Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. இதே கோடரிக்கு இலங்கையிலும் ஓர் அடைமொழி உண்டு. யாரையாவது பிரித்து வைத்தால் கோடரி அல்லது கோடரிக்காம்பு என்பார்கள்.
  2. திரு சுமந்திரன் மெதுவாகவும் தெளிவாகவும் பேசுகிறார். தமிழர் தரப்பு 13ஜ ஆதரிக்கவில்லை என்று அழுத்தி சொல்கிறார். என்றுமே மீழப்பெற முடியாத சமஸ்டி முறைமையை எதிர்பார்க்கிறார்.சிங்கள தரப்புகளும் அதைப்பற்றி பேசுவோம் என்கிறார்கள். சிங்கள கட்சிகளின் தேர்தல் அறிக்கையை எல்லோரும் எதிர்பாரக்கிறார்கள்.
  3. கோத்தபையனை விட கூடுதலான பிக்குகள் அனுராவுக்காக சேர்ந்துள்ளனர். கோத்தபையன் மாதிரி தனி சிங்கள வாக்காளரின் வாக்குகளில் வெல்லாரா? ஒருவேளை அனுரா வென்றால் சிங்கள இடங்களில் கலவரங்கள் நடக்கலாம் என்று ஆய்வாளர் கூறுகிறார்.
  4. பேசாமல் இந்த நகரத்தை சோதிலிங்கம் ஆக்கிவிடலாமே?
  5. காலாகாலமாக சிங்கள தலைவர்கள் தமிழரின் தலையில் மிளகாய் அரைக்கிறார்களே அதையும் சேர்த்து வரைந்திருந்தால் ரொம்ப நன்றாக இருந்திருக்கும்.
  6. காலாகாலமாக ஜனநாயகக் கட்சியில் இருந்து சூடு வாங்கி இறந்த ஒரு ஜனாதிபதியின் குடும்பத்தில் இப்படி குறுக்குத்தனமான முடிவுவெடுத்தது இன்னமும் இவர்களுடன் இருக்கும் ஆதரவாளர்களை இழக்கலாம். ரம்பைப் பொறுத்தவரை எவ்வளவு திருகுதாளங்கள் செய்து ஆட்சியைக் கைப்பற்ற முடியுமோ எவ்வளவும் செய்வார். இவர் ஆலோசனைக்கென்று அமைக்கப்பட்ட குழுக்களின் ஆலோசனையே கேட்கமாட்டார். இவர்களுக்கு பணத்தேவை இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை ரம்ப் வென்றால் ஏதாவது பெரிய பதவிகள் கொடுக்கலாம் என்று தான் போட்டியில் இருந்து விலகி ரம்புக்கு ஆதரவு கொடுக்கிறார். ஏற்கனவே இவர் குடும்ப உறுப்பினருக்கு பரிசளித்தபடியாலேயே இன்னமும் செல்வாக்கு செலுத்துகிறார்கள்.
  7. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அரிசோனா மாகாணத்தில் போட்டியிடுவதாக அறிவித்து இருந்த சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ராபர்ட் எஃப் கென்னடி(Robert F. Kennedy) தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதற்காக ஆவணங்களை அவர் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டதாக அரிசோணா மாகாண செயலாளர் அட்ரியன் ஃபோன்டஸ் தெரிவித்துள்ளார். 11 வேட்பாளர்கள் இந்நிலையில், நேற்றிரவு நடைபெற இருந்த தேர்தல் பரப்புரையில் நாட்டு மக்களிடையே உரையாற்ற ராபர்ட் எஃப் கென்னடி முடிவு செய்திருந்தார். ராபர்ட் எஃப் கென்னடிக்கு ஆதரவு தெரிவித்து இருந்த சூப்பர் பேக் அமைப்பு ஒன்று கூறும் போது, கென்னடி மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இடையே வேலைவாய்ப்பு தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது. அந்த ஒப்பந்தத்தின் படி ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் கென்னடிக்கு பொறுப்பு வழங்க வேண்டும். ஏற்கனவே இது குறித்து பேசிய ட்ரம்ப். கென்னடி தேர்தல் போட்டியில் இருந்து விலகினால் அவருக்கு தனது நிர்வாகத்தின் கீழ் அமையும் அரசாங்கத்தில் பொறுப்பு வழங்குவதாக தெரிவித்து இருந்தார். அதன்படி கென்னடி, தனது கூட்டணியில் உள்ள துணை அதிபருக்கான சுயேட்சை வேட்பாளர் மற்றும் 11 வேட்பாளர்கள் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர் என்று அரிசோனாவின் ஃபாண்டெஸ் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/kennedy-withdrew-from-the-us-presidential-election-1724435571 இலங்கை அரசியலைப் பார்த்தோ என்னவோ அமெரிக்காவிலும் பதவி ஆசையால் ரம்புடன் கை கோர்த்துள்ளார். கென்னடி குடும்பத்திற்கென்றே கொங்ச வாக்குகள் உள்ளன. ரம்பை நம்பி போன பலரை ஏமாற்றியுள்ளார். பார்ப்போம் என்ன தான் நடக்கப் போகுதுதென்று.
  8. விமல் வீரவன்சவாக இருக்கலாம். கருணாவும் பணக்காரர்களில் ஒருவர் என்று எங்கோ பார்த்த ஞாபகம்.
  9. தற்போதைய நிலமை என்னவென்று யாருக்காவது தெரியுமா? கணனி மூலம் விசா எடுக்க முடியாமல் விமானநிலையத்தில் மிக நீண்ட வரிசையில் மக்கள் விசாவுக்காக காத்திருப்பதாகவும் பலர் குழப்பம் விளைவிப்பதாகவும் அண்மையில் ஒரு செய்தி பார்த்தேன்.
  10. Month 2023 2024 % Cha. 2024/23 January 102,545 208,253 103.08 February 107,639 218,350 102.09 March 125,495 209,181 66.68 April 105,498 148,867 41.10 May 83,309 112,128 34.60 June 100,388 113,470 13.0 July 143,039 187,810 31.30 August 136,405 September 111,938 October 109,199 November 151,496 December 210,352 Total 1,487,303 1,198,059 https://www.sltda.gov.lk/en/monthly-tourist-arrivals-reports 2023 ஜவிட 2024 இல் கூடுதலானவர்கள் போயிருக்கிறார்கள். இந்த தொகையில் அரைவாசி நம்மவர்களாக இருக்கும்.
  11. இலங்கையில் இதுவரை ஆண்ட அரசுகளே இந்தநிலைக்கு காரணம் என்கிறார்கள்.நீங்கள் வெறும் மகிந்த மேல் பழியைப் போட்டு மற்றவர்களை தப்பிக்க வைக்கிறீர்கள். அப்போ மகிந்த வராமல் ரணில் சயித் அனுரா யாராவது ஒருத்தர் வந்தால் உங்களுக்கு சந்தோசமே. பொதுவேட்பாளரை எதிர்க்க ஏதோ காரணம் என்று நினைத்துவிட்டேன்.
  12. இது பாரிய இழப்பல்லவா? கோடை விடுமுறைகள் முடிந்தால் யாருமே வரமாட்டார்கள் என எண்ணி இப்படி செய்கிறார்களோ? தேர்தல் முடிய வேறு அரசு வந்தால் என்ன நடக்கும்?
  13. இந்த கொடியின் நிறங்கள் விடுதலைப் புலிகளின் கொடி போலவே உள்ளன.
  14. ஐக்கிய இராச்சியம் (இங்கிலாந்து), அமெரிக்கா (அமெரிக்கா), கனடா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, சவூதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, உட்பட 35 நாடுகளின் பிரஜைகள் இலங்கைக்கு வீசா இன்றி பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. தென் கொரியா, மற்றும் ஜப்பான். இந்த புதிய விசா இல்லாத கொள்கை அக்டோபர் 01, 2024 முதல் நடைமுறைக்கு வரும், மேலும் இது ஆறு மாத காலத்திற்கு அமலில் இருக்கும். List of countries to be offered visa-free access to Sri Lanka: 1. United Kingdom 2. Germany 3. Netherlands 4. Belgium 5. Spain 6. Australia 7. Denmark 8. Poland 9. Kazakhstan 10. Saudi Arabia 11. UAE 12. Nepal 13. China 14. India 15. Indonesia 16. Russia 17. Thailand 18. Malaysia 19. Japan 20. France 21. United States 22. Canada 23. Czech Republic 24. Italy 25. Switzerland 26. Austria 27. Israel 28. Belarus 29. Iran 30. Sweden 31. South Korea 32. Qatar 33. Oman 34. Bahrain 35. New Zealand https://adaderana.lk/news.php?nid=101403
  15. இவ்வளவு காலமும் கிடைத்த முறைப்பாடுகளுக்கு என்ன நடந்தது? ஏதாவது விசாரணை நடந்ததா?அதன் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதா? சாவகச்சேரியில் பாம்பு கடித்து வந்தவர் வைத்தியசாலையில் யாருமே இல்லை என்றார்களே இதன் விசாரணை முடிந்ததா?
  16. கணவர் மகேஸ்வரனின்... அகால மரணத்தால், திடீரென்று அரசியலுக்கு வந்து அமைச்சர் ஆனவர்தான் விஜயகலா மகேஸ்வரன். பங்களாதேஷில் நடந்த விஷயத்தை... நியூஸ் பேப்பரில் அவ பார்க்கவில்லைப் போல் உள்ளது.😂 அவ சொன்னதையும்... நம்புறதுக்கு ஆக்கள் இருக்கினம் என்று நினைக்கின்றேன் அந்தம்மாவும் என்னதான் செய்கிறது? போடுற எலும்புக்கு வாலையாட்டத் தானே வேண்டும்.
  17. நல்லது தலைவர்களை கண்டியுங்கள்.நாங்களும் ஆதரவு தருகிறோம். அதற்காக பொதுவேட்பாளரை பழி வாங்குகிறோமோ என்று போரினாலும் சகல வழிகளில் நொந்து போயிருக்கும் மக்களைப் பார்த்து வார்த்தைகள் விடுவது நல்லதல்ல. சரி பொதுவேட்பாளரை பிடிக்கலை. அப்போ யாருக்குத் தான் வாக்குப் போடலாம்.அதையாவது சொல்லலாமில்ல. பலரும் பொதுவேட்பாளர் பிழை என்கிறார்களே தவிர சிங்கள் வேட்பாளர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று சொன்னதாகத் தெரியவில்லை. எனக்கும் இன்னமும் ஒரே குளப்பமாகவே உள்ளது. ஆனாலும் ஒருபக்கம் பொதுவேட்பாளர் நிற்பது சுமந்திரனுக்கு பேரம்பேச இலகுவாகிறது என எண்ணுகிறேன். ஆராய்ச்சிகள் நடக்கிறது. அனேகமாக அடுத்த மாதம் 21-22ம் திகதிகளில் ஆராய்ச்சி முடியும்.
  18. திரைமறைவில் இருக்கிறார்கள். காலநேரம் வரும்போது வெளியே வருவார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.