Everything posted by ஈழப்பிரியன்
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
ஒருவேளை ரணில் ஜனாதிபதியானால் தமிழரசுக்கட்சிக்கு சுமந்திரன் தலைவராகவும் அரசுடனும் சேர்ந்து இயங்கலாம்.
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
செம்மறிகள் ஆகா ஆகா 2024 இல் அருமையான கேள்வியும் பதிலும். உங்கள் இருவருக்கும் பாராட்டுக்கள்.
-
இலங்கைக்கு 24.5 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கியது அமெரிக்கா
நான் நினைக்கிறன் மொட்டுக்கட்சி உறுப்பினர்களை வாங்கி ரணிலை வெல்ல வைக்க கொடுத்த பணமாகவே இருக்கும். இலங்கை மக்களை விட அமெரிக்காவும் இந்தியாவுமே ஜனாதிபதி தேர்தலில் மிக ஆர்வமாக இருக்கிறார்கள். இந்தியா வாயாலவடை சுடுமே தவிர பணத்தை இறக்கி விளையாடாது.
-
வைத்தியர் அர்ச்சுனா மன்னாரில் கைது
இந்தக் காணொளியை ஆறாவது நிமிடத்திலிருந்து பாருங்கள். ஒரு தலைவனுக்காக எமது மக்கள் எப்படியெல்லாம் ஏங்குகிறார்கள்? விருப்பு வெறுப்பை விடுத்து மக்களின் துணிச்சலையும் ஆர்வத்தையும் பாருங்கள்.
-
கவாய் (Hawaii)பயணம்.
கவாய் சில நுhற்றாண்டுகளுக்கு முன்பாகவே கண்டுபிடித்தார்கள்.ஜப்பான் பிடித்துவிடும் என்று அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து 1959 இல் அமெரிக்க மாநிலமாக பிரகடனப்படுத்தினார்கள். அவர்களுக்கென்று ஒரு மொழி வைத்திருக்கிறார்கள்.ஆங்கிலமும் பேசுகிறார்கள். கூடுதலான ஆட்களைப் பார்த்தால் ஏறத்தாள பிலிப்பைன்ஸ்காரர் மாதியே இருக்கிறார்கள்.ஆதிகாலத்திலேயே பிலிப்பைன்ஸ் ஜப்பானிஸ் என்று பலரும் குடியேறியிருக்கிறார்கள். நிறையவே பழங்கள் உள்ளன.சிறிய பப்பாப்பழம் ஒரு டாலருக்கு விவசாயிகள் சந்தையில் விற்கிறார்கள்.பழம் தேன் தான்.கலிபோர்ணியாவிலும் கவாயன் பப்பாபழம் பிரபல்யம். அடுத்து அன்னாசி.அதுவும் தேன் மாதிரியே இருக்கும்.மாம்பழங்கள் தேடுவாரற்று வீதிகளில் வீழ்ந்து கிடக்கின்றன.சந்தைக்குப் போனால் எல்லாமே பணம் தான்.ஏறத்தாள எமது நாட்டு காலநிலை என்றபடியால் ஊரில் சாப்பிடும் பழங்கள் அங்கேயும் இருக்கின்றன. காலநிலை பல மாதிரியாக இருப்பதாலோ என்னவோ எந்தநாளும் வானவில்லைக் காணலாம். தென்னமெரிக்கா போல மலிவு என்று எதிர்பார்க்க முடியாது.நியூயோர்க்கோடு ஒப்பிடும் போது கவாயில் விலைகள் அதிகமே.சாப்பிடப் போனாலே கூடுதலான பணம் செலவு செய்ய வேண்டும். கோட்டல் எடுத்து தங்கினால் சாப்பாட்டுக்கும் தனியாக செலவு செய்ய வேண்டும். வீடுகள் எடுத்திருந்தால் ஒரு சோறு கறி என்று சமைத்து சமாளிக்கலாம். வாடகை வாகனம் இல்லாமல் பிரயாணங்கள் செய்ய முடியாது. முக்கியமாக பல நாடுகள் கடலில் மூழ்கிக் கொண்டு போகின்றன.ஆனால் கவாய் ஒவ்வொரு ஆண்டும் எரிமலை வெடிப்பினால் கரைந்து ஓடி கடற்கரைகளை சேர்கின்றன. எரிந்து ஓடியவைகளை லாவா என்கிறார்கள்.தீவின் அரைவாசிக்கு இந்த லாவாவே இரும்புக்கட்டி போல படர்ந்துள்ளது. https://imgur.com/DeBvtUo https://imgur.com/a/JhkrE50 https://imgur.com/a/JhkrE50 முற்றும்.
-
கவாய் (Hawaii)பயணம்.
Hawaii Vocanoses National Park க்கு இருதடவைகள் போயிருந்தோம்.எனக்கு Lifetime membership என்றபடியால் வாகனத்தில் எத்தனை பேர் இருந்தாலும் எல்லோரையும் இலவசமாக போகவிடுவார்கள். பெரியதேசம்.ஒரே நாளில் சுற்றிப் பார்க்க முடியாது.இயன்றளவு பார்த்தோம்.இந்த இடங்களில் பெரிதாக எரிமலை இல்லை என்றாலும் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தான் அதன் சீற்றம் குறைந்திருப்பதாக சொன்னார்கள்.இப்போது கூட அரைமைல் தூரத்திலிருந்தும் தாங்க முடியாத வெக்கையடித்தது. படங்களை இணைக்கிறேன். காணொளிகளைப் பார்க்க விரும்பினால் இணைக்கும் சுட்டிகளை அழுத்தி பார்க்கலாம். வழமையில் பெரிதாக எரிந்து மலைகளில் இருந்து தீப்பிழம்பு ஆறாக ஓடும்.நாங்கள் போனநேரம் எரிமலை தணிந்திருந்தது.ஆனாலும் எந்தநேரமும் வெடிக்கலாம் என்றே சொன்னார்கள். இந்த இடத்தில் யாரோ ஒருவர் காலை வைத்து பார்த்து கால் எரிந்துவிட்டதாக எழுதிப் போட்டுள்ளார்கள். https://imgur.com/a/noz6feo மேலே உள்ள சுட்டியை அழுத்தினால் காணொணி பார்க்கலாம்.
-
கவாய் (Hawaii)பயணம்.
ரசோதரன் நின்ற 5 நாட்களில் ஒரு நாள் கூட ஒரு பொலிசைப் பார்க்கவில்லை. சரி எப்படியான யூனிபோம் போட்டிருப்பார்கள் என்று போன இடமெல்லாம் தேடினேன்.ஒருத்தனும் அகப்படவில்லை. உங்களுக்கு நம்பவே கஸ்டமாக இருக்கும். இதுதான் உண்மை. கடற்கரைக்கும் போனோம்.ஆனால் கண்ணுக்க குளிர்ச்சியாக எதுவும் தென்படவில்லை.
-
கவாய் (Hawaii)பயணம்.
கூடுதலான வெப்பநிலை என்றால் 85 வரை போகும்.ஆனாலும் குளிர் இல்லை. இந்த தீவில் புதுமை என்னவென்றால் ஒரு வீதியால் போகும்போது ஒருபக்கம் வெய்யிலும் ஒருபக்கம் புகாராகவும் இருக்கும். நிற்கும்இடத்தில் இருந்து காலநிலையைப் பார்த்து எங்கும் போகமுடியாது.4-5 விதமான காலநிலை இருக்கும். ஆவணி தான் வெப்பமான காலம். https://imgur.com/a/ZqXWL9q ஒவ்வொரு விமான சேவைக்கும் ஒவ்வொரு இடம் வைத்துள்ளார்கள். முழு இடத்தையும் காணொளி வடிவில் எடுத்திருந்தேன். காணொளிகளை நேரடியாக இணைக்க முடியாததால் புதிதாக ஒரு ணையத்தில் இணைத்தேன். ஆனால் அதன் லிங்கை மட்டுமே இணைக்க முடியும். மேலே இணைத்திருந்தேன். உங்களுக்காக மீண்டும் மேலே இணைத்துள்ளேன்.
-
கவாய் (Hawaii)பயணம்.
சூடாக இருக்கும் போதே பெயர்களை எழுதியுள்ளார்கள். விமான நிலையமும் பொதிகள் எடுக்குமிடமும் https://imgur.com/a/ZqXWL9q விமானநிலையத்திலிருந்து போகும்போதே வெளியே சகல இடங்களும் ரைக்ரரால் டிஸ் போட்டு பிரட்டி எறிந்த மாதிரி இருந்தது. ஆங்காங்கே தீப்பிழம்பாக வந்து காய்ந்து போய் இருப்பதாக சொன்னார்கள். தீப்பிழம்பாக வந்து காய்ந்து போயிருப்பது இரும்பு காய்ச்சி ஊற்றியது போல இருக்கிறது. இதை லாவா என்று சொல்கிறார்கள்.சில இடங்களில் இந்த லாவா தொடர்ந்து பல மைல்களுக்கு உள்ளன. சாதாரண மழை தண்ணிக்கே ஐயோ குய்யோ என்று கத்திக் குழறும் நாங்கள் இந்த மாதிரி ஒரு அழிவை நாளாந்தம் சந்தித்துக் கொண்டிருக்கும் மக்களை எண்ண மிகவும் கஸ்டமாக இருந்தது. தொடரும்.
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
சம்பந்தன் தலைமையின் கீழ் வழிநடாத்திய விடயங்களையும் கொஞ்சம் எடுத்துவிடலாமே? சம்பந்தரை வெளிநாடுகளும் உள்நாட்டுக்காரரும் தான் வழிநடாத்தினார்கள்.
-
கவாய் (Hawaii)பயணம்.
மிக நீண்ட நாட்களாகவே கவாய் போக வேண்டும் எரிமலைகள் எப்படி எரிகின்றன என்று நேரடியாகவே பார்க்க வேண்டும் என ஒரு எண்ணம் இருந்தது.இருந்தாலும் நியூயோர்க்கில் இருந்து போவதானால் 10-11 மணிநேரம் எடுக்கும்.அதே ஒரு பெரிய தண்டனை மாதிரி.கலிபோர்ணியாவில் இருந்து போவதானால் 5-5 1/2 மணிநேரமெடுக்கும். பிள்ளைகள் 3-4 தடவை போய் வந்துவிட்டார்கள்.பல தீவுகள் இருப்பதனால் ஒவ்வொரு தீவாக போய்வருவார்கள்.இந்த தடவை எரிமலை எப்போதுமே எரிந்து கொண்டிருக்கும் பெரிய தீவுக்கு போகபோவதா சொன்னார்கள். விபரங்களைக் கேட்டு நாங்களும் போய்வர கவாய் விமான சேவையில் ரிக்கட் வாங்கினோம்.இது தான் முதல்தடவையாக கவாய் விமான நிறுவனத்தில் பிரயாணம் செய்தோம்.நானும் இங்குள்ள எனேக விமான சேவைகளைப் பயன்படுத்தியுள்ளேன்.எல்லாவற்றையும் விட கவாய் விமான நிறுவனமே எல்லாவற்றிலும் மேலாக தெரிந்தது. நாங்கள் ஓக்லண்ட் கலிபோர்ணியாவில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு காலை 9;30 போல இறங்கினோம்.அங்கு போய் இறங்கியதும் பெரிய ஆச்சரியமாக இருந்தது. விமான நிலையத்துக்கு அருகிலேயே விமானம் போய் நின்றது.படிகளில் இறங்கி போனால் ஏதோ சந்தைக்குள் போவது போல இருந்தது.ஒரு இடம் தனும் பெரிய கட்டடங்களாக இல்லை.குளிரூட்டப்பட்ட அறைகளோ தங்குமிடமோ இல்லை.எல்லாமே திறந்த கட்டடங்கள்.ஒருமாதிரியாக வெளியே போனால் பொதிகள் எடுக்குமிடம் வீதிக் கரையில் இருக்கிறது.இதுவே கலிபோர்ணியா அல்லது நியூயோர்க்காக இருந்தால் பெரிய வாகனத்தைக் கொண்டுவந்து அள்ளிப் போட்டுக் கொண்டு போய்விடுவார்கள். விமான நிலையத்தில் பொதிகள் எடுக்கும் இடம். எரிமலை வெடித்து ஒரு மைல் நீளத்திற்கு குகையாக இருக்கிறது. இந்த குகையைப் பார்க்க போக மேலே சொல்லப்பட்டவைகளைப் பின் பற்ற வேண்டும்.கட்டாயம் என்றில்லை எமது பாதுகாப்புக்காக போட்டிருக்கிறார்கள்.கீழே இறங்கி 5 யார் உள்ளே போனால் எதுவுமே தெரியாது.கும்மிருட்டாக இருக்கும். அதே மாதிரி சாதாரண சப்பாத்துடன் போனால் அடிக்கடி சறுக்கி விழலாம்.வெளிச்சம் தெரியத்தக்க ஏதாவது கொண்டு போக வேண்டும்.குகைக்குள் சில இடங்கள் உயரமாகவும் சில இடங்கள் குனிந்து போக வேண்டியும் வரும்.எகன்கொரு தடவை மண்டையில் பலமான அடி.துணியிலானான தொப்பி போட்டிருந்ததால் தப்பினேன்.அப்பவும் கண்ணெல்லாம் கலங்கிவிட்டது.என்னப்பா என்ன என்று எல்லோர் சத்தமும்.இப்போ வாயைத் திறந்தால் மண்டையில் வாங்கியதை விட பலமாக வாங்க வேண்டுமென்று பல்லைக் கடித்துக் கொண்டு ஒன்றுமில்லை ஒன்றுமில்லை.சும்மா மேலால தட்டினது என்று போய்விட்டேன். குகைக்குள் நெருப்பு தணலாக இருந்தபோதும் ஒரு கரையால் உள்ளே போய் சீமெந்து போட்ட இடத்தில் எப்படி அதில் பெயரெழுதுவார்களோ அதே மாதிரி நிறைய பேர் பெயர்களை எழுதுயுள்ளார்கள். குகைக்கு போகும் பாதை. தொடரும்.
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
பங்களாதேஸ் செய்திகளையோ அரசியலையோ பின்பற்றுவதில்லை. ஆனாலும் அண்மையில் இலக்கு காணொளியில் ஆய்வாளர் அரூஸ் தான் இந்த செய்தியை சொன்னார்.மற்றும்படி இது சரியா பிழையா என்றெல்லாம் தெரியாது. அடுத்து இவரது தந்தை ரகுமான் இந்திள உளவுப்படையால்த் தான் சுட்டுக் கொல்லப்பட்டதாக நீண்ட நாட்களுக்கு முன் அறிந்தேன்.இது கூட சரி பிழை தெரியாது. இரண்டையும் முடிச்சுப் போட்டுப் பார்க்க சரியாக வந்தது. இந்தியா அயலிலும் அமெரிக்கா கடல் கடந்தும் தமக்கு பிடிக்காக அரசுகளை நிம்மதியாக இருக்க விடுவதில்லை அதனால் இப்படியும் இருக்கலாம் என்று எண்ணிவிட்டேன். தவறான தகவல்களை எழுதியிருந்தால் அழித்துவிடவும். தகவல்களுக்கு நன்றி நிழலி.
-
குறுங்கதை 28 -- மரியானா அகழி
ம் கதையைப் பார்த்தால் ஈபிஆர்எல்எவ் மாதிரி தெரியுது. ஊர் அடிபட்ட பிள்ளை ஒரு முடிவோட தான் இருந்திருக்கு.
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
ஷேக் ஹசீனா இந்த அம்மாவின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு இந்தியா எவ்வளளோ முயன்றும் முடியவில்லை என்று கடந்த தேர்தல் வெற்றியின் போது ஒரு காணொளி பார்த்தேன். பல சவால்களையும் தாண்டி முன்னேறிக் கொண்டிருந்த நாடு மட்டுமல்ல இலங்கை போன்ற நாடுகளுக்கு பெரும்தொகை பணத்தையும் கொடுத்திருந்தார்கள். பணம் திரும்ப செலுத்த வேண்டிய தவணை வந்த போதும் மீண்டும் தவணை கொடுத்து இலங்கைக்கு மூச்சுவிட இடம் கொடுத்தார்கள். இலங்கையில் இந்திய சார்பு அரசை எப்படி அமெரிக்கா ஓடவைத்ததோ அதே மாதிரி அமெரிக்க சார்பு வங்க அரசை இந்தியா ஓட வைத்துள்ளது போல. அயல் நாடுகளை எப்போதும் கொதிநிலையில் வைத்திருக்கவே இந்தியா விரும்புகிறது. இலங்கையில் நடக்கவிருக்கும் தேர்தலும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான போட்டியே. யார் வெல்கிறார்கள் என்று காத்திருந்து பார்ப்போம்.
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
உங்களுக்கு சீமானோடு உரசி விளையாடுவது என்றால் பிடிக்கும் போல ஹா ஹா.. பையா கந்தையர் இலங்கையில் இருக்கும் போது இபோச வில்த் தான் பயணம் செய்கிறவர். ஆதலால் உரசி உரசி பழகிவிட்டார்.
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
In 2022, India overtook China as the country with the largest population in the world, and now has more than 1.44 billion people. China now has the second-largest population in the world, still with just over 1.4 billion inhabitants, however its population went into decline in 2023.
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
பையா இந்தியா இப்போ முதலிடம். சீனாவை இரண்டாவது இடத்துக்கு தள்ளி பதக்கத்தை பெற்றுக் கொண்டனர்.
-
குறுங்கதை 25 -- குரு பார்வை
நீங்களும் நம்மை மாதிரியே இருக்கிறீர்களே. வாழ்க்கையில் பாடசாலை வாழ்வைப் போல சந்தோசமான வாழ்வு இல்லவே இல்லை. ஊர்ப் பாடசாலையில்த் தான் அந்தந்த ஊரவர்கள் படித்தார்கள்.இதனால் அந்த ஊரிலுள்ள பிள்ளைகள் ஆளுக்காள் அறிமுகமாக இருப்பார்கள். இப்ப என்னடாவென்றால் பிள்ளை உந்துருளியில் இருக்கவே மாட்டுது அதை வில்லங்கத்துக்கு விடிய எழுப்பி தூர இடங்களுக்கு கொண்டு போகிறார்கள். (நானும் ஊரிலிருந்த நேரம் இதையே செய்தேன்)
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
இந்தியர்களும் அவர்களால் முடிந்தளவு திறமைகளை காட்டுகிறார்கள். நீங்கள் அவைகளை கவனிப்பதில்லை. சனத்தொகையை எடுத்துப் பாருங்கள்.
-
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
சுப்பர் ஓவரில் இலங்கை 6 பந்துகளில 2 விக்கட் இழந்து 3 ஓட்டங்கள். இந்தியா 1 பந்தில் 4 ஓட்டங்கள்.
-
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
வெல்ல வேண்டிய இலங்கை அணி கடைசி 30 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்து 8 பேர் அவுட். இப்போது சுப்பர் ஓவர்.
-
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
இன்றைய போட்டியில் இலங்கை வெல்லும் போல இருக்கிறது. IND 137/9 SL (8.6/20 ov, T:138) 58/1
-
வெனிசுவேலா ஜனாதிபதி தேர்தல் - நிக்கொலஸ் மதுரோ வெற்றி
அமெரிக்காவில் அதுவும் நியூயோர்க்கில் வெனிசூலாகாரரின் அட்டகாசங்களை தாங்க முடியவில்லை. அதிலும் அண்மையில் மெக்சிக்கோ எல்லை வழியாக வந்தவர்களே இவர்கள். இதுவே கமலா கரீசுக்கு கொஞ்சம் பின்னடைவு வரலாம்.
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
இதுவரை தவறாக எண்ணியிருந்ததை நேற்றை டெய்லிமிரர் பதிவு தான் தெளிவுபடுத்தியது. முதலாம் இரண்டாம் எண்ணிக்கையில் 50 வீடமான வாக்குகள் கிடைக்வில்லை என்றால் மறுபடியும்தேர்தல் வைப்பார்கள் என்றே எண்ணினேன். ஆனால் இரண்டாவது எண்ணிக்கையில் 50 வீதம் கிடைக்காவிட்டாலும் கிடைத்ததை வைத்து ஒரு ஜனாதிபதி வருவார் என்றால் பொது வேட்பாளர் பிரயோசனமில்லாத வேலையாகவே இப்போது தெரிகிறது. நம்மவர்கள் இரண்டாவது வேட்பாளராக ரணிலையே போடுவார்கள் போல உள்ளது. ஐயா விக்னேஸ்வரனும் நாசூக்காக இதை அடிக்கடி சொல்கிறார். இவற்றைவிட கஜேகுழு சொல்வது போல பேசாமல் பகிஸ்கரித்து விட்டே இருக்கலாம்.வாக்குப் போடவும் துரோகி என்பார்களே என்று கிட்டவே போகமாட்டார்கள். கழுதை தேய்ந்து கட்டெறும்பாகப் போகுது. தம்பி இதை முதலில் உங்க கட்சிக்காரருக்கு சொல்லுங்க. அவங்க தான் ரணிலை ஜனாதிபதியாக்க ரொம்பவும் ஆவலாக நிற்கிறாங்க.
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
இங்கே சுமந்திரன் சொல்வதப் போல பொது வேட்பாளரின் வாக்கு அடிபட்டுப் போகிறதே?