Everything posted by ஈழப்பிரியன்
-
நான் என் வேர்களை பதக்கம் போல அணிகின்றேன்.
இணைப்புக்கு நன்றி சுமா.
-
அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் கேரள திரையுலகம்
தமிழ் நாட்டிலும் இப்படியான விசாரணைக் குழு அமைத்து கருணாநிதி குடும்பத்தாரிடம் இருந்து தமிழ்த்திலை உலகைக் காப்பாற்ற வேண்டும்.
-
மன்னாரில் இளம் தாய் மரணமடைந்த விவகாரம்: வைத்தியர் பணி இடை நீக்கம்!
என்ன தான் நடந்ததென்று இன்னமும் விசாரணைக் குழுக்களால் அறிக்கை எதுவும் விடல்லையே? ஏன் இடைநீக்கம் செய்தார்கள்?யார் செய்தார்கள்?
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
சந்திரிகா கொண்டுவந்த தீர்வை 11 வாக்குகளே நிறைவேற்ற தேவையாக இருந்த போது ரணிலும் ஜேவிபியும் கடுமையாக எதிர்த்தார்கள். இதில் ரணில் ஒருபடி மேலே சென்று தீர்வு பொதியை பாராளுமன்றில் வைத்து கொழுத்தியதாக சொல்கிறார்கள்.
-
குளியலறையில்
என்ன புத்தா விடிய காலமை தலைப்பைப் பார்த்துட்டு ஆகா புத்தன் கிளுகிளுப்பான தலைப்புடன் வந்திருக்கிறாரே என்று வேலைவெட்டியை விட்டுட்டு கதையை வாசித்தால் யூடியூப் காரர் பரவாயில்லைப் போல இருக்கே.
-
ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை.
பிச்சைப் பாத்திரம் ஏந்தியும் பொன்ஸ்சுக்கு ஒருதரும் பிச்சை போடலையே.
-
ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை.
தென்னிலங்கை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமிக்க நபராக காணப்பட்ட முன்னாள் இராணுவ தளபதியும், சமகால ஜனாதிபதி வேட்பாளரான சரத் பொன்சேகாவின் நிலை பரிதாபமாக மாறியுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகாவின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பொன்சேகாவின் குறித்த கூட்டத்திற்கு ஐந்து பேர் கூட வராதமை பெரும் ஏமாற்றத்தை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது. பிரச்சார கூட்டம் மேடையில் பொன்சேகா உட்பட சுமார் 10 பேர் இருந்தனர். மேலும் மேடையின் முன் இருக்கைகளில் யாரும் அமரவில்லை. அத்துடன், பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் தாக்குதலுக்கு உள்ளான காரையும் லொறியில் ஏற்றி மேடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் காட்சிகளும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தை 5 பேர் மட்டுமே நின்ற நிலையில் பார்த்து விட்டு செல்வதனையும் அவதானிக்க முடிந்துள்ளது. பொன்சேகாவுக்கு ஏமாற்றம் இதேவேளை 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகா, அப்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பெரும் சவால்மிக்க நபராக இருந்தார். அந்தத் தேர்தலில் 4,173,185 வாக்குகளை பொன்சேகா பெற்றார். அது மொத்த வாக்குகளில் 40.15 வீதமாகும். எனினும் 14 வருடங்களில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சரத் பொன்சேகா பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://tamilwin.com/article/sarath-fonseka-election-meeting-not-even-5-people-1724206210
-
கொக்குத்தொடுவாய் புதைகுழிக்கு முன்பாக போராட்டத்துக்கு அழைப்பு
போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் தலைவணங்குகிறேன்.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
நான் நினைக்கிறேன் அவர் டக்ளசின் கூட்டங்களுக்கு செல்பவராக இருக்கவேண்டும். விசுகு நான் இலங்கை யாழ்ப்பாணம் போய் கண்டிறிந்தது காசுபணம் செல்வாக்குடன் உங்களால் தனியாக வாழ்ந்திட முடியாது. கெளரவமான வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் நீங்கள் சொன்ன மாதிரியோ வேறு அரசியல் சக்திகளின் செல்வாக்கு பொலிஸ் செல்வாக்கு இப்படி இல்லாதவிடத்து ஒரு அடிமையாகவே வாழ வேண்டிவரும். இதை ஜீரணிப்பது கஸ்டம் தான்.இருந்தாலும் உண்மை.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
எனக்கும் இதைப்பற்றி சரியான முடிவுகள் எடுக்க முடியாமல் உள்ளது. அட இவ்வளவு காலமும் இவர்களுக்கு தானே தமிழ்மக்கள் வாக்குகளைப் போட்டார்கள்.அதற்கான நன்றி கூட இல்லாமல் எவ்வளவு துரோகங்கள் கண் முன்னே செய்கிறார்கள். இவர் நல்லவர் அவர் நல்லரென்று சொல்வதற்கு எவருமே இல்லை. இப்போது என்ன செய்யலாம்? அடுத்து தேர்தலென்று வரும்போது இதே பொதுக்கட்டமைப்பை வைத்து புதிய கட்சியொன்று ஆரம்பித்து இளையோர்களை உள்வாங்கி தற்போதுள்ள கட்சிகளுக்கு சாவுமணி அடிக்க வேண்டும்.
-
நாட்டின் முக்கிய பகுதி முடிவு 🤔
யார் யார் ஓட வேண்டும் ஆள வேண்டும் என்று முடிவெடுப்பது அமெரிக்கா தான்.
-
தீவிரமடைந்து வரும் மக்கள் போராட்டம்: வெனிசுலாவில் பதற்றம்
வெனிசூலாகாரரால நியூயோர்க் நாறுது.
-
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முதன்முறையாக சட்டமன்ற தேர்தல்!
ரசிய தேர்தல் மாதிரி இருக்குமோ?
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
ஓணாண்டி இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கலை. இங்கே வாக்குரிமை இல்லாத நாஙடகதான் பொதுவேட்பாளருக்கு எதிராக குத்தி முறிகிறோம்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இது இன்னமும் பாவனைக்கு விடவில்லை.பக்கத்து நாடுகளில் ஒளித்து வைத்திருப்பதாகவே சொல்கிறார்கள்.இறக்கிவிட்டால்த் தான் நன்மை தீமை தெரியவரும்.
-
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கல்லூரி முதல்வர் ராஜினாமா; போலீஸுக்கு மம்தா ‘கெடு’
முதலில் இந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டார் என அறிக்கை சமர்ப்பித்த பொலிசாரைப் பிடித்து உள்ளே போடணும்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிறி இதில ஒருவருக்கு இரண்டு பொக்குள் இருக்கிறதே எப்படி? அத்தோடு பொக்குள்களில் சம்பலே இடிக்கலாம் போல பெரிதாக உள்ளதே?
-
உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.
இணைப்புக்கு நன்றி சிறி. இது உடல் நலத்திற்கு மட்டுமல்ல இன்றை இலங்கைத் தேர்தலுக்கும் பொருந்தும்.
-
நாட்டின் முக்கிய பகுதி முடிவு 🤔
அமெரிக்காவில் உறுதியளித்தால் செய்ய வேண்டும். இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் புதிது புதிதாக சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இவைகள் நடந்து மேற்குலகை கைவிட்டால்த் தான் மேற்குலகு தமிழர் பக்கம் திரும்பும்.
-
நாட்டின் முக்கிய பகுதி முடிவு 🤔
இப்போது எவர் நல்லவர்? நெஞ்சிலே குத்துபவரா? முதுகிலே குத்துபவரா? எப்படியும் குத்து வாங்கத்தானே போறம்.எங்க வாங்கினால் என்ன இப்படிணும் யோசிக்கலாம். இரண்டு வருடத்துக்கு முன் வெனிசூலா ஆக்கியது ஜேவிபியா சார்?
-
ஜெர்மனியை குறி வைக்கிறதா ரஷ்யா? ஐரோப்பாவில் மீண்டும் பனிப்போர் சூழல்
அமெரிக்கா எப்போதும் தயாராக உள்ளது. பொருளாதாரமும் கொஞ்சம் களைகட்டும்.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
ஐயா சம்பந்தரின் இறுதி அஞ்சலியின் போதுகூட இவ்வளவு மக்கள் கலந்து கொள்ளவில்லை என்பதை கவனத்தில் கொள்க.
-
விமல் தரப்பினர் நல்லூர் கந்தனை வழிபட்டனர்
இனம் இனத்தோடு சேரும்.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
கூட்டத்தில் எல்லோருமே பெண்களாக இருக்கிறார்களே?
-
விமல் தரப்பினர் நல்லூர் கந்தனை வழிபட்டனர்
Tell me who is your friend I will say who you are. உனது நண்பனை யார் என்று சொல்லு நான் உன்னைப்பற்றி சொல்லுகிறேன். போயும்போயும் சித்தார்த் என்ற ஊத்தைவாளியுடன் போகிறீர்களே தமிழனைப் பற்றி உங்களுக்கு என்ன தான் நினைப்பு?