Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. கப்பல் வாழ்க்கையை பலர் விரும்பி செய்கின்றனர் ...இந்த கப்பலில் வேலை தேடி செல்வது 1970 களில் மிகவும் பிரபலமாக இருந்தது....அந்த காலகட்டத்தில் வெளி நாடுகளுக்கு செல்வது என்பது மிகவும் கடினமாக இருந்தது ஆனால் கப்பலுக்கு பலர் சென்றனர்.. நானும் 83 வரை ஒரு கப்பல் மாலுமியாக வேலை செய்தேன். அது ஒரு கனாக்காலம்.
  2. ஓஓஓ அது தான் கோத்தபையன் தலைவராக இருந்த போது பக்கத்தில் கடற்படை முகாம் இருந்தும் தரையில்த் தானே நடக்கிறது என்று காலைவாரி விட்டார்களோ?
  3. கடற்படையினரிடம் உதவிக்கு போனவர்களை துரத்த விட்டுள்ளனர். செங்கடலுக்கு போனால்த் தான் பாதுகாப்பு கொடுப்பார்களோ? இந்த கொலையில் கடற்படையினரையும் ஒரு தரப்பாக சேர்க்கணும் யுவர் ஆனர்.
  4. ஐயாவுக்கு இந்த பாவாடையில ஒரு கண்ணயிருக்கே? சுவியிடம் சொல்லி அடுத்த அடுத்த பதிவுகளில் பாவாடையே இல்லாமல்…………..? கதையை வாசித்துப் போட்டு வாசகர்கள் சதிராடாமல் இருக்கணுமே? அடபாவி விதானை இதைச் சொல்லி சொல்லியே எத்தனை நாளுக்குத் தான்யா வாமனை ஏமாற்றப் போகிறாய்? யுவர் ஆனர் விதானை ரொம்பவும் கடுப்பேத்துறார்.
  5. அடுக்கு மாடிகளில் இருந்த போது ரொம்பவும் தொல்லை தந்தது. கரப்பான் சாப்பிட்டு மிச்சம் தான் நாங்க சாப்பிடலாம் என்ன மாதிரி இருந்தது.
  6. உங்கள் கவிதையுடன் இந்தப் பாட்டு ஒத்துப் போவதால் இணைத்துள்ளேன். கவிதைக்கு பாராட்டுக்கள்.
  7. என்ன ரசோதரன் வீட்டில கரப்பான் தொல்லை தாங்க முடியலையோ?
  8. அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்ததே அந் நாட்டில் நிழல் இருந்ததே மண்வழியில் மரம் இருந்ததே மரத்தடியில் பேசிச் சிரித்திட நண்பர் கூட்டம் நூறிருந்ததே நல்ல மழை பெய்திருந்ததே நரகத் தீ சூடில்லையே தீவட்டிக் கொள்ளை இல்லையே தின்றது எதுவும் நஞ்சில்லையே அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்ததே அந் நாட்டில் நிழல் இருந்ததே மண்வழியில் மரம் இருந்ததே மரத்தடியில் பேசிச் சிரித்திட நண்பர் கூட்டம் நூறிருந்ததே நல்ல மழை பெய்திருந்ததே நரகத் தீ சூடில்லையே தீவட்டிக் கொள்ளை இல்லையே தின்றது எதுவும் நஞ்சில்லையே ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால் மறுவீட்டில் பசியில்லையே ஒரு கண்ணு கலங்கி நிறைந்தால் ஓடி வரப் பலருண்டங்கே நாடெங்கும் மதில்கள் இல்லையே ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால் மறுவீட்டில் பசியில்லையே ஒரு கண்ணு கலங்கி நிறைந்தால் ஓடி வரப் பலருண்டங்கே நடைவெளி இடைவெளி நூறிருந்ததே நாலுமணிப் பூவிருந்ததே நல்லோர் சொல்லுக்கு விலையிருந்ததே அன்றும் பல மதம் இருந்ததே அதையும் தாண்டி அன்பிருந்ததே அன்றும் பல மதம் இருந்ததே அதையும் தாண்டி அன்பிருந்ததே உன்னைப் படைத்தோன் என்னைப் படைத்தோன் என்றதொரு சண்டை இல்லையே உன்னைப் படைத்தோன் என்னைப் படைத்தோன் என்றதொரு சண்டை இல்லையே அந் நாட்டைக் கண்டவர் உண்டோ எங்கே போனது தெளிவுண்டோ அந் நாடு இறந்து போனதோ அது வெறும் ஒரு கனவானதோ அந் நாட்டைக் கண்டவர் உண்டோ எங்கே போனது தெளிவுண்டோ அந் நாடு இறந்து போனதோ அது வெறும் ஒரு கனவானதோ அந் நாடு இறந்து போனதோ அது வெறும் ஒரு கனவானதோ அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்ததே நன்றி உடையார்.
  9. வட்டுக்கோட்டையில் வீதியால் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரை நேற்று கும்பல் ஒன்று கடத்திச் சென்று வாளால் வெட்டிக் கொலை செய்துள்ளது. இச்சம்பவத்தில் வட்டுக்கோட்டை - மாவடி பகுதியை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் காரைநகரில் இருந்து வட்டுக்கோட்டை - மாவடியில் உள்ள வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேளை பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் நின்ற சிலர் அவர்களை வழி மறித்தனர். இதன்போது இருவரும் தப்பித்து கடற்படை முகாமுக்குள் உள்நுழைந்தனர். இந்நிலையில் கடற்படையினர் அவர்களை வெளியே விரட்டினர். இதனால் அவர்கள் வெளியே வந்தவேளை, ஒரு காரில் மனைவியையும், அடுத்த காரில் குறித்த நபரையும் ஏற்றிக்கொண்டு குறித்த குழு அங்கிருந்து சென்றது. பின்னர் மனைவியை சித்தங்கேணி சந்தியில் இறக்கி விட்டனர். அதன்பின்னர் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த நபரை கடத்திச் சென்றவர்கள் அவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட பின்னர் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையினுள் காரில் சென்று, வைத்தியசாலையில் உள்ள மாமரத்துக்கு கீழே அவரை தூக்கி வீசிவிட்டு சென்றனர். இந்நிலையில் வைத்தியசாலையில் இருந்த சுகாதார பணியாளர்கள் இது குறித்து வைத்தியருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினர். அவ்விடத்திற்கு வந்த வைத்தியர் நோயாளர் காவுவண்டி மூலம் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை சில நிமிடங்களில் அவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். https://seithy.com/breifNews.php?newsID=314582&category=TamilNews&language=tamil இந்தக் கொலையை கவனமாக பார்த்தால் கடற்படையினருக்கும் இந்தக் கொலைக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.
  10. கல்வி சம்பந்தமான திரி என்பதால் இதிலிருந்து விலகிக் கொள்கிறேன்.
  11. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை.
  12. பணக்கார நாடுகளில் மரதன் ஓடும்போது இடைஇடை தேவையான தண்ணீர் சிறிய பைக்கற்றுக்குள் தேவையான எனேர்ஜி இனிப்பு போன்றவை முடியும் போது வாழைப்பழம் இளநீர் என்று கொடுப்பார்கள். எமது ஊரில் எதுவுமே இருக்காது. யாராவது வீதிகளில் தண்ணீர் வைத்திருப்பார்கள். முடிவிலும் ஏதும் கொடுத்ததாக தெரியவில்லை. பாவம் பையன் ஆழ்ந்த இரங்கல்கள்.
  13. இப்போது இலங்கையிலும் தண்ணீரைக் குடியுங்கோ குளிக்கும் போது வழமையைவிட கூடுதலான நேரம் குளியுங்கோ என்று வைத்தியர்கள் சொல்கிறார்கள்.
  14. வட்டி இல்லாமல் பணம் கிடைக்குமோ? என்ன? வாமனுக்கு லொட்டோக்கு மேல லொட்டோவா விழுகுது? தம்பிக்கு அலுப்பு இருக்கு போல.
  15. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கூடிய தண்டனை 10 வருடங்கள் தானாமே. பத்து வருடமென்றால் கூட்டிக் கழித்து 8 வருடத்தில் ஆள் வெளியே வந்து சேர்த்த பணத்தில் ஆட்டம் போடலாம்.
  16. 2021 இல் லாஸ்வேகஸ் போயிருந்தேன். சூது விளையாடும் போது கொடுக்கப்படும் மதுவை சுவைத்து சுவைத்து தோல்வியில் வெளியே வந்து பார்வைக்கு பணக்காரர் மாதிரி இருக்கும் பலர் வீதிக்கு வீதி வீழ்ந்து கிடந்தார்கள். நான் போனநேரம் 100-105 பாகை பரனைட் வெப்பநிலை.38-40 செல்சியஸ். இந்த வெக்கையில் பாதையோரம் பார்க்க மிகுந்த கஸ்டமாக இருந்தது.
  17. போதைப் பொருள் வியாபாரத்தைத் தடை செய்யும் நோக்கம் இல்லை. மாறாக இதை வைத்து எதிராக செயல்படும் கட்சிகளை எப்படி தடை செய்யலாம் என்பதே அடிபடுகிறது.
  18. அடபாவிகளா இந்த தேர்தலால ஒழுங்கா ஐபிஎல் லும் நடந்தபாடில்லை. கடைசியில் தேர்தலும் நடக்காது போல இருக்கே?
  19. இப்ப தானே அரசமரம் இல்லாமலேயே அலுவல்கள் நடக்குது. அரசமரத்துக்கு மறுபெயர்= தொல்பொருள் திணைக்களம்.
  20. பெருமாள் 90களின் பின்பு பிறந்தவர்கள் இராணுவத்தின் அடக்கு முறைகளுக்கு மத்தியில் வாழ்ந்து பழகிவிட்டார்கள்.
  21. வீட்டில தப்பு பண்ணினாலும் பேசாமல் போய் வாத்தியாரிடம் போட்டுக் கொடுத்த பெற்றோர்களும் இருந்தனர்.
  22. சென்றகிழமை லிவமோர் (Livermore)என்ற இடத்தில் நடந்த அரைமரதான்(13 மைல்கள் 21 கிலோமீட்டர்கள்)ஓடி முடித்தார்கள். இவர்களும் கூடுதலான தூரம் ஓடி பயிற்சி எடுப்பதில்லை.கிழமையில் 2-3 நாட்களுக்கு 1 1/2-2 மைல்கள் தான் ஓடுவார்கள். @இணையவன் மரதன் ஓடுவதால் இதுகள் பற்றி கூடுதலான விளக்கம் அளிக்கலாம்.
  23. வெளிமாவட்டத்தவரை யாழில் உள்ளவர்கள் தானே தெரிவு செய்தார்கள். அப்புறம் ஏன் துள்ளிக் குதிப்பான்? சுமேயின் காற்றுப்பட்டாலே பிரச்சனை போல இருக்கு. போனகிழமை கிரிக்கட் போட்டி பார்த்தாரே அங்கு ஒன்றும் நடக்கலையோ?
  24. திறந்தவெளி சிறைச்சாலையில் இருக்கும் தமிழர்களுக்காக வருந்துகிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.