Everything posted by ஈழப்பிரியன்
-
தமிழரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சுமந்திரன் தரப்பு சதி – சீ.வீ.கே.சிவஞானம் எச்சரிக்கை
75 ஆவது ஆண்டுவிழா கோலகாலமாகவே நடக்கிறது. இப்படி ஒரு கொண்டாட்டத்தை காணவேயில்லை.
-
கற்பனை இனிதே ! - சுப.சோமசுந்தரம்
இந்தப் பொண்ணு உண்மையாவா அடிக்குது?
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
மிகமிக கஸ்டமான ஒரு பணியை அதுவும் ஆங்கிலத்தில் உள்ளதை மொழிபெயர்த்து எழுதி முடிப்பது சாத்தியமான வேலை இல்லை. எப்படி செய்து முடித்தீர்கள் என்று மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நன்றி கலந்த பாராட்டுக்கள்.
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
துணைமுதல்லர் மற்றும் மந்திரிகளுடன் நின்ற படம் இருந்தது.
-
2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்
சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
நானும் தான். பிடிபட்டவர் திமுக வில் பிரபலமானவராம். ஏற்கனவே 13 வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்.
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
இன்றே நாடுங்கள் டாக்ரர் @ரசோதரன்
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
தொடர்ந்து கட்டிப் பிடித்து உருண்டு பிரண்டால் விரைவில் குணமாகும். ரசோதரன் இல்லாத நேரம் நான்தான் டாக்ரர்.
-
பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!- பிரதி அமைச்சர் சுனில் வட்டகல
பொலீசு பெரிய இடத்து ஆளாக இருப்பாரோ? 7-8 தசாப்தங்ளாக ஊழலில் ஊறியவர்களைத் திருத்துவது ரொம்ப கஸ்டம். நீங்க சொன்னது போல நாய்வால் தான்.
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
யாழ் போதனா வைத்தியசாலையில் மூன்று வருடங்களுக்கு மேலாக தொண்டர் சேவையில் வேலை ஆற்றிய 170க்கும் மேற்பட்ட, 300 பேர் வரை வேலை செய்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது, தொண்டர் கனிஷ்ட ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது சம்பந்தமாக எனக்கு எழுத்து மூலம் அளிக்கப்பட்ட முறைப்பாடுகளை முறையான விதத்தில் சுகாதார அமைச்சருடனும் பிரதி சுகாதார அமைச்சருடனும் சுகாதாரத்துறை செயலாளர் அவர்களுடனும் இன்றைய தினம் நேரடியாக யாழ்ப்பாணத்தில் இருந்து அவர்களுடைய பிரதிநிதிகள் 28 பேர் சுகாதார அமைச்சுக்கு வந்திருந்து தங்களுடைய பிரச்சனைகளை நேரடியாக சுகாதார அமைச்சரிடமே சொல்லும் அளவுக்கு தேசிய அரசாங்க சக்தி மக்கள் மத்தியில் இதயத்தை வென்றுள்ளதை என்னால் கண்டுகொள்ள முடிந்தது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்கின்ற அடிப்படையிலும் ஒரு வைத்தியர் என்ற அடிப்படையில் ஒரு வைத்திய நிர்வாகி என்ற அடிப்படையிலும் ஒரு மக்களின் சேவகன் என்ற அடிப்படையிலும் ஒரு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆதரவாளன் என்ற அடிப்படையிலும் அது தவிர தமிழ் மக்களின் அன்புக்குரியவன் என்ற அடிப்படையிலும் அவர்கள் என்னை பிரதிநிதித்துவப்படுத்தி சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடியிருந்தார்கள். இது எட்டபட்ட முடிவுகள் பின்வருமாறு.. 1. சுகாதார அமைச்சர் மேற்படி கனிஸ்ட தர சேவை அடிப்படையில் தொண்டராக கடமை ஆற்றிய இளைஞர் யுவதிகளிடம் அவர்களுடைய பிரச்சினைகளை கேட்டு அறிந்து கொண்டார். 2. சுகாதார அமைச்சர் நேரடியாகவும் மற்றும் பிரதி அமைச்சரும் கலந்து கொண்டது தேசிய மக்கள் சக்தி மக்களின் நலன் கருதி எவ்வாறு செயல்படுகின்றது என்பதை இன்று நேரடியாக தெரிந்து கொண்டார்கள். 3. அப்போது யாழ் போதனா வைத்திய சாலையில் மொத்தம் 170 தொண்டர் ஊழியர்களில் 84 பேருக்கு மட்டும் சிறப்பாக பட்டி ஒன்று அணிவிக்கப்பட்டு சுகாதார உத்தியோர்களை இரண்டு பாகங்களாக பிரித்து அவர்களுக்கு இடையே பிரச்சனைகளை ஏற்படுத்தப்பட்டிருப்பது மற்றும் ஏற்கனவே வேலை செய்து சுகாதார அமைச்சரை சந்தித்த ஊழியர்களை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றி இருப்பதை சுகாதார அமைச்சர் தெரிந்து கொண்டார். 4. கனிஷ்டா ஊழியர்கள் மட்டுமல்ல தாதிய ஊழியர்கள் அது தவிரவும் வைத்தியர்களுக்கான கார்டர் கிரியேஷன் இனிவரும் காலங்களில் நடக்க இருப்பதால் சுகாதார அமைச்சர் அவ்வாறான அரசாங்க வேலைகள் கூறும் பட்சத்தில் முதலில் வேலை செய்த 170 பேருக்கும் யாழ் போதனா வைத்திய சாலையில் இப்போது வேலை செய்து கொண்டிருக்கின்ற 84 பெயருக்குமோ அல்லது வேலை செய்யாமல் இருக்கின்ற மிகுதி ஊழியர்களுக்கோ எந்த முன்னுரிமை அடிப்படையும் வழங்கப்படாது என்பதை உறுதி செய்தார். 170 பேரையும் சமமாக பாவித்து 170 பேருக்கும் எதிர்வரும் காலங்களில் வழங்கப்படுகின்ற வேலை வாய்ப்பின் போது சுகாதார அமைச்சரை சந்தித்தார்கள் என்ற அடிப்படையில் பழிவாங்கவோ அல்லது இப்போதும் வேலை செய்கிறோம் என்ற அடிப்படையில் அந்த 84 பேருக்குமோ தனித்தனியாக முன்னுரிமை கிடைக்காது என்பதை தெளிவாக சொல்லியிருந்தார். 5. ஆதலால் எந்த வாக்குறுதிகளையும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வழங்கக்கூடாது மற்றும் 170 சுகாதார கணித்த ஊழியர்களையும் கொழும்புக்கு போனார்கள் இங்கே நின்றார்கள் என்ற அடிப்படையில் தனித்தனியாக பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பதை செயலாளர் ஊடாக கடிதம் மூலம் தெரிவிப்பதாக ஒத்துக் கொண்டிருக்கிறார். 6. அதற்கான கடிதத்தையும் வெகுவிரைவில் போதன வைத்தியசாலை நிர்வாகத்திடம் அனுப்பி வைப்பதாக மதிப்புக்குரிய சுகாதாரச் செயலாளர் வைத்தியர் அணில் ஜெயசிங்க அவர்கள் உறுதியளித்திருக்கிறார். இவ்வாறான ஒரு சமூகமான பொதுமக்கள் அமைச்சர் சந்திப்பை எனது மருத்துவ நிர்வாகி காலத்திலோ அல்லது மருத்துவனாக வேலை செய்யும் காலத்திலோ நான் கண்டதில்லை. இதன் அடிப்படையில் தேசிய அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகவும் உண்மையிலேயே என்னை மதித்து என்னுடைய குரலுக்கு மதிப்பளித்து என்னை வரவேற்று எங்களுடைய சகல சுகாதார ஊழியர்களையும் சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளை நேரடியாக கேட்டு அறிந்து அவர்களுக்கு உரிய பதிலை வழங்கியதற்கு தேசிய அரசாங்கத்திற்கும் மதிப்பிற்குரிய சுகாதார அமைச்சருக்கும் அது தவிர பிரதி அமைச்சர் மற்றும் சுகாதார செயலாளர் அவர்களுக்கும் யாழ்ப்பாணத்தின் மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் மனமார்ந்த நன்றிகள். உங்களில் ஒருவன் ❤️ முகப் புத்தகம்.
-
எலிக்காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள்
அப்ப இனி யாழ்ப்பாணம் போகலாமா சார்?
-
தாய்வானுக்கு இராணுவ உதவி வழங்கிய அமெரிக்கா! கோபத்தில் சீனா
இந்தத் தாய்வான் சீன பிரச்சனையால் அமெரிக்கா அவசர அவசரமாக இலங்கையில் படைத்துறையை நிறுவ முழு முயற்சி செய்கிறது.
-
பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!- பிரதி அமைச்சர் சுனில் வட்டகல
சுதந்திரம் கொடுத்த உடனேயே யாழில் தையல்கடைக்குள் புகுந்து தன்னோடு உறவுக்கு வருமாறு பொலிசார் ஒருவர் பிரச்சனை கொடுக்கிறார். அவரைப் பிடித்து கொண்டு போனவரை அடிக்கப் போகிறார். பொறுப்பதிகாரியோ அறைக்குள் அழைத்து சமரசம் செய்கிறார். https://tamilwin.com/article/police-called-inappropriate-relationship-jaffna-1735040554 யாழ்ப்பணம் - காங்கேசன்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணொருவரை மதுபோதையில் தகாத உறவுக்கு அழைத்தமையனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள இளைஞர்களால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கப்பட்டு காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காங்கேசன்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் இன்று (24) காலை மாவிட்டபுரம் தையலகத்தில் தைப்பதற்கு கொடுத்த சீருடையை எடுப்பதற்கு மது போதையில் சென்றுள்ளார். தகாத உறவு இதன்போது தையலகத்தில் பணிபுரியும் பெண்களை தகாத உறவுக்கு வருமாறு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் வற்புறுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கடைக்கு வந்த இரு யுவதிகளிடமும் தன்னுடன் தகாத உறவுக்கு வருமாறு அந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொச்சைத் தமிழில் கேட்டுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த தையலக பெண் ஒருவர் தனது கணவருக்கு தொலைபேசியில் தெரிவித்த நிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கபட்டு பொதுமக்களால் முச்சக்கர வண்டி மூலம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பெண்ணின் உறவு இதேவேளை பெண்ணின் உறவினர் ஒருவர் சம்பவம் தொடர்பான காணொளியும் தன்னிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து மதுபோதையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் பெண்ணின் கணவன் மீது பொலிஸ் நிலையத்தில் வைத்தே தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் உடனடியாக பொலிஸார் குறித்த உத்தியோகத்தரை தடுத்து நிறுத்திய நிலையில் பொறுப்பதிகாரி தனது அறையினுள் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து சமரசம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
-
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு பாடல்
நானும் பதில் சொல்லலாமா சார் 😄 சாலமன் பாப்பயா ஏராளனின் பிறந்த தினமான இன்று சாலமன் பாப்பயா என்ற பட்டத் கொடுத்து கெளரவப்படுத்தியதற்காக சுவைப்பிரியனுக்கு ஈழப்பிரியனின் நன்றி.
-
யாழ்.கள உறவுகளுக்கு இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
எல்லோருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்.
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
மற்றவர்கள் வம்பு தும்புக்குப் போறதில்லை.
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
சொன்ன வார்த்தையை காப்பாற்றியுள்ளார் Dr. இராமநாதன் அர்ச்சுனா.☝️ அர்ச்சுனாவின் வேண்டுகோளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்த அநுர அரசு..... 👏 மக்கள் பிரச்சனைகளை துரிதமாக துணிவாக அலுப்புச் சலிப்புப் பாராமல் முன்னெடுப்பதில் முனைப்பாக நிற்கிறார் என்பதுதான் அவரது சிறப்பே....!💕 கடந்த பா.மன்ற அமர்வில் யாழ் போதனா வைத்தியசாலையின் 170 தொண்டர் கனிஷ்ட ஊழியர் வேலை சம்பந்தமாக காரசாரமாக சபையில் தெரிவித்து, அவர்களுக்கு நியாயம் கோரி சபையில் MP அர்ச்சுனா அவர்கள் குரல் எழுப்பியது யாவரும் அறிந்ததே....!☝ அதற்குரிய முதற்கட்ட தீர்வை நேற்று 23/12/2024 அன்று அவ்வூழியர்க்கு எடுத்துக் கொடுத்துள்ளார்.🙏 யாழ்ப்பாணத்தில் இருந்து அவர்களில் 28 பிரதிநிதிகளை கொழும்புக்கு வரவழைத்து சுகாதார அமைச்சர்,பிரதி அமைச்சருடன் நேரடியாகவே அவர்கள் குறைகளைப் பேச வைத்திருக்கிறார்.😘 இத்தனை காலத்தில் இப்படியான நிகழ்வு இதுதான் முதல்தடவை என நினைக்கிறேன்.😊 மேலும் Dr. அர்ச்சுனா கூறியதாவது👇 நான் கடந்த அரசுகளில் சுகாதார அமைச்சில் பணிபுரிந்திருக்கிறேன். அப்போது ஒரு அமைச்சரை சந்திக்க வேண்டுமென்றால், consultants உட்பட எல்லோருமே பல மணிநேரம் காத்திருக்க வேண்டும். ஆனால் இந்த NPP அரசில் (ஜனாதிபதி அநுரவின் ஆட்சியில்)..... இவ்வாறான ஒரு சுமூகமான பொதுமக்கள் அமைச்சர் சந்திப்பை எனது மருத்துவ நிர்வாக காலத்திலோ அல்லது மருத்துவனாக வேலை செய்யும் காலத்திலோ நான் கண்டதில்லை. 🥰 இதன் அடிப்படையில் தேசிய அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகவும் உண்மையிலேயே என்னை மதித்து என்னுடைய குரலுக்கு மதிப்பளித்து என்னை வரவேற்று எங்களுடைய சகல சுகாதார ஊழியர்களையும் சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளை நேரடியாக கேட்டு அறிந்து அவர்களுக்கு உரிய பதிலை வழங்கியதற்கு தேசிய அரசாங்கத்திற்கும் மதிப்பிற்குரிய சுகாதார அமைச்சருக்கும் அது தவிர பிரதி அமைச்சர் மற்றும் சுகாதார செயலாளர் அவர்களுக்கும் யாழ்ப்பாணத்தின் மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் மனமார்ந்த நன்றிகள்.🙏💕 சந்தர்ப்ப சூழ்ச்சிகளால் நலிந்து போனாலும், உண்மைகளுக்குத் துணை போகிறவர்கள் ஒரு போதும் வீழ்ந்து விடுவதில்லை .💕 முகப் புத்தகம். அடுத்த எலச்சனில் பெரிய முட்டை வாங்க இப்பவே அச்சாரம் போடுகின்றார் இப்ப ஒரு தேர்தல் நடந்தால் முன்னர் எடுத்த வாக்குகளை விட கூடுதலான வாக்குகள் எடுப்பார் போல உள்ளதே களநிலவரம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன். வாழும்வரை வளமாகவும் சுகமாகவும் வாழ வேண்டுகிறேன்.
-
கனடாவில் ட்ரூடோ அரசு தப்புமா? இந்திய வம்சாவளி தலைவரின் கட்சி ஆதரவு வாபஸ்
நல்லகாலம் நான் கிழக்கில.
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
ஆஆஆ உண்மையாவா? குமாரூ விட்ரா வண்டியை பத்திரிகை காரியாலயத்துக்கு. விளம்பரம் கொடுக்கிற எண்ணம் போல.
-
அமெரிக்க விருந்தாளி - தியா காண்டீபன்
அட்டைப்படம் எனக்குத் தெரியவில்லை.
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
நல்ல செயல்.
-
கனடாவில் ட்ரூடோ அரசு தப்புமா? இந்திய வம்சாவளி தலைவரின் கட்சி ஆதரவு வாபஸ்
ஏனையா அமெரிக்காவையும் கோர்த்து விட்டுருக்கிறீர்கள்?
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
இப்பவே 68 முடிந்துவிட்டது. எனது வாழ்வில் இந்த புகையிர பாதையை பார்ப்பேன் என்று எண்ணவில்லை.
- யாழ் மருத்துமனையில் நடப்பது என்ன?