Everything posted by ஈழப்பிரியன்
-
நியூயோர்க்கில் பூமி அதிர்வு.
Earthquake felt in Northeast, USGS says CNN — A preliminary 4.7 magnitude earthquake was felt in the Northeast Friday morning, according the US Geological Survey. The New York Police Department said there were no damages or injuries reported. This is a developing story and will be updated. https://www.cnn.com/2024/04/05/us/earthquake-nye-nj-northeast/index.html
-
நியூயோர்க்கில் பூமி அதிர்வு.
நியூஜேர்சி நியூயோர்க்கில் பரவலாக உணரப்பட்டுள்ளது. 4.7-5.5 மக்னிரியூட் என்கிறார்கள். @Justinநீங்க உணரலையோ?
-
நியூயோர்க்கில் பூமி அதிர்வு.
நியூயோர்க்கில் பூமி அதிர்வு. 30 செக்கன்களுக்கு வீடு அதிர்ந்தது.வெளியே ஓடிப் போனால் பலரும் வீடுகளை விட்டு வெளியே வந்து பார்க்கிறார்கள்.
-
மாவீரர் நாளை தடுப்பதற்கான சட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை : பொலிஸ் மா அதிபர்!
ஒரு புதுவிதமான அணுகுமுறையை கண்டெடுத்திருக்கிறார்கள். யாராவது ஒருத்தரை தயார்பண்ணி வழக்கைப் போடுவது. பின்னர் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தவைகளை அதனூடாக அமுல்படுத்துவது. ஊயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய அண்மைய வழக்கும் இப்படித் தான் திட்டமிட்டு ஒருவர் மைத்திரிக்கு எதிராக வழக்கு போட்டு திரும்பவும் விசாரணை என்று கிண்டி ஒரு தரப்பினரை வெறுக்கச் செய்யும் அரசியல் சூழ்ச்சியாகவே தெரிகிறது. ஐயா ரணில் இதில் வல்லவராச்சே.
-
நியூயோர்க்கில் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாது அவதியுறும் மக்கள்.
நியூயொர்க் சிற்றியில் யாராவது இருந்தால் விசாரித்துப் பாருங்கள். இந்தப் பிரச்சனை ஏன் வருகிறதென்றால் குற்றவாளிகளை இலகுவில் தப்பிக்க விடுகிறார்கள்.இதனால் அவர்கள் திரும்ப திரும்ப குற்றங்களை செய்வதுடன் சும்மா இருப்பவர்களையும் தூண்டுகிறார்கள். ஏற்கனவே கிரிமினல்களாக கொடிகட்டி பறந்தவர்கள் இப்போது சாதாரண பொதுமகன் வேலைக்கு போய்வரவே சிந்திக்கிறான்.
-
நியூயோர்க்கில் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாது அவதியுறும் மக்கள்.
NY post or Fox News இல் நீங்கள் சொல்வதைவிட கூடுதலாகவே சொல்கிறார்கள். நியூயோர்க் சிற்றியில் வழிப்பறி செல்போன் பறிப்பு இப்படி நிறையவே நடக்கிறது.காரணம் பொலிஸ் பிடித்து நீதிமன்றுக்கு கொண்டு போனால் எதுவித நிபந்தனையும் இல்லாமல் வெளியே விடுகிறார்கள். இப்படிப்பட்ட செய்திகளை தமது ஆட்களுக்கு உடனுக்குடன் அனுப்புவதாக சொல்கிறார்கள்.இதனால் மற்றவர்களும் இப்படியான குற்றங்களில் ஈடுபட தூண்டுகிறது. பிறவுன்சில் நடந்த சம்பவத்தை மேலே பாருங்கள். 2 தோட்டாக்கள் நிரப்பிய துவக்குகள் 2 வெறும் துப்பாக்கி போதைவஸ்து இவ்வளவும் கையும் களவுமாகப் பிடித்தும் நீதிபதி பிணை கூட இல்லாமல் வெளியே விடுகிறார். என்ன தான் பிரச்சனை என்றாலும் பொலிசார் முன்னரைப் போல ஓடி வருகிறார்கள் இல்லை.குற்றவாளிகளைக் கண்டால் காணாததுமாக இருக்கிறார்கள்.பிடித்துக் கொண்டுபோய் பிரயோசனமில்லை என்கிறார்கள். மேலே உள்ள காணொளியைப் பாருங்கள் சிற்ரி பொலிசுக்கு அடிக்கிறார்கள்.அவர்கள் உடனேயே நிபந்தனையின்றி விடுவிக்கப்படுகிறார்கள்.
-
நியூயோர்க்கில் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாது அவதியுறும் மக்கள்.
நிலவுக்கு ஒளித்து பரதோசம் போனது போல மிகமிக அதிக துவேசமுள்ள இடத்துக்கு அனுப்புகிற பிளானோ?
-
Wadge Bank - இந்தியா தட்டி தூக்கிய கடல் பொக்கிஷம்... "மிரள வைக்கும் இந்திராவின் ராஜதந்திரம்.."
இதுவரை நான் கேள்விப்படாத மிக முக்கியமான செய்தி.
-
அல்பிரட் துரையப்பா முதல் அற்புதன் வரை.
பாகம் 10. கட்டுநாயக்கா அதிகாரிகளுக்கு டக்ளஸ் டிமிக்கி. ஈழப் போராளிகள் அரபாத்துடன் தொடர்பு.
-
அல்பிரட் துரையப்பா முதல் அற்புதன் வரை.
பாகம் 8. இன்ஸ்பெக்ரர் பத்மநாதன் சுட்டுக் கொல்லப்பட்ட பின்பு வஸ்தியாம்பிள்ளை தீவிரவாத இளைஞர்களை கண்டறிவதில் முழு மூச்சாக ஈடுபட்டார். வஸ்தியாம்பிள்ளையிடமிருந்து செல்லக்கிளியால் பறித்தெடுக்கப்பட்ட இயந்திரத் துப்பாக்கி. பாகம் 9. புதிய அரசியலமைப்புக்கு புலிகள் செமஅடி. இரத்மலானை விமானநிலையம் தாக்குதல்.
-
"ஒட்டாவா வீதியில் காலை பொழுதில்"
நீங்க அத்தியடியில இருக்கிறீர்களா அல்லது கனடாவில் இருக்கிறீர்களா?
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி நிவேதா.
-
என் இந்தியப் பயணம்
எல்லா இடங்களிலும் தங்கச்சிக்கு நுளம்பு பிரச்சனை.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
நியூயோர்க்கில் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாது அவதியுறும் மக்கள்.
இவ்வளவு காலமும் 1-2 மாதங்கள் பிள்ளைகளுடன் வேறுவேறு மாநிலங்களில் நிற்போம். மீண்டும் 5-10 நாட்கள் நியூயோர்க் வந்து நிற்போம்.நிம்மதியாக வீட்டைப் பூட்டிவிட்டு சுற்றுவோம். இப்போ அடி வயிற்றைக் கலக்குது. அவசர அவசரமாக செக்குறிரி கமரா போடுகிறோம். இருந்தாலும் இனி நிம்மதியாக இருக்க முடியாது.
-
நியூயோர்க்கில் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாது அவதியுறும் மக்கள்.
https://www.newsnationnow.com/us-news/southeast/florida-remove-squatters-rights/amp/ புளோரிடாவிலும் வீடற்றவர்களால் பூட்டியிருக்கும் வீடுகளுக்குள் பலவந்தமாக குடியேறி இருந்து வந்தவர்களை வெளியேற்ற முடியாமல் இருந்தது.அண்மையில் அப்படி யாராவது வீடுகளுக்குள் இருந்தால் உடனடியாக கைது செய்து உள்ளே போட சட்டம் போட்டுள்ளார்.
-
நியூயோர்க்கில் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாது அவதியுறும் மக்கள்.
- "மாற்றம்" [யாழ்ப்பாணத்து தமிழ் மருத்துவ மாணவனின் கதை]
இப்படி எத்தனை எத்தனை குறளரசன்.- "கிறிஸ்மஸ் பற்றிய உண்மைகள்"
கிறிஸ்மஸ் பற்றிய விரிவான விளக்கத்திற்கு நன்றி.- கடவுளின் பிரதிநிதிகள்
எல்லோருக்கும் நாய் தான் வரும். அதென்ன உங்களுக்கு பூனை வருகிறது?- சிறிய விடயம் தான் ஆனால்....?
எனது நண்பரின் சகோதரம் சிறிய வயதாக இருக்கும் போது யாழ்ப்பாணத்தில் விமான குண்டு வீச்சின் போது இவருக்கு அருகாமையில் குண்டு வீழ்ந்து வெடித்துள்ளது.தெய்வாதீனமாக பையனுக்கு எதுவும் நேரவில்லை. ஆனால் அன்றிலிருந்து இப்போது வரை வாய் பேச மாட்டார்.- "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1]
உயிரெழுத்துக்களிலேயே கவிதை எழுதி அசத்திவிட்டீர்கள்.- நியூயோர்க்கில் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாது அவதியுறும் மக்கள்.
லாஸ்அங்கிலசில் நிலமை மோசம் என்கிறார்களே. ஆனாலும் கடந்த மாதம் Glen Dale நகரத்தில் நின்றபோது பெரிதாக ஒன்றும் தெரியவில்லை- ஒரே கல்லில் இரண்டு மாங்காய் - சுப. சோமசுந்தரம்
சிறப்பான கட்டுரை. - "மாற்றம்" [யாழ்ப்பாணத்து தமிழ் மருத்துவ மாணவனின் கதை]
Important Information
By using this site, you agree to our Terms of Use.