Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஈழப்பிரியன்

  1. 5 Overs 12/5 தென்னாபிரிகா தான் குறைந்த ஓட்டங்கள் எடுக்க போகுதோ?
  2. எனக்கும் அதே நிலைமைதான்! என்னதான் நடக்குது இந்தமுறை? இந்த போட்டிகளில் ஜாம்பவான்கள் மண் கவ்வுகிறார்களோ? Netherland 5 Overs 18/3
  3. அப்புறம் என்ன உங்களை பொதுவேட்பாளரா இறக்கிட வேண்டியது தான். தம்பிமாரே அவித்த முட்டை அதிகம் சாப்பிட்டால் அப்புறம் பின்னால பறியும். சும்மா கிடந்த சங்கை நீங்க தான் ஊதி கெடுத்தது.
  4. என்னால நம்பவே முடியவில்லை அப்ப கடைசியில் நிற்கும் போது சந்தோசமாக இருந்ததோ?
  5. இந்திய அமைதிப்படையால் கொலை செய்யப்பட்ட எல்லோருக்கும் ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
  6. 1 கோஷான் சே 24 முதல்வருக்கு வாழ்த்துக்கள்.
  7. அமெரிக்க மைதானங்கள் பந்துவீச்சாளர்களுக்கே சாதகமானது போல.
  8. இலங்கையின் பந்து வீச்சு நன்றாக எடுபடுது. ஓஓஓ அப்ப லைற்று பிரச்சனையாக இருக்கும்.
  9. அப்பிடி போல தான் ஒரு பக்கம் ஆப்கானிடம் நியூசிலாந்து தவளுது. இலங்கை வீரர்களும் ஆரம்பத்தில் பட்டையை கிளப்பினார்கள்.பின்னர் ஒவ்வொருவராக போனார்கள். பந்து வீச்சு எப்படி என்று பார்ப்போம். மைதான பிரச்சனை வந்தபடியால் எல்லோரும் தோற்றால் மைதானத்தையே சாட்டப் போகிறார்கள். Afghanistan Afghanistan 159/6 (20) 54/7 (10) Drinks New Zealand New Zealand நால்வரும் சந்தோசமாக இருங்கோ.
  10. நியூயோர்க் கிரிக்கெட் மைதான ஆடுகளம் தரமற்றது: சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் நடவடிக்கை நியூயோர்க்கில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்கள் தரமானதாக இல்லை என்பதை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனையடுத்து எஞ்சியுள்ள போட்டிகளுக்கு அவற்றை சரிசெய்ய மைதான ஊழியர்கள் பணியாற்றி வருவதாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது. நியூயோர்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை இரண்டு போட்டிகள் இடம்பெற்றுள்ளன. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி எனினும் ஆடுகளத்தின் தன்மை காரணமாக அந்த போட்டிகளில் குறைந்த ஓட்டங்களே பெறப்பட்டன என சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஆடுகள அமைப்பில் பந்து மேழெழும் தன்மை (bounce) காரணமாக துடுப்பாட்டத்தை மிகவும் கடினமாக்கியது என கூறப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இலங்கை 77 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அதேநேரம் இந்திய அணிக்கு எதிராக அயர்லாந்து அணி 96 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் இந்த நிலையில் உலகத் தரம் வாய்ந்த மைதானக் குழு நேற்றைய ஆட்டத்தின் பின்னர் நிலைமையை சரிசெய்யவும், மீதமுள்ள போட்டிகளுக்கு சிறந்த மேற்பரப்புகளை வழங்கவும் கடினமாக உழைத்து வருவதாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதேவேளை இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டிகளுடன் இன்னும் ஆறு போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெறவுள்ளன. முன்னதாக இந்திய அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், மைதானத்தில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய பின்னர் இது சவாலான விக்கெட் களம் என்று வர்ணித்தார். எனினும் உள்ளது உள்ளபடியே இருக்கும் எனவே அதைச் சமாளிப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும், இந்திய அணியில் அதனை சமாளிக்க போதுமான திறமையும், போதுமான அனுபவமும் இருப்பதாக தாம் நினைப்பதாக அவர் கூறியுள்ளார். https://tamilwin.com/article/the-pitch-at-the-new-york-cricket-ground-is-shoddy-1717782301
  11. https://tamilwin.com/article/the-pitch-at-the-new-york-cricket-ground-is-shoddy-1நியூயோர்க் கிரிக்கெட் மைதான ஆடுகளம் தரமற்றது: சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் நடவடிக்கை.7177823 @ரசோதரன் @வீரப் பையன்26
  12. இங்கு சீமானுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் தினம் தினம் சிங்கள அரசுகளால் எமது மக்கள் படும் துன்பங்களையோ அநிஞாயங்களையோ பற்றி பேசுவதில்லை. ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்கள் பலர் இருந்தும் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் எந்த ஒரு விடயத்தையும் குறைந்த பட்சம் வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு எழுத கூட மாட்டார்கள். கேட்டால் உலகத்துக்கு தெரியாததா என்பார்கள். வீட்டில் களவு போனால் கூட முறைப்பாடு செய்தால்த் தான் பொலிசே வருவான். எந்த ஒரு பொலிசும் வீடு தேடி வந்து உங்க வீட்டில் களவு போட்டுதா என்று கேட்க மாட்டான்.
  13. ச்சா கனடா வென்று விட்ட்து .புகுந்த நாட்டுக்கு விசுவாசமாய் இருப்போம் என்று போட்ட நான். திசை மாறிப்போச்சே அக்காவின் திசையை பையன் மாற்றிவிட்டான்.
  14. இப்ப பிச்சைக்கானே ஒத்தை ரூபாவை எடுக்கிறானில்லை. கனடா வெற்றி நிச்சயம்.
  15. நமக்கு கிடைக்கும் பாதி மாலை மரியாதை இப்படி குருட்டு லக்கில்தான் கிடைக்கிறது தம்பிக்கொரு மாலை பிளீஸ். ஒரேஒரு ஆள் தான் கனடாவை நம்பி களமிறங்கியுள்ளார். மற்றவைக்கு முட்டைக் கோப்பி தான்.
  16. அவுசில் இருந்து தான் இந்த பிட்ச் வந்ததாம். அவர்கள் தான் ஏதோ தில்லுமுல்ல பண்ணி விட்டார்களோ? மற்றும்படி அமெரிக்கா அப்பாவி. இதைப்பற்றி எதுவுமே தெரியாது. நம்புங்க பாஸ்.
  17. அயர்லாந்து நல்லதொரு விக்கட்டை சலஞ் பண்ணாமல் கோட்டை விட்டு விட்டது.
  18. ஈழத் தமிழ் மக்களுக்கென அர்த்தமுள்ளதும் அடிபணியாததுமான சமஸ்டி முறையிலான நிரந்தர அரசியல் தீர்வினை பெற்றுத்தருவதில் இந்தியாவே பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும். இதற்கு பாரத பிரதமர் துணை நிற்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய வாழ்த்துரையில் தெரிவித்துள்ளார். அவரது கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தாங்கள் இந்திய மக்களின் மன உணர்வுகளை வென்றிருப்பதன் பிரதிபலிப்பாகவே மக்களவைத் தேர்தலில் பெற்றிருக்கும் இந்த வெற்றி அமைந்திருக்கிறது. பாரதத்தின் அரசியல், பொருளாதார, சமூக நலன் சார்ந்து தாங்கள் ஆற்றவிருக்கும் பணிகளின் விளிம்பில், ஈழத் தமிழர்களுக்கும் இந்திய தேசத்துக்கும் இடையே இழையோடியிருக்கும் உறவின் கனதியை உயிர்ப்பிக்க வேண்டிய காலக்கடமையும் தங்களிடத்தே தரப்பட்டிருப்பதாக நாம் உணர்கிறோம். இலங்கைத் தீவில், ஈழத் தமிழ் மக்களுக்கென அர்த்தமுள்ளதும் அடிபணியாததுமான சமஸ்டி முறையிலான நிரந்தர அரசியல் தீர்வினைப் பெற்றுத்தருவதில் இந்தியாவே பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் என்பதே எமது இனத்தின் நீண்டகால எதிர்பார்ப்பாகும். அந்த வகையில், தங்களது அனுசரணையும் அழுத்தமும் இன்றி இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் தமக்குரித்தான உரிமைகளுடன் வாழும் வாய்ப்பை பெறமுடியாது என்பதை நாம் திடமாக நம்புகிறோம். போருக்குப் பின்னரும் இன, மத அடக்குமுறைகளுக்கு ஆளாகியிருக்கும் எமது மக்களின் ஆட்சி உரிமை மற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக, எமது கட்சியாகிய இலங்கை தமிழ் அரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியத் தரப்புகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளில், இந்திய மத்திய அரசு தனது முதன்மையான பணிகளை ஆற்ற முன்வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பை எமது இனத்தின் கோரிக்கையாக தங்களிடம் முன்வைக்கிறேன். இந்திய தேசத்தின் வரலாற்றுப் பக்கங்களில் தனித்துவம் மிக்க தலைவராக, தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் மக்கள் ஆணை பெற்று, பாரத பிரதமராக ஆட்சிபீடம் ஏறியிருக்கும் தங்களின் பணிகள், இந்திய மற்றும் ஈழ தேசங்களின் நலனுக்கான வரலாற்றுப் பணிகளாய் அமைய வாழ்த்தி நிற்கிறேன் என்றுள்ளது. https://seithy.com/breifNews.php?newsID=318453&category=TamilNews&language=tamil
  19. ஓம் ,ஓம் குமாரசாமியையும் இப்படித் தான் எல்லோரும் நம்பி மோசம் போட்டோம்.
  20. அமெரிக்காவிடம் பாகிஸ்தான் அதிர்ச்சித் தோல்வி. உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரில் எதிர்பாராதவிதமாக பாகிஸ்தான் அணி அமெரிக்காவிடம் தோல்வியடைந்துள்ளது. போட்டி ஏற்பாட்டாளர்களான அமெரிக்கா முதல் தடவையாக உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரில் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அனுபவம் வாய்ந்த பாகிஸ்தான் கிரிக்கட் அணி அறிமுக அணியான அமெரிககாவிடம் முதல் சுற்றுப் போட்டியொன்றில் தோல்வியடைந்துள்ளது. சுப்பர் ஓவர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் சுப்பர் ஒவரில் அமெரிக்கா வெற்றியீட்டியது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய அமெரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 159 ஓட்டங்களைப் பெற்றக்கொண்டது இதில் உஸ்மான் கான் 44 ஓட்டங்களையும் சாடெப் கான் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். அமெரிக்க அணியின் சார்பில் நொஸ்டுக் கின்ஜெ 3 விக்கட்டுகளை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் மொனாக் பட்டெல் 50 ஓட்டங்களையும் ஆரோன் ஜோன் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். போட்டியில் இரு அணிகளும் சம எண்ணிக்கையிலான ஓட்டங்களைப் பெற்ற காரணத்தினால் சுப்பர் ஓவர் மூலம் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது. சுப்பர் ஓவரில் அமெரிக்க அணி ஒரு விக்கட் இழப்பிற்கு 18 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 13 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதன்படி சுப்பர் ஓவரில் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அமெரிக்கா வெற்றியீட்டியது. பாகிஸ்தான் அணி இவ்வாறான உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிர்ச்சி தோல்விகளை பல சந்தர்ப்பங்களில் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/usa-beat-pak-in-t20-worldcup-1717719284
  21. பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், 84 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பயணித்த சிறுபடகொன்று ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய அரசு புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டாலும், ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்ந்தோர் சற்றும் தங்கள் முயற்சியை தொடர்கின்றனர். இன்று காலை, 84 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் சிறுப டகொன்று பிரான்ஸிலிருந்து புறப்பட்டுள்ளது. குழந்தை உட்பட மூன்று சிறுவர்கள் அந்தப் படகு ஆங்கிலக்கால்வாயில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென அதன் இயந்திரம் பழுதடைந்துள்ளது. ஆகவே, மீண்டும் திரும்பி பிரான்சுக்கே சென்றுவிடலாம் என முடிவு செய்து படகை செலுத்தியோர் அதனை திருப்பும்போது, எதிர்பாராமல் அந்த படகு கவிழ்ந்ததாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த படகில், ஒரு ஆறு மாதக் குழந்தை உட்பட மூன்று சிறுவர்களும் பயணித்துள்ளார்கள். படகு கவிழ்ந்து அதிலிருந்தவர்கள் தண்ணீரில் தத்தளித்த நிலையில், தகவலறிந்து வந்த பிரான்ஸ் படகொன்று அவர்களை மீட்டுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்பட்டவில்லை என கூறப்படுகிறது. https://tamilwin.com/article/overturned-boat-with-84-migrants-1717700553

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.