Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. சிறி இதில் முதலாவது இரண்டாவது ஆலோசனைகள் பிழை என்று எண்ணுகிறேன். கொழுப்பில்லாத உணவும் அளவுக்கதிகமாக உண்ணும் போது கொழுப்பாகவும் சீனியாகவும் மாறும் என்கிறார்கள். இதுபற்றி தெளிவாக @Justin இடம் தான் கேட்க வேண்டும்.
  2. பேரன்களை யாராவது மறப்பார்களா? மசாலைத்தோசை சுடும் கமலா கரீஸ்.
  3. சாப்பிட்டதை குளிசையால் கட்டுப்படுத்துகிறீர்கள் போல நல்லது கவனமாக இருங்கள்.
  4. ஆரம்பத்தில் யூரோ இருந்ததைவிட இன்னும் முன்னேற்றம் கண்டிருந்தால் கதை வேறாக இருந்திருக்கும். கமலாவுக்காக தமிழ்நாட்டில் பூசை.
  5. இதையே தான் நானும் யோசித்தேன்.
  6. எனக்கு ஏறத்தாள 15 வருடங்களாக 6-6.1-6.2 இப்படியே போகிறது. குளிசை போடுவது நல்லது என்று டாக்ரர் சொல்லுவார்.ஏற்கனவே 1997 இல் இருந்து பல குளிசைகள் போடுறபடியால் இன்னொரு குளிசை தேவையா என்று யோசிக்கிறேன். ஆனாலும் 6.4 க்கு மேலே போனால் குளிசை எடுக்கத் தான் வேண்டும். 97இல் இருந்து 3 மாதத்துக்கொரு தடவை முழு ரத்த சோதனை செய்கிறேன். எங்களுக்கும் கூட்டல் கழித்தல் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.
  7. அடுத்த தடவை எப்படியும் கொண்டுவந்து விடுவார்கள். டாலரின் விலை இனிக் கூடலாம். கைவசம் உள்ளவர்கள் பத்திரப்படுத்துங்கோ.
  8. இருவர் சந்திப்பது வேறு என்று எண்ணுகிறேன். அந்த சந்திப்பை உறுதிப்படுத்துவது தான் Appointment. Appointment இல்லாமல் எப்படி சந்திப்பது?
  9. சிறி கோத்தா நம்பியிருந்த நம்பிக்கையான ராணுவமே கோத்தாவுக்கு உயிர் ஆபத்தென்று வந்தபோது இன்னொரு நாட்டின் ஆலோசனையைக் கேட்டார்களே தவிர தனது தலைவனை காப்பாற்ற முயற்சியே செய்யவில்லை. இவர்கள் எம்மாத்திரம்? உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும்கூட மிதிக்கும்.
  10. அப்படி என்னதான் உளவள ஆலோசனை? எதிரே விளையாடுவது தமிழர்கள் தான் என்று நினைத்து விளையாடினால் நரம்புகள் புடைத்து ஒரு வெறிவரும் அப்போது நன்றாக விளையாடலாம் என்று சொல்வார்களோ? இந்த வழிகாட்டல்களை பகிரங்கப்படுத்த வேண்டும்.
  11. இந்த போதைப்பொருளை அவர் முன்னாலேயே குடும்பத்தினருக்கு பாவிக்க கொடுக்க வேண்டும்.
  12. எதிர்காலத்தில் இவர்களை றோவுக்கு உளவுபார்க்க வைக்க இலகுவாக இருக்கும்.
  13. நானும் ஏதோ பெரிய தொகை வேணும் என்று தவறாக எண்ணிவிட்டேன்.
  14. கந்தர்மட பிரஜைகள் @தமிழ் சிறி
  15. ஊரில அப்படி படுத்தா அமெரிக்காவிலும் அப்படியா படுக்கணும்?
  16. கனடாவில் மலிவு. போனால் வாங்குங்கள். கனடாவிலிருந்து யாரும் வரும் போது என்ன வாங்கிவர என்றால் லெமன் பொவ் எனக்கு மிக்சர்உம் பகோடாவும். சோறு சாப்பிடும் போது கறுக்கு மொறுக்கு என்று கடிபட வேண்டும்.
  17. காங்கிரஸ் வந்தால் தடை நீங்கும் என்று சொல்லவில்லை. காங்கிரசைத் தவிர வேறு யாராவது தடையெடுத்தால் காங்கிரஸ் பெரும் அரசியலாக்கலாம்.
  18. எனது பிள்ளைகளுக்கு லெமன் பொவ் பிஸ்கட் என்றால் இப்போதும் அடிபட்டு சாப்பிடுவார்கள். படங்கள் இணைப்புக்கு நன்றி.
  19. அது 1935 ஆண்டு , தென்மாகாணத்தில் இருந்து பிழைப்புக்கும் , உழைப்புக்குமாக கொழும்பு நோக்கி வருகிறான் ஒரு இளைஞன் பல்வேறுப்பட்ட சிரமம் , அலைச்சல் , தேடல் , தியாகம் அனைத்தையும் அனுபவித்தான் அந்த இளைஞன் . பல வகையான மனிதர்கள், பல்வேறு போராட்டங்கள் அனைத்தையும் கடந்து கொழும்பில் உள்ள முதலாம் குறுக்கு தெருவில் தேநீர் கடை ஒன்றை நிறுவுகிறான். அந்த இளைஞனின்முழுப்பெயர் பெயர் அங்கல்காஹ கமகே ஹினி அப்புமுஹாமி என்பதாகும் . கடினமான உழைப்பு , ஓய்வில்லாத முயற்சி , தூக்கமில்லாத வேலை , இப்படியே ஓட்டுகிறான் தேநீர் கடையை. . சொற்ப வருடத்திலேயே அந்த இளைஞனின் கடினமான முயற்சிகளுக்கு பலன் கிட்டியது , விரைவிலேயே தேநீர் கடை , ஒரு ஹோட்டலாக மாற்றம் பெற்றது . கொழும்பின் மலிபன் தெருவிலே அந்த ஹோட்டல் திறக்கப்பட்டதால் , அந்த ஹோட்டலுக்கும் மலிபன் ஹோட்டல் என்ற பெயரையே சூட்டினார் திருவாளர் அப்புஹாமி அவர்கள் . அவரது உதவி ஒத்தாசைக்கென்ன தங்களின் சகோதரர்களான A.G.விக்ரமபால மற்றும் A.G.ஜினதாச ஆகியோரையும் இணைத்து கொண்டார் . கூட்டு முயற்சியாலும் , கடின உழைப்பாலும் அவரின் வர்த்தகம் வேகமாக வளர்ந்ததோடு , அது பல கிளைகளையும் பரப்பியது . மலிபன் ஹோட்டலுக்கு மக்களின் அபிமானமும் , வரவேற்பும் பல மடங்கு பெருகுகிறது. அதை அப்படியே தக்கவைத்துக்கொண்ட அப்புஹாமி அவர்கள் அடுத்த கட்ட முயற்சிகளை சிந்தித்து , செயலாற்ற தொடங்குகிறார் . அந்த முயற்சியிலே குதிக்கிறார் . அந்த சிந்தனையும் முயற்சியும் , அப்புஹாமி அவர்களை கொழும்பு கொட்டாஞ்சேனையில் , ஒரு பேக்கரி தொடங்கி , வியாபாரத்தை விரிவுபடுத்த வைக்கிறது . . பேக்கரியும் தொடங்கியாயிற்று , அங்கே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த தரம் மற்றும் சுவை கொண்ட தயாரிப்புகளின் மதிப்பும் அதிகரிக்கிறது . இதனால் , ஹோட்டலுக்கு போலவே , பேக்கரிக்கும் மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பும் , நற்பெயரும் கிடைக்கிறது . அப்புஹாமி வழங்கிய நல்ல வியாபாரமே , வாடிக்கையாளர்களிடம் இருந்து அவருக்கு நல்ல மதிப்பை கொடுத்தது . வியாபாரத்தின் தாரக மந்திரம் வாடிக்கையாளர்கள் என்றால் , அந்த வாடிக்கையாளர்களுக்கு நாம் கொடுப்பதும் சிறப்பானதாய் இருக்க வேண்டும். அப்படி சிறப்பானதை கொடுத்தால் தான் , வாடிக்கையாளர்களையும் நாம் தக்க வைக்க முடியும். இதனை செவ்வனவே செய்தார் அப்புஹாமி , விளைவு நல்ல வாடிக்கையாளர்கள் தக்க வைக்கப்பட்டனர் , அந்த வாடிக்கையாளர்கள் தக்க வைக்கப்பட்டதால் , இவரின் வர்த்தக பெயரும் மக்கள் மனதில் பதிந்தது . வாடிக்கையாளர்களும் உள்ளனர் , நல்ல பெயரும் இருக்கிறது , இது ஒரு வரமல்லவா ? இப்போது அடுத்த கட்டத்தை பற்றி யோசித்தார் அப்புஹாமி . ஒரு இயந்திரமயமாக்கல் மூலமான உணவு உற்பத்தி செயல்முறையை ஆரம்பிக்க முடிவெடுக்கிறார் . அந்த முடிவே , 1954 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் , நாட்டின் முதலாவது இயந்திரம் மூலம் தயாரிக்கப்பட்ட பிஸ்கட் உற்பத்தியை இலங்கை தீவுக்கு அறிமுகம் செய்கிறது . அப்புஹாமி முதல் வியாபாரம் பழகிய இடத்தின் பெயரையே , தனது பிஸ்கட் நிறுவனத்திற்கும் வைக்கிறார் - அதுவே மலிபன் என்பதாகும் . 1935 ம் ஆண்டு தொடக்கம் 1954 ம் ஆண்டு வரையான , வெறும் 19 ஆண்டுக்குள் ஒரு இமாலாய சாதனையே இதுவாகும் . இன்று மலிபன் நிறுவனமானது பிஸ்கட் துறையில் மட்டுமல்ல , பால்மா வியாபாரத்திலும் தனக்கென தனியிடம் பிடித்துள்ளது . சிறிய ஆரம்பமே பெரிய அடைவுகள் என்பதற்கு அப்புஹாமி மெலிபன் வீதியில் ஆரம்பம் செய்த மெலிபன் ஹோட்டலும் , இன்றைய அந்த நிறுவனத்தின் வளர்ச்சியும் சிறந்த எடுத்துக்காட்டு . முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை என்பதற்கு அப்புஹாமி நல்லதொரு உதாரணம் . அது போல , கம்பீரமாய் வளர்ந்து நிற்கும் மலிபன் நிறுவனம் ஒரு சான்று . படித்ததில் பிடித்தது Copied from : Hafy Abdeen https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0N4hCg53DXZ5xmsoZEyYozSLAkkSA2kGzrfZ88qJNtoxGfS8DDadftdLBUu8h856Cl&id=100068724064386&mibextid=cr9u03

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.