Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எல்லோரும் ஈரோடு தேர்தலில் ரொம்ப ரொம்ப பிசி.
-
காற்றாடி
நம்ம காலத்தில் அரைக் காற்சட்டையில் இருந்து முழு காற்சட்டைக்கு மாறினால் ஓஎல் பாஸாகி விட்டான். மணிக்கூடும் கட்டினால் எஎல் பாசாகி விட்டான். தொடருங்கள்.
-
சந்தோஷ் ஜா - மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு
ஆமாம்.
-
சந்தோஷ் ஜா - மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு
நேற்று சிங்கக் கொடியுடன் நம்மவர்கள் அணிவகுத்து செல்வதைப் பார்க்க உடம்பெல்லாம் புழுக்கள் ஊர்வது போல இருந்தது. ஆனாலும் இது இந்தியாவுக்கு ஒரு செய்தியைச் செல்லியிருக்கும்.
-
"கரை கடந்த புயல்"
தில்லை யாழில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் என்று சொல்லக் கூடிய ஓரிருவரில் நீங்களும் ஒருவர். ஆரம்பத்தில் ஏதோ சுனாமியைப் பற்றியே எழுதுகிறீர்கள் என்று எண்ணினேன். ஒரேஒரு கேள்வி ஐயா. நீங்கள் தட்டச்சு செய்கிறீர்களா?அல்லது குரலால் பதிவு செய்கிறீர்களா? ஒரே குழப்பமாகவே இருக்கிறது.
-
சந்தோஷ் ஜா - மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு
டிக்சித் ஒரு சுருட்டு பத்தவைத்து முடிப்பதற்குள் புலிகளை அழித்து விடுவோம் என்ற மாதிரி அனுரா அனுபவமில்லாத ஆட்கள். இவ்வளவு பெரிய அனுபவசாலிகள் ஒரு பொடிப்பயலை வீழ்த்த இயலாமல் இருக்கிறீர்களா? ஒவ்வொருவருக்கும் விலங்கு மாட்டிய பின் யோசித்து பிரயோசனம் இல்லை. நாங்க இருக்கிறமில்ல துணிந்து இறங்குங்கள் என்றிருப்பார்.
-
சந்தோஷ் ஜா - மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு
No No No சாவகச்சேரி அர்ச்சுனாவுக்கு என்று எழுதியாச்சு.
-
சந்தோஷ் ஜா - மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு
இவர் அமெரிக்க தூதுவர் போல ஆட்களை நாடுகளைப் பிரிக்க வல்லவர் என்கிறார்கள். அமெரிக்க அம்மையார் கோத்தாவை வீழ்த்தினார். இந்திய ஐயா ரணில் மகிந்த சஜித்தென்று ஒவ்வொருவராக சந்திக்கிறார். ஏதோ ஒன்றுக்காக பிள்ளையார் சுழி போடுகிறார்.
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
எல்லோரது வாயையும் அடைப்பதற்காக நெத்தன்யாகு ரம் மூலமாக இதை உலகுக்கு தெரிவித்துள்ளார். ஒரு கிழமைக்கு ஐயோ குய்யொ முறையோ என்பார்கள்.
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகல்
ஐக்கிய நாடுகள் சபையையே கலைத்து விட வேண்டும்.
-
இலங்கைக்கு யுஎஸ்எயிட் வழங்கிய நிதியால் 100க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்கள் நன்மையடைந்துள்ளனர் - விசாரணையை கோருகின்றார் நாமல்
அடபாவி திருப்பதிக்கே லட்டா? இது உங்களைப் பார்த்து நாங்க கேட்க வேண்டிய கேள்வி.
-
வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
படிக்கும் காலத்தில் பாடசாலைக்கு போகாமல் முனியப்பர் கோவில் கோட்டை பண்ணை போன்ற இடங்களை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.
-
உலகின் 10 சக்திமிக்க நாடுகள் அறிவிப்பு: இந்தியாவுக்கு இடமில்லை
இந்தியா வல்லரசாக முடியாதா குமாரூ?
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
காசா மக்கள் அந்த நிலத்தை மறக்க வேண்டியது தான். அகண்ட இஸ்ரேல் உருவாகிறது.
-
யாழ். சிறைச்சாலையில் வெற்றிகரமாக நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்!
தானத்தில் சிறந்தது இரத்ததானம். பாராட்டுக்கள்.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
சிறி இது விளையாட்டல்ல. 2017 இல் இலங்கையை பிள்ளைகளுடன் சுற்றுலா வந்த போது இதே மாதிரி சீமெந்தில் செய்த கட்டில் இருந்தது. அதற்கு மேல் மெத்தையைப் போட்டிருந்தனர். நீர்கொழும்பில் ஒரு பங்களா வீட்டில் இருந்ததைப் பார்த்து எல்லோருக்கும் வியப்பாக இருந்தது.
-
அமெரிக்க வரி: கனடாவின் அதிர்ஷ்டம்
ஏற்கனவே ரம்புக்கு சார்பாக கதைக்கத்தொடங்கி விட்டார்கள்.
-
கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் இந்த திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்?
ஆசை யாரைத் தான் விட்டுது.
-
கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் இந்த திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்?
இன்றைய பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுக்கு வெற்றி என்றே எண்ணுகிறேன். இவ்வளவு மில்லியன் டாலரை செலவு செய்து எல்லையை கண்காணிக்கிறேன் என்றது ஏற்கனவே எல்லைகளில் ஓட்டை இருக்கிறதென்பதை ஒத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு மாதத்தால் ரம் ஏதாவது சாட்டுப்போக்கு சொல்லி குறைந்த வரியை விதிக்க முனைவார் என்றே எண்ணுகிறேன். இதிலே சீனாக்காரனை போற்ற வேண்டும். மாவோவின் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தில் திருப்பி அறை என்ற மாதிரி வீணே அலட்டாமல் நீ கூட்டினால் நானும் கூட்டுகிறேன். கனடாகாரருக்கு இது ஒரு Wake up call. . எப்போதோ விழித்துக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் எண்ணையை எடுத்து அமெரிக்காவுக்கு அனுப்பி திரும்ப அமெரிக்காவிடம் கூடுதல் விலைக்கு வாங்குவார்களா? பவ்வலோ பக்கம் வந்த கனேடியர்கள் காரை ஆட்டி ஆட்டி பெற்றோல் அடிப்பார்கள். நாங்கள் மன்னர் நியூஜேர்சி பக்கம் போனால் இதே மாதிரி அடிப்போம். 30-50 சதம் வித்தியாசம். அமெரிக்க உற்பத்தியை மட்டுமே நம்பினால் நாங்க உடுப்பும் போட முடியாது.
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
அடுத்து காஸ் பட்டேல் களமிறங்குகிறார். யார்யாரை தூக்கப் போகிறாரோ? வெள்ளைவான் அமெரிக்காவிலும் ஓடும் போல. நம்ம வண்டி இதுலதான் ஓடுது. ஏற்கனவே இந்த கொடுப்பனவு போதாது என்று குறை.
-
இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் இன்று : ஜனாதிபதி அநுர தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் விசேட நிகழ்வுகள்
நீங்க வேறு நாடயா நாங்க வேறு நாடு.
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
இதிலும் கை வைக்கப் போகிறார்கள் போல.இது எலானின் விருப்பம். அமெரிக்க புத்தகம்கள் வைத்திருப்பவர்களே ரொம்பவும் ஆடினார்கள்.
-
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
கந்தையா தலைக்கு வந்தது தலைப்பாவுடன் போய்விட்டது என்பார்கள். விபத்திலிருந்து நீங்கள் தப்பியதே பெரிய விடஜம். நீங்கள் 21 இல் இருந்து கார் ஓட்டுகிறீர்கள். நான் 91 இல் இருந்து 20 (கொரோனா)வரை ஓட்டினேன். உங்களை மனஉழைச்சலுக்கு ஆளாக்கிவிட்டேன் போல உள்ளது. மன்னிக்கவும் சகோதரம். வாழ்கின்ற ஒவ்வொரு நாளும் போனஸ் வாழ்க்கை.
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
ரம்புக்கு வாக்குப் போட்டு பதவியில் உட்கார மக்களே வெறும் ஒரு மாதம் முடிவதற்கிடையில் தவறான தலைவரை தெரிவு செய்து விட்டோமோ என்று பிகிரங்கமாகவே சொல்லத் தொடங்கிவிட்டார்கள். தனது ஆட்சிக்குத் தேவையானவர்களை ஆசிய பாணியிலேயே தெரிவு செய்கிறார். புளோரிடா மாநிலத்தவரையும் தேர்தல் காலங்களில் பெரும்தொகை பணங்களை அன்பளிப்பு செய்தவர்கள் தனக்காக முழக்கமிட்டவர்கள் என்று கூட்டி வைத்திருக்கிறார். காலப் போக்கில் பைடன் பரவாயில்லை என்று சிகப்பு கட்சியினரே சொல்வார்கள் போல உள்ளது.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சுதந்திர தினத்திற்கு நல்ல பாட்டு இணைத்துள்ளீர்கள்.நன்றி சுவி.