Everything posted by ஈழப்பிரியன்
-
காட்டாட்சி நிலவிய காலப்பகுதி முடிந்துவிட்டது- இனி சட்டத்தின் ஆட்சி தான்- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
ஒரு கிலோமீற்றர் தூரத்தில் பொலிஸ்நிலையம் இருக்கும் போது பாரிய டிப்பர்கள் மூலம் கள்ளமண் அள்ளிக் கொண்டு போகிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பெரிய மாபியாவாக இருக்கிறார்கள். இலங்கைக்கு வெளியே பாதாள உலகைத் தேடும்போது உள்ளூரில் இருக்கும் பாதாள உலக கோஸ்டியையும் அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டிருக்கும் காவல்துறையையும் இதுவரை அரசு கண்டு கொள்ளவே இல்லை என்பதும் சந்தேகத்திற்கு இடமாக உள்ளது.
-
கறுப்பு இராச்சியமாக செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களை முழுமையாக இல்லாதொழிப்பேன் - ஜனாதிபதி
நல்லவிடயம். தமிழர் பகுதியிலும் உங்கள் கடைக்கண் இருக்கட்டும் சார்.
-
ஜெர்மனி ICU வில்.
இரண்டாவது உலக யுத்தம் முடிந்த பின் அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படியே ஜேர்மனி அகதிகளை ஏற்றுக் கொள்கிறதே தவிர ஜேர்மனி அகதிகளை விரும்பி ஏற்றுக் கொள்ளவில்லை. அதே மாதிரி யப்பானும் அமெரிக்க அமெரிக்க அனுமதி இல்லாமல் பெரியளவில் ஆயுதங்களை செய்யமுடியாது என்றொரு ஒப்பந்தம் இருப்பதாக செவிவழி மூலம் அறிந்தேன்.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
அந்தநேரம் தான் இந்த முறையை கொண்டு வந்திருந்தனர். நாம தான் அதைக் கண்டு கொள்ளவில்லை.
-
அவுஸ்திரேலியாவில் இந்திய கடைக்கு எதிராக இலங்கையர் எடுத்த அதிரடி நடவடிக்கை
எங்காவது இந்தியர்களுக்கு அடி விழுந்தால் அது எமக்கும் விழுந்த அடி தான்.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
முழு விமானநிலையத்துக்கும் (ரேமினல்ஸ்)வண்டிகள் உள்புக ஒரேஒரு பாதை. முதலில் உள்ள ரேமினல்கள் கொஞ்சம் கூடுதலான வாகனங்கள் நின்றால் பின்னால் வரும் வாகனங்கள் உள்நுழையவே முடியாது. 2015 இல் கொழும்பில் இருந்து சிட்னி கொழும்பு எயர்ஏசியாவில் மிகக் குறைந்த விலையில் எடுத்திருந்தோம். இரவு 11 மணிக்கு விமானம். அங்கே போனபின் அவுஸ் விசா எங்கே என்றார்கள். அமெரிக்கா புத்தகத்துக்கு விசா தேவையில்லையே. இப்போது புதிய சட்டம் எலக்ரோனிக் விசா எடுக்க வேண்டும்.உடனேயே எடுக்கலாம்.எடுத்ததும் லைனில் நிற்காமல் நேராக இங்கே வாருங்கள் என்றார்கள். போனை நோண்டினால் சரியாக வேலை செய்யவில்லை. பிள்ளைகளுக்கு விபரத்தைச் சொல்லி எடுத்து அனுப்பியிருந்தனர். விமானம் புறப்படும் நேரம் வந்தும் புறப்படுவது போல தெரியவில்லை.இயந்திர பிரச்சனை என்றார்கள்.கடைசியில் இரண்டு மணிபோல கொழும்பு கில்டன் கோட்டலில் சாப்பாட்டு வவுச்சருடன் தூங்கினோம். அடுத்த நாள் இரவு விமானநிலையத்துக்கு பேரூந்தில் கொண்டு போய் விட்டார்கள். அடுத்த நாளும் இதே பிரச்சனை.சனம் கூயா மாயா என்று கத்தி குளறி எதுவும் ஆகவில்லை. மீண்டும் கொட்டல். அடுத்த நாளே ஒரு மாதிரி புறப்பட்டோம். அந்த விமானத்தில் பச்சைத் தண்ணீராலும் பணம் கொடுத்தாலே கிடைக்கும். எந்த ஒரு தமிழனும் விரும்பி பறக்காத விமானத்தில் ரிக்கட் எடுத்த போதே இப்படி ஏதாவது நடக்கலாம் என எண்ணினோம் என்று நையாண்டி பண்ணினார்கள். 2 சொட்டை வாங்கி ஊத்திப் போட்டு நீட்டி நிமிர்ந்து மற்ற சீற்றிலும் படுக்க வேண்டியது தானே.
-
நாமலை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
இரண்டு நாட்கள் முன்னர் தான் இவர்களது வலது கையான ரெலோவை சந்தித்தார்கள்.
-
அவுஸ்திரேலியாவில் இந்திய கடைக்கு எதிராக இலங்கையர் எடுத்த அதிரடி நடவடிக்கை
கடை நடத்துபவருக்கு நகராட்சி அனுமதி கிடைத்தே கடை நடத்துகிறார். அனுமதி கொடுக்கும் போது மக்கள் வருவார்கள். வாகனங்களை நிற்பாட்டுவார்கள். பாரிய வாகனங்கள் பொருட்கள் இறக்க ஏற்ற வரும் என்பதெல்லாம் தெரியாதா? உள்ள பொருட்களை எல்லாம் அள்ளி வீட்டு கராச்சில் போட்டுவிட்டு கையை உயர்த்திக் கொண்டு வங்கியிடம் போக வேண்டியது தான். அல்லது அனுமதி கொடுத்த குற்றத்துக்காக நகரசபையே ஒரு தொகையைக் கொடுத்து அனுப்ப வேண்டியது தான்.
-
குடத்தனையில் திடீரெனப் பெய்த மழை; வெங்காயச் செய்கை அழிவு
ஒவ்வொரு வருடமும் வெங்காய செய்கையின் போது ஏதோ ஒரு விதத்தில் அழிவைச் சந்திக்கிறார்கள். வழமையில் வெண்காயம் கிண்டும் நேரம் பார்த்து இறக்குமதியைச் செய்து விலையை வீழ்த்தி விடுவார்கள். இதனால் விவசாயிகள் செலவு செய்த முதலையே எடுக்க மிகவும் சிரமப்படுவார்கள்.
-
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
எங்களுக்கு ஏற்ற நேரகாலம். அமெரிக்க கண்டத்திலிருந்து போகிறவர்கள் தண்டனையாகவே எண்ணுகிறேன். 3-4 மணிநேரம் விமானநிலையம். மத்தியகிழக்கு போய்சேர 12 மணிநேரம். இடைத்தங்கல் 2-6 மணிநேரம். கொழும்பு போய்சேர 5 மணிநேரம். வாகனத்தில் ஊர்போய் சேர 7-8 மணிநேரம். மொத்தமாக எறத்தாள 35 மணிநேர தொடர் பயணம். ரொம்பவும் தளர்வடைய செய்கிறது. இதனாலோ என்னவோ அமெரிக்க கண்டங்களில் இருந்து போகிறவர்கள் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
-
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
அமெரிக்கா ஐரோப்பா கண்டங்களில் பாடசாலைகள் தொடங்கி விட்டன. எனவே இனிவரும் மாதங்களில் இது வீழ்ச்சியாக இருக்கும்.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
கில்லாடி வாத்தி.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
புலி திரும்பி ஓடினால்த் தெரியும்.
-
திலீபனின் 38வது நினைவு தினம் அனுஷ்டிப்பு
நல்லூரின் வீதியில் நடந்தது யாகம்.
-
எங்கள் அன்பு மகன் கலாநிதி பிரணவனுக்கு' / 'To Our Dear Son, Dr Piranavan [16/09/2025]
பிரணவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
ஜெர்மனி ICU வில்.
தாத்தாவாகின பின் அதுக்குள்ள நான் பெரிசு நீ பெரிசு என்று……. கோவிட்டுக்குப் பின் மற்றைய நாடுகளைவிட இந்தியா விரைவாக வளர்வதாக சொல்கிறார்கள். Germany Let’s calculate the average GDP growth rate for Germany from 2017–2025. We have these values (in %): 2017: +2.8 2018: +1.1 2019: +1.0 2020: −4.1 2021: +3.9 2022: +1.8 2023: −0.9 2024: −0.5 2025 (forecast): let’s use the midpoint of +0.2 (between 0.0 and +0.3) India Year Growth Rate (%)* 2017 ~ 6.8 % 2018 ~ 6.45 % 2019 ~ 3.9 % 2020 ~ −5.8 % 2021 ~ 9.7 % 2022 ~ 7.0 % 2023 ~ 9.2 % 2024 (forecast / estimated) ~ 6.5 % 2025 (forecast) ~ 6.3-6.5 %
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
- வெள்ளம் வடிந்தோட தடையாக உள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு நல்லூர் பிரதேச சபை உத்தரவு
நல்லூர் பிரதேச சபை என்பது இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு உள்ளூராட்சி சபை ஆகும், இது நல்லூர் பிரதேச மக்களின் தேவைகளைக் கவனித்து, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது. இது ஒரு வரலாற்று பின்னணியைக் கொண்டுள்ளதுடன், சமீபத்தில் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இணைந்து அதன் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன மாகாணசபைத் தேர்தலிலிலும் இவர்கள் கூட்டணி வைத்தால் சுமந்திரனின் கனவு நனவாகலாம்.- ஜெர்மனி ICU வில்.
ஒரு காலத்தில் ஓகோ என்று இருந்த ஜேர்மனி இன்று சேடமிழுக்கிறது. 2017-2025 வரை 1.7 வீத வளர்ச்சி. உலகிலேயே பெயர்போன தரமான வாகனங்களைச் செய்த ஜேர்மனி இன்று வாகனங்களை இறக்குமதி செய்கிறது. குறைந்த விலையில் எரிபொருட்களை ரசியாவிடமிருந்து பெற்றுக் கொண்டிருந்த ஜேர்மனி இன்று அதிகவிலை கொடுத்து எரிபொருட்களை வாங்குவதால் இன்று பல கம்பனிகள் மூடப்படுகின்றன. இதைப்பற்றிய உண்மை பொய் தெரியவில்லை. சிறிய வயதிலிருந்தே ஜேர்மனி மீது ஒரு ஆர்வம் இருந்தது. இங்கிலாந்து மீது வெறுப்பாகவும் இருந்தது. இந்தக் காணொளி பார்த்ததும் ஏதோ கஸ்டமாக உள்ளது. ஜேர்மன் வாழ் உறவுகள் ஊரில் வீடுவாசல் இருந்தால் விற்காமல் வைத்திருங்கள். இன்னொரு குண்டு என்னவென்றால் இளைஞர்களை விட வயோதிபர்களே கூடுதலாக வாழ்கிறார்களாம். இங்கும் கருத்தெழுதுபவர்களைப் @தமிழ் சிறி @குமாரசாமி @வாத்தியார் @panch @Kavi arunasalam இன்னும் பலர் பார்த்தால் சரியாகத் தான் இருக்குமெ எண்ணுகிறேன்.- வெள்ளம் வடிந்தோட தடையாக உள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு நல்லூர் பிரதேச சபை உத்தரவு
நல்லூர் பிரதேச சபை என்பது இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு உள்ளூராட்சி சபை ஆகும், இது நல்லூர் பிரதேச மக்களின் தேவைகளைக் கவனித்து, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது. இது ஒரு வரலாற்று பின்னணியைக் கொண்டுள்ளதுடன், சமீபத்தில் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இணைந்து அதன் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன.- iPhone 17-ன் புதிய அம்சங்கள் என்ன?
டாக்ரர் அர்ச்சுனா சம்சுங்கை மாற்ற மாட்டாராம். ஐபோனில் இரகசியமாக ஒலிப்பதிவு செய்ய முடியாதாம்.- வெள்ளம் வடிந்தோட தடையாக உள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு நல்லூர் பிரதேச சபை உத்தரவு
இதை நடைமுறைப்படுத்த பல வீடுகளும் இடிக்கப்பட வேண்டுமே? இம்முறை ஊர் போனபோது ஊரில் வண்ணாங்குளம் என்ற குளத்தில் அரைவாசி இடத்தில் சுற்று மதிலுடன் வீடு எழும்பியுள்ளது. இது ஒரு ஒதுக்குப் புறமான இடமும் அல்ல. பணம் குளம்வரை பாய்ந்துள்ளது.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அட உங்களுக்கும் தானா எனக்கு இப்ப சந்தோசம். எனக்கு மட்டுமல்ல ஊருக்கும் தான்.- விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார்!
தொடர்ந்து வைத்தியர்களை இழப்பது கஸ்டமாக உள்ளது. ஆழ்ந்த இரங்கல்கள்.- இனி சிம் கார்டுகளின் அவசியம் இருக்காதா?!
கடந்த வருடம் வந்த போன் பிள்ளைகள் வாங்கித் தந்தார்கள். அதற்கு சிம் இல்லை. நமக்கு இதுபற்றி தெரியாது. போன் கடையில் போய் சிம் மாற்றம் செய்ய போகும்போது சுற்றிசுற்றி பார்த்துவிட்டு சிம் எப்படி போடுவது? எந்த மொடல் போன்? என்று கடைசியில் இதற்கு சிம் இல்லை என்று கடைக்காரர் சொல்லியே எனக்கு தெரியும். இலங்கை போனபோது. - வெள்ளம் வடிந்தோட தடையாக உள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு நல்லூர் பிரதேச சபை உத்தரவு
Important Information
By using this site, you agree to our Terms of Use.