Everything posted by goshan_che
-
சிரியாவில் இடைக்கால அரசு; புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் முகமது அல் பஷீர்
ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ வெளியேறிய போது…ரஸ்யா ஊடகங்கள் மட்டும் அல்லா…. யாழிலும் சிலர் இப்படித்தானே நீச்சல் அடித்தனர்🤣. படலைக்கு….படலை
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
உண்மைதான். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் அழித்தாலும், இடித்தாலும் மக்களுக்காக மரணித்தவர்கள் அவர்கள் மனங்களில் வாழ்வாங்கு வாழ்வார்கள். மாற்றான் அழித்தாலும் மாவீரர் கல்லறை மண்ணாய் நிலைக்கும் ஐயா… ஆற்றல் மிகுந்த மாவீரர் கல்லறை மண்ணில் அனலே முளைக்கும் ஐயா…. -புதுவை இரத்திரதுரை-
-
`உண்மையான சங்கி திமுக தான்; என்மீது ஏன் காவிச்சாயம் பூசுகிறீர்கள்..!' - கொதிக்கும் சீமான்
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா…
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
அவர்கள் நம்பிக்கை படி தீர்ப்பு நாளில் இவரை மீள எழுப்பி, சுவன தீர்ப்பு எழுத முடியாமல் போகும். அல்லா தனக்குரிய exceptional powers ஐ பாவித்து ஏரிக்கப்பட்ட இவரை மீள எழுப்ப வேண்டும்.
-
சிரியாவில் இடைக்கால அரசு; புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் முகமது அல் பஷீர்
இதில் விளங்க என்ன இருக்கிறது. எவ்வளவு மிலேச்சதனமான அரசாக இருந்தாலும்… ஒரு மதச்சார்பற்ற அரசை - மதம்சார் அரசால் பிரிதியீடு செய்வது சம்பந்தபட்ட, படாத அனைவருக்கும் நீண்ட கால நோக்கில் ஆபத்து என்பது என் கருத்து. அதேபோல் ஒரு நாட்டில் தலையிடும் போது, தலையிட்ட பின் அந்த நாடு புதிய மாற்றங்களுக்கு தயாராக இல்லை எனில் தலையிடாமலே விடலாம். இதனால்தான் ஈராக் யுத்தத்தை எதிர்ர்த்தேன். லிபியாவில் தலையிட்டதையும் எதிர்த்தேன். இது ரஸ்யா சிரியாவில் தலையிட்டமைக்கும் பொருந்தும். ஆனால் இப்போ சிரியாவில் தலையிட்டுள்ளது துருக்கி. மேற்கு அல்ல. துருக்கியிடம் நோஸ் கட் வாங்கும் அளவுக்கு கிளி செத்துவிட்டது என்பது சோகம்தான், வாட் டு டூ🤣.
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
அருச்சுனா - ஊழியரை மிரட்டிய சம்பவத்தை பார்த்தேன். மேர்வின் சில்வா தரவழி போல் நடந்து கொண்டுள்ளார். திருந்துவார் போல் தெரியவில்லை. இவருக்கு வாக்கு போட்டவர்களுக்கு இப்போ buyer’s remorse வந்திருக்கும்.
-
செல்வம் – கஜேந்திரகுமாா் விசேட சந்திப்பு
தமிழ் தேசிய சக்திகளை ஒரே அணியில் திரட்டினார் எண்டாலே பாதி கிணறு தாண்டியது போலத்தான்.
-
"குடியுரிமை ரத்து.." பகீர் கிளப்பிய டிரம்ப்.!
உலகில் எந்த நாடுகள் jus soli எனப்படும் அங்கே பிறந்தாலே-பிரசை கொள்கையை பின்பற்றுகிறன என்ற தகவல் கீழே👇. https://worldpopulationreview.com/country-rankings/countries-with-birthright-citizenship
-
"குடியுரிமை ரத்து.." பகீர் கிளப்பிய டிரம்ப்.!
ஓம்…டிரம்பும் இந்தியரை எதிர்க்கவில்லை. அவர் குறி வைப்பது சட்டவிரோத குடியேறிகளையே. இதுவும் மெக்சிகோ சுவர் மாரித்தான் முடியும் என நினைக்கிறேன். ஆனால் அதற்குள் 4 வருடம் ஓடிவிடும்🤣.
-
"குடியுரிமை ரத்து.." பகீர் கிளப்பிய டிரம்ப்.!
நன்றி. அயர்லாந்தில் இதுபோல் இருந்த சட்டத்தை யூகே, ஏனைய நாடுகள் அளுத்தம் கொடுத்து மாற்றினர் என அப்போ வாசித்த நினைவு. 🤣
-
2138 கடற்படை மாலுமிகளுக்கு பதவி உயர்வு!
ஏன் சிங்களம் உங்கள் தெய்வம் அனுரவின் தாய் மொழி ஆச்சே…. இனவாதத்தை தடுக்க பயங்கரவாத தடைசட்டம் அவசியம் என்று எந்த ஒரு இனவாதியும் கூட சொல்லாத அரிய கண்டுபிடிப்பை சொல்லி முட்டு கொடுக்கும் நீங்கள் ஆங்கிலத்தில் முகபுத்தகத்தில் போய் எழுதலாமே? சிங்கள இனவாதிகளிடம் நான் முடிந்தளவு பேசியாகி விட்டது - ஒரு மண்ணாங்கட்டியும் நடவாது என்பது பட்டறிவு. The definition of insanity is doing the same thing over and over, expecting a different outcome.
-
"குடியுரிமை ரத்து.." பகீர் கிளப்பிய டிரம்ப்.!
இன்னுமொரு விடயம் @ரசோதரன் உங்களின் முதலாம் பதிவு நகைச்சுவையானது என நான் ஊகித்து கொண்டேன். அமெரிக்காவில் வாழும் உங்களுக்கு இது விளங்கும் என்பது வெளிப்படை. ஆனால் செய்தியின் தலைப்பை, உங்கள் பின்னூட்டத்தை வாசிப்பவர்கள், இந்திய படை இலங்கையில் இறங்கியது என்ற ஏப்ரல் பூல் செய்தியை நம்பியது போல இதையும் நம்பகூடும் என்பதாலேயே பதில் எழுதினேன்.
-
"குடியுரிமை ரத்து.." பகீர் கிளப்பிய டிரம்ப்.!
இதை வாசிக்க, வடிவேலுவிடம் சிறுவன் கிட்னி திருடிய சீன் மனதில் ஓடுகிறது🤣
-
"குடியுரிமை ரத்து.." பகீர் கிளப்பிய டிரம்ப்.!
இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன என்ற மனநிலையாக இருக்குமோ🤣
-
"குடியுரிமை ரத்து.." பகீர் கிளப்பிய டிரம்ப்.!
இதுதான் நடக்கும் என சொல்ல முடியாது. 1. உதாரணமாக - யூகேயில் - இங்கே பிறக்கும் சகலருக்கும் தானியங்கி பிரஜா உரிமை இல்லை. ஆனால் பிறக்கும் சமயம், பெற்றாரில் ஒருவர் நிரந்தர வதிவிட உரிமை எனில் பிள்ளை தானியங்கியாக பிரித்தானிய பிரசை. 2. அமெரிக்காவில் - பிறக்கும் சகல குழந்தைகளும் பிறப்பால் அமெரிக்கர் எனும் போது - இதுவரைக்கும் இந்த கேள்வி எழவில்லை. 3. இனி சட்டம் மாறினால் - யூகே போல அமெரிக்காவும் சட்டத்தை அமைக்க கூடும். 4. நிரந்தர வதிவிட உரிமை உள்ள பெற்றாரின் பிள்ளைகள் தானியங்கியாக பிறப்பில் அமெரிக்க பிரசைகள் ஆவதையும் தடுப்பேன் என டிரம்ப் எங்கும் கூறவில்லை. நான் அறிந்த வரையில்.
-
தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான்
குரங்கு ஏற்றுமதியை அரசு பரிசீலிக்கும்… அமைச்சர் லால் காந்த. https://www.dailymirror.lk/breaking-news/Govt-ready-to-resume-discussion-on-exporting-Toque-monkeys-Minister/108-297900 பிகு அடுத்த முறை ஊருக்கு வலு அவதானமா போகவேணும். பிடிச்சு சைனாவுக்கு ஏத்தி போடுவாங்கள்🤣.
-
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!
உங்கட form உம் அசத்தல்தான்🤣
-
தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான்
1. போலி டாக்டர் சபாநாயகர் 2. யூனிபோர்மை தச்சு கொடுக்கும் கல்வி அமைச்சர் 3. 12 வயதுக்கு கீழ் விளம்பரபடத்தில் நடிக்க தடை போடும் கலாச்சார அமைச்சர் இந்த வகையில் முன்னாள் அமைச்சர் பேச்சை கேட்டு குரங்கு ஏற்றுமதியில் இறங்கினாலும் ஆச்சரியமில்லை🤣
- திண்ணை
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
@Kandiah57 அண்ணைக்கு நன்றி. உங்களுடன் கருத்து பரிமாறும் போது ஏற்பட்ட சந்தேகம் - இலவசம் என்பது வடமொழிதானாம். கோராவில் யாழில் எழுதும் பேராசிரியர்கள் உட்பட பலர் எழுதியுள்ளார்கள். https://ta.quora.com/இலவசம்-என்பதற்குத்#:~:text=இலவயம்%2Fஇலவசம் என்றால் பொருளற்ற%2C ஆதாரமற்ற%2C விலையற்ற என்று பொருள். ஆனால் அதே குவோராவில் அது தமிழ் சொல்லே என இன்னும் சிலர் சொல்லுவதும் லொஜிக்கலாக உள்ளது.
-
"குடியுரிமை ரத்து.." பகீர் கிளப்பிய டிரம்ப்.!
வீடியோவின் தலையங்கம் (அமெரிக்க) குடியுரிமை ரத்து—-பகீர் கிளப்பிய டிரம்ப். ரத்து என்றால் இப்போ இருக்கும் குடியுரிமையை இல்லாது செய்வது. இங்கே எந்த குடியுரிமையும் ரத்து செய்யபடவில்லை. வரும் காலத்தில் - தானியங்கி குடியுரிமை பெறும் முறையை ரத்து செய்வேன் என்பதும் குடியுரிமை ரத்து என்பதும் ஒன்றல்ல. இதனால்தான் இந்த தலையங்கம் தவறாக உள்ளது என்றேன். ——— உங்கள் கேள்விக்கும் நான் சொன்னதுக்கும் சம்பந்தமில்லை.
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
உலக முதல் மொழியா என்று தெரியவில்லை…ஆனால் இன்று வாழும் மொழிகளில் பழமையானது என வாதாட கூடிய அளவுக்கு பழமையான மொழிதான். ஆனால் நாம் எந்த மொழியில் இருந்தும் எடுத்து அதை தமிழில் கையாள வேண்டும். இப்படி ஒரு விசாலமான அணுகுமுறை இருந்த படியால்தான் ஐரோப்பாவின் மேற்கு மூலையில் உள்ள ஒரு தீவில், 1/3 மக்களின் மொழியாக, காலத்தால் மிக பிந்திய மொழியாக இருந்தும் ஆங்கிலம் உலக பொது மொழியாகியது. ஆங்கிலத்தில் மிக அதிகமான சொற்கள் பிரென்சு,ஜேர்மானிக், ஸ்கெண்டிநேவிய சொற்கள்தான். ஆகவே இலவசம் என்ற சொல் பொருத்தம் இல்லாத போது (இதுவே வடசொல் என நினைக்கிறேன்) ஆங்கிலத்தில் பாவிக்கும் முறையை தமிழ்படுத்துவதில் தவறில்லையே. “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை யில்லை” 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்“ சுப்ரமணிய பாரதியார் (இன்று அவர் பிறந்த நாள்).
-
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!
இன்று நல்ல form இல் உள்ளீர்கள் போலும். உங்கள் உவமான உவமேயங்கள் பிறிதொரு படிநிலை🤣
-
"குடியுரிமை ரத்து.." பகீர் கிளப்பிய டிரம்ப்.!
செய்தியின் தலைப்பு நிச்சயம் தவறாகவே இருக்கிறது. இது ஒரு கிளிக் பேயிட் தனமான வீடியோ தலைப்பு என நினைக்கிறேன். செய்தியை தெரிவிப்பது மட்டும் அல்ல, அதன் தலைப்பு உண்மையானதா என்பதும் முக்கியம். அப்படி இல்லாதவிடத்து ஒரு டிஸ்கி போடலாம். ஏன் என்றால் இவ்வாறான தவறான தலைப்புகள் தலைப்பை மட்டும் வாசிப்போரை தவறாக வழிநடத்தி விடும். பிகு டிரம் என்ன சொன்னார் என்பதை அறிய அவர் பேசிய வீடியோவையே பார்க்க முடியும் போது - அதை பற்றிய தமிழ் நாட்டு சென்சேசனல் வீடியோவை பார்த்து என் நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. ஆனல் பின்னூட்டங்கள் இந்த வீடியோ தவறான செய்தியை பரப்புவதை கண்ட பின்பே எழுதினேன்.
-
"குடியுரிமை ரத்து.." பகீர் கிளப்பிய டிரம்ப்.!
தகவலுக்கும், பிழை திருத்ததுக்கும் நன்றி. இது அரசியலமைப்பில் உள்ளதா? அல்லது சாதாரண சட்டமா?