Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமிழ் மக்கள் கூட்டணியினுடைய தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் ஆதரவு தெரிவித்துள்ளார். எனினும் ரணிலை நாம் நிராகரித்தோம் என ரெலோ, புளொட் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவை தெரிவித்துள்ளன. முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்த கட்சிகள் மேலும் தெரிவித்தாவது, “ரணிலுக்கு தமிழ் மக்கள் கூட்டணியினுடைய தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் ஆதரவு தெரிவித்துள்ளதன் அடிப்படையில் பொது ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்கு நீங்களும் இணங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் எம்மிடம் கோரிக்கை விடுத்தார். நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனின் கட்சி ஒரு தனிக்கட்சி. அவர் யாரை ஆதரிப்பது என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு நிலைப்பாட்டை அவர் தெரிவிப்பது அவருடைய சுதந்திரம். நாம் அப்படியான முடிவுகள் எதையும் இதுவரைக்கும் எடுக்கவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாம் சந்தித்தது எமது மக்களின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிப்பதற்கும் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதற்கு அவருடைய அர்ப்பணிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்குமாகவே. மாறாக அவருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளருக்கு நாம் தெளிவாக தெரிவித்தோம்." என தெரிவித்துள்ளன. https://tamilwin.com/article/wigneswaran-agrees-to-support-ranil-1723667811
  2. ஜேர்மனியில் கால். வைத்தால் கையால் தான் நடத்து. கனடா போக வேண்டும் என்ன ஜேர்மன் வாள்வெட்டுக்குழு தலைவரே கபிதானை வெருட்டுறீர்களோ? கோத்தா ஓடியதற்கு அவரது ராணுவமே காரணம். ராணுவம் பார்த்துக் கொண்டிருந்ததற்கு அமெரிக்கா காரணம்.
  3. ஏற்கனவே சட்மாக்கி உள்ளதை சகல வல்லமை படைத்த ஜனாதிபதி ஒரே நாளில் அமுல்படுத்தலாம். இதற்கேன் அடுத்த தேர்தல்வரை பொறுத்திருக்கணும்?
  4. தலைப்பைப் பார்த்துவிட்டு பதறிப் போனேன். நீங்க ஊரில் இருந்தாலும் சரி வெளிநாடுகளில் இருந்தாலும் சரி படிக்கிற வயதிலிருந்து இப்போது வரை ஒரே அழைப்பிதழ்கள் வந்த வண்ணமே உள்ளன. பூப்புனித விழா திரியொன்று இன்னமும் சக்கைபோடு போடுது கவனிக்கலையோ?
  5. கல்லே கந்தையர் ஒட்டகம் வீட்டுக்குள் புகுந்து ரொம்ப காலமாச்சு. ஒன்றல்ல இரண்டு.(இன்னமும் இருக்கலாம்).
  6. அப்புறம் என்ன?இன்னொரு கட்சி தொடங்க வேண்டியது தானே?
  7. யார்யார் நேர்காணல் செய்வதென்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.
  8. உக்ரேனின் ராணுவ உடைக்குள் நேட்டோ அணி புகுந்துள்ளதாக பல ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
  9. அப்போது நடந்தது இந்தியாவின் கைக்கூலியான ஈ.பி.ஆர்.எல்.எப் எனும் கொலைக்குழுவின் காட்டாட்சி. முற்றான இராணுவ, கூலிக்குழுக்களின் அடக்குமுறையின் கீழேயே வடக்குக் கிழக்கு மாகாணங்கள் அடிமைப்பட்டுக் கிடந்தன. அந்தக் காட்டாட்சியினை குலைத்து, நிறுத்தியது சரிதான். தமிழருக்கென்று வடக்கையும் கிழக்கையும் இணைத்த இந்தியா இன்று அதுகுறித்துப் பேசுவதில்லையே, அது ஏன்? இப்போதாவது புரிகிறதா ஒப்பந்தத்தின் உண்மையான பயனாளிகள் யாரென்று? 13 வது திருத்தத்தை ஏற்றுக் கொண்ட ஒரேஒரு அமைப்பான ஈபிஆர்எல்எவ் வும் 13ஜ தூக்கியெறிந்துவிட்டு ஓடியவர்களே.
  10. ஆழ்ந்த நினைவஞ்சலிகள். இந்த இனப்படுகொலைகளை எமது அரசியல்வாதிகள் என்றுமே நினைவுகூருவதில்லையா?
  11. பாராளுமன்ற தேர்தலில் பலமான அரசாங்கம் உருவாகப் போவதில்லை என்ற நம்பிக்கையில் வார்த்தைகளை அள்ளி விடுகிறார். கழுதை தேய்ந்து கட்டெறும்பாகுது.
  12. சமஷ்டி முறையான அரசியல் தீர்வுக்கு ஆதரவான, பலம் மிக்க நாடாளுமன்றம் ஒன்று அமையும் பட்சத்தில் அது சம்பந்தமாகப் பரிசீலித்து முன்னேற்றகரமான முடிவுகளை எதிர்காலத்தில் எட்ட முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். தம்மை நேற்று (12.08.2024) திங்கட்கிழமை சந்தித்த மூன்று தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளிடமே அவர் இதனைக் கூறியுள்ளார். தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய மூன்று கட்சிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று அவரைச் சந்தித்தன. இந்தச் சந்திப்பு தொடர்பில் ரெலோவின் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பவை வருமாறு, “ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி செயலகத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம், பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) சார்பில் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் அவரை சந்தித்தனர். தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கிய சூழலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுக் கட்டமைப்பின் உறுப்பினர்களைச் சந்திப்பதற்கான அழைப்பைத் தனித்தனியாக அரசியல் கட்சிகளுக்கும் பொது அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகளுக்கும் விடுத்திருந்தார். மேற்குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் இந்த அழைப்புக்கு மதிப்புக் கொடுத்து தமிழ் மக்களின் பிரச்சினை சம்பந்தமான தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவும், ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாஷைகளைத் தீர்ப்பதற்காக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகளைப் பற்றி தெரிந்துகொள்வதற்காகவும் இந்தச் சந்திப்பில் பங்கேற்பது என்று முடிவு செய்தனர். இந்தச் சந்திப்பில் பிரதானமாகத் தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாஷைகளைத் தீர்க்கும் முகமான சமஷ்டி முறையான அரசியல் தீர்வு தொடர்ந்தும் தீர்க்கப்படாமல் இருப்பதனாலேயே தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது என்பது தெளிவுபடுத்தப்பட்டது. ஜனாதிபதி தரப்பில் சமஷ்டி முறையான அரசியல் தீர்வு என்பது பலம் மிக்க நாடாளுமன்றம் ஒன்று அமையும் பட்சத்தில் அது சம்பந்தமாகப் பரிசீலித்து முன்னேற்றகரமான முடிவுகளை எதிர்காலத்தில் எட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. அதுவரை பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட மாகாண சபைக் கட்டமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காகத் தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார். மக்களின் அரசியல் அபிலாஷைகள் அதற்காகத் தன்னிடம் தயாரித்து வைக்கப்பட்டிருக்கும் யோசனைகள் அடங்கிய ஆவணம் ஒன்றையும் அவர் சமர்ப்பித்தார். ஏற்கனவே மாகாண சபையின் பறிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களையும் மீள வழங்குவதாகவும், நிதி உட்பட மேலதிக அதிகாரங்களையும் பொருளாதார அபிவிருத்தி ஆணைக்குழுவையும் மாகாண சபை கொண்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். தமிழ் மக்கள் சார்பில், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, எஞ்சியுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு மற்றும் அபகரிப்பை தடுப்பது, தமிழ் இளைஞர்கள், யுவதிகள் நீதியற்ற முறையில் கைது செய்யப்படுவது, விசாரணை என்ற போர்வையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அச்சுறுத்தல் நடவடிக்கையை நிறுத்துதல், இந்திய கடற்றொழிலாளர்களுடைய அத்துமீறல் உட்பட பல விடயங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டன. இதற்கான தீர்வுகளை தான் நிச்சயமாக வழங்குவதாகவும், ஏற்கனவே சில விடயங்களுக்கான தீர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் தொல்லியல் விவகாரங்களைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தான் சமர்ப்பித்த ஆவணத்தில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன எனவும், அவற்றைப் பரிசீலித்த பின்னர் தொடர்ந்தும் சந்திப்புகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்க்கும் முகமான மேலதிக கலந்துரையாடல்களை நடத்துவதற்கு தமது தரப்பிலும் தயாராக இருப்பதாகச் சொல்லிய தமிழ்த் தரப்பினர், அவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் சம்பந்தமான விடயங்களை ஆராய்ந்து கருத்துத் தெரிவிப்பதாகக் கூறியதுடன் சந்திப்பு நிறைவடைந்தது” - என்றுள்ளது. https://tamilwin.com/article/ranil-expressed-his-stand-regarding-samashti-1723505976
  13. எமக்கும் வந்த புதிதில் பிள்ளைகளை எங்கே படிப்பிப்பது என்று பெரும் போராட்டமே.அந்த காலங்களில் திருமணமானவர்களே மிகவும் குறைவு. திருமணமான ஓரிரு குடும்பத்துக்கும் எமது பிள்ளைகளை விட வயதில் குறைந்தவர்கள். உயர்தர படிப்புக்கு எங்கே விடுவது?நல்ல பாடசாலைகளை எப்படி தெரிவு செய்வது?பல்கலைக்கு விண்ணப்பிப்பது?பல்கலைக்கான பணம் திரட்டுவது என்று மிகவும் கஸ்டப்பட்டோம். பின்னாள்களில் எம்மை கேட்டுகேட்டு எத்தனையே பேர் வழிநடத்தினார்கள். நாங்களும் எமக்கு தெரிந்த தெரியாத எல்லாமே நேரகாலம் பார்க்காமல் சொல்லிக் கொடுத்தோம்.
  14. ஜேர்மனியில் இருந்தனெல்லாம் லண்டன் கனடா என்று ஓடிட்டாங்களே? இப்ப ஆட்கள் பத்தாதோ? அப்ப என்ன சாப்பிட்டுவிட்டு போடும் குட்டி தூக்கத்தைக் கெடுத்துப் போட்டுதோ?
  15. லாஸ் ஏஞ்சல்ஸில் திங்கள்கிழமை காலை 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் தீவிரம் 4.7 ஆக இருந்தது, ஆனால் பின்னர் அது 4.4 ஆக குறைக்கப்பட்டது. ஆழமற்ற நிலநடுக்கம் 7.5 மைல் ஆழம் மற்றும் நேரடியாக லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அடியில் இருந்தது, எனவே ஒப்பீட்டளவில் மிதமான தீவிரம் இருந்தபோதிலும் பரவலாக உணரப்பட்டது. 4 முதல் 5 அளவுள்ள நிலநடுக்கங்கள் பொதுவாக லேசான அதிர்வை ஏற்படுத்துகின்றன மற்றும் எந்த சேதமும் ஏற்படாது. https://www.cnn.com/2024/08/12/us/earthquake-los-angeles-california-pasadena-la/index.html @ரசோதரன் @நீர்வேலியான் கதிரை ஏதாவது ஆடிச்சுதா?
  16. அதுக்குத் தானே யூனியன் இருக்குதே. தேர்தல் நேரம் வேற. பசியில் எப்படித் தான் தொடரூந்தை ஓட்டுவார்? ஓடிக் கொண்டிருக்கும் போதே பசியில் மயங்கினால் பொதுமக்களின் நிலை என்னாகும்?
  17. கரையில் நிறுத்த முடியும் என்றால் நிறுத்தியிருக்க மாட்டாரா கோப்பாலு? இதுவே ஒரு மந்திரி வந்தால் மணிக் கணக்காக நிற்கும் பொதுமக்கள் தொடரூந்து சாரதி என்றவுடன் சினம் கொள்கிறார்கள். குமாரூ கூப்பிடுறா யூனியனை.
  18. இலங்கையின் ஒரு பகுதியில் தொடருந்து சாரதி ஒருவர் தொடருந்து தண்டவாளத்திலே தொடருந்தை நிறுத்தி விட்டு கடையில் உணவு வாங்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களிலே வெளியாகி வைரலாகி வருகின்றது. குறித்த காணொளியில் புகையிரத்தை கடவையில் நிறுத்தி வைத்து விட்டு பொது மக்கள் காத்திருக்க தொடருந்து செலுத்துபவர் உணவை வாங்கிச் செல்வதாக பதிவாகியுள்ளது. இந்த நிலையில் குறித்த செயலானது பொது மக்களிடையே தொடருந்து திணைக்கள உத்தியோகத்தர்கள் தொடர்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. https://tamilwin.com/article/stopping-train-like-a-bus-buying-food-at-the-shop-1723446092

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.