Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. அனுர அல்லவோ ஜனாதிபதி. இனவாதம் களைய பிறந்த மீட்பர். அவரைத்தான் கேட்கவேண்டும்.
  2. செத்து…செத்து…விளையாட இது என்ன தமிழ் நகைச்சுவை படமா?🤣 இது கட்சி யாப்பு என்ன சொல்கிறது என்பதை பொறுத்தது. 1. இராஜினாமா செய்ததன் பின் - அதை மத்திய குழு அல்லது வேறு எவரும் ஏற்பபின்பே அது செல்லும் - என யாப்பு கூறின், அவ்வாறு நடக்க முன் மாவை ராஜைனாமாவை வாபஸ் பெறலாம். 2. அப்படி இல்லாமல் ராஜினாமா செய்யாலே - அந்த நொடி முதல் அது செல்லும் என யாப்பு கூறின். வாபஸ் வாங்க முடியாது. 3. நடக்கும் இழுபறியை பார்த்தால் - யாப்பு இதில் எதுவும் கூறாமல் silent ஆக உள்ளது போல் உள்ளது. அதுதான் ஆளாளுக்கு ஒவ்வொரு வியாக்கியானம். செல்வா, அமிர், பெரிய பெரிய சட்டத் தூண்கள், சுமன் எல்லாரினதும் யாப்பு எழுதும் இலட்சணம் இதுதான்🤣.
  3. நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இந்த முன்னாள் ஜிகாதிகள் கையில் ஒட்டு மொத்த சிரியாவும் விழவில்லை. முன்னாள் ஜிகாதிகள் என்பதில் பல ஐஎஸ் ஆட்களும் உண்டு. இவர்களுக்கு பெயர்தான் முன்னாள் ஜிகாதிகளே தவிர இவர்கள் ஐஎஸ் போல மிலேச்சர்கள்தான். IKR எனப்படும் ஈராக்கி கேர்டிஸ்தான் போல சிரியாவில் வடக்கே பல நிலத்தொடர்புள்ள இடங்கள் குர்தி இன போராளிகள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. முன்னாள் ஜிகாதிகள் எஞ்சிய இடத்தை Free Syrian Army உட்பட்ட ஏனைய குழுக்களுடன் பங்கிடுகிறார்கள். முன்னாள் ஜிகாதிகள் இப்போ துருக்கியின் நண்பர்கள். ரஸ்யா தன் வான், கடற் படை தளங்களை இன்னும் அகற்றவில்லை. அசாத்தை கைவிட்டு விட்டு, இப்போ முன்னாள் கிளரையாளர்களுடன் ரஸ்யா பேச்சுவார்த்தை நடத்துகிறதாம். இனி சிரியாவில் ஒரு நிழல் யுத்தம் உள்நாட்டு போர் என்ற பெயரில் அரங்கேறும் என்றே நான் நினைக்கிறேன். இதில் முக்கிய பாத்திரம் துருக்கி, ரச்யாவுக்குத்தான் இருக்கும், ஆனால் பலவீனப்பட்டு வடகொரியாவிடம் படைகளை யாசிக்கும் நிலையில் உள்ள ரஸ்யாவால் பெரிதாக எதையும் செய்ய முடியும் என நான் நினைக்கவில்லை - மேற்கு FSA, குர்தீக்களை போசிக்க முனையலாம் - டிரம்ப் இதில் தலையிடேன் என அறிவித்து விட்டார். உண்மையில் இதில் ஆர்வம் உள்ள எல்லோரும் James Barr எழுதிய The Line in the Sand புத்தகத்தை வாசிக்க வேண்டும். வரைபடத்தை பார்த்தால் தெரியும் சிரியா, ஈராக் பகுதியில் எல்லை ஒரு ரூலரை வைத்து நேர் கோடு அடித்தது போல் இருக்கும். உண்மையில் நடந்ததும் அதுவே. இவை இயற்கையாக அமைந்த இனவழி தேசிய நாடுகள் அல்ல. அசாத், சதாம், கடாபி போன்ற கொடுங்கோலர்களின் இரும்புபிடி உடைய - நாடுகள் இன, மத உட்பிரிவு அடிப்படையில் உடைவது தவிர்க்கவியலாதத்து. மார்ஷல் டிட்டோவுக்கு பின் யூகோஸ்லாவியாவில் நடந்ததும் இதுவே.
  4. இதில் ஜோக் என்ன தெரியுமா… நான் புலிகள் தடை செய்த இயக்கங்களில் உயர், மத்திய, கீழ் மட்டத்தில் இருந்த பலருடன் இதை பற்றி கதைத்துள்ளேன், விவாதித்துள்ளேன். அர்ஜூன் அண்ணா போன்ற வாழும் சாட்சிகள் யாழில் எழுதியுள்ளனர். பல வகையான இணையதளங்களில், புத்தகங்களில் பாதிக்கபட்டவர்களே தமக்கு நேர்ந்ததை எழுதியுள்ளனர். அவர்கள் நிலைப்பாட்டில் இருந்து இந்த எழுத்துக்கள் பல இடங்களில் மிகைபடுத்தலாகவும் இருப்பதை கண்டும் உள்ளேன். ஆனால் இங்கே சொல்லப்படும் கதைக்கு இவற்றில் இருந்து கூட ஆதாரம் தருவதாக தெரியவில்லை. கட்டபிராயில் கண்டேன், உரும்பிராயில் கேள்விப்பட்டேன். என்ற அளவில்தான் கதை போகுது. வழமையாக யாழில் மேற்கை எதிர்ப்பதை முழு நேர வேலையாக கொண்டோரை தவிர வேறு எவரும் இதை ஆமோதித்தும் கருத்து எழுதவில்லை.
  5. பிறகென்ன…நேரில் சந்திக்கும் அளவு பழக்கம் எண்டால் போன் நம்பரும் இருக்கும்…. ஒரு கோலை போட்டு வாய்யா என கேட்பதுதானே? உண்மையில் அவருக்கு ஏதும் இடர்பாடோ என்னமோ என நான் கவலைபடுவதும் உண்டு. தொடர்புகள் இருந்தால் ஒருக்கா சுகம் விசாரிக்கவும். கோஷானும் மிஸ் பண்ணுகிறார் வாங்கோ எண்டும் சொல்லி விடவும். பிகு அப்ப நாதம் பற்றிய என் “பாய்” சந்தேகம் பிழை எண்டுறியள்?🤣
  6. உங்கள் கருத்தை கவனித்தில் எடுக்கிறேன். எனக்கு அருச்சுனா மீது காழ்புணர்ச்சி ஏதும் இல்லை. ஆனால் ஆஸ்பத்திரி தமிழ் செக்கூரிட்டியை சி ஐ டி யிடம் பிடித்து கொடுப்பேன் என அவர் மிரட்டிய வீடியோ பார்த்தேன். அதில் அகங்காரத்தை தவிர வேறு எதையும் என்னால் காண முடியவில்லை.
  7. இந்த குற்றச்சாட்டை நீங்கள் மட்டும் அல்ல. வேறு எவரும் கேள்விபட்டிருக்க முடியாது. அது சிலரின் மனதில் உதித்த கற்பனை. புலிகளின் பகுதியில் இருந்து மாற்று இயக்க உறுபினர்களின் குடும்பங்கள் வெளியேறியது உண்மை. குறிப்பாக, 89 இல் இந்தியன் ஆமியோடு சேர்ந்து வெறியாட்டம் ஆடிய பலரின் குடும்பங்கள் இந்தியாவுக்கும் கொழும்புக்கும் போயினர். அதே போல் யாழ் பல்கலைகழக ஆட்கள் சிலரும் ஓடித்தப்பினர். ஆனால் அரசியலில் சம்பந்தபடாத குடும்ப உறவுகளை புலிகள் இம்சித்ததாக தரவுகள் இல்லை. அப்படி இருந்தாலும் கூட, கைது செய்து விடுவித்தார்கள், இந்தியாவுக்கு வள்ளம் எடுத்து அனுப்பி விட்டார்கள் என்பதும், அசாத் செய்ததை போல் கொலை செய்வதும் ஒன்றல்லவே. ஆகவே எப்படி பார்த்தாலும் - அசாத்தை புலிகளோடு ஒப்பீடு செய்து இரெண்டும் ஒன்றே என எழுதியது விஷமத்தனம்தான். இந்தளவுக்கு இறங்கி அசாத்துக்கு ஏன் வெள்ளை அடிக்க வேண்டும்? இப்படி எழுதுவதன் நோக்கம் புலம்பெயர் தமிழ் மந்தைகளை மேற்கின் எதிரிகளாக்கி வைத்திருப்பது. இந்த மந்தைகள் மேற்கில் இருந்த படி மேற்கை எதிர்க்கும் மட்டும், இவர்கள் மூலம் இலங்கையில் இந்திய நலன் பாதிக்கப்படாது.
  8. முதலில் உங்கள் தெளிவான, நீண்ட பதிலுக்கும், மேலே புலிகள் மீது சொல்லப்பட்ட ஆதாரமற்ற கருத்துக்கு நீங்கள் கொடுத்த மறுத்தானுக்கும் நன்றி. உங்கள் இருவரையும் சுட்ட காரணம் உண்டு. 1. யாழை ஆரம்பகாலத்தில் இருந்து வாசிப்பவன் என்ற வகையில் - ஒரு காலத்தில் இங்கே பல புலிகளின் பிரச்சார பீரங்கிகள் இருந்தார்கள். கால ஓட்டத்தில் அவர்கள் குண்டுகள் எல்லாம் புஸ்ஸாகி விட்டது. எனக்கு தெரிய இப்போ புலிகள் மீது தவறான கருத்து எழுந்தால் - நீங்கள் இருவரும்தான் பதில் எழுதுகிறீர்கள். நான் வரலாற்றின் தரவுகள் என சிலதை திருத்தி எழுதுவதுண்டு. எவரும் எழுதாவிட்டால் விசுகு அண்ணை எழுதுவார். நான் என்றும் புலிகளின் ஆதரவாளன் என்ற profile இல் யாழில் எழுதியதில்லை. அவர்கள் தியாகங்களை மதிக்கும் இயக்கங்களுக்கு பொதுவான மனிதனாகிய நான் எழுதுவதை விட, இதற்கான பதில் அவர்களின் ஆதரவாளர்களான உங்களிடம் இருந்து வருவது சிறப்பு என எண்ணினேன். 2. ஆர்பரிக்கவில்லை. ஆனால் நிச்சயம் உங்கள் பக்கம் இருந்தே நானும் இதை அணுகுகிறேன். அதனால்தான் fact-check பண்ண எவரும் இல்லையா என கேட்டேன். அசாத்துக்கு வெள்ளை அடிக்கும் ஆர்வத்தில், புலிகள் சக இயக்கங்கள் மீது செய்த வன்முறை மிகவும் பெருப்பித்து காட்டப்பட்டது மட்டும் இல்லாமல் குடும்பங்களை கைது செய்தார்கள் என்ற நடக்காத தகவல் கூட எழுதப்படுகிறது. புலிகள் மிக மோசமான முறையில் சக போராளிகளை 86-87 இல் அழித்தார்கள் மறுக்கவில்லை. ஆனால் அசாத் எதிர்க்கும் போராளிகளை மட்டும் அல்ல, அவர்களின் ஊர்களையே அழித்தார். இரசாயன குண்டுகள் போட்டார். பல்லாயிரக்கணக்கில் மக்களை சிறை வைத்தார். பல நூறு மனித படுகொலை கூட்டு புதைகுழிகளை நாட்டில் விதைத்துளார் (mass graves). இவை எதையும் புலிகள் செய்யவில்லை. இவை எல்லாவற்றையும் வெள்ளை அடிக்க, புலிகளும் இதையே செய்தார்கள் என்ற தரவு-பிழை கையாளப்படுகிறது. 3. முன்பும் எழுதியுள்ளேன், எம்மை மேற்கு மீதான ஒரு வெறுப்பு நிலையில் வைத்திருக்க எவரோ விரும்புகிறார்கள். அது சீனாவோ ரஸ்யாவோ அல்ல. அவர்கள் எம்முடன் மினெக்கெடுவதில்லை. ஜெய் ஹிந்த்!
  9. எவருக்கும் நிபந்தனை அற்ற ஆதரவு இல்லை ஐயா. நடக்கும் முறையில்தான் ஆதரவும், எதிர்ப்பும். ஆரம்பத்தில் கூத்தாடினாலும், தேர்தல் நெருங்கிய சமயம் அருச்சுனா போக்கில் நல்ல மாற்றம் தெரிந்தது. ஆனால்…வெற்றிக்கு பின்…பழைய பல்லவிக்கு மாறி விட்டார் போல தெரிகிறது.
  10. நாமலின் அட்டோர்னி அட் லா தகமையை எவரும் கேள்வி கேட்கமுடியாது….. ஏன் என்றால் அவருக்காக தனி அறையில் இருந்து பைனல் எக்சாம் எழுதியவர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ்🤣
  11. 1. ஊழியர் இலஞ்சம் கொடுத்து வேலை வாங்கினால் - அதை வழக்கு போட்டு விலக்க வேண்டும். 2. பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் எங்கேயும் திறந்த வீட்டில் குதிரை நுழைவது போல் நுழைய முடியாது. பாராளுமன்ற உறுப்பினர்க்கு பொலிஸ் அதிகாரம் இல்லை. பொலிஸ் கூட சில நடைமுறைகளை பின்பற்றியே உள்ளே நுழையலாம். 3. இவர் ஒட்டு மொத்த யாழ் மாவட்டத்தின் பிரதிநிதி. சாவகச்சேரி தொகுதியில் அதிக வாக்குகளை பெற்றார். அவ்வளவே. நாளைக்கு அருச்சுனா உங்கள் வீட்டு குளியறைக்குள் நுழைந்தால் - அவரை தடுப்பது மக்களை தடுப்பது போல் என நினைத்து அனுமதிப்பீர்களா? எல்லாத்துக்கும் ஒரு முறை இருக்கு.
  12. இதை யாழ்களத்தில் fact-check பண்ண, மறுத்துரைக்க ஒருவரும் இல்லையா? பழையகாய் ஒன்று பச்சை வேறு குத்தியுள்ளார்🤷‍♂️. @valavan @ரஞ்சித்
  13. தெனாலி ராமன் கதைகளை நிஜத்தில் செய்து காட்டுகிறார் அருச்சுனா சேர்🤦‍♂️
  14. சம்பிரதாய பூர்வ அமர்வில் இவர் சபாநாயருக்குரிய wவிக்கை தவறாக அணிந்தார் என தொடங்கிய இவர் மீதான தாக்குதல் இன்று வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. இனவாதம் போன்றே வர்கவாதமும் சிங்களவர்களிடம் ஊறிப்போன ஒன்று. எம்மிடையே சாதி போல.
  15. சும்மா வார்த்தைகளால் சொன்னால் நம்பமாட்டாம்🤣 எனக்கும்தான் அண்ணை. என்ன செய்வது வீடியோவை பார்த்தாச்சு🤣 உங்கள் கணவர் சொல்வது சரிதான். கம்யூட்டர் முன் இருக்கும் posture முக்கியம். போதிய தூரம், உயரத்தில் ஸ்கிரீன், மவுஸ், கீ பாட் ஒருக்க வேணும். அதே போல் படுக்கும் மெத்தை சரியில்லை, பழசாகினாலும் இந்த பிரச்சனை வரும். சித்தாலேப வை போட்டு மெலிதாக அளுத்தி விட்டு சுடுதண்ணி ஒத்தடம் கொடுத்தால் சரி வரலாம்.
  16. எப்போதும் குறுக்காலபோவபர்கள் இருப்பார்கள்தானே🤣. மணிவண்ணனை இதில் சேர்க கஜனின், மணியின் ஈகோ விட்டு கொடுத்தால் நல்லம். கஜன்+சிறி+செல்வம் இப்போ அவர்கள் பின்னால் நிற்பவரோடு இணைந்தாலே போதும். சித்தர், மாம்பழம்களும் வரும்.
  17. இதுபோல இந்த தலைமயிர் வெட்டும் தமிழ் அண்ணையள், கழுத்தை முடக்கி நெட்டி முறிப்பதும் ஆபத்தான வேலை. அண்மையில் ஒரு வீடியோ பார்த்தேன்…நெட்டி முறித்தவுடன் ஆள் அப்படியே…பரலைஸ்ட் ஆகி படுத்து விடுவார். இதன் பின் வழமையான தமிழ் அண்ணையிடம் போவதில்லை என்ற முடிவில் இருக்கிறேன். வேண்டாம் என்றபின்னும் பழக்க தோசத்தில் திருப்பி விட்டால் என்ற பயம்தான்.
  18. மசாஜ் செய்ய எவ்வளவு நல்ல பாகங்கள் உடலில் இருக்க….. சும்மா கொண்டுபோய் கழுத்தை ஏன் கொடுப்பான்….🤣 அதுகுள்ளானதான் முண்நாண் எனப்படும் நரம்பு கோர்வையே போறது. ஏங்கோ எசகு பிசகாக அளுத்தி விட்டது போல.
  19. நிச்சயமாக….. அனுர போன்ற ஒரு இனவாதிக்கு கூட, அவர்களால் பாதிக்கப்பட்ட இனமான தமிழர்கள் மத்தியில் கூட நேரடி, மறைமுக ஆதரவாளர்கள் இருப்பதை கண்டோமே? ஆனால் எவருக்காகவேனும் உண்மையாக போராடினால் - அவர்களை அந்த மக்களில் பெரும்பாலோனோர் காலத்துக்கும் நினைவில் வைத்திருப்பார்கள். ❤️❤️❤️
  20. ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ வெளியேறிய போது…ரஸ்யா ஊடகங்கள் மட்டும் அல்லா…. யாழிலும் சிலர் இப்படித்தானே நீச்சல் அடித்தனர்🤣. படலைக்கு….படலை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.