருது கிடைத்திருக்கிறது
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா….? அதுவும் தந்தை ஆண்புலி, தாய் பெண்புலி, இருவருமே எழுத்துலகிலும் கால்பதித்துப் பாராட்டுப் பெற்றவர்கள். குட்டி 16அடி பாய்ந்து அதுவும் Stern Award பெற்றதில் வியப்பேதும் இல்லை. குட்டி துமிலனை மனசார வாழ்த்துகிறோம்.🙌 ‘நெஞ்சில் நின்றவை’ என்ற தொகுப்பில் தாயகத்தின் நினைவுகளை மூனா என்ற புனைப்பெயரில் பதிந்திருந்த துமிலனின் தந்தை செல்வகுமாரன் அவர்கள், ‘மறக்க மறுக்கும் மனசு’ தொகுப்பில் புலத்தின் வாழ்வையும் பதிந்துள்ளார். அவரது சித்திரங்கள், கேலிச்சித்திரங்களை யாழ்களமே வியந்து பாராட்டியுள்ளது சொல்லித் தெரியவேண்டியதில்லை. தாய் சந்திரவதனா செல்வகுமாரன் அவர்களின் எழுத்துக்களை ஐபிசி தமிழ் வானொலி உற்சாகமாக வரவேற்றுக் கொண்டுள்ளது. அவரது கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், ஆய்வுகள், விமர்சனங்கள் எனப் பலதரப்பட்டவைகள் வானொலிகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள் எனப் பலவற்றிலும் பரவி நிற்கின்றன. தன் குடும்பத்திற்கு மேலும் பெருமை சேர்த்த துமிலனுக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டுகளைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறோம்.😀
-
"பண்டைய இலக்கியத்தில் மரணம்" (புறநானுறு & நாலடியார்)
கூற்றுவனை வணங்கு! இன்பம் என்று நீ உணரும் துன்பம்தரும் உன் உடம்பை ஆட்கொண்டு அமைதிப்படுத்துபவன் அவனே. அந்த அமைதிக்கு ஒரு பெயர் இறப்பு.🙏
-
அம்பாறையில் பயங்கரம் ! மக்கள் குடியிருப்புகளுக்குள் முதலைகள் படையெடுக்கும் அபாயம் !
பொற் காலத்துக்கும் கற் காலத்துக்கும் முன்பு இந்த உலகில் வாழ்ந்த மிருகங்கள் டைனோஸார்ஸ் (Dinosaurs) எனப்படும் மிருகங்கள். அவை சுமார் அறுபத்தைந்து மில்லியன் வருடங்களுக்கு முன்பு இந்த உலகில் இருந்து மறைந்து விட்டன. ஆனால் அதே கால கட்டத்தில், அதாவது சுமார் 200 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்து, வாழ்ந்து வந்த இரு உயிரினங்கள் இன்றும் வாழ்கின்றன். அவற்றில் ஒன்று கரப்பான் பூச்சி. மற்றொன்று முதலை. முதலை குளிர்ந்த ரத்தம் கொண்ட ஒரு பிராணி. அதாவது நம் உடல் நிலை போன்று அதன் உடலின் உஷ்ணம் ஒரே நிலையில் இல்லாது வெளி உஷ்ணத்தைப் பொருத்து இருக்கும், பாம்பு, பல்லி போன்று. பல்லி, ஓணான், உடும்பு போல முதலை ஒரு ஊர்வன வகுப்பைச் சேர்ந்த பிராணி. இது வாழ்வது நீரில், முக்கியமாக ஆறுகளிலும் ஏரிகளிலும். உப்பு நீரில் வாழும் முதலைகளும் உள்ளன. ஆதாரம் கூகிள்.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
இது தான் குமரன்சாமி அண்ணையோ? மேலே கவி இணைத்த படம் யாருடையது?? கவி அருணசலம். என்று நினைக்கிறேன்! இவர் தான் ஈழத்து அரவிந்த சாமி புரிய வில்லையா? குமாரசாமியரைப் பார்க்க சில களத்து உறவுகள் படும்பாடு,,,,, அங்கலாய்ப்புத் தாங்க முடியவில்லை. தம்பி என்கிறார்கள், அண்ணன் என்கிறார்கள், குமரன் என்கிறார்கள், தாத்சாதா என்கிறார்கள், சாமி என்கிறார்கள்….. நான் நினைக்கிறேன் அவரது குடும்பப் படத்தை எப்படியோ இந்தச் சிலர்பார்த்து விட்டதால்!!! “மாமா” என்று அழைக்க முண்டியடிக்கிறார்களோ தெரியவில்லை. குமாரசாமி அவர்களின் குடும்பப் படத்தை நான் யாருக்குமே அனுப்பியதில்லை. “நானும் அனுப்பியதில்லை” தமிழ்சிறி தம்பியும் என் தலைமேல் அடிக்காத குறையாகச் சத்தியம் பண்ணுகிறார். அப்போ எப்படி??????😟🤪
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
குரங்கு அப்பம் பிரிக்க வந்து தன்வயிற்றை மட்டும் நிரப்பிக் கொள்வதுதான் கதை. இலங்கையில் 76 வருடங்களாக அப்பம் பிரிக்க வருவது குரங்கல்ல நாய்கள். வைக்கல் பட்டடை நாய்கள்.😳
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ராசவன்னியர் தமிழ் நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்குத் தமிழீழத்தின் சிறிய அடையாளங்கள் கூடத் தெரியும். மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்குப் பலமுறை நான் சென்றுள்ளபோதும் கண்டுகொள்ளாத ஒரு காட்சி…. அதாவது சில முனிவர்களின் சிலைகள் அங்கிருப்பதை அவர் சொல்லித்தான் நான் கவனித்துக் கண்டேன்.😄
-
பாஞ்ச் தம்பதியினருக்கு இனிய 53´வது திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
“டேய் குமார் தம்பி” என்று நான் அவர் தோளில் கைபோட்டுப் பழகக் கூடிய இளவயசு கொண்டவர் குமாரசாமி அவர்கள், தானும் எங்களை வாழ்த்தவந்து வடை, கோப்பித்தண்ணி என்று உங்களைப்போல் தாத்தாவைச் சிரமப்படுத்தக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் அவர் வராமலும் இருக்கலாம்.😌
-
பாஞ்ச் தம்பதியினருக்கு இனிய 53´வது திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
எங்களை வாழ்த்திய அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்!!🙏🙏 என்னுடன் அமெரிக்கப் படைத்தளத்தில் வேலைபார்த்த அமெரிக்க நண்பர் ஒருவர் எங்கள் 25வது திருமணநாளில் வாழ்த்தியபோது 25வருடங்களாக ஒரு மனைவியுடனா???. ஆச்சரியப்பட்டார், இன்று அவர் 53என்று அறிந்தால் நிச்சயம் மூர்ச்சையடைந்திருப்பார்.😳😂
-
சாமி சிறீ பாஞ்
இன்று எனக்கு அப்பா இல்லை, அம்மா இல்லை, கூடப்பிறந்த சகோதரங்கள் யாருமே இல்லை. தனித்துவிட்டேன் என்று கலங்கினேன், மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்தான் உலகம் என்றிருந்தேன். என் பதிவை இந்த யாழ்களத் திரியில் பார்த்தபின்புதான் எனக்கு எத்தனை சொந்தங்கள் பந்தங்கள் என்று அறிந்து மகிழ்ந்தேன் வியந்தேன். என்னைத் தேடிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்!! எனக்க இப்போ வயது கீழிறங்கிப் 18 ஆகிவிட்டது.😍😁🙏
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
அதுசரி சாமியார்.. நீங்கள் குளிருக்குப் போத்துப் படுக்க பெட்சீட் பாவிக்கறது இல்லையாம், பரிமளாக்காவின் சாறியைத்தான் பாவிக்கிறதா கேள்விப்பட்டன், உண்மையா??? அதுதான் சாறிஞாபகம் வந்ததோ????😁😂
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
நான்தான் முத்திப் பழுத்து மூன்றாவது கால்தேடும் நிலமைக்கு வந்துவிட்டேனோ என்று கவலைப்பட்டால்….. களத்தில் சில உறவுகள் நாங்கள் பிஞ்சிலேயே பழுத்துவிட்டோம் என்று என்னை விஞ்சி நிக்கினம். தம்பி குமரன்சாமியைச் சந்திக்க அவரது உறவுக்காரப் பிள்ளையின் பூப்புனித நீராட்டுவிழா நடைபெறும் மண்டபம் சென்றோம் என்று அழகிய தமிழில் அச்சுப்போல் எழுதியும் வாசித்த இளசுகள் சிலர் திருமண நினைவிலேயே உள்ளனர். உமி தூக்கும் பலம் உள்ளவரை காமரசம் கண்களை மறைக்கும் என்பது உண்மைதான்.😍😋
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
நான் புலம்பெயர்ந்து வந்து நான்கு வருடங்கள் என் மனைவி பிள்ளகளப் பார்க்க முடியாது தவித்த தாக்கத்தையும் சோகத்தையும், திரும்பவும் யாழ்களம் செல்ல இயலாதிருந்த இரண்டு வருடங்களில் அனுபவித்தேன், இடைஇடையே சிறீ மற்றும் வன்னியரின் இவர்களின் தொடர்புகள் சற்று ஆறுதல் தந்ததை மறுக்க முடியாது. இந்நேரத்தில் தமிழ் சிறீ அவர்கள், கள உறவு குமாரசாமி அவர்களை நாளை சந்திப்போமா என்று கேட்டது கனவுபோல் இருந்தது. எங்கு எப்படி எவ்வாறு என்பதெல்லாம் விபரமாகக் கூறினார், சிறீயருக்கும் கால்கள் இன்னமும் பூரண குணமாகாதபடியால் அவர் மகன் அல்லது மகள் கூட்டிச்செல்வார்கள் என்ற எண்ணத்தில் சரி வருகிறேன் என்றேன். மறுநாள் காலை 10.30மணிக்கு ஒரு வியாபார நிலையத்தில் சந்தித்துச் செல்வதாகவும், என்மகள் என்னை அந்த நிலையத்திற்குக் கூட்டிச் செல்வதாகவும் முடிவாயிற்று. சூரியன் பார்த்து நேரம் கணிக்கும் பண்பாட்டிலிருந்து பாஞ் இன்னமும் விடுபடவில்லையோ என்ற ஐயத்தினால் போலும் “பாஞ் எங்குள்ளீர்கள்” என்ற சிறீயரின் கேள்வி என் போனில் ஒலித்தது. போன் ஒலிக்கவும் நாங்கள் அவருக்குக் கைகாட்டிக் கடக்கவும் சரியாக இருந்தது. மகிழூந்தில் சிறீயர்மட்டுமே இருந்தார். “உங்களுக்கு கால்கள் இயலுமா? தூரம் ஓட்ட முடியுமா? என்று கேட்டதுதான் தாமதம், அந்தக் கேள்விக்காகவே காத்திருந்ததுபோல் திறப்பை என்னிடம் தந்துவிட்டார். நான் பலமுறை ஓடி அனுபவப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை, சில மணித்துளிகளில் மகிழூந்து வைபவம் நடைபெறும் மண்டபத்தை அடைந்தது. நாங்கள் அழையா விருந்தாளிகள். ஓசிச் சோற்றுக்கு வந்துவிட்டதாக எண்ணிவிடுவார்களோ என்று விழி பிதுங்கிநிற்க “அண்ணைவாங்கோ” என்ற வரவேற்பு அதிசயிக்கவைத்தது. பல காலமாக சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்காத என் நண்பன். “வாங்கோசிறி” தமிழ்சிறியோடு வேலைபார்த்த அவரது நண்பன். மனம் அமைதிபெற வந்தவிடையத்தை ஆரம்பித்தோம், “கனோவரில் இருந்துவந்த குமாரசாமி என்பவரைத் தெரியுமா?” எங்களைப் பார்த்து புன்முறவல் பூத்தவர்கள் எல்லோரிடமும் இந்தக் கேள்வி பாய்ந்தது. முகமெல்லாம் மலர்ந்த புன்முறுவலோடு பட்டுவேட்டி சரசரக்க ஒரு குமரன் வரவே அவரிடமும் எங்கள் கேள்வி தொடர்ந்தது. அவரோ வாருங்கோ இருங்கோ” என்று எங்களை வரவேற்றவர், பக்கத்தில் ஒருவருக்கு சைகைகாட்ட காப்பியோடு பலகாரத்தட்டுகள் பறந்து வந்தன. குமாரசாமி அவர்களின் தமிழ்மொழி ஆற்றலை அவரது எழுத்தில் அறிந்து வியந்தேனே தவிர அவரோடு அதிகம் கதைத்துப் பேசியதில்லை, ஆனால் அதிகம் கதைத்து குரல் அறிந்த தமிழ்சிறி அந்தக் குமரனைக் கட்டியணைத்து சாமியண்ணை என்றார். மொட்டைத் தலையோடு வயதான ஒரு பெரியவராக என் மனதில் பதித்துவைத்த குமாரசாமியரை குமரன்சாமியாக கண்ட அதிர்ச்சியில் நான் உறைந்து நின்றேன்.
-
சாமி சிறீ பாஞ்
eBay Kleinanzeigen ist jetzt Kleinanzeigen. அன்புள்ள யாழ்கள உறவுகள் அனைவருக்கும் மறுபிறவி எடுத்த என் இதயம் கனிந்த வணக்கங்கள்🙏🙏 எனது இதயத்தை இயக்குவதில் பிரதான பங்குவகிக்கும் இரத்தக் குழாய்யொன்று இயங்கமறுத்து என் வாழ்வை முடிவுக்குக் கொண்டுவர முயன்றதைக் கண்டறிந்த வைத்தியர் எனது நெஞ்சை வெட்டிப்பிளந்து அந்தக் குழாய்வழியை மாற்றியமைக்க 5 மணித்தியாலங்கள் சென்றதாம், அதன்பின்பு இருதயம் தடையின்றி இயங்குவதற்காக நெஞ்சில் ‘மின்கலம் ஒன்றைப் பொருத்தும்போது இன்னொரு குழாயில் இரத்தம் கசிவது கண்டு அதனைச் சரிசெய்யாது விட்டால் இவருடைய வாழ்க்கை இன்னமும் 11நாட்களே என்று வைத்தியர் தெரிவித்ததால் வெட்டித் தைத்த இடத்தை மீண்டும் வெட்டி மேலும் 4 மணித்தியாலங்கள் சிகிச்சை நடைபெற்றதாம். கடவுளைக் காட்டித் தமிழர்களை மயக்கி வடவர் தங்கள் மொழியை தமிழர்களுடைய கோவில்களில் வளர்த்து வருவதுபோல், என்னை மயக்கமடைய வைத்து இதனைச் செய்ததால் சிகிச்சையின் தாக்கத்தை நான் உணரவில்லை. “செல்வத்துள் செல்வம் அருள்ச் செல்வம்” என்று பொய்யா மொழிப்புலவர் கூறியிருந்தார், ஆனாலும் நிலத்தில் அருள்ச் செல்வத்தையும் தேடிச் சேர்த்த காடையர்கள் பலர் இலங்கையில் இருப்பது கண்டு, அதிலும் அரச ஆட்சி அதிகாரத்திலிருந்து சொந்த மக்களையே கொல்லும் கொடியவர்களிடமிருந்தும் தப்புவதற்காக புலம்பெயர்ந்து வந்தபோதும், கூட இருந்தே குழிபறிக்கும் என் சொந்தங்களான என் நலம்காக்கும் இரத்த நாளங்களில் சில கருனாகூட்டம் போல் குழிபறித்ததால் வந்தநிலை இது. கள உறவுகளில் ஒருவரான திரு குமாரசாமி அவர்களைச் சந்திக்க வழிசமைத்த என் நண்பர் தமிழ்சிறீ அவர்களுக்கு என்நன்றிகள்.🙏🙏
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.