Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. உங்கள் முயற்சிக்கு நன்றி கிருபன்.
  2. இந்தக் காணொளியையும் பாருங்க. கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் இருக்க அவசர அவசரமாக யார்யாரையோ குற்றவாளிகளாக காட்டி வழக்கை முடிக்கிறார்கள். இந்த விசாரணையை மேற்கொண்டவர்களில் ஒருவரான மோகனதாஸ் இப்படி ஒரு கேவலமான வழக்கை தான் பார்த்ததில்லை என்று மேலே உள்ள காணொளியில் கூறுகிறார். இதே மாதிரி இந்த விசாரணையை மேற்கொண்ட பலர் பின்னர் எப்படியெல்லாம் உண்மையான குற்றவாளிகள தப்பவிடப்பட்டனர் என்பதை சொல்கிறார்கள்.
  3. என்ன இப்படி ஒரு குண்டைத் தூக்கி போடுகிறீர்கள்.
  4. ஆபத்தான குளிர்கால புயல் கலிபோர்னியாவை வந்தடைந்துள்ளது மற்றும் வார இறுதியில் மலைகளில் பனி, சக்திவாய்ந்த காற்று மற்றும் அரிதான பனிப்புயல் நிலைகளை இறக்கும். இந்த புயல் கலிபோர்னியாவை இந்த ஆண்டின் மிகப்பெரிய பனிப்பொழிவின் கீழ் புதைக்கும், பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தும் - ஆனால் மாநிலத்தின் நீர் வழங்கல் மற்றும் சுற்றுலாவிற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கிறது. சியாரா நெவாடாவின் மிக உயர்ந்த சிகரங்களில் வியாழன் அன்று கடும் பனியுடன் 140 மைல் வேகத்தில் காற்று வீசியது. சக்திவாய்ந்த புயல் இந்த தீவிர காற்றையும், வார இறுதியில் கடுமையான பனியையும் இறக்கி, நீண்ட கால பனிப்புயல் நிலைமைகளை உருவாக்கும். "சியரா பாஸ்களில் பயணம் செய்வது ஏற்கனவே துரோகமாகிவிட்டது, வார இறுதிக்குள் செல்லும்போது அது மோசமடையும்" என்று நெவாடாவின் ரெனோவில் உள்ள தேசிய வானிலை சேவை அலுவலகம் வெள்ளிக்கிழமை எச்சரித்தது. "பதங்குவதற்கான நேரம் நம்மீது உள்ளது." பனிப்பொழிவு விகிதங்கள் வெள்ளி முதல் சனிக்கிழமை வரை ஒரு மணி நேரத்திற்கு 3 முதல் 5 அங்குலங்கள் வரை - குறிப்பாக சியரா நெவாடாவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீடித்த கடுமையான பனிப்பொழிவு என்பது 6 முதல் 12 அடி வரை பனிப்பொழிவு என்பது சில நாட்களில் மலைகளின் சில பகுதிகளை புதைத்துவிடும். https://www.cnn.com/2024/02/29/weather/california-storm-snow-blizzard-climate/index.html
  5. சிறு வயதிலேயே சாதனை. மிகவும் பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள். சாதனைகளை அவதானமாக செய்யுங்கள்.
  6. அண்மையில் கொஞ்சம் அரசியல் பேசுகிறார். இறங்கப் போகிறாரோ?
  7. கடன்களை திரும்ப அடைக்க வெளிக்கிட்டாலும் இந்த நிலமை வரலாம். தேர்தல்வரை அமுக்கி வைத்திருப்பார்கள்.
  8. எத்தனையோ மக்களைக் கொன்றதற்காக இவரையல்லவா மக்கள் நஸ்டஈடு கோர வேண்டும். பழுதடைந்த மருந்துகளை இறக்கி சேர்த்த பணம் போதாதா?
  9. அட பாவிகளா 14 மாதமா பணிகள் நடக்குதா? எஞ்சியுள்ளவர்களை என்ன செய்யலாம் என்று திட்டம்?
  10. ராஜாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  11. ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையாகி சிறப்பு முகாமில் சிறை அனுபவித்து வருபவர்களை சாந்தன் மாதிரி சாக விடாமல் விரைவில் விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும்.
  12. இருக்கிற சட்டங்கள் கடுமையானவை இல்லை என்பதால்தான் பயமின்றி இந்த மாதிரி செயல்களை திரும்பத் திரும்ப செய்கிறார்கள் என நினைக்கிறேன். சிறையில் அடைத்தால், தண்டனை காலம் முடிய வெளியே வந்து விடுவார்கள் இலங்கையில் குற்றம் செய்ய பயிற்றுவிக்கிறார்கள்.
  13. ஒரு பொலிஸ் அதிகாரிக்கே பாதுகாப்பில்லை என்று நாட்டைவிட்டு ஓடும்போது சாதாரண மக்கள் என்ன செய்வர்?
  14. சாந்தன் இயற்கை மரணமல்ல! படுகொலை: சட்டத்தரணி அதிர்ச்சித் தகவல் சாந்தன் உயிரிழந்த விவகாரமானது இயற்கை மரணமல்ல எனவும் அது இந்திய அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை எனவும் சட்டத்தரணி புகழேந்தி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பின், சிறையிலிருந்து விடுதலையான சாந்தன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். இந்நிலையில் சாந்தனின் மரணம் தொடர்பில் ஐபிசி ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார் சட்டத்தரணி புகழேந்தி. மேலும், ''ஈழத்தமிழருக்கு எதிராக இந்தியாவில் காணப்படும் திருச்சி சிறப்பு முகாம் என்பது இழுத்து மூடப்படவேண்டும். அண்ணன் சாந்தன் விட்டுச்சென்றுள்ள இந்த செய்தியானது உலகத்தில் கொடுமைகளை அனுபவிக்கும் ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக மாறியுள்ளது. இந்நிலையில், இலங்கை அரசு அனுமதி வழங்கியும் கூட இந்திய அரசினால் சாந்தன் தனது தாய்நாட்டுக்கு அனுப்பப்படாமல் மரணித்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது." என்றார். இவ்வாறான நிலையில் சாந்தனின் மரணத்தின் பின்னணி குறித்தும், சிறப்பு முகாம்களில் இலங்கை அகதிகள் அனுபவிக்கும் கொடுமைகள் குறித்தும், இந்திய அரசின் சட்டம் எவ்வாறான தாக்கங்களை உருவாக்கின்றது என்பது தொடர்பிலும் சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்த கருத்துக்களை தொகுத்து வருகிறது சிறப்பு நேர்காணல்... https://tamilwin.com/article/sandhan-s-lawyer-shocked-news-1709125946
  15. முன்னரெல்லாம் எங்களைக் காப்பாற்று என்று மக்கள் கோவில்களை நோக்கி ஓடினார்கள். இப்போ தெய்வங்களெல்லாம் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு உள்ளேயிருந்து மக்களே எங்களை காப்பாற்றுங்கள் என்று தூங்கிவிட்டார்கள். அவர்களது தேவை,சேவைகளை மக்களே கையிலெடுத்து விட்டார்கள்.
  16. இதைத் தான் நானும் எண்ணினேன். துயரவீட்டில் அரசியல் ஏன் என்று கடந்து விட்டேன். தம்பி சாந்தனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
  17. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உடல்நலக்குறைவால் இன்று இந்தியாவால் காலமானார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். சாந்தன் இலங்கை தமிழர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டார். தொடர்ந்தும் இலங்கைக்கு தன்னை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில், பல போராட்டங்களின் பின் சாந்தனை இலங்கை அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால், சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரச பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கோமாநிலைக்கு சென்ற சாந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சாந்தன் காலமானார். பல போராட்டங்களின் பின் சாந்தன் இன்று இலங்கை திரும்ப இருந்த நிலையில் அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://samugammedia.com/rajiv-gandhi-assassination-case-convict-santhan-passes-away-1709085738
  18. புலிகள் தோற்றது சிங்களத்தின் வீரத்தினால் அல்ல தமிழரின் துரோகத்தால்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.