Everything posted by ஈழப்பிரியன்
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
இந்த சாரதி அனுமதி பத்திரத்தில் உள்ளதைப் படித்தால் போற இடங்களில் இதையும் லோக்கல் அனுமதிப் பத்திரத்தையும் வைத்து ஓடலாமென்றே உள்ளது. இதை எடுக்கும் போது இலங்கை பற்றி கேட்டதற்கு இதை வைத்தே ஓடலாம் என்றார்கள்.
-
வவுனியாவில் தரம் 2 மாணவன் மீது தாக்குதல்: நான்கு நாட்களின் பின் ஆசிரியர் கைது
எத்தனையோ பெற்றோர்கள் தனது பிள்ளைகளை தண்டிக்க முடியாமல் வாத்தியார்களிடம் முறையிட்டு அவர்கள் திருத்தியெடுத்த காலமும் இருந்தது. இப்போ ஆமி பொலிஸ் அடியெல்லோ அடிக்கிறார்கள்.
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
இல்லை அதற்கு முன்பே கட்டாயம்தான். ஆனால் வீதியில் மறிக்கும் பொலிசுக்கு இது 2022 க்கு பின்பே அறிவுறுத்தப்பட்டிருக்கலாம். நான் சொன்னது போல 2010 அல்லது 12 இல் நான் இதையிட்டு விசாரித்த போதே கொழும்பில் AA யில் பதிய வேண்டும் என்று எனக்கு தெரிய வந்தது. 2017 வாக்கில் யாழில் கூட இதை பற்றி நாதமும் நானும் இன்னும் சிலரும் கதைத்துள்ளோம் முன்னர் ஒரு தடவை இதுபற்றி ஒரு தலைப்பே எழுதி கேட்டிருந்தேன். எவரும் சரியான விளக்கம் தரவில்லை. யாராவது தெரிந்த பொலிஸ்காரங்க இருந்தா கேளுங்க என்றேன்.ஒன்றுமே இல்லை. ஆனாலும் ஒன்றுமே தேவையில்லை அண்ணே.கொண்டு போறதை வைத்து ஓடுங்க என்று @MEERAதான் சொன்னார். நானும் அனேகமான நாட்களில் மோட்டார் சைக்கிள் ஓடித் திரிந்தேன். ஒருதடவை தன்னும் மறிக்கவில்லை. போன வேகத்தைப் பார்த்து இதை ஏன் மறிப்பான் என்று விட்டுட்டாங்களோ?
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
வழமையில் இங்குள்ள AAA யில் 15 டாலர் கட்டி ஒரு வருட அனுமதிப் பத்திரம் எடுத்துக் கொண்டு போய் என்பாட்டில் மோட்டார் சைக்கிள் ஓடித் திரிகிறேன். எனது கேள்வி இங்கே எடுத்துக் கொண்டு போனாலும் திரும்ப விமான நிலையத்தில் எடுக்க வேண்டுமா?
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
4 கோடி பிஜேபி பணம். திமுக பிஜேபி கதிரை வீச்சு.
- அறிவித்தல்: யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
-
உயிர்த்தெழுதல்
அப்ப வெள்ளிக்கிழமை பற்றி எழுதவே இல்லையே?
-
மனம் சூடான ஒன்றை விரும்புகிறது
அப்படி சூடா எதைத் தான் மனம் விரும்புகிறதோ?
- அறிவித்தல்: யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
- அறிவித்தல்: யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
-
எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்...
உங்கள் விமர்சனத்துக்காகவே ஒருமுறை காடு படத்தைப் பார்க்க வேண்டும் போல உள்ளது. நன்றி நொச்சி.
-
நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்
கலிபோர்ணியாவில் தடக்கி விழுந்தாலும் ஐடிக்காரன் மேலே தான் விழ வேணும்.
-
நியூயோர்க்கில் பூமி அதிர்வு.
இன்னமும் பனி கொட்டுதோ?
-
நியூயோர்க்கில் பூமி அதிர்வு.
Newark, New Jersey இல் வீடுகள் சேதம்.
-
நியூயோர்க்கில் பூமி அதிர்வு.
இன்று வந்ததை விட குறைவான அளவு அடுத்த ஒரு கிழமையாக இருக்கலாம் என்கிறார்கள்.
-
நியூயோர்க்கில் பூமி அதிர்வு.
@Justinஉங்களை சுற்றியே நிற்கிறது.
-
நியூயோர்க்கில் பூமி அதிர்வு.
6:01 க்கு மீண்டும் நிலநடுக்கம்.
-
பராமரிப்பில்லாது மூக்கைப் பொத்தவைக்கும் நாவாந்துறை சந்தை! பொதுமக்கள், வியாபாரிகள் அசௌகரியம்
மணமில்லாமல் சந்தையா?
-
"நிழலாக ஆடும் நினைவுகள்" [உண்மைக் கதை]
மிகவும் சோகமான வலி நிறைந்த தருணங்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
கிருபன் எல்லோருக்கும் தனிமடல் போட்டுள்ளேன்.ஓரிருவர் தவிர மற்றவர்கள் கலந்த கொள்வார்கள். நீங்கள் நினைத்ததை விட கூடுதலான போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். என்ன இப்போ போட்டி நடந்து கொண்டிருக்கிறமையினால் அதனைப் பார்த்து கடைசியில் முடிவெடுக்கலாம் என்று இருப்பார்கள். பையனும் பதிந்துவிட்டார்.ஆனாலும்; பின்னர் அதற்காக வருத்தப்படலாம்.
-
நியூயோர்க்கில் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாது அவதியுறும் மக்கள்.
பதிவில்லா குடியேறிகளை வைத்து இவர்கள் சுலபமாக செய்விப்பது ஏனென்றால் பிடிபட்டால் எதுவித பிரச்சனையும் இல்லாமல் வெளியே விடுகிறார்கள் என்பதால். இருபகுதியினருக்கும் சுலபமாக பணம் வருகிறது. நானும் இந்த குடியேறிகளை மிகவும் ஆதரிக்கிறேன்.இன்னமும் வரட்டும். ஆனால் சட்டத்தை மதியுங்கள். சிற்றியும் இன்னமும் பொலிசை கட்டுப்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை. இறந்த பொலிசின் மரண வீட்டுக்கு சென்ற நியூயோர்க் மேயர் உட்பட பலரை கரைச்சல் கொடுத்துள்ளனர். சந்தடி சாக்கில் உள்ளே வந்த டெனாட் ரம் நல்ல பெயர் வாங்கி சென்றுள்ளார்.
-
நியூயோர்க்கில் பூமி அதிர்வு.
யாயினி இது நியூயோர்சி நியூயோர்க் பகுதியிலேயே உணரப்பட்டது. ஒரு லேசான நடுக்கமே. மனைவியும் நானும் வெளியே ஓடிவிட்டோம். வீடுகளில் இருந்த அயலவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்தனர்.ஆளாளுக்கு கையைக் காட்டிவிட்டு போய்விட்டனர்.
-
நியூயோர்க்கில் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாது அவதியுறும் மக்கள்.
அண்மையில் ஸ்கூட்டரில் ஓடிஓடி செல்போன் கான்பாக் போன்றவற்றை உருவிக் கொண்டு ஓடினார்கள்.பொலிசாரின் விசாரணையில் வெனிசூலாவை சேர்ந்த இங்கு ஏற்கனவே குடியிருப்பவர் இவர்கள் பலரை வைத்து தினம்தினம் வேறுவேறு இடங்களில் தொழிலைக் காட்டியுள்ளனர். நான் சொல்ல வருவது குற்றம் செய்பவர்களுக்கு தண்டனை கொடுத்தால் இதை நிற்பாட்டலாம். சென்ற கிழமை நியூயோர்க் பொலிஸ் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பிரபல கேடியை நிபந்தனை இன்றி வெளியில் நடமாட விடுவதே.
-
நியூயோர்க்கில் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாது அவதியுறும் மக்கள்.
நியூயோர்க்கில் ஏற்கனவே களவு கொலை என்று ஈடுபட்டவர்கள் குடியேறிகளை வைத்து வழிப்பறி களவு கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்கள். இதற்கு முக்கிய காரணம் குடியேறிகள் பிடிபடும் போது எதுவித பிரச்சனையும் இல்லாமல் வெளியே விடுகிறார்கள். எல்லோர் கைகளிலும் கைபேசி உள்ளதால் உடனுக்குடன் மற்றவர்களுக்கும் இப்படி இப்படி செய்யலாம் இந்த இந்த இடங்களுக்கு உடனே வாங்கோ என்று குறுந் தகவல்கள் அனுப்புகிறார்கள்.(பொலிஸ் சார்பில் வந்த செய்தி) மேலே உள்ள படத்தைப் பாருங்கள். தமிழ் டாக்ரர் குடும்பம் ஒன்றின் பின்பக்க யன்னலை உடைத்து அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு ஓடுகிறார்கள். இது இரண்டு தெரு தள்ளி நேற்று பகல் நடந்தது. இருவர் வந்து அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு ஓடுகிறார்கள். வீடியோவாக இருப்பதால் இணைக்க முடியவில்லை. இதைச் சொன்னால் கதை பரப்புவதாக சொல்கிறார்கள். நியூயோர்க்கில் தெரிந்தவர்கள் உறவினர்கள் யாராவது இருப்பார்கள் தானே? தாராளமாக விசாரிக்கலாமே? உங்களையும் பொய்பிரசாரம் செய்வதாக சொல்லப் போகிறார்கள்.
-
நியூயோர்க்கில் பூமி அதிர்வு.
Earthquake felt in Northeast, USGS says CNN — A preliminary 4.7 magnitude earthquake was felt in the Northeast Friday morning, according the US Geological Survey. The New York Police Department said there were no damages or injuries reported. This is a developing story and will be updated. https://www.cnn.com/2024/04/05/us/earthquake-nye-nj-northeast/index.html