Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. இலங்கையில் கொடுப்பது மட்டும் என்ன அனுர, ரணில், மைத்திரி, மகிந்த வீட்டு பணமா? ஜேர்மனி பொருளாதாரத்தில் முன்னேறிய நாடு - அதன் கஜானாவை மக்களின், நிறுவனங்களின் வரிப்பணம் நிரப்புகிறது. அதை எடுத்து மக்கள் நலதிட்டங்களுக்கு ஜேர்மனி செலவழிக்கிறது. இலங்கை பொருளாதாரத்தில் பிந்தங்கிய நாடு - அதன் கஜானவை வெளிநாட்டு கடனும், அந்நிய செலாவணியும், உதவிகளும் நிரப்புகிறன. அதை எடுத்து மக்கள் நலதிட்டங்களுக்கு இலங்கை செலவழிக்கிறது.
  2. I am not even sure he has any powers here to abuse. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பிரின் சிறப்புரிமைகள் பெருமளவில் பாராளுமன்ற வளாகத்துக்குள்தான். சம்மன் பண்ணும், விசாரிக்கும் அதிகாரம் பாராளுமன்ற தனி உறுப்பினர்களால் அன்றி தேர்வு குழுக்கள் வழியாகவே பிரயோகிக்க படும். ஒரு வாக்காளரின் விடயம் சம்பந்தமாக ஒரு எம்பி கடிதம் மூலம் கேள்வி கேட்டால், குறித்த கால அவகாசத்தில் பதில் போட வேண்டும். இலங்கையிலும் இப்படித்தான் என நினைக்கிறேன். இங்கே கடிதம் போடாமல் அருச்சுனா நேரில் போயுள்ளார். பணிப்பாளர் முறையாக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்கிறேன் என்றால் ஒத்து கொள்வதுதான் முறை. சேர் என அழைக்கவேண்டும் என அடம்பிடிப்பது எல்லாம் லுச்சாத்தனம். திரு அருச்சுனா இராமநாதன் கெளரவ பா உ அவர்களே என அழைத்தால் போதும் என நினைக்கிறேன். இவர் இதை பாராளுமன்றில் சிறப்புரிமை மீறலாக எழுப்பும் போது - சபாநாயகர் என்ன செய்கிறார் என பார்போம். அருச்சுனா விதிகளை படித்து விட்டு போய் இருந்தால் - இலங்கை பாராளுமன்ற விதிகளின் படி அவர் சரியாக இருக்கவும் வாய்புள்ளது. என்னால் நீங்கள் தந்த இணைப்பில் அப்படி எதையும் காணமுடியவில்லை. ஆனால் மிக மேம்போக்காகவே வாசித்தேன். சோசல் காசு எடுத்த பிள்ளை பெறாதவரின் காசை பக்கத்து வீட்டு பிள்ளையா கட்டும்? அது இலவசம் தானே? டீடெயில் நாட்டுக்கு நாடு வேறுபடலாம். ஆனால் welfare state இன் அடிப்படை தத்துவம் எங்கும் ஒன்றேதான். அது… உழைக்கும் போது வரி அல்லது, காப்புறுதியாக செலுத்துங்கள். உழைக்கமுடியாவிட்டால் அரசு உங்களுக்கு மினிமம் பாதுகாப்பை தரும்.
  3. நீங்க மாம்பழ வாக்காளர்தானே? முன்பே சொன்னதுதான் - அருச்சுனா பனி என தெரிந்தும் நான் போட்டிருப்பேன் ஏன் எண்டால் மிச்சம் எல்லாம் ஏழரை நாட்டுச் சனி.
  4. மக்கள் இந்த கோரிக்கையை உடைய கட்சிகளை தேர்தலில் ஆதரிக்கும் வரை கோரிக்கை வலுவாகவே இருப்பதாகவே கொள்ள முடியும். தர மறுப்பதால் கேட்காமல் இருக்க முடியாது. எடுப்பது கடினம் என்பதால் முயலாமலும் இருக்க முடியாது. மக்கள் சுயாட்ச்சி கோரிக்கையை கைவிடும் வரை.
  5. ஒட்டு மொத்தமாக அங்கே எந்த இனத்துக்கும் போகாது. முஸ்லிம்கள் ஒண்டும் வானத்தில் இருந்து நேற்று விழுந்தவர்கள் அல்ல. அவர்களுக்கும் அவர்கள் வாழிடம் மீது எம்மை போலவே உரிமை உண்டு. அதனால்தான் அவர்களுக்கு அவர்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசசபைகள் அடிப்படையில் ஒரு நிலத்தொடர்பற்ற எமக்கு நிகரான அலகை கொடுக்க நாம் உடன்பட வேண்டும் என்கிறேன். எஞ்சும் சிங்கள பகுதிகளை மொனராகல, பொலநறுவ, அனுராதபுரத்துடன் இணைத்து விட்டு, தமிழ் பகுதிகளை வடக்குடன் இணைக்கலாம். இல்லை என்றால் இப்போ இருக்கும் கிழக்கு மாகாண எல்லையோடே விடலாம். மூவரும் சரிக்கு சரி என்பதால் எந்த ஒரு குழுவும் தனியே ஆட முடியாது. இல்லை…கீழே விளக்கம். இல்லை மூவினங்களும் தமது தனித்துவம் பாதுகாக்கபடுவதாக உணரும் போது, இப்போ அனுர சொல்லும் போலி இலங்கை தேசிய ஒற்றுமை போல அன்றி, உண்மையிலேயே அனைவரும் சமபங்காளிகள் எனும் உணர்வின் அடிப்படையிலான கெளரவமான ஒற்றுமை உருவாகும். தமிழர் அலகில் ஏனைய இருவரும் சிறுபான்மை, முஸ்லிம்கள் அலகில் மற்றைய இருவரும் சிறுபான்மை, மீதம்முள்ள அலகுகளில், ஒட்டு மொத்த இலங்கையில் தமிழரும், முஸ்லிம்களும் சிறுபான்மை -ஆளை ஆள் அனுசரித்து நடக்க வேண்டும். அதை சட்டம் மூலம் உறுதியும் செய்யலாம்.
  6. அருச்சுனா ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் - அவருக்கு விழுந்த வாக்குகளில் கணிசமானவை protest votes. தமிழ் கட்சிகளுக்கும் போட முடியாமல், என்பிபிக்கும் போட முடியாமல் இருந்தவர்கள் போட்ட வாக்குகள். அவரிடம் வாக்காளர் எதிர்பார்ப்பது reality show வை அல்ல. அதற்கான காலம் முடிந்து விட்டது. ஊழலை விசாரிக்க ஒரு எம்பிக்கு ஏனையோருக்கு இல்லாத பல சிறப்பு வழிகள் உள்ளன - ஏற்கனவே பிரச்சனையான மனிதரை நானே போய் விசாரிப்பேன் என்பது சரியான அணுகுமுறை அல்ல. With great power comes great responsibility அருச்சுனா இதை உணர்ந்து நடக்க வேண்டும். தமிழ் தேசியத்துக்கு இதுதான் கடைசிச்சந்தர்பம் என தேர்தல் முடிவின் பி கூறிய அருச்சுனா - அதை உணர்ந்து நடக்க வேண்டும். அவருக்கு வாக்கு போட்டவர்களை அவரே அடுத்த முறை என்பிபி க்கு அனுப்பிவிட கூடாது. ம்ம்ம்ம்….முதலில் நீங்கள் வாழும் நாட்டில் சோசல் காசு கொடுப்பதை நிறுத்துங்கள்.
  7. இல்லை. ஆனால் இதே லொஜிக்கின் படி பார்த்தால் பிரித்தானியர் இலங்கைக்கு சுதந்திரமே கொடுத்திருக்க கூடாது. ஏன் எண்டால் இலங்கை ஆட்சியாளர்கள் 76 வருடமாக மோசமான ஆட்சியைத்தான் வழங்குகிறனர். தமிழ் அரசியல்வாதிகள் சரியில்லை ஆகவே தமிழருக்கு சுயாட்சி தேவையில்லை என்றால் - இலங்கை ஆட்சியாளர்கள் சரியில்லை ஆகவே ஆட்சியை மீள பிரித்தானியாவிடம் கொடுக்க வேண்டும் எனவும் வாதிடலாம். தமிழர்களுக்கு உரிய அதிகாரம் அவர்களின் சுய உரிமை. அதை அவர்கள் போட்டடிக்கலாம் அல்லது சிறப்பாக பாவிக்கலாம். அது அவர்களின் பிரச்சனை.
  8. ஏது… ஏதோ காணி நில அதிகாரம் புலிகளுக்கானது எண்ட மாதிரி போகுது கதை🤣. காணி நில அதிகாரம் தமிழருக்கான தேவை, புலிகளுக்கான தேவை அல்ல. இந்த அதிகாரத்துக்கான தேவை புலிகளுக்கும் முன்னும், அவர்கள் காலத்திலும், புலிகளுக்கு பின்னும் இருக்கிறது. காணி, நில அதிகாரம் ஏன் தேவை? வடக்கு கிழக்கில் தமிழர் பாரம்பரிய மண்ணை சிங்களமயமாக்கலை தவிர்க்க. அதாவது இன்னொரு திரியில் விளங்கபடுத்தியபோல அம்பாறையில், திருகோணமலையில் ஆனது போல் இதர வடக்கு-கிழக்கு பகுதிகளிலும் ஆவதை தடுக்க. இனப்பிரச்சனை என்பது தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையான நில, தன்னாட்சி அதிகாரம் பற்றியது. இதற்கு தீர்வு, தமிழரையும், சிங்களவரையும் சமமாக ஒரே அமைப்பின் கீழ் நடத்துவதல்ல (அப்படி நடக்காது என்பது வேறு விடயம்). தமிழருக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் அவர்கள் காணியை, அவர்கள் காவல்துறையை நிர்வகிக்கும் அதிகாரத்தை கொடுப்பதே இதற்கான தீர்வு. பிரித்தானியாவில் எல்லாரும் சமமாக நடத்தபடுவதால், ஸ்கொட்லாந்துக்கும், வேல்சுக்கும் தனி அரசாங்கம் தேவை இல்லை என்பதல்லவே? அதுபோலவே இதுவும்.
  9. அந்த திரிக்கு வந்த பின்னூட்டத்தின் அடிப்படையில்தான் என் மேலய கருத்து இருந்தது. ——- இதோ அந்த திரி… அந்த திரியில் நம்ம @satan எழுதியது👇 சரத் வீரசேகர சொன்னது, தான் காரைநகரில் கடமையாற்றியபோது தனக்கு இடமாற்றம் வந்தபோது அங்குள்ள மக்கள் அவரின் இடமாற்றத்தை எதிர்த்து மனு அளித்தனராம். இதே போன்று வடமாகாணத்தில் இருந்த படைத்தளபதி பெயரை மறந்துவிட்டேன், அவரை இடமாற்ற வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்தனர். தன்மானம் இல்லாத எடுப்பார் கைப்பிள்ளைகள் எப்போதும் எல்லோர் பின்னாலும் திரிவார்கள் அவர்களை சிங்களம் பயன்படுத்துவது ஒன்றும் புதிதில்லை. வடக்கில் பணிபுரியும் சிங்கள போலீஸ், இராணுவ படைகள் தாங்கள் இடமாற்றம் செய்யப்படுவதை விரும்புவதில்லை, தங்களுக்கு தெரிந்த மக்களை அதற்கு எதிராக மனு அளிக்கும்படி கேட்பதுண்டு. கைலஞ்சம், சொகுசான வாழ்க்கை, போராட்ட காலத்தில் கூடுதல் சம்பளம். இதுதான் சிங்களத்தின் மாபெரும் வெற்றி. போரின் போது பெற்றது வெறும் இடம் சம்பந்தமானது. இது மனம் சம்பந்தமானது. அடிமைகளுக்கு யார் வந்தாலும் பின்னால் போகத்தயார். தமிழ் மக்கள் பிரிவினை கோரவில்லை, அவர்கள் எங்கள் அடிமைகளாக இருக்க பூரண சம்மதம்! சிங்களத்துக்கு பிரச்சாரம் செய்ய நல்லதொரு செய்தி. ஒரு முசுறு கடிக்க, கூட்டோடு நசுக்கப்படுகிற கதை. ஒரே விடயத்தை எப்படி மாத்தி, மாத்தி எழுதியுள்ளார் என்பதை - வாசகர் பார்வைக்கே விடுகிறேன்.
  10. அதெல்லாம் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் பேசி வேலைக்கு ஆகாது எண்டு எப்பவோ முடிவும் எடுத்தாச்சு ப்ரோ…. நீங்க இப்ப வந்து இந்திராகாந்தி செத்துட்டாவா எண்டு கேட்டா நாங்க என்ன செய்வது.
  11. செய்தியை எழுதினவரும் கனக்கத்தை விழுங்கி போட்டார்.
  12. எடுத்தாலும் எனக்கு அதில் பெரிய கொள்கை முரண்பாடு எதுவும் இல்லை என்பதை பகிரங்கமாக கூறி கொள்கிறேன். யார் ஜேவிபி… எம்மை… தேசிய இனமாக… அங்கீகரித்து….. சாத்ஸ்சை குஷிபடுத்த வேணும் எண்டா என்ன வேணா எழுதுவீங்களா அண்ணா🤣
  13. ஈழத்தமிழர் எல்லோ - 160 இயக்கம் இருந்தால்தான் அது ஈழத்தமிழர். மு.அ.கு.மா.ச வில் இருந்து கொள்கை முரண்பாட்டால் பிரிந்தோரே அனுர கே ஹமுதாவ🤣 என்ன அண்ணா பேச்சு வாக்கில கெட்டவார்த்த எல்லாம் வருது🤣
  14. இல்லை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழர் அனுரவை 3 இடத்தில்தான் வைத்தனர். பாராளுமன்ற தேர்தலில் கூட வடக்கு-கிழக்கில் தமிழர் வெல்ல கூடிய 15 சீட்டுகளில் 10 ஐ தமிழ் தேசிய கட்சிகள்தான் வென்றுள்ளன. உங்களை போல சிலர்தான் ஏதோ அனுரவுக்கு தமிழ் மக்கள் பெருவாரியாக ஆதரவு அளித்தார்கள் என ஒரு மாய விம்பத்தை உருவாக்குகிறீர்கள். வெள்ளைகாரனுக்கு 10/15>5/10 எனும் கணக்கு விளங்கும். விளங்காவிடில் விளங்கபடுத்தலாம். பின்ன…. நீங்களே அனுர எமக்கு காணி, பொலிஸ் அதிகாரம் தரமாட்டார் என்கிறீர்கள். இவரை பொறுத்து இருந்து பார்க்க என்ன இருக்கிறது. எதுவும் தரமாட்டார்…ஆனால் அவர் எதுவும் தரமாட்டேன் என சொல்லும் வரை அமைதியாக மிக்சர் சாப்பிடுங்கள் எண்டு சொன்னால்🤣. எழுதுவதில் மருந்துக்காவது லொஜிக் இருந்தால் தீவட்டிகள் எரியாது.
  15. ஜே ஆர்- ரணில்லை எம்மால் என்ன செய்ய முடிந்தது? எதுவுமில்லை. ஆனால் நாம் எம் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தினோம். இப்போதும் அதையே செய்யலாம்.
  16. ரவிகரன் இனவாதத்தை தூண்டுகிறார். - யாழ்.கொம் - அனுரகே ஹமுதாவ-
  17. நா நா…அனுர தெய்யோ ஏம கத்த வெட கரண் நா அப்பா🤣
  18. 1993 என நினைக்கிறேன். இவரும் சிறீகாந்தாவும் சேர்ந்து தினமுரசுக்கு போட்டியாக ஒரு பத்திரிகை ஆரம்பித்தனர். அது சம்பந்தமாக வீட்டுக்கு வந்தார். எனது வேலை தேனீர் போட்டு கொடுப்பது மட்டும்தான். அப்போ இவர்கள் அரசாங்கத்தோடு என்பதால் நான் இவர் மேல் செம கடுப்பில் இருந்தேன். ஏனோதானோ என சீனியை அள்ளி போட்டு ஒரு டீ போட்டு கொடுத்துவிட்டு வீதிக்கு கிரிகெட் விளையாட போய்விட்டேன். போகும் போது, தம்பி தேத்தண்ணி நல்ல இனிப்பா இருந்தது எனக்கு டயபிடீஸ் ஆனாலும் குடித்து முடித்துவிட்டேன் என்பதாக சொல்லி சென்றார். பின்நாட்களில் செய்தியில் சில தடவை டயபிடிசால் ஆஸ்பத்திரியில் அனுமதி என செய்திகள் வரும் போது இதை நினைத்து கொள்வேன்.
  19. முப்படை தளபதி ஒரு பெக்கோ என்கிறீர்களா?
  20. மக்கள் போராட இல்லை, பல வருடம் முன்னர் இராணுவ புலானாய்வு போராடியதாக சொன்னார்கள். ஆவா குழு ஆட்டம் போட்ட நேரம்.
  21. நரி….தமக்கு வருமானத்தை பெருக்க தமிழர் பகுதியில் சாராயக்கடைகளை திறந்துள்ளது. எங்கயடள் கூட்டு. ரணில் வென்றிருந்தால் தாய்லாந்து மாடல் ஆட்சிதான்🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.