Everything posted by ஈழப்பிரியன்
-
தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!
இதுவரை தமிழர் பிரச்சனையை தீர்க அரும்பாடுபட்ட இலங்கை அரசுகள் தமிழர்களின் தேசிய கொடியை கனடாவில் ஏற்றியவுடன் கவலையில் இருக்கிறார்கள்.
-
இந்தியா எப்படி தோற்றது?
ஓஓஓ நன்றி கந்தப்பு. இதுவரை இப்படி ஒரு விதி இருப்பது தெரியாமல் போய்விட்டது. எனக்கு மட்டுமல்ல மற்றைய உறவுகளுக்கும் தெரியாமலேயே இருந்துள்ளது. இந்திய அணியில் ஒவ்வொரு பந்துக்கும் 6 6 6 என்று அடித்த வீரர்கள் இருக்க ஏன் இந்த வீரர்களை இறக்கி தோல்வியை தாங்களே தேடிக் கொண்டனர்.
-
திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் ஜீவன் தொண்டமான்!
மலையக பிரபலங்கள் பலரும் இந்திய பெண்களையே திருமணம் செய்வது ஏன்? அங்கேயுள்ள சொத்துக்களை பாதுகாக்கவோ எனும் ஐயம் எழுகிறது?
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்! வெளிநாட்டு பயணிகள் மகிழ்ச்சி தெரிவிப்பு
இந்த மின்நுழைவாயிலை யாராவது பாவித்துள்ளீர்களா?
-
இந்தியா எப்படி தோற்றது?
இப்போதும் இது பெரிய அதிசயமாக உள்ளது. @வீரப் பையன்26 @கந்தப்பு இப்போதும் இது பெரிய அதிசயமாக உள்ளது. இதுபற்றி உங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவிக்கலாமே?
-
இந்தியா எப்படி தோற்றது?
இந்தியா எப்படி தோற்றது? சுப்பர் ஓவர் என்றால் 6 பந்துகள். இரண்டு பந்தில் இருவர் அவுட் ஆகினால் சுப்பர் ஓவர் முடிவடைந்திடுமா?
-
இரத்தப் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த என் நண்பனின் கதை இது - கண்டிப்பாக வாசிக்கவும் - நிழலி
உங்கள் நண்பர் மறுபிறவி எடுத்துள்ளார். தானம் கொடுத்தவை காலம் காலமாக போற்ற வேண்டும். எமது இனத்தில் இரத்ததானம் செய்வதே மிகக் குறைவு.
-
துபை விமானக் கண்காட்சியில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் - என்ன நடந்தது?
இந்திய விமானப்படைக்கே பரிசு கொடுக்க வேண்டும். விமானத்தையே விழுத்தி சாகசம் புரிந்துள்ளனர்.
-
சென்னைக்கு மாற்று அவயங்களை பொருத்த சென்றவர்கள் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பினர்
சம்பந்தப்பட்டோருக்கு பாராட்டுக்கள்.
-
அரசாங்கத்திற்கு எதிராக பொது எதிரணியின் கூட்டம் இன்று!
வாத்தியாரே நான் போத்தலைக் கேட்கவில்லை. பேரணிக்கு வந்த மக்களைக் கேட்டேன். நீங்களும் பேரணியால் வருகிறீர்களோ?
-
அரசாங்கத்திற்கு எதிராக பொது எதிரணியின் கூட்டம் இன்று!
என்ன சாராய போத்தல் மாதிரி தெரியலையே? இது ஜானி வாக்கர் மாதிரி அல்லவா இருக்கு.
-
கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை வரலாற்றில் தமிழனுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்!
இதுவரை தலைவர் பதிவி எந்த தமிழருக்கும் கிடைக்கவில்லை.முதல் தமிழராக பேராசிரியர் அமிர்தலிங்கம் பெற்றுக் கொண்டதை கொண்டாடுகிறார்.பாராட்டுகிறார்.
-
துபை விமானக் கண்காட்சியில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் - என்ன நடந்தது?
மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வீழ்ந்தபடியால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது. சொந்த நாட்டில் என்றாலும் பரவாயில்லை. இன்னொரு செல்வம் கொளிக்கும் நாட்டில் பழைய விமானத்தை சரிபிழை சரியாக பார்க்காமல் சாகசம் காட்டுவதா?
-
நயினாதீவு கடற்போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்; வேலணை பிரதேச சபையிடம் வலியுறுத்து
இந்தப் படகுசேவையில் கடந்த வருடம் நயினாதீவு போயிருந்தேன். அளவு கணக்கில்லாமல் மக்களை ஏற்றுகிறார்கள். ஏதாவது ஒரு விபத்து நடந்தால் கீழ்த் தட்டில் இருப்பவர்கள் உயிர் பிழைப்பது அருமையே. இதுவரை இதுபற்றி யாருமே அலட்டிக் கொள்ளாதது வியப்பாக உள்ளது. நயனை அம்மாளும் நயினை புத்தரும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் மக்கள் போய் வருகிறார்களோ?
-
அரசாங்கத்திற்கு எதிராக பொது எதிரணியின் கூட்டம் இன்று!
1000 பேருக்கு மேல் வரமாட்டார்கள் என்றார்கள். ஆனாலும் பெரியதொரு கூட்டமே வந்துள்ளது போல தெரிகிறது. எத்தனை தலைகள் என்று எந்த ஊடகமாவது கணக்கெடுத்துள்ளதா?
-
இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களுக்கு என்ன நடக்கிறது?
எல்லை தாண்டும் மீனவர்களுக்காக முடடைக் கண்ணீர்விடும் பத்திரிகையாளர் மீனவர்களை எல்லை தாண்டி போகாமல் மீன் பிடிக்க சொல்லலாமில்ல.
-
இலஞ்சம் பெற முயன்ற நெடுங்கேணி பொலிஸ் சார்ஜன் கைது!
சிறி இவர் எப்படி தமிழர் என்று அடித்துக் கூறுகிறீர்கள்? பெயரைப் போடாதபடியால் சந்தேகமாக உள்ளது.
-
வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த அனுமதிப் பத்திரம் இல்லை – DMT அறிவிப்பு!
2017 இல் இலங்கை சுற்றுலா சென்ற போது காலி திருகோணமலை போன்ற இடங்களில் வெள்ளைகளில் பலர் ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓடுகிறார்கள். இவர்களிடம் சாரதி அனுமதிப் பத்திரம் இருக்கிறதா எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டேன். பொலிசாரும் சேர்ந்தே இந்த குற்றத்துக்கு ஒத்துப் போயிருக்கிறார்கள்?
-
ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் போது பாராளுமன்றில் உறுப்பினரல்லாத இருவரே ஜனாதிபதியின் அருகிலிருந்து பேசுகிறார்கள்.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
Story of 2005/06..!!! 2005/06இல் இதே போல் திருகோணமலை பிரதான பேருந்து நிலையத்தில் ஒரு பெரிய புத்தர் சிலை இரவோடு இரவாக வந்தது. நீதிமன்றம் அகற்ற உத்தரவிட்டது ஆனால் எதுவும் நடக்கவில்லை. அன்று பல விதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. விக்னேஸ்வரன் அவர்கள் தொடர் கடையடைப்பு போராட்டதுக்கு அழைப்பு விடுத்தார். எத்தனையோ போராட்டங்கள் நிகழ்த்தியும் எந்தப் பயனும் இல்லை. இந்த தொடர்போராட்ட எதிர்ப்பு நிகழ்வுகளால் பேரினவாதம் ஆத்திரமடைந்தது. ஒரு நாள் முன்னாள் ஜேவீபியின் mp ஒருவரின் அனுசரணையில் திருகோணமலை நகரம் காடையர்களால் கொழுத்தப்பட்டது. பலர் வீதிகளில் வெட்டப்பட்டு வீசப்பட்டனர். உயர்தரம் முடிந்து மக்கள் வங்கியில் சிறிதுகாலம் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அங்கு வந்து வங்கியை உடைக்க முனைந்தார்கள். அதில் சிக்குண்டு மீண்டு வந்தது எனக்கு நினைவிருக்கின்றது. பெளத்த ஆதிக்கத்துக்கான எதிர்பைக் காட்டி உயிர்களை விட்ட பூமி திருகோணமலை. எந்த நாய்கள் வந்தாலும் எந்தக் காட்சியும் இங்கு மாறுவதாக இல்லை. 2005/06 இல் திருகோணமலையில் இடம்பெற்ற கலவரம் இன்றும் நாம் ஓர் எல்லையை மீறி எதுவும் செய்தால் இப்படித் தான் வெட்டி வீசப்படுவோம். அன்றாவது பிடித்துக்கொள்ள ஒரு கை இருந்தது. இன்று? https://www.facebook.com/share/p/1AN23V5Soi/ பலராலும் அறியப்பட்ட ராஜ்குமார் ரஜீவ்காந் என்பவரின் முகநுhலில் இருந்து.
-
நாமலா?கருணாநிதியா?
மானம் கெட்ட சுமந்திரன். கர்ச்சிக்கும் கறுப்பு பட்டி கருணாநிதி. பழைய காலத்து மித்திரன் பத்திரிகை பார்த்த மாதிரி இருந்தது.
-
ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி
நாய்க்கு கல் எறிவதே உங்க வேலையா போச்சு. அப்புறம் துரத்துது கடிக்குது என்று முறைப்பாடு வேற. எதுக்கும் சாத்தான் வருமட்டும் பொறுத்திருப்போம்.
-
அமெரிக்காவின் அவலம்
In the U.S., about 41.7 million people received benefits from the Supplemental Nutrition Assistance Program (SNAP) on average per month during fiscal year 2024 — about 12.3% of the population. இலங்கையிலும் ஏதோ ஒரு பெயரில் 10 ஆயிரம் கொடுக்கிறார்கள் என எண்ணுகிறேன். மத்திலுள்ள மாநிலங்களில் உள்ள ஏழைகள் சிகப்பு கட்சிக்கு வாக்கைப் போடுகிறார்கள். இந்த தடவை கொஞ்சம் மாட்டிக் கொண்டார்கள். இவர்களுக்கான மருத்துவ காப்புறுதியையும் மாற்றுகிறார். இதன் தாக்கம் இன்னும் கொஞ்ச காலத்தில் தெரியும்.
-
நீ இயந்திரம் நான் பிரேக்
இரட்டையர்களில் அனேகமானோர் அழகாகவும் ஒரே மாதிரியாகவும் ஒற்றுமையாகவும் இருப்பார்கள். இறப்பு ஒன்றாக நடந்திருப்பது புதுமை தான். காரணம் வேறு தெரியவில்லை.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அட பாவிகளா வாகனத்தை ஓரமா நிறுத்திவிட்டு ஒழுங்கா அனுபவித்திருக்கலாமே?